All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "விழி அழகில் மீண்டேனடி" - கதை திரி

Status
Not open for further replies.

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே,



எனது ஐந்தாவது கதையான "விழி அழகில் மீண்டெனடி"


நாளையில் இருந்து அத்தியாயம் தொடர்ந்து வரும் நண்பர்களே...
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி- 1


மும்பை…


அந்த இரவு பொழுது நீண்ட நெடும் சாலையில் விலை உயர்ந்த ரகம் கார் ஒன்று காற்றை விட வேகமாக சென்றுக் கொண்டிருந்தது, அந்த வாகனமே அப்படி பறக்கிறது என்றால் அதன் உள்ளிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் அவனின் மனநிலை எப்படி இருக்கும்…? அந்தக் காற்றை விட இரண்டு மடங்காக அவன் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. காரணம் சற்று முன் அவன் தந்தை கூறிய முடிவில் வந்த கோபம் தான் இது.


ரவிசங்கர் யாதவ் மும்பையில் விரல் விட்டு எண்ணும் பணம் படைத்த லிஸ்டில் மூன்றாவதாக உள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்து 'யாதவ் கன்ஸ்ட்ரக்ஷன்' என்ற பெயரில் சிறிய அளவில் தொடங்கினார், அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்காக வந்த மாதவி என்ற பெண்ணை பார்த்த முதல் பார்வையில் காதல் கொண்டு திருமணம் முடித்தார், மாதவியும் தன் கணவனுக்கு தன்னால் முடிந்த அளவு உதவி செய்து சிறிய அளவில் நடந்துக் கொண்டிருந்த கன்ஸ்ட்ரக்ஷனை அவர்களால் முடிந்தவரை பெரிய அளவிற்கு கொண்டுவந்தனர்.


இடையில் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது அவன்தான் சித்தார்த் யாதவ், மாதவி தொழிலை மட்டுமே கவனிக்காமல் மகனையும் நன்றாக வளர்த்தார் என்ன ஒன்று? ஒரே மகன் என்று அதிக செல்லம் மற்றும் அவன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதும் இஷ்டத்திற்கும் வளர விட்டார்.


சித்தார்த் தாய் தந்தையை போலவே இன்ஜினியரிங் படித்து முடித்து தன் இருபத்தி மூன்றாவது வயதில் தந்தைக்கு உதவியாக யாதவ் கன்ஸ்டிரக்ஷனை கவனிக்கத் தொடங்கினான். 2 வருடத்திற்கு பின் தந்தைக்கு ஓய்வு கொடுத்து இருபத்தி ஐந்தாவது வயதில் யாதவ் கன்ஸ்ட்ரக்ஷன் முற்றிலும் கையில் எடுத்துக்கொண்டு அந்த வயதிலேயே சிறந்த தொழிலதிபர் என்ற பரிசும் தட்டிச் சென்றான்.


சித்தார்த் யாதவ் யாருக்கும் அடங்காத ஆளுமை கொண்டவன், தாய் சொல்லுக்கு மட்டும் மதிப்பு கொடுப்பவன் அதுவும் சில விஷயங்களில் மட்டுமே! யாரையும் தன்னை நிமிர்ந்து பார்த்துப் பேசும் உயரம் கொண்டவன்... ஒற்றை பிள்ளையாக வளர்ந்ததால் என்னவோ திமிர், கோபம், பிடிவாதம் உள்ளவன். அவனிடம் யாரும் அவ்வளவு சுலபமாக பேச முடியாது எப்போதும் ஒரு அழுத்தமான மற்றும் எச்சரிக்கை பார்வையுடன் இருப்பான்.


இந்த நான்கு வருடமாக யாதவ் கன்ஸ்ட்ரக்ஷன் மும்பையில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தொடங்கினான். மாதத்தில் நான்கு நாட்கள் மற்ற இடங்களுக்குச் சென்று மேல் பார்வை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டான்.


எப்பொழுதும் போல் அலுவலகத்தில் இருந்து இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு முடித்து அவன் மாடிக்குச் செல்ல இருக்கையில் அவன் தாய் மாதவி பேச்சை ஆரம்பித்தார்.


"சித்து என்னப்பா நானும் அப்பாவும் இங்க உட்கார்ந்து இருக்கோம் எங்கள கவனிக்காம நீ பாட்டுக்கு சாப்பிட்டு போற?" என மாடியை நோக்கிச் செல்லும் மகனிடம் முறையிட்டார்.

சித்தார்த் கேள்வியாக தாயை நோக்கினான். ஏனென்றால் இதுதான் வழக்கம் அவன் எப்போதும் வீட்டுக்கு வந்தால், இருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்று விடுவான் தாய் தந்தை யார் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டான். ஆனால் ஏன் இன்று..? எனப் பார்வையில் கேள்வியை தேக்கி நோக்கினான்.


மாதவி அவன் பார்த்த பார்வையில் ஒருவித நடுக்கத்துடன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தன் கணவனை சீண்டி, "நீங்களே சொல்லுங்க விஷயத்தை" என சைகை செய்ய ரவிசங்கர், "நீ தான ஆசைப்பட்ட நீயே சொல்" என அமைதியாக இருந்து கொண்டார்.

மாதவி தைரியத்துடன், "சித்து உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இப்படி வந்து உட்கார்" என தன் எதிரில் இருக்கும் சோபாவில் கைகாட்டி கூறினார்.

தன் தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டு சோபாவில் அமர்ந்தான் சித்தார்த்.

மாதவி மெதுவாக பேச்சை தொடங்கினார், "அது வந்து... சித்து உனக்கு இருபத்தி ஒன்பது வயசு ஆகுது உங்க அப்பாவோட பிரண்ட் அஜய் கிருஷ்ணா டாட்டர் அஞ்சனா தேவி மேரேஜ் பண்ணிக்க..." என அவர் சொல்லிக் கொண்டு வரும்போதே கையை உயர்த்தி தடுத்து, "மாம், எனக்கு மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இல்லை" என ஒரே வாக்கியத்தில் முடித்தான்.


"என்ன சித்து இப்படி சொல்ற? இப்ப பண்ணலன்னா வேற எப்ப பண்ணிக்க போறதா இருக்க?" என சற்று கண்டிப்புடன் கேட்டார். ஏனென்றால் மாதவி அறிவார் அவன் அந்தஸ்திற்கு இல்லை என்றால் குதிப்பான் என்று தான், தன் கணவருடைய நீண்ட வருட தோழரின் மகளை மணம் முடிக்க யோசித்தார்.



சித்தார்த் சிறுவயதிலிருந்தே பணத்தால் வளர்ந்ததால் என்னவோ தனக்கு கீழே இருப்பவரிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், சுத்தம் கடைபிடிப்பவன், அவன் வீட்டு வேலை ஆட்களை யாரும் தன் அருகில் நிற்க வைத்து கூட பேச மாட்டான், அதனாலே அவன் காலை அலுவலகத்திற்கு செல்லும் வரை யாரும் அவன் எதிரில் வர மாட்டார்கள், ஏன் அவன் அணியும் ஷார்ட் கூட விலை உயர்ந்ததாக தான் தேர்ந்தெடுத்து அணிவான். இப்படி இருக்கையில் அவன் வாழ்க்கை துணையை எப்படி எதிர்பார்ப்பான் என்று தெரிந்து தான் அஜய் கிருஷ்ணா மகளை பெண் கேட்டார். அவரும் ஒத்துக் கொள்ள இனி மகனின் முடிவுதான் என்று இருந்தனர். அவன் திடீரென்று இப்போது வேண்டாம் என்று சொல்லவும் மாதவிக்கு சற்று கோபம் வந்துவிட்டது.


"மாம் எனக்கு இப்போ இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொன்னேன் எனக்கு எப்போ இன்ட்ரஸ்ட் இருக்கோ அப்போ மேரேஜ் பண்ணிக்கிறேன் அதுவுமில்லாம பொண்ணு எனக்குக் எல்லா விஷயத்திலும் துணையா இருக்கணும்" என அந்த 'துணை' என்ற வாக்கியத்தை அழுத்தமாகக் கூறினான்.


மாதவிக்கு புரிந்துவிட்டது அவன் எதை பற்றிக் கூறுகிறான் என்று, "சித்து, நீ சொல்றது எனக்கு புரியுது உனக்கு அஞ்சனா எல்லா விஷயத்திலும் முக்கியமா உன் பிஸ்னஸ்ல ஹெல்ப் ஃபுல்லா இருப்பா அதனாலதான் நானும் உன் அப்பாவும் பேசி இந்த கல்யாணத்தை முடிவெடுத்தோம்" என்றார்.

சித்தார்த் அறியாததா அஞ்சனா அறிவிலும், அழகிலும், படிப்பிலும் சிறந்தவள் என்று இருந்தாலும் அவன் மனம் ஏனோ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை, "மாம்" என அவன் ஏதோ கூற வர இவ்வளவு நேரம் அமைதியாக மனைவி மற்றும் மகனின் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ரவிசங்கர், "சித்து, அதான் அம்மா சொல்றாங்கல்ல உனக்கும் அஞ்சனாவுக்கும் கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் இதில் எந்த மாற்றமும் இல்லை" என பேச்சை முடித்து, "வா மாது, நம்ப போய் படுக்கலாம்" என தங்கள் அறையை நோக்கிச் சென்றார்.


இவையனைத்தையும் எண்ணி பார்த்துக்கொண்டு சித்தார்த் அதிவேகமாக காரை பீச் ஹவுஸ் நோக்கி பறக்க விட்டான். கோபம் அதிகமாக இல்லை, அழுத்தம் இருந்தால் அவன் எப்போதும் இந்த பீச் ஹவுஸ் தான் நாடி வருவான். அதனால்தான் இப்போதும் இங்க வந்துக் கொண்டிருக்கிறான் அவன் இங்கிருந்து வீட்டிற்குச் செல்ல இன்னும் ஒரு வாரம் ஆகும் அவன் கோபம் தணியும் வரை.


சூரியன் மெல்ல மெல்ல மேலெழ, அந்தக் காலைப் பொழுதில் வீட்டின் முன்னே அழகாக கோலம் வரைந்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள், அந்த கோலத்தையே ரசித்து வரைந்துக் கொண்டிருக்க அப்பொழுது அவள் முன் இரண்டு காலடி தெரிய புன்னகையுடன் நிமிர்ந்து நின்று, "வந்துட்டீங்களா சார்?" என்றாள் இனிமையாக.


ரவிசங்கர் பதிலுக்கு புன்னகைத்து, "இந்த மும்பையில் நீ மட்டும் தான் மா வீட்டு முன்னாடி கோலம் போடுற அதுவும் இவ்ளோ பெருசா அழகா போடுற உனக்கு ஆர்ட் சென்ஸ்ஸ் ரொம்ப இருக்கு" என கூட பாராட்டவும் செய்தார் எப்போதும்போல்.

அவள் அவர் பாராட்டியதற்கு அதுக்கும் ஒரு புன்னகை கொடுத்து, "சார் உங்களுக்கு கஞ்சி காய்ச்சி டேபிள் மேல வச்சி இருக்கேன் போய் சாப்பிடுங்க" என அதே இனிமையான குரலில் கூறி மீண்டும் விட்ட கோலத்தை தொடர ஆரம்பித்தாள்.


மடமடவென அந்த கோலத்தை போட்டு முடித்து பொருட்களை அதன் உரிய இடத்தில் வைத்து விட்டு கிச்சன் உள்ளேச் சென்று காலை உணவை தயாரிக்க ஆரம்பித்தாள், வெளியே மாதவியின் குரல் கேட்க அவருக்கு மிதமான சூட்டில் காபி தயாரித்துக் கொண்டு சென்றாள்.

"மேடம் இந்தாங்க காபி" என்றாள் மேல் மாடியை நோக்கிக் கொண்டே,

"அரசி, பயப்படாத அவன் வீட்டில் இல்லை எப்படியும் அவன் இங்க வர ஒரு வாரம் ஆகும் அதுவரை நீ பயப்படாம எங்க வேணாலும் சுத்தலாம்" என அவள் பதற்றத்தை புரிந்துக் கொண்டு கூறி, "அப்புறம் உங்க அம்மா எங்க?" என கேட்டார்.


இப்பொழுது அவள் முகம் தெளிவடைய, "அம்மா வெளியே போயிருக்காங்க மேடம்" என்றாள், அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ராதா பை நிறைய காய்களை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

ராதா இந்த வீட்டிற்கு வந்து இதோடு 19 ஆண்டுகள் ஆகிறது, ராதா தமிழ்நாட்டில் கிராமத்தில் வளர்ந்த பெண் அவள் குடும்பம் அந்தக் கிராமத்திற்கே பெரிய ஜமீன் குடும்பம், பெரிய மகள் படிப்பில் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காமல் வீட்டிலேயே இருக்க, இரண்டாவது பெண் பிள்ளையை படிக்க வைத்தார், அக்காவை போல் படிப்பில் ஆர்வம் இல்லை என்றாலும் தந்தைக்காக படிக்க ஒத்துக்கொண்டார், படிக்கச் சென்ற இடத்தில் காதல் மலர்ந்தது, குடும்பத்தில் பெரிய எதிர்ப்பு தெரிவிக்க ராதா அந்த காதலனை நம்பி மும்பைக்கு வந்தார். ராதா 20 வயதிலே பார்க்க அழகாக இருப்பார்.

மும்பைக்கு வந்து கோவிலில் திருமணம் செய்து ஒரு மாதம் தான் அவர் காதல் கணவனுடன் திருமணம் வாழ்க்கை, பின் அவன் ராதாவை ஒருவனுக்கு விற்றுவிட்டு பணத்துடன் ஓடிவிட்டான். இதை அறிந்த ராதா எப்படியோ அங்கிருந்து தப்பித்து ஒரு இடத்தில் மயங்கிக் கீழே விழுந்து இருந்தார், அவ்வழியாகச் சென்ற மாதவி தான் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்த்தார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் தாய்மை அடைந்திருக்கிறார் என்று கூறி அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார் மருத்துவர்.

ராதா கண் விழிக்கும் வரை மாதவி அருகிலிருந்து பார்த்துக் கொண்டு அவர் கண் விழித்ததும் அவர் சோக கதையை கேட்டு தன்னுடன் அழைத்து வந்துவிட்டார். ராதாவிற்கு பத்தாம் மாதம் முடிவில் அழகான பெண் குழந்தை பிறந்தது அவள் தான் விழிஅரசி.


ராதா என்று வந்தாரோ அன்றிலிருந்து அவர் சமையல் வேலையை தன் கைவசம் ஆக்கிக்கொண்டார், மகளையும் எங்கேயும் படிக்க வெளியே அனுப்பவில்லை தன்னை போல் அவளும் யாரிடமாவது ஏமாந்து விட்டால் என்ற பயத்தில் தன்னுடனே வைத்துக் கொண்டார்.


அரசி முதலாளி அம்மாவுடன் ஏதோ நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, "அரசி இந்த நேரத்துக்கு ஏன் இங்க வந்த? ஐயா வரும் நேரம் ஆச்சு நீ உள்ள போ" என கண்டித்தார்.

அன்னையின் மிரட்டலில் பயம் ஒட்டிக்கொள்ள அவரைப் பார்த்த மாதவி, "ராதா சும்மா எதுக்கு குழந்தைகிட்ட கத்திட்டு இருக்க என் மகன் வீட்டில் இல்லை அவன் வர இன்னும் ஒரு வாரம் ஆகும் பீச் ஹவுஸ் போய் இருக்கான் அதனாலதான் இங்க நின்னு என்கிட்ட பேசிட்டு இருக்கா" என ஆதரவாக பேசினார்.


"இல்லம்மா என்னதான் இருந்தாலும் வயசு பொண்ணு இங்க நின்னு பேசுறது ரொம்ப தப்பு உள்ளவே இருக்கட்டும்" என்றார்.


"ராதா உன் பொண்ண வெளியேதான் அனுப்புறது இல்ல வீட்டுக்குள்ளவாவுது சுதந்திரமா இருக்கட்டும் அவ எப்போ வெளி உலகத்தைப் பற்றி தெரிஞ்சுக்க போறா, இப்படியே எதுவும் தெரியாமல் அப்பாவி மாதிரி இருந்தா உன் பொண்ணை யாராவது ஏமாத்த போறாங்க" என்றார் பொதுவாக.

ராதாவிற்கு உடனே கண்கள் கலங்கிவிட்டது மகள் தன்னைப்போலவே யாரிடமாவது ஏமாந்து விடுவாளோ என்ற பயத்தில் அதை புரிந்துக் கொண்ட மாதவி அவர் அருகில் சென்று, "ராதா, உன் பயம் என்னன்னு எனக்கு நல்லா புரியுது அதனால உன் பொண்ண வீட்டுக்குள்ளேயே எவ்வளவு நாள் வெச்சுட்டு இருக்க போற? அவளுக்கும் பதினெட்டு வயசு முடிய போகுது வெளி உலகத்தை பற்றி தெரிய வேண்டாமா?" என்றார்.

ஆம் விழி அரசி பார்க்க பால் நிறத்தில் பொம்மை போல் இருப்பாள், அவள் வாய் பேசுவதை விட அவள் கண்கள் தான் அதிகம் பேசும் அதனால் தான் என்னவோ அவளுக்கு விழி அரசி என்ற பெயர் வைத்து இருப்பார் ராதா, விழி அரசிக்கு அன்னை கற்றுக்கொடுத்த தமிழ் எழுத படிக்க தெரியும், பிறந்ததில் இருந்து அந்த வீட்டை விட்டு அவள் எங்கேயும் வெளியேச் சென்றது இல்லை அந்த வீட்டின் தோட்டத்தில் அதிக நேரம் கழிப்பாள். எப்பவாவது வெளிய போக ஆசைப்பட்டால் ராதா தான் அவளை அழைத்துச் செல்வார். அன்னையின் அறிவுரை ஒன்று தான் இருக்கும் ஆண்களிடம் அதிகம் நின்று பேசக்கூடாது அவர்களை நிமிர்ந்து பார்க்கக்கூடாது என்று தான்.


"இல்லமா என் பொண்ணு என்ன மாதிரி ஆகக்கூடாது நான்தான் வாழலை என் பொண்ணு நல்லா வாழணும். அதனால தான் என் கூடவே வெச்சு இருக்கேன் அவளை புரிஞ்சுக்கிற ஒரு நல்ல பையன் கண்டிப்பா வருவான்" என்றார் கண்ணை துடைத்துக் கொண்டு.


"சரி ராதா அவர் வர நேரமாச்சு உன் பொண்ணு எல்லா சமையலும் முடிச்சிட்டா, நாங்க சாப்பிட்டு வெளிய கிளம்பறோம்" என்றார்.


மாதவி எவ்வளவோ கூறிவிட்டார் இந்த வீட்டை மேல் பார்வை மட்டும் பார்த்துக்கொள் மற்ற வேலைகளைச் எதுவும் செய்ய வேண்டாம் என்று... ஆனால் அவர் இந்த வீட்டு வேலைக்காரி ஆகவே நான் இருந்து கொள்கிறேன் மத்த பதவி எனக்கு எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் இருந்தும் மாதவி வேலைக்காரி மாதிரி நடத்தாமல் தன் தோழி போலவே அவரிடம் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்வார்.
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி- 2




நேற்றிரவு அவன் பீச்சுக்குச் சென்று சற்று நேரம் கடற்கரையில் கால் நனைக்க அங்குமிங்கும் நடந்தான் சித்தார்த். இருந்தும் அவன் மனது தந்தை எப்படி தன் கல்யாண விஷயத்தில் முடிவு எடுக்கலாம் என்று கோபம் இருந்துக் கொண்டே தான் இருந்தது. அப்படியே அவனுக்கென்று உருவாக்கப்பட்டிருந்த பீச் ஹவுஸில் அந்த இரவு பொழுது கழிய காலை வழக்கமாக எழுந்து உடற்பயிற்சி செய்து முடித்து அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்.


சித்தார்த்துக்கு என்ன தான் கோபம், அழுத்தம் இல்லை வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனை இருந்தாலும் சரியாக அவன் அலுவலகத்திற்குச் சென்று விடுவான். அதை மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தவிர்க்க மாட்டான். இன்றும் அதே போல் தான் அவன் அலுவலகத்தில் அவன் இருக்கையில் அவனுக்கே உரிய சேரில் அமர்ந்துக் கொண்டிருந்தான் ஒருவித கம்பீரத்துடன்.


அவன் யோசனை முழுவதும் தந்தை கூறிய திருமணம் பற்றியே சுற்றிக் கொண்டிருந்தது. அஞ்சனா தேவி அவளைப் பற்றிக் கூற வேண்டும் என்றால், நல்ல அழகு, அறிவு அவள் தந்தை கம்பெனியை எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறாள். தனக்கு சரியான ஜோடி தான் அதுவுமில்லாமல் சிறுவயதிலிருந்து அவளை தெரியும். தனக்கு எல்லா விஷயத்திலும் உதவியாக இருப்பாள் என்றும் நினைத்தான் இருந்தாலும் தன்னிடம் ஒரு வார்த்தை கேட்காமல் எப்படி அவர்களே முடிவு எடுத்து விடலாம் என்று கோபம் தான் இருந்தது அவனிடம்... இப்போதைக்கு இந்த பிரச்சனையை ஒதுக்கிவிட்டு தொழிலை கவனிக்க தொடங்கினான்.


விழி எப்பொழுதும் போல் தோட்டத்தில் உள்ள முயல் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். சித்தார்த் வீட்டில் இல்லை என்றால் அவள் இந்த தோட்டத்தில் தான் எப்போதும் நேரத்தை கழிப்பது இன்றும் அதே போல் தான் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். விழி விளையாடுவதை பார்த்துக்கொண்டே மாதவி, ரவிசங்கர் இருவரும் அங்கு வந்தனர்.


அவள் துள்ளி விளையாடுவதைப் பார்த்த மாதவி, "நான் எவ்வளவோ சொல்லிட்டேன் ராதா கிட்ட இவளை படிக்கவைனு ஆனா ராதா இவளை எங்கேயும் வெளியே அனுப்பாம அவ கூடவே வச்சிக்கிட்டா, இப்போ இவளுக்கு எந்த வெளி உலக அறிவு எதுவும் தெரியாது, யாருன்னா எதுனா சொன்னா அப்படியே நம்பிடுறா, ரொம்ப அப்பாவியா இருக்கா, அதுவும் நம்ம பையன் வீட்டில் இல்லாத சமயத்தில் தான் தோட்டத்தில் வந்து விளையாடுவது இல்லனா வீட்டுக்குள்ளே தான் இருக்கிறது" என கூறி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.


"உன்னுடைய கவலை எனக்கு புரியுது மாது, ஆனால் ராதா அந்த வயசில மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கா, அதனால தான் அவ அரசியை இந்த ஊரை நம்பி எங்கேயும் அனுப்பாம அவ கூடவே கைக்குள்ள வெச்சு இருக்கா" என்றார் மனைவியின் கவலை நீக்கும்படி.


"நீங்க சொல்றதும் சரி தான் சீக்கிரம் அரசிக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்" என்றார்.


"முதலில் நம்ப பையன் கல்யாணம் முடியட்டும் மாது... அதுக்கு அப்புறம் நீ சொன்ன மாதிரி அரசிக்கு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்" என்று முற்றுப்புள்ளி வைத்தார் ரவிஷங்கர்.

விழி விளையாடிக் கொண்டிருக்கும் போதே மாதவி, ரவிசங்கரை கவனித்து விட்டாள். விளையாடுவதை விட்டுவிட்டு அன்னையிடம் சென்று அவர்களுக்கு குடிக்க ஜூஸ் வாங்கிக்கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தாள்.

"அரசி மா, இப்பதான் என் பையன் இல்ல இல்ல வந்து இங்க என் பக்கத்துல கொஞ்ச நேரம் உட்காரு பேசிட்டு இருக்கலாம்" என தன் அருகில் வருமாறு அழைத்தார். ஆனால் அவள், "இல்ல மேடம்... அம்மா திட்டுவாங்க நான் உள்ள போறேன்" என ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்.


"பாருங்க ராதா என் கிட்ட கூட பேச வேணாம்னு சொல்லி இருக்கா, அவளை நான் என் பொண்ணு மாதிரி பார்க்கிறேன் ஆனா அது ராதாவுக்கு புரியல" என மீண்டும் கவலை கொண்டார். ரவிசங்கர் மாதவியின் தோள் மீது கை போட்டு அழுத்தி கொடுத்தார்.


அலுவலகத்தில் சித்தார்த் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். எப்படியும் யாரையாவது திருமணம் செய்தாக வேண்டும் அது தந்தை கூறிய அஞ்சனாவாகவே இருக்கட்டும், அவளைத் திருமணம் செய்து கொண்டால் கௌரவத்திற்கு எந்த பிரச்சனையும் வராது. தனக்கு பிசினஸில் துணையாகவும் மற்ற எல்லா விஷயங்களிலும் தனக்கு உறுதுணையாக இருப்பாள் என்று முடிவெடுத்தான். இதைப் பற்றி இப்பொழுது கூற வேண்டாம் இன்னும் இரண்டு நாள் கழித்து வீட்டிற்குச் செல்லலாம் என யோசித்து முடித்தவன் பீச் ஹவுஸ் நோக்கிச் சென்றான்.


ஆனால் அவன் ஒன்றை நினைக்க வில்லை விதி என்று ஒன்று இருக்கிறது அது தன் வாழ்க்கையில் விளையாட இருக்கிறது என்று..!


இந்த இரண்டு நாட்களாக யாருக்கு மகிழ்ச்சியாக இருந்ததோ இல்லையோ ஆனால் விழிஅரசிக்கு மட்டும் மிக மகிழ்ச்சியாக இருந்தது. காலை, மதியம் அன்னையுடன் சமையல் வேலைக்கு உதவி செய்து விட்டு தோட்டத்தில் முயல் குட்டி உடன் விளையாட வந்து விடுவாள் நேரம் போவதே தெரியவில்லை, அதே மாதிரி தான் இன்றும் அவள் தன்னை மறந்து முயல் குட்டி ஓட அதன் பின் விழிஅரசியும் ஓடிக் கொண்டிருந்தாள்.


"ஏய் நில்லு ஓடாத, நான் உன்னை பிடிக்காமல் விடமாட்டேன்" என துள்ளி குதித்துக் கொண்டு ஓட அப்பொழுது அவள் எதிரில் வந்த காரை அவள் கவனிக்கத் தவறினாள்.


சித்தார்த் திருமணத்திற்கு சம்மதம் என பெற்றோரிடம் நேரில் கூறி விடலாம் என்று இரண்டு நாட்களுக்குள் வீட்டுக்கு வந்தான். ஆனால் அவன் இவ்வளவு சீக்கிரமாக வருவான் என்று விழி எதிர்பார்க்கவில்லை, எப்போதும் போல் விழி தாய்க்கு உதவி விட்டு வெளியில் அவள் முயல் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருக்க அப்போது அவள் எதிரில் ஒரு கார் இடிப்பது போல் வருவதை கவனிக்கவில்லை. அந்த கார் வந்தபின் தான் கவனித்து பயத்தில் கை கால் நடுங்க கண்களை மூடி அப்படியே கீழே அமர்ந்து விட்டாள்.

காரில் இருந்த சித்தார்த் கோபமாக இறங்கி, "ஏய்... உனக்கு அறிவு இல்லையா இப்படித்தான், என் டைம் வேஸ்ட் பண்ணுவியா? இடியட்" என அவன் பாட்டிற்கு ஆங்கிலத்தில் திட்டிக் கொண்டே இருக்க, இன்னும் பயத்தில் கண்களைத் திறக்காமல் உட்கார்ந்திருந்த அவளுக்கு பாவம் எதுவும் புரியவில்லை.


சித்தார்த் தான் எதிரில் ஒரு பெண் ஓடி வருவதை கடைசி நொடியில் கவனித்து சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான். அந்த கோபத்தில் தான் விழியிடம் கத்தியது.


முதலிலேயே பயத்தில் இருந்தவள் தன் முதலாளியின் கர்ஜனை குரல் கேட்டு இன்னும் பயம் அப்பிக் கொள்ள அவனை நிமிர்ந்து பார்க்காமல் ஒரே நொடியில் எழுந்து தன் இருப்பிடம் நோக்கிப் பறந்தாள்.


'ஆத்தி இவ்வளவு சீக்கிரம் இவர் வருவார்னு தெரியாத போயிடுச்சு தெரிஞ்சிருந்தா நான் வெளியே போயிருக்க மாட்டேனே, இது அம்மாக்கு தெரிஞ்சா விளக்குமாறு பிஞ்சி போற அளவுக்கு அடிக்குமே!' என கவலையுடன் அமர்ந்து விட்டாள்.


கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு உள்ளே வந்தவன் அங்கே சோபாவில் அமர்ந்திருந்த தாயை கண்டும் காணாமல் அவன் அறைக்கு சென்று விட்டான். மாதவிக்கு ஆச்சர்யமாக இருந்தது மகன் வரவைக் கண்டு, சண்டை போட்டு வீட்டை விட்டுச் சென்றால் ஒரு வாரம் வராமல் இருப்பான். ஆனால் இந்த முறை இரண்டு நாட்களில் திரும்பி வந்திருப்பது அவருக்கு மிகவும் மகிழ்ச்சி... எப்படியும் மகன் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்வான் என்று உறுதியாய் இருந்தார்.

சித்தார்த் இரவு வரை கீழே வரவே இல்லை, மாதவி உடனே ரவிசங்கரை அழைத்து சித்தார்த் வீட்டிற்கு வந்ததை தெரிவித்தார். அவரும் விரைவாகவே வீட்டிற்கு வந்து விட்டார்.


"என்ன மாதவி உன் முகம் இன்னிக்கு ரொம்ப பளிச்சுனு இருக்கு" என குறும்பாக கேட்டார் ரவிசங்கர்.


"என்ன ரவி நீ தெரியாத மாதிரி என்கிட்ட கேள்வி கேட்கிற? நம்ம பையன் எப்பவும் இல்லாது இந்த தடவை இரண்டே நாளில் வீட்டுக்கு வந்து இருக்கான் அப்படினா என்ன அர்த்தம் அவனுக்கு கல்யாணத்துக்கு சம்மதம் அப்படித்தானே அர்த்தம்" என ஒரு தாயாக சரியாக கணித்துக் கூறினார்.


"நீ சொல்லுறதும் சரியா தான் இருக்கு. ஆனால் அவனது வாயால சொல்ற வரைக்கும் நான் எந்த முடிவும் எடுக்க மாட்டேன் சரியா!" என மனைவியிடம் மகன் சம்மதம் கூறும் வரை எந்த ஆசையும் வளர்த்துக் கொள்ள வேண்டாம் என கூறினார்.


இருவரும் உணவு மேஜையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ராதா அவர்களுக்கு உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது சித்தார்த் மேலிருந்து கீழே வந்து தாய் தந்தையுடன் அமர்ந்தான்.


மாதவி உண்ணுவதை நிறுத்தி விட்டு மகன் முகத்தை ஆர்வமாகப் பார்க்க அதை புரிந்தவன் போல் அவரை ரொம்ப நேரம் காக்க வைக்காமல், "மாம், நீங்க சொன்ன மேரேஜ்க்கு நான் அக்சப்ட் பண்றேன். அதுக்கு முன்னாடி நான் அஞ்சனா கிட்ட கொஞ்சம் பேசணும்,அண்ட் மேரேஜ் ரொம்ப கிராண்டா இருக்கணும், விஐபி மினிஸ்டர்ஸ் என்னோட பிசினஸ் பார்ட்னர்ஸ் நிறைய பேர் வருவாங்க எந்தக் குறையும் இருக்கக் கூடாது" என்றான்.


மகன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டான் என்ற சந்தோஷத்தில் இருந்தவர், பின் அவன் கூறிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார். மாதவி அறிவார் மகன் எல்லா விஷயத்திலும் சுத்தம் முக்கியமாக கவுரவம் எதிர்பார்ப்பவன் அதனாலே அவர் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு, "சரிப்பா நீ சொல்ற மாதிரி எல்லாம் கிராண்டா பண்றோம். நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என உண்மையான மகிழ்ச்சியுடன் கூறினார்.


அவ்ளோதான் இனிமேல் திருமணம் வேலைகள் தாய் பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கையுடன் அவன் தன் அறைக்குச் சென்று எப்போதும் போல் லேப்டாப்பை எடுத்து அவன் வேலையை கவனிக்கச் சென்றான்.


கணவன் மனைவி இருவருக்கும் மிகவும் சந்தோஷம் "ரவி பார்த்தீங்களா! என் மகன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான். சீக்கிரமா அவன் மனசு மாறுவதுக்குள்ள இந்த மாசமே அவனுக்கு கல்யாணம் முடிக்க வேண்டும்" என சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தன் சந்தோஷத்தை கணவனிடம் காண்பித்தார்.


ரவிக்கு தான் மனது உறுத்தலாக இருந்தது. மகன் அவ்வளவு சீக்கிரம் எதையும் ஒத்துக் கொள்ள மாட்டான். ஏன் இந்த திடீர் மாற்றம்? என மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்த அவர் மனைவி மகிழ்ச்சியாக இருப்பதால் தன் குழப்பத்தை வெளியே காண்பித்துக் கொள்ளாமல், "சரி உன் மகன் தான் சொல்லிட்டானே... நீ சொல்ற மாதிரி இந்த மாசமே அவனுக்கு கல்யாணம் முடிக்கலாம்" என்றார். எப்படியும் இந்த திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.


"ரவி, நான் இந்த விஷயத்தை ராதா கிட்ட போய் சொல்லிட்டு வரேன்" என கிச்சனை நோக்கி ஓடினார். ராதா, சித்தார்த் வந்தவுடன் சமையல் அறைக்குச் சென்று விட்டார். குடும்பமாக ஏதாவது முக்கியமான விஷயம் பேசுவார்கள் என்று, இது எப்போதும் நடப்பது உண்டு தான்.


"ராதா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? என் பையன் கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என கிச்சனை சுத்தப் படுத்திக் கொண்டிருந்த ராதாவின் கைகளைப் பிடித்து கூறினார்.


"ரொம்ப சந்தோஷமா இருக்கு ம்மா" ஒரு வரியில் தன் சந்தோஷத்தை கூறினார். அதற்கு மாதவி, "என்ன ராதா நான் இவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்றேன். நீ ஒரே வார்த்தையில் இப்படி பொசுக்குனு சொல்லிட்டியே" என முகத்தை சுருக்கினார்.


"ஐயோ அப்படியெல்லாம் இல்லம்மா, எனக்கு உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க என்ன வேலை கொடுத்தாலும் நான் செய்ய காத்துட்டு இருக்கேன். இந்த வேலைகளை செய்ய நான் கொடுத்து வச்சிருக்கணும்" என்றார்.


"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ மேல் பார்வை மட்டும் பாரு கல்யாண வேலைகளை மத்த பேர் பார்த்துக்குவாங்க உனக்கும் உன் பொண்ணுக்கும் ட்ரஸ் எடுக்கணும். இன்னும் நிறைய வேலை இருக்கு இந்த மாசம் முடியறதுக்குள்ள சித்தார்த்துக்கு கல்யாணம் நடக்கணும்" என்றார் உறுதியோடு.


"கண்டிப்பா எல்லாம் நல்லபடியாக நடக்கும் நான் கும்புடுற சாமி கைவிடமாட்டார் ம்மா, அப்புறம் எங்களுக்கு புது துணி எல்லாம் வேண்டாம் ஏற்கனவே எடுத்த துணி நிறையவே இருக்கு" என புது துணி எடுத்து கொடுப்பதை தடுத்தார்.

"என்ன ராதா நான் வீட்ல வேலை செய்றவங்களுக்கே புது துணி எடுத்துக் கொடுக்கப் போறேன். நீ என் தோழி நான் உனக்கு எப்படி எடுத்துக் கொடுக்காமல் விடப்போறேன். கண்டிப்பா எடுத்துத் தருவேன் அதை தான் போடணும். அப்புறம் அரசிக்கு சொல்லிவை கல்யாண தினத்தில் பயப்படாம எல்லார் கிட்டயும் நல்லா பேசி பழக சொல்லு சரியா?" என்றார் கண்டிப்புடன்.


"அது வந்து..." என ராதா ஏதோ கூற வர...


"போதும் ராதா நீ உன் பொண்ணை வீட்டுக்குள்ளேயே இப்படியே எவ்வளவு நாள்தான் வெச்சுட்டு இருக்க போற, நானும் உனக்கு எவ்வளவோ சொல்லிட்டேன். இந்த காலத்தில் யார் தான் படிக்காம இருக்காங்க,

நீ உன் பொண்ணை படிக்காமல் வீட்டுக்குள்ள வெச்சிக்கிட்டு இருக்க. நீ தான் இப்படி ஒருத்தனை நம்பி ஏமாந்துட்ட... உன் பொண்ணையாவது நல்லா தைரியமா வளர்த்தியா! அதுவும் இல்ல... உனக்கு எவ்வளவோ சொல்லிட்டேன். நீ கேட்கவே மாட்டேன்ற, என்கிட்ட பேசவே அவ ரொம்ப பயந்துட்டே தான் இருக்கா, அதுவும் ரொம்ப அப்பாவியா வேற வளர்த்து வச்சிருக்க என்ன பண்ண போறியோ எனக்கு தெரியல" என கோபமாக திட்டி விட்டுச் சென்று விட்டார் தான் எவ்வளவு கூறினாலும் ராதா இவ்விஷயத்தில் அவர் முடிவு தான் என்று.


மாதவி கூறியதை கேட்டவர் மனம் பாரத்துடன், 'வேணாம்மா என் பொண்ணு இப்படி இருக்குறது தான் நல்லது என்ன மாதிரி அவ வாழ்க்கையும் ஆக கூடாது' என்று நினைத்து கண்கள் கலங்கி மூச்சை வெளியேற்றி தன் இருப்பிடம் நோக்கிச் சென்றார்.


 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே,


மன்னிக்கவும், இனி வாரத்திற்கு இரண்டு அத்தியாயம் தொடர்ந்து வரும், கண்டிப்பா வரும் நம்பி படிக்கலாம் 😊.
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி-3









விழிஅரசி இன்னும் படுக்காமல் உட்கார்ந்துக் கொண்டு கண்ணில் பயத்தை தேக்கி வாசலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாள். "அம்மா வந்து எதுல அடிக்க போகுதோ தெரியலையே நான் வேற தெரியாமல் அவங்க முன்னாடி அப்படி போய் கீழே விழுந்து விட்டேனே" என்ற கலக்கத்துடன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அன்னையின் அடியில் பயந்து தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள்.





ராதா கதவைத் திறப்பது தெரிந்தது உடனே படுக்கையில் சரிந்து தலை முதல் கால் வரை பெட்ஷீட்டால் மூடிக் கொண்டு அமைதியாக படுத்து விட்டாள்.







"அரசி தூங்கிட்டியா மா?" என தாயின் குரல் கேட்டு, 'ஐயோ! அவங்க சொல்லிட்டாங்க போல... அம்மா அடிக்காம விடமாட்டாங்க' என்று நடுக்கத்துடன், "இல்லம்மா, என்ன விஷயம்?" என அமைதியாக கேட்டாள்.





"எதுக்கு துணியை மூஞ்சி வரை மூடிட்டு இருக்க? மூச்சு விட சிரமமாக இருக்கும். அப்புறம் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என கண்டிப்புடன் கூற, உடனே தாயின் அதட்டலில் முகத்தை மூடியிருந்த துணியை கீழே இறக்கி விட்டு எழுந்து உட்கார்ந்து, "சொல்லுங்கம்மா" என்றாள்.





"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்னிக்கு மாதவி அம்மா ரொம்ப சந்தோசமா இருக்காங்க... அவங்க பையன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க... இந்த மாசமே கல்யாணம் முடிக்கணும்னு பேசிக்கிட்டாங்க... அவங்க சந்தோசத்தை பார்த்து எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு" என தன் மகிழ்ச்சியை மகளிடம் கூறினார்.



'அப்பாடா அவங்க அம்மா கிட்ட எதுவும் சொல்லல போல ரொம்ப நிம்மதியா இருக்கு' என நிம்மதி கொண்டவள் பின்தான் அன்னை கூறியதை கவனித்து, "சரிமா, எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் எதுனா வேலை செய்யணுமா?" என கேட்டாள் அக்கறையாக.





"வேணாம்மா எல்லாம் நான் பார்த்துக்குறேன். அப்புறம் மாதவி அம்மா உனக்கு துணி எடுத்துக் கொடுக்க கேட்பாங்க. நீ வேண்டாமுன்னு சொல்லிடு யார் பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது. அம்மா எது வாங்கி குடுக்கறனோ அது மட்டும் தான் நீ போட்டுக்கணும் சரியா!" என்றார் முன்னெச்சரிக்கையாக...





அதற்கும் அவளிடமிருந்து "சரி" என்று தான் பதில் வந்தது.





"அப்புறம் அரசி நீ இங்கே உள்ளவே இருந்துக்கோ, இந்த ஒரு மாசம் தோட்டத்து பக்கம் கூட வராத, கல்யாணத்துக்கு அவங்க சொந்தம், பிரண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க... அவங்க முன்னாடி போய் நின்னுட்டு இருக்காத சரியா?" என இந்த சொற்களை அதட்டலாக கூறினார்.





"ம்ம்ம்... சரிம்மா, நான் போய் தூங்குறேன்"





"சரி போம்மா, எனக்கு நாளையில் இருந்து நிறைய வேலை இருக்கும். ராத்திரி வரக்கூட லேட்டாகும் நீ சாப்பிட்டு தூங்கு" எனக் கூறி அவரும் அவள் அருகில் படுத்துக்கொண்டார்.









**********************



அஜய் கிருஷ்ணாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் சற்றுமுன் தன் உற்ற தோழனான ரவி ஷங்கர் கூறிய அந்த செய்தியில் தான், "மாலு, சங்கர் மகன் சித்தார்த் அஞ்சனாவை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டான். அவங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு, அப்புறம் முக்கியமான ஒண்ணு இதே மாசத்துல கல்யாணம் முடிக்கணும்னு சொன்னார்" என சந்தோஷத்துடன் மனைவியிடம் பகிர்ந்துக் கொண்டார்.





"எவ்வளவு நாளா இந்த நல்ல செய்திக்காக காத்துக் கொண்டிருந்தோம். இப்போ தான் அதற்கு விடை கிடைத்த மாதிரி இருக்குதுங்க, இன்னும் நம்ம பொண்ணு வேற ஆபீஸிலிருந்து வரலை இதைக் கேட்டா அவளும் சந்தோஷப்படுவா, மாதவி ரொம்ப நாளா அவ பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு என்கிட்ட சொல்லிட்டு இருந்தா அவளுக்கு சந்தோஷம் இருக்காதா பின்ன" எனக் கூறினார்.



"அப்புறம் மாலு... சித்தார்த் அஞ்சனா கிட்ட பேசணும்னு சொல்லி இருக்கிறார் இதை அஞ்சனா கிட்ட சொல்லணும்" என்றார்.





அஜய் கிருஷ்ணா ரவிசங்கர் பள்ளி காலத்தில் இருந்து தோழர்கள் பிசினஸ் செய்வதில் இருந்து வீட்டு விசேஷத்திற்கு வரை இருவரின் குடும்பமும் ஒன்றாக இல்லாமல் எதுவும் நடக்காது ஒரு படி மேலே போய் அஜய் கிருஷ்ணா தன் பெண்ணை சித்தார்த்துக்கு மணமுடிக்க கேட்க ரவிசங்கருக்கும் இதில் விருப்பமே இதைப்பற்றி அவர் மனைவியிடம் ஆலோசனை செய்ய அவருக்கும் சரியென பட்டது.





அஜய் கிருஷ்ணா பரிமளம் தம்பதியருக்கு அஞ்சனா தேவி ஒரே பெண்ணாக போனாள். அஞ்சனா பிறந்து ஒரு வருடத்திலேயே பரிமளம் வயிற்று நோயால் அவதி பட மீண்டும் குழந்தை பெற்றெடுக்க இயலாது என மருத்துவர் கூற தன் மனைவியின் உடல் நலம் முக்கியம் கருதி ஒரு பெண்ணுடன் நிறுத்திக்கொண்டார்.





தங்களுக்கு ஆண் வாரிசு இல்லை என்று சிறிதும் வருத்தம் கொள்ளாமல் அஞ்சனாவுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்து தைரியமாகவே வளர்த்தார் பரிமளம். அஞ்சனா படித்து முடித்து தந்தைக்கு ஓய்வு கொடுத்து அவர் எடுத்து நடத்திய பிசினஸை தன் கைக்கு வசப்படுத்தி இப்பொழுது அவள் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறாள்.





இரவு பத்தை தாண்டி அஞ்சனா சோர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தாள். மகளின் முகத்தைக் கண்ட பரிமளம், "அஞ்சு போய் ப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்" என்று அழைத்தார். அதற்கு அவள் சிறு தலைப்புடன் மேலே சென்று ஐந்து நிமிடத்தில் மீண்டும் கீழே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.





அஞ்சனா அமர்ந்ததும் பரிமளம் அவளுக்கு உணவு பரிமாறினார். எப்படி மகளிடம் சித்தார்த் திருமணத்திற்கு சம்மதம் கூறி விட்டான் என்று சொல்வது என்று நினைத்து கலக்கமாக இருக்க, அவருக்கு உதவியாக அஜய் வந்தார்.





"அஞ்சு, என்ன கூட ஆபிசுக்கு வர வேணாம்னு சொல்லிட்ட... ஆனா இப்போ நீ மட்டும் இவ்வளவு நேரம் கழிச்சு வரது நல்லா இருக்கா?" என்ற சொற்களுடன் அவள் அருகில் அமர்ந்தார்.



அஞ்சனா நிமிர்ந்து தந்தையை ஒரு பார்வை பார்த்து மீண்டும் உண்ணுவதை தொடர்ந்தாள். அவர் மேலும், "இப்போ நீ எங்க வீட்டு பொண்ணா இருக்க நாங்க பொறுத்துக்கிறோம். ஆனா நீ இதே நாளைக்கு வேற ஒரு வீட்டுக்கு போனா அவங்க நீ செய்யறது எல்லாத்துக்கும் ஒத்துக்குவாங்களா?" எனக் கேள்வியுடன் நிறுத்தினார்.





சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, "டாட், இப்போ உங்க பிராப்ளம் என்னனு தெளிவா சொல்லுங்க" சுத்தி வளைச்சி வராமல் என்றாள் நேரடியாக.





"ரவிசங்கர் பையன் சித்தார்த் உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி விட்டான். உன்கூட தனியா பேசணும்னு வேற சொல்லி இருக்கார் இது தான் விஷயம்" என்றார்.





தந்தை கூறிய செய்தியில் அஞ்சனா அதிரவில்லை மேலும் கோபப்படவில்லை. அதற்கு, "சரி டாட், நான் ஃப்ரீ டைம் அப்போ சித்தார்த் கிட்ட பேசுறேன்" என்றாள்.





அவள் சம்மதம் கூறியதில் தந்தை தாய் இருவருக்கும் மகிழ்ச்சியே... ஆனால் அஜய், "அது இல்ல அஞ்சு நாளைக்கு உன் கூட பேசணும்னு சித்தார்த் சொல்லியிருக்கார் அது தான்..." என மீண்டும் நிறுத்தினார்.





அஞ்சனாவுக்கு மிகவும் கோபம் வந்தது. அது என்ன அவன் சொல்லி நான் போய் பேச வேண்டுமா? இதில் அவன் அதிகாரத்தை காட்டுகிறான் என மனதில் எண்ணி, "டாட், நாளைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. அதனால் பார்க்க முடியாது. நான் ஃப்ரீ டைம் பார்த்து தான் பேச முடியும்" என கூறி மேலும் தந்தை பேசுவதற்கு இடம் கொடுக்காமல் கைகழுவி விட்டு அவள் அறைக்குச் சென்று விட்டாள்.





அஜய் மனைவியை பார்த்தார். அவரும் அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தார். "என்னங்க, இப்படி சொல்லிட்டு போறா! எனக்கு என்னவோ பயமா இருக்கு. இவ கல்யாணம் ஆனாலும் பிசினசை விடமாட்டாள் போல" என புலம்பினார்.





"நீ கவலைப்படாத மாலு எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்று மனைவியை சமாதானம் செய்து விட்டு நாளை மகளுக்கு ஏதோ வேலை இருக்கிறது என கூறி மேலும் இன்னொரு நாள் பேச வைக்கலாம் என்று ரவி சங்கருக்கு போனில் தொடர்பு கொண்டு கூறினார். அதற்கு ரவிசங்கர் இல்லை நாளையே பேச வேண்டும் இல்லை என்றால் அவன் மனசு மாற கூடும் என்று கூறினார்.





அதற்கு ஒப்புக்கொண்டு போனை வைத்துவிட்டார் பேசிய விஷயத்தையும் மனைவியிடம் கூறி அதற்கு ஒரு தீர்வும் சொல்லி படுத்து உறங்கினர்.





காலையில் வழக்கம் போல் அஞ்சனாதேவி அலுவலகத்திற்கு கிளம்ப தயாராய் வர அவள் எதிரில் அஜய் கோட் சூட்டில் வந்து நின்றார்.





தந்தையை அதிசயத்துடன் நோக்கி, "என்ன டாட் எங்கேயாவது நீங்களும் மாமும் வெளிய போறீங்களா?" என போனை நோண்டிக்கொண்டே கேள்வி எழுப்பினாள்.





"இல்லை அஞ்சனா, நான் இன்னைக்கு அந்த மீட்டிங் போய் பார்க்கிறேன். நீ போய் சித்தார்த் கிட்ட பேசிட்டு வா" என்றார்.





"டாட் நீங்க என்ன சொல்றீங்க? நான் தான் அதுக்கு போகணும். என்னால எல்லாம் இன்னிக்கி போய் சித்தார்த் கிட்ட பேச முடியாது" என பிடிவாதம் பிடித்தாள்.





"அஞ்சனா, நான் உன் கிட்ட பர்மிஷன் கேட்கலை. இது தான் செய்யணும்னு தான் சொல்லி இருக்கேன். நீ போய் சித்தார்த் கூட பேசிட்டு வா மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்" அவ்வளவுதான் என கார் சாவியை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கிச் சென்றார். போகும் தந்தையை வெறியுடன் நோக்கி அந்த கோபம் எல்லாம் சித்தார்த் மேல் சென்றது அவன் நினைத்ததை சாதித்து விட்டான் அல்லவா!





எப்போதும் அவன் நினைத்ததை தான் சாதித்துக் கொண்டிருக்கிறான் இருக்கட்டும் இந்த திருமண விஷயத்தில் அவனை எப்படி விழ வைக்கிறேன் என்று மனதில் வன்மத்துடன் மீண்டும் மேலேச் சென்றாள்.





விழிஅரிசி வழக்கம் போல் ஆண்கள் வெளியே சென்றிருக்கும் போது வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் இடுவது மேலும் சிறுசிறு வேலைகள் செய்து தாய்க்கு உதவி செய்வது என செய்து விட்டு அவர்கள் வந்த உடன் அவள் அறையில் வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.





'நல்லவேளை நேற்று அந்த சம்பவம் நடந்தது பத்தி சார் அம்மா கிட்ட சொல்லல... எப்படியோ தப்பிச்சுட்டேன்' என மீண்டும் அதைப்பற்றி நினைத்துக் கொண்டு, 'அம்மா சொன்னாங்க அவங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகுதுனு அவர பார்த்தா ரொம்ப ஹைட்டா இருக்காரு. அவருக்கு வர போற பொண்ணுக்கு ஸ்டூல் தான் போட்டு வைக்கணும் போல' என யாரோ ஒரு பெண்ணுக்காக கவலைக் கொண்டாள்.





தனியாக இருக்கும் சமயத்தில் ஓவியம் பழகி இருந்தாள் விழி. அது தான் இப்பொழுதும் செய்ய தொடங்கினாள்.





சித்தார்த் மிகப்பெரிய காபி ஷாப்பில் அஞ்சனாதேவி வருகைக்காக காத்திருந்தான். அஞ்சனா வேண்டுமென்றே அவன் வந்து பத்து நிமிடம் கழித்து தான் அவன் இருக்கும் இடத்திற்கு வந்தாள். "ஹாய் சித்தார்த்" என அவன் எதிரில் அமர்ந்தாள்.





சித்தார்த் அவள் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்பாள் என்று எதிர்பார்த்திருக்க ஆனால் அவளோ, "ஹாய் சித்தார்த், என்கிட்ட பேசணும்னு சொன்னீங்க?" என்றாள்.





சித்தார்த் அவள் வந்ததிலிருந்து ஒவ்வொரு நொடியும் கவனித்துக் கொண்டிருந்தான். முதலில் அவள் ஆடை இரண்டாவது அவள் நடை, பேசும் மொழி, உடல் என அனைத்தையும் கண்டுக் கொண்டு, "மாம், மேரேஜ் பத்தி பேசினாங்க அதை பத்தி சொல்லணும்" எனக்கூறி, "எனக்கு ஃபர்ஸ்ட் டீசன்ட் அண்ட் ஒழுக்கம் ரொம்ப முக்கியம்" என அழுத்தமாக கூறி, "கல்யாணத்துக்கு அப்புறம் நீ வீட்ல இருந்து உன் ஆபீஸ் ஒர்க் பார்த்தா போதும், தென் லாஸ்ட் இவ்வளவு மேக்கப் போடாத எனக்கு பிடிக்காது" என அவன் கூற வருவதை இரண்டே வாக்கியத்தில் கூறி அவ்வளவு தான் என அவளிடம் விடை பெறாமலே கிளம்பிவிட்டான்.





அஞ்சனா, 'எவ்வளவு திமிர் இந்த திமிர வைச்சிக்கிட்டு என்ன பண்ண போறனு நானும் பாக்குறேன். உனக்கு டீசன்ட் அப்புறம் ஒழுக்கம் ரொம்ப முக்கியமா இருடா, உன்ன கல்யாணத்தன்னைக்கு பார்த்துக்கிறேன். அன்றைய தினம் எல்லார் முன்னாடியும் உன்னை தலை குனிய வைக்கல நான் அஞ்சனாதேவி இல்லை' என அவன் செல்லும் பாதையை நோக்கி கருவிக் கொண்டு, தந்தைக்கு அழைத்து திருமணத்திற்கு சம்மதம் என்று கூறி மர்மமாக புன்னகைத்துக் கொண்டாள்.

 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி -4



அஞ்சனா தந்தைக்கு அழைத்து திருமணத்திற்கு சம்மதம் கூறி மனதில் ஒரு முடிவோடு வெற்றிப் புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.


மகள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அஜய் கிருஷ்ணா மகிழ்ச்சியுடன் மனைவியிடம் பகிர்ந்து நண்பனுக்கு அழைத்து விவரம் கூறியவர் அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று பேச்சு வார்த்தை நடைபெற்றது.


"ராதா, நாம நெனச்சது மாதிரியே பசங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என ராதா கொடுத்த காப்பியை அருந்திக் கொண்டே கூறினார் மாதவி.


"ரொம்ப நல்லது மா, அடுத்து கல்யாணத்துக்கு ஆகவேண்டியதை பார்க்கணும் தானே மா, அப்புறம் எனக்கு என்ன வேலைனு சொல்லுங்க மா" என்று அவர் வேலையில் குறியாக நின்றார்.

மாதவி அவரை கோபமாக ஏறிட்டு, "என்ன ராதா நீ, எப்போவும் வேலை வேலைனு சொல்லிட்டு இருக்க, நான் சொன்னாலும் நீ கேட்க போறது இல்லை" என சலிப்பாக கூறி, "இந்த ஒரு விஷயத்தை மட்டும் கேளு, கல்யாணத்துக்கு வரவங்கள அவங்களுக்கு தேவையானதை பார்த்து நீ தான் செய்ய போற... அப்போ தான் உன் மனசுல இது நம்ம வீட்டு கல்யாணம்னு பதியும்... இன்னும் முக்கியமான விஷயம் அரசிக்கும் வேலை இருக்கு. அவளும் ஒழுங்கா வேலை பார்த்தா தான் பொறுப்பு வரும். எப்போவும் உள்ளவே இருந்தா நல்லது கெட்டது எந்த விஷயமும் தெரியாம போகும்" என்றார்.

ராதா மனதில் எச்சரிக்கை மணி அடித்தது. "ஐயோ அம்மா! அரசி, எதுக்கு மா? நானே எல்லா வேலையும் பார்த்துக்குறேன். அவ சின்ன பொண்ணு அதுவும் இல்லாம அவளுக்கு எந்த வேலையும் செய்ய தெரியாது" என்று எப்படியும் அரசியை இதற்குள் நுழைக்க கூடாது என தீர்மானத்துடன் கூறினார்.


"நான் எவ்வளவு கேட்டாலும் உன் பொண்ணை நீ வெளியே அனுப்ப மாட்ட, ஆனா உனக்கு இப்ப புரியாது அவ கஷ்டப்படும் போது தான் உனக்கு தெரிய வரும்" என கூறிவிட்டு, "சரி இப்பவாவது உன் குடும்பத்தை பத்தி சொல்லு, அவங்க கிட்ட நல்ல மாதிரி சொல்லி உன்ன அவங்க கூட சேர்த்து வைக்கிறேன்" என கடைசி முறையாக கேட்டார். ஏன் என்றால் எப்போதும் அவர் குடும்பத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருப்பார் மாதவி. ஆனால் ராதா எதுவும் கூறாமல் அழகாக தவிர்த்து விடுவார்.


அதற்கும் ராதாவிடம் இருந்து மௌனமாக பதில் வர மாதவி காபி கப்பை அவரிடம் கொடுத்து பெரிய மூச்சை வெளியேற்றி, "சரி கல்யாணத்துக்கு இன்னும் 25 நாள் தான் இருக்கு" அதுக்குள்ள என்ன வேலை செய்ய வேண்டும் என பட்டியலிட்டு அவருக்கு என்ன வேலை பார்க்க வேண்டும் என்றும் கூறி கணவனை தேடிச் சென்றார்.


விழி அழகாக வண்ணங்கள் வரைந்துக் கொண்டிருந்தாள். அப்போது அன்னை வருவதைப் பார்த்து, "அம்மா சாப்பிட வந்துட்டீங்களா? நான் சாப்பாடு செஞ்சிட்டேன். உங்களுக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன்" என்று வரைந்திருந்த படத்தை எடுத்து வைத்துக் கொண்டே கூறினாள்.

ராதா மகள் செய்து வைத்திருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டே, "அரசி, இன்னும் 25 நாளில் சாருக்கு கல்யாணம் இருக்கு. நான் சொன்ன மாதிரி நீ வெளியே வரக்கூடாது. அவங்க சொந்தக்காரங்க வருவாங்க என்ன கேட்குதா? எங்கேயும் போகக்கூடாது யார் கூப்பிட்டாலும் சரியா?" என அறிவுரை கூறி, "சாருக்கு கல்யாணம் பண்ண போற பொண்ணு ஐயாவோட ஃப்ரெண்ட் அஜய் கிருஷ்ணா சார் பொண்ணு அஞ்சனாதேவி மேடம் தான்" என்றார்.


விழி மனக்கண்ணில் அஞ்சனா வந்து சென்றாள். அஞ்சனா ஓரிரு தடவை இங்கே வந்து இருக்கும் போது எதேச்சையாக வெளியே இருக்கும் பொழுது விழி அவளைப் பார்த்து இருக்கிறாள். 'சாரோட கோபத்துக்கும் குணத்துக்கும் அவங்க தான் கரெக்டா இருப்பாராக நல்ல ஜோடி தான்' என்று யோசிக்கையில்...


"என்ன அரசி அமைதியா இருக்க?" என தாய் கேட்க, "ஒன்றும் இல்லம்மா" என கூறி உண்ண தொடங்கினாள்.


பெரியவர்கள் கல்யாணம் வேலையில் மும்மரமாக இருக்க அதற்கு சம்மந்தப் பட்டவர்கள் இருவரும் அவர் அவர் தொழிலில் கவனமாக இருந்தனர். சித்தார்த் அவன் அறையில் யோசனையில் இருந்தான். அன்று அஞ்சனாவை பார்த்தது தான்... மீண்டும் அவன் அவளை எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை...

அஞ்சனாவும் அதே தான்... 'அவனுக்கே அவ்வளவு இருக்கும் போது நான் ஏன் அவனுக்கு போன் செய்ய வேண்டும்?' என்ற எண்ணத்தில் இருந்தாள்.


ராதா, மாதவி கூடுதல் வேலைகளில் பொறுப்புடன் பார்த்துக் கொண்டு இருக்க, விழி அவள் அன்னை கட்டளையை தாண்டி வெளிய வர முடியாமல் அந்த அறையில் பொழுதை கழித்தாள்.


"ராதா, என் சொந்தக்காரங்க வருவாங்க... நான் சொன்ன இடத்துல தங்க ஏற்பாடு பண்ணிட்டியா?" என மாதவி கல்யாண பத்திரிக்கையில் கண் பதித்துக் கொண்டே கேட்டார்.


"நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் பண்ணிட்டேன் மா" என்றார் ராதா.


"சரி ராதா, நீ என் கூட இருக்கவே எனக்கு ரொம்ப கஷ்டம் இல்லாம ஈஸியா முடிஞ்சுடுச்சு, அவருக்கும் சில முக்கியமான நபர்களுக்கு நேரில் போய் பத்திரிக்கை வைக்கணும், எல்லாம் நான் மட்டுமே பார்த்துக்க வேண்டி இருக்கு" என்றார் ராதாவை பாராட்டிக் கொண்டே.


"இதுல என்ன மா இருக்கு நீங்க சொல்ற வேலை செய்ய தான் நான் இருக்கேன்" என்றார் எப்பொழுதும் போல் அமைதியாக.


மாதவி அவரை பார்த்துக்கொண்டே, "ராதா, நாளைக்கு புடவை எடுக்க போறோம் நீயும் அரசியும் வந்துடுங்க... நாம கார்ல போய்ட்டு வந்துடலாம்" என்றார்.


"நான் தான் எங்க கிட்ட புது புடவை இருக்கு வேணாம்னு சொல்லிட்டேனேமா" என கூற,


மாதவி கோபமாக, "நான் சொல்றதை கேட்க தான் நீ இங்க இருக்க... நீ சொல்லி நான் கேட்கணும்னு இல்ல புரியுதா? நாளை நீ வர அரசியோட" என பேச்சை முடித்து உள்ளே எழுந்துச் சென்றார் மீண்டும் வார்த்தை நீடிக்காமல் இருக்க.


ராதா மேலும் எதுவும் பேச முடியாமல் சரி என கூறி மகளை தேடிச் சென்றார்.


"அம்மா, என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கீங்க?" எப்போதும் தாமதமாக வரும் அன்னையிடம் வினவினாள்.


"அரசி நாளைக்கு பெரிய வீட்டில் எல்லோரும் புடவை எடுக்க போறாங்க... உன்னையும் அம்மா வர சொல்லி இருக்காங்க... அவங்க ரொம்ப காஸ்ட்லியான புடவை எடுத்து கொடுத்தால் வேணானு சொல்லிட்டு நான் எடுத்து தரது தான் எடுக்கணும் சரியா?" என்றார்.


"சரிமா" என்று தலையாட்டி, "எத்தனை மணிக்கு போகணும் அப்புறம் அந்த அக்கா கூட வராங்களா?" என்றாள்.


"அனேகமா அவங்க அம்மா அப்பா தான் வருவாங்க. அப்புறம் சார் வர மாட்டாங்க. அதனால தான் அவங்க உன்ன வர சொல்லி இருக்காங்க பயப்படாமல் இருக்கணும். ஆனா நீ யார்கிட்டயும் பேசக்கூடாது என்கூட மட்டும் தான் இருக்கணும்."


"சரி" என்று தலை அசைத்துச் சென்றாள் விழி அரசி.


நேரம் யாருக்கும் காத்திருக்காமல் சென்றுக் கொண்டிருந்தது. மாதவி கூறியது போல் அனைவரும் புடவை எடுக்க தயாராக இருந்தனர். ராதா அவர் மகளை தாவணியில் அழைத்து வந்தார். விழி பயந்துக் கொண்டே வீட்டின் உள்ளே வர அதைக் கண்டு கொண்ட மாதவி அவள் அருகில் சென்று, "பயப்படாதம்மா என் மகன் வீட்டில் இல்லை அவன் ஆபீசுக்கு போய் இருக்கான். அதனால தான் உன்னை இன்னைக்கு என் கூட வர சொன்னேன். எங்க உங்க அம்மா? இன்னைக்கு உன்னை கூட்டிட்டு வர மாட்டாங்கனு ரொம்ப கவலையா இருந்தேன். அதான் அவளை திட்டி நான் உன்ன கூட்டிட்டு வர சொன்னேன்" என்றார் சந்தோஷத்துடன்.


அவர் கூறியதற்கு சிறிய புன்னகை மட்டும் தந்தவள், அன்னை பக்கத்தில் போய் நின்றுக் கொண்டாள். அதை சிறு கோபத்துடன் பார்த்தவர், "இன்னிக்கும் உன் மகனைப் பிரிந்து இருக்க மாட்டியா? இன்னிக்கு முழுக்க என் கூட தான் இருக்கப் போறா" என தன் பக்கம் நிறுத்திக் கொண்டார்.


விழி பயத்துடன் அன்னையைப் பார்க்க அவர் 'சரி' என்று தலையசைத்தார்.

புடவை எடுப்பதாக தகவல் மட்டும் கூறினார் மாதவி சித்தார்த்துக்கு... அவன் வரமாட்டான் என்று அறிந்து தான், அஞ்சனாதேவியை வரும்படி அழைக்க அவளோ சித்தார்த்தே வரவில்லை நான் ஏன் வரவேண்டும் என்று மனதில் கறுவிக்கொண்டு எனக்கும் வேலை இருக்கு வர முடியாது என கூறி விட்டாள். அதில் சிறு வருத்தம் தான் மாதவிக்கு... இருந்தும் அவளை சுற்றி இருக்கும் வேலைகளை நினைத்து அதை விட்டுவிட்டு விழியை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றார்.


புடவை எடுக்க ஐந்து பெண்மணிகளாக செல்ல வேண்டும் என்று மாதவியோட உறவினர் ஒரு பெண்மணி மற்றும் ராதா அவருடைய மகள் விழி அரசி ஐவராக இருந்தனர். தன்னுடைய மருமகளுக்கு ஆசை ஆசையாக மாதவியே பட்டுப் புடவைகளை விலை உயர்ந்ததாக தேர்வு செய்தார். ராதா மற்றும் விழி அமைதியாக உட்கார்ந்துக் கொண்டிருந்தனர். விழி தான் ஆச்சரியமாக அந்த கடையை சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது தான் முதல் முறையாக இவ்வளவு பெரிய கடையை பார்க்கிறாள். அதுவும் ஒரே இடத்தில் அவ்வளவு துணிகள் இருந்தது. ஒரு புடவை ஆரம்ப விலையே ஐம்பதாயிரம் கிட்ட இருந்தது. இவ்ளோ காசு கொடுத்து புடவை கூட எடுத்துக் கட்டுவாங்களா? எவ்வளவு காசு கொடுத்து எடுத்தாலும் அது நம்ம உடல் மறைக்கிற துணி தானே என எண்ணத்துடன் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.


"அரசி, ஏன் அங்க அங்க உக்காந்துட்டு இருக்க? வா... உனக்கும் புடவை எடுக்கணும் எது வேணுமோ பார்த்து எடுத்துக்கோ" என கூப்பிட்டார்.


விழிஅரசி அச்சத்துடன் அன்னையைப் பார்க்க மாதவி, "அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டா. நீ எழுந்து வா இல்லனா எனக்கு கெட்ட கோபம் வரும்" என கண்டித்தார்.


"உனக்கு வேற தனியா சொல்லணுமா ராதா? உனக்கு பிடித்த மாதிரி புடவை எடுத்துக்கோ, நீ மறுபடியும் பழைய கதை ஆரம்பிச்ச... உன்ன திட்டுற மாதிரி வச்சுக்காத" என அவரையும் புடவை வாங்க அழைத்தார்.


ராதா அவள் மகளை தனியாக விட மாட்டாள் என மாதவி விழிஅரசியை தன்னுடன் வைத்துக்கொண்டு அவளுக்கு வேண்டிய புடவை எடுக்கும்படி கூறினார். அவளும் ஆச்சரியம் கலந்த அச்சத்தோடு ஒவ்வொரு பொருளையும் முட்டி முட்டி பார்த்தாள். ஒவ்வொரு புடவையும் அவ்வளவு மெதுவாக சாஃப்ட்டாக இருந்தது. அவள் இரண்டு கண்ணையும் விரித்துப் பார்த்தாள். ஒவ்வொரு டிசைனும் பார்டரும் இந்த மாதிரி புடவைகள் அவள் வாழ்க்கையில் ஒரு தடவையும் பார்த்ததில்லை. ஒன்றொன்றாக பார்த்தவள் விலையை பார்த்தால் அவ்வளவு அதிர்ச்சி... ஒவ்வொரு புடவையும் 60,000... 70 ஆயிரம் என்ற தொகையில் இருந்தது.


அதை பார்க்கவே மலைப்பாக இருந்தது விழிஅரசிக்கு... புடவையை தேர்வு செய்வது விட கம்மியான காசுல இருக்கற மாதிரி புடவை எடுக்கணும் என்று நினைத்து அங்கே இருந்த புடவைகளை அலசி மிகக் குறைவான தொகையில் இருந்த ஒரு புடவை எடுத்து மாதவியிடம் நீட்டினாள்.


மாதவி தன்னுடைய மருமகளுக்கு புடவை எடுத்துக் கொண்டிருந்த பொழுதே விழிஅரசி புடவையை தேர்வு செய்வதை ஒரு கண்ணால் பார்த்தவர், எப்போதும் போல் பெரிய மூச்சை வெளியேற்றி, "சரி" என்று அதை வாங்கிக்கொண்டார். அவளுக்கு தெரியாமல் மீண்டும் விலை உயர்ந்த மூன்று புடவைகளை எடுத்து வைத்து கொண்டார் அவளுக்கு தகுந்தது போல.


பரிமளம், மாதவி ஒன்று ஒன்றாக எடுத்து வைக்கும் புடவையை சற்று பயத்துடனே பார்த்தார். காரணம் தன் மகள் எப்பொழுதும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டாப்பை தவிர வேறு எந்த உடையும் அணிவதில்லை. பார்ட்டி அல்லது ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் சுடிதார் அணிவாள். ஆனால் இப்பொழுது மாதவி அடுக்கிக் கொண்டுச் செல்லும் புடவையை பார்த்து தான் தன் மகளிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்தார்.


"என்ன மாதவி இவ்வளவு புடவை எடுக்கிற? சுடிதார் கொஞ்சம் எடுக்கலாமில்ல" என அவர் மனம் அறிய பேச்சை கொடுத்து பார்த்தார்.


"நோ நோ பரிமளம் உனக்கு சித்தார்த் பத்தி தெரியாதா? இதுக்கு முன்னாடி அஞ்சனா ஜீன்ஸ் டாப் போட்டாலும் இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பா சாரி தான் போடணும்னு எதிர்பார்ப்பான். அதனால தான் அஞ்சனா கிட்ட புடவை இருக்காதுனு தெரிஞ்சு இவ்வளவு புடவை எடுக்கிறேன்" என்றார் ஒரு நல்ல மாமியாராக.


அப்பொழுதே தன் மனதில் நினைத்ததை மகளிடம் பேச வேண்டும் என்ற முடிவோடு அமைதியாகி விட்டார் பரிமளம்.


மாதவி, ராதா, விழி அரசி வீட்டிற்குச் செல்ல பரிமளம் வாங்கிய உடைகளுடன் அவர் வீட்டுக்குச் சென்றார்,


மாதவி விழியை பார்த்து, "அரசி, இந்தா உன்னுடைய புடவை கல்யாணத்துக்கு மூணு நாள் முன்னாடி இருந்து நல்ல விசேஷமா நடக்கும். இந்த மூணு நாளும் நான் வாங்கி கொடுத்த துணி தான் போட்டுக்கணும்" என்று அன்பு கட்டளையுடன் அதை கையில் கொடுத்து ராதாவிடம் ஒரு கவரை கொடுத்து மீதி பைகளுடன் உள்ளேச் சென்றார்.


அன்று இரவு பரிமளம் தன்மகள் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தார். அஞ்சனாவும் தாயை காக்க வைக்காமல் விரைவிலே வீட்டிற்கு வந்தாள்.


வீட்டிற்குள் நுழையும் போதே சோஃபாவில் அன்னை ஏதோ ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருப்பதை பார்த்து, "என்ன மாம் இன்னும் தூங்க போகாமல் இங்கேயே உட்க்கார்ந்துட்டு இருக்கீங்க? என்கிட்ட ஏதாவது பேசணுமா?" என நேரடியாக கேட்டாள்.


யோசனையை கலைத்து விட்டு மகளை கீழே இருந்து மேல் வரை மெதுவாக பார்த்தவர், "அஞ்சனா, இன்னிக்கி மாதவி கூட புடவை எடுக்க போனேன். அப்புறம் மாதவி கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை புடவை மட்டும் தான் கட்ட சொல்லி நிறைய புடவை எடுத்து இருக்கா, அதனால் நீ புடவை கட்ட கத்துக்கமா" என்றார் ஒரு தாயாக.


அஞ்சனாக்கு தெரியாதா மாதவி ஏன் புடவை எடுக்கிறார் என்று சித்தார்த்துக்கு பிடிக்கும் என்று தான். ஒரு ஏளன புன்னகையுடன், "ஒகே மாம்" என் பதில் மட்டும் கொடுத்து விட்டு தன்னறை நோக்கிச் சென்று விட்டாள்.


தான் கூறியதற்கு மகள் சண்டை போடுவாள் என்று எதிர்பார்த்த பரிமளம், அஞ்சனா சீக்கிரம் ஒப்புக் கொண்டாள் என்ற சந்தோஷத்துடன் இந்த செய்தியை கணவனிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தங்கள் அறையை நோக்கிச் சென்றார், ஆனால் அவர் அறியவில்லை தன் மகள் மனதில் இருக்கும் மர்மம் என்னவென்று??
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி - 5




சித்தார்த் வீட்டில் தாய், தந்தை இருவரும் மட்டுமே கல்யாண வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர். சித்தார்த் எதை பற்றியும் கவனிக்காமல் வழக்கம் போல அவன் தொழிலை பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றை மட்டும் கூறி விட்டான் கல்யாணத்திற்கு பெரிய ஆட்கள் எல்லாம் வருவார்கள் அதன் படி கல்யாணம் மிகப் பிரமாண்டமாக இருக்க வேண்டும் கல்யாணத்தில் தனக்கு எந்த கௌரவ பிரச்சனையும் நேர கூடாது என்று...


அதன்படி தான் மாதவி ஒன்று ஒன்றாக அவரே முன்னிருந்து கவனித்துக் கொண்டார். அவருக்கு உதவியாக ராதா இருந்தார்.

அதேபோல் தான் அஞ்சனா வீட்டில் திருமண வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அஞ்சனா மட்டும் அவள் மனதில் ஒரு எண்ணத்தை தீட்டிக் கொண்டிருந்தாள். அதில் யாருக்கும் சந்தேகம் வராமல்.


விழிஅரசி ரூமுக்குள் இருந்தே அன்னைக்கு வேண்டிய வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டில் புதிய மனிதர்கள் வருவதால் ராதா கூறியபடி வெளியே எட்டி கூட பார்க்கவில்லை. மாதவி கூப்பிட்டால் வேலை இருக்கிறது என்று மறுத்து விடுவாள்.


மாதவி தன் ஒற்றை மகனுக்காக பார்த்து பார்த்து அனைத்தையும் செய்துக் கொண்டிருந்தார். திருமணத்தில் எந்த ஒரு குறையும் இருக்கக் கூடாது என்று...




**************

இதோ அதோ என்று எல்லோரும் மிக ஆவலாக எதிர்நோக்கிக் கொண்டிருந்த திருமண நாளும் வந்தது. திருமணத்திற்கு முன் தினம் நிச்சயதார்த்தம் மற்றும் ரிசெப்ஷன் வைத்துக் கொள்ளலாம் மறுநாள் திருமணம் என்ற நிலையில் வந்திருந்தது.


ராதா எவ்வளவு வேலைகள் இருந்தாலும் மகளை தன் கைக்குள் வைத்துக்கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.


"அரசி மா, நீ இந்த ரூமை விட்டு எங்கேயும் போகாத... இது பெரிய மண்டபம் நான் போய் மாதவி அம்மா கூட வேலையா இருக்கேன். எதுனா வேணும்னா இங்கேயே இரு நான் அப்பப்போ வந்து பார்த்துட்டு போறேன்" என இதோட நூறாவது முறையாக அவளுக்கு புத்திமதி கூறி அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.


ஆம் அன்று தான் நிச்சயதார்த்தம் மற்றும் ரிசப்ஷன் நடக்க இருப்பதால் மண்டபத்திற்கு வந்து சித்தார்த் வரும் முன் அனைத்தும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று தான் மாதவி மற்றும் ராதா மகளை கையோடு அழைத்து வந்து விட்டார். ராதா, மாதவி உடன் இருக்க விழியை அவருடன் வைத்துக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை. ஏனென்றால் அந்த மண்டபத்தில் சில இளைஞர்களின் கண்கள் விழியை சுற்றி வருவதை பார்த்து தான் அவளை ஒரு அறையில் இருக்குமாறு புத்திமதி கூறி மாதவியுடன் சென்றார்.


அஞ்சனாதேவி வருவதற்கு தாமதம் ஆகும் என்று பரிமளம் மற்றும் அஜய் கிருஷ்ணா இருவரும் மண்டபத்திற்கு வந்து விட்டனர். மணமக்கள் வராமல் மற்றவர்கள் வந்து வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.


சித்தார்த்துக்கு தெரிந்த சில முக்கிய நபர்கள் வந்து முதல் வரிசையில் உட்கார்ந்துக் கொண்டிருந்தனர். சித்தார்த் நேரம் தாமதிக்காமல் வந்து விலை உயர்ந்த கோட் சூட் அணிந்து தயாராகிக் கொண்டிருந்தான். அதற்கு குறை இல்லாது அஞ்சனாவும் ரெடியாகிக் கொண்டிருந்தாள்.


சித்தார்த் கம்பீர நடையுடன் ஒரு சிறு புன்னகையுடன் மேடையை நோக்கி வர அதே கம்பீரம் குறையாமல் அஞ்சனாவும் புன்னகையுடன் வந்தாள். ஆனால் அவள் புன்னகை வேறு விதமாக இருந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்து மோதிரம் மாற்றும் படி மாதவி மகனிடம் மோதிரம் கொடுக்க அவன் என்ன நினைத்தானோ கல்யாணத்துக்கு பின் மோதிரம் அணிவித்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டான். போட்டோ ஷூட்டும் அதேபோல் கல்யாணத்துக்கு பின் வைத்துக் கொள்ளலாம் என்றான். அவன் எதிர்பார்த்தபடியே அவன் கௌரவத்திற்கு சற்றும் குறையாமல் மாதவி மற்றும் ரவிசங்கர் அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்திருந்தனர்.


பெரியவர்கள் எதிர்பார்த்தபடி நிச்சயதார்த்தம் மற்றும் ரிசெப்ஷன் நன்றாக முடிந்தது. "ராதா, நான் எதிர்பார்த்தபடியே எந்த பிரச்சனையும் இல்லாமல் நிச்சயதார்த்தம் எல்லாம் முடிஞ்சிடுச்சு... நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு முகூர்த்தம் இருக்கு. அதுக்குள்ள அஞ்சனா எழுந்து குளித்து ரெடி ஆயிடணும். என்ன அஞ்சனா கொஞ்சம் எல்லார்கிட்டயும் இன்னும் அழகா சிரிச்சு பேசி இருந்தா நல்லா இருந்திருக்கும்" என்றார் மாதவி ஒரு சிறு குறையாய்.


"விடுங்கம்மா, மேடையில நின்னுட்டு இருக்கும் போது அவங்களுக்கு கூச்சமா இருந்து இருக்கும். அதான் அப்படி வேற எதுவும் நினைச்சு வருத்தப் படாதீங்க... சித்தார்த் தம்பி அவர் ரூமுக்கு போய்ட்டாங்க. அதே மாதிரி அஞ்சனா அம்மாவும் ரூமுக்கு போய்ட்டாங்க... நானும் அரசியும் போய் படுத்து தூங்கறோம்... காலையில சீக்கிரம் எழுந்து வேலைகளை பார்க்கணும்" என்று கொஞ்சம் வருந்தி இருந்த மாதவியின் மனதையும் அழகாக மாற்றி மகளை அழைத்துக் கொண்டு அவருக்கு கொடுத்த அறைக்குச் சென்றார் ராதா.


காலை 3:00 மணிக்கே ராதா எழுந்து குளித்து முடித்து மகளையும் எழுப்பி குளிக்க வைத்து அவளுக்கு அழகாக புடவை கட்டிவிட்டார். தலைக்கு குளித்து இருப்பதால் லேசாக ஜடை மட்டும் பின்னி அதிலே மல்லிகை பூவை வைத்து மிதமான அலங்காரம் செய்து விட்டார். அதற்கே அவள் பேரழகாக இருந்தாள். அதுவும் அவள் மையிட்ட கண்கள் பார்க்க அவருக்கே திகட்டவில்லை...


"அரசி, இன்னிக்கும் நீ கல்யாணம் ஆகுற வரைக்கும் இதுக்குள்ளவே இரு... கல்யாணம் நடக்கிற சமயத்துல மட்டும் நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்" என பத்திரம் கூறி மற்ற வேலைகளை கவனிக்க மாதவியுடன் இணைந்துக் கொண்டார்.


சித்தார்த் திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தான். அவனுடன் அவன் நண்பன் தேவா உதவியாக இருந்தான்.


பரிமளம் வரும் வரை எல்லாம் அமைதியாக தான் நடந்துக் கொண்டிருந்தது.


பரிமளம் ஏதோ பதற்றமாக தன் கணவனிடம் கூறுவதை கவனித்த மாதவி அவரை நெருங்கி, "ஏதாவது பிரச்சனையா என்ன ஆச்சு?" என கேட்டார். ஏனென்றால் அவருக்கும் சற்று உள்ளுக்குள் கவலையாக தான் இருந்தது. சித்தார்த் ஏதாவது பிரச்சனை ஏற்படுத்தி விட்டானா? என்று.


மாதவியின் கேள்விக்கு இருவரும் அமைதியாக நிற்க ஏதோ பிரச்சனை பெரிது என்று உள்ளுணர்வு தோன்ற அங்கு சென்றுக் கொண்டிருந்த தன் கணவரை அழைத்து விஷயத்தை கூறினார் மாதவி.


"ஏதாவது பிரச்சனையா?" என மனைவி கேட்ட கேள்வியை கேட்டார் ரவிஷங்கர்.


கணவன் மனைவி இருவரும் அதே அமைதியை தொடர...


"அஜய் சொல்லு ஏதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு நம்ம சரி பண்ணிக்கலாம்" என்று வற்புறுத்தினார்.


"ரவி... அது இல்ல ரூம்ல அஞ்சனா காணோம்னு பரிமளா சொல்றா" என்றார் சற்று நடுங்கிய குரலுடன் தயங்கிக் கொண்டே...


அஜயின் பதிலில் மாதவிக்கு உள்ளுக்குள் மிகவும் பயம் கொண்டது.


"என்ன பதில் சொல்லிட்டு இருக்க அஜய்? ரூம்ல இல்லனா பாத்ரூம்ல இல்லனா வேற எங்காவது இருப்பா தேடி பாரு" என்றார் சற்று அதட்டலாக.


"இல்ல ரவி, பரிமளம் எல்லா இடத்திலும் தேடி பார்த்துட்டேன்னு சொன்னா, அவ போன் வேற நாட் ரீச்சபிள்னு வருது" என்றார்.


மாதவி ரவிசங்கரிடம், "என்னங்க இவங்க இப்படி பதில் சொல்றாங்க? சித்தார்த் வேற கல்யாணத்துக்கு ரெடியாயிட்டு இருக்கான். ஏதாவது பிரச்சனை வந்தா அவன் சும்மா இருக்க மாட்டான். அதைவிட இப்போ நம்ம பையன் கல்யாணம் முக்கியமா நடந்தே ஆகணும். இப்ப விட்டா மறுபடியும் அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான். அஞ்சனா வேற இல்லனு சொல்றாங்க" என அவர் ஏதேதோ பயத்தில் உளறிக் கொண்டிருக்க...


"கொஞ்சம் நேரம் பயப்படாம இரு மாது, நான் தான் பேசிட்டு இருக்கேன் இல்ல... எங்காவது இங்க தான் போன் பேசிட்டு இருப்பா, இன்னும் நல்லா தேடிப் பார்க்கலாம்" என அவருக்கு தைரியம் கூறி, "அஜய், இங்கே எங்காவது தான் போன் பேசிட்டு இருப்பா, எல்லா இடத்துலயும் தேடி பாரு" என மனைவிக் கூறியதை அஜய்யிடமும் கூறி தேடிப் பார்க்கும் படி என்றார்.


பரிமளம் பாவம் தன் மகளால் கணவன் படும் பாட்டை அவரால் பார்க்க முடியவில்லை. அஞ்சனா மட்டும் இப்பொழுது கையில் கிடைத்தால் எப்படி அடிப்பார் என்று அவருக்கே தெரியவில்லை. பரிமளம் ஒரு பக்கம் மாதவி ஒரு பக்கம் என நால்வரும் ஒவ்வொரு பக்கம் அஞ்சனாவை தேட முகூர்த்தத்திற்கு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.


சரியாக 5:00 மணிக்கு திருமணம் என தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இப்போது மணமகள் இல்லை என்றால் சித்தார்த் இதை எப்படி எடுத்துக் கொள்வான் என்றே யாராலும் யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. மாதவி ராதாவிடம் விஷயத்தை கூற அவரும் ஒரு பக்கம் பதற்றத்துடன் தேடிக் கொண்டிருந்தார். ஐவரும் மண்டபமே தேடிப் பார்த்தாயிற்று அஞ்சனா அங்கு எங்கேயும் இல்லை...

ரவிசங்கர் கையை பிடித்துக் கொண்டு இருக்க, "என்னங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நேரம் வேற ஆகிட்டு இருக்கு சித்தார்த் வேற அங்க ரூம்ல ரெடி ஆகிட்டு உக்காந்துட்டு இருக்கான். இன்னும் கொஞ்ச நேரத்துல ஐயர் கூப்பிடுவாங்க. இப்ப என்ன செய்யறது அஞ்சனா போனுக்கு ஃபோன் பண்ணி பார்த்துட்டேன். அவ போன் நாட் ரீச்சபிள் அப்படினு தான் வருது. என்ன பண்றதுனு எனக்கு தெரியல" என்றார் கண்கள் கலங்க.


பரிமளமும் ஒரு பக்கம் அதே பரிதவிப்புடன் தான் இருந்தார். தன் மகளால் எல்லோருக்கும் எவ்வளவு கஷ்டம் என்று நினைத்து தன் மகளை சரியாக சிறுவயதில் இருந்தே கணித்து வளர்க்கவில்லையோ என்று அந்த நேரத்தில் மிகவும் வருந்திக் கொண்டார்.


முகூர்த்தத்திற்கு அரை மணி நேரம் இருக்கும் சமயத்தில் அஜய் கிருஷ்ணா போன் அடித்தது. இந்த நேரத்தில் யார் என்று அவர் எடுத்துப் பார்க்க அஞ்சனா என்று பெயர் வர உடனே அதை ஏற்று, "அஞ்சனா எங்க இருக்க? நாங்க உன்னை எல்லா இடத்திலும் தேடி பார்த்துட்டோம். உன் போன் வேற இவ்ளோ நேரம் நாட் ரீச்சபிள்னு வருது. சீக்கிரம் எங்க இருந்தாலும் உடனே வாம்மா அரை மணி நேரத்தில் முகூர்த்தம் இருக்கு" என்றார் படபடப்பாக.


அந்தப் பக்கம் அஞ்சனா, "டாட் வெயிட் எதுக்கு இவ்வளவு ஸ்பீடா மூச்சு விடாம பேசுறீங்க?" என்றாள் கூலாக...


"அஞ்சனா இது விளையாட நேரமில்லை கல்யாணத்துக்கு நேரம் ஆகுது" என மீண்டும் அமைதியாகவே அவளிடம் பேசினார்.

"டாடி, நீங்க சொல்ற அரை மணி நேரத்தில் என்னால வர முடியாது. வேணும்னா அடுத்த வாரம் இதே நேரத்தில் கல்யாணம் வச்சுக்கலாம். நான் இப்போ அவசரமா பிசினஸ் மீட்டிங் காக யூ.எஸ்.ஏ போயிட்டு இருக்கேன். எனக்கு பிளைட்டுக்கு நேரம் ஆகுது நான் யு.எஸ்.ஏ போய்ட்டு கால் பண்றேன் பாய்" என தந்தை பேசுவதற்கு இடம் கொடுக்காமல் போனை அணைத்து பையில் போட்டுக்கொண்டு, 'சித்தார்த் இந்த நேரத்துக்காகத் தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இன்னிக்கு எல்லார் முன்னாடியும் நீ அசிங்கப்பட்டு நிக்கணும். எல்லோரும் உன்னை ஏளனமா பார்த்து சிரிக்கணும். நீயே வந்து என்கிட்ட கல்யாணம் எப்ப வச்சுக்கலாம்னு கேக்கணும்' என ஏதோ சாதித்து விட்டதாக புன்னகையுடன் யு.எஸ்.ஏ செல்வதற்கு ஃபிளைட்டை நோக்கி நடந்தாள் அஞ்சனா தேவி.


அஜய் கிருஷ்ணா மகள் கூறியதை கேட்டு அதிர்ந்து போய் நின்றார். என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதற்கு கூட நேரமில்லை. இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மகள் நிற்க வைப்பாள் என்று அவர் வாழ்க்கையில் நினைத்துப் பார்த்ததே இல்லை. "அஞ்சனா என்னங்க சொன்னா" கணவர் அதிர்ந்த தோற்றத்தை பார்த்து பரிமளம் கேட்க...


"அவ யூ.எஸ்.ஏ பிசினஸ் மீட்டிங் போயிட்டு இருக்கிறதா சொன்னா" என்றார் பாவமாக... பாவம் அவரும் என்ன தான் செய்ய முடியும் மகள் இப்படி ஒரு நிலையில் நிற்க வைத்து போய்விட்டாளே...


இதைக் கேட்ட அங்கு இருந்த அனைவருக்கும் குண்டைத் தூக்கி தலை மேல் போட்டது போல் இருந்தது. "கடவுளே இப்போ போய் என்னுடைய மகன் கல்யாணம் நின்னுச்சுனா அவன் எப்படி எடுத்துப்பான்னு தெரியலையே படிச்சு படிச்சு சொன்னானே கல்யாணத்தன்னைக்கு எந்த தவறும் நடக்க கூடாதுனு... இப்ப கல்யாணப் பொண்ணு இல்ல, கல்யாணம் நடக்காது அப்படினு தெரிஞ்சுதுனா அவன் வாழ்க்கையில் மறுபடியும் மேடை ஏறவே மாட்டானே" என புலம்ப தொடங்க...


"மாது கொஞ்ச நேரம் சும்மா இரு வேற ஏதாவது யோசிப்போம். இப்போ அது பத்தி யோசிக்காத" என உடனே ரவிசங்கர் புத்திசாலித்தனமாக வேற தீர்வு சொல்ல,


"என்னங்க இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தம்... அதுக்குள்ள நம்ம போய் வேற பொண்ண எங்கிருந்து போய் தேட முடியும், அதுவும் அவனுக்கு தெரிஞ்சா அதை நினைச்சு கூட பார்க்க முடியலையே" என்றார் பரிதாபமாக.


பரிமளம் மற்றும் அஜய் கிருஷ்ணா எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றனர். மேற்கொண்டு அவரால் என்ன பேச முடியும் ரவிசங்கர் தான் யோசனையாக இருந்தார் மாதவி புலம்பலை நிறுத்தாமல் ஏதேதோ உளறிக்கொண்டு சோர்ந்து போய் அப்படியே அமர்ந்தார். அவர் பக்கத்தில் நின்றிருந்த ராதா, "அம்மா கவலைப்படாதீங்க ஏதாவது தீர்வு கிடைக்கும் நீங்களும் சார் மாதிரி யோசிங்க" என்று அவருக்கு ஆதரவாக கூறினார்.


"ராதா, நீயே இப்படி சொல்ற, உனக்கு தான் சித்தார்த் பத்தி தெரியும் இல்ல... இப்போ இத போய் அவன் கிட்ட சொன்னா எப்படி எடுத்துப்பான்? அதுதான் பெரிய கவலையா இருக்கு அதைவிட இப்போ அவனுக்கு ஏத்த பொண்ணா யாரை போய் தேட முடியும்?" என்றார் அவரிடம் கவலையாக.


மாதவி கூறுவதும் சரிதான் சித்தார்த்திடம் கூறினால் அவன் என்ன நினைப்பான் தனக்கு எவ்ளோ பெரிய அவமானம் நேர்ந்தது என்று ஆத்திரப் படுவான்.


திருமணத்திற்கு பெரிய விஐபி, மும்பை மினிஸ்டர் என நிறைய பேர் வந்து இருக்கிறார்கள் இப்போது திருமணம் நடக்கவில்லை என்று அனைவருக்கும் தெரிந்தால்? அவரும் மனதில் அதை நினைத்து வருந்திக் கொண்டார்.


ரவிசங்கர் ஏதோ யோசித்து முகத்தில் மின்னல் வெட்ட அதைப் பற்றி மனைவியிடம் பேச மாதவியை தனியாக அழைத்துச் சென்றார்.


தான் நினைத்ததை அவரிடம் கூற, "என்னங்க நீங்க விளையாடறீங்களா? அதுவும் அந்த சின்ன பொண்ண போய் நம்ம பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா என்ன நடக்கும்னு யோசிச்சிட்டு தான் பேசுறீங்களா?" என்றார் மாதவி.


"மாது, அதை விட்டால் வேற வழி இல்லை... இப்போதைக்கு கல்யாணம் நடந்தே ஆகணும் சித்தார்த்துக்கு"


"அதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை போய் நாம கெடுக்கணுமா? இதுக்கு நான் துணையாக இருக்க மாட்டேன்" என்றார் கடுமையாக.


"நீயே யோசிச்சுப் பார் நம்ப அஞ்சனாவை சித்தார்த்துக்கு கல்யாணம் பண்ணி வச்சா ரெண்டு பேரும் பிசினஸ் பின்னால் தான் ஓடிட்டு இருப்பாங்க. அதைவிட ராதா பொண்ணு அரசியை கல்யாணம் பண்ணி வச்சா அவனை கண்டிப்பா அரசி மாத்துவா, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. அதனால தான் இந்த யோசனை சொன்னேன்."


கடைசியாக ரவிசங்கர் கூறியதை மாதவி யோசித்தார். ஆம் அஞ்சனாவை கல்யாணம் பண்ணி இருந்தால் கண்டிப்பாக அவளும் வீட்டில் மகனை கவனிக்காமல் ஆபீசுக்கு போயிருப்பாள். ஆனால் அரசியை சித்தார்த்துக்கு திருமணம் செய்து வைத்தால் அவனையும் மாற்றிக் குடும்பத்துடன் மகன் வாழலாம் என்று யோசித்து, "சரிங்க நீங்க சொல்றது சரிதான்... வாங்க இதை பத்தி நம்ம ராதா கிட்ட பேசுவோம்... பாவம் பரிமளம், அஜய் அண்ணா தான் ரொம்ப சோகமா கவலையாக நின்னுட்டு இருக்காங்க... அவங்க மனசையும் தேத்தி நம்ம போய் கல்யாணத்துக்கு அரசியை ரெடி பண்ணலாம்" என மனதில் ஒரு தைரியத்துடன் ராதாவிடம் வந்தனர்.




மன்னிக்கவும் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு 🙏🙏
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி -6



மாதவி முகம் தெளிவாக இருப்பது ராதாவுக்கு சற்று மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் திருமணத்திற்கு ஒரு தீர்வு வந்து விட்டது என்று.

மாதவி... ராதா கையை பிடித்துக் கொண்டு, "ராதா, உன்னால தான் எனக்கு உதவ முடியும். நீ எனக்கு உதவி பண்ண முடியுமா?" என்று நிறுத்தி மீண்டும், "இல்ல கண்டிப்பா நீ பண்ணனும்" என்றார் அழுத்தமாக.


"அட என்னம்மா என்கிட்ட போயிட்டு உதவி அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு, என்னால முடிஞ்ச உதவி கண்டிப்பா செய்றேன். என்ன பண்ணனும் சொல்லுங்க? சித்தார்த் தம்பி கல்யாணம் நடக்கணும்னா எது வேணாலும் செய்வேன்" என்றார் அவரும் எதார்த்தமாக ஆனால் அவர் மகளை தான் கேட்கப் போறார் என்று அறியாமல்.

பரிமளம் மற்றும் அஜய் கிருஷ்ணன் இருவரும் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு புரிந்து விட்டது விழிஅரசியை தான் பெண் கேட்க போகிறார்கள் என்று. அவர்களுக்கும் சந்தோசம் தான் நிச்சயமாக சித்தார்த்துக்கு ஏற்ற பெண் விழிஅரசி தான் என்று அவர்களுக்கு தோன்றியது.


"ராதா... சித்தார்த்துக்கு ஏத்த ஜோடி அரசி தான்... இப்போ உன் பொண்ணை தான் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்" என்றார் அதிரடியாக.

ராதா தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அவர் ஏதாவது சிறு உதவி கேட்பார் என்று நினைத்திருக்க தன் பெண்ணையே கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

அவர் அதிர்ந்த தோற்றத்தை பார்த்த மாதவி, "ராதா இல்லனு மட்டும் சொல்லிடாத, இப்போ கல்யாணம் நடப்பது உன் கையில் தான் இருக்கு."

"அரசிக்கு..." என்று அவர் ஏதோ தடுத்து கூற வர...

"நீ அரசி பத்தி கவலைப்படாத, அவளை நான் நல்லா பார்த்துப்பேன்னு உனக்கே நல்லா தெரியும். அவ கிட்ட நான் பேசுறேன் இப்போ உன் முடிவை மட்டும் சொல்லு."


"அது இல்லம்மா அவளை ஒரு குழந்தை மாதிரி நான் வளர்த்து இருக்கேன். நான் அவளுக்கு ஏத்த மாதிரி தோட்ட வேலை செய்ற மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருந்தேன். ஆனா சித்தார்த் தம்பி போய் அரசியை கல்யாணம் பண்ணா அவள் நிலைமை என்ன ஆகும்னு தான் எனக்கு தயக்கமா இருக்கு" என்றார் மனதில் நினைத்ததை.

"நீ அதை பத்தி எல்லாம் கவலைப்படாத ராதா, எல்லாம் நல்லதே நடக்கும்னு நம்புவோம்" என்றார் அவரும் மனதில் ஒரு நம்பிக்கையுடன்.

சரி என்று கூறுவதை விட வேற வழி இல்லை. ஏனென்றால் இத்தனை வருடம் இந்த ஊரில் தனக்கும் தன்னுடைய மகளுக்கும் பாதுகாத்து அன்னம் இட்டு வந்தவர்களுக்கு உதவி கேட்டு இல்லை என்று கூற அவரால் முடியவில்லை அரை மனதுடன் சரி என தலையாட்டினார்.

ராதாவின் சம்மதம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், "சரி ராதா வா நாம போய் அரசியை ரெடி பண்ணலாம். ரவி நீங்க போயிட்டு கல்யாண வேலை எல்லாம் கவனிங்க, அண்ணா நீங்களும் ஏன் நின்னுட்டு இருக்கீங்க? இதைப் பற்றி சித்தார்த்துக்கு இப்ப சொல்லாதீங்க... இப்ப சொன்னா அவன் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள மாட்டான். கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் பாத்துக்கலாம். இப்போ கல்யாணம் நடக்கணும் அதுதான் நமக்கு வேணும்" என அங்கே பரிதாபமாக நின்றுக் கொண்டிருந்த அஜய் கிருஷ்ணன் தம்பதியரிடம் சாதாரணமாக பேசி அவர்களிடமும் வேலை கூறி அனுப்பி வைத்தார் மாதவி.


மாதவி மற்றும் ராதா இருவரும் விழி அரசி இருக்கும் அறைக்குள் நுழைய அவள் அன்னை கொடுத்த வேலைகளை முன்புறமாக செய்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா, நீங்க சொன்ன வேலை நான் சரியா செய்துட்டேன். வேற வேலை இருந்தா சொல்லுங்க அதையும் செய்கிறேன்" என்றாள்.

மாதவி அவளைப் பார்த்து மனக்கண்ணில் சித்தார்த் மற்றும் அரசி இருவரும் மணக்கோலத்தில் இருப்பது போல் எண்ணிப் பார்த்து தன் தேர்வு சரியாகத்தான் இருக்கும் என அரசி அருகில் சென்று அவள் கையை பற்றி, "அரசி நான் ஒன்னு சொல்லுவேன் நீ கேட்பியா?" மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.


விழி அரசிக்கு பயமாக இருந்தது. அவர் வந்து தன் கையை பிடிக்கவும் அன்னையை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் ஏதாவது வாய் திறந்து தன்னை திட்டுவாரா என்று... அவள் பயத்தை புரிந்துக் கொண்டு ராதாவிடம் எதுவும் பேசாதே என செய்கை காண்பித்து,

"அரசி, எதுக்கு இப்போ பயப்படுற? பயப்படாத நான் சொல்றத ஒழுங்கா கேட்கணும்" எனக் கூற... அரசி அவரையே கேள்வியாக பார்த்துக் கொண்டிருக்க...


"என் மகன் சித்தார்த்தை நீ கல்யாணம் பண்ணிக்கணும்" என்றார் மெதுவாக.

விழி அரசி அவர் சித்தார்த்தை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சி தாள முடியாமல் நிலத்தில் மயங்கி சரிந்தாள்.


ராதா பதறிப் போய் மகளைத் தாங்கி அருகில் இருந்த பெட்டில் படுக்க வைத்தார். அதற்குள் மாதவி அவள் முகத்தில் தெளிக்க தண்ணீர் கொண்டு வந்து தெளித்து விட்டார்.

"அம்மா இப்பவும் ஒன்னு கெட்டுப் போகல வேற யாராவது பாருங்க. நீங்க கல்யாணம் பண்ணிக்க சொன்ன உடனே அவ மயங்கி விழுந்துட்டா, இன்னும் கல்யாண வாழ்க்கையை நினைச்சா எப்படி இருக்குமோ! அதுதான் பயமா இருக்கு" என்றார் மகளின் திருமண வாழ்க்கையை நினைத்து கவலையுடன்.

"ராதா, இப்போ கல்யாணம் நடக்கணும் எனக்கு வேற வழி தெரியல. அரசி கிட்ட நான் பேசுறேன் அவ கிட்ட பக்குவமா சொல்லி புரிய வச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணத்துக்கு ரெடி பண்ணனும்" என்று அழுத்தமாக கூறி அரசிக்கு முழிப்பு வந்தவுடன்,

"அரசி இப்ப எதுக்கு பயப்படுற? சித்தார்த் பத்தி உனக்கு நல்லா தெரியும். அவன் என் மகன் எந்த பிரச்சனையும் உனக்கு வராது. கல்யாணம் ஆச்சுனா என் கூடவே நீ இருக்கலாம்" என அவர் மேலும் சொல்ல வர அதற்குள் அவள்,


"ஐயோ அது மட்டும் எனக்கு வேணாம் அவர் பெயரை கேட்டாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு. தயவு செஞ்சு இது மட்டும் வேணாம். அவங்க பெரிய பெரிய படிப்பு எல்லாம் புடிச்சிருக்காங்க. எனக்கு தமிழ் மட்டும் தான் படிக்க வரும் வேற எதுவும் தெரியாது அவங்க இங்கிலீஷ்ல எல்லாம் பேசுவாங்க" ஏன ஏதேதோ உளறினாள்.


"ம்ச்... சொன்னதே சொல்லிட்டு பயந்துட்டு இருக்காத மா, அதான் நான் என் கூடவே நீ இருக்க போறனு சொல்லிட்டேன்ல்ல... வேற எதுக்கு பயப்படுற, பாரு உங்க அம்மா கூட பயப்படாம எவ்வளவு தைரியமா இருக்கா"

"அப்புறம் படிப்பு, அழகு, அந்தஸ்து இதெல்லாம் முக்கியம் இல்லை நல்ல மனசு இருந்தா போதும். அது பத்தி நினைக்காம சீக்கிரம் கல்யாணத்துக்கு ரெடியாகு" என அவளை பேசிக்கொண்டே திருமணத்திற்கு தயார் செய்தனர் ராதா மற்றும் மாதவி.


இருந்தும் விழி அரசியின் மனது பதட்டத்தில் இருந்தது. "அம்மா நீங்களாவது நான் சொல்றத புரிஞ்சுக்கோங்க. நான் ரொம்ப பாவம் அவங்க ரொம்ப பெரியவங்களா இருக்காங்க. நான் வேணும்னா அந்த அக்கா கிட்ட போய் பேசி கூட்டிட்டு வரேன். அந்த அக்காவையே அவங்க கல்யாணம் பண்ணிக்கட்டும். என்ன விட்ருங்க அம்மா, நான் உங்க கூடவே இருக்கேன்" என்று மன்றாடினாள்.


அவள் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி கேட்டும் இரு பெண்களும் அவள் சொல்லிற்கு செவி சாய்க்காமல் அவளை தயார் செய்தனர். திருமணத்திற்கு நேரமாவதை உணர்ந்த மாதவி விழியின் முகத்தை துணியால் மூடியவாறு, "இந்த துணியை கல்யாணம் ஆகுற வரைக்கும் எடுக்கக் கூடாது. அப்புறம் நேரா நிமிர்ந்து தான் இருக்கணும். தலை குனிஞ்சி இருக்கக் கூடாது. கொஞ்சம் கூட என் மகனுக்கு சந்தேகம் வரக்கூடாது. அதுக்கு நீ இடம் கொடுக்க கூடாது" என பல அறிவுரை கூறி அவளை மேடைக்கு அழைத்துச் சென்றனர்.


விழிக்கு இப்பவே தலை சுற்றுவது போல் இருந்தது. இதில் எங்கிருந்து தலை நிமிர்ந்து நடக்க..?


சித்தார்த் மேடையில் மாப்பிள்ளை தோரணத்தில் கம்பீரமாக அமர்ந்து இருக்க விழி சற்றே தைரியத்துடன் தலை நிமிர்ந்து காண அவ்வளவு தான் அப்படியே அடி எடுத்து வைக்காமல் நின்று விட்டாள்.


"அரசி ஏன் நின்னுட்ட? வா ம்மா" என மாதவி வர சொல்ல அவள் அன்னையை நோக்கினாள். ராதா மேடையின் அருகேயே நின்று விட்டார். மகள் தன்னை கண்கள் கலங்க பார்க்கிறாள் என்று அறிந்து எதுவும் செய்ய முடியாதவராய் நின்றார்.



கடைசி முயற்சியாக, "அம்மா எனக்கு இந்த கல்யாணம் வேணாம் அவர பார்க்கவே ரொம்ப பயமா இருக்கு. பிளீஸ் நான் வேணாம் மா, அந்த அக்கா தான் இவங்களுக்கு சரியான ஜோடியா இருக்கும்" என உயிரை கையில் பிடித்து கெஞ்ச...


"ஸ்ஸ்... இங்க வந்து நின்னுட்டு என்ன பேசிட்டு இருக்க அரசி, அதான் சொல்றேன் இல்ல உன் கூட எப்பவும் நான் இருப்பேன்னு... அங்க பாரு சித்துக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சுடுச்சு கல்யாணம் முடியற வரை எதுவும் பேசாதே வா மா" என கண்டிப்பு கலந்த அக்கறையுடன் அழைத்துச் சென்றார் மாதவி.


ஆம் மாதவி கூறிய படி அவன் அவர்களை தான் நோட்டம் வீட்டு கொண்டிருந்தன். மணப்பெண் அறையில் இருந்து வரும் பொழுதே மணமகள் தலை குனிந்து வர, இடையில் மாதவியுடன் பேசுவதும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்... 'அஞ்சனா இப்படி வெட்கப்பட்டு தலை குனிய மாட்டாளே..?' என அவன் யோசனையில் இருக்க பக்கத்தில் விழி அமர்வதை பார்த்து இன்னும் யோசனையில் இருந்தான்.

காரணம், 'அவன் பார்த்த வரைக்கும் அஞ்சனா இவ்வளவு அமைதியான பெண் இல்லையே... அதுவும் தன் பக்கத்தில் அமர்ந்து கூட இன்னும் ஒரு நொடி கூட நிமிராமல் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது. நேற்று இரவு கூட அவள் இப்படி இருந்து அவன் பார்க்கவில்லையே! சம்திங் ராங்... இது கண்டிப்பா அஞ்சனாவாக இருக்காது' என சித்தார்த் சரியாக கணித்து மாதவியை பார்க்க அவர் தான் அவன் கண்ணில் படாமல் மறைந்து விட்டரே..!


இன்னும் சந்தேகம் பலம் கொடுக்க பக்கத்தில் இருக்கும் பெண்ணிடமே கேட்டு விடலாம் என்று எண்ணி அவன் வாய் திறக்க... ஐயர் பொன் தாலியை அவன் கையில் கொடுக்க சரியாக இருந்தது. சித்தார்த் ஒரு நொடி சுற்றி மண்டபத்தை பார்த்தான். அவன் அழைத்த விஐபி மற்றும் மினிஸ்டர்ஸ் என்று அர்ச்சனை போட காத்திருக்க பெரிய மூச்சை வெளியேற்றி, 'தனக்கு இப்பொழுது இந்த திருமணம் மிக அவசியம் எதுவாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் பார்த்துக் கொள்ளலாம் வந்திருப்பவர்களுக்கு முன் அவமானம் நேரகூடாது' என்று சடுதியில் எண்ணி தாலியை வாங்கி தன் அருகில் இருக்கும் பெண் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தன் வாழக்கையில் சரிப் பாதியாக ஏற்று கொண்டான் சித்தார்த் யாதவ்…


 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி -7



விழி அரசி நெஞ்சுக்குழியில் தூங்கிக் கொண்டிருக்கும் தாலியை கண்ணீர் நிறைந்த கண்களால் பார்த்தாள். இதற்கு மேல் என்ன செய்வது? அவள் கண் முன் உலகம் இருண்டது போல் தோன்றியது..! அவள் ஏதேதோ யோசனையில் ஆழ்ந்திருக்க சித்தார்த் அவள் கைவிரல் பற்றி எழுப்பி மூன்று சுற்று சுற்றி வந்தான்.


'அவ்வளவுதான் இதற்கு மேல் சித்தார்த்த தன்னை சும்மா விட மாட்டான் திருமணம் முடிந்து விட்டது அவன் பார்ப்பதற்குள் எங்கேயாவது சென்று விடலாமா?' என்று ஒரு யோசனை மனதுக்குள் தோன்ற அதற்குள் சித்தார்த் தன்னை அழைப்பது போல் இருக்க விழி நிமிர்ந்து காண்பதற்கு முன் மாதவி வந்து தடுத்தார்.


"சித்து அவளுக்கு ஏதோ தல சுத்துற மாதிரி இருக்காம். நான் அவளை ரூமுக்கு கூட்டிட்டு போறேன். மீதி நீ பார்த்துக்கோ" என நாசூக்காக கூறிவிட்டு விழியை கையோடு அழைத்துச் சென்று விட்டார், பின் இங்கேயே விழியை கண்டுக் கொண்டு மகன் ஒரு ரகளை ஆரம்பித்து விட்டால் அதை யார் சமாளிப்பது என்று தான். மாதவி அறிவார் மகனுக்கு தெரிந்து விட்டது கல்யாணம் பெண் வேற யாரோ என்று தான்... ஆனால் அது விழி அரசி என்று தெரிந்து விட்டால் அவனை கையில் பிடிக்க முடியாத அளவுக்கு வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான் என்று தான் தடுத்து தன்னோடு அழைத்துச் சென்று விட்டார்.


விழியை தனி அறைக்கு அழைத்து வந்த பின் தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது. எப்படியோ ஒரு வழியாக தாலி கட்டி ஆயிற்று. பின் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு அசட்டு தைரியம் தான் அவருக்கு.


விழி அறையின் உள்ளே வந்தவுடன் அங்கே நின்றிருந்த அன்னையை கண்டு ஒரே ஓட்டத்துடன் அவரைத் தாவி அணைத்து, "அம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கு மா, அங்க அவர பாக்கும் போதே கண்ணெல்லாம் சிவப்பா இருந்துச்சு... என்ன தனியா மட்டும் பார்த்தாரு அடிச்சு கொன்னுடுவாரு மா, நம்ம இங்க இருக்க வேணாம். நம்ம வேற எங்கனா தனியா போயிடலாம். எனக்கு ரொம்ப பயமா இருக்கு வாங்கம்மா" என அழுகையுடன் கூறினாள்.

மகள் முதுகை தடவிக் கொண்டு ராதா மாதவியை ஏறிட்டுப் பார்த்தார். அவரால் இதற்கு மேல் என்ன பேச முடியும்?

"ராதா, என்ன நீயும் உன் பொண்ணு மாதிரி பயந்துட்டு இருக்க... இவ்வளவு தூரம் நான் பார்த்துக்கிட்டேன். இதுக்கு மேலயும் அவளை அவன் கிட்ட இருந்து காப்பாத்த முடியாதா? எதுக்கு நீயும் இவ்வளவு பயப்படுற, அவன சமாதானப்படுத்துற பொறுப்பு என்னோடது... நான் சொன்னா புரிஞ்சுப்பான் நீயும் கொஞ்ச நேரம் சும்மா இரு" என்றார்.


'பகலில் சரி! மாதவி கூடவே இருப்பார். இரவில் எப்படியும் மகள் அவனுடன் தான் இருக்க வேண்டும் அல்லவா இதை எப்படி தடுப்பார் மாதவி?' என மனதில் கேள்வி எழுந்தது.

"அம்மா, இதுவரைக்கும் நான் உங்க வீட்டில் ஒரு வேலைக்காரியா இருக்கிற உரிமை எனக்கு இருந்தது. ஆனால் இப்பொழுது பொண்ணை கொடுத்த சம்பந்தியா உங்க வீட்டில் என்னால் இதற்கு மேல் இருக்க முடியாது நான் என் ஊருக்கு போறேன்" என சம்பந்தமே இல்லாமல் ஒரு பெரிய குண்டை தூக்கி அழுதுக் கொண்டிருக்கும் மகள் தலையில் போட்டார்.


மாதவிக்கு தெரியும் ராதா என்றாவது ஒருநாள் அவர் தாய் மண்ணை தேடிச் செல்வார் என்று... ஆனால் இந்த சமயத்தில் மகளை தனியாக விட்டுச் செல்லுவார் என்று அவர் சற்றும் எதிர் பார்க்கவில்லை. இன்னொரு மனது இதுவும் சரி தான் ராதா அருகிலே இருந்தால் விழி அவரை விட்டு பிரிய மாட்டாள். இதுவும் சரிதான் என யோசித்து அவரை தடுக்காமல், "நான் இதுக்கு ஒத்துக்குறேன். ஆனா இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு கிளம்பு. உன் பொண்ணு கூட இருந்து தைரியம் சொல்லிக் கொடு" என்றார்.


"இல்லம்மா, நான் இன்னைக்கு ராத்திரி ட்ரெயினுக்கு கிளம்புறேன். கண்டிப்பா நான் போன உடனே போன் போடுறேன். என் மகளைப் பற்றி இனிமேல் நான் கவலைப்பட எதுவும் இல்லை. காரணம் அவளை நீங்க நல்லா பார்த்துக்குவீங்கன்ற தைரியம் எனக்கு இருக்கு. அதுவும் இல்லாமல் நான் இங்கே இருந்தால் அவள் என்னை விட்டு எங்கேயும் போக மாட்டாள் அதனால் தான்" என்றார் ஒரு தாயாக, இதுவரை மகள் கண்களில் கண்ணீர் வராமல் வளர்த்து வந்தவர், காலையில் இருந்து அவள் கண்களில் கண்ணீரை பார்த்துக் கொண்டிருந்த ராதாவுக்கு மனசு மிகவும் கஷ்டமாக இருந்தது. இதற்கு மேலும் அவரால் பார்க்க முடியாமல் தான் இன்று இரவே ஊருக்கு செல்கிறேன் என்று முடிவு எடுத்தார்.

"அம்மா நீங்க ஊருக்கு போனா என்னையும் கூட்டிட்டு போங்கம்மா, என்னை இங்கே தனியா விட்டுட்டு போகாதீங்க அம்மா, அங்க வந்து இதே மாதிரி எதுனா வீட்டு வேலை செய்துட்டு யார் கிட்டயும் தொல்லை கொடுக்காத அமைதியா இருக்கிறேன் அம்மா என்னையும் கூட்டிட்டு போங்க" என பெருங்குரல் எடுத்து அழுதுக் கொண்டே கேட்டாள்.


"அரசி, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... இதுதான் உன் மாமியார் வீடு இதை விட்டு நீ எங்கேயும் வரக்கூடாது. அம்மா உன்னை அடிக்கடி வந்து பாத்துட்டு போறேன் டெய்லி போன் போடுவேன். எதுக்கும் தைரியமா இருக்கணும் இப்படி அழுதுட்டு இருக்க கூடாது. நீ உங்க மாமியார் சொல்ற பேச்சை கேட்கணும். உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு அதை பார்த்துக்கோ."


தனக்குத்தான் கணவன், குடும்பம் என்று எதுவும் சரியாக அமையாமல் தனியாக வாழ்ந்துக் கொண்டிருந்தேன் ...! தன் மகளுக்கு ஒரு நல்ல அழகான வாழ்க்கை கிடைத்து உள்ளதை மகிழ்ச்சியுடனே அவளுக்கு அறிவுரையாக கூறிக் கொண்டிருந்தார்.



மாதவி அரசியை ராதாவிடம் இருந்து பிரித்து, "அரசி நீ பயப்படாத அதான் சொல்றேன்ல்ல... உன் கூட நான் எப்பவும் இருப்பேன் இதுதான் உன் வீடு... இதை விட்டு நீ எங்கேயும் போறேன்னு சொல்ல கூடாது." சிறு கண்டிப்புடன் கூறி, "சரி வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்... சித்து வந்தா அங்க பேசிக்கலாம். ஏற்கனவே சித்துக்கு பொண்ணு மாறின விஷயம் தெரிஞ்சுடுச்சு நம்ப போகலாம்" என்று அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

வரும் வழி எங்கும் விழிக்கு பக் பக் என்று இருந்தது வீட்டில் என்ன கலவரம் நடக்குமோ..? என்று தான்


எப்படியும் மகன் வர லேட் ஆகும் அதற்குள் அவனிடம் என்ன பேசலாம் என்று ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம் என்ற சிறு தைரியம் இருந்தது. ஆனால் அவர் எதிர்பார்க்காதது இவர்கள் போகும் முன்பே சித்தார்த் நடுநாயகமாக ஹால் சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்துக் கொண்டிருந்தான்.


மாதவி அவனைப் பார்த்த பின் சற்று அதிர்ந்து தான் போனார் இருந்தும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் பின்னால் நின்றுக் கொண்டிருந்த அரசியின் கையைப் பிடித்துக் கொண்டு சுவாமி அறை நோக்கிச் சென்றார்.


பெண்கள் மூவரும் அமைதியாக பூஜை அறை சென்று அரசியை குத்து விளக்கு ஏற்ற வைத்து இப்படியே அவளை தனது அறைக்கு அழைத்துச் செல்லலாம் என்று மாதவி எண்ணி இருக்க,


"மாம், நான் உங்களுக்காக தான் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஆனால் நீங்க என்னை பார்த்து பார்க்காத மாதிரி போயிட்டு இருக்கீங்க" என்று கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான் சித்தார்த்.


"அது இல்ல சித்து மருமக கொஞ்சம் தலை வலிக்குதுனு சொன்னா, அதனால தான் நான் அவளை என் ரூம்ல ரெஸ்ட் எடுக்க சொல்லலாம்..." என அவர் சமாளிக்க.


"மாம் மார்னிங் அஞ்சனா இல்லனா நீங்க வந்து நேரா என்கிட்ட தான் அதை பத்தி சொல்லி இருக்கணும்... பட் நீங்க என்ன பண்ணீங்க..?" என்று எப்பொழுது அவன் கோபம் வெடிக்கும் என்று அறியாமல் மிகவும் பொறுமையாக விசாரித்துக் கொண்டிருந்தான்.

சித்தார்த் மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் அவன் பி. ஏ மூலம் அனைத்தையும் தெரிந்துக் கொண்டான். காலையில் அஞ்சனா மண்டபத்தில் இல்லாதது அதைத் தெரிந்துக் கொண்ட அஞ்சனாவின் பெற்றோர் இருவரும் தவிப்புடன் இருந்தது மற்றும் தன் தாய், தந்தை ராதாவின் மகள் விழி அரசியை தனக்கு தெரியாமல் திருமணம் செய்வதற்கு முடிவெடுத்ததும்... பின் இப்போது அஞ்சனா எங்கே இருக்கிறாள் என்பது வரை அனைத்தையும் தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு தான் அவன் மாதவியிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறான்.


"சித்து உனக்கு எல்லா விஷயமும் தெரியும் அப்படி தானே..?" என்று மாதவி மகனிடம் கேள்வி எழுப்ப.


சித்தார்த்தின் அழுத்தமான பார்வையிலே தெரிந்துக் கொண்டார். அவனுக்கு அனைத்து உண்மையையும் தெரிந்து விட்டது என்று.


"சித்தார்த் இது யார் மேலையும் தப்பு சொல்றதுக்கு இல்ல... அஞ்சனா பண்ண தப்பு மட்டும் தான் பாவம் அந்த நேரத்தில் அஞ்சனா அப்பா, அம்மா என்ன பண்ணுவாங்க..? அதே சமயம் வேற பொண்ணுக்கு எங்க போக முடியும்? அப்படி வெளியே போய் பொண்ணு தேடுனாலும் உன்னுடைய பெயர் வெளியே வரும். அதனால தான் ராதா மகளை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்" என்றார் அவர் நியாயத்துடன்.


"அதுமட்டுமில்லை உனக்கு அவமானம் நேரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான் இதை நான் செய்தேன், அரசிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தம் இல்லை! ஏன் அஞ்சனா இப்படி நடந்துக்கிட்டாள்னு யாருக்கும் தெரியலை. இதுக்கு மேல அஞ்சனா கிட்டயும் கேட்டு எதுவும் பண்ண முடியாது. இப்போ உனக்கும் அரசிக்கும் கல்யாணம் நடந்து போச்சு. அரசி தான் நம்ம வீட்டு மருமக அதை மட்டும் மனசுல வச்சுக்கோ" என்றார் ஒரு தாயாகவும்.


தாய், மகன் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் ராதா மற்றும் அவர் மகள் இருவரும் அவர் பின்னால் தான் நின்றுக் கொண்டிருந்தனர். விழிக்கு தான் ஐயோ என்று இருந்தது. 'நிச்சயமா அவங்க நம்மளை ஏத்துக்க மாட்டாங்க. எதுக்காக இந்த அம்மா நமக்காக வாய் வலிக்க பேசிட்டு இருக்காங்க?' என்று தான் மனதில் எண்ணினாள்.


இவ்வளவு நேரம் மாதவி பேசுவதற்கு நேரம் கொடுத்த சித்தார்த், "மாம் அஞ்சனா மண்டபத்தில் இல்லனா நீங்க என்கிட்ட தான் முதலில் சொல்லி இருக்கணும். ஏன்னா நான் தான் அங்கே தாலி கட்ட போறவன் அதை விட்டுட்டு நீங்களே ஒரு பெண்ணைப் பார்த்து அதுவும் இந்த வீட்டு வேலைக்காரியை எனக்கு பிளான் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க. அதை சமாளிக்க இவ்வளவு நேரம் எதோ ஒரு கதையை சொல்லிட்டு இருக்கீங்க" என்றான் எரிச்சலாக.


"சித்து நான் சொன்னத கொஞ்சம் நீயே யோசித்துப் பார்" என்று மாதவி கூற.


"மாம், அஞ்சனா எனக்கு பிசினஸ்ல அண்ட் அவ எஜுகேட்டட்... அந்த ஒரே காரணத்திற்காக தான் அவளை கல்யாணம் பண்ண நான் ஒத்துக்கிட்டேன். ஆனா இந்த வீட்டு வேலைக்காரி என் மனைவியா? அப்படி சொல்லவே எனக்கு சுத்தமா பிடிக்கல. எப்படியும் நான் அவளை டைவர்ஸ் பண்ண மாட்டேன் என்ற தைரியத்தில் தானே அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க?" என்றான் கர்ஜனையுடன்.


மகன் கடைசியாக கூறிய வாக்கியத்தை கேட்டு அங்கிருந்த ராதா மற்றும் மாதவி இருவரும் அதிர்ந்து நின்றனர். மகன் விபரீத முடிவு எடுத்து விடக்கூடாது என்று, "சித்து, அம்மா சொல்றத கேளு. கல்யாணம் என்பது ஒரு முறை தான் நடக்கும். அதுவும் இவ அப்பாவியான பொண்ணு கொஞ்ச நாள் டைம் எடுத்துக்கோ அதுக்காக தாலி கட்டின அன்னைக்கே டைவர்ஸ் பத்தி பேசிக்கிட்டு..."


"மாம் ஸ்டாப் இட்... தாலி கட்டுறப்பவே எனக்கு அது அஞ்சனா இல்லை அப்படினு தெரியும். இருந்தும் அங்க எல்லார் முன்னாடியும் என் கௌரவம் போகக்கூடாது அப்படினு தான் அவ கழுத்துல தாலி கட்டினேன். டைவர்ஸ் அது எங்க பர்சனல் அதைப்பற்றி யாரும் என்னை கேட்க முடியாது சோ இன்னும் ஒன் இயர்ல மியூச்சுவல் டைவர்ஸ் பண்ண போறேன்" என முடிவாக கூறி தன் மாடி அறை நோக்கிச் சென்றான் சித்தார்த்.
 
Status
Not open for further replies.
Top