All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

யுவியின் "ஆதிரையன்" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Yuvanandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ் ,
முதலில், இந்த தளத்தில் திரி அமைத்து கொடுத்த ஸ்ரீகலா மேம்க்கு மிக்க நன்றி
நான் யுவநந்தினி தளத்திற்கு புதியவள் ,கதை எழுதுவதற்கும் தான் ,இது எனது முதல் கதை ஆதிரையன் .

கதையை பற்றி கூறவேண்டுமானால் ,சாதுரியமும் சாமர்த்தியமும் நிறைந்த நாயகன் ஆதிரையன் , அழகும் அறிவும் நிறைந்த நாயகி சமுத்திரா தேவி .இப்போது நீங்கள் கேட்கலாம் "எல்லா கதை போல தானே இருக்கு இதுல என்ன புதுசா" என்று , இந்த கதை சரித்திர பாணியில் இருக்கும் அவ்வளவே !
இதில் வரும் இடங்கள் ,கதாபாத்திரங்கள் அனைத்தும் எனது கற்பனையே .
இந்த கதையில் இருக்கும் குறை நிறைகளை கருத்து திரியில் கட்டாயம் தெரிவிக்கவும் ,என்னை வளர்த்துக்கொள்ள அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அப்டேட்ஸ் திங்கள் ,புதன் ,வெள்ளி அன்று வரும் :):):)
 
Last edited:

Yuvanandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1 அரச சபை

மருத தேசத்தில் மொத்தம் இருபது நாடுகள் உள்ளன அவற்றை நான்கு பேரரசர்கள் ஆட்சி செய்து வருகின்றார்கள் . அத்தேசங்களில் சிம்ம நாடும் ஒன்று .

மருத தேசதின் கடல் அதன் தென் பகுதியில் ஓர் இயற்கை அரண் ஆக அமைத்துள்ளது . எனினும் மருத தேசத்து கடல் வணிகத்திற்கு வேறு விதமாக ஆபத்து வந்தது . அது கடற் கொள்ளையர்கள் மூலமாக வந்தது .

சிம்ம தேசத்து தலை நகர் ஆருத்ரா மாநகர்



அப்பெரும் நகரில் சிம்ம நாட்டின் மொத்த சிற்ப கலையின் உச்சத்தை காணலாம் . அப்படியே சற்று உற்று நோக்கினால் அந்த பெரும் அரண்மனையை காணலாம் .

அரண்மனை ராஜசபையில் மாலை கதிரவன் தன் கதிர்களை சாளரத்தின் வழியே செலுத்தி கொண்டு இருந்தான் . இன்னும் உற்று நோக்கினால் சபையில் நடக்கும் விவாதத்தையும் நாம் கேட்கலாம் .

"மருத தேசத்தில் கொள்ளையர் தொல்லை அதிகம் ஆகி விட்டது ",என்றார் சிம்ம தேசத்து அரசர் கஜவர்மன் . "சிம்ம அரசே , உமது வணிக கப்பல் கடந்த பௌர்ணமி அன்று கொள்ளையரால் வேட்டையாடப்பட்டது என்பது இந்த மருத நாட்டிற்கே தெரியும் "என்று கூறினார் ஆழி தேசத்து அரசர் விக்கிரம ராஜன் மிகுந்த எள்ளல் நிறைந்த குரலில் .

"வேட்டை என்று கூறாதே ஆழி தேசத்து அரசே ,நரிகளுக்கு வேட்டை ஆட தெரியாது மேலும் அன்று சிம்ம தேசத்து கப்பலை எங்கள் நாட்டு படையினர் மீட்டனர் ",என்று வாயில் அருகே கேட்டது ஒரு சிங்க குரல் . அக்குரலுக்கு சொந்தக்காரன் ராஜவர்மர் கஜவர்மரின் தமையன் .

"வர வேண்டும் ராஜவர்மரே வர வேண்டும் ",என்று அவரின் அரண்மனைகே அவரை அழைத்துவிட்டு மேலும் "சபை கூடி அரை நாழிகை தாமதமாக வருபவரே வரவேண்டும் ", என்று மீண்டும் எள்ளல் கொண்டே உதிர்ந்தது விக்ரம ராஜனின் வார்த்தை . மேலும் "அன்று தங்கள் பொருட்களை மீட்டீர்கள் ஆனால் கொள்ளையர் பிடிபடவில்லையே "

"தாமதத்திற்கு மன்னிக்கவும் " என்றார் ராஜவர்மர் ,விக்ரமராஜனின் எள்ளலை உதாசீனப்படுத்தி, சபையோர் முன்னிலையில் . பிறகு சென்று அவர் ஆசனத்தில் அமர்ந்தார் .

மீண்டும் விக்கிரம ராஜன் ,"அதுசரி நாட்டின் நலத்திற்கு பேரரசர் சபை கூடும் இன்று சிம்ம நாட்டு யுவராஜனே இன்னும் இங்கு வரவில்லை அதன் பின் அவரின் தந்தை சபைக்கு தாமதமாக வந்தால் கேட்கக்கூடாது அல்லவா "என்றான் எள்ளல் எல்லைமீறி .

" ஆதிரையன் ஒரு முக்கிய காரியமாக சென்றுள்ளதாக சபை துவாகிய போதே கூறிவிட்டேன் ஆழி அரசே ",என்றான் விஜயவர்மன் இளம் காளையின் குரலில் .

"விஜயா ,சற்று அமைதியாக இரு பெரியவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது இப்படி குரலை உயர்த்தாதே " என்று சபையோர் முன்னிலையிலும் ஒரு நல்ல தந்தையாக நடந்துகொண்டார் கஜவர்மர் . மேலும் "சபைக்கு வரவேண்டியவர் அனைவரும் வந்துவிட்டனர் இப்போது சபை துவங்கட்டும் "."சபைக்கு வருகை தந்துள்ள ஆழி ,நாக, கடம்ப தேசத்து பேரரசர்களுக்கும் மற்றும் இச்சபையின் அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கும் மற்ற சிற்றசர்களுக்கும் வணக்கம் , இச்சபை கூடிய முதன்மை காரணம் சிம்ம நாட்டை மட்டும் இல்லாமல் மற்ற அரசுகளையும் அச்சுறுத்தும் கடல் கொள்ளையர்களை ஒடுக்கும் வழியை ஆலோசிக்க கூடியுள்ளோம் தாங்கள் அனைவரும் தங்கள் மனதில் தோன்றிய திட்டத்தை கூறலாம் "என்றார் .

"தந்தையே கொள்ளையர் மீது நாம் கடற் போர் தொடுப்போம் , போரில் அவர்களை வெற்றி கொண்டு அவர்களை கட்டுப்படுத்தலாம் ",என்றான் விஜயன் அவனது வயதிற்கு உரிய வீரம் நிறைந்த குரலில் .

அதனை கேட்டு ஒரு நெடுமூச்சுசெரறிந்து " அவர்களை பற்றி முழுதாக தெரியாத நிலையில் போர் தோடுபது சரியான காரியமன்று விஜயா ". என்றார் கஜவர்மர் .

மேலும் சிலர் ஒப்பந்த முறைகளையும் ,சிலர் எதிரி தேசத்து உதவியை நாடலாம் என்றும் கூறினர் . எப்போதும் போல் விக்ரம ராஜன் சிம்ம நாட்டு யோசனைகளை எதிர்த்தார் .

இத்தனையும் அமைதியாக கேட்டு கொண்டு இருந்த கஜவர்மர் இறுதியாக அண்டை தேசத்தின் உதவியை கோரலாம் என்று முடிவு செய்தார் ,அதனை சபையிலும் கூறினார் . அதனை அனைவரும் ஒப்புக்கொண்டனர் .

சபை முடியும் நேரத்தில் அம்மண்டபத்தின் பதினைந்தடி உயரமும் ஆறடி அகலமும் கொண்ட சிற்ப வேலைபாடு நிறைத்த வாயில் கதவில் வலது புறம் சாய்ந்து கொண்டு ,நின்றான் .அவன் ,"எதிரி தேசமும், கொள்ளையரும் இணைந்திருந்தால் ........." என்றான் கம்பீர குரலில் .

சபையோர் அனைவரின் பார்வையும் வாயில் முன் நின்றவன் மீது விழுந்தது . மெல்ல அவன் சபை நோக்கி நடந்தான் , அவன் ஆறடிக்கும் சற்று உயரமாக இருந்தான் அவனை எதிர்பார் யாரும் மண்ணின் மேல் நடக்க மாட்டார் என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்தது அவனது முறுக்கேறிய புஜங்கள் . அவனது அகன்ற நெற்றி அவனது அறிவு கூர்மையை வெளிப்படுத்த ,அதில் இருந்த ஒரு தழும்பு அவனது வீரத்தை வெளிப்படுத்தியது ,கூர்மையான கண்கள் எதிர் நிற்போரை அளவிட தவறியதில்லை .அவன் சபையில் வரும் போது சபையோர் அனைவர் முகங்களிலும் வெவ்வேறு விதமான உணச்சிகள் ,கஜவர்மர் மற்றும் ராஜவர்மர் முகங்களில் நிம்மதி கலந்த பெருமை , விஜயன் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி , விக்கிரம ராஜன் முகத்தில் ஒரு வகையான புன்னகை அந்தப்புன்னகை அவனை கண்டத்தில் வந்ததா அல்லது இனி அவரது பேச்சு எடுபடாது என்ற எண்ணத்தால் வந்ததா என்பது அவருக்கே வெளிச்சம் இவை அனைத்தையும் தன் கூர்மையான கண்களால்அளவிட்ட வாறே சபையின் மத்தியில் வந்து நின்றான் ஆதிரையன் .!!!!!!.



வருவான் ...!!
*******************************************************************************************
சிம்ம தேசம் : ஆதிரையன் , ராஜவர்மர் , கஜவர்மர் ,விஜயவர்மன்
ஆழி தேசம் :விக்ரமராஜன்
 
Status
Not open for further replies.
Top