All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் ஐ ஹேட் யூ..! பட்...! கதை திரி...

Status
Not open for further replies.

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருண் காரை அசுர வேகத்தில் செலுத்திக் கொண்டிருக்க, அவசரப்பட்டு அருணை சீண்டிவிட்டுவிட்டோமா..? என்று நினைக்கத் தொடங்கினாள்
ஹரிப்பிரியா... ஒவ்வொரு திருப்பங்களிலும் சரி, வரிசையாக எதிரே வாகனங்கள் வரும்பொழுதும் சரி காரின் வேகம் மட்டு பட்டதாகவே தெரியவில்லை... நேரம் செல்ல செல்ல அடிவயிற்றில் சில பல ரசாயன மாற்றம் உருவாக்கி இருவருக்குமே வயிற்றை பிரட்டிக் கொண்டுவர, காருக்குள் வாந்தி எடுத்துவிடாமல் இருக்க, காரின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து வெளியிலிருந்து வரும் காற்றை சுவாசித்து சிறிது சிறிதாக தன்னை ஆசுவாச படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா...
ஹரிப்பியாவிற்குள்ளும் அதே நிலைதான் என்ற போதிலும் அருணிடம் இறங்கி போக மனமில்லாமல் பல்லை கடித்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அருணை முறைத்தவாரே அமர்ந்திருக்க, அருணும் அவளை கவனித்துக் கொண்டே காரை செலுத்தினான்...
கடைசியாக இருந்த கொண்டை ஊசி வளைவில் கனரக வாகனம் ஒன்று சிரமப்பட்டு ஏறிக் கொண்டிருக்க, அதற்கிடையில் இருந்த இடைவெளியை சரியாக கணித்தவன்... கியரை மாற்றி காரை இன்னும் அதிக வேகத்தில் செலுத்தி அந்த இடைவெளியில் காரை முன்னூற்று அறுபது டிகிரியில் சுழற்றி முழுதாக ஒரு வட்டமடித்து பின்புறமாக காரை கிழே இறக்கி நிறுத்த, அதற்குமேலும் தாக்குப்பிடிக்க முடியாமல், ஐஸ்வர்யா ஜன்னல் வழியாக வாந்தியெடுக்க, ஹரிப்பிரியாவிற்கு எந்த அவகாசமும் இல்லாமல் போக, அருணுக்கு பின்புறமாக காரினுள்லேயே வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்...
காரிலிருந்து இறங்கிய அருண், வாட்டர் பாட்டிலை எடுத்து கதவை திறந்துவிட்டவாறு ஹரிப்பிரியாவிடம் நீட்ட, அவனிடமிருந்து வாட்டர் பாட்டிலை வெடுக்கென்று பிடுங்கிவிட்டு காரிலிருந்து இறங்கி ஓரமாக சென்று தன்னை சுத்தப்படுத்த, ஐஸ்வர்யாவோ கண்கள் கலங்க இன்னுமும் வயிற்றை பிடித்துக் கொண்டு ஓங்கரித்துக் கொண்டிருந்தாள்.. அவர்களுக்கு சிறிது தனிமை குடுத்துவிட்டு சற்று தொலைவில் தெரிந்த டீக்கடையை நோக்கி அருண் செல்ல, தன் கையிலிருத்த வாட்டர் பாட்டிலை நீட்டியவாறே ஹரிப்பிரியா செல்ல, தன் தங்கையிடமிருந்து பாட்டிலை வாங்கிக் கொண்டு
" ஹரி... அவர் இவ்வளவு வேகமா கார் ஓட்டுவார்னு உனக்கு முன்னாடியே தெரியுமா...? தெரிஞ்சுதான் அவர சீண்டி விட்டியா..? " என்று கேட்க.. சில நொடிகள் மௌனமாக இருந்தவள்...
" அருண் ஒரு கார் ரேஸர் ஐஸு... எனக்கு அவன முன்னாடியே தெரியும்.. நாங்க லவ் பண்ணோம்... எங்களுக்குள்ள இப்ப ஒரு பிரச்சனை.." என்று கூற ஐஸ்வர்யா திகைத்தாள்...
" என்னடி சொல்லற... எனக்குத் தெரியாம எப்படி இதெல்லாம் நடந்துச்சு... அருண் கூட எப்படி பழக்கம்..? அப்படி என்னதான் உங்களுக்குள்ள பிரச்சனை..? "
" என்கிட்ட எதையுமே கேக்காத ஐஸு... நேரம் வரும்போது
நானே சொல்லறேன்... இப்போதைக்கு எங்களுக்குள்ள நடக்கற எதையுமே கண்டுக்காத ஐஸு... ப்ளீஸ்.. " என்று கெஞ்சலாக கூற
" அடிப்பாவி உங்க ரெண்டு பேருக்கும் சண்டைனா அதுக்கு நான் என்னடி பண்ணினேன்... என்ன ஏண்டி பலி குடுக்க பார்த்தீங்க..." என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த...
" ஹா ஹா ஹா ஹா.." என சத்தமாக சிரித்தவள் ஐஸ்வர்யாவை கட்டிக் கொண்டு...
" சாரி ஐஸு... அவன் மேல எவ்வளவு காதல் இருக்கோ அதே அளவு கோவமும் இருக்கு... அதான் அவன பார்த்ததும் என்னை கட்டுபடுத்திக்க முடியல.. "
"ஹரி... நீ அருண காதலிக்கறேன்னு சொல்லற.. அப்பறம் எதுக்கு போட்டி போடற... விட்டு குடுத்து போறதுதான் வாழ்க்கை ஹரி..." என்று ஐஸ்வர்யா எடுத்துக் கூற...
" அப்படி இல்ல ஐஸு... நான் வாழும் காலம் முழுசும் அருண் முன்னாடி. அவனோட காதல் முன்னாடி தோத்து போகதான் ஆசை படறேன்... ஆனா அதுக்காக அருண சேர்ந்தவங்க கிட்ட என்னால தோத்துப் போக முடியாது..."
"............"
"அருண்கிட்ட விட்டு குடுக்க என்னால முடியும்... ஆனா யாருக்காகவும் எதுக்காகவும் அருண விட்டுத்தர மாட்டேன்..." என்று கண்கலங்க ஹரிப்பிரியா கூற... ஆறுதலாக தன் தங்கையை அணைத்து சமாதானப்படுத்தியவள்
" அருண சேர்ந்தவங்கனு நீ சொல்லறது நந்தினியையா...? " என்று கேள்வியெழுப்ப, 'ஆம் ' என்பதிப்போல தலையசைத்து பதிலளித்தாள்..
" நான் வேணும்னா நந்தினி கிட்ட பேசட்டா..? ஹரி " என்க...
" வேண்டாம் ஐஸு... நானே பார்த்துக்கறேன்... ஒருவருசமா அருண பார்க்க கூடாதுன்னு நானும் வைராக்கியமா இருந்துட்டேன்... அதேமாதிரி அவனும் இருந்துட்டான்... எப்ப அவனே என்னைத்தேடி வந்துட்டானோ.. இனி அவனே நினைச்சாலும் என்கிட்டே இருந்து அவன் நிழலை கூட விளக்கி வைக்க முடியாது... " என்று ஹரிப்பிரியா கூறிக்கொண்டிருக்க கைகளில் தேநீர் கோப்பைகளை ஏந்தியவாறு அருண் வருவது தெரிந்ததும், ஐஸ்வர்யாவிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு சற்று தள்ளி சென்று கலங்கிய கண்களை மறைக்க முகத்தை கழுவ ஆரம்பித்தாள்..
தான் வாங்கி வந்திருந்த தேநீரை ஐஸ்வர்யாவின் கைகளில் திணித்துவிட்டு
" இப்ப இத குடிங்க... லெமன் டீ குடிச்சா வாமிட் கொஞ்சம் கண்ட்ரோல் ஆகும்... மேட்டுப்பாளையம் போனதும் ஏதாவது ப்ரூட் ஜூஸ் வாங்கித்தறேன்..." என்று கூற, அருணை பார்த்து ஒரு முறைப்பை பதிவு செய்துவிட்டு தேநீரை எடுக்கொண்டு ஹரிப்பிரியாவிடம் சென்று, இருவரும் பருக ஆரம்பித்தனர்..தேநீர் குடித்து முடித்ததும் ஐஸ்வர்யா வழக்கபோல பின்புறமாக அமர்ந்து கொள்ள, ஐஸ்வர்யா முன்புறமாக அருணின் அருகில் அமர்ந்தாள்.. அருண் ஹரிப்பிரியாவை முறைத்தவாறே இருக்க
" சும்மா எதுக்கெடுத்தாலும் முறைக்காதடா.. பின்னாடி புல்லா வாந்தி... எப்படி அங்க உட்கார்றது... நான் இங்க தான் உட்காருவேன்... என்ன முறைக்கறத விட்டுட்டு கார எடு..." என்று திமிராக கூற
"இப்படி திமிரா பேசித்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வாந்தியெடுத்த... மறுபடியும் அதே நிலைமை உனக்கு வேணுமா..?
" ஐயோ அருண்... சரியோ தப்போ உங்களால ஹரிப்பிரியா வாந்தியெடுத்தா அதுல ஒரு லாஜிக் இருக்கு... கூட சேர்ந்து நான் ஏன் எடுக்கணும்" என்று இருபொருள் பட ஐஸ்வர்யா கூற... ஐஸ்வர்யா கூறியதன் அர்த்தம் புரிந்ததும் 'க்ளுக்' என ஹரிப்பிரியா சிரித்துவிட்டாள்
" என்ன சொன்னிங்க...?" என்று ஐஸ்வர்யாவை ஏறிட்டு வினவ
" அதில்லை அருண்... சண்டை உங்களுக்கும் ஹரிக்கும்தான... ஹரிய பழிவாங்க நீங்க ஏதாவது செஞ்சா காருல இருக்கற நானும் கூட சேர்ந்து பாதிக்கப் படறேன்... என்னால இதுக்குமேல வாந்தியெடுக்க முடியாது ப்ளீஸ்" என்று கெஞ்ச....
" சாரிங்க " என்று கூறிவிட்டு நிதானமாகவே ஒட்டிக்கொண்டு, மேட்டுப்பாளையம் வந்ததும் ஒரு ஜூஸ் கடையின் முன்பாக நிறுத்தி ஏதாவது வேண்டுமா என்று வினவ, இருவருமே வேண்டாம் என்று தலையாட்டவும், மேற்கொண்டு எதுவும் பேசாமல் மருத்துவமனைக்கு சென்று அவர்களை இறக்கிவிட்டுவிட்டு, காரை சர்வீஸ் செய்து எடுத்து வருவதாக கூறி காரை எடுத்துக் கொண்டு அருண் கிளம்ப, கார் கண்ணைவிட்டு மறையும் அசையாது நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிப்பிரியா...
" ஹரி...! உன் ஆளு எங்கயும் போக மாட்டார்.. காரை சர்வீஸ் பண்ணிட்டு திரும்பி இங்கதான் வருவார்.. அதனால உள்ள போகலாமா..? என்று ஹரிப்பிரியாவை தன் புறம் திருப்ப, கண்களில் கண்ணீரோடு நின்றிந்து தங்கையை கண்டதும் உள்ளம் பதற...
" என்ன ஹரி இது சின்ன குழந்தையாட்டம்..." என்று கூறி அணைத்துக் கொள்ள, சண்முகம் வெளியே வருவது தெரிந்ததும் ஹரிப்பிரியா கண்களை துடைத்துக் கொண்டு இயல்பாக இருக்க ஆரம்பித்தாள்...
தங்கள் மகள்களை கண்டதும் அவரைகளை நோக்கிச் சென்றவர், சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றி அருணைத் தேடியவாறே,
" ஐஸும்மா.! அருண் எங்கடா..? " என்று வினவ, அதற்கு பதில் கூற ஐஸ்வர்யா வாய்திறக்கும் முன்
" அப்பா..! இங்க நாங்க இரண்டு பேர் வந்து நிக்கறது உங்களுக்குத் தெரியல. எப்ப வந்தோம்னு ஒருவார்த்தை கூட எங்களை பத்தி விசாரிக்கல, வந்ததுமே டிரைவர பத்தி விசாரிக்கரிங்க.." என்று கோபமாக கூறிவிட்டு, அவரிடம் ஏதும் பேசாமல் மருத்துவமனைக்குள் சென்றுவிட்டாள்.
சண்முகத்திற்கு ஏதோ..? சரியில்லை என்று தோன்ற
" ஏன்டா..? ஐஸு... இவ்வளவு நேரம். வர வழில அருண் கூட ஏதாவது சண்டையா..? அருணை ஏதாவது சொல்லிட்டிங்களா..? "என்று தன் மகளின் கோபத்தை எண்ணி கலக்கமாக வினவ
" அதெல்லாம் இல்ல சித்தப்பா.. கார்ல நாங்க வாந்தி எடுத்துட்டோம். அதனால காரை வாட்டர் சர்வீஸுக்கு விட அருண் கொண்டு போயிருக்கார். ஹரிய பத்திதான் தெரியும்ல. அவள பத்தி முதல்ல கேக்காம டரைவர பத்தி கேட்டதும் கோவிச்சுகிட்டா.. வேற
ஒண்ணுமில்லை." என்று தனது சித்தப்பாவின் மனம் கலவரப் படாதவாறு முகத்தில் எதையும் வெளிப்படுத்தாமல் ஐஸ்வர்யா கூற, தன் மகளைப் பற்றி தெரிந்திருந்தும் முதலில் அருணை பற்றி விசாரித்த தன் மடத்தனத்தை நொந்து கொண்டு, ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றார்.
ஹரிப்பிரியா தன் பெரியப்பாவிடம் விளையாடிக் கொண்டிருக்க,
செண்பகம் தன் மகள்களுக்கு காப்பி கலந்து கொண்டிருந்தார். உள்ளே நுழைந்ததும் ஐஸ்வர்யா தன் தந்தையை சென்று கட்டிக் கொண்டு அவரது உடல் நலம் பற்றி விசாரித்துவிட்டு, மேலும் அங்கிருந்த தந்தையின் மருத்துவ அறிக்கைகளை பார்த்து அவருக்கு ஒன்றும் இல்லை என்று உறுதியானதும், ஹரிப்பிரியாவிடம் திரும்பி,
" என்ன ஹரி இது..? இப்ப எதுக்கு நீ சித்தப்பா மேல கோவ படற..? " என வினவ, ஹரிப்பிரியா பதில் ஏதும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்... தனது மகளை சமாதானம் செய்யும் நோக்கில்
" ஹரிம்மா..! நீங்க வந்ததும் அப்பா உங்களை பத்தி முதல்ல கேக்காதது தப்புதான். ஆனா உங்களை பத்தி விசாரிக்க நாங்க எத்தனையோ பேர் இருக்கோம். அருணுக்கு யாரும் இல்லடா.. அவன் மட்டும் உயிரை பத்தி கவலைப்படமா.. நேத்து ராத்திரி அங்க துணிஞ்சு போயிருக்காமா இருந்திருந்தா..? இந்நேரம் பெரியம்மாவும் பெரியப்பாவும் உயிரோடையே இருந்திருக்க மாட்டாங்கடா.. அவன் நைட் புல்லா தூங்கல. சாப்பிட்டானா இல்லையானு கூட தெரில. அதான் வந்ததும் அவன பத்தி அப்பா கேட்டேன் சாரிடா.." என்று சண்முகம் கூறியதை கேட்டதும்தான் தனது உயிரை பணயம் வைத்து தங்களது பெற்றோரை அழைத்து வந்தது அருண் என்று அவர்களுக்கு தெரிய வர, மேற்கொண்டு தங்களுக்கு நடந்த கோர சம்பவங்களையும், அருண் துரிதமாக செயல்பட்டு தங்களை காப்பாற்றியதையும் செண்பகம் கூற, உடல் அதிர, உள்ளம் பதற
இருவருமே அதிர்ச்சியில் உறைந்து போய் ஐஸ்வர்யா தந்தையை கட்டிக் கொண்டு அழ ஆரம்பிக்க, ஹரிப்பிரியா செண்பகத்தை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்...
" ஏம்மா எங்க கிட்ட இத முதல்லையே சொல்ல-ல" என்று அழுது கொண்டே தன் பெரியம்மாவிடம் ஹரிப்பிரியா வினவ, தன்னைக் கட்டிக்கொண்டு அழும் மகளின் தலையை நீவியவாறு
" ஹரிம்மா..! நாங்கதான் எதுமே ஆகாம தப்பிச்சுட்டோம்ல . அதை உங்ககிட்ட சொல்லி உங்களையும் பயப்படுத்த வேண்டாமுன்னுதான் சொல்லல" என்று செண்பகம் கூறிக் கொண்டிருக்க.. காரை சர்வீஸ் செய்துவிட்டு சத்தியமூர்த்தியின் அறையை விசாரித்து உள்ளே நுழைந்த அருண்.... பெண்கள் இருவரும் அழுது கொண்டிருக்க, என்ன செய்வதென்று புரியாமல் அறையின் ஓராமாக நின்று கொள்ள, அருணை கவனித்த சண்முகம்
" வா அருண்..! என்று அழைத்து.. அண்ணா இவன்தான் அருண் " என்று தன் அண்ணனுக்கு அறிமுகப்படுத்த, சாய்ந்தாவரு உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தி மெதுவாக நிமிர்ந்து தனது இரு கைகளையும் குவித்து கண்ணகளில் கண்ணீரோடு தனது நன்றியை வெளிப்படுத்த, அவசரமாக சத்தியமூர்த்தியை நெருங்கி அவரது கைகளை பற்றி கிழே இறக்கிவிட்டு, ஐஸ்வர்யாவையும் ஹரிப்பிரியாவையும் பார்க்க, அவர்களும் அழுதுகொண்டே கை கூப்பி தனது நன்றியை தெரிவிக்க, கைகளை கிழே இறக்குமாறு கண்களால் சைகை செய்தவன்
" என்ன சார் இதுக்கு போய் கண் கலங்கறீங்க. இதெல்லாம் வேண்டாம் சார். உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு சார்..? " என்று அவரது நலம் விசாரித்தவன், அவர் நலமாக இருப்பதாக தலையை ஆட்டவும்
" எப்ப டிஸ்சார்ஜ்னு சொன்னாங்களா..? " என்று சண்முகத்திடம் வினவ, எப்படியும் இரவாகிவிடும் என்று சண்முகம் கூற
" சரி சன்முகண்ணா அப்படினா நான் கிளம்பறேன். கொஞ்சம் வெளிய போகவேண்டிய வேலை இருக்கு.. உங்க டிரைவர் வந்துட்டாரா..? " என்று சண்முகத்திடம் வினவ
" வந்துட்டார் அருண்.. என் கார எடைக்கு போடவேண்டாம்..? டயர மட்டும் மாத்தினா..? இன்னும் கொஞ்ச நாள் ஓடும்னுசொன்னார்..? அதனால டயர மாத்தறதுக்காக எடுத்துட்டு போக சொல்லிருக்கேன்.." என்று சண்முகம் சொல்ல
" ஹா ஹா ஹா ஹா " என்று சிரித்தவன்
" அப்ப பேரிச்சம்பழம் அவ்வளவுதானா..?" என்க
" ஹா ஹா ஹா... அதுக்குதான் அண்ணா கார் இருக்குள்ள அதுல பார்த்துக்கலாம்" என்று கூற, புன்னகையுடனே தலையை ஆட்டி அதை ஆமோதிக்க செண்பகத்தை தவிர்த்து மற்ற மூவரும் இவர்கள் எதுக்கு இப்ப பேரிச்சம்பழத்தை பற்றி பேசுகிறார்கள் என்று புரியாமல், ஆக்ஸிடென்ட் ஆனா காருக்கும் பேரிச்சம்பழத்துக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்ப ஆரம்பித்தனர்..
" சரி அருண் நீ உடனே கிளம்பணுமா..? இங்கயே தூங்கு அருண்... இல்ல பக்கத்துல ஏதாவது லாட்ஜ்ல ரூம் எடுத்து கூட தூங்கிட்டு எங்க கூடயே கிளம்பலாம்ல" என்று அருணை அப்படியே அனுப்ப மனமில்லாமல் சண்முகம் கூற
" இல்லண்ணா கண்டிப்பா போய்தான் ஆகணும்.. எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லைண்ணா... பஸ்ல ஏறினா ஒருமணி நேரத்துல வீட்டுக்கு போய்டுவேன்..." என்று கூற, சரி வா சப்பிட்டுடாவது போகலாம் என்று சண்முகம் கூற, மறுக்காமல் சரி எனக் கூறியவன், சண்முகம் தன் மகள்களை அழைத்துக் கொண்டு செல்ல, சத்தியமூர்த்தியிடமும் செண்பகத்திடமும் விடை பெற்றுவிட்டு சண்முகத்தின் பின்னால் செல்ல துவங்கினான்...
அங்கிருந்த உயர்தர ஹோட்டலில் உள்ளே நுழைந்ததும், தான் சாப்பிட்டுவிட்டதாகவும், அதானால் அவர்கள் மூவரையும் சாப்பிடுமாறு பணித்துவிட்டு, கைப்பேசியில் அழைப்புவர அதை ஏற்று பேசியபடியே சண்முகம் வெளியே செல்ல, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருக்க... உணவக ஊழியர் வந்து அவர்களுக்குத் தேவையானவற்றை ஆர்டர் எடுத்துக் கொண்டு செல்ல... ஹரிப்பிரியாவோ அருணை விழுங்கி விடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தாள்...
" ஹேய்..! இப்ப எதுக்குடீ என்ன இப்படி முறைக்கற " என்று அருண் வினவ
" நான் உன்ன பார்த்தா உனக்கென்ன வந்துச்சு.. எனக்கு பார்க்கனும்னு தோணுது பார்க்கறேன்.. உனக்கும் பார்க்கணும்னு தோணுச்சுனா பாரு இல்லைனா வாய..... உக்காரு " என்று உதட்டில் கைவைத்து சைகை செய்தவாறு கூற..
" உனக்கு உடம்பு முழுக்க திமிருடி.. உன் அக்கா இருக்கறதுனால நீ தப்பிச்ச இல்லைனா..?"
" இல்லைனா என்னடா பண்ணிருப்பா "
" வேண்டாம் பிரியா என்ன சீண்டாத... அது உனக்கு நல்லதில்ல.."
" இந்த மிரட்டற வேலையெல்லாம் அவகிட்ட வச்சுக்க.. என்கிட்டே காமிக்காத " என்று நந்தினியை இழுத்தாள்
" பிரியா நந்தினியை பத்தி நீ மட்டுமில்ல யார் சொன்னாலும் நான் சும்மா இருக்க மாட்டேன் " என்று எச்சரிக்க
" நான் அப்படிதான் பேசுவேன்.. உன்னால என்னடா செய்ய முடியும் " என்று கோபமாக கூற
" ச்சை. நீ இருப்பனு தெரிஞ்சிருந்தா நான் வந்துருக்கவே மாட்டேன்... நந்தினிக்கும் எனக்கும் இருக்கற உறவை உன்னால புரிஞ்சுக்க முடியாது... உனக்கு புரிய வைக்கவேண்டிய அவசியமும் எனக்கில்ல... உன் முகத்துல முழிக்க கூட எனக்கு விருப்பமில்ல.. இதுவே உன்ன நான் பாக்கறது கடைசியா இருக்கும் " என கோவத்தில் வார்த்தைகளை கடித்துத் துப்ப, அருண் கூறுவதை கேட்டு உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தாலும் அதையெல்லாம் வெளியே காட்டினால் அது ஹரிப்பிரியா அல்லவே, அதனால் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு
" நானும் உன் முகத்துல முழிக்க கூடாதுன்னு இத்தனைநாள் பர்க்காமதான இருந்தேன். எப்ப என்ன தேடி நீயே வந்துட்டையோ.. இனி நீயே நினைச்சாலும் நான் உன்ன நான் விடப் போறதில்ல " என்று சாவல் விட
" பார்க்கலாம் டீ.. சவாலா விடற " என்று எகிறினான்
" இந்த பிரியா யாருன்னு பார்க்கதான போற அருண். கூடிய சீக்கிரத்துல எனக்கும் உனக்கும் இடைல நந்தி மாதிரிவர நந்தினி கிட்ட இருந்து உன்ன பிரிக்கறேண்டா " என்று கூற, அதற்கு மறுத்து கூற அருண் வாய் திறக்கும் முன்
" ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கறிங்களா.. இது ஹோட்டல் நம்ம வீடு கிடையாது " என்று இருவரையும் அடக்கிய ஐஸ்வர்யா அருணிடம் திரும்பி...
" அருண் உங்க ரெண்டு பேருக்கும் எப்படி பழக்கம்.?. என்ன பிரச்சனைன்னு.? எதுவும் எனக்கு தெரியாது... ஆனா நீங்க ரெண்டு பேரும் தேவையில்லமா சண்டை போடறிங்கலோனு தோணுது...
என்று கூறிக் கொண்டிருக்க, அவர்கள் ஆடர் செய்த உணவை எடுத்துக் கொண்டு பேரர் வரவே மூவரும் அமைதியாகினர்.. அதற்குள் பேசிவிட்டு சண்முகமும் அவர்களுடன் வந்து அமர்ந்து கொள்ள இருவரும் ஒருவரை ஒருவர் சண்முகம் அறியாதவாறு முறைத்துக் கொண்டே சாப்பிட்டதும், அதற்கான தொகையை சண்முகம் செலுத்த, சண்முகத்திடம் ஐஸ்வர்யாவிடமும் விடை பெற்றுவிட்டு, ஹரிப்பிரியாவை ஏறிட்டும் கூட பார்க்காமல் கோவை செல்லும் பேருந்து வரவும் ஓடிச் சென்று அருண் அதில் ஏறி அமர்ந்துகொள்ள, பேருந்து முன்னோக்கி கிளம்பத் தொடங்க அருணின் நினைவுகள் பின்னோக்கி நகரத் தொடங்கியது
கடலளவு நேசம் இருவருக்குள்ளும் இருந்த போதிலும், ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமல் தன்னையும் காயப்படுத்தி, தான் நேசிக்கும் இதயத்தையும் கயாப்படுத்திக் கொண்டு வெளியே சிரித்து உள்ளே அழுது கொண்டிருக்கிறார்கள். இந்த காதல் பறவைகளின் பிரிவுக்கு நந்தினி எப்படி காரணம்... பிரிந்த இதயங்கள் இணையுமா..? அல்லது பிரிவே நிரந்தரமா..?
விருப்பம் தொடரும்...

 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெறுப்பு....6
மேட்டுப்பாளைத்திலிருந்து கிளம்பிய அருண் கோவை வந்ததும் நந்தினிக்கு அழைக்க, காலையில் அருண் வராததினால் கோபத்திலிருந்த நந்தினி அருணின் அழைப்பை ஏற்காமல் துண்டித்தவாறே இருந்தாள்... நான்கைந்து முறை தொடர்பு கொண்டும் நந்தினி அழைப்பை ஏற்க மறுத்ததால், சிறிது நேரம் யோசித்தவன்... தான் இப்பொழுதிருக்கும் மனநிலையில் நந்தினியை தேடிச் செல்வது சரியாக இருக்காது எனத் தோன்ற, நந்தினியின் வீட்டிற்கு செல்லும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு, ஒரு ஆட்டோ பிடித்து நேராக தனது வீட்டிற்கு சென்றவன், உடல் அசதி தீர ஒருகுளியல் போட்டதும்.. அழையா விருந்தாளியாக தூக்கம் அருணின் இமைகளை தழுவ தனது மொபைலை அனைத்து அதை சார்ஜரில் பொருத்திவிட்டு, கட்டிலில் பொத்தென்று விழுந்தவன் சிறிது நேரத்திற்குள்ளாகவே நன்றாக உறங்கிப் போனான்...
நந்தினியோ...; தான் அழைப்பை ஏற்காததால், அருண் நேரில் கிளம்பி வருவான் என்று எதிர்பார்த்திருக்க அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நேரம் செல்ல செல்ல அருண் எங்கு இருக்கிறான் என்ற தகவல் கூட தெரியாமல் தொடர்ந்து அருணின் எண்ணிற்கு அழைத்தவாறே இருக்க, கைப்பேசி அனைத்து வைக்கப்பட்டிருக்கும் தகவலே பதிலாக கிடைத்ததில் நந்தினியை ஒருவித பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது... மதியம் அவனது வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீடும் பூட்டியிருக்க தன்னிடம் கூட சொல்லாமல் அப்படி எங்கு சென்றிருப்பான் என்று எண்ணியவாறே I HATE YOU என்ற குறுந்தகவலை அனுப்பிவிட்டு அருண் நேரில் வருவான் என்று காத்திருக்க ஆரம்பித்தாள்.. மணி ஏழு ஆனது... எட்டு ஆனது... ஒன்பதும் ஆனது... அருணிடமிருந்து எந்த தகவலும் இல்லாது போகவே நந்தினி அழ ஆரம்பித்திருந்தாள்...
அருணுக்கு எதுவும் ஆகியிருக்காது என்று சாந்தி எவ்வளவு சமாதானம் சொல்லியும் நந்தினி அழுவதை நிறுத்துவதாக தெரியவில்லை... ஒருகட்டத்திற்குமேல் அவளின் அழுகையை கண்டு சலித்துப் போய் அழட்டும் என்று சாந்தியும் விட்டுவிட்டார்.. இரவு நேரமானதால் நந்தினியை வெளியே அனுப்ப சாந்தி அனுமதிக்கவில்லை.. அதனால் மறுபடியும் அருணை தேடி செல்லவும் முடியாது... வீட்டிலும் அருண் இல்லை.. அவனது நண்பர்களின் கைபேசி எண்ணும் தெரியாது... என்ன செய்வதென்று தெரியாமல், நொடிக்கொருமுறை கைபேசியை பார்த்தவாறே வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் சென்றவாறே...'டேய் அருண்..! போன எடுடா... ப்ளீஸ்... இனி உன்கூட சண்டை போட மாட்டேன்' என மனதிற்குள் அருணிடம் மன்றாடியாவாறே அமர்ந்திருக்க, வீட்டின் வாயிற் கதவு திறக்கும் ஓசை கேட்டதும், அருணாக இருக்குமென்று சிட்டாக பறந்தவள், அங்கே தன் தந்தையை கண்டதும்...
"டாடி..." என ஓடிச்சென்று சிவக்குமாரை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்..
கண்கள் கலங்க தேம்பி தேம்பி அழுதவாறு தன்னை கட்டிக் கொண்டு நின்றிந்த நந்தினியை கண்டதும் ஒருநிமிடம் பதறிய சிவக்குமார்...
" நந்தினிம்மா..! என்னடா ஆச்சு..? ஏண்டா அழறா..? மம்மி ஏதாவது சொன்னாங்களா..? " என தன் மகளின் அழுகைக்கான காரணம் புரியாமல் குழம்பியவாறே கேட்க
" டாடி... அருண்... " என்று தேம்ப ஆரம்பித்தாள்..
" ஏண்டா அருணுக்கும் உனக்கும் ஏதாவது சண்டையா..? அருண் ஏதாவது சொல்லிட்டானா..? " என்று காலையில் நந்தினி கூறியதை வைத்து சிவக்குமார் கேட்க... இல்லை என்று தலையசைத்தவள்
" அருண் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கு டாடி... அவன் எங்க இருக்கானும் தெரில... அவனுக்கு என்ன ஆச்சுனும் தெரில " என்று அழுது கொண்டே கூற,
"உஸ்ஸ்ஸ்" என்று பெரு மூச்சொன்றை வெளிப்படுத்திய சிவகுமார்...
" நந்தினிம்மா... இதுக்குதான் அழறியா..? நான் கூட என்னமோ ஏதோனு பயந்துட்டேன். அருண் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்குனா, சார்ஜ் தீர்ந்திருக்கும். காலைல இருந்து வீட்டுக்கு வரலைனா ஒருவேளை அவன் வெளிய எங்கையாவது போயிருப்பான்... வந்ததும் உன்ன பார்க்க
வருவான் " என்று கூற
" இல்ல டாடி நான் இப்பவே அருண பார்க்கணும்... ப்ளீஸ் டாடி வாங்க அருண் வீட்டுக்கு போயிட்டு வந்தரலாம்..." என்று பிடிவாதமாக கூற
" நந்தினிம்மா... டாடிக்கு பசிக்குதுடா.. சாப்டுட்டு போலாமா..?" என்று கேட்க
" டாடி... நான் அருணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம பதறிட்டு இருக்கேன்.. உங்களுக்கு இப்ப சாப்பாடுதான் முக்கியமா..? நீங்க ஒன்னும் வரத் தேவை இல்ல. நானே போய்க்கிறேன் " என்று முறைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைய, அங்கே நடப்பவைகளை பார்த்து சிரித்தபடியே நின்றிந்த தன் மனைவியை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு, மகளை சமாதானம் செய்ய சிவக்குமாரும் வீட்டினுள் நுழைய, சிரித்தபடியே சாந்தியும் பின் தொடர்ந்தார்...
தான் அணிந்திருந்த உடையை மாற்றிவிட்டு, கையில் ஹெல்மெட்டை தூக்கி கொண்டு வந்த நந்தினியை பார்த்ததும்
" நந்தினிம்மா... அருண் என்ன சின்ன குழந்தையா..?. திருவிழால தொலைஞ்சு போறதுக்கு... அவனுக்கு ஒன்னும் ஆகாதுடா... நீதான் தேவை இல்லாம பயப்படற..." என்று சமாதானம் செய்ய..
" நீங்க என்ன சொன்னாலும் சரி டாடி. அருண நேர்ல பார்க்காம என்னால நிம்மதியா இருக்க முடியாது. இப்ப நீங்க என்கூட வரிங்களா...? இல்ல நானே தனியா போகட்டுமா..?" என பிடிவாதம் பிடிக்க... டைனிங் டேபிளில் தட்டை வைத்து தன் மனைவி அடுக்கி வைத்திருந்த பிரியாணியையும், நாட்டுக்கோழி வருவலையும் பார்த்து எச்சில் விழுங்கியவர்... நந்தினியை பார்க்க அவளோ தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள்... தனக்கு வேறு வழியில்லை என்று அரைகுறை மனதோடு கிளம்பச் செல்கையில்... மீண்டும் வாயிற் கதவு திறக்கும் ஓசை கேட்க, விருட்டென கிளம்பிச் சென்றவள்... கதவை திறந்து பைக்கை தள்ளிக்கொண்டு வரும் அருணை கண்டதும்,
" அருண் " என்று கதறியவாறே ஓடிச்சென்று அருணை கட்டி கொண்டு அழ ஆரம்பித்தாள்...
அருணுக்கும் ஒன்றும் விளங்கவில்லை... தன்னை பார்த்ததும் நந்தினி தன்னிடம் சண்டை போடுவாள்... அவளை எப்படி சமாளிக்கலாம் என்று அருண் யோசித்துக் கொண்டிருக்க... நந்தினியோ சிறு குழந்தையை போல
அருணின் மார்பில் அடைக்கலமாகியிருந்தாள்.. நந்தினியை சமாதானப்படுத்தியவாறே வீட்டினுள் அழைத்து வர சாந்தியும் சிவக்குமாரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்... அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து நந்தினியையும் அருகில் அமர்த்தி தன் மடியில் தலை சாய்த்திக் கொண்டு சாந்தியை நோக்கி...
" அக்கா... நந்தினி ஏன் அழறா...? நீங்க எதவாது திட்டுநீங்களா...?" என சாந்தியை பார்த்து கேள்வியெழுப்ப...
" ம்க்கும்.... அதான எனக்கு வேலை... என் மாமியார திட்டற அளவுக்கு உங்கக்காவுக்கு தைரியம் இல்ல அருண்... அவ உன்ன காணோம்னுதான் அழுதுட்டு இருக்கறா.." என்று கூற
" ஹேய் லூசு...! இதுக்காடி அழற... நான் என்ன...." என்று கூறி முடிக்கவில்லை... அருணின் மடியில் படுத்திருந்தவள் துள்ளி எழுந்து
அருகிலிருந்த தலையணையை எடுத்து " மடார் மடார்" என்று அருணின் தலையில் அடித்தவாறே
" யார பார்த்துடா லூசுனு சொல்லற... எருமை மாடு, பன்னி,பேய் பிசாசு...
நீதாண்டா லூசு... உன்ன காணோம்னு உயிர கையில பிடிச்சுட்டு உக்காந்திருக்கேன்... என்ன பார்த்தா லூசுன்னு சொல்லற..." என்று கூறியவாறு தொடர்ந்து அடிக்க ஆரம்பித்தாள்...
" ஐயோ சாரி..! சாரி..! சமாதானம் சமாதானம்... எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..." என்று கெஞ்சியவாறே நந்தினியிடமிருந்து தப்பித்து ஓட,
நந்தினியும் விடாமல் துரத்தினாள்... இருவரும் டைனிங் டேபிளை சுற்றி சுற்றி வட்டமடிக்க, ஒருநிலைக்கு மேல் நந்தினியால் அருணை துரத்த முடியாமல் சோர்ந்து போய் அமர்ந்துவிட...
" என்ன மேடம்... சார பிடிக்க முடியலையா...? ஐயோ பாவம்... நீ இன்னும் வளரனும் நந்தினி... " என்று நந்தினியை சீண்ட
" போடா எனக்கு பசிக்குது... சாப்பிட்டு உன்ன கவனிச்சுக்கறேன் எருமை..." என்று கூறிவிட்டு டைனிங் டேபிளில் சென்று அமர
" சரி போர் நிறுத்த ஒப்பந்தம் இப்ப அமலுக்கு வந்தாச்சு. எனக்கும் பசிக்குது எதா இருந்தாலும்.. சாப்பிட்டதுக்கு அப்பறம்தான் நாம கண்டினியூ பண்ணனும் ஓகேவா..." என்று கூற
" வெவ் வெவ் வெவ் வே... " என பழிப்பு காட்டிவிட்டு நந்தினி சாப்பிட தொடங்க, அருணும் நந்தினியின் அருகில் அமர்ந்து தனக்கு தேவையானவற்றை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான்...
" காலைல இருந்து எங்க அருண் போன...? ஏதாவது அர்ஜென்ட் வொர்க்கா..?" என்று சிவக்குமார் ஆரம்பித்தார்...
" காலைல இல்ல மாமா... விடிய காலைல ரெண்டு மணிக்கே கிளம்பிட்டேன்..." என்று சண்முகம் அழைத்து முதல்... சத்தியமூர்த்தியையும் அவரது மனைவியையும் யானையிடமிருந்து காப்பற்றியது... மருத்துவமனையில் சேர்த்தது... அவரது பெண்களை அழைத்து வந்தது உட்பட அனைத்தையும் சொல்லி முடிக்க... நந்தினி யானையுடனான காட்சிகளை கற்பனை செய்து பார்த்து மீண்டும் அழ ஆரம்பித்தாள்...
" நந்தினி இப்ப எதுக்குடா அழற... எனக்குதான் ஒன்னும் ஆகலைல..." என்று சமாதானமாக கூற
" ஒருவேளை ஏதாவது ஆயிருந்தா...?" என்று நந்தினி கலங்கிய விழிகளோடு அருணை ஏறிட்டு பார்க்க...
" ஏதாவது ஆகியிருந்தா...?" என்று இழுத்தவன்
" ம்ம்ம்ம் இப்ப நான் வரலன்னு கொஞ்சநேரம் அழுத மாதிரி... ஒரேஅடியா திரும்பி வரவே மாட்டேன்னு முடிவாகியிருந்தா இன்னும் கொஞ்சநாள் அழுதிருப்ப" என்று நந்தினியை வம்பிழுப்பதாக எண்ணிக் கொண்டு அவளை ஏறிட்டும் பார்க்காமல், அவளது மனநிலையையும் அறியாமல், சாப்பிட்டுக் கொண்டே அருண் கூற, பாதியிலே தட்டில் கைகளை கழுவிவிட்டு மூக்கை உறிஞ்சியவாறே அருணை அழுத்தமாக பார்த்துவிட்டு நந்தினி எழுந்து செல்ல, தன் சொன்னதை வழக்கம் போல் தவறாக புரிந்து கொண்டதை எண்ணி நொந்தவாறு...
" நந்தினி.... சாரிடா.. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... உன்மேல பிராமிஸ் இனி அப்படி சொல்ல மாட்டேன்" என்று பின்னாலேயே கெஞ்சிக் கொண்டு சென்றவன்... மீண்டும் நந்தினியின் கைகளை பற்றி இழுத்துவந்து தன் தட்டிலிருந்த உணவை எடுத்து ஊட்ட ஆரம்பித்தான்...
முதலில் வாயை இறுக மூடிக் கொண்டு வாங்க மறுத்தவள், அருண் பார்வையாலையே கெஞ்ச சற்று மனமிறங்கி அழுது கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்...
" உனக்கு எதுக்கு அருண் இந்த வேண்டாத வேலை... ரொம்ப ஈசியா சொல்லிட்ட... கொஞ்சநாள் அழுவோம்னு... அத சொல்லறதுக்கு முன்னாடி கொஞ்சமாது யோசிச்சியா..." என்று சாந்தியும் கண்கள் கலங்கியவாறு கேட்க..
" அக்கா சாரிக்கா... நான் நந்தினிய வம்பிழுக்க சொன்னேன்... விளையாட்டுக்குத்தான் சொன்னேன்... இனி இப்படி பேசல போதுமா..? " என்று சாந்தியிடமும் மன்னிப்பு வேண்டினான்
"எதுக்கு எல்லாரும் அழுது அருண சங்கடப் படுத்தறீங்க... அவன் எப்பேர்பட்ட காரியம் பண்ணிருக்கானு தெரியுமா...? "
"......"
" உங்களோட அன்பு பாசம் எல்லாமே ஒருத்தனுக்கு தைரியம் குடுக்கறதா
இருக்கணும்... அவன மேல மேல உயர்த்தி பிடிக்கறதா இருக்கணும்... அவனோட திறமைய மண்ணுல போட்டு புதைக்கறதா இருக்க கூடாது... அருண் எதையாவது செஞ்சாலோ, இல்ல செய்யறதுனாலோ ரெண்டு பேரும் இப்படி ஒப்பாரி வைக்கிறத முதல்ல நிறுத்துங்க..." என்று கோவமாக சிவக்குமார் கூற... அருணுக்கோ ஐயோ வென்றிருந்தது...
" நீங்க ஆம்பளைங்க... எல்லாத்தையும் ஈசியா சொல்லிடுவிங்க... நந்தினி சாயங்காலத்துல இருந்து இப்ப அருண பாக்கற வரை பைத்திய காரி மாதிரி சுத்திட்டு இருக்கா... நானுமே போன் பண்ணி எடுக்கலைன்னு பயந்துட்டேதான் இருந்தேன்... அத நந்தினி கிட்ட காமிச்சா இன்னும் அதிகமா பயப்படுவானுதான் சாதாரணமா இருக்கற மாதிரி காமிச்சுகிட்டேன்... உங்களுக்கு நாங்க வைக்கிற பாசம் பைத்தியகாரத்தனமா தெரிஞ்சா அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது.... அருண் கார் ரேஸ்ல கலந்துக்கணும்னு இங்க யாரும் தவம் கிடக்கல... ரெண்டாவது ரேஸ்ல அடிபட்டு வந்தப்ப என் உயிரே என்கிட்டே இல்ல... அருண் கண் முழிக்கற வரை நானும் என் பொண்ணும் துடிச்சது எங்களுக்குத்தான் தெரியும்... நீங்க மறுபடியும் மறுபடியும் அவன தூண்டி விடாதிங்க... அவனுக்கு ஏதாவது ஆனா அதை தாங்கற சக்தி எனக்கும் என் பொண்ணுக்கும் இல்ல " என்று கூறி சாந்தியும் அழ ஆரம்பிக்க, நந்தினியும் எழுந்து சென்று தன் தாயை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருணுக்கோ தர்ம சங்கடமான நிலமையாகிப் போனது... ஒருபுறம் அக்காவும் நந்தினியும் அழுது கொண்டிருக்க, தனக்கு எப்பொழுதும் சாதகமாக பேசும் மாமாவோ கடுகடுவென் அமர்ந்திருந்தார். யாரை சமாதானம் செய்வதென்று அருணுக்கே புரியவில்லை... ஒவ்வொருவரிடமும் சமாதானமாக பேசி ஒருவழியாக அனைவரையும் சமாதானம் செய்த பின்,


" சரிக்கா... நான் கிளம்பறேன்.." என்று கூறி அருண் எழுந்துகொள்ள... அருணின் கைகளை பற்றி தடுத்த நந்தினி..


" நீ ஒன்னும் போக வேண்டாம் அருண்... இங்கயே இருடா ப்ளீஸ்..." என்று கெஞ்ச ஆரம்பித்தாள்... நந்தினியை சிவினாடிகள் உற்று நோக்கிய அருண்...


"சரி போகல போதுமா.... இன்னைக்கு இங்கயே இருக்கேன். மறுபடியும் அழ ஆரம்பிச்சறாத" என்று கடுப்பாக கூறிவிட்டு... நந்தினியை அழைத்துக் கொண்டு அவளது அறைக்கு சென்றான்... நந்தினியும் அருணும் சென்ற பின், அரைமணி நேரம் செலவு செய்து பாத்திரங்களை எல்லாம் கழுவி ஒழுங்கு படுத்திவிட்டு தங்களது அறைக்கு சென்ற சாந்தி தனது கணவர் தன்னை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருப்பதை அறிந்துகொண்டாலும், ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் விளக்கை அனைத்து இரவு விளக்கை உயிர்ப்பித்துவிட்டு, சிவக்குமாரை கண்டுகொள்ளாமல் அவருக்கு முதுகை காட்டியவாறு படுத்துக் கொள்ள, தன் மனைவியை சமாதானம் செய்யும் நோக்கில் மெதுவாக சாந்தியின் தோளைத் தொட, வெடுக்கென்று தன் கணவரின் கைகளை தட்டிவிட்டவர்...


" பேசாம படுங்க... எனக்கு தூக்கம் வருது..." என்று கூறிவிட்டு போர்வையை இழுத்து கழுத்துவரை போத்திக்கொள்ள


" ஹேய் சாந்தி.... நான் சொல்லறத கேளுடி... "என்று மெதுவாக ஆரம்பித்தார்... தன் கணவர் என்ன சொல்ல போகிறார் என்று சாந்தியும் அறியாமல் இல்லை, ஆனாலும் சாந்தியின் மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் விஷயத்தை இன்று பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தவராய் தன் கணவர் புறம் திரும்பி


" சொல்லுங்க " என்று கூற சாந்தியின் கண்களை பார்த்தபடியே...


" சாந்தி... அருண நாம எடுத்து வளர்த்து, அவனோட வளர்ச்சிக்கு நாமளே தடையா இருக்கலாமா...? சொல்லு... அவனுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கணும்னு துடிக்கறான் சாந்தி... எனக்கு மட்டும் அருண் மேல அக்கறையில்லன்னு நினைக்கிறியா...? அவன் எங்க போனாலும் என்ன பண்ணினாலும் என் பார்வை அருண் மேல இருந்திட்டேதான் இருக்கும்... அருண் பேரையும் புகழையும் சம்பாறிக்கணும்னு நினைக்கறது என்னோட சுயநலத்துக்காக இல்ல சாந்தி... இப்ப இருக்கற நிலைலேயே நந்தினிய அருணுக்கு கல்யாணம் பண்ணி குடுக்க எனக்கு சம்மதம்தான்... ஆனா யாரெல்லாம் அருணோட பிறப்ப பத்தி தரக்குறைவா பேசி அவன குப்பையா நினைச்சு ஒடுக்க பார்த்தாங்களோ, அத்தனை பேர் முன்னாடியும் அருண கோபுரமா உயர்த்தி காட்டணும் சாந்தி" என்று மென்மையாக கூற.... தன் கணவர் கூறியதை கண்கலங்க கேட்டுக் கொண்டிருந்த சாந்தி எழுந்து சென்று மீண்டும் விளக்கை உயிர்ப்பித்துவிட்டு, சிவக்குமாரின் மார்பில் சாய்ந்து கொண்டு


" எனக்கும் அருண் பெரிய ஆளா வரணும்னு ஆசை இருக்குங்க... ஆனா அதுக்கு விலையா அருணோட உயிர பணயம் வைக்கிறான்... அதை பார்த்துட்டு எப்படி சும்மா இருக்கறது சொல்லுங்க...."


" என்னம்மா... நந்தினிதான் சின்ன குழந்தை மாதிரி அடம்பிடிக்கறானா... நீயும் அதேதான் செய்யிற... எந்த வேலைல ஆபத்து இல்லன்னு சொல்லு... கார் ரேஸ்ல வேகம்தான் முக்கியம்... வேகமா போகறப்ப விபத்துகள் ஏற்படறது சகஜம்... அதுக்காக கார் ரேஸ்ல கலந்துக்க கூடாதுன்னு நீங்க ரெண்டு பேரும் அடம்பிக்கறது எந்த வகைல நியாயம்...? " என்று கேள்வியெழுப்ப...


" கார் ரேஸ்ல வேகம் முக்கியம்னு எனக்கும் தெரியும்... அதோட விவேகமும் முக்கியமில்லையா...?" என்று கேட்க... 'ஆம்' என்பதை போல சிவக்குமார் தலையசைத்தார்....


" அருண்கிட்ட, இப்ப அந்த விவேகம் இருக்குனு நினைக்கறீங்களா...?" என்று சிவக்குமாரின் கண்களை பார்த்துக் கொண்டே வினவ... மனைவியின் வார்த்தையில் எதோ ஒன்று ஒளிந்திருப்பதாக தோன்ற சாந்தியின் கண்களை பார்த்தவாறே அமைதியாக இருந்தார்...


" அருண் அவனோட நிம்மதிய, நிதானத்த, சந்தோசத்தையெல்லாம் தொலைச்சு முழுசா ஒருவருஷம் ஆச்சுங்க... அருண் சந்தோசமா இருக்கற மாதிரி நடிக்கறான்... அருண் மட்டும் இல்ல நந்தினியும் நடிக்கறா " என்று சாந்தி கூற... சிவக்குமார் திகைக்க ஆரம்பித்தார்...



" நந்தினிய அருணுக்கு கல்யாணம் பண்ணி குடுக்கணும்னுதான் நானும் விரும்பறேன்... ஆனா அருண் மனசுல வேற எதோ ஒரு பொண்ணு இருக்கா... அது நந்தினிக்கும் தெரியும்..." என்று சாந்தி கூற.. யோசனையை தன் மனைவியை பார்த்தவாறே..


" அந்த பொண்ணு யார்ன்னு தெரியுமா..? இதெல்லாம் உனக்கு யார் சொன்னது...? என்று கேள்வியெழுப்பிய தன் கணவரை கூர்மையாக பார்த்தவர்


" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னிங்களே... அருண்மேல எப்பவும் உங்க பார்வை இருக்குன்னு.. நீங்க பெரிய போலீஸ் ஆபீசர்தான.. நீங்களே கண்டுபிடிங்க... ஆனா அருண் கிட்டயும் நந்தினி கிட்டயும் இதபத்தி தெரிஞ்ச மாதிரியே காமிச்சுக்காதிங்க... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அருணுக்கும் நந்தினிக்கும் கல்யாணம் செய்யறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க... இப்ப எனக்கு தூக்கம் வருது என்ன தூங்க விடுங்க..." என்று வரிசையாக தன் கணவருக்கு கட்டளையிட்டு விளக்கை அணைத்துவிட்டு படுத்துக் கொள்ள... அருனின் மனதில் இருக்கும் பெண் யார்...? அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று புரியாமல், அருணையும் நந்தினியையும் பற்றி சிந்தித்துக் கொண்டே சிவக்குமாரும் உறங்க ஆரம்பித்தார்....


நந்தினியை அவளது அறைக்கு அழைத்து சென்ற அருண், அவளை தனது மடியில் சாய்த்துக்கொண்டு மென்மையாக தலையை வருடிவிட, அருணின் அரவணைப்பில் நந்தினியின் மனதை ஆர்பரித்துக் கொண்டிருந்த எண்ண அலைகள் சற்று அமைதியடைய, இமைகள் கணக்க ஆரம்பித்து விரைவாகவே உறக்கத்தை தழுவ ஆரம்பித்தாள்... நந்தினி நன்றாக உறங்கிவிட்டாள் என்று உறுதியானதும் அவளது உறக்கம் களையாதவாறு மெத்தையில் கிடத்திவிட்டு, போர்வையை கழுத்துவரை போர்த்தி ஏசியை மிதமான குளிரில் வைத்துவிட்டு மெதுவாக மொட்டைமாடிக்கு சென்றான்...


எங்கு காணினும் காரிருள் சூழ்ந்திருந்தது. வானத்தில் மேகத்தினூடே மறைந்திருந்த நிலவுமகள் தன் ஒரு பாதி உருவத்தை மட்டும் வெளிப்படுத்தவிட்டு, மீதியை மேகம் எனும் போர்வையால் போர்த்திக்கொண்டு சிதைந்த ஓவியம் போல் காட்சியளிக்க, வைரங்களை எண்ணித் தெளித்தது போல ஆங்காங்கே ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் அந்த காரிருளையும் மீறி தங்களை காட்சி படுத்திக் கொண்டிருந்தது... நந்தினியின் கைவண்ணத்தில் உருவாகியிருந்த ரோஜாத்தோட்டம் அந்த இடத்தை சுற்றிலும் நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்க, அந்த நறுமணத்தோடு கூடிய மெல்லிய பூந்தென்றல் அருணின் தேகத்தை தழுவி நட்பு பாராட்ட விழைய, அவனுள்லிருந்த உஷ்ணத்தோடு போட்டி போட முடியாமல் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது...


அருண் பல நாட்களாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்திருந்த அவனது உணர்வுகள் எல்லாம், மடை திறந்த வெள்ளமென பெருக்கெடுத்து அருணை மூழ்கடிக்க ஆரம்பித்தது... எவ்வளவு முயன்றும் அருணின் கண் முன் தோன்றிய ஹரிப்பிரியாவின் பிம்பத்தை துரத்த முடியவில்லை... தலை பாறாங்கல்லாக கணக்க, இதயம் எரிமலையாக குமுற இருகைகளாலும் தலையை அழுந்த பிடித்துக் கொண்டு அப்படியே மண்டியிட்டு அமர்ந்துவிட்டான்... கண்கள் கண்ணீர் துளிகளை தரைக்கு தாரைவார்க்க.. உதடுகள் மட்டும் பிரியா என உச்சரித்துக் கொண்டிருந்தது...


ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நந்தினியை உள்ளுணர்வு உந்தித்தள்ள விருட்டென எழுந்தவள்,சுற்றுமுற்றும் பார்வையை சுழற்றி அருணை தேட, அவளது அறையில் அருண் இருப்பதற்கான அறிகுறி தென்படாமல் போகவே அருணை தேடிக்கொண்டு மாடியேறி வர... அருண் கைகளால் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த கோலத்தை கண்டதும் ஒருகணம் உயிர்வலியை உணர்ந்தவள் வேகமாக ஓடிச்சென்று அருணை மார்போடு அணைத்துக்கொண்டு..


" ஏண்டா அருண் இப்படி உட்கார்ந்திருக்க...? உனக்கு என்னடா ஆச்சு...? " என்று கதற ஆரம்பித்தாள்... சிலநிமிடங்கள் நந்தினியின் அணைப்பிலேயே இருந்தவன், மெதுவாக அவளிடமிருந்து விலகி நந்தினியின் கண்களை துடைத்தவாறு....


" இன்னைக்கு பிரியாவ பார்த்தேன் நந்தினி... " என்று ஆரம்பித்து, ஹரிப்பிரியாவை சந்தித்தது முதல் அவளைவிட்டு கிளம்பி வரும்வரை அவர்களுக்குள் நடந்த உரையாடல்களையும் கூறிவிட்டு...


" உனக்காக எதை வேணும்னாலும் இழந்துருவேன் நந்தினி... ஆனா யாருக்காவும் உன்ன விட்டு குடுக்க மாட்டேன்... எல்லாமே கொஞ்சநாள்ல சரியாகிடும்டா.. நீ கவலை படாத..." என்று கூறிவிட்டு நந்தினியையும் கையேடு அழைத்துக் கொண்டு அவளது அறைக்கு சென்றவன்... நந்தியை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு... அருகிலிருந்த சோபாவில் படுத்து அருண் கண்களை மூடிக் கொண்டான்...

அருண் எவ்வளவுதான் இயல்பாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும், அவனின் மனதின் வலிகளை முழுவதும் அறிந்தவள் நந்தினி மட்டுமே... அருண் கண்கள் கலங்கி நந்தினி இதுவரை பார்த்தது இல்லை... இன்று அருணை அந்த நிலையில் கண்டதுமே நந்தினியின் இதயம் கண்ணாடியாக நொறுங்கிப் போனது... தான் எவ்வளவு சுயநலமாக இருந்திருக்கிறோம் என்று உணர்ந்தவள் அப்பொழுதே முடிவெடுத்துவிட்டாள்... தான் எடுக்கப்போகும் விபரீதமான முடிவால் அருணின் விருப்பை காண்பாளா...? அல்லது வெறுப்பை காண்பாளா...?


வெறுப்பு தொடரும்....:cry:







 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமதத்திற்கு மன்னிக்கனும் மக்களே.. விரலில் பட்டது கொஞ்சம் பெரிய அடி.... இப்பதான் கொஞ்சம் வலி குறைஞ்சுருக்கு... இந்த வாரத்தில் அடுத்த பதிவை பதிவு பண்ணறேன்... வாசகர்கள் கருத்துக்களுக்கு பதில் பதிவிடலைன்னு யாரும் தவறாக எண்ண வேண்டாம் மக்களே..
என்றும் அன்புடன் வாசகன் வடிவேல்
 
Status
Not open for further replies.
Top