மான்....2
கைகளில் காப்பிக் கோப்பையை ஏந்தியிருந்த இளமாறன், அழைப்பு மணியின் ஓசையைக் கேட்டு, கதவை திறக்கச் சென்றவள் இன்னும் வந்திராததை உணர்ந்து, சமையலறையில் இருந்தவாறே வாயிற் கதவை நோக்கினான்...
அங்கே, மதுமிதா சிலையாய் உறைந்து போய் நிற்பதையும், கதவின் அருகே நிழலாடுவதையும் கண்டு கதவை நோக்கிச் சென்றான்...
அங்கே நின்றிருந்தவருக்கு, சுமார் அறுபது வயது இருக்கும்... வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்கச் சங்கிலி.. கரடு முரடான தோற்றம், என மொத்ததில், காதல் படத்தில் சந்தியாவின் அப்பாவக வரும் நபர்-ஐ நினைவு படுத்தினார்...
'இவர் யாராக இருக்கும். இவரை பார்த்து மதுமிதா ஏன்..? பயம் கொள்ள வேண்டும்' என இளமாறன் நினைத்துக் கொண்டிருக்கையில்...
அவர்கள் இருவரையும்.. கூர்மயாய் ஒரு பார்வைப் பார்த்தவர்....
"நான் மதுமிதாவின் தாய் மாமா. உள்ளே போய் பேசலாமா.?" என வினவ...
அவரை பற்றிய யோசனையுடனே நின்றிருந்தவன், அவரின் இந்த பதிலால் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, அருகில் நின்றிருந்த மதுமிதவை தோளோடு அணைத்தவாறு...
"உள்ள வாங்க சார்" என கூறினான்...
அதுவரை விலகியிருந்தவன், தான் யார் என்று தெரிந்த பின்பு, மதுமிதாவை அணைத்ததையும்; அவனது ஆதரவில் மதுமிதா தலைக் கவிழ்ந்து நிற்பதையும் கண்டு, கோபத்தில் முகம் இறுக...
மதுமிதாவை கோபமாய் முறைத்துவிட்டு, உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து கொள்ள.. அவருக்கு எதிரே இருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்...
'அவர் எதற்காக வந்திருக்கிறார் என்பதை இளமாறன் உணர்ந்து கொண்டாலும், அவராகவே பேச்சை ஆரம்பிக்கட்டும்' என மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாகவே அமர்ந்திருந்தான்....
இளமாறனின் அமைதியை உணர்ந்தவராக...
"என்ன பத்தி கேள்விப் பட்டிருப்பனு நினைக்கிறேன்.. நான் எதுக்காக வந்திருக்கறேனு உனக்கே தெரியும்" என ஆணவமாய்க் கூறினார்....
அவரின் ஆணவமான பேச்சில் தூண்டப்பட்ட இளமாறன், தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு...
"இல்ல சார், உங்களை பத்தி எனக்கு எதுவும் தெரியாது.. அதில்லாம உங்க முகத்தைப் பார்த்து, நீங்க எதுக்காக வந்திருக்கறீங்கனு யோசிக்கறதுக்கு.. நான் ஒன்னும் ஜோசியக்காரன் கிடையாது.. அதனால நீங்கதான் சொல்லனும்" என அலட்சியாமாய் கூறினான்...
உன்னால, எங்களை ஒன்னும் பண்ண முடியாது.. அதனால, என்ன சொல்ல வந்தியோ.. அத சொல்லிட்டு இடத்தை காலி பண்ணு, என்பது போல் இருந்தது இளமாறனின் பேச்சு...
அதை உணர்ந்து கொண்டவரின் முகம் நெருப்பாய் மாற...
"ஏய்..! உன்ன மாதிரி பசங்க, எதுக்காக பணக்கார வீட்டு பெண்களை காதலிக்கறிங்கன்னு.. எனக்குத் தெரியாதா..?" எனக் கூற...
"இல்ல சார்.. எனக்குத் தெரியாது. உங்க அளவு எனக்கு முன் அனுபவம் கிடையாது.. என்னனு சொன்னா நானும் தெரிஞ்சுக்கறேன்" என கேலியாகவே கூறினான்.
இளமாறனின் கேலியயை உணர்ந்து கொண்டவர்..
"எல்லாம் இந்த பணத்துக்காகதான... உனக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு... குடுக்கறேன்... வாங்கிட்டு மதுமிதாவ விட்டு போயிடு" எனக் கோபமாய் கூற...
அவர் இதைத்தான் கூறுவார் என எதிர்பார்த்திருந்த இளமாறன், அவரின் கண்களை பார்த்து...
"எவ்வளவு சார் தருவீங்க" என தயங்காமல் கேட்டான்...
இளமாறனிடம் இந்த பதிலை அவர் எதிர் பார்க்கவில்லை.. உங்கள் பணம் எனக்கு வேண்டாம். என் காதல்தான் எனக்கு முக்கியம். எதற்காகவும், யாருக்காவும் என் காதலை விட்டுத்தரமாட்டேன்... என சினிமாத்தனமான பதிலை எதிர் பார்த்தவருக்கு, அவனின் இந்த கேள்வியால் குழப்பம் அவரை சூழ்ந்து கொண்டது...
இளமாறனின் கண்களில் இருந்து, அவரால் எதையும் கனிக்க முடியவில்லை... குழப்பத்துடனே அவனைப் பார்த்து...
"எவ்வளவு வேணும்னு நீயே சொல்லு. அதை ஒரே அமௌண்ட்டா தறேன்" எனக் கூற...
"சார், எனக்கு பெற்றோர், சகோதர சகோதரி, உற்றார் உறவினர்.. இப்படி எந்த சொந்த பந்தங்களும் கிடையாது.." என அவன் கூற வந்ததை முழுவதும் கூறி முடிக்கும் முன்னே....
"உன்ன பத்தி, எதையும் நான் தெரிஞ்சுக்க விரும்பல... எவ்வளவு பணம்னு மட்டும் சொல்லு" என இடைமறித்துக் கூறினார்..
"அதைத்தான் சார் நான் சொல்லிட்டு இருக்கேன்... கொஞ்சம் அமைதியா கேளுங்க".. என கூறி விட்டு
"எனக்கு அம்மாவா, ஃபிரெண்டா, காதலியா, என் வாழ்கைல வந்தவதான் மதுமிதா.. இன்னும் கொஞ்சநாள்ல, மனைவியும் எனக்கான சகலமுமாய் மாறப்போறவ... அவளோட அன்புக்கு ஈடா.. உங்களால் எதை தரமுடியும்" என நிதானமாக கேள்வி எழுப்பினான்...
'சுற்றி வளைத்து மதுமிதாவை விட்டுச் சொல்ல முடியாது..' என கூறியவனை ஏறிட்டு...
"இந்தமாதிரி சினிமா டயலாக்கெல்லாம் நான் நிறையா தடவை கேட்டாச்சு. எனக்கு தேவை எதார்த்தமான.. தெளிவான பதில்" எனக்கூற..
"சினிமாத்தனமான கேள்விய.. நீங்க கேட்டுட்டு, எதார்த்தமான பதிலை என்கிட்ட இருந்து எதிர்பார்த்தா..? எப்படி சார். கேள்விய மாத்தி கேளுங்க" எனக் கூறினான்.
அதாவது விதை ஒன்றை விதைத்தால் செடி ஒன்றா முளைக்கும், என்பது போல் இருந்தது இளமாறனின் பதில்
அவர் சுத்தமாக குழம்பிப்போனார்.. இளமாறனை எப்படி கையாள்வது என்று அவருக்கு புரியவில்லை.
'தான் சந்தித்த மற்றவர்களைப் போல், பத்தோடு பதினொன்று அல்ல இளமாறன். இவன் சற்று தனித்துவமானவன்' என மனதில் நினைத்துக் கொண்டு...
"தம்பி...! இது வாழ்க்கை...! விளையாட்டு இல்லை. நாங்க சொல்லறத கேக்கலனா, விளைவுகள்.. விபரீதமா இருக்கும்" என எச்சரிக்கையாய் கூறினார்...
"சார், இது விளையாட்டு இல்லைனு எனக்கும் தெரியும்.. விளைவுகளை பத்தி நான் யோசிக்கறேன் சார்.. அதோட பின் விளைவுகளை பற்றி, நீங்களும் கொஞ்சம் யோசிங்க
சார்" என அவரை பதில் எச்சரிக்கை செய்தான்...
"முடிவா என்னதான் சொல்லறீங்க" என கேட்டவரைப் பார்த்து..
"அது உங்களுக்கே தெரியும். அதை நான் வேற சொல்லனுமா.?" எனக் கூறியவனை கண்டு
அவருக்கு பைத்தியம் பிடிக்காதது ஒன்றுதான் குறை. தலையை சோபாவின் பின்னால் சாய்த்து, கண்களைமூடி சரிந்து அமர்ந்து விட்டார்...
ஏனெனில், இதுவரை அவரிடம் யாரும் இப்படி பேசியது இல்லை.. அவரது பார்வை பட்டதும்; பொசுங்கிப் போனவர்கள்தான் அதிகம்.. இளமாறனோ, கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், பதிலாக ஒரு கேள்வியை கேட்டு.. அவரை குழப்பி கொண்டிருந்தான்...
ஆரம்பத்தில், தன் தாய்மாமாவை கண்டு பயத்தில் இருந்த மதுமிதா, இளமாறனின் சாதுர்யமான பேச்சால்.. இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாள்..
' ஈவு இரக்கம் என்பது சிறிதுமின்றி.. தான் நினைத்ததை செய்து முடிக்க, எந்த எல்லைக்கும் சொல்லக் கூடியவர். தான் எதற்காக வந்தோம் என்பதே மறந்து போய்.. கண்மூடி அமர்ந்திருந்த, தன் தாய்மாமாவை கண்ட மதுமிதா... தனக்குள் புன்னகைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.'
கண்களைமூடி சிலநொடிகள் தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டவர், இளமாறனைப் பார்த்து...
"சரி தம்பி, இன்னைக்கு என்னால் ஒரு முடிவுக்கு வர முடியல. நான் நாளைக்கு வந்து என் முடிவ சொல்லறேன்" எனக் கூறி எழுந்து கொள்ள...
அதற்கு மேலும் பேச்சை வளர்க்க அவனுக்கும் விருப்பமில்லை...
"நல்லது சார்" எனக் கூறி எழுந்து கொண்டான்
கதவு வரை சென்றவர், திரும்பி இளமாறனை பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு, வெளியே சென்று தன் காரை எடுத்துக்கொண்டு, வந்த வழியே கிளம்பினார்...
அவர் சென்றதும் சற்றும் தாமதிக்காமல் ஓடிச் சென்று, இளமாறனை அணைத்துக் கொண்டாள் மதுமிதா. அவனும் பதிலுக்கு அவளை அணைத்துக்கொண்டு...
"என்னடா பயமா இருக்கா.?" எனக் கேள்வியாய் வினவ..
"ம்"... என தலையசைத்து ஒற்றை வார்த்தையில் பதிலுரைத்தாள்..
"சரி வா, மொதல்ல காப்பி குடிக்கலாம். மத்ததை அப்புறம் பேசலாம்" என அவளை விடுவித்தவன்..
அவர்கள், குடிக்காமல் விட்ட காப்பியை எடுத்து வெளியே உற்றி விட்டு, மறுபடியும் பாலை சூடு பண்ணி காப்பி கலந்து , மதுமிதாவிடம் ஒன்றை கொடுத்து விட்டு, தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டு, இருவரும் சோபாவில் அமர்ந்து காப்பியை உறிஞ்ச ஆரம்பித்தனர்
" சொல்லு மது..! எதுக்காக, உன் மாமாவை பார்த்து பயப்படுற.." என இயல்பாய் கேட்டவனைப் பார்த்து
எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாக இருந்தாள்..
அவளின் பயம் என்ன..? என்பதை, இளமாறனும் அறியாமல் இல்லை. ஆனால், அந்த பயத்தை பற்றி, அவளாக பேசினால் மட்டுமே.. அதிலிருந்து அவளை வெளியே கொண்டு வர முடியும். அவளை பேசவைக்கும் பொருட்டு பேச்சை மாற்றினான்
" சரி, நான் உன் மாமா கிட்ட பேசியதப் பத்தி, என்ன நினைக்கற" அதை முதல்ல சொல்லு எனக் கூறினான்.
சற்றுநேரம் முன்பு, தன் மாமாவிடம்.. இளமாறன் பேசியது நினைவுக்கு வர, உதடுகளில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
" உனக்கு இந்தளவு நிதானமா பேசத் தெரியுமாடா.? அப்பறம் ஏன்டா என்கிட்ட மட்டும்.. எப்ப பார்த்தாலும் எரிஞ்சு, எரிஞ்சு விழுந்த" எனக் கேட்டவளை காதலோடு பார்த்தவன்..
" டார்லிங்..! நம்ம கடந்த காலத்த பத்தி பேச, எதிர்காலத்தில, நிறைய.. டைம் இருக்கு. இப்ப கரண்ட் மேட்டருக்கு வா" என நக்கலாய் கூறினான்
"என்னத்த சொல்ல, அவர நல்லா குழப்பி விட்டுட்ட. அவர பத்தி நினைச்சாலே, எனக்குள்ள நடுக்கம் வர ஆரம்பிச்சுடுது. அவர் எப்படி பட்டவர்னு.." மதுமிதா கூற ஆரம்பிக்கும் முன்னே...
" யம்மா தாயே...! உன் மாமாவ பத்தின ஹிஸ்ட்ரி, ஜியாகர்ஃபி எல்லாத்தையும், நான் அவர் கிட்டடையே கேட்டுக்கறேன். நாங்க பேசினத பத்தி உனக்கு என்ன தோணுதோ, அதை மட்டும் சொல்லு " என கேலியாய் கூறியவனைக் கண்டு
" எதடா சொல்லறது, குழப்பினது நீ... குழம்பினது அவர்... வேடிக்கைப் பார்த்தது மட்டும்தான் நான்... இதுல நான் சொல்லறதுக்கு என்ன இருக்கு." என சலிப்பாய் கூறியவளை கண்டு புன்னகைத்தவன்
" குட்... இந்த அளவு உனக்கு புரிஞ்சாதே போதும்... சரி, அவர ஏன் குழப்பினேனு உனக்கு தெரியுமா.? என கேள்வி எழுப்பினான்.
மதுமிதா இல்லை என்பதைப் போல் மறுப்பாய் தலையசைக்க
" இது கூட தெரியல.. நிஜமாவே நீ படிச்சுதான், பாஸ் பண்ணுனையா.? இல்ல காசு குடுத்து பாஸ் பண்ணுனையா..?" என்று நிறுத்தியவன்
" சரி சரி.. நானே சொல்லறேன், பொறுமையாய் கேளு” எனக் கூறி விட்டு தொடர்ந்தான்...
" தெளிவா இருக்கற ஒருத்தர, எப்படி மறுபடியும் தெளிய வைக்க முடியும். அதான் குழப்பி விட்டுருக்கேன். மறுபடியும் உன் மாமா வந்தா, தெளிய வச்சுருவேன். கவலைப் படாதே" என இயல்பாய் கூறினான்
இளமாறன் பெரிதாய் எதோ சொல்லப் போகிறான்.. என்று காதுகளை தீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவள், அவனின் இந்த பதிலால் கோபமமுற்று இளமாறனைப் பார்த்தவாறே..