All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

லக்ஷ்மிதாவின் ‘ஆரி அர்ஜூனா…’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Lakshmitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இங்கு எழுதுவதற்கு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றி!!

அத்தோடு எனக்கு ஆதரவு அளிக்கப்போகும் தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறேன்!!

இப்போது என்னுடைய கதையை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

கதையின் பெயர்: ஆரி அர்ஜூனா

நாயகன் பெயர் :அர்ஜூன் வர்மா,அசோக் விஜயராகவன்

நாயகியின் பெயர்: ஆரிய சுபத்ரா


28110
 

Lakshmitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரி அர்ஜூனா 1:

கார்குழல் வண்ணன் தாமரை மீது நின்று குழலுதும் அழகிலும்,அந்த இனிமையான இசையில் மயங்கிய வெய்யோன் மெய் மறந்து இருந்த வேளையிலும் தன் கடமையின் பொருட்டு சோம்பலை முறித்து வலுக்கட்டாயமாக தன் கதிர்களை பூலோகத்தில் பதித்த அதிகாலை வேளையில் சென்னையிலுள்ள ஏ.பீ.எஸ் திருமண மண்டபம் மக்கள் திரளால் அலைமோதியது.

அங்கு நடைப்பெறவிருக்கும் திருமண வைபோவத்திற்கு வந்திருந்த உறவினர் மற்றும் நண்பர்கள் கூட்டம் தனக்கு தெரிந்தவர்களுடன் தங்களுக்கென ஒரு குழுவை நியமித்து அரட்டை கச்சேரியில் மூழ்கியிருக்க,இளம் வயது கூட்டத்தினர் தங்கள் வயதிற்கு உரிய காதல் சேட்டைகளோடு பட்டாம்பூச்சி பெண்களை கவர்ந்திழுக்க போராடி கொண்டிருந்த வேளையில் மணமகனின் அறையில் இருந்த ஒரு இளைஞன் அலைப்பேசியில் யாருடனோ உரையாடி கொண்டிருந்தான்.

எதிர்ப்புறம் பேசியவரின் கூற்றை கேட்டவனிற்கு முகமெல்லாம் வியர்த்து வழிய தொடங்கிவிட,தன்னுடைய கைக்குட்டை கொண்டு முகத்தை துடைத்தவன் "இன்னும் பதினைந்து நிமிஷத்தில் நான் அங்கிருப்பேன்...நீ கவலைப்படாதேடா" என ஆறுதல் அளித்தவனிடம் 'என்ன கூறப்பட்டதோ?',

அதற்கு ஆடவன் "கல்யாணமெல்லாம் ஒரு விஷயமா?இப்போ நீ தான் எனக்கு முக்கியம்...நான் வரேன்டா...ஹான்...அதெல்லாம் டாட் பார்த்துப்பார்" என தெனாவெட்டாக கூறி பட்டு உடைகளை களைந்துவிட்டு சாதாரண உடையை உடுத்தி மேலங்கியோடு இணைந்திருக்கும் முக்காடுடன் பூனை போல் பதுங்கியப்படி வெளியேறியவன் எவ்வறோ தந்தையின் கண்ணில் அகப்பட்டான்.

"டாட்" என சலிப்புடன்‌ கூவியவனை கனல் விழிகளால் முறைத்தவாறே தரதரவென்று இழுத்து ஒரு அறையினுள் தள்ளியவர் "நினைச்சேன்டா இப்படி ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணுவேன்னு...தாலி கட்டற நேரத்தில் எங்கேடா போறே?" என்று மகனை அதட்ட,

அவனோ அசால்ட்டாய் அவரது பிடியிலிருந்து வெளிவந்து "டாட் உங்களுக்கு என்னை கண்காணிக்கிறது தான் வேலையா?" என எரிச்சலுடன் கூறி முகத்தை சுழித்து,

"டாட் இப்போ நான் வெளிய போகணும்...போயிட்டு தாலி கட்டறதுக்குள்ள வந்திடுவேன்...ப்ராமிஸ்" என்றவன் அவர் சுதாரிப்பதற்குள்ளே கைசந்தின் இடுக்கில் நுழைந்து கதவை திறந்து தப்பித்து சென்றிருந்தான்.

இவரோ "டேய்...டேய் போகாதேடா" என பின்னால் துரத்திக்கொண்டே ஓடியவர் அங்கு கூடியிருந்த உறவினரை கண்டுவிட்டு இதழை சிரித்தாற் போன்று வைத்து நடையை சாதாரணமாக்கியவர் "எப்போ வந்தீங்க?" என நலம் விசாரிக்க தொடங்கி விட்டார் விஜய ராகவன்.

விஜய ராகவன் ஒரு பல்துறை சிறப்பு மருத்துவனைகளை கட்டமைத்து நிர்வகிக்கும் ஒரு வளர்ந்த தொழிலதிபர்களில் ஒருவர்.அவர் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் மருத்துவமனையை நிறுவி அதனை நிர்வகிக்கும் பொறுப்பினை ஒற்றை ஆளாக ஏற்று சிறப்பாக வழிநடத்தி செல்கிறவர்.அத்தோடு அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய ஆராய்ச்சியின் பலனாய் இந்தியாவில் உளவும் பல கொடூரமான நோய்களுக்கான மருந்தை கண்டறிந்து இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் ஆய்வாளர் என்ற பட்டத்தை தக்க வைத்து இந்நாட்கள் வரை சிறந்து விளங்குகிறார்.

அவருடைய துணைவியின் பெயர் யாமினி.பெரிய செல்வந்தர் ஒருவருடைய ஒற்றை வரிசை காதலித்து மணமுடித்து சொத்துக்கள்‌ அனைத்தையும் தன் கையகப்படுத்திவிட்டார் விஜய ராகவன்.

இதனால் யாமினிக்கு சிறிது மனவருத்தம் ஏற்பட்டப்போதும்,மனைவியை ஒரு குறையும் அண்ட விடாமல் ராணி போல் வாழ வைத்த விஜய ராகவனின் அன்பில் மயங்கி அவரின் பிழைகளை மன்னித்து மறந்துப்போனார்.

இவர்கள் இருவருடைய காதலின் சாட்சியாக பிறந்தவனே,அவர்களின் ஒற்றை ஆண் வாரிசு அசோக்.

தற்போது மகனை இந்தியாவில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர் ஒருவரின் மகளிற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்துக்கொண்டிருந்த வேளையில் மகன் இவ்வாறு மண்டபத்திலிருந்து வெளியேறியது பெரும் சினத்தை தோற்றுவித்தப்போதும் அதனை வெளிப்படையாய் காட்டிட முடியாத வகையில் அவனின் மீது அவர் வைத்திருக்கும் அன்பு தடுத்து நிறுத்தியிருந்தது.

மேலும் அவருடைய இத்தகைய சினத்திற்கு மிகமுக்கிய காரணம் சில நாட்களாக அவருக்கு எதிராக கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரி உலவுவது போல் உள்மனம் எச்சரித்து கொண்டேயிருந்தது.

அவர் சந்தேகித்தது போல் அரசாங்கம் எந்தவொரு மருத்துவம் சார்ந்த ஆய்வுகளுக்கும் தன்னை நாடி வருபவர்கள் கடந்த சில நாட்களாக எந்த விதமான அறிவியல் ஆராய்ச்சி செயல்பாடுகள் குறித்தும் தன்னிடம் கலந்தலோசிக்காமல் புதிதாக வளர்ந்து வரும் ஒரு விஞ்ஞானியிடம் ஆராய்ச்சியை பற்றிய குறிப்புகள் பகிர்ந்துக்கொள்ளப்படுவதாக இரகசிய உளவாளியிடமிருந்து தகவல் ஒன்று கிடைத்தது.

அந்த ஆராய்ச்சியாளர் யார் என்று நிழல் உலகத்திற்குள் விசாரித்த வகையில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதனால் தன்னுடைய தலைமையை தக்க வைத்துக்கொள்வதற்காக மிகப்பெரிய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்ப்புடைய இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர் நிரவ் சோப்ராவின் ஒற்றை வாரிசான ஆரிய சுபத்ராவை தன் மகனிற்கு மணமுடிக்க முடிவு செய்து,பல யூகங்களை வகுத்து இரகசிய திட்டங்கள் பலவற்றை தீட்டி தன் மகனை வைத்து மாய தூண்டில் வீசி ஆரிய சுபத்ராவின் மனதை கொள்ளை கொள்ள வைத்து இந்த திருமணம் வரைக்கும் கொண்டு வந்து தன் திட்டத்தின் முதல் படியில் வெற்றிக்கொண்டார்.

இந்த திட்டத்தை அடியோடு குலைக்கும் வகையில் மகனின் செயல்பாடுகள் இருந்ததினால் மனதிற்குள் தன் திட்டம் பறிப்போய்விடுமோ என்ற அச்சம் சூழ மகனை மனதிற்குள் வசைப்பாடிக்கொண்டிருந்தார்.

உள்ளுக்குள் மகனின் மீது கடுப்பு இருந்தப்போதும் அவனின் மீது அளவுக்கடந்த அன்பை கொண்டிருக்கும் தந்தையால் 'இன்னும் மூகூர்த்தத்துக்கு ஒரு மணி நேரம் தான் இருக்கு...இந்த நேரத்தில் இந்த பையன் எங்க தான் போய் தொலையிறானோ?செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப்போச்சு...கொஞ்சம் கூட பொறுப்பேயில்லை' என புலம்பிக்கொள்ள மட்டுமே அவரால் முடிந்தது.

அவருடைய மனைவி யாமினி வந்து மகனை பற்றி வினவ,வாழ்க்கையில் முதன்முறையாய் "என் கோபத்தை கிளப்பாமல் கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு போய் உட்காரு யாமினி" என சீற,

அவரின் இந்த சினத்தில் அச்சமடைந்து ஓரடி பின்னடைய "அசோக் மண்டபத்தில் இல்லைன்னு யாருக்கும் தெரியக்கூடாது...என்ன புரியுதா?" என பெரும் அதட்டல் போட,

அந்த அப்பாவி பெண்மணியின் முகம் சுருங்கிட "சரி" என்று சோர்வுடன் தலையாட்டி வைத்தார்.

"போய் வந்தவங்களை கவனி...நான் பையன் வரனா இல்லையானு பார்த்திட்டு வரேன்" என எரிச்சலுடன் கூறிக்கொண்டே மகனின் எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.

யாமினிக்கு மகன் எங்கு என்று அறியவில்லை எனினும்,கணவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டே பழகியவர் என்பதினால் அவர் சொல்லப்படி வந்த விருந்தினர்களை கவனிக்க சென்றார்.

ஆயினும் மனதிற்குள்ளே 'மகன் எங்கே?' என்ற கேள்வி கலவரத்தை ஏற்படுத்தினாலும் முகத்தில் அதனை காட்டாமல் இருக்க அரும்பாடுப்பட்டுப்போனார் அந்த அப்பாவி பெண்மணி.

அடுத்த அரைமணி நேரமும் மணமகனை பற்றி விசாரித்தவர்களிடம் எதையோ கூறி மலுப்பிக்கொண்டு சமாளித்தவரின் உயிர் மகன் மீண்டும் வந்ததற்கு பிறகே வந்தது.

'ஹப்பாடா' நிம்மதி பெருமூச்சு விட்டனர் விஜய ராகவனும் அவரின் மனையாளும்…!!

மனைவியை மற்றவரை கவனிக்கும்படி கண்ணை காட்டிவிட்டு யாவரும் அறியாமல் மகனின் தோள் தட்டி அறைக்கு அழைத்து சென்றவர் "இந்த சமயத்தில் எங்கடா போய் தொலைஞ்சே?" என உறும,

தோளை குலுக்கி அவரின் கையை தட்டிவிட்டு அமைதியாக மேலிருந்து கீழாக அவரை தீர்க்கமாய் பார்த்த மகனை கண்ட விஜய ராகவன் "என்னடா ஒரு மாதிரி பார்க்கறே?" என புருவம் நெறித்த வேளையில் வெளியே மணமகனை வேண்டி கதவை தட்ட "சரி...சரி...சீக்கிரம் போய் ரெடி ஆகுடா...இங்க எல்லாருக்கும் என்னால் பதில் சொல்ல முடியலை...உன்னை கல்யாணம் முடிஞ்ச பிறகு பார்த்துக்கிறேன்" அவனை குளியல் அறைக்குள் தள்ளி கதவை சாற்றி அவ்விடத்திலே நின்று காவல் காத்தார்.

"இதோ ஐந்து நிமிஷத்தில் வரோம்" என வெளியே இருப்பவர்களிடம் குரல் கொடுத்துவிட்டு "அசோக் சீக்கிரம்டா" என புதல்வனை அவசரப்படுத்த,

மகன் பட்டு வேஷ்டி சட்டையில் தயாராகி வெளியே வந்த நொடியினில் "சீக்கிரம் அசோக்...நேரமாச்சு" என மகன் வேறு எங்காவது ஓடிவிடுவனோ என்ற பதட்டத்தில் அவனை கையோடு இழுத்து சென்று மணமேடையில் அமர வைத்தார்.

அவருக்குள் இருக்கும் பதட்டத்தில் மகனின் முகத்திலிருந்த வித்தியாசத்தை கவனிக்க தவறினார்.

முன்னரே அறிய நேர்ந்திருந்தால் அப்போதே திருமணத்தை நிறுத்தியிருக்கக்கூடுமோ?

மண்டபத்திற்கு வெளியே,

"அசோக்

வெட்ஸ்

ஆரிய சுபத்ரா" என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.

உள்ளே புரோகிதர் "பெண்ணை அழைச்சிண்டு வாங்கோ" என குரல் கொடுக்க சிவப்பு நிறத்தில் தங்கத்தினாலான சரிகை நெய்யப்பட்ட பட்டுப்புடவையில் பேரழகியாய் திகழ்ந்தாள் மணமகள் ஆரிய சுபத்ரா.

ஆரிய சுபத்ரா என்னும் பெயருக்கு ஏற்ப பாரதம் போற்றும் வில் வீரனின் மனையாள் சுபத்ரையின் எழிலை வரிவடிவமாய் கொண்ட பேரழகி.

மதியின் மறுபிறவியின் வதன மங்கையிவள்,பிறைப்போன்ற நெற்றியுடையவள்,வானுலக நட்சத்திரங்களையே கண்கள் கூசிட செய்யும் பாலில் குழைந்தெடுத்த வெந்நிற மேனியாள்,மணாளன் முகம் புதைத்து விளையாடும் கார் மேக கூந்தலை உடையவள்,கிளியின் நாசியை தோற்க வைக்கும் கூரான நாசியுடையாள்,வில் போன்ற வளைந்த புருவத்தோடு கூடிய கயல் விழியாள்,மாங்கனியை தோற்கவைக்கும் சிவந்த நிற அதரங்கள் கொண்ட கொடி இடையாள்,இலவம் பஞ்சை மிஞ்சிய மிருதுவான சரீரம் கொண்ட நட்சத்திரங்களையே பொறாமை கொள்ள வைக்கும் பேரழகி இவள்.

இவளை கொள்ளையிட காத்திருக்கும் இளவரசனை மாலை சூடிட கண்களில் கனவு மிதக்க வருங்கால மணாளனின் அருகே அமர்ந்தாள்.

அவனருகே அமர்ந்தவுடன் செவ்வானமாய் சிவந்த ஆப்பிள் கன்னத்தை அவனிற்கு காட்டிவிடாமல் இருப்பதற்கு இமைகளை தாழ்த்தி பார்வையை மண்ணிற்குள் புதைத்து இதழோரம் நாண புன்னகை மேலிட பதுமை போல் அமைதியாய் அமர்ந்திருந்தாள் மதிவதன மங்கையிவள்.

அதனை கண்ணுற்ற மணமகனோ இதழோரம் பூத்த ரகசிய புன்முறுவலுடன் மதிமகளை கண்ணெடுக்காமல் பார்த்து பார்வையால் பூசித்துக்கொண்டிருந்தான்.

அந்த அழகிய பிரமாண்டமான திருமண மண்டபத்தில் நடுநாயகமாக வீற்றிருந்த மேடையில் மணமகனும் மணமகளும் திருமணத்திற்கே உரிய அலங்கார ஒப்பனைகளுடன் ஜொலித்துக்கொண்டிருந்த வேளையில் மண்டபத்திலிருந்த உறவினர் அனைவரின் கண்களும் மணமக்களை மட்டுமே மொய்த்துக்கொண்டிருந்தது.

அந்நேரத்தில் பிள்ளைகளை ஈன்றெடுத்த கதாநாயகர்களின் பெற்றோர் முகத்திலும் சந்தோஷ கலை தாண்டவமாட,அதற்கு குறையாத சரிவிகிதத்தில் மணமக்களின் வதனத்தில் மகிழ்ச்சியுடன் கூடிய பெருமிதம் மிளிர்ந்தது என்றால்,ஆடவனின் முகத்திலோ சற்று அதிகமாகவே எதையோ சாதித்த வெற்றிப்புன்னகை இதழோரம் சிறு கீறலாய் தோன்றி கொண்டிருந்தது.

அந்த மர்ம புன்னகையின் பின்னால் ஒளிர்ந்திருக்கும் சூட்சமம் அறியாத புரோகிதரோ "கெட்டிமேளம்...கெட்டிமேளம்" என்று ஒற்றை விரலை உயர்த்தி அதிகாரத்துடன் ஆணையிட்டு மணமகனின் கரங்களில் தாலியை திணித்தார்.

அதை இதழ் வளைவு புன்னகையுடன் வாங்கி தன்னுடைய நல் உறவை எதிர்நோக்கி குனிந்திருந்த மணப்பெண்ணின் சங்கு கழுத்தை ஒரு முறை இகழ்ச்சியாய் நோக்கியவனின் கரங்கள் பேதையவளின் கழுத்து வளைவில் மங்கல நாணை பூட்டி அவளை தன்னில் சரிப்பாதியாக்குவதற்கும் மண்டபத்தில் ஒரு ஆறடி உயர ஆண்மகன் நுழைவதற்கும் சரியாய் இருந்தது.

அவனை கண்டவுடன் மண்டபத்தில் இருந்த அனைவரின் விழிகளும் வியப்பில் விரிந்து பெரும் சலசலப்பு எழுந்தது.

தங்களுடைய பிள்ளைகளின் வாழ்வு நன்முறையில் ஆரம்பித்த திருப்தியுடன் நிமிர்ந்த பெற்றோர்களின் விழியில் விழுந்த அந்த கோர காட்சி அவர்களின் ஒட்டுமொத்த தேகத்தை வேள்வியினுள் இட்டு பொசுக்கியது போல் திகைப்பூண்டு அதிர்ந்தது.

மணமகனின் பெற்றோரோ தேகமெல்லாம் வியர்த்து வழிய "அசோக்" என உச்சகட்ட திகைப்பில் முணுமணுத்து மணவறை பக்கம் திரும்பினார்கள் என்றால்,மணமகளோ சற்று முன்னால் தாலி கட்டிய மணாளனை போலவே அச்சு அசலாய் தோற்றமளித்த அந்த வேறொருவனை திகைப்புடன் நோக்கியவாறே தன் அருகில் உள்ளவனை 'நீ யார்?' என மிரட்சியுடன் விழி விரிய பார்த்திருக்க,மணமேடையில் இருந்தவனோ நிதானமாய் தன் மாலையை கழற்றி தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்று ஒற்றை புருவத்தை உயர்த்தி "அவன் தான் அசோக்...நான் அர்ஜூன்...அர்ஜூன் வர்மா" என அழுத்தமான குரலில் இயம்பி மின்னாமல் முழங்காமல் அனைவரின் தலையிலும் ஒரு இடியை இறக்கினான் அந்த ஆழ கால விஷம் கக்கும் ஆதிஷேஷனின் வலிமை கொண்ட அர்ஜூன் வர்மா.
 

Lakshmitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரி அர்ஜூனா 2:

மண்டபத்தின் உள் நுழைந்த அசோக் மேடையை வெறித்து அவ்விடத்திலே அதிர்ச்சியுடன் நின்று விட, கூட்டத்திலிருந்த அனைவருமே அவனை போலவே நடந்து முடிந்த விபரீதம் அறிந்து நிகழ்காலத்திற்கு மீளமுடியாமல் ஸ்தம்பித்து நின்றிருக்க,அந்த பேரதிர்ச்சியிலிருந்து முதலில் தெளிந்து வெளி வந்த விஜய ராகவன் விழிகள் சிவக்க "யாருடா நீ??" என்று அந்த இடம் அதிர இடியாய் முழங்கினார்.

அவனோ அலட்சியமாய் மாலையை கழற்றி வீசி அவரை நக்கலாய் மேலிருந்து கீழாக ஊடுரூவியவன் "நான் யார்ன்னு முன்னாடியே சொன்னதா நியாபகம் மிஸ்டர் விஜய ராகவன்" என்றான் தோரணையாக.

"என் பையன் போலவே இருக்கிற நீ யார்?யார் உன்னை இந்த மாதிரி செய்ய சொன்னது?அதுக்கு எவ்வளவு காசு வங்கினே?இப்போ சொல்லறீயா?இல்லையா?" என வினவியவர் அவன் சற்றும் எதிர்ப்பாராத வகையில் தாவி வந்து அணிந்திருந்த அவனின் சட்டையை கொத்தாக பிடிக்க,

"ப்ச்" என உச்சுக்கொட்டி அசாதாரணமாக அவரின் கையை விலக்கி தலையை சரித்து கீழ் கண்ணால் அவரை நோக்கியவாறே "மிஸ்டர் விஜய ராகவன் உங்களுக்கு எத்தனை முறை தான் சொல்லறது?ஐயம் அர்ஜூன் வர்மா" என்றான் அதே கம்பீரத்துடன் கூடிய நக்கலுடன்.

அத்தோடு "யார் சொல்லியும் நான் இங்க வரலை...பணத்துக்கான தேவையும் எனக்கு இருந்ததில்லை" என்றான் அழுத்தமான குரலில்.

அதைக்கேட்ட யாமினியின் உள்ளே பல பூகம்பம் நிகழ்ந்துக்கொண்டிருந்தது.

அவரின் சந்தேகம் அனைத்தும் தன் கணவனின் மீதேயிருந்தது.ஏனெனில் அசோக்கின் சாயல் விஜய ராகவனை ஒத்தே இருந்ததினால் தன் இத்தனை வருட காதலுக்கும் பூசிய சகதியாகவே எண்ணி மனதிற்குள்ளே மறித்து போயிருந்தார்.

அதனால் நிகழ்ந்தேறிய கூத்தை வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்து கண்ணுற்றவர்,தன் கணவனை ஓவ்வாமை பார்வையுடன்‌ வெறித்திருந்தார்.

மனைவியின் மனம் அறியாத விஜய ராகவன் "அர்ஜூன் வர்மான்னா நீ பெரிய கொம்பாடா?என் பையன் மாதிரி நடிச்சி ஏமாத்திய உன்னை சும்மா விடமாட்டேன்டா பரதேசி" என்று உறுமி அங்கு பாதுகாப்பிற்காக கூடியிருந்த காவலரை அருகே அழைத்தார்.

அதற்குள் கூட்டத்திலிருந்த அனைவரும் நடக்கும் நிகழ்வை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்திருக்க "சார் இவனை அரெஸ்ட் பண்ணுங்க" என்று கூவியவர் தனது சம்மந்தியிடம் திரும்பி "சம்பந்தி நம்மை ஏமாத்தி நடத்தினது எல்லாம் ஒரு கல்யாணமே இல்லை...இப்போ என்ன இவன் சுபத்ராவோட குடும்பமா நடத்தினான்...தாலி தானே...இவன் கட்டின தாலியை அறுத்து அவன் மூஞ்சிலே எறிஞ்சிட்டு என் பையனை இப்போவே தாலிக்கட்ட சொல்லறேன்" மனசாட்சி சிறிதுமின்றி கூறிய விஜய ராகவனை நிரவ் அருவருப்பாய் நோக்கியதை அவர் பொருட்டாக மதியவில்லை.

ஏனெனில் காரியத்தை விட வீரியமே பெரிது என்பதினால் தற்போது தன் நிலையை விட்டு இறங்கி பேசினார்.

படபடவென்று அங்கே பேசிக்கொண்டே இருந்தவர் அர்ஜூனிடம் திரும்பி "என் பையன் மாதிரி ஆள் மாறாட்டம் பண்ணதுக்கு நீ காலம் பூராவும் ஜெயில்ல களி தின்னுடா பொறுக்கி ராஸ்கல்" தகாத வார்த்தைகளை கூறி அவனின் சட்டை காலரை பற்றி கீழே தள்ளிவிட முயன்றவரால் ஆஜாபகுவான தோற்றம் கொண்ட அவனை ஒரு அடி கூட அங்கிருந்து நகர்த்திவிட முடியவில்லை.

"என்னடா என்கிட்டயே வலுக்கொடுக்கறீயா?உன்னை என்ன செய்யறேன் பாரு" என கையை ஓங்கியவர் கரத்தை இறுக்கிப்பிடித்த அர்ஜூன் அவரை ஒரு பொருட்டாக கூட மதியாமல் நிரவ் சோப்ராவை நோக்கி "அங்கிள் நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்...என்னோட வரமுடியுமா?" என வெகு சாதாரணமாக அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அவனின் முரட்டு கரம் விஜய ராகவனின் கரங்களை பழச்சாறு போல் பிழிந்துக்கொண்டிருந்தது வேறு கதை.

அவரோ 'டேய்...டேய்' என உள்ளுக்குள் துடித்தாலும் வெளியே முகத்தில் சினத்தை பூசிக்கொண்டு "போலீஸ் என்ன வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க...முதல்ல இவனை வந்து அரெஸ்ட் பண்ணுங்க" என கூச்சலிடவும் அவர்கள் அவனை நெருங்கினார்கள்.

அவர் அவ்வாறு கூறிய அடுத்தவினாடியே தன்னுடைய தீட்சண்ய விழிகள் கொண்டு ஒரே பார்வையால் அவர்களை கட்டுப்படுத்தி "யாராவது கிட்ட வந்தீங்க...அடுத்த வினாடி உங்க யாருக்கும் வேலை இருக்காது" என கர்ஜனையாக மிரட்டியவன் நிரவ்விடம் தாழ்ந்த குரலில் "அங்கிள் உங்க பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு நினைச்சீங்கன்னா என் கூட பேசறதுக்கு வாங்க" என கொடை கொடுக்க முனைந்து அழைப்பை விடுத்தான்.

அவனின் நிமிடத்திற்கு நிமிடம் மாறும் முகப்பாவனையை கண்ணுற்ற நிரவ்,அவனுடைய ஆளுமையில் புருவங்களை சுருக்கினார்.

அதற்குள் வலியை பொறுத்துக்கொண்டு ராகவன் "டேய்...அவர்கிட்ட என்னடா பேசறே?எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுடா" என துள்ளிக்கொண்டு எகிற,

இகழ்ச்சியாக ஒரு முறுவல் சிந்திய அர்ஜூன் தன்னிடமிருந்து கையை இழுத்து போராடி கொண்டிருந்தவரின் கரத்தை வேண்டுமென்றே வெடுக்கென்று விட்டுவிட,இதை எதிர்ப்பார்த்திராத ராகவன் "அம்மாஆஆ" என்று அலறியவாறு கீழே விழுந்தார்.

அதுவரை நடந்துக்கொண்டிருந்த விவாதத்தை பொறுமையாய் மூன்றாம் ஆள் போல் வேடிக்கை பார்த்திருந்த அசோக் "டாட்" என்றப்படி பதறிக்கொண்டு அவர் அருகே ஓடி வர,

யாமினியோ தலையில் இடி இறங்கிய உணர்வில் அங்கிருந்து ஒரு அடி நகராமல் முகம் இருள அர்ஜூனை வெறித்திருந்தார்.

அவரின் ஆராய்ச்சி பார்வையை உணர்ந்தப்போதும் அலட்சியமாய் அதனை ஒதுக்கி நிரவ் சோப்ராவை நோக்க,அவரின் முகத்தில் யோசனையின் சாயல் படிந்திருப்பதை தனக்கு சாதகமாய் பயன்படுத்த எண்ணியவனோ நிரவ் சோப்ராவிடம் "அங்கிள் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் உங்க பொண்ணை தாலியை கழட்டி எறிய சொல்லிட்டு இந்த நிகழ்வை மறந்திட சொல்லுங்க" என அசராமல் கடும் சொற்களை அள்ளி வீசி ஒரு சிறு பெண்ணின் இதயத்தை காயப்படுத்தியிருப்பதை அர்க்கனவன் அந்நொடி அறியவில்லை.

ஆம்,இவர்களது உரையாடலிற்கு செவிமடுத்த பெண்ணவளின் சர்வ அங்கமும் நடுங்கி ஒடுங்கியிருக்க,அந்த தேவதையின் மனதை அங்கிருப்பவர் யாவரும் அறியாமல் போனதே கொடுமை.

மனதில் ஒருவனை சுமந்துக்கொண்டு வேறொருவனின் மாங்கல்யத்தை சுமப்பது தூக்கு கயிறை கழுத்தில் மாட்டிக்கொண்டது போல் உயிர் வரை சென்று வதைத்துக்கொண்டிருக்க வெறும் கூடாகிய உணர்வோடு சிதைந்து சிலையாய் நின்றிருந்தாள் பேதை.

அவளின் தாயோ மகளின் வாழ்வில் நேர்ந்த அவலத்தை நினைத்து கண்ணீர் சிந்திக்கொண்டிருக்க,பெண்ணவளின் தந்தையோ மகளின் எதிர்கால வாழ்வினில் முடிவெடுத்த தீரத்துடன் ஒரு பெருமூச்சோடு "சரி வாங்க" என அர்ஜூனை தனியே அழைத்து சென்றார்.

விஜய ராகவனோ "சம்மந்தி அவனை எதுக்கு?" என்னும் போதே பாம்பு சீறிக்கொண்டு எழுவது போல் தலையை திருப்பி உஷ்ணப்பார்வை பார்த்தவரின் விழியில் அச்சமடைந்து வாயை கப்பென்று முடிக்கொண்டார்.

அசோக்கோ நடந்து முடிந்த நிகழ்வில் தனக்கு எத்தகைய பாதிப்புமில்லை என்பது போல் தந்தையை கவனிப்பதில் மும்மரமாய் இருந்தான்.

"டாட் எந்திரிங்க...அடி எதுவும் பட்டிருச்சா?" என அக்கறையாய் வினவ,

"ச்சை முதல்ல கையை விடுடா" என எரிந்து விழுந்துக்கொண்டே கையை தரையில் ஊன்றி எழுந்து நின்று 'எல்லாம் உன்னால் தான் பாவி' அவனை கொலைவெறியோடு முறைத்தவர் தன் திட்டம் படுதோல்வி அடைந்துவிடாமல் தடுப்பதற்காக மற்றொரு சூழ்ச்சியை மேற்கொள்ள துணிந்தார்.

அதற்குள் ஏனைய உறவினர்கள் அனைவரும் காவல் துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டு மண்டபமே காலியானது.

மணமகள் மற்றும் மணமகனின் பெற்றோர்,ஆரிய சுபத்ரா,அசோக் மற்றும் அர்ஜூன் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தனர்.

காவலர்களை கூட நிரவ் 'இது எங்கள் குடும்பம் சார்ந்த விஷயம்...நாங்கள் பேசிக்கொள்கிறோம்' என அனுப்பியிருந்தார்.

தன் தந்திரத்தை செயல்படுத்த முனைவதற்காக ஆரியாவை நோக்கி தன் கனத்த சரீரத்தையும் தனக்கு சமுதாயத்தில் இருக்கும் மரியாதையையும் பொருட்படுத்தாமல் ஓடிய விஜய ராகவன் “பேட்டி உனக்கு நடந்தது கல்யாணமே இல்லை...ஒரு விபத்துன்னு நினைச்சுக்கோ...என்னைக்கா இருந்தாலும் என் மகன் தான் உனக்கு கணவன்...நான் சொல்லறதை கேளு...அவன் கட்டின தாலியை முதல்ல கழற்றி தூக்கிப்போடு...இப்போவே உன் கழுத்தில் என் மகன் தாலிக்கட்ட தயாரா இருக்கான்” சோர்ந்து நடைப்பிணமாய் நின்றிருந்த பெண்ணின் மனதை கரைக்க போராட,அவளோ யாரோ யாரிடமோ பேசுவது போல் சுவற்றை வெறித்துப்பார்த்திருந்தாள்.

தனக்கு நேர்ந்த உச்சக்கட்ட கொடுமையின் தீவிரம் அறியாமல் நின்றிருந்த பாவையை மேலும் உலுக்கி “பேட்டி சுபத்ரா...நீ வட இந்திய பொண்ணு தானே...உனக்கு தான் தாலி மேலே நம்பிக்கை இல்லையே முதல்ல அதை கழட்டி வீசும்மா” அவளின் செவிப்பறை கிழியும் வகையில் கத்த,அது அவள் மூளையை சென்றடைந்த நொடி தன்னையும் அறியாமல் மாங்கல்ய நாணை ஒரு வார்த்தை பேசாமல் கழட்டுவதற்கு முனைந்த தன் மகளை தண்டிக்க நினைத்த அவளின் தாய் “சுபா வேணாம்மா” என்றப்படி தன் துக்கம் மறந்து அவளருகே ஓடி வர முனைவதற்குள் “பேட்டி அப்படி தான்...சீக்கிரம் கழட்டு” விழிகள் பளபளக்க உற்சாகம் மூட்டினார் விஜய ராகவன்.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் அந்த தந்திர குரலுக்கு உட்பட்டு தாலியை தலை வரை கொண்டு சென்றவளின் கரங்கள் அந்திரத்திலே நிற்க,தாலி அவளின் கழுத்து வழியே உள் நுழைந்து மார்பு கூட்டை அடைந்திருந்தது.

ஏனெனில் நடக்கவிருக்கும் சம்பவத்தை உணர்ந்து விரைந்து வந்து தடுத்து நிறுத்தினான் அர்ஜூன்.

அத்தோடு வசியத்திற்கு உட்பட்டவள் போன்று மீண்டும் “என்னை விடு” என்று அவனின் கரத்தை உதறி மீண்டும் மாங்கல்யத்தை கழட்ட முயற்சித்தவளை சுய உணர்விற்கு கொண்டு வரவேண்டி “சுபத்ரா...சுபத்ரா” என தோளை பிடித்து அர்ஜூன் உலுக்க,

“ஏய்...யார் நீ?தள்ளி போ...நீ கட்டினது வேணாம்…” என பித்துப்பிடித்தவள் போன்று சொன்ன வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் கூறி அவனை கீழே தள்ளிவிட்டு “இது எனக்கு வேணாம்...வேணாம்” என வெறிப்பிடித்தவள் போன்று கத்தியப்படி தாலியை கழுத்திலிருந்து அகற்ற முனைந்தவளை இப்போது வந்து தடுப்பது நிரவ் சோப்ராவின் முறையானது.

“பேட்டி பப்பா சொன்னா கேட்ப தானே...அதை கழட்டக்கூடாதும்மா...நல்ல குடும்பத்து பொண்ணுங்க...இந்த மாதிரியெல்லாம் தாலியை கழட்டி வீசக்கூடாது...கொஞ்சம் பப்பா சொல்லறதை அமைதியா கேளு” சிறு குழந்தைக்கு கூறுவது போல் பக்குவமாக எடுத்து கூறிய தந்தையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு சில வினாடிகள் அமைதியாய் இருந்த பாவையின் கருவிழிகள் இங்குமங்கும் கண்களுக்குள் குழப்பத்துடன் அலைமோதியது.

அதில் யோசனையின் சாயலை உணர்ந்த நிரவ் ‘மகள் யோசிக்கட்டும்’ என்று அவளை தன் கைவளைவிலே நிறுத்தி முதுகை நீவி சாந்தப்படுத்த முயற்சிக்க,அதனை விரும்பாத விஜய ராகவன் “பேட்டி அது உன்னை கொல்லுற தூக்கு கயிறு முதல்ல கழட்டி எறி” என மீண்டும் குரல் கொடுத்த நொடியில் தந்தையின் மார்பில் தஞ்சம் புகுந்திருந்த பாவை மீண்டும் ஆவேசமடைந்து தன்னுடைய ரணகளத்தை தொடங்கிவிட,வேறு வழியின்றி மணமகளின் அறைக்கு முன்னால் பதட்டத்துடன் நின்றிருந்த செவிலியரை அருகே அழைத்து “சாஜி சீக்கிரம் வந்து ஊசிப்போடு” என கத்தியழைப்பு விடுக்க,

அதற்காகவே காத்திருந்தாற் போன்று அந்த செவிலியர் உடனடியாக வந்து நிரவ்வின் கரங்களில் திமிறிக்கொண்டிருந்த ஆரிய சுபத்ராவின் கையில் ஒரு ஊசியை செலுத்தினார்.

அடுத்த சில வினாடிகளில் நிரவ்வின் கைவளைவில் இருந்த பேதையின் தலை தொய்ந்து விழ,விரைவாக வந்து கண்ணீருடன் அவளை தன் கரங்களில் தாங்கிக்கொண்டு அறைக்கு அழைத்து சென்றார் சுபத்ராவின் தாய்.

அதற்குள் தன்னை சமாளித்து எழுந்திருந்த அர்ஜூன் “ராகவன்” என அந்த மண்டபமே அதிரும் படி கர்ஜிக்க,அவன் கண்ணில் மிளிர்ந்த ரௌத்திரத்தை கண்டு விஜய ராகவன் பின்னால் நகர,அவரை நோக்கி இரண்டடி முன்னோக்கி எடுத்து வைத்தவன் அவரை கொன்றுவிடுவது போல் கனல் விழிகளால் முறைத்திருந்தவனின் பார்வையே ‘இன்னொரு முறை என் விஷயத்தில் தலையிட்டால் உன்னை கொன்று மண்ணுக்குள் புதைத்துவிடுவேன்’ என்பதை எடுத்துரைத்து அச்சுறுத்தியது.

அதுவரை அலட்சியமாய் பொறுமை காத்த அசோக் "யார் நீ?என் அப்பாவையே எதிர்த்து பேசறே" என சீறிக்கொண்டு கையை முறுக்கி வர,

அதற்குள் இருவருக்குமிடையே கைகலப்பு எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக நிரவ் அர்ஜூனுக்கு முன்னே இடைப்புகுந்து “விஜய ராகவன் இனி உங்களுக்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை...முதல்ல இங்கிருந்து உங்க குடும்பத்தை கூட்டிட்டு கிளம்புங்க” என,

“சம்மந்தி அவன் ஒரு அயோக்கியன்..” என்னும் போதே பார்வையால் அவரை அடக்கி “ராகவன் அவன் யோக்கியனா அயோக்கியனானு கவலைப்பட வேண்டியது என் தலையெழுத்து...இனிமேல் உங்களுக்கு இந்த விஷயத்தில் தலையிட உரிமையில்லை...முதல்ல இங்கிருந்து கிளம்புங்க...அது தான் உங்களுக்கு மரியாதை” எச்சரிக்கையுடனே கூறியவரின் வார்த்தையை மீறமுடியாமல் தன் திட்டம் உருகுலைந்த எரிச்சலில் வன்மத்துடன் ‘உன்னை சும்மாவே விடமாட்டேன்டா’ என அர்ஜூனை பார்த்து சூளுரைத்தப்படி சென்றவரை "நீயெல்லாம் ஒரு ஆளா போடா' என்பது போல் பார்வையால் இகழ்ச்சியாக பேசியவனை ஒன்றும் செய்ய முடியாமல் பல்லைக்கடித்தப்படி தன் குடும்பத்துடன் மண்டபத்திலிருந்து வெளியேறினார் விஜய ராகவன்.
 

Lakshmitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரிய அர்ஜூனா 3:

சென்னையில் உள்ள ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் நிர்மூலமாய் படுத்திருந்த பாவையவள் தன் மலர் கண்களை மெதுவாக மலர்த்தினாள்.

இமைகளை திறக்க முடியாமல் தலையில் வலி வேறு கிண்கிண்யென்று தெறிக்க தலையை இரு கரங்களால் தாங்கியப்படியே படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்த சுபத்ராவிற்கு தலைச்சுற்றி வர சில வினாடிகள் தலையை தாங்கியப்படி கண்ணை மூடி ஆசுவாச பெருமூச்சை வெளியிட்டு அமைதியடைய முயற்சித்தாள்.

ஆரிய சுபத்ரா‌ ஆரோக்யமான திடக்கத்திரமான பெண் என்றாலும்,கடந்த சில நாட்களாகவே ஒரு வித மனநோயுடன் அமைதியின்றி அலைப்புரிதலுடன் காணப்படுவதாக நிரவ் சோப்ராவிற்கு தோன்றுகிறது‌.

ஒரு சில வேளைகளில் அவளின் பிடிவாதம் எல்லை மீறுகையில் அதற்கு நாம் ஒத்துழைக்கவில்லை என்றால்,அவள் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டு எதிரில் இருப்பவர்களை காயப்படுத்துகிறாள்.

அதேப்போல் இந்த திருமண விடயத்திலும் தாங்கள் அசோக்கை ஏற்றுக்கொள்ளாத வேளையில் வீட்டிலிருக்கும் பொருட்களையே உடைத்து ரணக்களப்படுத்தி இறுதியாக தன்னை தானே அழித்துக் கொள்ள துணிந்த தங்கள் புதல்வியின் நிலையறிந்து பதறிக்கொண்டு அவளை மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள்.

மருத்துவர் அவள் உடலை முழுமையாய் பரிசோதனை செய்துவிட்டு "உங்க பொண்ணுக்கு எந்த மன அழுத்தமும் இல்லை...நல்லப்படியா தான் இருக்காங்க...ஆனால் திடீர் திடீர்னு ஏன் இப்படி நடந்துக்கறாங்கன்னு எனக்கும் தெரியலை...வேணும்னா நல்லா தூங்கறதுக்கு சில மாத்திரைகள் தருகிறேன்...அதை இரண்டு மாதம் தொடர்ந்து கொடுங்க...அப்புறம் அவங்க கேட்கிற எதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் உடனடியா செய்து கொடுங்க...இல்லைனா அவங்க தன்னை தானே அழித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்" அவர்களின் தலையில் பாரத்தை இறக்கிவிட்டு சென்ற மருத்துவரை கண்ணீரோடு பார்த்திருந்தனர் அவளின் பெற்றோர்.

'ஏன்?எதற்கு?எப்படி?' என்ற கேள்விகளுக்கு விடையறியாமல் மகளின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அரைமனதுடன் விவாஹத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

ஆனால் இப்போது இறுதி நொடியில் மணமகன் மாறியதில் மிகப்பெரிய அழுத்தம் நெஞ்சை அடைக்க வைத்தாலும் அசோக் மணமகனாக வராதது ஒரு ஆறுதலையே கொடுத்திருந்தது.

ஏனெனில் அசோக்கின் தந்தை விஜய ராகவன் இந்த திருமணத்தில் காட்டுமளவு ஆர்வத்தை கூட,மணமகன் காட்டியிராதது உள்ளுக்குள் ஒரு நெருடலை கொடுத்துக் கொண்டிருந்தது.

அவனது ஒவ்வொரு அசைவிலும் அவனின் விருப்பமின்மையை தெள்ள தெளிவாக எடுத்துரைத்தவனை கண்டு 'இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றால்,பின்பு எதற்காக என் மகளை காதலித்தான்?' என்ற கேள்வி மனதிற்குள் விஸ்வரூபம் எடுத்து மிரட்டிக்கொண்டே இருக்க,தற்போது அர்ஜூன் தன் மருமகனாய் வந்தது ஒரு வித திருப்தியையே அளித்தது.

அத்தோடு அவனை தனிமையில் சந்தித்து பேசியதற்கு பிறகு தன் மகளுக்கு நூறு சதவீதம் ஏற்ற மணமகன் அர்ஜூன் தான் என்ற முடிவிற்கு வரவழைத்து மகளை அவனோடு வாழ வைக்கும் விபரீதமான முடிவை எடுக்க வைத்தது.

நிஜத்தில் நல்லவன் போல் தோற்றமளித்தாலும் விஜய ராகவன் என்னும் நாகத்தை தோற்கடிப்பதற்காகவும் தான் எடுத்த சபதத்தில் வெற்றிக்கொள்வதற்காகவும் தந்திரமாய் சுபத்ராவை மணமுடித்திருந்தான் அர்ஜூன் என்பதை யாவரும் அறியர்.

இதன் மூலம் பல திட்டங்களை தீட்டி பாவையவளை பகடை காயாக பயன்படுத்தி தான் அமைத்த வியூகங்களை கொண்டு தெளிவாக காய் நகர்த்தி அதன் ஆரம்ப கட்டத்தில் வெற்றி வாகை சூடியிருந்தான்.

ஆனால் பெண்களின் மனதை கணிக்கும் வல்லவன் இந்த உலகத்தில் எவரும் இலர்,அதற்கு தான் மட்டும் விதி விலக்கல்ல நிஜமறியாத கோழை தான் இந்த அர்ஜூன் என்பதை அவனே அறியேன்.

சுபத்ராவை மணம் புரிந்தது தொடர்பாக அர்ஜூன் கூறிய நியாயமான காரணங்களை நிரவ் சோப்ரா எடுத்துக்கொண்டு,தன்னுடைய மகளை மண்டபத்திலிருந்து நேரே அர்ஜூனின் இல்லத்திற்கு அழைத்து சென்றுவிட்டார்.

சுய நினைவுடன் இருக்கும் வேளையில் இதற்கு மகள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்பதினால் அவள் மயக்கத்தில் இருந்தப்போதே மகளை அர்ஜூனிடம் ஒப்படைத்துவிட்டு "சுபத்ரா ரொம்ப சின்ன பொண்ணு...நிறைய கோபம் வரும்...அவ எந்த தப்பு செய்தாலும் பொறுத்துப்போங்க மாப்பிள்ளை...எழுந்து எதுவும் கலாட்டா செய்தால் எந்த நேரமானலும் உடனடியா எங்களை கூப்பிடுங்க" அரைமனதாக மகளை அர்ஜூனிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருந்தனர்.

காலை வேளையில் மயக்க மருந்தின் உதவியுடன் மூர்ச்சையடைந்த பாவையவளிற்கு இரவு ஏழு மணிக்கே விழிப்புத்தட்டியது.

முதலில் தன் இமைகளை திறந்து சுற்றுப்புறத்தை கண்ணுற்றவளிற்கு அதன்பிறகே ‘இது தன்னுடைய இருப்பிடமல்ல’ என்ற நிஜம் புரிந்ததோடு,மண்டபத்தில் நடந்த நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவிற்கு வரத்தொடங்கியது.

அனைத்தும் சிந்தைக்கு வந்த அடுத்த வினாடியே கட்டிலிலிருந்து படக்கென்று எழுந்து நின்றவள் சுற்றுப்புறத்தை ஆராய,அங்கிருந்த வெள்ளை பூச்சுகள் பூசப்பட்ட சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்திலிருந்தவனை கண்டவுடன் ‘இது யாருடைய இடம்?’ என்பது விளங்கியதோடு,அவள் கழுத்தோடு பின்னிப்பிணைந்திருந்த தாலியும் அவளிற்கு விபரத்தை தெள்ள தெளிவாக புரிய வைத்தது.

அவை உணர்ந்த நொடியில் அவளின் அழகிய வதனம் கோபத்தில் செந்நிறமாய் சிவந்துவிட ‘ஹவ் டேர் யூ டு டூ திஸ் டூ மீ’ மனதிற்குள் பொருமிக்கொண்டே கீழே குனிந்து தன் உடையை நோக்கினாள்.

காலையில் அணிந்திருந்த பட்டுப்புடவையை களைந்துவிட்டு சாதாரணமாக வீட்டில் அணியும் பைஜாமாவை கண்டு ‘இதை யார் எனக்கு அணிவித்தது?’ என்ற கேள்வியுடன் புருவம் சுருக்கியவளிற்கு தேகமெல்லாம் தீப்பற்றிய உணர்வு எழ “டாட்...மாம்” என அழைத்துக்கொண்டே அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

வரவேற்பறைக்குள் நுழைந்த சுபத்ரா பெரிய விசாலமாக இருந்த அவ்விடத்தை கண்டு முகம் சுருக்கினாள்.

ஏனெனில் அவ்விடத்தில் ‘ப’ வடிவிலான நீள் விரிக்கையும் ஒரு சிறிய அலங்கார மேசையையும் தவிர வேறு எந்த பொருட்களும் அங்கில்லை.அத்தோடு அவளின் சொற்கள் பெண்ணவளின் செவியில் வந்து எதிரொளிக்கும் வகையில் பெரிதாக இருந்த அறையில் அதற்கு ஈடான எந்த வித அலங்காரப்பொருட்களும் இல்லாமல் இருப்பதை கண்டு ‘அவனை மாதிரி அவன் வீடும் ஒண்ணுமில்லாத மாதிரி இருக்கு’ என சத்தமாக முணுமுணுத்து வசைப்பாடியவளிற்கு தாயும் தந்தையும் இவ்விடத்தில் இல்லை என்பது புரிந்துப்போனது.

உடனடியாக சுள்ளென்று சினம் உச்சந்தலைக்குள் ஏற ‘என்ன நினைச்சு என்னை இவன் வீட்டில் தனியா விட்டுட்டு போயிருக்காங்க’ என முனகியப்படி 'முதல்ல இந்த ஃப*கிங் ஹவுஸிலிருந்து வெளிய போகணும்' என பல்லை கடித்துக்கொண்டு கதவு வரை சென்று அதை திறக்க முயற்சிக்க அந்தோ பரிதாபம் அவளால் திறக்க முடியவில்லை.

அது வெளிப்புறமாக பூட்டியிருப்பதை கண்டு எரிச்சலடைந்த பாவை கதவை காலால் ஒரு உதைவிட்டு ஆங்கில கெட்ட வார்த்தைகள் கொண்டு ஆடவனை வறுத்தெடுத்தவள்,திடீரென்று முகம் பளீச்சிட தான் படுத்திருந்த அறைக்கு திரும்பினாள்.

வரவேற்பறை போலவே அந்த அறையிலும் ஒரு கட்டிலும் மெத்தையும்,அதற்கு அருகே ஒரு சிறிய மேசையும் அதன் மீது ஒரு விடி விளக்கு மட்டுமே எஞ்சியிருந்தது.

அறையை சுத்தமாக வழித்தெடுத்தது போல் வெறிச்சோடி இருக்க,கட்டிலின் முகப்பிற்கு மேல் பகுதியில் அவனுடைய புகைப்படம் மட்டும் அலங்கார பொருளாக அவ்வறையனுள் வீற்றியிருந்தது.

‘ஒரு வீட்டை எப்படி வைச்சுக்கணும்னே தெரியலை...இவனுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு’ கடுகாய் பொரிந்து தள்ளியவள் மேசை மீது இளஞ்சிவப்பு பூனைக்குட்டி உறையுடன் இருந்த தன்னுடைய அலைப்பேசியை எடுத்து தந்தையின் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள்.

நீண்ட நேரம் அவளின் பொறுமையை சோதித்தப்பிறகே அலைப்பேசி அந்தப்புறமாக எடுக்கப்பட்டதும் அவரை பேசவிடாமல் “டாட் உங்க மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?எந்த தைரியத்தில் அவன்கிட்ட என்னை விட்டுட்டு போயிருக்கீங்க?எனக்கு இங்க சுத்தமா பிடிக்கலை?முதல்ல என்னை இங்கிருந்து கூட்டிட்டு போங்க...என் விருப்பமில்லாமல் தாலிக்கட்டின அவனை நான் ஏத்துக்கணுமா?நெவர்...முடியவே முடியாது...அந்த ஆள் ஒரு தப்பானவன்...வீட்டை வேற பூட்டி வைச்சிட்டு போயிட்டேன்...நீங்க உடனே கிளம்பி இங்க வாங்க...நான் நம்ப வீட்டுக்கு வந்திடறேன்” படபடவென பேசிக்கொண்டே சென்றவள் சினத்தில் நகத்தை கடித்து துப்பிக்கொண்டிருந்தாள்.

எதிர்ப்புறம் மகளின் செயலை அறிந்த தந்தையாக “பேட்டி நகம் கடிக்கிறதை முதல்ல நிறுத்து...உனக்கு கோபம் வந்தால் என்ன செய்வேன்னு தெரியாது...உன்னை பப்பா அங்க விட்டுட்டு வந்திருக்கேனா அதில் ஒரு காரணம் இருக்கும்...இது தான் உனக்கு ஏத்த வாழ்க்கை...கோபத்தையெல்லாம் தூக்கி வைச்சிட்டு பொறுமையா உட்கார்ந்து யோசிம்மா” என்றார் சற்று நிதானமான குரலில்.

தந்தை கூறிய சொற்களை கேட்டவுடன் சீற்றம் கூரையை பிய்த்துக்கொண்டு சீறி எழ “மண்ணாங்கட்டி வாழ்க்கை?அது இதுன்னு என்னை டென்ஷன் பண்ணாதீங்க டாட்...முதல்ல நீங்க இங்க வர முடியுமா முடியாதா?அதை சொல்லுங்க” என்று எகிற,

அவரோ தாழ்ந்த குரலில் “பேட்டி ஒரு நாள் நான் செய்தது தான் சரின்னு புரிஞ்சிப்பே நீ...அர்ஜூன் தான் உனக்கு ஏற்றவன்...அந்த அசோக் நல்லவன் இல்லைம்மா...அதுவும் அந்த விஜய ராகவன்…” என்னும் போதே இடைமறித்த சுபத்ரா,

“டாட் ஷட் அப்...இனியொரு வார்த்தை என் அசோக்கை கண்டவனோட கம்பேர் பண்ணி பேசினால் நான் கொலைவெறியாகிடுவேன்...அதே மாதிரி அங்கிள் பத்திபேச உங்களுக்கு என்ன தகுதியிருக்கு?பெத்த பொண்ணு கழுத்தில் எவனோ ஒருத்தன் தாலிக்கட்டிட்டான்...அவனை பிடிச்சு ஜெயில்ல போடாமல் அவன் பெரிய நல்லவன் உத்தமன்னு காண்டெக்ட் சர்ட்டிபிக்கேட் கொடுத்திட்டு இருக்கீங்க?நீங்கயெல்லாம் ஒரு நல்ல அப்பாவா?” ஆத்திரக்கரனுக்கு புத்தி மட்டு என்பது போல் வார்த்தைகளை நெருப்பு கங்குகளாய் அள்ளி வீசி தந்தையின் மனதை காரிகை காயப்படுத்தினாள்.

அவரோ விரக்தியாக சிரித்து “நல்ல அப்பாவா இருப்பதினால் தான் உனக்கு எது நல்லதுன்னு யோசித்து முடிவு எடுத்திருக்கிறேன்” என,

“எது கண்டவனையெல்லாம் எனக்கு புருஷனாக்கிறது நல்ல முடிவா?” என உறும,

“உன்னை மனசில் வைச்சு யோசித்ததால் தான் அர்ஜூனை உனக்காக நான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்”

இதழை சுழித்து “ஏதோ நீங்களே எனக்காக பார்த்து பார்த்து செலக்ட் பண்ண மாதிரி பில்டப் எதுக்கு விடறீங்க?” என எரிந்து விழ,

“என் பொண்ணுக்காக ஒரு மாப்பிள்ளை பார்க்கிறதுன்னா அது அர்ஜூன் மாதிரி துணிச்சலான ஒருத்தனை பார்ப்பனே ஒழிய,அசோக் மாதிரி அப்பாவுக்கு பின்னாடி ஓடி ஒளிஞ்சிக்கிறே கோழையையில்லை” அவரும் மகளிற்கு சலித்தவளில்லை என்பது போல் வாதத்தில் நிரூப்பித்தார்.

“டாட் இது தான் கடைசி எச்சரிக்கை...இனியொரு முறை என் அசோக்கை பத்தி தப்பா பேசனீங்க நான் சும்மா இருக்கமாட்டேன்” என குரல் கீறிச்சிட,

“இப்பவும் சொல்லுறேன்...அந்த அசோக் எதுக்குமே உதவாத உதவாக்கரை...சுயநலப்பிடித்தவன்...தோற்றத்தில் அவனை போலவே இருந்தாலும் அர்ஜூன் தைரியசாலி...நல்லவன்” என அவளின் சீற்றத்தை அதிகரித்து கொண்டே இருக்க,

இவள் அறைக்குள்ளே நடைப்பயின்றவாறு “பப்பாஆஆஆஆ” என பல்லைக்கடிக்க,

“பேட்டி ஒழுங்கா அர்ஜூனோட வாழப்பாரு...இது தான் இந்த அப்பாவோட விருப்பம்” என்றார் நிதானத்துடன்.

“எனக்கு இஷ்டமில்லை” பட்டு கத்தறித்தாற் போன்று பதில் வந்து விழ,

அவரோ பெருமூச்சை வெளியிட்டு “அப்போ பப்பாவோட பதிலையும் கேட்டுக்கோ..நீ அர்ஜூனோட வாழ்ந்தால் மட்டும் தான் நான் சம்பாதித்த சொத்து முழுவதும் உனக்கு கிடைக்கும்” என வேறு விதமாக மகளிற்கு நெருக்கடி கொடுக்க பார்க்க,

அவளோ இகழ்ச்சியாக புன்னகைத்து கூந்தலை கோதி விட்டு “என்ன பப்பா பிளாக்மெயிலா?சரி வைச்சுக்கோங்க...எனக்கு உங்க சொத்து எதுவும் வேணாம்...எனக்கு அசோக் இருந்தால் போதும் வேற யாரும் வேணாம்” அவரின் திட்டத்தை முறியடிக்க நினைக்க,

“ஹாஹாஹா” என வாய்விட்டு சிரித்த நிரவ் சோப்ரா “என்னுடைய செல்வாக்கும் சொத்துமில்லாமல் நீ வெறும் செல்ல காசு பேட்டி...அந்த விஜய ராகவன் சந்தையில் பிடிச்சு வந்த கறவை மாடா பார்ப்பானே தவிர உன்னை ஒரு உயிரா மதிக்கக்கூட மாட்டான்...பார்க்கலாமா?” என சவால் விட,

“அதையும் பார்க்கலாம்...அசோக் தான் என்னைக்கும் என்னுடைய காதலன்,கணவன் எல்லாமே!” என்றாள் தீரத்துடன்.

“இப்படி சொல்லற இதே வாயாலே அர்ஜூன் தான் எனக்கு எல்லாமேன்னு கூடிய சீக்கிரம் இந்த பப்பாக்கிட்ட சொல்லுவே நீ!" என்றார் இதழ் வளைய.

“டாட் கனவில் தான் அதெல்லாம் நடக்கும்” என்றாள் நக்கல் தொணியில் பாவையவள்.

“சரி...இன்னையிலிருந்து எண்ணி ஆறு மாசம் அதுக்குள்ள நீ மனசு மாறி அர்ஜூனோட வாழ்ந்திடுவேன்னு இந்த ப ப்பா சொல்லுறேன்” அவளை தூண்டிலில் சிக்க வைக்க முயல,

அதை அறியாத பேதையோ “டாட் நல்லா காமெடி பண்ணறீங்க போங்க...நீங்க சொல்லற மாதிரி அடுத்த ஆறு மாசம் என்ன?ஆறு வருஷமானாலும் அவன் மேலே எனக்கு எந்த பிளீங்கும் வராது" என திமிருடன் பதிலளிக்க,

"சவாலா?" என இவரும் தூண்ட,

"சவால் டாட்" சரியாக அவர் விரித்த வலையில் சிக்கினாள் அவரது பேட்டி.

தாழ்ந்துப்போனால் மிஞ்சுபவள் சீறினால் பதிலுக்கு சீறி அவசரமாக முடிவெடுக்கும் துடுக்குத்தனமானவள் தன் மகள் என்பதை அறிந்த தந்தையாய் அவளை சீற வைத்து குளிர்க்காய்ந்தார் அந்த பெரிய மனிதர்.

அத்தோடு தனக்கு பிடித்தமானவர்களிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டால்,அதை எக்காரணம் கொண்டு மீற மாட்டாள்.அதை இப்போது பயன்படுத்திய நிரவ் சோப்ராவின் இதழ்கள் வெற்றியுடன் முறுவலடைந்தது.

இனி அவளுடனான வாழ்க்கை பிரம்மனுக்கு நிகரானவன் கரத்தில் என்பதை பேதையவள் அறியவில்லை.
 

Lakshmitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரி அர்ஜூனா 4:

தந்தையிடம் பேசிவிட்டு அலைப்பேசியை வைத்த மங்கைக்கு அதன்பிறகே தான் அவர் வீசிய வலையில் வசமாக சிக்கியதை உணர்ந்து ‘என்ன தந்திரமா பேசி என்னை அவர் விரிச்ச வலையில் சிக்க வைச்சிருக்கார் இந்த சேடிஸ்ட் டாட்’ என இதழை சுழித்து கோபம் கொண்டவளிற்கு அருகிலிருக்கும் பொருட்கள் அனைத்தையும் உடைக்க வேண்டும் என்ற வெறியே உருவாக சுற்றும் முற்றும் தேடியவளிற்கு அவனின் புகைப்படத்தை தவிர வேறு எந்த பொருட்களும் இல்லை என்பதினால் பல்லை கடித்தவள் தன் கையிலிருந்த கைப்பேசியை “யூ இடியட்” என கர்ஜித்தப்படியே அந்த புகைப்படத்தை நோக்கி வீசினாள்.

அவளின் அலைப்பேசி பட்டு புகைப்படத்தில் சிறு கீறலாய் கண்ணாடி விரிசல் மட்டுமே விழ,ஆனால் அவளின் அலைப்பேசியோ அந்தோ பரிதாபமாய் பல துண்டகளாக உடைந்து கீழே விழுந்து சிதறி கிடந்தது.

அதைக்கண்டவளிற்கு மேலும் சுறுசுறுவென ஆத்திரம் சீறி எழ “ஷிட்” என காலை உதைத்து கொண்டு கட்டிலில் அமர்ந்தவளிற்கு ஆவேசம் மட்டும் அடங்க மறுக்க மெத்தையுறையை அர்ஜூனாக நினைத்து கசக்கி பிழைய ஆரம்பித்தவளிற்கு பசி வயிற்றை கிள்ளியது.

நேரங்கள் கடக்க அவளின் பசி நேரத்திற்கு நேரம் அதிகரித்துக்கொண்டே போக ஒரு கட்டத்தில் சிறு குடல் பெருங்கடலை திண்பது போல் வலி உண்டாக அவளிற்கு கண்ணோரம் கரிப்பது போல் இருந்தது.

ஏனெனில் இதுப்போலான உணர்வுகளை பிறந்ததிலிருந்து அனுபவித்திராத செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒற்றை பாவையவளிற்கு இத்தகைய வலி புதிதாக இருக்க,வேறு வழியின்றி கண்ணீரை துடைத்துக்கொண்டு சமையலறைகலனில் ஏதேனும் உணவு பொருட்கள் இருக்கிறதா என்பதை காண்பதற்கு அவ்வறையை நோக்கி சென்றாள்.

அவளின் சில நிமிட தேடலுக்கு பிறகு ஒரு கோதுமை ரொட்டி பொட்டலமும் பழக்குழைமம் மட்டுமே கிடைக்க,வேறுவழியின்றி முகம் சுழித்தப்படி அதனை உண்ண தொடங்கினாள்.

தன்னுடைய நிலையை நினைத்து தானே பரிதாபம் கொண்டவள் தண்ணீர் குடிப்பதற்கு கூட சமையலறை பக்கம் ஒதுங்கியிராதவளை ஒருவேளை உணவிற்காக தன்னை அலைகழித்த அவனை கொடும் இராட்சனாய் சித்திரித்தது அந்த இளம் பெண்ணின் உள்ளம்.

'தாலி கட்டின முதல் நாளே என்னை சாப்பாடுக்காக அலைய வைச்சிட்டயில்லை...உன்னை சும்மாவே விடமாட்டேன்டா' என மனதிற்குள் கறுவிக்கொண்டே ரொட்டி கடித்து விழுங்கியவளுக்கு விக்கல் தோன்ற தண்ணீரை மடமடவென சரித்து தன் சரீரம் மீது கொட்டி கவிழ்த்து ஒரு வழியாக இரவு உணவு முடித்தவளிற்கு உடை மாற்ற வேண்டும் என தோன்றியது.

அந்த இல்லம் இரண்டு படுக்கறை மட்டுமே உடைய அடுக்குமாடி குடியிருப்பு என்பதோடு அவற்றில் ஒன்று மட்டுமே அவளின் உபயோகத்திற்கு திறந்து வைத்திருக்க மற்றொன்று பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

‘ஓ காட்’ புலம்பியவளிற்கு சிறைப்பட்டிருக்கும் கூண்டு கிளிப்போல் மரண வேதனையுடன் வீட்டிற்குள்ளே சுற்றி வந்தவளிற்கு ஒரு கட்டத்தில் கால் வலி வந்து விட மீண்டும் திறந்திருந்த ஒற்றை அறைக்குள் நுழைந்து கவனமாய் கதவை சாற்றி பூட்டிக்கொண்டு கட்டிலில் விழுந்தவள் ‘அடுத்து,தன் வாழ்வின் நிலைப்பாடு என்ன?’ என்ற யோசனையுடனே விழி மூடி ஈரமான துணியுடனே கசகசப்புடன் உறங்கிப்போனாள்.

அடுத்த நாள் அதிகாலையிலே விழிப்பு வந்து விட ‘மணி என்ன?’ என்ற குழப்பத்துடனே சன்னலின் கண்ணாடி திரையை விலக்கியவளிற்கு புலர்ந்தும் புலராத அதிகாலை வேளை தெரிய ‘மிட் நைட்டே எழுந்திட்டினா?ஓ காட்’ வந்த கொட்டாவியை வாயிற்குள் வைத்து அழுத்தி அறையின் முற்றத்திற்கு செல்லும் கதவை திறக்க முயல,அதுவோ திறவாமல் சதிச்செய்தது.

‘அட சதிக்காரா?அதையும் பூட்டிட்டினா?’ என முனகியப்படியே குளியலறை சென்று தன்னை சுத்தம் செய்துக்கொண்டு அறைக்கு வந்தவளிற்கு நேற்று உண்ட கோதுமை ரொட்டி போதவில்லை போலும்.

அதனால் ‘கர்...கர்’ என்று சத்தமிட வயிற்றை அழுத்திப்பிடித்தப்படி வெளியே வந்தவளின் மனமோ இன்றும் அதே ரொட்டியும் பழக்குழைமமும் என்று எண்ணும் போதே விழிகள் இரண்டும் சோர்வில் சுருங்கிவிட பெருமூச்சுடன் வேறு வழியின்றி அதை உண்டுவிட்டவள் கீழே உடைந்து கிடந்த அலைப்பேசியை ஒரு வித ஏக்கத்துடன் பார்த்திருந்தாள்.

‘இதை உடைக்காமல் இருந்திருந்தால் தன் தந்தையிடம் தன் நிலைமையை கூறி இங்கிருந்து அழைத்து செல்ல கோரியிருக்கலாம்’ என வெகு தாமதமாக தன் தவறை உணர்ந்த பாவையவள் சமுதாயத்திலே மிகவும் கோரமான ஒரு தனிமைச்சிறையில் இருப்பதை இன்னமும் உணரவில்லை.

அவள் உணரக்கூடிய காலமும் வெகு விரைவிலே வந்தது.

அந்த நாள் முழுவதும் தனிமையிலே பொழுதை பொக்கியவள்,அடுத்த நாள் காலையில் தன்னுடைய நிலை மனதை உறுத்த துவங்கியது.

கைதட்டி அழைத்தால் ஒன்றுக்கு இரண்டு பணியாட்கள் அவளின் பணிகளை எடுத்து செய்ய கைகட்டி காத்திருக்க,இங்கோ ஒரு வேளை உணவிற்கே பஞ்சமாகிப்போன மாற்றத்தை எண்ணி மனம் கலங்கியது.

முதலில் அவன் சந்திக்காமல் இருப்பதே நிம்மதி என்றெண்ணி தனிமை பொழுதுகளை தன்னவனின் நினைவுகளுடன் சுகமாய் கடந்து சென்றவளால் அடுத்தடுத்த நாட்கள் தனிமை என்னும் சிறை உயிரோடு கொல்வது போன்ற மாய பிம்பத்தை உருவாக்கியது.

அதன்பிறகே தனிமையென்னும் சிறையில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருப்பதை அறிந்தவளிற்கு அச்சம் உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் பரவத்தொடங்கி பெண்ணவளை பதட்டமடைய செய்தது.

உடனடியாக அவன் உலகிலேயே மிகவும் கொடூரமான தண்டனையை தனக்கு அளித்திருக்கிறான் என்ற உண்மை புலப்பட “ஓ காட்” நடுக்கத்துடன் அதிர்ந்து கூவியவள் வாழ்வில் முதன்முறையாய் பயந்துப்போய் கீழே சிதறிக்கிடந்த தன்னுடைய அலைப்பேசியை எடுத்து சரிச்செய்ய தொடங்கினாள்.

வெகு நேரமாக முயற்சித்தும் அவளால் அந்த அலைப்பேசியின் பழுதை சரிசெய்ய இயலாததால் மிகவும் சோர்ந்துப்போய் தரையில் மடங்கி அமர்ந்தவளின் கண்ணீர் கரைத்தொட்டது.

ஆயினும் தன் நெஞ்சுரம் தளராமல் எழுந்து சென்று வீட்டின் கதவை தட்டி “ஹெல்ப்...ஹெல்ப் யாராவது உதவி செய்யுங்க...என்னை இங்கிருந்து காப்பாத்துங்க” பலமாக கூவி கதவை தட்ட,அவளின் கதறல் ஒலி யாவரின் செவியையும் சென்றடையாததற்கு அடையாளமாய் ஒருவரின் எதிர் குரலும் அவளை அடையவில்லை.

நெடுநேரம் கதவை தட்டி சோர்ந்துப்போனவளிற்கு தான் தப்பிச்செல்லவதற்கு இருக்கும் ஒரு வழியும் அடைப்பட்டு போனதில் களைத்து அவ்விடத்திலே கால் மடக்கி அமர்ந்தவளின் கண்களில் நீர் மடைத்திறந்த வெள்ளமென பொங்கி பெருகியது.

இவளின் செயல்கள் அனைத்தையும் ஒருவன் ஒளித்திரையின் வழியாக பார்த்திருப்பதை பேதையள் அறியவில்லை.

நெடுநேரமாக அழுதழுது தொண்டை வறண்டு களைத்து ஓய்ந்துப்போனவளின் உடையிலிருந்து ஒரு துர்நாற்றம் வீசத்தொடங்கியது.

ஏனெனில் கடந்த மூன்று நாட்களாக தான் அணிந்திருந்த அந்த ஒற்றை உடையையே குளித்துவிட்டு மாற்றி மாற்றி அணிந்துக்கொண்டிருந்தாள் கோமகள் ஆரிய சுபத்ரா.

அந்த நாற்றத்தால் முகர்ந்து நாசியை சுழித்தவளிற்கு தினம் நான்கு உடைகள் அணியும் தன்னுடைய பழைய நிலைமை மனதை சூட,அதையெல்லாம் நினைத்து மீண்டும் கண்ணீரில் கரைந்தவளின் இதழ்களோ “பப்பா..மம்மா ஹெல்ப் மீ” என முனகிக்கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் அழுது களைத்து அவ்விடத்திலே சுருண்டு படுத்து தன்னையுமறியாமல் உறங்கிவிட்டாள்.

அடுத்த நாள் காலை தலையில் வலி உயிர்ப்போக சிரத்தை ஒரு கையால் தாங்கியப்படி எழுந்து அமர்ந்த பேதையவளின் கயல் விழிகள் இரண்டும் வியப்புடன் விரிந்தது.

“ஊப்” என சந்தோஷ பெருமூச்சை வெளியிட்டு உணவு மேசையை நோக்கி விழி விரித்து சென்றவளின் இதழோரம் உமிழ் நீர் வடிந்தது.

மேலும் அதன் அருகே வைக்கப்பட்டிருந்த புது உடையை கண்டவுடன் முகம் பொலிவுடன் பளபளத்தது.

அவளது வாழ்வில் எதற்காகவும் இத்தனை தூரம் ஏங்கியதில்லை.

ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் வரை, அதன் அருமை பெருமைகள் நமக்கு தெரியாது.அதை இழந்து விட்டாலோ அல்லது சில நாட்கள் அப்பொருள் நம் பயன்பாட்டுக்கு கிடைக்காமல் போனாலோ,மனம் படும் பாடு சொல்ல முடியாது என்பதற்கு ஏற்ப கடந்து வந்த மூன்று நாட்களில் அவள் அடைந்த துன்பம் நாவின் ருசிக்காக விசனத்துடன் தவித்தது.

முன்பு மேசை நிறைய உணவு பதார்த்தங்களை பணியாட்கள் அடுக்கி வைத்திருந்த போதிலும் ஏனோ அனைத்தையும் உதாசீனம் செய்து ஒதுக்கி வைத்து வெளியே சென்று உண்பவளிற்கு இது ஒரு புது விதமான துன்பத்தை அளித்திருந்தது.

இப்போது மனம் மேசையில் இருந்த பல வகை உணவுகளை சுவைக்க ஏங்கினாலும் தன்னுடைய தற்போதைய நிலையை எண்ணி புருவம் சுருங்கியது.

அத்தோடு தான் வாசலின் அருகே படுத்திருந்த வேளையில் உணவு எவ்வாறு உள்ளே நுழைந்திருக்க முடியும் என்ற ஒற்றை கேள்விக்கு விடையாக பூட்டியிருந்த ஒற்றை அறையின் கதவு அமைந்தது.

அடுத்த வினாடியே நேற்று சுயப்பட்சாதபத்தில் கலங்கிய கண்கள் இரண்டும் இன்று இரத்தம் நிறம் பூசிய கனலை கொப்பளித்தது.

அப்படியானால் கடந்து வந்த நாட்களில் அவன் அறைக்குள் இருந்துக்கொண்டே தன்னை வேதனையில் தவிக்கவிட்டு ரசித்திருக்கிறான் என்று தெரிந்த நொடியில் பெரும் ஆவேசத்தோடு கூந்தல் மூடி சிலுப்ப சீறும் பெண் வேங்கையாய் மாறி நடந்து சென்று அறையின் கதவை படபடவென தட்டினாள்.

"டேய் வெளிய வாடா?நீ வெளிய வரலை...நான் கதவை உடைச்சுக்கிட்டு உள்ளே வந்திடுவேன்" ஆத்திரத்தில் புசுபுசுவென்று மூச்சிறைக்க சீறியவளை அறைக்குள் இருந்தவன் துளியும் மதிப்பதாக தெரியவில்லை‌.

அவளின் கோபத்திற்கு எந்த எதிரொளிப்புமின்றி இருப்பதில் முகம் கறுக்க பெருத்த அவமானமடைந்த சுபத்ராவின் இரத்தழுத்தம் எகிற "இந்தாடா டேய்...கதவை திறக்கப்போறீயா இல்லையா?" என உறுமியவளின் குரல் கீறிச்சிட்டது.

"யூ பிளடி இடியட்...நான்சென்ஸ்...சேடிஸ்ட்…" என வரம்புகள் மீறி வார்த்தைகளை உதிர்த்தப்போதும் கதவு திறக்கப்படவில்லை என்றதும் 'உண்மையில் அவன் உள்ளிருக்கிறானா இல்லையா?' என்ற குழப்பமே வந்துவிட்டது.

தன் தாவங்கட்டையை யோசனையுடன் தடவிக்கொண்டே இதழை குவித்தவள் 'இல்லை...நிச்சயம் அவன் உள்ள தான் இருக்கணும்...பின்ன சாப்பாடு டிரஸ்ஸெல்லாம் எப்படி வந்திருக்கும்?' என சரியான பாதையில் சிந்தித்தவள் இப்போது வேண்டுமென்றே தகாத வார்த்தைகளை உபயோகித்து ஆடவனை திட்டத்தொடங்கினாள்.

இறுதியாக "யூ பிளடி பி.." என்ற வார்த்தையை முடிப்பதற்கு முன்பே இதுவரை பூட்டியிருந்த அறையின் கதவு படாரென திறக்கப்பட்டது.

உள்ளிருந்து வந்தவனின் தோற்றத்தை கண்டவளின் இதழ்கள் அடுத்த வார்த்தையை உதிர்க்காமல் கப்பென்று இறுக்கி மூடிக்கொண்டது.

ஆனால் இதுவரை அவளின் பேசிய அமுத மொழிகளுக்கு எந்த எதிரொளிப்புமின்றி சாந்தமான முகத்துடன் வந்து நின்றவனை கண்டவளால் அடுத்த வார்த்தை பேசமுடியவில்லை.

அவனோ மண்டபத்திலிருந்ததற்கு நேர் எதிர்விதமாக பார்த்தவுடன் மற்றவரை சுண்டியிழுக்கும் அழுத்தமான சிவந்த இதழுடன் கண்டிப்பான பார்வையுடன் கண்களில் அணிந்த அடர் நீல நிற சட்டம் வைத்த கண்ணாடியோடு வெண்ணிற சட்டை மற்றும் கபில நிற கால்சராய் அணிந்து முதல் பார்வையிலே சொக்க வைக்கும் அழகுடன் கூடிய மரியாதை பங்குடன் நின்றிருந்தவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவளிற்கு 'இவனா வலுக்கட்டாயமாக தன் கழுத்தில் தாலி கட்டியது?இவனா குரூரமாக தன்னை அடைத்து வைத்து சித்திரவதை செய்தது?' என்ற சந்தேகமும் தோன்றியது.

அவனோ இதுவரை அவள் பேசிய வார்த்தைகளுக்கு எந்த எதிரொளிப்புமின்றி நிர்மூலமான முகத்துடன் 'எதுவும் வேணுமா?' என ஒற்றை புருவத்தை ஏளனமாய் உயர்த்தி நிலப்படியில் சாய்ந்து நின்று கைகளை கட்டி அவளை தீர்க்கமாய் பார்த்திருந்தான்.

அவளோ இவனது மரியாதையான தோற்றத்தை கண்டவள் உள்ளுக்குள் ஆராய்ச்சியை நிகழ்த்திக்கொண்டே இமைகள் சுருக்கி அவனை ஆழ்ந்து பார்த்திருக்க,அவனோ அதற்கு மேலும் பொறுமையில்லாதவனாய் 'அவ்வளவு தானா?' என்று பார்வையால் வினவி,

"ப்ச்" என இதழை பிதுக்கி சலித்தப்படி தன்னுடைய கைக்கடிகாரத்தில் மணி பார்த்தவன் மீண்டும் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றப்போனான்.

அதன்பிறகே இதுவரை அவன் செய்த அட்டூழியங்கள் அனைத்தும் மின்னலாய் அடி மனதில் தோன்றி மறைந்த அடுத்த வினாடியே மறைந்திருந்த ஆக்ரோஷம் திரையை விலக்கிக்கொண்டு பொங்கி வர "டேய் இருடா" என கத்தியப்படி கதவை மூடாதப்படி தடுத்து நிறுத்தியவள் "உன் மனசில் என்ன தான்டா நினைச்சிட்டு இருக்கே?உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தால் என் கழுத்தில் தாலி கட்டியிருப்பே... அதுமட்டுமில்லாமல் இரண்டு நாளாக சோறு கூட போடாமல் என்னை கைதி மாதிரி உள்ளே அடைச்சு வைச்சிருந்து வீட்டுக்குள்ளே நான் படற வேதனையெல்லாம் பார்த்து பார்த்து ரசிச்சிட்டு இருந்திருக்கே...இதையெல்லாம் நான் சும்மா விட்டருவனா சைக்கோ வெளிய வாடா" படபட பட்டாசாய் பொரிந்து தள்ளி கதவை தள்ளிக்கொண்டு அவன் மீது மோதி ஆவேசத்தோடு இரைந்தவளால் அவனின் முகத்தை நிமிர்ந்து தான் பார்க்க முடிந்தது‌.

ஆறடி உயரத்தில் இருக்கும் உயர்ந்த ஆண்மகனை ஐந்தடி ரோஜாவான பூமகளால் வெகு நேரம் நிமிர்ந்து பார்த்திருக்க முடியாமல் கழுத்து வலிக்க கழுத்தை ஒற்றை கையால் நீவியப்படி "ப்ச் நெடு மரம் மாதிரி இவ்ளோ உயரமா வளர்ந்திருக்கியே...நான் பேசிட்டு இருக்கும் போது கதவை சாத்தக்கூடாதுன்னு பேசிக் மேனர்ஸ் கூட தெரியாதா காட்டான்" என பல்லை கடித்து வார்த்தைகளை துப்ப,

அவனோ 'தள்ளி நில்லு' என்பது போல் விழியால் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியை சுட்டிக்காட்டிட,அதன்பிறகே ஆத்திரத்தில் புத்தி மலங்கிப்போய் அவசரத்தோடு அவனை ஒட்டி நின்று பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மை புலப்பட "ச்சை" என முகத்தை சுழித்து ஓரடி தள்ளி நின்றாள்.

அசராத குரலில் "இப்போ உனக்கு என்ன பிரச்சனை?" அவள் கேட்க நினைத்த கேள்வியை அவன் கேட்டுவிட,அதில் அவளது அகங்காரம் சீண்டப்பட்டு எரிமலையாய் சீற்றம் வெடித்து சிதறியது.

"டேய்…" என ஆங்காரமாய் கத்தி கூவியவள் அவன் கழுத்தை நெறிப்பது போல் கையை கொண்டு செல்ல உயரம் அதற்கு தடையாய் நிற்க கரத்தை பின்னுக்கு இழுத்து "இன்னொரு வார்த்தை பேசினே உன்னை கொன்னுடுவேன் ராஸ்கல்" என வேங்கையாய் சீற,அவனோ இதழில் பூத்த இளக்கார முறுவலுடன் அசையாமல் அவ்விடத்திலே நிற்க ,அவனோ இங்கு எதுவும் நடவாதது போல் அலட்சியமாய் தோளை குலுக்கி ‘வெளிய போ’ என்னும் விதமாக வாசல் புறம் செய்கை காட்டினான்.

அவனது செயலில் உயர்ந்த பெருஞ்சினத்தை ‘கம்டவுன்’ என தனக்குள்ளே கூறி ஒரு பெருமூச்சை வெளிவிட்டு “காட்டான் நீ வெளிய போக சொல்லைனாலும் நான் போக தான் போறேன்...அதுக்கு முதல்ல நீ வாசல் கதவை திறந்து விடு...நான் எங்க பப்பாகிட்ட போகணும்” என்றாள் நிதானம் தவறாமல்.

அவனோ ஒற்றை வரியில் “முடியாது” என நக்கலாக கூறிவிட்டு ‘உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்’ என திமிராக பார்த்துவிட்டு மீண்டும் கதவை சாற்ற முயற்சிக்க,

“எது முடியாதா?ஏய்!நானும் பொறுமையா இருக்கணும் அமைதியா இருந்திட்டே இருக்கேன்...நீ என் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறே...அப்புறம் விளைவு விபரீதமா இருக்கும்” என பெண்ணவள் எச்சரித்துக்கொண்டிருக்கையிலே அவன் கதவை முகத்திலறைந்தாற் போன்று சாற்றிவிட்டு சென்றுவிட்டான்.

அதில் தன்னை காலுக்கடியில் போட்டு ஒருவன் மிதித்தது போல் இழிவுப்படுத்திய அவனை எரித்து பொசுக்கமுடியாத இயலாமையில் மூடிய கதவை வெறித்து பார்த்தவள் காலால் ஓங்கி ஒரு உதைவிட்டு தகாத வார்த்தைகளை கொண்டு திட்ட,உள்ளிருந்து “இங்க நீ கத்திறதால் எதுவும் நடக்காது...அமைதியா போய் உன் ரூமில் தூங்கு” என அழுத்தமான அவளின் செவியை அடைய ‘பாவி பையன்...நீ நல்லாவே இருக்கமாட்டேடா’ என வசைப்பாடியப்படி வேறு வழியின்றி அங்கிருந்து எழுந்து சென்றவள் பிடிவாதமாக குளிக்க மறுக்க நினைத்தப்போதும் உடையிலிருந்து வெளிவந்த துர்நாற்றம் அவளது வீம்பை விட்டுக்கொடுக்க செய்தது.

அதனால் குளித்துவிட்டு புத்தாடை அணிந்த பாவையவளின் வயிறு ‘நானும் இருக்கிறேன்’ என நினைவுப்படுத்த,தன் சுயமரியாதையை விடுத்து முகத்தை சுழித்தப்படி உணவை உண்டுவிட்டாள்.

அதன்பிறகே,மேசையில் பாத்திரத்திற்கு அடியில் படபடத்த காகிதத்தை பார்த்த பெண்ணவள் ‘இது என்னது?’ என புருவம் சுருக்கி யோசனையுடனே அதனை கையில் எடுத்து பார்த்தவளின் முகம் பேயறைந்தாற் போன்று மாறியது.

ஏனெனில் ஒரு விவாகரத்துக்கான பத்திரம் அது!!
 
Status
Not open for further replies.
Top