All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மேகா ராஜனின் "காதல் ராட்சசன் வருவானோ!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே.....🙏🙏

நம் தளத்தில் முதன்முறையாக கதை பதிவிடுகிறேன். வாய்ப்பு அளித்த ஸ்ரீகலா அம்மா அவர்களுக்கு மிக நன்றி. எல்லாரும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்....இதோ💙காதல் ராட்சசன் வருவானோ......💙 முதல் அத்தியாயம் பதிவிட்டு விட்டேன். படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிருங்கள்.....


12739அத்தியாயம்-1



இரவு 11.30 எவ்வளவு புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை பெண்ணவளுக்கு. அலுத்துப்போய் அறைக்கு வெளியே வந்து முழுமதியைக் கண்டவளின் கண்களில் கண்ணீர் கோர்க்க , முமதியை கண்ணீர் மங்கலாக்கியது.

ஆமாம்....காலையில் அவளின் ராட்சசனுக்கு திருமணம். இவ்வேளையில் எப்படி உறக்கம் வரும்.

25 வயதினவள் ரதி மாதுரி. பெயருக்கேற்றாற்போல் கருமேக வண்ண ரதியவள். கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பாள். பிரபல நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றுகிறாள். வேலைக்குச் சேர்ந்த புதிதில் வேலைக்குறைவாக இருக்கும். ஆபிஸில் பொழுதை நெட்டித் தள்ளினாள். அப்பொழுது, அவளுக்கு இருக்கும் ஒரேதுணை முகநூல்தான்.

சமூக வலைத்தளங்கள் என்றாலே மிரளும், நம்பகத்தன்மையற்ற கசப்பான அனுபவங்களும் தான் நினைவுக்கு வரும்.

அப்படி அறிமுகமானவன்தான் அவளது ராட்சசன். பல நல்ல நண்பர்களைக் கண்டபோது மயங்காத மனம். அவனது அக்கறையிலும், பாசத்திலும் உருகத்தான் செய்தது.

ரகுநாத் பெயரளவில் மட்டுமே....கதாபாத்திரத்திற்கல்ல.கோபியர்கள் சூழும் கண்ணன் அவன். கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.
ஆனாலும், வெளிநாட்டுமோகமும் உண்டு. செதுக்கி வைத்தாற்போன்று மூக்கும் முழியுமாய், அளவாய் செய்வித்திருக்கும் அதரங்களும், அதன்மேல் கச்சிதமாய் நறுக்கி வைத்தாற்போன்று ஆண்மகனுக்கே உரிய பாங்கில் மீசை இருக்கும் .தேன்நிற கண்கள் தான் அவனுக்கு இன்னும் அழகைக் கூட்டும். மொத்தத்தில் மேகாவிற்கென்றே தங்கம் பெற்றெடுத்த தங்கமகன் அவன்.
மோதலில் ஆரம்பித்து காதலில் விழுந்தது தான் மாதுரியின் துரதிர்ஷ்டம் .



தந்தையில்லா பெண் என்பதால் அவள்மேல் ரகுநாத்திற்கு ஒருவித இனம்புரியாத பாசம் தோன்றியது.

ஆனால் ,மாதுரி கோபக்காரியாகவும், பிடிவாதக்காரியாகவும் தென்படுகிறாளே
என்று மனதுள் துணுக்குற்றான்.

ரகு அவளிடத்தில் வெகுசிரத்தையாய் அக்கறையும், கண்டிப்பும் காட்டுவான். அவளிடத்தில் யாரும் இப்படி அன்பு செலுத்தியது இல்லையே என்ற பிரம்மை அவளிடத்தில் உண்டு .

அவன் தந்த பாசத்தை காதல் என எண்ணி விட்டாள்.சில சமயம் அவளுள் ஏற்பட்ட தன் எதிர்பாரா காதலை அவனிடம் கூறி விடலாமா?...இல்லை... அவன் நம்மை தவறாக எண்ணி விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகமும் எழும்.ஒருதரம் ,

" ரகு நீ யாரையாவது விரும்புகிறாயா?"

"எனக்கு காதலிக்க நேரமில்லை மாது" என்றான்.

இதென்ன பதில் என்று தன்னுள் குழம்பினாள் .தன் காதலை மறுக்காமல் ஏற்றுக் கொள்வான் என்றும்கூட சிலசமயம் தோன்றும்.

இவ்வாறு, மனம் கலங்கிய குட்டை தண்ணீர் போலவே மனம் கலங்கித்
தவித்தது.

ரகுவிடம், "எனக்கு ஒருத்தர் மீது விருப்பம் வந்திருக்கு... அவனோட அக்கறையும், பாதுகாப்பும் அவன் பக்கம் என்னை ஈர்க்கிறது.ஆனால், அவன் என்னை நல்ல தோழியாக பார்க்கிறான் அவனிடம் நான் போய் காதல் கத்தரிக்காய் என்று நின்றால் அவன் என்னை என்னவென்று நினைப்பான் அசிங்கம் ஆகி விடாதா...." என்றாள் கலக்கத்துடன்.
அவள் தன்னைத்தான் காதலிக்கிறாள் என்பதை அவளது சில நடவடிக்கைகளிலிருந்து யூகித்து அறிந்தவன்
அவளிடத்தில் தன் மீதான ஈர்ப்பு வெகு ஆழமாய் போவதை உணர்ந்து, தான் கடந்த வந்த காதலை அவளிடத்தில் உரைத்தான்.

"யாரை விரும்புகிறாய் என்று கேட்க மாட்டாயா?.."

"சொல்லு "

"நீ தான்டா"

"நெனேச்சேன்டி...."
அவனிடத்தில் பிடித்ததே மாதுரி மனதுள் நினைப்பதை அப்பட்டமாக படம் காட்டுவான். அவ்வளவு புரிதல் இருக்கும் அவளைப்பற்றி ரகுவிடம்.

"மாது...என்னை பாத்துருக்கியா..... நான் யார் என்னவென்று முழுமையாக என்னை பத்தி ஒண்ணும் தெரியாது. என்மேல உனக்கு வந்த காதலை மறுக்கவில்லை....மாறாக, மதிக்கிறேன்..... எனக்காக ஏற்கனவே ஒருத்தி காத்திருக்கிறாள்....."

என்றான் அவள்முகம் பார்க்காமல் அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான்.

சுதமதியுடனான அவனது 4 வருடக் காதலுக்கு பெற்றோர் படுஎதிர்ப்பு.
பெற்றோரை எதிர்க்க இயலா நிலையில் இருவரும் தத்தளித்தனர். எத்தனை பெண் பார்க்கும் படலம் வந்தாலும் பட்டும்படாமலும் விலகிவிடுவாள் சுதமதி. இவர்களின் காதல் கதை ஊரறியுமென்பதால் இதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.
பிரச்சனைகளில் இருந்து விடுபட சமூக வலைதளங்களில் மேய்ந்து திரிந்துபோது, அதில் பலர் அவனுக்கு காதல் வலை வீசி இருப்பது பின்னாளில் தான் தெரியவந்தது. எதிலும் பிடிகொடுக்காமல் தனித்திருந்தபோது முகநூலில் மாதுரியைக் கண்டதும் அவளது துறுதுறுப் பேச்சில் மெல்ல இளக ஆரம்பித்தான். காதல் என்றதும் இப்போது நத்தைக்கூட்டுக்குள் அடங்கிவிட்டான்.

"வேண்டாம்... மாது...காதல் மட்டும் நம்மிடத்தில் வேண்டாம் நட்பு ஒன்றே பிரதானம். அதற்குள் காதல் வேண்டாம்"

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மாதுரி விடுவதாயில்லைை . இது என்னடா வம்பாப் போச்சு.... என்று எண்ணியவன் மெல்ல விலக ஆரம்பித்தது முற்றிலும் விலகியேப் போய்விட்டான்.
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 2


மாதுரி , துருவ், கதிர், ரேணு மற்றுமொரு முக்கிய நாயகன் பிரபா. இவர்கள் அனைவரையும் கல்லூரி வளாகம் "ஐந்தாம்படை எதற்கும் அஞ்சா படை" என்று பெயர் வாங்கிய நண்பர் பட்டாளம்.
வேறு வேறு துறையை சேர்ந்து படித்தாலும் எப்படியோ நண்பர்கள் ஆகிவிட்டனர்.யாரையும் சட்டையே செய்யமாட்டார்கள் பிரபா, துருவ், கதிர் இவர்களிடம் மயங்காத பெண்களே இல்லை.... அந்த அளவிற்கு கல்லூரி பருவத்திற்கே உரிய இளமை, துடிப்பு போன்றவை இருக்கும். இவர்களும் நித்தமும் பஞ்சாயத்து என்று பிரின்சிபாலிடம் வந்து நிற்பார்கள்.என்ன தான் வாலுத்தனமாய் சுற்றி திரிந்தாலும் படிப்பில் கெட்டி ஐவரும். ஆதலால் கல்லூரி நிர்வாகமும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். மாதுரி ரேணுவிடம் பல பெண்கள் பொறாமை கொள்வர். ஏனென்றால் மூன்று ஆண்களிடமும் வெகு சகஜமாக பழகுவதை கண்டு காழ்ப்புணர்ச்சியால் புகைவர்.

அன்று தமிழ்த்துறையில் "இலக்கிய மன்ற விழா" மாதுரி தன் துறை மாணவிகளை மிரட்டி சேலையில் வரவழைத்தாள் தானும் சேலை கட்டி அழகு பாவையாய் மிளிர்ந்தாள். பஸ்ஸ்டாப்பில் இறங்கியதும் கதிர் , துருவ் இருவரும் இவளைக் கண்டதும் சிரிப்பாய் சிரித்தனர்.

"ஏன்டா சிரிக்கிறீங்க" என்று கூச்சத்தில் நெளிந்தாள்.
" நடராஜ் பென்சிலுக்கு சேலையை சுத்துன மாதிரி இருக்க மாதுரி... உன் துறையில் உள்ள எல்லா பெண்ணையும் நாங்க இன்னைக்கு இந்த கண்றாவில தான் பார்க்கணுமா.... ஓ மை காட் கருப்பசாமி..... இந்த பாவியை மன்னித்தருளும் கருப்பசாமி ஆண்டவரே..... தோத்திரம் ஆண்டவரே...."
என சிலுவை போட்டுக்கொண்டான் கதிர்.
"ஏன்டா... அது ஸ்தோத்திரம் தானேடா"- துருவ்
"போடாங்.... அவகூட போன ஒரு பொண்ணு கூட நம்மள பார்க்காதுடா"
என்றவனை மாதுரி முறைக்க,
" போடி கருவாச்சி.... நீ தத்தித்தத்தி ரோட்ட அளந்து போறதுக்குள்ள ஒன் டிபார்ட்மெண்ட் பங்க்ஷன் முடிஞ்சு போகும்... வா மச்சான் நாம வேற நல்ல பிகரா பாத்து உசார் பண்ணலாம் "
என்று நக்கல் எடுத்தபடி துருவ்வை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டான் கதிர். "ம்க்கும் "என்று கழுத்தை நொடித்தபடி மெல்ல நடந்து வந்தாள் மாதுரி . தூரத்தில் பைக்கில் பிரபா வருவதைக் கண்டதும் பூவாய் மலர்ந்த முகம் இவனும் கலாய்ப்பானோ என்ற எண்ணத்தில் தலைகவிழ்ந்து நடந்து சென்றாள். யாரோ ஒரு சூப்பர் ஃபிகர் அம்சமாக நடந்து வருதே என ஆவலுடன் நெங்கியவன் அது, மாதுரி என அறிந்தவன் தன்னைப் பார்க்காது பூமியைப் பார்த்து அவள் நடந்தது வியப்பை அளித்தது. இவ இப்படிலாம் அச்சம் ,மடம், நாணம் உள்ள பெண்ணல்லவே....ஓஹோ... மேடம் சேலை கட்டி வந்த நாணமோ என உள்ளுள் நகைத்துக்கொண்டே அவள் அருகே வண்டியை நிறுத்தி
"மேடம் ஏறுங்க.... பங்ஷனுக்கு லேட் ஆச்சு"
பதில்பேசாது அவனை நிமிர்ந்து பாராமல் ஒருவித சங்கோஜத்துடன் பைக்கில் ஏறினாள். அதை கண்டதும் அவனுக்கு புது அனுபவமாய் தோன்றியது.பிரபா கலையரங்க வாசலில் அவளை இறக்கி விட்டதும் "தேங்க்ஸ்டா "என்ற அவளது சொல் விசித்திரமாகப் பட்டது. அறிமுகம் இல்லா நட்புக்குத்தான் சாரி , தேங்க்ஸ் இது போன்ற சொற்கள் தேவைப்படும் நல்ல நட்புக்கு இதெல்லாம் தேவைப்படாது என்று அடிக்கடி சொல்பவள் இன்று தேங்க்ஸ்டா என்ற சொல் வித்தியாசமாக அவனுக்கு தோன்றியது.இங்கிருந்து நித்தம் உன் கண்களுக்கு மட்டும் அழகாய் தெரிந்தாள் அவளை ரசிக்க ஆரம்பித்தான் . அவள் இயல்பாய் தொட்டால் கூட 'தொட்ட இடம் குளிர் இருந்தது' அவனது மாற்றங்கள் மெல்ல மாதுரி தவிர மற்ற அனைவருக்கும் புரிந்தது .துருவ் மட்டும் அவனைத் தனியே அழைத்துச் சென்று அறிவுரை கூறினான்
"வேண்டாம்.... மச்சான் நல்ல நண்பர்களா இருக்கோம்...இதுல காதல் வந்து ஏதாவது ப்ராப்ளமாகிட்ட என்ன பண்றது.. அவ அம்மா நம்மள நம்பி அனுப்பி இருக்காங்க... இது தெரிஞ்சா நம்மள கேவலமா நினைக்க மாட்டாங்களா. வேண்டாம்டா....நம் நட்புக்குனு ஒரு மரியாதை இருக்கு மச்சான் "
என்றவனின் கழுத்தை நெரித்தது பிரபாவின் கைகள்.
"டேய்.... என்னை என்ன பொம்பள பொறுக்கினு நினைச்சியா... பொண்ணுங்க பின்னாடி அலையற கிராக்கினு நினைச்சியா... இத்தனை நாளா அவமேல எனக்கு அந்த மாதிரி ஒரு உணர்வு வரல. இப்ப வந்து இருக்கு. அது காதல்னு புரிஞ்சிருக்கு "
என்றவனின் கை பிடி தளர்ந்து தொய்ந்து விழ நண்பனை கட்டிக்கொண்டு மனப்புலம்பலை கொட்டி விட்டான் கண்ணீருடன்.
" மாப்ள சாரிடா... அவள உண்மையாகவே லவ் பண்றேன். சொன்னா அவ ஏத்துக்க மாட்டா. ஆனா, மனசு கேட்கல மச்சான் "
என்றவுடன் நண்பனின் முதுகை தடவிக்கொடுத்தான் துருவ் .

அன்று கல்லூரி ஆண்டுவிழா. வெள்ளை நிறத்தில் சிவப்பு ஜரிகை போட்ட சேலையில் சிவப்பு மற்றும் வெள்ளை கற்கள் பதித்த எளிய நகை அலங்காரத்திலும், மல்லிகைப்பூவுமாய் அத்தனை அழகாய் தெரிந்தாள் மாதுரி. நட்பு வட்டாரங்கள் மாதுரி தங்களின் அழகின் ரகசியம் என்னவோ?....தங்களின் கற்பனை காதலன் காதல் ராட்சசனை நேரில் கண்டுவிட்டீரோ ராணியாரே ...மேனியில் பசலை நோய் பாய்ந்துவிட்டது என்பாரே....பசலை நோயால் மேனி பசுமை நிறமாக அல்லவா இருக்க வேண்டும்.... செம்மேனியாக உள்ளதே... காரணம் என்னவோ?... "என்று ரேணுவும் நண்பர்களும் சேர்ந்து கலாய்த்து ஒரே கலாட்டா தான் . "
ச்சீ.... போங்கடி"
என்று புன்னகையுடன் அவள் கடக்கையில் சொக்கிப் போய் நின்றது பிரபாகரன்தான்.
"டேய் வழியாதடா....அவ பார்த்தா செருப்ப சாணில ஊறவைத்து அடிப்பாடா......."என்றான் துருவ் சிரிப்புடன்.
பிரபா,
"வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல் இருக்கிறா இல்லடா" என்றான் அவனது சட்டை நூலைப் பிரித்துக் கொண்டே வெட்கத்துடன். அவனது வெட்கத்தை காணச் சகிக்காம,
" தேவதை ......அவ.....நல்லா புளிய மரத்தில் இருந்து இறங்கிவந்த மோகினி பிசாசு மாதிரி இருக்கா..... தேவதை மாதிரி இருக்காலாம்... டேய் நீ என்ன எழவு வேணுமானாலும் பண்ணு... ஆனால் வெட்கம் மட்டும் படாத பாக்க முடியல" என்றான் அவனது வெட்கத்தை காண சகிக்காமல்.
அந்த ஆண்டிற்கான சிறந்த தொகுப்பாளினிக்கான விருதை தட்டிச் சென்றாள். அவளது வார்த்தை உச்சரிப்பும், எதுகை,மோனையில் பேசும் பாவமும், மென்குரலும் அந்த விருதிற்கு அவள் தகுதியானவள் தான் என்று பறைசாற்றியது.

அதைக் கொண்டாடும் வகையில் மாலை "டீ விருந்து" ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவும் சிறப்பாக நடந்தேறிய பொழுது எதிர்பாராவிதமாக மாதுரி என்ற குரல் கேட்டு திரும்பியவளுக்கு காலுக்கடியில் மண்டியிட்டு கையில் நீலக்கல் பதித்த மோதிரம் ஏந்தி,
" மாதுரி இவ்வளவு நாள் நல்ல தோழியாயிருந்த.... இப்போ எனக்கு நீ நல்ல காதல் மனைவியாகவும் இருப்பாயா என் கண்மணி"
என்றவனின் கண்களில் காதல் கொட்டிக்கிடந்தது. அது கனவா நனவா என புரியாமல் அதிர்ந்து நின்றாள் மாதுரி. ஓய்.... என அவளை உலுக்க தலைதிருப்பி ரேணுவை பார்த்ததும் அவளின் புன்னகையில் மேலும் அதிர்ந்து என்ன என்பது போல் பார்க்க அவன் காதலை ஏற்றுக்கொள் என்பதுபோல் ரேணுகா பிரபாவை கண்களால் சுட்டிக்காட்டிய அதே கணம் சுற்றி இருந்த அத்தனை மாணவ கூட்டங்களும் ஆர்ப்பரிக்க ஏதும் புரியாமல் பிரபாவை நோக்கினாள். பிரபா மெல்ல அவளது கருமேகம் வெண்டை விரலை பற்றி மோதிரம் அணிவித்தான். இதெல்லாம் அதிர்ந்திருக்கும் நேரத்திலேயே நடந்து முடிந்துவிட்டது.சிலகணங்களே அதிலிருந்து மீண்டு அவளின் கண்கள் சுழல்வது போன்ற பிரமையை உண்டாக அருகில் இருந்த நாற்காலியில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். இருநாட்கள் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு கல்லூரிக்கும் விடுப்பு சொல்லிவிட்டு அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். நட்பு வட்டாரம் உடம்பு சரியில்லை என்று நினைக்க மேலும் விடுமுறை நீள பயம் தொற்றிக்கொள்ளவே கதிர் ் தான் மாதுரி வீட்டிற்கு அருகில் இருப்பவன் என்பதால் வீட்டிற்கு சென்று பார்த்தான்.
"வாயா....மாதுரிக்கு உடம்பு சரியில்லை....அன்னைக்கு சேல கட்டிட்டு போனால்ல... அப்ப எல்லாரும் இவள வச்ச கண்ணு வாங்காம பாத்தாளுவ..... அவ வீட்டு பொண்ணெல்லாம் நகைநட்டு போடாமல இருக்குது.... என் புள்ள போட்டா மட்டும் வயிறு எரியுது போல.... நாம வம்பாடுபட்டு உழைக்கிறவுகளுக்குல தானே வருத்தம் தெரியும் .... காபி போடுறேன்... மாதுரி உள்ளதான் இருக்கா.... போய் பாருயா..." என்று மாதுரி தாயார் வடிவு பொரிந்து தள்ளிவிட்டு சென்றார்.
அறையில் கட்டிலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் அவள்.
" மாது"

"வா....கதிர் ".
என்றாள் புன்னகையுடன்.
" என்ன ஆச்சு... ஏன் காலேஜ்க்கு வரல"
என்றதும் அவள் முகம் இருண்டது. அதைக் கண்டதுமே, விஷயம் புரிந்து போனது.
" நாளைக்கு காலேஜ்ல பேசிக்கலாம்"
" பரவால்ல"
அப்போது, மாதுரி தாயார் காபியுடன் உள்ளே வந்தார் குடியா என்ற தந்து விட்டு மகளை ஒருதரம் பார்த்துவிட்டு சென்றார். தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பேசினான் கதிர். "இப்போ சொல்லு"
" என்ன சொல்ல கதிர்.... நான் ஏற்கனவே என் மனசுல எனக்கு கணவனாக வரப்போகிறவர் பத்தி நானே உருவகப்படுத்தி கற்பனை வச்சிருக்கேன். என் பிரெண்ட்ட எப்படி லவ் பண்ண முடியும்....நெனச்சாலே ஒரு மாறி இருக்குடா.... இத நான் அம்மாட்ட சொன்னா என் அம்மா எப்படிடா உங்க கூட சகஜமாக பழக விடுவாங்க. அவனை என்னால அந்த மாதிரி நினைச்சுக்கோ முடயாது...அவன் கிட்ட சொல்லி புரிய வையுங்க" என்று இரு கரம் கூப்ப இறைஞ்சினாள். எப்போதும் அதிகம் சிரிக்க விட்டாலும் எப்போதும் கம்பீரமாக இருக்கும் பெண்ணிடத்தில் அவளது கண்களில் கண்ட இறைஞ்சுதல் கதிரை என்னவோ செய்தது. கூப்பிய கைகளை அழுந்தப் பற்றி தோள்களைத் தட்டிக் கொடுத்துவிட்டு வெற்றுப் புன்னகையுடன் மாதுரியை கடந்து சென்றான் அவளது தோழன் கதிர். மாதுரி சொன்னவற்றை ஒன்றும் விடாமல் அப்படியே ஒப்புவித்தான் தன் நண்பர்களிடம் பிரபா எல்லாவற்றையும் உள்வாங்கி கொண்டவன் மறுநாளே இனி அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்று எண்ணி அவன் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினான். காலேஜுக்கு வந்தமாதுரி நண்பர்களை தான் தேடினாள்.
"பிரபா எங்கே?..."
" முன்னாடி நீ இப்ப அவன் அப்படியே செய்ங்க நல்லா இருக்கும்" என்று கடிந்து கொண்டாள் ரேணு.இப்படியே நாட்கள் செல்ல பிரபா எங்கு சென்றான் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. எப்போதும் போல்
கலகலப்பு நண்பர்களிடத்தில் இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவதை அனைவருமே உணர்ந்தனர். மூன்று மாதங்களுக்குப் பின் நண்பர்கள் நான்கு பேரையும் புது வாட்ஸ்அப் குழுவில் இணைத்தது ஒரு வெளிநாட்டு நம்பர். புரொபைலில் ப பிரபாகரன் முகத்தை கண்டதும் உடனே வீடியோ கால் போட்டு பேசி மகிழ்ந்தனர் நண்பர் கூட்டம். அப்போது பிரபா தன்னைத் தான் அதிகம் பார்த்து, பேசுவது போல் தோன்றியது மாதிரிக்கு. பிரபா படிப்பை பாதியில் விட்டுவிட்டு தன் அண்ணனுடன் சிங்கப்பூர் தொழிலில் முனைந்துவிட்டான். அவனுக்கும் இதுவே ஏற்றது போல் தோன்றிற்று. எல்லோரும் வெற்றிகரமாக டிகிரி முடிக்க நண்பர்கள் இருவரும் படித்தது போதும் என்று எண்ணியவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி பிரபுவுடன் இணைந்து கொண்டனர் துருவும் கதிரும். தோழிகளான மாதுரி, ரேணுகா மேற்படிப்பை தொடர்ந்தனர். தோழி ஒருத்தியின் திருமணத்திற்கு நண்பர்கள் அனைவரும் கூடினர். மாப்பிள்ளை வீட்டார் வெகு ஆடம்பரமாக திருமணத்தை நடத்தினர்.
இளம் ரோஜா வண்ண பட்டு சேலையில் மகாலட்சுமி உருவம் பொருத்திய ஆரம் சின்னஞ்சிறு தங்க இலைகளை , தங்க நார்களால் இணைத்து பூவை தாங்குவது போன்ற அழகான நெக்லஸ்
அதற்கு பொருத்தமான தோடு வளையல் என அணிந்து நீண்ட கூந்தலை தளரப் பின்னி தலை நிறைய மல்லிகை சூடி அந்த ஆடம்பர திருமணத்திற்கு தானும் தகுதியானவள்தான் என்று நிரூபித்து கொண்டிருந்தாள் மாதுரி . ரேணுவும் சேலையில்தான் வந்திருந்தாள். நண்பர்கள் மூவரும் வெள்ளை வேஷ்டியும் கூலிங்கிளாஸ்-மாக பட்டையைக் கிளப்பினர். கல்யாண வீட்டில் இவர்கள் தான் ஹைலைட்.பிரபா மாதுரியை விட்டு விலகி இருந்தாலும் அவள் மீதான காதல் இல்லாமல் இல்லை என்பதை உணர்த்தியது அவனது பார்வை.
திருமணம் மற்றும் வரவேற்பு விழா எல்லாம் முடிந்ததும் பிரபா மாதுரியிடம் வந்து நின்றான்.
" எனக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே"
" அது ஏற்கனவே கதிரிடம் சொல்லிவிட்டேன் "
"நான் கதிர் கிட்ட என் காதலை சொல்லவில்லை"
என்ற அவனை முறைத்தாள்.
"எனக்கு இஷ்டம் இல்லை "
"ஏன்"
" நீ என் பிரண்டு மட்டுமே காதலன் இல்லை" என்று விட்டு அங்கிருந்து செல்ல முற்பட்டவளின் கரம் பற்றி, "உனக்கு என்னைப் பற்றிய நல்லாவே தெரியும் .நான் இஷ்டப்பட்டது எனக்கு கிடைக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன். அதுபோல்தான் நீயும்"
" உனக்கும் இந்த ரதி மாதிரி யாருன்னு தெரியும் பி கேர்ஃபுல்"
என்ற சீறியவள் தனது கையை உதறி தள்ளிவிட்டு கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்துக் கொண்டே,"உனக்கு என்னை காதலிக்க என்ன தகுதி இருக்கிறதுனு கேட்கும் தகுதி எனக்கில்லை பிரபா.....உன் பணம், அந்தஸ்து, ஊர் மரியாதை இதற்கெல்லாம் பொருந்த கூடிய ஆள் நானில்லை....அப்பாவோட சம்பாத்தியத்துல வாழும் நீ எங்கே.....அன்றாடக்காய்ச்சியின் மகளான நானெங்கே?...." என்றாள் சீற்றத்துடன்.
"அதெல்லாம் என் அப்பா பாக்க மாட்டார்.....என் அப்பா பத்தி உனக்கு தெரியாதா அப்புறம் ஏன் இப்படி பேசுற...
" புரியாம பேசாத பிரபா ....இது சரியா வராது...."

"ஏன்???"

"என்ன ஏன்
உயிர்த்தோழிகிட்ட வந்து காதல் கத்தரிக்காய் புளியங்காய்னு புலம்புற...இவ்வளவு நாள் இந்த மாதிரி கீழ்த்தரமான உடல்மோக எண்ணத்தோடு தானே என்னை பாத்துருப்ப.... என்று கூர்நாக்கால் கூறுப்போட்டாள்.
அவள் பேசும்போது கலங்கிய கண்களுடன் கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றவன்தான் ஒரேடியாக சென்று விட்டான்.
ஆமாம்.... ரோட்டோரத்தில் காரை நிறுத்தி டிக்கியில் வைத்திருந்த மதுபாட்டிலின் மூடியை கழற்றி வீசிவிட்டு அப்படியே வாயில் சரித்தான். அவள் பேசிய வார்த்தைகளை மனதுள் உருப்போட்டபடி போதையில் வண்டியை தாறுமாறாக ஓட்ட எதிரே பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்த லாரியில் விட்டுவிட்டான்.
"மாதூ....."என்ற உச்சரிப்போடே அவன் உயிர் பிரிந்தது.12764
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 3


விபத்தில் இறந்த பிரபாவின் சிதைந்த உடலை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்றெண்ணிய அவனது குடும்பத்தினர் மருத்துவமனையிலேயே எல்லா காரியமும் செய்து முடித்தனர். பிரபாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல திராணியற்று குற்றவுணர்ச்சியில் குமைந்தால் மாதுரி. தான் மட்டும் அவனை வார்த்தைகளால் குதறாவிட்டால் அவன் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பான். தன்னோடு பழகிய நாளில் அவனது சிரிப்பு ,பேச்சு, நடை அடிக்கடி அவன் தலைசாய்த்து காலரை தூக்கிவிட்டபடி, பிரயோகிக்கும் 'கெத்துல' வார்த்தை அவளது காதல் மந்திரம்போல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அன்று பிரபா அடிபட்ட வலியை தன் கண்களில் தேக்கி கரம் கூப்பி தலை குனிவுடன் தளர்ந்த நடையுடன் நடந்து சென்ற தருணம் மாதுரியின் மனதை விட்டு நீங்காது துயரத்தைத் தந்தது. அவனின் நினைவு மாதுரியை நோவில் விழ வைத்தது மட்டுமே மிச்சம்.


பிரபாவின் பெற்றோர்கள் தன் மகனின் சாவிற்கு அவள் தான் காரணம் என்று எண்ணினாலும் சிறுவயது முதலே தன் வீட்டில் ஒருத்தியாக இருந்தவளுக்கு நோவு என்றதும் தன் மகன் இறந்த துக்கத்தை மறைத்து அவளை சென்று பார்த்து வந்தனர். அப்போது, பிரபாவின் தந்தை ஜெகன்நாதன் மாதுரியை பார்த்தவாறு தலையை மெல்ல வருடிக் கொடுத்தார். அந்த பார்வை ஏனோ தன்னை கேள்விக்கணைகளோடு துளைப்பது போல் உணர்ந்த அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது அவளை அறியாமல்.

" கவலைப்படாதேம்மா..... நாங்களும் அவன் இல்லாத உலகில் வாழ பழகிக் கொள்ள முயற்சிக்கிறோம்..... நீயும் மெல்ல பழகிக் கொள்....."
ஆறுதலாக தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு சென்றார்.
எத்துணை கம்பீரமான பெரிய மனிதர் தன்னிடம் இவ்வளவு இரக்கம் காட்டுகிறாரே அவர் மகன் சாவுக்கு காரணம் தான்தான் என்று அறிந்தும் என்னை கொல்லாமல் கரிசனமாய் பார்க்கிறாரே..... நீர் மேன்மக்களே தானய்யா.... என்று தன்னுள் மெச்சினாள்.


மெல்ல உடல்நிலை தேறியதும் பக்கத்திலேயே ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள். அப்போதுதான் தனக்குள்ளே தன் கற்பனை நினைவுகளாலே உருவகித்த காதல் ராட்சசனை கண்டறிந்து காதல் கொண்டாள்.

சிலர் சொல்வதுண்டு.... ஒருவர் மட்டும் காதலிப்பது காதல் அல்ல; இருவரும் காதலித்தால் தான் அந்த காதல் முற்றுப் பெறும் என்று. ஆனால், காதலுக்கு எதற்கு ஒருவர், இருவர் என்ற எண்ணிக்கை கணக்கு. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் அது மற்றவர் பாதிக்காதவரை என்ற கொள்கையில் மாதுரி மாறுபடவில்லை. இதனால் கல்யாணம் ஏனோ கசந்தது. என்ன காரணம் என்று புரியாமல் தவித்த தருவ் தோழியிடமே நேரே சென்று கேட்டு விட்டான். அவனிடம் தன் மனதை மறைக்காது சொன்னாள். அவளை ரகு நிராகரித்த பின்னும் தன் தோழியின் காதலை கண்டு வியந்தாலும் நடைமுறையைக் கருத்தில் கொண்டு தலையில் அடித்துக் கொண்டான் துருவ்.

விடிந்ததும் ரகுவிற்கு திருமணம். இரவெல்லாம் தூங்காமல் அவனது நினைவுகளில் அழுது துவண்டாள். ரகுவுடன் வேற்றாள் ஒருத்தி மணக்கோலத்தில் சிரித்த முகமாய் அவனுடன் கைகோர்த்து நிற்பதை மனக்கண்முன் க12845ண்டவளுக்கு இப்பொழுதே தன்னுயிர் போகாதா என்று எண்ணினாள்.


"மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப் பொங்குபிதிர்த் துவலையொடு மங்கு ஷறைஇக் கையற வந்த தைவர லூதையொடின்னா வுறையுட் டாகும்சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே."

என்ற குறுந்தொகை பாடலே அந்நேரத்தில் நினைவுக்கு வந்தது.


மறுநாள் பத்து மணிக்கு தான் எழுந்தாள். எழுந்ததும் சுவர்க் கடிகாரத்தில் மணியை கண்டதும் இந்நேரம் அவனுக்கு திருமணம் முடிந்திருக்கும் என்று நினைத்தவளின் மனதில் முணுக்கென்ற வழித் தோன்ற வெறுமையுடன் ஜன்னலை வெறித்தாள். அப்போது, அலைப்பேசியில் அறிவிப்பு செய்தி வந்தது. அதைக் கண்டதும் கண்களில் கண்ணீர்க்குளம் கட்ட செல்திரையே மறைத்தது அவளது கண்ணீர்.
ஆம்...... ரகு, சுதமதியுடனான மணக்கோலத்தில் சந்தோஷமாய் கொள்ளை அழகுடன் இருந்தான். வேண்டுமென்றே ரகுவின் நண்பன் மாறன் மாதுரியையும் டேக் செய்து பதிவு போட்டிருந்தான். மாதுரியின் பைத்தியக்கார காதலை தெளிவிக்க எண்ணி இவ்வாறு செய்திருந்தான் அந்த நல்லுள்ளம் கொண்ட நண்பன். இவளின் காதல் கண்டு சில நேரங்களில் பொறாமை கொள்வான் மாறன். திருமண புகைப்படத்தை கண்டு மனம் வலித்தாலும் லைக் செய்து விட்டு மறக்காமல் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தாள்.


கிராமத்துக்கே உரிய மனப்பாங்குடன் தன் அன்பு மனதை காட்டாத பாசத் தந்தையையும் பறி கொடுத்தாள். நல்ல தோழனையும் இழந்தாள். இப்போது கற்பனை உலகில் சஞ்சரித்து மனதளவில் தன்னுடன் வாழ்ந்து வந்த தன் ராட்சசனையும் இழந்தாள். தான் காதலிப்பது வேற்றாளின் காதலன் என்பதை ஏனோ மறந்தாள் அந்தப் பெண்ணவள். அவள் ஒன்றன்பின் ஒன்றாக தனக்கு விழுந்த மன சவுக்கடிகளை தாங்க மாட்டாது தன் மீது ஏற்பட்ட கழிவிரக்கத்தில் ஒரு முடிவெடுத்தாள். அம்முடிவை அவள் தன் வாழ்வில் கொண்ட வெறுப்பில்தான் எடுத்தாள். ஆனால், அதுதான் அவளுக்கான காதல் ராட்சசனை தனக்கு திருப்பியளிக்கப் போகிறது என்பதை அவளறியாள்.



தன் பெரியப்பா மகன்கள் சிங்கப்பூரில் தான் செய்து வந்தனர். அவர்களின் மூத்தவன் கருணாகரனை மாதுரியின் தோழியான ரேணுவிற்கும் மணமுடித்து வைக்க வேண்டும் என்று பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர் அவன் கம்பெனியில் நல்ல வேலை போட்டு தருவதாக கூறி அடிக்கடி மாதிரியே வரச் சொல்வான் ஆனால், மாதுரிதான் உறவினருடன் ஒட்ட மாட்டாள். கருணாகரனுக்கு மாதுரி தன் உடன் பிறந்தவள் என்றே எண்ணுவான் அவ்வளவு பாசம். ஏனென்றால் தன் சித்தப்பா ரத்னவேலை உரித்து வைத்து பிறந்தவளாதலால் அவனுக்கு அவள் மீது கொள்ளைப் பிரியம். உடனே கருணாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,

" எனக்கு அவசரமாக ஒரு வேலை வேண்டும் "
என்று கேட்டாள்

"சரிமா.... என் திருமணம் முடிந்து நானும் ரேணுவும் இங்குதான் வருவோம்.... அப்போது போது உன்னையும் என்னோடு அழைத்துக் கொள்கிறேன் "
என்றான் கனிவுடன் .

" இல்ல அண்ணா.....நான் ரொம்ப சீக்கிரமா வேறு ஒரு மன
மாறுதல் வேண்டும்.... இல்லை என்றால் நீ என்னை பைத்தியக்காரி யாகத்தான் பார்ப்பாய்"
என்றாள் கண்ணீருடன். அவள் அழுவதை தாளாமல் என்ன ஏது என்று கேட்காமல் மிக சீக்கிரமாக விசா எடுத்து தங்கையை தன்னுடன் அழைத்து வந்துவிட்டான். MR & Brothers குழுமத்தின் ஒரு பங்குதாரராக நியமிக்கப்பட்டாள் . அதை அறிந்து நான் வெகு சாதாரண தமிழ் இலக்கியம் படித்தவள். திறமையும், பணம் அந்தஸ்தும், தொழில் நுண்ணறிவும் கொண்டவள் இல்லையே அண்ணா என்றாள். பணக்காரர்களையும் தன்னை விட அழகானவர்களையும் கண்டாலே ஒதுங்கும் குணமுடையவள். அதையேதான் அவனது பெரியப்பா குடும்பத்தினருக்கும்.


தன் அண்ணனின் பேச்சையும் பாசத்தையும் கண்டவள் பணக்காரர்களுக்கும் அன்பும், பாசமும், இரக்கமும் உண்டு என்பதை அன்றுணர்ந்தாள் மாதுரி. MR என்ற பெயரின் விரிவாக்கம் "மாதுரி ரத்தினவேல்" எனக்கு என் பெற்றோர் காட்டாத பாசம், பரிவை சித்தப்பா தான் காட்டினார். எங்களை பொறுத்தவரை என் அப்பா ரத்தினவேல் சித்தப்பா தான்..... தங்கை நீ தான்..... உன் பெயரில் தான் இந்த கம்பெனி ஆரம்பித்தோம்.... நீ நல்ல ராசிக்காரி என்பதால் தொழில் அமோக வெற்றியை தந்ததுடா" என்ற அண்ணனின் பாசத்தில் நெகிழ்ந்து போனாள் மாதுரி. அதற்கிடையில் கருணாகரனும் ரேணுவிற்கும் திருமணம் நடந்து சிங்கப்பூருக்கு வந்து விட்டனர். மாதுரி வேலை என சேர்ந்ததும் தன்னை முழுமையாகவே வேலைக்கென்றே தன்னை தத்து கொடுத்து விட்டாள் . தன் நண்பன் ,காதலன் ஆகிய இருவரின் நினைவும் அவளை தொடர விரும்பவில்லை. விதி யாரை விட்டது.... அவளது காதல் ராட்சஸன் அவளிடமே வருவானே!......
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 4




நண்பர்கள் நால்வரும் வார விடுமுறை அன்று சந்திக்க வேண்டும் என்பது சட்டத்தில் விதிக்கப்படாத விதியாயிற்று. வேலையிலேயே மூழ்கி இருக்கும் மாதுரிக்கு இந்த சந்திப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சிங்கப்பூரில் கடற்கரையோரமாக பார்ப்பவரின் மனதை கொள்ளை கொள்ள வைக்கும் நவீன வசதிகளை கொண்ட பிரபலமான ஹோட்டலில் தான் அன்றைய சந்திப்பு இருந்தது. ரேணுவும், மாதுரியும் தன் நண்பர்களாகிய துருவ் மற்றும் கதிரை கண்டதும் நெகிழ்ந்துபோய் அணைத்து தத்தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். ஏனென்றால் அவர்கள் ரேணு, கருணாகரன் திருமணத்திற்குப்பின் அன்றுதான் சந்திக்கிறார்கள்.

அப்போது மாதுரியை மட்டும் ஒரு ஜோடி கண்கள் அளவிட்டன. அன்று தன் வீட்டில் நிறம் வெளிறிப் போன சுடிதாரில் நெற்றியில் அரக்குநிறப் பொட்டும், சந்தன கீற்றும் பக்தி முத்தியவளாய் தோன்றக்கூடிய விபூதி அணிந்த பெண் தானா இவள்?..... இன்று ஜீன்சும் டீ சர்ட்டும் நீண்ட கூந்தலை பாதியாக வெட்டப்பட்டு லூஸ் ஹேர் விட்டிருந்தாள். பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தாள். ஆனாலும், அதே ஒற்றைக் கல் பதித்த பொட்டும் சந்தன கீற்றும் மட்டும் அப்படியே இருந்தது மாற்றமில்லாமல் . தன் பழமை மாறாமல் மாதுரியைப் பார்த்ததில் தோன்றிய ரகசியப் புன்னகையுடன் அவளை ரசித்துக் கொண்டிருந்த, அந்த கண்களுக்கு சொந்தக்காரன் அவர்களுக்கு மூன்று டேபிள் தள்ளி இருந்தான். அவனை கண்டுகொண்ட துருவ் மெல்ல கதிரிடம் சுட்டிக் காட்டி விட்டு தானாகவே எழுந்து நின்றான். அவன் எழுந்ததும் கதிரும் பின்னாடியே எழுவதைக் கண்டு 'என்னவென்பது' போல் பார்த்தவள் அவர்களின் கவனம் வேறு திசையை நோக்குவதை கண்டவள் "ஆத்தி....... இவனா " என தனக்குள்அதிர்ந்தாள்.
அதேசமயம், அந்த கண்களுக்கு சொந்தக்காரன் தன் அழுத்தமான கால்களை தரையில் பதித்து நிமிர்வுடன் ,பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி ஸ்டைலாக புன்னகை காட்டி அவர்களை நோக்கி வந்தான் அந்நெடியவன்.

" அண்ணா .....சும்மா .....பிரண்ட்ஸ் கூட........."
என்று திக்கினான் துருவ். அதில் எரிச்சல் அடைந்த மாதுரி,

"ஹேய்.......என்ன?.... உட்காருங்கடா"
என்றாள் குரலில் அலட்சியம் காட்டி.

"சும்மா இருடி .....அவர் கிட்ட தான் நாங்க வேலை செய்கிறோம்" என்றான் கதிர் அடிக்குரலில்.

" அதுக்கு போற வர்ற இடத்துல எல்லாம் உங்க முதலாளியக் கண்டால் எழுந்து சலாம் போட வேண்டுமென்று உங்க முதலாளி சொல்லியிருக்கிறாரா??....."
என்று எரிச்சலின் மொழிந்தாள்.

" இன்னும் பழைய திமிரு அப்படியே இருக்கிறதே...."

என்று கண்களில் வியப்பு காட்டினாலும் இதழ்களில் இருந்த புன்னகை மாறவில்லை அந்நெடியவனுக்கு. அவனின் மனதைப் படித்தது போல
'திமிர் தான்டா...அதில் உனக்கு என்னவாம்' என்று உள்ளூரச் சீறினாள் மாதுரி.

அதைக் கண்டு கொண்டவன் போல் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் "திமிரை எப்படி குறைக்க வேண்டும் என்று எனக்கு நல்லாவே தெரியும்" என்று கூறிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அதைக் கேட்டதும் முறைத்துக்கொண்டே "ம்க்கும் " என நொடித்துக் கொண்டாள். அங்கு துருவ், கதிர் இருவரும் இன்னும் நின்று கொண்டிருந்தனர் அதை கண்டதும் இன்னும் அதிக எரிச்சலுக்கு உண்டானவள் துருவ்வின் கைப்பற்றி நாற்காலியில் அமர வைத்துவிட்டு கதிரைப் பார்த்து உட்காருடா என்பதுபோல் கண்களாலேயே அதிகாரத்துடன் அமரச் செய்தாள். அதைக் கண்டதும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ரேணு மரியாதை நிமித்தமான நலவிசாரிப்புடன் வேறெதுவும் பேசவில்லை. அனைவரும் சாப்பிட்டு விட்டு கிளம்புகையில் மாதுரியின் கரம் பற்றிக் கைகுலுக்கி பை சொன்னான் அந்நெடியவன். அதில் கடுப்பாகி வெடுக்கென்று கையை உதறிவிட்டு தன் கார் நிற்குமிடத்திற்கு விரைந்தாள். அந்த மைதாமாவிற்கு என்ன திமிர்..... என்ன தைரியம்.... என் கை பிடிப்பான்... கொழுப்புடா.... இருடா.... எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்டா... லூசு பயலே.....கையெலும்ப உடைக்கிறேனா இல்லையானு பாருடா..... போய் உன் ஸ்டேட்டஸ்க்கு தகுந்த பெண்ணை கைப்பற்றி குலுக்க வேண்டியது தானே..... என்று மனதில் பொரிந்து தள்ளினாள் .

அதே சமயம், அவனை பற்றிய பழைய நினைவும் மேலோங்கியது. அவன் வேறு யாரும் இல்லை சாட்சாத் பிரபாகரனின் அண்ணன் கிருபாகரன் தான். பிரபாவை காட்டிலும் உயரமானவன் .நல்ல சிவந்த நிறம். அச்சு அசல் அச்சில் வார்த்தது போல் பிரபாவை உருக்கொண்டிருப்பான். இருவரும் இரட்டையர் என்றே நினைக்கத் தோன்றும். உயரமும், நிறமும், உடை நாகரிகமும் தான் பிரபா, கிருபாவை வேறுபடுத்திக் காட்டும். மாதுரி, பிரபா நண்பர் கூட்டம் கல்லூரியில் கால்தடம் பதித்த அதே நேரம் தான் இவனும் தொழிலில் கால் பதித்தான். பிரபாவின் வீட்டிற்கு வரும்போது மாதுரி கிருபாவை பார்த்து அவன் அழகில் மயங்கி ரசிப்பதுண்டு. ஆனால் கிருபாகரன் அவளிடத்தில் இளக்காரம், பணக்கார அலட்சியம், முக சுளிப்பு காட்டுவான். அதை மாதுரி உணர்ந்த கணம் அவனை மதிக்கவே மாட்டாள். அடிக்கடி பிரபாவிடம்,
" பிரபா உன் அண்ணன் இந்த இருக்கிற சென்னையில தானே படிச்சாரு... என்னமோ லண்டனில் படிச்ச மாதிரி பில்டப் கொடுக்கிறார்.... அந்த மைதாமாவுட்ட சொல்லிவை..... இந்த அலட்சியம் எல்லாம் வேறு எங்கயாச்சும் வெச்சக்கச் சொல்லு..... இல்ல மைதா மாவை நல்லா பிசைஞ்சு இடியாப்பம் புழிஞ்சிடுவேன் "
என்பாள் கடுகடுப்புடன்.
"ஏன்டி.... மைதாமாவுல இடியாப்பம் சுட்டா நல்லா இருக்காதுடி "
என்பான் பிரபா. பணக்காரர்களிடத்தும் தன்னை விட அழகானவர்களிடத்தும் அவள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள நிச்சயமாக அவனது அலட்சியம், நிராகரிப்பும் ஒரு காரணம் எனலாம். அதுவே, மாதுரியிடத்தில் அவனைப் பிடிக்காது எதிரியாக காண்பித்தது எனலாம். காரில் செல்லும்போது கூட மைதாமாவு என்று உள்ளே சிடுசிடுத்தாள்.

அடுத்து வந்த சில நாட்கள் நன்றாக சென்றது. ஒரு நாள் மாதுரியின் தாயார் வடிவு போன் செய்து உடனே ஊருக்கு வரச் சொன்னார். என்ன ஏது என்று தெரியவில்லையே என்று அரக்கப்பரக்க அடித்துப் பிடித்துக் கொண்டு வந்தவளை, ராமநாதபுரத்தில் புதுக்குடி என்ற கிராமத்தில் உள்ள பிரபாவின் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். வந்தவளை பிரபாகரன் தாயார் சுதாகரி வரவேற்று உபசரித்து ஒரு அறைக்கு அழைத்துச் சென்று ஓய்வு "எடுத்துக்கொள்ளம்மா.....ஏதேனும் வேண்டுமென்றால் என்னைக் கூப்பிடம்மா " பரிவாய் கூறிவிட்டுச் சென்றார். அவரது இளைய மகனது இறப்பிற்கு தானும் ஒரு காரணம் என்பதை மறந்து அவளுடன் இணக்கமாய் பேசிச் செல்கிறாரே என்ற குற்றவுணர்ச்சியில் கண்கள் கலங்கியது. ஆனாலும், அவரிடம் தான் இங்கு வந்ததற்கான காரணம் என்னவென்பதை எவ்வாறு கேட்பது என குழம்பினாள். அறையை சுற்றுமற்றும் பார்த்தவளுக்கு பயண களைப்பில் அப்படியே தூங்கி விட்டாள். யாரோ தன் அறையில் உலாவுவதுபோல்
தோன்ற கண் விழிக்காமல் அது என்னவென்று உற்றுக் கவனித்தாள். அப்போது அந்த அழுத்தமான காலடிச்சத்தம் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்தவள் சட்டென விழித்து கொண்டாள். எதிரில் கிருபாகரன் புன்னகையுடன் நின்றிருந்தான். இந்த மைதா மாவு நீங்க என்ன பண்றான்....எப்போ பாத்தாலும் ஈ னு.... தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு அவனைக் கண்டு முறைத்தாள். கட்டிலில் இருந்து எழுந்து அங்கிருந்து அகல எண்ணி கதவை நோக்கி நகர்ந்தவளை கிருபாகரனின் கரம் பிடித்து நிறுத்தியது . கோபத்துடன் தன்னை பார்த்தவளை கண்டு பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கியவன் "உன்கிட்ட பேசணும் உட்கார் "
என்று கட்டிலில் அவளை அமர வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தான். அவள் தன்னிச்சையாக தள்ளி அமர்ந்தவளை புன்னகைத்துவிட்டு,
" இன்னும் மூன்று நாளில் உனக்கும் எனக்கும் திருமணம் தயாராக இரு." என்ற அடுத்த நொடி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க,
" யாரைக் கேட்டு முடிவு பண்ணீங்க" என்று சீறினாள் மாதுரி.
"கேட்க வேண்டியவர்களிடம் கேட்டாயிற்று "
" என் வாழ்க்கையை பத்தி அடுத்தவர்கள் முடிவு செய்ய நான் அனுமதிக்க வில்லை.... நான் அந்த உரிமையை யாருக்கும் தரல"
" உன் அம்மா அண்ணன்களுக்கு கூடவா "
"ஆமாம்....அவர்களுக்குமே என் வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமையை தரவில்லை"

" பார்ரா.... ஓவர் திமிரு உடம்புக்கு ஆகாதுடி தங்கம்மா....."
அவனது தங்கம்மா அழைப்பு அவளுள் ஏதோ செய்தது.

"ஹேய் ... மைதாமாவு டி போட்டுக் கூப்பிட்ட நாக்கு துண்டாகிடும்.... பி கேர்ஃபுல் "
என்றவளைக் கண்டு சிரித்து விட்டான்.
" என்னடி என் நாக்கை அறுப்பியாடி.... அடி உன்னால் முடியுமாடி.... "
அவனது அத்தனை டி அழைப்புகளையும் கேட்டவளுக்கு ஆத்திரம் பொங்கியது.

"ச்சீ ......பே"

என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
" அழகு, பணம் ஒன்றுமில்லாத பொட்ட கழுதைக்கு திமிரு அதிகம் தான்" என்றவனின் பேச்சில் மாதுரியின் தன்மானம் தலை தூக்க,
" அழகு, பணம் இல்லாதவனை நீ எதுக்கு கல்யாணம் பண்ற.... உன் அந்தஸ்துக்கு ஏற்ற பெண்ணை கட்டிக்க வேண்டியதுதானே"
" அப்படித்தான் நினைத்தேன் எனக்கு காதலில் தோற்ற அபலைப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று ஆசை அதான்"

" நீயாவது நல்லெண்ணம் எண்ணுவதாவது "
என்றாள் இளக்காரத்துடன். பின் ஏதோ தோன்ற,
"இங்கே யார் காதலில் தோற்ற அபலைப்பெண்ணாம்" என்றாள் காட்டமாய்.
"யாரை இப்போ கல்யாணம் பண்ணிக்கிறேனு சொன்னேனோ அவுகதான்"
"நான் லவ் பெயிலியர்னு யார் சொன்னது?"
"என் தம்பி"
"நான் லவ் பண்ணதே அவனுக்கு தெரியாதே" என்று சொன்னவளுக்கு துருவ்வின் ஞாபகம் வந்ததில், டேய்.....துருவ் உனக்கு இருக்குடி " என்று மனதுள் கறுவினாள் .
"எனக்கு ரகுநாத் பற்றிய உன் காதல் லீலைகள் தெரியும் "
அதில், முணுக்கென்ற கோபம் துளிர்க்க,
" தெரியுதுல.....அப்புறம் ஏன் உளறிட்டு இருக்க " என்றவள் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேற முயன்றவளுக்கு முன்னே கதவருகே சென்று கதவுகளை சாத்தியவன் அவளது முகத்தில் எதையோ தேடியவன் பின்,
" திருமணத்திற்கு ரெடியாயிரு.... முரண்டு பிடித்தால்"

" என்னடா பண்ணுவ "என்று எகிறினாள்.

"ஓவரா பேசுற வாயை கிழித்து விடுவேன்"

"கிழிடா பாப்போம்"

என்று பதிலுக்கு பதில் மல்லுக்கு நின்றவளை கண்டவனுக்கு சிரிப்பு பீரிட அவளது இடையை ஒரு கையால் தன்னில் இழுத்து மற்றொரு கையால் அவளது முகவாயை பற்றி அவளது கன்னத்தில் அழுந்த தன் இதழ் பதித்தான். அதில் விதிர்த்து போனவளை கண்டு
"என்னை விட்டு நீ எங்கும் செல்ல இயலாது . உன் சம்மதத்தை இங்கு யாரும் கேட்கவில்லை. உன் கழுத்தில் என் தாலி ஏறும் வரை உன்னால் அணுவளவும் அசைக்க இயலாது" என்று கூறிவிட்டு சென்றான்.
இவன் யாரு என்னைக் கேட்க....மைதாமாவு..... மூஞ்ச பாரு ராம்நாட்டுல அடிக்கிற வெயிலுக்கு கோட்டு,சூட்டு.... மவனே.... இருடி உனக்கு தண்ணி காட்டறேன்" என்று மனதில் சூளுரைத்தவளின் கைகள் தானாகவே அவன் முத்தமிட்ட கன்னத்தை தடவி பார்த்தது.
இவனுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படிலாம் பண்றான்.....இவனுக்குதான் தான் என்னை பிடிக்காதே. ஒருவேளை தன்னை பழிவாங்குகிறானோ என்று யோசித்து மண்டைக் குழம்பினாள். அங்கிருந்து தப்பித்து யாரிடமாவது உதவி கேட்கும் பொருட்டு பேச எண்ணி என எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை. இறுதியில் சிவனும் சக்தியும் சேர்ந்த மாங்கல்ய நாண் கயிற்றை அவள் கழுத்தில் முடிச்சிட்டான் கிருபாகரன்.மாதுரியோ தன் கையாலாகாத தனத்தை நினைத்து கழிவிரக்கத்தில் கண்ணீர் விட்டாள். மாதுரியின் தாயார் மகளின் வாழ்க்கையை நல்லதொருவன் கையில் பிடித்துக் கொடுத்து விட்டோம் என்ற ஆனந்தக்கண்ணீரோடு கணவரின் நினைப்பும் வர கண்ணீர் மல்க மகளை ஆசிர்வதித்தார். மாதுரியோ அவன் சாவி கொடுத்த பொம்மை போல ஒவ்வொன்றையும் செய்தாள்.


அன்று இரவு வரவேற்பு விழாவில் அவன் பற்றிய அவளது கையை விடவில்லை. அவளுக்கும் ரகுவிற்கும் திருமணம் நடந்தால் யாரெல்லாம் தன் திருமணத்திற்கு யாரெல்லாம் வரவேண்டும் என்று எண்ணினாளோ அவர்கள் எல்லோரையும் கிருபாகரன் அழைத்திருந்தான் . மாறனும் கூட வந்திருந்தான்.
"எங்கே ராகுவை நினைச்சுட்டு வாழ்க்கையை வீணாக்கி கொள்வாயோ என்று பயந்தேன். நல்லவேளை அந்த மாதிரி இல்லை இனிமேலாவது பைத்தியம் போல் யோசிக்காமல் உனக்கான வாழ்க்கையை வாழு" என்று கூறி வாழ்த்தியவனை பார்த்தாலே ஒழிய ஏதும் பதில் பேசவில்லை. இவனை எப்படி கண்டு அழைத்து வந்தாய் என்பதுபோல் அவனை ஏறிட்டுப் பார்க்க, அதைப் புரிந்துக் கொண்டவன் நான் ரகுவையே சந்தித்தேன்.....அவரது மனைவி இப்போது மாசமாக உள்ளாராம்.....வாழ்த்து அனுப்பினார். அவர் தான் மாறனைப் பற்றி சொன்னார்......மாறனுக்கு உன் நலனில் அவ்வளவு அக்கறை. அதான் நான் அழைத்ததும் சிரமம் பாராமல் நம் திருமணத்திற்கு வந்திருக்கிறார் " என்றான் அஸ்கி குரலில்.
இவன் என்ன மாதிரியான என நினைத்து கொண்டிருக்கும் போது அவளது மற்ற நண்பர்களும் வர அவ்விடமே குதூகலமாகி விட்டது. ரேணு வியர்த்து வழிய ஓடி ஓடி தன் நாத்தனாரின் திருமணத்தில் வேலை செய்வதைக் கண்டு மகிழ்வுற்றாள். துருவ், கதிர் ஆகிய இருவரும் வேட்டியை மடித்துக்கொண்டு மும்மரமாக வேலை செய்தனர் அதைக் கண்டு அகம் மகிழ்ந்தாள் மாதுரி. அதேநேரம் பிரபாவும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வது போன்ற பிரம்மையில் கண் கலங்கி விசும்பியவளின் தோள்களை தன்னோடு அணைத்து "ச்சூ..... அழப்படாது..... உன் நண்பன் உன்கூடவேதான் இருப்பான் "
அதை நிஜமென்று எண்ணியவளுக்கு அழுகை வரவில்லை மாறாக பாதுகாப்பான அனுசரணையை உணர்ந்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஊரே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு கிருபாகரன், ரதி மாதிரி திருமணம் நடைபெற்று நடந்து முடிந்தது. ரதி மாதிரியின் ராட்சசன் வந்தாயிற்று. ஆனால் அவள் தான் தன் ராட்சசனை இழந்து விட்டோமே என்று எண்ணியிருந்தவளின் கண் முன்னேயே இருக்கும் தன் கணவனாகிய காதல் ராட்சசன் வந்துவிட்டான் என்பதை ஏனோ அறியில்லாள்.
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 5


கிருபாகரன், ரதி மாதிரி திருமணம் நல்லபடியாக முடிந்தது. பெரியவர்கள் அன்றிரவு அவர்களுக்கு முதலிரவிற்காக ஏற்பாடு செய்திருந்தனர்.

சுதாகரியும், ரேணுவும் ரதி மாதுரியை அலங்கரித்துக்கொண்டே கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறிக் கொண்டிருந்தார்கள். சுதாகரி சற்று அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும் ரேணு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

அதைக் கேட்டு எரிச்சலடைந்த மாதுரி ரேணுவை ஒரு தீப்பார்வை பார்த்தாள். அதில் பயந்துபோய் ரேணு தன் நண்பர்கள் இருக்கும் அறைக்கு ஓடி வந்துவிட்டாள். அவளைக் கண்டதும் கதிர்,

" என்னடி... மாதுவை தனியா விட்டுட்டு வந்துட்ட..."

" அடப்போடா... அவள் பழைய குருடி கதவை திறடி கதை மாதிரி முருங்க மரத்துல ஏறி நிற்கிறா.... "

"என்னடி உளர்ற...."

" கோபம் வந்தா ஒரு பார்வை பாப்பாளே..... அப்படி பார்த்தா நான் ஓடி வந்துட்டேன்"

என்றாள் வெகுளியாக. திருமணம் ஆகியும் இன்னும் தன் தோழி சிறுபிள்ளை போல் உள்ளாளே என்றெண்ணியவன்,

" போடி லூசு...."

என்று கதிர் அவளது மண்டையில் தட்டிவிட்டு மாதுரியை தேடிச் சென்றவனை துருவ் தடுத்தான்.

"போகாத மச்சான் அவளை கிருபா அண்ணா பார்த்துப்பார்..... நாம போகவேண்டாம்"

" ஏன்டா...."

" வேண்டாம்னா... விடேன்டா ... ரேணு அவ கூட இரு. ஏதும் பேசாத"

என்றவனிடம் பதில் பேச்சு பேசாமல் மாதுரியின் அறைக்கு விரைந்தாள் ரேணு. ரேணு, சுதாகரி மற்றும் சில பெண்கள் மாதுரியின் கையில் பால் சொம்பைக் கொடுத்து கிருபாகரனின் அறைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது கேலிப்பேச்சுக் கேட்டு மாதுரியின் உள்ளம் உலைக்களம் போல் கொதித்தாலும் வெளியே புன்னகை காட்டி நின்றாள். அதன் வெளிப்பாடே தோழியிடம் அப்படி காய்ந்தது. அறையின் உள்ளே நுழைந்ததும் கிருபாகரன் தனது மடிக்கணினியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.

மாதுரி மெல்ல கட்டிலின் மறுபக்கம் சென்று அவன் முதுகுப்புறம் எட்டிப்பார்க்க முகநூலில் ஏதோ பதிவு போட்டுக் கொண்டிருந்தான். அதை கண்டதும் அப்படியே சொம்பைக் கொண்டு ஓங்கி தலையில் அடித்தால் என்ன?....என்ற வெறி வந்தது.

அந்த கடுப்பில் பால்சொம்பை மேசையில் தடாரென்று வைத்தாள். அதில் பால் சிதறி அவளுக்கு புறம் காட்டி அமர்ந்திருந்த கணவன் மீது பால்ச்சொட்டுகள் தெறித்து விழுந்தது . அதில், பதறிப்போய் என்ன என்பது போல் பார்த்துவிட்டு அவளது கோபம் கண்டதும் அவனுக்கு சிரிப்பு வந்தது .

"என்னம்மா.... ரூமுக்குள் வந்ததும் கணவன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கனும்.... பால் ஊற்றிக் கொடுக்கனும்.... புருசன் பேச்சை பதமாக கேட்டுக்கிட்டு பக்குவமா அனுசரணையா
நடந்துக்கனும்னு வெளியில் சொல்லி அனுப்பலயா?......"

" என்ன கேட்ட பாலா?.....அதுக்கு என்ன ஊத்திரலாம்......"

" அடேங்கப்பா.... ரொம்ப சூடா இருக்கீங்க போல மிஸஸ். கிருபா "

என்றவன் பாலை தம்ளரில் ஊற்றி ஒரு மடக்கு அருந்தியவன் அவளிடம் மீதியை தர, அவளோ

" ச்சீ.......எச்சில்...... எனக்கு வேண்டாம்"
என்றாள் அருவருத்த முகமாய். அதில் முகம் சுணங்கியவன்,

" அடேங்கப்பா.... அஞ்சு பேரும் ஒரு குல்பி ஐஸ் வாங்கி மாறி மாறி சப்புக்கொட்டி சாப்பிடுவீங்க. அப்போல்லாம் எச்சில் தெரியலயா..... புருஷன் குடிச்சது மட்டும் உனக்கு எச்சிலாக்கும்"

ரொம்ப பேசுறாலே இப்படியே விட்டால் சரிப்படாது என்று எண்ணியவன் ஒரே மூச்சில் பாலை வாயில் சரித்து அதனை வாய்க்குள்ளேயே விழுங்காமல் தக்க வைத்துக் கொண்டவன் ஸ்டைலாக வேட்டியை தன் பின்னங்காலால் பின் நோக்கி தூக்கி கையால் மடித்துக் கட்டி அவளை பார்க்கும்போதே மாதுரிக்கு புரிந்து விட்டது. பயபுள்ள ஏதோ பிளான் பண்ணி விட்டானே என்று நினைத்தவள் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மார்பின் குறுக்கே கைகளை கட்டி கொண்டு தைரியமாக அவன் முன்னே நின்றாள். கிருபா அவளை நோக்கிமுன்னேற அவள் மெல்ல பின்னோக்கி சென்றாள். சற்றும் தாமதியாமல் அவளை படக்கென்று தன்கை வளைவுகளில் கைது செய்தவனின் இதழில் விசமப் புன்னகையே எதையோ அவளுக்கு விளம்பிற்று . மாதுரி திமிர முயற்சிக்கும் முன் அவளின் இதழ்களை கைதுசெய்த விட்டான் அந்த கள்ளன்.

மெல்ல தன் வாயில் ஊறிய தேனுடன் இருந்த பாலை தன் அவளின் அதரங்களோடு ஒரு யுத்தம் நடத்தி, அதை அவளுக்கு புகட்டிவிட்டான் அவளின் காதல் ராட்சசன். பாதி விழுங்கியவளுக்கு மீதிய விழுங்க இயலாமல் ஒவ்வாமையில் மூச்சுத்திணறி வாந்தி வருவது போல் இருந்தாலும் தன்னவன் விட்டபாடில்லை.
முழுவதையும் பருகவைத்து மதுவுண்ட வண்டாய் அவளது இதழை அழகாய் மேய்ந்தான். அதில், மூர்ச்சையுற்று அவனது நெஞ்சில் மேல் கொடியாய் சரிந்தாள்.
" போச்சு ...போச்சு... முதலிலும் கோணல் முற்றிலும் கோணல் ஆகிவிட்டதே. குட்டிசாத்தான் எழுந்துவிட்டாள் என்றால் நமக்கு பால் ஊத்திவிடுவாளே என்று பயந்தவன் மெல்ல அவளை தன் கைகளில் ஏந்தி படுக்கையில் கிடத்தினான் .

அவனது அறையிலேயே குளிர்சாதனப்பெட்டி இருந்தமையால் குடிநீரை எடுத்து மாதுரியின் முகத்தில் தெளித்தான்.அவளது முகத்தில் நீர் பட்டதும் அன்றலர்ந்த மலரின் மேல் பட்ட பனித்துளியாய் இருந்த மனைவியை ஆசை தீர பார்த்தான் கிருபாகரன். மெல்ல கண் திறந்தவள் கணவனின் காதல் பார்வையில் நியாயமாக உருகி இருக்கவேண்டும் மாறாய் சற்றுமுன் நடந்த நிகழ்வு கண்முன் தோன்ற அவள் அவனது சட்டையை பிடித்து சரமாரியாக அடித்து துவைத்து எடுத்து விட்டாள்.
விடுடி.... ராட்சசி... கருவாச்சி.... ரவுடி விடுடி... வலிக்குது ....பைத்தியம் ....அச்சோ.... என்ற கிருபாகரனின் அலறல் சத்தம் தான் அறை முழுதும் கேட்டது. தன் கை நோகும் வரை மாதுரி அடித்து ஓய்ந்தவள் கட்டிலில் பாகுபலி ராஜமாதா ரேஞ்சில் அமர்ந்து கொலைவெறியுடன் பிரபாகரனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளது பார்வையில் பயம் தொற்றிக் கொள்ள வேண்டிய கணவனுக்கோ சினிமாவில் வடிவேலுவை அடித்து துவம்சம் செய்யும் கோவை சரளாவின் நினைவு வர வாய் விட்டு சிரித்து விட்டான். விடுவாளா அவனது காதல் ராட்சசி தலையணையை எடுத்து அதற்கும் மொத்தி விட்டாள். அன்றைய அவர்களது முதலிரவு ரகளை இரவாய் போனது தான் மிச்சம் .

தேவையாடா உனக்கு என்று நினைத்தாலும் அவளது விரல்களின் ஸ்பரிசம் தன்மேல் பட்டது போதும் என்று எண்ணினான் மாதுரியின் காதல் ராட்சசன். இருவரின் காதல் மோதல் போர் முடிந்ததும் அசதியில் ஆளுக்கொரு மூலையில் உறங்கிவிட்டனர் . விடியற் காலையில் கண்விழித்ததும் கட்டிலுக்குக் கீழே வெற்றுத் தரையில் மல்லாந்து படுத்திருந்த கணவனைப் பார்க்க சிறுபிள்ளையாய் அலைந்து திரிந்து களைத்து உறங்குவது போல் தெரிந்தது மாதுரிக்கு.
குளித்து முடித்துவிட்டு மாமியாரிடம் சென்று,

"அத்தம்மா என்ன செய்யணும்? நான் ஏதாவது வேலை செய்யட்டுமா? "

என்றவளைக் கண்டு முகம் மலர்ந்த சுதாகரி

"ஒண்ணும் வேணாம்மா.... காளீசு எல்லா வேலையையும் பார்த்துப்பா... தம்பி எழுந்து விட்டானா?.."
என்றார்.
கணவனின் தூங்கிக் கிடந்த கோலத்தைக் எண்ணியவளுக்கு புன்னகை வர

" இன்னும் எழும்பல அத்தம்மா"

" சரிமா ....மெல்ல வரட்டும்.. நீ போய் தல சீவி இந்த பூவ வெச்சுட்டு சீக்கிரமா வாம்மா" என்றவரிடத்தில் மறு கேள்வி கேட்காது சென்ற மருமகளை கண்டு வியந்தார். பிரபாவின் தோழியாய் வீட்டிற்கு வரும்போது 'அத்தம்மா' என்று பின்னாடியே சுற்றி திரிவாள். வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பாள். அவருக்கும் பெண்குழந்தை பிடித்தம் என்பதால் சிறு பிள்ளைக்கு எடுத்து சொல்வது போல் பதில் கூறுவார் சுதாகரி. அப்போது காளீசுக்கும் அதையே தோன்ற எஜமானி அம்மாவிடம்,

" சின்ன பாப்பாவிடம் நிரம்ப வித்தியாசம் வந்துவிட்டது ...வாய் ஓயாது கேள்வி கேட்கும் பெண்.... இப்போ மறுபேச்சு பேசாமல் போகுது "
என்று கேட்டே விட்டாள்.

" காலம் பக்குவப்படுத்திற்று போல "

என்ற சுதாகரிக்கு இளைய மகன் நினைவில் வர கண்கலங்கினார். "அருமையாக ரெண்ட பெத்து ஆசையா வளர்த்து ஒண்ண மண்ணுக்கு வாரிக் கொடுத்து விட்டோமே அம்மா"

என்று கதறி விட்டாள் காளீசு . அதில் சுதாகரியும் அவளைக் கட்டிக் கொண்டு அழுதுவிட்டார். இயற்பெயர் காளீஸ்வரி. திருக்கானப்பேர் சொர்ணகாளீஸ்வரரை வேண்டி அவளைப் பெற்றததால் இப்பெயர் வைத்தனர் அவளது பெற்றோர். திருமணமே செய்துகொள்ளவில்லை அந்த வீட்டில் அவளும் ஒருத்தி . சுதாகரிக்கு பிடித்த தோழி . கிருபாகரன் ,பிரபாகரன் இருவரையும் செவிலித்தாயாய் போற்றி பாதுகாப்பாய் வளர்த்தவள். அவர்களின் 'காளீசம்மா 'என்ற அழைப்பு தான் பெற்றெடுத்த குழந்தைகளே தன்னை அம்மா என்று அழைப்பது போல் தோன்றும். மீண்டும் தங்கள் அறைக்கு வந்த மாதுரி கணவன் ஒருக்களித்து கைகளை தலைக்கு அணை கொண்டு படுத்திருப்பதைக் கண்டு இரக்கமுற்றவளாய் தலையணையை எடுத்து தலைக்கு வைத்துவிட்டு சத்தமில்லாமல் மிதமாய் தன்னை அலங்கரித்துக்கொண்டு மாமியாரிடம் வந்தாள்.
"அத்தம்மா "என்று குரல் கொடுத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தவளின் முன் தத்தம் சோகங்களை காட்டாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்த முகமாய் நின்றனர் மாமியார் இருவரும் (தம் கணவனை வளர்த்த வளர்ப்புத்தாய் காளீசும் அவளுக்கு மாமியார் தானே).

" அழகா இருக்க பாப்பா "

என்று விரல்களில் நெட்டி முறித்தாள் காளீசு. அதை ஆமோதித்த சுதாகரி ஒரு சிறு பித்தளைக் குடத்தை மாதுரியின் கையில் தந்துவிட்டு, வெற்றிலை ,பாக்கு ,சூடம், தீப்பெட்டி மஞ்சள், குங்குமம் போன்ற சகிதத்தை அவளது முந்தானை மடியில் போட்டு சொருகிக் கொள்ள சொன்னார்.
" கோவில் குளக்கரையில் கிழக்கு நோக்கி நம் குல தெய்வத்தை மனசுல நினைச்சு கும்பிட்டுட்டு படித்துறையில் இதெல்லாம் வைத்து சாமி கும்பிட்டு கற்பூரம் ஏத்தி கண்களில் ஒத்திக் கொள்ளம்மா..... மஞ்சள் குங்குமத்தை நெற்றியில் வைத்து விட்டு பிறகு வெத்தலையில் அதை வைத்து ஒத்த ரூபாயும் வச்சு தண்ணில போட்டுட்டு ஒரு குடம் தண்ணி எடுத்துட்டு வெரசா வீட்டுக்கு வாம்மா .... காளீச துணைக்கு கூட்டிட்டு போ "
என்றார் சுதாகரி. மாமியார் சொன்னபடி செய்து விட்டு வந்தவளை சாமி அறையில் குடத்தை வைத்து விட்டு விளக்கேற்ற சொன்னார். அவளும் தட்டாது செய்தாள் . பின்னர் காளீச பார்த்து 'இந்த நீரில் பானகம் செய்து வீட்டில் எல்லோருக்கும் கொடு வேலையாள் உட்பட ' என்றவர்

"வா காபி சாப்பிடலாம்"

என்றார் இன்முகமாய் காபி அருந்தும் போது

" இது ஏன் எதுக்குன்னு அப்போலாம் தெரியல.... ஆனா கட்டாயம் செய்யணும்னு எங்க மாமியார் சொல்லி தந்தாங்க மா....அப்புறம் ஒருநாள் அடுத்த தெரு பாக்கியாத்தாள் பாட்டி இதுக்கான விளக்கம் தந்தாக .....
அதாவது , முதன்முறையாக வாழ்க்கைப்பட்டு வரும் புது மணப்பெண் கங்கையானவளிடம் நான் வந்த நேரம் ஊரில் மாரி பெய்து முப்போகம் விளைஞ்சு எங்கள் குலமோங்க வேண்டும் என்று மனதார வணங்கும் பொருட்டு இம்மாதிரியான சடங்கு செய்வர். டவுனுக்குள் இந்தப் பழக்கம் குறைந்து விட்டது.நம்மைப் போன்ற கிராமவாசிகள் இன்றளவும் கடைபிடிக்கிறோம்" என்ற மாமியாரிடம் சற்று அளவளாவி விட்டு தன் அறைக்கு சென்றபோது கணவன் குளித்து எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தான். கணவனை எப்படி சொல்லி அழைப்பது என்று தெரியவில்லை அத்தான் என்று கூப்பிட மனம் வரவில்லை மாறாக மைதாமாவு என்று கூப்பிட்டால் வீட்டில் இருப்போர் தவறாக எண்ணுவார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அவன் திரும்பி பார்த்துவிட்டு,

" என்ன மேடம் உங்க புருஷன்தான்... ஏன் எப்படி பாக்குறீக " என்றான் அவளது பாணியில். அதில் "ம்க்கும் " என்று நொடித்து கொண்டவள்

"உன்கிட்ட பேசணும்"


"ஏன்டி கட்டிய புருஷனை இப்படித்தான் ஒருமையில் பேசுவதா"

"நான் அப்படித்தாண்டா பேசுவேன் "

"என்னடி டாங்கிற "

"ஆமா உனக்கும் கருணாவுக்கும் ஒரே வயசுதான். இதைவிட கருணா என்ன விட பத்து வயசு ஜாஸ்தி .அவனையே டா போட்டு தான் பேசுவேன்.... நீ மட்டும் என்ன எனக்கு விதிவிலக்கா?...."


" அவன் உனக்கு அண்ணன். நான் உனக்கு புருஷன்டி. அத்தான்னு கூப்பிட்டா அடியேன் பிரியப்படுவேனடி தங்கம்மா"
என்றான் கண்சிமிட்டி அவள் திகைத்து போன மறுகணமே முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு

"அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். போடா.... மைதாமாவு "

"திமிருடி.... சரி என்ன பேச வேண்டும்"

" என்னை ஏன் நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட "

என்ற அவளது நேரடியான கேள்வியில் ஆச்சரியமுற்றவன் பின்னர் கேலி குரலில்

"குடும்பம் நடத்தி புள்ள பெத்து சந்தோஷமாக வாழ"

" நீ வேற எந்த பெண்ணை கட்டி இருந்தாலும் இதே சந்தோஷம் கிட்டுமே... என்னை ஏன் கட்டிக்கிட்ட ?..."

"அதான் சொன்னேனே......"

" நடிக்காதடா ...உண்மைய சொல்லு?.."

அவன் மௌனமாய் அவன் முகத்தை பார்த்து இருந்தான்.

"சொல்லுடா ...என்னை பழிவாங்க தானே திருமணம் செய்தாய்"

' இல்லையே 'என்று தலையசைத்தவனிடம்

' உன் தம்பி சாவுக்கு நான்தான் காரணம் என்று நினைத்து என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட... கொஞ்ச நாள்ல எனக்கு ஒரு பிள்ளையை கொடுத்துவிட்டு என்னைய அத்துவிட்டுட்டு போய்டுவ... நான் அவமானத்துல நாண்டுகிட்டு சாகணும். அதானே உன் பிளான் "


"பார்ரா ஓவர் imagination வேண்டாமடி தங்கம்மா"

" கேட்டதுக்கு பதில் சொல்லு "

"ஏற்கனவே சொல்லிட்டேன் "

"என்னன்னு "

"காதல் தோல்வி ஏற்பட்ட அபலைப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு ஆசை அதான் உன்னை கட்டிக்கிட்டேன் "

என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு . அவன் பொய் சொல்கிறான் என்பதை அவனது செயலில் உணர்ந்தவள் கடுப்பாகி மேசையில் இருந்த தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்தாள். அவன் சற்று விலக 'ஆத்தி.... ராட்சஸி அகோரியாகிவிட்டாள்' என்று நினைத்தவன்

"ஐயோ அம்மா ....என் பொண்டாட்டி கட்டுன புருஷனை கைநீட்டி அடிக்கிறாளே.... பாதகத்தி..... இந்த அநீதியை கேட்க ஆளே இல்லையா"
என்று வாயில் புறங்கை வைத்து அலறிக்கொண்டே ஓடிச்சென்றவனை பார்த்து சிரிப்பு வந்தாலும் முறைத்துக் கொண்டே நின்றாள் அவனது காதல் ராட்சசி.

தன் கனவு கானல் நீரானதே என்றெண்ணி குமைந்தவளின் கண்முன்னே காதல் அன்பொழுக தன் காதல் கணவன் இருக்கிறான் என்பதை எப்போது அறிவாள் இப்பேதை......
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 6


கணவனின் சின்னஞ்சிறு செயல்கள் கூட மாதுரிக்கு நண்பன் பிரபாகரனையே நினைவு கூறியது. அதே சமயம் அவள் கடந்துவந்த காதலையும் நினைக்க தவறவில்லை மாதுரியின் மனம். புதுமண தம்பதிகளை வடிவு முறைப்படி அழைத்திருந்தார். ஜெகந்நாதன் ,சுதாகரியும் அவர்களை சந்தோசமாக அனுப்பி வைத்தனர் .கூடவே கொசுறாக நண்பர் கூட்டமும் இணைந்து கொண்டது. மாதுரியின் தம்பி சர்வேஷ் அக்கா கணவன் கிருபாகரனை தவிர மற்ற அனைவருடனும் இணக்கமாய் இணைந்து கொண்டான். வேண்டுமென்றே கிருபாகரனை தவிர்த்தான். அவனைப் பார்க்கும்போதெல்லாம் அக்காவோட திமிர் அப்படியே இருக்கிறது என்று உள்ளூர கடுத்துக் கொண்டாலும் தன் காதல் மனைவியின் தம்பியாயிற்றே என்று நினைத்ததும் அவன் இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது . துருவ், ரேணுவிடம் அண்ணா அண்ணி என்று சர்வேஷ் ஒட்டிக் கொண்டு அலைவதை காணும் போது கிருபாவிற்கு சிறிது பொறாமை கூட வந்தது . அதை கண்டு கொண்ட மாதுரி மெல்ல தம்பியை கணவனிடம் பேச வைத்தாள். அவனும் அதிகம் பேசாவிடினும் தேவைக்கேற்ப அக்கா கணவனின் மனம் கோணாமல் பேசினான். கணவனின் குறிப்பறிந்து நடக்கும் மனைவியை காணும்போது மனம் சிறகடித்துப் பறந்தது. வடிவு விருந்தில் விதவிதமாக சமைத்து பரிமாறினர் .அவனும் ஆசையாய் உண்பதைக் கண்டு மகிழ்ச்சியுற்றார். பணக்காரன் என்ற பகட்டில்லாது தரையில் அமர்ந்து உண்பதைக் கண்டு சிறிது மனம் வருந்தினாலும் மாமியார் சமையலை ருசித்து சாப்பிட்ட விதம் அதனை மறக்கச் செய்தது அவனுடைய செயல். இலையில் வைத்த பதார்த்தங்களை பார்த்த மாதுரி மனதுள் 'அம்மா உனக்கு இதெல்லாம் செய்ய தெரியுங்கிறதே இன்றைக்கு தான் எங்களுக்கு தெரியும். இவனை பார்.... முன்னப்பின்ன சோத்த பார்க்காத மாதிரி திங்கிறத..... என்று கணவனைக் கண்டு முறைத்தாள் . அவளது பார்வையை உணர்ந்தானோ என்னவோ

"ஆமாடி.....இப்போதான் சோத்தப் பார்க்குறேன். உனக்கு என்னடி..... வேணும்னா நீயும் வாங்கி கூச்சப்படாமல் சாப்பிடு. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்"
என்றான் மெல்லிய குரலில் அவள் பக்கம் சாய்ந்து . அதில் குறுகுறுப்பு தோன்ற, "அய்யே......" என்று கழுத்தை நொடித்துக் கொண்டாள் மாதுரி. அதைக்கண்டு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு உணவில் கவனமானான். ஆண்கள் உண்ட களைப்பில் உறங்கச் செல்ல பெண்கள் மூவரும் உண்டு விட்டு சுத்தம் செய்து தத்தம் அறைக்குச் சென்றனர். அது பழங்காலத்து ஓட்டு வீடு. மாதுரி சிங்கப்பூரில் வேலை செய்யும்போது அனுப்பிய பணத்தில் இக்காலத்திற்கு ஏற்ப மகள் மற்றும் மகன் அறைகளை மட்டும் சற்று மாற்றி இருந்தார் வடிவு. அறையில் கணவன் கட்டிலில் நீட்டி நிமிர்ந்து கைகளை வயிற்றின் மேல் கோர்த்தபடி உறங்குபவனைக் காண்கையில் பிரபாவின் பிம்பமே தோன்றியது. அவனும் இப்படித்தான் உறங்குவான். சில கணத்தில் நிஜத்தின் நிகழ்காலம் உறைக்க தலையை சிலுப்பி கண்களை இறுக மூடி பெருமூச்சு விட்டாள். இப்படியே மறுநாளும் கழிய உண்பதும் உறங்குவது பிடிக்காமல் எங்காவது வெளியே செல்லலாம் என்று முடிவு செய்தனர். அனைவருக்கும் மலையேறுவது பிடித்தம் என்பதால் பிரான்மலை செல்லலாம் என்பது முடிவாயிற்று. மலையின் அடிவாரத்திலேயே காரை நிறுத்திவிட்டு ஆளாளுக்கு ஒரு பொருளை எடுத்துக்கொண்டு மேலே ஏறினர். அது நல்ல மழைக்காலம் என்பதால் அந்த இயற்கைச் சூழல் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டது. சர்வேஷ் கதிர் மற்றும் துருவ் கரங்களைப் பற்றி இழுத்துக் கொண்டு வேகமாக ஓடினான். அவர்களும் இளையவனின் வேகத்திற்கு இணையாக சென்றனர். மற்றவர்கள் சிரித்துக் கொண்டே பின்வர மலை மேலே இருந்து கீழே சில கல்லூரி மாணவிகள் இறங்கி வந்து கொண்டிருந்தனர். கதிர் அவர்களைக் கண்டு ஜொள்ளுவிட்டு சைட் அடித்தான். சர்வேஷோ " கிரகம்" என தலையில் அடித்துக் கொண்டான். அதைப் பார்த்ததும் துருவ் ,

" அண்ணன் வேற இருக்காருடா.... கொஞ்சம் வாலை சுருட்டி வை. இல்லை அவர் உன்னை சுருட்டி மலையிலிருந்து உருட்டி விட்டுவிடுவார் "
அதில் கதிருக்கு கோபம் வர

" நானே இப்போதான் கலர் கலரா மைனாக்களைப் பார்க்கிறேன். அது பொறுக்கலயா ராசா.... அந்த சிவப்பு சுடிதார் என்னையே பாத்துட்டு இருக்கு மச்சான் பாரேன்...." என சந்தோஷத்தில் அழகாய் வெட்கப்பட்டான். அதைக் கண்டு எல்லாரும் சிரித்தனர். பெண்களை விட ஆண்களின் வெட்கத்திற்கு எப்போதும் கூடுதல் அழகுதான். அப்போது ஒரு பெண் கூட்டம் கிருபாவை சுட்டிக் காட்டி ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டு சிரித்தனர். அவர்களில் ஒருத்தி வழிந்தபடி

" ஹாய் ....ஹேண்ட்சம் நீங்கள் வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கீங்களா "
அதில் வியப்படைந்த கிருபா.

" ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும்"

" ஆளைப் பார்த்தாலே தெரியுதே... வாங்க நாங்க உங்களுக்கு மலையை சுற்றி காட்டுகிறோம் "
என்றவளை நன்றியுடன் பார்த்தான் கிருபாகரன்.

"தத்தி.... இதுக இவனை கலாய்க்கிறது தெரியாம வெட்டுப்படப் போற பலியாடுபோல பின்னாடியே போறான் பாரு மடப்பய" என்று உள்ளுள் கடுப்படித்தபடி கணவனை வறுத்தெடுத்தாள் மாதுரி.

"வாங்களேன் போகலாம் "
என்று அந்தப் பெண்ணின் பின்னால் நடந்தான் கிருபாகரன். அதில் மாதுரிக்கு பற்றிக் கொண்டு வந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அவனுடன் நடந்து சென்ற பெண்களில் ஒரு வாய்த்துடுக்கான பெண்,
" சார் உங்களுக்கு திருமணம் ஆயிற்றா?.."
என்றாள் கண்களில் ஆர்வம் தேக்கி. அப்போது தன் பின்னால் வரும் மனைவியின் முகம் நினைவில் வர புன்னகை வரப்பெற்றவனாய் திரும்பி "ஓய் ....."என்று அழைத்தான் கிருபாகரன். கணவனின் அழைப்புக் கேட்டு முறைத்தவாறு அவனருகே நின்ற மனைவியின் தோள்களில் தன் கையை போட்டு தன்னருகே அணைத்தவாறு நின்று கொண்டு
"இவள்தான் என் மனைவி மிஸஸ்.ரதி மாதிரி கிருபாகரன்"
கிருபாகரன் என்ற தனது பெயரை அழுத்தி கூறியவன் மனையாளின் முகம் பார்த்து ஒற்றைப் புருவம் தூக்கி புன்னகைத்தான். அவர்களது பொருத்தமின்மையைக் கண்டு விழித்தனர் அந்தப் பெண்கள். அந்த வாயாடிப் பெண் மட்டும் தைரியம் வரப்பெற்றவளாய்
"சார்....நீங்க சினிமாவில் வர்ற துல்கர் சல்மானைப் போல் அழகா இருக்கீங்க. உங்க மனைவி கறுப்பா இருக்காங்களே.... எப்படி உங்க திருமணத்திற்கு உங்க பெற்றோர் ஓகே சொன்னார்கள்"
என்றாள் அவளது பேச்சில் மாதுரியின் முகம் ஒருமாதிரியாய் அதிருப்தியை காட்டியது . தங்களிடையே மனப்பொருத்தம், புற பொருத்தம் ஏதுமின்றி நடந்த திருமணம் தந்த அவமதிப்பு தமக்கு தேவைதான் என்றெண்ணி அவள் மனம் வெட்கித் தலை குனிந்து கொண்டாள் ரதி மாதுரி. மேலும் சில பெண்கள்

" உங்களுக்கு ஏதேனும் உடலுக்கு சுகமில்லையோ.... இவங்க உங்களுக்கு முறைப்பெண்ணோ?.... பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் திருமணம் செய்து கொண்டீர்களோ?... காதல் திருமணமா?... என்ற கேள்விகளை அந்தப் பெண்கள் சரமாரியாய் அடுக்கிக் கொண்டே போயினர் .அதில் வருத்தம் தோன்ற அவளது தோளில் இருந்த அவனது கையை விலக்கிக் கொண்டு முன்னே நடந்து சென்றாள். அவளது வேதனை வருத்தமளிக்க,
"எங்களது லவ் கம் வித் அரேஞ்ச் மேரேஜ் மா.... அவள் கருப்பாக இருந்தாலும் குணத்தில் மாசற்ற மழலை மனம் கொண்டவள். விவேகமுள்ள தைரியமான வீரம் கொண்ட பெண். அத்துணை நல்லவள். அவள் என்னை கண்ணும் கருத்துமாய் கவனித்து காதலிக்கும் அன்புத் தாரகை அவள்"
என்றவனின் கண்களில் நிறைந்த காதலில் சிலர் உணர்ச்சிவசப்பட்டனர். சிலர் சரியான லூசா இருப்பானோ என்று நினைத்தனர். பிரான்மலையில் உள்ள தர்காவில் மனைவி ஓரமாய் அமர்ந்து இருப்பதை கண்டு அவளருகில் அமர்ந்தான். கணவனின் வருகையை அறிந்து,
" ரகுவை திருமணம் செய்து இருந்தால் இதுபோன்ற அவமதிப்பும் மனவருத்தமும் அவனுக்கு உண்டாகியிருக்கும். என்னால் உனக்குத் தான் இப்பொழுது வேதனை. நான் காதலித்த ரகுவிற்கும் நான் பொருத்தமில்லை ...நண்பனாக இருந்த பிரபாவிற்கு பொருத்தமில்லை... கணவனாய் இருக்கும் உனக்கும் நான் பொருத்தமில்லை ...என்னை விட்டுப் போய் விடு. ப்ளீஸ் எனக்கு இந்த அவமான முகச்சுளிப்பு எல்லாம் பழகிய ஒன்று தான். உனக்கு இதெல்லாம் புதிதாக இருக்கும். இந்த வேதனை உனக்கு வேண்டாம்"
என்றவளின் குரலில் அத்தனை வேதனை இருந்தது.
" யார் சொன்னா உனக்கும் எனக்கும் பொருத்தமில்லை என. உனக்கும் எனக்குமான பொருத்தத்தை அந்த ஈசன் நிர்ணயித்துள்ளான். லூசு மாதிரி உளறாதே"
என்று மனைவியை எப்போதும் போல் புன்னகை முகத்துடன் கடிந்தான். அதில் சலிப்படைந்த அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிகொண்டாள். அதில் முகம் வாடியவன் மனைவியவளின் தாடைப் பற்றி தன் முகம் நோக்கி திருப்பி நெற்றியில் இதழ் பதித்து,
" எனக்கு பொருத்தமானவள் நீ மட்டுமே தங்கம்மா... உன் இடத்தை எவராலும் நிரப்ப இயலாது "
என்றான் காதலுடன். அவனை வியந்து நோக்கினாள் அவனது மனையாள்.
ஆம் அவனது தங்கம்மா என்று அழைப்பு எங்கேயோ பழக்கப்பட்டது போல் அவளை சிலிர்க்க வைத்தது. அந்த அழைப்பின் போது அவனிடம் கோபம் வெறுப்பு போன்றவற்றை காட்ட இயலாததை கண்டு அவள் மீதே கோபம் வந்தது. நண்பர்களுடன் சேர்ந்து மலையேறும் போது கிருபாகரன்,
" இந்த மலையோட வரலாறு தெரிந்தவர்கள் சொல்லுங்கள் கேட்போம்"
அதற்கு கதிர்,
"முல்லைக்கு தேர் தந்த பாரி ஆண்ட மலைதானே இது.... இதெல்லாம் நான் சொல்வதை விட நம்ம தமிழ் அம்மா மாதுரி சொன்னால் தான் தகும்.... தமிழ் டீச்சர் சொல்லுங்க " என்க அவள் கூற ஆரம்பித்தாள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள இம்மலையை இலக்கியம் 'பறம்பு மலை' எனவும் சொல்வர். வேளிர் குடியில் பிறந்த பாரி என்ற சிற்றரசன் இம்மலையை தலைநகராகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள 300 ஊர்களை ஆண்டான் என்பது வரலாறு. அவனது கொடைப்புகழ் கண்டு காழ்ப்புணர்ச்சி கொண்ட மூவேந்தர்கள் அவன் மீது படையெடுக்க, அவனை வெற்றி கொள்ள இயலாமல் அவனுக்கு கொண்டு செல்லும் உணவு பொருட்களை தடுத்தார்கள். பசி தாளாது தன்னிடம் பாரி சரணடைவான் என்று நம்பினர். அதை அறிந்த கபிலர் கிளி, மைனா, புறா போன்றவற்றை பழக்கப்படுத்தி நெல் மணிகளைக் கொண்டு வரச்செய்தார். மேலும், மூவேந்தர்களிடத்து" நீங்கள் எங்களுக்கான உணவை தடுத்தாலும் எங்களது மலையில் உள்ள பழம், கிழங்கு, தேன், சுனை நீர் போன்றவற்றை இயற்கையன்னை எங்களுக்கு வயிறு காயாது போஜனமிடுகிறாள். ஆகையால் வேறு ஏதாவது முயலவும்"
என்று ஓலை அனுப்பினார். அதில் வெகுண்ட மூவேந்தர்கள் புலவர்கள் போல் கபட வேடமுற்று சூழ்ச்சியின்பேரில் பாரியை கொன்றனர். இங்குள்ள கொடுங்குன்ற நாதரை தரிசித்தால் கைலாயத்தில் உள்ள ஈசனைத் தரிசித்த நன்மை உண்டாகும் "

"அப்புறம் எப்படி இங்கு மசூதியும் வந்தது"

என கதிர் கேட்க,

" பிரான் என்ற முஸ்லிம் இறைநாதர் இங்கு தங்கினார். அவர் நினைவாக இங்கு மசூதி எழுதப்பட்டுள்ளது. பாரியைப் போன்றதொரு வள்ளலையும், வில்லாளியையும் பார்க்க முடியாது" என்றாள் பெருமையாய். மேலும் சில தகவல்கள் சொல்ல அவளது தமிழ் நடையில் பேச்சற்று மெய் மறந்து அவளை ரசித்தான் அவளது காதல் ராட்சசன். மலை உச்சிக்கு சென்ற பின் அங்கிருந்தபடி கீழே பார்க்க பச்சைப் பசேலென்று இருந்த வயல்வெளி வீடுகள் பார்க்க கண்களுக்கு விருந்தாக இருந்தது அதை கண்டவள் உற்சாகமாய்க் குதித்தாள் அந்த சந்தோசத்தை கிருபாகரன் அலைபேசியில் படமாக எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான். சில கணத்தில் நிகழ் காலம் உறைக்க தங்களுடன் இது போல் மகிழ்ச்சியாய் அளவளாவ தன் நண்பன் இல்லையே என்ற நினைவு வர துள்ளல் குறைந்து விழிகளில் நீர் கசிய கணவனைக் பார்த்தாள். அவளது தேடும் விழிகள் நண்பனின் ஏக்கத்தை மறையாது பறைசாற்ற அதைக் கண்டு கொண்டவன் அவளருகே வந்து ஆறுதலாய் அணைத்துக் கொண்டான் கிருபாகரன் . அவளும் எதிர்ப்பு தெரிவித்து திமிராமல் அணைப்பை ஏற்றுக்கொண்டாள். கணவளிடத்தில் தன் நண்பனைத் தேடினாலோ என்னவோ.... அந்த சமயத்தில் அவளுக்கு அந்த அணைப்பு மிகவும் தேவையாகவும் இருந்தது. மெல்ல மாதுரி கணவனது அணைப்பில் இருந்து விலகியவளை விடுவித்தவனின் முகத்தை அண்ணாந்து நோக்கி,
" நீ நல்லவன். அதனால் சொல்வதைக் கேள்.உனக்கு நான் சற்றும் தகுதியில்லா பொருத்தமற்றவள். என்னை விட்டுப் போய்விடு "
என்று விட்டு திரும்பியவளின் தோள் பற்றி ,
"நம் பந்தம் ஏழெழு ஜென்ம பந்தமடி தங்கம்மா.... நீ என்னை விட்டு போனாலும் நான் உன்னை தூக்கிட்டு வந்து விடுவேன்" என்று சிரித்தவன் அந்த சூழலில் இயற்கை தென்றல் சுகமாய் தன்மேல் தழுவி செல்ல அது ஏதோ ஒரு புதுவித உணர்வு தோற்றுவிக்க சுற்றுப்புறத்தில் யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்த அவன் சட்டென்று அவள் இதழ்கள் மேல் மெல்ல முத்தமிட்டு விலகி சென்றான் அந்த காதல் கள்ளன். அதில் வழக்கம்போல் விதிர்த்துப் போய் நின்றாள் மாதுரி.

அழகி பேரழகி நீ

கோவத்தில் பிடிவாதக்காரி நீ

பாசத்தில் உயிர் நீ

ஆனால் என் இதயத்தில்

மட்டும் கொள்ளைகாரியாய்

இருக்கிறாயே என்றும்

சிக்காத பெண்மானே!!

எல்லோரும் வீட்டிற்கு செல்ல வேண்டி மலையடிவாரத்தில் கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்கு கிருபாகரன்,துருவ் இருவரும் காரை எடுக்க வந்தனர். அப்போது சாலையில் தொடர்ந்து 4 கார் வேகமாக சர்ரென்று சென்றது. அதிலிருந்தவனைக் கண்டதும் ஆண்கள் இருவருக்கும் பகைத்தீ கொழுந்து விட்டு எறிய தன் கண்களில் அக்கினி ஜுவாலையாய் சிவந்தது.
" அண்ணா நமக்கான நேரம் எப்போது வரும்?... எதிரி நம் கண்முன்னேயே சுதந்திரமாய் சுற்றித் திரிவதை காண சகிக்கவில்லை அண்ணா" என்றான் வேதனையுடன்.
"காத்திரு....துருவ் நமக்கான நேரம் வெகு தூரத்தில் இல்லை "

என்ற கிருபாகரனின் உள்ளே மனசாட்சி 'பகைவனை இந்நிமிடமே கருவறுத்து விடு கிருபா' என சிம்மமாய் கர்ஜித்தது.
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-7


மலையை விட்டு கீழே இறங்கியதும் மாதுரியும் கிருபாகரனும் ஒரு காரில் வந்தனர். மற்றவர்கள் மற்றொரு காரில் வந்தனர். பகைவனைக் கண்ட வேங்கையாய் கிருபாகரனின் கைகளில் கார் வேகம் எடுத்து சீறிப்பாய்ந்தது. அதில் பயந்துபோய் மாதுரி சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டாள். பயத்தில் ' ஏன் இவ்வளவு வேகம்' என நினைத்தபடி கணவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவளுக்கு அவனது ரௌத்திர முகம் உள்ளுக்குள் குளிரெடுக்க வைத்தது. அவனைப் போன்றே துருவ்வும் அவனது கோபத்தை காரில் காட்டினான். எப்போதும் சாந்தமாக செயல்படுவனிடம் இந்த கோபமுகம் ,வேகம் கதிர் மற்றும் ரேணுவை சிந்திக்க செய்தது. சர்வேஷ் மட்டும் , "அண்ணா அத்தான் கார் முந்துகிறதா?.... இல்லை நம் கார் முந்துகிறதா?... என்று பார்க்கலாம் ....ம்ம்ம் ....கோ பாஸ்ட்..." என்று கைதட்டி ஆர்ப்பரித்தான். சர்வேஷின் உற்சாகத்திற்கு என இவ்வளவு வேகமாக துருவ் கார் ஓட்ட மாட்டான் . இவன் கோபத்திற்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது என யூகித்த ரேணு அவனை அடக்கினாள். அவனும் அண்ணியின் பேச்சைக்
கேட்டு சமத்தாக வந்தான். கதிர் மற்றும் ரேணு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். வீடு வந்து சேர்ந்ததும் அவரவர் தத்தம் அறைக்குள் பாந்தமாய் அடங்கிக் கொண்டனர். துருவ் குளியலறை சென்று தொட்டியில் இருந்த குளிர் நீரை அள்ளி தன் கோபத்தணல் தணிய தணிய கொட்டிக் கொண்டபோதிலும் பகைவனின் சிரித்த முகம் வந்து இம்சித்தது. வெகுநேரம் கழித்து ஈரத்தலையுடன் வந்தவனைக் கண்ட வடிவுக்கு மகன்
சர்வேஷை நினைவுப்படுத்த துண்டு எடுத்து வந்து ஈரம் போக துவட்டி விட்டார். அவரின் அன்பில் தன் தாய் நினைவுக்கு வந்தார். ஊர் வட்டு ஊர் வந்து படித்த துருவ்விற்கு தாயாய் இருந்து கவனித்துக் கொண்ட நண்பன் பிரபாவின் நினைவு பகைவனின் மேல்கொண்ட ஆத்திரத்திற்கு நெய் ஊற்றியது. வெளியில் ஏதும் காட்டாமல் மறைத்துக் கொண்டான் துருவ். அங்கு மாதுரிக்கு முன் அறைக்கு சென்ற கிருபா குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான் . அறையினுள்ளே வந்த மாதுரி குளியலறையில் சத்தம் கேட்கவும் அலமாரியைப் பார்த்தாள். கணவன் மாற்றுத் துணியோ,துண்டோ எடுத்து செல்லவில்லை என்றறிந்தவள் கணவனுக்கு வேண்டியவற்றை எடுத்து கட்டிலில் வைத்துவிட்டு அவனுக்காக வேண்டி காத்திருந்தாள். கணவன் வராததைக் கண்டு சற்று பயம் தொற்றிக்கொள்ள குளியல் அறையின் கதவை தட்டினாள். அங்கு மனத்தீயை அணைக்கும்பொருட்டு ஷவரில் நின்றவன் கதவை தட்டும் சத்தம் கேட்டு 'வருகிறேன் 'என்று மட்டும் குரல் கொடுத்தான். அவன் குரல் கேட்டு நிம்மதியடைந்தவளாய் அவனுக்கு குடிக்க பானம் எடுத்து வர சென்றாள் மாதுரி . பின்னர் அவள் திரும்பி
உள்ளே வரவும் கிருபா குளியலறையை விட்டு வெளிவரவும் சரியாக இருந்தது.

குளியலறையிலிருந்து இடுப்பில் ஈரத் துண்டுடன் வந்த கணவனைக் கண்டு லஜ்ஜையுற்றவளாய் அவள் அவனுக்கு முதுகு காட்டி நின்றாள் . அதைக் கண்டவனின் இதழ்களில் சிரிப்பு தோன்றியது. அவனிடம் இருந்து எந்தவித சத்தமும் வராததை உணர்ந்தவள் திரும்பி பார்க்க ,அதே தோற்றத்தில் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு தலை சரித்து தன்னையே புன்னகையுடன் பார்த்தபடி நின்ற கணவனை கண்டு திகைத்தாலும், முகத்தில் தோன்றிய வெட்கச்சிவப்பை அவளால் மறைக்க இயலவில்லை .


பானம் நிரம்பிய கோப்பையை மேசையில் வைத்துவிட்டு நாணத்தோடு ஓடிவிட்டாள் மாதுரி. மனைவியின் நாணத்தைக் கண்டு கிருபாவின் மனம் வியந்தாளும் உற்சாகத்துடன் ஊஞ்சலாடி மகிழ்ந்தது . கிருபாகரன் உடைமாற்றி பானம் அருந்திக் கொண்டிருக்கும்போது மாதுரி மீண்டும் அறைக்கு வந்தாள். என்ன என்பது போல் பார்த்தான் கிருபா.
"என்ன கோபம்?..." என்றவளை புரியாதது போல் பார்த்த அவனை
முறைத்துக் கொண்டே ,


"காரில் ஏறியதிலிருந்து கோபமா இருந்தீயே.... ஏன்? என்னாச்சு? "


தன் கோபம் தன்னைக் காட்டிக் கொடுத்து விட்டதே என நொந்தாலும் கிருபாகரன் என்னவென்று சொல்வான். அதைச் சொன்னால் தன்னவள் தாங்குவாளா? இல்லை தனக்கு முன் தம் எதிரியை சம்ஹாரம் செய்யும் கொற்றவையாக மாறிவிடுவாளா? என தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தான். அவனது பதில் பேசாத மௌனம் எதையோ தன்னிடம் கேட்க விழைவதை உணர்ந்த அவள் கணவன் அருகில் கட்டிலின் ஓர விளிம்பில் அமர்ந்து ,


" என்னை உன் மனைவியாக நினைக்க வேண்டாம். தோழியாக எண்ணி என்னிடம் உன் மனக்கசப்பை பகிர்ந்து கொள். மனப்பாரம் குறைந்து லேசாகும் " என்றாள் கனிவுடன்.


" மனைவி எப்படி தோழியாக முடியும். தோழி காதலியாகலாம். காதலி மனைவியாகலாம். ஆனால், மனைவி தோழியாக முடியாது. அதனால் நீ
எனக்கு தோழியாகவும் வேண்டாம். காதலியாகவும் வேண்டாம். அன்பு மனைவியாக மட்டும் இருந்தால் போதும்" என்றான் கண்களில் குறும்பு காட்டி.


பின் மெல்ல அவள் அருகில் வந்து


"நான் வேண்டுமானால் மனைவி தன் காதல் கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முறைப்படி பாடம் கற்றுத் தரட்டுமா"
என்றவனை ஒரு பார்வை பார்த்து விட்டு

" போடாங்..... உன்னையெல்லாம் திருத்தவே முடியாது "

கட்டிலை விட்டு எழுந்தவளை கரம் பற்றி இழுத்தான். கணவனின் எதிர்பாராவிதமான செய்கையில் தவறி அவன் நெஞ்சின் மேல் சுகமாய் விழுந்தாள் . அதில் கிருபாவின் கோபம் போய் அவனது இளமை உணர்வுகள் தட்டி எழும்ப அவளைக் கீழே திருப்பி அவள்மேல் வந்து மெல்ல கழுத்தில் முகம் பதித்து காது மடலில் மென் முதல் முத்தம் ஒன்றை வைத்தான். கணவனின் மிக அண்மையான நெருக்கம் நெகிழச் செய்தாலும் நிகழ் காலம் உறைக்க அவனை பிடித்து தள்ளி விட்டு உடையை சரி செய்து கொண்டு மாதுரி வேகமாக அறையை விட்டு வெளியே சென்றாள்.
காரியத்தை கெடுத்தாயடா.... கிராதகா.... ஜென்மத்துக்கும் உன்
பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டாள். விருப்பமில்லாத பெண்ணை மணந்து விட்டோம் என்பதற்காக அவளிடம் நெருங்கலாமா? மடத்தனமான நடந்து கொண்டோமே. என்று எண்ணிக் கொண்டாலும் அவளது அருகாமை தந்த சுகம் அவளின் சுகந்த வாசம், அவள் தன் நெஞ்சில் சாய்ந்த தருணங்கள் ,மேலும் அவனது தாபத்தைக் கூட்ட தலை முடியை அழுந்தக் கோதிக்கொண்டு தன்னவளைத் தேடி தோட்டத்திற்கு சென்றவன் அங்கு மரத்தடியின் அருகே முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுவதைக் கண்டு வேதனையுற்றான். தன் அணைப்பு அவளுக்கு அத்துணை வெறுப்பாக இருந்திருக்கிறதே....தவறிழைத்து விட்டோமோ என்று தன்னுள் குற்றவுணர்ச்சியில் குமைந்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து மாதுரி ஆவேசமாய் எழுந்து தோட்டத்திற்கு நடுவே ஓடுவதைக் கண்டு ஒரு கணம் தவித்து விட்டு அவள் பக்கம் ஓடினான் பிரபாகரனும். ஏனெனில் தோட்டத்திற்கு நடுவே ஒரு பெரிய கிணறு உள்ளது. தோட்டத்திற்கு தேவையான நீர் அதிலிருந்துதான் பாய்ச்சுவர். ஆழமான கிணறும் கூட. அதில் விழுந்து தன்னை மாய்த்துக்கொள்ள

தான் ஓடுகிறாள் என்று எண்ணித்தான் அவள்பின்னே ஓடினான் அந்த ஆண்மகன். ஆனால் அவளோ அவனது எண்ணத்தை பொய்யாக்குவது போல் கிணற்றுக்கு அருகே சற்று தொலைவில் முல்லைக்கொடி மாலை நேரத்தில் அரும்பி மணம் பரப்பி படர்ந்து இருந்தது. அதனருகில் சிறு சிமெண்ட் மேடை இருந்தது. அதில் அமர்ந்தவள் அன்றலர்ந்த முல்லை பூங்கொத்தை கரமேந்தி


"நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன் என்று என் காதலுக்கு என்னை துரோகம் இழைக்க வைக்கிறாய். கிருபா என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தவன். அப்பேர்ப்பட்டவனின் இதழொற்றல், அணைப்பு என்னை உருக வைப்பது ஏனோ? சொல் மலரே.... இதெல்லாம் துரோகம் அல்லவா. என்னிடத்தில் காதலன்தான் தோற்றான் என்றால் காதலும் தோற்கும்? இல்லையே... நான் எவ்வாறு அப்படி அவன் இடத்தில் மயங்கி கிடக்கலாம். தவறுதானே ஒருவேளை மாங்கல்யம் மாயாஜாலமாக இருக்குமோ.... இருக்கும் அதனால்தான் அவனின் நெருக்கத்தில் மனம் மயங்குகிறது.

இல்லை எனக்கு இது போன்ற உணர்வுகள் வேண்டாம் கிருபாவின் காதல் எனக்கு வேண்டாம். எனக்கு என் காதல் தான் வேண்டும். நான் தனியாகவே இருந்து கொள்கிறேன். எனக்கு அவன் வேண்டாம். அவன்கிட்ட நீ சொல்லுவியா முல்லையே !.... நீ சொல்ல வேண்டும்... சொன்னால் அவன் கேட்பானா? என்று மலரிடம் கோபமாய் முறையிட்டு பின்ப மழலையாய் மன்றாடுபவளை தன் நெஞ்சில் சாய்த்து' நான் இருக்கும்போது உனக்கு வேதனை வேண்டாமடி தங்கம்மா' எனக் கூறி இறுக அணைக்கத் துடிக்கும் கைகளை கட்டிக் கொண்டு அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவளது காதல் ராட்சசன். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது மனைவியிடத்தில் தான் ஆழமாகப் பதிந்து இம்சிக்கிறோம். தன் அருகாமை அவளுக்கு வெறுப்பு அளிக்கவில்லை. மாறாக, அவளை தன்னோடு சேர விடாமல் தடுப்பது அவளது பழைய நினைவுகள்தான். இந்த நிமிடம் தந்த தித்திப்பே போதும் என்றெண்ணியவன் வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றான் அவளது கணவன். இரவு உணவின்போது கணவனை நிமிர்ந்து கூடப் பார்த்தாளில்லை . ஆனால் அவனோஅவளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் .

கணவன் பார்வை தன்னையே தீவிரமாக துளைத்தெடுப்பதை உணர்ந்தாலும் சட்டை செய்யாமல் காளீசு பின்னாடியே அத்தை என்று முந்தானை பிடித்து சுற்றிக் கொண்டிருந்த மனைவியின் செய்கையைக் கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தது. அவர்களின் இந்த மௌன யுத்தம் நாடகத்தை சுதாகரியும், ஜெகந்நாதனும் கண்டு தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர் . இரவு எனக்கு வெகு நேரம் கழித்து தங்களின் அறைக்கு வந்த மாதுரி ஆழ்ந்து உறங்கும் கணவனை கண்டு நிம்மதியுற்றவளாய் மெல்ல பூனை போல் நடந்து வந்து போர்வையை தரையில் விரித்து கைகளை தலைமாட்டுக்கு வைத்துக் தூங்கினாள். நள்ளிரவில் தன்னை யாரோ அமுக்குவது போல் தோன்ற பதறிப்போய் கண்விழித்தவள் கணவனின் கையணைப்பில்தான் இருப்பதை உணர்ந்து எழ முயன்றுத் தோற்றாள். மூடிய விழிகளுக்குள்ளே அவன் பேசினான்


"சாயங்காலம் தோட்டத்திற்கு ஏன் போனாய்? நான் இருக்கும் போதும் உனக்கு முல்லைக் கொடியுடன் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?"


அடி....ஆத்தி.... நாம் மலரிடம்
புலமபியது எல்லாம் கேட்டு விட்டானோ..... என்ற பயத்தில் அவன் முகம் நோக்கி தலை தூக்கி பார்த்தாள் . அவன் விழி திறந்து தொடர்ந்து பேசினான்


"நீ அழுவதற்கு என என்னிடம் விசாலமான நெஞ்சம் இருக்கிறது. சாய்ந்துகொள்ள உறுதியான புஜங்கள் என்னிடம் இருக்கிறது. இனி உன் துக்கம், சந்தோஷம் எல்லாம் என்னிடம் மட்டுமே பகிரப்படவேண்டும். புரிகிறதா "


தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதை ஏற்க மனமில்லாதவனுக்கு தன்னிடம் காதல் இல்லையே என எப்படி புரிய வைப்பது என விழித்தவள்.


" உனக்கு நான் தகுதியற்றவள். நம் பந்தத்திற்கு நான் உண்மையில்லை. என் மனதில் இன்னும் ரகு பற்றிய நினைவுகளே உள்ளது"


" அது அறியாமல் ரகுவின் மேல் தோன்றிய பாதுகாப்பு சூழ்நிலையும் உன் மனம் அறிந்து நடக்கும் புரிதலும் தான் காரணம். அது காதல் அல்ல "


"அது காதல் இல்லாமல் வேறென்ன?.."


" நீ அறியாமல் உன் மனதில் நான் நுழைந்து உள்ளனே.... என் முகம் அறிந்து மனம் அறிகிறாயே . என் அணைப்பு முத்தம் உன்னை நெகிழ வைக்கிறதே. அதுதான் காதல்"


" இது பருவக் கோளாறு"


"சரி காதலை எப்படி வார்தைகளால் கூற வேண்டும் என்று தெரியாது .ஆனால், செயலில் காட்ட தெரியும். காட்டட்டுமா"
என்று அவள் முகம் நோக்கி குனிந்தான். அவள் முகம் சிவந்து அவன் நெஞ்சில் புதைந்தாள்.
" என் நெஞ்சில் உறைந்துக் கிடக்கும் இத்தருணமே நிதர்சனம். இதை உணர்ந்து என்னோடு வாழடி தங்கம்மா...."
என்றான் கனிவுடன் .
அவனின் கூற்று மாதுரியின் உள்ளே ஏதோ செய்ய


"உனக்கு நான் வேண்டாம்"
என்று கூறி அணைப்பில் இருந்து விலகியவளை முயன்றவளை மேலும் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டே,


"இல்லை எனக்கு நீ மட்டும் தான் வேண்டும் "


"ஏன்?...."

"ஏனென்றால் நான் உன்னை காதலிக்கிறேன்"


" இது எப்போது?" என்றாள் சந்தேகமாய்.


"எப்போதிலிருந்து?..என யோசிப்பதுபோல் நடித்தவனை விளாவில் முழங்கை கொண்டு இடிக்க வலியில்,
"சொல்றேன்டி ராட்சசி" என்றவன்தொடர்ந்து


" இந்த வீட்டில் முதன் முதலாக உன்னை கண்ட போது"


# ராட்சசன் வருவான் #
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 8 (a) :


நம் ஊரில் நடக்கும் முளைப்பாரி திருவிழாவிற்காக பிரபா உன்னையும், உன் நண்பர்களையும் அழைத்திருந்தான். அப்போது, அடர் சந்தன தாவணி, சிவப்பு நிற பட்டுப் பாவாடையில் ,அரக்கு நிற பொட்டும்,சந்தன கீற்றும் திருநீரும் தலையில் சூடிய பூவுமாய் முதன் முதலில் நீ என்னைப் பாதித்தாய். உன்னழகை கண்டு அம்மாவும் காலீசும்மாவும் உன்னை தங்க விக்ரகம் போன்றுள்ளாய் என்று நெட்டி முறித்தார்கள். அப்புறம் உன்னை எதற்கோ நான் அழைக்க வேண்டியதிருந்தது. அப்போது உன் பெயர் எனக்குத் தெரியவில்லை அதனால் அவர்களின் கூற்றுப்படி "தங்கம்மா" என்று அழைத்தேன். அப்போது ரதி மாதிரி குறுக்கிட்டு,
" ஆமாம் எனக்கு உன் தங்கம்மாவை எங்கேயோ கேட்டது போலவே இருக்கும். உன் அழைப்பின் போது ஏனோ உன்னை என்னால் வெறுக்க இயலவில்லை"
"ஆனால் என்னைவிட ரேணு அவ்வளவு அழகா இருப்பாளே. அவள் உன்னை பாதிக்காதா?"
" அடி லூசு அவள் என் தங்கை மாதிரிடி...மடத்தனமா யோசிச்ச பட்டுனு சாத்திருவேன்"
அவனின் கோபம் கூட அவளுக்கு அத்துணை அழகாய் இருந்தது.

"சரி சரி .....காண்டாகாம மேலே சொல்லு"

"அப்படியா... இன்னும் கேளு உன்னைவிட நான் பத்து வயது பெரியவன். என் நண்பர்கள் உன்னை குட்டி பொண்ணு, பாப்பா என்று அழைக்கும்போதெல்லாம் மனம் வேதனை கொள்ளும். ஏன் என்று யோசிக்கையில் அது காதல் என புரிந்தது. மேலும் துருவ், கதிர், என் தம்பி பிரபாவிடம் எல்லாம் நீ தொட்டுப்பேசுகையில் எனக்கு புசுபுசுவென ஆத்திரம் வரும். அதனால் தானோ என்னவோ உன்னை காணும் போதெல்லாம் காய்ந்து விழுந்தது மாதுரி தான். அன்று நீ என்னை மைதா மாவு என கலாய்த்தது, நீ என்னை சைட் அடித்தது கூட எனக்கு தெரியும்"

"எப்படி "

"என் தம்பி எதையும் மறைக்க மாட்டான் "

"பாவிப்பயலே" என்று மானசீகமாய் நண்பனுக்கு மாதுரி அர்ச்சனை செய்தாள்.

"அதன் பிறகு என் வயது என்னை வெகுவாய் தாழ்த்தியது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு வயதை குறைத்தேன். அய்யா.....எப்படி young -ஆ இருக்கேனா?...."

"ஆமாடா...உன்னைப் பார்த்து முப்பத்தைந்து வயதென்று கூறினால் யாரும் ஒப்புக்கொள்ள மாடடார்கள் "
கணவன் தனக்காக இவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறானே என்று நெகிழ்ந்துப் போனாள்.

" உனக்கு நான் யங்கா தெரியலையா"

என்றவனின் குரலில் ஏக்கம் தெரிந்தது.

"நீ யங்க் தான். நான் தான் உனக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லை"

என்றவளின் மனச்சுணக்கம் அறிந்து மேலும் இறுக அணைத்து நெற்றியில் மிதமாய் முத்தமிட்டு ,

"எத்தனை முறை சொல்வது எனக்கு நீ மட்டும் தான்டி பொருத்தமாக முடியும் "

தன்மீதுள்ள காதலால் அவன் அப்படி கூறுகிறான். அவள்தான் நித்தமும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கிறாளே......மனையாள் என்ன நினைப்பாள் என்பதை அவனறிவானே.

"ஹேய். சும்மா லவ் பண்றேனு சொல்லவில்லையடி....நெசமாவே நீ அம்புட்டு அழகுடி" என்றான் அவனது கன்னத்தை வருடியபடி. மேலும் தொடர்ந்து
"உன் படிப்பு முடிந்ததும் உன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்குள் பிரபா உன்னை காதலிப்பதாக வந்து நின்றான் .அத்தோடு என் காதலும் அப்படியே வடிந்து போனது. பின் சில துர்விஷயங்கள் துக்கம் தந்தாலும் கூடவே என் காதலையும் உன்னையையும் எனக்கு திருப்பியளித்து விட்டது . அவன் கூறிய துர்சம்பவம் என்பதை பிரபாவின் மரணம் என்று மட்டுமே நினைத்தாள் .வேறெதுவும் அவளுக்கு யோசிக்கத் தோன்றவில்லை .

"இப்போது சொல் தங்கம்மா... உன் காதல் ராட்சசன் நான்தானே "

" இல்லையே "

என்று உதட்டைச் சுளித்து கூறுகையில் அவள் அழகில் வழக்கம்போல் சொக்கி போனாலும் அவளது இல்லையே என்ற சொல் சொல்லொண்ணா வேதனை தந்தது .
கணவனின் வேதனையை தானும் உணர்ந்ததால் மாதுரி அவனது முகத்தை நேரே நிமிர்த்தி,

" எதிர்காலம் இல்லாத காதலையே எதிர்பார்த்து காத்திருந்து காதலித்தவள் நான். பல எதிர்கால கனவுகளுடன் என்னை மட்டுமே காதலித்த உன்னை நான் காதலிக்காமல் இருப்பேனா?... எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு. இனி என் வாழ்வில் நீ மட்டுமே என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் உன்னை காதல் கடலில் குளிப்பாட்டுகிறேன்"
என்றாள் செல்லமாய் மூக்கை ஆட்டியபடி.

" என்னடி புருஷனை டா சொல்ற"

" டேய் அன்னைக்கே சொன்னேன்ல. என் அண்ணா கருணாவும் உன் வயசுதான். அவனையே டா தான் காதல்சொல்லுவேன். ஆனா ரேணு மட்டும் அவனை அத்தான்ங்கிற சொல்லுக்கு மறுசொல் சொல்ல மாட்டாள்"

" அவ பொண்ணு "

" அப்ப நானு"

" பிடாரி "

அதில் ஆத்திரமடைந்தவள் அவனது நெஞ்சில் சரமாரியாக குத்தினாள். அவளது அடிகளை சுகமாய் வாங்கிக் கொண்டவன் அவளது முதுகெலும்பை நொறுக்குவதுபோல் இறுக அணைத்து அவளது இதழ்களை சிறை செய்தான் அந்த கள்ளன். அந்த நெடுமுத்தத்திற்கு பிறகு விலகியவர்களிடம் மோனநிலையே ஆக்கிரமித்திருந்தது. அப்படியே அணைத்தபடியே உறங்கி விட்டனர். மறுநாள் காலை எழுந்தவுடன் அருகிலிருந்த கிருபாவைக் காணவில்லை. இரவில் கணவனின் அணைப்பில் பாந்தமாய் தூங்கியதை நினைத்தவளின் முகத்தில் வெட்கச்சாயல் ஒட்டிக்கொண்டது. அந்த சுகமான நினைவுகளுடனே மாதுரி குளித்துவிட்டு வந்தவளுக்கு இனிமையான அதிர்ச்சியாகவும் ,குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது கிருபாவின் தோற்றம். ஆம்... அவன் மொத்தமாய் பிரபாகரனாய் மாறியிருந்தான். கையில் தடித்த இரும்புக் காப்பு, முறுக்கு மீசை என தன்னையே பிரபாவாக மாற்றியிருந்தான். மனைவி உறைந்து நிற்பதை கண்ட அவன் அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தவன்,

"நான் இப்போது பகைவனை வேட்டையாடும் வேடுவன். உனக்கு பிரபா உன்னால்தான் இறந்தான் என்ற குற்ற உணர்ச்சி வேண்டாம். நேற்று இரவு நீ சொன்னதை மறவாதே தங்கம்மா" என்று கூறி சிரித்தான். என்ன பகைவன்? யார் ?என்ன சொல்கிறான் ?என்று புரியாமல் விழிக்க,
" ரெடியாயிரு... ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் "என்று விட்டு வெளியில் சென்றான்.
ஏதோ உளறுகிறான் என்று எண்ணிவிட முயலாமல் வேகமாக கிளம்பி வந்தவளை வற்புறுத்தி காலை உணவை உண்ண வைத்து மகனுடன் அனுப்பி வைத்தார் காளீசு . அவர்கள் இருவரும் சென்றது மதுரையில் உள்ள அவர்களது தோப்பு வீட்டிற்கு. அவளின் தோள்பற்றி மெல்ல நடத்திக் கொண்டு போய் நிற்க வைத்தது பிரபாகரன் சமாதியிடம். பிரபாகரனின் கள்ளங்கபடமற்ற சிரிப்பு நேற்றுதான் கண் எதிரே நின்று சிரிப்பது போல் பிரம்மை உண்டாக மாதுரிக்கு குற்றவுணர்வும் சாகடிக்க முகத்தை மூடி கதறி அழுதாள். பிரபாகரனும் மனைவியை தேற்றவில்லை மாறாக இறுகிப்போய் அவள் அழுவதை பார்த்துக்கொண்டிருந்தான். மெல்ல அவளருகே சென்று'
"ஏன் அழுகிறாய்?"
இதென்ன அபத்தமான கேள்வி கேட்கிறான் என்று எரிச்சல் அடைந்தாலும்
"பிரபா என் நண்பன். அவன் சாவிற்கு நான் தானே காரணம் "

"அப்படினு யார் சொன்னது "

"எல்லோரும் சொன்னார்களே... அதை விட என் மனசாட்சி சொன்னதே"

"இல்லை... பிரபா விபத்தில் இறக்கவில்லை கொலை செய்யப்பட்டுள்ளான்"

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவள்" நீ என்ன சொல்ற?...." என்று அவனது சட்டையைப் பற்றி கேட்டாள்.
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ராட்சசன் வருவானோ அத்தியாயம்-8(b):

"நீ என்ன சொல்ற?...."
என்று அவனது சட்டையைப் பற்றி கேட்க அவனோ அசால்ட்டாக தன் சட்டையிலிருந்து அவளது கைகளைப் பிரித்து எடுத்துக் கொண்டே,

" ஆம் நாம் நினைத்தது போல் விபத்தில் பிரபா இறக்கவில்லை. அவனைக் கொன்றது சந்தோஷ் கிருஷ்ணா"

" என்னது பெரியத்தானா.... ஏன்?..."

"இன்னும் அவனைப் போய் அத்தான் சொத்தானு சொல்லிட்டு இருக்க"
என்று கடுப்படிக்க.

"இப்போது இந்த கோபம் ரொம்ப அவசியமா? பிரபாவை ஏன் அவர் கொல்லனும் "

இன்னும் மனைவி தன் பகைவனை மரியாதையாக அழைக்கிறாளே என்று ஆற்றாமையாக வந்தது.

" வன்மமும், வக்கிரமும்தான் காரணம்"
என்றவன் தன் பகைவனை பற்றிக் கூறலானான்.

சந்தோஷ் கிருஷ்ணா அவர்களின் மூன்றாம் பங்காளி மகன். அவர்கள் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாத போது இவன் அரக்கனாய் வந்து பிறந்தான். முதல் ஆண் வாரிசு என்பதால் ஏக செல்லம். தவறிழைத்தால் கூட கண்டிக்க மாட்டார்கள் அவனது பெற்றோர்கள். அதுவே அவனுக்கு தவறு செய்யப் போதுமானதாக இருந்தது. அவர்கள் ஊரில் பனைச்சாகுபடி தான் அதிகம் . அதனால் பனைத் தொழிலாளர்களும் மிகுதி. அவர்களின் வாழ்வாதாரமே பனை மரங்கள் தான். அதை அழிக்கும் வகையில் தொழிலாளர்களை மிரட்டி பனை மரங்களை வெட்டி ராமேஸ்வரம் கடல் வழியே கள்ளத்தோணியில் சிலோனுக்கு கொண்டு சென்று பல நாடுகளுக்கு கொண்டுப்போய் விற்றான். பனைமரங்கள் நன்கு வலுவானவை. அதனால் பலனும் அதிகம். நல்ல முதிர்ந்து பக்குவடைந்த மரங்களை நல்ல நாள் பார்த்து வெட்டி,கடத்தி சம்பாதித்து காசுப் பார்த்தான். அதுபோதாது, சாதாரண குடிமக்களின் வீடுகளில் புகுந்து வயது வந்த பெண்களின் கற்பை பலவந்தமாய் அவனும்,அவன் கூட்டாளிகளும் சூறையாடினார்கள். மேலும் அவர்களை பதனீர் அல்லாத கள் இறக்கி அதில் போதை மாத்திரை கலக்கி பதனீர் எனச் சொல்லி விற்று வந்தான். இவனுக்கு இருந்த பணம் , செல்வாக்கு, அதிகாரத்தை மீற முடியாமல் உள்ளுக்குள்ளேயே சபித்து கடவுளிடம் மட்டுமே முறையிட்டனர் அம்மக்கள். மேலும் சீமை கருவேல மரங்களை வெட்டி கரியாக்கி அதிலும் பெருத்த லாபம் பார்த்தான். ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாதலால் விவசாயம் பொய்த்துப் போன போது உலகையே சீரழிக்கும் விஷச்செடியான கருவேல மரங்களே அவ்வூர் மக்களுக்கு வாழ்வாதாரமாகிப் போனது. கருவேல மரங்கள் நிலத்தடிநீர் மட்டுமல்லாது காற்றிலுள்ள ஈரப்பதத்தையும் விடாமல் உறிஞ்சி சிறப்பாக வளரக்கூடியது. நல்லதொரு பசுவை அதனடியில் கட்டிப் போட்டால் கூட மலடாகிவிடும். அத்தகைய கொடியது அச்செடிகள். அதனை அழிக்கும் வகையில் ஜெகந்நாதன், பிரபாகரன் மற்றும் சில சமூக ஆர்வலர்களும் முன் வந்தனர். ஏற்கனவே தன் பங்காளி மகனுடன் மனக்கசப்புற்றிருந்த போதும் ஜெகந்நாதன் அதனுடைய தன்மையை எடுத்துரைத்தும் கேட்காததால் கோபமூண்டு கைகலப்பு ஆனது. சீமை கருவேல மரங்களை வேரோடு வெட்ட முற்படுகையில் சந்தோஷ் கிருஷ்ணா விறகு வெட்டுபவர்கள், கரிமூட்டம் போடுபவர்கள் அதன் உரிமையாளர்கள் என அனைவரையும் திரட்டி நயவஞ்சகமாக பேசி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வைத்தான். அதில் சுணங்கியபோது ஊர் திருவிழாவில் தனக்குத்தான் முதல் பரிவட்டம் கட்ட வேண்டும் என தகராறு செய்தான். அதில் பிரபா அவனை அடித்து கையை ஒடித்து விட்டான். அத்தனை பேர் முன்னிலையில் ஒரு பொடிப்பயல் தன்னை அடித்துக் கையை ஒடித்து சிறுமைப்படுத்தி தன்னை தலைக்குனிய வைத்து விட்டானே என்று வன்மத்தில் உளன்றான். ஒரு கட்டத்தில் அரசே சீமை கருவேலமரங்களை அறவே ஒழிக்கவேண்டும் என ஆணைப் பிறப்பித்தது. அதிலும் அந்த கேடுகெட்டவன் பெருத்த லாபம் பார்த்தவன் பின் வெட்டவிடாமல் தடுத்தான். அதை கண்டு ஜெகந்நாதன் கலெக்டரிடம் மனு கொடுத்தார். ஆனால் சந்தோஷம் கலெக்டரை மிரட்டி அடிபணிய வைத்திருந்தான். அதனால் பிரபா அவனால் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவள் குடும்பத்தையும் சந்தோஷ்க்கு எதிராக புகார் கொடுக்க வைத்தான். அந்த பெண்ணுக்கு நடந்த அநீதிகளை அவள் வாயிலாக கூற அதை காணொளியாக பதிவு செய்து கொண்டான். அந்த சிறு பெண்ணின் துணிவை கண்டு தானாகவே சிலர் முன்வந்து அவனது அக்கிரமங்களை கூறினர். அத்துணையும் காணொளி படமாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவ விட்டான் பிரபாகரன்.அது சந்தோஷ் கிருஷ்ணாவிற்கு எதிரான பலத்த ஆதாரமாக அமைந்துவிட்டது. இதனால் சந்தோஷ் கிருஷ்ணாவை கைது செய்து ரிமாண்ட்டில் வைத்துவிட்டனர் போலீசார். இத்தனை நாட்களாக தங்களை குடைச்சலுக்கு உள்ளாக்கியவனை போலீசார் நையப்புடைத்து விட்டனர். அதில் அடிப்பட்டப் புலியாய் தன் நிலைக்கு காரணமானவனை கொடூரமாக கொல்லவேண்டும் என்றெண்ணம் கொழுந்து விட்டு எரிந்தது. அவனது வக்கீல் தனது சாமர்த்திய வாதத்தால்," குடும்ப பகை காரணமாக தன் கட்சிக்காரர் மீது அவதூறுப் பரப்புவதாகவும் மேலும் சமூகத்தில் அவனது நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் அந்த பெண்களை மிரட்டி இப்படி ஒரு காணொளி எடுத்ததாகவும்" கூறி சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி ஜாமீன் வாங்கினார் ஜாமீனில் வெளிவந்தவன் தன் நிலைக்கு காரணமானவர்களை கூண்டோடு கருவறுக்க வேண்டும் என்று வக்கிரம் பிடித்து அலைந்தேன தக்க சமயம் நோக்கி காத்திருக்கலானான். ஆனால் தாம் தான் செய்தோம் என்ற ஆதாரம் இருக்க கூடாது ஏனென்றால் போலீசார் கவனித்த கவனிப்பு அப்படி நினைக்க வைத்தது. மீண்டுமொருமுறை போலீசாரிடம் அடிவாங்க அவனுக்கு விருப்பமில்லை. சந்தோஷ் கிருஷ்ணா வெளிவந்ததை நம்பமுடியாமல் இனி என்ன செய்வது என அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தவிக்கும் வேளையில் அவர்களது ஓலைக் குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தது. எல்லோரும் சுதாரித்து வீட்டிற்கு வெளியே வந்து மணல், நீர் எனஅள்ளிக் கொட்டி தீயை அணைக்க முற்பட்டனர். காய்ந்த ஓலைச்சருகுகள் கொண்ட வீடுகளாதலால் தீ நிற்காமல் மடமடவென எரிந்து சாம்பலானது. அவர்களின் உடமைகள் போனதே தவிர உயிர் போகவில்லை. சிலருக்கு தீக்காயங்கள் மட்டுமே . விஷயமறிந்து அங்கு விரைந்த போலீசார் விசாரித்ததில் அடுப்பில் சமைத்தபோது இடவாரத்தில் தீ விளாவிப் பிடித்து விட்டது என்றனர். அது தான் உண்மையா என்ற சந்தேகத்துடனே போலீசார் திரும்பி சென்று விட்டனர். ஆனால் உண்மை அதுவல்லவே. இருள் மங்கிய மாலை நேரத்தில் ஒரு பெண் தன் குடிசையில் சமைத்துக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு கயவன் அவள் சமையல் செய்யும் இடத்திற்கு நேரே பெட்ரோலை ஓலையில் கொட்டிவிட்டு , மற்ற குடிசைகளிலும் அதே செயலை செய்து விட்டு ஓடிவிட்டான். பிள்ளைகள் பசியில் அழுவதால் வேகமாக சமைக்க எண்ணி அப்பெண் தீயை அதிகமாக எரிய விட்டாள். அப்போது தான் கூரையிலிருந்த பெட்ரோலில் எளிதாய் தீப்பிடித்துக் கொண்டது. இதை அவர்கள் அறியவில்லை. ஜெகநாதன் மற்றும் சிலரும் அவர்களுக்கு உதவினர். அடுத்த சில நாட்களில் பிரபா சாலையில் பைக்கை வேகமாக ஓட்டிச் செல்லும் போது எதிரே வேன் ஒன்று அவனை நோக்கி வந்தது. அதனைக் கண்டு கொண்டவன் வண்டி பிரேக் போட்டு திருப்புகையில் நிலை தடுமாறி அருகில் இருந்த கால்வாயில் விழுந்து விட்டான். சிறாய்ப்புகளே அன்றி வேறு எதுவும் ஆபத்தில்லை .தான் செய்கின்ற தீமை ஒவ்வொன்றிலும் அவர்கள் தவிப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த சந்தோஷ் கிருஷ்ணா காலம் கனியட்டும் அவனை கருவறுப்போம் என்று பொறுமை காத்தான். பிரபாவும் மாதுரியின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்று எண்ணி சிங்கப்பூரில் இருக்கும் தன் அண்ணன் கிரபாகரனிடம் போய் சேர்ந்தான். அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஒளிவு மறைவு இல்லாததால் கிரபாகரனிடம் தன் மனதை கூறினான். அதைக் கேட்டு அதிர்ந்தாலும் செல்ல தம்பியின் ஆசை நிறைவேறட்டும் என்று எண்ணி விலகினான். அதே சமயம் தம்பியின் காதலை ஏற்காத மாதுரியின் மீது காதல் அதிகரித்தது. கிரபாகரனும் மறந்தும் தன் மனதை தம்பியிடம் கூறவில்லை.தோழியின் திருமணத்திற்கு சென்ற பிரபா மாதுரிக்கு பிரபோஸ் செய்து அவளால் காயப்படுத்த பட்டு நன்கு குடித்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு அதன்போக்கிலே சென்றான் . .போதையில் வண்டி ஓட்டிக் கொண்டே தன் அண்ணனுடன் வீடியோ காலில் மாதுரி பேசியதை ஒப்புவித்துக் கொண்டே வந்தான். அப்போது பிராய்லர் கோழி ஏற்றி வந்த வண்டி இடித்து விட்டது. அதில் அவன் மயக்கமடைந்து ஸ்டியரிங்கில் தலை கவிழ்ந்து கிடந்தான். பிரபா எழுந்திரு என்று பலமுறை கிருபாகரன் வீடியோ காலில் கத்தியது கூட அவனது செவிகளில் விழவில்லை. இடித்த வண்டியின் ஓட்டுநர் என்னமோ ஏதோ என பதறிக் கொண்டு வண்டியை நிறுத்திவிட்டு பிரபாவின் காரை நோக்கி வந்தார். அவன் மயக்கத்தில் உள்ளான் என்பதை உணர்ந்து தண்ணீர் கொணர்ந்து மயக்கம் தெளிய வைக்க முயன்றார் .அவற்றையெல்லாம் வீடியோ காலில் பார்த்துக்கொண்டிருந்த கிருபா தம்பிக்கு ஒன்றும் ஆகவில்லை அத்தோடு ஓட்டுநரும் கோபமில்லாமல் எக்கேடோ போகட்டும் என விட்டுச் செல்லாமல் பதைபதைப்புடன் செயலாற்றியவரை காண்கையில் உள்ளம் நெகிழ்ந்து போனான். அப்போது ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரில் இருந்து சந்தோஷ் கிருஷ்ணா மற்றும் அவனது மூன்று அடியாட்கள் இறங்கினர். அவர்கள் அந்த ஓட்டுனரை நோக்கி "அவன் மயக்கத்திலில்லை. இறந்து விட்டான். நாங்கள் போலீசுக்கு போகிறோம் உன்னை ஜெயிலில் தள்ளி களி திங்க வைக்கிறோம் பார்.... "என்று மிரட்டினர் .அவர் அதற்கெல்லாம் அஞ்சவில்லை . ஏனெனில் பிரபாவின் மயக்கத்தை நன்கு உணர்ந்ததால் அவனை காரில் இருந்து தூக்க முயன்றபோது அவன் அடியாட்கள் மூவரும் அவரை அடித்து ,உதைத்து, மிரட்டி அங்கிருந்து விரட்டினர் .ஏதோ சரியில்லை என்றுணர்ந்தவர் போலீஸ் நிலையம் சென்று விஷயத்தை சொல்லுவோம் என்று எண்ணி வேகமாக தன் வண்டியை நோக்கி ரத்த காயங்களுடன் ஓடினார். அவர் அங்கிருந்து சென்றதும் பிரபாவை காரிலிருந்து இழுத்துப்போட்டு தடிமனான இரும்பு கம்பியை கொண்டு பலமாக தாக்கினார்கள். அவன் உடலில் உள்ள எல்லா எலும்புகளையும் அடித்தே நொறுக்கினர் தலையில் மேலும் மேலும் அடித்ததால் மூளை சிதைவுற்று இறந்தான் பிரபாகரன். அவன் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு அவனை காரில் தூக்கிப் போட்டு காரை நகர்த்தி அங்கிருந்த மரத்தில் மீண்டும் மீண்டும் மோதினர். அது போதாது என்றெண்ணியவன் சாலையிலிருந்து அருகில் இருந்த பள்ளத்தில் உருட்டிவிட்டு அந்த ஓட்டுநர் ஓட்டி வந்த வண்டியின் எண்ணைக் கூறி விபத்து செய்துவிட்டு அந்த டிரைவர் ஓடி விட்டான் என்ற தகவலும் போலீசுக்கு சொன்னான் அந்தக் கொடும் பாவி. பார்ப்பவர்களுக்கு அது விபத்தாகவே தெரிந்தது. தன் செல்ல தம்பியின் கொடூர சாவு தன் கண் முன்னே அரங்கேறியதைத் தடுக்கும் வழியின்றி கதறலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கிருபாகரன். கணவன் சொல்ல சொல்ல மாதுரியின் ன கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. நண்பனின் உயிர் வலியை தானும் உணர்ந்தாள். தன் கண்முன்னே நடந்த கொடூரத்தை கண்ட கணவனின் மனம் அந்நிலையில் எவ்வாறு இருந்திருக்கும் என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். நண்பனின் வலியை நினைக்கும் போதே தனக்கு நெஞ்சு வலிப்பது போல் தோன்றியது. அந்த கொடும்பாவி அரக்கனை இக்கணமே வெட்டி வீழ்த்தி விட வேண்டும் என்று ஆவேசம் கொண்டாள் . கிருபா மனைவியின் மனம் அறிந்து அவளது கைப்பற்ற அவளோ அதை உதறி தள்ளிவிட்டு ,"எப்படிடா அவனை உயிரோடு விட்டு வச்சுருக்க. நீ இந்தியா வந்த அடுத்த நிமிஷம் அவனைக் கொன்றுவிட்டு பிரபாவிற்கு கொல்லி வைத்திருந்தால் நான் சந்தோஷப்பட்டு இருப்பேனே. ஏன்டா அவனை விட்டு வைத்திருக்க என் நண்பனை துடிதுடிக்க கொன்றவனை துடிதுடிக்க வைத்துவிட்டுத் தான் மறு வேலை.எனக்கு உதவி செய்வாயா கிருபா" என்றவளை அணைத்துக் கொண்டு கதறினான் கிருபாகரன். ஆனால் அவளோ உடம்பும் மனமும் இறுக விழிகள் சிவக்க உதடு துடிக்க உக்கிரமாய் நின்றாள். ஆம் கிருபா எண்ணியபடியே துஷ்டனை துவம்சம் செய்யும் துர்க்கையாய் மாறி நின்றாள் ரதி மாதுரி.
 
Status
Not open for further replies.
Top