All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ருதியின் "அவளே என் தோழனின் வசந்தம்" - கதை திரி

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends எல்லாரும் எப்படி இருக்கீங்க நீங்க எல்லாரும் என்னையும். என்னோட. கதை மறந்துர்ப்பீங்க மன்னிக்கவும். அதுக்கு. நான் தான் காரணம் என். Family issues னால கதைய என்னால இவ்வளவு நாளா தொடர்ந்து எழுத முடியல.extremely sorry for that இந்த ஜுன் 7ல். இருந்து முன்ன மாதிரி. ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ud கண்டிப்பாக உண்டு அது சொல்லத்தான் வந்தேன். Sorry உங்க எல்லாரையும் காக்க வைக்கரதுக்கு நான் இவ்வளவு தூரம். காக்க வைத்ததுக்கு பின்னும். நீங்க எல்லாரும் என்னை திட்டாம. பொறுமையா. இருக்கறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி இனி கண்டிப்பா. Delay or break இல்லாம கதையை கொடுக்கிறேன் friends அதுக்கு இது வரை என்னை நீங்க எல்லாரும் ஊக்குவிச்ச மாதிரி இனியும் என் கதையோட நிறை குறைகளை சுட்டி காட்டி உறுதுணையா இருக்கனும் வேண்டி கேட்டுக்கறேன் .
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம் -10 டீஸர்


க்ரிஷ் அநியின் பிரதியாக இருப்பவளை நோக்கி துப்பாக்கியை நீட்டியதை கண்டு அதிர்ந்த ஜோசஃப் , மரியம் இருவரும் " க்ரிஷ் ........!???" என்று அலறினர் .

இவர்களின் அலறலில் அநிக்கு உணர்வு வந்தது என்றால் ரிஷி இன்னும் தன் எதிரில் இருப்பவளின் மீதிருந்து பார்வையை எடுக்காமல் அசையாமல் இறுகி நின்றான்

ஆனால் உணர்வுக்கு வந்த அநி நிமிர்ந்து பார்த்தவள் க்ரிஷ்ன் செயலை கண்டு ஞஆத்திரத்துடனும் ஆங்காரத்துடனும் எழுந்து க்ரிஷ் கன்னத்தில் அடியை இறக்கினாள்( இடியை என்று சொல்ல வேண்டுமோ) அநியின் அடியிலும் அவளில் முகத்தில் இருந்த ரௌத்திரத்திலும் க்ரிஷ் மட்டும் அல்ல ஜோசஃபும் மரியமும் கூட அரண்டு விட்டனர்

ஆனால் அநியோ இது எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை க்ரீஷ்ஷை அடித்தவள் அவன் சட்டையை பிடித்து உலுக்கி கொண்டே " செத்தவளை இன்னும் எத்தனை முறை சாகடிக்க போகிறாய் "

" அநிகா..........................????!!!!??????!!??....?-இப்போது அலறுவது ஆன்மாவின் முறையானது .

" அநிகாவா"............- க்ரிஷ், ரிஷி இருவரும் இப்பெயரை கேட்டு ஒவ்வொரு உணர்வுகளை வெளிபடுத்தினர் க்ரிஷ் அதிர்ந்தான் என்றால்
ரிஷிக்கு குழப்பங்கள் விலகுவது போல் இருந்தது.

"அநிகா தான இறந்தது " க்ரிஷ் அதிர்வுடன் கேட்க
அநிகா உதடுகளில் விரக்தி சிரிப்பும் கண்களில் வெறுமையும் இருந்தது

ஆனால் இவ்வளவு நேரம் அமைதியாகவும் மென்மையாக ரிஷியை பார்த்து கொண்டு இருந்த அநியின் பிரதியின் முகம் நொடியில் ரத்த சிவப்பாக மாற கண்களில் கண்ணீருக்கு பதில் இரத்தம் தான் கட்டியதோ என்று என்னும் அளவிற்கு கண்ணில் கனல் பொங்க
"உண்மை தான் அநிய கொலை செய்ய தான் முயற்சித்தார்கள் ஆனால் அதை நான் நடக்க விடவில்லை இனியும் நடக்க விடமாட்டேன்
ஓர் முறை உயிர் கொடுத்து காப்பாற்றி விட்டேன் இனி ஒவ்வொரு முறையும் உயிரை எடுத்து காப்பாற்றுவேன் "


வசந்தம் பூக்கும்........................
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம் - டீஸர் 10-2


ரிஷியின் வீட்டின் வாயிலில் கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கினான் ரிஷி. அவன் ராமிடம் அவர்கள் சென்று வந்த பிசினஸ் மீட்டிங் பற்றி பேசி கொண்டே வீட்டின் உள் நுழைந்தான்.

அங்கு வீட்டின் ஹாலில் கைகளை பிசைந்தவாறு முகத்தில் அளவற்ற சந்தோஷமும் சிறு பயமும் உள்ளத்தில் கவலையுமாக மாடியையும் வீட்டின் வாயிலையும் மாறி மாறி பார்த்தபடி அம்முவும் (காயத்ரி) அவரின் பக்கத்தில் எதோ தேற்றுவது போல சொல்லிக்கொண்டே செண்பாமாவும் உடன் நின்றிருந்தார் அது போக வீட்டின் வேலைக்காரர்களும் மாடியையே பார்த்துக்கொண்டிருக்க அனைவரின் முக பாவனைகளை உள் நுழையும் போதே கவனித்த ரிஷி அம்முவை நெருங்க நினைக்கும் போது வெளியில் கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தான் அங்குள்ள தாரா, மாலினிராவ், பிரியா ,மீரா, ஹரிஷ்,சாரா, சித்தார்த் எல்லாம் நின்றிருந்தனர்.
இது அனைத்தையும் பார்த்த ராம் எங்கு தங்கள் குட்டு ஏதாவது வெளிப்பட்டு விட்டதோ என திருதிருவென முழித்தான் .

ஏனெனில் அம்மு மற்றும் வேலை ஆட்களை தவிர்த்து மற்ற அனைவரும் அவர் அவர் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு வந்துள்ளனர் என்பதை அவர்களின் உடல் அசைவில் இருந்து ரிஷியால் யூகிக்க முடிந்தது அதிலும் சித்தின் உடல் மொழி அவன் காவல் அதிகாரியாக மட்டுமே வந்துள்ளான் என்பதை ரிஷிக்கு தெள்ளத்தெளிவாக புரியவைத்தது. இதையெல்லாம் பார்த்த
ரிஷியின் புருவம் யோசனையுடன் உயர்ந்தது.

அப்போது வீட்டு வாயிலில் பரபரப்பு தோன்ற அனைவரின் கவனமும் வாயிலை அடைந்ததோடு அங்கு நின்ற பத்திரிக்கையாளர் படையை கண்டு அதிர்ந்து அனைவரும் ரிஷியை நோக்கி திரும்பினர் அங்கு ரிஷி எந்த ஒரு உணர்வும் இன்றி இருப்பதை கண்டு எல்லோருக்கும் திக்கென்று இருந்தது என்றால் எதேச்சையாக ரிஷியின் தலைக்கு மேலே நிமிர்ந்து பார்த்தோர்க்கு (மேட்டர் தெரியாதவரகளுக்கு பா) சப்தநாடியும் அடங்கி விட்டது

அங்கு மாடியில் இருந்து ஆளுமை கலந்த கர்வம் மற்றும் திமிரோடு ரிஷியின் மனைவி(அனு வா இல்ல அநியா னு நீங்க முடிவு பண்ணனும் நண்
பர்களே) இறங்கிவர நடை ,உடை ,பாவனை , ,மற்றும் இன்னும் எல்லாவற்றிலும் ஜூனியர் ரிஷி என்பதை நிரூபிப்பது போல இறங்கி வந்து கொண்டிருந்தது ரிஷியின் புதல்வன் குட்டிக் கண்ணன் மாதவ் கிருஷ்ண ரகு வர்மா

அவர்களின் பின்னே ஜோசப்பின் குடும்பமும் இறங்கி வந்து கொண்டிருந்தது.

வசந்தம் பூக்கும்.................................
 
Last edited:
Top