All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Umamanoj

New member
ஸ்ரீ எப்போதும் உங்கள் கதை புத்தகமாத்தான் படிப்பேன்..இந்த கதை ஆன்லைனில் மிகவும் படிக்கத் தூண்டக் காரணம் கதை தலைப்பு தான்..வாவ்..எங்கே இருந்து பா செலக்ட் பண்ணி எங்களை கவர்ந்து இழுக்கிறீங்க..😀

அந்திரன் பெயருக்கு ஏற்றாற் போல தேவன் வேடன் கடவுள் எனச் சொல்லலாம்..அவன் எப்படி இருந்தாலும் நமக்கு பிடிக்கும்.. நம்ம டிசைன் அப்படி 😂😂

மாமி என்று நீங்க கதை எழுதினாலே சும்மா அசத்தறேள் போங்கோ..ஒரு அக்காரவடிசல் பார்சல் உங்களுக்கு 😍😍

வேடன் அந்திரன் பிளாஷ்பேக் நிச்சயம் எதிர் பார்க்கலை..மனதை தொட்டுவிட்டது 😢
தேவன் அந்திரன் மகா இடம் காட்டும் மறுகுணம் அருமை 👌
கடவுள் பாதி மிருகம் பாதி அந்திரன் அபி இடம் காட்டும் குணம்,ஒரு பக்கம் ஐயோ சொல்ல வைக்குது மறுபக்கம் ஆஹா சொல்ல வைக்குது..👌😀

கெளசிக் காதலித்தது அபிக்கு தெரியாது. அந்திரன் செயல் கார்த்திக்கு தெரியாது.அந்த கடைசி அத்தியாய பத்தி வரிகள் படிக்க நன்றாக இருந்தது.. சிலது சிலரிடம் மறைத்து ஆக வேண்டிய கட்டாயம் வாழ்க்கையில் ஒத்துப் போகுது..அனுபவம் ஏற ஏற எழுத்திலும் பண்பட்ட பக்குவம் ஸ்ரீ 👌

அந்திரன் வேடனாகவும் தேவனாகவும் உருமாற்றி படைத்த கடவுள் ஸ்ரீ வாழ்க உங்கள் எழுத்துப்பணி வளர்க எங்கள் படிக்கும் பணி😍😍😍
@ஸ்ரீகலா
 

ஶ்ரீகலா

Administrator
சிலர் கேட்டு கொண்டதற்கிணங்க வரும் வெள்ளிக்கிழமை வரை கதை தளத்தில் இருக்கும் படிக்காதவங்க படிச்சுக்கோங்க பிரெண்ட்ஸ் 🙏🙏🙏
 
Hi Mam,
Eppovum pola unga kadhaiyila mayangitten. rombha azhalga yosichu hero oda peyara choose panni irukinga. Azhluthamana , aathmathmana kadhal. correct ah solli irukinga kadaisila silla unmaigal theriyama irukkardhu nalladhunu. kadisil pona podhum nu kutti romance vechi irukinga ana kadhol oda thavippa , thakkama unarthi irukinga. kudos to you mam.
 

ஶ்ரீகலா

Administrator
‘அழகியின் அந்திரன்’ உங்களது அபிமான அந்திரனரசன் & அபிராமிவல்லி இப்போது அமேசானில்... அமேசான் அக்கவுண்ட் இருப்பவர்கள் படித்து மகிழுங்கள் 😍😘

India link :

US :

D9DCE52A-6C4C-46A6-96AC-6DBA0C620812.jpeg
 

CRVS2797

New member
அழகியின் அந்திரன்
அத்தியாயம் - 1 (பார்ட் -1)

அபிராமவல்லி....!
உலகுக்கெல்லாம் படியளப்பவளே அவள் தான்...!
அதேப்போல் இங்கேயும் ஒருத்தி
ஊறுகாய், பலகாரம் மசாலப்பொடி,.. டிபன், சாப்பாடுன்னு.. இங்கும் ஒருத்தி அதையேத்தான் செய்கிறாளோ...!

அந்தினரசன்.....! சந்தியா கால அரசனே இவன் தானோ....! அல்லது அந்த ஈசனுக்கே அப்பன் ஆனவன் இவன் தானோ...??? நேரத்தை கூட பெண்ணிடம் அடகு வைக்க மாட்டானாம்... ஹாட் ட்ரிங்க்ஸ் பழக்கமும் கிடையாது, தன்னை வசம் இழக்க வைக்கும் எந்தவித பழக்கத்தையும் தன்னருகில் அண்டவிட்டதும் கிடையாதாம்.
அப்பப்பா....! பட்டியலின் வரிசை நீண்டு க் கொண்டே போகிறதே..!!! இவன் பெயரைப் போலவே இவனும் வித்தியாசமானவன் தானோ...!

"சீறும் பாம்பையும்....
சீண்டும் பெண்ணையும் தானே நம்பாதே" என்று சொல்லுவார்கள்....!
ஆனால், இங்கு இவனல்லவா தன்னைச் சீண்டுபவர்களையும், தன்னை நோண்டுபவர்களையும் பதம் பார்க்காது வதம் செய்கிறான்.

இத்தகைய தந்திரமும், மந்திரமும் செய்பவனையும்.. செயலற்றுப் போகும்படி செய்யும் அந்த மாயவன்(ள்) முன் இவன் என் செய்வானோ...??!!!
:unsure::unsure::unsure:
CRVS (or) CRVS2797
 

Vaishanika

Bronze Winner
வாவ் வாவ் வாவ் சூப்பர் ஸ்டோரி
Sri மேடம்.🤩🤩🤩🤩🤩🤩🤩💐💐💐

எப்பவும் போல எங்களுடைய மனசை கொள்ளை அடிச்சிட்டீங்க.

காதல் எந்தவிதமான தவறுகளையும் மன்னிக்கும் தவறான பாதையை மாற்றும்.
அன்பு ஒன்றே இந்த உலகில் பிரதானம் என்பதை உங்களின் நடையில் சொன்னீர்கள்.
அபி அரசன் கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று சளைத்ததுதில்லை.
அந்த அம்பாளின் பெயருடைய கதாநாயகியை கருணைமிக்கவளாகவும் அன்னபூரணியாகவும் , பாசமிக்கவளாகவும் கொண்டு சென்றது சூப்பர்.

அரசனை தான் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டு
சொல் பொறுக்காத குணம் கொண்டவனாகவும் ,அதற்காக எல்லை மீறி பாவபுண்ணிய நியாய தர்மத்தை கவனியாத செயல் , அர்ச்சுனன் இலக்கு போல குறி தவறாது தாக்குவதில் வல்லமை, பாசத்திற்காக தன்னிலையிலிருந்து கீழிறங்கி வேலை செய்து செயலை முடிப்பதென்று தன்னை தானே உருவாக்கிக் கொண்ட அரக்கன்+ தேவனாக ஹீரோ பாத்திரம் சூப்பர்.

மற்ற கதாபாத்திரங்களும் சுவாரசியமாக இருந்தன.
முக்கியமா கௌஷிக் பாத்திரம் பிரதிபலன் எதிர்பாராதது.

எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. :smiley37::smiley37::smiley37:
 
Top