All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

லயாவின் "ஏங்கிடும் இதயம் உன்நினைவில்" - கதைத் திரி

Status
Not open for further replies.

laya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏங்க அவள்ட ஒரு வார்த்தை சொல்லி சம்மதம் கேட்காம இப்படி பாக்கிறது சரியில்லைங்க. வேணாம் மீனா இன்னும் அந்த பயல நினைச்சு வேணாம் எண்டா கஷ்டம். எல்லாம் பார்த்து சரி எண்டதும் சொல்லலாம். என்னவோங்க நல்லது நடந்தா சரி. ட்ரைன்னிங் போகப்போறாள். அங்கேயாவது எல்லாத்தையும்மறந்துட்டு வேலைய பாக்கட்டும்.அது சரி தான். நாட்கள் அது போல செல்ல...........
சுதி நீ போற இடம் எப்படி இருந்தாலும் பொறுமையா பார்த்து வேலைய பார்,எல்லாரையும் நம்பாத, முக்கியமா இப்படி அமைதியா இல்லாம எல்லார்கூடவும் கதைச்சு கலகலப்பா இருடி. ஹ்ம் என்ன பற்றி கவலைப்படாத மிட்டு.நான் பார்த்துப்பேன்.என்ன நினைச்சு கவலைப்படாம வேலையை பார்.ஓகே டி எதுனாலும் கால் பண்ணு. நாளைக்கு ஏர்லியா போ முதல் நாள்ளா.
நாளை முதல் நாள் என்பது வேலைக்கு மட்டுமில்லை பெண்ணே
உன்னவன் அருகில் நீ செல்ல போகும் முதல் நாளும் அதுவே
உன்னை மாற்றுபவனை நீ மாற்ற முடியாமல் இனி நடக்க போவது.........
 

laya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Guys enaku this year final studies poikiddirukku.
Final viva presentation training, project report ready panra endu konsame konjam busy.
Athala than inga olunga vara mudiyala plz manichchu.
Innum oru 3 weeksla ellam mudinsirumnu ninaikuran
Athuvarai ennai mannisu kollunga plzzzz.
Ellarume enna vida anupavasalikala irupeenga. Naan ithula ipa than thavalra kulanthaipola so plz support pannunga drs.
 

laya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 2
அம்மா எல்லாரும் பதுளை சுற்றுலா போறாங்க நானும் போகவா? யார் யார் போறாங்க? எங்க கிளாஸ் கேர்ள்ஸ் எல்லாருமே. எப்ப போய் எப்ப வருவீங்க? வெள்ளி இரவு போய் திங்கள் விடிய வாறோம். ஏண்டி உனக்கு திங்கள் தானே வேலை தொடங்குது. நான் வேளைக்கு வந்துடுவேன்மா வந்து போகலாம். என்னவோ அப்பாட்ட கேட்டு சொல்றன். சரியம்மா நான் போய் படிக்குறேன். என்னங்க சுதி ஏதோ ரூர் போக போறாங்களாம் தானும் போக கேட்குறா என்ன செய்றது. போய் வரட்டும் ரொம்பவும் அடக்க வேண்டாம். சரிங்க அப்ப சரி என்று சொல்றேன். சுதி போய்ட்டு வா. வெள்ளி இரவு எல்லறோரும் போக தயார். அம்மாடி மிட்டு பார்த்துக்கோ நீ போற படியால் தான் அனுப்புறேன். சரியம்மா நீங்க கவலைப்படாதீங்க நான் பாத்துக்கிறேன். ஏண்டி நீ என்ன குழந்தையா உங்க அம்மா இப்படி பண்றாங்க. விடுங்கடி அவங்க அப்படி தான். இரு நாட்களும் நீர்வீழ்ச்சி, தொங்குபாலம், கடல் என ரம்மியமாக கழிந்தது. திங்கள் காலை வீடு வந்து சேர்த்தாள்.
அவசர அவசரமாக தயார் ஆகி தான் வேலை சேர வேண்டிய கட்டிடம் முன்பு போய் பயத்துடன் நிற்கையில் அதன் காவலாளி ஏன்மா யாரு நீ இங்க ஏன் நிற்கிற என்று கேட்டார். தயங்கி தயங்கி வேலை சேரும் விடயத்தை கூற உள்ளே அழைத்து சென்று மேலதிகாரியிடம் விபரம் சொல்லபட்டது.
 

laya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுதி தான் இடத்தில் போயிருக்கும் போது யாரும் வந்திருக்கவில்லை. அவள் பதற்றத்துடன் இருந்தாள். சற்று நேரத்தில் கதவை திறந்து கொண்டு ஒரு இளம்பெண் வந்தாள். சுதியிடம் தன்னை ஹேமா என அறிமுகப்படுத்தி அவளை வரவேற்றாள். நான்கு பேர் வேலை செய்ய கூடிய வகையில் இருக்கைகள் இருந்தன. அதில் ஓரிடத்தை சுதிக்கென கொடுத்தனர். சற்று பின் மற்ற இருவரும் வந்து தங்களை அறிமுகம் செய்தனர். சுதிக்கு மகிழ்வாக இருந்தது. எல்லாரும் பெண்கள் என்றமையால். தனது அன்றைய பணியை தொடங்கினாள். மதிய உணவு வேளையின் போது சாரு என்னும் பெண் தன்னுடன் அவளை அழைத்து சென்றாள். அங்கு இன்னும் சில ஆண் பணியாளர்கள் இருந்தனர். அனைவருக்கும் சுதியை அறிமுகம் செய்து வைத்தாள். பின் அனைவரும் வெளியில் சாப்பிட சென்றனர். சாருவும் சுதியும் மட்டும் அதிலேயே சாப்பிட அமர்ந்தனர். அப்போது சாரு சுதி நீங்க சாப்பிடுங்க என்னுடன் இன்னுமொரு ஆள் சாப்பிட வாராது. இன்னும் காணவில்லை என கூறிக்கொண்டு இருக்கையில் ஒரு ஆண் வந்து சாரு அருகே அமர்ந்தான். அவனை கண்ணன் என சாரு அறிமுகம் செய்து வைத்தாள். அவனும் சுதியை யார் என்று விசாரித்து விட்டு ஒரு சிறு சிரிப்புடன் சாருவுடன் இணைந்து சாப்பிட தொடங்கினான்.
 

laya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாலைவேளை வரை எந்த வித தடங்கலும் அன்றி வேலை செய்தாள். வந்ததும் வீட்டில் வேலை இடம் பற்றி கேட்க பொதுவாக பதில் சொல்லி விட்டு இரவு உணவு முடித்து மிட்டுவுடன் போனில் அங்கு நடந்தவை பற்றி கதைத்து விட்டு தூங்கினாள். மறுநாள் வேலை இடம் சென்றதும் அவனை கண்டாள். கண்ணன் இவளை கண்டதும் வணக்கம் மிஸ் என்று காலை வணக்கம் கூற இவள் பயந்த வண்ணமே பதில் வணக்கம் கூறினாள்.அங்கு எல்லோரையும் பார்த்தாகி விட்டது.இதுவரை அவள் காணாமல் போனது கிரிஷை மட்டுமே.இருப்பினும் அவனை பற்றியும் அவனது சிதைந்து போன காதல் பற்றியும் மற்றவர்கள் கூற கேட்டிருக்கிறாள். அவள் அவனுக்காக கவலையும் பட்டாள்.காரணம் அவனது காதலி இன்னொருவனின் மனைவியாய் அதே இடத்தில் தான் பணி புரிகிறாள் என்றும்.அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்தமையால் விடுப்பில் உள்ளதாகவும் அந்த இடத்தில் தான் தன்னை தற்போது வேலைக்கு அமர்த்தி உள்ளனர் என்றும் சாரு கூறி இருந்தாள்.விதி காதலி வேலை செய்த இடத்தில் மட்டுமா பதிலாய் இவளை சேர்த்தது அல்லது அவன் இதயத்திலுமா என்பதை காலம் தான் சொல்லும். அவனை பார்க்காமலே இவள் அன்பு வைத்தாள்.வழமை போல மதிய உணவு வேளையில் சாரு கண்ணனுடன் சாப்பிட அமர்ந்தாள்.கண்ணா நான் இன்றைக்கு அசைவ சாப்பாடு தான் கொண்டு வந்தேன்,நீ கோவில் திருவிழாக்காக சாப்பிட மாட்டியே என்ன செய்ய?,பரவாயில்லை அக்கா நான் வெளிய போய் சாப்பிடுறேன் என்று புறப்பட நம்ம சுதியோ அண்ணா நான் சைவம் தான் என் சாப்பாடு சாப்பிடுங்க என அழைக்க கண்ணன் மறுத்தான்.சாரு கண்ணனிடம் பரவால்லடா சாப்பிடு என கூற மறுக்க முடியாம சாப்பிட அமர்ந்தான்.பின்பு வழமை போல மற்றவரும் வந்து சேர அரட்டையுடன் சென்றது நேரம். அதன் பின் மேலதிகாரி சுதியை அழைத்து கிரிஷை வர சொல்லுங்க என்று கூற இவளோ அவனை தெரியாமல் தடுமாறினாள். அருகில் இருந்தவரிடம் கேட்க அவரோ ஆய்வுகூடத்திற்கு அலைபேசியில் அழைத்து கூற சற்று நேரத்தில் வருவதாக சொன்னான். சுதிக்கோ பெரும் ஆவல் தான் ஒருவழியாக கிரிஷை பார்க்க போறம் என்று. கதவு திறந்து உள்ளே வந்தவனை கண்டு புருவம் சுருகினாள். அருகே இருந்த சாருவிடம் அக்கா கிரிஷை கேட்டால் ஏன் கண்ணன் வாரார் என்று. சாருவோ க்ரிஷ தான் நாங்க கண்ணன்னு கூப்பிடுவோம் என்று கூறி விட்டு தன் வேலையை பார்த்தார். ஓ நம்ம கண்ணன் அண்ணாவும் க்ரிஷும் ஒரே ஆளா. என்று வியந்து விட்டு தன் வேலையை பார்த்தாள். கிரிஷ் மேல் அவள் அறியாது பாசம் வைத்தாள். அவனை யார் குறை சொன்னாலும் அவன் சார்பாகபே இவள் பேசினாள். இதை இவளும் அறியவில்லை. அவனும் புரியவில்லை. நாட்கள் அது போல சென்றது.....
 

laya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 04

வார நாட்களில் வேலைக்கும் வார இறுதி நாட்களில் தன் கல்லூரிக்கும் சென்று வந்து கொண்டிருந்தாள். இதற்கிடையில் க்ரிஷுக்கும் சுதிக்கும் இடையில் நல்ல நட்பு உருவாகியிருந்தது. அதற்கு காரணம் சாரு தான். சாப்பிட இருக்கையில் கிரிஷை காணாது போக சுதி என் போன் ஐ உள்ளே வைத்து விட்டு வந்துவிட்டேன் உன் போன்ல இருந்து கூப்பிடுறியா, அக்கா எனக்கு அவரோட நம்பர் தெரியாதே, ஓ நான் சொல்றேன் நீ கூப்பிடு. சரி அக்கா சொல்லுங்க. தனது போன்ல அவனை அழைக்க அவனும் வந்து சேர்ந்தான். இப்படி தான் உருவாகியது அவர்கள் நட்பு. ஒரு நாள் இரவு அவளுக்கு கால் பண்ணினான். அவள் எடுக்கவில்லை. பின்பு மெசேஜில் ஹலோ மிஸ் உங்களிடம் இன்டர்நெட் கார்ட் இருந்தா தாரிங்களா நாளை அதுக்குரிய காசு தாரேன் அவசரம் என்று அனுப்பினான். அவளும் தன்னிடமிருந்த கார்ட் ஐ அனுப்பினாள். அடுத்த நாள் பணமாக தர இவள் வேண்டாம் பரவாயில்லை என்று கூற இவனோ அவளின் எண்ணுக்கு ரீசார்ஜ் பண்ணி விட்டான். இப்படியே சென்றது இவர்களின் உறவு. இது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமலே போனது. மிட்டு வார திருவிழாக்கு கோவில் போக வாறியா, இல்லைடி என்னால வரமுடியும்னு தோணேல. ஓ அப்படியா சரி நான் அப்ப அப்பாகூட போறேன். சரிடி பார்த்து போய்டுவா. சுதி அப்பாவை போய் சாப்பிட வரச்சொல்லு. சரியம்மா அப்பா உங்கள சாப்பிட வரட்டாம். வரம்மா நீ போய் சாப்பிடு இந்த வேலைய முடிச்சுட்டு வரேன். சுதி சாப்பிட்டு தன் ரூம்க்கு சென்றதும் தான் அவர் தன் வேலையை முடித்து வந்தார். என்னங்க தரகர் ஏதோ யாதகம் இருக்கு என்று சொன்னாரே அது நம்ம பொண்ணுக்கு பொருந்தியச்சா. ஆமா பொருத்தம் இருக்கு இனி அவங்க வீட்டில கதைச்சு சொல்றேன் என்று சொன்னார் பார்ப்போம் இது நல்ல இடமா இருந்தா கட்டி கொடுத்திடலாம் எல்லாம் சரி ஆகுறவரை அவள்ட சொல்லிடாத. பழைய பிரச்சனை போல ஏதும் வந்தாலும். சரிங்க நான் ஏன் சொல்ல போறேன் எல்லாம் கடவுள் கையில. இவர்கள் பேசியது அத்தனையும் தண்ணீர் குடிக்க வந்தவள் காதில் விழுந்தது. கவலையுடன் ரூம்க்கு சென்றாள். ஏன்மா எல்லாம் சரி என்றதும் சொல்லலாம் என்றால் எனக்கு அது பிடிக்குமா இல்லையா என்று கேட்க மாட்டிங்களா அப்ப எனக்கு பிடிக்காட்டியும் நான் அந்த மாப்பிளையை தான் கல்யாணம் பண்ணனுமா என மனதால் தன் அன்னையுடன் உரையாடினாள். என்னவோ அவளுக்கு இப்போது திருமணம் பற்றி எண்ணம் ஏதும் இல்லை. முதலில் படிப்பை முடித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்பதே அவளின் ஆசை. அந்த மாப்பிள்ளை வீட்டிலும் எல்லாம் சரி என்று ஆகி மாப்பிள்ளை இவளை ரகசியமாக அவள் கல்லூரியில் சென்று பார்த்தார். இவள் சற்று குள்ளமாகவும் பூசினாற்போலவும் இருப்பதால் தனக்கு பிடிக்கவில்லை என்று விட்டார். அதை அப்பா அம்மாவிடம் சொல்லும் போது இவள் அடைந்த மகிழ்விற்கு அளவே இல்லை. ஒருவேளை அந்த மாப்பிள்ளை சரி என்று கூறி திருமணம் நடந்திருந்தால் சந்தோசமாக வாழ்வு கிடைத்திருக்குமா என்னவோ...
 
Status
Not open for further replies.
Top