All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீராவின் ‘கரை சேர்ந்த விண்மீன்’ - கதை திரி

Status
Not open for further replies.

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன் 18

💛 தனிமைக்கு
துணையென
உன்னை அழைத்தேன்..
ஆனால் ஏனோ
உன் நினைவுகளை
அளித்து சென்றாய்
எனக்கு..💛

"நீங்க மேல ஜாலியா நின்னுட்டு சீக்கிரம் வான்னு கூப்பிடுறீங்க..எல்லாம் உங்களுக்கு கால் நல்லா இருக்க திமிரு..கல்ல தூக்கி போடுறேன் பாருங்க..அப்புறம் தெரியும்.."

அவன் வருவதற்குள்..அவன் பேசிய மெதுவான குரலிற்கே பல மடங்கு சத்தமாய் பேசி விட்டு மேலே ஏறப்போனவள் ஏதோ தோன்ற சுற்றி பார்க்க அங்கு "ஆஷி டேடி..பேயி.." என மேலிருந்து எட்டிபார்த்தவண்ணம் நின்றிருந்த அனு உட்பட வீட்டில் இருந்த அனைவரும் பல குழப்ப இரேகைகள் முகத்தில் படர நின்றிருந்தனர்.

சனா அருகில் வந்திருந்த ஆதிஷ் சுற்றியிருந்த லதா நந்தினி பாட்டி வள்ளி மற்றும் அனுவை கவனித்து விட்டு..நிலைமை கைமீறியதை உணர்ந்து கொண்டான்.

மெதுவாக சனா அருகில் வந்து குனிந்து.."சனா நீ எதுவும் பேச கூடாது.." என்று விட்டு பெரிதாய் அங்கிருந்தவர்களை பார்த்து முழித்து கொண்டிருந்தவளை பதிலுக்காக பார்த்தான்.

அவளும் தலையை அவசர அவசரமாக டிங் டிங் என ஆட்ட.. அவளை ஒரு சந்தேகமாகவே பார்த்து விட்டு..அங்கு நின்றிருந்த லதாவின் பக்கமாய் திரும்பினான் ஆதிஷ்..

"ஆன்ட்டி இவ.."

"இவ உனக்கு நிச்சயம் பன்னிருந்த பொண்ணு தானபா ??" என்று லதா கேட்க..

"இல்ல ஆன்ட்டி இவ.."

"ஆமா அத்தை.. நான் சனா..நீங்க கூட வந்தீங்கலே அன்னைக்கி பொண்ணு பார்க்க வந்தப்போ.. பேசிட்டு இருக்கப்போ நாம கூட இனிப்பா முறுக்கு அம்மா செஞ்சது சாப்பிட்டோமே.. " பேச வேண்டாம் என்றதற்கே பல மடங்காகவும் அவருக்கு சந்தேகம் துளியேனும் வருவதற்கு கூட விடாது விளக்கமாய் கூறி முடித்திருந்தாள் சனா.

ஆதிஷ் செய்வதறியாது திகைத்து நிற்க.. லதா மென்னகை படர அவள் அருகில் வந்தார்.

"என்னமா இங்க..அய்யோ கையில எப்படி அடிபட்டது..ஆதிஷ் நீ முதல்ல கூட்டிட்டு போய் மருந்து போட்டு விடு..நந்தினி அண்ணா ரூம்க்கு அந்த மருந்து பாக்ஸ எடுத்து கொண்டு போய் கொடு..போமா..ஆதிஷ் கூட்டிட்டு போ.."

ஆதிஷ் அவளை ஒரு முறை முறைத்து விட்டு தட தட என படிகளில் ஏறி மேலே போக நந்தினியுடன் வளவளத்துக்கொண்டே அவனை பின்தொடர்ந்தாள் சனா.

"எங்க ஊருலயே டைகர் கேங்னா தெரியாத யாருமே இல்லையே.."
பேசிக்கொண்டே ஆதிஷ் அறைக்குள் நுழைய போனவள் முகத்தில் தடார் என கதவு வந்து அடைக்க..மூக்கை தடவிக்கொண்டே நந்தினியை பார்த்தாள்.

"என்ன நண்டு இப்படி பன்னுறாங்க.."

"நண்டுவா.."

"ஆமா நானும் நீயும் ப்ரன்ஸ்ல..சரி அடைச்சிட்டாங்க பாரு.." சனா கூறிக்கொண்டே கதவு பிடியில் இருந்த சிறு துளை வழியே கண்ணை வைத்து பார்க்க..அவள் செய்கையில் வாய்விட்டு சிரித்த நந்தினி.."அண்..அது உள்ள நீங்க போங்க அண்ணா ஏசாது..நான் மருந்து எடுத்திட்டு வாரேன்.." என்று விட்டு சென்றாள்.

"நண்டு.. நீ அண்ணின்னே கூப்பிடு என்ன டன்.." அவளை பார்த்து கட்டை விரலை உயர்த்தி சனா கூற அவளும் தன் தடுமாற்றத்தை சனா கண்டு கொண்டதில் சிறு தயக்கம் படர சரி என தலையசைத்து விட்டு சென்றாள்.

அவள் சென்ற பின் சனா கதவை திறக்க போக.."ஏய்..." என ஒரு குரல் பின்னால் ஒலித்தது.

குரலிலே அது யாரென அறிந்து கொண்ட சனா..இத எப்படி மறந்தோம் என திரும்பி நின்றாள்.

முழங்கால் வரை குட்டி ஷார்ட்ஸும் குட்டி கையில்லாத சட்டையும்..தலையில் ஒரு பக்கமாய் முடியை சேர்த்து கட்டியவண்ணம் இடுப்பில் கைவைத்து முறைத்து நின்றிருந்தாள் அனு.

அவளது முடியை பார்த்து சிரிப்பு வர சிரிக்க ஆரம்பித்து விட்டாள் சனா.

"ஏய்..சியிக்காய.." உறுமலுடன் ஒலித்தது குட்டி குரல்.

"ஹாஹா அதென்ன உன் தலையில குடுமி.." மீண்டும் சிரித்தாள் சனா.

"ஆஷி டேடிடிடிடிடிடி.."

"நான் ஒன்னும் உன் டேடிக்கு பயமில்ல..எங்க வர சொல்லு உன் டேடி கண்ண எடுத்து கழுதைக்கு டின்னருக்கு போடுறன்.." என்று விட்டு சனா அறை கதவு பக்கம் திரும்ப

"டேடி யூம் போவாத நீ.."

"உன் டேடிய தூரத்தில பார்த்தாலே முடில இதுல நான் யூம் வேற பன்னி பாக்கவா..."

"ஏய்ய்ய்ய்.." சத்தமிட்டவண்ணம் பாய்ந்து வந்து சனாவின் முடியை பிடித்திருந்தாள் அனு.

"ஏய் பிசாசு விடு..வலிக்கிது.." அவளுடன் சனா போராட இவர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்திருந்த ஆதிஷ் தலையில் அடித்துக்கொண்டு..

"ஸ்டாப் இட்.." என்று சத்தமிட ஆனால் அனுவினதும் சனாவினதும் வீர சண்டை ஓசையில் அது யார் காதிலுமே விழாமல் மறைந்தே போனது.

அனுவை கஷ்டப்பட்டு தூக்கி இழுத்து என ஆதிஷ் பிரித்து எடுக்க இருந்தும் சனாவின் ஒரு நாலு முடியை பிடுங்கிக்கொண்டே தான் வந்தாள் அவள்.

"அனு பாட்டிகிட்ட போ.." கோபமாய் ஆதிஷ் கூற மறு பேச்சு இன்றி சனாவை முறைத்து விட்டு கையிலிருந்த முடியை உப் என ஊதி விட்டு அங்கிருந்து ஓடினாள் அனு.

அவள் கையிலிருந்து நலுவிய முடியை அப்போதுதான் கண்ட சனா.." என் முடி.." என அவள் பின்னால் ஓட போக..அவளை ஒரே இழுப்பில் அறைக்குள் இழுத்து கதவை அடைத்தான் ஆதிஷ்.

"அறிவு என்றது கொஞ்சமாவது இருக்கா உனக்கு.."

"உங்களுக்கு இல்லன்னு எனக்கும் இல்லன்னு நீங்க எப்பிடி அப்பிடி நினைக்கலாம்.."

"யூ யூ.."

"எஸ் மீ மீ.."

"ஷட் அப்.."

"முடியாது ஆஆஆஆ இப்படிதான் இருப்பேன்.."
வாயை முழுவதுமாக திறந்து காட்டினாள்.

ஆதிஷிற்கு கோபம் மறந்து சிரிப்பு வர அதை மறைத்து கொண்டு..

"சனா எனக்கு கோபம் வந்தா எப்படி இருக்கும் தெரியாது உனக்கு.."
என்றான் அடக்கிய குரலில்..அதாவது அவளுக்கு கொஞ்சமாவது பயத்தை வரவழைக்கும் என நினனத்தான்.

"எப்படி இருக்கும்..நாலு கண்..மூனு மூக்கு..இரண்டு வாய்.. இப்படியா.." என்றாள் சனா சீரியசாக.

"சனா.." என்று அவன் ஏதோ கூற முன் கதவு தட்டும் ஓசை கேட்க அவளை முறைத்து விட்டு கதவை திறந்தான். அங்கு நந்தினி நிற்க..அவளிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பெட்டியை வாங்கிக்கொண்டு கதவை அடைத்தான் ஆதிஷ்.

திரும்பி பார்க்க அங்கு விட்டு சென்ற இடத்தில் சனாவை காணவில்லை. சுற்றி பார்த்து விட்டு.."சனா.." என அழைக்க.."இங்க.." என பதிலுக்கு குரல் கொடுத்தாள்.

எங்கிருந்து குரல் வருகிறது என தேடிப்பார்க்க அறையிலிருந்த அலுமாரியின் பக்கமாய் இருந்த ஸ்டூலில் ஏறி நின்று எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள் சனா.

"அங்க என்ன பன்னுற கீழ வா.."

"ஆதிஷ் இங்க பாரு..இந்த பொம்மை அழகா இருக்குல்ல.." அலுமாரி மேலிருந்து பார்பி டாலை எடுத்து காட்டினாள்.

"ஆஹ் ஆமா.. வந்து மருந்து போட்டுக்கோ வா.. "

"இரு இன்னும் இருக்கு..பார்த்துட்டு வாரேன்.." கூறியவளுக்கு பின்னே ஆதிஷ் கூறியது உறைக்க.. எட்டி நின்று அலுமாரியின் தாண்டி ஆதிஷை பார்த்துவிட்டு தட தட என ஒரு காலை சுவற்றில் வைத்து மறுகாலை அலுமாரியில் வைத்து மேலே ஏறி அமர்ந்து கொண்டாள்.

அவள் மின்னல்வேகத்தில் ஏறியதை அதிசயமாய் பார்த்தவன்.."சனா என்ன பன்னுற நீ.." என்றான்.

"ம்ஹூம் நான் மருந்து போட்டுக்க மாட்டேன்.." என்றாள் கையை தன் ஷாலினுள் மறைத்தவண்ணம்.

"இங்க பாரு மருந்து போட்டா தான் அது சீக்கிரம் சரி ஆகும்.. " ஆதிஷ் அனுவிடம் கையாளும் முறையை ஆரம்பித்தான்.

"எனக்கு சீக்கிரம் சரி ஆக வேணாம்.. மெதுவாவே சரி ஆகட்டும்."

"அப்புறம் உனக்கு காயம் இருந்தா உன்னால ஸ்வீட் சாப்பிட முடியாது பரவாயில்லையா..?"

"ஏன் வாயால தான நான் சாப்பிட போறேன்.."

இரண்டு வழியையும் அவள் அடைத்து விட மூன்றாவதை எடுத்து வைத்தான்.

"நீ மருந்து போட்டுகிட்டா நீ என்ன கேட்டாலும் தருவேன்.."

அவன் நினைத்தது போலவே சனா இதைகேட்டதும் சற்று யோசித்தாள்.

"ம்ம் டீலா?" என்றாள் இழுத்துக்கொண்டே..

"யெஸ் டீல்.."

"சரி அப்போ எனக்கு ரெண்டு வேணும்.. ஒன்னு இந்த பார்பி டால்.. ரெண்டு இங்க நீ புதுசா ஓபன் பன்னிருக்கல்ல கம்பனி அங்க எனக்கு வேலை.. "

கேட்டது இரண்டுமே விபரீதமாய் இருக்க..ஆதிஷ் என்ன சொல்வது என யோசித்தான். முதலாவது டாலை கொடுத்தாள் அனுவை சமாளிக்க முடியாது.. இரண்டாவது அவன் இங்கு வந்ததே இவளிடம் இருந்து விலக தான் ஆனால் இவளோஅவனறையில் அலமாரியின் மேல் உட்கார்ந்திருக்கிறாள். இதில் கம்பனியில் வேலை என்றால் இந்த உறவு தொடர்ந்து கொண்டு தானே போகும்.. என பலவாரு அவன் யோசித்துக்கொண்டே நிமிர அவளது ஷாலை நனைத்துக்கொண்டிருந்தது அவள் காயத்திலிருந்து வலிந்த இரத்தம்.

ஏதோ அவனுக்கு வலிப்பது போல் தோன்ற சிந்தனைகளை தற்காலிகமாக ஒதுக்கி விட்டு.."சரி டீல்.." என்றான்... மனதில் பின் சமாளித்துக்கொள்ளலாம் என குறிக்க தவறவில்லை.

"ஏமாத்திட மாட்டல்ல.. தெரியும்ல ஏமாத்தினா மூக்கு நீளும்.." என்றாள் ஒரு விரலை நீட்டி எச்சரித்தவண்ணம்.

"மாட்டேன் மாட்டேன்..நீ கீழ வா.."

"எப்படி வாரது.." இலகுவாக ஏறியவளுக்கு இறங்க முடியாமல் கால் அடிபட்டது வலிக்க எட்ட முடியாமல் இருந்தது.

"ஏறின போல இறங்கு வா.."

"முடிஞ்சா மாட்டேனா.. ஆதிஷ் ஹெல்ப் மீ.. "என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு..

மறுக்க முடியாமல் ஆதி அருகில் வந்து கையை நீட்ட அவன் கையை பற்றி மெதுவாக காலை எட்டி எட்டி வைத்தாள். இருந்தும் கால் தான் எட்டவில்லை.

ஆதிஷ் ஏதோ தோன்ற பட்டென யோசிக்காது ஒரே இழுப்பில் சனாவை இழுக்க தடுமாறி விழப்போனவளை மறுநொடி அழகாக தன் கைகளில் ஏந்தியிருந்தான்.

அவன் கைகளில் தான் இருப்பதை இன்னும் நம்ப முடியாது கண்களை விரித்து வெகு அருகில் தெரிந்தவனை பார்த்தாள். அவனும் அவளது முகத்தை வெகு நெருக்கத்தில் காண அவனது பிடி அவனையறியாதே இறுக அவளை தன்னுடன் சேர்த்து அணைத்தது அவனது கரங்கள்.

"எ..ன்ன" அவள் ஏதோ கூற ஆரம்பிக்கவும் ஒரு விரலை அவளிதழில் வைத்து தடுத்தான் ஆதிஷ்.

உடல் சிலிர்க்க அசையவும் சக்தியற்று அதே நிலையில் சனா இருக்க தன் கையிலிருந்தவளை நோக்கி குனிந்த ஆதிஷ் அவள் பட்டு கன்னத்தில் அழுத்தமாய் தன் இதழை பதிக்கவும் இதை சற்றும் எதிர்பார்க்காத சனா கண்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரித்து அவனை பார்த்தாள்.

அவன் மறுகன்னத்தை பார்த்து குனியவும் கதவை யாரோ பட பட என தட்டவும் சரியாக இருந்தது. சட்டென தன்னை சூழ்ந்திருந்த கட்டில் இருந்து விடுபட்டதை போல் உணர்ந்த ஆதிஷ்
கையிலிருந்த சனாவை காண எதுவும் யோசிக்காது முன் நடந்ததே கண்ணில் நிற்க அவளை தொப் என கீழே போட்டான்.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💛கரைசேர காத்திருக்கும்
விண்மீனென..
உன் கைசேர கண்ணோடு
கனவுகளோடே..
கரைகிறேன் தினம்
உன் நினைவுகளில்..💛

"ஆவ்வ்வ்.." சனாவின் அலறலில் தான் என்ன செய்தோம் என்பதை உணர..

"ஆதிஷ்.."

"சாரி சனா அது கையில சிலந்தி ஏதோ.." இல்லாத சிலந்தியை கையை திருப்பி திருப்பி தேடிக்கொண்டிருந்தான்.

என்ன செய்தோம் எப்படி தன்னை மறந்து இப்படி என குழம்பயவண்ணம் நடந்ததை நினைத்து ஆதிஷ் வருந்த அந்நேரம் ஒலித்த அவனது குட்டி தேவதையின் சிரிப்பொலி என்றும் போல் அவனது குழப்பம் துன்பம் வலி என்பவற்றை தற்காலிகமாக ஒதுக்கியது.

"டேடி வொன்ட..ட..ப்..பு..ய்" கைதட்டி சிரித்தவண்ணம் நின்றிருந்தாள் அனு.

"அது வொன்டபுள்...." அவள் பக்கம் செல்ல போன சனாவை பிடித்து கட்டிலில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்தான் ஆதிஷ்.

அனுவிற்கோ சிரிப்பு இன்னும் அதிகமாக சனாவின் முறைப்பை பார்த்த ஆதிஷ்..
"அனுமா இங்க வாங்க.. இந்த பஞ்சு எடுத்து கொடுங்க.." என்று அழைத்தான் அவளை திசை திருப்பும் விதமாக.

"இதோ..." வந்து தன் குட்டி கைக்கு முழுவதுமாக பஞ்சை எடுத்து கொடுத்தாள் அனு.

"டேடி பேயிக்கு எதுக்கு இதி?" பஞ்சை எடுத்துக்கொடுத்து விட்டு அதை வைத்து சனாவின் கையை ஆதிஷ் சுத்தம் செய்ய போக அப்போது அந்த குட்டி மூளைக்குள் உதித்த அதி முக்கிய கேள்வியையும் கேட்டாள் அவள்.

"ஏய் யாரு பேயி.. நீ தான் பேயி..குட்டி பேயி..உங்கப்பா அதான் உன் டேடி பெரிய பேயி..எல்லாம் பேயி.." சனா எகிற..

அந்த பக்கம் இருந்த அனு மட்டும் சளைத்தவளா.."ஏய் யாத பாத்து பேயி சொய்ய..நீ..நீ.."

"இங்க பாரு என் பொறுமைய ரொம்ப சோதிக்கிர நீ.. ஏற்கனவே என் முடி இரண்ட பிடிங்கி எடுத்துட்ட..அந்த முடி திரும்ப முளைச்சி அவ்வளவோ நீட்டமா வளர எவ்வளோ நாள் போகும் தெரியுமா.. உனக்கு எங்க தெய்ய்யும் இருக்கதே கரப்பான் பூச்சி வால் போல இத்தூனோன்டு முடி.." பட பட என பொரிந்து விட்டு அனு முடியை பிடித்து இழுத்துவிட்டாள் சனா.

கரப்பான் பூச்சி வாலா..ஆதிஷ் சிந்திக்க, அதற்கு நேரமில்லாமல் சனா அனு காலையிலிருந்து பார்த்து பார்த்து கட்டியிருந்த முடியை களைத்து விட இது போதுமே என ஆதிஷ் நினைத்த அடுத்த நொடி சனா பக்கமாய் அனு பாய அவளை இழுத்து தனக்கருகில் அமர்த்தி மறுகையால் சனாவையும் பிடித்துக்கொண்டான் அவன்.

"டேடி விடு.. அது முடி வேணும்.."
ஆதிஷ் பிடியிலிருந்து நழுவ போராடிக்கொண்டிருந்தாள் அனு.

"பாரு நல்லா பாரு..உனக்கு பிடிக்க முடியாதே.." சனா தன் முடியை அவள் பக்கமாய் காட்டி காட்டி அவளை கோபப்படுத்த ஆதிஷிற்கு ஐயோ என்று தான் இருந்தது.

"சனா கொஞ்சம் சும்மா இருக்கயா..அவ தான் சின்ன பாப்பான்னா நீயும் சண்ட போட்டுகிட்டு.."

"அவ என் இரண்டு முடி பிடிங்கி எடுத்துட்டா ஆதிஷ் அதுக்கே நான் சண்ட போடாம தான இருக்கேன் பாருங்க.." என்றாள் அப்பாவியாய் கண்களை விரித்து..

"அப்போ இப்போ எதுக்கு சண்ட போடுற.."

"நான் எப்போ சண்ட போட்டேன்..." என்றவாரு சனா எழுந்து நிற்க மடியில் இருந்த பார்பி டால் தன் உரிமையாளரிடம் சேர்ந்திடும் ஆர்வமோ இல்லை சனாவின் இன்னும் இரண்டு முடியை பிடுங்க வைத்திடும் ஆர்வமோ டக்கென கீழே விழுந்து தன்னை காட்டிக்கொடுத்தது.

ஸ்லோ மோஷனில் பார்பி பக்கம் திரும்பிய அனுவில் கண்கள் மீண்டும் சனா பக்கம் திரும்ப..அதற்குள் அந்த டாலை எடுத்துக்கொண்டு ஓடப்போனவளது கால் சுள்ளென இழுத்தது.இருந்தாலும் இவள் நொண்டிக்கொண்டே கட்டிலை சுற்றி வருவதற்குள் அனுவில் கையில் மாட்டியிருந்தாள். ஒரு திருத்தம் இவளது முடி மாட்டியிருந்தது.

வழமை போல் சனா அலற அனு விடாமல் தொங்கிக்கொண்டு அவளது முடியை ஊஞ்சலென மாற்றி ஆட..ஆதிஷ் அவசரமாக வந்து அனுவை பிடித்து இழுத்தான். அவளை இழுக்க அவளோடே முடியும் இழுத்துக்கொண்டு வந்தது ஆனாலும் அனுவின் கைகள் முடியை விடுவதாய் இல்லை...

"அனு நீ விட்டா உனக்கு சாக்லட் தருவேன்.." ஆதிஷ் கூறவும் அவன் நினைத்தது போலவே இதைக்கேட்டதும் பட்டென சனாவின் முடியை விட்ட அனு..

"மிய்க் சாக்யெட்?" என்றாள் ஆதிஷை பார்த்து கேள்வியாய்..இவன் ஆம் என தலையசைக்க.. ஒரு கணம் யோசித்து விட்டு சனாவை பார்த்து விட்டு மீண்டும் ஆதிஷை பார்த்து..

"சதி..எய்க்கு மட்டும்..அதுக்கு இய்ய..ஓகே" சனாவை காட்டி அவள் கூற ஆதிஷ் சனாவின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சரி என தலையசைத்து விட்டு தன் அலமாரிபக்கம் நடந்தான்.

"எஹ்ம்.. அனுகுட்டி உனக்கு மில்க் சாக்லெட் பிடிக்குமா.." சனா மெதுவாய் தூண்டில் போட்டாள்.
அவளை திரும்பி முறைத்த அனு பதில் கூறாமல் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

"குட்டி பிசாசு..திமிர பாரு.."மனதில் நினைத்த சனா..என்ன செய்யலாம் என யோசிக்க சட்டென உதித்தது ஒரு யோசனை..

"எனக்கும் மில்க் சாக்லட் ரொம்ப பிடிக்கும்..என் டேடி என் ரூம் புல்லா சாக்லெட்டால தான் கட்டியிருக்காரு.." கூறிவிட்டு மெதுவாய் அனுவை பார்த்தாள் சனா.

அவள் இப்போது கொஞ்சமாய் உண்மையா என்பது போன்ற பாவனையில் அரைவாசி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள்.
"அதுவும் எடுக்க எடுக்க குறையாது அவ்வளோ சாக்லட்..சாப்பிட்டுட்டே இருக்கலாம்.." அவளை பார்த்தவண்ணம் சனா கூற இப்போது அனு அவுட் தான்..

"அப்ப்போ அவ்தோ சாப்பித்தா எவ்தோ தைம்ஸ் ஈஈஈஈஈ பன்னு? இய்ய?" என்றாள் ஆச்சரியமாய் கண்களை விரித்து.

சனாவையும் அனுவையும் வைத்து பார்த்தாள் யார் குழந்தை என்பது ஆதிஷை பொருத்த வரையில் கேள்விக்குறி தான். எண்ணியவண்ணம் சிரிப்புடன் அலமாரியிலிருந்து சாக்லெட்டை எடுத்துக்கொண்டு வந்தவன் ஒன்றை அனுவிற்கு கொடுத்து விட்டு மற்றயதை அனு கடைசியாய் கூறியது புரியாமல் விழித்துக்கொண்டிருந்த சனாவிடம் நீட்டிவிட்டு..

"அவ்வளோ சாப்பிட்டா எவ்வளோ டைம்ஸ் ப்ரஷ் பன்னும்னு கேட்கிறா.." என்றான்.

"எஹ்ஹ ப்ரஷ்ஷே பன்ன தேவையில்ல தெரியுமா.." என்று கதை தொடங்கி தன் கற்பனையை சனா எடுத்துவிட கதை கேட்கும் ஆர்வத்தில் அனு சனாவிற்கு ஆதிஷ் கொடுத்த சாக்லெட்டை பார்க்கவும் கூட மறந்திருந்தாள். இதற்குள் சனாவை கட்டிலில் அமர வைத்து பஞ்சால் காயத்தையும் சுத்தம் செய்து முடித்திருந்தான் ஆதிஷ்.

"அப்புறம்.." என இன்னொரு கதையை ஆரம்பிக்க போன சனாவிற்கு காயம் வலிக்க அப்போதுதான் ஆதிஷ் மருந்து போடுவதை கவனித்து துள்ளிக்குதித்து விலகினாள்.

உர்ரென முகத்தை வைத்துக்கொண்டவள்.."எதுக்கு மருந்து போட்டீங்க.." என்றாள் கையை ஊதிக்கொண்டே கண்ணீர் கண்களில் நிறைய.

"ஹேய் அழாத..இத போட்டுக்கோ சரி ஆகிடும்..இன்னும் கொஞ்சம் தான் இருக்கு கைய கொடு.."

"ஒன்னும் வேணா.." இப்போது வலியில் கண்கள் நிறைந்து ஒரு துளி கன்னத்தில் உருண்டது.

"சனா போத்துக்கோ..வயிக்காது.." 'அது' வில் இருந்து சனா வரை சனா அனு நட்பு சாக்லெட் ரூம் கதையில் இப்போது வளர்ந்திருந்தது.
சனா அருகில் வந்த அனு..

"உனக்க் ரொம்ப புயிட்ச யாது நினைட்சுது..வய்யிக்காது.." அவள் எழுந்து நின்று சனா அருகில் வந்து கூற அவள் கூறியது புரியாமல் ஆதிஷை பார்த்தாள் சனா.

"அது அவ மருந்து போடும் போது அவளுக்கு பிடிச்சவங்க யாராவது மனசுல நினைச்சிக்க சொல்லுவேன்..அதே உனக்கும் சொல்லுறாங்க மேடம்.." ஆதிஷ் கூறவும் அனுவை பார்த்த சனா..

"சரி.." என கண்ணீருடனே தலையை ஆட்டி விட்டு கையை ஆதிஷிடம் நீட்டினாள்.

ஆச்சரியமாய் அவளை பார்த்துக்கொண்டே அவளது கையை தன் கையில் வைத்தவன் மருந்தை பஞ்சில் எடுத்து அவளுக்கு வலிக்குமோ என வாயால் ஊதிக்கொண்டே மெதுவாய் தடவினான் ஆதிஷ்.

ஆனால் அவளோ எந்த அசைவும் இன்றி அவனையே பார்த்தவண்ணம் இருந்தாள். மருந்தை போட்டு கையில் கட்டு போட ஆரம்பத்தவன்
"என்ன வலிக்கல்லயா?" என்றான்.

"வலிச்சது.."

"ஆச்சரியம் தான்.. பேசாம அழாம இருந்த.."

"அனு சொன்ன போல பிடிச்சவங்கள நினைச்சேன் கொஞ்சமா தான் வலிச்சது..."

"ஓஹ்.."

"அதுவும் அதே பிடிச்சவங்க எனக்கு வலிக்காம ஊதிட்டே மருந்து போட்டப்போ வலியே தெரில.."
அவள் கூறியது கேட்டு சட்டென கட்டு போட்டுக்கொண்டிருந்த கைகள் நின்றது.

ஓரிரு கணம் தான். பின் தன் வேலையில் அவை கவனம் செலுத்தி கட்டை முழுவதுமாய் போட்டு முடித்தது.

தன் வேலை முடிந்தது என்பது போல் எழுந்தவன்.. "வா உன்ன வீட்டில விட்டுர்ரன்.." என்றான்.

"இய்ய சனா வதாது.." சனாவுடன் வந்து ஒட்டிக்கொண்டாள் அனு.

"சரி தான் இரண்டு பேரும் சேர்ந்துட்டீங்களா.." இலகுவாக தொண்டையை செறுமி பேசிவிட்டு அதாவது பேச முயன்று விட்டு அந்த இடத்திலிருந்து விரைவாக நகர்ந்தான் ஆதிஷ்.

ஏதோ சனாவின் பார்வையில் அங்கு நிற்பது அவனுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.
ஒரு வகையில் கோபம் தன் மீதே தான் வந்தது. அன்றே ஒற்றைக்காலில் நின்று அனைத்தையும் தடுத்திருக்க வேண்டும். இன்று தன்னால் தான் இந்த சின்ன பெண் காதல் என ஏதோ உலறிக்கொண்டு சுற்றுகிறாள். அவள் மனதில் இந்த எண்ணம் உதிக்க தானும் ஒரு வகையில் காரணம் தான் என உரைத்தது அவனது மனசாட்சி.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் friends..

1st sorry சொல்லிக்கிறேன் 😶 ஏன்னா எனக்கு நாளைக்கு sem exams ஆரம்பிக்குது.. june 1st வரை இருக்கும்.. அதுவரை எனக்கு அப்டேட் போட முடியுமா தெரியல்ல.. முடிஞ்சா இந்த சனிக்கிழமை ud எடுத்துட்டு வாரேன்.. இல்லனா மன்னிச்சு டியர்ஸ்..

அப்புறம் முடிஞ்சா கதை படிக்கிறவங்க அதோட நிறை குறைகளை பகிர்ந்து கொண்டா தொடர்ந்து எழுதுறதுக்கு எனர்ஜி கொடுக்கும்..படிக்கிறீங்க ஆனால் கருத்துக்கள் வருவது குறைவா இருக்கு ☹ சோ கொஞ்சமா டைம் எடுத்து குறை ஓர் நல்லா இருந்தா அப்படியே அதையும் டைப் செய்து போட்டுட்டு போங்க மீரு வில் பி ஹாப்பி 😄❤

thanks a lot for your love and support ❤
keep supporting

_meera shalini_
 
Status
Not open for further replies.
Top