All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

அரசுவின் அரசியானால் அபி.,...
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
அருமையான கதை வாழ்த்துக்கள் சகோதரி :love::love::love::love:
 
மிகவும் அருமையான கதை....உங்களுடைய மற்ற கதைகள் எத்தனை முறை படித்தாலும் சலிக்காது...பிற கதைகளைப் போல் இக்கதையிலும் கதையும் மாந்தர்களும் மிக நேர்த்தி....இரவு வந்தவுடன் கண்கள் உங்களை பதிவை எதிர்பார்க்கிறது....கொஞ்சமும் ஏமாற்றாமல் தினமும் பதிவு தந்தமைக்கு நன்றி.... அபியின் தூய உள்ளத்திற்கு அந்திரன் மனம் திருந்தியவுடன் சேர்ந்தது மனதிற்கு இதம் சேர்த்தது....அடுத்த கதைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...
 
அழகியின் அந்திரன்....
ஆசிரியர் ஶ்ரீ கலா.....
அழகி _அபிராமி வள்ளி
அரசன் _அந்திரனரசன்

அழிப்பவனும் அவனே அரவணைப்பவனும் அவனே
வேடனும் அவனே
தேவனும் அவனே.....

வேடனிடம் மாட்டிக்கொண்ட விறலி மானாய் ஊடலும்
தேவனிம் மஞ்சம் புகுந்த தேவியாய் காதலும்.....

கார்த்திக் மகாலட்சுமி
மகனின் காதலை தள்ளி வைத்து மருமகளை ஏற்றுக் கொள்ளாத மனம் வெறுத்த அப்பா ....

அன்னையின் இறப்புக்கு காரணமாய் போக
அவர்களை விட்டு தனியாக வாழும்
கார்த்திக் மகாலட்சுமி....

மகாலட்சுமியை சொல்ல முடியாத வார்த்தைகளால்
மாமனாராக வாய் விட்டுவிட மனதின் விரக்தியில் உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மகாலட்சுமி....

தங்கையின் வாழ்வுக்காக தங்கையை நிரூபிக்க தானே களத்தில் இறங்கும்
தமையன் அரசன்....

அறிமுகம் இல்லாத நபரிடமும் அன்பை காட்டும்
அழகி அபிராமிவள்ளி....
அன்பும் அமைதியும்
அவளின் இரு கண்கள்...
அவளின் வார்த்தைகள் அமிர்தம்
அடங்கி செல்வதே அவள் சுபாவம்
அக்காரவடிசலும் துளசியின்மணமும்....நம்மை ஈர்க்கிறது....

மானை வேட்டையாட வந்த வேடன் மானின் அன்பிலும் அனுசரிப்பிலும்
அவள் பால்
அவன் மனம் சென்றிட அவனையும் அறியாமல்
அவள் மேல் காதல் கொள்ள அவளையும் காதலிக்க வைத்து அவன் படுத்தும் பாடு
ஆயிரமாயிரம்....🤩🤩🤩🤩

அபிக்கு ஆதரவாக
அவளுடன் நட்பாக பழகும் கௌஷிக் 💐சரண்....
இருவரின் நட்பும் புரிதலும் அபாரம்......💐💐💐💐

கௌஷிக் 💕சுபலட்சுமி
அரசனின்
அத்தை பெண்ணாக சுபலட்சுமி அபிக்காக சுபலட்சுமி
அரசின் வாழ்வில் இருந்து அகற்ற அவளை சீண்டிக்கொண்டே செல்வதும் .....
அவனையும் அறியாமல் அவளுக்குள் புக
அவளின் காதலில்
அவன் தள்ளி நின்றாலும்
அரசன் அவர்கள் இருவரையும் பந்தத்தில் இணைக்க
அழகான ஒரு காதல்
கல்யாணத்தில் தொடங்குகிறது....

அகிலா💕 சரண்...
அகிலாவின் பொறாமை குணமும் அவளின் பேராசையும்
அபியிடம் எப்பொழுதும் முட்டிக் கொள்வதும்
அவளை எதிரியாய் எப்போதும்
அபிக்கு தொந்தரவு தருவதும் அரசனின் விழியில் தப்பாமல் அகிலாவிற்கு சரியான தண்டனை கொடுத்து
அவளுக்கும் ஒரு வாழ்வு அமைத்துக் கொடுக்கும்
அரசன் மாமனாய் அருமை....
அகிலாவை திருமணம் செய்த சரண்
அவளின் குணத்தை அமைதியாக அகிம்சை வழியில் போராடி அவளை மீட்பது அருமையோ அருமை👏👏👏👏👏

தந்தை இல்லாமல்
தாயின் அரவணைப்பில் துயரங்கள் பல கடந்து வந்து தாயை இழந்து தங்கைக்காக தாத்தாவிடம் தஞ்சம் புகுந்து தாத்தாவின் வஞ்சம் அறிந்தும் தனக்குத் தெரிந்த வழியில் தாத்தாவை வென்று தங்கைக்காக புது உலகம்
தரும் அரசன்.....

அபியை வதைத்தாலும் அவளின் ஆசையை நிறைவேற்றி அவளுக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்தித் தரும்
அரசன் அரசனே
தீராவின் காதலியாக
திளைத்தாலும் ரமியாக
தீராத துயரத்தை ஏற்று விரும்பியே தொலையும் விண்மீனாய் தீரனின்
காதலில் பிழைக்கும் ரமி.....

தீரா தீரா தீரா
திரும்பும்பக்கம் எல்லாம்
தீரனே ......
அண்ணனாக லட்டு விற்கு
அனைத்தையும் அழகாக செய்யும்
அண்ணனாகவும் சரி
ஆதிக்கம் செய்யும் பாஸாக
ஆட்டி படைத்தாலும் அன்பினாலும் நம்மை கட்டி போடும் அரசன்.....

தீராத வெறுப்பையும் கொடுத்து திகட்ட திகட்ட காதலையும்
தந்து
ராவணனாய் ரட்சித்தாலும்
ராமனின் சீதையாய்
தீரனின் ரமியாக
அழகியின் அந்திரன்......

அருமையாக இருந்தது....
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💕💕🤩🤩👏👏👏😘😘😘😘📚🖋✍🏻
தொடரட்டும் தங்களின் எழுத்து பயணம்...
தொடர்வோம் நாங்களும்....
❤❤❤❤❤❤
அன்புடன்........
 
Top