All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"விழிகள் தீண்டாயோ" புத்தக திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனம் நிறைந்த மகிழ்சியும் வாழ்த்துக்களும் .....
எழுத்துலகில் அடுத்த மையில் கல் ,மேன்மேலும் எழுத்து பணி தொடரவும் ,இந்த சந்தோக்ஷகாற்று உன் மனதில் என்றும் நிலைக்கவும் இறைவனை வேண்டுகிறேன் அன்புத்தோழியே. 😍😍😍😍😍😍😍😍😍😍😍
மிக மிக நன்றி மா.. மிகவும் சந்தோசம் மா..😍😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ma
Senthoor திரும்பவும் எங்களல்லாம் சந்திக்க வராரு 😍😍😍😍😍
Best wishes maa......
மிக மிக நன்றி டியர்..உங்கள் எல்லார் ஆதரவும் கண்டிப்பாக கொடுங்கள் மா..😍😍😘😘
 

வாசுகி

Bronze Winner
மிக மிக நன்றி டியர்..உங்கள் எல்லார் ஆதரவும் கண்டிப்பாக கொடுங்கள் மா..😍😍😘😘
கண்டிப்பா எங்க ஆதரவு உங்களுக்கு எப்பவும் இருக்கு அருணாக்கா😍....
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Congrats sis... God bless u. Hard work never fails... More and more victories yet to come. Luv u sis.
Thanks a lot dear.. very happy for ur words ma..😍😍😍🤩🤩😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Congratulations.... மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்....
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ் ,

"விழிகள் தீண்டாயோ" இன்று வருகிறது என்று கூறி இருந்தேன் செல்லங்களா.. புத்தகம் வரும் பத்தாம் தேதி முதல் கிடைக்கும் மா..

நம்ம செந்தூர் பாண்டியனுக்கு ஒரு டீஸர் இறக்கலாமான்னு யோசிச்சப்ப அவன் பிள்ளை மண்டையை கொடஞ்சுட்டான் மக்களே.. அதனால் அவனுக்கு டீஸர் எழுதிட்டேன்..

இதோ பாண்டியன் மகன் சரவணன் டீஸர் உங்களுக்காக.. யாருக்கெல்லாம் பாண்டியனின் இன்ட்ரோ ஞாபகம் இருக்கு செல்லங்களா.. சரவணன் எப்படி இருக்கான் எல்லாம் சொல்லுங்கோ..

கதையின் பெயர்: காற்றில் கனிந்த கனியமுதே

***********************************



அந்த வறண்ட நிலத்தில் நின்றிருந்த இருவரில் ஒருவனின் குரல் வெகு எகத்தாளத்துடன் ஓலித்து கொண்டிருந்தது..

"அந்த ஆள் இந்த ஊருக்கு புதுசு தான் யா.. நீ கவலை படமா இரு.. நான் ஏமாற்றி வித்து கொடுத்துறேன்.." என்று எதிரில் பயந்து கொண்டு நின்றுகொண்டிருந்த நில உரிமையாளருக்கு அவன் ஆறுதல் கூற

அவரோ "இப்படி ஒண்ணுமே இல்லாத வறண்ட நிலத்தை போய் விவசாய நிலம்னு பொய் சொல்லி விக்கிறது தவறில்லையா யா.. நான் உன்னை சும்மா தானே விக்க சொன்னேன்.. நீ எதுக்கு பொய் சொல்லி ஒரு ஆளை கூட்டிட்டு வந்த.. ஏதாவது பிரச்சனைஆகிட போகுது யா.." என்று அவர் மேலும் பயந்தார்

"அட சும்மா பொலம்பாத யா.. பொய் சொல்லாம பொழப்பு நடத்த முடியாது.." என்று அசால்டாக அவன் கூறிய அடுத்த நிமிஷம் அவன் முதுகில் மிக பெரிய இடி இறங்கியது..

அதன் பலம் தாங்காமல் இரண்டடி தள்ளி போய் தரையில் விழுந்து புரண்டான் அந்த நில தரகர் முதுகு தண்டுவடத்தில் எழுந்த உச்சகட்ட வலியை முயன்று கட்டுப்படுத்தி கொண்டு திரும்பி பார்க்க, அங்கு மீசையை முறுக்கியபடி ஒரே நேரத்தில் தங்கள் வேஷ்டியை மடித்துக்கட்டி கொண்டு நின்றிருந்தனர் சரவணனும், செந்தூர் பாண்டியனும்..

தனக்கு முன் அய்யனார் போல் நின்றிருந்த இருவரையும் பார்த்தவனுக்கு பயத்தில் முதுகுதண்டு சில்லிட்டது..

பாண்டியன் திரும்பி சரவணனை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்க்க அவன் பார்வையை புரிந்துகொண்டவன் நிதானமாக அந்த தரகர் அருகில் சென்றான்..

அவன் புறம் குனிந்தவன் கண்கள் தீ ஜுவாலையாக ஜொலித்து கொண்டு இருந்தது..

"ஒரு முறை சொன்னால் உனக்கு புரியாதா..?" என்று கர்ஜனையாக கேட்டவன் ஓங்கி ஒரு அறை அறைய, அந்த தரகரின் இரண்டு பற்கள் தெறித்து விழுந்தது..

"ஐயோ மன்னிச்சுருங்க தம்பி.. நீ.. நீங்க.." என்று திக்கி திணறி அடி தாங்க முடியாமல் அவன் திணற

"நா.. நா.. நான் வெளிஊர் போனவன் எப்படா வந்தேன் என்று தெரிய வேண்டுமா...?" என்று அவனை போலவே நக்கலாக கேட்டான் சரவணன்..

அதில் அவன் அதற்கு மேல் பேச முடியாமல் பயத்துடன் விழிக்க "நீ ஒருவனை ஏமாற்ற நினைத்தாயே அவன் எங்களிடம் வந்து உன்னை பற்றியும், இடத்தை பற்றியும் விசாரித்தான்.. நீ மாட்டிக்கிட்ட.. சிம்பிள்.." என்று சிறு கிண்டலுடன் கூறிவிட்டு எழுந்துவிட்டான் சரவணன்

அவன் எழுந்ததும் அந்த தரகரும் தட்டு தடுமாறி எழுந்துகொள்ள, இப்போது சரவணன் முகம் மீண்டும் ஜொலித்தது கோபத்தில்..

அவன் தோள்களை இருக்க பற்றியவன், "இதோ பார் உனக்கு கடைசி எச்சரிக்கை.. அதுவும் உன் குடும்பத்திற்காக தான்.. இனி ஒரே ஒரு முறை நீ இப்படி ஏதாவது ஏமாற்று வேலை செய்தாய் என்று தெரிய வந்தது , அந்த நொடியில் இருந்த நீ இந்த ஊர் பக்கம் தலை வைத்து கூட படுக்க முடியாது.. புரிந்ததா.." கண்கள் சிவக்க அழுத்தமாக கம்பீரமான குரலில் கேட்டவன் சொற்களை மீற அதற்கு மேல் தைரியம் வந்து விடுமா என்ன..

அவன் இந்த முறை மன்னித்ததே பெரிதல்லவா..

"கண்டிப்பா மாட்டேன்.. தம்பி நீங்களும் மன்னிச்சுருங்க அய்யா.." என்று சரவணனிடம் மன்னிப்பு கேட்டவன் தொடர்ந்து பாண்டியனிடமும் கேட்டான்..

அவனை உறுத்து விழித்த பாண்டியன், "போய் தொலை.." என்ற ஒற்றை சொல்லோடு விட்டுவிட்டான்..

அவன் சென்றபின் இருவரும் நில சொந்தக்காரனிடம் திரும்ப, இது வரை நடந்ததை பார்த்ததிலேயே நடுங்கி இருந்தவன் "அய்யா எனக்கு ஒன்னும் தெரியாது யா.." என்று கதறி விட்டான்

அதில் இருவரும் அவனை கூர்ந்து பார்க்க, "தெரியும்... அதனால் தான் நீ பிழைத்தாய் ஓடு.." என்று சரவணன் கூற அந்த ஆளும் விட்டால் போதும் என்று ஓடி விட்டான்..

இருவரும் திரும்புகையில், "ஐ சூப்பர்.." என்ற குழந்தையின் குரல் இவர்கள் கவனத்தை ஈர்த்தது..

பாண்டியன் ஒரு சிறு சிரிப்புடன் இவர்களை கடந்தும் சென்று விட, சரவணன் ஒரு நொடி நின்று அந்த குழந்தையை பார்த்தான்..

அதற்குள், "ஸ்ஸ் குட்டி.. சும்மா இரு.. என்னதிது.." என்று குழந்தையை தூக்கி கொண்ட பெண்ணின் கண்கள் சரவணனை பார்த்து

"ரவுடி.. " என்று மெதுவாக முணுமுணுத்தது

அவள் முணுமுணுப்பை சரியாக கணித்துவிட்டவன் நேராக அவள் அருகில் சென்றான்..

அவன் பக்கத்தில் வருவதை பார்த்து அந்த பெண் பின்னால் நகர, மீசையை ஒற்றைவவிரலால் முறுக்கி கொண்டே அவளை நெருங்கியவன் அவள் புறம் குனிய,அவள் முகம் பயத்தில் வெளிறியது..

அதை ஒரு திருப்தியுடன் பார்த்தவன் குழந்தையின் கன்னத்தை லேசாக தட்டிவிட்டு நிமிர்ந்து அவள் கண்களை பார்த்து "ரௌடியே தான்.. பார்த்து இரு.." என்று சிறு கிண்டலுடன் கூறி கண்ணடிதான்...

அதற்குள் "சரவணா.." என்று பாண்டியன் குரல் கொடுக்க, திரும்பி சென்றுவிட்டான் சரவணன்..

அவன் சென்றதும் தான் நிம்மதியாக மூச்சு விட்டவள் "சரியான ரவுடி" என்று மீண்டும் முணுமுணுத்துவிட்டு சென்றுவிட்டாள் ..

*************

வீடே அன்று அத்தனை அலங்காரத்துடன் கோலாகலமாக இருந்தது..

அன்று சரவணனுக்கு நிச்சியதார்த்தம்.. அவனுக்கும் அவன் அத்தை மகள் துர்காவிற்கும் தான் நிச்சியம் நடக்க இருந்தது..

துர்க்கா கார்த்திக் மற்றும் பாண்டியன் தங்கை துளசியின் ஒரே செல்ல மகள்.. சிறு வயதில் இருந்தே அனைவருக்கும் அவள் செல்லம்.. சரவணனுக்கு துர்கா என்றால் மிகவும் பிரியம்..

அவள் முகம் வாடாமல் விவரம் தெரிந்த நாளில் இருந்து பார்த்து கொண்டவன் அவன்..

கார்த்திக் துளசி துர்க்கா எல்லாரும் அப்போது தான் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்தனர்..

"மாலை நிச்சயத்திற்க்கு இப்ப தான் வராங்க கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.." என்று புலம்பி கொண்டே அன்பரசி வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள்..

இரண்டு நாட்கள் முன் வரவேண்டியது.. கார்த்திக்கின் கடைசி நிமிச வேலையாள் தாமதமாகி விட்டது என்று அவன் ஏற்கனவே பலமுறை கூறி இருந்தும், அன்பரசி ஆதங்க பட்டுக்கொண்டு தான் இருந்தாள்..

அணைத்து வேலைகளையும் வேகமாக நடந்துகொண்ருக்க அதை மேற் பார்வை பார்த்துக்கொண்டிருந்த பாண்டியனின் போன் அடித்தது..

அதை எடுத்து பேசியவன் முகம் அதிர்ச்சியில் பேய் அறைந்தது போல் மாற , அந்த நொடி அதிர்ச்சி நீங்கியதும் "ஐயோ.." என்ற கதறலுடன் போனை தவற விட்டான் பாண்டியன்..

அவன் கதறலில் மொத்த குடும்பமும் அங்கு கூட, அப்போது தான் கீழே இறங்கி வந்த சரவணனன் வேகமாக வந்து தந்தையை தாங்கினான்..

"அப்பா... அப்பா.. என்ன ஆச்சு பா.." என்று அவன் பதட்டத்துடன் கேட்க

"கார்த்திக் வ.. வந்த வண்டி விபத்தாகி விட்டதாம் பா.." என்று திக்கி திணறி கூறினான் பாண்டியன்..

அதில் அனைவரும் அதிர்ந்து விட்டனர்..

"அப்பா யா.. யாருக்கும் ஒன்றும் இல்லையே.." என்று சரவணன் நடுக்கத்துடன் கேட்க

அவனை கலங்கிய கண்களுடன் பார்த்தவன் "துர்கா.. துர்கா.. நம்மை விட்டு போயிட்டாலாம் டா.." என்றதோடு அதற்கு மேல் பேச முடியாமல் சரிந்து அமர்ந்துவிட்டான் பாண்டியன்..

சரவணனுக்கோ யாரோ தலையில் பெரும் இடியை இறக்கியது போல் இருக்க,அப்படியே உறைந்து நின்று விட்டான்..
 
Top