All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரஜியாதா ரஹ்மானின் ‘எனைத்தான் அன்பே மறந்தாயோ!!!’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனைத்தான் அன்பே மறந்தாயோ!!!❤🔥

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா நிர்ரஹீம் 🤲

ஹாய் வாசக பெரு மக்களே!!!🥰🥰
நான் ரசிகா .. இந்த களத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக ஒரு சைலண்ட் 🤪 வாசகியாக இருந்து படித்து வருகிறேன் 😁😁அதற்காக என்னை மன்னிச்சு 🤗🤗 இப்போ கொஞ்ச நாள்களாக தான் எனது கருத்துக்களையும் பதிவிடுகிறேன் ..
இங்கு உள்ள அனைத்து எழுத்தாளர்களின் கதைகளை வாசிக்க வாசிக்க எனக்குள் சமீப காலமாக ஒரு உத்வேகம் நாமும் ஒரு நாவல் எழுதணும் ன்னு.. இப்போது அதை நடைமுறை படுத்த உங்க எல்லாரையும் குஷி படுத்த👻 நான் வந்துவிட்டேன் மக்களே🥰🥰😍
எனக்கும் என் முதல் கதையாகிய எனைத்தான் அன்பே மறந்தாயோ❤🔥 இக்கதைக்கும் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் சகோதரிகளே🥰🥰 அடுத்து லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் எனக்கு இங்கு எழுத வாய்ப்பளித்த ஶ்ரீகலா மேம் க்கு என் நன்றிகள் 🥰🥰 ஒரு மனிதனுக்கு வெற்றி கிட்டுவதற்கு காரணம் அவன் அடிப்படை திறனும் மனோதிடமும் தான் அதற்கும் மேல் ஒன்று அவனுக்கு கிடைக்கும் ஒரு சிறிய வாய்ப்பு அவ்வாய்ப்பை எனக்கு அளித்த ஶ்ரீகலா மேம் க்கு ரொம்ப நன்றிகள் 💗💗💗

ஓகே மக்களே கதைக்குள் போகலாமா🤗🤗🤗

நாயகன் : அமன் சக்கரபோர்த்தி
நாயகி : இளானி குமார்

லெட்ஸ் ஸ்டார்ட் காய்ஸ் 🤗🥰
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -1

ஜூகு - இந்தியாவின் புகழ்பெற்ற வணிக மையத்தின் முதல் இடத்தில் இருக்கும் மும்மை மாநகரத்தில் புற நகரில் உள்ள ஒரு கடற்கரைப் பகுதியாகும். இதன் மேற்கில் அரபுக் கடலும், வடக்கில் வெர்சோவா , கிழக்கில் சாந்த குரூஸ், தெற்கில் கர் பகுதியும் அமைந்துள்ளது . இது ஜுகு எனும் அழகிய கடற்கரையைக் கொண்டுள்ளது. மும்பை நகரத்திற்கு மேற்கில் அமைந்த ஜூகு பகுதி, மும்பையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அழகிய கடற்பகுதியை சுற்றிய சுமார் 15,000 ஏக்கர் பரப்பில் மிக பிரம்மாண்டமாக ஜுகு கடற்கரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல இருந்தது அந்த வீடு இல்ல இல்ல பெரிய மாளிகை.. அங்கு மொத்தம் பத்து தட்டு மாடிகள் கொண்ட கட்டமைப்பில் எங்கு பார்த்தாலும் பணத்தின் செழுமையே காணலாம். அங்கு ஐந்தாம் மாடி முழுவதும் தனதாக்கி தன் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு அறையென்று உருவாக்கி வைத்திருக்கிறான் அவன். இப்போது அவனின் பிரத்யேக அறையான ஜிம் அறையில் லாட் புல்டவுன் (Lat pulldown) எடுத்து கொண்டிருந்தான். அவனுக்கு பின் உள்ள ஹோம் தியேட்டரில் இருந்து அழகான ஹிந்தி சாங்க் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது..

பல் ஏக் பல் மே ஹி தம் சாகயா
து ஹாத் மே ஹாத் ஜோ தே கயா
சாலுன் மெயின் ஜஹான் ஜாயே து
தாயீன் மெயின் தேரே பாயெயின் து
ஹூன் ரூட் மெயின் ஹவாயேன் து

சாத்தியா…

இந்த மெலோடியஸ் சாங்கு க்கும் இவன் பண்ற வொர்க் அவுட்டுக்கும் சம்பந்தமே இல்லைனு பாக்குறிங்களா அவன் அப்படித்தான் எல்லாமே வித்தியாசமாக தான் பண்ணுவான் அவன் தான் நம் நாயகன் அமன் சக்கரபோர்த்தி "ஏ.எஸ்.குரூப் ஆப் கன்ஸ்ட்ரக்சன் இன் இந்தியா" வின் சி.இ.ஓ..

புல்டவுன் எடுக்கும் போது ஏறி இறங்கும் மார்புகளும் , முறுக்கேறிய புஜங்களும் , கழுத்து நரம்பு புடைத்த தசைக்கோளங்களும் அலை அலையாய் பாய்ந்த அடற்குழல் கேசமும் அதன் வழியே வழியும் வியர்வை துளிகளும் , இறுக மூடி இருக்கும் அழுத்தமான உதடுகளும் , டிரிம் செய்த தாடி மீசையும் , மேல் சட்டை இல்லாமல் பார்ப்போரை கூச்சப்பட வைக்கும் அகன்று திரண்ட மார்பும் , எய்ட் பேக் வயிறும் என அவை அவனை ஒரு ஆணழகனாகவும் கம்பீரமாகவும் காட்டியது. இரண்டு மணி நேரமாக உடற்பயிற்சி செய்தும் கொஞ்சம் கூட களைப்பாகாமல் மீண்டும் டிரெட் மில்லில் ஏறி ஹை ஸ்பீட் நம்பெரில் ஓடிக் கொண்டிருந்தான்.

அப்போது அவன் வீட்டு போட்டிக்கோவில் கருப்பு நிற புக்காட்டி சிரோன் கார் ஒன்று வந்திறங்கியது. அதில் இருந்து ஐம்பத்து ஏழு வயதில் கம்பீர தோற்றத்தில் ஒரு ஆணும் , ஐம்பது வயதில் சாந்த ரூபில் ஒரு பெண்மணியும் இறங்கினர். நேரே வீட்டுவாயிற் மணியை அடிக்க வாய்ப்பில்லாமல் வீட்டிற்குள் சென்றவர்களை வரவேற்றது அவ்வீட்டின் காலங்காலமாக பணியாள் வேளையில் இருக்கும் பெண்மணி எலிசபெத் வயது ஐம்பதுக்கு குறையாமல் இருக்கும். அவரிடம் ஒரு சிறிய தலையசைப்பை கொடுத்து விட்டு கீழ் தளத்தில் உள்ள தன் அறைக்குள் சென்று மறந்தார் அவர் .அவர் தான் நம்ம ஹீரோவின் தந்தை அசோக் சக்கரபோர்த்தி . முன்னாள் ஏ.எஸ்.கம்பனியின் எம்.டி..
அவரை போல் அறைக்குள் செல்லாமல் வரவேற்பறையில் அங்குள்ள எலிசபெத்திடம் நின்று அமன் பத்தி விசாரித்து கொண்டிருந்தார் அமனின் தாயார் அமலா .

"எலிசா அமன் வந்துட்டானா"- அமலா

"ஆமாம் மேடம் வந்து ரெண்டு மணி நேரம் ஆகுது" - எலிசா

"ஓ சரி எதாவது சாப்பிட்டானா ? "

"இல்லை மேடம் வந்ததுல இருந்து ஜிம் அறையில் தான் இருக்கார். எதாவது சாப்பிட கொண்டு வரவா தம்பி னு கேட்டேன் வேண்டாம் ன்னு சொல்லிட்டார் மேடம்" அதை கேட்டதும் ஒரு பெருமூச்சை விட்டு விட்டு தன் தனயனின் அறை நோக்கி செல்ல மாடி ஏறப் போனவரை அமலா என்று சொல்லி தடுத்து நிறுத்தினார் அவரின் கணவர் அசோக்.

" எங்க போற அமலா "

" நம்ம சோட்டி ரூம் க்கு தாங்க "

"அது தெரியுது அங்க எதுக்கு நீ போறேன்னு கேக்குறேன் " என்றார் அசோக்.

அவரின் கேள்விலேயே தன் அதிருப்திய காட்டிய அமலா "என்னங்க கேள்வி இது என் பையன் ரூம் க்கு நான் போகுறதுல என்ன தப்பு".

"உன் பையன்னு நீ மட்டும் நினைச்சா போதுமா அவனும் உன்ன அம்மாவா நினைக்கணும் ல அமலா" என்றார் அவர்.

"நீங்க என்ன சொன்னாலும் அவன் என் பையன் தான் " என்று விட்டு வேகமாய் மாடி ஏறி அமன் அறைக்குள் சென்றார். கதவு திறந்து தான் இருந்தது அது வழக்கம் தான் அவனை தவிர யாரும் அங்கு வர மாட்டார்கள் வரக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம். இருந்தும் கதவை லேசாக ரெண்டு தட்டு தட்டி விட்டு அறைக்குள் நுழைந்தால் வெற்று அறையே அவருக்கு காட்சியளித்தது.

"எங்கே போயிருப்பான்" என்று யோசிக்கும் போதே எலிசா சொன்ன ஜிம் அறையில் இருக்கிறான் என்பது நினைவு வர அங்கே விரைந்தார்.

இப்போது அமன் அறையை பற்றிய ஒரு விவரிப்பு.. அவ்வீட்டின் ஐந்தாவது தளம் முழுவதையும் தன் பிரத்யேக அறையாக மாற்றி கொண்டான். முதலில் 5- ம் தளம் வந்ததும் அவன் அறைக்குள் செல்ல ஒரு மெயின் டோர் -உம் அதற்கு அடுத்த தளங்களுக்கு செல்லவென பக்கவாட்டில் படிகள் மற்றும் லிஃப்ட் சேவையும் இருந்தது.

அதில் அவன் அறையில் இருக்கும் மெயின் டோரை திறந்தால் முதலில் பெரிய ஹால் போன்ற இடம் அதற்கடுத்து அவனின் பிரம்மாண்டமான பெட்ரூம் அதை தாண்டி குளியலறை அப்புறம் அவன் வீட்டில் இருக்கும் சமயத்தில் அலுவல் வேலை பார்க்கும் ஆபீஸ் ரூம் , பிறகு அதையொட்டி ஜிம் , மேலும் வெளிய பெரிய பால்கனி இப்படி எங்கும் ஒரே பிரம்மாண்டம் தான்.

இப்போது ஜிம் அறைக்கு முன் நின்று கொண்டு கதவை தட்டி உள்ளே சென்றவர் அவன் இன்னும் டிரெட்டில் ஓடிக்கொண்டிருந்ததை பார்த்து "சோட்டி இன்னும் வர்க் அவுட் முடியலையா பா ? கீழ வந்து சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுப்பா . நாள் முழுக்க வேலை வேலைன்னு கஷ்டபட்டு இப்போவும் ஜிம் ல கிடந்து உடம்ப வருத்திக்கணுமா பா . வாப்பா சாப்பிட" என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் அவனோ கேட்டும் கேட்காதது போல் டிரெட்டில் ஓடிக் கொண்டிருந்தான்.

"சோட்டி" என்று மீண்டும் அவர் அழைத்து முடிக்கும் முன்னரே " டோன்ட் கால் மீ லைக் தெட் டம்ப் நேம் " என்று சீறினான் அமன்.

அதில் உடல் தூக்கிபோட அதிர்ந்து அவனை பார்த்தவரின் கண்ணில் இருந்து விழிநீர் விழவா என்று துருத்தி கொண்டிருந்தது. அவனோ அவரை ஒரு முறை அழுத்தமாக பார்த்து விட்டு பின் திரும்பி நின்று "உங்களை இங்க வராதிங்கன்னு எத்தனை தடவை சொல்றது திருப்பி திருப்பி என் முன்னாடி வந்து ஏன் என்ன இரிட்டேட் பண்றீங்க" என்று காய்ந்தவன்
அந்த ஹோம் தியேட்டரில் ஓடிய மெலோடி சாங்க் ஐ மாற்றி இங்கிலீஷ் சாங்க் ஒன்றை ஹைய் வால்யூமில் வைத்தான் அவரின் பேச்சை கேட்காமல் இருக்க வேண்டி.

அதை உணர்ந்து திரும்ப "அமன் கண்ணா" என்று சொல்லவும் அந்த அறை அதிற " கெட் லாஸ்ட் ஃப்ரம் மை ரூம் " என்று கத்தினான் அவன்.

அதில் உடல் நடுங்கிப் போனவர் விழவா என்று கெஞ்சிய கண்ணீர்க்கு விடைக் கொடுக்க அது பொழ பொழவென கண்ணிலிருந்து வழிந்தது.

திருப்பி ஏதும் கேட்டால் இதுக்கு மேலயும் எதும் சொல்வான் என்று எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளிய வந்து கண்ணீரை துடைத்து நிமிறவும் அவர் கணவர் அசோக் அவரை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அதில் திடுக்கிட்டு உடனே தன் முகபாவனையை மாற்றி இதழை இழுத்து பிடித்து சிரிப்பது போல் காட்டினார் .

உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு ஊகித்தவர் கண்கள் சிவக்க "இப்போ என்ன சொல்லி உன்ன விரட்டினான் உன் பையன்" என்று உருமினார் அவர்.

அமலா எதும் சொல்லாமல் நிற்கவும் "அவனை " என்று சொல்லி அறைக்குள் செல்ல முயன்றவரை கை பிடித்து தடுத்து "ஒன்றும் இல்லை" எனக்கூறி கீழே தங்கள் அறைக்குள் இழுத்து சென்றார்.

இதில் கையாலாகாத நிலையில் அவரின் பின்னே அறைக்குள் சென்றவர் கையை தட்டி விட்டு அவரை அழுத்தமாக பார்க்க அவரின் பார்வையை சந்திக்காமல் கட்டிலின் மெத்தையில் தன் இடத்தில் சென்று படுத்தார் அமலா. அதை கொஞ்ச நேரம் வெறித்து பார்த்தவர் தானும் சென்று படுத்தார் ஆனால் தூக்கம் தான் இருவருக்கும் தூரமாகியது..

இங்கோ அன்னையிடம் கத்தி விட்டு திருப்பி வர்க் அவுட்டில் கவனம் செலுத்தியவன் அவர் சென்றதை உணர்ந்து ஜிம்மிலிருந்து நேரே குளியலறை சென்று குளித்து வெளிய வந்து பாத்ரோப் கட்டியவாரே ஆறு பேர் படுக்க கூடிய பெட்டில் கை, கால்களை விரித்தவாரு குப்புறப் படுத்தான் அமன்.

அவன் மனமோ சஞ்சலத்தில் உழன்று கொண்டிருந்தது. "எதற்காக இந்த ஓட்டம் ? யாருக்காக இந்த வாழ்க்கை ? எதை நோக்கி என் பயணம் போகிறது ? என்று எப்போதும் தனக்குள் கேட்கும் கேள்விகளை இன்றும் கேட்டுக் கொண்டு அதற்கு விடை தெரியாமல் அவனின் கண்கள் நேரே அவனுக்கு இடப்புறத்தில் இருக்கும் ஆளுயர பெரிய புகைப்படத்தில் உள்ளவரை பார்த்தது. அங்கு கம்பீரமாக காட்சியளித்தார் ஏ. எஸ். சாம்ராஜ்ஜியத்தின் அடிவேர் அதனை உருவாக்கி கட்டிகாத்த அமனின் தாத்தா "ஆரிய சக்கரபோர்த்தி".

கொஞ்ச நேரம் அவரை வெறித்தவன் "கிராண்ட்பா ஐ நீட் டூ பீஸ் ( peace) அண்ட் ஐ வான்ட் டூ சம் வேயர் (some where) ஃப்ரம் திஸ் ப்லேஸ் " என்றுக் கூறி அவரை பார்க்க அதில் என்ன தெரிந்ததோ " அப்போ எனக்கு விடுதலையே கிடைக்காதா" என்று ஒரு கசந்த முறுவலை சிந்தி விட்டு திருப்பி பெட்டில் தலை வைத்து படுத்து சிறிது நேரத்தில் தூங்கியும் போனான்.

நள்ளிரவு 1 மணி அளவில் கொலாபா நகரில் அமைந்துள்ள அந்த பெரிய மாளிகையில் குறிப்பிட்ட அறையின் பால்கனியில் நின்று கொண்டு கையில் எதையோ வைத்து முணுமுணுத்துக் கொண்டு நேரெதிரே தோன்றும் நிலாவை வெறித்தவாரு "விடுதலையா அவ்வளவு சீக்கீரமாவா ? என்ன விட்டு நீ எப்படி போறேன்னு நானும் பாக்குறேன் டார்லிங்" என்று சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்...
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் வாசக பெருமக்களே!!! என் கதையின் முதல் அத்தியாயத்தை பதிந்து விட்டேன்..😍😍🥰

கருத்துத் திரி :-

இக்கதைக்கான தங்களின் முத்தான கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் மக்களே !!😍😍 மேலும் குறைகள் இருப்பின் அதைக் கூறி என்னை ஊக்குவியுங்கள் 😍🥰🥰 அதற்கான லிங்க் இதோ😍😍

 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!!🥰

நம்ம ஹீரோக்கு ஒரு பிக் வைக்கலாம் ன்னு வந்தேன்..😉😉 அப்படியே ஹீரோ பேரண்ட்ஸ் க்கும் சேர்த்து வச்சிடுறேன்😍😍

அமன் சக்கரபோர்த்தி

32360


நல்லா இருக்கானா😍😍

அசோக் சக்கரபோர்த்தி
32361

அமலா
32362

எப்படி மக்களே ??🥰
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -2


அந்த நள்ளிரவு வேளையில் அவள் நன்கு துயில் கொண்டிருந்தாள். அப்போது யாரோ ஒருவர் அவள் வீட்டு பால்கனி வழியாக அவள் அறைக்குள் நுழைவதற்கு பால்கனி கண்ணாடி கதவின் திறப்பில் கை வைத்து திறக்க அச்சத்தத்தில் அவள் படக்கென்று விழியை திறந்து பார்த்தாள். எங்கும் இருட்டாக இருக்க கொஞ்ச நேரம் கண்கள் இருட்டுக்கு பழக பால்கனி வழியாக ஒரு நெடிய ஆறடி உருவம் அவள் அருகில் வருவதை கண்டாள். உடனே அவள் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த தன் தோழியை பார்க்க அவள் அங்கு இல்லை .


அதில் தனியாக மாட்டிக் கொண்ட பயத்தில் அவள் வீலென்று கத்த தொடங்கும் முன் அந்த உருவம் தன் வலிய கரங்களால் அவள் வாயை பொத்தி தன் கையில் வைத்திருந்த சிறிய டார்ச் லைட் ஒன்றை எடுத்து அவள் முகத்தில் அடித்தான்.முதலில் கண்கள் கூச பின் அந்நபரை ஏறிட்டு பார்க்க முகத்தில் மாஸ்க் அணிந்து இருந்ததால் அது ஆணா ? பெண்ணா ? என்று இனம் காண இயலவில்லை.


அந்த ஆளின் கையை தன் வாயிலிருந்து அவள் எடுக்க முயற்சிக்க முடிவு என்னவோ தோல்வி தான் . அவளால் ஒரு இன்ச் கூட அந்த உருவத்தின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. கண்ணில் கண்ணீர் கட்டி அவ்வுருவத்தை கெஞ்சுதலாய் பார்க்க அது இடியென சிரித்தது.


அப்போது தான் குரலின் வேறுபாட்டில் அது ஒரு ஆண் என்று அவளுக்கு விளங்கியது. அதில் அவள் பயம் இன்னும் ஏறியது. இப்போது அவள் கண்ணில் என்ன கண்டானோ மெல்ல தன் கையை அவள் வாயிலிருந்து எடுக்க முதல் லேசாக இருமி தன்னை சமன்படுத்தி விட்டு மெல்ல அவனை ஏறிட்டு " யார் நீ" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.


அதற்கு மீண்டும் பயங்கரமாக சிரித்து விட்டு "எனக்கு விடுதலை தர மாட்டேன்னு சொன்னியா ? இப்போ பாரு நான்னே உனக்கு பெரிய விடுதலையா தாரேன் " என்று சொல்லி தான் போட்டு வந்த கோட்டில் மறைத்து வைத்திருந்தக் கத்தியை எடுத்து அவள் வயிற்றில் "சதக் ! சதக்" என்று குத்தினான் அவன்.


"ஐயோ ! அம்மாமாமா ஆ ஆ ஆ ஆ ஆ !!" என்று அவள் கத்தி அழவும் அதில் நன்றாக தூங்கி கொண்டிருந்த அவள் தோழி அடித்து பிடித்து எழுந்து ரூம் லைட்டை போட்டுவிட்டு என்னவென்று பார்க்க கட்டிலில் படுத்து தன் வயிற்றை பிடித்து கொண்டு " ஐயோ !அம்மா " என பினாத்தி கொண்டிருந்தாள் அவள் . அதான் நம்ம ஹீரோயின் இளானி குமார்..


"என்னாச்சு இவளுக்கு வயிற்றை பிடிச்சுட்டு கத்திட்டு இருக்கா !! ஒரு வேல நேத்து நைட்டு சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலையோ ? வயிறு வலிக்குதோ " என்று எண்ணியபடியே கிட்ட வந்து அவளை உலுக்கினால் அவள் ஆருயிர் நண்பி துஷாரா.


"ஏய் இளா ! என்னடி ஆச்சு வயிறு வலிக்குதா என்ன ? எதுக்கு இப்படி நடுராத்திரியில கத்தி ஊர கூட்டிட்டு இருக்க .. ஏய் இவ்ளோ கத்துறேன் கண்ணை திறந்து பாரு டி எரும" என்று திட்டிக் கொண்டிருந்தாள் தன் தூக்கம் கேட்டு போன கடுப்பில். அது எதுவும் தன் காதில் விழாமல் தன் போக்கிலேயே தூக்கத்தில் உளறிக் கொண்டிருந்தவளை பார்த்து " ம்ஹூம் இது சரி வராது " என்று பக்கத்தில் குடிக்க வைத்திருந்த ஜக்கில் உள்ள தண்ணீர் முழுவதையும் அவள் மேல் ஊற்றி விட்டாள் துஷாரா.


அதில் அடித்து பிடித்து எழுந்தவளுக்கோ சில நிமிடத்திற்கு ஒன்றும் புரியவில்லை. பின்பே தன்னை ஒருவன் கத்தியால் குத்தியது நினைவு வர , " ஆஆஆ துஷ் என்ன காப்பாத்து ! என்ன அவன் கத்தியால குத்திட்டான் ! என்னைக் கொண்ணுட்டான் . ஐய்யோ நான் சாக போறேனே !! எவ்ளோ இரத்தம் " என்று அலறினாள் இன்னும் அந்த கொடூர கனவின் தாக்கத்தில் இருந்து வெளிவராமல். ஆம் அவள் இத்தனை நேரம் கண்டது அனைத்தும் கனவு .



இப்போதும் சுற்றம் உரைக்காமல் அந்த கனவிலேயே உழன்றுக் கொண்டிருப்பவளை கண்ட துஷாரா "ஓ எதோ கனவு கண்டு இருக்கிறாள் போல" என்று நினைத்து விட்டு அவளை சமாதான படுத்த தொடங்கினாள்.



"இளா காம்டவுன் டா .. ஈஸி ஈஸி ஒன்னும் இல்லைடா இங்க பாரு நீ நல்லா தான் இருக்க .யூ ஆர் ஃபைன் நவ். பி ரிலாக்ஸ்.. நீ நினைக்கிற மாதிரி யாரும் இங்க உன்ன எதுவும் பண்ணலை கண்ண நல்லா திறந்து இங்க பாரு யாரும் இருக்காங்களா இல்ல தான, கீழ குனிஞ்சு பாரு எதுவுமே இல்ல எல்லாம் கனவு மா கூல் பேபி " அவள் சொல்ல சொல்ல அப்போதே சுற்றுபுறம் உரைக்க எல்லாம் தன் கனவு என்பது புரிய ஒரு நீண்ட மூச்சை விட்டு தன்னை நிலைப்படுத்தினாள் இளானி.



"அப்பாடா.. எல்லாம் கனவா ? நான் கூட உண்மையோன்னு நினைச்சு எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா ? "



"சரி விடு கனவு தான் எல்லாம் நீ வொர்ரி பண்ணிக்காத நல்லா தூங்கி ரெஸ்ட் எடு . மார்னிங் நமக்கு வொர்க் இருக்கு நியாபகம் இருக்குல்ல சோ எத பத்தியும் திங்க் பண்ணாம படுத்து தூங்கு. குட் நைட் !! " சொல்லிவிட்டு தன் இடத்திற்கு சென்று துஷ் படுத்து விட்டாள்.



அவளையே கொஞ்ச நேரம் பார்த்து விட்டு "ஹப்பா நைட் படிச்ச நாவலோட எஃபெக்ட் இவளோ பயங்கரமாகவா இருக்கும் இனி நைட் டைம்ல புக்கே வாசிக்கக் கூடாது டா யப்பா ! அதுவும் கிரைம் ஸ்டோரி ம்ஹூம்ம்" என்று எண்ணிக்கொண்டாள்.



அது ஒன்னுமில்லை நள்ளிரவு 1 மணிக்கு பால்கனில நின்று அந்த டயலாக்கை பேசுனது வேறு யாருமில்லை நம்ம இளா பொண்ணு தான் . அந்த நேரம் ஒரு கிரைம் நாவலை வாசித்து கொண்டு இருந்தாள். அது முடியும் தருவாயில் அதிலுள்ள வார்த்தைகளை சத்தமாக நிலாவ பார்த்து பேசிட்டு வந்து படுத்து விட்டாள். அந்த கதையோட தாக்கம் தான் கனவா வந்துருக்கு..



நம்ம இளாக்கு கதை படிக்கணும் னா ரொம்ப இஷ்டம் காதல்,கிரைம், திரில்லர் ன்னு எல்லா நாவல்களும் படிச்சு கரைச்சு முடிக்குற அளவுக்கு அவ்ளோ அன்பு புத்தகங்கள் மேல்.சரியான புத்தக விரும்பி..


*********


காலை ஆறு மணிக்கு அலாரம் அடிக்க அதில் எழுந்து அலாரத்தை அணைத்து குளியலறை சென்று தன் காலை கடனை முடித்து விட்டு வெளிய வந்து பார்த்த துஷாரா கண்டது தலை முதல் கால் வரை போர்வையால் போத்தி கொண்டிருந்த இளாவை தான். "இவளோட .. இன்னைக்கு முக்கியமான நாள் சீக்கிரம் ரெடி ஆக சொன்னா இன்னும் இழுத்து போத்திட்டு தூங்குறத பாரு".



"ஹே இளா இன்னும் என்ன தூக்கம் ?இன்னைக்கு நமக்கு அந்த கம்பனில சிமெண்ட் சப்ளை பண்றதுக்கு நம்ம கம்பனியோட டை அப் வச்சுக்க கொட்டேசன் அண்ட் பிரசன்டேஷன் குடுக்க வர சொல்லிருக்காங்க நியாபகம் இருக்குல்ல சீக்கிரம் கிளம்புற வழிய பாரு .. ம்ம் கெட் அப்"



"ம்ம்ச் போ துஷ் நைட் தான் நிம்மதியா தூங்க முடிலன்னா மார்னிங்கும் இப்படி தூங்க விடாம படுத்துறியே" அதில் கையில் ப்ராஜக்ட் சம்மந்தமா ஒரு கோப்பில் கவனம் வைத்திருந்தவள் இளாவின் பேச்சில் கடுப்புற்று அந்த கோப்பாலயே ஒரு அடி போட்டு "மவளே ராத்திரி முழுக்க கனவு கண்டுட்டு தூங்க விடாம பண்ணது நீனு இதுல என்ன சொல்றியா ? கொண்ணுடுவேன் டி உன்ன "" .



அதற்கு அசடு வழிந்தவாரு அவளை பார்த்து கேவலமான ஒரு சிரிப்பை சிந்தி விட்டு மீண்டும் உறங்க போனவளை இழுத்து குளியலரைக்குள் தள்ளினாள் துஷாரா. பின் பல் துலக்கி விட்டு வெளிய வந்து பார்த்தால் அவளுக்காக சுட சுட காஃபி டிரெஸ்ஸிங் டேபிள் மேல் இருந்தது. அதைக் கண்டு "நண்பி டி" என்று துசாரா வை மெச்சிக் கொண்டாள்.



காஃபி குடித்து முடித்த பின் குளித்து விட்டு வரும் போது துசாரா ஃபார்மல் லைட் நீலக் கலர் முழுக்கை சட்டையும் , கருப்பு கலரில் நீள பேண்ட்டும் அணிந்து தயாராக இருந்தாள். "துஷ் என்ன இப்போவே கிளம்பிட்ட ஒன்பதரை மணிக்கு தான அந்த கம்பெனில நமக்கு அப்பாயின்ட்மென்ட் ..இப்ப டைம் எட்டு தான் ஆகுது"



"எனக்கும் தெரியும் நம்மூரு டிராஃபிக்ல இப்போ கிளம்புனா தான் கரெக்ட் டைம்க்கு நாம அங்க ரீச் ஆக முடியும். ஹால்ப் அண்ட் ஹவர் முன்னாடி போனா ஒன்னும் ஆயிடாது பேசாம கிளம்புற வழிய பாரு டி " என்று விட்டு மீண்டும் கோப்பில் எல்லாம் சரியாக உள்ளதா என பார்க்க தொடங்கி விட்டாள்.



அவளை பார்த்து நாக்கை துருத்தி பழிப்புக் காட்டி விட்டு உடை மாற்றும் அறைக்குள் சென்று பீச் கலர் முழுக்கை சட்டையும் , டார்க் கிரேய் கலர் கால்சட்டையும் அணிந்து துஷ் ஐ விட கம்பீரமாக , தோரணையுடன் கருப்பு ஹீல்ஸ் அணிந்து மிடுக்காக நடந்து வந்தாள் இளா.



இளானி நல்ல சிவந்த நிறம். முதுகின் பாதியளவு இருக்கும் வி வடிவ லெதர் கட் செய்யப்பட்ட கூந்தல், பிறை நெற்றி, திரெட் செய்து வில்லாக வளைந்த புருவங்கள், பெரிய கண்கள், செர்ரி இதழ்கள், குண்டு கன்னங்கள் ஆமாங்க நம்ம இளா கொஞ்சம் பூசினார் போல தான் இருப்பா ஆனால் பேரழகி.. துஷாரா வும் நல்ல அழகு ஜீரோ சைஸ் உடல்வாகு.


இளானி

32537


துஷாரா

32538



இளா வின் வரவை உணர்ந்து நிமிர்ந்து பார்த்த துஷ் அவள் உடையில் திருப்தியுற்று" குட்" என்றாள். ஏன் என்றால் அவள் மற்ற நேரங்களில் உடுத்தும் உடை ஒரு காம்பினேஷன் இல்லாமல் ஏனோ தானோவென்று உடுத்துவாள் அதனால் வந்த மெச்சுதலே இது..



"டக் !டக்! டக்!! இளா மா , துஷா ரெடி ஆயிட்டிங்களா ? பப்பா (அப்பா) கூப்பிடுறாங்க வாங்க " என இளா வின் ரூம் கதவை தட்டி சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க சென்றார் இளாவின் அம்மா அமீஷா.


இளாவும், துஷாராவும் கீழே வீட்டின் ஹால்க்கு செல்ல அங்கே ஹால் நடுவில் போடப்பட்ட ஷோபாவில் நடுநாயகமாக உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார் இளாவின் தந்தை ராஜேஷ் குமார்.



"குமார் குரூப் ஆப் சிமெண்ட் பிரைவேட் லிமிடெட் " - ன் எம். டி.. அவரின் தந்தை இராஜா ராம் காலத்தில் உருவாக்கப்பட்டது. முதலில் சிறு தொழிலாக ஆரம்பித்து பின் தன் திறமையால் முன்னேறி இன்று மும்பையிலேயே கொலாபா நகரில் முன்னணி வகிக்கும் தொழிற்சாலையாக வளர்ந்து வந்துள்ளது .. இவ்வளர்ச்சிக்கு ராஜேஷ் குமாரின் பங்கும் இன்றியமையாதது..



அவருக்கு பின் அவரின் ஒற்றை மகளாகிய இளானியும் தன் நிறுவனத்தை திறம்பட செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அவரின் புதல்வியோ "சிக்குவேனா !" என்று போக்கு காட்டி கொண்டிருக்கிறாள்..



இளானி ரொம்பவே குறும்புத் தனமான பொண்ணு. எந்த விஷயத்திலும் ஈஸி கோயிங் தான். யாரிடமும் அவ்ளோ சீக்கிரத்தில் ஒட்டி விடுவாள்.எளிதில் நம்பிவிடுவாள் .அதனால் ஏமாந்தும் போயிருக்கிறாள்.. இந்த சுபாவத்தாலே ராஜேஷ் க்கு மகளிடம் இந்த கம்பனி பொறுப்பு மொத்தமும் குடுக்க ஒரு வித தயக்கம். எங்கு மகள் யாரிடமும் ஏமாந்து விட்டு அதனால் நிறுவனத்தில் ஏதேனும் குழறுபடிகள் வந்து விடுமோ என்று அஞ்சுகிறார்..



ஆனால் துஷாரா அப்படியில்லை. ரொம்ப திறமைசாலி..பொறுப்பானவள்
எதையும் ஆராய்ந்தே அவ்வழியில் செல்பவள்.அதனாலேயே துஷாரா வை ராஜேஷ் தன் மகள் அருகிலேயே வைத்திருக்கிறார்..



துஷாரா விற்கு சிறு வயதில் தாய், தந்தை யாருமில்லை . அவளின் ஆறாம் வகுப்பு வரை துஷாராவின் அன்னை வழி பாட்டி தான் அவளை படிக்க வைத்தது.அவரும் அதன் பின் நோய்வாய்ப் பட்டு இறந்து விட அப்போது அவளின் உயிர் தோழியாய் இருந்த இளா தன் தந்தையிடம் சொல்லி அவள் படிப்பு செலவை முழுவதையும் ஏற்க வைத்தாள்.



தன் வீட்டிற்கே வந்துவிடும் படி அழைத்தும் அதற்கு மற்றும் அவள் பிடிவாதமாக மறுத்து விட்டாள். "இல்ல இளா எனக்கு இதுவே பெரிய உதவி நான் ஹாஸ்டல்ல இருந்துக்குறேன்.. நான் படிச்சு வேலைக்கு போன அப்புறம் அங்கிள் எனக்கு செலவு பண்ணதுக்குலாம் சேர்த்து நான் திருப்பி தந்துருவேன்.. ஓகே வா" என்று சொல்லி விடுவாள்..



அச்சமயத்தில் எல்லாம் "இல்லை அதுலாம் ஒன்னும் வேண்டாம்" என்று சொல்ல நினைத்தாலும் எங்கே "அப்போ ! எந்த உதவியும் வேண்டாம்" என்று சொல்லி விடுவாளோ என்று அஞ்சி ஏதோ இந்த மட்டுக்கும் ஒத்துக் கொண்டாளே என்றே அதற்கெல்லாம் சரி சரி என்று தலையை ஆட்டுவாள் இளா.. ஸ்கூல் படிப்புக்கு மட்டும் இளாவின் தந்தையிடம் உதவி பெற்றவள் பின் தனது மார்க் மூலம் ஸ்காலர்ஷிப்பில் காலேஜை முடித்தாள்.. இச்சிறு வயதில் அவளிடம் உள்ள பக்குவத்தை கண்டு பல முறை ராஜேஷ் வியந்துருக்கிறார்..



பின்பு இருவரும் ஒன்றாகவே பள்ளி படிப்பும் , காலேஜில் சிவில் இன்ஜினியரிங் குரூப் எடுத்து படித்து முடித்து இதோ ராஜேஷ் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக ட்ரைனிங் போல் வொர்க் பண்ணுகின்றனர்..



இதுவரை இருவருக்கும் சின்ன சின்ன வேலைகளாய் கொடுத்த அவர் அவர்களின் திறனை பாராட்டி இப்போதே பெரிய புராஜக்ட்-ஐ அவர்களுக்கு செய்ய வாய்ப்பளித்திருக்கிறார்.




அது என்னவென்றால் அவர்கள் கம்பனி பெரிய பெரிய கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிகளுக்கு சிமெண்ட் சப்ளை செய்து தருவார்கள் .. தனியார் நிறுவனங்கள் , ஹோஸ்பிட்டல்ஸ், பெரிய புள்ளிகளின் வீடு இப்படி எதற்கும் இவர்களின் சிமெண்ட் தான் விநியோகிக்கபடும் காரணம் அவர்களின் தரம் அப்படி..


இந்த முறை இவர்களிடம் இது வரை டை அப் வைக்காத ஒரு பெரிய நிறுவனம் இவர்களை அனுகியுள்ளது. அதற்காக தங்கள் கம்பனியின் தரம் , சிமெண்ட்டின் அளவு, மதிப்பு , எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை பிரசன்டேஷன் ஆக குடுத்து அந்த வாய்ப்பை தக்க வைக்கவே இன்று அந்த நிறுவனத்திற்கு செல்லவிருக்கின்றனர் நம் தோழிகள்..


"என்ன மா இரெண்டு பேரும் நல்லா பிரிப்பேர்டா (prepared) இருக்கிங்களா ?
எந்த தப்பும் ஆகாதே? " வினவினார் ராஜேஷ்..


"டோன்ட் வொர்ரி அங்கிள். ஆல் பெர்ஃபெக்ட்...! இந்த புராஜக்ட் நம்மளுக்கு தானு நினைச்சுக்கோங்க " என்று மரியாதை கலந்த தன்னம்பிக்கையுடன் துஷாரா சொல்ல , அவர் பார்வை என்னவோ அங்கு எதிலும் சம்பந்தபடாமல் தன் கையில் உள்ள ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த இளானியின் மேல் அழுத்தமாக பதிந்தது..



அதை கண்ட துஷ் இளா வின் முழங்கையில் ஒரு இடி இடித்து ராஜேஷை கண் காட்டினாள். பின்பே தந்தை தன் பதிலுக்கு காத்திருப்பதை உணர்ந்தவள் , "யா பப்பா ! இட்ஸ் ஆல் ஆர் அல்மோஸ்ட் டன் !! சில்ல் (chill)" என்று தன் இரு கை பெருவிரலையும் சேர்த்து வைத்து தம்ஸ் அப் போல கண் அடித்து காட்ட , அதில் அவர் பார்த்த உக்கிர பார்வையில் கப்சிப் ஆனாள்..



மேலும் இங்கிருந்தால் தன் குரங்கு சேட்டையை ஆரம்பிப்பாள் என்று "ஓகே அங்கிள் நாங்க கிளம்புறோம்" சொல்லி விட்டு இளாவை இழுத்து செல்லும் போது, அமீஷா "ரெண்டு பேரும் சாப்பிட்டு போங்கடா !" என்று சொல்ல "வேண்டாம் ஆன்ட்டி அங்கயே பாத்துக்குறோம்" என்று இளாவை இழுத்து கொண்டு சென்று விட்டாள். பின்னே அவள் சாப்பிடுறேன்னு அரை மணி நேரம் இழுத்து விட்டால் என்ன பண்றது சரியான சாப்பாட்டு ராணி யல்லவோ நம் ஹீரோயின் 🤭🤭



வெளியில் வந்து இளானியின் காரில் ஏறி இருவரும் தம் பயணத்தை தொடங்க அங்கு இவர்களுக்கு என்ன காத்திருக்கிறதோ ? பார்ப்போம்...





தொடரும்...!
 
Last edited:

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே..!! 😍😍

இரண்டாவது அத்தியாயம் பதித்து விட்டேன்..🥰🥰 படிச்சுட்டு உங்க பொன்னான கருத்துக்களை கீழே இருக்கும் லிங்கில் சென்று பதிவிடுங்கள் மக்களே..!!🥰🥰🥰💜💜 மேலும் முதல் அத்தியாயத்திற்கு கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.❤🔥❤🔥❤🔥😍

கருத்துத் திரி :



 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு மக்களே !!

இனி வாரம் இரண்டு நாள்கள் கதை யூடி தரப்படும்..😍😍 சனி மற்றும் புதன் கிழமைகளில் யூடி எதிர்பாருங்கள் நண்பிகளே❤🔥❤🔥🥰


என்றும் அன்புடன் ,

ரசிகா ♥♥
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -3


போகும் வழியில் இளா உம்மென்று இருப்பதை கண்டு துஷ் என்னவென்று கேக்க அவளை பார்த்து முறைத்து விட்டு திரும்பி கொண்டாள். அதில் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு "இளா லைட்டா பசிக்குற மாதிரி இருக்கு அங்க தெரியுற ஹோட்டல்ல மணி அண்ணாட்ட சொல்லி வண்டிய விட சொல்லுறிய ?" கேட்டதும் தான் தாமதம் படக்கென்று திரும்பி ,



"ஆமா துஷ் நான் நினைச்சேன் நீ சொல்லிட்ட.. சோ சுவீட்..! " என்று அவள் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்தாள்.



"உன்ன பத்தி எனக்கு தெரியாதா ? சோத்து மூட்டை " மனதில் நினைத்து விட்டு (பின் யாரு அடி வாங்குறது😝) அவளை கண்டு சிரித்து வைத்தாள் துஷ்..


காலையில் சாப்பிடாம கூட்டி வந்து விட்டது தான் அவளின் முக திருப்பலுக்கு காரணம் . அவளை நன்கு அறிந்த துஷாராவும் முதலில் அவளது வயிற்றுப்பசியை தீர்த்து விட்டு செல்லலாம் என முடிவெடுத்து அவளை நன்கு சாப்பிட வைத்த பிறகே அங்கிருந்து கிளம்பி அந்த நிறுவனத்தை வந்து அடைந்தனர்..


*****


அமன் வீட்டில் ...

காலையில் ஐந்தரை மணிக்கு எல்லாம் எழும்பும் வழக்கமுள்ள அமன் எழுந்து ஃப்ரஷ் ஆகி வெளியில் ஜாக்கிங் சென்று முடித்து விட்டு வீடு திரும்ப ஏழு மணி ஆகி விடும்..



அவன் வீடு திரும்பும் நேரம் கணக்கிட்டு நேரே அவன் அறைக்கு வரும் முன் அவனுக்காக கிரீன் டீ ஒன்றை ரெடியாக வைத்து விட்டு சென்று விடுவார் அமலா..


அவனும் அதை கண்டும் காணாதது போல் "யார் வைத்திருப்பார்கள் ?" என்று அறிந்தவன் அதை தொட்டுக் கூட பார்க்காமல் , ஜிம்மிற்குள் சென்று மேலும் அரை மணி நேரம் அடைந்து விட்டு கீழே ஹால்க்கு வந்து எலிசபெத்திடம் கிரீன் டீ போட்டு கேட்பான்..


இதனை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டு இருக்கும் அமலா விற்கு கண்ணீர் கரை கட்டி நிற்கும்.. என்று தான் தன் மகன் தன்னை ஏற்றுக் கொள்வானோ என பரிதவித்து போவார்..


கிரீன் டீ குடித்து விட்டு எலிசா விடம், "எலிசா மா ! மார்னிங் பிரேக் ஃபாஸ்ட் லைட் ஆ பண்ணுங்க .. ஷார்ப்பா எயிட் தேர்ட்டி க்கு ரெடி ஆ இருக்கணும் காட் இட் ".


"சரி தம்பி" .


"சாப்பாடு நீங்க பண்ணதா இருக்கணும் . புரியுதா ?" அதில் அமலாவை திரும்பி பார்த்து விட்டு "ம்ம்ம் சரி" என்றார் எலிசா.



பிறகு தன் ரூம்க்கு சென்று குளித்து வெள்ளை முழுக்கை சர்ட்டும் அதற்கு மேல் பாட்டில் கிரீன் ( bottle green) கலர் கோட் அதற்கு மேட்ச் ஆக அதே பாட்டில் கிரீன் கலர் பேண்ட்டும் மற்றும் டை(tie) அணிந்து கீழே டைனிங் டேபிளுக்கு வர பிரேக் ஃபாஸ்ட் ரெடி ஆக இருக்க சாப்பிட்டு முடித்து வெளியில் வர அவனுக்காக காத்திருந்த கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் காரில் பின்னாடி அமர்ந்து தன் அலுவலகம் நோக்கி பயணித்தான்.


******


"ஏ.எஸ் குரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்சன்ஸ்" எழுத்து பொதிக்கப் பட்ட அந்த நிறுவனம் ஜூஹூவிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த அந்தேரி வெஸ்ட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.


அந்நிறுவனத்தின் அமைப்பு பன்னிரெண்டு மாடி கட்டடம் கொண்டது. கீழே கிரவுண்ட் ஃப்ளோர், முதல் தளம் ரிசப்ஷனிஸ்ட் கானது.. அடுத்த நான்கு தளங்களும் எம்ப்லாயிஸ்க்கு , ஆறாவது தளம் அமன் தந்தை அசோக் க்கு கொடுக்க பட்டு இருப்பது , எழாவதில் தான் அமன் அலுவலக அறையும் அவனது
பி.ஏ. விக்ரம் அறையும் உள்ளது. மீதமுள்ள தளங்கள் கான்பரன்ஸ் மீட்டிங் , கஸ்டமேர்ஸ் டீலிங் போன்றவைகளுக்கு உள்ள பிரத்யேக தளங்கள் ஆகும்.


இந்த அலுவலகத்துக்கு முன் வெள்ளை நிற பி.எம்.டபில்யூ.. கார் ஒன்று வந்திரங்கியது. அதிலிருந்து இளானி மற்றும் துஷாரா கீழே இறங்கி அந்த பெரிய கட்டடத்தை அண்ணார்ந்து பார்த்தனர். ஆம் அவர்கள் பிரசன்டேஷன் மீட்டிங்காக வந்திருப்பது " அமன் " அலுவலகத்துக்கே.!!


"ஹேய் துஷ் .. எவ்ளோ பெரிய கம்பெனில"


"ஆமா ஆனால் இப்படி மிட்டாய் கடைய பார்த்த சின்ன பிள்ளை மாதிரி வாய பொழக்காம ஒழுங்கா மெச்சூர்டா நடந்துக்கோ இளா " என்று கண்டித்தாள் துஷ்.


ஏனேனில் சுத்தி சிசிடிவி கேமரா இருக்க இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அவர்கள் பார்த்து கொண்டிருப்பது நிச்சயம்.. "தி ஃபர்ஸ்ட் இம்பிரேசன் இஸ் தி பெஸ்ட்
இம்பிரேசன்" என்பது போல் இவ்ளோ பெரிய நிறுவனத்தில் இத்தகைய ஆஃபர் கிடைப்பது எளிதல்ல ..


அதை கன்பார்ம் செய்யும் வரை எதிலும் ஒரு சிறு தவறு கூட நடக்க கூடாது என்பதில் துஷாரா கவனமாக இருக்கிறாள்.



இளானிக்கு அந்த கவலை எதும் இல்லை..( அவள் எதை பற்றி தான் கவலைப் பட்டிருக்கிறாள் இதில் படுவதற்கு..😝 கவலை படும் ஒரே விஷயம் சாப்பாடு தான் 😁😁)


இருவரும் உள்ளே சென்று முதல் தளத்தில் இருக்கும் ரிசப்ஷனிஸ்ட் பெண்ணிடம் போய் தங்களை அறிமுக படுத்தி கொள்ள , அவர்களின் விபரங்களையும் ,அப்பாய்ன்ட்மென்ட் நேரமும் செக் செய்து விட்டு அங்கே போடப் பட்டிருந்த இருக்கையில் அமர சொல்ல அங்கே செல்லவும் அவர்களுக்கு முன்னே டிப்டாப்பாக கோட் சூட் விகிதமாய் இரண்டு இரண்டு பேர் ஆக மூன்று குழுவினர் அமர்ந்து இருந்தனர்.


அவர்களும் இவர்களை போல் அவரவர் கம்பனி சார்பில் பிரசன்டேஷன் குடுக்க வந்தவர்கள் தாம். மும்பையில் இவர்கள் நிறுவனமும் பேர் சொல்லும் அளவில் பெரிய நிறுவனங்கள்.. இதில் எது பெஸ்டோ அதை தனது கன்ஸ்ட்ரக்ஷன் வேலைக்கு செலக்ட் பண்ணுவதே இந்த மீட்டிங்கின் நோக்கம்..


அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு இருக்கையில் அமர்ந்த துஷா அதன் பின் கையில் இருக்கும் கோப்பில் கவனத்தை பதிக்க , அப்படி பேசாமல் உட்கார்ந்தால் அது இளா அல்லவே !!


"பார்த்தியா துஷ் .. நம்மல மட்டும் தான் கூப்பிட்டு இருக்காங்கன்னு பார்த்தா , நமக்கு முன்னாடியே மூன்று வேற வேற கம்பனிஸ் ல இருந்தும் ஆட்களை வர வச்சுருக்காங்க ".

"ம்ம்ம்ம்".


"கண்டிப்பா இதுல எது பெஸ்ட் ன்னு பாக்க தான் இப்படி செஞ்சுருக்கணும்".


"....."


"இதுக்கு எதுக்கு நம்மள வர சொல்லி இப்படி உக்கார வைக்கணும் பேசாம ஆன்லைன் மீட்டிங் அரெஞ்சு பண்ணி கம்பனி டீடெயில்ஸ் அண்ட் ரெஃபரன்ஸ்ஸ பாத்துட்டு அதுல எது அவங்களுக்கு சூட் ஆகும் ன்னு கன்சிடர் பண்ணி செலக்ட் பண்ணிட்டு போக வேண்டியதான்னா ? " என்றாள் இளா.


அப்போது திரும்பி இளாவை ஒரு முறை முறைத்து விட்டு திரும்பி கொண்டாள்.


அதை கண்டுக் கொள்ளாமல், "அப்போ நம்மளுக்கு ன்னு இந்த ஆஃபர் தரலயா ? இனிமே தான் எதுன்னு சூஸ் பண்ணி சொல்லுவாங்களா ? இது தெரியாம இது ஜஸ்ட் ஃபார்மாலிட்டி மீட்டிங் லா நான் நினைச்சேன் .. ச்ச டைம் வேஸ்ட் " என்று அவள் பாட்டுக்கு தொன தொனவென்று பேசிக் கொண்டே இருக்க , அதில் கடுப்புற்று நறுக்கென்று அவள் தொடையில் கிள்ளி வைத்தாள் துஷா..


திடீரென்று கிள்ளி வைப்பாள் என்று அறியாத இளா வலி பொறுக்காமல் , "ஆஆஆ..." என்று கத்த தொடங்கும் முன் அவள் வாயில் தன் கை வைத்து அடக்கினாள் துஷா.


கண்ணில் நீர் கட்ட வலியில் கத்தவும் முடியாமல் திருப்பி அவளை திட்டவும் முடியாமல் வாயில் வைத்த கையை இளா பார்க்க அதை பார்த்த துஷாராவிற்கு பாவமாய் போய்விட்டது..


"ரொம்ப வலிசுட்டோ சரி இதுக்கு சமாதானமா மீட்டிங் முடிஞ்சு போனதும் ஐஸ் கிரீம் வாங்கி குடுத்து கவுத்திரலாம்" என்று மனதில் நினைத்து கொண்டு, " இளா டோன்ட் பி சைல்டிஷ் ஓகே" என்று கண்டிப்பு கலந்த குரலில் கூறி விட்டு அவள் வாயில் வைத்த கைய எடுத்து திரும்பி கொண்டாள்.


கையை எடுத்ததும் சில பல வார்த்தைகளால் துஷா வை அர்ச்சித்து விட்டு உம்மென்று உக்கார்ந்து கொண்டாள் இளா.


*****


நேரம் சரியாக ஒன்பதரை ஆக பத்து நிமிடங்கள் இருக்கும் நிலையில் அமன் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தான்.


காரிலிருந்து இறங்கி இடக்கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டு , வலது கையில் ரோலக்ஸ் டெய்டோனா பிளாட்டினம் வாட்ச் மின்ன தன் அடர்குழல் கேசத்தை கோதியவாறு ஸ்டைலாக நடந்தவாறு அலுவலக வரவேற்பரைக்குள் நுழைந்தான்.


அவனை கண்டதும் எழுந்து " குட் மார்னிங் சார் " சொன்ன ரிசப்ஷனிஸ்ட் பிரியா வை கண்டு ஒரு சிறு தலையசைப்பை கொடுத்து விட்டு , இடப்பக்கத்தில் கொஞ்சம் தள்ளி மீட்டிங்கிற்கு வந்திருந்தவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு தனது அறைக்கு செல்ல வலப் பக்கம் அமைந்த லிஃப்டில் ஏறி தன் அலுவலக தளத்தின் எண்ணை அழுத்தினான்..


லிஃப்ட் கதவு மூடியதும் இதுவரை வந்ததிலிருந்து அவன் செய்த அனைத்தையும் வாயைப் பிளந்து ஜொல்லியவாரு பார்த்துக் கொண்டிருந்த இளானி, அவன் சென்றதும் " ப்ப்பா என்ன பையன்டா இவன் !! என்ன ஒரு மேனரிசம் !! ச்சோ சுவீட்ட்ட்..!! அன்ட் ஹாட்ட்..!!! " என்று சிலாகித்தாள்..


அவள் பேசியதை கேட்டும் கேக்காதது போல் அமர்ந்திருந்த துஷ் அவனின் அழைப்புக்காக காத்திருக்க தொடங்க இளா வோ அவனை நினைத்து கனவு காண தொடங்கினாள்.


அடுத்த பதினைந்து நிமிடங்கள் கழித்து ரிசப்ஷனிஸ்ட் பிரியா விற்கு அமனின் பி.ஏ. விக்ரம் இடமிருந்து அழைப்பு வர, எடுத்து பேசிய பிரியா அங்க என்ன சொல்ல பட்டதோ " ஓகே சார்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்..


பின் அங்கு அமர்ந்து இருக்கும் நான்கு கம்பனியிலிருந்து வந்திருந்தவர்களிடம் , "சாரோட பிஏ தான் கால் பண்ணாங்க இன்னும் டென் மினிட்ஸ் ல ஒன் பை ஒன் கம்பனி ஆ கூப்பிடுவாங்க சோ கெட் ரெடி" சொல்லி விட்டு தன் வேலையை பாக்க சென்றாள் பிரியா.


சரியாக பத்து நிமிடங்கள் கடந்து அங்கு வந்த ஒரு கம்பனியின் பெயரை குறிப்பிட்டு பிரியா அழைக்க அவர்கள் லிஃப்டில் ஏறி அமனின் அறைக்கு சென்றனர். இவ்வாறாக மூன்று கம்பனியின் குழுவினர்களும் அமனை மீட் செய்து விட்டு வெளியே வரும் போது தங்களுக்குள் எதோ கிசுகிசுத்தவாரே வெளியேறினர்.


சரியாக அனைவரும் மீட்டிங் முடித்து விட்டு வர ஒன்றரை மணி நேரம் ஆக கடைசியாக இவர்களின் முறை வரவும் அமனை சந்திக்க சென்றனர்.


*****


அமன் அறையில்..


கதவை தட்டி விட்டு " மே ஐ கம்மிங் சர் ? " என்று இருவரும் கேட்டு விட்டு பதிலுக்காய் காத்திருக்க ,


"எஸ் கம்" ..ஆளுமை நிறைந்த கம்பீர குரலில் தோழிகள் இருவரும் உள் நுழைந்தனர்.


அங்கு அவர்களை நிமிர்ந்தும் பார்க்காமல் தன் லேப்டாப்பில் தலையை நுழைத்துக் கொண்டிருந்த அமனை கண்டவர்கள் , அவன் கவனத்தை திருப்ப "குட் மார்னிங் சர்" என்க,. " யா மார்னிங்..! பிளீஸ் சிட் ..!" என்றுவிட்டு தனக்கு முன்னால் இருந்த இருக்கையை காட்டினான்.


அவர்கள் அமர்ந்ததை உணர்ந்து அப்போது தான் அவர்களை நிமிர்ந்து பார்த்தான். "யுவர்ஸ் நேம்?" ,
"துஷாரா கிருஷ்ணன் சர்"


"அன்ட் யூ" என்று இளானிய அவன் பார்க்க , எங்கே அவள் ஈலோகத்தில் இருந்தால் தான அவள் தான் அறைக்குள் வந்ததிலிருந்து அவனின் ஒவ்வொரு அசைவையும் , குரலையும் கண்டு மெய்மறந்து நிற்கின்றாளே..! பின் எப்படி அவன் தன்னிடம் பேசியதையும் பெயர் கேட்டதையும் உணருவாள்.


அவள் பாட்டுக்கு கனவில் மிதக்க தான் கேட்டதுக்கு பதில் அளிக்காமல் எதோ நினைவில் இருப்பவளை கண்கள் சுருக்கி பார்த்தவன் , " ஹலோ" என்று சொடக்கிட்டு அழைக்க அதில் தன் உணர்வுக்கு வந்தவள் "ஹான் சர்" என்று முழித்தவளை உதட்டை இகழ்ச்சியாக வளைத்து, "என்ன பகல்லயே கனவா ?" என்க


"ஆமா சர்" என்று பல்லிளிக்க ,


"வாட்" என்று அவன் எதோ கூற வரும் முன் , "ஹா நோ சர்.. ஜஸ்ட் திங்க் அபவுட் தி பிரசன்டேஷன்.. ஸாரி" என்று துஷா க்கு முன் இளாவே பேசி நிலமையை சமாளித்தாள்.


அதில் சற்று தணிந்தவன் , "யுவர் நேம்" என்க "இளா..இளானி குமார் சர்" என்றாள்.


"ஓகே.! தென் கிவ் மீ யுவர் ஃபைல்ஸ் ? " என்று கை நீட்ட அவனிடம் கொடுத்தாள் துஷ்..


அதை புரட்டி புரட்டி பார்த்தவன் , தனக்குரிய சில பல சந்தேகங்களை கேட்டறிய அவற்றுக்கு துஷ் மற்றும் இளா பொறுப்பாக பதிலளித்தனர்.. சில இடங்களில் துஷா தடுமாறும் போது இளா எந்த இடத்திலும் தடுமாறாமல் புட்டு புட்டு வைக்க
அமனே அவளது வே ஆப் (way off) பிரசன்டேசனில் ஒரு கணம் வியக்க ,


இங்கு துஷாராவோ , " யே எப்புட்ராஆ ஆ" என்னும் ரேஞ்சில் வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தாள்.


ஆனால் இதுலாம் ஒரு ஃபுளோ வில் அடிச்சு விட்டது என்பது இளா மட்டுமே அறிந்த ஒன்று..


இளா மற்றும் துஷா வின் பதில்களை கேட்டு வெகுவாய் திருப்தி பட்டு அவர்களை பாராட்டியவன் ,

"ஐம் சோ இம்பிரெஸ்டெட். இதுவரை இங்க இப்போ வந்துட்டு போனவங்கள்ள அல்மோஸ்ட் எல்லாம் பர்ஃபெக்ட் ஆ இருந்தாலும் எதோ ஒன்னு சாட்டிஸ்ஃபை ஆகாம இருந்துச்சு.. பட் உங்ககிட்ட எதுவுமே குறை சொல்ற மாதிரி இல்ல. ஆல் ஆர் பெர்ஃபெக்ட்.. சோ இந்த முறை எங்கள் கம்பனிக்கு கிடைச்ச ஆயிரம் கோடி மதிப்பிலான கவர்ன்மெண்ட் கொட்டேஷன் ஆ ஃபுல்லா கட்டி முடிக்கற வரை நீங்க தான் எங்களுக்கு சிமெண்ட் சப்ளையர்ஸ்.."


"உங்க கூட டை அப் வச்சுக்க நா சம்மதிக்குறேன். யூ ஆர் செலக்டட் .!!" என்று கைக்குழுக்குவதற்காக இளா விடம் கை நீட்ட ,

அதுவரை எப்படியாவது அவனிடம் நற்பெயரை வாங்கி விட வேண்டும்ன்னு பொறுப்பாக மாறி இருந்த இளானி அவன் தன்னை நோக்கி கை நீட்டவும் என்னமோ அவன் தன்னிடம் புரப்போஸ் செய்து அக்ஸப்ட் பண்ணுமாரு கை நீட்டி கேட்பதாக நினைத்து தன் கையை அவன் கை மேல் வைக்க அதை பிடித்து கை குலுக்கி விட்டு பின் துஷாரா க்கும் கை கொடுக்க , "தாங்க் யூ சோ மச் சர். வீ வில் டூ அவர் பெஸ்ட் வொர்க்". என்று துஷா கூற "ஐம் டிரஸ்ட்டிங் யுவர் வொர்க்" என்று இளா வை பார்த்து கூறினான்.


"பிளஷர் சர்" - துஷாரா


"ஓகே.!! மத்த ஃபார்மாலிட்டிஸ் லாம் என் பிஏ மிஸ்டர் விக்ரம் சொல்லுவாரு . அது படி எப்போ நம்ம புராஜக்ட் ஸ்டார்ட் பண்ணலாம் ன்னு உங்களுக்கு மெயில் வரும். நவ் போத் ஆப் யூ கேன் கோ!!" என்று விட்டு தன் இருக்கையில் அமர்ந்து மீண்டும் லேப்டாப்பில் மூழ்கினான்.


துஷாரா கிளம்பி போகும் முன் தன் பிரியமான தோழிய பார்க்க அவளோ அமனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.


அவளை அப்படியே சத்தமில்லாமல் வெளியே தள்ளிக் கொண்டு துஷ் செல்ல , அவர்கள் வெளியேறியதும் அதுவரை எதையும் கண்டும் காணாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தவன் அப்போதே நிமிர்ந்து தன் இருக்கையில் சாய்ந்து தளர்வாக அமர்ந்தவன் "உஃப்ப்ப்" என்று மூச்சு விட்டு "இன்ட்ரஸ்ட்டிங் கேர்ள்" என்று முணுமுணுத்து விட்டு மெல்லிய சிரிப்பை உதிர்த்தான்.




தொடரும்...💜
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் வாசகிகளே !!😍😍


கதையின் மூன்றாவது அத்தியாயம் பதிந்து விட்டேன் .. இதுவரை என் கதையை படித்து கொண்டிருக்கும் இனி படிக்க போகும் அனைவருக்கும் என் நன்றிகள்.. கதையை படித்து உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவிடுங்கள் மக்களே.. மேலும் உங்களின் கருத்துக்களால் என்னை ஊக்குவிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல..❤❤❤


அன்புடன் ,
ரசிகா 💜


கருத்துத் திரி:



 
Status
Not open for further replies.
Top