All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , "பால்வழியில் என் பால்நிலவே " - கதை திரி

Status
Not open for further replies.

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம்...

எனது அடுத்த கதையுடன் வந்து விட்டேன்...

இது மிக பெரிய சோதனை முயற்சி, முயற்சி மட்டுமே..

இதுவரை நீங்கள் தந்த ஆதரவை இந்த கதைக்கும் வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்..

மாலை முதல் டீஸர் பதிவிடுறேன் பிரெண்ட்ஸ்

நன்றி
ஸ்ரீஷா 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் முன்னோட்டம் :

இன்றைய முக்கிய செய்திகள்
:

பெருமைமிகு இந்தியா ஏற்கனவே செவ்வாய் கிரக ஆராய்ச்சி ஆய்வகத்தை(Indian Mars Research laboratory) வெற்றிகரமாக விண்ணில் நிறுவிய நிலையில், இன்று அதன் அடுத்தகட்டமாக இன்னும் 6 மாதங்களில் , “ MISSION MARS “ என்னும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் கீழ் 11 விண்வெளி வீரர்களை தேர்வு செய்து உள்ளது....
அதில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது....

*********

“ அச்சோ” என்ற ஒரு பெண்ணின் மெல்லிய முணுமுணுப்பில்,அந்த ஆய்வகம் அதன் இயல்பை தொலைக்காது செயல்பட,
அவனோ அந்த குரலின் ஒலி கேட்டு , அதற்குரியவளின் விழி பார்க்க, அவளது விழியும் அவனில் தான் கோர்த்து நின்றது.

அவனது கண்கள் ,அது தரும் தாக்கம், அந்த தாக்கத்தை தாண்டி அவன் காட்டும் திமிரான பார்வை, அது அவளில் செலுத்தும் ஆளுமை என எல்லாம் அவளை கவர , அவனில் இருந்து விழி பிரிக்காது அவள் இருக்க, அவனோ நொடியில் அவளை தாண்டி அங்கிருந்து நகர்ந்திருந்தான்..
அவளோ அவன் செல்லும் பாதையை விழிகளால் தொடர்ந்திருந்தாள், பாதையை மட்டுமே ,அவனை அல்ல.

அவள் – தாரா கிருஷ்ணமூர்த்தி ,
விண்வெளி வீராங்கனை .

இந்த ஒரு அங்கீகாரம் போதும், அவளை சிலிர்க்க செய்ய ,
அவள் அனைத்தையும் மறக்க செய்ய ,அவளது கனவினை நோக்கி பயணிக்க செய்ய .

இதோ கடந்த நொடி அவனுக்காக உருகியவள் ,இந்த நொடி அவளது கனவின் அடியான விண்வெளி பயிற்சியில் இறங்கி இருந்தாள்...

முதலில் அவளுக்கு பிடித்தமான த்ரெட் மில்லில் தனது பயிற்சியை துவங்க, அது தரும் புத்துணர்வில் அடுத்த கட்ட பயிற்சியான , “ space walk “ என சொல்லப்படும் விண்வெளி நடைபயிற்சி செய்ய துவங்கினாள்...
அந்த பயிற்சி 4-5 மணி நேரம் தொடர ,இத்தனை வருடம் கற்ற பயிற்சியில் ,உடல் மன ஆரோக்கியத்தில் சற்றும் களைப்படையாது மலர்ந்த முகத்தோடு இன்னும் சில பயிற்சி செய்து , தனது இன்றைய பயிற்சியை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்...


செல்லும் வழியில் ,அந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு பெரிதும் தொடர்பில்லாத நடனக்கூடம் ,ஆனால் அவளுக்கு மிக பிடித்த அந்த நடனக்கூடம் அமைந்திருக்க,

நடனக் கூடத்தை திரும்பி பார்க்க கூடாது என தன் இரு விழிகளை ஒரு நொடி இறுக்கி மூடி கொண்ட தாரா, முகம் திருப்பாது தன் பாதையில் செல்ல முயன்றாள்...முயற்சி மட்டுமே, ஆனால் அவளில் அது என்றும் சாத்தியமில்லையே...


அவள் மனதில் உண்டான குறுகுறுப்பும், அவளது தொடர் பழக்கமும், அதை எல்லாம் தாண்டி அவளின் மன ஏக்கமும் என எல்லாம் சேர்ந்து அவளை மீறி செயல்பட, அவளது கால்களோ ,அவளது முயற்சியை தாண்டி அந்த நடன கூடத்திற்குள் தானாக சென்றது...

உள்ளே சென்று வழக்கமாக அவள் அமரும் இடத்தில் அமர்ந்து விழிகளை சுழல விட்டு எதையோ ,எங்கோ தேடினாள்...


அவள் அமர்ந்த நொடி அந்த இடத்தில் அதிர்ந்த இசை இசைக்க,அதும் வெறும் பீட்ஸ் மட்டும் அதன் ரிதம் ஒலிக்க ,
சில நொடிகளில் அந்த இடம் முழுதும் விளக்குகள் அணைக்கபட்டு இருட்டானது .

11906




ஒற்றை நொடி அவளது விழிகள் குழப்பத்தை தத்தெடுக்க, அதற்குள் ஒரு இடத்தில் மட்டும் வெளிச்சம்,அதும் சற்று சரிந்த நிலையில் தரை நோக்கி செல்ல ,அந்த வெளிச்ச ஒளியில் ஒருவன் அவனது 8 பேக் உடம்போடு, திரண்ட புஜங்கள் ,விரிந்த உடல்வனப்பு கொண்டு தன் நீண்ட கரங்களை விரித்து நீட்டி ,ஒற்றை கால் நுனி விரலால் தரையில் ஊன்றி நின்று, தன் மொத்த உடலையும் இசையின் அதிர்விற்கு ஏற்றவாறு சுழட்டி சுழன்று நடனமாடினான்...


அவளோ இமை சிமிட்ட மறந்து ,அந்த நடனத்தை காண ,
அதற்கு காரணமானவனோ அவளது பார்வை தன்னை சிறிதும் சலனபடுத்தவில்லை என்பது போல ,

அவனது திரண்ட புஜத்தின் வெளியே நீண்ட நெடிய கரங்களை தலைக்கு மேல் பாதி கையில் வணக்கம் போல குவித்து வைத்து, மற்றொரு கையால் எதையோ அணைத்து பிடித்து இருப்பது போல வைத்து சுழன்று சுழன்று நடனமாடினான்...


ஒரு கட்டத்தில் அந்த இசை, இந்த இனிமை, அவனது உயிர்ப்பு அவளுக்கு மட்டும் சொந்தமென எண்ணி அவள் பார்த்திருக்க, சரியாக அவள் பார்த்த நொடி , அவன் அவளை நோக்கி ஒரு கையை நீட்டி, “ வா” என்பது போல அசைத்திருந்தான்..

அவளுக்கோ மூச்சடைக்கும் உணர்வு, ‘ தன்னை நோக்கி அவனது கரம் நீண்டாதா? தான் அவனது கைசிறையிலா ?' என அவள் உணர்வுகளில் தவிக்க,



அதில் அவளது விழிகள் பளக்க , அவளது துறைக்கே உண்டான கவன குவிப்பில் தன்னை நிலைநிறுத்த அவள் போராடி கண் மூடி , அரை வினாடியிலே வெற்றி பெற்று விழி திறக்க ,அவளின் எதிரே யாருமே இல்லை...

' தான் பார்த்தது பொய்யா ?' என்பது போல அவள் விழிகளில் சுத்தி சுத்தி தேட, அந்த அறையிலே யாரும் இல்லை....


‘ கண்டிப்பாக அவன் தெரிந்து தான் என்னை விட்டு சென்றிருப்பான், அவனுக்கு நான் என்றால் என்றுமே வேண்டாம் தானே ' என்ற எண்ணம் எழ, கசந்த முறுவலை சிந்தியவள் தன்னை நேர்படுத்தி கொண்டு தன் அடுத்த கட்ட வேலைக்கு சென்றாள்...

*******



அனைவரும் வழியனுப்புகிறார்கள், அனைவரிடமும் கை அசைக்கிறாள், சிரித்து மகிழ்கிறாள் ,ஆனால் அவனது கண்களை மட்டும் சந்திக்கவே இல்லை...

அவனுக்கு இத்தனை கூர்ந்து அவன் வாழ்க்கையில் யாரையும் பார்த்தாக கூட நியாபகம் இல்லை...

பத்திற்கும் அதிகமான முறையில் , அவன் மனதிலே , ' என்னை ஒரே ஒரு முறை பாரு தாரா ' என சொல்லியிருப்பான்...

தாராவோ கிஞ்சித்தும் அவனை பார்க்கவில்லை...

அவள் மனதில் தேக்கிய காதல் ,முதல் முதல் காதல் .. அதை அவன் பொருட்படுத்தாத தருணம் ,அவளை பெரிதும் தாக்கி இருக்க, முடிவில் ,' நீயும் வேண்டாம் ,உன் நினைவுகளும் வேண்டாம் ' என தூர எரிந்து இருந்தாள்...

அவனுக்கோ, அவளை கத்தி பெயர் சொல்லி அழைத்து ,தன்னுள் பொத்தி வைத்து கொள்ள வேண்டும் என பரபரத்தது...

இன்று சென்றாள் கிட்டத்தட்ட 6.5 வருடம் கழித்து தான் பார்க்க முடியும் அவளை, அதும் இந்த அறிவியல் ஆக்கங்கள் மனது வைத்தால் மட்டுமே. ...

அவள் என்ன அருகில் இருக்கு நாட்டிற்கா செல்கிறாள், பயம் கொள்ளாது இருக்க, அவள் செல்ல இருப்பது “ Mars “ என்னும் வேற்று கிரகத்திற்கு...

இத்தனைக்கும் அவள் என்ன பயின்று ,தேர்ச்சி பெற்று சாதனை செய்ய செவ்வாய் கிரகம் கிளம்பி இருக்கிறாளோ ,அதே படிப்பில் தேர்ச்சி பெற்று தான் அவனும் அங்கு விண்வெளி வீரனாக இருக்கிறான். எல்லாம் மாறி போனது அவனது முடிவால் மட்டுமே...


(விலகி செல்லும் நேரம் தான் அன்பு கொண்டவர்களின் நேசம் புரியும் போல )


எண்ணங்கள் அவனில் தோன்றி மறைந்தாலும் அவனது கண்கள் அவளை விட்டு இம்மியும் நகரவில்லை....

அவன் கௌதம்...கிட்டத்தட்ட , " Man of Perfection " என்ற வகையரையில் வருபவன்..

அவன் கொண்ட கனவும், எண்ணமும் ,செயலும் ,உணர்வும் அவனது விழியை தாண்டி என்றும் யாரிடமும் எதற்கும் வெளிப்படாது...

அவன் அளவில் தேவை என்றால் அவனே செய்து கொள்வான், யாரிடமும் எதையும் கேட்டு பெற்றதும் இல்லை, சொல்லி செய்ததும் இல்லை
அவனுக்கு அவன் மட்டுமே எல்லை .

**********


அத்தனை அத்தனை கருவிகள், அத்தனை அத்தனை ஒலிபரப்பு படலங்கள், கண்காணிப்பு குழுக்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், விஞ்ஞானிகள் ,இதை தாண்டி அவன், அவளின் அவன் , கூடவே அறை முழுதும் நிரப்பட்ட அந்த எண்ணற்ற பெரிய மானிட்டர் வழியே ,"Human space flight" வெளியீட்டை காணொளிியாகவும் ,அதன் தொழில்நுட்ப விவரங்களையும் ,
அதனோடு பொருந்திய , விண்கலத்தின் உயர ,வேக அளவீட்டை அனைவரும் பார்த்திருக்க,


அவனோ உயிர் நடுங்க கண்கள் கலங்க , கைகள் சில்லிட அதே காட்சிகளை உயிர் வலியை மனதில் சுமந்து பார்த்திருந்தான்...


அந்நேரத்தில் விண்வெளி மைய 16 மணி நேர கவுன் டவுனில் கடைசி 10 நொடி துவங்கியது...


10...9....8 என நொடிகள் கடக்க, அனைவரின் உயிர் துடிக்க, கண்கள் காட்சியில் லயிக்க, இதழ்களோ ஒருவித பாசிட்டிவிட்டிகாக அவர்களுக்கு தோன்றியதை முணுமுணுக்க, இன்னும் இன்னும் அனைத்து கண்கள் அந்த ராக்கெட் லான்சை பார்த்தது...


சரியாக 3 என்ற எண் வரும் நேரம், அவனிற்கு தூக்கி வாரி போட்ட உணர்வு....

*******

இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள் பிரெண்ட்ஸ் 🇳🇪

முதல் அத்தியாயம் on Feb 14....


கதையின் கருத்து திரி 👇

 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைத்துலக விண்வெளி நிலையம் மற்றும் விண்வெளி விமானம் இணையாக பயணிக்கையில் மோதலை தவிர்க்க ,அனைத்துலக விண்வெளி நிலையம் அதன் திசையை மாற்றி கொள்ளுமாம்...

நானும் விண்வெளி விமானம் போன்று தான், உன்னால் எனது உணர்வுகள் வெடித்து சிதறாது இருக்க, என்னில் உன் மனவீச்சை மாற்றி கொள்வாயா ?

நான்

11956

தாரா

கௌதமின் தாரா❣


********

விருப்புக்கும் விலகளுக்கும் இடையே நான்

11957


கெளதம்


தாராவின் கௌதம்❣
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மறுபடியும் நான் தான் பிரெண்ட்ஸ்.
இன்று இந்த கதையின் முதல் அத்தியாயம் பதிவதாக சொல்லியிருந்தேன்.

மன்னிக்கவும்.சற்று அறிவியல் நிறைந்த கதை என்பதால் நேரம் எடுத்துக் கொள்கிறது.கூடவே இரு மொழி முயற்சி என்பதால் இன்னும் அதிக நேரம் தேவைப் படுகிறது.

அதனால் நான் விரைந்து கதையை முடித்து விட்டு உங்களை சந்திக்கிறேன்.

அதுவரை , " விண்ணைத் தாண்டி வருவாயா" கதையின் அத்தியாயங்களை திங்கள், புதன்,வெள்ளி கிழமைகளில் பதிகிறேன்.

தாமதத்திற்கு மன்னிக்கவும் பிரெண்ட்ஸ் 🙏....

நன்றி
ஸ்ரீஷா 😍
 
Status
Not open for further replies.
Top