All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரஜியாதா ரஹ்மானின் ‘எனைத்தான் அன்பே மறந்தாயோ!!!’ - கதை திரி

Status
Not open for further replies.

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -8


காரில் ஆஃபீஸ்கு சென்று கொண்டு இருந்தவனுக்கு இளாவை டிரிட்மண்ட் பார்க்கும் டாக்டரிடம் இருந்து கால் வர பேசியவன் அவள் கண் விழித்ததை கேட்டு அவளை காண ஹாஸ்பிடல்க்கு விரைந்தான்..


அங்கு சென்றதும் அவனை பார்த்த ரிசப்ஷனிஸ்ட் பெண் ஒருத்தி அவனது தீவிர ரசிகை. நேற்று அவனை பார்த்தும் நேரில் போய் பேச முடியாமல் போக இன்று அந்த வாய்ப்பை தவற விடாமல் தனக்கு ஒருவர் கிஃப்ட் பண்ண ரெட் ரோஸ் பொக்கேயை கொண்டு போய் அவனிடம் நீட்டினாள்.


அவன் கேள்வியாக பார்க்கவும் தான் அவனின் மிகப்பெரிய ஃபேன் என்றும் இது சின்ன கிஃப்ட் பிளீஸ் வாங்கிக் கொள்ளுமாறு வேண்ட மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.


இவ்வளவு சிறு வயதிலேயே அவனின் வளர்ச்சி மற்றும் ஆளுமை கண்டு அவனுக்கு ஃபேன்ஸ் அதிகம். அவனின் அனைத்து சமூக வலைத்தளத்திலும் அவனை பின்பற்றி வந்தும் இவ்வாறு அவனை காணும் நேரங்களில் இப்படி அன்பளிப்பு குடுப்பதும் வழக்கம் எனவே அதை மனதார வாங்கிக் கொள்வான்.

அப்படி வாங்கிய பொக்கேவை தூக்கி போட மனமில்லாமல் சரி இதை இளாவிடம் கொடுத்து நலம் விசாரிப்போம் என அவளது அறைக்கு வெளியே கதவை நாக் பண்ணிட்டு செல்ல அவளின் சிரிப்பை பார்த்தபடியே அந்த பொக்கேவை குடுத்து , "ஹாய் இளானி.. ஹவ் யூ.. இஸ் இட் ஓகே நவ்..??" என்று கேட்க அவளின் காதில் தான் என்றும் போல தப்பாக விழுந்துத் தொலைத்தது.


தோழிகள் இருவரும் அவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும் சமயத்தில் இப்படி ஹேண்ட்சமாக கையில் ரெட் ரோஸ் ஓட வந்தால் அவளும் என்ன தான் நினைப்பாள். அவன் நலன் விசாரிப்பது அவளுக்கு காதல் சொல்லுவது போல் இருக்க பேந்த பேந்தவென முழித்துக் கொண்டு நின்றாள்.

அவர்கள் அவனை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சரியாக அவனே வந்து நிற்கவும் அதிர்ச்சியில் எழுந்து நின்ற துசாரா , அவன் இளாவிடம் பேச அதற்கு அவள் எந்த எதிர்வினையும் காட்டாமல் இருக்கவே , 'ரைட்டு இவ கனவுலோகத்துக்கு போய்ட்டா ' என நினைத்தவள் அவளை உலுக்கிவிட்டு அமனிடம் பேச்சுக் கொடுத்தாள்.


அதில் கலைந்தவள் அசடு வழிந்தவாறு அவனை பார்க்க அவனும் இவள் புறம் திரும்பினான். இருவர் கண்களும் ஒரு நிமிடம் தொட்டு மீண்டன. பின் அவளிடம் நலம் விசாரித்து விட்டு கிளம்ப தயாராக துஷாரா, "சர்.. அந்த புராஜெக்ட் என்னாச்சு.. உங்க மேல பாம் பிளாஸ்ட் கேஸ் வேற போட்டுருந்தாங்க .. அங்கிள் சொன்னாங்க அதுல இருந்து ரிலீவ் ஆயிட்டிங்கனு" என்று கேட்க இந்த விசயம்லாம் இளானிக்கு புதிது. இதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்ட தன் இனிய நண்பியை கண்களாலேயே பஸ்பமாக்கினாள்.

தோழியின் பார்வையே உணர்ந்தே துஷ் அவள் புறம் திரும்பவே இல்லை.
" யா.. தட் சிச்சுவேசன் ஹேஸ் பீன் சால்வ்டு அண்ட் நவ் எவர்தின்ங் இஸ் ஆல் குட்.... இன்னும் ஃபைவ் டேஸ்ல புராஜெக்ட் திரும்ப ஸ்டார்ட் பண்ணிருவோம்.. நீங்க ஆப்டர் ஃபைவ் டேஸ் வந்து ஜாயின் பண்ணிக்கோங்க." என்றவன் பின் யோசித்து விட்டு ,


"இளானி யூ டேக் சம் டைம் ஃபார் ரெஸ்ட்.. தென் ஜாயின் அவர் புராஜெக்ட் ஓகே.. அதுவரை துஷாரா வரட்டும்"

"நோ சர்.. ஜஸ்ட் ஃபைவ் டேஸ் ல நான் ஃபுல்லா ரெகவர் ஆகிருவேன்.."

அதில் அவளை முறைத்தவன் "டாக்டர் டோல்ட் மீ தட் யூ வில் டேக் ரெஸ்ட் ஃபார் அ மன்ந்த்..சோ இப்போ நீங்க வர வேணாம்..காட் இட்.." என்றவன் அவர்களிடம் விடைபெற்று சென்றான்.


அவன் சென்றதும் "ஏன் துஷ் என்கிட்ட இருந்து மறைச்ச.. ?" என கோபமாக கேட்க , "ஸாரி பா உன்கிட்ட வேணும்னு மறைக்கலை நீயே இன்னைக்கு தான் கண் விழிச்ச அதும் இல்லாம பிராப்ளம்ஸ் ஆர் சால்வ்டு..சோ எதுக்கு அதை சொல்லி உன்ன ஹர்ட் பண்ணன்னு தான் சொல்லல..ஸாரி " என்று ஒற்றை கண்ணை மூடி இருக் கைகளையும் காதில் வைத்து மன்னிப்பு வேண்ட அது கியூட் ஆக வேற இருக்க இளாவால் அதற்கு மேல கோபப்பட முடியவில்லை.

அதற்கு பதிலாக "கியூட் துஷ்..!" என்றவாறு அவள் கன்னத்தைப் பிடித்து வலிக்க கிள்ளி விட்டாள்.. அதன் பிறகு என்ன ஒரே ரணகளம் தான்..


***

அன்று புராஜெக்ட் திரும்ப தொடங்க சரியாக இரண்டு நாள் இருக்கும் சமயத்தில் அமன் வீடு காலையிலே பரபரப்பாக காணப் பட்டது. அந்த பரபரப்புக்கு காரணம் அறிந்தாலும் அமன் பெரிதாக அலட்டிக்க வில்லை. ஆனால் அமலாவிற்க்கு தான் கையும் ஓடல காலும் ஓடல. ஒரு இடத்தில் நில்லாமல் பம்பரமாய் சுற்றிக் கொண்டு வேலையாட்களை ஏவிக் கொண்டிருந்தார்.


அதை சின்ன சிரிப்புடன் பார்த்த அசோக் டைமை பார்க்கவும் இப்போ சென்றால் சரியாக இருக்கும் என நினைத்து எழும்ப "ஏங்க.. நேரம் என்ன ஆகுது இன்னும் அந்த நியூஸ் பேப்பர்லயே எவ்ளோ நேரம் தலையை விட்டுட்டு இருப்பீங்க சீக்கிரம் கிளம்புங்க" என விரட்டினார்.

"சரி சரி.. கிளம்ப தான் போறேன் அதுக்குள்ள சொல்லிட்ட இப்போ போயிருவேன்.." என்று தனது காரில் ஏறி ஏர்போர்ட் நோக்கி சென்றார். அவர் சென்றதும் அடுத்து இங்கே எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்தவர் அதில் திருப்தியுற்று மேலே பார்க்க அவரை அழுத்தமாக பார்த்தவாறே அமன் படிகளில் இருந்து இறங்கினான்.


அவனது பார்வையை கண்டவருக்கு மனதில் ஒரு வித பயம் , தயக்கம் , எதிர்பார்ப்பு என எல்லாம் கலந்து அவரது அடிவயிற்றில் எதோ உருளுவது போல தோன்றியது. அவனோ சாவகாசமாக இறங்கி நேரே டைனிங் டேபிள்கு போய் சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் எதுவும் கேட்பான் இல்லையென்றால் திட்டுவான் என நினைத்தவருக்கு அவனின் இந்த அமைதி ஆச்சரியத்தையும் கூடவே பயத்தையும் தோற்றுவித்தது. அமன் எதுவும் பேசுவது போல தோன்றாததால் அவரே பேச்சை ஆரம்பித்தார்.


"அமன் கண்ணா .. அது வந்து இன்னைக்கு அவன் வாரான்.. உனக்கு தான் தெரியுமே.. அப்பாவும் கூப்பிட போயிருக்காரு.. இருந்தாலும் ஒரு வார்த்தை உன்கிட்ட சொல்லலாம்னு " என்று இழுக்க அவன் பாட்டுக்கு சாப்பிட்டு முடித்து எழுந்து வெளியே காரில் ஏறி சென்று விட்டான்.

'அப்பாடா.. ஒன்னும் சொல்லல அப்போ அவன் வரதுல இவனுக்கு எதுவும் பிரச்சனை இல்ல.. இது போதும் ' என மனதில் நினைத்தவர் அந்த புது வரவிற்காக சமையல் ரெடியா எனப் பார்க்க சென்றார்.

இருபது நிமிடங்கள் கழித்து அவர்கள் வீட்டு போட்டிக்கோவில் நின்ற காரில் இருந்து ஆறடி உயரத்தில் ஆளை அசரடிக்கும் அழகில் நெடுநெடுவென ஆப்பிள் நிறத்தில் இறங்கினான் அத்விக் சக்கரபோர்த்தி. அசோக் அமலாவின் புதல்வன். அமனின் தம்பி. சக்கரபோர்த்தி குடும்பத்தின் இரண்டாம் வாரிசு.

வீட்டின் வாயிலில் நின்று உதட்டில் கவர்ச்சிகரமான புன்னகையை சிந்தி கண்ணில் போட்டிருந்த கூலர்ஸ் ஐ கழட்டியவாறு , "மாம்... ஐம் பேக்..!" என்று கத்தினான். அவனின் கத்தலில் கிச்சனில் நின்றிருந்தவர் அடித்து பிடித்து தன் வயதை மீறி ஓடி வந்தவர் நான்கு வருடங்களுக்கு பிறகு பார்த்த தன் மகனை கண்ணில் நிரப்பிக் கொண்டு அவனை நோக்கி சென்றார்.


அதற்குள் எலிசா ஆரத்தி தட்டுடன் வர அதை வாங்கி திருஷ்டி சுத்தி போட்டவர் அவனை ' வா..' என அழைக்க பாய்ந்து தன் இத்தனை வருட பிரிவைப் போக்க இறுக அணைத்திருந்தான். அவரும் கண்ணீர் மல்க தன் மகனை பாசத்துடன் அணைத்துக் கொண்டார்.

இவர்களின் பாசத்தை கண்டால் பார்ப்பவர்கள் கண்களே படும் என்று இருவருக்கும் பொதுவாக ஒரு முறை ஆலம் சுற்றிய எலிசா வெளியே சென்று கொட்டினார்.

"அத்வி.. எப்படி டா இருக்க..? இந்த அம்மாவ பார்க்க உனக்கு இத்தனை வருஷம் ஆச்சா.? போன் பண்ணாலும் பட்டும் படாமல் பேசிட்டு வச்சிடுற .. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா டா" என அழுகையில் கரைய ,

"மாம்.. சில் .. எதுக்கு இப்போ அழனும் அதான் உங்க பிள்ளை நான் வந்துட்டேன்லா.. இனி நோ சென்டிமென்ட் ஒன்லி ஹேப்பி மோமென்ட்ஸ் தான்.. நான் அங்க ரொம்ப பிசி மா.. யூ.எஸ்.ஏ ல நம்ம கம்பனி ரன் பண்றது சாதாரண காரியமா.. சோ எப்படி பட்டுனு விட்டுட்டு வரது..அதான் மா வர முடியல .. அண்ட் உங்க கிட்ட நல்லா பேசுனா எனக்கு வேலையாவது ஒன்னாவதுண்ணு போட்டுட்டு வந்துரணும் தோணும் மா அதான் ஷார்ட் ஆ பேசிட்டு வச்சுருவேன்.. இதுக்கு போய் ஃபீல் பண்ணலாமா மாலு டார்லிங்.." என சொல்ல அந்த அழைப்பில் கடுப்பானவர் மற்றதை விட்டு ,


"டேய் அப்படி கூப்பிடாதன்னு எத்தனை வாட்டி சொல்லுறது. " என அவனின் காதை திருக "ஆஆ.... வலிக்கு வலிக்கு... டாட் என்ன பார்த்துட்டு நிக்குறீங்க..? இந்த மாலு வ பாருங்க டாட்.. என்ன காப்பாத்துங்க" என்று கத்த ,


"வந்துருவாறா.. வந்தா அவருக்கும் இதே கதி தான்" என்று அமலா மிரட்ட அதில் ஜேர்க்கானவர் "அமலா.. நான் எவ்ளோ பெரிய பிசினஸ்மேன்.. என் காதை பிடிச்சு திருகுவியா??" என்று பாவமாய் கேட்க , "யாரா இருந்தாலும் பாவம் பாக்க மாட்டேன்" என்று கூற

"அப்போ உங்க அருமை சோட்டி ஆ இருந்தாலும் பாக்க மாட்டிங்களா. ?" என்று கிண்டலாக அத்விக் கேட்க

"அவன் தங்கம் டா..உன்ன மாதிரி அறுந்த வாலு இல்லை.. " என்று மகன் பெருமையை அவர் எடுத்து விட

"இட்ஸ் சோ பேட் மாம்.. அப்போ அவன் மட்டும் தான் உங்களுக்கு தங்கமா?? நான் இல்லையா.."

"அவன் தான் முதல்ல..அதுக்கப்புறம் தான் நீ.. ஆமா.. நீ என்ன அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க..ஒழுங்கா அண்ணனு கூப்பிடு.." என்று கண்டிக்க

"ஆஹான்...பஸ்ட் அவன் என்ன தம்பியா மரியாதையா நடத்தட்டும் அதுக்கு பிறகு நான் அண்ணனுக்கு மரியாதை கொடுக்கிறது பற்றி அப்புறம் யோசிக்கிறேன்.." என்றவன் அவர் "படவா.. " என்று அடிக்கும் முன் தன் அறைக்கு ஓடிவிட்டான்..


"பாத்தீங்களாங்க அவன எப்படி பேசிட்டு போறான்னு சரியான போக்கிரி.. "

"விடு அமலா.. சின்ன பையன் தான.. துடுக்குத் தனம் ஜாஸ்தி .. ஆனா ஒன்னு வெறுமையா இருந்த நம்ம வீடு இப்பதான் ரொம்ப கலகலப்பா மாறி இருக்கு.."

"ஆமாங்க நீங்க சொல்றதும் உண்மைதான்..இவ்வளவு நாள் ஏதோ மாதிரி இருந்துச்சு இப்ப இவன் வந்த பிறகு எல்லாமே நிறைஞ்ச மாதிரி இருக்கு..இந்த சந்தோஷம் என்னைக்குமே நிலைச்சு இருக்கனும்ங்க.."

"கண்டிப்பா மா.." ..

***

அமன் அறையின் தளத்திற்கு மேலே உள்ளது அத்விக்கின் அறை.. அவனைப்போல் அந்த தளம் முழுவதையும் தனக்கே வைத்திருக்கிறான்.ஆனால் அவனைப் போல் யாரும் வரக்கூடாது என்று கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை.. எவரும் வரலாம் யாரும் இருக்கலாம் என்ன வேணாலும் செய்து கொள்ளலாம்..

தன் அறைக்கு வந்து ரெஃப்ரெஷ் ஆவதற்காக குளியல் அறையில் ஒரு குளியலை போட்டு விட்டு கேஷுவலான உடை அணிந்து கொண்டு கீழே இறங்கி வந்தான்..

அவன் வரவும் காலை உணவு ரெடியாக டைனிங் டேபிள் மேல் ரெடி பண்ணி வைத்திருந்தார் அமலா. அதை ஒரு கட்டு கட்டிவிட்டு சோபாவில் மல்லாக்காக சாய்ந்தவாறுப் படுத்தவமன் மெல்ல பேச்சை வளர்த்தான்.

"ஆமா.. எங்க உன் அருமை பையன காணோம் நான் வர்றது அவனுக்கு தெரியுமா தெரியாதா ..? இல்ல நான் வாரேன்னு எங்கயோ பயந்து ஒளிஞ்சுட்டானா.." என்று நமட்டு சிரிப்புடன் கேட்க ,

"அவன் எதுக்குடா உன்னை பார்த்து பயந்து ஓடணும் அவனுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்.. காலைலயே ஆபீஸ் கிளம்பி போயிட்டான்" என்று நொடித்துக் கொண்டு கூற ,

" என்னது.. அப்ப நாங்க என்ன வேலை வெட்டி இல்லாமையா இங்க வந்து இருக்கோம்..திஸ் எஸ் டூ மச் மாம்.. நீங்க என்ன ரொம்பவே இன்டைரக்ட் ஆ டேமேஜ் பண்றீங்க .. அங்க மில்லியன் டாலர் கணக்குல பிசினஸ் போய்கிட்டு இருக்கு அதை விட்டுட்டு உங்கள வந்து பாக்கணும்னு நெனச்சேன்லா என்ன சொல்லணும்.. "

"இது டேரக்ட் இன்சல்ட் தான் மை சன்"என்று அவர் கலாய்க்க

டிவி பார்த்துக் கொண்டிருந்த தன் தந்தையை துணைக்கு அழைத்தவன் "டாட் அவன் மட்டும்தான் உலகத்திலேயே பிசினஸ் பண்றானா வேலை வேலைன்னு சுத்திகிட்டு இருக்கான்... வீடு விட்டா ஆஃபீஸ் .. ஆஃபீஸ் விட்டா வீடு இத தவிர அவனுக்கு வேற எதுவுமே தெரியாதா என்ன மேக் டாட் இவன்" என சொல்லவும்


"அவனை எதுக்கு டா குறை சொல்ற அவனை இப்படி மாத்தி வச்சதே உன் தாத்தன் தானே.. எப்படி இருக்க வேண்டிய பிள்ளையை இப்படி பணம் பணம்னு அது பின்னாடியே ஓட வச்சுட்டாரே.. இதனால அவன் தன் வாழ்க்கையை கூட நினைச்சு பார்க்க மாட்டேன் என்கிறானே.. அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்கனும்னு எனக்கும் ஆசை இருக்கு ஆனா அது அவன்கிட்ட சொல்ல கூட என்னால முடியல அந்த நிலைமைக்கு எல்லாம் ஆக்கி வச்சது அவரு தானே.." என்று ஆதங்கமாய் கத்தியவர் அதீத கோபத்தில் கண்ணீர் மழமழவென வழிய அழ ஆரம்பிக்கவும் பதறி போயினர் அப்பாவும் புள்ளையும்.


அவன் எதோ காமெடிக்காக பண்ணப் போயி கடைசியில் இப்படி ஆகும் என எதிர்பார்க்காதவன் பின் தன் குரங்கு சேட்டையால் மறுபடியும் அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தான்.


இரவு பத்தரை மணி போல் வீடு வந்த அமன் அங்கு நடுஹாலில் சோபாவில் கால் மேல் கால் போட்டவாறு காலை ஆட்டிக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த தம்பியை கண்டும் காணாதது போல மாடி ஏறப்போனவனை , "ஹே.. வாஸ்ஸப் ப்ரோ.. இத்தனை வருஷம் கழிச்சு உன் தம்பி வந்து இருக்கேன் நீ என்ன பார்த்து ,


"நம்மை போல நெஞ்சம் கொண்ட..
அண்ணன் தம்பி யாரும் இல்லை..!!"

இப்படி பாடலைன்னா கூட பரவாயில்லை அட்லீஸ்ட் நல்லா இருக்கியான்னு கூட கேட்க மாட்டியா..? வெரி பேட்.. " என்று சொல்ல அதில் கடுப்பானவன் ,

"ஏன் உனக்கு என்ன குறைச்சல் நல்லா தானே இருக்க இத தனியா வேற கேக்கணுமா?" என்று விட்டு அவன் மேலே சென்று விட ,
"கிரேட் இன்சல்ட் " என தனக்குத் தானே புலம்பியவன் , திருப்பி டென் மினிட்ஸ் கழித்து பிரஷ் அப் ஆகிவிட்டு அவன் சாப்பிட கீழே இறங்கி வரவும் சாப்பாட்டு மேசையில் எதுவும் எடுத்து வைக்காமல் இருக்க புருவம் சுருக்கியவன் ,


"எலிசா மா..." என்று அழைக்க அதே நேரம் அத்விக் "மாலு மா.." என்று கூவினான். அதில் அவனை எரிப்பது போல் பார்த்தவன் திரும்பவும் "எலிசாமா" என்றழைக்க இவனும் திரும்ப "மாலு மா.." என்று கூப்பாடு போட்டான்..


" இப்போ உனக்கு என்னடா வேணும் ..?" பொறுமை இழந்து கேட்க, "உனக்கு இப்ப என்ன வேணும்..எதுக்கு எலிசா ஆன்டி ஆ கூப்பிடுறே?"


"அது எதுக்கு உனக்கு.." என்று கடிய

"ம்ம்கூம்ம்... சாப்பாடு வேணும்னு கேட்டா துரைக்கு கௌரவம் கொறஞ்சுறும்.." என்று மெல்லியதாக முணுமுணுத்தவன் .. "அவங்க ரெண்டு நாளைக்கு லீவு அவங்க ரிலேஷன்ல ஏதோ துக்கமாம்.. சோ அவங்க இப்ப வீட்டில் இல்லை.."

அப்போதே அவர் தன்னிடம் இன்பார்ம் பண்ணது ஞாபகத்துக்கு வர பேசாமல் மேலே ஏறி போனவனை ,
"எங்க கிளம்பிட்ட சாப்பிட்டு போ" என்று அவன் சொல்ல எதையும் காதில் வாங்காமல் அவன் பாட்டுக்கு சென்று விட்டான்.


"உனக்கு இருக்க கொழுப்புக்கு இருடா உன்ன வெச்சிக்குறேன் .." என்று வறுத்தெடுக்கும் போது,


"டேய் எதுக்குடா மாலுமா மாலுமா ன்னு என்ன ஏலம் விட்டுட்டு இருந்த..? என்று கேட்டவாறு அமலா வர அவன் விவரத்தை சொல்லவும் ,
"அய்யோ அப்போ சோட்டி சாப்பிடாம போயிட்டானா டா" என கவலையாக கேக்க ஆமென தலையாட்டியவன் ,


"பேசாமல் நீயே சாப்பாடு வையேன் மாம்.. எதுக்கு தயங்குற..?"

"என்னடா நீ ..எல்லாம் தெரிஞ்சும் இப்படி கேட்கிற.. நான் பரிமாறி அவன் என்னைக்கு சாப்டிறுக்கான் இப்போ சாப்பிட.." என்று வேதனையாக கூற அதை காண இயலாதவன் "இன்னைக்கு சாப்பிடுவான் நீ சாப்பாடு எடுத்து வை நான் இதோ வாரேன்" என்றவன் நேரே அமன் அறைக்குள் சென்றான்.


அங்கே அவன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லாமல் போக குளியலறையில் சத்தம் கேட்க அவன் அங்கு இருப்பதை அறிந்தவன் அறையை நோட்டம் விட்டான்.


"ம்ம் நாலு வருஷத்துக்கு முன்னால எப்படி இருந்துச்சோ அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கு ஒரு பொருள் கூட செஞ்ச் ஆகலை.. எல்லாம் தூசு தட்டி அதேயே வச்சிருக்கான்.. இவன்லாம் மில்லியனர்ன்னு யாரும் நம்புவாங்களா..? சரியான கஞ்சப் பைய.." என்று புலம்பியவன் அவனது பிரத்யேக பெட்டில் வந்து மல்லாக்காக படுத்து கிடக்க அமன் குளித்து விட்டு அங்கு வரவும் சத்தம் கேட்டு எழும்பிய அத்விக் அவன் தோற்றத்தை கண்டு "ஆஆஆஆ......." என்று அலறினான்.


----------------

அத்விக் சக்கரபோர்த்தி 💕

"33898


தொடரும்...
 
Last edited:

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிகளே..😁😁😁🥰

எல்லாரும் எப்படி இருக்கீங்க..😍😍 நான் நலம்..🤗🤗🤗 இரண்டு வாரம் கழிச்சு யூடியோட வந்துருக்கேன் சகிஸ்..😍😍 என்னடா வந்தா ஆறு எபி தந்தா அந்தால காணாம போயிட்டான்னு நினைச்சா ஸாரி பா🤗🤗 கொஞ்சம் பிஸி அதனால் வந்த தாமதம் இனி கரிக்டா யூடி போட்டு விடுவேன் ஆனால் வாரம் ஒன்று தான் சகிஸ் 🥹☺☺ தற்சமயம் பொறுத்துக் கொள்ளுங்கள் இப்போ கதையை படித்து உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் சென்று பதிவிடுங்கள் 🥰🥰 ஐ ஹோப் இந்த யூடி உங்களுக்கு பிடிக்கும் ❤❤❤ மறக்காமல் கமேன்ட் கரோ ஜி...

அன்புடன்

ரசிகா💕💜

 
Status
Not open for further replies.
Top