All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா வியனியின் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...!" - கதை திரி

Status
Not open for further replies.

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இக்கதை நானும் என் சகோதரி வியனியும், மீனா வியனி என்ற பெயரில் எழுத முடிவு செய்துள்ள கதை அதிலிருந்து ஒரு சிறிய முன்னோட்டம்....





நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...!



தரணி முழுவதும் கரு முகிழ் சூழ்ந்து இரவு வேளையை பறைசாற்றினாலும், அன்று நிறைந்த பௌர்ணமி என்பதால் நிலா பெண் நிறைமதியாய் நின்று பூமா தேவியை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்தி கொண்டிருந்தாள், அந்த முழு நிலவு அமானுஷ்ய இரவில் நாய்கள் அனைத்தும் ஒன்று கூடி ஏதோ விபரீதம் நடக்க போவதற்கு முன்பு வெளிப்படுத்தும் அபாய எச்சரிக்கை போல் கேட்பவரின் மனதில் திகிலை ஏற்படுத்துவது போன்று ஊழை விட்டு கொண்டிருந்தன..

அந்த இரவில் வாகன போக்குவரத்தும், ஆள் நடமாட்டம் குறைந்தும், நிசப்தமாக இருந்த சாலையின் இருபுறமும் உள்ள நடை பாதையில் விதியால் வஞ்சிக்கப்பட்டு, வறுமையின் மிச்சங்களாய் வீடுகளற்ற குடும்பத்தினர் அனைவரும், வாகனங்கள் இரைச்சல் குறைந்து அமைதியாக உறங்கி கொண்டிருக்க.. அவர்களின் நிம்மதியான நித்திரையை நிரந்தரமாக்க தனது வேகத்தை மட்டு படுத்த முடியாமல் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த பணக்காரர்கள் மட்டுமே உபயோகிக்கும் விலை உயர்ந்த வாகனம் வளைந்து நெளிந்து கடைசியாக அந்த நடை பாதையின் உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது பயந்தது..

அப்போது கழிவறை சென்று விட்டு திரும்பி அந்த இடத்திற்கு வந்த பதினாறு வயது இளம் பெண்ணும் தூக்கி வீச "அப்பா" என்ற கூவலோடு விழுந்தவள் நிற்க்கமால் செல்லும் அந்த வாகனத்தை ரத்த வெள்ளத்தில் கண்கள் சொருகி மயங்கி விழும் வரை பார்த்து கொண்டிருந்தாள்...

அடித்து பிடித்து மூச்சு வாங்க எழுந்து அமர்ந்தாள் அவள் , மின் விளக்கை உயிர்ப்பித்து தனது நெஞ்சை நீவி விட்டுகொண்டவள் , "ச்சே... இந்த மாதமும் அந்த கனவு வந்துருச்சா, ஆறு வருடம் முன்னாடி நடந்த இந்த சம்பவத்தை தவிர வேற எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லையே" கைகள் நடுங்க அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து திறந்து தண்ணீரை மடமடவென பருக ,பாதி நீர் அவள் மேலையே வழிந்தது, நீரை பருகி தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவள்..

படுக்கையை விட்டு எழுந்து சாளரத்தின் அருகே வந்து திரை சீலையை விலக்க.. அவ்வளவு நேரம் உள்ளே வர போராடி கொண்டிருந்த தென்றல் காற்று அவளை ஆசையாக தீண்டி அவள் நீண்ட கார்குழலை அசைத்து பார்த்தது, நிலா மகள் தன் முழு உருவம் பெற்று பௌர்ணமி இரவாக காட்சியளித்து, தனது ஒளியை சாளரத்தின் வழியே ஊடுருவி அவளை தழுவி அன்றைய நிகழ்விற்கு ஆறுதல் அளிப்பது போல் தழுவ அதை ரசிக்காமல் அந்த நிலவை வெறித்தவள் மனதில் ஒரு வாகனத்தின் இலக்கங்கள் தெளிவில்லாமல் தோன்ற :அதான் விபத்து ஏற்படுத்துனவனுக்கு தண்டனை கிடைச்சுருச்சு, அந்த காரையும், கார் எண்ணையும் காமிச்சாங்களே அப்புறம் ஏன் இந்த நாள் வந்தாள் அந்த சம்பவமும், அந்த காரோட தெளிவில்லாத வேற எண்களும் வந்து மறக்க நினைக்கிறத மறக்க விடாமல் ஞாபக படுத்த என்னை தூண்டுது' என யோசித்தவளின் பலனாய் தலை வலிக்க தலையை பிடித்து கொண்டவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக, "அப்பா" என்று கதறலோடு மடங்கி அமர்ந்தாள்...
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் அபிமான கருத்துகக்ளை இங்கே பதியுங்கள் நண்பர்களே...


 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே... ஒரு சர்ப்ரைஸுடன் வந்துருக்கிறோம்... "மீனா வியனி" என்ற பெயரில் நானும், என் சகோதரியும் எழுதும் கதை "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...!" கதையிலிருந்து முதல் அத்தியாயம் பதிந்துள்ளோம்.





நிலா - 1


தரணி முழுவதும் கரு முகில் சூழ்ந்து இரவு வேளையை பறைசாற்றினாலும், அன்று நிறைந்த பௌர்ணமி என்பதால் நிலா பெண் நிறை மதியாய் நின்று பூமா தேவியை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்தி கொண்டிருந்தாள்.அந்த முழு நிலவு அமானுஷ்ய இரவில் நாய்கள் அனைத்தும் ஒன்று கூடி ஏதோ விபரீதம் நடக்க போவதற்கு முன்பு வெளிப்படுத்தும் அபாய எச்சரிக்கை போல் , கேட்பவரின் மனதில் திகிலை ஏற்படுத்தும் வண்ணம் ஊழை விட்டு கொண்டிருந்தன.



அப்படிப்பட்ட இரவில் வாகன போக்குவரத்தும், ஆள் நடமாட்டம் குறைந்தும், நிசப்தமாக இருந்த சாலையின் இருபுறமும் உள்ள நடை பாதையில் விதியால் வஞ்சிக்கப்பட்டு, வறுமையின் மிச்சங்களாய் வீடுகளற்ற குடும்பத்தினர் அனைவரும், வாகனங்கள் இரைச்சல் குறைந்து அமைதியாக உறங்கி கொண்டிருந்தனர். அவர்களின் நிம்மதியான நித்திரையை நிரந்தரமாக்க தனது வேகத்தை மட்டு படுத்த முடியாமல் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது, பணக்காரர்கள் மட்டுமே உபயோகிக்கும் விலை உயர்ந்த வாகனம் வளைந்து நெளிந்து கடைசியாக அந்த நடை பாதையின் உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்தது. அப்போது கழிவறை சென்று விட்டு திரும்பி அந்த இடத்திற்கு வந்த பதினாறு வயது இளம் பெண்ணின் மேலும் மோதி தூக்கி வீச, "அப்பா "என்ற கூவலோடு விழுந்தவள் நிற்க்காமல் செல்லும் அந்த வாகனத்தை ரத்த வெள்ளத்தில் கண்கள் சொருகி மயங்கி விழும் வரை பார்த்து கொண்டிருக்க..

அடித்து பிடித்து மூச்சு வாங்க எழுந்து அமர்ந்தாள் அவள்.மின் விளக்கை உயிர்ப்பித்து தனது நெஞ்சை நீவி விட்டுகொண்டவள்.'ச்சே.. இந்த மாதமும் அந்த கனவு தெளிவா வரலையே.. ஆறு வருடம் முன்னாடி நடந்த இந்த சம்பவம் சில வருட ஞாபகத்தை மொத்தமாக பறிச்சுருச்சே , எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லையே' என்று நினைத்தவள், கைகள் நடுங்க அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து திறந்து தண்ணீரை மடமடவென பருக ,பாதி நீர் அவள் மேலையே வழிந்தது, நீரை பருகி தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு, படுக்கையை விட்டு எழுந்தவள், சாளரத்தின் அருகே வந்து திரை சீலையை விலக்கினாள்.


அவ்வளவு நேரம் உள்ளே வர போராடி கொண்டிருந்த தென்றல் காற்று அவளை ஆசையாக தீண்டி அவள் நீண்ட கார்குழலை அசைத்து பார்த்தது, நிலா மகள் தன் முழு உருவம் பெற்று பௌர்ணமி இரவாக காட்சியளித்து, தனது ஒளியை சாளரத்தின் வழியே ஊடுருவி அன்றைய நிகழ்விற்கு ஆறுதல் அளிப்பது போல் அவளை தழுவ, அதை ரசிக்காமல் அந்த நிலவை வெறித்தவள் மனதில் ஒரு வாகனத்தின் இலக்கங்கள் தெளிவில்லாமல் தோன்ற 'அதான் விபத்து ஏற்படுத்துனவனுக்கு தண்டனை கிடைச்சுருச்சு, அந்த காரையும், கார் எண்ணையும் காட்டிணாங்களே.. அப்புறம் ஏன்? இந்த நாள் வந்தாள் அந்த சம்பவமும், ஏதோ ஒரு காரோட தெளிவில்லாத எண்களும் வந்து மறக்க நினைக்கிறத மறக்க விடாமல் ஞாபக படுத்த என்னை தூண்டுதே தவிர, அதற்க்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு எவ்வளவு முயன்றாலும் ஞாபகம் வர மாட்டேங்குதே' என ஆழ்ந்து யோசித்தவளின் பலனாய் தலை வலிக்க, தலையை பிடித்து கொண்டவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக "அப்பா" என்று கதறலோடு மடங்கி அமர்ந்தாள்.


வெகு நேரமாக தன் தந்தையை நினைத்து அழுதவள் தலைவலி மண்டையை பிழக்க.. "அப்பா எனக்கு உங்க முகம் கூட ஞாபகம் வர மாட்டேங்குது பா.. என்னால யோசிக்க கூட முடியல.. தலை வெடிக்கிற அளவுக்கு பயங்கரமாக வலிக்குது.. தாங்க முடியல பா.என் பேரும், உங்க பேரும் என்னுடைய பத்து வயசு வரையில் நடந்தது மட்டுமே ஞாபகம் இருக்கு , அதை தவிர வேற எதுவுமே எனக்கு தெரியல பா எனக்காக, என்னோட படிப்புக்காக தானே இங்க வந்திங்க.. உங்க ஆசையை நான் நிறைவேத்துவேன் பா"என்று முணுமுணுத்துகொண்டே மயங்கி சரிந்தாள்.


அந்த சமயத்தில் டக், டக் என்று காலடி ஓசை கேட்க கதவை திறந்து கொண்டு ஆறடி உயரத்தில், சிவந்த நிறத்தில், அலைஅலையான கேசமும், கூறிய கண்களும், எவரையும் கவர்ந்திழுக்கும் ஆண்மை ததும்பிய முகத்துடன் மயங்கியவளின் அருகில் ஒவ்வொரு அடியாக வைத்து அவள் அருகில் வந்தான் அவன் "அருணன்."


அவள் அருகில் குனிந்து அமர்ந்து அவளை கைகளில் ஏந்தி மஞ்சத்தில் கிடத்தியவன், தண்ணீரை முகத்தில் தெளித்தான். அருணனை கண்டு மலரும் தாமரையை போல் இந்த அருணனை கண்டதும் மெதுவாக தனது தாமரை போன்ற இமைகளை பிரித்து அவனை பார்த்தாள்.


அவள் கண் விழித்ததும் அவளை நிமிர்த்தி, முதுகிற்கு ஏதுவாக தலையணையை வைத்து, அருகில் உள்ள மாத்திரை பாட்டிலிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்தவன்..


"வாயை திற" என்றான்.


"நானே போட்டுகிறேன் என்கிட்டே கொடுங்க."


"ப்ச்.. முதல்ல நான் சொன்னதை செய். வாயை திற.. "என்றான்


அவன் அதட்டலில் மெதுவாக வாயை திறந்தாள். வாயில் மாத்திரையை வைத்து தண்ணீரை புகட்டி விழுங்க செய்தவனிடம்..


"உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கிறேன். என்னை மன்னிச்சுடுங்க.. அருண்."


கண்களை மூடி திறந்தவன் "லூசு மாதிரி பேசாதே.. இப்படி பேசுறதுதான் என்னை என்னமோ பண்ணுது. நாம வாழ்க்கை முழுதும் இன்ப, துன்பத்தை பகிர்ந்துக்கிட்டு வாழ போறோம். இதை நான் உனக்கு விருப்பபட்டு செய்யிறேன், உன்னை நல்லா பார்த்துக்கணும்னு மலை அளவு ஆசையும் இருக்கு என்றவன். இதே நான் இப்படி ஒரு சூழ்நிலையிலே இருக்கும்போது, நான் நீ பேசுனா மாதிரி பேசுனா உனக்கு எப்படி இருக்கும்"என்று கேட்டான்.


அவன் முடிப்பதற்குள் அவன் இதழ்களில் விரலை வைத்தவள், "என் நிலையில் விளையாட்டுக்கு கூட உங்கள வச்சு பேசாதீங்க, எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வர கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறேன்" என்றாள்.


அவளை இமைக்க மறந்து பார்த்தவன். "அப்படின்னா, நீ இனிமேல் உங்களுக்கு தொல்லை கொடுக்கிறேன் அப்படின்ற மாதிரி எல்லாம் பேச கூடாது புரியுதா..? "


"சாரி, இனிமேல் அப்படி பேச மாட்டேன்" என்றாள் அவள்.


"இன்னைக்கு ஏதாவது ஞாபகம் வந்ததா..?"


"இல்லை எதுவும் வரல.. எப்பவும் போல் நிழல் மாதிரிதான் தெரியுது" என்று பெரு மூச்சுவிட்டாள்.


"நீயும் இந்த நாள் வந்தாள் மாத்திரை போடாமல் அதை ஞாபக படுத்திக்க முயற்சி பண்ற.. நானும் மாத்திரை போடாமல் உடம்ப கெடுத்துக்காதேன்னு எவ்வளவோ சொல்றேன்.நீ கேட்க மாட்டேங்கிற, அப்புறம் வலியால் துடிக்கிற. இப்படி உன்னை பார்க்க என்னால முடியல"என்று அவள் தலையை கோதி கொடுத்தான்.


"என்ன பண்றது..? என்னால அந்த முயற்சியை விட முடியல, என் பத்து வயசு வரைக்கும் கிராமத்துல வளர்ந்த நான், அதற்க்கு பிறகு இங்க எப்படி வந்தேன், என்ன நடந்ததுன்னு மாமா சொல்லிருந்தாலும் நானே அதை தெரிஞ்சுக்கணும்னு என் ஆழ் மனம் தூண்டுது. அதனுடைய தூண்டுதல் தான் , அந்த கொடூர நாளில் ஏற்பட்ட ஆழ் மனதில் பதிந்த சில விஷயங்கள் இந்த பௌர்ணமி நாளில் எனக்கு இப்படி கனவாக வருதுன்னு நினைக்கிறேன்" என்றவள்.


"எனக்கு நம்பிக்கையே போய்டுச்சு அருண். இதுக்கு மேல எனக்கு எல்லாம் ஞாபகம் வருமான்னு, இல்லை, இப்படியே குழப்போதோடு என் வாழ்க்கை முடிஞ்சு போய்டுமோனு பயமா இருக்கு.. என் அப்பாவுடன் இருந்த பசுமையான நினைவுகள் வேணும் அப்டிங்கிறதுக்காகா மட்டும் தான், நான் இவ்வளவு முயற்சி பண்றேன்.ஆனால் எதுவுமே பலன் அளிக்க மாட்டேங்குது."



இங்க பாரு என்று அவள் முகத்தை அவன் புறம் திருப்பியவன், "உனக்கு கண்டிப்பா டாக்டர் ஞாபகம் வரும்னு சொல்லிருக்காரு, அது எப்போ வேண்டுமானாலும் வரலாம். நம்பிக்கையை மட்டும் விட்டுறாதே, உனக்கு பக்க பலமாக என்னைக்கும் நான் இருப்பேன்.உனக்கு பழைய நினைவுகள் வந்தாலும் வரவில்லையென்றாலும், நீ என்னைக்கும் சாளரத்தின் வெளியே தெரிந்த முழு நிலவை காட்டி.. அந்த நிறை மதி போல் இந்த நிறைமதியும் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றான்.ஆம் அவள் பெயர் நிறைமதி பெயருக்கு ஏற்றார் போல் நிலவின் அழகை குத்தகைக்கு எடுத்தது போன்று புறத்தோற்றத்தில் ஒளி பொருந்தியவளாக இருந்தாலும், மனதில் இருள் படிந்த அமாவாசை போன்ற நிலையில் இருப்பவள்.


"இப்போ மனசுல போட்டு எதையும் குழப்பிக்காதே.. அப்புறம் திரும்பவும் தலை வலிக்கும். இப்போ படுத்துக்கோ நாளைக்கு காலேஜ் போகணும்ல என்றான் "அருணன்.


"ஆம்" என்பது போல் தலை அசைத்தவள்."நீங்க போங்க, நான் இப்போ சரியாயிட்டேன்."



அருணன், "இல்லை நீ தூங்குன பிறகு, நான் போறேன்" என்றவன் அவளை நன்றாக படுக்க வைத்து போர்வையை போர்திவிட்டவனை பார்த்து "குட் நைட்" என்று சொல்லிவிட்டு கண் மூடி தூங்க ஆரம்பித்தாள்.


அடுத்த நாள் காலை அழகானா பக்தி பாடல் வீடெங்கும் இசைக்க பூஜை அறையில் பூஜை முடித்து பெரிய மாலை அனுவித்து, மஞ்சள் பூசிய முகத்தில் புன்னகையோடு தங்க நிற பிரேம் செய்யப்பட்ட தனது மனைவியின் பெரிய நிழல் படத்தின் முன் நின்று.



அந்த படத்தை 'இப்படி என்னை இங்கே தனியா விட்டுட்டு, நீ மட்டும் இப்போ சந்தோசமாக சிரிச்சுட்டு இருக்கியா' என்பது போல் பார்த்தார் வரதராஜன். முன்னால் அரசியல்வாதி, ஊழல் மிகுந்த துறையில் முடிந்த அளவு நேர்மையாக இருந்து ஏழை, எளியோர்க்கு நன்மையை செய்தவர், அரசியலுக்கு வருவதற்கு முன்னே செல்வச்செழிப்பு மிக்கவர், பல தொழில்களும், மருத்துவ கல்லூரிகளும், பள்ளிகளும் வைத்து நடத்தி கொண்டிருந்தவர். இப்போது அனைத்தையும் அருணனிடம் ஒப்படைத்து விட்டு அமைதியான வாழ்க்கையை வாழ முயற்சித்து வருகிறார்.


தன் மனைவி உயிரோடு இருப்பது போன்று படத்தில் சிரித்து கொண்டிருந்தவரிடம்"அம்மா லக்ஷ்மி நான் அப்படி என்ன பாவம் செய்தேன்..? முடிஞ்ச அளவு என் அரசியல் வாழ்க்கையில் இருக்கும்போது ஏழை எளியோர்க்கு நன்மை தானமா செய்தேன். அப்புறம் ஏன் என் மனசு நிம்மதி இல்லாமல்.. இருக்கு. இப்போ இருக்கிற ஒரே சந்தோசமென்றால் நம்ம அருணுக்கும், மதிக்கும் நடக்க போற கல்யாணம் தான் மா, அந்த பொண்ணு நிறைய கஷ்டபட்டுடுச்சு. என் மகள் மாதிரி நினைக்கிற அந்த பொண்ணு நல்ல வாழ்க்கை வாழ்ந்து இந்த குடும்பத்தை செழிக்க வைக்கணும் மா.. அதுக்கு நீதான் துணையாக இருக்கணும்" என்ற வேண்டுதலை வைத்துவிட்டு வெளியே வந்தார்.


அப்போது காலேஜ் செல்வதற்கு ஏற்றார் போல்.. எளிமையான சுடிதாரில் கிளம்பி கீழே இறங்கி வந்தாள் நிறை மதி.


இறங்கி வந்தவளை பார்த்து புன்னகைத்தவர்.. "வாம்மா.. இப்போ உடம்பு எப்படி இருக்கு..? "


"நல்லா இருக்கு மாமா.. நீங்க சாப்பிட்டீங்களா.."


"நீ இல்லாமல் நான் எப்பமா தனியா சாப்பிடிருக்கேன்.." என்று சிரித்தார்.


அவரை பார்த்து பதிலுக்கு புன்னகைத்தவள். திடிரென்று அவர் காலில் விழுந்து "ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா.." என்றாள்.

அவள் திடிரென்று காலில் விழுந்ததில் பதறி விலகியவர்..
"என்ன மா இதெல்லாம் முதல்ல எழுந்திரி.." என்றார்.

"இல்லை, மாமா இன்னைக்கு மூன்றாவது வருடம் முதல் நாள் அதான் ஆசிர்வாதம் வாங்குனேன்.நீங்கலும் அருணும் இல்லனா இதெல்லாம் நடந்துருக்காது மாமா.. நீங்க எனக்கு தெய்வத்துக்கு மேலே" என்றவளை..


உணர்ச்சி பெருக பார்த்தவர். "நீ எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணும் மா"என்று ஆசிர்வாதம் செய்தார்.


"என்ன மாமா, மருமகள் ரெண்டு பேரும் பாச மழையில் நனைந்து முடிச்சாசுன்னா.. என் வயிறையும் கொஞ்சம் கவனிக்கலாம் "என்று அருணன் அவர்கள் அருகில் வந்து கூற..


இருவரும் மெல்லிதாக புன்னகை செய்யதவர்கள் சாப்பாடு மேஜை நோக்கி சென்றனர்.சாப்பிட்டு முடித்ததும் மதி கிளம்ப எத்தனிக்க..

வராதராஜன் "என்ன மா மருமகளே.. இன்னும் ஒரு பத்து நாளுல கல்யாணம், அது முடிஞ்சதும் போகலாமேமா, நம்ம காலேஜ் தானே யாரு என்ன சொல்ல போறா? " என்றார்.


"நம்ம காலேஜாக இருந்தாலும் நான் படிக்கிறது கடவுளுக்கு அடுத்த படியா எல்லாரும் நினைக்கிற மருத்துவ படிப்பு . இன்னைக்கு முதல் நாள் வேற லீவு போட முடியாது. கல்யாணம் இரண்டு நாள் முன்னாடி லீவு போடறேன் மாமா."


அவளிடம் மறுப்பாக ஏதோ சொல்ல வந்தவரை தடுத்த அருணன்"அப்பா அவள் விருப்பபடி செய்யட்டும் விடுங்க என்றதும் அமைதியானார்" வரதன்.


அருணன் நிறை மதி பக்கம் திரும்பியவன் "இன்னைக்கு உன்னை நானே காலேஜ்ல விடறேன்."


"இல்லை அருண் பரவாயில்ல நானே போய்க்கிறேன்.. கார்ல தானே போக போறேன்."


"ஏன் நான் உன்னை காலேஜ்ல விடக்கூடாதா..? இல்லை விட்டதுதான் இல்லையா..? " என கூறியவனிடம்..
மறுக்க முடியாமல் தலை அசைத்தவள் அவன் பின்னால் வெளியே சென்றாள்.


அவள் வெளியே வந்ததும் அவளை கண்ட அங்கே கட்டி போட்டிருந்த ஆள் உயர கருப்பு நிற ஜெர்மன் ஷெஃபர்டு நாய் குறைத்தது.


"இதோ வந்துடுறேன் அருண்" என்று சொல்லிவிட்டு அதன் அருகே வந்து "ஃப்ரோசன் உன்னை பார்க்காமல் போனதும் என்னை இப்படி கத்தி கூப்பிடுறியா.. சாரி டா" என்று அதன் தலையை தடவி கொடுத்தாள். அதுவும் அவள் முகத்தில் நாவை கொண்டு எச்சில் செய்ய.. அதை கண்ட அருணன் ஃப்ரோசனை முறைக்க ஆரம்பித்தான்.சிறிது நேரம் விளையாடி விட்டு அவன் அருகில் வந்தவளிடம்.


"அது கூட நீ எப்படி இப்படி பழகுற.. உன் முகத்தை வேற அழுக்காகிருச்சு, அதை எனக்கு பிடிக்கவே இல்லை, உனக்காக தான் நான் விட்டு வச்சுருக்கேன்" என்றான்.



"வாயில்லாத ஜீவன் அது என்ன உங்களை பண்ணுது" என்று சொல்லிவிட்டு காரில் ஏறி கொண்டாள். ஃப்ரோசனை அவன் முறைக்க அதை உணர்ந்தார் போன்று தனது பல்லை வெளியே கடித்துவிடுவேன் என்பது போல் அதுவும் காட்ட.. தனது கையிலிருந்த தழும்பை பார்த்து விட்டு காரில் ஏறி அதை கிளப்பினான்.


வண்டியை ஓட்டி கொண்டு வந்தவன்.. "மதி இன்னைக்கு நான் உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிடு போவேன் நீ மறுக்காமல் என் கூட வரணும் சரியா.. இதுவரைக்கும் நாம எங்கும் தனியா போனது இல்லை, அப்பாவும் விட்டது இல்லை, ஆனால் இனி எந்த தடையும் நமக்கு கிடையாது இன்னைக்கு நீ கண்டிப்பா வரணும்" என்றான்.


அவன் முதல் தடவை மறுத்து பேச முடியாத அளவுக்கு கேட்பதால் ஒப்பு கொண்டவள்."எங்கே போகபோறோம்"என்று கேட்டாள்.

"அது சர்ப்ரைஸ் சொல்ல முடியாது. நீயே அங்க வந்து தெரிஞ்சுக்கோ என்றான். அவள் கல்லூரி வந்ததும் அவளை இறக்கி விட்டு சாயங்காலம் நீ வீட்டுக்கு உன் காரில போய்டு, அப்பாகிட்ட சொல்லிட்டு இரவு நான் கூட்டிட்டு போறேன்.. அப்புறம் மறந்துவிடாமல் புடவை கட்டணும்" என கூறிவிட்டு அவனது அலுவலகத்திற்கு சென்றான்.



அவனிடம் விடை பெற்று நிறை மதி தனது வகுப்பறைக்கு செல்ல நடந்து வந்தாள். அந்த சமயம் ஒரு கூட்டம் முதலாமாண்டு மாணவி ஒருத்தியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து ராகிங் என்ற பெயரில் வம்பிழுத்து கொண்டிருந்தனர். அதை கண்டதும் கோபம் கொண்டவள் வேக எட்டுக்களை எடுத்து வைத்து சென்றவள், "நிறுத்துங்க "என்று குரலை உயர்த்தி கத்தினாள்.


அனைவரும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினர்.அந்த மாணவியும் கலங்கிய விழிகளுடன் அவள் புறம் திரும்பியவள் கண்கள் இரண்டும் ப்ரகாசமாக "கியூட்டி அக்கா" என்று அவள் இதழ்கள் முணுமுணுத்தது...




நிலா வருவாள்...




நன்றி...
மீனா வியனி



படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.




 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா - 2




"நிறுத்துங்க" என்று குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்த அந்த பெண் தன்னையும் அறியாமல் அவள் இதழ்கள் 'கியூட்டி அக்கா' என்று முணுமுணுத்தது.


உடனே தன்னை சுதாரித்து, அவர்களுக்கு பயந்து நிறைமதி பின்னால் சென்று தன்னை முழுவதும் மறைத்து நின்று கொண்டாள்.



அனைவரும் நடுக்கத்துடன் நிற்க, மதி அவர்களை நோக்கி "நம்ம காலேஜ்ல ராகிங் பண்ணா சஸ்பெண்ட்ணு எல்லா இடத்துலயும் எழுதி ஒட்டிருக்காங்களே உங்களுக்கு தெரியுமா தெரியாதா..? நக்கலாக மதி கேட்க.. அந்த மாணவர்கள் பயந்து போய் நின்றனர். பர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்டுக்கிட்ட இப்படி ராகிங் பண்ண இங்க யாரும் உங்களுக்கு சொல்லி கொடுக்கல, மத்தவங்க உயிரை காப்பாத்துறது எப்படின்னு சொல்லி கொடுக்கிறதாதான் எனக்கு ஞாபகம்? அப்படி பட்ட துறையில இருந்துகிட்டு இப்படி நடந்துக்கிறிங்க, எத்தனை பேர் பல கனவுகளோடு வந்தவங்க வாழ்க்கை எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்களால ஃபன் பண்றேன்னு சொல்லி அவங்க வாழ்க்கையை சிதைஞ்சுருக்கு. உங்களுக்கு எத்தனையோ முறை வார்னிங் பண்ணியாச்சு இப்போ நேரடியா மாமாகிட்ட கம்பளைண்ட் பண்றேன்" என்று அவள் பாட்டிற்கு கத்திவிட்டு அடி எடுத்து வைக்க..




அடுத்த நிமிடம் அந்த கூட்டம் "நிறைமதி ப்ளீஸ் அகைன் நாங்க பண்ணமாட்டோம்" என்று கெஞ்சினார்.. அவர்களுக்கு மட்டும் இல்லை அந்த காலேஜ் முழுவதும் தெரியும் மதி இந்த காலேஜோட நிறுவனர் வரதராஜனின் சொந்தம் என அதுவும் இன்று காலை சுட சுட புதிய செய்தி காலேஜ் முழுவதும் பரவி வருவது அவளின் திருமணத்தை பற்றி..



"இது தான் லாஸ்ட் வார்னிங்" என்று அவர்களை நோக்கி தன் கணீர் குரலில் கூற, அவர்கள் விட்டால் போதும் என்று ஓடி விட்டனர்.

தன் பின்னால் மறைத்திருந்த பெண்ணை இழுத்து முன்னால் நிற்க வைத்து, "டாக்டருக்கு படிக்க வந்து இருக்க, தைரியமா பேஸ் பண்ண தெரியாது? பர்ஸ்ட் டாக்டருக்கு தேவை மன தைரியம் அது இருந்தா தான் எந்த துறையிலையும் சாதிக்க முடியும், வாழ்க்கைல இவங்கள மாதிரி நிறைய பேர எதிர்கொள்ளவும் முடியும்" என்று மதி கூற..


அந்த பெண்ணுக்கு என்ன புரிந்ததோ..? அவளையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவள் "சரி" என தலை அசைத்தாள்.



மருண்ட விழியோடு தன்னை நோக்கி தலை அசைப்பதை பார்த்து, இதழ் விரித்து புன்னகை புரிந்தவள்,"சரி உன் பேர் என்ன?" என்று கேட்டு சகஜ நிலைக்கு மாற்றினாள்.


முகம் மலர்ந்து "என் பேர் ராகவி" என்றாள் கண்களை விரித்து,


"ராகவி உன்னை போலவே அழகா இருக்கு என சொன்னவள் சரி வா கேன்டீன் போகலாம்" என்று கூறி இருவரும் கேன்டீன் நோக்கி நடந்தனர்.



"நீ என்ன சாப்பிடற" கேட்டு அவளுக்கு தேவையானதை கேன்டீனில் வேலை செய்வரிடம், "அண்ணா ஒரு காபி" என்று கூறி ரகவியை பார்த்தாள், ராகவியும், "அண்ணா எனக்கும் காஃபி" என கூறி விட்டு காலியாக இருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.


ராகவி மதியை கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருக்க..! "ஹே.. என்ன அப்படி பார்த்துட்டு இருக்க?"

"இல்ல அக்கா நீங்க பார்க்க பேபி டால் மாதிரி அழகா இருக்கீங்க, நான் உங்கள கியூட்டினு கூப்பிடட்டுமா" உற்சாகமா கேட்டாள்.

ராகவி 'கியூட்டி' என்று கூறிய உடன் மதிக்கு, அந்த வார்த்தையை அடிக்கடி எங்கோ கேட்டது போல் தோன்ற.. அவள் முகத்தில் வந்து போன குழப்பமான உணர்வை கண்டு கொண்ட ராகவி அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக "அக்கா" என உலுக்கினாள்.


லேசாக சிரித்து "சாரி" என கூறி தலை அசைத்தாள், கேன்டீனில் இருந்து "காஃபி ரெடி" என்று குரல் கொடுக்க.. மதி இருக்கையில் இருந்து எழ, அவளை தடுத்து ராகவி சென்று காபி எடுத்து வந்து கொடுத்தாள்.


ராகவி தான் வரதன் பள்ளியில் படித்ததையும், ஏழை மாணவர்களுக்கு அவரே நீட் தேர்வு பயிற்சி ஏற்பாடு செய்ததும், அதில் பாஸ் செய்தும் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காததால், இந்த கல்லூரியை தேர்ந்தெடுத்ததும், வரதனே அவளுக்கு ஸ்பான்சர் செய்ததும், இங்கையே ஹாஸ்டலில் தங்கி படிப்பது அனைத்தையும் கூறினாள்.

இருவரும் தங்களை பற்றி அறிமுகம் படுத்தி கொண்டே காபியை குடித்து விட்டு டேபிள் மேல் கப் வைக்கும் சமயத்தில் மதியின் கண்கள் மூட பட்டன..

"ஏய்.. பிரகாஷ்" என ஆனந்தமாக மதி கூச்சலிட, "ஹாய் மதி.. ஏன் இப்படி கத்துற கொஞ்சம் மெதுவா பேசு" என அவள் பக்கத்தில் அமர்ந்து, "எப்படி இருக்கே மதி?" என்று கேட்டு தங்களையே மலங்க மலங்க விழித்து பார்த்து கொண்டிருந்த பெண்ணை பார்த்து ஒரு நொடி அவள் அழகில் மயங்கிய மனதை திட படுத்தி கொண்டவன்

மதியை கண்களால் 'யார்' என்று கேள்வியாக கேட்டான்.


"பிரகாஷ் ஒன்னு ஒன்னா கேளுடா, ஒரு டைம்ல கேட்டா என்னால் பதில் சொல்ல முடியாது" செல்லமாக அவனை கண்டித்து கொண்டாள், இந்த காலேஜ்லேயே அதிகமாக பழகுவது பிரகாசிடம் தான், ஏனோ மதி அவனிடம் முதல் முதலில் பேசும் பொழுது அவனை சகோதரனாக உணர்ந்தாள், அன்றில் இருந்து இன்று வரை அவனிடம் மட்டும் தான் நெருங்கி பழகுவாள்.



"இது ராகவி பர்ஸ்ட் இயர்" என்று அவளை அறிமுகம் படுத்தி காலை நடந்ததை சுருக்கமாக கூறி முடித்தாள். அதை கேட்டு பலமாக சிரித்த பிரகாஷ் "எது இந்த குள்ள கத்திரிக்காய..? ராகிங் பண்ணாங்கலா..?" என்று மேலும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான்.


அவளை இதுவரைக்கும் அறிமுகம் இல்லாதவன் கிண்டல் செய்ததில் ராகவிக்கு புசு புசு என கோபம் வர.. பிரகாஷை நோக்கி, "ஹலோ என்ன ஓவரா சிரிக்கிறிங்க?"
என முறைத்து கொண்டு கேட்க.. "கூல் ஏன் இவ்வளவு கோபம்" அவன் சமாதானம் படுத்த.. அதை அவள் சட்டை செய்யாமல் மதியை நோக்கி "கியூட்டி அக்கா வாங்க கிளாஸ்க்கு போகலாம்" என அழைத்தாள்.


"ராகவி வெயிட்" அவள் சொல்லியும் கேட்காமல் அவனை முறைத்து கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.. ஏனோ முதல் சந்திப்பிலையே பிரகாஷை பிடிக்காமல் போயிற்று ராகவிக்கு. அது எப்படி அவன் தன்னை கேலி பண்ணி சிரிக்கலாம் என கோபம் தான் அந்த சிறிய பெண்ணிற்கு.


அப்பொழுது தான் கவனித்தால் மதி, ராகவி சற்று ஊன்றி நடப்பதை, கூட வரும் பொழுது அதை சரியாக கவனிக்கவில்லை, உற்று கவனித்தால் தான் தெரியும்.அவள் வலது கால் ஊன்றி நடப்பதை இதை பற்றி அவளிடம் விசாரிக்க வேண்டும் என முடிவோடு ப்ரகாஷிடம் பேச்சை கொடுத்தாள்.

"பிரகாஷ் ஏன் இந்த மாதிரி பண்ண? முதலே அவள் பயந்துகிட்டு இருந்தா, நான் தான் அவளை சரி பண்ணி காஃபி குடிக்க கூட்டிட்டு வந்தேன்.." என்று நண்பனிடம் புதிதாய் கிடைத்த குட்டி தங்கைக்காக அவனிடம் பாய்ந்தாள்.



"ஹே கூல் மதி, ஜஸ்ட் பார் ஃபன்.. எங்க போக போறா? இங்கு தானே வந்தாகனும்.." பேச்சை மாற்றும் விதமாக, "அப்புறம் கல்யாணம் ஒர்க் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு? இன்னும் பத்து நாளுல கல்யாணத்தை வச்சிக்கிட்டு எதுக்கு வந்தே..? "

"என்னடா நீயும் இதையே சொல்ற மாமாவும் இதே தான் சொன்னாரு.!" ஒரு வித சலிப்போடு கூறினாள்.


இருவரும் பேசி கொண்டே தங்கள் வகுப்பறை நோக்கி சென்றனர்.

மாலை அவர்கள் வகுப்பு முடித்து, மதி ப்ரகாஷிடம் இன்று அருணனுடன் வெளியே செல்வதை பற்றி கூறி கொண்டே வந்துகொண்டிருக்க.. அவள் பின்னால் "கியூட்டி அக்கா" என கத்தி கொண்டே தாங்கி தாங்கி ஓடி வந்து கொண்டிருந்தாள் ராகவி..


மதி அவளை தடுத்து, "ஏன் இப்படி ஓடி வர மெதுவா நடந்து வரமாட்டியா..? " என கடிந்து கொண்டே அவளை பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர வைத்தாள்.


"சரி எதுக்கு இப்படி ஓடி வந்தே? அப்புறம் நானே கேக்கணும்னு நினைச்சேன், உன் காலுக்கு என்ன ஆச்சு?"


"அது வந்து.." ஒரு நொடி தயங்கி பின் "சின்ன வயசுல ஆக்சிடென்ட் ஆயிடுச்சு" என்று அவள் சொல்லி கொண்டிருந்த பொழுதே, மதியை வழக்கமாக அழைத்து செல்லும் கார் வந்திருக்க, இன்று வெளிய செல்ல வேண்டும் இதை பற்றி பிறகு பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி "சரி ராகவி நான் நாளைக்கு பேசறேன் பாய்" புன்னகையுடன் கை அசைத்து, ப்ரகாஷிடம் சிறிய தலை அசைப்புடன் விடை பெற்று காரை நோக்கி சென்றாள்.


மதி சென்ற பின் பிரகாஷ், ராகவி அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து.. "அப்புறம் கவி டிரீட்மென்ட் எதுவும் பண்ணலயா..? " என்று ஆர்வமாக கேட்டான்.


ராகவி அவனை தீயாய் முறைத்து, "ஹலோ நான் எதுக்கு உங்க கிட்ட என் கதைய சொல்லணும்? அப்புறம் என் பேர் ஒன்னும் கவி இல்லை கால் மீ ராகவி" என்று மிடுக்காக கூறினாள்.


"அந்த பேர் மத்தவங்களுக்கு பட்(but) எனக்கு நீ கவி தான்" ஒற்றை கண்ணை அடித்து "வரட்டா.." என்று சிரித்து கொண்டே தன் பைக்கை கிளப்பி சென்றான்.


ராகவி தான் தன் வகுப்பு தோழியும், ஹாஸ்டலில் தன்னுடன் அறையை பகிர்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீவி
வந்து அழைத்து செல்லும் வரை தன்னை மறந்து நின்றிருந்தாள்..


*******************


சாயங்காலம் வரதன் வரவேற்பறையில் காபி குடித்து கொண்டே.. அன்றைய செய்திகளை ஒரு வித சோகத்தோடு தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டுற்கு நுழைந்த நிறைமதி.


"குட் ஈவினிங் மாமா" உற்சாகமா கூறினாள்..

அவள் உற்சாகம் அவருக்கும் தொற்றி கொண்டது போல அவரும், "குட் ஈவினிங் மா.."என்றவர் செய்தியை பார்க்க ஆரம்பித்தவர், "நாடே கெட்டு போச்சு மா.. அரசியலே பழி வாங்குற களமாக மாறி போய்டுச்சு."


"இன்னைக்கும் புலம்ப ஆரம்பிச்சுட்டிங்களா..? உங்களை மாதிரி நேர்மையா, நியாயமான அரசியல்வாதிங்க எல்லாம் சீக்கிரம் ஓய்வெடுக்க வந்துட்டா.. இப்படித்தான் நடக்கும்"


அதில் ஒரு நிமிடம் உற்சாகமாக இருந்த முகம் சுருங்க. "என்னமா பண்ண சொல்ற? ஒரு நிலைமைக்கு மேல அங்க என்னால இருக்க முடியல, பாழா போன அதை பத்தி தெரிஞ்சுக்க கூடாதுன்னு மூளை சொன்னாலும், மனசு எல்லாம் இந்த செய்தியை தான் பார்க்க சொல்லுது, சும்மாவா சொன்னாங்க தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்னு மாத்திக்க முடியல..

"சரி அதை விடுமா, அப்புறம் அருணன் என்கிட்ட எல்லாம் சொன்னான். சீக்கிரமே வந்துட்டான் அவன் அறையில கிளம்பிகிட்டு இருக்கான்.. நீ போய் தயாராகிட்டு வாம்மா.."

"சரி மாமா" என்றவள் அடுத்த ஒரு மணி நேரத்தில்.. கருப்பு நிற எளிமையான புடவையில்.. இடைவரை நீண்ட கேசத்தை விரித்து விட்டு, நெற்றியில் சிவப்பு நிறத்தில் சிறிய பொட்டும், காதில் அவள் நடைக்கு ஏற்றார் போல் அசைந்து ஆடிய காதனிகள் மேலும் அவளுக்கு அழகு சேர்க்க, சாந்தம் தவழும் முகத்தில் மெல்லிய புன்னகையுடன் இறங்கி வந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் அருணன்.

கீழே இறங்கி வந்தவளை "மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கேம்மா இப்படி புடவையில பார்க்க.." என்றவர் அருணனிடம் திரும்பி, "அருண் மதிய பத்திரமாக கூட்டிட்டு போயிட்டு வரணும், ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடனும், அவளை தனியா எங்கையும் விட்டுட்டு போயிடாதே" என்று அறிவுரை வழங்கியவரை.

"அப்பா.. போதும் பா. உங்கள் மருமகளோட நிழல் மாதிரி ஒரு கணம் கூடா பிரியாமல் பத்திரமாக வீட்ல வந்து சேர்க்கிறது என் பொறுப்பு" என்று சிரித்து கொண்டே கூறியவன். "நாங்க இப்போ கிளம்புறோம் பா.. "என நிறைமதியை அழைத்து சென்றான்.


இருவரும் காரிற்கு வர அங்கு பல வருடங்களாக தோட்ட வேலை செய்யும் ஐம்பத்தைந்து வயதை உடைய மணி காரில் ஏறி செல்லும் இருவரையும் வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.


அருணன் அவளை தங்களது ஐந்து நட்சத்திர விடுதிக்கு அழைத்து வந்தவன், அவளை அழைத்து கொண்டு விடுதி உள்ளே செல்லாமல் செடி கொடிகள் சூழ்ந்து பசுமையாய் இருந்து பூங்கா பகுதிக்கு அழைத்து சென்றான்.

'அங்கு ஏன் அழைத்து செல்கிறான்' என்று யோசனையோடு அவன் பின்னே சென்றவள்.அங்கு ஏற்பாடு செய்திருந்த கேண்டில் லைட் டின்னெர் அமைப்பை கண்டவள் இதழ்கலில் புன்னகை அரும்பியது.


அவர்கள் அங்கு சென்றதும்.."உட்காரு மதி" என்று இருக்கையை இழுத்து அவளை அமர வைத்தவன், தானும் அவள் எதிர் புறம் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.


மெழுகுவர்த்தி ஒளி மட்டுமே அந்த இடத்தை ஆக்ரமித்து காதலர்களுக்கு மட்டும் தோன்றும் ஒரு இதமான ஏகாந்த நிலையை தோற்றுவிக்க..

"பிடிச்சுருக்கா மதி" என இனிமையாக அவன் குரல் ஒலிக்க..

"ரொம்ப பிடிச்சுருக்கு மனசுக்கு அவ்வளவு அமைதியா கொடுக்குது இந்த அமைதியான சூழ்நிலை அருண்" புன்னகையுடன் கூறினாள்.

அவள் கூறியதில் அழகாக சிரித்தவன், அவளுக்கு பிடித்த உணவு வகைகளை அவனே அவளுக்கு பரிமாறி, தானும் பரிமாறிக்கொண்டு பேசி கொண்டே உண்டு முடித்தனர்.


அவர்கள் உணவு உண்ட பிறகு.. "மதி" என்று அவள் கைகளை பற்றி கொண்டு.. மங்கலான வெளிச்சம் உள்ள பூச்செடிகள் சூழ்ந்து வாசனை பரப்பி கொண்டிருந்த இடத்திற்க்கு அழைத்து சென்றான்.

"மதி.. கண்ணை மூடு" என்று ஹஸ்கி குரலில் கூற..

"ஏன் அருண்..?" அவள் புரியாமல் கேட்க..

"கண்ணை மூடு மதி, சொல்றேன்.."


"ம்ம்.." என்று கண்களை மூடினாள்.


ஒரு நிமிடம் கடந்த பிறகும் அவன் எதுவும் கூறாமல் இருக்க..

கண்ணை திறக்க போனவளை "திறக்காதே மதி" என்றான் அதே ஹஸ்கி குரலில்..

மெல்லிய சிரிப்புடன் மீண்டும் கண்களை மூடி கொண்டாள்.

மிக அருகில் நெருங்கி, மெதுவாக அவள் கைகளை பற்றி மோதிரத்தை அனுவித்து.. அதில் ஆழ்ந்த முத்தம் வைத்தவன், "ஐ லவ் யூ நிலா" என்று தீர்க்கமாக கூறினான்.


அவன் தன் காதலை கூறியதில் வெடுக்கென்று கண்ணை திறந்து பார்க்கவும், அவள் சிவந்த அதழ்களில் அவன் அதழ் சேர்த்து நான்கு வரி கவி பாடவும் சரியாக இருந்தது.

இந்த திடீர் தாக்குதலில் எதிர்பார்க்காதவளின் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் சாசர் போன்று விரிய.. இருவர் நயனங்களும் கட்டுண்டு இதழ்களோடு தாளத்திற்கு ஏற்றார் போல் அவைகளும் பேசிக்கொண்டன.

அவன் ஆளை இழுக்கும் விழி வீச்சை ஒரு நிமிடத்திற்கு மேல் எதிர்கொள்ள முடியாதவளின் இமைகள் இரண்டும் தாமாக மூடி கொள்ள.. எவ்வளவு நிமிடங்கள் நீடித்தாதோ அவர்களுக்குள் மூண்ட முதலாம் இதழ் யுத்தம், எந்த உடன் படிக்கைக்கும் அடிபணியாமல் நீடிக்க.. அவள் மூச்சு காற்றுக்கு சிரமப்படுவதை எண்ணி என்றும் முடிவு பெற இயலாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தான்.


அவன் முத்தத்தில் லயித்திருந்தவள் அப்படியே கண்கள் மூடிய மோன நிலையில் இருக்க.. சில நிமிடங்கள் கழித்து அருணன் தொடுகையில் உணர்வு பெற்றவள்.


அவனை பார்க்க இயலாது.. குனிந்து கொள்ள.. அவளின் இந்த வெட்கத்தில் சிரித்தவன்.

"போகலாமா ஒரு முக்கியமான வேலை இருக்கு" என்க..

"சரி" என்று தலை அசைத்து அவன் பின்னே சென்றாள் பாவையவள்.



நிலா வருவாள்...




நன்றி
மீனா வியனி


படித்துவிட்டு உங்களது கருத்துகக்ளை இங்கே பதியுங்கள் நண்பர்களே..👇👇👇



 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா-3





ஹோட்டலில் நடந்தவற்றை நினைத்து கொண்டே மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தவள் அருணனின் முகம் பார்க்க இயலாது நேராக படுக்கை அறைக்கு வந்து உடை கூட மாற்றாது, அவன் கொடுத்த இதழ் ஒற்றலை நினைத்து புன்னகை அரும்ப "பார்க்கதான் ஏதோ ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி பால் வடியிற முகம். ஆனால் முத்தத்தை மட்டும் பாரு முரட்டு தனமா" என அவன் கொடுத்த முத்தத்தில் காயம் பட்டு எரிச்சல் கொடுத்த இதழை தொட்டு பார்த்து செல்லமாக அவனை கடிந்து கொண்டவள், அந்த இனிமையான நினைவுகளுடன் அன்றாடம் எடுத்து கொள்ளும் மாத்திரையை உண்டுவிட்டு உறங்க ஆரம்பித்தாள்.

அவள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, அவள் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன் அவள் அருகில் அமர்ந்து, சிறு குழந்தை போல் வாயை சற்று பிளந்து தூங்கும் தன்னவளை பார்த்து சிரித்தவன், அவள் நிலா போன்ற முகத்தை கரு முகில் சூழ்ந்து கொண்டது போல் அவளின் முகத்தை ரசிக்க விடாமல் பரவி படர்ந்திருந்த கார் கூந்தலை விலக்கி, தன் முன்னே ஐந்தரை அடி உயரத்தில் செதுக்கி வைத்த சிற்பம் போல் படுத்திருந்தவளின் ஒளி பொருந்திய வதனத்தை கண்ணிமைக்காமல் ரசித்தவன், அதற்கு மேல் முடியாமல் தாபம் ஊற்றெடுக்க காதருகே குனிந்து "நிலா.." என்று ஆழ்ந்த குரலில் கூறிவிட்டு. அவள் உயிரை அவனுக்குள்ளும், அவன் உயிரை அவளுக்குள்ளும் புகுத்தும் கூடு விட்டு கூடு மாற்றும் முயற்சியில் இருப்பது போல் அவள் இதழ்கள் வழியாக அவள் உயிரை அவனுக்குள் புகுத்தி கொள்ளும் முயற்ச்சியில் செவ்வென செய்தவன், அவன் கைகள் எல்லை மீறும் சமயம்..


சரேலென்று முயல் குட்டியை போல் படுக்கையில் இருந்து துள்ளி குதித்தெழுந்து, மூச்சு வாங்க அப்படியே அமர்ந்திருந்தவள்.. "ச்சை கனவு. இது என்ன புதுசா இப்படி எல்லாம் வருது? அதுவும் மாத்திரை போட்டுத்தானே படுத்தேன், மதி இன்னைக்கு ஒரு நாளுளையே அருண் மேல பயித்தியமாயிட்டியா! அவன் கொடுத்த முத்தத்தை நினைச்சுகிட்டே படுத்ததால அதோட தாக்கம் தான் இப்படி கனவா வந்துருக்கு. இனி கல்யாணம் முடியிற வரைக்கும் அவன் முகத்தை பார்க்கவே கூடாது, அவன் பக்கத்துல போகவும் கூடாது அதுவும் அந்த ஆள இழுக்கிற கண்ணை பார்க்கவே கூடாது" என முடிவெடுத்தவளாக திரும்பவும் படுத்து உறங்கினாள்.


அடுத்தநாள் கல்லூரிக்கு அருணை காண நாணம் கொண்டு, அவனை பார்க்காமல் கிளம்பி சென்று விட்டாள்.மதி காரில் இருந்து இறங்கியதும், அதற்காகவே காத்து கொண்டிருந்தவள் போல், அவள் அருகே ஓடி வந்தாள் ராகவி.

அவள் ஓடி வருவதை கண்டதும் கோபம் கொண்ட மதி.. "ராகவி ஏன் இப்படி ஓடி வர மெதுவா வரதுக்கு என்ன..? என அவளை திட்டினாள்.

"இல்லை கீயூட்டி அக்கா. உங்களை பார்த்ததும் சந்தோசம் தாங்கலை அதான் ஓடி வந்தேன்."

"அதுக்காக இப்படியா ஓடி வருவே..? கீழ விழுந்துட்டேனா என்ன பண்றது? இனி நீ இங்க காத்திருக்க வேண்டாம். காலையில கேண்டீன்ல வெயிட் பண்ணு அங்க வந்து உன்னை பார்க்குறேன் என்ன சரியா..?"

அவள் தன் மீது அக்கறையுடன் கடிந்து கொண்டதை நினைத்து சந்தோசம் கொண்டவள்.. "சரிக்கா.. தினமும் என்னை பார்க்க வருவீங்களா ஜாலிக்க" என குதுகலித்தவளின் மேல் இனம் புரியாத பாச உணர்வு ஏற்பட அவளுடன் கேண்டீன் நோக்கி சென்றாள்.


இருவரும் பேசிக்கொண்டே காஃபி குடித்து கொண்டிருக்க.. "மதி" என்ற கூவலுடன் அவனும் மற்றொரு நண்பன் அஜயும் வந்தனர், அஜய் ராகவியின் அருகில் அமர்ந்து கொள்ள அதை கண்ட பிரகாஷின் முகம் ஒரு நொடி சுருங்கி விரிய, அவன் மதியின் அருகில் அமர்ந்து கொண்டான்.

ராகவியிடம் படிப்பை பற்றி பேச, அவளும் இயல்பாக அவன் பேச்சில் ஒன்றி ஏதேதோ வளவளத்து கொண்டிருந்தாள்.



இதை அனைத்தையும் மதியுடன் பேசி கொண்டிருந்தாலும், ஓர கண்ணால் தன்னை கண்டுகொள்ளாமல் அவனிடம் பேசிக்கொண்டிருன்தவளின் மேல் கோபம் பெருக 'இருடி தனியா மாட்டுவேள அப்போ பார்த்துக்கிறேன்' என நினைத்துக்கொண்டான் பிரகாஷ்.


"எந்த உதவி வேணும்னாலும் என்கிட்ட தயங்காமல் கேளு ராகவி உடனே செய்யிறேன்" அஜய் அவளிடம் கடலை வறுத்து கொண்டிருந்தான்.

"சரிங்க சீனியர் கண்டிப்பா கேட்குறேன்" சிரித்து கொண்டே ராகவி அவனுக்கு பதில் கூற..


'இவரு அப்படியே கர்ணன் பரம்பரை அப்படியே உதவிய அள்ளி தள்ளிருவாரு.. அவளுக்கு எல்லாம் செய்யத்தான் பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி நான் இங்க ஒருத்தன் உட்கார்ந்துருக்கேனே..!!காத்திருந்துவன் பொண்டாட்டிய இன்னைக்கு வந்தவன் நீ ஆட்டைய போட பார்க்குறியா, இருடா அஜய் இனி அவளை உன் பக்கமே விட மாட்டேன்.சார் மட்டும் நேத்து வந்தவர் தானே என்னமோ பல வருடம் அவளுக்காக தவம் இருந்தவர் மாதிரி பேசுறியே என்று மனசாட்சி வார.. எப்படி இருந்தாலும் நான் ஒரு நாள் முன்னாடியே அவளை பார்த்துட்டேன் அதனால் எனக்கு தான் அவள்.அவள் என்ன ஆடி தள்ளுபடி பொருளா முதல்ல வரவங்களுக்கு முன்னுரிமைன்னு பேசிகிட்டு இருக்கே என்று மனசாட்சி காரி துப்ப அதை எல்லாம் துடைத்து எறிந்துவன். இவளையும் பாரு பல்ல காட்டி காட்டி அவன்கிட்ட பேசிகிட்டு இருக்கிறத' என்று வசை பாடியவன்..

'ஏய் குள்ள கத்தரி தனியா மாட்டுடி உனக்கு இருக்கு' என நினைத்து கொண்டவன் வெளியில் சிரித்தார் போல் முகத்தை வைத்து கொண்டு மதியுடன் பேசிக்கொண்டிருந்தான்.

சாயங்காலம் வகுப்புகள் முடிந்து மதி ராகவியிடம் பேசிவிட்டு சென்று விட, அவள் வரவுக்காக கண் கொத்தி பாம்பாக காத்து கொண்டிருந்தான் பிரகாஷ்.


அவளும் அவள் வகுப்பு தோழி ஸ்ரீவியும் பேசிக்கொண்டே விடுதி நோக்கி சென்று கொண்டிருக்க, அவர்களின் முன் தனது விலை உயர்ந்த பைக்கை நிறுத்தி இறங்கியவன்.


"என்ன கத்தரிக்கா ஹாஸ்டலுக்கு கிளம்பிட்டியா..?"

அவனை ஏற இறங்க பார்த்தவள் ஏன் "உங்களுக்கு மறை எதுவும் கழண்டு போய்டுச்சா..? ஹாஸ்டலுக்கு போற வழில இப்படி மறுச்சு நின்னு இந்த மாதிரி கேள்வி கேட்குறீங்க?"எள்ளலாக கூற..

அதை கேட்ட அவள் அருகில் நின்ற ஸ்ரீவி சிரித்து விட.. அவளை முறைத்து பார்த்து "நீ முதல்ல கிளம்பு இந்த சிம்ரன் கத்தரிக்காய்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்."


"ஹேய்..ஸ்ரீவி இருடி போகாதே" என்றவள் அவனிடம் திரும்பி என் கிட்ட இந்த ரெண்டு நாளுக்குள்ள பேசுற அளவுக்கு அப்படி எந்த விஷயமும் இல்லைனு நினைக்கிறேன்" என்று நகர போனவளை கை நீட்டி தடுத்தவன்.


"நீ போ.. "என்று ஸ்ரீவியை பார்த்து பிரகாஷ் கூற..

"போகாதே இங்கையே இருடி.."
.என கவி கூற..

இவர்கள் மாறி மாறி கூறுவதில் யார் பேச்சை கேட்பது என்று தெரியாமல் முழித்து கொண்டு நின்றிருந்தவளின் கைபேசி ஒலி எழுப்ப.. "ராகவி அப்பா கூப்பிடுறாருடி, நீ பேசிட்டு வா நான் அந்த மரத்துக்கிட்ட வெயிட் பண்றேன்" அப்பாடி தப்பித்தோம் என்ற உணர்வோடு நகர்ந்து விட்டாள்.


அவள் நகர்ந்ததும் "என்ன சிம்ரன் கத்தரி சீனியர் பேச்சை மதிக்காத அளவுக்கு அவ்வளவு தயிரியம் வந்துருச்சா..? "

"இங்க பாருங்க சீனியர் என்ன சிம்ரன் கத்தரிக்காய்னு கூப்பிடாதிங்க அப்புறம் நானும் மரியாதை இல்லாமல் கூப்பிடுவேன்."


"அப்படி தாண்டி கூப்பிடுவேன் என் சிம்மு, என்ன டி பண்ணுவே..? "


அவன் டி போட்டு அழைத்தது பொறுக்காது "வார்த்தை தடிக்குது வளர்ந்த மாடு சீனியர் அப்புறம் நானும் டா போட்டு பேசுவேன்."


"டா.. போட்டு கூப்பிடு, மாமான்னு கூட கூப்பிடு நான் என்ன உன்னை மாதிரி கோவிச்சுக்கவா போறேன்!" அவள் காதருகே குனிந்து ஹஸ்கி குரலில் கூறினான்.


அவன் பேச்சு திசை மாறி செல்வதை உணர்ந்தவள்.. "இங்க பாருங்க உங்களுக்கு இந்த படிப்பு எல்லாம் பெரிய விஷயமே இல்லை, உங்க அப்பா ஒரு பெரிய தொழில் அதிபர், நீங்க ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்.ஆனால், நான் அப்படி கிடையாது.இங்க இந்த இடத்துல வந்து படிக்க பல சிரமங்களை தாண்டி வந்துருக்கேன், எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு இப்படி கண்டதையும் பேசிகிட்டு என்ன தொல்லை பண்ணாதீங்க, நான் படிக்கணும்."

அவள் பேசியதை குறுகுறுவென பார்த்துகொண்டிருந்தவன்."உன்னை யாரு படிக்க வேண்டாம்னு சொன்னது.எவ்வளவு வேண்டுமானாலும் படி.. ஏன் வாழ்நாள் முழுக்க படிக்க விருப்பம் இருந்தாலும் படி, நெல்லுக்கு பாயிர தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கு பாயிர மாதிரி என்னையும் கொஞ்சம் சேர்த்து படி, பிடிச்சா.. பிடிச்சா இல்லை கண்டிப்பா பிடிக்கும் படிச்சு முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம் எப்படி" என்று கேட்க..


"இப்போ கன்போர்ம் ஆயிடுச்சு.."

"என்ன சிம்மு கன்போர்ம் ஆயிடுச்சு..? "

"இவ்வளவு நேரம் மறை கழண்டுடுச்சோன்னு சந்தேகமா இருந்தது. இப்போ அது உண்மைன்னு உறுதியாயிடுச்சு."

"இந்த மாதிரி பார்த்து ரெண்டாவது நாளே காதல் வசனம் பேசுனதும் உங்கள் பின்னாடி வர ஏமாந்த பொண்ணுங்க ஆயிரம் பேரு இருப்பாங்க அவங்க கிட்ட இதெல்லாம் வச்சுக்கோங்க என் கிட்ட வேணாம்" என கூறிவிட்டு நகர போனவளின் கையை பிடித்தான் பிரகாஷ்.


"இங்க பாரு கவி நான் உன் கிட்ட விளையாட்டுக்கு பேசல, ரொம்ப நல்லா யோசிச்சு பார்த்து சீரியஸா பேசிகிட்டு இருக்கேன். இந்த ராகவி இந்த ப்ரகாஷுக்குத்தான் அதனால இந்த மாதிரி பேசுறத விட்டுட்டு என் கூட ஊரை சுத்த வான்னு கூப்பிட மாட்டேன், இந்த செமஸ்டர் ஒழுங்கா படிச்சு நல்ல ஸ்கோர் பண்ணனும், அப்படி கம்மியா எதுவும் வாங்குன பிச்சுடுவேன், இனி உனக்கு ஏதாவது உதவி வேணும்னா அந்த ஜொள்ளு வாயன் அஜய்கிட்ட கேட்காமல் என் கிட்ட கேளு" என கூறி அவள் கன்னத்தை தட்டி "வரட்டா" நாளைக்கு பார்ப்போம் என கண் சிமிட்டி கூறிவிட்டு ஸ்டைலாக தனது பைக்கில் ஏறி சென்றான்.

அவன் செல்வதையே பார்த்தவள்.. தலையை இரு பக்கமும் ஆட்டி விட்டு ஹாஸ்டல் நோக்கி சென்றாள்.


வீட்டிற்கு வந்த நிறை மதியை ஹாலில் அமர்ந்திருந்த வரதன்..

"மருமகளே.."

"சொல்லுங்க மாமா.."

"இன்னும் கல்யாணத்துக்கு ஒரு வாரம் தான் மா இருக்கு. நாளைக்கு நீயும் அருணும் புடவை, அவனுக்கு ட்ரெஸ் நகை எல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க.. உன் அத்தை இருந்திருந்தால் எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுருப்பா இந்நேரம் வீட்டுக்கே கல்யாண களை வந்துருக்கும் ம்ம்.. என்ன பண்றது எல்லாம் விதி!" என்று வருத்தமாக கூறினார்.

வரதன் கைகளை பற்றியவள் "வருத்தப்படாதிங்க மாமா.. நாங்க நாளைக்கு போய் கல்யாணத்துக்கு தேவையான எல்லாம் வாங்கிட்டு வந்துடுறோம், இப்படி வருத்தப்பட்டு கல்யாண சமயத்தில உடம்ப கெடுத்துக்காதிங்க ஏற்கனவே பிளட் பிரஷர் இருக்கு.. மனதை அமைதியா வச்சுக்கோங்க எல்லாம் நல்ல படியா நடக்கும்" என்றவளை பார்த்து ஒரு நிம்மதியான புன்னகையை சிந்தினார் வரதன்.

இரவு வேளையில் தோட்டத்தில் கல் மேடையில் அமர்ந்திருந்தவள் வீசிய காற்றின் குளுமையும், பூக்களின் மணமும் மனதிற்கு இனிமையை கொடுக்க கண்கள் மூடி அதை ரசித்து கொண்டிருந்தாள், அவள் அருகில் அழுத்தமான காலடி ஓசையில் கண் திறந்து பார்க்க.. அருணன் அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


அவனை காண முடியாமல் குனிந்து கொண்டவளின் அருகில் அமர்ந்தவன்..

"நாளைக்கு அப்பா நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போறத பத்தி சொன்னாரா..? "


"சொன்னாங்க அருண்" அவனை பார்க்காமல் கூற..

"ம்ம்.. "என்றவன் அவள் கரம் மேல் தன் கரத்தினை வைத்து "நாளைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு அதை முடிச்சுட்டு நான் நேர துணி கடைக்கு வந்துடுறேன், நீயும் அங்க வந்துடு ஏன்னா நான் இங்க வந்து திரும்ப உன்னை கூட்டிட்டு போனா ரொம்ப நேரமாகிடும் அதனால் தான் நேரா அங்க உன்னை வர சொல்றேன். நான் அப்படி வர லேட் ஆனால் எல்லாத்தையும் பார்த்து செலக்ட் பண்ணி பில் போட்டு வை நான் வந்ததும் பேய் பண்ணிட்டு அங்கையே சாப்பிட்டு வந்துடலாம்" என்க.

"சரி அருண் நீங்க சொன்ன மாதிரி அப்படியே செய்யலாம்."


"சரி.. இப்போ வா உள்ளே போகலாம் எவ்வளவு நேரம் தான் இங்க உட்கார்ந்துருப்பே..?" என்று அவளை அழைத்து கொண்டு உள்ளே செல்ல.. அவர்கள் செல்வதையே வெறித்து பார்த்து கொண்டிருந்தார் அந்த தோட்டகாரர் மணி.




நிலா வருவாள்...



நன்றி
மீனா வியனி




உங்களது கருத்துக்களை இங்கே பதியுங்கள் நண்பர்களே...👇👇👇



 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா -4


எப்போதும் போல் இன்றும் காலை ஆறு மணிக்கு எழுந்து தன்னை சுத்த படுத்தி கொண்டு, ப்ரோசனை அழைத்து கொண்டு தோட்டத்தை சுற்றி வர சென்றாள் நிறைமதி.


இன்று அருணனுடன் புடவை எடுக்க செல்வதை நினைத்து புன்னகைத்து கொண்டே வந்தவள், யார் மீதோ மோதி நிற்க, அங்கு அருணன் அவள் கீழே விழாமல் பிடித்து நிற்க வைத்து, "மதி காலைலேயே என்ன அப்படி பலமான யோசனை? "என அவள் முகத்தை ஆராய்ந்து கொண்டே கேட்க..


காலை ஓட்டத்தை முடித்து வேர்வை வழிய, வழிய அவள் முன் நின்று இருந்தவனை பார்க்க முடியாமல் வெட்கம் தடுக்க, ப்ரோசனை அங்கேயே விட்டுவிட்டு முகம் சிவக்க தன் அறை நோக்கி ஓடினாள்.


அவள் ஓடுவதை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த அருண் தலையை ஆட்டி தன்னை சமன் செய்து முன் செல்ல, அவனை போக விடாமல் முறைத்து, தன் கோர பற்களை காட்டி உறுமி கொண்டிருந்தது ப்ரோசன்.


அருண் அதை பார்த்து விழித்து கொண்டு நிற்க, தோட்டக்காரர் மணி வந்து ப்ரோசனை அழைத்து சென்றார்.மறுபடியும் அவன் முன் செல்ல மனம் தடுக்க, தோட்டக்காரர் மணியிடம் ப்ரோசனை அழைத்து வருமாறு கூறி சென்றிருந்தாள் மதி.


அறைக்கு வந்த மதி குளித்து முடித்து, வெள்ளை புடவையில் ஆங்காங்கே சிவப்பு ரோஜா பூ இதழ்கள் தூவியது போல் இருந்த புடவையை கட்டிக்கொண்டு, தன் நீண்ட கூந்தலை விரித்து, இரு பக்கமும் முடியை எடுத்து உச்சியில் சிறிய கிளிப் போட்டு, காதோரம் சிகப்பு ரோஜா வைத்து, அளவான அலங்காரம் செய்து கொண்டு, கீழே சென்றாள்.


வரதன் இருக்கையில் அமர்ந்து, ஒரு நாளிதழை வாசித்து கொண்டிருந்தார். "குட் மார்னிங் மாமா" புன்னகையுடன் கூறி அவர் எதிர் இருக்கையில் அமர்ந்து, அவ்வீட்டில் பதினைந்து வருடமாக வேலை பார்த்து கொண்டு இருக்கும் ராதாம்மா தந்த தேனீரை பருக ஆரம்பித்தாள்.


வரதன் அவள் முகம் மலர்ச்சியை பார்த்து, எப்பொழுதும் தன் மருமகள் இதே மலர்ச்சியுடன் இருக்க வேண்டும் என அவர் வணங்கும் பெருமாளிடம் வேண்டி கொண்டார்.. பாவம் அவர் அறியவில்லை அவர் பிரார்த்தனைக்கு ஆயுள் குறைவு என்று..!!


"மாமா அருண் இன்னும் ரூம விட்டு வரலையா..?"


"இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சாப்பிடாம கூட கிளம்பிட்டான் மா, உன்ன நம்ம கார்லா ஜவுளி கடைக்கு வரச்சொன்னான்" என கூறினார்.


"சரி மாமா நான் புடவை எடுத்துட்டு மதியம் காலேஜ்கு போறேன் , என் பிரண்ட்ஸ் எல்லாரையும் இன்வைட் பண்ணனும், கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சு நாள் தான் இருக்கு, ரெண்டு நாள் முன்னாடி நான் லீவு எடுத்துக்கிறேன்" என சொல்ல..


"சரி மா அப்டியே பண்ணு, மண்டபம், சாப்பாடு அப்புறம் அரசியல், தொழில் துறை நண்பர்களை எல்லாம் அருண் அழைப்பு கொடுக்கிறதா சொல்லி இருக்கான்" என இருவரும் திருமணத்தை பற்றி பேசி கொண்டே காலை உணவை சாப்பிட்டு முடித்தனர்.



உணவை முடித்து கொண்ட மதி தனது காலேஜ் பேகை எடுத்து கொண்டு "மாமா நான் போய்ட்டு வரேன், அருண் நேரா கடைக்கு வர சொல்லி இருக்கார்" என கூறி புன்னகையுடன் கை அசைத்து விடை பெற்று, வழக்கமா காலேஜ்க்கு செல்லும் காரில் புடவை கடைக்கு வண்டியை செலுத்துமாறு கூறினாள்.



ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு காரை விட்டு இறங்கி, அந்த பிரமாண்டமான துணிக்கடைக்குள் நுழைய, அங்கே வேலை பார்க்கும் மேனேஜர் ஓடி வந்து,


"குட் மார்னிங் மேடம் நீங்க வருவீங்கனு சார் இப்போ தான் கால் பண்ணி சொன்னாரு" என சொல்ல சிறு தலை அசைப்புடன் கேட்டுக்கொண்டு.. பட்டு புடவை இருக்கும் இரண்டாம் தளத்திற்கு மின் தூக்கியில் உள்ளே நுழைந்தாள்.

கல்யாணம் பட்டு புடவை பிரிவிற்கு வர , அதற்குள் அங்கே வந்த மேனேஜர் பணி பெண்களிடம் புடவை காண்பிக்குமாறு கூறி இருந்தார்.


நிறைமதி ஒவ்வொரு புடவையாக பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில், தனது தலை முடியை ஸ்டைலாக கோதி கொண்டு அவள் அருகே நெருங்கி "ஹாய் நிலா" என்றான் அவன்.


"ஆபீஸ் ஒர்க் முடிஞ்சுதா..?" என்ற மதி அவனிடம் இருந்து சற்று இடைவெளி விட்டு நிற்க, அந்த இடைவெளி பிடிக்காமல் இன்னும் அவளை நெருங்கி அவள் இடையில் கை வைத்து "என்ன நிலா நான் உனக்காக ஆபீஸ் ஒர்க்க விட்டுட்டு வந்து இருக்கேன், நீ என்னனா என்ன விட்டு தள்ளி நிற்கிற" செல்லமாக அவளை கடிந்து கொண்டு அருகில் இழுத்து நிற்க வைத்தான்.


அவனின் இந்த நெருக்கம் அவளை ஏதோ செய்ய, அவன் முகம் காண முடியாமல் நாணம் கொண்டவள், அவன் காட்டிய புடவை அனைத்திற்கும் 'ம்ம்.. ம்ம்..'என மட்டும் தான் தலை ஆட்டி வைத்தாள்.

அவன் மதியின் இடையை சுற்றியிருந்த கரத்தை விலக்காமல் இளம் ரோஜா வண்ண புடவையில், தங்க சரிகை இட்டு, அதே நிறத்தில் புடவை முழுவதும் கொடி போன்று பரவியிருந்த புடவையை காண்பித்து, அவள் காதில் "நிலா இந்த புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கும்" என ஹஸ்கி குரலில் கூற, மதி இன்னும் தலையை கீழே குனிந்து அதற்கும் 'ம்ம்..' என முணுமுணுத்தாள்.


அவள் செய்கை பார்த்து சத்தமாக சிரித்து, நிலா என அழைக்க.. மதி நிமிராமல் "என்ன "என கேட்டாள்.


அடுத்த புடவையை அவனே தேர்ந்தெடுத்து, "இந்த புடவை எதுக்கு தெரியுமா..?"

அவள் தெரியாது என்பது போல தலை அசைக்க..


மேலும் அவள் புறம் குனிந்து "இது நாம ரெண்டு பேரும் மட்டும் தனிமையா இருக்க போற நேரத்துக்கு.."என ஆழ்ந்த குரலில் கூறியவன் அவள் பதிலை எதிர் பார்க்காது.


"நான் வாஷ்ரூம் போய்ட்டு வரேன், நீ கீழே வெயிட் பண்ணு" என கூறி சுற்றும் முற்றும் பார்த்தவன் மின்னல் வேகத்தில் அவள் கன்னத்தில் முத்தம் பதித்து மறைந்தான்.


அவன் செய்கையில் ஒரு நிமிடம் உறைந்து நின்றவள், சுற்றி இருந்தவர்கள் அவளை பார்த்து புன்னகைக்க ஒரே ஓட்டமாக மின்தூக்கி உள்ளே சென்றவள் கீழ் தளத்திற்கு வந்தாள்.அவன் தந்து சென்ற முத்தத்தை நினைத்து தன்னை மறந்து நின்று கொண்டிருக்க, மதி பில் போடும் இடத்தில் இருப்பதை பார்த்த அருணன் , அவள் அருகில் வந்து கையில் இருந்து பில்லை வாங்க அது கூட தெரியாமல் அவள் அப்படியே நிற்க, அவன் பில்லை செலுத்திவிட்டு "மதி போகலாமா" என்ற குரல் கேட்டு நினைவு திரும்பி அவனை காண முடியாமல், "அருண் நான் காலேஜ் போறேன் டைம் ஆச்சு நீயே எல்லாத்தையும் வீட்டுக்கு எடுத்துட்டு போ" என கூறி தான் வந்த காரில் காலேஜ்கு சென்றாள்.


மதி தன்னை பார்த்து புதிதாய் வெட்க படுவதை நினைத்து சிரித்து கொண்டே.. தான் வந்த காரை வீட்டை நோக்கி பறக்க விட்டான்.


மதி கல்லூரியை அடைந்த சமயத்தில் மதிய உணவு ஆரம்பித்திருந்தது, தன் புத்தகத்தை எடுத்து கொண்டு, புன்னைகையுடன் கேன்டீன் நோக்கி சென்று இருக்கையில் அமர்ந்தாள்.

ராகவி வந்து அருகில் அமர்ந்து, "கியூட்டி அக்கா"என அழைத்தும் காதில் வாங்காமல் அவள் உலகத்தில் அவனுடன் சஞ்சரித்து இருந்தாள் மதி.

"ஹேய்.. கத்திரிக்கா எதுக்கு இப்போ கத்திட்டு இருக்க? " என கேட்டு கொண்டே அவள் அருகில் அமர்ந்தான் பிரகாஷ்.


ராகவி அவனை முறைத்து விட்டு, "கியூட்டி அக்கா "என அவள் கையை பற்றி உலுக்கினாள், "என்ன ராகவி இப்போ தான் வந்தியா?"என மதி கேட்க..

"சரியா போச்சுக்கா நான் வந்து பத்து நிமிஷம் ஆச்சு, நீங்க தான் ஏதோ கனவு கண்டுட்டு இருந்திங்க"செல்ல கோபத்தோடு கூறினாள்.


மதி வாய் திறக்கும் முன் பிரகாஷ் குறுக்கிட்டு "உனக்கு விஷயம் தெரியாத கவி.. உன் கியூட்டி அக்காவுக்கு இன்னும் ஐந்து நாளுல கல்யாணம்" என்றான்.


"ஐ.. கியூட்டி அக்காக்கு கல்யாணமா..!!"சந்தோஷத்துடன் அவளை நெருங்கி அணைத்து கொண்டாள் ராகவி.. அதை பார்த்த ப்ரகாஷிற்கு லேசாக பொறாமை எட்டி பார்த்தது..


"யாருக்கா அந்த லக்கி பர்சன்?" என கண் சிமிட்டி ராகவி கேட்க.. மதி சொல்வதற்கு வாய் திறக்க, அதே சமயத்தில் ராகவி போன் அடித்தது..


"அக்கா அப்பா கால் பண்றாரு பைவ் மினிட்ஸ்" என கூறி சற்று தள்ளி நின்று பேசிவிட்டு வந்தவள்.. மதியை நெருங்கி "அக்கா நான் அவசரமா ஊருக்கு போகணும், வரதுக்கு ஒரு வாரம் ஆகும்.என்னால உங்க கல்யணாதுக்கு வரமுடியாது சாரி அக்கா.."என அவள் கரத்தை பற்றி வருத்தமாக கூறியவள், தன் புத்தகத்தை எடுத்து செல்ல.. அவளை போக விடாமல் பிரகாஷ் தடுத்து நிறுத்தினான்.


"கவி என்னாச்சு ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க..? " என விசாரித்தான்.

"எங்க அப்பாக்கு உடம்பு சரி இல்ல பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க நான் இப்பவே போகணும்"என கூறி அடி எடுத்து வைக்க..


"இரு கவி" என அவளை நிற்க வைத்து, மதியிடம் "மதி நான் கவியை கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன்" என்று பிரகாஷ் சொல்ல, உடனே ராகவி "இல்ல நானே போறேன். இங்க பக்கத்துல தானே இருக்கு இரண்டு மணி நேரத்துல போயிரலாம்" என்க.


மதி ராகவியிடம், "ராகவி நீ பிரகாஷ் கூட போ அவன் உன்ன பத்திரமா கூட்டிட்டு போவான். அப்பாவுக்கு ஒன்னும் இருக்காது, நீ பயப்பிடாதே ஏதாவது உதவின்னா தயங்காதே உடனே கால் பண்ணு சரியா..? " என அவளிடம் கூறி விட்டு பிரகாஷை நோக்கி "நீ என் கார் எடுத்துட்டு போ" என்றாள்.

"இல்ல மதி நான் இன்னைக்கு கார்ல தான் வந்தேன்.. என் கார்லையே கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன், வா கவி போகலாம்" கூறி முன் செல்ல ராகவி தயங்கி மதியை பார்த்தாள்.


"போ ராகவி" என அவள் கை பற்றி அனுப்பி வைக்க, ராகவி ப்ரகாஷுடன் அவள் தந்தையை காண சென்றாள்.


நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் கடக்க.. அவர்கள் எதிர்நோக்கிய திருமண நாளும் அழகாக விடிந்தது, முதல் நாள் இரவு ரிசப்ஷன் கோலாகலமாக நடந்து முடிய, அதன் பிறகு அருணன் தனது நண்பர்களுக்கு பேச்சலர் பார்ட்டி ஏற்பாடு செய்திருக்க ஆட்டம் பாட்டம் என சிறப்பாக முடிந்தது.


அய்யர் மந்திரங்கள் ஓத அதை திரும்ப சொல்லிகொண்டு, தனது உள்ளம் கவர்ந்தவளின் வரவுக்காகா பட்டு, வேஷ்டி சட்டையில் ஆண்மையின் கம்பிரத்துடன் எதையோ சாதிக்க போவது போல் முகத்தில் தோன்றிய தேஜஸுடன் அவன் அமர்ந்திருக்க..

அவன் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்வது போல் இளம் வண்ண ரோஜா நிறத்தில், மெல்லிய தங்கம் ஜரிகை இட்டு, புடவை முழுவதும் அதே நிறத்தில் கொடிகள் படர்ந்திருப்பதை போல் அணிந்திருந்த புடவை நிறை மதிக்கும் பாந்தமாய் பொருந்தி, வானத்து நிலவு கீழே இறங்கி வந்தததோ என்னும் அய்யம் கொள்ளும் அளவிற்கு முகத்தில் பிராகசமும், நாணமும் போட்டி போட அன்ன நடையிட்டு வந்து அருகில் அமர்ந்தவளை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.


மதியோ அவனை நிமிர்ந்து பார்க்காமல் கீழே குனிந்து அமர்ந்திருந்தாள், பிறகு அய்யர் மந்திரம் கூறி மாங்கல்யத்தை எடுத்துகொடுக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க சுற்றத்தார் உறவினர் முன்னிலையில் மதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தனக்கு மட்டும் உரியவளாக அவளை மாற்றி கொண்டான் அவன்!!

தாலி கட்டிய பிறகும் தன்னை காணாமல் கீழே குனிந்து இருப்பவளின் காதருகே "நிலா.."என்று ஆழ்ந்த குரலில் அழைக்க, அப்போதும் அவனை நிமிர்ந்து பார்க்காது முகம் மட்டும் செவ்வனமாய் சிவப்பதை கண்டு சிரித்து கொண்டவன்.


"ஏய்.. இப்போ நீ என்னை நிமிர்ந்து பார்க்கல எல்லார் முன்னாடியும் முத்தம் கொடுத்துருவேன்" என்று மிரட்ட.. அவன் பேச்சில் பயந்து அவன் முகம் பார்க்க அவ்வளவு நேரம் வெட்கம் மட்டுமே குடி கொண்டிருந்த வதனத்தில் குழப்ப ரேகை சூழ்ந்து கொண்டது.அவள் முகம் மாற்றத்தை உணர்ந்து கொண்டவனோ அவளை பார்த்து கேலியாக இதழ் வளைத்தான்.


பிறகு சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்திலும் உணர்ச்சிகள் இல்லாமல் இயந்திர கதியில் கலந்து கொண்டாள். அனைத்தும் முடிந்து வீட்டிற்கு புதுமண தம்பதிகளை அழைத்து வர உறவினர்கள் அனைவரும் விடைபெற்றிருந்தனர்.


ஏதோ யோசனையோடு பால்கனியில் நின்றிருந்தவளின் சிதனையை களைக்கும் விதமாக ப்ரோஷன் குறைக்க.. அங்கிருந்தே கீழே எட்டி பார்த்தாள், அங்கு கண்ட காட்சியில் மேலும் அவளுக்குள் குழம்பியவளுக்கு தலை வலிப்பது போல் இருக்க நிற்க முடியாமல் தனது அறைக்கு சென்று மெத்தையில் படுத்து கண் மூடி கொண்டாள்.


நேரம் கடந்ந்து இரவை தொட.. பெண் இல்லாத
அவ்வீட்டில் சமையல் வேலை செய்யும் ராதா அம்மாவே மூத்தவராக இருந்து அவளுக்கு அலங்கரித்து, அறிவுரை கூறி பால் சொம்பை கையில் கொடுத்து அனுப்பி வைத்தார்.


பயத்தோடு ஒவ்வொரு அடியாக எவ்வளவு மெதுவாக எடுத்து வைக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக எடுத்து வைத்தும் அவன் இருக்கும் அறை வந்துவிட, சில நிமிடங்கள் அறையின் முன் கண் மூடி நின்றவள், தன்னை திடப்படுத்தி கொண்டு கதைவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

உள்ளே சென்றவள் சுற்றி முற்றி பார்க்க அங்குள்ள ஒரு இருக்கையில் "வெல்கம் மை டியர் பொண்டாட்டி நிலா.. "என்று சொல்லி கால் மேல் கால் போட்டு கொண்டு தனது ஆறடி உயரத்தை சுருக்கி ராஜா தோரணையில் அமர்ந்திருந்தவனை கண்டவள்..

ஒட்டு மொத்த தயிரியத்தை திரட்டி "யார் நீ" என்று கேட்க..


அவன் இரவில் மட்டுமே தன்னை வெளிப்படுத்தி வேட்டையாடும் பிரம்ம ராட்சசனை போல்.. ஹா...ஹா... அந்த அறையை அதிரும் வண்ணம் சிரிக்க..

அதே சமயத்தில் அவர்கள் அறை கதவும் உடைந்துவிடும் அளவுக்கு தட்டும் சத்தம் கேட்டது.


நிலா வருவாள்..!!

ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டோம், படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

போன பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

கருத்துத் திரி👇

 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா-5


அவள் "யார் நீ" என்றதும்... அந்த அறையே அதிரும் வண்ணம் ராட்சசன் போல் சிரிக்க, வெளியில் அவர்கள் அறைக் கதவு உடைப்பது போன்று பலம் கொண்ட மட்டும் தட்டும் சத்தம் கேட்டது.


"நான் யார்னு உன் அருமை மாமனாரு சொல்லுவாரு, அவர் தான் இப்படி தட்டிகிட்டு இருக்காரு போய் திற" என்றான் அவன்.

நிறை மதி அவனை முறைத்துவிட்டு, கதைவை திறக்க, வரதனும், அருணனும் உள்ளே பிரவேசித்தவர்கள்..

அங்கு கால் மேல் கால் போட்டு இருக்கையில் நன்றாக சாய்ந்து எதுவும் நடவாதது போல், பயமின்றி அமர்ந்திப்பவனைக் கண்ட வரதனுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ரௌத்திரம் வந்தததோ "அருச்சிகா.." என்று கத்திக் கொண்டுஅருகில் வேகமாகச் சென்றவர்.

அவன் சட்டைக் காலரைப் பற்றி தூக்கி.. "ராஸ்க்கல் திரும்பவும் என் குடும்ப நிம்மதிய கெடுக்க வந்துட்டியாடா, கொலைகார பாவி" என்று கன்னத்தில் அறையப் போக அவர் கையைப் பற்றி தடுத்து கீழே தள்ள, தடுமாறி கீழே விழப் போனவரை "அப்பா, மாமா" என்ற கூவலோடு அருணும், மதியும் தாங்கிப் பிடித்தனர்.


"என் மேலையே கையை வைக்கிறியாயா கிழவா, நான் யாரு தெரியும்ல இப்போ உன்னை விட பல ஆயிரம் கொடி சொத்துக்கு அதிபதி கிரேட் அருச்சிகன்.." என கர்ஜித்தான்.


"த்து.. நீ பல கோடி சொத்துக்கு அதிபதியா இருந்தா எனக்கு என்னடா, நீ செத்தா எனக்கு என்ன டா, ஏன் டா என் மகன் வாழ்க்கைகுள்ளையும், மருமகள் வாழ்க்கைகுள்ளையும் குறுக்க வந்தே.. இவனை இந்த வீட்லையே அடைச்சு வச்சுட்டு, திருட்டுத் தனமா தாலி கட்டிருக்கே.. உனக்கு வெட்கமாக இல்லை" என்று கூறினார்.

"நான் ஏய்யா வெட்கப்படணும்.. அவனுக்கு ஐந்து நிமிடம் முன்னாடி பிறந்தவன், நான் இருக்கும்போது எனக்கு கல்யாணம் பண்ணாமல், அவனுக்கு பண்ணி வைக்க பார்த்த நீ தான்யா.. தூக்குல தொங்கனும்"என்று அருச்சிகன் பதிலுக்கு சீறினான்.

"இதான் டா உன் புத்தி.. பெத்தவன் அப்படின்ற மரியாதை இல்லாமல் சாக சொல்றியே.. நீ எல்லாம் எனக்கு மகனே இல்லை டா.. அவனை அடைச்சுப் போட்டுட்டு தாலி காட்டுனா இந்தக் கல்யாணத்தை நான் ஏத்துக்கனுமா.. இப்போவே அந்த தாலிய அறுத்து உன் முகத்துல எறிஞ்சுட்டு, நாளைக்கே என் மகன் அருணனுக்கும், மதிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் பாரு டா" என்று அவர் வேகமாக மதியை நெருங்க..


அதில் கோபம் கொண்ட அருச்சிகன்.. " என்னைத் தாண்டி ஒரு அடி எடுத்து வச்சு என் பொண்டாட்டி பக்கத்துல போனாலும் பெத்தவருன்னு கூட.. பார்க்காமல் தலையைத் துண்டாக்கிருவேன்" என்று கண்களில் கனல் கக்க கூற..


"கொலை கார பாவிக்கு கொலை பண்ற புத்தி தானடா வரும், எங்க மேல அப்படி என்ன டா உனக்கு வன்மம், எங்களை விடுடா அந்த பொண்ணு என்னடா பண்ணுச்சு, அது வாழ்க்கையை கெடுக்க பார்க்குறியே டா பொறுக்கி நாயே" என்று திட்டியவர்..


கண்கலங்க நின்ற மதியின் அருகில் சென்று, "மதிமா இந்த மாமாவ மன்னிச்சுடுமா, இப்படி உன் வாழ்க்கையை பலி கொடுத்துட்டேன் டா" கண்கலங்க கூறினார் வரதன்..


"மாமா இவரு யாரு .." உணர்ச்சியற்ற கேட்டாள் நிறைமதி.



"இவனும் என் புள்ளை தான் மா, இவனும் அருணனும் ரெட்டை பிறந்தவங்க, இவன் ஒரு பொறுக்கி, குடிகாரன் மா.. என மகனைப் பற்றி நடத்தை சான்றிதழே கொடுத்தார்.


"நீங்க ஏன் மாமா என்கிட்ட முதலையே சொல்லல" உணர்ச்சி அற்ற குரலோடு கேட்டாள்.

"இவனை நானே தலை முழிக்கிட்டேன் மா,அப்புறம் எப்படி மா இவனைப் பத்தி உன்கிட்ட சொல்லறது.. இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை மா.. இந்த தாலியைக் கழட்டி அவன் முகத்தில வீசிட்டு வாம்மா.. உனக்கு புது வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறேன்."


"ச்சு.. ச்சு.. என்ன பொண்டாட்டி அதான் உன் மாம... னாரு சொல்றாருல, கழட்டி கொடு மா கேலியாகக் கூறியவன் முகம் அடுத்த நிமிடமே ஜிவு ஜிவு என்று சிவக்க "தாலில கையை வச்சு பாருடி அப்புறம் நீயும் உயிரோடு இருக்க மாட்டே அந்நியன் விக்ரம் போன்று பேசியவனை பார்த்து சற்று நடுங்கித் தான் போனாள் பேதையவள்!


அருணன் அருகில் சென்று "என்னடா நல்லவனே..! இத்தனை வருஷம் சந்தோசமா இருந்துட்டியா,இனி இருக்க மாட்டே, ஏன்னா உன்னோட மிகப் பெரிய சந்தோஷமான அவளையே நான் பறிச்சுக்கிட்டேன், இனி உனக்கு சொந்தமான ஒவ்வொன்றையும் நான் பறிப்பேன் டா" என அமைதியாக ஆழ்ந்த குரலில் அவன் காதருகில் கூறினான்.


பிறகு மதியை தனதருகில் பிடித்து இழுத்து நிறுத்தியவன், "இவளுக்கு இந்த ஜென்மத்துல புருஷன்னு ஒருத்தன் இருந்தான்னா, அது இந்த அருச்சிகன் மட்டும் தான், இதை மீறி அப்பனும், மகனும் எங்களுக்கு இடையில் வர பார்த்தீங்க காரியம் பண்ண எலும்பு கூட மிஞ்சாத அளவுக்கு செஞ்சுடுவேன்" அழுத்தமாக கூறினான்.


அருணனோ "இங்க பாருடா என் மேல கோபம் இருந்தால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு, ஆனால் மதிய எதுவும் கஷடப்படுத்திடாதே" என்க..

வரதனோ.. "என்ன டா மிரட்டுறியா.. எதுவாக இருந்தாலும் விடியட்டும் உன்னை வச்சுக்கிறேண்டா என்றவர், மதி வாம்மா போவோம்" என்று அழைத்தார்.


"யோவ்.. அறிவுகெட்ட வரதா நீயும் கல்யாணம் பண்ணி எப்படியா ரெண்டு பிள்ளைகளை பெத்தே அதுவும் ட்வின்ஸ், இன்னைக்கு எனக்கும் அவளுக்கும் நைட் மேட்ச் இருக்கு அது தெரிஞ்சும் அவளைக் கூப்பிடுற வெளிய போயா.."என்றான்.


அவன் பேசியதில் கோபம் பொங்க மதி பார்க்க.. வரதனோ "ச்சீ.. அப்பன் கிட்ட பேசுற மாதிரி பேசுறியா டா.." முகத்தை சுளித்துக் கொண்டு கூற..

நீ அப்பன் மாதிரி நடந்துகிட்டியாய.. வரதா.. என் பொண்டாட்டிய முதல் இரவு அதுவுமா பிரிக்க பார்க்குறியே வெளிய போயா.. "என்க..


வரதனை மரியாதை இல்லாமல் விழிப்பதை பார்த்து பொறுக்காதவள்.. "மாமா.. நீங்க போங்க நான் சமாளிச்சுகிறேன்" என்றாள் மதி.

அவளை மனம் இல்லாமல் வரதன் விட்டுச் செல்ல.. அருணனோ அவளை இயலாமையோடு பார்த்துவிட்டுச் சென்றான்.


அவர்கள் சென்றதும் கதைவை தாழ்பால் போட்டவன் "என்ன நிலா நைட் மேட்ச ஆரம்பிச்சுடலாமா..? " கண் சிமிட்டிக் கேட்க..


"உன்னோட பொறுக்கித் தனத்தை எல்லாம் வேற எங்கையாவது வச்சுக்கோ, என்கிட்ட வேண்டாம்.நீ என் கழுத்துல தாலி தாண்டா கட்டிருக்கே ஆனால், அருணன் எனக்கு முத்தாமே.."என்பதற்குள் அவள் குரல் வலையைப் பிடித்தவன்..


"இனி ஒரு தடவை அவன் பேரு உன் வாயில வரக்கூடாது, வந்தா என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது" என உதறியவன்.

அவள் அருகில் கீழே அமர்ந்து.. "டாக்டர்க்கு படிச்சுக்கிட்டு இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கியே பேபி.."

"அவன் என்னைக்காவது உன்னை நிலான்னு கூப்பிட்டுருக்கானா.."என்றவனை.


குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்து "அப்படின்னா அது நீயா..? "


"இப்பவாவது பல்பு எரிஞ்சதே.. அன்றைக்கு ஹோட்டல்க்கு வந்திங்களே ரெண்டு பேரும் , அவன் உனக்கு ப்ரொபோஸ் பண்ண போற சமயத்தில் ஒரு முக்கியமான கிளைன்ட்ட கால் பண்ண வச்சேன், அவனும் அந்த கால அட்டென்ட் பண்ண போய்ட்டான், அவன் போன் சைலென்ட்ல இருந்ததால உனக்கு சத்தம் கேட்கல, அப்போ உனக்கு இந்த மோதிரத்தை போட்டு ப்ரொபோஸ் பண்ணது நான் தான், நீ பார்த்து மயங்குன கண்ணு இந்த கண்ணதான், நீ உணர்ந்தது அவன் உருவம் மாதிரியே இருக்கின்ற என்னைத்தான்" என்றவன்

"சும்மா சொல்லக்கூடாது நல்லாவே கிஸ் அடிச்ச.."என்றவனை முறைத்தாள் மதி.


"அப்புறம், நீ அன்னைக்கு கனவுன்னு நினைச்சுகிட்டு இருந்தியே ஒரு ரொமான்டிக் சீன் அது எல்லாம் ரியலா நடந்ததுதான், நீ கண் விழித்து புலம்பும்போது, கட்டிலுக்கு பின்னாடி தான் இருந்தேன்" என்றதும்.


நிறை மதிக்கு கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விரிய.. "நீ எப்படி வீட்டுக்குள்ள வந்த? " பதட்டத்தோடு கேட்டாள்.




ஹா...ஹா என்று சிரித்தவன் "என் வீட்டுக்குள்ள வர்றது எனக்கு என்ன கஷ்டம்."


"அப்போ அன்னைக்கு துணிகடைக்கு வந்தது..? "


"அதுவும் அடியேன் தான்.. அவனை ஆபீஸ்ல லேட் பண்ண வச்சு, நான் தான் உன் கூட இருந்தேன், உனக்கு எல்லார் முன்னாடியும் முத்தம் கொடுத்ததும் நான் தான்" என்றான் அமர்த்தலாக..



"இன்னொரு முக்கியமான விஷயம், நான் எப்படி அருண் இடத்துக்கு வந்தேன்னு நீ தெரிஞ்சுக்கணுமே, சிம்பிள் பேபி உன் ஆசை மச்சான் பேச்சலர் பார்ட்டி முடிச்சுட்டு தள்ளாடிகிட்டே வந்தானா கோழி அமுக்கிற மாதிரி.. அமுக்கி யாருமே அதிகம் போகாத ரூம்ல அடைச்சு வச்சுட்டேன் எப்படி "என்றவன்..


"ஆனாலும், பரவாயில்லை பேபி என்னைக் கண்டுபிடிச்சுட்ட, இதோ இந்த தழும்பை வச்சுதானே என்னை அருணன் இல்லைன்னு கண்டுபிடிச்ச" என்று தன் புருவத்தின் மேல் உள்ள வெட்டு தழும்பைக் காண்பித்தான்.

"நீ என்னை துணிக் கடையிலையே கண்டு பிடிச்சிருப்பேன்னு நினைச்சேன், நீ வெட்கப்பட்டுகிட்டே தலை குனிந்திருந்ததால் முடியாமல் போச்சு, பாவம் பேபி நீ என்றவன் ஆனாலும் அந்த வெட்கம் உனக்கு அழகா இருந்தது" ஆழ்ந்த குரலில் கூறினான்.



"உங்க குடும்ப பிரச்சனையில, என்னை ஏன் இப்படி பலிகடா ஆக்குனிங்க" என மதி கேட்டாள்.


"ஏன்னா அருணன் ஆசைப்பட்டது எதுவும் அவனுக்கு கிடைக்கக் கூடாது."


"அதுக்கு நீங்க கல்யாணத்தை நிறுத்திருக்கலாமே, ஏன் என் கழுத்துல தாலி கட்டுனிங்க..? "


"அவனுக்கு பிடிச்ச பொருளை, அவன் முன்னாடியே உரிமை கொண்டாடுறதே பார்த்து அவன் துடிக்கனும் அதுக்குத்தான் வக்கிரமாக" கூறினான்.


"ச்சீ... ஏன்டா உங்களுக்கு எல்லாம் ஒருத்தனை பழி வாங்குறதா இருந்தா புராண காலத்துல இருந்து இப்போது வரைக்கும் பொண்ணுங்க மேல தான் கை வைப்பிங்களா டா, வெட்கம இல்லை."


"என்ன டி.. ஓவரா பேசுற.. இந்த கிளாஸ் எடுக்கிறது எல்லாம் அந்த அருண் பைய்யனோட நிறுத்திக்கனும், என் கிட்ட வேற விசயத்தைப் பற்றி லெக்சர் எடுத்தா போதும்" கண் சிமிட்டிக் கூறி, அவள் இடையோடு கை கொடுத்து இழுத்து, அவள் மலர் இதழ்களோடு தன் வன்மையான இதழ்கள் கொண்டு சிறை செய்தான்.


அவன் பிடியில் இருந்து விலக திமிறியவளை வன்மையாக அடக்கியவன் சில நிமிடங்கள் கழித்தே விடுவித்தான்.. அவன் இவ்வாறு நடந்து கொண்டது பொறுக்காது அவனை அடிக்க கையை ஓங்க.. அதைப் பற்றியவன் முகம் சிவக்க.. "என்ன டி ஏதோ பிடிக்காத மாதிரி நடிக்கிற, அன்னைக்கு நல்லாத்தானே ஒத்துழைச்சே" என்று கேலியாக கூறினான்.

அவன் பிடியிலிருந்து கையை உருவிக் கொண்டவள்.. "நீயெல்லாம் மனுஷனா இருந்தால் உன்கிட்ட பேசலாம், அதான் மாமா சொன்னாரே கொலைகாரன், பொறுக்கி, குடிக்காரான்னு "என்று வார்த்தையை விட்டாள்.

அதில் மேலும் கோபம் கொண்டவன், "நிலா.." என்று அடிக்க கையை ஓங்க.. அவன் அடித்துவிடுவானோ என்ற பயத்தில் கண்கள் மூடி நின்றவளைப் பார்த்ததும் "ச்சே.." என்று கையை உதறி "இனிமேல் ஒரு வார்த்தை உன் வாயில் இருந்து வந்துச்சு கொன்னுடுவேன் டி " என்று போய் மெத்தையில் படுத்துக் கொண்டான்.


ஒரு மூலையில் மடங்கி அமர்ந்த மதி.. "நான் யாருக்கு என்ன பண்ணேன், ஏற்கனவே, நான் யாருன்ற பாதி தெரியாமல் இருக்கேன், இவன் வேற எங்கிருந்தோ வந்து கொஞ்சம் இருந்த நிம்மதியையும் கெடுக்க பார்க்குறான்னே ராட்சசன்.." என திட்டி தீர்த்தவள், தலை வலிக்க ஆரம்பிக்க அப்படியே கண்கள் மூடி தூங்க ஆரம்பித்தாள்.


காலையில் கண்விழித்த நிறை மதி எழ முயற்சி செய்ய.. அது முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள்.ஏனென்றால் அருச்சிகன் அவளை இறுக்கி அணைத்தவாறு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.


'நான் அங்க தானே தூங்குனேன்.. இங்க எப்படி வந்தேன்..' அவன் முகத்தைப் பார்த்து 'ஒரு வேளை இவன் தூக்கிட்டு வந்துருப்பானோ, அப்படியாகத்தான் இருக்கும் பொறுக்கி ராஸ்க்கல், நல்ல மலை மாடு மாதிரி இருக்கான், கையைக் கூட தூக்க முடியல' முணுமுணுத்துக் கொண்டே மூச்சு வாங்க அவன் கையை பிரித்து மெத்தையில் போட்டவள், 'இனி இந்த பொறுக்கி ராஸ்க்கல் இருக்கிற வீட்ல இருக்க கூடாது, மாமாகிட்ட சொல்லி ஹாஸ்டலுக்கு போய்டணும்' என முடிவு எடுத்துக்கொண்டவளாக படுக்கையில் இருந்து எழுந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.


குளித்து விட்டு வந்த மதி, வீட்டில் இருந்தால் இவன் முகத்தைக் காண வேண்டும், கல்லூரிக்குச் சென்று விடலாம் என நினைத்து சாதாரண காட்டன் புடவையில் கிளம்பி கண்ணாடி முன் நின்று பொட்டு வைத்துக் கொண்டிருந்தவளின் இடையை இரு வன் கரங்கள் அணைத்தது, ஒரு நிமிடம் அதிர்ச்சியில் நின்றவள் பின் சுதாரித்து அவன் கரத்தை பலம் கொண்டு மட்டும் விலக்க போராடியளை பார்த்து சிரித்தவன் "ஏன் இப்படி முயற்சி பண்ற, நீ என்னைக்கும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது" என்றவன் அவளைத் திருப்பி அருகில் இருந்த குங்கும சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து வைக்க போனவனின் கையை தட்டி விட.. அந்த குங்குமம் அவன் மேல் சிதறி விழுந்தது.


அவள் செய்கையில் அவளை உறுத்து விழித்து பார்க்க, அதில் நடுங்கியவள் "சா.. சாரி தெரியாமல் பண்ணிட்டேன்" என்று துடைக்க சென்றவளின் கை பற்றி தடுத்தவன், திரும்பவும் குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்துவிட்டு.


"இதை நான் செத்த பிறகு கீழே தட்டிவிட்டுக்கோ, இல்லை உனக்கு பிடிச்சவனைக் கூட வச்சுவிட சொல்லு,நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உன் வகிட்டில இந்த குங்குமம் இல்லாமல் இருக்க கூடாது" எனக் கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.

அவன் பேச்சில் அதிர்ச்சியில் உறைந்து நின்றவள், நேரமானதை உணர்ந்து கீழே சென்றாள்.


அங்கு அருச்சிகன் சாப்பாட்டு மேஜையில் இருக்கையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்க, அப்போது வரதனும், அருணனும் ஆஜராகினர்.

அவனை முறைத்துக் கொண்டே வரதன் இருக்கையில் அமர.. அருணனோ மாடிப் படிகளையே பார்த்துக் கொண்டிருக்க.. அவன் எதிர்பார்த்தது போல் மதியும் இறங்கி வர அவன் முகம் பிரகாசமாவதைக் கண்ட அருச்சிகன், "ராதாம்மா, நல்லா நல்லி எழும்பா எடுத்து சூப் வைங்க.. நைட் மேட்ச் ஆடி உடம்பு எல்லாம் டயர்ட் ஆயிடுச்சு" என கையை மேலே தூக்கி சோம்பல் முறிக்க, அருணனின் முகம் தொங்கி போனது.


மதியோ மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு 'மற்றவர்கள் முன்னால் அவனிடம் சண்டையிட்டால் அதற்க்கு ஏதாவது இட்டு கட்டி கூறுவான்' என்பதை உணர்ந்தவள்.. வரதனின் அருகில் வந்து "மாமா நான் ஹாஸ்டலுக்கு போய்டலாம்னு இருக்கேன்" என்றாள்

"என்னமா சொல்ற, இந்த பொறுக்கி ராஸ்கலுக்கு பயந்துகிட்டு, நீ ஏன் மா ஹாஸ்டலுக்கு போகனும், அவன் இந்த வீட்டை விட்டு வெளில போகட்டும்."


"எல்லார் வீட்லையும் மருமகளைத்தான் வெளில அனுப்ப பிளான் போடுவாங்க. ஆனால், இந்த வீட்ல மட்டும் தான் மகனே அனுப்ப பிளான் பண்றிங்க என்ன ஒரு புரட்சிகரமானா குடும்பம்"கேலியாக கூறினான் அருச்சிகன்.

"உன்ன மாதிரி ஒருத்தனைப் பெத்தா புரட்சி பண்ண வேண்டியதாதானே இருக்கு"என்று வரதன் கூற..


"மாமா எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்" என்று மதி கிளம்ப..


"மை டியர் நிலா... இன்னும் பேபியாவே இருக்கியே, நீ மட்டும் ஹாஸ்டலுக்கு போய்த்தான் பாரேன், அங்கையே வந்து குடும்பம் நடத்துவேன் அப்புறம் உன் அருமை மாமானாரு மரியாதை காத்துல பறக்கும் வசதி எப்படி..? "என்க


"இங்க பாரு அருச்சிகா தேவை இல்லாமல் பிரச்சனை பண்ணாதே.. ஒழுங்கா உன் ரூம்க்கு போ" என்று அருணன் சமாதானம் பேச..

"என்னடா வரதன் மகனே.. சமாதானம் பேசுறியா.. ரொம்ப சந்தோசமாக இருந்துட்டெல்ல, இனி இருக்க மாட்டே" என்று கூறவும் அருணன் போன் ஒலி எழுப்பவும் சரியாக இருந்தது.


அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் அந்த பக்கம் கூறிய செய்தியில் அதிர்ச்சியோடு எப்போ, எப்படி நடந்துச்சு உடனே வர்றேன் என்று கூற..

அருச்சிகனோ "ஹா.. ஹா.. "என்று சிரிக்க அனைவரும் அவன் சிரிப்பை பயத்தோடு பார்த்தனர்.



நிலா வருவாள்..!!

ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

போன பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

கருத்துத் திரி👇


 
Status
Not open for further replies.
Top