All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

லவ் அப்கிரேடட் வெர்ஷன் 2.8

Status
Not open for further replies.

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே,

பல விதமான காதல் கதைய படிச்சி இருப்பிங்க அதில் புதிய முயற்ச்சியா
(எனக்கு புதுசு 😂😂😂)
பழமையான காதல் புதுமையான விதத்தில் எழுத போறேன்.... 😉😉😉

அப்படி என்ன புதுமையான காதல்னு கேட்குறிங்களா(?)
காதல்னாலே புதுமை தானே😛😛😛

கதையோட இன்ட்ரோ இதோ, படிச்சிட்டு உங்க பொன்னான கமென்ட்ஸ் சொல்லுங்க க்யூடீஸ் அன்ட் பியூடீஸ்,😊😊😊

பிரபஞ்சத்தில் அழியாத செல்வங்களுள் அன்பும் ஒன்று… அன்பின் ஒருவித பரிமாணமே காதல்…

காதல் ஏன் எப்படி எதனால் எதற்காக எப்போது யார்மீது போன்ற பல கேள்வியினை உள் அடக்கியது…
எதையும் அரிதில் புரிய வைக்க இயலாத கண்ணுக்குள் புலப்படாத ஒன்று , காதல்… காதலினை உணர மட்டுமே முடியும்…

உள்ளம் தொட்டு உயிர் கலக்கும் காதல் பரந்த உலகில் பரவி கிடக்கிறது காற்றினை போல்….

இத்தகு காதலைப் பற்றி ஓர் கற்பனை கதை எனக்கு தெரிந்த வகையில் கொடுக்க இருக்கிறேன்…

கண்டதும் காதல், காணாத காதல் ,கண்டம் விட்டு கண்டம் தாண்டிய காதல் ,காத்திருந்த காதல் இவ்வாறு காதல் பல வகை அதில் ஒரு விதமான காதல் கதை கலமாக ….

மில்கிவேயில் மிளிர்ந்த காதல்….

இரு வேறு பேரடையில் (galaxy) இருக்கும் இரு இதயங்களினை இணைத்த காதல்…

அண்ட்ரோமெடாவின் அன்றலர்ந்த அ(ம)லர் - அனிக்ஷனா அனோபியா (Anikshana Anofhia) சுருக்கமாக அனி

மில்கிவேயின் மயக்கும் மின்னல் மன்னன் - ப்ரஹஜித்ஷா ப்ரனேஷ் (Prahajithsha Pranesh)-ஜித்து

இவர்கள் இருவரும் வெவ்வேறு பேரடையின் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள்…

இவர்களின் மோதல் + காதலிற்கு எதிராய் எதிரியாய்
அண்ட்ரோமெடாவின் இளவரசன் சால்மர் அத்ஷனாஸ் … மில்கிவேயினை அழித்து கைப்பற்ற காத்திருப்பவன் … அனிக்ஷனாவை அடைய துடிப்பவன்….

சில நிகழ்வுகளால் ஒன்றாக சந்திக்கும் இவர்கள் காதல் வயப்பட்டது எவ்வாறு (?)அதனால் இவர்கள் சந்திக்கும் இன்னல்கள் இக்கட்டுக்கள்… அவை அனைத்தும் சமாளித்து அதற்கான தீர்வு கண்டு அவர்கள் காதலில் வெற்றி அடைந்தார்களா இல்லையா என்பதே கதையின் கரு….

பேசும் மொழி ட்ரினுட்டா , மின்ஷோயீஸ் - இது என்ன மொழினு கேட்க கூடாது ஏன்னா எனக்கே தெரியாது, ஆனா கண்டுபிடிச்சது நான் தான் 😛😛😛 இப்படி ஒரு மொழியும் இல்ல தங்கங்களா மை சின்ன கற்பனை…

கொஞ்சம் காமெடி, கொஞ்சும் காதல், அதிரடி சரவெடியாக சின்ன சின்ன சண்டைகள், அதிர வைக்கும் நிகழ்வுகள் , கொஞ்சம் அறிவியில் நிறைய கற்பனை இதெல்லாம் கலந்த கலவை….

நடுவுல நடுவுல சிலபல புரியாத பேர் ஊர் எல்லாம் வரும் எனக்கே புரியாத பேர் தான் அது புரியாத புதிர் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க செல்லம்ஸ்😉😉😉

அண்ட்ரோகிரேட்ஷியன்ஸ் - அண்ட்ரோமெடாவில் இருக்கும் இன வாசிகள்….

நினோட்ரினேட்ஷியன்ஸ் - மில்கிவேயில் இருக்கும் இன வாசிகளுள் ஓர் இனம்…

(இதுவும் கற்பனையே கண்டுகாதிங்க😂😂😂)

பால்வெளியினை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் காதினை கிழித்துக் கொண்டு கேட்டது அந்த சப்தம் , தடைசெய்யபட்ட அவ்விடத்திற்கு குறிப்பிட்ட சிலரே வர இயலும் அங்கு அவனை தவிர அவன் நன்பர்கள் சிலர் மட்டுமேஅடிக்கடி வருவர் யாராது இப்போது வந்தது என அவ்வறையிலிருந்து புனைமெய்மையில் (augmented reality) தெரிந்த பிம்பத்தை கண் கொட்டாமல் பார்த்திருந்தான் ப்ரஹஜித்ஷா ப்ரனேஷ் ….

பறக்கும் தட்டிலிருந்து பாந்தமாய் தரையிரங்கினால் தங்கத் தாரகை…
அனிக்ஷனா அனோபியா….

யார்டா இவ இப்படி இருக்கா (?) நம்ம இனத்த சேர்ந்தவ மாதிரி இல்லயே…
ஆனா இவ்வளவு அழகா இல்ல இல்ல பேரழகியா இருக்கா… இங்க ஏன் வந்தா… இவளோட ப்ரிக்குவன்சில ப்ரீஸ் ஆகிடாதடா ஸ்டெடி

இவ தான் வேவ்லென்ந்த் வச்சு வேவு பாத்தவளோ(?)

தரையிரங்கியவள் மென்னகை புரிந்தபடியே கம்பீர நடையுடன் துளைக்கும் பார்வையில் சுற்றுப்புரத்தை நோட்டமிட்டுக் கொண்டே வந்தாள்…

அவள் சிரிப்பில் ஒரு க்ஷணம் நக்கல் தெரித்ததோ… இனி தான்டா உனக்கு இருக்கு நான் ஆடுற ஆட்டத்த பார்த்து நீ தெரிச்சு ஓடுவ ஓட விடுவேன் மனதினில் கறுவிக்கொண்டால்….

பால்வீதியின் பாதையிலே
தேவதையாய் வந்தவளே…
பேரண்டத்தின் பேரழகே…
கொய்யும் கண்களால் மனதை கொய்தவளே
காதல் அம்பை எய்தவளே
மீயொளிர் வெடிப்பினை எனக்குள் நிகழ்த்தியவளே
கரம் பற்ற தவமிருக்கிறேன் என் வாழ்வின்
வரமாக வருவாயா வான் மண்டலத்தின் வனிதையே….

அழகியின் ஆட்டம் விரைவில்…
 
Status
Not open for further replies.
Top