All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வாழ்க்கை வாழ்வதற்கே !

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூஜ்யமான தேடல்


நட்சத்திரங்கள் அற்ற இரவில்
மழை பொழியெல்லாம் என காத்திருந்தேன்..
மூன்று தெரு விளக்குகள் ..
இரு விழிகள் இரு இதழ்கள்
ஒரு பார்வை ஒரு சிரிப்பு
அரை துளி தூறல்
பூஜ்யமானது தேடல்...!


படித்ததில் பிடித்தது
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலங்களின் தேடல்

வாழ்க்கையின் இனிய நிகழ்வுகளை தொகுத்து தருவதே நினைவுகள். அந்த நினைவுகள் ஒவ்வொன்றும் காலம் தந்த பொக்கிஷங்கள். அந்த ஒவ்வொரு நொடியின் ஒரு இனிய தேடல் தான் இந்த ………….
“நினைவுகளின் தேடல்”
சிறு வயது நினைவுகள் என்றும் சிறியவையாக இருந்தாலும் அதன் மதிப்பு என்றும் தனி தான்.. 3 வயது வரை புரியாமல் விளையாட்டாக செல்லும் வாழ்க்கை, அர்த்தம் பெற தொடங்கி விடுகிறது பள்ளிக்கு செல்ல தொடங்கியதும்!

சற்று விளையாட்டாக தொடங்கினாலும், ஒவ்வொன்றும் வாழ்க்கையின் பாடங்கள் தான் 5 வயது முதல் 12 வயது வரை நடக்கும் நிகழ்வுகள் சிறியதாக இருந்தாலும் நட்பையும், ஆசிரியர்களையும் மறக்க இயலாது.
நாமாக தேடிய முதல் உறவு(நட்பு), வாங்கிய முதல் அடி, குழந்தை தனமாக நாம் செய்த குறும்புகள் இவை எல்லாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அடையாளங்கள்.

டீன் ஏஜ் பருவம் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. வாழ்க்கையை நிர்ணயிக்கும் பொது தேர்வு, நமது அன்பினை சோதித்து பார்க்கும் ப‌ல நிகழ்வுகள், கனவுகளை நினைவாக்கும் சில தருணங்கள், என யுகிக்க முடியாத பல திருப்பங்கள்.. என ஒவ்வொன்றும் அழகான தருணங்களை தேடுவது தான் இந்த தேடலின் தேடல்.
-தேடல் தொடரும் ……………[படித்ததில் பிடித்தது]
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவசியமான தேடல்கள்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி இயற்ற ரசனை அவசியம்


விரிகின்ற தோகை
வளர்கின்ற விடியல்
மலர்கின்ற இதழ்கள்
நினைக்கின்ற காதல்

நிஜ வாழ்வில் கவிதை....!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலில் அவசியம்

மறுத்திடும் வார்த்தையை நீ மறந்தால்
சிரித்திடும் மனதிற்கு தடையில்லை
விரும்பிட நிபந்தனை நீ விதித்தால்
காதல் கொடுத்து வாங்கும் கடனில்லை

மனதை ஈர்க்கும் ஒரு விஷயம்
பெண்ணிடம் கண்டால் அது வசியம்
காதலில் கூடாது ரகசியம்
காதல் பிரியாமல் இருக்க அவசியம்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது அவசியம்?
கல்வியா? செல்வமா?
அன்பா? காதலா?
வீரமா? விவேகமா?
நீதியா? நேர்மையா?
நீரா? நேருப்பா?
பண்பா? பாசமா?
பணமா? பதவியா?
சோகமா? சந்தோசமா?
மகிழ்ச்சியா? துன்பமா?
அமைதியா? நிம்மதியா?........

இப்படி பல தரப் பட்டவை நம் முன் இருக்கலாம். அதில் நாம் எதை தேடி ஒடுகின்றோமோ அதன் மேல்தான் நம் வாழ்வின் சந்தோசமும், நிம்மதியும் இருக்கிறது என்று உணர்ந்து விட்டால். அவசியமானதைத் தான் தேடுவோம்.


தேடல் அவசியமாகும் போது அது சுகமானதுதான்.


உணவுக்காக உழைப்பவனின் தேடல்,
உயர்வுக்காக படிப்பவனின் தேடல்,
உரிமைக்காக எதிர்பார்பவனின் தேடல்,
உலகுக்காக வாழ்பவனின் தேடல்,

அன்புக்காக அலைபவனின் தேடல்,
அமைதிக்காக போரடுபவனின் தேடல்,
அறிவுக்காக படிப்பவனின் தேடல்,
ஆத்மதிருப்திக்கான ஆன்மாவின் தேடல்,

முடிவில்லா தேடல் இது!
அழிவில்லா தேடல் இது!

நன்றி
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கற்பனை உலகம்...!
வணக்கம் தோழிகளே...! இனிய காலையில் கற்பனை என்பது சோம்பேறித்தனமா..? என்ற கேள்வி எழும் போதே...அதற்கு விடையும் கிடைக்கின்றது. அலசலாம் வாருங்கள்.

1536558742858.png
படத்தில் கதிரவனின் கவிதை...

மனம் எல்லா உலகையும் வலம் வர ஆசைப் படுகின்றது. ஆம்...

ஆசைகள் இல்லா மனங்கள் எங்கே? - அதன்
ஓசைகள் எல்லாம் முழங்கும் சங்கே!

மனத்தின் ஆசைகள் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருந்தாலும் விடா முயற்சியில் முடியும் ஒன்றே!

அறிந்தவன் வெல்வான்,
அறிவாயோ மானுடனே...!


பணம் பணம் என்று அலைபவன் அதை செலவளித்து அனுபவித்தானா என்றால்... கிடைக்கும் விடை எதிர்மறையே!

பணத்தை முடக்கி முடக்கி, பயத்தை வளர்த்து, நிஜத்தில் தவித்து நிழலில் சாகின்றான் என்பதே விதி.

புரிந்து கொண்டு புணர் ஜென்மம் கொண்டால் ஜெயித்திடுமே அவன் மதி.


கற்பனைக்கு எங்கும் எதிலும் புகுந்திட ஆசை....

அருமையான வரிகள், நிஜத்தில் சாத்தியமாகா விஷயம் கூட கற்பனையில் இனிக்கும் உண்மையே.
கற்பனை என்ற ஒன்று வருவதனால் தான் மானுடம் உயிக்கின்றது. இன்று இல்லாத ஒன்று நாளை கிடைக்கும் என்ற நம்பிக்கையை கொடுப்பது கற்பனா சக்தியே.

கற்பனை விவேகமே...!

கற்பனை வளமே கவிதைக்கு வரமே..!

கவிதை பொழிந்தால் தான் காவியம் சிறக்கும்... காப்பியம் ருசிக்கும்.

1536558636457.png
இந்த நாள் நம் கற்பனை உலகில் நிஜத்தின் தீர்வு காண என் இனிய வாழ்த்துக்கள் நன்றி.
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெண்மை இல்லாத உலகம்....!

1536558568129.png


வணக்கம் தோழிகளே...

பெண்கள் இல்லாத உலகம்,
கண்கள் இல்லாத உலகம்!
பெண்மை இல்லாத உலகம்,
மேன்மை இல்லாத உலகம்!

நினைத்துப் பார்க்க முடிகின்றதா? பெண்கள் இல்லாத உலகத்தை... நினைக்கவே பயமாக இருக்கிறது பெண்களுக்கே..., என்றால் மற்றவரை என்ன சொல்வது.

பெண்ணே! நீ இல்லாத உலகில்,
தாய்மையே இல்லை!

பெண்ணே! நீ இல்லாத உலகில்,
பெருமையே இல்லை!

பெண்ணே! நீ இல்லாத உலகில்,
இனிமையே இல்லை!

பெண்ணே! நீ இல்லாத உலகில்,
பெண்மையே இல்லை எனில் ....
எதுவுமே இல்லை...!

தாய்மை இல்லாமல் தாயாகலாம்...
தாய்மையின் உணர்வு இல்லையேல் பெண்ணே இல்லை...!

பெருமை இல்லாமல் உலகை ஆளலாம்....
பெருமிதம் இல்லாமல் கருணை பிறக்குமா...?
பெருமையாக போற்றுபவர் அன்னையே...! நீ இல்லையேல் உலகேது....!


பெண்மை இல்லாமல் .......

பெண்மை என்பது என்ன? இதுவே கேள்வி இங்கே....

ஆம் , பெண்மை என்பது பெண்ணின் உடல் சுகமா? பெண்ணின் கற்பா? இப்படி பல கேள்விகள் நம் முன்னே....

பெண்மை என்பது மென்மை
அன்பில் தேடும் அடைக்கலம் அவள்!

பெண்மை என்பது மேன்மை
பணிவில் நாடும் படைக்களம் அவள்!

பெண்மையே, உன் மென்மையும் மேன்மையும் சேரும் படையில் வெற்றி அன்றி தோல்வி என்பது ஒரு நாளும் இல்லை.


மென்மை என்றவுடன் அடக்கம் என்று குமுறவேண்டாம், அதை அன்னை தெரசாவின் அன்பில் காணுங்கள்!

மேன்மை பணிவு என்றவுடன் முழக்கம் வேண்டாம், அதை பண்பின் பணிவில் அன்னையின் நிமிர்ந்த பாச அரவனைப்பில், தெளிவில் காணுங்கள்!

பெண்கள் இல்லாத உலகில் அழகில்லை என்பதை விட பெண்மை இல்லாத உலகில் எதுவுமே இல்லை என்ற வாசகம் உண்மையானது.

பெண்மையே நீ ஜெயித்திட்டால் உலகமே ஜெயிக்கும் என்ற மந்திரம் உலகம் உய்ய வழி காட்டட்டும். வாழ்த்துக்கள் நன்றி.
 
Top