All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மேகா ராஜனின் "காதல் ராட்சசன் வருவானோ!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-9:(a)


தன் நண்பனின் துர்மரணம் மாதுரிக்கு மிகுந்த வேதனை அளித்தது. கூடவே ஒரு சந்தேகமும் எழ,

" பிரபா அந்த மக்களுக்காக போராடிய விஷயம் எனக்கே தெரியவில்லை. அதேசமயம் துருவ், கதிருக்கு எல்லாம் தெரியுமா ?..."

"இல்லை... இந்த விஷயத்தில் அவர்கள் தலையிட்டு அவர்களுக்கு ஏதாவது ஆகி விடக் கூடாது என்பதில் பிரபா உறுதியாக இருந்தான். "

"இப்போ வரை தெரியாதா ?"

" துருவ்க்கு மட்டும் தெரியும் "

"எப்படி?..."

" உன் பிரண்ட் வெரி ஸ்மார்ட் ...என் முகம் வைத்தே கண்டறிந்து கேட்டான். அன்றைக்கு நான் இருந்த மனநிலையில் உளறி விட்டேன். அப்போதே சந்தோஷைக் கொல்லத் துணிந்தான். நான் தடுக்கவில்லை என்றால் அவன் எப்போதோ அந்த செயலை செய்து முடித்திருப்பான். இன்றளவும் துருவ் கொலைவெறியுடன் தான் இருக்கிறான்.சந்தர்ப்பம் கிடைத்தால் அவனை சிதைத்து விடுவான் ."

தன் இன்னொரு நண்பனின் துடிப்பைக் கண்டு கர்வம் கொண்டது மாதுரியின் மனம். மறுநாள் ஒரு முடிவுடன் பட்டு சேலையில் நல்ல நகை அலங்காரத்துடன் மாதுரி தனக்கே உரிய கம்பீரத்துடன் வீறுகொண்ட வேங்கையாய் காரிலிருந்து இறங்கி வந்தாள் சந்தோஷின் வீட்டிற்கு. வாதத்தினால் படுக்கையில் விழுந்த பெரிய மாமனாரைச் சென்று சந்தித்தாள். சந்தோஷ் கிருஷ்ணா குடும்பம் அவனது சகோதரிப் பெண்களாலேயே சூழப்பட்டிருந்தது. அவளை அன்புடன் வரவேற்றனர். அத்துணை பேருக்கும் சந்தோஷ் என்றால் உயிர் என்பதை அங்கு போன பின்பு தெரிந்துக் கொண்டாள். இத்தனை பேரின் வளர்ப்பு எங்கே தவறாகிப் போனது என்று கவனமாக யோசித்தாள். பெரிய மாமனாரின் அறையில் நுழைந்ததும் பெரியவருக்கு பழச்சாறு புகட்டிக்கொண்டிருந்தார் பெரிய மாமியார்.
" கும்பிடுகிறேன் பெரிய மாமா.. பெரிய அத்தை.... "

"வாம்மா "

என்று அழைத்தார் கண்களில் கனிவு காட்டி. உடல் நலம் விசாரித்தவளிடம் வாய் குழறியபடியே பதிலளித்தார் பெரியவர் . பின் அவளை இருக்கையில் அமரச் சொன்னார். அவளோ மறுத்து விட்டு அவரது காலடியில் அமர்ந்து இரு கரம் கூப்பி நேரடியாக தான் குறைந்தது
கூறலானாள்
.

"பெரிய மாமா... பெரிய அத்தை நீங்கள் எப்படிப்பட்ட நீதி பரம்பரையில் வந்தவர்கள் என்று எனக்குத் தெரியும். என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். உங்கள் மகன் எப்படிப்பட்டவர் என்று தெரியுமா?...."

" தெரியும் "

என்பதுபோல் கண்களை மூடி ஆமோதித்த பெரியவரைக் கண்டு அதிர்ந்தாள் ரதி. கலங்கிய விழிகளை அழுந்தத் துடைத்துக் கொண்டே பெரியவரின் மனைவி அமுதவல்லி ,

"இவர் இப்படி நோவில் வாடுவதே அவனால்தான். இது எங்களுக்கு மட்டும்தான் தெரியும் . அவனது சிறு சிறு தவறுகளை பெற்றவர்களாய் கண்டித்தும் கேட்கவில்லை. அடுக்கடுக்காய் அவனது தவறுகள் தொடர ஒருநாள் எல்லை மீறவே உங்க மாமா ருத்ர தாண்டவம் ஆடி விட்டார்.அதில் இவரை கைநீட்டிவிட்டான் பாவி. அன்றிரவே ரத்த அழுத்தம் அதிகமாகி இப்படி ஆகிவிட்டார் தவமிருந்து என் குலத்தை அழிக்கும் அரக்கனை பெத்தெடுத்தனே அம்மா... உன் மாமனார் உட்பட அத்தனை பேருக்கும் முன்னுதாரணமாய் இருந்த என் சாமிய சாச்சுப்புட்டானே அம்மா...."

என்று கதறினார் அந்தப் பெண்மணி. அவருக்கு ஆறுதல் கூறும் வழி தெரியாது,

" என் கொழுந்தனைக் கொன்ற உங்க மகனை அழிக்கவேண்டி உங்க அனுமதி பெறவே இங்கு வந்தேன்"
என்றவளை பெரியவர்கள் புரியாமல் திகைத்து விழிக்க, பெரியவர் மட்டும்
மெல்ல வாயைத் திறந்து,

" என் மகனை அழிக்க என்னிடமே அனுமதி கேட்க வந்தாயோ மருமகளே...."
என்று கேட்டார் .அந்த நிமிடம் திகைத்தாலும்

"நீங்க நீதிமான் என்று எனக்கு தெரியும் மாமா....அதான் உங்களிடம் அனுமதி பெற வந்தேன் "

தொடர்ந்து பிரபாகர் பற்றி கூற ஆரம்பித்தாள். முழுவதையும் கேட்ட பின் அந்த நிமிடம் இருவரும் சற்றும் யோசிக்காமல்,

" நான் தங்கத்தை பெறவில்லை தகரத்தைத்தான் பெற்றெடுத்தேன். நாங்கள் கலங்கவில்லை தாராளமாக செய். எங்களுக்கு மறுப்பேதும் இல்லை"

என்றனர் . எந்தப் பெற்றோரும் சொல்லத்தகாததை சொல்ல வைத்துவிட்டானே பாவி என சந்தோஷ் கிருஷ்ணா மீது கோபம் வந்தாலும், தர்மம் வெல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்புவியில் உள்ளனர் என்று அகமகிழ்ந்து சிரம் தாழ்த்தி வணங்கி ஆசிப் பெற்றாள் அவ்விருவரிடமும். வீட்டிற்கு வந்ததும் சந்தோஷை எப்படி சாய்ப்பது என்று கணவன் வருவதைக் கூட கவனியாமல் ஆழ்ந்து சிந்தித்தாள் மாதுரி. அப்போது அங்கே வந்த கிருபா மனைவியை அலங்காரத்துடன் பார்த்ததும் அவளது அழகில் மயங்கி ரசித்தான். திருமணமான நாளிலிருந்து சேலையே உடுத்தினாலும் இன்று கட்டிலில் கால் மேல் கால் போட்டு, விரல் நகங்களை அழகாய் கடித்துத் துப்பியபடி அமர்ந்து இருந்த மனைவியின் அழகு அவனைக் கிறங்கச் செய்தது. ரொம்ப நேரம் சைட் அடித்தவன் பின் தலையை உலுக்கி விட்டு, நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு அவளருகில் சென்று நெருங்கி அமர்ந்தான். அதிலும் அவள் சிந்தனையிலிருந்து மீளவில்லை. வேண்டுமென்றே கிருபா அவளுக்கு வலிக்கும்படி இறுக்கி அணைத்தான். அதில் பயந்துபோய் மீண்டவள்,

"நீ எப்போடா வந்த?..."

"நான் வந்தது கூட தெரியாமல் மேடம்க்கு என்ன பலத்தயோசனை"

" சந்தோஷுக்கு எப்படி முடிவு கட்டணும்னு யோசிக்கிறேன்"

" ஏன்டி அயித்தான் அலஞ்சு களைச்சு போய் வந்து இருக்காரே.... ஒரு டீ போட்டுத் தருவோம்.... காலை அமுக்கி விடுவோம்னு இல்லாமல் என்னடி யோசனை வேண்டிக்கிடக்கு"

என்றவனை முறைத்தவள்.

" யார் இந்த அயித்தான் "
என்று நீட்டி முழக்கி கூறினாள்.

"ஹேய்.... நான்தாண்டி உன் அத்தான்"
என்றான் அப்பாவியாய். மேலும் கீழுமாய் அவனைப் பார்த்துவிட்டு

"யார் நீ .... நான் என்னமோ ரகுவை சொல்றியோனு நினைத்து விட்டேன்"
என்று கூறிவிட்டு கணவனின் முகத்தை ஓரக்கண்ணால் ஆராய்ந்தாள். ஒரு கணம் கிருபாகரனின் முகம் சுருங்கினாலும் மறுகணமே அவளருகே வந்து ,

"நெசமா ரகு தான் உன் அத்தானா?...." என்றான் ஏக்கத்தையும் தவிப்பையும் கண்களில் தேக்கி. அவனது தவிப்பு அவளை குதூகலிக்கச் செய்ததால் சன்னமாய் குறும்பு சிரிப்புடன்,

" ஆமாம் "

என்றவளை அடுத்த நொடி அவன் ஆவேசமாய் அணைத்து அவளது இதழ்களை வன்மையாய் சிறை செய்தான். வன்மையாய் இதழ்களைக் களவாடிக் கொண்டாலும் சுகத்தின் தித்திப்பு சற்றும் குறையவில்லை இருவருக்கும் . நெடுநேர இதழொற்றல் மூச்சுவிட இயலாமல் செய்தாலும் அவளை விரும்பி கணவனிடத்தில் மயங்கச் செய்தது. இதழ் சிறையின் நீடிப்பு தொடர உடலும் மனமும் ஒரு சேர சோர்ந்து கிருபாவின் நெஞ்சில் தழுவி நழுவி கீழே அமர்ந்து அவளது
மோனமயக்கத்தை மறைக்கும் பொருட்டு முகத்தை தன் கரங்களால் மூடிக்கொண்டாள். மனைவி விளையாட்டாகவே ரகுவைப் பற்றி கூறி இருந்தாலும் தன் உரிமையை நிலைநாட்ட நினைத்து இந்தச் செயலைச் செய்தவன் மனைவியின் முகத்தை கண்டதும் அவனது இளமை உணர்வுகள் மேலோங்க அவளது முகத்தை கரம் கொண்டு ஏந்தி மெல்ல அவளது விரல்களை பிரித்து எடுத்து அவளது வதனத்தைக் கண்டான். அது வெட்கத்தின் சாயல் பூசி செம்பூவாய் அலர்ந்து காணப்பட்டதைக் கண்டதும் அவளை வாரி அள்ளி கட்டிலில் கிடத்தி தானும அவள் மேல் படர்ந்தான். அவளிடத்தில் மறுப்பேதுமில்லாத நிலையே சம்மதம் தர பாவையவளை இதமாய் கையாண்டான் அந்த ராட்சசன். தனது இத்தனை வருட காதலை தன்னவளிடத்தில் ஆழமாய் தேடினான். மதுவுண்ட மந்தியாய் மீண்டும் மீண்டும் அவளை நாடி காதலெனும் போதையில் திளைத்தான். ஆம்..... அவர்களிடத்தில் அழகிய இல்லறம் ஆரவாரமின்றி துவங்கியது. இரவு உணவு உண்ணாமலே தங்களின் தேடலைத் துவங்கியதால் நடுச்சாமத்தில் பசி வயிற்றைக் கிள்ளியது. ஆடைகலைந்து அழகோவியமாய் காணப்பட்டவளை மீண்டும் மீண்டும் நாட விரும்பியது மனம். ஆனால் வயிற்றுப் பசியின் குணம் அவளிடத்தில் தெரிய அவன் மட்டும் எழுந்து உடை மாற்றிக் கீழே சென்று உணவருந்தி விட்டு ரதிக்கும் உணவு எடுத்து வந்தான்.சாப்பாட்டு தட்டுடன் வந்தவனை கண்டு எழ முயன்றவளை தடுத்து விட்டு தானே அவளுக்கு சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் ஊட்டி வாய் கழுவி , துடைத்து விட்டான். அவனது இந்த செய்கையில் தன் தந்தையைக் கண்டவள் கை கழுவிவிட்டு வந்தவனின் சட்டையை பற்றி இழுத்து தன் அதரங்களால் கணவனை அர்ச்சனை செய்தாள். இப்போது தேடலின் முறை அவளது ஆயிற்று.
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-9(b):





காலையில் மாதுரி வெகு நேரம் கழித்தே கண்விழித்தாள். விழித்ததும் கணவனை கண்களால் துளாவினாள். அவன் அங்கு இல்லை என்பதை உணர்ந்ததும் குளித்து உடைமாற்றி கீழே வந்தாள். அங்கே கிருபாகரன் மாமனாருடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். கணவனைக் கண்டதுமே இரவின் நினைவுகள் தந்த வெட்கம் அழையா விருந்தாளியாக ஒட்டிக்கொண்டது. எப்போதும் கம்பீரமாய் நிமிர்ந்து நடப்பவளுக்கு இன்று ஏனோ நடப்பதற்கு வெகுசங்கோஜமாக இருந்தது . மருமகளை கண்டதும் காளீசு,

" வாத்தா.... ரெண்டு இட்லியைப் பிச்சுப் போடு.... ஒரு காப்பி தண்ணி கூட காலையிலிருந்து குடிக்கல"
என்றார் அக்கறையுடன். மாமனாரும்,

"வாமா.... ஏன்மா இன்னைக்கு எழுந்திருக்க லேட்டாயிடுச்சா ?..."

"ஆமாம் மாமா"

"ஆமா... ஆமா... இரவு முழுவதும் ஒரே வேலை இல்ல..... தங்கம்மா ....."

அவன் கூறியதன் பொருள் புரிய அவளுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. அவசரமாய் டைனிங் டேபிளில் அமர்ந்துக் கொண்டவள் மறந்தும் தலைநிமிரவில்லை. இரண்டு இட்லி, ஒரு மெதுவடை, தேங்காய் சட்னி,கார கார சட்னி, சாம்பார் என அவளுக்கு பிடிக்குமென பார்த்துப் பார்த்து பரிமாறிய காளீசு அவள் உண்ணாமல் தலை கவிழ்ந்தபடி உணவை கைகளால் அளந்துக் கொண்டிருப்பதை கண்டு,

" சாப்பாடு பிடிக்கலையா ஆத்தா..... உனக்கு பிடிக்குமென மெதுவடையும் தேங்காய் சட்னியும் பண்ணினேன். நல்லா இல்லையா ஆத்தா " என்றார் வருத்தத்தோடு. பெரியவரின் வருத்தத்தை கண்டதும் தனது வெட்கத்தை ஒதுக்கிவிட்டு,

" நல்லா இருக்கு அத்தம்மா..... இன்னொரு வடை வைங்க"

என்று கேட்டு வாங்கி உண்டு கொண்டிருந்தவளின் தட்டில் மேலும் இரண்டு இட்லி வைத்து சாம்பார் ஊற்றியவனை நிமிர்ந்து பார்த்து திகைத்தவள்,

"இவ்வளவையும் நான் எப்படி.... என்னால் சாப்பிட முடியாது " என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவளை,

" சாப்பிட்டு தான் எழுந்திருக்கனும். இல்லை காலை வெட்டிருவேன் "

பிறந்த வீட்டில் அம்மாவுக்கும் அவளுக்கும் சண்டை வருவதே சாப்பாட்டில்தான். இப்போது இவன் வேற படுத்துறானே.....கடவுளே என்னை காப்பாத்து " என கடவுளிடம் மானசீகமாய் காக்கும் மனு போட்டு வைத்தாள் மாதுரி. அவள் சாப்பிட திணறுவதைக் கண்டு தானே நாலே வாயில் உணவை ஊட்டிவிட்டு , ஒழுங்காக சாப்பிடு தங்கம்மா....அப்போதுதான் அத்தானோட சேட்டைகளை தாங்க உடலில் தெம்பு வேண்டுமல்லவா " என்று கண்சிமிட்டி கூறிவிட்டு சென்றான்.

"ஆத்தி.....இவன் புதுமாடல் எம்டன் போல இருக்கானே.....இனி இவன் சாப்பிடுறப்போ அந்த திசை வச்சு கூட படுக்க கூடாது " என்று நினைத்துக் கொண்டாள். அதன்பிறகு மாதுரி அவன் இருக்கும் பக்கம் கூட செல்லவில்லை. மதிய உணவின் போது கூட கணவன் முன்பு செல்லவில்லை.
அங்கே பெரியவர்கள் முன்பு ஏதாவது விசமமாய் கூறி விடுவானோ என்று பயமாயிருந்தது அவளுக்கு. கிருபா இரு முறை மனையாளைக் காண முயற்சித்தும் இயலவில்லை. மாலையில் தோட்டத்தில் அவளுக்குப் பிடித்த முல்லை அரும்புகளை பறிப்பாள். அங்கு சென்று காணலாம் என்று எண்ணி சென்றவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் அங்கு இல்லை சிறு ஏமாற்றும் தோன்றினாலும் மனைவியவளின் கண்ணாமூச்சி ஆட்டத்தை அவள் சொல்லாமலே புரிந்து கொண்டான். இரவு உணவின் போதும் அடுப்பங்கரை விட்டு வெளியே வரவில்லை மாதுரி. அவளது சலசலப்புக் குரல் மட்டுமே வெளியே கேட்டது . ஆட்டமாக காட்டுற ஆட்டம் ரூமுக்கு வாடி... இருக்குடி உனக்கு ...என்று மனதுள் செல்லம்மாய் வைது வைத்தான். நள்ளிரவு வீடு திரும்பியவன் மனைவி தூங்குவதை கண்டவன் பாசாங்கோ என்றெண்ணி அருகில் சென்றதும் அவள் உண்மையாகவே அவள் ஆழ்ந்து உறங்குவதை உணர்ந்து மென்மையாய் அவளை அணைத்துக்கொண்டு உறங்கினான்.
விடியல் காலையில் யாரோ அறைக் கதவை வேகமாக தட்டும் சத்தம் கேட்டு இருவரும் எழுந்தனர். அவனது கையணைப்பில் இருந்து எழுந்தவள் தான் கணவன் அணைப்பில் தான் இவ்வளவு நேரமாக உறங்கிக் கொண்டு இருந்தோமா என்று நினைத்தவளுக்கு ஏதோ போல் இருந்தது. கிருபாகரன் வேண்டுமென்றே அவளை அழுத்தமாய் ஒரு அணைப்பு அணைத்து விட்டு சென்று கதவை திறந்தான் .அங்கு காளீசு தான் நின்று கொண்டிருந்தார்.

"என்ன காளீசம்மா ?...."

"ஒண்ணும் இல்லையா... உன்ன பாக்க செல்லப்பன் தம்பி வந்து இருக்கு . ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனுமாம் " என்று பதிலளித்து விட்டு அவளருகில் வந்து தூக்கத்தில் கலைந்து கேசத்தை ஆசையுடன் காதோரம் செருகிவிட்டு,

" ஒரு சர்ப்ரைஸ் சீக்கிரமா கீழே போகணும்"
என்று தலையை தன் கரங்களால் பிடித்து மென்மையாய் முத்தமிட்டுவிட்டு குளியலறைக்குள் சென்றான். என்ன சர்ப்ரைஸ் என்று குழம்பினாலும் சீக்கிரமாக போய் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளை பரபரக்க வைத்தது. இருவரும் கீழே வந்ததும் செல்லப்பன் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க

" பரவாயில்லை உட்காருங்க அண்ணா...."

"தம்பி அவனுடைய கருப்பட்டி ஃபேக்டரி மற்றும் குடோன் ரெண்டும் க்ளோஸ் ... விஷயம் தெரிஞ்சு தொழிலாளர்களை அடித்து மிரட்டியிருக்கிறான். இரவு நேரத்தில் தீ விபத்து நடந்ததால் எங்களுக்கு தெரியலைன்னு சொல்லி சாதித்து விட்டனர் . அடுத்தது என்ன தம்பி"

" சொல்றேன் அண்ணே... நீங்கள் சாப்பிட்டு அலுவலகத்திற்கு செல்லுங்கள் .நான் பின்னால் வருகிறேன் "

"சரி தம்பி "

என்ற தலையசைப்புடன் சென்றார்.

" டேய் எப்படிடா ....கிருஷ்ணா ஃபேக்டரியாடா?...."

" ஆமாம் "

"எப்படிடா?..."

" அது அப்படித்தான் ...."
என்றவனை முறைத்தவள்,

"ஓவரா பண்ணாம என்ன நடந்ததுனு சொல்லுடா?..."என்க.

"ஆமாடி.... அதுமட்டுமல்ல ராமேஸ்வரம் வழியாக கொண்டு போற மரங்களை எல்லாம் போலீஸ் கைப்பற்றியாச்சு
ஆதாரத்துடன்."

" ஆதாரமா? ஏதுடா ஆதாரம் "

" பிரபாவோடதுதான்"

"அதுதான் பயன்படாம போயிடுச்சேடா....இப்போது எப்படி "என்றாள் குழப்பத்துடன்.
"அதை தான் போலீசார் ஆதாரமாக எடுத்துக்க வேண்டுமென எடுத்துக்க வச்சேன். இதுல பெரிய புள்ளி எல்லாம் கூட சிக்கிருக்கு. அப்புறம் அவனோட இல்லீகலா பண்ற ரியல் எஸ்டேட் பிசினஸையும் இழுத்து மூடியாச்சு"
என்றான்.
"டேய்.... இது நீதானா.... பிரபா ரொம்ப தைரியசாலி ஆயிற்றே அவன் அண்ணன் இப்படி இப்படி மங்குனியா இருக்கானேனு நான் நெனச்சு ரொம்ப பீல் பண்ணேன். பரவாயில்லையே கிரிமினலையே கிறுக்கா கதற விட்டுட்டியேடா..... சும்மா சொல்லக்கூடாது நீ கோர்ட் போட்ட கிரிமினல் ஹீரோ தான் "
புருவமுடிச்சுக்களுடன் ஆச்சரியரேகை முகத்தில் படர பேசிய தன்னவள் கண்களுக்கு தாம் முதன்முறையாக ஹீரோவாக தெரிகிறோம் என்று நினைத்தவனுக்கு ஜிவ்வென்று வானத்தில் பறப்பதுபோல் உணர்ந்தான் கிருபாகரன். இதேபோல் அவளுக்கு கூடியவிரைவில் என்மீது காதல் வரும் என நம்பிக்கை கொண்டான். ஹால் என்றும் பாராது அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட்டான். அவன் முத்தமிட்ட இடத்தில் மீசையின் குறுகுறுப்பில் சிலிர்த்தது அவளது மேனி. அதேநேரம் அங்கு சந்தோஷ் கிருஷ்ணன் தன் வீட்டில் அவனது அறையிலுள்ள பொருட்களையெல்லாம் உடைக்கப்பட்டு அறை எங்கும் இறைந்து கிடந்தன. கோபத்தின் உச்சியில் இருந்த அவன்,

" ஒரு இரவில் எப்படியடா சாதித்தான்... எப்படி சாத்தியம் ....ஏன் தோற்றேன்.... அதுவும் அவனிடத்தில் ....அடேய்....
கிருபாகரா....உன் சாவு என் கையில தான்டா . என்கிட்ட மோதி எப்படி அடிபட்டு அல்லோலப்பட்டு உன் தம்பி செத்தானோ அதை விட கொடூரமான சாவை நான் தருவேன்டா உனக்கு ...."

என்று கோபக்கனல் ஜுவாலையாய் அறிவை மறைத்து எறிய மெத்தையில் கைகளை குத்தியபடி கர்ஜித்துக் கொண்டிருந்தான் சந்தோஷ் கிருஷ்ணா. பிறந்ததிலிருந்து உடன்பிறந்தோர் அவனது இத்தகைய கோபம் காணாதிருந்துவிட்டு இப்போது கண்டவுடன் பயத்தில் எச்சில் விழுங்கினர் அவனுடைய சகோதரிகள்.
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-10(a):



சந்தோஷ் கிருஷ்ணாவின் கோபக்கனலை தம் மக்களும் மகனும் அறியாதவண்ணம் ரதிமாதுரிக்கு போன் செய்து கூறினார் அமுதவல்லி . நிச்சயமாக சந்தோஷ் இந்த விஷயத்தை சாதாரணமாக விடமாட்டான் . ஏதேனும் பெரிதாக யோசித்து அதை செயல்படுத்த முயல்வான். அது என்ன என்பதை அவனை கண்காணித்தால் மட்டுமே கண்டறிய இயலும் என்று முடிவு செய்தவள் பெரிய மாமியார் அமுதவல்லிக்கு போன் செய்தாள். பின் ஏதோ தோன்ற அதை விடுத்து, வேறோரு நம்பகமான ஆளை தேர்ந்தெடுத்து சந்தோஷைக் கண்காணித்து வந்தாள். ஆனால், அவனது தகவல்கள் அவ்வளவாக பயன் அளிக்கவில்லை. இருந்தாலும் காத்திருந்தாள். ஆனால் சந்தோஷ் கிருஷ்ணாவோ அவளது புலனாய்வை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து இங்கிருந்து அந்த வீட்டிற்கு தன்னைப் பற்றிய தகவல் பரிமாற்றல் நிகழ்ந்தால் அவர்களது தலை உடலிலிருந்து தப்பாது என மிரட்டி வைத்திருந்தான். அவனது மிரட்டலுக்கு பயந்து அவர்களும் எந்த தகவலும் தெரிவிக்காமல் சமாளித்து வந்தனர். இதுயறியாது தன் எதிரி பற்றிய தகவல் வருமென்று காத்திருந்தாள் மாதுரி. தகவல் வராதபோது கிருபாகரனிடம் போய் நின்றாள்.
"கிரு...."
மேடம் இப்போதெல்லாம் அவளின் காதல் ராட்சசனை கிரு என்றழைப்பதுதான் வழக்கம்.

"சொல்லுடி.... தங்கம்மா...."

" சந்தோஷ் வீட்டுக்கு அவனை கண்காணிக்க ஆள் அனுப்பினேன்.அவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. ஒருவேளை சந்தோஷ் கிருஷ்ணாவால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது "

" சந்தேகம் எல்லாம் வேணாம். அவர்களுக்கு ஆபத்துதான். நம்ம பசங்கள அனுப்பிருக்கேன் . பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். கவலைப்படாதீங்க மிஸஸ். கிருபாகரன். "
அதில், சற்று சந்தோஷப்பட்டாலும் ஏதோ பொறித்தட்ட புருவமுடிச்சுக்களில் இரு புருவ இணைகோடுகள் சுருங்க சந்தேகத்துடன்,
"நான் ஆள் அனுப்பியது உனக்கு எப்படிடா தெரியும் " என்றாள் சற்றேக் கோபத்துடன். அவன் சிறுபுன்னகையுடன் அவளருகில் வந்து செல்லமாய் மெதுவாக அவள் நெற்றிமுட்டி உன் கடைக்கண் பார்வை கூட என்ன உரைக்குமென எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. அதில் இதுவும் ஒன்று. அவ்வளவே....."
என்றான் தோள்கள் குலுக்கி. அதிலும் அவள் தெளியாமல் கொஞ்சம் கலக்கத்துடன் அதை முகத்தில் காட்டாமல் மறைத்தாள் ரதிமாதுரி.

அங்கு அதேநேரம் சந்தோஷ் கிருஷ்ணா கொதித்துப்போய் இருந்தான். எப்படியாவது கிருபாகரனை பழி வாங்க வேண்டும் ,அவனுக்கு தகுந்த பாடம் கற்பித்தே ஆக வேண்டும் என உருப்போட்டபடி கிட்டத்தட்ட சைக்கோ போல் சுற்றி திரிந்தான்.

ஊரின் எல்லையில் பைபாஸ் ரோடு உள்ளது. சாலையோரம் புதர்களுக்கு அடியில் யாரோ ஒரு வாலிபன் அடிப்பட்டு சட்டையெல்லாம் கிழிக்கப்பட்டு ரத்தக்காயங்களுடன் கிடந்தான். அது வேறு யாருமல்ல. ரதியின் தோழன் கதிர் தான். பொதுவாக தொண்டி செல்லும் கனரக வாகன லாரி ஓட்டுனர்கள் அந்த சாலையோரத்தில் தான் சற்று இளைப்பாறுவது வழக்கம் . அந்த வேளையில்தான் கதிரை கண்டு பிணம் என்று நினைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காரணம் அவன் இருந்த நிலை அவ்விதம். அதிலும் ஒரு துணிச்சல்கார ஓட்டுநர் அருகில் சென்று பார்த்தபோது கதிர் உயிரோடு இருப்பதை உணர்ந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். விஷயம் கேட்டறிந்து கிருபா, ரதி, கதிரின் பெற்றோர்களும் உடனே மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். சுயநினைவுக்கு வந்த கதிர் யாரிடமும் பேசாமல் கோபமாக யாரையும் பார்க்காமல் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டான். அவனது இச்செய்கை கிருபா உட்பட அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தாலும் ரதிக்கு மட்டும் அதிர்ச்சியாக இருந்தது. "கதிர் என்னடா ஆச்சு....?"
என்று கண்கள் கலங்க நண்பனின் தோளைத் தொட்டாள் ரதிமாதுரி. விடியற்காலை வரை பேச்சு மூச்சில்லாமல் அசைவற்றுக் கிடந்தவனுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு பலம் வந்ததோ சடாரென்று ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த கையால் பலம் கொண்டமட்டும் அவளை தள்ளிவிட்டான் கதிர். அதில் அருகிலிருந்த நாற்காலியின் மேல் ரதி மாதுரி விழப்போக உடனே தன் கரங்களால் அவளைத் தாங்கிக் கொண்டான் கிருபாகரன். கதிரின் முகத்தில் கடுகுப்போட்டால் கூடஉடனே பொரிந்து விடும் அந்த அளவிற்கு கடுகடுவென கோபத்துடன் இருந்தான். அவன் கோபம் கண்டு ரதிக்கு அழுகை அழுகையாக வந்தது. சிறு தேம்பலுடன் மீண்டும் நண்பனின் அருகில் செல்ல முனைகையில் கிருபா தடுத்து தானே அவனிடம் சென்றான். அவனையும் கதிர் எரித்துவிடுவது போல் பார்த்தான். எதுவும் புரியாமல் அனைவரும் விழித்துக் கொண்டிருக்கும்போது துருவ் அறைக்குள் நுழைய அவனை அவசரமாக பார்த்து,
" மச்சான் உடனே இவர்கள் இருவரையும் வெளியே அனுப்பு.... இவளைப் பார்க்க எனக்கு பிடிக்கவே இல்லை... இவ ஒரு துரோகிடா..... வெளியில் அனுப்பு மொதல்ல...நம்ம நட்புக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாத கொலகாரி இவ.... வெளில போகச் சொல்லு. இல்ல என்னை கொலைகாரனா தான் பார்க்க வேண்டியதிருக்கும்"
என்று கர்ஜித்தான். அவனது ஒவ்வொரு சொற்களிலும் ஒரு அழுத்தம் தென்பட்டது. அதேநேரம் ரதியே தள்ளிவிட்டதால் கையில் ட்ரிப்ஸ் ஊசி தளர்ந்து இரத்தக்கசிவு ஏற்பட்டு இரத்தம் சொட்டியது. அந்த வலியை விட மனதில் தோழி தங்களை ஏமாற்றி விட்டாளே என்ற வலிதான் அதிகமிருந்தது. கதிர் கூறிய 'துரோகி' என்ற வார்த்தையில் உடைந்துபோய் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது ரதிமாதுரிக்கு. துருவ்வும் செய்வதறியாமல் விக்கித்துப் போய் நின்றான். மேலும் கதிர் கோபமாக கத்தவே துருவ் கிருபாகரனை பாவமாய் பார்க்க புரிந்தாற்போல் ரதியை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். நண்பனின் எதிர்பாராத் தாக்குதல் அவளை நிலைகுலைய செய்தது. கிருபா ஓரளவு விஷயத்தை யூகித்தான். அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி மட்டுமே இப்போது யோசித்துக் கொண்டிருந்தான். கதிர் கூறிய துரோகி என்ற சொல் ரதிக்கு மட்டுமல்ல தனக்கும் தான் என்று மனதுள் மறுகிக்கொண்டிருந்தான் துருவ். துருவ்வைத் தவிர மற்ற அனைவரையும் போகச் சொல்லிவிட்டு நர்ஸ் ட்ரிப்ஸ் மாற்றி விட்டு போகும்போது மறக்காமல் தூங்குவதற்கு ஊசியும் போட்டுவிட்டு சென்றார். அவர் சென்றதும் நடந்த விஷயங்கள் அத்தனையும் நண்பனிடம் கூறி கதறிவிட்டான் கதிர். கேட்க கேட்க குற்ற உணர்வுடனும் எப்படியெல்லாம் கதை திரிந்து நண்பன் ஏமாற்றப்பட்ட இருக்கிறான் என்று புளுங்கினான். அதேநேரம் ரேணுவும் விஷயம் கேள்விப்பட்டு அங்கு வர, கண்ணீருடன் நின்ற ரதியைக் கண்டு பதறிப் போய் என்னவென்று கேட்க அவளிடம் இருந்து பதில் வராமல்போக பதட்டமாகி கதிர் அனுமதிக்கப்பட்ட அறையை நோக்கி விரைந்து ஓடி போன போதுதான் துருவ்விடம் கூறிய விஷயங்களை கதவருகில் நின்று கேட்டு விட்டாள். ஆனால் தன் தோழி இதையெல்லாம் செய்திருக்க மாட்டாள் என்று அவள் அறிவிற்கு தெளிவாக தெரிந்தது. எங்கேயோ ஒரு இடத்தில் தவறு நடந்திருக்கிறது என்று புரிந்தது. அதேசமயம் நண்பனின் பேச்சையும் மறுக்க முடியாது திணறினாள். எது உண்மை பொய் என்று புரியாத குழப்பத்திலேயே ,
"இல்லடா அன்னைக்கு முழுசும் நான் அவகூட தான் இருந்தேன். அவ எங்கேயும் போகல .எங்கயோ தப்பு நடந்திருக்குடா....கொஞ்சம் அமைதியா இருடா ப்ளீஸ்"

"உனக்கு என்னடி தெரியும்... நான் ஆதாரத்தையே என் காதால் கேட்டேன். அது அவ குரல்தான்"

ரேணுவின் நம்பகத்தன்மையை அவளது முகமே பிரதிபலித்தது. அதை உணர்ந்துக் கொண்டவன் எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என எண்ணி எழும் நேரத்து கண்கள் சொருகி,புத்தி ஆழ்ந்த நித்திரைக்கு சென்றது .
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாரும் மன்னிச்சுருங்க.... நிரம்ப நாள் கழித்து யூடி போடுவதற்கு இனி சரியா போட்டுவிடுகிறேன்.


அத்தியாயம்-11:


இயற்கை அள்ளித் தரும் அழகு காட்சிகளில் மலையும் ஒன்று. எங்குப் பார்த்தாலும் பச்சைப் பசேல் . அழகிய நெடுமரங்களிலிருந்து சாமரம் வீசும் குளிர்காற்றும், பூக்களின் கொள்ளை அழகும், பூக்களுக்கு பூத்தாவி தேன் தேடும் குளவிகளின் நாதமும், இயற்கையின் நறுமணமும் கொண்ட மலைகளின் இளவரசி நம்மை சலிக்காமல் பரவசப்படுத்துவாள். அங்கு சிறிய தேயிலை எஸ்டேட் அருகிலேயே அலுவலர்களுக்கு என்று வீடுகளும் உண்டு .அதில், மும்மரமாக காலை உணவை தயாரித்து விட்டு மதிய உணவிற்கு பச்சரிசி சாதம் குழையாமல் பதமாக வடித்து , தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து, கடலைப்பருப்பு ,முந்திரி, கறிவேப்பிலை ,பெருங்காயம், தேங்காய் துருவல் போன்ற இத்யாயங்களை தாளியம் செய்து கொட்டும் போதே எட்டு ஊருக்கு மணத்து நாவைச் சுண்டி இழுத்தது அவளின் கைம்மணம். அதற்கு ஏதுவாக தொட்டுக் கொள்வதுக்கென்று காரசாரமாய் கத்திரிக்காய் தொக்கும் செய்து,தனக்கும் தன் மகனுக்கும் டிபன் பாக்ஸில் அடைத்து கொண்டே அருமை மகன் விழித்து விட்டானா என்று அறைப் பக்கம் நோட்டமிட்டவாறே காலை உணவுக்கென்று தோசையில் பாலும்,சர்க்கரையும் போட்டு ஊற வைத்துவிட்டு மகனிடம் வந்தாள் ரதிமாதுரி . பால்மணம் மாறாத 3 வயது தம் மகனை தனியே வேற்றாளிடம் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் தன் நிலையை எண்ணி தன் மீதே தனக்கு கழிவிரக்கம் வந்தது. அதன் விளைவாக கண்களில் நீர் அரும்புகள் துளிர்ந்தன. அந்நேரத்தில்,
"அழுகை என்பது தன்னுடைய இயலாத் தன்மையில் உருவெடுக்கும் கோழையின் கூர் இல்லாத மழுங்கு ஆயுதம்... ஒருநிமிடம் ஆழ்ந்து சுவாசித்து ஒரு நீண்ட பெருமூச்சை விடு. மூச்சிலிருந்து வெளியேறும் அசுத்த வாயுவோடு வாயுவாய் தன் மனப்புழுக்கமும் வெளியேறி விடும். அப்புறமாக, நிதானமாக யோசி.அன்றைய இன்னலில் இருந்து விடுபட ஒரு தெளிவு கிடைக்கும். உனக்கு முன்மாதிரி நானல்லவா. நான் அழ மாட்டேன் நீயும் அழக்கூடாது " தன் பேராசிரியை செல்வாம்பிகை கூற்றுக்கள் மானசீகமாய் செவியில் விழ, அடுத்த நொடி முகமும் மனமும் இறுக, கண்ணீரை தன் விரல்களால் சுண்டியெறிந்து விட்டு, தன் செல்ல மகனை ஆதூரமாய் கன்னங்களை தடவிக் கொண்டே ,

"மித்துமா.....மித்துக்கண்ணா.....எழுந்திரிங்க"

தாயின் அழைப்பில் துயில் உகுத்தான் தையலவளின் அருமைப் புத்திரன் மிருத்யு பிரபா. குழவிமான் கண் திறப்பதுபோல் கண்களை திறந்து,
" அம்மா...."
என்று பிஞ்சுக் கரங்களால் அவள் கழுத்தை கட்டிக்கொண்டான்.அவனின் செய்கையில் தாய்மை பெருக்கெடுக்க அப்படியே அள்ளி அணைத்து செல்லம் கொஞ்சியபடி மகனை கிளப்பி, தானும் கிளம்பி
"அப்பாவுக்கு டாட்டா சொல்லிட்டு வா மித்துக்கண்ணா...."

என்று கூற மறுக்காமல் மழலையும் அழகாக புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த கிருபாகரனை ஆசையாய் தடவி முத்தமிட்டான் மிருத்யு பிரபா. அதில் ரதியின் மனம் கனத்துத்தான் போனது. தன் சுயகௌரவத்திற்காக தந்தை மகனை பிரித்து விட்டோமோ என்று கூட தோன்றியது. அதில் மேலும் மனம் வலிக்க மகனை அழைத்துக் கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு மீண்டும் ஒருமுறை பூட்டை இழுத்து சரிபார்த்த பின், அருகிலுள்ள வீட்டில் மகனை விட்டுவிட்டு முத்தமழையும் பொழிந்துவிட்டு வேலைக்குச் சென்றாள். அலுவலகத்தில் கையெழுத்திட்டு விட்டு பணியாளர்களின் வருகை பதிவேடு நோட்டை எடுத்துக் கொண்டு பணியாளர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தாள் ரதிமாதுரி. அவர்களைக் கண்டதும் புன்னகையுடன் வணக்கம் வைத்துவிட்டு இன்முகத்துடன் பணியை செய்யலானாள். பணியாளர்களிடம் கையெழுத்தும், படிக்காதவர்களிடம் கைநாட்டும் வாங்கி, தேயிலை பறிக்க குழுக்களாக பிரித்து அனுப்பி விட்டு தான் எப்போதும் அமரும் பாறையில் அமர்ந்து அவர்களைப் பார்வையிட்டாள். இதுதான் அவளது அன்றாட பணி. பாரம் இல்லாவிட்டாலும் சலிக்காத சுகத்தை தந்தது. பாமர மக்களின் சிரித்த முகம் அவளது கவலைகளை கொஞ்சம் ஓரங்கட்டியது என்றால் அது மிகையாகாது. ஆரம்ப காலகட்டத்தில் தேயிலை தோட்டத்தில் அட்டை பூச்சி களுக்குப் பயந்து நடுங்கியவளை,புள்ளத்தாச்சிப் புள்ள அந்த பாறைல சித்த உக்காரு...நாங்க எல எடுத்தாந்து கணக்கு சொல்றோம்.....சாப்புடப் போவையில கூட்டாந்துப் போறேனு " அப்பாறையில் அமரச் சொல்லிவிட்டு அவளுக்கு சிரமம் தராமல் தங்களின் வேலையை கண்ணும் கருத்துமாக செவ்வனே செய்தார்கள். அவர்களின் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பில் நெகிழ்ந்துப்போனாள். தாய் வடிவின் நினைவும் அவ்வப்போது வந்துச் செல்லும். அவர்களுக்கு முன்பு இருந்த சூப்பர்வைசர் படுமோசமாக நடத்துவானாம். ஆனால், ரதி எல்லோரையும் மரியாதையாக நடத்துவாள். அவர்களும் கள்ளமின்றி உழைப்பர். சில நேரங்களில் போரடித்தால் பக்கத்து எஸ்டேட்டிற்கு அருகே சிறு குன்றின் மேல் அருவி அஞ்சநேயர் கோவில் உள்ளது. அங்கு சென்று ஆஞ்சநேயரின் வாலில் ஐந்து முறை குங்குமம் வைத்து வணங்கிவிட்டு வருவாள் .அருவியின் அழகை கூடவே ரசிப்பாள் . சில நேரங்களில் மனம் அமைதி கொள்ளும் .சில நேரங்களில் கணவனின் நினைவு வருகையில் மனம் குமுறும். அதேநேரத்தில் மன அமைதி வேண்டி நண்பனின் எஸ்டேட் கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்திருந்தான் ரதி மாதுரியின் கணவன் கிருபாகரன். மாதுரியின் குடியிருப்பு பகுதிக்கும் அவனது கெஸ்ட் ஹவுஸிற்கும் இடையே ஒரு வேலிக்கம்பி மட்டுமே அதிகபட்ச இடைவெளி .அருகருகே இருந்தும் இருவருக்குமிடையே கண்ணாமூச்சி ஆட்டம் இனிதே ஆரம்பமாகிறது.
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-12:



வார விடுமுறையில் தாயும், மகனும் பக்கத்து வீட்டு பெரியவரை துணைக்கு அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விடுவர். ஒரு சாப்பாட்டுக் கூடையில் சாப்பாடு, ப்ளாஸ்க்கில் காப்பி, மகனுக்கு பால், கொறிக்கவென நொறுக்குத்தீனிகளும் போட்டு எடுத்துக் கொண்டு அருகிலுள்ள ஆஞ்சநேயர் அருவி மற்றும் எஸ்டேட்டில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் அளவளாவி விட்டு வருவது வழக்கம். அவர்களுடன், மிருத்யு பிரபாவை பார்த்துக் கொள்ளும் வைதேகி அம்மாளும் வருவார். அவரது கணவர் ராணுவ வீரர். ராணுவத்திலே வீர மரணமடைந்து விட்டார். அவரது ஒரே மகன் சர்வேஷும் தந்தைக்குப் பின் தானும் பிடிவாதமாக ராணுவத்தில் சேர்ந்து விட்டான். மகனை தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தாயின் விருப்பத்தை மதித்தாலும் தாய்நாட்டின் மேல் பெரும் காதல் கொண்டான் போல அம்மகன். தனிமையை மட்டும் நெட்டித் தள்ளும் அப்பெண்மணிக்கு ஆதரவாக வந்தனர் ரதிமாதுரியும் அவள் மகன் மிருத்யு பிரபாவும். ரதி கர்ப்பிணியாக இருக்கையில் அவளுக்கு ஏதுவாக என்னவெல்லாம் கொடுக்க வேண்டுமோ அதெல்லாம் பார்த்து பார்த்து பதார்த்தங்கள் செய்து கொடுத்து தம் மகளாய் பார்த்துக் கொண்டார். இடுப்பு வலி வரும் வேளையில் கூட அவளுடனே தங்கியிருந்து பிள்ளைப்பேறிலும் உதவினார். அவ்வப்போது ரதிக்கு உடம்பு முடியாமல் போன நேரத்திலும் தாயாய், தாதியாய் அன்புடன் சிறிதும் முகம் சுளிக்காமல் கவனித்துக் கொண்டார். அப்படியான நேரங்களில் நெகிழ்ந்து போய் அவரிடம் தன் மனக்குமுறல்களை கொட்டி மடியில் படுத்து அழுது தீர்த்து விடுவோமா?.... என்றெல்லாம் கூட நினைப்பு வரும். ஏனோ அவரது பாசத்தை பெறவே மனம் விரும்பியது அனுதாபத்தை பெற மனம் அறவே மறுத்தது.

எல்லோருக்கும் தன் துன்ப காலத்தில் தோள் சாய்த்து அழ ஒரு தோள் கிடைக்காதா?...என்று ஏங்குவதுண்டு. ஆனால், நிதர்சனம் என்னவோ தம் நிஜக்கதையை அறிந்தபின் நம்மிடத்தில் போலியாகவே உறவாடுவர். இல்லை இரக்கமும், அனுதாபமும் தான் கூடிப்போகுமே தவிர்த்து அன்பு சுட்டுப் போட்டாலும் வருவதில்லை. இல்லையேல் நமநம்மிடத்தில் ஒரு ஏளன நகைப்போடு தான் பழுகுவர். அதை ரதிமாதுரி தனது தந்தை தவறியபின் போது அனுபவ ஆசான் வெகுசிரத்தையாய் கற்றுத்தந்து தான் உணர்ந்தது. அதனாலேயே ஒரு எள்ளல் நகையோடு தன்னை நெருங்குபவரை தன் ஒற்றை தீப்பார்வையிலேயே அத்துணை பேரையும் ஓரம்கட்டி விடுவாள். அது யாராக இருந்தாலும் சரி. இதனாலேயே தன்னை மகள் போல் பார்த்துக் கொள்ளும் வைதேகி அம்மாளிடத்தில் தன்னைப்பற்றி வாயை திறந்தாளில்லை. அவரும் வாயைப் புடுங்கி விஷயம் அறிபவரும் அல்ல என்பதால் தெளிந்த நீரோடை அன்றாட வாழ்க்கை ஓடினாலும் மனமென்னும் தேடல் ஓயாது அலையடிக்கத் தான் செய்தது . மிருத்யுவும் பாட்டி என்று அவர் காலையே சுற்றி வருவான். ஏனோ அவருக்கும் அவன் என்றால் சொந்த மகள் வயிற்றுப் பிள்ளைபோல் கொள்ளைப் பிரியம். பக்கத்து எஸ்டேட் வழியாக பொடிநடையாக நடந்து போனால் சிறிது தூரத்திலேயே அவர்கள் அளவாளும் இடமும் வந்துவிடும். அவ்வழியில் தான் கிருபாகரன் தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுசும் உள்ளது. இவர்கள் போகின்ற போது கிருபாகரன் கண்டான். ஆனால் யாரோ குழந்தையுடன் போகிறார்கள் என்றே எண்ணியவன் மனதில் சிறு சலனம் தோன்றத்தான் செய்தது. அவனறியாது அவன் மனம் படபடத்தது . ஏனென்ற காரணம் தான் அவனுக்கு விளங்கிய பாடில்லை. பெரியவரோடு சேர்ந்து விளையாடினர். பெரியவரும் சளைக்காமல் சின்னவனோடு ஓடியாடி விளையாட்டுக் காட்டினார். விளையாடி களைத்துப் போய் உறங்கிவிட்டான் மிருத்யு பிரபா. அவனை மடியில் கிடத்திக் கொண்டே சின்னவளும் பெரியவரும் ஊர்க் கதை அளந்துக் கொண்டிருந்தனர்.

திரும்பி வரும் வேளையில் கிருபாகரன் தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸ் வழியாகவே வந்தனர். மீண்டும் மனம் பாரமானதால் உள்ளே அறையில் இருக்க பிடித்தமின்றி வெளித்தோட்டத்தில் உலாவ வேண்டி வந்த சமயத்தில் தான் அவர்களை கண்கூடாக கண்டான். யாரோ ஒரு பெண் செல்கிறாள் என்று திரும்ப எத்தனித்தவனுக்கு சட்டென்று பொறி தட்டவே அப்போது தான் ஊன்றி கவனித்தவனுக்கு மகழ்ச்சியும் , வருத்தமும் ஒருங்கே மாறி மாறி தோன்றியது. ஏனென்றால் அங்கு செல்வது அவளது ஆருயிர் அல்லவா.... அக்கணமே
தன்னவளை அணைத்து கன்னாபின்னாவென முத்தமிட்டு ஏன்டி என்னைவிட்டு போன " என்று கேட்க நினைத்த மனதை முயன்று அடக்கிக் கொண்டு தன்னவளை கண்களிலும், மனதிலும் நிரப்பிக் கொண்டான். தான் மட்டும் அன்று அவளிடத்தில் பாராமுகம் காட்டாமல் அவளை நம்பியும் இருந்திருந்தால் இன்னேரம் நம் வாழ்க்கை தேனில் ஊறிய பலாக்கனி போல் தித்திப்பாய் சென்றிருக்குமேடி.... தங்கம்மா....."
என்றெண்ணியவனின் கண்களில் சொல்லொண்ணா சோகம் இழையோடவே சரேலென்று அவ்விடம் விட்டு அவளை நோக்கி பதினெண் வயது காளையாய் மூன்று மூன்று படிகளாய் தாவி ஓடினான். மூச்சிரைக்க யாரோ ஓடி வருவதைக் கண்டு பெரியவர் விலகி நின்று என்னமோ ஏதோ பதறிப்போய், "என்னவாயிற்று தம்பி ....ஏன் இப்படி பதட்டமாக ஓடி வர்றீங்க "

அவரது பதட்டம் புரிந்தாலும் கண்கள் தாமாகவே தம் மனையாளை நோக்கின. தன் கணவனை இத்தனை வருடம் கழித்து கண்ட நொடி கண் கலங்கி நெஞ்சம் விம்ப ஆனந்தமும், வருத்தமும், கோபமுமாய் அத்துணை உணர்ச்சிகளையும் தன் முக அபிநயங்களில் விதவிதமாக காட்டிக் கொண்டிருந்த நேரம்,
" தங்கம்மா...."

என அழைத்துக் கொண்டே தன்னை தன்னவன் நெருங்கிய போது

" மம்மா ..... ஊக்கு...... ம்மா...... ஊக்கும்மா....." என கைகளை உயர்த்திய மகனை கண்டதும் உணர்ச்சிப் பிளம்பில் தத்தளித்தவள் சட்டென்று விடுபட்டு மகனை தூக்கிக் கொண்டு, பெரியவரின் கைகளைப் பிடித்து அழைத்து செல்லவும் மறக்கவும் இல்லை. அழைத்துச் சென்றாள் என்பதைவிட இழுத்து சென்றாள். பெரியவருக்கு ஒன்றும் விளங்கவில்லை குழப்பத்துடன் அவள் இழுத்த இழுப்பிற்கே சென்றார். அங்கு அவனோ, அம்மாவா?..... இதெப்படி சாத்தியம்.... முகத்தில் குழப்ப ரேகைகளை கொண்டு நின்றிருந்தான் கிருபாகரன். அவள் தன்னை விட்டு விலகி வரும் போது கருவுற்றிருப்பாளோ?....ஏன் கணவன் என்றில்லா விட்டாலும் தந்தை என்ற உறவு இல்லாது போகுமா....என்னிடம் ஏன்டி இத்தனை நாள் மறைத்தாய்....இத்தனை நாட்கள் உன் பிரிவு தந்த வலியைவிட இது வலிக்குதுடி.... உன் உதிரத்தில் பிறந்தாலும் அவன் என் உயிரல்லவா?....முன்பு வருத்தமும் வேதனையும் தான்டி இருந்துச்சு இப்போ உன்மேல செம்ம கோபத்தில் இருக்கேன்.... இந்த கிருவை யாரென்று நினைத்தாய் வர்றேன் இருடி.....

காதல் ராட்சசன் வந்துவிட்டான்...... அதிரடியாய்.....
 

mekha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-13:


இரவெல்லாம் இவர் எப்படி இங்கு வந்தார். வந்தவர் என் பிள்ளை என் உரிமையென தூக்கி சென்றுவிட்டால் என்செய்வேன் ஆண்டவா..... இவனும் அவரை தானே அவ்வப்போது கேட்டு எதிர்பார்த்து காத்திருக்கிறான். அவரைப் பார்த்ததும் தாயைவிட தந்தை மேல் எண்றெண்ணி விட்டால் என்ன செய்வது.....இப்படி மனதில் பிதற்றிக் கொண்டிருக்கும்போதே இதயம் பிள்ளைப் பிரிவை கற்பனையில் கண்டு துடித்தது. இவ்வாறு மறுநாள் தன் பிள்ளையை தன்னிடமிருந்து கதற கதற பிரித்து அழைத்து செல்வதாக கற்பனை செய்தவள் அருமை மகனை நெஞ்சொடு அணைத்துக் கொண்டே தவிப்பில் கண்ணீர் வற்றாமல் வந்தமேனி இருந்தது. இப்படியே ராவு முழுவதும் தூங்கா இரவாய் நகர்ந்தது. விடிந்த பின்னும் கூட மகனை விட்டு பிரிந்தாளில்லை. தான் வேலைக்கு சென்றபின் அழைத்துச் சென்று விட்டால்...... ஏனென்றால் அவன் பிள்ளையை குழப்பமும் ஆச்சரியமாய் பார்த்து வைத்தாலும் அதில் வேறு எதுவோ ஒன்று பொதிந்து உள்ளதை அவள் கண்டதாலேயே இந்த தவிப்பு. மிருத்யு எழுந்ததும் அவனுக்கு செய்ய வேண்டியதை செய்து தானும் காலைக்கடனை கடனே என்று செய்து முடித்தாள். இன்றைக்கு எஸ்டேட் செல்லும் நினைவை கூட மறக்கடித்திருந்தான் அவள் கணவன். எஸ்டேட்டில் இருந்து அழைப்பு வந்தபிறகுதான் தான் வேலைக்கு இன்னும் கிளம்பவில்லை என்று தோன்றவே விடுப்பு சொல்லிவிட்டு தன் வேலைகளை நம்பகமான மாற்றாளிடம் ஒப்படைத்து விட்டு மூச்சு விட்ட கணம் வீட்டு கதவை தட்டப்படவே விட்ட மூச்சு இப்போது உள்ளே அடைத்துக் கொண்டு வெளிவர மறுத்தது. போச்சு அவர்தான் அவரே தான் மகனை கூட்டிக் கொண்டு போக வந்துவிட்டார் என்று நினைத்தவளுக்கு அந்த குளிரிலும் வியர்த்துக் கொட்டியது. ஒருவித பதட்டமும் தயக்கமுமாய் வாயிற்கதவை திறந்துப் பார்த்தவளின் முகம் நிம்மதியைத் தத்தெடுத்தது. ஏனெனில், அங்கு நின்றிருந்தது லலிதா அம்மாள். எப்போதும் தன்னிடம் மகனை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் மாதுரியை இன்னும் காணலயே. ஒருவேளை உடம்புக்கு முடியாம இருக்காளோ... ஏதுக்கும் நாம ஒரு எட்டு பாத்துட்டு வந்துவிடலாம். இப்படி எண்ணி தான் வீட்டிற்கு வந்தார். வாயிற்கதவை வெகுநேரம் தட்டியவர் கதவு திறக்காதவளிடத்தில் கோபமும், அதேநேரம் கொஞ்சம் கிலியும் தொற்றிக் கொண்டது. அப்போது கதவு திறக்கப்படவே அவனைக் கண்டதும் வளர்ந்ததே மனதில் பதித்துக் கொண்டார் "என்னாச்சுடிமா மேலுக்கு முடியலையா.... புள்ளையும் உன்னையும் காணோம்னு சித்த நேரத்துல தவிச்சுப் போயிட்டேன்" என்றவருக்கு பதிலாக புன்னகைத்து விட்டு உள்ளே வருமாறு தலையசைத்துவிட்டு கதவை தாளிட்டாள் மாதுரி.

"இன்னைக்கு வேலைக்குச் செல்லும் மூடில் இல்லை. அதனால் செல்லவில்லை"

" என்னாச்சுடிமா......" என்றால் பரிவாய்.

அவரது பரிவில் கணவன் ஞாபகம் கலங்கடிக்க "ஏதோ போல் இருந்ததுமா..... அவ்வளவுதான் மற்றபடி ஏதும் இல்லை" என்றவளின் கண்களில் கள்ளம் இருப்பதை கண்டுகொண்டார் பெரியவர். அவரது கூரிய பார்வையைத் தாங்க மாட்டாமல் காபி கொண்டுவருகிறேன் என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குள் அடைக்கலமானாள். பெரியவரிடத்தில் காபி கொடுக்கும் வேளையில் மித்துவும் எழுந்து விட அவனுக்கும் பால் ஆற்றி தர பெரியவர் தன் காபியை உறிஞ்சியபடி அவனுடன் கதை பயின்றுக்கொண்டே பாலை புகட்டி கொண்டிருந்தார். அதைப் புன்னகையுடன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் திரும்பவும் கதவு தட்டும் ஓசை கேட்டது. இந்த முறை மாதுரிக்கு உறுதியாக தெரிந்தது அவர்தான் வந்திருக்கிறான் என்று. அவளது முகத்தில் தெரிந்த கலவரத்தை பெரியவர் யோசனையுடன் பார்த்தவர் அவள் சென்று கதவை திறக்கும் நிலையில் இல்லை என்பதை புரிந்து கொண்டு தானே சென்று கதவை திறக்க புயலென உள்ளே வந்தான் கிருபாகரன். அவனைக் கண்டதும் உடனே அடையாளம் தெரிந்து கொண்ட மித்து,

"கிருப்பா "

என்றது மட்டுமல்லாமல் அவனிடத்தில் வேகமாக செல்ல முயல அதுவரை பயத்தில் உறைந்து நின்றவளுக்கு உணர்வு வந்தது. மகன் தந்தை கூட செல்லவிடாது வேகமாக சென்று தூக்கி தோளில் போட்டுகொண்டு கிருபாவை பாராவிதமாய் மகனை அணைத்துக் கொண்டாள் மாதுரி. அதில் கோபம் சுர்ரென்று வர அவளை முறைத்துக் கொண்டே அங்கிருந்த மூங்கில் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அவளை ஒரு அழுத்தப் பார்வையுடன் பார்த்துக்கொண்டே அமர்ந்தான். லலிதா பார்வையாளராக மாதிரி வேடிக்கை பார்த்தாரே தவிர, யார் அவன் என்ன ஏதென்று எதுவும் கேட்கவில்லை.அவன் யார் என்று அவளும் சொல்லவில்லை. இதற்கு முன்பே கிருபாவின் போட்டோவை மாதுரியின் வீட்டில் பார்த்திருந்தார். மித்துவும் கிருபாவை பற்றி பேசாத காணவில்லையே. ஆகையால், கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை இருவரும் பேசி தீர்த்துக் கொள்ளட்டும் தான் தள்ளியே நிற்போம் எண்றெண்ணி அமைதியாக வேடிக்கைப் பார்த்தார். கிருபாகரன் அமர்ந்தவாக்கிலேயே ஒருதரம் வீட்டை நோட்டமிட்டான். முகப்பில் மற்றும் மேசையின் மீதும் தன் புகைப்படங்களை பார்த்ததும் புன்னகை வந்தது ஆனால் வெளிக்காட்டவில்லை. முகரேகைகளை வெளியே காண்பித்தால் அவன் எப்படி தி கிரேட் பிசினஸ்மேன் ஆவான். பின், அப்போது தான் லலிதா அம்மாளை பார்த்தது போல் அருகிலிருந்த மூங்கில் இருக்கையை இழுத்துப் போட்டு அமரச் செய்தான். அவரும் பதில்பேசாது அமர்ந்தார். மாதுரியை நோக்கி மித்துவை சுட்டிக்காட்டி,

" பிரபாவை கிளப்பு.... நேரமாச்சு.... எல்லோரும் எங்களுக்காக காத்திருக்கிறார்கள் " என்றுவிட்டு லலிதாவிடம் கதை அளந்துக் கொண்டிருந்தான். மாதுரி செல்லாமல் அங்கு நிற்கவே எரிச்சலுடன் 'என்ன' என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தான் .கிருபாவை இதுநாள்வரை ரொமாண்டிக் கணவனாகவே பார்த்துவிட்டு இந்த திடீர் கோபம் பயம் வரவழைத்தது.இருந்தாலும் பழைய திமிர் தானாகவே அவளை முந்திக்கொண்டு அங்கு நின்றது. அவள் பதில் அளிக்காது தன்னை முறைத்துப் பார்ப்பதை கண்டு எரிச்சலடைந்தவன்,

" நான் என்னனு கேட்டேன்"
என்றவனுக்கு பதிலாக

" எங்கே "

என்று இவளும் சடைத்துக் கொண்டே கேள்வித் தொடுத்தாள்.

"அது உனக்கு அவசியமில்லாத ஒன்று. என் மகனை நீ கிளப்புகிறாயா.... இல்லை நான் கிளப்பட்டுமா" அதற்குள் அவளே பிள்ளையுடன் அவ்விடம் விட்டு அகன்றாள். அறைக்குள் சென்றவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.அவன் மகனாமே..... நான் இல்லாமல் மட்டும் பையன் மட்டும் வந்துட்டானா... ஆளும் மண்டையும் பாரு. பெரிய UPS வர்மா பாரு....வந்ததும் புள்ள வேணுமாமே... கஷ்டப்பட்டு நான் பெறுவேனாம் இவன் நோகாம நொங்கு சாப்புடுற மாதிரி கூட்டிட்டு போறேனு சொல்வானாம். இந்த ரதி யாருனு காட்டுறேன்டா.... எவ்வ்வவளவு மண்டைக்கணம்....நீ எப்படி தூக்கிட்டு போறனு பாக்குறேன்டா .....மனதுக்குள் அவனுக்கு ஆடம்பரமாக அர்ச்சனை செய்தாள் அவனது இல்லாள். ஒருபக்கம் கண்ணீரும் நிற்காமல் வந்துக் கொண்டிருப்பதை மிருத்யு பார்த்துவிட்டு,

"ம்மா.... ஏன் அக்குற " என்ற கேள்வியில் தொடங்கி அன்னை அழுவது தாளாமல் தானும் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழத் தயாராகினான் அவளது செல்லமகன். அவனது அழுகை கூட அவளுக்கு அவ்வளவு அழகாய் தெரிய கண்களை துடைத்துவிட்டு மகனை சமாதானம் செய்து தயார் செய்து முத்தமிட்டாள். மகனுடன் வெளியே வந்தவளுக்கு வெகு சாதாரணமாக உரையாடிக்கொண்டிருந்தவனை காண்கையில் ஆத்திரமாய் வந்தது. நல்லா எமனாக வந்து என் மகனை பிரிச்சிட்டு சிரிச்சிட்டா பேசுற..... இருடி அதுக்கெல்லாம் என்கிட்ட அனுபவிப்படா பட்டி..... முணுமுணுத்துக் கொண்டே கூடத்திற்கு வந்துசேர்ந்தாள்.
 
Status
Not open for further replies.
Top