All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

லெக்ஷ்மியின் "சுமப்பேன் உனை தாயாக" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Laxmi das

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே...

நான் லஷ்மி. இந்த லாக்டவுன் ஒவ்வொருக்கும் ஒரு புதிய விசயத்தை கற்றுக் கொடுத்துச்சு. அதே மாதிரி தான் எனக்கு கதை படிக்க கற்றுக் கொடுத்தது. பல கதைகள் படிச்சி நானும் எழுதனும்னு ஒரு குட்டி ஆசை.

இங்க எல்லா எழுத்தாளர்கள் ரொம்ப சிறப்பா எழுதறாங்க. எனக்கு அவங்க அளவுக்கு எல்லாம் எழுத தெரியாது. முதல் முறையாக எழுத போறேன் பல தவறுகள் இருக்கலாம். மறக்காமல் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க. அது என் தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பா இருக்கும். உங்கள் ஆதரவை எதிர் பார்த்து,

லஷ்மி...

சீக்கிரமா கதையோடு உங்களை சந்திக்கிறேன் ❤❤
 
Last edited:

Laxmi das

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23615
பூலோக சொர்க்கம், கடவுளின் நாடு, நறுமணத்தை கொண்ட பூமி என்று பல சிறப்புகள் கொண்ட அழகிய நாடு தான் கேரளா. வாழும் போதே சொர்க்கத்தில் இருக்கும் ஒரு சூழல் கொண்ட கேரளாவின், கிளிமானூர் இன்னும் ஊரில் தான் கதையின் தொடக்கம்.

உலகில் எங்கு சென்றாலும் இந்தியனை காணலாம் அதே போல் இந்தியாவில் எங்கு சென்றாலும் தமிழனை காணலாம். அதே போல் தான் பத்து வருடம் முன் சங்கரன் குடும்பம் வேலை காரணமாக இங்கே கிளிமானூரில் குடி வந்தனர்.

சங்கரன், ஆரம்பத்தில் சாதாரண கிளெர்காக துடங்கிய அவரது வாழ்க்கை தற்பொழுது கிளிமானூரில் இருக்கும் முக்கிய வங்கியின் மேலாளராக தன்னோட உழைப்பால் உயர்ந்து இருக்கிறார். அவரது மனைவி செல்வி. குடும்ப தலைவி சற்று பிடிவாதம் அதிகம்.

இவர்களுக்கு இரு மகள்கள். மூத்தவள் ப்ரியங்கா, இருபத்தி ஆறு வயதாகும் அழகிய அம்மாவின் இளவரசி. கடை குட்டி கல்பனா, பத்தொன்பது வயதாகும் பருவ பெண்.

இது தான் பா நம்முடைய நாயகியின் குடும்பம். அவர்களை பற்றி கதையின் போக்கில் காணலாம்.

கன்னியாகுமாரி, முக்கடல் சங்கமம் ஆகும் இந்தியாவின் கடை கோடி மாவட்டம். குளச்சல் என்னும் கடற்கரை நகரை தனது பூர்விகமாக கொண்டு இயங்குகிற மித்ரா கார்மெண்ட்ஸ் என்ற இம்போர்ட் எஸ்போட் கம்பெனியின் சொந்தக்காரன் தான் நமது ஹீரோ.

விஸ்வமித்ரன் வான்மதி தம்பதியரின் தவப்புதல்வர்கள் தான் கார்த்திக், ராகவ்.

கார்த்திக், இருபத்தி எட்டு வயதாகும் இளம் சிங்கம். தந்தையின் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் மூன்று வருடன் முன் முழு பொறுப்பை ஏற்று கொண்டு கன்னியாகுமரியில் மட்டுமே இருந்த அவர்களது நிறுவனத்தை இன்று இம்போர்ட் எஸ்போட் கம்பெனியாக உலகின் எல்லா இடத்திலும் கம்பனியின் பிரென்ச் வைத்து இருக்கான்.

இளையவன் ராகவ் இருபத்தி ஆறு வயது. அண்ணன் இருக்க பயமேன் என்று ஊரை ஜாலியாக சுற்றி கொண்டு இருக்கான்.

அடுத்து, சங்கமித்ரா விஸ்வமித்ரனின் ஒரே தங்கை.கணவன் சரில்லாமல் ஒரு நாள் குடித்து விட்டு வண்டி ஒட்டி கொண்டு வர அவனை எமன் வலை விரித்து அவனின் உயிரை எடுத்து கொண்டார். அவர் சாகும் போது சங்கமித்ரா ஏழு மாதம் கருவை சுமந்து கொண்டு இருந்தாள். அன்று முதல் இன்று வரை அவளை பார்த்து கொள்வது விஷ்வமித்ரன் தான். சங்கமித்ராவிற்கு ஒரே மகள் ரோஷினி, இருபத்தி மூன்று வயதாகும் அழகு பேதை.

இது தான் நம்முடைய நாயகனின் குடும்பம். இதில் யாரு யாருக்கு ஜோடி எல்லாம் கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இரண்டு குடும்பத்தில் நடக்க போகும் காதல் கல்யாணம் தேடல் ஊடல் அதை பற்றி தான் கதை. ரொம்ப சாதாரணமானா கதை தான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமால் ஒருவர் மேல் வருவது தான் உண்மையான காதல். பிரதிபலன் எதிர்பார்த்து ஒருவர் மேல் அன்பு கொண்டால் அது வியாபாரம் மட்டுமே.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னவனை தாய் போல் சுமப்பவள் தான் நம் நாயகி.

*******************************************************************************************

ஹாய் எல்லாருக்கும் வணக்கம். இது என்னோட முதல் கதை. எனக்கு எழுத எல்லாம் தெரியாதுங்க எதோ ஆசையில் எழுத போறேன். உங்க எல்லாரோட சப்போர்ட் கண்டிப்பா வேண்டும். உங்க கருத்து அது எதுவா இருந்தாலும் பரவாயில்லை கண்டிப்பா சொல்லுங்க அப்ப தான் என்னோட தவறை மாற்றி கொள்ள முடியும்.

புது வருடம் தொடங்கியதும் என்னோட கதையை ஸ்டார்ட் பண்றேன்.

நன்றி

என்றும் அனைவரின் நலம் விரும்பும் லஷ்மி,
 
Last edited:

Laxmi das

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

சுமப்பேன் உனை தாயாக

பூலோக சொர்க்கம்,கடவுளின் நாடு, நறுமணம் கமழும் பூமி என்ற பல சிறப்புகளை கொண்டது தான் கேரளா. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்றும் எப்பொழும் குளுமையாக இருக்கும் வானிலையும் மனதுக்கு இதமாக இருக்கும்.

கிளிமானூர், திருவனந்தபுரத்தில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலையில் இருக்கும் அழகிய சுற்றுசூழல் கொண்ட கிராமம். பழமை மாறாமல் இருக்கும் அந்த வீட்டை பார்ப்பவர்கள் ரசிக்காமல் இருக்க முடியாது.

உலகின் எல்லா இடத்திலும் இந்தியனை காணலாம் அதே போல் இந்தியாவிலும் எல்லா இடத்திலும் தமிழனை காணலாம். அதே போல் பத்து வருடம் முன்பு வேலை காரணமாக இங்கே கூடி வந்தவர்கள் தான் சங்கரனின் குடும்பம்.

செல்வி "எங்க எவ்வளவு சீக்கிரமா கிளம்பறீங்க" என்று கிளம்பும் கணவனிடம் கேட்க,

"நாளைக்கு பெரியவளுக்கு ரொம்ப முக்கியமான நாள் அதுவும் நினைச்சு பார்க்க முடியாத இடம் அதான் கொஞ்சம் பயமா இருக்கு கோவிலுக்கு போயிட்டு வரேன் சின்ன குட்டி எழுந்தா நான் கோவில் போனதை சொல்லிடு" என்று பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றார்.

அவர் கிளம்பிய சிறிது நேரத்தில் ஒரு அறையில் 'ஏய் என் கோலி சோடவே என் கறிக்குழம்பே உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ' என்ற சத்தத்தில் அந்த வீடே அதிர,

"ஐயோ என்ன மா இது காலையே இப்படி சத்தமா பாட்டு வைச்சே தலை வலியை கொண்டு வரா நான் வேலைக்கு போய் இப்படி வேலை பார்க்கிறது" என்று பாட்டை வைத்த அடுத்த நிமிடமே பிரியங்கா தன் தாயிடம் சொல்ல,

"நானும் தினமும் சொல்லி பார்த்துட்டேன் எங்க கேட்கிற, அவ என்னமோ பண்ணிக்கிட்டு போற நீ வா சாப்பிட்டு நேரத்தோடு கிளம்பு" என்ற தாயிடம்,

"அப்பா எங்க இவ்வளவு காலையில் எங்க போய் இருக்கார்" என

"நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க கொஞ்சம் பெரிய சம்பந்தம் அந்த பயத்தில் தான் காலையே கோவிலுக்கு கிளம்பிட்டார் எனக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்கு தேடி வந்த வரன் வேண்டாம் சொல்லவும் மனசு வரவில்லை பார்க்கலாம் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க எப்படி இருக்காங்கனு" என அதை கேட்ட பிரியங்கா "கவலை வேண்டாம் என் செல்லத்துக்கு.... என்னோட லக் அதை பாரு என்னோட லக் வேற யாருக்கும் கிடையாது" என்று சொல்லி கொண்டே புட்டையும் கடலை கறியையும் காலி செய்ய,

எதோ ஒரு பாடலை பாடி கொண்டே அங்கே வந்தால் கல்பனா, நம் கதையின் நாயகி. அது வரை இதழில் இருந்த மென் புன்னகை மறைந்து ஒரு வித வெறுப்பு ப்ரியங்காவின் முகத்தில் தோன்றியது.

கல்பனா, பத்தொன்பது வயதே நிரம்பிய கல்லூரி மாணவி. பிடித்த படிப்பான பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் புகழ் பெற்ற கல்லூரியில் படிக்கிறாள். பத்து வருடம் முன் அவள் குடும்பம் கேரளா வரும் போது அவளது வயது ஒன்பதே..... பெரும்பாலும் கேரளவே வாசல்தளம் என்பதால் மலையாளம் அவளது வாயில் சரளமாக வரும் அதற்காக தமிழ் தெரியாது இல்லை. தமிழ் பேச தெரியும். கலையான முகம் கருப்பும் இல்லாத வெள்ளையும் இல்லாத கோதுமை நிறம். அபிநயத்தில் கொஞ்சி விளையாடும் மீன் கண்கள் அளவெடுத்து செதுக்கிய நாசி, எப்பொழுதும் இதழில் கட்டி தவழும் புன்னகையின் அரசி.

இவளை விட பல மடங்கு அழகி தான் ப்ரியங்கா. இருந்தாலும் அவள் மீது ஒரு வித வெறுப்பு. தனக்கு பின் ஆறு வருடம் இடைவெளியில் பிறந்து பெற்றோர் அன்பை பகிர வந்த காரணத்தாலோ அல்லது தான் கேட்டும் கிடைக்காத பல பொருள்கள் அவள் கேட்காமலே அவளுக்கு கிடைப்பதாலோ எதோ ஒரு காரணம் அவளை சிறு வயதில் இருந்தே வெறுத்தாள். வளர வளர வெறுப்பும் வளர்ந்ததே தவிர குறைய வில்லை.

"குட் மார்னிங் சேச்சி மார்னிக் அம்மா" என்றவளை கண்டுக்காமல் தாயிடம் "அம்மா நான் கிளம்புறேன் நாளைக்கு லீவு சொல்லிட்டேன் அதனால இன்றைக்கு வர கொஞ்ச நேரம் ஆகும்" என்று விட்டு வேகமாக தன் கைபையை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

செல்வி கல்பனாவிடம் "சாப்பிட்டு கிளம்பு எனக்கு உள்ள வேலை இருக்கு " என்று கிளம்ப "அம்மா நான் நாளைக்கு லீவு போடவா" என "நீ எதுக்கு அதுயெல்லாம் ஒன்றும் வேண்டாம் நீ போயிட்டே வா" என்று உள்ளே சென்று விட,

'அது என்ன சேச்சிக்கு மட்டும் பக்கத்தில் இருந்து கவனிக்கிறாங்க என்னை மட்டும் நீயே சாப்பிடுன்னு சொல்லிட்டு உள்ளே போயிட்டாங்க... சேச்சி என் கிட்ட நல்லா பேச நான் கண்டதே இல்ல அச்சா மட்டும் தான் என் கிட்ட நல்லா பேசுறாங்க.... என்ன கொடுமை ஐயப்பா' என்று புலம்பினாலும் தாயின் கை பக்குவத்தில் தயாராகி இருக்கும் புட்டு கடலைக்கறியை ஒரு பிடி பிடித்து விட்டே கிளம்பினாள்.

கல்லூரியில் "பேபி டால் ஏன் வந்ததில் இருந்து அமைதியா இருக்க திரும்பவும் சேச்சி கூட சண்டையா" என்ற நட்சத்ராவை பார்த்து "சேச்சி கூட நான் சண்டை போடாமல் வேற யார் டி போடா போறாங்க இப்ப என்னோட அமைதிக்கு பின்னாடி இருக்கிற காரணம் வேற டி. நாளைக்கு சேச்சியை பொண்ணு பார்க்க வராங்க அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்" என

"அதுல யோசிக்க என்ன இருக்கு.... உங்க அக்கா அவ மாமியார் வீட்டுக்கு போய்ட்டா உங்க அம்மா உன் கிட்ட தான் பேசுவாங்க டால். நீ சின்ன வயசில் இருந்து எதிர்பார்த்த அன்பு கிடைக்கும் தானே அதை நினைச்சு சந்தோசமா இரு" என்று தோழியின் மனதில் இருக்கும் ஏக்கத்தை உணர்ந்து சொல்ல,

"எனக்கு என் சேச்சியை விட அதிகமா என்னை தான் லவ் பண்ணனும் என்ற பேராசை எல்லாம் இல்ல டி என் கிட்ட பாசமா ஒரே வார்த்தை என் முகத்தை பார்த்து கனிவை சொன்ன அதுவே போதும்" என

"விடு விடு டால் உன்னை கண்ணுல வைத்து பார்த்துகிற மாதிரி ஒரு பையனை பார்த்து கட்டி வெச்சுடுவோம்" என்று அவளை சிரிக்க வைத்து கொண்டே கிளாஸ்க்கு சென்றனர்.


கன்னியாகுமரி,


"எனக்கு பொண்ணை பார்க்க சுத்தமா விருப்பமே இல்லை என்னோட அம்மா தாண்டா எதோ இப்ப விட்டா எனக்கு கல்யாணமே ஆகாத மாதிரி உடனே கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொல்லை பண்றங்க" என்று பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தன் நண்பனுக்கு தொலைபேசி மூலம் சொல்ல,

"கொடுத்து வெச்சவன் மச்சான் நீ எனக்கும் அம்மானு ஒருத்தர் இருக்காங்களே நானே போய் எனக்கு வயசு ஆகிடுச்சு கல்யாணம் கட்டி வைமானு கேட்டா உனக்கு என்ன வயசு ஆகிடுச்சு இப்ப தான் நல்ல உழைக்கணும் என்று தத்துவம் எல்லாம் பேசறாங்க இருக்கிற முடி கொட்டுறதுக்குள்ள கட்டி வைக்க சொன்ன எங்க இந்த 90's கிட் கஷ்டத்தை புரிஞ்சிக்கிறாங்க" என்று தன் கவலையும் சேர்த்து சொல்ல

"AK போதும் நிறுத்து உன்னோட கஷ்டம் உனக்கு இப்படி இதை எல்லாம் சமாளிக்க போறேன் னு சாத்தியமா தெரியல" என

"கல்யாணம் பண்றத்தில் இப்ப என்ன கஷ்டம் உனக்கு" என்று AK கேட்க,

"தெரியல டா இன்னும் நான் பெரிய தொழிலதிபர் ஆகணும் இப்ப இருக்கிறதை விட எல்லாரும் எங்க பிராண்ட் வாங்கணும் இப்படி சொல்லிட்டே போகலாம்" என

"டேய் கேனை இதுக்கும் கல்யாணத்துக்கு என்னடா சம்மந்தம்" எண்றதுக்கு "உனக்கு சொன்ன புரியாது மச்சான்" என்று போனை வைத்து விட்டான்.

பலர் எதிர்பார்த்த சிலர் எதிர்பார்க்காத நாள் விடிந்தது. சூரியன் தன் மேல் படர்ந்து மறைத்த பணியையும் மேகத்தையும் மீறி பூமியில் தன் ஆதிக்கத்தை காட்ட தொடங்கினார்.

சங்கரன் "செல்வி பிள்ளையை ரெடி பண்ணிட்டியா மாப்பிள்ளை வீட்டுல இருந்து எந்த நேரத்திலும் வரலாம்" என்று பதட்டமாக சொல்ல, "அச்சா நான் எப்பவோ ரெடி" என்று கல்பனா வெள்ளை அனார்கலியில் தேவதையாக வர,

"உன்னை யாரு கேட்டா ஒழுங்கா காலேஜ் கிளம்பற ஜோலியை பாரு" என்று செல்வி கடிந்து கொள்ள,

"எதுக்கு குட்டியை திட்டுற இருக்கட்டுமே நீ போய் பெரியவளை பாரு" என்று அவளை உள்ளே அனுப்பி விட்டு, "அவ கிடைக்கிற மா நீ இன்றைக்கு காலேஜ் எல்லாம் போக வேண்டாம்" என

"அச்சானா அச்சா தான் சரி என் கிட்ட யாருமே மாப்பிளையை பற்றி சொல்லவே இல்ல நீங்க கூட சொல்லல அச்சா நான் கோபமா இருக்கேன்" என

அவளை சிறு சிரிப்புடன் பார்த்து "உன் கிட்ட சொல்லாமல் நான் என்ன செய்ய போறேன் மாப்பிள்ளை பெயர் கார்த்திக், மித்ரா குரூப் ஆப் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர். கொளச்சல்லே பெரிய குடும்பம். அப்பா விஷ்வாமித்ரன் அம்மா வான்மதி ஒரே தம்பி அவங்க பெயர் ராகவ். மாப்பிளையோட அத்தை சங்கமித்ரா அவங்களுக்கு ஒரே பொண்ணு ரோஷினி" என்ற தந்தையை பார்த்து,

"எவ்வளவு பெரிய குடும்பம் எல்லாரும் ஒன்றா ஜாலியா இருப்பாங்களா... அச்சா எனக்கு கூட இதே மாதிரி இல்ல இதை விட பெரிய குடும்பமா பார்த்து கல்யாணம் கட்டி கொடுக்கணும் சரியா" என்றவளுக்கு தெரியவில்லை அவள் வாழ போகும் குடும்பம் இது தான் என்று.

"அதுக்கு என்னடா உன் கல்யாணத்தை எப்படி பண்றேன் மட்டும் பாரு இந்த ஊரே திரும்பி பார்க்கிறா மாதிரி யாருமே பண்ணாத அளவுக்கு உனக்கு கல்யாணம் பண்றேன்" என்று அவளை அனைத்து கொண்டார். காணும் கனவு அனைத்தும் நிறைவேற முடியுமா.

செல்வி "ஏங்க அவ கூட என்ன வெட்டி பேச்சு, மாப்பிளை வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்க எங்க இருக்காங்கனு" என்று அவரை அனுப்பி விட்டு கல்பனாவை பார்த்து "சும்மா இருக்காமல் போய் எதாவது வேலையை பாரு" என்று மீண்டும் ப்ரியங்காவின் அறைக்கு செல்ல,

'எதாவது வேலையா...... கல்பனா எஸ்கேப் ஆகிடு' என்று மெதுவாக தோட்டத்துக்கு செல்ல அவள் செல்லவும் இவர்கள் வீட்டுக்கு முன் இரண்டு கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

சங்கரன் "செல்வி மாப்பிளை வீட்டில் இருந்து வந்துட்டாங்க பாரு" என்ற குரலில் செல்வி பிரியங்காவை பார்த்து "ஒன்றும் இல்லடா டென்ஷன் எல்லாம் ஆகாமல் இரு. நான் வெளியே போயிடு வரேன்" என்று வந்தவர்களை பார்த்து வரவேற்க,

"வாங்க வாங்க" என்று வரவேற்றதும் விஷ்வாமித்ரன் தன் குடும்பத்தை அறிமுகம் செய்ய, சங்கரன் "மாப்பிள்ளை வரவில்லையா" என்று தயக்கமாக கேட்க,

விஸ்வா "கிளம்பற நேரத்தில் முக்கியமான வேலை வந்துடுச்சு அதை முடிச்சிட்டு பின்னாடியே வந்திருவான்" என்னும் போதே சங்கமித்ரா ராகவை பார்த்து "தம்பி வரும் போது வரட்டும் நாம் முதலில் பொண்ணை பார்த்துடலாம்" என அனைவர்க்கும் அதுவே சரியாக பட,

பிரியங்கா வெண்பட்டை தழைய தழைய கட்டி கண்ணில் மெலிதாக மின்னும் ஆர்வமும் உதட்டில் வெட்க புன்னகையும் தன் தாய் கொடுத்த டீ ட்ரேயை கையில் ஏந்தி கொண்டு தேவதையாக வந்தாள்.

சிறிது ராகவ் தன் தமையனுக்கு கால் செய்ய பின் பக்கமாக வர, அங்கே புக்களுள் பூவாக இருந்த கல்பனாவை பார்த்து "வாவ்" என்று ஆச்சிரியமாக பார்த்தான்.

சுமைகள் தொடரும்..... லஷ்மி

எல்லாருக்கும் என்னோட வணக்கம்.... இது என்னோட முதல் கதை பல தவறுகள் இருக்கலாம். தவறை சுட்டி காட்டுங்க அது எனக்கு என்னை திருத்தக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். அதே மாதிரி நல்லா இருந்தால் அதையும் சொல்லிடுங்க அது என்னை இன்னும் ஊக்க படுத்தும். நன்றி டார்லிங்ஸ்
 

Laxmi das

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுமப்பேன் உனை தாயாக

23655


வென்பட்டில் தேவதையாக வந்த ப்ரியங்காயை பார்த்த அனைவருக்கும் நிறைவாக இருந்தது. வான்மதி சங்கமித்ராவிடம் "பொண்ணு கண்ணுக்கு லட்சனமா இருக்கா கார்த்திக்கு பொருத்தமாக இருப்பா" என

"ஆமா மதினி பார்க்கிறதுக்கு அடக்கமான பொண்ணா தான் தெரியுறா ஜாதகமும் நல்லா பொருந்தி இருக்கு கார்த்திக் மட்டும் சரி சொல்லிட்டா அடுத்த முகூர்த்தலிலே கல்யாணத்தை வைத்து கொள்ளலாம்" என்று தன் மனதில் தோன்றியதை சொன்னார்.

செல்வி "ப்ரியங்கா எல்லார் கிட்டவும் ஆசீர்வாதம் வாங்கிக்கோ" என்றதும் அனைவரின் முன்பும் விழுந்து வணங்க,

விஸ்வா "எங்க எல்லாருக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சி இருக்கு கார்த்திக் வந்து பார்த்துட்டா நாம் மேற்கொண்டதை பேசலாம்" என்று சிறிது நேரம் பொதுவாக பேசி கொண்டு இருக்க,

சங்கரன் "நேரம் ஆகுது மாப்பிள்ளை இன்னும் வரவில்லை" என்று பெண்ணின் அப்பாவிற்கு இருக்கும் பதட்டத்துடன் கேட்க,

வான்மதி "ராகவ் அன்னைக்கு போன் பண்ணி கிளம்பிட்டானா கேளு" என்றதும் செல்வி "தம்பி உள்ளே சிக்னல் சரியா கிடைக்காது நீங்க வெளியே போய் போன் பண்ணுங்க" என்றதும் வெளியே வந்தவன், வந்த வேலையை மறந்து பின் பக்கம் எதோ பாட்டு சத்தம் கேட்கவும் 'யாரு அந்த சூப்பர் சிங்கர்' என்று யோசித்து கொண்டே வீட்டின் பக்கத்தில் இருந்த சந்தில் எட்டி பார்க்க,

அங்கே தோட்டத்தில் பூக்களுடன் அன்று தான் பூத்த பூவாய் கல்பனா பாடி கொண்டே ரோஜா செடிக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தாள்.

"வாவ் யாரு டா இந்த வைட் ரோஸ்" என்று முணுமுணுத்து கொண்டே அவள் பக்கத்தில் செல்ல,

"ஹாய்" என்றதும் "யார் நீங்க என்னோட தோட்டத்தில் என்ன பண்றீங்க" என

"ஓ.... நான் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து இருக்கோம்" என 'அச்சீசோ அப்ப இவங்க தான் சேச்சியை பார்க்க வந்த மாப்பிள்ளையா இருக்கும் இருக்கும்' என்று அவளே முடிவு செய்து அவனிடம் "ஹலோ நான் கல்பனா ப்ரியங்கா சேச்சியின் குட்டி தங்கச்சி சேச்சியை பார்த்தீங்களா பிடிச்சி இருக்கா" என்று கேள்வி மேல் கேள்வியா கேட்க,

ராகவ் சிரித்து கொண்டே "போதும் வைட் ரோஸ் மூச்சு வீட்டுக்கோ எவ்வளவு கேள்வி கேட்கிற நான் இங்க தான் இருக்க போறேன் பொறுமையா கேளு" என

சங்கரனின் கல்பனா என்ற அழைப்பில் வேகமாக திரும்பியவள் கீழே இருந்த கல்லை கவனிக்காமல் ஓட, அடுத்த நொடி செம்மண் சகதியில் விழுந்து விட்டால்.

"அம்மாஆ" என்று வலியில் கத்த, இதை பார்த்த ராகவ் "அச்சோ என்ன வைட் ரோஸ் இது பார்த்து நடக்கலாம்ல இப்ப பாரு வெள்ளை ட்ரஸ் எல்லாம் சேறாகிடுச்சு" என்று உச்சி கொட்டி சொல்ல,

"ப்ச்... அதான் நான் விழ போறேன்னு தெரியுதுல பிடிக்க வேண்டியது தானே இந்த அச்சா வேற இப்ப எதுக்கு கூப்பிட்டரு தெரியலையே" என்று கீழே விழுந்ததில் ஒரு கால் சுளுக்கு பிடித்து கொள்ள, அதை தாங்கி தாங்கி முன் பக்கமாகவே சென்றாள். பின் பக்க கதவே தொலைவில் இருக்க இந்த காலை வைத்து கொண்டு போக முடியாது என்றே முன் பக்கமாக வந்தாள்.

அவள் தாங்கி தாங்கி நடப்பதை பார்த்து அவளுக்கு உதவ முன் வருவத்துக்குள் அவனுக்கு முக்கியமான போன் வர, போகும் அவளையே பாவமாக பார்த்து கொண்டு போன் பேச தொடங்கினான்.

'எனக்கு பிடிச்ச டிரஸ் இப்படி ஆகிடுச்சே இதை மட்டும் என்னோட செல்லம் செல்வி பார்த்த நான் அவ்வளவு தான் பூமியோட பூமியா என்னையும் பொதச்சிடுவாங்க' என்று காலையும் பூமியையும் பார்த்தவள் எதிரே பார்க்க தவறினாள்.

எதிரே வந்தவரும் இவள் வருவதை பார்க்காமல் போனில் முழுக, கல்பனா வந்தவரை மோதிய வேகத்தில் நிற்க முடியாமல் தடுமாறி கீழே விழ, இதே நேரம் எதிரே வந்தவன் அவள் இடை வளைத்து தாங்கி பிடித்தான்.

கீழே விழ போறோம் என்ற பயத்தில் கண்களை இறுக்க முடிக்க கொள்ள, பிடித்தவனோ அவளின் பாவத்தில் தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தான்.

'இன்னுமா நம்ம கீழ விழாமல் இருக்கோம்' என்று ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்க்க, ஆணவனின் முகத்தை வெகு அருகில் முதல் முறை பார்ப்பதால் கண் இமைக்க மறந்து அவனையே பார்க்க,

சிறிது நேரத்தில் 'அண்ணா' என்ற ராகவ்வின் அழைப்பில் நடப்பை உணர்ந்து கல்பனா வேகமாக அவனை விட்டு தள்ளி நிற்க,

முதன்முதலாக உணர்ந்த பெண்ணின் மென்மை, பெண்ணின் வாசம் அதில் கிறங்கி நின்றான் கார்த்திக். பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்ல தான் வேகமாக வந்தான். 'இவள் தான் நம்ம பார்க்க வந்த பொண்ணோ' என்ற யோசனையில் அவளை அளவெடுக்க,

அவளோ தடுக்கியத்தில் மேலும் காலின் வலி கூடி இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் வதங்கிய முகத்துடன் அமர்த்து விட்டாள். அவர்கள் அருகே வந்த ராகவ் "அண்ணா அச்சச்சோ வெள்ளை சட்டை இப்படி கறையாகிடுச்சே உள்ள போகலாமா வாங்க ணா" என்று கார்த்திக்கை அழைக்க,

"ஒரு நிமிஷம் டா" என்று கல்பனா அருகே "எனி ப்ராப்லேம்" என , யாரவது வந்து கேட்க மாட்டாங்களா உதவ மாட்டாங்களா என்று தவித்தவளுக்கு அவன் கேட்டதும் கண்கள் கலங்க, அதை மறைத்து கொண்டு "ம்ம்ம்..... உள்ள அச்சா இருப்பாங்க கூப்பிடுங்க என்னால எழ முடியலை கால் ரொம்ப வலிக்குது" என்று முகத்தை சுருக்கி சொல்ல,

ராகவ் "நான் கூப்பிட்டு போறேன்" என்று அவளை நெருங்க, கார்த்திக் "வேண்டாம் ராகவ் நானே கூப்பிட்டு போறேன் என்னோட டிரஸ் தான் ஏற்கனவே கறையாகிடுச்சே நீ வேற டிரஸ்ச கறையாக்கிக்க வேண்டாம்" என்று அவளிடம் கையை கொடுக்க,

தயக்கத்துடன் அவனின் கையை பற்றி எழுந்த கல்பனாவால் அடுத்த அடி வைக்க முடியவில்லை, பாதத்தில் சுருக் என்று ஒரு வழியை உணர கீழே சரிய போனவளை தங்கியவன் அவள் கையில் ஏந்தி கொண்டான்.

அதை பார்த்த ராகவ் "அண்ணா பார்த்து கீழ போடாமல் வா ஏற்கனவே அவங்க முகத்தில் அவ்வளவு வலி தெரியுது" என கல்பனா வேகமாக "சார் ப்ளீஸ் கீழ விடுங்க நான் பொறுமையா உள்ள வந்துறேன் அம்மா பார்த்தாங்க என்னை தான் திட்டுவாங்க" என

"கொஞ்சம் பொருந்த உள்ள போய்டலாம் நீங்க இந்த வலியோட நடக்க முடியாது" என்று அவன் வீட்டுக்குள் நுழைய, ஹாலில் இருந்த அனைவரும் அவனை தான் அதிர்ச்சியாக பார்த்தனர்.

பொண்ணு பார்க்க வந்த இடத்தில இவன் என்ன பன்றான் என்று கவலையோடு அவனையும் ராகவ்வையும் பார்க்க, இருவரும் அவர்கள் யாரையும் கண்டுக்காமல் சோபாவில் அவளை அமர செய்ய,

அப்பொழுது தான் ரூமில் இருந்து வெளியே வந்த செல்வியும் சங்கரனும் அவளை பார்த்து அவள் அருகே செல்ல,

சங்கரன் "குட்டி என்ன ஆச்சு எங்க விழுந்த... எதாவது அடிபட்டு இருக்கா" என்று அவள் அருகே அமர்ந்து கொள்ள, செல்வி "ஏய் என்னடி கோலம் இது உன்னால ஒரு நாள் அமைதியா இருக்க முடியாதா ஏன் தினமும் எதாவது பிரச்சனை பண்ணிட்டே இருக்க" என்று கடிய,

ராகவ் "அவங்க பத்திரமா தான் நடந்தாங்க ஆனா கீழ இருந்த கல்லை கவனிக்காமல் விழுந்துட்டாங்க" என்று நடந்ததை சொல்ல,

ராகவ் அவளுக்கு ஆதரவாக பேசியது ரோஷினிக்கு பிடிக்கவில்லை முகத்தை வேறு பக்கம் திருப்பி கொள்ள, சங்கமித்ரா "யார் இந்த பொண்ணு" என்ற கேள்விக்கு,

சங்கரன் "எங்க இரண்டவது பொண்ணு. பெயர் கல்பனா காலேஜ் படிக்கிறாள். மன்னிச்சிடுங்க சம்மந்தி கொஞ்சம் விளையாட்டு பிள்ளை அதான்" என்று இழுக்க,

விஸ்வா "அட அதை நீங்க வேற சொல்லனுமா எங்க வீட்டுலையும் பொம்பளை பிள்ளை இருக்கு சம்மந்தி... நீங்க முதல பாப்பாவை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போங்க கால் வேற வீங்கி இருக்கு" என

கார்த்திக் "அப்பா எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு நான் மதியம் அங்க இருக்கணும் நான் கிளம்பறேன் நீங்க இப்ப வரிங்களா இல்ல அப்பறமா வரிங்களா" என்று அழுத்தமான குரலில் கேட்க,

வான்மதி "அப்ப நாங்களும் கிளம்பறோம் அண்ணா பாப்பாவை முதல ஹாஸ்பிடல் கூப்பிட்டு போங்க இன்னொரு நாள் நம்ம பேசிக்கலாம்" என அனைவரும் அவர் சொன்னதுக்கு ஆமோதிக்க,

செல்வி மனதில் பிரியங்காவை திட்டி கொண்டு இருந்தார். இவர்கள் எல்லாம் இங்கே இருக்க அவள் மட்டும் எதோ முக்கியமான போன் கால் என்று பேச உள்ளே சென்று விட்டாள்.

விஸ்வா "கார்த்திக் காரில் நீ மட்டும் தானே போக போற போற வழியில் இவங்களை ஹாஸ்பிடல்ல விட்டுவிடு" என்று அவர்களிடம் விடை பெற்று செல்ல,

முதல் காரில் விஸ்வாமித்ரன் வான்மதி சங்கமித்ரா செல்ல அடுத்த காரில் ராகவ் மற்றும் ரோஷினி சென்றனர்.

சிறிது நேரத்தில் கார்த்திக் சங்கரன் செல்வி மற்றும் கல்பனாவை பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடலில் விட்டு அவன் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றான்.

ராகவ் காரில் ராகவ் "ரோஷினி அந்த பொண்ணு கல்பனா இருக்காளே வானத்தில் இருந்து குதிச்சி தேவதை மாதிரி இருக்கால பேசும் போது அவ்வளவு ஸ்வீட்" என்று அவளை பற்றியே சொல்ல ரோஷினி கடுப்புடன் அதை கேட்டு கொண்டு இருந்தாள்.

கல்பனா வீட்டில் ப்ரியங்கா போனில் யாரிடமோ "இங்க பாரு நீ பண்றது ரொம்ப பெரிய தப்பு... தப்புக்கு மேல தப்பு பண்ற உன்னை ஒரு ப்ரெண்டா கூட என்னால பார்க்க முடியாது எனக்கு வீட்டில் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க இன்னும் ஒரு மாசத்தில் என்னோட கல்யாணம் தயவு செய்து என்னை தொல்லை பண்ணாமல் இரு" என்று கோபத்தில் கத்தி விட்டு போனை அனைத்தவளுக்கு கத்தி அழுக வேண்டும் போல் இருந்தது.

இரவு, கார்த்திக் இன்று நடந்த அனைத்தையும் நினைத்து தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க மனம் முழுவதும் கல்பனா வலியில் முகம் சுருங்கியது மட்டுமே திரும்ப திரும்ப வந்து அவனது தூக்கத்தை மறக்க வைத்தது.

ப்ரியங்காவோ தனக்கு அந்த போன் கால்லையும் அதில் பேசியது பற்றியுமே சிந்தித்து கொண்டு இருக்க, பயம் அவள் மனதை ஆள் கொண்டது. பயத்தில் தூக்கத்தை தொலைத்து வெறிக்க வெறிக்க சுத்தும் பேன்னை பார்த்து கொண்டே தூக்கத்தை தொலைத்தாள்.

பல குழப்பம் மனதில் இருந்தாலும் மாத்திரையின் வீரியத்தில் தன்னை மறந்து தூங்கி கொண்டு இருந்தால் கல்பனா.

ரோஷினியோ ராகவ் கல்பனாவை பற்றியே பேசியது நினைவுக்கு வர, தன் சிறு வயது ஈர்ப்பை மீறி எதோ ஒன்று ராகவ் மேல் இருப்பதை உணர்ந்த அவள் அவன் தன்னை விட்டு போய் விடுவானோ என்ற அச்சத்தில் தூக்கத்தை தொலைத்து இருள் சூழ்ந்த வானத்தில் தன் எதிர் காலத்தை தேடி கொண்டு இருந்தாள்.

ராகவ் எதையோ தீவிரமாகி சிந்தித்து கொண்டு இருந்தான். ஆனால் எதை பற்றி யோசிக்கிறான் என்பது அவனுக்கே வெளிச்சம். தூக்கம் என்பது துளியும் வராமல் தன் முடிவில் திடமாக இருக்க அவனது முடிவில் அவனது தூக்கம் தான் பறிபோனது.

ஆகா மொத்தம் யாருமே தூங்க வில்லை. அனைவரது சிந்தையிலும் எதோ ஒரு விடயம் ஓடி கொண்டு இருந்தது என்ன அது?

சுமைகள் தொடரும்

லஷ்மி...

யாருக்கு யார் ஜோடினு கண்டு பிடிச்சீங்களா நண்பர்களே...... ஒரே ஒரு கிளு மட்டும் சொல்றேன் நம்ம கதையில் நான்கு ஜோடி இருக்கு. இப்ப கண்டு பிடிங்க...
 

Laxmi das

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுமப்பேன் உனை தாயாக 3



ஒரு வாரம் சென்ற நிலையில், மும்பை மாநகரம் எப்பொழுதும் போல் பரபரப்பாக விடிந்து யாருக்கும் நிற்காமல் நேரம் சென்று கொண்டு இருக்க மாத்துங்க (matunga) ஏரியாவே கலகலப்பாக இருக்க அதற்கு மாறாக இருந்தது ஒரு வீடு.


கமலம் “நீ என்ன தான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாலும் நான் எடுத்த முடிவை உன்னால் மாற்றவே முடியாது. யாரை நம்பி உன் அப்பன் உன்னை என் கிட்ட விட்டு போனான். போனது தான் போனான் எதாவது செய்து வெச்சி இருக்கானா அதுவும் இல்ல நான் எப்படி வாழறதாம். என்னால இதுக்கு மேல உழைக்க முடியாது இப்ப கிடைச்சி இருக்கிற வாய்ப்பு என்னால நினைச்சு கூட பார்க்க முடியாத பணம் எனக்கு கிடைக்க போகுது” என்று வாயில் புகையிலையை மென்று கொண்டே கூற,


“சீ..... நீ எல்லாம் ஒரு பெண்ணா எப்படி உன்னால இப்படி எல்லாம் செய்ய முடியும் நான் உனக்கு பொண்ணு மாதிரி தானே என்னை போய் பணத்துக்காக விக்க பார்க்கிற நீ எல்லாம் என்ன தாய்” என்று முகத்தில் வேதனையும் கடுப்பும் சேர்ந்து கேட்க,


“யாருக்கு யார் அம்மா நீ அந்த மனுஷனோட பொண்ணு எதோ காரணத்துக்காக உன் அப்பாவை நான் இரண்டாவதா கட்டிகிட்டேன். மத்த படி உன்னை ஆசையா எல்லாம் நான் என்றைக்குமே பார்த்துக்கிட்டது இல்ல. இன்னும் ஒரு வாரம் உனக்கு யார் அதிகமா பணம் தரங்களோ அவங்க கிட்ட உன்னை வித்துட்டு நான் என்னோட வாழ்க்கையை சந்தோசமா வாழ போறேன்” என


அதை கேட்டு கலங்கும் கண்களை துடைத்து கொண்டு ‘நான் இருந்தா தானே என்னை விக்க நினைப்ப நான் இல்லாமல் போய்ட்டா எப்படி நீ நினைச்சதை நடத்துறானு நான் பார்க்கிறேன்’ என்று மனதில் அவளை சபித்து கொண்டே “உன்னை நான் இது வரைக்கும் சித்தி அப்படினு பார்த்ததே இல்ல என்னோட அம்மா முகத்தை மறந்து உன்னை என் அம்மா சாணத்தில் வைத்து பார்த்தது என்னோட பெரிய தப்பு. நீ எல்லாம் பொண்ணா இருக்க தகுதியே இல்ல ச்சை” என்று அவள் அறைக்கு சென்றால் அந்த பாவப்பட்ட பேதை.


திருவனந்தபுரம், நட்சத்திரா “உனக்கே இது அநியாயமா தெரியல உன்னை டாக்டர் பெட் ரெஸ்ட் எடுக்க தானே எடுக்க சொன்னார் நீ காலேஜ் வந்ததும் இல்லாம இப்படி ஓடிக்கிட்டு இருக்க” என


“நான் என்ன நோயாளியா அட போடி இது சின்ன காயம் தான் டி அந்த டாக்டர் தன ஓவரா சொல்றாங்க வீட்டுல இருந்தால் அச்சா என்னை நடக்க கூட விட மாட்டேன்றாங்க டி அதன் இன்றைக்கு முக்கியமா டெஸ்ட் இருக்குனு சொல்லி வந்துட்டேன் வா டி பேக்கரி போகலாம் எதாவது சாப்பிடணும் போல இருக்கு” என


“உனக்கு எப்ப டி அப்படி தோணாமல் இருந்து இருக்கு நீ எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறவே மாட்ட ஆனால் நான் நீ சாப்பிடறதை பார்த்தே வெயிட் போடுறேன்” என்று சலித்து கொண்டவளை இழுத்து கொண்டு சென்றால் அவளது விருப்பமான இடமான குட்டன்’ஸ் பேக்கரி.


தனக்கு பிடித்த கேக் சண்டுவிச் என்று பலது உள்ளே தள்ளி விட்டு வெளியே வர அவள் முன்னாள் ஒரு கார் அதிவேகத்தில் வந்து அவளை உரசுவது போல் நின்றது.


‘எவன் டா இது’ என்று கோவமாக பார்க்க அங்கே காரில் இருந்து புன்னகை முகமாக கார்த்திக்கும் ராகவும் இறங்கினர்.


“ஓ!!! நீங்க தானா நான் கூட எதோ பிரான்தன் கார் ஓட்ட தெரியாமல் வந்துட்டான் போலனு தப்பா நினைச்சிட்டேன்” என்று சிரிக்காமல் கல்பனா சொல்ல,

“உனக்கு ரொம்ப தான் கொழுப்பு வைட் ரோஸ்” என்று ராகவ் அவளின் தலையில் குட்டி சொல்ல,


கார்த்திக் “சும்மா இரு ராகவ் உங்களை டாக்டர் பெட் ரெஸ்ட் எடுக்க தானே சொன்னாங்க நீங்க இப்படி ரோட்டில் சுத்திட்டு இருக்கீங்க” என்று அழுத்தமாக கேட்க,


‘கால கொடுமை இவர் வேற ஸ்கூல் ப்ரின்சிபிள் மாதிரி கொஸ்டின் கேட்டு இருக்கிறார் இப்ப உண்மையை சொன்ன அச்சா கிட்ட சொல்லிடுவாங்க பொய் சொன்ன முதல என்ன பொய் சொல்றது’ என்று மூளையை பலவாறாக பிழிய


ராகவ் “என்ன வைட் ரோஸ் என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கிறியா” என்றதும் ஆமா என்று தலையை ஆட்டி பின் இல்லை என்று எல்லா பக்கமும் ஆட்ட இருவர் மட்டும் இல்லை கூட வந்த வந்த நட்சத்ராவும் சிரிக்க,


கார்த்திக் “சரி வா நான் உங்க வீடு பக்கமாக தான் போக போறோம் உன்னை விட்டுட்டு போகிறோம் மேடம் யாரு வந்ததில் இருந்து அமைதியா இருக்காங்க உனக்கு இப்படி கூட ப்ரெண்ட்ஸ் இருக்காங்களா” என

அவனை முறைந்து விட்டு “இவ என்னோட கிளோஸ் பிரெண்டு நட்சத்திரா” என்று இருவருக்கும் அவளை அறிமுகம் படுத்தி வைத்தாள் பின் அவர்களுடன் காரில் கிளம்ப,


கல்பனா ராகவை பார்த்து ‘இவங்களுக்கு சேச்சியை பிடிச்சி இருக்கானு தெரியலையே பேசாம நம்மளே கேட்டுலாமா வேண்டாம் வேண்டாம் அம்மாக்கு தெரிஞ்சது நான் காலி’ என்று மனதில் பேசி கொள்ள


கார்த்திக் கண்ணாடி வழியாக பின்னாடி இருந்த கல்பனாவை பார்த்து ‘என்னோட கொள்கையை ஒரே நொடியில் முறியடிச்சிட்டியே பாதகத்தி உன்னை பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கே டி இப்படியே உன்னை என் வீட்டுக்கு அழைச்சிட்டு போய்டணும் னு மனசு சொல்லுது’ என்று ரசனையாக அவளை பார்த்து கொண்டே சாலையில் பாதி கவனத்துடன் வண்டியை ஓட்ட


கல்பனா “என்ன திடீர்னு இந்த பக்கம்” என்ற கேள்விக்கு ராகவ் “அது வந்து இவன் இங்க புதுசா பிரென்ச் ஓபன் பண்றது பற்றி பேச லேண்ட் புரோக்கர் பார்க்க வந்தான் எனக்கு வீட்டில் செம போர் அதன் இவன் கூட கம்பனிக்கு வந்தேன் ஆமா இது என்ன இயர் உங்களுக்கு” என்ற கேள்விக்கு


“இது கூட தெரியாத இரண்டாம் வருஷம்” என கார்த்திக் வேகமாக சென்ற கொண்டு இருந்த வண்டியை அதிர்ச்சியில் நிறுத்தி விட்டான்.


“என்ன இரண்டாம் வருசமா அப்ப உனக்கு இப்ப தான் பத்தொன்பது வயசு ஆகுதா” என்று அதே அதிர்ச்சி மறையாமல் கேட்க


“ஏன் எவ்வளவு அதிர்ச்சியா கேட்கறீங்க உங்க வீட்டில் யாருமே சொல்லலையா” என்று அவளும் அவனின் அதிர்ச்சியில் மிரண்டு சொல்ல


அவனோ அமைதியாக ‘அய்யோஓஒ வயசு வித்தியாசம் இவ்வளவு இருக்கே எனக்கு இருபத்தி எட்டு முடிய போகுதே’ என்று நொந்து கொள்ள,


அதை எதுமே உணராத கல்பனா ராகவ்விடம் பேசி கொண்டே வந்தாள். அவளை அவள் வீடு பக்கமாக விட்டு இருவரும் செல்ல, ‘நல்ல வேல வீட்டுக்கு வரலை இல்லனா நான் பேக்கரி போனதை அச்சா கிட்ட சொல்லி இருகாங்க’ என்று எண்ணிக்கொண்டாள்.


வீட்டுக்கு வந்ததும் ராகவ் விற்கு போன் வர அதை பார்த்ததும் தனியாக தோட்டம் வந்து “ஹலோ நான் சொன்ன வேலை முடிஞ்சிதா என்ன எனக்கு தெரியாது உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் டைம் அதுக்குள்ள சொன்ன வேலையை முடிக்கிற வழியை பாருங்க நான் உள்ள வந்த உங்களுக்கு தான் சேதாரம் பலமா இருக்கும்” என்று யாரையோ எச்சரித்து விடு உள்ளே சென்றான்.


ஏகாந்த இரவு இன்னும் அதே அதிர்ச்சியுடன் நிலவை வெறித்து கொண்டு இருக்க அந்த நேரத்தில் வந்த போன் காலை சலிப்புடன் ஏற்க அதில் சொன்ன செய்தியில் அது வரை இருந்த மன நிலை மாறி சந்தோசமா நிலைக்கு மாறினான்.


தன்னை சுற்றி என்ன நடக்கியது என்று கூட தெரியாமல் தன தோழியுடன் பேசி கொண்டும் பல திட்டங்கள் வகுத்து கொண்டும் இருந்தால் கல்பனா.


சுமைகள் தொடரும்
லஷ்மி
 

Laxmi das

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுமப்பேன் உனை தாயாக 4

மும்பை, அந்தேரி நகரின் காவல் நிலையத்தில் காவலாளி ஒருவர் “சார் ட்ரான்ஸபெர் ஆகிடுச்சே இப்ப என்ன பண்றது அந்த ஆளு சொன்ன மாதிரியே பண்ணிருக்கலாம்” என்று கவலையாக சொல்ல,


“இதுக்கு பயந்து அவங்க பண்ற தப்புக்கு துணை போக முடியாதே அங்கிள் ஒரு தப்பை தடுத்த நிம்மதி போதும் என்னுடைய ஊருக்கே போக போறேன் அதனால நான் ஹாப்பி தான்” என்றான் அந்த நகரின் ஏ சி பி கண்ணா.


அவர் “உங்க அப்பா பிரதாப் கண்ணா மாதிரியே இருக்க தம்பி நீயும். நேர்மையில் உங்க அப்பா மாதிரி நான் வேற யாரையும் பார்த்ததே இல்ல நல்ல மனுஷன் இதே மாதிரி தான் அரசியல்வாதி ஒருத்தன் சொன்னதை செய்யாமல் நேர்மையா இருந்தார் அதான் மொழி தெரியாத ஊருக்கு அனுப்பிட்டங்க அப்ப உங்க அம்மா நிறைமாத கர்ப்பிணி நீ அங்க தான் பிறந்த வளர்ந்த இப்ப உங்க அப்பா மாதிரியே நேர்மையா இருக்க எப்படி தம்பி கிளம்ப போற” என்று அவன் மேல் உள்ள அக்கறையில் கேட்க,


“அங்கிள் நான் நெஸ்ட் வீக் அங்க ஜாயின் பண்ணணும் நாளைக்கு கிளம்பினாள் தான் அங்க போய் செட்டில் ஆக்கிட்டு அடுத்த திங்கள் வேளையில் சேரனும் நாளைக்கு நைட் ட்ரெயின்” என “பார்த்து கண்ணா தம்பி பத்திரமா இருங்க” என்று அவரும் வேலை பார்க்க கிளம்பி விட்டார்.


‘நம்ம அங்க வருவதை யாருக்கும் சொல்ல வேண்டாம் எல்லாருக்கும் சைப்ரஸ் பண்ணலாம்’ என்று நினைத்தவனுக்கு தெரியவில்லை அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று நினைத்தவன் தான் அதிர போகிறான் என்று.


திருநெல்வேலி நகரின் மைய பகுதி அந்த கட்டிடமே மக்களால் நிறைந்து இருந்தது பிரபல ஜாதி கட்சியின் தலைமையகம் ஜாதி கட்சி தலைவரும் திருநெல்வேலி நகரின் சட்டமன்ற உறுப்பினருமான கதிரேசன் தீவிரமாக தொண்டர்களுடன் விவாதித்து கொண்டு இருக்க ஒரு தொண்டரோ “தலைவரே இந்த முறையும் நீங்க தானே எம்.எல்.ஏ கவலை படாதீங்க நாங்க பார்த்துகிறோம்” என்று வர போகும் சட்டமன்ற தேர்தலை பற்றி காரசாரமாக பேசி முடித்து பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு சென்றார்.


ருக்மணி “ஏங்க வர வர உன் பையன் போக்கே சரி இல்லங்க எப்ப பார்த்தாலும் போனையே வெச்சிட்டு சுத்திட்டு இருக்கான் முகத்தில் வேற சந்தோஷத்தையே காணோம் நீங்க என்னனு கேளுங்க” என்று வந்ததும் வராததுமாக கணவனிடம் சொல்ல,


“இந்த வயசு அப்படி தான் கண்டதையும் யோசிக்க வைக்கும் அவனை என் கூட கட்சியில் சேர்ந்து வேலையை பார்க்க சொன்ன இப்ப வரேன் அப்பா வரேன் னு இழுத்துட்டு இருக்கான் நான் என்னனு பார்க்கிறேன் நீ கவலை படாதே” என்று மகனை தேடி அவன் அறைக்கு செல்ல,


அங்கே இதையே யோசித்து கொண்டு இருந்த மகனை பார்த்து “டேய் என்னடா ஒரு மாதிரி இருக்கானு அம்மா கவலை போடுறாங்க என்ன விஷயம்” என,


“அதெல்லாம் ஒன்றும் இல்லையே நான் நல்லாத்தான் இருக்கேன் எனக்கு என்ன” என்று தந்தையை சமாளிக்க,


“அப்புறம் எதுக்கு இப்படி ரூமில் அடஞ்சி கிடக்குற வெளியே வந்து பாரு எலேச்டின் வேற நெருங்குது அந்த வேலையா வந்து பார்க்கலாம்ல” என

“வரேன்…. அப்பா உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்பேன் நீங்க உண்மையை சொல்லுங்க ஒரு வேல எதிர் காலத்தில் நானா இல்ல உங்க ஜாதியானு ஒரு நிலைமை வந்த நீங்க என்ன பண்ணுவீங்க” என்ற மகனை புரியாமல் பார்த்த கதிரேசன்,


“கெளதம் என்ன சொல்ற நீ எனக்கு நீ ரொம்ப முக்கியம் ஆனால் அதே மாதிரி எனக்கு ஜாதியின் ரொம்ப முக்கியம் நம்ம ஜாதி தான் எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துச்சு ஒழுங்கா நீயும் கட்சி ஆபீஸ் பாகம் வா அப்ப தான் நீ என் வாரிசு னு எல்லாருக்கும் தெரியும்” என்று அவர் கிளம்ப,


கிளம்பும் அவர் பார்த்து ‘நான் அரசியலுக்கு எல்லாம் வர மாட்டேன் அப்பா அது ஏன் உங்களுக்கு புரியலை நான் தனியா ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ண அந்த ப்ராஜெக்ட் உங்களுக்கு தெரியாம பார்க்கிறது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்று மனதில் இருப்பதை சொல்ல முடியாமல் மருக்கினான்.


இங்கு குளச்சலில், விஸ்வா “ராகவ் இந்தா இது பொண்ணு போட்டோ கார்த்திக் வரும் போது தான் அங்க பிரியங்கா இல்லையே அவன் பார்த்து இருக்க மாட்டான் நம்ம கிட்ட கேட்கவும் மாட்டான் போட்டோ பின்னாடியே அவள் போன் நம்பர் இருக்கு அவன் கிட்ட பேச சொல்லு” என்று அவர் தன் நண்பர்களை சந்திக்க கிளம்பினார்.


சங்கமித்ரா மற்றும் வான்மதி ஹாலில் அமர்ந்து ஜோசியரை பார்ப்பது பற்றி பேசி கொண்டு இருக்கும் சமயம் அங்கே ஒரு உறவுக்கார பெண் வந்தார்.


“அட இரண்டு பெரும் இங்க தான் இருக்கீங்களா உங்களை பார்க்க தான் வந்தேன். என் வீட்டுக்காரர் சொன்னார் நம்ம கார்த்திக்கு கேரளால பொண்ணு பார்த்து இருக்கிங்கள்னு என்ன விஷயம்” என்று விஜயா விஸ்வாமித்ரனின் ஒன்று விட்ட தங்கை கேட்க,


“அவங்க அங்க தான் இருகாங்க ஆனால் தமிழ் குடும்பம் தான் சொல்ல போன அவங்க சொந்த ஊர் திருநெல்வேலி தான் ஆனா எப்பவோ கிளிமானுரில் செட்டில் ஆகிட்டாங்க” என்று பட்டும் படாமலும் பதில் அளித்தார் சங்கமித்ரா.


“ஓ….. அப்படியா என்ன மதினி நான் கூட என் பொண்ணை நம்ம கார்த்திக்கு கேட்கலாம்னு இருந்தேன் சின்னவனுக்கு தான் ரோஷினி இருக்கா பெரியவனுக்கு ஆவது என் பொண்ணை கொடுக்கலாம்னு நினைச்சேன் என்னை இப்படி ஏமாத்தி புடிங்களே மதினி” என்று விளையாட்டு போல் தன் மனத்தின் ஆசையை சொல்ல,


வான்மதி “யாருக்கு யார்னு கடவுள் தான் விஜயா எழுதி வைப்பார். உன் பொண்ணுக்கு என்ன குறை பெரிய இடமா பார்த்து கட்டி கொடுக்கலாம்” என அவர்களிடம் தன் வேலை பலிக்காது என்று உணர்ந்த விஜயா “சரிங்க மதினி பொண்ணு பெயர் என்ன இப்படி இருப்பா என் பொண்ணு மாதிரி அடக்கமா இருப்பாளா இல்ல எப்படி” என்று தன் மகளின் வாழ்க்கையை பறித்தது போல் கேட்க


வான்மதி பெண்ணை பற்றி சொல்ல வருவதற்கு முன் சங்கமித்ரா “அக்கா இப்பவே சொல்லிட்டா உங்களுக்கு ஆர்வம் போய்டுமே நீங்க கல்யாணம் வரை பொறுமையா இருங்க” என்று பெண்ணின் பெயரை சொல்ல மறுத்து விட்டார்.


கிளிமண்ணூர், ப்ரியங்கா “அம்மா எனக்கு முக்கியான வேலை இருக்கு நான் கிளம்பறேன்” என அந்த இடத்தில வேகமாக வந்த கல்பனா “சேச்சி உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா” என என்ன என்று தெரியவில்லை இதுவரை இவள் பக்கம் திரும்பாத பிரியங்கா அவளிடம் எப்பொழுதும் போல் முகத்தை திருப்ப முடியவில்லை “என்ன” என்று மட்டும் கேட்க,


அவள் பேசுவதை ஆச்சிரியமாக பார்த்து கொண்டே செல்வி உள்ளே செல்ல கல்பனா “சேச்சி உனக்கு உண்மையாவே மாப்பிளையை பிடிச்சி இருக்கா உண்மையை மட்டும் பர சேச்சி உன்னை நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் மாப்பிளை பார்க்க வந்த நாளில் இருந்து நீ நீயாவே இல்ல எதோ மாதிரி இருக்க உனக்கு பிடிக்கலைன்னா இட்ஸ் ஓகே சேச்சி நான் அச்சா கிட்ட சொல்றேன் உனக்கு பிடிக்காததை பண்ணாத சேச்சி” என


தன் மனதை தாய் கூட புரிந்து கொள்ளாமல் இருக்க தான் வெறுத்த தன் குட்டி தங்கை தன் மனதை புரிந்து கேட்பது ப்ரியங்காவிற்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது. அவளை கஷ்டப்படுத்த கூடாது என்று நினைத்தாலும் உடனே பேச முடியாமல் அவள் தலையை கோதி விட்டு வெளியேறினாள்.


முதல் முறை அக்காவின் பாசத்தை கண்ட கல்பனாவிற்கு கண்கள் கலங்க மனதில் ‘லவ் யு சேச்சி சீக்கிரமே நீங்க என் கிட்ட பேசிடுவீங்க’ என்ற சந்தோஷத்தில் கல்லூரி சென்றாள்.

அவர்களை தூரத்தில் இருந்து பார்த்த செல்வி ‘கடவுளே என் இரண்டு பெண்களையும் ஒண்ணா ஆகிடு சீக்கிரமா என்னோட பல வருட வேண்டுதலை நிறைவேது’ என்று எப்பொழுதும் போல் செல்லும் சின்ன மகளை தூரத்தில் இருந்தே பார்த்து கொண்டார்.


வெளியே வந்த பிரியங்கா ‘இனி கல்பனாவை கஷ்டப்படுத்த கூடாது நான் எவ்வளவு பண்ணியும் என் முகத்தை பார்த்தே என் மனசை கண்டுபிடிச்சி இருக்கா ச்சை…. அவளை போய் நான் தப்பா நினைச்சிட்டேன்’ என்று நினைத்தவளுக்கு தெரியவில்லை தன் செல்ல தங்கைக்கு தான் தான் பெரிய கஷ்டத்தை கொடுக்க போகிறோம் என்று.


இரவு, ராகவ் தன் அண்ணனை தேடி அவனது அறைக்கு வந்தான். “அண்ணா நீ இன்னும் பொண்ணை பார்க்கவே இல்ல தானே அதான் அப்பா உன் கிட்ட அவங்க போட்டோ கொடுக்க சொன்னாங்க அதுக்கு பின்னாலே அவங்க நம்பர் கூட இருக்கு பேசிக்கோ” என்று வந்த வேலை முடிந்த உடன் கிளம்ப,


போட்டோவை பார்த்த கார்த்திக் உலகமே நழுவி சென்றது போல் தடுமாறி பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.


‘இவங்களா பொண்ணு ஆனால் நான் அவளை தானே விரும்பினேன். என்னை விட ஒன்பது வருடம் சிறியவள் அப்படி இருக்கும் பொது என் மனசு அவ தான் வேண்டும்னு கேட்டுச்சே. மூளை வேண்டாம் என்றாலும் மனசு அவ தான் எனக்குன்னு அடிச்சி சொல்லுதே முடியாது என்னால அவளை தவிர யாரையும் கட்டிக்க முடியாது எனக்கு கல்பனா தான் வேண்டும் நாளைக்கே இதை பற்றி அம்மா கிட்ட பேசணும்’ என்று கல்பனாவை சந்தித்த இரு சந்திப்பை நினைத்து கொண்டே தூங்கினான் மறுநாள் தன் தாய் கொடுக்கும் அதிர்ச்சியில் அவனை அறியாதே.

சுமைகள் தொடரும்
லஷ்மி
 
Status
Not open for further replies.
Top