All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வர்ணத்தின் வாசலிலே..

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புதிய கதை ''வர்ணத்தின் வாசலிலே'' தொடர் படித்து கருத்துக்களை கூறுங்கள் தோழமைகளே 😍 😍 😍 😍


வர்ணத்தின் வாசலிலே..

நாய்கன்.. சித்தார்த்தன்
நாயகி....சித்ரமாலா

அத்தியாயம் 1

.
''நந்தவனத்தில் பூத்த
நறுமண மிகுந்த
வண்ணப் பூவொன்று
ஒவியப் பாவையாக
வாசல் தேடி வந்தே.!!!.''


''ஒவியக் காட்சியகம்'' முகப்பில் பெரிய எழுத்துகளில்
விளக்கின் ஒளியில் ஓவியமாக மின்னியது. பல இளைஞர், இளைஞிகளின் கூட்டமும் வண்டிகளும் வாகனமும் நெரிசலில் நிறுத்தி விட்டு ஓவியக் காட்சியகத்தில் நுழைந்தனர்.

கண்காட்சி முகப்பில் தன் வாகனத்தை நிறுத்திய சித்ரமாலா அழகான யுவதி, இந்த காலத்திற்கேற்ற உடையலங்காரமும், அலைலையாய் கருங்கூந்தல் காற்றில் பறக்க முகத்தில் ஓர் வசீகரமும் மற்றப் பெண்களைவிட சிறிது உயரமாக இருந்தாள் . அவள் நடந்து வருவதைப் பார்த்தால் ''ஒவியப் பாவையவளா, பொற்சிலையா '', உயிர் பெற்ற நடந்து வருகிறதா எண்ணி மற்றவர்கள் பார்த்துத் திகைக்கும் அளவுக்குப் பேரழகி .

ஆனால் சித்ரமாலாவிற்கு தன் அழகைப் பற்றிய கர்வமோ அகங்காரமோ இல்லை. நந்தவனத்தில் பூத்த நறுமணமிக்க மென்மையான மலர். சிறு குறும்புகள் நிறைந்தும் வெகுளியான மனமும் , தன்னுடன் பழகுவர்களை தன் அன்பாலும் பாசத்தாலும் தன்னால் முடிந்தளவு அவர்களுக்கு உதவியும் செய்யும் பேரழகி.

கண்ணன், தேவிகாவின் தவப் புதல்வி சித்ரமாலா. செல்லமும் பாசமும் அன்பும் நிறைந்த வீட்டிற்கு ஒரேப் பெண். தனியாக வளர்ந்தால் வெளியிடங்களில் எல்லாரிடமும் அன்பாகவும் உரிமையாகவும் பழகுவாள் சித்ரமாலா.

அவளைக் கண்டதும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பார்க்க, இளைஞிகளோ, ''அம்மாடி எவ்வளவு அழகு '', கண்களில் சிறு பொறாமையுடன் பார்த்தனர்.

ஆர்ட் கேலரியில் நுழைந்த சித்ரமாலா மற்றவர்களின் பார்வையில் ஓர் ஆர்வம் கலந்து பார்ப்பதைக் கண்டாலும், அதைக் கவனிக்காமல் இயல்பாக நடந்தவள் அங்கே அழகான சட்டத்திற்குள் வரைந்திருந்த ஒவ்வொரு ஒவியத்தையும் நின்று ரசித்து ஓவியத்தின் பேரழகில் ஒன்றினாள். ஒவ்வொரு சித்திரமும் ஓர் கதையைக் கூறியது கண்டு வியந்தாள்.

பிரபஞ்சத்தின் பேரழகும் , வனச்சோலையில் மொட்டவிரிந்த மலர்களின் வண்ணங்களும், மழலையின் குறுநகை , அழுகையில் அதரங்களை பிதுக்கி அழும் குழந்தையின் முகம் ,கண்களில் குறும்புடன் தாய்யிடம் கொஞ்சும் மழலை, ஆடவரின் உழைப்பை பலவகையிலும், கண்ணனின் காவியப் பார்வை, காதலன் காதலிடம் குறும்பு செய்து ஓரப்பார்வையில் பொய்பூசியப் கோப பார்வை,காதலை விதவிதமாக சொல்ல வரைந்த காவிய ஒவியங்கள், விதவிதமான ஓவியங்களில் பழைய காலச் சிற்ப ஒவியங்களும் , இன்றைய அரசியல் அவலங்கள், ஏழ்மையின் சித்தரிப்பும் , இயற்கையின் கொந்தளிப்பும் , பல வகை சித்திரங்களின் வடிவில் கண்முன் நிறுத்தியதைப் பார்க்க திகட்டவில்லை சித்ரமாலாவுக்கு.

அதுவும் ஓர் ஒவியத்தில் பல உருவங்களை உள்ளடக்கிய வாழ்க்கை சித்திரத்தைப் பார்த்தவள் மெய்ம்மறந்து நின்றாள்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதைக் கண்டவள் அதன் அழகிலும் தீட்டிய ஒவியங்களின் வர்ணங்களின் ஜாலத்தில் அவை மேலும் மெருகேற்றி பிரமிப்பூட்டியது கண்டு உள்ளம் நெகிழ்ந்துப் போனாள்.

இத்தகைய ஒவியம் தானே என்னை இன்னும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது நினைத்தபடி நடந்தாள் சித்ரமாலா.

சித்ரமாலாவிற்கு ஓவியத்தின் மேல் எப்பவும் ஈடுபாடு அதிகம். ஒப்புமை இல்லாத உயர்ந்த கலைகளில் ஒன்றான ஒவியக்கலையில் உலகப் பொதுமறை தந்த வள்ளுவரின் ஓவியத்திலிருந்து ,
இறைவனை வரைந்து உருவங்கொடுத்த ஒவியக்கலை மீது அளவற்ற பிரமிப்பு உண்டு. .

கண்ணால் காண முடியாத உள்உறுப்புகளும் , நுண்ணுயிரிகளையும் வரைந்து கண்முன் காட்டும் ஓவியங்களில் ஆழந்துப் போவாள்.. இன்றைய காலக்கட்டத்தில் கணினி மூலமாக நடந்தாலும் ஓவியத்திற்கு தனியிடம் இருப்பதை அறிந்தவள் சித்ரமாலா. நாம் ரசிக்கும் கற்பனைக் கதாபாத்திரங்களும், நாம் பயன்படுத்தும் கணினியும், கார்களும், பைக்குகளும்கூட முதலில் ஓவியங்களாக உருப்பெற்றுதான் பின்னர் வடிவங்களாக உருவாக்கப்படுவதில் ஆச்சரியம் கொள்வாள்.

வீட்டின் வரவேற்பறை தொடங்கி விண்வெளி, மருத்துவம், பொறியியல், வடிவமைப்பு என எல்லாத் துறைகளிலும் ஊடுருவி நிற்கிறது ஓவியக்கலையைப் பற்றி ஒரு படிப்பாக படிக்க வேண்டும் எண்ணிய சித்ரமாலா ''பைன் ஆர்ட் '' மனமகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் படித்தவள்.

நல்ல கற்பனை வளமும், புதுமையான படைப்பாற்றலும் ஓவியம் வரைய கற்றுக் கொள்ளும்போதே மனதில் அமைதி தழுவி பொறுமையுடன், சுறுசுறுப்பும், பன்முக ஆற்றலும் கூட்டி , அமைதியும், பொறுமையும், சுறுசுறுப்பும் வேண்டும் என்பதால் ஓவியத்தை பொழுதுபோக்காக எண்ணாமல் தன் உயிராக இந்த ஓவியக்கலையை படித்தவள் மனதில் எப்பொழுதும் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.

எங்கு ஒவியக் கண்க் காட்சி நடந்தாலும் அங்கே போய்விடுவாள். ஒவ்வொரு ஒவியத்தின் நுட்பத்தை கவனித்து வண்ணங்களின் எழிலையும் ஆர்வத்துடன் பார்ப்பாள்.

இன்றும் ஒவ்வொன்றாக நின்று ரசித்துப் பார்த்தவள் இப்படத்தை வரைந்த ஓவியர் யாராக இருக்கும் எண்ணி ஓவியத்தின் கீழ்யுள்ளப் பெயரைப் பார்த்தாள்.

ஒவியத்தில் இருந்த பெயரே சிறுப்பூவை உருவமாக தீட்டி அதனுள் கையெழுத்தை ஒவியமாக வரைந்து இருந்தது.

அதைப் பார்த்ததும் திகைத்து விழித்தவள் இந்த கையெழுத்து ''அவனா இருக்கமோ'' மனதினுள் எண்ணியபடி சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.இதுமாதிரி போடுவது அவனைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள் எண்ணியபடி அதை உற்றுப் பார்த்தாள்.

அவனுடைய ஒவியங்கள் எப்பொழுதும் தனித்துவம் உடையது. மற்றவர்களிடமிருந்து அவனை தனியாக காட்டிக் கொடுத்த ஒவியமும் அங்கே இருந்தது. இப்போது வரைவதில் பல புதுமைகளைப் புகுத்தியதால் சித்திரங்கள் மெருகேறி இருந்தன.

மீண்டும் ஒரு முறை ஒவ்வொரு ஓவியமும் சிற்பங்களையும் பார்த்தபடி அவனை கண்களில் தேடிக் கொண்டிருந்தவள் ஒவியத்தைவிட வரைந்தவனை தேடியது அவளுடைய நீண்டு விரிந்த கயல்விழிகள்.என்றோ கண்ணுக்குச் சிக்காமல் ஓடி ஒளிந்தவன் இன்று அதே ஒவியங்களின் வழியே சந்திக்கப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் துள்ளுவதா, வருந்துவதா அறியாமல் விழிகள் தேடியன.

அவள் உள் நுழைந்தலிருந்து அவளுடைய மொட்டு விழிகள் விரிந்து ஓவியத்தை உன்னிப்பாக ரசித்தும் மகிழ்ச்சியில் மதிமுகப் பிம்பத்தில் ஆயிரம் வர்ண ஜாலங்களால் மின்னுவதைக் கண்டு ரசித்தபடி அறையினுள் அமர்ந்து கேமிரா கண்கள் வழியாக ரசித்தான் ஒருவன்.

பனைமரம் போல உயரமும் ,
முகத்தில் வசீகரமான தேஜஸ் நிறைந்தவனின் கூர்மையான விழிகளோ எதிராளியின் உள்ளத்தை ஊடுருவி அவர்களின் எண்ணத்தை அறிந்துக்கொண்டு அவர்களின் வழியிலே கையாளும் திறமைப் பெற்றவன் சித்தார்த்தன் .
பெயர்ப் போலவே அமைதியானவன் இல்லை. தனக்குரியது என்றால் அதை தனக்கு மட்டுமே எண்ணி தன் கை வந்துச் சேர எவ்வழியிலும் செல்லும் ஆளுமையானவன்.

தான் என்பதை அகந்தைக் கொண்டாலும், பார்த்த அந்த வினாடியே தன் மனதினுள் நீங்காமல் நீக்கமற நிறைந்த பெண்ணரசியை தனக்குரியவள்
எண்ணியவன் என்றோ தவற விட்டதை இன்று கண்முன் கண்டான்.

சித்ரமாலா உள்ளே நுழைந்தலிருந்து அவளுடைய நடவடிக்கையைக் கவனித்தவன், அவள் தன் கையெழுத்தைப் பார்த்ததும் கண்டு பிடித்து இருப்பாள் எண்ணி அவள் முகத்தைப் பார்த்தான்.

அவளின் கயல்விழிகளோ சுற்றிச் சுற்றி யாரையோ தேடுகிறதே, என்னைத் தான் தேடுகிறாளோ எண்ணி அவள் விழிச் செல்லும் வழியிலே தன்னுடைய பார்வையால் அலசினான்.

சித்ரமாலா அங்கே இருப்பவர்களில் தான் தேடியவன் இருக்கிறானா பார்த்தாள். கேலரி சுற்றிப் பார்த்தாலும் அவனைப் பார்க்க முடியவில்லை .

ஒருவர் மட்டும் அங்குள்ள ஓவியத்தை பற்றி தெரியாதவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் .அவரை நோக்கிச் சென்றாள் சித்ரமாலா.

அவர் அருகில் சென்றவள்,சார் கூப்பிட்டு ''வணக்கம்'', சொன்னாள்.

அவள் பக்கம் திரும்பியவர் ''என்னம்மா வேண்டும் உங்களுக்கு '',கேட்டார்.

''இந்த ஓவியங்களை வரைந்தவரைப் பார்க்கணும்'', சொன்னாள் சித்ரமாலா.

அவரோ'' ஏன் மா, எதற்கு பார்க்கணும்,'' கேட்டார்.

''இவ்வளவு அழகாக வரைந்த ஒவியங்களைப் பார்க்கும்போது அவரை நேரில் பார்த்து பாராட்டணும்'' பொதுவாக சொன்னாள்.அவனை தனக்குத் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளவில்லை சித்ரமாலா.

அவரோ, ''அவரைப் பார்க்க முடியாதுமா, இப்ப இங்கே இல்லை ,வந்தால் உங்களை பற்றி சொல்கிறேன்,'' உங்கள் பெயர், போன் நம்பர் கொடுத்து செல்லுங்கள்'', சொன்னார்.

''நீங்கள் யார்,?.. அவரிடம் வேலை செய்கிறார்களா சார்,'' கேட்டாள்..

''ஆமாம் மா ,அவரிடம் தான் வேலை செய்கிறேன்''. என் பெயர் ராகவன்.'' உங்களைப் பற்றி இக்குறிப்பில் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுங்கள். தம்பி வந்ததும் உங்களிடம் பேச சொல்கிறேன்'' ,சொன்னார்.

'' ஒகே ,சரிங்க சார்,'' சொல்லிவிட்டு தன் பெயர், போன் நம்பரை எழுதிக் கொடுத்தவள் ''நாளை இங்கே நானே வருகிறேன் சார்'', சொல்லிவிட்டு திரும்ப அங்கிருந்த ஒரு ஓவியம் அவனுடைய வாழ்க்கையைச் சித்திரத்தை கூறுவதை தன் பார்வையால் வருடி விட்டுச் சென்றாள் சித்ரமாலா. அவனுடைய தனித்துவமான ஒவியமே ஒற்றைச் சித்திரத்தில் வாழ்க்கையை வரைந்திருப்பான்.

அவள் திரும்ப திரும்ப அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே போவதை உள்ளேயிருந்து பார்த்த சித்தார்த் ''என்னைத் தேடி நீயே வந்து விட்டாய் சித்திரமே , இனி உன்னை ஒரு போதும் விடப் போவதில்லை, எனக்காக பிறந்தவள் நீயே தான் '', ஏதோ காரணங்களால் பிரிந்தாலும் இன்று என்னிடம் வந்துவிட்டாய், இனி என்றும் விடப்போவதில்லை ,'' தனக்குள்ளே பேசினான்.

மனமோ என்றோ விட்டுப் போன உறவு ஒன்று மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்து விட்டது எண்ணி மகிழ்ந்தானா,இல்லை சினத்தில் கொந்தளித்தானா அறிய முடியாமல் சித்தார்த்தனின் முகம் நிர்மலமாக இருந்தது .



தொடரும்...

இக்கதை படித்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் தோழமைகளே...😍 😍 😍 😍 😍 😍
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டு

வர்ணத்தின் வாசலிலே..

அத்தியாயம் 2

'' நித்தம் பூக்கும்
நித்திய மல்லியின் வாசம்
நித்தம் நிதம் இதயறையில்
நினைவு தடங்களைக் கீறி
நீங்காமல் மனதை
ஸ்பரிசிக்கும் சித்திரமோ"!!

சித்தார்த்தன் அகமோ ஆழிக் கடலலையாகக் கொந்தளித்தாலும் புறமோ அமைதியைக் கொண்டிருந்தது.
எங்கே ஓவியக் கண்காட்சி நடந்தாலும் அங்கே இவளைத் தேடித் தேடி அலைந்து ஓய்ந்து போன மனதிற்கு இன்று இவள் வருகையில் மனம் சிறிது சமாதானம் அடைந்தது.

அவளைக் கண்டதும் துள்ளிக் குதித்து அவள் முன் நிற்கத் துடித்த கால்களை அடக்கி அமர்ந்து அவள் அரங்கத்தினுள் நுழைந்திருந்து அவளுடைய முகப் பிம்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்தன்.

சித்ரமாலா மாறவே இல்லை, இன்னும் அவளுடைய ரசிப்புத் தன்மையும் ,வரைந்தது ''நானா இருக்குமோ'', சந்தேகத்தை விடக் கண்டு பிடித்துவிட்டேன் அவன்தான், இவ் ஓவியத்தை வரைந்தவன் அறிந்தை அவள் வதனத்திலே தெரிந்தது.

என் ஓவியத்திலே என்னைக் கண்டு பிடித்து இருப்பவளின் உள்ளம் இன்றும் அதே அளவு நேசத்தோடு இருக்குமா, இல்லை அதே கோபமும் இருக்குமா , அறிந்து கொள்ள வேண்டும் உள்ளம் பரபரத்தது.

உடனே அவள் ராகவனிடம் பேசியது ஞாபகம் வரவும் அவரை உள்ளே வரச் சொன்னான் சித்தார்த்.

ராகவன் உள்ளே வந்ததும், ''சித்ரமாலா உங்களிடம் பேசினார்களே , எதாவது சொன்னார்களா ''எடுத்தவுடன் கேட்டான்.

அவன் கேட்டதைப் புரியாமல் , ''சார்,நீங்கள் கேட்பது புரியவில்லை, ''சித்ரமாலாவா, யார்..?எந்தப் பெண்ணைச் சொல்லீரிங்க'' கேட்டார் ராகவன்.

''இப்போது உங்களிடம் கடைசியாக வந்து பேசினார்களே, அந்தப் பெண் தான் '', சொன்னான் சித்தார்த்.

''ஓ, அவர்களா, உங்களைப் பற்றிக் கேட்டார்கள்., நீங்கள் கண்காட்சியில் யாரையும் சந்திக்க மாட்டீர்களே, அது தான் அவர்களுடைய தொலைப்பேசி நம்பர் முகவரியை எழுதி வாங்கினேன்., அவர்கள் நாளையும் இங்கே வருகிறேன் சொல்லிச் சென்றுவிட்டார்கள்,'' சொன்னார் ராகவன்.

''ம், சரி'', சொன்னவன், அவள் நம்பரையும் முகவரியும் வாங்கிக் கொண்டு'' நான் பேசிக் கொள்கிறேன் ,''சொன்னான் சித்தார்த்.

ராகவனுக்கோ இது புதியதாகத் தெரிந்தது. எப்பவும் கண்காட்சியில் வருபவர்களின் நம்பரை வாங்க மாட்டான். இவரைப் பேசச் சொல்லிவிட்டு நேரம் கிடைக்கும்போது சந்திப்பான் . இன்று தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்வது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது ராகவனுக்கு. அவரும் ஒன்றும் பேசாமல் சரியென்று தலையாட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.

சித்தார்த்தின் மனமோ அவளிடம் பேசலாமா, இல்லை நேரடியாகவே சந்திக்கலாமா,எண்ணியபடி கிளம்பியவன், பார்த்தவுடனே அவளிடம் சென்று நிற்கும் மனதிற்கு ரோஷமே இல்லை தன்னைத் திட்டிக்கொண்டே தன் வீட்டிற்குச் சென்றான்.

சிறு வயதிலே பெற்றோரை இழந்துவிட்டதால் தனிமையின் துணையோடு வாழ்ந்தவனுக்கு இன்று வீட்டினுள் நுழையும் போதே ஒருவித ஏக்கம் தோன்றியது.

சமையலுக்கு மட்டும் வீட்டோடு மாதவன் ஒருவர் இருப்பார். மேல் வேலைக்கு ராக்காயி வந்து சுத்தம் படுத்திவிட்டு மாலை சென்றுவிடுவாள். மாதவன் அந்தந்த நேரத்திற்கு அவனுக்கு சிற்றுண்டி, சாப்பாடு கொடுத்தாலும் இது தான் வேண்டும் என்று கேட்பதில்லை
சித்தார்த்.

மாதவனும் அடிக்கடி , ''என்ன, தம்பி சாப்பிடரீங்க'', கேட்டாலும் ''நீங்களே எதாவது செய்து விடுங்கள்'', சொல்லி விடுவான்.

அம்மா இருந்திருந்தால் பிடித்ததைக் கேட்டு பழகியிருப்பானோ என்னவோ,யாரும் இல்லாமல் அடுத்தவரின் வீட்டில் வளர்ந்தால் பசித்தால் கொடுப்பதை உண்டு பழகியவனுக்கு, இது தான் வேண்டும் ,பிடிக்கும் சொல்லிக் கேட்க மாட்டான். எதிலும் அடுத்தவர்களிடம் போய் நிற்பது அவனுக்குப் பிடிப்பதில்லை.

சிறு வயதில் தூரச் சொந்தத்தில் வளர்ந்தவன் தான் ஓரளவுக்குப் பெரியவனாக ஆனதும் தன் உணவிற்குக் கூட விடுமுறையில் எதாவது வேலை செய்து அந்தப் பணத்தைக் கொடுத்துவிடுவான்.
படிப்பிற்கு காலர்ஷிப்பில் படித்ததும் ,தன் தாய் அன்பைச் சிறிய வயதில் இழந்தாலும் இயற்கை தாய் கொடுத்த வரப்பிரசாதம் உணர்விலே கலந்த ஓவியத்தை வரைய ஆராம்பித்துவிட்டான்.

சிறுக சிறுக தன்னை தானே வளர்த்துக் கொண்டவனுக்கு மற்றவர்களிடம் எதற்கும் நிற்கக் கூடாது என்று தன்மானமும் ,சுய கௌரவமும் கூடவே வளர்ந்தது. தனக்கு தானே முடிவு எடுத்துப் பழகியவனுக்கு அடுத்தவர்களின் ஆதிக்கம் தன் மேல் வளர விடுவதில்லை, யாரையும் அருகிலே நெருங்கவும் விடுவதில்லை சித்தார்த்.

ஓவியத்தை உயிர்மூச்சாகிக் கொண்டவன் தன் தனிமையை ஓவியத்தின் பின்னே ஒளிந்து கொண்டு பல சித்திரங்களைக் கற்பனையிலும் ,நேரில் கண்டதையும், ஆழப் பதிந்த உணர்வுகளையும் ,அழகாகத் தீட்டினான்.

ஆனால் இன்றோ வீட்டினுள் நுழையும் போதே அவள் இருந்திருந்தால் இந்த தனிமையோ ,சூனியமான அமைதியோ இல்லாமல் உயிர்ப்புள்ளதாக இருந்திருக்குமோ மனதினுள் ஏக்கமாக இருந்தது சித்தார்த்திற்கு.

அன்பைக் கூட யாசிக்கும் நிலை வந்துவிடக் கூடாதே கர்வத்தோடு இருப்பவனுக்கு சித்ரமாலாவின் முகத்தைப் பார்த்ததும் ஏக்கமாக இருந்தது.

இப்படியே அவளைப் பற்றிச் சிந்திக்கக் கூடாதே எண்ணியவன் எப்பவும் தன்னையே மறக்க வைக்கும் ஓவிய கூடத்திற்குள் நுழைந்து பாதியில் விட்டுப் போனதை வரைய ஆரம்பிக்க மனமோ சலனமின்றி ஓர்வித யோகநிலையாக மாறியது சித்தார்த்திற்கு..

தன் வீட்டை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்த சித்ரமாலாவிற்கு அந்த ஒற்றை ஓவியத்தைப் பார்த்தலிருந்து தடுமாற்றமாகவே மனம் இருந்தது. அவள் மனதில் அவனே தான் வேறு யாரும் இவ்வகைகளை வரைய முடியாது எண்ணியவள் , அவனைப் பற்றிய எண்ணத்தின் சிந்தனையோட்டங்கள் அதிகமாக இருக்க, அவள் விபத்தின்றி "எப்படி வீடு வந்து சேர்ந்தாள் ,அறியவில்லை. அந்தளவுக்கு மனமோ குழப்பம் அடைந்திருந்தது.

வீட்டினுள் நுழையும் போதே அங்கே அப்பாவும் அம்மாவும் தன் வருகைக்குக் காத்திருப்பதைக் கண்டு கொள்ளாமல் சுவிட்ச் போட்ட ரோபபோவைப் போல் தன் அறைக்குச் சென்றாள்.

தன் மகளின் நடவடிக்கையைப் பார்த்த கண்ணனுக்கும் தேவிகாவிற்கும் ஆச்சரியமாக இருந்தது. கண்ணனும் தன் மகளை ''கண்ணம்மா, கூப்பிட்டார்.

எப்பவும் கண்காட்சிக்குச் சென்று வந்தால் அங்குள்ள ஓவியத்தைப் பற்றிப் பல கதைகளைச் சொல்பவள் இன்று கூப்பிடக் கூப்பிட அமைதியாகச் செல்வதைக் கண்டு கண்ணனும் தேவிகாவும் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர்.

வேகமாக எழுந்த தேவிகா தன் மகளின் அறைக்குச் சென்றவர், ''அம்மு என்னடா, அப்பா கூப்பிடுகிறார், ''நீ, பதில் சொல்லாமல் உள்ளே வந்துவிட்டாய், என்னாச்சுமா,'' வெளியே போனதால் தலைவலி வந்துவிட்டதா, ''கேட்டு அருகில் அமர்ந்தார்.

அம்மாவின் பேச்சைக் கூட உள்வாங்காமல் பதிலின்றி அருகில் அமர்ந்த தாயின் மடியில் தலை சாய்ந்தாள் சித்ரமாலா. தேவிகா மகள் மடிச் சாய்ந்ததும், வேறு எதுவும் கேட்காமல் அவளைத் தட்டிக் கொடுத்தார்.

மனைவி பின்னால் வந்த கண்ணனுக்கோ மகளின் மனது புரிந்து போல மகளின் அருகில் வந்தவர் தலையைக் கோதிவிட்டார்.

அம்மாவும் அப்பாவும் எதுவும் கேட்காமலே ஆறுதல் அளிக்கவும், சிறிது நேரம் அமைதியாகப் படுத்திருந்தாள். அம்மா மடி எப்பவும் பிள்ளைகளுக்குக் கவலை தீர்க்கும் மருந்து போல. கொஞ்ச நேரத்திலே தன் இயல்புக்குத் திரும்பியவள், தாய் மடியிலிருந்து எழுந்து அமர்ந்தாள் சித்ரமாலா.

தேவிகாவோ எதுவும் கேட்காமல், ''வாடா அம்மு சாப்பிடலாம், '' கூப்பிட்டு விட்டு எழுந்தார்.

கண்ணனும், ''வா,கண்ணம்மா, நேரமாச்சு சாப்பிட்டுத் தூங்கு, எல்லாம் சரியாகிவிடும்'', சொன்னார்.

இருவருக்கும் பதில் சொல்லாமலே அப்பாவின் முகத்தை ஏக்கத்தோடுப் பார்த்தாள்.

கண்ணனோ மகள் தன் முகத்தைப் பார்த்ததைப் பார்த்துச் சட்டென்று புரிந்துவிட்டது . உடனே தன் மனைவியின் முகத்தைப் பார்த்தார்.

தேவிகாவோ, மகளின் முகத்தைத் தடவிக் கொடுத்துவிட்டு ''சரியாகிவிடும் வாடா, அம்மு'', ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு ''சாப்பாடு எடுத்து வைக்கிறேன் இருவரும் வாங்க '',சொல்லிச் சென்றார்.

கண்ணனோ தன் மகளின் அருகிலே அமர்ந்து அம்மா சொல்வதைப் போல 'சரியாகிவிடும் கண்ணம்மா, வா,'' சொல்லிச் சாப்பிட அழைத்துச் சென்றார்.

கண்ணனுக்கும் தேவிகாவிற்கும் மகள் கண்காட்சிக்குச் சென்று வந்தாலே ஏக்கமும், நிராசையும்,முகத்திலிருந்தாலும் சிறிது நேரத்தில் மன மாறி அங்கு வரைந்திருந்த ஓவியங்களைப் பற்றி ஒவ்வொன்றாக வர்ணிப்பாள். ஆனால் இன்று அவள் முகமும் மனமும் சரியில்லை, அவனைச் சந்தித்திருப்பாளோ எண்ணம் கண்ணனுக்கும் தேவிகாவிற்கு தோன்றியது.

மகள் எதுவும் சொல்லாமலே புரிந்து கொள்ளும் தாய் தந்தைக்கோ மகளின் மன வருத்தத்தையோ கவலையோ தீர்க்க முடியாமல் போனதே எண்ணி மனதிற்குள் அவர்களும் தவித்தனர்.

ஒன்றும் பேசாமலே சாப்பிட்டு தன் அறைக்கு வந்த சித்ரமாலா, இன்று கண்காட்சியில் பார்த்த மற்ற ஓவியங்களைவிட அந்த ஒற்றை ஓவியம் அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது. இது அவன் வரைந்தது தான். அவனை மீண்டும் சந்திக்க முடியுமா, பேசுவானா, அறியாமல் மனம் தவித்தாள். மீண்டும் சந்தித்தால் அவன் மனநிலை எவ்வாறு இருக்கும், மாறி இருக்குமா இல்லையா,எப்படி அறிந்துகொள்வது அறியாமல் திகைத்துப் போனாள் சித்ரமாலா.




அடுத்த அத்தியாயம் போட்டு விட்டேன் படித்துவிட்டு கருத்துகளை கூறுங்கள் தோழமைகளே..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ணத்தின் வாசலிலே

அத்தியாயம் 3

"ஆகாயத்தில் பூத்திருக்கும்
வெள்ளி நிலவாய்
உந்தன் வதனம் ஜொலிக்க
சொக்கித்தான் போனேன்
சித்திரமே..."!!!


தன்னுடைய அறைக்கு வந்தவள் இன்று ஒவியக்காட்சிக்கு சென்று வந்தலிருந்து ஓவியத்தை வரைந்த ஓவியக்காரன் அவனே தான் எண்ணம் தோன்றியது சித்ரமாலாவிற்கு.


அவனே தவிர யாராலும் இவ்வகை ஓவியத்தை வரைய முடியாது. ஒரே முகத்தில் அவர்களுடைய வாழ்க்கைப் பயணங்களை அதனுள்ளே அதிநுட்பமாக வரைந்து அம்முகமே அவர்களின் வரலாறே கூறிவிட முடியும். இவ்வகை ஓவியம் அவனால் தான் இவ்வளவு நேர்த்தியாக வரைய முடியும் எண்ணிக் கொண்டாள்.

''பிரம்மன் பிரபஞ்சத்தில் அவனைப் படைக்கும் போதே மனக் கற்பனை குதிரையில் வலம் வந்து தீட்டும் ஒவியவிரல்களை எத்தனை நாட்களாக யோசித்து
நுட்பமாகப் படைத்திருப்பானோ'',அன்றைக்கே அதிசயப்பட்டவள் இன்று அவன் மேலும் பல புதுமைகளைப் படைத்து இருப்பதைக் கண்டு வியந்தும் போனாள் சித்ரமாலா.

அவனுடைய ஒவ்வொரு படைப்பும் சித்திரமும் அவளுக்கும் அதிசயமே. அதனால் தானே மனம் மயங்கியதோ...

முதல் பார்வையிலே மனதில் நேச விதையைத் தூவியவன், வேரூன்றி விருசட்மாக வளர்ந்து படர்ந்து இருப்பதைக் காணாமல் எங்கோ சென்றுவிட்டானே...

என் வாழ்க்கைக் கூட்டில் அன்றில் பறவையாய் வந்து மகிழ்வுகளை அனுபவிக்காமல் கூட்டைப் பிய்த்து எறிந்து போனவனை என் மனமோ நிமிடத்திற்கு ஓர் முறை அவன் பெயரை உச்சரிக்க, அதை அவன் அலட்சியமாக எண்ணியதை நினைத்து நினைத்து இந்நிமிடம் வருந்துவதா, ஏங்குவதா, அழுவதா, அறியாமல் மனம் கலங்கினாள் சித்ரமாலா.

''சித்தார்த் '',பெயரைப் போலவே சாந்தமான முகமும் ஆளுமை நிறைந்த குரலும் அழகு தான். அவனை முதல் முறையாகப் பார்த்த அந்த நொடிகளை மனச் சுரங்கத்தில் பொக்கிஷமாகப் பொத்தி வைத்திருக்கிறேன். ஆனால் அதன் சாவி அவன் நேசமே, அது அவனுக்கு ஞாபகம் இருக்குமா... ,இல்லை ,என்னை மறந்தது போல அதையும் மறந்து இருப்பானா தெரியவில்லை, நினைத்தாள் சித்ரமாலா.

பழைய நினைவுகளை அசைபோட அவள் முகத்தில் தோன்றிய பல வர்ண ஜாலங்களில் சிரிப்பும் மகிழ்ச்சி ஊற்றுகளும் தாண்டவமாடியும் கற்பனையில் மிதந்த விழிகளோ அந்த நாட்களை எண்ணிக் கனவுலகில் உலா வரத் தொடங்கியது சித்ரமாலாவிற்கு.

ஓவிய கூடத்திற்குள் நுழைந்து வரையத் தொடங்கி அதில் மூழ்கிய சித்தார்த்துக்கு முழு மனதாக ஆழ்ந்து வரைய முடியவில்லை. சித்ரமாலாவை பார்த்தலிருந்து மனம் அவள் பின்னே சென்று விட்டது.

''எவ்வளவு அழகான நாட்கள், அவளுடன் இருந்தது. அவளுடைய அழகும் சிரிப்பும் மனதைக் கொள்ளை அடிக்க அவளுடன் பழகி வாழ்ந்த நாட்கள் மீண்டும் வராதா ஏங்கி ஏங்கி தூக்கமின்றி தவித்த இரவுகளைக் கடப்பது அவ்வளவு எளியதாகவே இல்லையே..

இன்று வரை அவளை முதல் முறையாக வளர்ந்த இளஞ்சிட்டாகப் பார்த்த அந்த நிமிடம் ஓர் அழகிய தேவதையாக என்னுள் ஆக்கிரமித்து வரம் தந்தவள் இன்று வரை என் மனதை அவளுடைய அன்பிலே ஆட்டி வைக்கிறாளே..

பார்த்தவுடனே மனதில் பதிந்த சித்திரமான சித்ரமாலா என்னுடைய வாழ்க்கையில் பயணிக்கத் தொடர்ந்து புதுப்புது ராகங்களை மீட்டியவள் தான்.

இப்போதோ புழுதி படிந்த சித்திரமாக எங்கோ மறைந்துவிட்டவளின் மீது இன்றும் எரிமலையாகக் கொந்தளிக்கும் சினத்தை எவ்விதம் ஆற்றுவது அறியாமல் திகைத்தான் சித்தார்த்.

இரண்டு வருடமாக அவளைத் தேடித் தேடிக் களைத்தவன் இன்று அவளை கேமிரா வழியில் பார்த்ததும் மனம் அவளிடமே மீண்டும் தஞ்சமடைந்த மனதை அடக்க முடியாமல் அவளை நோக்கி எடுத்த வைத்த கால்களைக் கட்டுப்படுத்துவதற்குள் திணறிப் போனான் சித்தார்த்.

''அம்மாடி , இன்றும் குறையாத அழகு பொற்ச்சிற்பமாக உருவெடுத்து அடியெடுத்து நடந்து வந்தவள் அந்த நிமிடமே தன்னை ஆட்கொள்ள மாட்டாளா,'' ஏங்கித் தான் போனான் .

தனிமையில் வாழ்ந்த அனாதைக்குக் கிடைத்த அதீத அன்பின் அதிர்ஷ்டத்தை தன் முட்டாள் தனத்தால் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்த தன் பைத்தியகாரத்தனத்தை நினைத்து வருந்தாத நாளே இல்லை. யாரோ செய்த தவற்றுக்குத் தண்டனை கொடுப்பதாக எண்ணி எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொண்டதை நினைத்து தன்னையே திட்டிக் கொண்டான்.

இன்னும் அந்த மதிமுகத்தில் தவழும் கள்ள கபடமில்லாத பேரழகில் வீழ்ந்தவன் எழு முடியாமல் தவிக்கும் உள்ளத்திற்கு அவளுடைய நேசம் மீண்டும் கிடைக்குமா, ''கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்காதுப் போலக் கிடைக்காமல் போய்விடுமா'' பயமும் இருந்தது சித்தார்த்துக்கு.

சித்தார்த்க்கு எப்பவும் தனக்குத் தானே முடிவெடுக்கும் புத்தியாலும் தன் மேல் மற்றவர்களின் அறிவுரையும் ஆதிக்கம் தொடராமல் தள்ளி வைத்துப் பழகியவன் தன் ஆளுமைத் திறனை மற்றவர்கள் மீது அதிகாரமாகவும் ,சில நேரங்களில் ஆணவமாகக் காட்டுபவனுக்கு தனக்கான துணையாக வந்தவளிடம் அதீத ஆளுமையாலும் அன்பின் வெறியாலும் அடக்குமுறையும் ஆதிக்கமும் செலுத்தினால் அவளின் மனம் எவ்வளவு வேதனைப்படுத்தும் அறியாமல் போனதே.

இப்போதோ ''அடர்ந்த காட்டில் திசையறியாத மனிதனாகத் திகைத்து நிற்க வைத்தது விதியா ,இல்லை மனதின் மடத்தனமா ,''நினைத்து இப்போது வருந்தினான்.

அன்றைய நாட்களின் சந்தோஷமும் குதூகலமும் கும்மாளமும் மீண்டும் இன்றைய நாட்களில் கிடைக்குமா புரியவில்லை. அளவுக்கு மீறிய அனல் வார்த்தைகளும் , இன்னும் மனதினுள் கொந்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஒருவருக்கு ஒருவர் தன்னை தன் சுயத்தை விட்டுக் கொடுக்காமல் பேசிய சொற்களால் ஏற்படுத்திய காயங்களோ இன்றும் சீழ்ப்பிடித்து குருதியும் வடிகிறது. காலங்கள் ஓடினாலும் இந்நொடியும் அந்நிகழ்வில் நடந்ததாகவே மனம் துடிக்கிறது.

''தீயினால் சுட்ட வடு உள்ளாறும், நாவினால் சுட்ட வடு ஆறாது..'' ,அறிந்தும் என் வார்த்தையால் சித்ரமாலாவை குதறிய என் நாவை தீயினால் சுட்டுக் கொள்ள வேண்டும் வெறியே வந்தது அந்த நொடியிலும் சித்தார்த்திற்கு .

''பேசுவதற்கு முன் அவ்வார்த்தைக்கு நாம் எசமானாக இருந்தோம் . பேசியபின் அவ்வார்த்தை நமக்கு எசமானாக மாறி அதிகாரம் பண்ணும் நிலைக்குத் தள்ளிய தன் புத்தியை எதனால் அடித்துக் கொள்வது'', ஒருவரை ஒருவர் வருத்தினாலும் இன்று அவளை வருத்திய வார்த்தைகளின் வலி என் மனதை சம்மட்டியால் அடித்ததைப் போல வலிக்கிறதே எண்ணி மனம் நொந்தான் சித்தார்த்.

அவளைப் பிரிந்து அவளுடைய எந்த நினைவுகளும் நேசமும் தனக்கு வேண்டாம் நினைத்து அவள் காணாமல் மறைந்த நாட்களில் வீம்பிற்கு அவளைச் சந்திக்காமலும் தேடாமலும் இருந்ததும், அவளும் கண்காணாமல் மறைந்ததிற்குக் காரணம் தானே எண்ணி வருந்திய நாட்கள் தனக்கும் ஆயுள் தண்டனை தானே வருந்தினான் சித்தார்த்.

பல நினைவுகள் மனதில் மத்தளம் வாசித்தாலும் அவளை முதல் முறையாகச் சந்தித்த அந்த நிகழ்வு மீண்டும் வந்தால் ,என் வாழ்வு சுபிட்சமாக மாறி வசந்தம் வீசத் தொடங்குமோ... எண்ணியபடி சித்ரமாலாவை முதலில் சந்தித்த அழியாத சித்திர நிகழ்வுகளை மனதினுள் புதுப்பிக்கத் தொடங்கினான் சித்தார்த்..

இருவரின் மனநிலையும் அந்த நாளை பின்னோக்கிப் பயணம் செய்யத் தொடங்கியது. அன்றைய நாள் இருவர் வாழ்க்கைக்கு அச்சாரமாக தொடங்க முதலடியை எடுத்து வைத்தாள் சித்ரமாலா.





அடுத்த பகுதி போட்டு விட்டேன் படித்துப் பாருங்கள் தோழமைகளே 😍 😍 😍 😍 😍
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ணத்தின் வாசலிலே...

அத்தியாயம் 4




"தூரிகையால் வரைந்த


சித்திரமொன்று பேரன்பில்


கட்டுண்டு மென்மையாக


இதயத்தில் உள்நுழைந்து


பள்ளிகொண்டதோ.." !!!




அழகிய கூடம்,எங்கும் மின்விளக்குகளின் அலங்கார வளைவுகள் மின்னலைப் போல ஒளி வீசியன., நந்தவனத்தில் நுழைந்த போல எங்கும் மலர்களின் தோரணங்களில் இயற்கையான நறுமணத்தை வீசி நாசித் துவாரங்களில் நுழைந்து இதயத்தில் ஊடுருவிச் சென்றது.

சட்டமிட்டு வைத்திருக்கும் ஓவியங்களின் வண்ணங்கள் கண்ணையும் கருத்தையும் கவர


மக்கள் கூட்டமும் அலைமோதியது.

எல்லாரிடம் ஓர் ஆச்சரியம், ஓவியத்தில் உலகை ஓர் கூடத்தில் நிலை நிறுத்த முடியுமா என்று.. நயாகாரா நீர்வீழ்ச்சி நேரில் காண்பதைப் போல அவ்வளவு தத்ரூபமாக வரைந்திருக்க முடிகிறதே .. உலகின் அதிசயங்கள் அத்தனையும் அங்கே ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்க , பார்க்க,பார்க்க ஓவியங்கள் அனைத்தும் கண்ணுக்கு விருந்தாகின.

அங்கே நடுநாயகமாக நின்றுகொண்டிருந்த கிரேக்கச் சிலைக்கு அருகில் வந்தவர்கள் அனைவரும் சென்று பாராட்டுப் பத்திரம் வாசிக்க, அச்சிலையோ மெதுவாகத் தலையசைத்தே ஆச்சரியம் தான்.


எவருக்கும் பதிலின்றி மிகையான சிரிப்பின்றி, பாராட்டு மொழிகளுக்கு அத்தனைக்கும் தகுதியானவன் தலை நிமிர்ந்து கர்வத்தோடு நின்றிருந்த கிரேக்கச் சிலைக்கு ''ஓவியத்தின் தலைவன்'' சித்தார்த்தன், சுதி பாடினர் பலர் .

ஒவ்வொருவரின் பாராட்டும் தன்னுடைய படைப்புக்குக் கிடைத்த பெரிய வெற்றி எண்ணியவன், ஓவியக்கலைக்கு முடிசூடா மன்னன் இந்த சித்தார்த் தான் கர்வம் கொண்டான்.

கூட்டம் கொஞ்சம் குறைய சித்தார்த் அங்கிருந்த திரை மூடிய சித்திரத்தின் முன் வந்து நின்றான்.

கனவில் கண்டதா ,என்றோ நடந்ததோ, வாழ்வில் சிறு வயதில் மனதில் பதிந்த உருவமா, தன் கரங்களால் தீட்டியதை எவர் கண்ணும் அறியாமல் திரையிட்டு மறைத்திருக்க, சித்திரம் உயிர் பெற்று வருமா, மனதினுள் வினா எழுப்பி விடையின்றி ஏங்கினான்.

பலவித சிந்தனைகளையும் சிறு வயது போராட்டமான வாழ்க்கை சிக்கல்களை மனதினுள் நினைத்தபடி திரும்பியவனின் விழிகள் விரித்தபடி ஓரியிடத்தில் நிலைத்தது.

இளந்தென்றலாய் உள்ளே நுழைந்தவளின் அழகில் அங்கே அமைத்திருந்த விளக்குகள் அவளுடைய மதிமுக பிரகாசத்திற்கு முன் ஒளி குறைவாகவே தெரிய,அங்குள்ள அலங்கார மலர்களோ தன்னை விட அழகான பூவின் தரிசனத்தைக் கண்டதும் வெட்கித் தலை குனிந்தோ... தோன்றியது சித்தார்த்துக்கு..

அலங்காரத்திற்குக் கொலுவீற்றிருந்த மலர்களைவிட புதியதாக பூத்திருக்கும் மந்தரா பூவாய் மந்தகாசமாய் மென்மையான அதரங்களை விரித்து புன்முறுவலோடு ஒவியக்கூடத்தினுள் அடியெடுத்து வைத்தது செந்தாழம் பூ .

மலர்களின் ராணியாக அழகிய வண்ணத்தில் ஆடை அணிந்து சித்ரமாலா உள்ளே நுழைந்தாள்.

உள்ளே நுழைந்தவளின் பார்வை அங்கே இருக்கும் ஒவ்வொரு ஓவியத்தின் முன் நின்று அதை தன் கண்களாலே ஸ்பரிசித்து இதயக் கூட்டினுள் நிரப்பியபடி நடந்து வந்தாள்.

சித்ரமாலா உள்ளே நுழைந்திருந்து அவள் முகபாவங்களைத் தன்னை மீறி ரசித்து நின்றான் சித்தார்த்துக்கு


அவளே தான் இவள்...ஆழ் மனதில் என்றோ பதிந்த சித்திரம் அன்ன நடை பயின்று வருகிறதோ, எண்ணியபடி நின்றான் .

ஓவியங்களை ரசித்தவள் அதை வரைந்தவரின் பெயரைத் தேடியவள் கொடிபோல வரைந்து கையெழுத்து பூவாய் தீட்டப்பட்டிருந்தது.

அதைக் கண்டவளின் கண்கள் சுற்றித் தேடியது, ஓவியத்தை வரைந்தவர் இருக்கிறாரா, இல்லை யாரிடமாவது கேட்டு அறிந்து கொள்ளலாம் நினைத்தாள் ,...

அங்கே திரையிட்டு மறைத்திருந்த ஓவியத்தின் முன் நின்றிருந்த கிரேக்கச் சிலையின் மீது தன் விழிகள் ஈர்க்க அவன் அருகே சென்றாள் சித்ரமாலா.

அவள் அருகே வர, சித்தார்த் மனமோ தன் மனதில் பதிந்த முகமும் கனவிலும் நினைவிலும் நித்தம் நிதம் ஆட்டிவைக்கும் மலர் நிஜத்தில் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து மனம் மகிழ்ச்சியில் துள்ளினாலும் அதை வெளியே காட்டாமல் தன் முகத்தில் வினாவைத் தேக்கி நின்றான்.

அவனை நோக்கிச் சென்றவள், அவன் முகத்தைக் கண்டதும் கேட்பதை மறந்து திகைத்து நிற்க, சித்தார்த்தே பேச்சை ஆரம்பித்தான்.

''வணக்கம், சொல்லுங்கள்,''என்ன வேண்டும், '' தன் ஆளுமையான குரலால் கேட்டான் சித்தார்த்.

அவன் குரலும் முகமும் வசீகரிக்க தன் மென் குரலில் அவனிடம் பேசினாள் சித்ரமாலா.

''ஹாய், சொல்லியவள் ,இந்த ஓவியங்களை வரைந்தவர் யார் தெரியுமா..?, கேட்டவள், படபடவென்று பட்டாசு மாதிரி பேசினாள்.

இவ்வளவு அழகான ஓவியங்களை பார்த்து நிறைய நாட்களாகி விட்டது. இன்று தான் பார்க்கிறேன், அற்புதமாக இருக்கிறது,'' சொல்லியவள் அவனுடைய பதிலுக்கு முகம் நோக்க,

அவனோ, ''ஒ அவரைப் பார்க்க வேண்டுமா'' , கேட்டான்.

''ம், ஆமாம் அவரை நேரில் பார்த்து பாராட்டவேண்டும், இவ்வளவு நுணுக்கமாக ரசித்து வரையும் கரங்களுக்கு வைர மோதிரமே போடலாம்,அவ்வளவு அற்புதமாக வரைந்திருக்கிறார். ஓவியக் கண்காட்சிப் பெயரைப் பார்த்ததும் உள்ளே நுழைந்துவிட்டேன். அவர் பெயர் கூட தெரியவில்லை, யாரிடம் கேட்பது தெரியாததால், உங்களைப் பார்த்தும் கேட்கவேண்டும் தோனுச்சு'', சொன்னாள் சித்ரமாலா.

''அதுவுமில்லாமல் உங்கள் முகத்தைப் பார்த்ததும் பழகிய முகமாகத் தோன்றியது. ஆனால் எங்கே பார்த்தேன் தெரியவில்லையே'', தன் நெற்றியின் ஓரத்தில் தட்டியபடி யோசித்தாள்.

தன் மனதிலிருப்பதை இயல்பாக தன்னிடம் பேசியவளைக் கண்டும் , தலையைச் சாய்த்து தன் விரலால் நெற்றி தட்டி யோசிக்கும் அழகைப் பார்த்த சித்தார்த், ஒரு வேளை கனவில் இருக்குமோ, கேட்க..,

அதைக் கேட்டதும் கலகலவென்று சிரித்தாள் சித்ரமாலா.

கூடச் சேர்ந்து சிரித்த சித்தார்த்,


அவளுடைய பேச்சால் இறுகிக் கிடந்த இதயம் இலகுவாக இதமாகப் பேச்சைத் தொடர்ந்தான்.

, "விரலுக்கு வைர மோதிரம் ரெடியா வைச்சிருக்கீங்களா, இல்லை கடைக்கு போகவேண்டுமா" கிண்டலாக கேட்க,

"அவரை உங்களுக்குத் தெரியுமா, எங்கே இருக்கிறார்" கேட்டாள் சித்ரமாலா.

''ம்ம், தெரியும் முதலில் வைர மோதிரம் காமியுங்கள், கூட்டிப் போகிறேன்,சித்தார்த் சொல்ல,

சட்டென்று தன் விரலிருக்கும் ஒற்றைக் கல் வைர மோதிரத்தைக் காட்டினாள் சித்ரமாலா.

''அவர் பெயர் கூட தெரியாது, அவருக்கு உங்கள் விரலிலிருக்கும் மோதிரம் கிடைக்கிறது, ''ம் அதிர்ஷ்டகாரன் தான்,'' பெருமூச்சு விட்டான் சித்தார்த்.

அதைக் கேட்டுச் சிரித்தவள், சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும், ஓவிய பைத்தியம் நான், எங்கே கண்காட்சி நடந்தாலும் போய்விடுவேன், ஒவ்வொன்றாக ரசிப்பதும் வரைந்தவர்களைப் பார்த்தால் பாராட்டுவதும் உண்டு, சொன்னாள் .

''அப்ப நிறையப் பேருக்கு உங்களால் வைர மோதிரம் கிடைத்திருக்கும்,அப்படி தானே''.. ,கூர் விழியால் அவள் முகத்தை அலசி ஆராய்ந்த படிக் கேட்டான் சித்தார்த்.

அதைக் கேட்டு தவறாக நினைக்காமல் வெகுளியாகச் சிரித்தவள் ''அந்தளவுக்கு மனம் கவர்ந்த படங்களை இன்று தான் பார்க்கிறேன் ''சொன்னாள் சித்ரமாலா.

புதியதாக அவனிடம் பேசுவது போல இல்லாமல் ரொம்ப நாளாகப் பழகியதைப் போலப் பார்த்தவுடனே அவனிடம் தன் மனதின் ஓடிய எண்ணங்களை அப்படியே பேசிக் கொண்டிருந்தாள் சித்ரமாலா.




''ம்ம்'',சொன்னவன், ''மிஸ், உங்கள் பெயர்,''கேட்டவன், தான் நினைக்கும் பெயரும் இவள் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும் மனதினுள் திடீர் தோன்றியது சித்தார்த்துக்கு..

''சாரி,சாரி, சொல்லிவிட்டு, சித்ரமாலா சார்,சொன்னாள்.

''ஒ ,நைஸ் நேம்,'' சொல்லியவன் ,மனதிற்குள் அவளே தான் ,பெருமூச்சு விட்டான் சித்தார்த். தன் நினைவில் நீங்காத நினைவுச் சுரங்கத்தில் பொக்கிஷமாக பாதுகாத்த சித்திரம் இன்று என் கண் முன்னே நிற்கிறது.

ஆனால் உரிமையோடு உறவாடாமல் வெளியாள் போலப் பேசுவதைக் கண்டு மனம் வெம்பினான் சித்தார்த். அன்றும் இன்றும் அதே வெகுளித்தனத்தோடு அவள் இருப்பதைக் கண்டவன் உள்ளமோ விரைவில் தான் நினைத்தை செய்து முடித்துவிடலாம் மனதிற்குள் நினைத்தான் .

தன் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களை மறைத்து அவளிடம் , ''அவரைப் பார்த்ததும் வைர மோதிரம் கொடுத்துவிடுவீங்க தானே , கேட்டவன், தங்கம் விற்கிற விலைக்கு வைர மோதிரம், ''கொடுத்து வைத்தவன்யா நீவிர் , புகழ்ந்தவன் ...,''எங்கையா இருக்க ஓவியரே கண்முன்னே வாரும் '',சொல்லிச் சிரித்தான் .

அவன் கிண்டலான பேச்சும் மென்மையான சிரிப்பையும் பார்த்து தானும் சிரித்தவள், ஓவியனின் முகத்தை சுற்றுமுற்றும் தேடினாள் சித்ரமாலா.

அவள் கண்கள் சுற்றியும் அலசுவதைக் கண்டு காணாமல், தன் கரத்தை அவள் முன் நீட்டி ''வைர மோதிரம் போடுங்கள்'', சொன்னான் சித்தார்த்.

தன் முன் கரத்தை நீட்டி மோதிரம் போடச் சொல்லும் இவனா ,இவ்வளவு அழகான ஓவியத்தைப் படைத்தவன், எந்தவித கர்வமும் இல்லாமல் இயல்பாக தன்னிடம் உரையாடுகிறானே எண்ணி அதிர்ச்சி அடைந்தாள் சித்ரமாலா.




அடுத்த பகுதி போட்டு விட்டேன் தோழமைகளே படித்துப் பாருங்கள் 😍 😍 😍 😍 😍 😍 😍
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ணத்தின் வாசலிலே ..


அத்தியாயம் 5..




"மார்கழிப் பனியாய்

மங்கையின் மனதிலே

மந்தகாசப் புன்னகையோடு

மன்னவன் நுழைந்தானடி! !!!..


சித்ரமாலா தன் முன் கரங்களை நீட்டியவனைப் பார்த்துத் திகைத்துப் போனாள். இத்தனை அழகோவியம் படைத்தவனிடமா பேசினோம்..,எண்ணி வியந்தவள்,'' சாரி, சாரி,.. நீங்கள் தெரியாது சார்'',உங்களிடமே வந்து கேட்டிருக்கிறேன் பாருங்கள், தன் தலையைத் தட்டிக் கொண்டவள், உங்கள் ஓவியங்கள் அத்தனையும் அழகு, பாராட்ட வார்த்தைகளே இல்லை, அவ்வளவு அற்புதமாக வரைந்திருக்கிறீர்கள்'',...ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் அவ்வளவு நேர்த்தியாக வரைந்த உங்களை ''என்ன, சொல்லிப் பாராட்டாவது புரியவில்லை சொல்லி படபடவென்று பேசினாள் சித்ரமாலா.


அவள் பேசப் பேச அவளின் வதனம் மிளிர்ந்து வர்ண ஜாலங்கள் வீசத் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த், சட்டென்று ''போதும், போதும், ரொம்ப புகழாதீர்கள், நீங்கள் புகழ்வது ஓர் பனிமலையை என் தலையில் தூக்கி வைத்த மாதிரி இருக்கிறது, உருகிக் கரைந்து விடுவேன்'', சொன்னவன், ''வெறும் பாராட்டு வார்த்தைகள் மட்டும் தானா, வைர மோதிரம் எல்லாம் கிடையாதா'', கிண்டலாகக் கேட்டான்.


''ஹாஹா, மோதிரம் தானே இதோ'', தன் கையில் இருப்பதைக் கழற்றி அவன் விரலைப் பிடித்துப் போட்டு விட்டாள்.


அவள் இயல்பாக விரலைப் பிடித்து மோதிரம் போட்டதைப் பார்த்துத் திகைத்த சித்தார்த் , ''ஹேய் ,நான் சும்மா தான்மா சொன்னேன், தன் விரலிலிருந்து கழற்ற...,


அவளோ'' வேண்டாம், வேண்டாம் கழற்ற வேண்டாம், நான் பொய் சொல்லவில்லை உண்மையாகச் சொல்கிறேன். உங்கள் ஓவிய திறமைக்கு என்னால் முடிந்த சிறு பரிசு தான், பேசியவள், "உங்கள் பெயர் தெரியாமலே பேசிக்கிட்டு இருக்கிறேன்", மீண்டும் தன் தலையைத் தட்டியவள், அவன் முகம் நோக்கினாள்.


தலையை அடிக்கடி தட்டிக் கொள்வதைக் கவனித்தவன், ''ஏன் மூளை தூங்கிவிடுமா, அதுக்குத் தான் அடிக்கடித் தட்டி எழுப்பிரீங்களா'', கேட்டுச் சிரித்தவன், ''என் பெயர் சித்தார்த்தன் ,''சொன்னான்.


அவன் கிண்டலுக்கு கலகலவென்று சிரித்தவள், ''பிரமாதம், உங்கள் படங்களில் உள்ள கையெழுத்தைப் பார்த்த போது புரியவில்லை, இப்ப புரிகிறது,.. புத்தரைப் போலவே சித்தார்த்தன் அமைதியானவரோ நினைத்தேன் என்றவள், ஆனால் உங்களைப் பார்த்தால் அமைதியானவரா தெரியவில்லை", சொல்லிக் கிண்டலாகப் பார்த்தாள்.


''ஹாஹா,சிரித்துவிட்டு ,தன் ஆழ்க் குரலில் ''அமைதியாக இருந்தால் இந்த காலத்தில் ஏய்த்துவிட்டுப் போய்விடுவார்கள்... ,தனக்கு வேண்டியதை எவருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது ,''பொருளாக இருந்தாலும், உயிர்ப் பொருளாக இருந்தாலும் சரி, '' இறுகிப் போன முகத்தோடு

சொன்னான் .


நல்ல பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று முகம் மாறியதையும், குரலும் மாறிதைக் கண்டு மனமோ தவிக்க முகமோ மிரண்டு போக, அவன் முகத்தை உற்று நோக்கினாள்.


அவள் உற்றுப் பார்ப்பதைப் பார்த்தவன் சட்டென்று தன் முகத்தோரணையை மாற்றியவன் ,''ஆமாம் ,''நீ மோதிரத்தைக் கழற்றிப் போட்டு விட்டாயே வீட்டில் கேட்க மாட்டார்களா'', கேட்டான்.



பேச்சு ஒருமைக்கு மாறியதைக் கவனிக்காமல் ,அவன் முகம் மாறி இயல்பாகப் பேசுவதைக் கண்டவள், ''ம்,அப்பாவிடம் போனதும் சொல்லிவிடுவேன், சொன்னவள், உங்களை எங்கோப் பார்த்துப் பழகிய முகமாகத் தெரிகிறது, ஆனால் எங்கே என்று தெரியலையே'', மீண்டும் தலையைத் தட்டிக் கொண்டாள்.


தலையை லேசாகச் சாய்த்து தட்டிக் கொள்வது அவளுடைய மேனரிசமோ நினைத்தவன், அவளை நிறையச் சிந்திக்க விடவில்லை, ''கனவிலே இருக்கும், அங்கே பார்த்திருப்போம்,'' சொன்னவன், தன்னை நோக்கி வேறு சிலர் வருவதைப் பார்த்தவன், அவளிடம் தலைசைத்துவிட்டு நகர்ந்துவிட்டான்.


சட்டென்று பேச்சை நிறுத்தி பாதியில் விட்டு விட்டுச் செல்வதைப் போலத் தோன்றிவிட்டது சித்ரமாலாவிற்கு.


அவனிடம் பேசும்போது தெரியாதவன் போல இல்லையே ,ரொம்ப பழகிய முகமாகத் தெரிகிறது, இவ்வளவு இயல்பாக தன் விரலிருந்து மோதிரத்தை அவனுக்குப் போடுமளவுக்குத் தோன்றிய காரணமும் புரியவில்லை. அவன் கையில் கொடுக்காமல் தானே போட்டுவிட்டு கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமாக தோன்ற, அவன் சென்ற வழியைத் திரும்பிப் பார்த்தாள்.



அவன் தன் நீண்ட கால்களில் விரைந்து அவ்விடத்தைவிட்டுச் செல்வதைப் போலத் தோன்றியது சித்ரமாலாவிற்கு.



பார்த்த சில மணித்துளிகளிலே தன் விரலிருந்த மோதிரத்தை அவன் விரலில் மாட்டிய விந்தை நிகழ்வு, அவளுடைய வாழ்க்கைக்கு அச்சாரம் இட்டதை அவள் அறியவில்லை.


தன் ஆழ்மன எண்ணங்களை அவளிடம் சொல்லிவிடுவோமோ எண்ணிப் பயந்து ஓடுவதைப் போல அவ்விடத்தைவிட்டு வேகமாகச் சென்றான் சித்தார்த்.


ஓவியக் கண்காட்சிக்கு சித்ரமாலா நுழைந்திருந்து ஒவ்வொரு படத்தையும் ஆழ்ந்து கவனித்து நின்று ரசித்து, நடந்து கொண்டிருந்தவள் தன்னை நோக்கி நடந்து வந்தவள் எதார்த்தமாகப் பேசி தன் மோதிரத்தைக் கழற்றி போட்டு விட்டதை நினைத்தவன் விரலிலுள்ள மோதிரத்தை உற்றுப் பார்த்தான். ''இது தான் நம் வாழ்விற்கு,'' நீ, போட்ட முத்திரை மோதிரம் பெண்ணே, நாளே இதை வைத்து ஓர் விளையாட்டு விளையாடப் போகிறேன் மோதிரத்திற்குச் சிறு முத்தமிட்டவன் நாளை சந்திப்போம் சித்திரமே'' ,அங்கே தனியாக தனக்கு ஒதுக்கிருந்த அறைக்குள் சென்றான் சித்தார்த்.


அதே இடத்தில் நின்றிருந்த சித்ரமாலா, தன் வீட்டிற்குச் செல்ல கிளம்பியவள், அங்கே திரையிட்டு மறைத்திருந்த ஓவியத்தைப் பார்த்து அதைத் திறக்கப் போனாள். அதற்குள்ளே அங்கே வேகமாக வந்தவன், ''மேடம் இதைப் பார்க்க அனுமதியில்லை சொல்ல'', ..


.''ம் சரி '',தலையாட்டிக் கிளம்பினாள்.


தன் வீட்டிற்குப் போனதும் வரவேற்பறையில் தனக்காகக் காத்திருந்த அம்மாவும் அப்பாவையும் , பார்த்தவள் ,''சாரி சாரிபா, கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது'', சொல்லி அவர் அருகில் அமர்ந்தாள் சித்ரமாலா.


கண்ணனோ, தன்னருகில் அமர்ந்த மகளைப் பார்த்து, மென்மையாகச் சிரித்தவர், ''தாமதமானால் போன் பண்ணவேண்டும் எண்ணமே வராதா கண்ணம்மா '', கேட்டவர் ''இவ்வளவு நெரிசல் பகுதியில் வர தாமதம் ஆனால் பதட்டமா இருக்குல'', சொன்னார்.


அதுவரை பேசாமல் இருந்த தேவிகா,'' ஏன்டி அம்லு, எத்தனை தடவை சொல்வது ஓர்யிடத்திற்கு போனோமா வந்தமா இருக்க மாட்டாயா, கேட்டவர், உனக்கும் ''செல்லம்'', கொடுக்கும் உங்கள் அப்பாவை நாலு அடி போட்டால் சரிவரும்'', கணவனை முறைத்தாள்.


கண்ணனோ, ''அய்யோ, குட்டிமா இந்த ராட்சஸியிடமிருந்து காப்பாற்று,'' தன் மகளிடம் கிண்டலாக உரைத்தவர்,தன் மனைவியைப் பார்த்து கண் சிமிட்டினார் .


அதைக் கண்டு முகம் சிவந்த தேவிகாவைப் பார்த்து சித்ரமாலா கலகலவென்று சிரித்தாள். ''அப்பாவின் ஒற்றைப் பார்வைக்கே மயங்குகிற நீங்கள் அடிக்கப் போறரீங்களா'',சொல்லி அப்பாவிற்கு ''ஹைபை '' கொடுக்க ,



''அப்பா மகளும் சேர்ந்து கிண்டலா பண்ணுரீங்க, ''கையை ஓங்கியபடி மகளிடம் வந்தவர் மகளின் கையிலிருக்கும் மோதிரத்தைக் காணாமல் திகைத்தார்.


''ஏய், அம்லு மோதிரம் எங்கே,? கேட்டார்.


அதைக் கேட்டதும், ''அது,அது, மா, அப்பா'', திக்கித் திணறினாள் சித்ரமாலா.


''என்னடி, தொலைச்சுவிட்டாயா,'' வைரம், கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையா'', திட்ட ஆரம்பித்தர் தேவிகா.


அவர் திட்டவும் மகள் அப்பாவின் முகத்தைப் பார்க்க, எதையோ மகள் சொல்ல விழைகிறாள் எண்ணியவர், மனைவியிடம் ,''தேவி போய் டிபன் எடுத்து வை, நான் கேட்கிறேன் குட்டிமாவிடம் சொல்ல,''..


''இப்படியே குட்டி, கண்ணம்மா, கொஞ்சுங்கள், போகிறயிடத்தில் பெண்ணை எப்படி வளர்த்து வைத்திருக்கிறீர்கள் என்னைத் தான் திட்டுவாங்க'', சொல்லிவிட்டு மகளை முறைத்து விட்டு உள்ளே சென்றார்.


தேவிகா உள்ளே போனதும் மகளிடம் திரும்பியவர், ''என்னடா குட்டிமா, மோதிரம் எங்கே?,.. கேட்டார்.


தன் அப்பாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள், ''அது, திக்கித் திணறியவள் இன்று ஓவியக் கண்காட்சிக்குப் போனேன் தானே, அங்கே ஓவியங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருந்தது பா. அதைப் பார்த்ததும் எனக்கு மனதில் ரொம்ப சந்தோஷமாக இருந்தா, அப்ப இந்த ஓவியத்தை வரைந்தவரிடமே ,''இது யார் வரைந்தார்கள் கேட்கப் போனேன்''.அவ்வளவு அழகான வரைந்து பெயர் பெற்றாலும் கர்வமில்லாமல் பேசினார்.


''அவரிடம் பேசும்போது ஓவியம் வரைந்தவர்க்கு மோதிரம் பரிசாக கொடுத்துவிடுவேன், சொல்லி அவருக்கே கொடுத்துவிட்டேன் பா,''.. தலைகுனிந்து சொன்னாள் சித்ரமாலா.


மகள் பேசுவதைக் கேட்டவர், அவள் தலைகுனிந்த பார்த்தவர், ''மோதிரம் கொடுத்தது பரவவில்லை குட்டிமா, இதை அப்பாவிடம் சொல்லும்போது ''நீ,நிமிர்ந்து பதில் சொல்லவேண்டும், தன் செய்து தவறாக இருக்குமாறு தோன்றி இப்ப தலைகுனிந்த மாதிரி அப்பாவை எங்கேயும் தலைகுனிய வைத்துவிடாதே,'' சொல்ல,


அவரை நிமிர்ந்து பார்த்தவள், ''சாரிபா, ஏதோ பார்த்ததும் பிடிக்கவும் மோதிரத்தைப் பரிசா கொடுத்துவிட்டேன்,'' சொன்னாள் சித்ரமாலா.


கண்ணன் மகளிடம் அளவுக்கு மீறிய பாசத்தைப் பொழிந்தாலும், கண்டிக்கும் வார்த்தைகளை ,அந்தந்த சூழலுக்கேற்ப சொல்லிவிடுவார்

அப்பாவின் பேச்சைக் கேட்டவள், ''அப்பா உங்களை எங்கேயும் தலைகுனிய வைக்கும் எந்தச் செயலையும் செய்ய மாட்டேன் பா,''.. சொன்னாள் சித்ரமாலா.

ஆனால் அதற்கு அச்சாரமிட்டு வந்த நிகழ்வை மறந்துவிட்டாளா, சித்ரமாலா...

விடியலில் புதிய செய்தியைப் பார்த்து கண்ணனும் தேவிகாவும் எதுவும் செய்ய முடியாத நிலையை எண்ணி திகைத்து அமர்ந்திருந்தனர்.

இனி அவனின் ராஜ்ஜியம் சித்ரமாலாவிடம் தொடங்கிவிட்டதை அறியாமல் விடியலில் இதமான கனவுலகில் ஆழ்ந்திருந்தாள்.




அடுத்த பகுதி போட்டு விட்டேன் மா படித்துப் பாருங்கள் தோழமைகளே 😍 😍 😍 😍
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ணத்தின் வாசலிலே..

அத்தியாயம் 6

"கனவுத் தோட்டத்தில்
பூக்களின் ராணியாக
உலா வர, நினைவுகளோ
மங்கலான உருவமதை
செதுக்கியதே!!!!.."



இரவின் கனவுகள் மிச்சமிருக்க,தன் பூவிழிகளை மென்மையாக தேய்த்து விட்டு கண் விழித்தாள் சித்ரமாலா.

முந்தைய நாள் நடந்த நிகழ்ச்சி யில் ஓவியங்களின் நாயகனை சந்தித்துப் பேசியது கனவுலகில் புத்தம் புதிய கனவிற்கு விதை தூவிச் சென்றதை எண்ணி வியந்துப் போனாள். படுத்தவுடன் உறங்கி விடுபவளோ நேற்று வெகு நேரம் உறங்காது அவனை எங்கேப் பார்த்து இருக்கிறோமே , யோசித்து யோசித்து மண்டையைப் பியத்துக் கொண்டாள்.

பலதை யோசித்தாலும் அவனை எங்கேப் பார்த்தோம் ஞாபகம் வரவில்லை .. ஒரு வேளை போன ஜென்மத்தில இருக்குமோ... ஈஸ்வரா.. எப்படி எல்லாம் யோசிக்கிற சித்து.. மூளையே மூளை தன்னை தானே நக்கலடித்து சிரித்தபடி உறங்கினாள் ...

காலையில் விழித்தவள் காலைக்கடன்களை முடித்துவிட்டு அறையை விட்டு வெளியே வர அங்கே வரவேற்பறையில் அப்பாவும் அம்மாவும் திகைத்து சிலைப் போல அமர்ந்திருப்பதைப் பார்த்தவள் அவர்கள் அருகிலே சென்று அப்பாவின் தோளில் கை வைத்து அப்பா, அழைக்க...

அவரோ தன் தோளில் வைத்த கையை இறுகப் பற்றியவர் தன் முன்னே இழுத்து டீப்பாய் மேல் அமர வைத்தவர் அன்றைய செய்தித் தாளை நீட்டினார்.

அம்மாவோ எதுவும் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருக்க அப்பாவின் முகமோ பொலிவிழந்து இறுகிக் கிடந்தது.

அப்பா, என்னபா ஆச்சு, கேட்க...

அவரோ சைகையில் செய்தித் தாளைப் பார்க்கச் சொன்னார்.

அவரை பார்த்தவள் செய்தித் தாளில் அவர் கை காமித்த இடத்தை பார்த்தாள்.

பார்த்தவளோ அதிர்ந்து அந்த இடத்தை விட்டே எழுந்து நின்றவளின் முகமோ நொடியில் மாறிப் போனது ...

என்னமா, இது.. எங்களுக்குத் தெரியாமல் என்ன இதுயெல்லாம் கேட்டார்.

அய்யோ அப்பா, இது மாதிரி இல்லை நேற்று தான் அவரைப் பார்த்தேன்... அவர் யார் தெரியாது . கண்காட்சியில் ஓவியத்தை பார்த்ததும் அவரைப் பாராட்டி என் மோதிரத்தை கொடுத்தேன். வேறு எதுவுமில்லைபா.. கலக்கமான குரலில் சொன்னாள்.

செய்தித் தாளில் பிரபல ஓவியருக்கும் பிரபலமான தொழிலதிபர் மகள் நிச்சயித்து மோதிரம் போட்டு விட்டார்கள். விரைவில் கல்யாண தேதி அறிவிக்கப்படும் கொட்டை எழுத்தில் வந்திருந்தது. படமோ அவர்களை ரொம்ப அழகாக எடுத்திருந்தார்கள். இருவரின் முகமும் மந்தகாச சிரிப்புடன் மிளர்ந்து இருந்தது.


அப்பா, நான் அவர் ஓவியம் நல்ல இருக்கு சொல்ல ,அவர் விரல் நீட்டவும் போட்டு விட்டேன் பா.. வேறு எதுவும் எனக்குத் தெரியாது பா, அவர் யார் என்பதே தெரியல..ஆனால் எங்கயோ பார்த்த முகமாக இருக்கேன் மட்டும் நினைச்சேன். சத்தியமா இது தப்பான நியூஸ் பா.. நீங்கள் நம்பலயா.. கலங்கிய குரலில் சித்ரமாலா கேட்க...

குட்டிமா, கண்ணம்மா .. உன்னை பற்றி எனக்குத் தெரியும்.. ஆனால் செய்தியில் வர அளவுக்கு இப்படி கவனமில்லாமல் இருந்திருக்க குட்டிமா... மகளைக் கடிந்துக் கொண்டார்.

அம்மா.. நான் தப்பு செய்திருப்பேன் நீங்கள் நம்பீறிங்களா, அழுக் குரலில் கேட்டவள்...

தேவிகா.. அம்லு, உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா ...நீ எதார்ர்தமாக செய்தது இப்ப உன்னை எந்தளவுக்கு பாதிச்சிருச்சு... இனி ஊரில் இருப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்காக விளக்கம் கொடுக்க முடியுமா.. கேட்டவர், அந்தப் பையனை வரச் சொல்.. நானும் அப்பாவும் பேசனும் சொன்னார்.

அம்மா, அப்ப நீங்கள் நம்பலயா .. கேட்டு அதிர்ந்து நின்றாள்.

அம்லு நான் நம்பவது விட இந்த நியூஸ் உண்மையா பொய்யா ஊர் வாய்க்கு அவல் கொடுக்க கூடாது. நீ அந்த பையனை வரச் சொல் நாங்கள் பேசனும் சொல்லியவர்... கணவனைப் பார்த்து நான் சொல்வது சரிதானே கேட்டாள் தேவிகா..

ம்ம்.. தலையாட்டிவர் போம்மா, போய் போன் பண்ணி வரச் சொல் சொல்லிவிட்டு அவரும் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.

அம்மாவும் அப்பாவும் சொல்லிப் போனதை நினைத்து திகைத்தவள் , அவன் யார் தெரியாது, போன் நம்பரும் தெரியாது, அவனால் என்னை எவ்வளவு பெரிய இக்கட்டான சூழலில் நிறுத்தி வைத்து விட்டான். கள்ளகபடமில்லாமல் ஓவியத்தை ரசித்து பாராட்டி பரிசு அளித்த என்னை ஊர் முழுவதும் நிச்சயத்தார்த்தம் கல்யாணம் விரைவில் பேச வைத்த அவனை இருடா வரேன், கோபத்தில் கொந்தளித்து தொதித்தெழுந்தாள்..

நேற்று போன ஓவிய கண்காட்சி நடந்த சபாவின் நம்பரைத் தேடி எடுத்தவள், அவனின் போன் நம்பரைக் கேட்டாள் சித்ரமாலா..

அங்கே போனை எடுத்தவரோ ஏன், எதற்கு எந்தக் கேள்வியும் கேட்காமல் நம்பர் கொடுத்தார்.

நம்பரை வாங்கியவள் அவனுக்கு போன் பண்ணினாள்..

ரீங் போகும் ஓசை மட்டும் கேட்க.. சித்ரமாலாவோ, எடுடா சீக்கிரம் எடுடா, மந்திரமா மனதில் ஓடியது. இரண்டு முறை அடித்தும் எடுக்கவில்லை அவன்..

மீண்டும் மீண்டும் ரீங் விட்டுக் கொண்டே இருக்கே...

அங்கே மேசையில் வைத்திருக்கும் போனைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

ரீங் போய் போய் கட் ஆனதை பார்த்தவன், நாலைந்து முறை வந்தற்கு அப்பறமே போனை ஆன் பண்ணி காதில் வைத்தான் சித்தார்த்..

போன் அவன் எடுத்ததை அறியாமலே சித்ரமாலா திட்டினாள், ஏன்டா, இப்படி செய்தாய், உன்னால் என் அம்மா அப்பாவும் எவ்வளவு கலங்கிப் போய்விட்டார்கள், அழுக்குரலில் பேசியதை க் கேட்டவன்...

ஹலோ ,ஹலோ.. மேடம் யார் நீங்கள், தனியாக பேச வேண்டும் என்றால் எனக்கு ஏன் போன் பண்ணீங்க அங்கே இருந்து கத்தினான்...

அவன் சத்தம் கேட்டதும், என்ன சார் நினைச்சிங்க, ஏதோ நீங்கள் வரைந்த ஓவியம் நல்லா இருக்கே பாராட்டி மோதிரம் கொடுத்தால் ,நிச்சயதார்த்தம் மோதிரம் சொல்வீங்களா.. .., உங்களால் வீட்டில் அப்பா அம்மாவிற்கு எவ்வளவு மனவுளைச்சல்.. வீட்டுக்கு மாறி மாறி போன் வந்துக் கொண்டே இருக்கிறது ... ஏன் இப்படி பண்ணிங்க.. நீங்கள் யாரு எனக்குத் தெரியாதே..எனக்கு இதனால் எவ்வளவு பெரிய அவமானம், கோபத்தில் பேசினாள் சித்ரமாலா.

அவள் பேச பேச, உனக்கு அவமானமா, சினந்தவன்... போதும் போதும் .. இது தவறான நியூஸ் நாளைக்குப் போடச் சொன்னால் போச்சு, இதுக்கேன் இவ்வளவு எமோஷனல் ஆகற.. கூலாகப் பேச....

என்னது.. நாளைக்கு செய்தித் தாளில் இல்லை வரணுமா.. கேட்டவள்.. அதற்குப் பதில் சொல்லாமல் நீ சீக்கிரம் எங்க வீட்டுக்கு வரணும்... அப்பா உன்னைப் பார்க்கணும் சொன்னார் சித்ரமாலா சொல்ல...

ஹலோ மேடம்,நல்ல மரியாதையாக பேசுகிறாய் நக்கலடித்தவன்... நான் வர ஐடியா இல்லை, உங்க அப்பாவை வந்து பார்க்கச் சொல்... என் செயலாளரிடம் அப்பாயிமென்ட் வாங்கிவிட்டு வரச் சொல் சொல்லிவிட்டு சட்னு போனை வைத்துவிட்டான்.

அவன் போன் வைத்ததைக் கூட அறியாமல் அவன் பேசியதை எண்ணியபடி நின்றாள் சித்ரமாலா...



அடுத்த அத்தியாயம் போட்டு விட்டேன் மா படித்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் தோழமைகளே..😍 😍 😍 😍
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ணத்தின் வாசலிலே..


அத்தியாயம் 6


"கனவுத் தோட்டத்தில்

பூக்களின் ராணியாக

உலா வர, நினைவுகளோ

மங்கலான உருவத்தைச்

செதுக்கியதே!!!!.."






இரவின் கனவுகள் மிச்சமிருக்க, மலர்ந்த மலர்களின் வாசனையோ நாசியில் துளைக்க தன் பூவிழிகளை மென்மையாகத் தேய்த்து விட்டு கண் விழித்தாள் சித்ரமாலா.


முந்தைய நாள் நடந்த நிகழ்ச்சியில் ஓவியங்களின் நாயகனைச் சந்தித்துப் பேசியது கனவுலகில் புத்தம் புதிய கனவிற்கு விதை தூவிச் சென்றதை எண்ணி வியந்து போனாள். படுத்தவுடன் உறங்கி விடுபவளோ இரவு வெகு நேரம் உறங்காது அவனை எங்கேப் பார்த்து இருக்கிறோமே , யோசித்து யோசித்து மண்டையைப் பிய்த்துக் கொண்டாள்.


பலதை யோசித்தாலும் அவனை எங்கேப் பார்த்தோம் ஞாபகம் வரவில்லை .. ஒரு வேளை போன ஜென்மத்தில் இருக்குமோ...எண்ணியவள் '' ஈஸ்வரா,.. எப்படி எல்லாம் யோசிக்கிற சித்து.. மூளையே மூளை தன்னை தானே நக்கலடித்து சிரித்தபடி உறங்கினாள் ...


காலையில் விழித்தவளோ காலைக்கடன்களை முடித்துவிட்டு அறையை விட்டு வெளியே வர அங்கே வரவேற்பறையில் அப்பாவும் அம்மாவும் திகைத்துச் சிலை போல அமர்ந்திருப்பதைப் பார்த்தவள் அவர்கள் அருகிலே சென்று அப்பாவின் தோளில் கை வைத்து ''அப்பா, அழைக்க...


அவரோ தன் தோளில் வைத்த மகளின் கையை இறுகப் பற்றியவர் தன் முன்னே இழுத்து டீப்பாய் மேல் அமர வைத்தவர் அன்றைய செய்தித் தாளை அவளிடம் நீட்டினார்.


அதைக் கையில் வாங்கியவள் அம்மாவோ எதுவும் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருப்பதும் அப்பாவின் முகமோ பொலிவிழந்து இறுகிக் கிடப்பதையும் கண்டவள்....


''அப்பா, என்னபா ஆச்சு.., ஏன் ஓர் மாதிரி இருக்கீங்க, ...உடம்பு சரியில்லையா... கேட்க...


அவரோ பேச முடியாமல் சைகையில் செய்தித் தாளைப் பார்க்கச் சொன்னார்.


அவரின் சைகையைப் பார்த்தவள் செய்தித் தாளில் அவர் கை காமித்த இடத்தை பார்த்தாள்.


பார்த்தவளோ அதிர்ந்து அந்த இடத்தை விட்டே எழுந்து நின்றவளின் முகமோ நொடியில் மாறிப் போனது ...


''என்னமா, இது.. எங்களுக்குத் தெரியாமல் என்ன ,...இதுயெல்லாம் ...கேட்டவர்.... உன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னே... எங்கயும் கவனமாக இருக்கனும்...சொல்ல


''அய்யோ அப்பா, இது மாதிரி நடக்கவே இல்லை ....நேற்று தான் அவரைப் பார்த்தேன்... அவர் யார்னு தெரியாது .... கண்காட்சியில் ஓவியத்தைப் பார்த்ததும் அவரைப் பாராட்டி என் மோதிரத்தைக் கொடுத்தேன்.... வேறு எதுவுமில்லை.. கலக்கமான குரலில் சொன்னாள்.


செய்தித் தாளில் பிரபல ஓவியருக்கும் பிரபலமான தொழிலதிபர் மகள் நிச்சயித்து மோதிரம் போட்டு விட்டார்கள். விரைவில் கல்யாண தேதி அறிவிக்கப்படும் கொட்டை எழுத்தில் வந்திருந்தது. படமோ அவர்களை ரொம்ப அழகாக எடுத்திருந்தார்கள். இருவரின் முகமும் மந்தகாச சிரிப்புடன் மிளிர்ந்து இருந்தது.

''அப்பா, நான் அவர் ஓவியம் நல்ல இருக்கு சொல்ல... ,அவரோ விரல் நீட்டவும் போட்டு விட்டேன் பா.. வேறு எதுவும் எனக்குத் தெரியாது பா, ...அவர் யார் என்பதே தெரியல..ஆனால் எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதேன் மட்டும் நினைச்சேன் .... சத்தியமா இது தப்பான நியூஸ் பா.. என்னையே நீங்கள் நம்பலையா''.. கலங்கிய குரலில் சித்ரமாலா கேட்க...


''குட்டிமா, .. .. உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்.. ஆனால் செய்தியில் வர அளவுக்கு இப்படி கவனமில்லாமல் இருந்திருக்க குட்டிமா... தவறில்லையா.. காலையிலிருந்து வீட்டுக்கு பலர் போன் பண்ணிவிட்டார்கள் ....எங்களிடம் கூடச் சொல்லவில்லை... என்று... இதனால் தானே இப்ப பிரச்சினை ...எத்தனை முறை சொல்லிருப்பேன், அப்பாவின் முன் தலை குனிந்து செய்யும் தவறுகளை செய்யாதே'' கேட்டவில்லை நீ ''.... மகளைக் கடிந்து கொண்டார்.


அதைக் கேட்டவள்..''அம்மா.. நான் தப்பு செய்திருப்பேன் நீங்கள் நம்பீறிங்களா,... அழு குரலில் கேட்டவள்...


தேவிகா.. டேய் அம்லு, உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா ... ''நீ எதார்த்தமாகச் செய்தது இப்ப உன்னை எந்தளவுக்கு பாதிச்சிருச்சு... இனி ஊரில் இருப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்காக விளக்கம் கொடுக்க முடியுமா.. சொல்லு.., உடனே அந்தப் பையனை வரச் சொல்.. நானும் அப்பாவும் பேசனும் சொன்னார்.


''அம்மா, அப்ப நீங்கள் நம்பலயா .. கேட்டு அதிர்ந்து நின்றாள்.


''அம்லு நான் நம்புவதை விட இந்த நியூஸ் உண்மையா பொய்யா ஊர் வாய்க்கு அவல் கொடுக்கக் கூடாது.... ''நீ, அந்த பையனை வரச் சொல்.... நாங்கள் பேசனும் சொல்லியவர்... கணவனைப் பார்த்து ''நான் சொல்வது சரிதானே''..., கேட்டாள் தேவிகா..


''ம்ம்.. தலையாட்டியவர் ''போம்மா,... போய் போன் பண்ணி வரச் சொல்.. சொல்லிவிட்டு அவரும் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.


அம்மாவும் அப்பாவும் சொல்லிப் போனதை நினைத்துத் திகைத்து நின்றவள்... , அவன் யார் தெரியாது..., போன் நம்பரும் தெரியாது, அவனால் என்னை எவ்வளவு பெரிய இக்கட்டான சூழலில் நிறுத்தி வைத்து விட்டான்.... கள்ள கபடமில்லாமல் ஓவியத்தை ரசித்துப் பாராட்டி பரிசு அளித்த என்னை ஊர் முழுவதும் நிச்சயதார்த்தம் கல்யாணம் விரைவில்... பேச வைத்த அவனை..'' இருடா வரேன், கோபத்தில் கொந்தளித்து கொதித்தெழுந்தாள்..


நேற்று போன கண்காட்சி நடத்தும் சபாவின் நம்பரைத் தேடி எடுத்தவள், அவனின் போன் நம்பரைக் கேட்டாள் சித்ரமாலா..


அங்கே போனை எடுத்தவரோ ''ஏன், எதற்கு ..?எந்தக் கேள்வியும் கேட்காமல் நம்பர் கொடுத்தார்.


நம்பரை வாங்கியவள் உடனே சித்தார்த்க்குப் போன் பண்ணினாள்..


ரீங் போகும் ஓசை மட்டும் கேட்க.. சித்ரமாலாவோ, ..''எடுடா சீக்கிரம் எடுடா, ...மந்திரம் போல மனசுகுள் பாராயணம் செய்ய.... இரண்டு மூன்று முறை ரீங் அடித்தும் போனை எடுக்கவில்லை அவன்..


மீண்டும் மீண்டும் ரீங் விட்டுக் கொண்டே இருக்கே...


அங்கே மேசையில் வைத்திருக்கும் போனைப் பார்த்துக்கொண்டே இருந்தான் சித்தார்த்...


ரீங் போய் போய் கட் ஆனதை பார்த்தவன், நாலைந்து முறை வந்ததற்கு அப்பறமே ,...போனை ஆன் பண்ணி காதில் வைத்தான் சித்தார்த்..


போன் அவன் எடுத்ததை அறியாமலே சித்ரமாலா திட்டினாள், ''ஏன்டா, இப்படிச் செய்தாய், உன்னால் என் அம்மா அப்பாவும் எவ்வளவு கலங்கிப் போய்விட்டார்கள், அழுகுரலில் பேசியதைக் கேட்டவன்...


''ஹலோ ,ஹலோ.. மேடம் யார் நீங்கள்..., தனியாகப் பேச வேண்டும் என்றால் எனக்கு ஏன்..? போன் பண்ணீங்க....'' அங்கே இருந்தேக் கத்தினான்...


அவன் சத்தம் கேட்டதும், ''என்ன சார் நினைச்சிங்க, ஏதோ நீங்கள் வரைந்த ஓவியம் நல்லா இருக்கே பாராட்டி மோதிரம் கொடுத்தால் ,நிச்சயதார்த்தம் மோதிரம் சொல்வீங்களா.. .., உங்களால் வீட்டில் அப்பா அம்மாவிற்கு எவ்வளவு மனவுளைச்சல் அவமானம் .... வீட்டுக்கு மாறி மாறி போன் வந்து கொண்டே இருக்கிறது ... ''ஏன் இப்படி பண்ணிங்க..?.. நீங்கள் யாரு எனக்குத் தெரியாதே..எனக்கு இதனால் எவ்வளவு பெரிய அவமானம்,... கோபத்தில் பேசினாள் சித்ரமாலா.


அவள் பேசப் பேச, ''உனக்கு அவமானமா, சினந்தவன்... போதும் போதும் .. இது தவறான நியூஸ் நாளைக்குப் போடச் சொன்னால் போச்சு, இதற்கேன் இவ்வளவு எமோஷனல் ஆகிற.. கூலாகப் பேச....


''என்னது.. நாளைக்கும் செய்தித் தாளில் வரணுமா.. கோபத்துடன் கேட்டவள்.. அவனுக்கு அதற்குப் பதில் சொல்லாமல்,'' நீ... சீக்கிரம் எங்க வீட்டுக்கு வரனும்... அப்பா உன்னைப் பார்க்கணும் சொன்னார் சித்ரமாலா சொல்ல...

'''ஹலோ, மேடம்,நல்ல மரியாதையாகப் பேசுகிறாய் நக்கலடித்தவன்... நான் வர ஐடியா இல்லை, உங்க அப்பாவை வந்து பார்க்கச் சொல்... எதுக்கும் என் செயலாளரிடம் அப்பாயிமென்ட் வாங்கிக் கொண்டு வரச் சொல்....'' சொல்லிவிட்டு சட்னு போனை வைத்துவிட்டான்.


அவன் போன் வைத்ததைக் கூட அறியாமல் அவன் பேசியதை எண்ணியபடி அதிர்ந்து நின்றாள் சித்ரமாலா...



அடுத்த அத்தியாயம் போட்டு விட்டேன் தோழமைகளே படித்துப் பார்த்துக் கருத்துக்களை கூறுங்கள் 😍 😍 😍 😍 😍
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ணத்தின் வாசலிலே


அத்தியாயம் ..7


என்னவென்று சொல்வது

என்றோ நடந்த நாடகத்திற்கு

இன்று ஒத்திகை நடக்கிறது

வண்ணங்களின் வழியே...



சித்ரமாலா தொலைப்பேசியைக் கையில் வைத்திருந்தபடி திக்பிரமை பிடித்த மாதிரி நின்றாள் .. நேற்று அவன் பேசிய தோரணையும், இன்று பேசிய அவனின் அடாவடியான வார்த்தைகளையும் கேட்டவள் இருவரும் குணமாக இருக்கும் இவனைப் புரிஞ்சுக்க முடியலயே..


என் வாழ்க்கை ஒரே நாளில் நூல் அறுந்த பட்டமாகப் பல திசையில் பறக்க முடியாமல் தள்ளாடி உசரத்திலிருந்து கீழே முள்வேலியில் விழுந்து சிக்கலாகிப் போனதை எண்ணி விழிநீரை அடக்கியபடி அப்பாவிடம் சொல்ல அறையிலிருந்து வெளியே வந்தாள்.


அங்கே டைனிங் டேபில் அமர்ந்திருந்த கண்ணுக்கு உணவை வைத்தபடி தேவிகா பேசிக் கொண்டிருந்தார்.


இன்று அந்தப் பையனைப் போய் பாருங்கள்.. காலையிலிருந்து வரும் போன்காலுக்கு என்னால் பதில் சொல்லவே முடியவில்லை .. அவன் யார்..ஏன் இப்படிப் பேர் செய்தித்தாளில் வருவது மாதிரி பண்ணினான் கேளுங்கள்.. வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருக்க..


வெளியே வந்தவளோ, ''அப்பா , கூப்பிட்டபடி அருகில் வந்தவளோ, தலைகுனிந்து நிற்க.. மகளின் குரலுக்கு நிமிர்ந்து பார்த்த கண்ணனும், தேவிகாவையும் பார்த்தவள்.

தயங்கித் திணறிக் அவர் அவர்...அப்பா சந்திக்கனுமனா வாங்குனுமா.. அவருடைய செயலாளருக்கு தொலைப்பேசி பண்ணி அப்பாயிமென்ட் கேட்டு அவர் வரச் சொல்ற நேரத்திற்குத் தான் பார்க்க முடியுமா.. கலங்கியபடி சொன்னாள் சித்ரமாலா..


அதைக் கேட்ட இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்க்க..

சரிடா குட்டிமா... அதனால என்ன, அவர் சொல்லற நேரத்திற்குப் போய் பார்க்கிறேன். என் பொண்ணை பலபேர் படிக்கும் செய்தித்தாளில் நிச்சயதார்த்தம் , உன் வாழ்க்கையை வச்சி விளையாடிருக்கான்.. எனக்குப் பயங்கர கோபம் தான். ஆனால் அவன் மேல காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமா யோசித்தாலும் உன்னை அங்கே பல கேள்விகளைக் கேட்டு நிற்க வைக்க தயார் இல்லை மா.. இதை நேரில் நாமே பேசுனும்.

ஏன் இப்படிப் பண்ணினான் ... கேட்கிறேன் குட்டிமா..கவலைப் படாதே.. அப்பா நானிருக்கேன் எந்த பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் சரியா..

உட்காரு சாப்பிடலாம் ,தேவி குட்டிமாவுக்கு இட்லியை வை சொல்லிச் சாப்பிட்டு முடித்து எழுந்தவர்... அவன் செயலாளர் நம்பருக்குப் தொலைப்பேசியைப் போட்டார்.


தொலைப்பேசி ரீங் போய் கட் ஆகவும் மீண்டும் முயன்றார்.பல முறை முயற்சித்து அங்கே தொலைப்பேசியை எடுத்தவரோ.. '' சித்திர கலைக்கூடம் ,"சொல்லுங்கள் என்ன வேண்டும்'' கேட்க..


சித்தார்த் சந்திக்க வேண்டும் கேட்டார் கண்ணன்.


இன்று அவரை சந்திக்க முடியாதே.. அவர் பிஸீங்க.. நாளைக்கு மாலை வரை நேரமில்லை சொல்லவும்..


பல்லைக் கடித்து கோபத்தை அடக்கிய கண்ணனோ.. இன்று செய்தித்தாளில் வந்திருக்கே என் பொண்ணோட நிச்சயதார்த்தம் போட்டோ அதைப் பற்றி பேசனும், உடனே ஏற்பாடு பண்ணுங்கள் சொன்னார்.


சார், யாரா இருந்தாலும் நேரமிருந்தால் தான் பார்க்க முடியும். அவர் இன்று முழுவதும் பிஸீ.. அவர் சாப்பிட நேரம் தான் கொஞ்சம் ரீலாக்ஸா இருப்பார். அப்ப பார்க்க முடியுமா .. கேட்கிறேன்.. மதியம் வாருங்கள். முடிந்தால் பாருங்கள் ..இல்லை நாளைக்கு மாலை வரை காத்திருங்கள் சொல்லியவர் தொலைப்பேசியைக் கட் பண்ணிவிட்டார்.


தொலைப்பேசி கட் ஆனதும், முகமே மாறிப் போனது.. தன் பொண்ணிற்க்காக எதையும் தாங்கி தான் ஆகனும் நினைத்தவர் .. ..மதியம் நேரம் இருந்தா பார்க்கலாமா.. இல்லை நாளைக்கு தானாம் .. எதுக்கு இப்பயே போறேன்.. கிளம்பிவிட்டார் கண்ணன்..


அவர் போவதைப் பார்த்தபடி நின்ற சித்ரமாலா நான் செய்த சிறு முட்டாள்தனமான செயல் என் அப்பாவிற்கு எவ்வளவு பெரிய தலைகுனிவா போயிற்று தன்னை நொந்தவள் கலங்கிய விழிகளோடு நின்றாள்.


பெரிய கம்பெனி வைத்து முதலாளியாக இருந்து ஆயிரம் பேரை வேலை வாங்குபவர், எதற்கும் தலை குனியாதவர், தன் பொண்ணிற்காக எவ்வளவு இறங்கிப் போகிறாரே தன் கணவனை நினைத்து கவலையோடு நின்ற தேவிகா, மகளை அணைத்தபடி உள்ளே சென்றார்.


சோபாவில் அமர்ந்த தேவிகாவின் மடியில் படுத்தவள், அம்மா, சாரிமா.. எனக்கு இப்படி ஆகும் தெரியாது மா.. மன்னிச்சிமா..என்னால தானே அப்பாவிற்கு இவ்வளவு பெரிய அவமானம்.. அழுக ..


''அம்லு அழக் கூடாது ,..எல்லாம் அப்பா சரிபண்ணிவிடுவார்.''... சொன்ன தேவிகா.. தன் கணவன் அங்கே என்ன பேசவரோ.. அந்த பையன் என்ன நினைச்சிருக்கான் தெரியலேயே மனதினுள் சிறு படபடப்புடன் மகளின் தலையைக் கோதியபடி அமர்ந்திருந்தார்.


*********


சித்திர கலைக் கூடத்திற்குச் சென்ற கண்ணன்.. உள்ளே அவன் செயலாளரைப் பார்த்தார். அவரோ ,''என்ன வேண்டும் ,..


சித்தார்த் பார்க்கணும்.. அப்பாயிமென்ட் நாளைக்குத் தான் சொன்னீங்க.. ஆனால் அவசரமா இப்ப பார்த்ததே ஆகனும் சொல்ல...


அப்பாயிமென்ட் இல்லாமல் பார்க்க முடியாதே... சார்..


''இல்லை காத்திருக்கிறேன்.. அவரை பார்க்காமல் இன்று போக மாட்டேன்''... அங்கிருந்த சேரில் அமர்ந்தார்.


ஆயிரம் பேரைச் சுழற்றி வேலை வாங்கத் தெரிந்தவர் தன் பொண்ணிற்காக, அவனைச் சந்திக்கக் காத்திருந்தார். பெரிய பணபலத்தால் சாதிக்க வழியிருந்தாலும் தன் பொண்ணிற்காக முகமறியாதவன் இடத்தில் அமர்ந்திருந்தார் கண்ணன்..


நேரமோ சென்று கொண்டிருக்க, உள்ளே அமர்ந்திருந்த சித்தார்த், வெளியே நடப்பதை காமிரா மூலம் பார்த்துக் கொண்டிருந்தான். அவர் வந்திருந்து தலைகுனிந்து அமர்ந்திருந்த விதத்தைப் பார்த்தவன், நக்கலான கேலி சிரிப்பைச் சிரித்தான். உன் பொண்ணிற்க்காக என் இடத்தை தேடி வர வச்சிட்டேன்.. இன்று முழுவதுமே காத்திருக்கட்டும் சினக்குரலில் சொன்னவன், தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.


கண்ணனோ தன் வாட்சியில் நேரத்தைப் பார்க்கவும்.. செயலாளரின் முகத்தைப் பார்க்கவும் நேரமோ ஜெட் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது . மதியம் மூன்று மணிக்கு மேல் ஆனாலும் அங்கே அமர்ந்திருந்தார் கண்ணன்.


தன் வேலைகளைப் தொலைப்பேசியில் எல்லாருக்கும் சொல்லிவிட்டு, சித்தார்த் இருந்த அறைக் கதவைப் பார்த்தவர்.. அது திறக்கும் வழியே காணவில்லை நினைத்து நொந்தார்.


அவரின் முன் நிழலாட நிமிர்ந்தவர்.. நீங்கள் போய் பாருங்கள் சார்..பத்து நிமிடம் தான் ..சீக்கிரம் பார்த்துவிட்டு வாருங்கள்,செயலாளர் சொல்ல..


இவ்வளவு நேரம் இறுகிப் போய் அமர்ந்திருந்த கண்ணனோ..ஊப்னு மூச்சை இழுத்துவிட்டவர்.. சித்தார்த் அறையை நோக்கிச் சென்றார்.


அங்கு உள்ளே நுழைந்தவர், மேசையின் பின் சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனைப் பார்த்தவரோ கதவின் அருகிலே திடுக்கிட்டு நின்றுவிட்டார் .


அவர் நிற்பதைப் பார்த்தவன்.. அதைக் கண்டுக் கொள்ளாமல் தெனவட்டாக அமர்ந்திருந்தான் சித்தார்த்..


நடையோ லேசாக, தள்ளாடியபடியே அவன் முன் போனவரை உட்காரக் கூடச் சொல்லாமல்... அவர் முகத்தைப் பார்த்தான் சித்தார்த்.


அதைப் பார்த்தவரோ , நடுங்கியக் குரலில் கவுதம்.. கூப்பிட


''ஹாஹா'', சிரித்தவன்.. பரவாயில்லையே பெயரைக் கூட ஞாபகமா வச்சிருக்கீங்க.. எங்கோ மறந்துவிட்டிங்களோ நினைச்சேன். பேப்பரைப் பார்த்ததும் தெரிந்திருக்கும் நினைச்சேன்.. வயசானால் கண்ணு சரியா தெரியலயா... மாமா... நக்கலாகப் பேசினவன்.. உன் பொண்ணுக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நேத்து நடந்தது .

சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன்.. ஆனால் அந்த கல்யாணத்திற்கு நீயோ உங்க அருமை பொண்டாட்டியோ வரக் கூடாது ... சொன்னவன்..


இதை உன் பெண்ணிடம் சொல்வேன், சொல்லி எதாவது செய்தால்....அந்த நாளில் நடந்த நடிப்பு நாடகத்தை உன் பொண்ணிடம் சொன்னால் உன்னைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள். நாளைக்கே எங்க கல்யாணம்.. சொல்லி... நேரம் முடிந்துவிட்டது நீங்கள் கிளம்பலாம் சொல்லி கதவை நோக்கி கையைக் காமித்தான் சித்தார்த் என்கிற கவுதமன்..


அவன் பேசுவதை முழுவதும் கேட்டவரோ அதிர்ந்து போனாலும் அவனுக்குப் பதில் சொல்லும் நிலையில்லாமல் தள்ளாடிப் படி வெளியே நடந்தவர்.. எப்படியோ காரைத் தடுமாறி ஓட்டியபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.


அங்கே தவிப்போடு மகளும் மனைவியும் பார்த்தவர் முகம் இறுகிப் போய்.. நாளைக் காலையில் உனக்கும் அவனுக்கும் கல்யாணம் .. சொன்னவர் விறுவிறுவென்று தன் அறைக்குச் சென்றுவிட்டார்.


மகள் அதிர்ந்து நிற்பதைக் கண்டவர், ஒன்றுமில்லைடா.. அப்பாவிடம் நா பேசுகிறேன் ..நீ உன் அறைக்குப் போ.. அவளை அனுப்பியவர்..தன் கணவனை நோக்கிப் போனாள் தேவிகா.


உள்ளே போன கண்ணனோ இடி விழுந்ததைப் போலக் கலங்கி அமர்ந்திருக்க, அவரின் தோளில் கை வைத்த தேவிகா, ஏங்க நாளைக்கே கல்யாணம் சொன்னால் எப்படி... தெரியாதவனுக்கு பொண்ணைக் கொடுக்க முடியுமா.. நீங்களே எப்படி ஒத்துக் கொண்டீங்க.. படபட கேள்வி மேல் கேட்க...


''வாயை மூடு,.. நாளை கல்யாணம் நடந்தே ஆகனும். ஆனால் நானோ நீயோ கலந்து கொள்ள முடியாது .. உன் பொண்ணை அனுப்ப வேண்டியது உன் பொறுப்பு.. என்ன செய்வீயோ எனக்குத் தெரியாது ''..கத்தியவர்..


தெரியாதவனுக்கு எப்படி பொண்ணைக் கொடுப்பதா... அவன் யாரு தெரியுமா... கவுதமன்... கவுதம் சித்தார்த்தன்.. சொல்ல


அதைக் கேட்ட தேவிகாவோ அதிர்ந்து பதற்றத்துடன் கண்ணன் முகத்தை நோக்கினாள்.





அடுத்த அத்தியாயம் போட்டு விட்டேன் படித்துப் பாருங்கள் தோழமைகளே 😍 😍 😍 😍





























.









































.
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 8

"கனவுகளின் சங்கமம்
நிதம் நிதம் தொடர
மறந்துவிட்ட நினைவுகளோ
கண்ணெதிரே வந்ததோ.."!!!!


கெட்டி மேளச் சத்தமின்றி ஆள் ஆரவாரமின்றி நிசப்தம் நிறைந்து இடமான சாத்திய கோவில் கதவின் முன் நின்று சித்ரமாலாவின் கழுத்தில்
மூன்று முடிச்சிட்டான் சித்தார்த்..

விழிகளோ நீரால் நிரம்பி வழிந்தாலும் தன்னை உயிராய் வளர்த்த பெற்றோர் கூட இல்லாமல் திருட்டு கல்யாணம் போல யாருமின்றி சித்தார்த் மனைவி ஆனாள் சித்ரமாலா.

ஏன்.. எதற்கு அறியாமலே , அம்மாவும், அப்பாவும் , உன்னால் பெரிய அவமானம் மட்டும் மிஞ்சிருச்சு.. இனி நீயென் பெண்ணில்லை சொல்லி வெளியே அனுப்பிய அப்பா, நேற்று அவன்(ர்)என்ன சொன்னார் சொல்லவில்லை.
நாளைக்கு உனக்கு அவர்க்குக் கல்யாணம் ..நானோ அம்மாவோ வரமாட்டோம்.. கிளம்பி போய் உன் வாழ்க்கையைப் பார்த்துக் கொள் ...இறுகியக் குரலில் சொல்லிவிட்டு அப்பா உள்ளே செல்ல சித்ரமாலா திகைத்துத் தான் போனாள்.

''யார் இவன், ..இவனுக்கும் அப்பாவிற்கு என்ன தொடர்பு ... பார்த்த அடுத்த வினாடியே அப்பாவும் என்னை ஒதுக்கி வெளியே போக சொல்லிவிட்டாரே... இத்தனை நாளா அன்பாய், பாசமாய் வளர்த்தவர் ஓரே நொடியில் விலக்கியது ஏனோ... அறியாமலே நின்றவளின் மனமோ ஒரே நாளிலே தன் வாழ்க்கையை காட்டாறாய் சுழற்றிச் சென்றவனை நிமிர்ந்துப் பார்த்தவளின் மனமோ உள்ளுரே குளிர்ப் பரப்பியது.

இறுகி இரும்பைப் போல கிரேக்க சிலையாய் நிமிர்ந்தவன் அவளிடம் எதுவும் பேசுவுமில்லை, சொல்லவுமில்லை.... வா, என்ற தலையசைப்புடன் முன்னே வேகமாக நடக்க... அவன் பின்னே ஓடினாள் சித்ரமாலா..

தன் வாழ்க்கையை இந்நிலைக்கு தள்ளியவனின் மீது கோபமோ கொந்தாளித்தாலும் இதை காட்டுமிடம் இதுவல்ல எண்ணியவள்..
இதற்கெல்லாம் பதில் இவன் சொல்லியே ஆக வேண்டும்...என் குடும்பத்திலிருந்து பிரித்தவனை வாழ்நாள் முழுவதும் சகித்துக் கொண்டு போவதை எண்ணி வருந்தினாள் ...

பல யோசனைகளை உள்ளடக்கிக் கொண்டு அவனிடம் எதுவும் பேசாமலே பொம்மைப் போல கூட போன சித்ரமாலா... பொது இடத்தில் யார் என்று அறியாமலே மோதிரம் போட்ட தன் புத்தியை எதைக் கொண்டு அடிப்பது ... தன்னையும் திட்டிக் கொண்டாள்.


தாலிக் கட்டியதிலிருந்து அவளுடைய முகப்பாவத்தை கவனித்தபோதும் பதில் சொல்லாமல் வண்டியை வீட்டிற்கு விட்டான்.


வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன், அவளை பார்வையாலே இறங்க சொல்லி தன் பின்னால் வீட்டினுள் வரச் சொல்லி சென்றான்.

கல்யாணம் வருபவருக்கு ஆர்த்தி கூட எடுக்க ஆள்யில்லையே .. நினைத்தவள் தயங்கி தயங்கி வீட்டினுள் அடியெடுத்து வைக்க..

சித்தார்த்தோ..இன்னும் உள்ளே வராமல் என்ன செய்கிறாள், பார்த்தான்.

அவள் தயங்குவதைக் கண்டவன்...சிட்டு..கூப்பிட வாய் அசைத்தவனோ.. தொண்டையை ,செருமியபடி உள்ளே வா சித்ரமாலா...ஆர்த்தி எடுக்க ஆளியில்லை.. அதை இல்லாமல் பண்ணிவங்களோ இனி வீட்டின் வாசற்படி ஏற மாட்டாங்க.. நீ இனி இங்கே தா இருக்கணும். உன்னை தேடி உன் அப்பனோ, அம்மவோ வரக் கூடாது ...யாருக்கும் போன் பண்ணவும் கூடாது.. சொல்லியவன், அதோ கிச்சன் அங்கே இருவருக்கும் காபி போட்டு எடுத்து வா.. சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் பேசுவதற்கு பதிலே சொல்ல முடியாமல் புரியவுமில்லாமல் நின்றவளுக்கு அவன் காபிக் கேட்டது ஞாபகம் வர, கிச்சனுள் போனவளுக்கு காபி தூள் எங்கிருக்கோ..பால எங்கிருக்கோ தெரியாமல் நின்றபடி நின்றவளுக்கு தனக்கு காபிப் போடவே தெரியாதே மறந்துப் போனாளோ..

மனம் குழம்பி கிடந்தால் மற்றவர் பேசுவதோ சொல்வதோ எதிலும் கவனமே இல்லாமல் இருக்கும் என்பதை அறியவே இத்தனை வருடம் ஆனதோ ...நேற்றிலிருந்து நடந்ததை உழன்றுக் கொண்டிருந்தவள் அங்கே நின்றாள் சிலைப் போல...

சித்தார்த் காலையில் அவள் வந்தலிருந்து எதுவும் பேசாமலே சாவிக் கொடுக்கும் பொம்மையா நடந்து கொண்ட சித்ரமாலாவை நினைத்து உள்ளே மருங்கினாலும்.. அவள் எப்படி என்னை மறந்தாள் .. சிறு ஞாபகம் கூட இல்லாமல் போகும் .. என்னையே என் அன்பை மறந்தவளுக்கு கல்யாணம் என்ற பெயரில் வீட்டிற்கு அழைத்து வந்த தன்னையும் பிடிக்காமல் போக... வெகு தொலைவில் தொலைந்துப் போன மகிழ்வுகள் திரும்ப வரவே வராதா ஏக்கம் மனதினுள் ஊடுருவிச் சென்றது.

இருவரும் அவரவர் நினைவுகளில் ஆழ்ந்துக் கிடக்க
வீட்டின் முன்புறம் உள்ள மரத்திலிருந்து சிறு பறவையின் கானத்தில் திடுக்கிட்டவன்... அறையைத் திரும்பிப் பார்த்தான்.

இன்னும் காபிக் கொண்டு வராமல் என்ன பண்ணுகிறாள்.. கிச்சனை நோக்கி வந்தவன் அங்கே பதுமைப் போல நின்றவளைப் பார்த்தவன் அவள் முகத்தையைப் பார்த்தபடி நிற்க.. நேரமோ சென்றுக் கொண்டிருக்க இருவரும் சுய நினைவுக்கு வரவில்லை ...

ஒருவாறு தன்னிலைக்குத் திரும்பிய சித்ரமாலா.. கதவின் அருகிலே நின்று தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டவள்.. முறைத்துப் பார்க்க...

அவனோ அவள் முறைப்பை கவனிக்காத மாதிரி புருசன் காபிக் கேட்டு எவ்வளவு நேரமாகது... காபிப் போடாமல் கனவு கண்டு நிற்கிற... நக்கலான குரலில் பேச...

அவன் பேசியதைக் காதில் வாங்காமல் , நீ யார்.. உனக்கு அப்பாவுக்கும் என்ன பிரச்சினை .. ஏதார்த்தமாக நான் போட்ட மோதிரம் உனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது புழுதியைக் கிளப்பி பேப்பரில் வந்தற்கு நீ தானே காரணம்... உன்னை முன்பின்னே பார்த்தில்லை... உன் பெயர் கூடத் தெரியாது ...ஒரே நாளில் என் அப்பா அம்மாவிடம் பிரித்து தாலியைக் கட்டிருக்கிறாய். இதில் உனக்கு காபிப் போட்டு தரணுமா...

என் அப்பா சொன்ன ஒரு வார்த்தைக்குக் கல்யாணத்திற்குச் சம்மதித்தேன்.. இங்கே உனக்கு சமைச்சு போட வரல... கோபமாக பேசியவள், நான் வேலை எதுவும் செய்ய போவதில்லை, எனக்கும் சேர்த்து நீயே காபியைப் போட்டு எடுத்து வா... வேகமாக சொல்லிவிட்டு ஹாலில் போய் அமர்ந்துவிட்டாள்..

மனமோ படபடவென்று அடித்துக் கொண்டது..தான் பேசியதை கேட்டவன் திக்பிரமை பிடித்ததைப் போல அமைதியாக நின்றதை நினைத்தவள்... இவன் வெளி பார்வைக்கு தான் டெரரோ... தன் மனதிற்குள் பேசிக் கொண்டாள்.

சித்ரமாலா பேச ஆரம்பித்ததும் அவளுக்கு பதிலே சொல்லாமல் பேசட்டும் நின்றவன்.. உன்னை பார்த்ததில்லை,... யார் நீ.. கேட்டது மனதில் வலித்தாலும் அதை கண்ணில் காமிக்காமல் நிற்க.. அவள் கடைசியில் சமையல்காரனாக்கி சென்றதை நினைத்து சிரிக்க ஆரம்பித்தான்.

அவன் சிரிப்புச் சத்தததைக் கேட்டும் எழுந்து வராமல் அங்கே அமர்ந்திருக்க, சித்தார்த் இருவருக்கும் காபிக் கலந்து எடுத்து வந்தவன்.. எஜமானி மா இந்தாங்க காபி எடுத்துக்கோங்க.. போலி பணிவாக குனிந்து கேலியாக சொல்ல..

அவளோ அவன் கேலிக் குரலைக் கண்டுக்காமல் இதை மாதிரி நேரத்திற்கு எனக்கு காபி டிபன் சாப்பாடு செய்து விடுங்கள்... எழுந்தவள் எனக்கான அறை எது.. அவன் முகத்தைப் பார்த்துக் கேட்க.. அவனோ கையைக் காமித்தான் எதிர் அறையை. அதுனுள் நுழைந்தவள், சாப்பாடு செய்துவிட்டு கூப்பிடுங்கள், சொல்ல... அவன் பார்வையைப் பார்த்தவள்.. வேகமாகக் கதவைச் சாத்திவிட்டாள்.

அவளுடைய சிறு பிள்ளை தனமான பேச்சைக் கேட்டவன்.
என் செல்ல சிட்டு... நான் யார் என்று அறியாமலே என்னை அதிகாரம் பண்ணுகிறாயே... மனதினுள்ளே கொஞ்சிக் கொண்டான். உன் பெற்றோர் மேல் இருக்கும் சினத்தை உன்னிடம் என்னால் காமிக்க முடியாதே... அந்த உண்மை அறியும்போது இதே சிறுபிள்ளையைப் போல பேசிச் சிரித்துக் கொண்டு இருப்பாயா... சிட்டுமா.. நினைத்தவன் முகமோ இறுகிப் போயிற்று ..



அடுத்த பகுதி போட்டு விட்டேன் படித்துப் பாருங்கள் தோழமைகளே 😍 😍 😍
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ணத்தின் வாசலிலே..

அத்தியாயம் 9

"வாசலில் வந்த தேவதை
இதயத்தினுள் அடியெடுத்து
வைக்க செந்தாழம்பூவாய்
மணம் பரப்பியதே!!!!!..


அறைனுள் நுழைந்தவளின் மனமோ படபடவென்று அடித்துக் கொண்டது. அதிகாரமா பேசினாலும் அவன் சிரித்தபடியே நடப்பதை வைத்து அவனைக் கணிக்க முடியாமல் திணறினாள் சித்ரமாலா..

கண்காட்சியில் சாந்தமா பேசியதும் ,போனில் திமிராக பேசியதும், இப்ப நக்கலும் கேலியுமாக பேசுபவனை என்ன செய்வது புரியவில்லை ...

அப்பா சொன்னதற்காக இவனை கல்யாணம் பண்ணிக் கொண்டோம் நினைக்கிறான்.. ஆனால் ஒரே நாளில் என் பெயரை செய்தித்தாளில் என் பெயரைப் போட்டு காதல் நிச்சயதார்த்தம் என் வாழ்க்கையை கையிலெடுத்து அவனே முடிவு எடுத்தற்கு வாழ்நாள் முழுவதும் இதற்கான தண்டனை அனுபவிச்சே ஆகணும்.. உயிரா வளர்த்த அப்பா, அம்மாவும் இல்லாமல், திருட்டுத் தனமா நடந்த கல்யாணத்தை நினைத்து மனம் வெம்பினாள்..

அப்பாவுக்கு அம்மாவுக்கு ஒரே பெண்ணான என் மேல் அளவுகடர்ந்த ஆசையும் பாசமும் அதிகமா வச்சு வளர்த்தவர்கள்.. அவர்களுக்கு என் கல்யாணத்தை எப்படி எல்லாம் செய்யலாம் கனவு கண்டார்கள் .. அத்தனையும் நிராசையாக்கிச் சித்தார்த் மேல் சினம் வானளவு உயர்ந்துக் கொண்டே போனது.

பல யோசிப்புகளோடு அமர்ந்தவளை கதவு தட்டும் ஓசைக் கேட்க, உடனே எழுந்து திறக்க கூடாது அமைதியாக அமர்ந்திருந்தாள் .

பலமாக தட்ட எழுந்து கதவைத் திறந்தவள், ''என்ன அலட்சியமான பார்வையில் வினாகுறியோடுப் ஏறிட,... அவன் முகமோ சிறு பதற்றத்துடன் இருப்பதைப் பார்க்க,

அவனோ, ''கதவைத் தட்டினால் உடனே திறக்க மாட்டியா,... இல்லைனா வரேன் குரலாவது கொடுக்கத் தெரியாதா'', சிறு கோபத்துடன் கேட்க...

''ஐ, இவனை பதட்டபட வைக்க நல்ல ஐடியா இது மனதில் நினைத்தவள்,.. ''நீ ,கேட்டதற்கு பதில் சொல்ல முடியாது திமிராகப் பார்த்தவள், அறையிலிருந்து வெளியே வந்தவள், நேராக டைனிங் டேபிளில் முன் நாற்காலியில் அமர்ந்தாள்.

அவள் பதிலே பேசாமல் தெனாவேட்டாக நடப்பதைப் பார்த்தவன், அப்பன மாதிரி அகராதிப் பிடிச்சவளா இருக்கா திட்டிபடி அவனும் சாப்பிட அமர்ந்தான்.

உடனே அவள் நாற்காலியை விட்டு எழ, ''ஏன், என்னாச்சு''..., கேட்டான் சித்தார்த்..

''உன்கூட உட்கார்ந்து சாப்பிட முடியாது... நா சாப்பிட்டதும், நீ சாப்பிடு, இல்லை எனக்குச் சாப்பாடே வேண்டாம் ..., கிளம்ப,

அவள் முகத்தைப் பார்த்தவனின் முகம் மாறி சட்டென்று ஓர் வலி தோன்றி மறைந்தது. எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட்டான்.

அவன் முகம் மாறியதைப் பார்த்தவள் அவன் வலியைக் கண்டதும், மனதினுள் ஏதோ செய்ய அப்படியே அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து வந்தவன், அவள் சாப்பிடாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், ஒன்றும் பேசாமல் அவள் முன் தட்டை வைத்து சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு ''சாப்பிடு, எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு''...., சென்று விட்டான்.

அவன் சாப்பிடாமல் சென்றது கஷ்டமாக இருந்தாலும், உணவை வீணாக்க கூடாது அதை சாப்பிட ஆரம்பித்தவளோ தனக்குப் பிடித்த மாதிரி இருப்பதை ஆச்சரியமாக எண்ணியவள் சாப்பிட்டு, அங்கே ஹாலில் அமர்ந்தாள்.

வெளியே சென்றவனின், மனமோ, இவளும் மாறிவிட்டாளே, அவ அம்மா மாதிரியே,.. சிறு குழந்தை இருந்த போது இருந்த தாய்மை குணம் வளர வளர மாறிவிடுமோ... இவ மனம் நோகக் கூடாது நினைத்தால் இவளால் இன்னும் அதிகம் காயப் படப் போகிறேன் போல.. முன்பு பட்ட காயமே ஆறாமல் ரணமாக குத்திக் குதறிக் கொண்டு இருக்க.. மீண்டும் காயப் பட போகிறனா.. இல்லை அவளை காயப்படுத்தி விடுவேனா மனதில் சிறு பயம் உண்டாக.. என் சிட்டுவை என்னால் காயப்படுத்த முடியாது.. அவள் புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறாள், என்னை யாரு தெரிந்தால் என் மேல் அடைத்து வைத்திருந்த அன்பை சாரல் மழையாகப் பொழிவாளா.. நினைத்தபடி காரில் சுற்றிக் கொண்டிருந்தான் .

இரவு நேரம் நெருங்க நெருங்க சித்ரமாலா, அவனைக் காணாமல் திகைத்துவிட்டாள். எங்கேப் போனான்.. சொல்லாமல் கொள்ளாமல் போனால்,'' என்ன, அர்த்தம், புது இடத்தில் தன்னந்தனியாக இருக்க பயமாக இருக்க.. ஹாலில் நடைப் பயின்றாள்..

இருக்கையில் அமரந்தும், நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தவள், அவன் வருகிறானா..., வாசலை எட்டிப் பார்க்கவும் தவறவில்லை .. மனமோ சஞ்சலத்தோடு அலைப் பாய்ந்தது .. தனியாக விட்டுவிட்டு அவன் போய் விட்டானா... நினைத்தவளின் விழியில் கண்ணீர் வழிந்தது.

காலமும் நேரமும் நமக்காக காத்திருக்காது, அது சுழன்றுக் கொண்டே தான் இருக்கும். நாம் தான் காலத்தின் பின் ஓடனும்.. இல்லை என்றால் ஓடியக் காலம் திரும்ப வராது.. அதை அறியாமல் இருவரும் தத்தம் நினைவுகளை அசைப் போட்டபடி இருந்தனர்.

நடந்து நடந்து ஓய்ந்துப் போனவள், அப்படி இருக்கையில் குறுகிப் படுத்துவிட்டாள் சித்ரமாலா.

வீடே இருட்டில் மூழ்கி இருக்க, காரிலிருந்து இறங்கிய சித்தார்த், விளக்கைக் கூட போட மாட்டாளா, .. இல்லை வீட்டை விட்டு போய்விட்டாளா, நினைத்தவனின் மனமோ பயத்தில் வேகமாக உள்ளே சென்று விளக்கைப் போட, அங்கே இருக்கையில் குறுகிப்
படுத்திருந்த சித்ரமாலாவைப் பார்த்ததும் காற்றுக்கே தவித்த இதயக்கூடு இதமாக மூச்சுவிட,
அவள் அருகில் போனான்.

இருக்கையில் குறுகிப் படுத்திருந்த சித்ரமாலாவின் கன்னத்தில் அழுத சுவடுகளோ கறையாகப் படிந்திருந்தது .. தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளைப் பார்த்து அங்கே இருந்த குஷனை தலைக்கு வைத்து உள்ளே இருந்து ஓர் போர்வை எடுத்துப் போர்த்திவிட்டவன்.. சிட்டு.. நீயும் மாறிவிட்டாயா.. என்னதா இருந்தாலும் அவர்களின் பொண்ணு தானே அந்த குணம் உனக்கு இருக்கதான் செய்யும். உதாசீன மாக பேசுவதும் மாறவா போகிறது .. ம்ம்... உன் மனதை நோகயடிக்கக் கூடாது நா நினைத்தாலும் நீயே என்னை அப்படி பேச வைத்து விடுவாயா, தோன்றுகிறது.. சிட்டு...அவள் எதிரில் அமர்ந்து பார்த்தபடியே மனதினுள் பேசிக் கொண்டான்.
.
அவளைப் பார்த்தபடி அமர்ந்தவன் அப்படியே இருக்கையில் சாய்ந்து உறங்கினான்...

நேரம் கடந்திட, இரவு பன்னிரண்டு மணிப் போல விழித்த சித்ரமாலா, குறுகிப் படுத்தால் காலை மெதுவாக நீட்டி மடக்கிப் பார்த்து எழுந்து அமர, அங்கே சித்தார்த் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவள் வேகமாக எழுந்துவிட்டாள்.

அவள் எழும் சத்தத்தில் விழித்த சித்தார்த்தின் பார்வையோ சித்ரமாலா மேலே இருக்க,

அவனின் வெறித்தப் பார்வையில் என்ன கண்டளோ தெரியவில்லை, .. சிறு குழந்தையின் பரிதவிப்பைக் கண்டவள், விதிர்விதிர்வித்துப் போனாள்.

அவன் முகத்தையைப் பார்த்தால் அவன் மேல் உள்ள கோபத்தின் அளவு குறைந்துவிடுமோ தோன்றியது சித்ரமாலாவிற்கு.. மனதில் சிறு பயம் தோன்ற திரும்பி வேகமாக அறையை நோக்கிச் செல்ல ..

ஒரு நிமிசம், சாப்பிட்டு போ, சொன்னவன்.. அங்கே டைனிங் டேபிளில் கடையில் வாங்கிய டிபன் இருப்பதைப் பார்த்தவள், வேண்டாம் தலையாட்டிவிட்டு வேகமாக கதவைச் சாத்திக் கொண்டாள்.

அதைப் பார்த்தவனோ, அவள் ''ஏன், இந்தளவுக்குப் பயந்து ஓடுகிறாள் நினைத்தவன்.. எதையோ நினைத்து கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தான். கல்யாணம் ஆகி இன்று தானே முதல் நாள்.. அதை நானே மறந்து விட்டேன். சிட்டு வீட்டிற்கு வந்து பல வருசம் ஆனதுப் போல இருந்தால் எனக்கு புதியதாக தெரியவில்லை போல, நினைத்தபடி தன்யறைக்குச் சென்றான்.

விடியலில் பறவைகளின் கீச்சொலியில் விழி விரித்தவளோ ,நம் வீட்டில் இந்த சத்தம் இருக்காதே.. டக்கென்று எழுந்து அமர்ந்தவள்... நேத்து நடந்து ஞாபகத்தில் ஓடியது..

புதிய இடத்திலும் சுகமாக தூங்கியதை நினைத்து ஆச்சரியத்துடன் எழுந்து சாரளத்தின் வழியே பார்க்க அங்கே உணவைத் தேடி பறவைகள் கூட்டைவிட்டுப் பறக்க, மலர்ந்த மலர்களின் வாசம் நாசியில் நுழைய ஆழ்ந்து சுவாசித்தவள், காலை வேலைகளை முடித்தவள் , வெளியே வந்தாள். அங்கே முன்னறையில் இருக்கையில் அமர்ந்தபடி எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

அவன் எதிர் இருக்கையில் அமர்ந்தவளோ அவனை உற்றுப் பார்க்க, உணர்ந்தவனோ.. காலையில் மலரும் ரோஜா மலராய் இருந்தவளைப் பார்த்தவன், எதுவும் பேசாமல் எழுந்து கிச்சனுள் நுழைந்தான்.

அவன் அமைதியாகச் சென்றது மனதை உறுத்தினாலும், அதைக் கண்டுக் கொள்ளாமல் இருக்க, உள்ளே போனவனோ அவளுக்குரிய காபியைக் கொடுத்துவிட்டு அவள் எதிரில் அமர்ந்து "உன்னிடம் பேச வேண்டும் சித்ரமாலா ."

''காபியைக் குடித்து முடி நான் காத்திருக்கேன் ,சொல்ல..

ருசியறியாதமலே காபியைக் குடித்தவள் அதை டைனிங் டேபிளில் வைக்கப் போனவள், நேத்து காலையிலிருந்து அவன் சாப்பிடாமல் அத்தனையும் அங்கே வீற்றிருக்க.. அவன் சாப்பிடவே இல்லை போல .., சாப்பிட்டா சாப்பிட்டும் இல்லை பட்டினியா கிடக்கட்டும் .. வீம்புடன் மீண்டும் அவன் எதிரே வந்து அமர்ந்தவள்... ''எனக்குப் பசிக்கது, வேலையைப் பார்க்காமல் என்னிடம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு...அதை விட உன்னிடம் பேச எனக்கு இஷ்டமில்லை .. தேவையில்லாமல் பேசறேன் நேரத்தை வீணாக்க வேண்டாம் .. எப்ப என்னை ஏமாற்றிக் கல்யாணம் பண்ணியோ அப்பவே நீ எவ்வளவு பெரிய ஓவியனாக ,அப்படக்கரா இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை ,''நீ ஏமாற்றுக்காரன்.. சொல்லியவள் தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டாள்.

அவள் பேசியதைக் கேட்டவனோ திரும்பவும் மனதில் அடிவாங்கினான். தன்னை மதிக்காமல் ஏமாற்றுக்காரன் சொல்லி அவள் எழுந்துச் சென்றதை எண்ணி இறுகிப் போனான் சித்தார்த்.




அடுத்த அத்தியாயம் போட்டு இருக்கேன் தோழமைகளே படித்துக் கருத்துக்களை கூறுங்கள் 😍 😍 😍
 
Top