All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கதை திரி..

Status
Not open for further replies.

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்...14

பிரபாவதியை அழைத்துக்கொண்டு கிளம்பிய சந்திரசேகர், மற்றவர்களின் பார்வையிலிருந்து.. மறைந்துவிட வேண்டும் என்றெண்ணியவனாக, படபடக்கும் தன் இதயத்தை கண்டுகொள்ளாமல், அதிகமான வேகத்தில், சென்னையை நோக்கி காரை செலுத்திக்கொண்டிருந்தான். பிரபாவதியை அவளது வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு வந்துவிட்டாலும், இப்பொழுது எங்கு செல்வதென்றே சந்திரசேகருக்கு புரியவில்லை. சந்திரசேகர் எதையுமே திட்டமிடாமல் செய்வதில்லை.. ஆனால் இப்பொழுதிருக்கும் நிலையில், தனது திட்டத்தை செயல்படுத்தினால், ஒருவேளை, யாராவது ஒருவர் கண்டுபிடித்துவிட வாய்ப்பு இருப்பதாக தோன்றியது. அடுத்து என்ன செய்வதென்று யோசிப்பதற்கோ..? முடிவேடுப்பதற்கோ.? தனக்கு கால அவகாசமில்லை என்று உணர்ந்து கொண்டவன், உடனடியாக தான் செய்ய வேண்டியதை.. மனதிற்குள் எண்ணியவனாக, பாதையில் கவனத்தை வைத்து, காரை இயக்கிக் கொண்டிருந்தான்..


திருச்சி விமானநிலையம், ஐம்பது கிலோமீட்டர் என்ற வழிகாட்டிப் பலகையை கண்டவுடன், குழம்பிய சிந்தனை, சற்றே வலுப்பெற.. சென்னை செல்லும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, திருச்சி விமானநிலையத்தை நோக்கி காரைத் திருப்பினான்..

சந்திரசேகரின் கார் அடுத்த ஒருமணி நேரத்தில் விமானநிலையத்தை அடைந்ததும், வெளி மாநிலத்திற்கு செல்லும் விமானத்தின் பயண விவரங்களை விசாரிக்க, இன்னும் ஒருமணிநேரத்தில், டெல்லிக்கு செல்ல விமானம் இருப்பதாக அங்கிருந்தவர் தகவல் தெரிவித்தார். சிலவினாடிகள் யோசித்தவன், இப்போதைக்கு இங்கிருப்பது நல்லதல்ல. முதலில், பிரபாவதியை பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு டெல்லிக்கு சென்றுவிடலாம். அங்குசென்ற பிறகு, அடுத்தது என்ன செய்வதென்று யோசிக்கலாம்.. என சட்டென்று முடிவெடுத்து, இருவருக்கும் பயணசீட்டை வாங்கி, தங்களது பயணத்தை உறுதி செய்ய நினைக்கும்பொழுது, சந்திரசேகரின் மனதை ஏதோ ஒன்று நெருடியது. அதனால் தன்னை சமன்படுத்திக்கொள்ள, இருவரும் காத்திருப்போர் அறையில் காத்திருக்க ஆரம்பித்தனர்...

கண்மூடி, தனது தோளில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த பிரபாவதியை மெதுவாக அணைத்துக்கொள்ள, தலையை உயர்த்தி, விழிதிறந்தவளின் கண்களிலிருந்து, கண்ணீர்.. முத்து முத்தாக சிந்தியது...

பிரபாவதியின் கண்களிலிருந்து கண்ணீரைக் கண்டதும், சந்திரசேகரின் இதயம்.. ரத்தத்தை சிந்த ஆரம்பித்தது.. ஒருகையால் அணைப்பை இறுக்கி, மறுகையால் மென்மையாக அவளது கண்ணீரை துடைத்துவிட்டவன்...

“ப்ளீஸ் பேபி.. அழாத பேபி.. சீக்கிரமே எல்லாம் சரியாகும். என்மேல உனக்கு நம்பிக்கை இருக்குள்ள...” என்று வினவியவாறு, சந்திரசேகரும் கண்கள் கலங்க..

“என்ன சந்திரன்...? இனிமேல் இந்த மாதிரி பேசாதிங்க. என்ன பெத்தவங்களை எந்த அளவு நம்பறேனோ, அதைவிட உங்கள நம்பறேன். இனிமேல் நான் அழமாட்டேன்” என்று கூறியவாறு சந்திரசேகரை அணைத்துக் கொண்டாள்..

ஒரு பத்துநிமிடம் கடந்திருக்கும், அவ்வளவு நேரமாக பெரிய அளவில் கூட்டமில்லாமல் இருந்த விமானநிலையத்தின் காத்திருப்போர் அறையில், திடீரென்று ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளம்பெண்களும் சூழ ஆரம்பித்தனர்... சிறிது நேரத்தில் அவர்களது கூட்டத்தினிடையே, சிறு சலசலப்பு உருவாக

“சார்.. ஏதாவது பிராபளமா...? என்று அந்த இளைஞர்களுடன் வந்திருந்த ஆசிரியரின் தோற்றத்தில் இருந்தவரிடம், சந்திரசேகர் வினவினான்..

“ஆமா சார்.. நான் ஜானகிராமன், ஐ.ஐ.டி திருச்சில, அத்லெட் கோச்சா இருக்கேன். இவங்கெல்லாம் என் ஸ்டூடண்ட்ஸ். இன்னைக்கு மதியம்.. டெல்லில நடக்கிற ஒரு போட்டியில கலந்துக்கறதுக்காக, நாங்க எல்லாரும் போறோம். பிளைட் டிக்கெட் ரிசர்வ் பண்ணதுல, தவறுதலா ஒரு பையனோட பேரும், பொண்ணோட பேரும் விட்டுபோச்சு. இப்ப எல்லா டிக்கெட்டும் ஃபுல் ஆயிடுச்சு.. அவங்க இல்லாமலும் போக முடியாது. என்ன பண்ணறதுன்னு தெரில” என்று சோகமாக கூற, சந்திரசேகரின் மூளை வேகமாக செயல்பட ஆரம்பித்தது.

தன்னிடமுள்ள பயணசீட்டை அவர்களிடம் கொடுத்துவிட்டு, தான் முன்பே யோசித்து வைத்த திட்டத்தை செயல்படுத்தினால், அவ்வளவு எளிதாக தங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும், ஒருவேளை விமானநிலையத்திற்கு வெளியே இருக்கும் தனது காரை வைத்து, தங்களை பற்றி விசாரித்தாலும், நாங்கள் டெல்லிக்குதான் சென்றிருபோம் என்று நம்பிவிடுவார்கள். பிரபாவதியும் டெல்லியில் இருந்திருக்கிறாள். அதனால், எங்களை தேடினாலும் டெல்லியில்தான் தேடுவார்கள்... என்று தனக்குள் எண்ணியவன்...

“சார்.. உங்களுக்கு பிரச்சனை இல்லைனா, என்கிட்ட ரெண்டு டிக்கெட் இருக்கு.. அதுல போறீங்களா...” என்று வினவ, கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததைப்போல, சந்திரசேகரின் கைகளை பற்றிக்கொண்டு...

“சார்.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னு தெரில... ஆனா நீங்க எப்படி போவீங்க” என்று கேள்வி எழுப்பியவரிடம்

“எனக்கு ஒன்னும் முக்கியமான வேலையில்ல சார்.. மதியம் ஒரு பிளைட் இருக்கு. அதுல நான் போய்க்குவேன்.. என்று கூறியவனிடம், நன்றி உரைத்தார் ஜானகிராமன். தங்களது சக மாணவர்களின் பயணம் உறுதி செய்யப்பட்ட மகிழ்ச்சியில், மாணவர்களும் தங்களது நன்றியை தெரியப்படுத்தினர். அனைவருக்கும் புன்னகையை பதிலாக தந்துவிட்டு.. பிரபாவதியை அழைத்துக்கொண்டு, திருச்சி ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றான்...

வீட்டின் வாயிலில் பெரிதாக பந்தலமைத்து, அதன் இருபுறமும் வாழைமரத்தை நிறுத்தி, அதற்கு மேலும் அழகு சேர்ப்பதுபோல, நேர்த்தியாக பின்னப்பட்ட தென்னையோலைகளை, வாழைமரத்தை சுற்றிலும் சுற்றியிருந்தனர். பந்தலின் இருபுறமும், கைக்கூப்பி வணங்குவதைப் போன்ற பெண்மணியின் படமும், மத்தியில், நல்வரவு என்ற வாசகம் அடங்கிய பலகையும், வண்ண வண்ண மின்விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தன.


பொழுது புலர்ந்ததை, முதலில் உலகுக்கு தெரியப்படுத்துவது யார்...? என்ற போட்டியில், சேவல்களும், காகங்களும் போட்டி போட்டு, தங்களது குரலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அப்பொழுது, அதீத சத்தத்தில், பக்திப்பாடல் ஒன்று.. ஊரே அதிரும் வண்ணம் 'கணீர்' என்று ஒலித்து, அந்த பகுதியையே துயில் எழுப்பிக் கொண்டிருந்தது...

காலையில் ஒன்பதுமணிக்கு தான் முகூர்த்தமென்றாலும், அதிகாலை நான்குமணிக்கே எழுந்துவிட்டார் செண்பகம். படுக்கையில் பிரபாவதியை காணாது தேடியவர், ‘அவளது பெற்றோர்களிடம் சென்றிருப்பாள்’ என்று தனக்குள் எண்ணியவாறு குளியலறைக்குள் புகுந்து கொண்டார். வீட்டின்னுள்ளே பெரிய ஜமுக்காளத்தை விரித்து, ஆங்காங்கே உறங்கிக்கொண்டிருந்த உறவினர்கள், பாடலின் சத்தத்தில் விழித்துக்கொண்டு, தங்களை தயார்படுத்திக்கொள்ள, கொல்லைப்புறத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.

குளித்துவிட்டு வந்த செண்பகம், திருமணத்திற்கான மற்றவேலைகள் அனைத்தும், சரியாக நடக்கிறதா..? என்று பார்வையிட்டவாறே வெளியே வர, கைகளில் காப்பிக் கோப்பைகளுடன் எதிர்ப்பட்ட உறவுக்கார பெண்மணியொருவர், செண்பகத்தின் கையிலொரு காப்பிக் குவளையை திணித்துவிட்டு...

“என்ன செண்பகம்...? நிச்சியம் முடிஞ்சதுக்கப்பறம் சூரியாவ பார்க்கவே முடியல. நீ எங்கையாவது வெளிய அனுப்பியிருக்கையா..?” என்று கேள்வியாய் வினவினார். அவர் கூறியதை கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்தாலும், முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல், இயல்பாக காப்பியை உறிஞ்சிக்கொண்டே..

“எங்க போயிருக்கப் போறான். இங்கதான் எங்கையாவது இருப்பான்.. என்று சமாளித்துக் கூறினார்..

“சரி, உன் மருமக எழுந்திரிச்சுட்டாளா...? இல்லைனா சிக்கிரம் எழுப்பிவிடு. பட்டணத்துல வளர்ந்தபுள்ள. அலங்காரம்... கொஞ்சம் நல்லா பண்ணனும். இப்பயிருந்தே ரெடி பண்ண ஆரம்பிச்சாதான், நேரத்துக்கு முடிக்க முடியும்.” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
செண்பகத்திற்கு ஏதோ சரியில்லாததுபோல தோன்ற, குடித்துமுடித்த காப்பிக் குவளையை... அங்கேயே வைத்துவிட்டு, பிரபாவதியை தேடி அண்ணனின் அறைக்குச் சென்றார்...


ரத்தினவேலின் அறையை அடைந்ததும், கதவை தட்டும் நோக்கில் கைகளை கொண்டு சென்றவர், கதவு பூட்டப்படாமலிருக்க, கதவை சிறிதாக திறந்து, மங்கிய இரவு விளக்கின் ஒளியில், பார்வையை சுழற்றிப் பிரபாவதியை தேடினார். கதவு திறக்கும் ஓசையில் விழித்துக் கொண்ட செல்லம்மாள்...

“என்ன செண்பகம்.. ஏதாவது வேணுமா..? பிரபா எழுந்துட்டாளா...?”

“இல்லண்ணி. நான் எழுந்திரிக்கறப்ப பிரபா இல்ல... அதான் இங்க வந்தாளானு பார்க்க வந்தேன்.. என தயங்கியபடியே கூறினார்.

“இங்க வரலையே செண்பகம். நேத்து நைட் உன்கூடதான தூங்கினா...? இவ்வளவு சீக்கிரத்துல எழுந்து எங்க போனா..?” என்று யோசனையாய் எழுந்த செல்லம்மாள், செண்பகத்தோடு சேர்ந்துகொண்டு பிரபாவதியை தேட, அந்த வீட்டில் பிரபாவதி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை...

இருவர் முகத்திலும் கலவரம் தொற்றிக்கொள்ள, பதட்டத்துடனே ரத்தினவேலை எழுப்பி தகவலை கூற, ரத்தினவேலோ எந்தவித சலனமும் இல்லாமல், எதிர்பார்த்த ஒன்றுதான் என மனதில் நினைத்துவிட்டு, அவர்களுடன் சேர்ந்துகொண்டு, ஒப்புக்காக பிரபாவதியை தேட ஆரம்பித்தார்...

சமையல் உட்பட மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த சூரியாவின் தந்தை, தன் மனைவியின் முகத்திலிருந்த பதற்றத்தை கண்டுகொண்டு என்னவென்று வினவ, செண்பகம் கூறியதில் அதிர்ந்தவர், விஷயம் வெளியே போகக் கூடாது என்று அங்கிருந்தவர்களுக்கு கட்டளையிட்டுவிட்டு, தேடுதலை தீவிரப் படுத்தினார்..

தண்ணீரை அணைகட்டி தடுக்கலாம்.. ஆனால், காற்றுக்கு அணை கட்ட முடியுமா..? சிறிது நேரத்திற்குள்ளாகவே விஷயம் வெளியே கசிந்து, காட்டுத் தீயாய் பரவி, ஆளுக்கொரு மூலையாக தேட ஆரம்பித்தனர்.. பிரபாவதியை காணாதது அதிர்ச்சி என்றால், சூரியாவையும் காணவில்லை என்று தெரிந்தவுடன்... ரத்தினவேல் உட்பட அனைவருமே குழம்பிப் போயினர்.


அண்ணன் குடும்பத்தையும், உற்றார் உறவினர்களையும் ஒன்று திரட்டியது முதல், ஒரேநாளில் பிரபாவதியை நிச்சியம் செய்து, மறுநாளில் கல்யாணத்தையும் ஏற்பாடு செய்ததுவரை, செண்பகம் திட்டமிட்டபடியே எந்த இடையூறுமின்றி நடந்துவிட்டது. தன் எண்ணம் ஈடேறிய களிப்பில் நிம்மதியாக உறங்கிய செண்பகம், தனக்கான விடியல் இவ்வாறாக இருக்குமென கனவிலும் எண்ணிப்பார்க்கவில்லை... கலகலப்பாக இருக்க வேண்டிய வீடு களையிழந்து, துக்க வீட்டைப்போல காட்சியளித்தது.

பிரபாவதிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை, விருப்பமில்லாத ஒருத்தியை, தன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கட்டாயப்படுத்தியதால் தான் பிரபாவதி வீட்டைவிட்டு ஓடிவிட்டாள். அனைத்திற்கும் காரணம் செண்பகம்தான் என்று ஒவ்வொருவராக தங்களுக்கு தோன்றியதை, செண்பகத்தின் காதுபடவே பேசிக்கொண்டிருந்தனர்...


அவ்வளவு நேரம் பிரபாவதியை காணவில்லை என்று மட்டுமே யோசித்த செண்பகம், பிரபாவதி ஓடிப்போய்விட்டாள் என்று புரிந்தவுடன், யாருடன் சென்றிருப்பாள்..? என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்பொழுது அவரது மனக்கண்ணில் சந்திரசேகரின் பிம்பம் தோன்ற, உள்ளம் எரிமலையாக மாறி, கண்கள் அக்கினியை கக்க ஆரம்பித்தது.

செல்லம்மாவுக்கோ, தன் மகளின் உயிருக்கு ஆபத்திருந்த நிலையில், இப்பொழுது அவளை காணவில்லை என்றவுடன், தாயுள்ளம் பதற ஆரம்பித்தது.. பிரபாவதியின் உயிருக்கு ஊறுவிளைவிக்க காத்திருந்த யாரோ ஒருவர், இதற்கு காரணமாக இருப்பார்களோ..? என்று யோசிக்க ஆரம்பித்ததும், கட்டுப்பாடில்லாமல் கண்ணிர் சிந்தி, வாய்விட்டே கத்தி அழ ஆரம்பித்தார். பிரபாவதியை திருமணம் செய்து கொடுக்க செல்லம்மாளுக்கு விருப்பமில்லை. தன் கணவரிடம் எவ்வளவு சொல்லியும் கேட்டகாத கோபத்தில், தன்னை சமாதானம் செய்ய வந்த ரத்தினவேலிடம் சீற ஆரம்பித்தார்..

"அய்யோஓஓஓ...! அம்மாஆஆஆஆஆ... சார் அடிக்காதிங்க... நான் எல்லா உண்மையும் சொல்லிடறேன்... அய்யோ... என்னால வலிதாங்க முடியல.. ஆஆஆஅ.. அம்மாஆஅ.. என்னை விட்டுருங்க.." என உடல் முழுவதும் பாலம் பாலமாக தடித்திருக்க, ஆங்காங்கே திட்டுத்திட்டாக ரத்தக்கறைகள் படிந்திருக்க, உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் அலறிக்கொண்டிருந்தான் ஒருவன். ரத்தக்கறை படிந்த லத்தியை, கைகளில் ஆட்டிய படி, அவனருகே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான் சூரியா...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிச்சியதார்த்தம் முடிந்தும், யாராவது ஒருவர் பிரபாவதியின் அருகிலேயே இருந்ததால், பிரபாவதியிடம் தனியாக பேச, சூர்யாவிற்கு சந்தர்ப்பமே அமையவில்லை. சரி முதலில் சாப்பிட்டுவிட்டு பிறகு அவளிடம் தப்பிச்செல்லும் திட்டத்தை பற்றி தெளிவாக கூறலாம் என்று எண்ணியவன், சாப்பிட்டபின், வீட்டிலிருந்து வெளியேறி மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

பிரபாவதியை சந்திரசேகருடன் அனுப்பிவைப்பது எந்த அளவு சரியாக வரும் என்று சூரியாவால் ஒருமுடிவுக்கு வரமுடியவில்லை. அவனது மனநிலை ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் என்ற நிலையிலேயே இருந்தது. இருதினங்களுக்கு முன்னால், பிரபாவதியும் சரி, சந்திரசேகரும் சரி, யார்..? என்று கூட தனக்கு தெரியாது!! ஆனால், தற்போதைய நிலைமை அப்படியல்லவே. சந்திரசேகரை தான் நம்புகிறோமோ..? அல்லது நம்பவில்லையோ..? அது பிரச்சனை அல்ல. இருதினங்களே தெரிந்திருந்தாலும் பிரபாவதி, தனது சொந்த தாய்மாமாவின் மகள். பிரபாவதியும் சந்திரசேகரும் ஓடிப்போக தானே காரணம் என்று தெரிய வந்தால், எத்தகைய அவப்பெயரை தான் சந்திக்கவேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தான். அதைவிட திருமணம் நின்றுபோனால், அதனால் நடக்கப்போகும் பிரளையத்தை எண்ணிப் பார்த்தவனுக்கு, என்ன செய்வதென்றே புரியவில்லை

ஒவ்வொன்றையும் யோசிக்க, யோசிக்க சூரியவிற்கே தலைவலிக்க ஆரம்பித்தது. தன்னை இந்த நிலையில் நிறுத்திய தன் தாயை எண்ணி அவ்வளவு வெறுப்பாக இருந்தது. தன் தாய் சொந்தம் விட்டு போய்விட கூடாது என்பதிற்காகவோ, அல்லது ரத்தினவேலிடம் உள்ள பணத்திற்காகவோ, இந்த திருமணத்தை, அதுவும் இவ்வளவு அவசரமாக நடத்த முடிவெடுத்திருக்க மாட்டார் என்று சூரியாவிற்கு தெளிவாக புரிந்தது. அவரின் இந்த அவசரத்திற்கு ஒரே காரணம் சந்திரசேகர்...!

'எங்களைப்போலவே செண்பகத்திற்கும், சந்திரசேகரை முன்பின் தெரியாது. அப்படியிருக்கையில் அவன்மீது இவ்வளவு வன்மம் கொள்ள காரணமென்ன..?' என தன் மனது எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் சூரியாவிடம் பதில் இல்லை.

பிரபாவதியை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று சூரியா எவ்வளவோ மறுத்தும், செண்பகத்தின் பிடிவாதத்திற்கு முன்பு ஒன்றுமில்லாமல் போனது.. வேறு வழியில்லாமல் அரைமனதாக ஒப்புக்கொண்டவன், தனக்கும் பிரபாவதிக்குமான திருமணத்தில், அவளுக்காவது விருப்பம் இருக்கிறதா..? என்று தெரிந்து கொள்ள, பிரபாவதியிடம் பேசினான். அவள் சந்திரசேகரை விரும்புகிறாள் என்று தெரிந்தவுடன், சூர்யாவிற்கு மேலும் தர்ம சங்கடமான நிமையாகி போனது.

சரி நாளைக்கு பூ கேட்கத்தானே செல்கிறோம். தன் தாய் நினைத்தபடி அனைத்தையுமே செய்யட்டும். எல்லாமே இறுதியாக முடிவாகி திருமணம்வரை வருவதற்கு எப்படியும் ஒருமாதமாகிவிடும். அதற்குள், சந்திரசேகரை பற்றி அறிந்துகொண்டு, அவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில், தன் தாய் உட்பட அனைவரையும் சம்மதிக்க வைத்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று தனக்குள் எண்ணியவனாக அவர்களுடன் கிளம்பி வந்திருந்தான். ஆனால், ஒருநாளிலே நிச்சியம்செய்து, அடுத்தநாளே கல்யாணத்தை செண்பகம் முடிவு செய்வார் என்று சூரியாகூட எண்ணிப்பார்க்கவில்லை.

காலையில் சந்திரசேகரை கண்டவுடனே, சூரியாவிற்கு புரிந்து போனது. அதிலும் தனக்கும் பிரபாவதிக்கும் திருமணம் என்று கூறியதை கேட்டதும் சந்திரசேகர் உள்ளம் நொறுங்கிப் போனதை கண்கூடாக கண்டான். இருவரையும் சேர்த்து வைப்பதென்று அப்பொழுதே முடிவெடுத்துவிட்டாலும், நேரம் செல்ல செல்ல, இனம்காண முடியாத ஏதோ ஒரு பதற்றம் அவனுள் பரவ ஆரம்பித்தது. இதுதான் நடக்கவேண்டும் என்று இருந்தால், அதை மாற்ற யாராலும் முடியாது. நடப்பது நடக்கட்டும் என்று தனது சிந்தனைகளை கலைத்துவிட்டு, வீட்டை நோக்கி திரும்பியவன் ஒருகணம் திடுக்கிட்டான்..

ஐந்தரையடி உயரத்தில், கரடுமுரடான தோற்றத்தில், தலையில் முண்டாசைக் கட்டிக்கொண்டு, அவர்களது விட்டை சுற்றியே நோட்டமிட்டு, வட்டமடித்துக் கொண்டிருந்தவனை மறைவாக நின்று கவனிக்க ஆரம்பித்தான்.. கோவிலில் இருந்தே சூரியா அவனை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவனை பார்த்தால் இந்த ஊர் ஆளைப் போல தெரியவில்லை. பின்பு அவன் யாராக இருக்கும்..? என்று கேள்வி எழுந்தவுடன், பிரபாவதியின் உயிருக்கு இருக்கும் ஆபத்து நினைவுக்குவரவே, சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டு, தாமதிக்காமல் அவனை நோக்கி முன்னேறினான்.

சூரியா, தன்னை நோக்கி வேகமாக வருவதை கண்டுகொண்டவன், அவனிடம் சிக்காமல் தப்பித்து ஓட, சூரியாவும் பின்னாலேயே துரத்திக்கொண்டு ஓடினான். பிரதான சாலையை அடைந்ததும் அங்கு நிறுத்தியிருந்த தனது காரில் ஏறி தப்பிசெல்ல, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்திய சூரியா, தான் ஒரு காவல்துறை அதிகாரி என்றும், தப்பித்து செல்லும் குற்றவாளியை பிடிக்கவேண்டும் என்றும் கூறினான். டிரைவரும் சூரியாவை லாரியில் ஏற்றிக்கொள்ள, தனக்கு முன்னால் காரில் செல்பவனை, அவனுக்கு தெரியாமலேயே பின் தொடர ஆரம்பித்தான்..

விமானநிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு, பிரபாவதியை அழைத்து வந்திருந்த சந்திரசேகர், பிரபாவதியை பார்த்து..

"பேபி..? இப்ப நாம எங்க போறோம்னு உனக்கு தெரியுமா..?" என்று வினவ, இல்லை என்று தலையசைத்தாள்..

"தெரியாது ஒகே.. ஆனா, எங்க போறோம்னு கூட என்கிட்ட கேட்க தோணலையா..?" என்று மறுபடியும் கேள்வியெழுப்பினான். இம்முறை கூர்மையாக சந்திரசேகரை உற்று நோக்கியவள், அவனது கண்களை பார்த்துக்கொண்டே...

"சந்திரன், உங்களோட நான் வாழப்போற வாழ்க்கை ஒருநாளா இருந்தாலும் சரி, இல்ல நூறு வருசம்னாலும் சரி, கடுகளவு கூட உங்கள சந்தேகப்படாம, அதேசமயம், உங்கமேல கடலளவ விட அதிகமான காதலோட வாழணும். என்னை எந்த சூழ்நிலையிலும் நீங்க கைவிட மாட்டீங்கனு நான் மனசார நம்பறேன்" என்று கூறினாள்.

"இந்த அளவு என்மேல நீ நம்பிக்கை வைக்கிறதுக்கு.. நான் தகுதியானவனா..? பேபி. என்ன பார்த்தே மூனுநாள் தான் ஆச்சு. எனக்காவது உன் குடும்பத்த பத்தி, சொந்தபந்தங்கள பத்தி ஓரளவாவது தெரியும். ஆனா என் பேர தாண்டி என்னை பத்தி உனக்கு எதுவுமே தெரியாது. எப்படி பேபி என்னை நம்பற..?"

" நீங்களும் என்னை அன்னைக்கு ஏர்போர்ட்ல தான பார்த்தீங்க. அப்பறம் ஏன் சந்திரன் அடுத்தநாளே என்னை தேடி வந்தீங்க..?" என்று கேள்வி எழுப்பியவாறு புருவத்தை உயர்த்த, சந்திரசேகர் எதுவும் பேசத்தோன்றாமல் அமைதியாக இருந்தான்.

" சரி, அதைவிடுங்க. நீங்களும் அங்கயே பக்கத்துல இருந்தீங்க அதனால வந்தீங்கன்னு எடுத்துக்கலாம். இங்க இவ்வளவு தூரம் என்னைத்தேடி வர என்ன காரணம் சந்திரன். அதுவும் என்னை இங்கிருந்து கூட்டிட்டு போற முடிவுலதான நீங்க வந்திருக்கீங்க.." என்று கூறியதும்..

"அது.. வந்து.. பேபி.. " என்று வார்த்தைகள் வராமல் தடுமாறிக் கொண்டிருந்தான் சந்திரசேகர். அதை கவனித்தவள் தனக்குள் புன்னகைத்துக் கொண்டே

"விதி சந்திரன். எல்லாமே விதி. நடக்கிற எதுமே நம்ம கைல இல்ல சந்திரன். டெல்லியில இருந்து உங்ககூட சென்னை வந்தப்ப எனக்கிருந்த பாதுகாப்பு உணர்வை, இதுவரைக்கும் என் அப்பாகிட்ட கூட நான் உணர்ந்ததில்ல. உங்களை சென்னை ஏர்போர்ட்ல பிரியணும் நினைச்சப்ப நான் அடைஞ்ச உயிர் வலிய வார்த்தையால சொல்ல முடியாது. அப்ப நீங்க சொன்ன வார்த்தை உங்களுக்கு நினைவிருக்கா...? இந்த உலகத்துல நீ எங்க இருந்தாலும், உன் நிழலை கூட என்கிட்ட இருந்து பிரிக்க முடியாதுன்னு சொன்னீங்க. அந்த ஒருவார்த்தை போதும் சந்திரன் உங்கள நான் நம்பறதுக்கு.." என்று பிரபாவதி கூறினாள்.

"ஒருவேளை இன்னைக்கு நான் வராம இருந்திருந்தா..?"

"ரொம்ப சிம்பிள் சந்திரன். முடிஞ்ச அளவு அந்த கல்யாணத்த தடுத்துருப்பேன். முடியலையா எனக்கு கல்யாணம் நடந்திருக்காது, கருமாரிதான் நடந்திருக்கும்" என்று பிரபாவதி கூறியதும், பேபி.. என்று கதறியவாறு அவளை அணைத்துக்கொண்டு, கண்ணீர் சிந்த ஆரம்பித்தான். அதற்குள் அவர்கள் செல்ல வேண்டிய ரயிலும் வந்துவிட, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு இருவரும் ரயிலில் ஏறி, காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்ததும், அசதியின் காரணமாக பிரபாவதி சந்திரசேகரின் மடியில் தலைவைத்து படுத்துவிட்டாள்.

பயணிகளின் கனிவான கவனத்திற்கு..!! வண்டி எண் #######. திருச்சியிலிருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மூன்றாவது பிளாட்பாரத்திலிருந்து, சில மணித்துளிகளில் புறப்படும், என்று ரயில் நிலைய ஒலிபெருக்கியில் அறிவிப்பு வர, அதிக அழுத்தத்தில் துடித்துக் கொண்டிருந்த சந்திரசேகரின் இதயம் கொஞ்சம் கொஞ்சமாக இளைப்பாற ஆரம்பித்தது.
தன்மடியில் தலைவைத்து கால்களை குறுக்கி படுத்திருந்த பிரபாவதியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.


அவளது காதலை கண்டு சந்திரசேகர் மலைத்தே போனான். பிரபாவதியின் மீதான காதல் இதயத்திலிருந்து நீருற்றாக பொங்க, அவனது மனதில் காதலைத் தவிர, வேறு எந்த எண்ணமும் இல்லை. பிரபாவதியுடன் தான் வாழப்போகும் நாட்களை கற்பனை செய்தவாறே அமர்ந்திருக்க

"பாம்ம்ம்மம்மம்ம்ம்ம் " என ரயிலின் தலைப்பகுதியில் பொருத்தியிருந்த ஹாரன் பெரும் சத்தத்தை எழுப்ப, குபுகுபுகுபுகுபுவென கரும்புகையை கக்கியவாறு, என்ஜின், தனக்குள் உருவாக்கிய உந்துதலை சக்கரங்களுக்கு கடத்தியதும், அதை உள்வாங்கிக் கொண்ட சக்கரங்கள் " கிரீஈஈஈச்" என்ற சத்தத்தை வெளிப்படுத்தியவாறு உருள ஆரம்பித்து, கனத்த உருவத்தை மெதுவாக முன்னோக்கி நகர்த்தியது...

 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லாரியில் பின்தொடர்ந்து கொண்டிருந்த சூர்யாவிற்கு, அவனை பிடித்துவிட வேண்டும் என்ற வேகம் இருந்தாலும், இவன் வெறும் அம்புதான், இவனை பிடிப்பதைவிட இவனை ஏவியவர்கள் யார்..?, எதற்காக பிரபாவதியை கொல்லத் துடிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள நினைத்தான். அதனால், தனக்கு முன்னால் செல்பவனுக்கு எந்தவித சந்தேகமும் வராதவாறு, சிறிது இடைவெளி விட்டே அவனை பின்தொடர்ந்து கொண்டிருந்தான். தற்பொழுது சூர்யாவிற்கு எந்த சிந்தனையும் எழவில்லை. அவனுள் சுழன்று கொண்டிருந்த கேள்விகளால் சந்திரசேகரை சுத்தமாக மறந்தே போனான்

காரில் சென்று கொண்டிருந்தவன், தன்னை பின்தொடர்ந்து வரும் சூரியாவை கவனிக்கவில்லை. அதனால் வேகமாக சென்னையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான். மணி இரண்டை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், சென்னையை அடைந்தவனின் அடிவயிறு முட்டித்தள்ள
இயற்கை உபாதையை போக்குவதற்காக காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கியவன்,
வேகமாக வந்துகொண்டிருந்த லாரி, திடிரென வேகத்தை குறைத்து சாலையின் ஓரமாக நிற்பதையும், லாரியின் முகப்பு விளக்குகள் அனைக்கப்படுவதையும் கண்டு துணுக்குற்றவன், லாரியின் மீது கண்களை பதித்தவாறே மறைவாக சென்று சிறுநீர் கழித்துவிட்டு, அங்கேயே சிறிதுநேரம் நின்று நோட்டம்விட ஆரம்பித்தான்.


லாரியிலிருந்து ஒருவரும் இறங்கவில்லை, லாரியும் கிளம்பவில்லை என்றதுமே சுதாரித்துக் கொண்டான். ஒருவேளை தஞ்சாவூரில் தன்னை துரத்தியவன், தன்னை பின்தொடர்கிறானோ என்று எண்ணியதுமே, அவனுள் பதற்றம் உருவாக, எதையும் யோசிக்காமல் வேகமாக காரிலேறி பறக்க ஆரம்பித்தான்.

அவனது இந்த திடீர் வேகத்தை கண்டு சூரியாவிற்கும் புரிந்து போனது.. எதிராளியும் தன்னை கண்டுகொண்டான் என்று தெரிந்தவுடன், சூரியாவும் தனது கண்ணாமூச்சி ஆட்டத்தை விட்டுவிட்டு அவனை துரத்திக் கொண்டிருக்கும் வேளையில், பின்னால் தன்னை துரத்திவரும் லாரிய்லேயே தனது கவனத்தை வைத்து, தலையை திருப்பித் திருப்பி பார்த்தபடியே காரை ஓட்டிக் கொண்டிருந்தவன்,
தனக்கு முன்னாலிருந்த சாலையை கவனிக்க மறந்தான். அப்பொழுது “டமார்ர்ர்ரர்ர்ர்” என்ற பெரும் சத்தத்தோடு, எதிரே வந்த வாகனத்தில் அந்த கார் மோதி விபத்திற்குள்ளாகி சுழன்று நின்றது.


விபத்திற்குள்ளான காரை அடைந்ததும், வேகமாக சென்ற சூரியா காரினுள்ளே முன்புறமாக ஒருவன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதை கண்டவுடன் அவனை காப்பாற்றுவதற்காக தலையை உள்ளே நுழைத்த மறுநொடி... காரின் பின்புற இருக்கையிலிருந்து சரேலென..! மின்னல் வேகத்தில் சூரியாவை நோக்கிவந்த கத்தி, அவன் சுதாரித்துக் கொண்டதால், ஆழமாக பதியாமல், ஒரு கீரலை மட்டும் கழுத்தில் பதித்துவிட்டு பின்வாங்கியது.

காரின் பின்னால் இருந்தவனை கண்டு கொண்டவுடன் சூரியாவும் சுதாரித்துக் கொள்ள, கைகளில் இரண்டடி நீளத்தில் கத்தியுடன் இருந்தவனை, வெறும் கையுடன் எதிர் கொண்டான். காரிலிருந்து இறங்கியவன் சூரியாவை வீழ்த்திவிடும் நோக்கில் மின்னலென கத்தியை சுழற்ற, அதிலிருந்து லாவகமாக விலகிய சூரியா, அவன் சற்று பின்வாங்கவும், அதை பயன்படுத்திக்கொண்டு அசுரவேகத்தில் செயல்பட்டு, எதிராளியின் பின்புற கழுத்தில் தனது மொத்த பலத்தையும் திரட்டி ஓங்கி அடிக்க, அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், கையிலிருந்த கத்தியை நழுவவிட்டவாறே தரையில் சரிந்தான்..

கிழே விழுந்தவன் சுய உணர்வை அடைவதற்குமுன், அவனது முதுகின் மீது முழங்காலால் அழுத்தியபடியே, அவன் அணிந்திருந்த வேட்டியை கிழித்து, அவனது கைகால்களை இறுக்கமாக கட்டிப்போட்டான்

இனி அவனால் தன்னிடமிருந்து தப்பி செல்ல முடியாது என்று உறுதியானதும், காரில் அடிபட்டுகிடந்தவனை பரிசோதிக்க, லேசாக உயிர் துடித்துக் கொண்டிருந்தாலும், சுய உணர்வு அற்றநிலையில் இருந்தான். அவனைவிட்டுவிட்டு எதிர்புறமாக வந்த வாகனத்தில் இருந்தவர்களை பார்க்க, லேசான காயங்களுடன் முனகிக் கொண்டிருந்தாலும், விபத்தையும் மீறி தங்களது கண்முன்னே நடந்த கோர சம்பவத்தால், பீதியில் உறைந்திருந்தனர்.. அவர்களுக்கு அறுதல் கூறி, அவர்களை பற்றிய தகவல்களை சேகரித்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்திய சூரியா, தான் வந்த லாரியிலே இருவரையும் ஏற்றிக்கொண்டு, சென்னையில் தான் பணிபுரியும் காவல் நிலையத்தை நோக்கிச் சென்றான்.

காவல் நிலையத்தை அடைந்ததும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவனை அங்கிருந்த காவலர்களிடம் மருத்துவமனைக்கு கூட்டிசென்று மருத்துவம் பார்த்துவிட்டு, அவன் தப்பிச் செல்லாதவாறு அங்கேயே இருந்து பார்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு,
மற்றொருவனை தர தரவென இழுத்துக்கொண்டு போய், லாக்கப்பில் வைத்து காவல்துறை பாணியில் மிகவும் மென்மையாக விசாரிக்க ஆரம்பித்தான்.


அய்யோஓஓஓ...! அம்மாஆஆஆஆஆ... சார் அடிக்காதிங்க... நான் எல்லா உண்மையும் சொல்லிடறேன்... அய்யோ... என்னால வலிதாங்க முடியல.. ஆஆஆஅ.. அம்மாஆஅ..” கதறியவனிடம்

“ம்ம்ம். சொல்லு நீங்கெல்லாம் யாரு...? உங்களுக்கும் பிரபாவதிக்கும் என்ன சம்பந்தம்...?. எதுக்காக பிரபாவதிய கொல்லத் துடிக்கறீங்க” என்று கேள்வியெழுப்ப, அவன் கூறியtதைக் கேட்டு தனக்குள் ஏற்பட்ட உட்ச பட்ச அழுத்தத்தில், சூரியா உறைந்தே போனான்..

அவன் கூறியதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. இந்த மாதிரி ஒரு நிகழ்வை சூரியா கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. தான் சந்திரசேகரின் மீது கொண்டிருந்த நம்பிக்கை ஒரே நொடியில் பொய்த்துப் போனதை இன்னமும் கூட சூரியாவால் ஜீரணிக்க முடியவில்லை. நிச்சியதார்த்தத்தின் பொழுது சந்திரசேகருடன் தப்பி செல்லும் வழியை பற்றி
பிரபாவதியிடம் மோலோட்டமாக கூறியது நினைவுக்கு வர, தன்னையே நொந்து கொண்டவன்,
பிரபாவதி சூர்யாவுடன் சென்றிருப்பாளா..? என்று எண்ணுகையில், சூரியாவை அச்சம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.. ஏனெனில் சந்திரசேகரின் வேகத்தையும், அவனது வெறியையும் முழுதாக உணர்ந்துகொண்டவன் சூரியா மட்டுமே..


பிரபாவதி எத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்கிறாள் என்று புரிந்ததுமே, நொடிப்பொழுது கூட தாமதிக்காமல், காவல்துறை வாகனத்தை எடுத்துக்கொண்டு தஞ்சாவூரை நோக்கி சூரியா கிளம்பிய அதே வேளையில், தஞ்சாவூரில் பிரபாவதியை காணாவில்லை என்று ஆளுக்கொரு மூலையாக தேடிக்கொண்டிருக்க, திருச்சியிலிருந்து கோவையை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில், தன் மடியில் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்த பிரபாவதியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சந்திரசேகர். ஆறுதலாக அவளது கன்னங்களை வருடி, தன் இதழால் ஒற்றி எடுத்தான். வஞ்சத்தால் நஞ்சாகிப்போன தன் மனதை, காதல் கொண்டு காத்தவளை எண்ணி அவனது உதடுகள் உச்சரித்த ஒரே வார்த்தை மானே..!! என்னிடம் மயங்கியதேனோ...!!



விழித்திருக்கும் பொழுதே என்னை

களவாடிய கள்வனே

காதாலால் கைதியாகி- உன் இதய

சிறையில் அடைபட்டு

கிடக்கிறேன்.

காதல் கொண்டு என்னை காப்பாயா..?

இல்லை காயப்படுத்தி

பார்ப்பாயா..?



மயக்கம் தொடரும்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நண்பர்களே..!!!
இன்னைக்கு அப்டேட் குடுக்கதான் நினைச்சேன்... இது ரொம்ப பெரிய அப்டேட் நண்பர்களே... கிட்டத்தட்ட ஐயாயிரம் வார்த்தைகளுக்கு மேல் வரும்.. அதனால இன்னைக்கு பதிவிட முடியாது.. எனக்கு வாராத விசியம் இந்த ரொமான்ஸ் பண்ணறது... சந்திரசேகர் பிரபாவதியுடனான காதலை!! இன்னும் கொஞ்சம் அழகாக குடுக்க நினைக்கிறேன். அதனால இருதினங்கள் மட்டும் பொறுத்திருங்கள்; அதற்குள் பதினைந்தாவது பதிவை முழுவதுமாக எழுதிவிட்டு பதிவிடுகிறேன்... உங்களது பலகேள்விகளுக்கு இதில் பதில் தெரிந்துவிடும்னு நினைக்கிறேன்..


என்றும் உங்கள் நல் ஆதரவை விரும்பும் வாசகன்
வடிவேல்..:)
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்...15


நிஜத்திற்கும் நிழலுக்குமான போராட்டம்..!!

உண்மைக்கும் பொய்யுக்குமான போராட்டம்..!!

நம்பிக்கைக்கும் துரோகத்திற்குமான போராட்டம்..!!

வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம்..!!


பலவித எண்ணங்கள் மனதிற்குள் கூக்குரலிட, சிந்தனைகள் பேயாட்டம் போட, எப்படி இந்த உண்மையை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவது என்று தெரியாமல் தஞ்சாவூரை நோக்கி விரைந்து கொண்டிருந்தான் சூரியா. செண்பகத்தின் விட்டுத் திருமணம் நின்றுபோன விஷயம் ஊர் முழுவதும் பரவி, ஒவ்வொருவராக துக்கம் விசாரித்த வண்ணமே வந்து போய்க்கொண்டிருந்தனர். செல்லம்மாளும், செண்பகமும் யாரையும் சந்திக்க விருப்பமில்லாமல், வீட்டினுள்ளேயே முடங்கி கொள்ள, ரத்தினவேல் மட்டுமே ஒவ்வொருவருக்கும் பதில் கூறிக் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் ரத்தினவேலின் சொத்துக்களுக்காக தான் பிரபாவதியை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார் செண்பகம். பிரபாவதியை பார்த்ததும் இவள்தான் என் வீட்டு மருமகள் என்று எண்ணினாரே தவிர, தீவிரம் காட்டவில்லை. சந்திரசேகரை பார்க்கும் வரை அனைத்துமே சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது. சந்திரசேகரை கண்டு பிரபாவதி பாகாக உருகியதும், பிரபாவதியை கண்டு சந்திரசேகர் அந்தரத்தில் மிந்ததும், செண்பகத்தின் ஆணவத்தைத் தூண்டிவிட, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று சூரியா மறுத்துக் கூறியும், அவனது விருப்பத்தை புறம் தள்ளிவிட்டு அனைத்தையும் அவசர அவசரமாக செய்து முடித்திருந்தார் செண்பகம்.. வெண்ணை திரண்டு வரும் வேளையில் பானை உடைந்ததைப் போல, செண்பகம் உட்பட அனைவரது தலையிலும் பெரிதாக இடியை இறக்கிவிட்டு, தனது பல வருட தவத்திற்கான வரத்தை கையோடு கூட்டி சென்றிருந்தான் சந்திரசேகர்..

சூரியா அவனது வீட்டை அடையும் பொழுது மணி பத்தை கடந்திருந்தது.. இரவிலிருந்தே காணாமல் போன சூரியா, திடிரென்று காவல்துறை வாகனத்தில் வருவதைக் கண்டு விஷயம் பெரிதாக தோன்ற, ஆங்காங்கே சிதறியிருந்த உறவினர்கள் ஒன்று கூடினர்..

சூரியாவை காவல்துறை வாகனத்தில் கண்டதும் ரத்தினவேலும் கூட பதறிப்போனார். சூரியா வந்துவிட்டான் என்ற தகவல் செல்லம்மாளுக்கும், செண்பகத்திற்கும் சென்றவுடன்

"சூரியா... நம்ம குடும்ப மானத்த ஒரே நாள்ல குழிதோண்டி புதைச்சுட்டு, சந்திரசேகர் கூட ஓடிப் போய்ட்டாடா அந்த சிறுக்கி மவ.. இனி எப்படி என் சாதிசனம், பெத்து பிறப்புக மூஞ்சில முழிப்பேன்" என்று கதறிய படியே ஓடி வந்தார் செண்பகம். தன் அன்னையின் அவசர புத்தியால் தான் எல்லாமே நடந்ததாக எண்ணிய சூரியா, உள்ளுக்குள் அடக்க மாட்டாத புகைச்சலுடன் இருந்தாலும் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல், செண்பகத்தை சமாதானம் செய்துவிட்டு.. ரத்தினவேலை நோக்கி, "மாமா முக்கியமானவங்கள மட்டும் கூட்டிட்டு விட்டுக்குள்ள வாங்க" என்று கூறிவிட்டு விறுவிறுவென உள்ளே சென்று விட்டான்..

உள்ளே சென்றதும் கதவை சாத்திவிட்டு அனைவரும் சூரியாவின் முகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருக்க, அங்கிருந்த அனைவரது முகத்திலும் எண்ணிலடங்கா கேள்விகளும், கலவரமும் அடங்கி இருந்தது. ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டே வந்தவன், இறுதியாக ரத்தினவேலின் முகத்திற்கு பார்வையைத் திருப்பியதும், ரத்தினவேலின் கண்களை பார்க்கும் சக்தியின்றி தலையை தாழ்த்திக் கொண்டு, தனக்குத் தெரிந்தவற்றை கூற வாய்திறக்கும் முன்

"சூரியா... என் பொண்ணுக்கு என்ன ஆச்சு..? ராத்திரில இருந்து நீ எங்க போன..? ஒழுங்கா உனக்கு தெரிஞ்ச உண்மைய சொல்லு சூரியா.. " என்று தன் மகளுக்கு என்ன ஆனதோ என்ற அச்சத்தில் அழுதுகொண்டே செல்லம்மாள் வினவ

" செல்லம்மா.. ஆம்பளைங்க பேசிட்டு இருக்கோம்ல.." என்று தன் மனைவியை கடிந்துகொண்ட ரத்தினவேல், சூரியாவை ஏறிட்டு பார்க்க, மூச்சை இழுத்து தன்னை சமன் செய்து கொண்டு

" மாமா.. சென்னைல ஈஸ்வரன்னு உங்களுக்கு யாரையாவது தெரியுமா..? என்று கேள்வி எழுப்ப, ரத்தினவேலை பயப்பந்து சூழ ஆரம்பித்தது...

" தெரியும் சூரியா.. தொழில்ல என்னோட பரம எதிரி.. இப்ப அவர பத்தி ஏன் கேக்கற சூரியா..? " என்று அதிர்ந்து, விதிர்த்துப் போய் கேள்வியெழுப்பினார்

" நிஜமா தொழில்ல மட்டும்தான் ஈஸ்வரன் உங்களுக்கு எதிரியா..?" என்று கேட்டுவிட்டு கூர்மையாய் பார்த்தான் சூரியா..

" ஐயோ.. என் பொண்ண அந்த ஈஸ்வரன் ஏதாவது பண்ணிட்டாரா..? நான் அன்னைக்கே சொன்னேனே.. கேட்டீங்களா..? என் மகளுக்கு என்ன ஆச்சு சூரியா..? இப்ப என் பொண்ணு எங்க இருக்கா சூரியா...?" என்று கதற ஆரம்பித்தார் செண்பகம்..

" அத்தை கொஞ்சம் அழாம அமைதியா நான் சொல்லறத கேளுங்க.. பிரபா எங்க இருக்கிறான்னு எனக்கும் தெரியாது.. ஆனா, அவ சந்திரசேகர் கூடத்தான் போயிருக்கணும்.. அவளுக்கு எதும் ஆகாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் பிரபாவ கண்டுபிடிச்சுடுவேன்; என்ன நம்புங்க.." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே

"அப்ப அவங்க ஓடிப் போறதுக்கு நீயும் காரணமா சூரியா..? " என்று கேள்வியெழுபிய, தன் தாயை முறைத்தவன்..

"அவங்க ஓடிப் போறதுக்கு மூலக் காரணமே நீங்கதான்.. உங்க அவசர புத்திதான் காரணம்.. உங்களோட தானுங்கிற ஆணவம்தான் காரணம்" என்று செண்பகத்திடம் சூரியா சீறிக்கொண்டிருக்க

" சூரியா.. அவங்க ஓடிப்போனதுக்கு யார் காரணம்னு பேசறதுக்கான நேரம் இது இல்ல.. முதல்ல ஈஸ்வரன பத்தி எதுக்கு கேட்ட..?, என் பொண்ணு சந்திரசேகரோட ஓடிப்போனதுக்கும் ஈஸ்வரனுக்கும் என்ன சம்பந்தம்..?" என்று பதறியபடியே ரத்தினவேல் கேள்வியெழுப்ப..

"சந்திரசேகர்.. ஈஸ்வரனோட பையன் "என்று கூறியதுமே நெஞ்சை பிடித்துக் கொண்டு ரத்தினவேல் சரிய, செல்லம்மாளும் மயங்கி கிழே சரிந்தார்...

தன் பொன்னிற தாரைகளை பூமியெங்கும் அள்ளித் தெளித்தவாறே கீழ்வானில் உதயமான கதிரவன்.! வானில் வலம் வரத் தொடங்கியிருந்தான். பிரபாவதி தன்னுடன் இருக்கிறாள் என்ற எண்ணமே வாழவேண்டும்! என்ற ஊக்கத்தைக் கொடுத்திருந்தாலும், தன்னை பற்றிய உண்மைகள் தெரிந்தால் எப்படி எடுத்துக்கொள்(ல்)வாளோ என்று ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியது. பிரபாவதி தன் மீது வைத்திருக்கும் மாசற்ற காதலை கண்டதும், தன்னை பற்றிய குற்ற உணர்வில் கல்லடி பட்ட கண்ணாடியாக நொறுங்கிப் போனான் சந்திரசேகர். உண்மையை அவளிடம் உரைத்துவிடு என்று அறிவு கூக்குரலிட, மனதோ..! எதையும் கூறிவிடாதே என்று மண்டியிட்டு மன்றாடியது. நெடுநேரமாக தனக்குள் நடத்திய அறிவுக்கும் மனதிற்குமான போராட்டத்தில், மனதே வெற்றிபெற எந்த சூழ்நிலையிலும் தன்னைப் பற்றியோ, தனது குடும்பத்தைப் பற்றியோ பிரபாவதிக்கு தெரிந்துவிடக் கூடாது; எத்தகைய துன்பத்தை தான் சந்திக்க நேர்ந்தாலும் சரி, பிரபாவதிக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என மனதிற்குள் உறுதி பூண்டு, தலையை பின்னால் சாய்த்தவாறே உறங்கிப்போனான்..

ரயிலின் தடக் தடக், தடக் தடக் என்ற தாலாட்டில், தாயின் மடிக்கு நிகரான தன்னவனின் மடியில் தலைவைத்து உறங்கிய பிரபாவதி மெல்ல உறக்கம் கலைந்து விழித்துக் கொண்டாள்.. விழியை சுழற்றியவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்றே புரிபடவில்லை. தான் காண்பது கனவா..? அல்லது நிஜமா..? என்ற குழப்பம் மேலிட, மீண்டும் கண்களை மூடி சற்று நேரம் தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு எழ முயன்றவளை, ஏதோ ஒன்று தடுத்து நிறுத்தியது. அது என்னவென்று அறிந்துகொள்ள மெதுவாக பார்வையை கிழே இறக்கியவள் ஒருகணம் பதறிப்போனாள்.

பிரபாவதியின் சேலை விலகிய வெற்றிடையை, சந்திரசேகரின் வலதுகரம் வலுவாகப் பற்றியிருந்தது.. அதை உணர்ந்ததுமே பெண்ணுக்கே உண்டான நாணம் உடனடியாக தொற்றிக்கொள்ள, கன்னங்கள் செங்கொழுந்தாக சிவந்து போனது. அவளது பூந்தளிர் மேனி அடிவயிற்றில் குறு குறுப்பை உண்டாக்கி, மேனியெங்கும் பரவ செய்ததில் மயிர்கால்கள் சிலிர்த்துக் கொண்டது. உடனடியாக உதட்டில் பூத்த வெட்கப் புன்னகையுடனே தலையை உயர்த்தி சந்திரசேகரை பார்த்தவள், சந்திரசேகர் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு சந்திரசேகரின் கையின் மீது தனது கையை வைத்து அணைப்பை இறுக்கியவள் சற்று நேரம் அசையாமல் இருந்துவிட்டு, அவனது உறக்கம் கலையாதவாறு எழுந்து எதிர்புறமாக அமர்ந்துகொண்டு, சந்திரசேகரை பார்வையாலேயே பருக ஆரம்பித்தாள்..

நடப்பது எதையுமே பிரபாவதியால் நம்பமுடியவில்லை.. தான் எப்படி சந்திரசேகரின் மேல் இந்த அளவு பித்தாகிப் போனோம் என்று அவளாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. மேற்கொண்டு எதையும் கூர்ந்து யோசிக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை. சந்திரசேகருடன்தான் அவளது வாழ்க்கை என்று அவனை சந்தித்த அன்றே முடிவெடுத்துவிட்டாள்; இருந்தாலும் இவ்வளவு சீக்கிரத்தில் தனது எண்ணம் ஈடேறும் என்று பிரபாவதி கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை.. அவளது எண்ணமெல்லாம் சிலநாட்களில் மீண்டும் தான் தன் குடும்பத்துடன் இணைந்துவிடுவோம் என்றிருந்ததால், எவ்வித தயக்கமும் இன்றி சந்திரசேகருடன் செல்ல துணிந்து முடிவெடுத்தாள்.

நெடுநேரமாக சந்திரசேகரையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சந்திரசேகர் தன்னை விமான நிலையத்தில் பார்த்த பார்வை நினைவுக்குவர, அவளையும் மீறி அவளது உதடுகள் புன்னகை பூக்க

"டேய் அழகா..!!! என்னை இந்த அளவு உனக்கு பிடிக்குமாடா..? அப்படி என்னடா என்கிட்ட இருக்கு.. இந்த உயிரையும், உடம்பையும் தவிர ஒண்ணுமே இல்லையேடா.. இன்னும் ரெண்டுபேரும் காதல கூட சொல்லிகிட்டது இல்ல.. அப்பறம் எப்படிடா என்ன தேடி வந்த.. நிஜமாவே இந்த உலகத்துல நான் எங்க இருந்தாலும் நீ கண்டு பிடிச்சுடுவியா..?" என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டவளுக்கு சந்திரசேகரிடம் விளையாடி பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்ற,

" ச்ச்சோ பாவம்.. இன்னைக்கு வேண்டாம்.. இன்னொருநாள் உன்கிட்ட நான் சொல்லாம போறேன் அப்ப கண்டு பிடிக்கிறயானு பாக்கறேன்" என்று தனக்குள் எண்ணிக்கொண்டு தனது காலை கடன்களை முடிக்க ரயிலில் உள்ள பாத்ரூமை நோக்கி சென்றாள்.. பலவருடங்களாக பிரபாவதியின் முகத்தைக் கூட பார்த்திடாமல் அவளையே மூச்சாக சுவாசித்தவன், இப்பொழுது நேசிக்கவும் ஆரம்பித்திருக்கிறான். அவள் மட்டுமில்லை; அவளது சுவாசம் கூட அவனது அனுமதியின்றி எங்கும் செல்ல முடியாது என்று பிரபாவதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. பிரவாபதி எழுந்ததுமே விழித்துக் கொண்டவன், அவள் தனக்குள்ளே எண்ணிக் கொள்வதாக நினைத்துக் கொண்டு வாய்திறந்து பேசிக் கொண்டிருக்க, கடினப்பட்டு தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு, அவள் அறிந்திடாதவாறு பிரபாவதியை ரசித்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

கோயமுத்தூர் ரயில் நிலையத்தை ரயில் அடையவும், பிரபாவதி தனது வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.. பிரபாவதியை பார்த்து புன்னகை சிந்தியவன்
" போலாமா..? " என்று கண்களாலேயே வினவ, தலையசைத்து சம்மதம் தெரிவித்துவிட்டு சந்திரசேகர் முன்னால் செல்ல, பிரபாவதி பின்தொடர ஆரம்பித்தாள்..


ரயில் நிலையத்தை கடந்து வெளியே வந்ததும், ரயில் நிலையத்திற்கு எதிரேயுள்ள ஒருலாட்ஜில் அறை எடுத்தவன், பிரபாவதியை கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருக்குமாறு பணித்துவிட்டு, வெளியே சென்றான்.. ஒரு அரைமணிநேரம் கழித்து திரும்பி வந்தவனது கைகளில் புதிதாக இரண்டு பைகள் முளைத்திருந்தது. எப்படியும் பிரபாவதியை அழைத்துக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற முடிவுடனே சந்திரசேகர் கிளம்பியதால், அவனது உடமைகளையும் சிறிது நாட்கள் தாக்குபிடிக்கும் அளவிற்கு பணத்தையும் கையோடு கொண்டு வந்திருந்தான்.. ஆனால் பிரபாவதியோ உடுத்திய உடையுடனே வந்திருந்ததால் அவளுக்கு உடை வாங்கவே சென்றிருந்தான்..

" பேபி.. இப்போதைக்கு குளிச்சிட்டு இந்த டிரெஸ்ஸ மாத்திக்கோ.. நாம இப்ப கூடலூர் போறோம்.. என்கூட லண்டன்ல படிச்ச என்னோட பிரெண்ட் கூடலூர்லதான் இருக்கான்.. இப்ப அவன தேடித்தான் நாம போகப்போறோம்.. " என்று கூற, சந்திரசேகரின் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு தயங்கியபடியே நின்றிருந்தாள் பிரபாவதி..

" என்ன பேபி..? வேற ஏதாவது வேணுமா..? இல்ல என்கிட்ட ஏதாவது சொல்லணுமா..?" என்று அவளது தயக்கத்தை புரிந்து கொண்டவனாக கேள்வியெழுபினான்.

" அது இல்ல சந்திரன்... முதல்ல என் கழுத்துல தாலி கட்டிடுங்க.. மத்தவங்க பாக்கிறது ஒரு மாதிரியா இருக்கு.." என்று தயங்கியபடியே பிரபாவதி கூற.. பிரபாவதியை நெருங்கி அவளது கன்னங்களை இரு கைகளால் ஏந்தி, கண்களோடு கண்களை கலக்கவிட்டவன், அவளது அலைப்புறும் கண்களை பார்த்தவாறே

" பேபி.. ஊரறிய உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு இந்த ஜென்மத்துல எனக்கு குடுப்பினை இல்ல. ஆனா, அதுக்காக யாருமில்லாத அநாதை மாதிரி உன்ன கல்யாணம் பண்ணிக்க நான் விரும்பல. இப்ப நாம போகப் போற இடத்துல, ரத்த சொந்தங்கள் இல்லைனாலும் நமக்காகவும் சில சொந்தங்கள் இருக்காங்க.. அங்க போனதும், அவங்க ஆசிர்வாதத்தோட நாம கல்யாணம் பண்ணிக்கலாம் சரியா" என்று மென்மையாக எடுத்துரைக்க, சம்மதமாக தலையசைத்தவள் குளியலறைகுள் புகுந்து கொண்டு இருபது நிமிடங்களில் குளித்துவிட்டு தயாராகி வெளியே வந்ததும், சந்திரசேகரும் குளித்துவிட்டு தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அங்கிருந்த உணவகத்தில் உணவருந்திவிட்டு கூடலூர் செல்லும் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்றனர்..

மருத்துவமனையின் வெளிப்புறம் ஒட்டுமொத்த உறவுகளும் கூடியிருக்க, ரத்தினவேல் செல்லம்மாளின் உடல் நிலையை அங்கிருந்த மருத்துவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான் சூரியா..
செல்லம்மாளுக்கு அதிர்ச்சியில் மயக்கம் ஏற்பட்டிருக்க, ரத்தினவேலுவுக்கோ லேசான மாரடைப்பு வந்திருந்தது.. தன்னை சுற்றி நடப்பவைகள் எல்லாமே ஒரே சூன்யமாகவே தோன்ற தலை வலியெடுக்க; கைகளால் தலையை பற்றிக்கொண்டு சோர்ந்துபோய் அமர்ந்தான் சூர்யா..


தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமான சந்திரசேகரின் மீது கட்டுக்கடங்காமல் ஆத்திரம் எழ, அதேசமயம், 'என்னை பற்றிய உண்மை தெரிந்தாலும், எந்த சூழ்நிலையிலும் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதே' என்று சந்திரசேகர் கண்கலங்க கூறியதும் நினைவுக்கு வந்து அவனை நிம்மதியிழக்க செய்தது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்றே சூர்யாவிற்கு தெரியவில்லை.. சற்று நேரம் அமைதியாக கண்களை மூடி நடந்த சம்பவங்களை தனக்குள்ளே மனக் கண்ணில் ஓடவிட்டு பார்த்தான்.. அப்பொழுது தான் சில விஷயங்கள் அவனுக்கே புரிய ஆரம்பித்தது..

தனது அத்தையும் மாமாவும், பிரபாவதி சந்திரசேகருடன் சென்றுவிட்டாள் என்று அதிரவில்லை. ஈஸ்வரனின் மகன்தான் சந்திரசேகர் என்று தெரிந்த பின்னரே அவர்களுக்கு இப்படி ஆகியிருக்கிறது. அப்படியென்றால், இந்த கல்யாணத்தில் இருவருக்குமே விருப்பமில்லை, தனது தாயின் பிடிவாதத்தால் தான் சம்மதித்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டவன், ரத்தினவேலின் நடவடிக்கையை எண்ணிப்பார்க்கையில், பிரபாவதி சந்திரசேகருடன் செல்லப் போகிறாள் என்று தனது மாமாவும் முன்பே முடிவு செய்துவிட்டார் என்பதையும் புரிந்து கொண்டான்..

பிரபாவதியை கொல்வது ஒன்றே சந்திரசேகரின் இலக்கு என்றால், இவ்வளவு தூரம் அவளை வரவே விட்டிருக்க மாட்டான். டெல்லியில் வைத்தே பிரபாவதியை கொலை செய்திருப்பான். ஏன் கொல்லவில்லை..? அப்படியென்றால் சந்திரசேகரும் பிரபாவதியை பாதுகாக்க நினைக்கிறான்.. ஆனால் யாரிடமிருந்து..? அவனது தந்தையிடமிருந்தா..? அல்லது இன்னும் வேறு யாராவது இருக்கிறார்களா..? என்று யோசிக்க யோசிக்க குழப்பமே மிஞ்சியது.

அவர்கள் எங்கு சென்றிருக்கிறார்கள் என்பதை முதலில் தேட வேண்டு. அவர்கள் இருவரும் ஈஸ்வரனின் கண்ணிலோ, அல்லது ரத்தினவேலின் கண்ணிலோ பட்டுவிடக் விடக் கூடாது.. அதற்குள் தான் அவர்களை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு, அதற்குமுன் ஈஸ்வரனை விசாரித்து விடலாம் என்று முடிவு செய்தவன், உறவினர்களிடம் இருவரையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, சென்னையை நோக்கிக் கிளம்பினான்.

பாம்பைப்போல வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில், திணறிய படியே ஆமையைப் போல் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது அந்த பேருந்து. மாலை நான்கு மணியளவில் பர்லியாறை கடந்து, ஊட்டியை நோக்கி மேலே செல்லச் செல்ல, லேசாக குளிர ஆரம்பித்து இரண்டு மணிநேரத்தில் ஊட்டியை அடையும் பொழுது, உறைபனி சூழ்ந்துகொண்டு எலும்புகளை கூட நடுக்கம் கொள்ளச் செய்தது. பிரபாவதியின் பற்கள் கட கடவென அடித்துக் கொள்ள, அனிச்சையாகவே அவளது உடல் உதற ஆரம்பித்தது.. இருகைகளையும் தேய்த்து சூடு படுத்திக் கொண்டவளை கண்டு தான் போர்த்தியிருந்த சால்வையை எடுத்து பிரபாவதிக்கு போர்த்திவிட்டு அவளது கைகளை நன்றாக தேய்த்துவிட்டவாறே அவளை ஏறிட்டு நோக்க, சந்திரசேகரின் கைகளை இறுக பற்றிக் கொண்டு தோளோடு சாய்ந்து கொண்டாள்..

ஊட்டி பேருந்து நிலையத்தை அடைந்ததும், பேருந்து பத்துநிமிடம் நிற்கும் அதற்குள் டீ சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுவிட்டு வருமாறு பயணிகளை நோக்கிக் கூறிவிட்டு, நடத்துனரும் ஓட்டுனரும் கிழே இறங்கிச் சென்றுவிட பயணிகளும் ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர்.. கிழே இறங்கிய பிரபாவதி சந்திரசேகரை ஏறிட்டு பார்க்க, அதை புரிந்துகொண்டவன், அவளது கையை பிடித்தபடி கழிப்பறையை நோக்கி அழைத்துச் சென்று விட்டுவிட்டு வெளியே வரும்வரை காத்திருந்தான். பிரபாவதி நடுங்கிக் கொண்டே வெளியே வந்ததும் அவளை அணைத்தவாறே அருகிலிருந்த தேனீர் கடைக்குச் சென்று தேனீரை வாங்கி அருந்திவிட்டு, பேருந்தில் ஏறி அமர்ந்து கொள்ள, அவ்வளவு நேரமாக ஓரளவேணும் வெளிச்சத்தோடு இருந்த இடம், திடீரென அங்கு சூழத் தொடங்கிய வெண்பனியால், மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்து, சில நிமிடங்களுக்குள்ளாகவே முற்றிலும் மறைந்து போனது.. பேருந்தில் அருகிலிருப்பவர்களை கூட தொட்டுதான் உணர்ந்து கொள்ள முடியும் என்ற நிலமையில், தனது கைகளால் சந்திரசேகரை துலாவி பற்றிக்கொண்டு, இயற்கையின் விந்தையை எண்ணி வியந்தவாறே அமர்ந்திருக்க, பேருந்து தனக்குள் ஒரு மெல்லிய அதிர்வை உண்டாக்கி, தான் உயிர் பெற்றதை உணர்த்திவிட்டு கூடலூரை நோக்கி ஊட்டிலிருந்து கிழே இறங்கத் தொடங்கியது..

இரவு எட்டுமணி வாக்கில் கூடலூரை அடைந்ததும் பேருந்திலிருந்து இறங்கியவர்கள் சுற்றிலும் நாலாப்புறமும் பார்வையை வீச, ஒன்றிரண்டு ஆட்களை தவிர மனிதர்கள் நடமாற்றமின்றி மயானம்போல் காட்சியளித்ததைக் கண்டு, பிரபாவதி நடுங்க ஆரம்பித்தாள்.. அவளது பயத்தைப் புரிந்து கொண்டவன், தனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டு கண்களாலேயே அவளுக்கு தைரியம் கூறிவிட்டு, அருகிலிருந்த தங்கும் விடுதியை நோக்கிச் சென்றனர்..

" சந்திரன் இப்பவும் நாம லாட்ஜ்ல தான் தங்கணுமா..? உங்க பிரெண்ட் வீட்டுக்கு போக முடியாதா..?" என்று அங்கு தங்க விருப்பமில்லாமல் வினவ

" இன்னைக்கு ஒரு ராத்திரி மட்டும் கொஞ்சம் அஜெஸ்ட் பண்ணிக்க பேபி.. விடிஞ்சதும் நாம கிளம்பிடலாம். இங்க இருந்து இன்னும் பத்து கிலோ மீட்டர் போகணும். இந்த நேரத்துல அங்க போறது அவ்வளவு பாதுகாப்பு இல்லை.. என்று கூறி சமாதானப் படுத்திவிட்டு, பிரபாவதியை அழைத்துக் கொண்டு, தாங்கும் அறையை நோக்கிச் சென்றவன், பிரபாவதியை உள்ளே சென்று அமர்ந்திருக்குமாறு கூறிவிட்டு, இரவு உணவை வாங்குவதற்காக சென்றுவிட்டான்..

உள்ளே வந்ததும் அறையை நோட்டம் விட்டவளின் இதயம் பட படவென அடித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது; காரணம், அறை சற்று பெரியாதாக இருந்தாலும் ஒரேயொரு கட்டில் மட்டுமே இருக்க, எப்படி சந்திரசேகருடன் ஒரே கட்டிலில் படுத்துக் கொள்வது என்று புரியாமல் முழித்தபடியே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவள், சந்திரசேகரின் அருகாமையை தனது உடலும் மனதும் நாடத் தொடங்கியத்தை எண்ணியே பயந்து கொண்டிருந்தாள். வெளியே சென்ற சற்று நேரத்திற்குள்ளாகவே கைகளில் இரண்டு கம்பளிகளையும், உணவு பொட்டலங்களையும் சுமந்தவாறே வந்த சந்திரசேகர் பிரபாவதியை சாப்பிட வைத்து, அவனும் சாப்பிட ஆரம்பித்தான்..இருவரும் சாப்பிட்டு முடித்ததும், சுவர் ஓரமாக இருந்த அடுப்பில் சில விறகு கட்டைகளை போட்டு தீ மூட்டியவன்,

" பேபி.. நீ கட்டில்ல படுத்துக்கோ.. நான் இப்படியே படுத்துக்கறேன் காலைல நேரத்துலையே நாம கிளம்பனும்.. அதனால எதையுமே யோசிக்காம தூங்கு.." என்று கூறிவிட்டு அங்கேயே படுத்துக் கொள்ள, என்னென்னமோ கற்பனைகள் செய்து கொண்டிருந்தவளை ஏமாற்றம் சூழ்ந்துகொள்ள..

" சந்திரன்... நீங்களும் கட்டில்லையே படுத்துக்கங்க.. நான் உங்களை ஒன்னும் செய்ய மாட்டேன் " என்று கிண்டலாக கூறியவளை கண்டு.." ஹா ஹா ஹா ஹா" என்று புன்னகைத்தவன்... எழுந்து அவளது அருகே சென்று, காற்று புகும் அளவுக்கே இடைவெளி விட்டு நெருங்கி நிற்க.. பிரபாவதி பயந்து பின்னோக்கிச் செல்ல நினைத்தாலும் கட்டில் தடுத்துக் கொண்டது.. அடுத்தது என்ன நடக்குமோ..? என்ற எதிர்பார்ப்பும், பயமும் ஒன்றாக கலந்து ஒருவித மோன நிலையை பிரபாவதிக்குள் தோற்றுவிக்க, சந்திரசேகரோ தனது விரல்களால் அவளது பிறை நெற்றியில் கோலம் போட ஆரம்பித்திருந்தான்..

சந்திரசேகரின் விரல்கள் முதலில் இரு கண்களையும் சுற்றி ஒரு வட்டமடித்துவிட்டு மெதுவாக நாசியை நோக்கிக் கிழே இறங்க, பிரபாவதியோ சுவாசத்திற்காக ஏங்கும் மீனாக துடிக்க ஆரம்பித்தாள்.. அவளது அவஸ்தையை கண்டு தனக்குள் புன்னகை புரிந்தவன்.. சாயம் இட்டுக்கொள்ளாமலே சிவந்திருந்த இதழ்களை அவனது விரல்கள் பற்றியதும், கண்களை மூடி மயக்க நிலைக்கே சென்றுவிட்டாள். அவளது குமரியின் உருவமும், குழந்தைத்தனமான செய்கைகளும், சந்திரசேகரின் கட்டுப்பாட்டையும் கூட அசைத்துப் பார்க்க ஆரம்பித்தது. இதற்குமேல் தொடர்வது நல்லதல்ல என்று எண்ணியவன், பிரபாவதியை மென்மையாக அணைத்து கட்டிலில் படுக்க வைத்து, அவளது கழுத்துவரை கம்பளியை இழுத்துப் போர்த்திவிட்டு, மீண்டும் தனது இடத்திற்கே வந்து படுத்துக் கொண்டான்..

சிறிதுநேரம் மயக்க நிலையிலேயே இருந்தவள் சுயஉணர்வு அடைந்து மெதுவாக எழுந்து சந்திரசேகரை தேட, தக தகவென எரியும் நெருப்பிற்கு சற்று தள்ளி, கிழே கம்பிளியை விரித்து படுத்திருந்தவன் பார்வைக்கு கிடைத்தான்.. தான் அனுமதித்தும் கூட, தன்னிடம் நெருங்காமல் கண்ணியம் காத்த தன்னவனை எண்ணி பிரபாவதிக்குள் காதல் வெள்ளமாக ஊற்றெடுக்க, ஒரு நொடிகூடதாமதிக்காமல், புள்ளிமானாக துள்ளி ஓடி தன்னவனின் மார்பில் சரணடைந்தாள்..

" ஹேய்!! பேபி என்ன ஆச்சுடா..? நீ கட்டில்ல..." என்று கூற ஆரம்பிக்கும் முன்பே தனது கையால் சந்திரசேகரின் வாயை மூடியவள்..

" ச்சூ... பேசாம படுடா.. எனக்கு தூக்கம் வருது... " என்று கூறிவிட்டு சந்திரசேகரின் மார்பிலே முகம் புதைத்துக்கொள்ள.. சந்திரசேகரும் மேற்கொண்டு எதுவும் பேசாமல், தன்னவளை ஆரத் தழுவிக்கொண்டு, ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்ல ஆரம்பித்தான்...

வேடமிட்டு வந்த வேடனையே
தன் வாள்விழியால் வீழ்த்தி விட்டது
புள்ளிமான் ஒன்று..


வேட்டையாட வந்தவனே
காதலனாக காவலனாக
மாறியது விந்தையிலும் விந்தையே..


விதியால் ஒன்றிணைந்த உள்ளங்களை
அவ்விதியே பிரிக்க நினைப்பது

கொடுமையிலும் கொடுமையே.

சுற்றும் பூமியும்
தகிக்கும் சூரியனும்
ஆர்பரிக்கும் அலையும்
சுழன்றடிக்கும் காற்றும்
வானத்து விண்மீன்களும்
உங்களை காத்து நிற்கட்டும்



மயக்கம் தொடரும்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே..
வேலை செய்யும் பொழுது எதிர்பாராமல் சிறிய விபத்து ஏற்பட்டு கை சிக்கிடுச்சு.. அதனாலதான் பதிவுகள் குடுக்க முடியல... இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிட்டு இருக்கு. தாமதத்திற்கு மன்னிக்கவும்.. மீண்டு(ம்) வருகிறேன்..
என்றும் அன்புடன்
வாசகன் வடிவேல்:)
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்.. 16

“என்ன இப்பவே இங்கிருந்து கூட்டிட்டு போங்க... நான் அந்த ஈஸ்வரன் வீட்டுக்கு போகணும்.. டாக்டர்!! டாக்டர்!!.. சூர்யா சூர்யா.” என்று காட்டு கத்தல் கத்தியபடியே, தனது உடம்பில் பொறுத்தியிருந்த மருத்துவ உபகரணங்களை பிய்த்து எறிந்து கொண்டிருந்தார் ரத்தினவேல்.

தனது கணவரின் செய்கைகளை கண்டு அவரை சமாதானம் செய்யும் விதமாக அருகே சென்ற செல்லம்மாளை தடுத்தவர்,

“செல்லம்மா.. நீ போய் முதல்ல சூரியாவ வர சொல்லு. ” என்று தன் மனைவிக்கு கட்டளையிட

செய்வதறியாது சூரியாவை தேடிக்கொண்டு வெளியே வந்த செல்லம்மாள், மருத்துவமனையின் வெளிவராண்டாவில் தனக்கு கீழ் வேலை செய்யும் காவலரிடம் பேசிக் கொண்டிருந்த சூர்யா பார்வைக்கு கிடைக்க, “சூர்யா...” என்று குரல் கொடுத்த படியே தன் மருமகனை நோக்கிச் சென்றார்..

தன்னை அழைத்தது யார் என்று திரும்பிப் பார்த்தவன், செல்லம்மாள்! ஒருவித கலவரத்தை முகத்தில் வெளிப்படுத்தியவாறே தன்னை நோக்கி வருவதை அறிந்து கொண்டு, பேசுவதை விட்டுவிட்டு அவரை நோக்கிச் சென்றான்...

“சூர்யா...” என்றபடியே செல்லம்மாள் தயங்கி நிற்க

“சொல்லுங்க அத்தை.. மாமா, கூப்பிட்டாரா?” என்று கேள்வியோடு அவரை ஏறிட்டான்..

“ஆமா சூர்யா... அவர் இப்பவே ஈஸ்வரன் வீட்டுக்கு போகணும் னு பிடிவாதமா நிக்கறார்.. நானும், உங்க அம்மாவும் எவ்வளவோ எடுத்து சொல்லிட்டோம் கேக்கவே மாட்டேங்குறார்.. அவர் இப்ப இருக்கற நிலைல, ஈஸ்வரன போய் பார்த்து, கோபத்துல ஏதாவது பண்ணிட்டார்னா என்ன சூர்யா பண்ணறது... “ என்று தனது உள்ளத்தின் வலிகளை கண்ணீராக வெளிப்படுத்தியபடியே கூற...

“வாங்க... நான் மாமா கிட்ட பேசறேன்.. நீங்க அழாதீங்க.. “என்றவாறு செல்லம்மாளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் செல்ல திரும்பியவனை, மீண்டும் “சூர்யா” என்ற செல்லம்மாளின் அழைப்பு தடுத்து நிறுத்தியது..

“பிரபாவ பத்தி ஏதாவது தெரிஞ்சுதா சூர்யா..” என்று கேட்ட செல்லம்மாளை உற்று நோக்கியவன்.. செல்லம்மாளின் கண்களின் வழியே அவரது உயிர் வலியை அறிந்தாலும், இல்லை என்பதை போல மறுப்பாய் தலையசைத்துவிட்டு செல்லம்மாளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றான்..

கட்டிலில் சீற்றத்துடன் அமர்ந்திருந்த ரத்தினவேலிடம் செண்பகம் ஏதோ கூறிக் கொண்டிருக்க, சூர்யா வருவது தெரிந்ததும் எழுந்து ஓரமாக சென்று அமர்ந்து கொண்டார்..

தன் அன்னையின் எண்ணங்களை அவரது முகத்தை வைத்தே அறிந்துகொண்டவன், அவரை தவிர்த்துவிட்டு, ரத்தினவேலிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் பிடிவாதாமாக இருக்க, வேறு வழியின்றி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஈஸ்வரனை காண சென்னையை நோக்கி கிளம்பினான்..

ஓவேலியை நோக்கி செல்லும் செல்லும் பேருந்தில் ஜன்னலோரமாக அமர்ந்து பார்வையை வெளியே வீசிய படியே வந்தாள் பிரபாவதி.. வளைந்து நெளிந்து செல்லும் பாதையில், ஏற்ற இரக்கங்களுக்கு தகுந்தவாறு நிதானமாக ஆடி அசைந்து சென்று கொண்டிருந்தது அந்த பேருந்து..

வானை நோக்கி ஓங்கி உயர்ந்திருந்த மரங்களும், அம்மரங்களை காதலோடு தழுவி கொஞ்சி குழாவும் மேகக்கூட்டங்களும், அந்த மேகத்தை துளைத்து சிறகைவிரித்து விண்ணை முட்டிவிட துடித்த சின்னச் சிட்டுகளும், அவற்றோடு போட்டி போட்டு ரீங்காரமிட்டபடியே அலைந்து திரிந்த வண்டுகளும், பூமியின் மேனியெங்கும் பச்சை பசேல் என்று நிறைந்திருந்த தாவரங்களும், அதற்கு மேலும் மகுடம் சூட்டுவதை போல் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கிய வண்ண வண்ண மலர்களும் பிரபாவதியின் கண்களை நிறைத்தாலும், கருத்தை கவரவில்லை.. அவளது எண்ணங்கள் முழுவதையும் அவளது தாய் தந்தையே நிறைத்திருந்தனர்..

பிரபாவதியின் எண்ண ஓட்டங்களை அவளது முகத்தை கொண்டே அறிந்த சந்திரசேகர், ஆறுதலாக பிரபாவதியின் கைகளை பற்றிய படியே ஒன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.. கிட்டத்தட்ட அவனுள்ளும் அதேநிலைதான் என்றாலும் கூட, சந்திரசேகர் அவனது குடும்பத்தை பற்றி சிந்திக்கவில்லை. மாறாக, அவனது சிந்தனை முழுவதும் பிரபாவதியை பற்றியே இருந்தது..

“ஆருட்பாறை கேட்டது யாருப்பா??... ஆருட்பாறை வந்தாச்சு.. எந்திரிச்சு வா...” என்று பஸ்ஸுக்குள் இருந்து நடத்துனர் குரல் கொடுக்க, இருவரும் தங்களது சிந்தனையை விட்டுவிட்டு எழுந்து, பேருந்தில் இருந்து இறங்கி, தனது நண்பனின் எஸ்டேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்..

சிறிது தூரம் சென்ற பின், சில்வர் ராக் எஸ்டேட் செல்லும் வழி என்ற வழிகாட்டி பலகையை கண்டதும்...

“பேபி.. அங்க தெரியுது பாரு அதான் நாம போக போற எஸ்டேட்..”என்று சந்திரசேகர் கைக் காட்டிய திசையில் நோக்கியவள் ஒரு நொடி திகைத்தவாறே..

“ஐயோ இன்னும் அவ்வளவு தூரம் போகணுமா?.. என்னால முடியாது.. இப்ப வரைக்கும் நடந்ததுக்கே எனக்கு ரெண்டு காலும் வலிக்குது சந்திரன்” என்று சோகமாக கூறியபடி அமர்ந்தவளை பார்த்து புன்னகைத்தவன்,

“பாக்கறதுக்குத்தான் தூரமா தெரியும் பேபி... சீக்கிரம் போயிடலாம்..” என்று புன்னகையுடன் கைகளை நீட்ட..

தன்னவனின் புன்னகையில் தன் வலிகளை தொலைத்தவள், சந்திரசேகரின் கைகளை பற்றிக்கொண்டு எஸ்டேட்டை நோக்கி சென்றாள்..

எஸ்டேட்டை அடைந்ததும்.. எதிர்பட்டவரிடம் தனது நண்பன் பிரதீப்பை பற்றி விசாரித்துக் கொண்டிருக்க..

“ஹேய்!!.. சந்துரு.. வாட் அ சர்ப்ரைஸ் மேன்.. “ என்று குரல் குடுத்த படியே அவர்களை நோக்கி வந்தது கொண்டிருந்தான் பிரதீப்.. நண்பர்கள் சந்தித்ததும் சில பல நல விசாரிப்புகளுக்கு பின் பிரபாவதியை நன்றாக உற்று நோக்கியவன்,

“டேய்..! மச்சான் இவங்க..” என்று நெற்றியை சுருக்கியவாறே இழுக்க... எதையும் கேட்காதே என்று கண்களால் ஜாடை செய்ய, அதை புரிந்து கொண்டவன் மேற்கொண்டு பேசாமல் அமைதியாகிப் போனான்..

“பிரதீப்.. இவங்க பிரபாவதி.. நான் கல்யாணம் பண்ணிக்க போறவங்க..” என்று அறிமுகப்படுத்த, தலையை ஆட்டி அவளை வரவேற்றவன், அங்கிருந்த வேலையாள் ஒருவனிடம் தன் தந்தையை அழைத்துவருமாறு கூறிவிட்டு, அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டினுள்ளே சென்றான்..

விசாலமான அறைகளுடன் கைதேர்ந்த கட்டிட கலைஞர்களால் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது அந்த வீடு.. ஜன்னல் ஓரங்களை கனமான திரைச்சீலைகள் மறைத்திருக்க, வீட்டின் சுவர்களில் மான், கரடி மற்றும் புலி ஆகியவற்றின் உயிரற்ற தலைகள் சட்டமாக தொங்கிக் கொண்டிருந்தது.. அங்கிருந்த மேஜை கண்ணாடியின் இருபுறமும் ஆளுயர யானைத் தந்தங்கள் வில்லாக வளைந்து அலங்கரித்திருக்க, அவற்றையெல்லாம் கண்டு ஒருவித பீதியுடனே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் பிரபாவதி...

“சிஸ்டர்.. இத பார்த்து நீங்க பயப்பட வேண்டாம். இதெல்லாம் என் தாத்தா காலத்துல வெள்ளைக்காரங்க கூட சேர்ந்து வேட்டையாடுனது.. நீங்க ரிலாக்ஸா இருங்க என்று கூறிவிட்டு

“கங்கம்மா...” என்று சமையலறையை நோக்கி குரல் கொடுத்தான்.. தன்னை அழைத்ததை கேட்டு வெளியே வந்த கங்கம்மாளிடம் இருவருக்கும் தேநீர் எடுத்துவருமாறு கட்டளையிட, சரியென்று தலையசைத்து திரும்பியவர், சந்திரசேகரை உற்று நோக்க..

“என்ன கங்கம்மா என்ன தெரியலையா??” என்று புன்னகையுடன் சந்திரசேகர் அவரை ஏறிட்டு பார்த்தான்.

“ நீ..நீ.. சந்திர..ன் தான” என்று இழுக்க.. ஆம் என்பதை போல சந்திரசேகர் புன்னகையுடன் தலையை ஆட்டவும் ஓடிச்சென்று அவனது கன்னங்களை வருடியபடி

“இந்த ஆத்தாள பாக்க வரதுக்கு உனக்கு இத்தன வருசமா சந்துரு..” என்று சோகமாக விசாரிக்க..

“கங்கம்மா... அதான் இப்ப வந்துட்டான்ல.. கொஞ்சநாள் இங்கதான் இருப்பான். அப்பறம் பொறுமையா விசாரி. முதல்ல அவங்களுக்கு குடிக்க எதாவது குடு..” என்று பிரதீப் கூறியதும், வேகமாக சமையலறையை நோக்கி ஓடியவர் தேநீர் குவளையுடன் வெளிப்பட, பிரதீப்பின் தந்தையும் வந்துவிட்டார். பின் தேநீர் அருந்தியபடியே பொதுவான நலம் விசாரிப்புகளை முடித்துக் கொண்டு, அனைவரது பார்வையும் பிரபாவதியின் மீது நிலைத்திருக்க, அதை புரிந்து கொண்டவன்..

“அப்பா... இவ பிரபாவதி.. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம்.. ரெண்டு குடும்பத்துக்கும் இடையில சின்ன பிரச்சனை. அதனால வீட்ட விட்டு ஓடி வந்துட்டோம்.. நீங்க எல்லாரும்தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்.. என்று தயங்கியபடியே கூறினான். சந்திரசேகர் கூறியதை கேட்டு யோசனையுடன் மவுனமாக அமர்ந்திருந்தவரை கண்டு,

“என்னப்பா யோசிக்கறீங்க” என்று குரல் கொடுக்க..

“உங்களுக்கு கல்யாணம் பண்ணிவச்சது நான்தான்னு தெரிஞ்சா, ஈஸ்வரன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான். அதான் யோசிக்கறேன்”

“அப்பா என் சைட்ல இருந்து எந்த பிரச்சனை வந்தாலும் அத நான் பார்த்துக்கறேன்.. என்னால அங்க வச்சே இவளை கல்யாணம் பண்ணி என்கூட லண்டனுக்கு கூட்டிட்டு போக முடியும். ஆனா யாரும் இல்லாம பிரபாவ கல்யாணம் பண்ண எனக்கு விருப்பமில்லை. அதான் உங்கள தேடி வந்திருக்கேன்” என்று கூற

“நான் வேணும்னா ஈஸ்வரன்கிட்ட பேசி பாக்கட்டா” என்று தான் பால்ய காலத்து நண்பனை இழந்துவிட மனமில்லாமல் மீண்டும் தயங்க..

“அப்பா.. இவளோட கல்யாணம் நேத்தே முடிஞ்சிருக்கணும்.. கல்யாணத்த நிப்பாட்டிட்டு தான் நான் இவள கூட்டிட்டு வந்திருக்கேன்.. நானா சொல்லறவரை எங்கள பத்தி யாருக்கும் தெரிய வேண்டாம். பிளீஸ் புரிஞ்சுக்கோங்கப்பா..” என்று கூற

“அய்ய.. அதான் புள்ள இவ்வளவு தூரம் சொல்லறான்ல.. அப்பறம் ஏன் சும்மா வளவளனு பேசிட்டு இருக்கறீங்க. எதை பத்தியும் யோசிக்காம சரினு சொல்லுங்க..” என்று கங்கம்மா சந்திரசேகருக்கு ஆதரவாக குரலெழுப்ப.. அனைவரது முகத்தையும் ஒருநொடி ஏறிட்டு பார்த்தவாறே

“ என் பையன கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமாம்மா. “ என்று பிரபாவதியிடம் கேள்வியெழுப்ப, தலையை நிமிர்த்தாமலே.. தலையை அசைத்து தனது சம்மதத்தை தெரிவித்தாள்.. பிரபாவதியின் சம்மதம் கிடைத்தவுடன்..

“கங்கம்மா.. வர வெள்ளிக்கிழமை இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்.. கோவில் பூசாரிகிட்ட சொல்லி ஆக வேண்டியத பாக்க சொல்லு..” என்று கூற.. தான் பெறாத பிள்ளையின் கல்யாணத்தை எண்ணி உள்ளம் குளிர்ந்த கங்கம்மாளை கல்யாண பரபரப்பு தொற்றிக் கொள்ள துள்ளிக் குதித்து வெளியே சென்றார்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூர்யாவின் குடும்பமும் ரத்தினவேலின் குடும்பமும் சென்னையை நோக்கி கிளம்பியிருந்தனர். வழியில் யாரும், யாருடனும் ஒருவார்த்தை கூட பேசவில்லை.. அனைவரும் கல்லென அமர்ந்திருக்க, சூர்யா காரை இயக்கியபடியே சந்திரசேகர் எங்கு சென்றிருப்பான் என்று சிந்திக்க தொடங்கினான்..

திருச்சி விமான நிலையத்தில் சந்திரசேகரின் கார் நிற்பதாக காவலர் மூலமாக வந்த தகவலை ஆராய்ந்தவன், அது தங்களை குழப்புவதற்காக கூட சந்திரசேகர் போட்ட திட்டமாக இருக்கலாம் என்று கருதினான். சூர்யா சந்திரசேகரை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை.. அதே சமயம் அவனை பற்றிய தெளிவான ஒரு முடிவுக்கும் அவனால் வர முடியவில்லை. பிரபாவதியை கொல்வதுதான் அவனது இலக்கு என்றால் அதை டெல்லியில் வைத்தே செய்திருக்க முடியும்.. ஆனால் ஏன் அவ்வாறு செய்யாமல் இவ்வளவு சிரமப்பட்டு அவளை தன்னோடு அழைத்து செல்ல வேண்டும் என்று பலவாறாக சிந்தித்தவன், அதற்கான விடை ஒருவேளை சந்திரசேகரின் வீட்டில் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தான்..

பிரபாவதியை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு, பிரதீப்பையும் அவனது தந்தையையும் அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பியவன், எஸ்டேட்டை சுற்றிப் பார்த்தபடியே சிறிது தூரம் சென்றபின்..

“அப்பா... எனக்கு உங்க எஸ்டேட்ல ஒரு வேலையும், நாங்க ரெண்டுபேரும் தங்கறதுக்கு ஒரு வீடும் வேணும்” என்று கூற இருவருமே அதிர்ந்தனர். அவர்களின் அதிர்ச்சியை பொருட்படுத்தாமல் தன் நண்பனை நோக்கி

“நான் திரும்பி போறதா இல்ல பிரதீப்.. சாகிற வரை இப்படியே இங்கயே இருந்திடனும் னு முடிவு பண்ணிட்டேன்.”என்று கூற,

“சந்துரு உனக்கென்ன பைத்தியம் பிடிச்சுருச்சா.. இந்த எஸ்டேட் மாதிரி நாலு எஸ்டேட்டுக்கு நீ சொந்தக்காரன்.. நீ இங்க வந்து வேலை செய்யணும்னு உனக்கென்ன தலையெழுத்தா..? ஏதோ லவ் பண்ணி கூட்டிட்டு வந்துட்ட கல்யாணம் பண்ணி கொஞ்சநாள் போனா எல்லாம் சரியாயிடும் னு நினைச்சா நீ சொல்லறத பார்த்தா அப்படிதெரியல.. நான் இப்பவே ஈஸ்வரனுக்கு போன் பண்ணறேன்” என்று கூறி திரும்பியவரை தடுத்த சந்திரசேகர்

“நானோ, இல்ல பிரபாவதியோ, இல்ல நாங்க ரெண்டுபேருமோ சாகற வரை, எதுவுமே சரி ஆகாதுப்பா.. உங்க விருப்பம் அதுதான்னா நீங்க தாராளமா சொல்லலாம்” என்று கூற இருவருமே அதிர்ந்தனர்..

“என்னடா சொல்லற.. அப்படி என்னடா உங்க ரெண்டு குடும்பத்துக்கும் பகை.. மூணு மாசத்துக்கு முன்னாடி நான் லண்டன் வந்தப்ப கூட, உன் வீட்டுல பிரபாவோட போட்டோவ பார்த்திருக்கேன்.. சந்துரு, எனக்கு தெரிஞ்சவரை நீ யாரையும் காதலிச்சது கிடையாது.. முதல்ல இந்த பிரபா யாரு?? பிரபாவ உனக்கு எப்படி தெரியும்.??.” என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டு பிரதீப் துளைத்தெடுக்க.. இருவரையும் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு

“விஷ்ணு சாகறதுக்கு காரணமா இருந்த ரத்தினவேல் குடும்பத்தோட ஒரே வாரிசுதான் பிரபாவதி”என்று சந்திரசேகர் கூறி நிறுத்தினான்..

“ஓ... அப்ப அந்த புள்ளைய கொலை பண்ணதான் இங்க கூட்டிட்டு வந்துருக்க அப்படிதான.. உன் தம்பிக்கு நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து.. அதுக்காக எந்த பாவமும் அறியாத பிரபாவதிய கொல்லறதுக்கு நீயும் உன் அப்பனும் ஏண்டா இப்படி துடிக்கறீங்க..” என்று வார்த்தைகளில் கடுமையை கூட்டி தன் ஆதங்கத்தை பிரதீப் வெளிப்படுத்த

“நீயும் புரியாம பேசாதடா.. பிரபாவ கொல்லறது மட்டும்தான் என் இலக்குனா, நான் இந்தியா வரவேண்டிய அவசியமே இல்ல.. லண்டன்ல இருந்தே அவள கொன்னுருக்க முடியும்.. பிரபாவ பாதுக்காக்கணும்னு தான் நான் அவள கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறேன்..” என்று கூற

“நீ யார்கிட்ட இருந்து பிரபாவ காப்பாத்தணும்னு நினைக்கிற, ஈஸ்வரன் கிட்ட இருந்து தான.. நாம எல்லாரும் போய் பேசலாம்.. எடுத்து சொல்லி புரியவைப்போம். பிரபாவோட வீட்டுலயும் பேசி உங்க கல்யாணத்த நான் நடத்தி வைக்கிறேன்..” என்று கூற

“ஹா ஹா ஹா ஹா..” என்று சத்தமாக சிரித்தவன்

“ என் அப்பாக்கு பயந்தோ, இல்ல பிரபாவதியோட குடும்பத்துக்கு பயந்தோ, நான் இங்க வரலப்பா” என்று கூறியவனை பார்த்து நெற்றி சுருக்கியவர்..

“அப்ப பிரபாவதிய கொல்லறதுக்கு உங்களை தவிற வேற யாராவது இருக்கறாங்களா” என்று கேள்வியெழுப்பியவரை பார்த்து இல்லை என்று தலையசைத்தவன்..

“பிரபாவ பாதுகாக்கணும்னு நினைக்கிறது என்கிட்ட இருந்துதான்” என்று சந்திரசேகர் கூறியதை கேட்டு இருவருமே குழம்பி போயினர்.. மேற்கொண்டு பேச வாய் திறந்த இருவரையும் சைகையால் தடுத்தவன்,

“அப்பா என்ன நம்புங்க.. பிளீஸ்.. என்னாலையோ இல்ல என்ன சேர்ந்தவங்கலாலையோ பிரபாவதிக்கு எந்த கஷ்டமும் வராது... என்னோட பயம் எல்லாம் என்ன பத்தின எந்த விஷயமும் பிரபாவதிக்கு தெரிய கூடாதுங்கறதுதான்.. அதுக்காக தான் நான் எல்லாரையும் விட்டுட்டு இங்க வந்திருக்கேன். நீங்களும் எந்த காரணத்துக்காகவும் இத பத்தி பிரபாவதிகிட்ட பேசாதிங்க..”என்று கூற, அவனது மனத்திலுள்ளதை அறிந்ததைப் போல இருவரும் சம்மதமாய் தலையசைத்தனர்..

அதற்குள் கங்கம்மாளும் அவர்களை தேடிக்கொண்டு அங்கே வர, பேசுவதை விட்டுவிட்டு வீட்டை நோக்கி நடைபோட துவங்கினர்..

மயக்கம் தொடரும்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நண்பர்களே!! மானே...! மயங்குவதேனோ...! அத்தியாயம் 16 பதிவு பண்ணிட்டேன்..படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி..
 
Status
Not open for further replies.
Top