All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

“ஆதியின் நிலா” பாகம் 2 கதை திரி

Status
Not open for further replies.

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபிஸ் எனக்கொரு விஷயம் தெரிஞ்சாகனும்.... அதனால எனக்கு கொஞ்சம் பதில் சொல்லிட்டு போங்க.....

ஆதி நல்லவன்னு நினைக்கிறவங்க 👍 pannunga..
கெட்டவன்னு நினைக்கிறவங்க 😡 போடுங்க...
அவன் என்னன்னே தெரியலன்னு நினைக்கிறவங்க 😞 போடுங்க...

இதை வெச்சித்தான் எத்தனை பேர் தெளிவா இருக்கீங்கன்னு நான் ஒரு முடிவுக்கு வரலாம்🙈
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 31:




அன்றிரவு நித்திலா கண்விழித்துப் பார்க்கும் போது முதலில் என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. எந்த இடத்தில் இருக்கிறோம் என்று பார்த்தவள் ஒருவேளை சொர்க்கத்துக்கு வந்து விட்டோமோ என்று நினைத்து திரும்ப எதிரில் உட்கார்ந்திருந்த ராட்சஷனை கண்டு ஒருகணம் அரண்டு தான் போனாள்.

ஒருவேளை நரகமோ!!

ஈர உடலுடன், கோவைப்பழமென சிவந்திருந்த விழிகளால் அவளை உறுத்து விழித்துக் கொண்டிருந்தான் ஆதி.. நித்திலாவுக்கு பயத்தில் முதுகுத்தண்டு ஜில்லிட்டது.. கொஞ்ச நேரத்துக்கு முன்பு மோகத்துடன் அவளை மொய்த்த கண்கள் இப்போது நெருப்பை கக்கியது..

தன் சுட்டெரிக்கும் பார்வையால் அவளது அசைவுகளையே அளவிட்டுக் கொண்டிருந்தவன் அவள் முழுமையாக சுயநினைவுக்கு வந்துவிட்டதை உணர்ந்ததும் அருகில் இருந்த மாற்றுத்துணியை எடுத்து அவள் முகத்தில் வீசியெறிந்துவிட்டு அடுத்த நொடியே அந்த கேபினை விட்டு வெளியாகி இருந்தான்.

அதன்பிறகு தான் நித்திலாவினால் மூச்சுவிட முடிந்தது. அவன் சென்றதும் எழுந்து ஈர உடைகளை களைந்துவிட்டு மாற்று உடைகளை அணிந்து கொண்டாள்.

அவள் வெளியே வந்து பார்த்தபோது ஆதியை காணவில்லை. ஜெகன்தான் நின்றிருந்தான். அவளை அந்த போட்டிலிருந்து இறங்க உதவி செய்தவன் காரை நோக்கி அழைத்துச் சென்றான்.

ஆதி காருக்குள் உட்கார்ந்திருந்தான்.. அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரம் அவள் இதுவரை பார்த்திராதது...

நித்திலா ஏறியதும் கார் சாலையில் சீறிப்பாய்ந்தது….

வீட்டின் போர்டிகோவில் காரை நிறுத்தியவன் அவள் இறங்காமல் உட்கார்ந்திருக்கவும் “இறங்குடி...” அவள் முகம் பார்க்காமல் உறுமினான்.

அதன்பிறகு தான் வீடு வந்துவிட்டதை உணர்ந்து அடித்து பிடித்து இறங்கியவள் விட்டால் போதும் என்று வீட்டுக்குள் ஓடினாள்.

அவளை வழிமறித்த மித்ரா “எங்க போயிருந்தீங்க இவ்வளவு நேரமா...???” “உன் ஹேர் ஏன் நனைஞ்சிருக்கு...??” “எங்கே உன் ட்ரெஸ்???” “உன் வாய்ல என்ன காயம்??...” என்று கேள்விகளை அடுக்க அத்தனை நேரம் இருந்த நடுக்கம் மறைந்து கோபமாக அவளை ஏறிட்டாள் நித்திலா..

“கேட்குறேன்ல... என்ன நடந்துச்சு...????” என்றாள் மித்ரா பொறுமையிழந்து....

“ம்ம்ம்.... நீங்க எது நடந்திருக்கும்னு நினைச்சி இத்தனையும் கேட்குறீங்களோ அதுதான் நடந்துச்சி...” என்றாள் இவளும் பதிலுக்கு..

அதில் நித்திலாவை ஏளனமாக பார்த்தவள் “யாரு... தேவ்??? உன்ன??? ஹாஹாஹா.... நித்து பாப்பாவுக்கு அந்த மாதிரி ஆசைலாம் வேற இருக்கா... முழிச்சிக்கிட்டே கனவு காணாம போய் தூங்கு போ...” நக்கலாக கூறிவிட்டு சென்றாள்.

அவர்களது ரிசப்ஷன் முடிந்த மறுநாளே குடும்பத்தினர் அனைவரும் சென்னை சென்று விட்டனர்.. சௌர்யாவும் அமெரிக்கா போய்விட்டான்..

நிர்மலாதான் பேத்தியை விட்டு செல்ல மனமில்லாததால் கொஞ்ச நாளைக்கு மும்பையில் இருந்துவிட்டு வருவதாக கூறி டேரா போட்டுவிட விஸ்வநாதனும் மனைவியுடன் தங்கிவிட்டார். மித்ராவும் கிளம்பாமல் அங்கேயே தங்கிக் கொண்டாள்.


அதன்பிறகு வந்த நாட்களில் ஆதி நித்திலாவின் பக்கமே வருவதில்லை.. ராப்பகலாக மித்ரா ஆதியுடன் ஒட்டிக்கொண்டு சுற்றித்திரிந்தாள்.. நித்திலா என்ற ஒருத்தி அந்த வீட்டிலே இல்லாதது போல் நடந்து கொண்டார்கள்.

இதில் நிர்மலா வேறு எப்போதும் பேத்தியை தன்னுடனே வைத்துக் கொண்டார்.. மூச்சுக்கு முன்னூறு தடவை நித்திலா, நித்திலா என்று எதற்கெடுத்தாலும் அவளையே அழைத்துக் கொண்டிருப்பார்.. அவளுக்கு ஆதியின் பக்கம் செல்லவே அவகாசம் கொடுப்பதில்லை.

நித்திலா பாட்டியை கவனித்துக் கொள்ள மித்ரா ஆதியை கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை அவனுடைய அத்தனை வேலைகளையும் மித்ரா பார்த்து பார்த்து செய்தாள்.

அதைக்கூட பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்ட நித்திலா அவன் இரவுகளில் தாமதமாக வந்துவிட்டு மித்ராவின் அறைக்குள் சென்று உறங்குவதை கண்டதும் அவளுக்கு வெறியே வந்துவிட்டது.



###################################





“இந்த ஓடுகாலி பெத்த பொண்ண கொண்டு வந்து இப்படி நடு வீட்டுக்குள்ள வெச்சிருக்கீங்களே.... இந்த வீடு விளங்குமா....” எட்டு ஊருக்கு கேட்கும் வண்ணம் சத்தமாக கத்திக் கொண்டிருந்தார் விசாலாட்சி.. அர்ஜுனின் பாட்டி..

அந்த வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் உட்பட அனைவரும் அவளை ஏளனமாக பார்ப்பதை கண்டு மீராவுக்கு அவமானத்தில் பூமிக்குள் புதைந்து விடலாம் போல இருந்தது..

“அத்தை... என்னதான் இருந்தாலும் அவ இந்த வீட்டு மருமக... நீங்க எல்லார் முன்னாடியும் அவள இந்த மாதிரி பேசுறது கொஞ்சம் கூட சரியில்ல....” சரஸ்வதி கூற,

“அதுசரி... நீ என் மகன மயக்கி ரெண்டாம் தாரமா வாழ்க்கப்பட்டு வந்தவதானே... நீ எப்படி அவள விட்டுக்கொடுப்ப... என் மருமக மட்டும் உயிரோட இருந்திருந்தா உங்கள மாதிரி அன்றாடங்காய்ச்சிங்க எல்லாம் இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வெச்சிருப்பீங்களா... எங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டு அந்த மகராசி போய் சேர்ந்துட்டாளே....”

அதற்குமேல் சரஸ்வதி வாய் திறக்கவில்லை.. மீராவுக்காக பேசப்போனால் அவளையே கேவலப்படுத்தி விடுவார்.. அவர் சரஸ்வதியை தரக்குறைவாக பேசுவதை பொறுக்க முடியாமல்தான் ஊரிலுள்ள தன் தங்கை வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார் வரதராஜன்..

இப்போது மகனது மரணத்திற்கு வந்திருந்தவர் திரும்பிச் செல்லாமல் இங்கேயே உட்கார்ந்து கொண்டு இரண்டு பெண்களையும் தன் நாவினால் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தார்.

சரஸ்வதிக்காவது கொஞ்சம் பரவாயில்லை... அர்ஜுன் வீட்டில் இருக்கும்போது சரஸ்வதியை ஏதாவது பேசினால் பாட்டியை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவான்.. மீராவின் நிலைதான் மிகவும் பரிதாபகரமாக இருந்தது. மீராவுக்காக ஒற்றை வார்த்தை பேசக்கூட அந்த வீட்டில் ஆள் இல்லை..

சில சமயங்களில் விசாலாட்சி மீராவை அவமானப்படுத்தி பேசும் போது அவளை ஏளனமாக பார்ப்பான் அர்ஜுன். அந்தப் பார்வையில் கூனிக்குறுகிப் போவாள் மீரா.

அன்று சரஸ்வதிக்கு உடம்புக்கு சற்று முடியாமல் போனதால் தான் சமைப்பதாக கூறி மீராதான் சமைத்திருந்தாள். முதல் முதலாக அந்த வீட்டில் அன்றுதான் சமைக்கிறாள்.. ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து சமைத்து வைத்தாள்.

அர்ஜுன் வீட்டுக்கு வந்ததும் சரஸ்வதி பரிமாறினார். மீரா அவன் எதிரில் வருவது கூட கிடையாது. அவனுக்காக ஆசையாக சமைத்தது அவன் அதை ரசித்து சாப்பிடுவதை சமயலறை கதவோரமாக மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்..

“என்னம்மா... இன்னைக்கு மெனு ரொம்ப ஸ்பெஷலா இருக்கே.....” என்றான்..

“நல்லாயிருக்கா அர்ஜுன்...”

“ம்ம்ம்.... ரொம்ப நல்லாருக்கு...”

மறைந்து நிற்கும் மருமகளை பார்த்து சிரித்தார் சரஸ்வதி.. அவளும் பதிலுக்கு அவரை பார்த்து லேசான வெட்கத்துடன் சிரித்து வைத்தாள்..

“நம்ம மீராதான்ப்பா சமைச்சா... உனக்கு என்ன எல்லாம் பிடிக்கும்னு சிவா கிட்ட கேட்டு அத்தனையும் பண்ணினா தெரியுமா...”

அவர் மீராவின் பெயரை சொன்னதுமே அவன் முகம் விளக்கெண்ணையை குடித்தது போல் ஆகிவிட்டது.. பாதி சாப்பாட்டிலேயே கை கழுவிவிட்டு எழுந்துவிட்டான்..

“ஐயோ!!! என்னப்பா இது சாப்பாட்டுல கைகழுவிட்ட...” சரஸ்வதி பதறிப்போய் கேட்க “இனிமேல் எது சமைக்கிறதா இருந்தாலும் ஒன்னு நீங்க சமைங்க... உங்களால முடியலன்னா வேலைக்காரங்ககிட்ட சமைக்க சொல்லுங்க..” கோபமாகக் கூறியவன் சாப்பிடாமலே வீட்டை விட்டு சென்று விட்டான்..

அவனது செய்கையால் கண்களில் நீர் வழிய கதவோரம் நின்ற மீராவை பார்த்தவர் “நான்தான் அப்பவே சொன்னேன்ல வேலைக்காரி சமைக்கட்டும்னு... இப்ப உனக்கு திருப்தியா...” என்றார் சரஸ்வதி கோபமாக... மகன் சாப்பிடாமல் போய்விட்டானே என்ற கவலை அவருக்கு..

அன்றிரவு வழக்கத்துக்கு மாறாக சற்று நேரத்துடனே வீட்டுக்கு வந்துவிட்டான் அர்ஜுன்.. ஃபோனை கட்டிலில் போட்டுவிட்டு அவன் குளியலறைக்கு புகுந்துவிட மீரா அப்போதுதான் அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் கிடந்த ஃபோன் அடிக்கவும் தற்செயலாக அதனை பார்க்க நிலா என்ற பெயரில் அழகிய ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது அவளது கணவனின் அலைப்பேசி..

ஃபோனில் தெரியும் அந்த பெண்ணின் உருவத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மீரா. அவள் யார் என்று உணர்ந்ததும் இவள் உடல் விறைத்தது.

அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் தன்னுடைய அலைப்பேசியில் நித்திலாவின் அழைப்பை கண்டதும் முகம் மலர அதை எடுத்து ஆன் செய்தவன் “நித்திலா..” என்று என்று வார்த்தைக்கு வலிக்காத வண்ணம் அவள் பெயரை மென்மையாக உச்சரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினான்.

செல்லும் அவனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள் மீரா. திரும்பி கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள்.. அவளும் அழகாக இருப்பதை போல் தான் தோன்றியது.. ஆனால் நித்திலாவுடன் ஒப்பிடும் போது அவளது அழகு சற்று பின்னுக்குச் சென்றுவிடும்... தாழ்வு மனப்பான்மையில் அவள் மனம் நைந்தது.




###########################




“சோ நித்திலா மேல இருக்கிற பாசத்துல உங்க பாஸ்க்கு துரோகம் பண்ணிருக்கீங்க.... அப்படித்தான…”

தன் எதிரில் அழுத்தமான பார்வையுடன் உட்கார்ந்திருந்தவனை கண்டு எச்சில் கூட்டி விழுங்கினான் வருண்.. அந்த ஏஸி குளிரிலும் அவனுக்கு வியர்த்து வழிந்தது..


“சார்.... நான்....... நான்....” பேச வார்த்தை வராமல் திக்கித்திணறினான்..

“சொல்லுங்க மிஸ்டர் வருண்... நீங்க...”

“சார்... ஐம் ஐம் சாரி சார்....” வருணுக்கு அழுகையே வந்துவிட்டது... “நான் முதல்ல முடியாதுனு தான் சொன்னேன்... நித்திலா கேட்கவும்தான் வேற வழியில்லாம அவங்களுக்கு ஹெல்ப் பண்ண சம்மதிச்சேன்...”

“நித்திலா!!!... ஹாஹாஹா.....” வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவன் பின்பு குரலில் தீவிரத்துடன் “அவ கேட்டான்னு நான் ஜெகன வெச்சி மித்ராவ தூக்க ப்ளான் போட்டத சொல்லிருக்கீங்க... அப்படி என்ன உங்களுக்கு நித்திலா மேல அவ்வளவு அக்கறை... அவ புருஷன் எனக்கே இல்லாத அக்கறை...” வேண்டுமென்றே கேட்டான்.

வருணுக்கு நன்றாகவே தெரியும்.. ஆதி யாரையாவது காயப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நாக்கில் நரம்பே இல்லாமல் பேசுவான்..

“சார்...” என்று அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டவன் “நித்திலா எனக்கு தங்கச்சி மாதிரி... அந்த பாசத்துல உங்கள பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டேன்.. எனக்கு வேற எந்த நோக்கமும் கிடையாது சார்... என் அம்மா மேல சத்தியம்..”

“வருண் உனக்கு என்னை பத்தி நல்லாவே தெரியும்... என் எதிரியை கூட விட்டு வைப்பேன்... ஆனா துரோகி....” நிறுத்திவிட்டு அவனை ஒரு பார்வை பார்த்தவன் “இப்ப சொல்லு வருண்... இத்தனை நாளா என் கூடவே இருந்து குழிப் பறிச்சிருக்க,,, உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்....” பிசிர் தட்டாமல் ஒலித்தது அவன் குரல்.

வருண் தலையை குனிந்து கொண்டான்.. ஆதி அவனுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள அவன் தயாராகத்தான் இருந்தான்... ஆனால் இப்போது அவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது.. அவனுக்கு எது நடந்தாலும் அதனால் பாதிக்கப்படப் போவது அவனது குடும்பம் தான்.

குனிந்திருந்த அவன் தலையை பார்த்தவன் ஒரு பெருமூச்சுடன் “ஆல்ரைட்... தெரிஞ்சோ தெரியாமலோ ஏதோ ஒரு விதத்துல நீ எனக்கு நல்லதுதான் பண்ணிருக்க... அந்த ஒரே காரணத்துக்காக உன்ன விட்டு வைக்கிறேன்… இனிமேல் உனக்கு இங்க எந்த வேலையும் கிடையாது.. என் ஃப்ரென்ட் ஷியாம் கிட்ட இருந்து ஆஃபர் வரும்... அங்க போய் ஜாயின் பண்ணிக்க... அவுட்...”

அத்துடன் பேச்சு முடிந்தது என்பதுபோல் அவன் தன் லேப்டாப்பில் மூழ்கிவிட மிகுந்த குற்றவுணர்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறினான் வருண்.. சௌர்யாவுக்கு அழைத்து விடயத்தை கூறியவன் இதற்குமேல் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டான்..

இரவு மிகவும் தாமதமாக வீடு வந்து சேர்ந்தான் ஆதி... அவனுடைய வேலைகளில் பாதியை வருண்தான் முடித்து வைப்பான்.. இன்று அவனை விரட்டி விட்டதால் அதிக வேலைப்பழுவின் காரணமாக சோர்ந்து போய் காணப்பட்டான்..

அவன் வீட்டுக்குள் நுழைவதை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா..

அத்தனை நேரம் சோபாவில் ஆதிக்காக காத்திருந்த மித்ரா அவனை தன்னுடைய அறைக்குள் அழைத்து சென்றாள்.

அவர்கள் இருவரும் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டதை கண்டதும் கடுப்பானவள் இன்றே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணியவளாக கீழே சென்றாள்.

நித்திலா மித்ராவின் அறையை அடைந்ததும் கதவை தட்டுவதற்காக பார்க்க அதே நேரம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மித்ரா... நித்திலாவை கண்டு அதிர்ந்தவள் பின்பு “உனக்கு வெட்கமா இல்ல... அடுத்தவங்க ரூம்ல வந்து ஒட்டுக்கேட்கிற... சை...” என்றாள் அருவருப்புடன்.

அவளது அபாண்டமான பேச்சில் கோபம் கரையுடைக்க “ஆமா... நான் ஒட்டுக்கேட்க மட்டும்தான் செஞ்சேன்... அடுத்தவங்க ஹஸ்பென்ட கூப்பிட்டு என் ரூம்ல வெச்சிக்கல்ல...” என்றாள் இவளும் பதிலுக்கு...

“என்னடீ சொன்ன...” என்று மித்ரா விட்ட அறையில் நித்திலா தடுமாறி நிற்க அதே சமயம் மித்ராவின் கன்னத்தில் இடியாக இறங்கியது இன்னொரு கை..

“எவ்வளவு தைரியம் இருந்தா என் பேத்தி மேல கை வைப்ப..” ஆக்ரோஷத்துடன் அங்கு நின்றிருந்தார் நிர்மலாதேவி..

அடிபட்ட வேகத்தில் விழப்போனவளை தாங்கி பிடித்த ஆதி பாட்டியை பார்த்து பல்லைக் கடித்தான். மித்ரா ஆதியை கண்டதும் “தேவ்... இவ என்ன பார்த்து...” என்று நித்திலாவை சுட்டிக்காட்டி ஆரம்பிக்க ‘தெரியும்’ என்பது போல் தலையாட்டியவன் அவளை அணைத்துக் கொண்டான்.

அதற்குள் விஸ்வநாதன், சாரதா சத்தம் கேட்டு அங்கு வந்துவிட மித்ராவை தன் கைவளைவில் வைத்துக் கொண்டே “தாத்தா... இனி ஒரு நிமிஷம் கூட உங்க பொண்டாட்டி என் வீட்டுல இருக்கக் கூடாது...” என்க,,, “ஆதி....” என்று அதிர்ந்து போய் மகனை பார்த்தாள் சாரதா..

விஸ்வநாதன் ‘என்ன இதெல்லாம்’ என்பதுபோல் மனைவியையும் பேரனையும் பார்த்தார்.


“என்ன பேசுற ஆதி... அவங்க என் அம்மா... இன்னொரு தடவை அவங்கள இப்படி மரியாதை இல்லாம பேசின நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கமாட்டேன்...” என்றாள் சாரதா கோபமாக..


அன்னையை கண்டு கொள்ளாமல் தாத்தாவை நோக்கியவன் “அவங்கள மித்ராகிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க... இல்லைன்னா இப்பவே என் வீட்டை விட்டு வெளிய போக சொல்லுங்க...” என்றான்.

நிர்மலா வெறுப்புடன் பேரனை ஏறிட்டார்..

“என்னடா பேசுற.. இவகிட்ட எங்கம்மா மன்னிப்பு கேட்கனுமா... முதல்ல இவள வீட்டை விட்டு வெளிய அனுப்பு...” அவனது பேச்சில் சாரதாவுக்கே பயங்கர ஆத்திரம் வந்துவிட்டது. “ஏய் மித்ரா... நீ காலையில முதல் வேலையா ஊருக்கு கிளம்புற.. இல்லைனா உன்ன பத்தி நான் தனாகிட்ட சொல்ல வேண்டி வரும்...” என்றாள் மித்ராவிடம் மிரட்டலாக.

“இது அவ வீடு...” என்றான் ஆதி “அவங்க அப்பா இல்ல யார் வந்தாலும் அவ இங்க இருந்து போகமாட்டா.. இவங்க இங்க இருக்கனும்னா மித்ராகிட்ட மன்னிப்பு கேட்டே ஆகனும்...”

அவன் மீண்டும் மீண்டும் நிர்மலாவை மன்னிப்பு கேட்க சொன்னதில் ஆத்திரமடைந்த விஸ்வநாதன்,,, என்னதான் இருந்தாலும் அவருடைய மனைவி அல்லவா.... “நிர்மலா.. நீ கிளம்பு...” என்றார் மனைவியை பார்த்து.

“அப்பா... என்னப்பா அவன்தான் அறிவில்லாம பேசுறான்னா நீங்களும் அம்மாவ கிளம்ப சொல்றீங்க...” சாரதா கெஞ்சுவதை பொருட்படுத்தாமல் நிர்மலாவின் கையை பற்றிக் கொண்டு அவர்கள் தங்கியிருந்த அறையை நோக்கி சென்றார் விஸ்வநாதன்.

மகனை அடிபட்ட பார்வை பார்த்தாள் சாரதா... அவன் அழுத்தமான பார்வையுடன் மித்ராவை அணைத்தபடி நின்றிருந்தான்.. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி ஒரு முடிவுடன் தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்தாள்.

அத்தனையையும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா... சாரதாவை பார்க்க அவளுக்கு பாவமாக இருந்தது.. ஆனாலும் ஒற்றை வார்த்தை கூட பேசவில்லை.. அவளுக்கு இதுதானே தேவை... நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக நின்றிருந்தாள்.

நிர்மலாவும் விஸ்வநாதனும் தங்கள், பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு வெளியே வர அதே நேரம் தன்னுடைய உடமைகளையும் எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளிப்பட்டாள் சாரதா...

அதைக்கண்டு ஆதியின் முகத்தில் மெல்லிய அதிர்வு தோன்றி மறைந்தது.. மகன் முகத்தையும் பார்க்க பிடிக்காதவளாக மருமகளை நோக்கி வந்தவள் “என் அம்மாவுக்கு இடம் இல்லாத இந்த வீட்டுல நான் மட்டும் எதுக்கு இருக்கனும்...” என்றவள் “வீட்டை பார்த்துக்க..” என்று வீட்டு சாவியை நித்திலாவிடம் ஒப்படைத்தாள்.

அதைக்கண்டு மித்ரா “அத்தை...” என்று எதையோ சொல்லவர அவளது கை பிடித்து தடுத்தான் ஆதி.. “தேவ்... நான் வேணும்னா போயிடுறேன்... அத்தைய போக வேண்டாம்னு சொல்லு...” என்றாள்..

“அவங்களுக்கு அவங்க பையனவிட அவங்க அம்மாதான் முக்கியம்னா தாராளமா போகட்டும்..” என்றான் குரலும் முகமும் இறுக.

நிர்மலா பேத்தியை நெருங்கியவர் “நீயும் வந்திடு... இங்க இருக்க வேண்டாம்..” என்க... அழுதிருப்பார் போல.. அவரது கண்கள் இரண்டும் கலங்கி சிவந்திருந்தது.

“நீங்க போங்க பாட்டி... நான் கண்டிப்பா வருவேன்..” நித்திலா அவரது கையை பற்றிக்கொண்டு கூறினாள்.. அவளது பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்றில் மேற்கொண்டு அவளை வற்புறுத்தாமல் “பத்திரமா இருந்துக்க...” என்று மட்டும் சொன்னவர் விறுவிறுவென்று வெளியேறிவிட்டார்..

பெரியவர்கள் கிளம்பிவிட இப்போது எஞ்சியிருந்தது ஆதி, மித்ரா, நித்திலா மூவர் மட்டுமே...

ஆதி இறுகிய முகத்துடன் அறைக்குள் செல்ல நித்திலாவை வெறுப்புடன் பார்த்த மித்ரா “இப்ப உனக்கு சந்தோசமா... இதுக்கெல்லாம் இருக்குடி உனக்கு....” என்றுவிட்டு கதவை படாரென்று அடைத்தாள்.

மூடிய கதவை பார்த்தவள் “பாட்டிய தூக்கியாச்சி... அடுத்து நீதான்...” என்று மெல்ல சிரித்தாள் நித்திலா.

மறுநாள் காலை உணவுக்காக நித்திலா டைனிங் டேபிளை நோக்கி செல்ல அங்கு ஏற்கனவே மித்ரா ஆதிக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள்...

‘நான் செய்ய வேண்டியதெல்லாம் இவ செய்றா...’ என்று நினைத்தாலும் தோளைக் குலுக்கிக் கொண்டு உட்கார்ந்தவள் வாயை மூடிக்கொண்டு வந்த வேலையை மட்டும் பார்த்திருக்கலாம்...

வேண்டுமென்றே அவர்களை கடுப்பேற்றுவதற்காக “அத்தை இல்லாம வீடே என்னமோ மாதிரி இருக்கு...” என்க ஆதியின் உடல் விறைத்தது.

அவனது தோளில் கைவைத்த மித்ரா “அவ வேணும்னு பேசுறா... நீ சாப்பிடு தேவ்...” என்றாள் அவனை சமாதானப்படுத்தும் விதமாக.

“அத்தை எவ்வளவு டேஸ்ட்டா சமைப்பாங்க இல்ல மித்ராக்கா... இப்போ இப்படி வேலைக்காரங்க சமையல் சாப்பிட வேண்டி ஆகிடுச்சே... ஐயோ பாவம் காலம் போன காலத்துல நம்ம நிலமை இப்படியா ஆகனும்...” சாப்பிட்டிக் கொண்டருக்கும் ஆதியை பார்த்துக் கொண்டே கூற அவ்வளவு தான் தட்டை உதறித்தள்ளிவிட்டு எழுந்துவிட்டான்.

அவன் எழுந்த வேகத்தில் இருக்கை ‘தடார்’ என்ற சத்தத்துடன் தரையில் விழ நித்திலாவை நெருங்கியவன் அவளது கழுத்தை பிடித்து நெரிக்க அவளுக்கு மூச்சு முட்டி விழி பிதுங்கியது.

மித்ரா பயத்தில் ஆதியின் கையை பிடித்தவள் “தேவ் அவள விடு செத்து கித்து தொலைச்சிட போறா...” என்றாள்..

“இவ சாகட்டும்டி... இவ இருக்கிறதுனால தான் அத்தன பிரச்சினையும்...” அவன் பிடி இறுகிக்கொண்டே சென்றது.

இன்னும் ஓரிரு நிமிடங்களில் அவளது உயிர் பிரிந்துவிடும் என்ற நிலையில் அவளை விடுவித்தவன் இருக்கையில் விழுந்து இருமிக் கொண்டிருந்தவளை நோக்கி குனிந்து “இன்னொரு தடவ என் முன்னாடி உன் வாய திறந்த,,, உன் உடம்புல உயிர் இருக்காது...” ஒற்றை விரல் நீட்டி வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு அங்கிருந்து சென்றான்.



###############################




கட்டிலில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்த முகேஷை உணர்ச்சிகளற்ற முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரன்வீர்... அவன் முகேஷின் சகோதரியின் மகன்.. அவரது தொழில் அனைத்தையும் அவன்தான் பார்த்துக் கொள்கிறான். முகேஷ் அளவுக்கு ரன்வீரின் குடும்பம் வசதியானது அல்ல என்பதால் அவனை தனக்கு கீழ் வேலைக்கு வைத்துக் கொண்டதோடு சரி.. உறவு சொல்லிக் கொண்டாடுவதில்லை..

“மாமாவ பாரு ரன்வீர்... எப்படி இருந்த மனுஷன் இப்ப இப்படி பேச்சு மூச்சில்லாம கிடக்குறாரு பார்...” என்று அவனிடம் அழுது கொண்டிருந்தார் முகேஷின் மனைவி.

“இப்ப எதுக்கு அழுது ஒப்பாரி வெச்சிக்கிட்டு இருக்க...” என்று எரிச்சலுடன் கூறினாள் அங்கு வந்த ஜீவிகா.

ரன்வீரை பார்த்தவள் “இதை சும்மா விடவே கூடாது ரன்வீர்... கண்டிப்பா இதுக்கு ஆதி பதில் சொல்லியே ஆகனும்.. என் அப்பாவ இந்த நிலமைக்கு ஆளாக்கிட்டு அவன் கல்யாணம், ரிசப்ஷன்னு அந்த நித்திலா கூட சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கான்...” என்றாள் வெஞ்சினத்துடன்..

ரன்வீர் நிதானமாக ஜீவிகாவை நோக்கி திரும்பியவன் “அவன விட்டு வெச்சிருக்கிறதெல்லாம் காரணமாத்தான்... அவனுக்கே தெரியாத அவன் வாழ்க்கைல நடந்த நிறைய விஷயம் எனக்கு தெரியும்... அதை வெச்சே அவன உருத்தெரியாம அழிச்சிடுறேன்... மாமா நல்லபடியா குணமாகி வரும்போது அந்த ஆதி இந்த உலகத்துலயே இருக்க மாட்டான்....” தீவிர முகபாவத்துடன் கூறனான்.

பின்பு மென்மையாக ஜீவிகாவின் தலையை தடவியவன் “நீ ஆதிய கட்டிக்க ஆசைப்பட்டன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. இப்பவும் உன் மனசுல அந்த மாதிரி ஆசை இருக்கா ஜீவி...” என்றான் கேள்வியாக..

“இல்ல ரன்வீர்... அவன் உயிரை விட்டாலும் விடுவான்.. அந்த நித்திலாவ மட்டும் யாருக்காகவும் விட்டிக்கொடுக்க மாட்டான்... அது நான் என் கண்ணாலயே பார்த்திருக்கேன்..” அவன் அடித்தது அவளுக்கு இப்போது நினைத்தாலும் உள்ளுக்குள் குளிர் பரவியது..

“ஆஹா... யாருக்காகவும் அவன் பொண்டாட்டிய விட்டு கொடுக்க மாட்டானா....” ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவன் “அதையும் பார்த்திடலாம்...” என்றான் மர்ம புன்னகையுடன்.




###########################





யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டுக் கொண்டே ஆதியின் ஆஃபிஸ் ரூமிற்குள் நுழைந்து அவனது லேப்டாப்பில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் நித்திலா..

“இங்க என்ன பண்ற நித்திலா???” என்ற மித்ராவின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள் தோளைக் குலுக்கிக்கொண்டு “சும்மாதான்... போர் அடிச்சது அதான் சும்மா பார்க்கலாம்னு வந்தேன்..” என்றாள்.

“சரி சரி... இங்கெல்லாம் வரக்கூடாது முதல்ல வெளிய போ...” என்று சிடுசிடுத்தவள் நித்திலாவை வெளியே தள்ளாத குறையாக விரட்டிவிட்டு கதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டாள்.

மித்ராவின் கையில் இருந்த சாவியை பார்த்துக் கொண்டே திரும்பிச் சென்றாள் நித்திலா..

அன்றிரவு பயங்கர மழை கொண்டிக் கொண்டிருந்தது.. நித்திலா ஹாலில் உட்கார்ந்திருந்தவள் வேலைக்காரி மித்ராவுக்கு பால் எடுத்து செல்வதை கண்டதும் அதை வாங்கிக் கொண்டவள் தானே மித்ராவிடம் கொடுத்துவிடுவதாக கூறி எடுத்துச் சென்றாள்.

அறையில் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த மித்ராவிடம் பாலை கொடுக்க அதை எடுத்துக் கொண்டவள் “இங்க என்ன லுக்.. வெளிய போ...” என்று நித்திலாவை விரட்டிவிட்டாள்.

அவளும் ஒன்றும் பேசாமல் வெளியே சென்றுவிட்டாள்.

பாலை குடித்த மித்ராவுக்கு கொஞ்ச நேரத்திலே தலை சுற்றுவதை போல் இருக்க எழுந்து கொள்ள முயற்சித்தவள் அப்படியே தொப்பென்று கட்டிலில் மயங்கி விழுந்தாள்..

அவள் விழுந்ததும் அறைக்குள் நுழைந்த நித்திலா அங்கிருந்த ட்ரோயரை ஒவ்வொன்றாக திறந்து பார்த்து உள்ளிருந்த சாவியை எடுத்துக் கொண்டவள் ஆதியின் ஆஃபிஸ் ரூமிற்குள் நுழைந்தாள்..

ஆதி வீட்டுக்கு வரும்போது வீடே நிசப்தமாக இருந்தது.. வழக்கமாக அவன் வீட்டுக்குள் நுழையும்போதே ஓடி வந்து அவனை அணைத்துக் கொள்வாள் மித்ரா.. ஏதோ சரியில்லை என்று நினைத்தவன் மித்ராவின் அறைக்குள் சென்று பார்த்தான்..

உறங்கிக் கொண்டிருந்தாள்...

இவ்வளவு சீக்கிரமாக தூங்க மாட்டாளே உடம்பு சரியில்லையா என்று நினைத்துக் கொண்டு அவளை எழுப்பினான்...

அரை மயக்கத்தில் கண் விழித்தவள் “நித்திலா......” என்று கூறிவிட்டு மீண்டும் மயங்கிவிட இது நித்திலாவின் வேலை என்று புரிந்து கொண்டவன் அவளை கொன்றுவிடும் வேகத்துடன் அவர்களது அறைக்குள் சென்றான்..

அங்கு கட்டிலில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள் அவனது அருமை மனைவி.. புயல் வேகத்தில் அறைக்குள் நுழைந்தவன் கட்டிலை நெருங்கி “ஏய்... மித்ராவ என்னடி பண்ணின...” என்று அவளை பிடித்து உலுக்க அவனை நிதானமாக ஏறிட்டவள் “ரொம்ப பேசினாங்க அதான் பால்ல தூக்க மாத்திரை...” என்று மடங்கியிருந்த தன் விரல்களை அவன் முன்னால் நீட்டி “ஒன்னு, ரெண்டு, மூனு, நாலு போட்டு கொடுத்தேன்...” என்றாள்.. .

அதில் ஆத்திரம் தலைக்கேற பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு நொடி பார்த்தவன் அப்படியே குண்டுக்கட்டாக அவளை தூக்கிச் சென்று பால்கனியில் போட்டுவிட்டு உள்ளே வந்து கதவை லாக் செய்து கொண்டான்..

வெளியில் பேய்க் காற்றுடன் மழை பொழிந்து கொண்டிருந்ததில் நித்திலா வெளியே நின்று கதவை திறக்க சொல்லி கத்த கண்ணாடிக் கதவுகளுக்கு இந்த பக்கம் நின்று அவள் குளிரில் அவஸ்தை படுவதை சற்றுநேரம் திருப்தியுடன் பார்த்துக் கொண்டு நின்றவன் அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

நித்திலா எவ்வளவு கெஞ்சி கதறியும் இரக்கமே இல்லாமல் திரும்பி சென்றவனின் முதுகை வெறித்துப் பார்த்தவள் அப்படியே பால்கனியில் கிடந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.. குளிர்காற்று உடலை துளைத்துக் கொண்டு சென்றதில் சோபாவில் கால்களை குறுக்கி உட்கார்ந்து துப்பட்டாவினால் உடலை சுற்றி மூடிக் கொண்டாள்.

இடி, மின்னல் பீதியை கிளப்பினாலும் பயப்படக்கூடாது என்று ஒருவித பிடிவாதத்துடன் வெகுநேரம் உட்கார்ந்து இருந்தவள் திடீரென இரு வலிய கரங்கள் அவளை பற்றித்தூக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

குளித்து உடைமாற்றி வந்திருந்தான்.. அவனை முறைத்து பார்த்தவள் எதுவும் பேசாமல் அவன் மார்பில் ஒன்றிக்கொள்ள ஒருநொடி அவன் உடலில் தோன்றி மறைந்த சிலிர்ப்பை அவளால் உணர முடிந்தது..

அவளை தூக்கிச் சென்று மென்மையாக கட்டிலில் கிடத்தியவன் போர்வை எடுத்து கழுத்து வரை போர்த்திவிட்டான்.

அறையை விட்டு வெளியேறப்போனவன் கதவருகே சென்றதும் அவளை ஒருமுறை திரும்பிப் பார்க்க... அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. மீண்டும் அவளை நோக்கி வந்தவன் அவள் முகம் பற்றி இழுத்து முத்தமிட்டான்... பின்பு விழிகள் சிவக்க அவளை விடுவித்தவன் “எதுக்குடி என் மாமாவுக்கு மகளா பொறந்த??” வேதனையுடன் கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறியிருந்தான்...

அவன் முகத்தில் தெரிந்த வேதனை அவள் மனதை பிசைய அவள் விழிகள் கலங்கியது... ஆதி நித்திலாவின் அறையில் இருந்து வெளியே வந்தவன் கொட்டும் மழையை வெறித்துக்கொண்டு நின்றிருந்தான்..

அந்த இரவு அவர்கள் இருவருக்குமே தூங்கா இரவாகிப்போனது...



தொடரும்.........



‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 31 போட்டாச்சு மக்களே..... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...


 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 32:



நீ சீக்கிரம் ஷாப்பிங் முடிச்சிட்டு வா... நான் இங்க வெய்ட் பண்றேன்...” மித்ரா..

“என்ன மித்ராக்கா நான் மட்டும் தனியா ஷாப்பிங் பண்றதுக்கா உங்கள கூப்டு வந்தேன்... ரெண்டு பேரும் போகலாம் வாங்க...” மித்ரா மறுக்க மறுக்க அவளை வற்புறுத்தி தன்னுடன் அழைத்துச் சென்றாள் நித்திலா..

பார்வையை கூர்மையாக்கி ஒவ்வொரு இடமாக அலசியவள் இறுதியாக விழிகள் பளபளக்க ஒரு இடத்தை காண்பித்தாள்..

“மித்ராக்கா அந்த ஷாப் போகலாம்....”

அந்த ஷாப்பை பார்த்து முகம் சுளித்த மித்ரா “அங்க ரொம்ப சீப்பா இருக்கும்... வேற ஷாப் போகலாம்...” என்றாள்..

“இல்ல... இல்ல... இங்க கொஞ்சம் சீப்பா இருந்தாலும் நிறைய ட்ரென்டியா வெச்சிருப்பாங்க.. நமக்கு ஏதாவது ஐடியா கிடைக்கும்... ஜஸ்ட் போய் பார்த்துட்டு போகலாம்...”

அந்த ஷாப்பிற்குள் நுழைந்தார்கள் இருவரும்...

ஒவ்வொரு உடையாக பார்த்துக்கொண்டே வந்த நித்திலா அங்கு நின்றிருந்த ஒரு பெண்மணியின் மேல் மோதிவிட “ஐம்... ஐம் சாரி ஆன்ட்டி....” என்றாள் அவரிடம்..

“பரவாயில்லம்மா...” என்றுவிட்டு அவள் முகம் பார்த்த அந்த பெண்மணியின் விழிகளில் அப்பட்டமான அதிர்ச்சி..

“நீ... நீ....” என்று அவளை பார்த்து தடுமாறியவர் “ஆதியோட வொய்ஃப் தானே??” என்றார்..

“ஆமா ஆன்ட்டி!!!” என்று புன்னகைத்தாள் நித்திலா..

அவ்வளவுதான்...

நித்திலாவை குரோதத்துடன் பார்த்தவர் “எங்கள இந்த நிலமைக்கு ஆளாக்கிட்டு நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்களா... நீங்க யாரும் நல்லாவே இருக்க மாட்டீங்கடி... நாசமா போயிடுவீங்க...” பொது இடம் என்றும் பார்க்காமல் அவர் நித்திலாவிடம் சத்தம்போட அவர்களை நோக்கி விரைந்தாள் மித்ரா..

“என்னாச்சு நித்து....” என்றவளை கண்ட அந்த பெண்மணி “ஓஹ்!!! நீ அந்த தனஞ்செயன் பொண்ணுதானே... நீங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டுலதான் இருக்கீங்களா...” என்றார் எள்ளலாக...

“ஆஹா... அவனே இவள ஆள் வெச்சி கடத்துவானாம்... அப்புறம் இவ தங்கச்சி உன்ன கட்டிக்குவானாம்... பழி எல்லாத்தையும் தூக்கி என் புருஷன் மேல போட்டுட்டு உங்க ரெண்டு பேரையும் ஒன்னா ஒரே வீட்டுல வெச்சி குடும்பம் நடத்துவானாம்... சை... அவன்லாம் ஒரு மனுஷனா... என் புருஷன் அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருப்பார்... இப்படி அவர படுத்த படுக்கையா ஆக்கிட்டானே பாவி... பாவி...” அவர் திட்டிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்த ஜீவிகா,,,

“அம்மா... என்ன இது.. எதுக்கு இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல கத்திக்கிட்டு இருக்க... எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க பாரு...” என்று அவரை அதட்டியவள் நித்திலா, மித்ரா இருவரையும் வெறுப்புடன் முறைத்துவிட்டு தன் அன்னையை இழுத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றாள்.



——————————————————




காரை ஓட்டிக்கொண்டே அருகில் உட்கார்ந்திருந்த மித்ராவை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டாள் நித்திலா...

வரும்போது மித்ராதான் காரை ஓட்டிக்கொண்டு வந்திருந்தாள். இப்போது தலைவலிப்பதாக கூறி நித்திலாவிடம் காரை எடுக்க சொல்லிவிட்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள்..

“நித்திலா எங்கே போயிட்டு இருக்க நீ...” கார் வேறு எங்கோ செல்வதை உணர்ந்து கேட்டாள்..

“இந்த பக்கமா அத்தானோட ப்ராஜக்ட் ஒன்னு போயிட்டு இருக்காமே... பார்த்துட்டு போயிடலாம்....” நித்திலா....

“ஆர் யு மேட் நித்திலா... தேவ் பிஸியா இருப்பான்.. இன்னேரத்துக்கு போய் அவன டிஸ்டர்ப் பண்ண சொல்றியா இடியட்...” என்றாள் எரிச்சலுடன். அவள் இருக்கும் மனநிலையில் நித்திலாவின் செயல் இன்னும் கடுப்பை கிளப்பியது..

“அதெல்லாம் ஒன்னும் டிஸ்டர்ப் பண்ணல... சும்மா பார்த்துட்டு போயிடலாம்... என்னன்னே தெரியல இன்னைக்கு எனக்கு அத்தான ரொம்பவே பார்க்கனும் மாதிரி இருக்கு...” என்றவளை திரும்பி முறைத்தாள் மித்ரா.. வேறு ஒன்றும் சொல்லவில்லை..

ஓரிடத்தில் சென்று காரை நிறுத்தியவள் “வாங்க மித்ராக்கா” என்று நடக்க ஆரம்பித்தாள்..

கட்டிட நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் அந்த இடமே பயங்கர இரைச்சலாக இருந்தது..

நித்திலா முன்னால் நடந்து செல்ல அவள் பின்னால் அசுவாரஸ்யமாக பார்வையை ஓடவிட்டுக் கொண்டு நடந்தாள் மித்ரா... அவளுக்கு தெரியும் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் சென்று அவன் முன்னே நின்றால் ஆதி நிச்சயமாக கோபப்படுவான் என்று.. நித்திலாவின் முதுகை முறைத்தாள்... ‘இவளுக்கு இந்த நேரத்துல அவன பார்க்கனுமா...’

“அதோ அத்தான்...” என்று நித்திலா கூற திரும்பியவள் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது போல் அப்படியே நின்றுவிட்டாள்.

சற்று தூரத்தில் ஆதியுடன் பேசிக்கொண்டிருந்தது சாட்சாத் அவளை கடத்திச்சென்ற அதே ஜெகன்தான்..

தன் கண்ணையே நம்ப முடியாமல் பார்த்தவள் முன்னால் நடந்து கொண்டிருந்த நித்திலாவின் கை பிடித்து தடுத்தாள் “நித்து... இ... இவன்..” எதையோ உணர்ந்து கொண்டதில் அவள் குரல் தடுமாறியது.. நித்திலாவை பற்றியிருந்த கை லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.
.

அவள் யாரை கேட்கிறாள் என்பதை அறிந்தே இருந்தவள் “யாரு அவனா??? அது ஜெகன்... அத்தானோட ரைட் ஹேன்ட் மாதிரி.. ஏன் உங்களுக்கு தெரியாது???” என்றாள் நித்திலா.. உனக்குத் தெரியாத ரகசியம் கூட அவனிடம் இருக்கிறதா என்பதுபோல் ஆச்சரியத்துடன் ஒலித்தது அவள் குரல்..

மித்ரா ‘இல்லை’ என்பது போல் தலையை மட்டும் ஆட்டினாள்.. அவளால் பேச முடியவில்லை..

மித்ராவின் காதருகே குனிந்தவள் “பிசினஸ்ல அத்தானோட எதிரிங்கள கூட இந்த ஜெகன் சத்தமே இல்லாம தூக்கிடுவானாம் மித்ராக்கா... நான் கேள்விப்பட்டேன்...” சேர்த்து சொன்னாள்..

“வீட்டுக்கு போலாம் நித்து..” கரகரத்த குரலில் கூறிய மித்ரா விறுவிறுவென்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள்...

“இவ்வளவு தூரம் வந்துட்டு அத்தான பார்க்காம போறதா... ஒரு ஹாய்,,, ஹலோவாவது சொல்லிட்டு போகலாம் வாங்க..”

நித்திலாவை திரும்பி பார்த்து ‘வாயை மூடிக் கொண்டு வா..’ என்பது போல் வாயில் ஒற்றை விரல் வைத்துக் காட்டியவள் வேகமாகச் சென்று காரில் ஏறிக் கொண்டாள்.

நித்திலாவின் முன்னால் அழுதுவிடக் கூடாது என்று பெரும்பாடு பட்டு அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தவளை பார்க்க நித்திலாவுக்கே பாவமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது..... உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே வேண்டும்..





################################






“என்னக்கா என்னமோ முக்கியமான விஷயம் பேசனும்னு வர சொன்னீங்க..”

சகுந்தலாதேவி அழைத்ததற்கிணங்க அவரை பார்க்க வந்திருந்தார் நிர்மலா...

“ஆமா நிர்மலா... முக்கியமான விஷயம்தான்... ஆனா உன்கிட்ட எப்படி சொல்றதுன்னுதான் தயக்கமா இருக்கு...” இழுத்தார் சகுந்தலாதேவி..

“என்கிட்ட என்னக்கா உங்களுக்கு தயக்கம்.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க..” நிர்மலாவின் வற்புறுத்தலில் “ம்ஹூம்..” ஒரு பெருமூச்சுடன் ஆரம்பித்தார் சகுந்தலா..

“உனக்கே தெரியும் நிர்மலா.. ரொம்ப வருஷமா எங்க குடும்பம் பெரிய கடன்ல இருந்து இப்போத்தான் மீண்டிருக்கோம்...” என்றவர் நிர்மலாவை அழுத்தமான ஒரு பார்வை பார்த்தார்..

“அக்கா என்னை மன்னிச்சிடுங்கக்கா அந்த சமயத்துல என்னால உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாம போயிடுச்சி...” குற்றவுணர்ச்சியுடன் நிர்மலா கூற,,,

“நீ என்னம்மா பண்ணுவ... தப்பெல்லாம் எங்க மேலதான்...” எங்கோ வெறித்துக்கொண்டு கூறியவர் “சரி அதைவிடு... இப்போ உள்ள விஷயத்துக்கு வருவோம்... ஆர்யா புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிக்கப் போறதா சொன்னான்... அதுக்கு நிறைய பணம் தேவைப்படுது நிர்மலா.. பேங்க்ல லோன் எடுக்கப்போறதா சொன்னான்.. எனக்கு அதுல உடன்பாடில்ல.. எங்ககிட்ட சொத்துன்னு இப்போதைக்கு இந்த வீடும்,,, நம்ம கிராமத்து வீடும்தான் இருக்கு.. ரெண்டும் பல கோடி போகும்... அதான் இந்த வீட்டை வித்துட்டு ஊருக்கே போயிடலாம்னு இருக்கேன்... ஊர்ல இருக்க நம்ம வீட்டுல உனக்கும்தானே பங்கு இருக்கு... அதான் உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு போகலாம்னு வர சொன்னேன்..... உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே.....”

“அக்கா!! என்ன பேசுறீங்க நீங்க... பணம் தேவைப்படுதுனா அதுக்காக குடியிருக்கிற வீட்டை விற்க போறீங்களா...”

“வேற என்னம்மா பண்றது...”

“ஏன்க்கா... என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கனும்னு தோணலையா உங்களுக்கு...” ஆதங்கத்துடன் கேட்டார் நிர்மலா..

“ரேணுகா சொன்னாம்மா... சித்திகிட்ட கேட்டு பாருங்கம்மான்னு... நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்...” என்றார் “உன் வீட்டுக்காரரும் பசங்களும் என்ன சொல்லுவாங்களோ... சும்மாவே எங்கள கண்டாலே பிடிக்காது... இதுல அரவிந்தன் கல்யாணத்துல நடந்த பிரச்சினை வேற...”

சகுந்தலாதேவிக்கு உதவி செய்ய விஸ்வநாதன் எந்தக் காலத்திலும் அனுமதிக்கமாட்டார். அதை நிர்மலாவும் அறிந்தே இருந்தார்.. சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தவர் பின்பு முகம் பளிச்சிட,,

“அக்கா நான் வேணும்னா என் பெயர்ல இருக்கிற நம்ம பூர்வீக நிலத்தையெல்லாம் ஆர்யா பெயருக்கு எழுதி வெச்சிடுறேன்... நம்ம அம்மாவோட நகைங்க கூட என்கிட்ட தான் இருக்கு.. எல்லாமே நான் நித்திலாவுக்காகத்தான் வெச்சிருக்கேன்.. ஆர்யாவுக்கு கொடுத்தா அது நித்திலாவுக்கு கொடுத்த மாதிரி தானேக்கா...”

“வாஸ்தவம்தான் ஆனா இதெல்லாம் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது நிர்மலா.. உன் வீட்டுக்காரர் சும்மாவே எங்கள மதிக்க மாட்டாரு.. இதுல நீ உன் பெயர்ல இருக்க சொத்தையெல்லாம் ஆர்யாவுக்கு எழுதி வெச்சிட்டேனு தெரிஞ்சா....... அதெல்லாம் சாத்தியப்படாதும்மா.. இந்த வீட்டை வித்துடுறதுதான் சரி....” மீண்டும் ஒரு பெருமூச்சை வெளியிட்டார் சகுந்தலா.

“அக்கா... அதெல்லாம் வேண்டாம்க்கா... அவருக்கு தெரிஞ்சாத்தானே ஏதாவது பேசுவார்... அவருக்கு தெரிய வேண்டாம்... அவருக்கு மட்டுமில்ல யாருக்குமே தெரிய வேண்டாம்... காதும் காதும் வெச்ச மாதிரி எழுதிடலாம்...”

சகுந்தலா மீண்டும் மறுத்துப் பேசத்தொடங்க அவரை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார் நிர்மலா..

“என்னமோ போ நிர்மலா... நீ இவ்வளவு கெஞ்சி கேட்கிறதால சம்மதிக்கிறேன்... நீ சொல்ற மாதிரி எல்லாமே கடைசியில நித்திலாவுக்கு தானே சேரப்போகுது... அதுவரைக்கும் சந்தோசம்... என் பேரன் எல்லாத்தையும் பல மடங்கு பெருக்கி நித்திலாவுக்கே திரும்ப கொடுத்துடுவான்... அந்த நம்பிக்கை எனக்கிருக்கு...” பெருமையுடன் கூறினார் சகுந்தலா “அப்புறம் இதெல்லாம் யாருக்கும் தெரியாம பார்த்துக்கம்மா.. வெளிய தெரிஞ்சா நம்ம சொந்தக்காரங்களே எதையாவது சொல்லிடுவாங்க... என்னதான் அக்கா, தங்கச்சி ஆனாலும் நம்ம ரெண்டு பேரும் வேற வேற தானே...”..

“அக்கா!!!! ஏன் இந்த மாதிரி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க... நான் என்னைக்குமே உங்கள பிரிச்சி பார்த்ததில்லக்கா...”

நேரமாகிவிட்டதால் நிர்மலா வீட்டுக்கு கிளம்ப போக கனகவேலுவை உடன் அனுப்பி வைத்தார் சகுந்தலா..

நிர்மலாவை வீட்டில் விட்டுவிட்டு சாரதாவை தேடி சென்றான் கனகவேல்..

“வா கனகவேல்...” என்றாள் சாரதா..

“அடுத்த வாரம் பெரியவரோட நினைவு நாள் வருதே சாரதாம்மா.. மும்பை போறேன்... ஆதி தம்பிக்கு ஏதாவது கொடுத்து விடனும்னா சொல்லுங்க...” என்றான் பவ்யமாக..

ஆதியின் பெயரை சொன்னதும் சாரதாவின் முகம் வாடிப்போனது... மகனையும் மருமகளையும் பிரிந்து வந்த துக்கம் ஒருபுறம் என்றால் அவன் மித்ராவுக்காக தன் தாயை அவமதித்து பேசிய கோபம் மறுபுறம்..

சாரதாவின் முகம் வாடியதை கண்டு பொறுக்க முடியாதவனாய் “என்னாச்சு சாரதாம்மா... முகமே சரியில்ல... உங்களுக்கு என்ன கவலைன்னாலும் சொல்லுங்கம்மா... என்னால முடிஞ்சத செய்றேன்..” என்றான்..

“அதெல்லாம் ஒன்னுமில்ல கனகவேல்... நித்து எந்த தொல்லையும் இல்லாம நல்லபடியா இருக்காளான்னு பார்த்துட்டு வந்து சொல்லு... அதுபோதும்..” என்றாள் மித்ராவை மனதில் வைத்துக்கொண்டு..

“சரிங்கம்மா....” என்று விடைபெற்றான் கனகவேல்..



###############################






“என்ன உளர்ர.... நான் எதுக்கு உன்ன ஆள் வெச்சி கடத்தனும்...” பல்லைக் கடித்தான் ஆதி.. “அதான் அன்னைக்கே உன் தல மேல அடிச்சி ப்ராமிஸ் பண்ணேனே... இப்போ எதுக்கு மறுபடி ஆரம்பிக்கிற....”

“ஹா.... அன்னைக்கு என்மேல ப்ராமிஸ் பண்ணின தானே... இப்போ ஒரே ஒரு தடவை நித்திலா மேல சத்தியம் பண்ணி சொல்லு,,, நீ என்னை ஆள் வெச்சி தூக்கலன்னு... அப்புறம் நான் இதை பத்தி பேசவே மாட்டேன்... உன்மேல சந்தேகப்படவும் மாட்டேன்....” மித்ரா..

கோபமாக தலையை கோதியபடி தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்...

“நீதான் எதுவும் பண்ணலையே... அப்புறம் ஏன் தயங்குற... நித்திலா மேல சத்தியம்னு ஒரு வார்த்தை சொல்லு... நான் விட்டுர்ரேன்..” என்றாள்.

அவன் வாயே திறக்கவில்லை... எங்கோ பார்த்தபடி அழுத்தமாக நின்றிருந்தான்..

“சொல்லு தேவ்..... நித்திலா மேல சத்தியமா உனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்லு...”

“ஏய் முடியாதுடி...... அவ மேல எல்லாம் சத்தியம் பண்ண முடியாது..”

“ஏன்...” என்றாள் கசப்புடன் “பொய் சத்தியம் பண்ணினா உன் பொண்டாட்டிக்கு ஏதாவது ஆகிடும்னு பயமா இருக்கா....”

“மித்ரா....... நான்.....” அவன் ஏதோ சொல்ல வர கை நீட்டி தடுத்தவள் “பொய்... அத்தனையும் பொய்... உன்ன எவ்வளவு நம்பினேன்டா... துரோகம் பண்ணிட்ட இல்ல... நித்திலாவுக்காக நீ என்ன வேணாலும் பண்ணுவேன்னு தெரியும்... ஆனா இப்படி என்கிட்டயே உன் புத்திய காட்டுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல....” அவளது தொண்டை அடைத்து குரல் கமறியது “உனக்காக எல்லாரையும் பகைச்சிக்கிட்டு நாய் மாதிரி நீ சொல்றத எல்லாம் கேட்டு கேட்டு உன் பின்னாடியே வந்தேன்ல எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்.... நித்திலாவுக்காக நித்திலாவையே ஏமாத்தினவன் நீ... உன்ன நம்பினது என் தப்புத்தான்...”

பின்பு ஆங்காரமாக அவன் சட்டைக் காலரை பற்றியவள் “யாரை கேட்டு என்ன ஆள் வெச்சி கடத்தின... என்கிட்ட என்ன சொல்லிடா அமெரிக்கால இருந்து வர வெச்ச... மணமேடை வரைக்கும் வந்து எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைனு சொல்லி எழுந்திருச்சி போயிடு... நான் தாத்தாவ மிரட்டி நித்திலாவ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தானே என்கிட்ட சொன்னே... அப்புறம் ஏன் இப்படி பண்ணே...” மேலும் ஏதேதோ கூறி அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

வீட்டுக்குள் நித்திலா இருப்பதால் அவர்கள் இருவரும் தோட்டத்தில் சற்று தூரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.. பால்கனியில் நின்று அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள் நித்திலா..

அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.. ஆனால் மித்ரா கோபமாக ஆதியிடம் கத்திக் கொண்டிருப்பது புரிந்தது. ஒரு கட்டத்தில் அவனை கன்னம் கன்னமாக அடித்தாள் மித்ரா..

“வாவ்!!!!! என்னா அடி.....” என்று வாயை பிளந்தவள் உடனே தன் ஃபோனில் அந்த அற்புதமான காட்சியை படம் பிடித்துக் கொண்டாள்..

ஆதி மித்ராவின் அடிகளை அமைதியாக தாங்கிக் கொண்டு நின்றிருந்தானே ஒழிய அவளை தடுக்கவோ திருப்பி அடிக்கவோ முயலவில்லை.. அது நித்திலாவுக்கே வியப்பாக இருந்தது... லேசான பொறாமை கூட....

பின்பு சௌர்யாவுக்கு அழைத்தவள் “அத்தான் ஒரு குறும்படம் அனுப்புறேன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க..” என்றாள்

“என்ன நித்து... இப்போ என்னத்த பண்ணி வெச்சிருக்க..”

“நான் ஒன்னுமே பண்ணல அத்தான்... சின்னதா தான் கொளுத்தி போட்டேன்... இங்க பெரிசா பத்திக்கிச்சி.. நீங்க முதல்ல பாருங்களேன்..”

சௌர்யா அவள் அனுப்பிய வீடியோவை பார்க்க... அதில் மித்ரா ஆதியை கன்னம் கன்னமாக அறைந்து கொண்டிருந்தாள்.

மீண்டும் நித்திலாவுக்கு அழைத்தவன் “என்ன நித்து அவனுக்கு இந்த அடி அடிக்கிறா...” என்றான்.

“அதான் சொன்னனே..... இது வெறும் குறும்படம் தான்.. இங்க பெரிய GOT சீரிஸே ஓடிக்கிட்டு இருக்கு... உங்க ஆளு அடி பின்னிக்கிட்டு இருக்காங்க... என் புருஷன் சைலன்டா வாங்கிகிட்டு இருக்கார்...” என்று சிரித்தாள்.

கை வலிக்குமட்டும் அவனை அடித்து விட்டு அழுது கொண்டே வீட்டுக்குள் ஓடி வந்தாள் மித்ரா...

“என்னாச்சு மித்ராக்கா... ஏன் அழுறீங்க...” ஒன்றும் தெரியாதது போல் அக்கறையுடன் கேட்டாள் நித்திலா.

“அவளுக்கு லைட்டா தலைவலி... நான் பார்த்துக்கறேன்... நீ உள்ள போ...” மித்ராவின் பின்னால் வந்தவன் நித்திலாவிடம் கூறினான்..


இந்த நேரத்திலும் நித்திலாவுக்கு எதுவும் தெரியக்கூடாது என்று பேசியவனை வெறுப்புடன் பார்த்தாள் மித்ரா..

நித்திலாவிடம் திரும்பியவள் “நித்து இவன நம்பாதே... இவன் ஒரு சைக்கோ, பிராடு, வாய திறந்தாலே பொய், பொய், பொய்தான்... க்ரூக்” என்று கத்தினாள் “நம்ப வெச்சி நம்ம கையாலயே நம்ம கழுத்த அறுக்க வெச்சிடுவான்...”

‘அதான் தெரியுமே..’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவள் வெளியில் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள் நித்திலா.

நித்திலா முன்னால் மித்ரா தன்னை இப்படி பேசுவாள் என்று எதிர்பார்க்காதவன் முகம் அவமானத்தில் சிவந்தது.. அவள் அடித்தபோது கூட வாயை மூடிக்கொண்டு நின்றவனுக்கு இந்த செயல் கோபத்தை வரவழைக்க “மித்ரா... திஸ் இஸ் த லிமிட்... இன்னொரு வார்த்த பேசின... கொன்னுடுவேன்...” என்று உறுமினான்..

“ஆமா நீ அதை மட்டும்தான் செய்யல... அதையும் பண்ணிடு ஒரேடியா போய் சேர்ந்திர்ரேன்...” விரக்தியுடன் பதிலுக்கு கத்தியவள் தன் அறைக்குள் சென்று உடைகளை பேக் செய்ய ஆரம்பித்தாள்..

தன் உடமைகளுடன் வெளியே வந்தவள் ஆதியின் பக்கம் கூட திரும்பாமல் நித்திலாவிடம் “நான் போறேன் நித்திலா.... ஆனா இவன மட்டும் என்னைக்கும் நம்பிடாதே.. உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்...” என்றுவிட்டு கிளம்பினாள்...

என்னதான் மித்ரா மீது கோபம் இருந்தாலும் அவள் வீட்டை விட்டு செல்வதை தாங்க முடியாதவனாக “பேபி ப்ளீஸ்...” என்று அவள் கை பிடித்து தடுத்தான் ஆதி..

“உன் பேபி செத்துட்டா ஆதிதேவ்....” கண்ணீருடன் கூறியவள் அவன் கையை உதறித்தள்ளி அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக கோபத்துடன் எதையோ சொன்னவள் அங்கிருந்து வெளியேறியிருந்தாள்..

“மித்ரா.....” கை முஷ்டியை சுவற்றில் ஓங்கி குத்தியவன் பின்பு தலையை பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்து விட்டான்..

குனிந்திருந்த அவன் தலையை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் நித்திலா...





###############################





காலை உணவை சாப்பிட மனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி... வழக்கமாக அவனுக்கு பிடித்த உணவெல்லாம் பார்த்து பார்த்து பரிமாறுவாள் மித்ரா.. இன்று அவள் இல்லாமல் என்னவோ போல் இருந்தது அவனுக்கு..

இரவு முழுக்க அவன் தூங்கவே இல்லை.. சோபாவில் தான் உட்கார்ந்திருந்தான்.. இப்போது அலுவலகம் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் எழுந்து தயாராகி வந்தவன் சாப்பிடாமல் இருப்பதை கண்டதும் “உங்கள பார்த்தா எனக்கு பாவமா இருக்கு அத்தான்.. மித்ரா அக்கா போனா என்ன.. அதான் நான் இருக்கேன்ல.. நம்ம சாப்பிடலாம் வாங்க..” என்றாள் நித்திலா.

திரும்பி அவளை முறைத்தவன் “நீ இருக்கிறது தான்டீ எனக்கு பயமா இருக்கு..” என்றான் கோபமாக.

“அத்தான்... எனக்கு இந்த பொய், பித்தலாட்டம், ஏமாத்துறது அப்புறம் கூடவே இருந்து குழிப் பறிக்கிறது இதெல்லாம் கத்துக் கொடுத்த குரு ஒருத்தர் இருக்காரு.. நீங்க எது சொல்றதா இருந்தாலும் அவரதான் சொல்லனும்..” அவனை அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டு கூறினாள்..

இத்தனை நேரம் குழப்பத்தில் இருந்தவன் நித்திலாவின் பேச்சில் அத்தனையும் அவளது வேலைதான் என்பது புரிய கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான்..

அவளை அடித்துக் கொல்லும் ஆத்திரத்துடன் நிமிர்ந்தவனை பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள் நித்திலா..

அதில் அவள் முகத்தை ஒரு நிமிடம் ஊன்றி பார்த்தவன் “உன்னால என் நிம்மதியே போச்சுடி.. சை..” என்று சாப்பிடாமலே எழுந்து சென்று விட்டான்.

“சரிதான் போடா..” என்று அவன் காதில் கேட்கும்படி முணுமுணுத்தவள் கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு மகாராணி போல உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.


அதன்பிறகு ஆதி வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அவன் பின்னால் குட்டி போட்ட பூனையாக சுத்த ஆரம்பித்தாள் நித்திலா..

முதலில் அவளை கண்டு கொள்ளாதவன் அவளது தொல்லை தாங்க முடியாமல் “ஏய் எதுக்குடி நான் போற இடமெல்லாம் பின்னாடியே வர்ர...” என்றான் ஒருநாள்.

“வீட்டுல தனியா இருக்க போரடிக்குது அத்தான்.. அதான் ஒரு பேச்சு துணைக்கு.........” என்று இழுத்தாள்..

“ஆஹா.... போரடிச்சா தாராளமா உன் பாட்டி வீட்டுக்கு போகலாம்...” என்றான் அழுத்தமாக..

“என் புருஷன் இருக்கும்போது நான் எதுக்கு பாட்டி வீட்டுக்கு போகனும்...” முணுமுணுத்தவள் “நான் இங்கதான் இருப்பேன்... நீங்க ஒன்னும் சொல்ல தேவையில்ல...” என்றாள் கோபமாக..

இதழோரம் துடிக்க அவளை ரசனையுடன் பார்த்தவன் அவள் எதிர்பார்க்காத நேரத்தில் இடையில் கை கோர்த்து தனை நோக்கி இழுத்தான்..

தன் மீது மோதி நின்றவளை பார்த்தவன் “ஏய் என்னதான்டி வேணும் உனக்கு...???” என்றான்.. அவன் குரலில் தெரிந்த கடினம் முகத்தில் சுத்தமாக இல்லை..

அவனது கேள்விக்கு “நீதான் வேண்டும்...” என்பதுபோல் அவனை நோக்கி சுட்டுவிரலை மட்டும் அவன் மார்பில் தொட்டு காட்டினாள்...

“நான் வேணுமா??” திருப்பிக் கேட்டான் அவன் கண்களில் கிறக்கத்துடன் அவளை பார்த்து...

அவள் ‘ஆம்’ என்று தலையாட்டினாள்...

அதில் தன் அணைப்பை இறுக்கியவன் மறுகையால் தன் மார்பை தொட்டுக் கொண்டிருந்த அவளது விரலை மென்மையாக பற்றி அதை அப்படியே பின்னோக்கி வளைக்க வலியில் துடித்துப் போனாள் நித்திலா..

அதை திருப்தியுடன் பார்த்தவன் “உன் நடிப்பையெல்லாம் உன் பாட்டிகிட்டயும் சௌர்யா கிட்டயும் காட்டு... என்கிட்ட வெச்சிக்காத..” என்றவன் அவளை தொப்பென்று தரையில் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றான்... அடுத்த இரண்டு மணி நேரத்தில் பதறியடித்துக் கொண்டு நித்திலாவை தேடி ஓடி வரப்போவதை அறியாமல்..




தொடரும்........



 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியும் நிலாவும் ரொமான்ஸ் பண்ணினா அதை ஏத்துக்கிற மனநிலைக்கு எல்லாரும் வந்துட்டீங்களா மக்களே......
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 33:



“எங்கே நித்திலா....” என்றபடி புயல் வேகத்தில் வீட்டுக்குள் நுழைந்தவனை கண்ட வேலைக்காரப் பெண் பயத்தில் வார்த்தை வராமல் மாடியை நோக்கி கை காட்டினாள்..

தட தடவென படிகளில் வேகமாக ஏறிச்சென்றான்.. அறைக்கதைவை திறந்து உள்ளே நுழைந்தவன் முதலில் கண்டது வலது கையை வாயருகில் வைத்து ஊதிக் கொண்டிருந்த நித்திலாவைத்தான்..

அவளை நெருங்கி கையை பார்த்தவன் விழிகள் கோபத்தில் சிவந்தது..

“உன்ன யாருடி இந்த வேலையெல்லாம் பார்க்க சொன்னது.. அதுக்குத்தான் இங்க ஏழெட்டு பேர் இருக்காங்கல்ல...” சீறினான்..

சமைக்கிறேன் பேர்வழியென்று நித்திலா எதையோ செய்து வைத்ததில் அவளது கையில் அங்கங்கு எண்ணெய் தெறித்து பொங்கிப்போய் இருந்தது..

“நம்ம ரெண்டு பேருக்கும் சமைக்கிறதுக்கு எதுக்கு இத்தனை பேர்னுதான் அவங்கள அனுப்பிவிட்டேன்..” அவள் முணுமுணுத்தாள்.

அவளை முறைத்தவன் “ஏன்டி இப்படி என் உயிர வாங்குற... அறிவில்ல உனக்கு...” என்றவன் மென்மையாக அவளது கையை பற்றி “ரொம்ப வலிக்குதா...” என்றான்..

“ம்ம்ம்...” என்று தலையசைத்தாள் “ரொம்ப எரியுது...” என்றாள் விழிகள் கலங்க...

அவளை அணைக்கத் துடித்த கைகளை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றவன் “டாக்டர் வந்துட்டு இருக்காங்க... கொஞ்சம் வெய்ட் பண்ணுடா...” என்றான் மென்குரலில்...

பின்பு மருத்துவர் வந்து நித்திலாவின் கையை பரிசோதித்து சென்ற பிறகும் அவன் வீட்டிலேயே இருக்கவும் “அத்தான் நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கறேன்..” என்றாள் நித்திலா..

அதில் அவளது கையை சுட்டிக்காட்டி “என்னத்த பார்த்துக்கப்போற நீ... வாய மூடிட்டு தூங்குடி..” அவன் கோபமாக கூற உடனே கண்ணை மூடிக்கொண்டாள் அவள்.

அன்று மதிய உணவு வந்ததும் அவளுக்கு தேவையானவற்றை அவனே எடுத்து வைத்து ஊட்டி விடுவதற்காக வாயருகே கொண்டுவர விழிவிரிய பார்த்தவள் தயக்கத்துடன் தானே சாப்பிடுவதாக கூற அவன் அதை கண்டுகொள்ளாமல் அவள் வாயில் சாப்பாட்டை திணிக்கவும் வேறு வழியில்லாமல் உண்ண ஆரம்பித்தாள்..


அவள் காலை தரையில் வைத்தால்கூட அவன் கோபப்பட்டு எதையாவது சொல்ல “எனக்கு கைலதான் காயம்.. கால் நல்லாத்தான் இருக்கு..” என்றாள் அவன் தொல்லை தாங்க முடியாமல்..

“நீ எப்போ என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.. மூடிக்கிட்டு நான் சொல்றத மட்டும் செய்..” என்றான்..

அது போதாதென்று அவள் குளியலறைக்குள் செல்லும் போதும் அவன் பின்னால் வர “என்ன??” என்றாள் நித்திலா கலவரமாக..

“ஹெல்ப் பண்ணத்தான்....” என்றவனை பார்த்து முறைத்தவள் “ச்சீ... வாஷ்ரூம்ல என்ன ஹெல்ப் பண்ண போறீங்க நீங்க... வெளிய போங்க முதல்ல...” என்க சிரித்தானோ என்று அவள் எண்ணும் விதமான ஒரு பார்வையுடன் தலையை கோதிக்கொண்டு சென்றுவிட்டான்..

அன்று நாள் முழுக்க அவளை ஒரு குழந்தையை போல கவனித்துக் கொண்டான்..

தூங்குவதற்கு முன்பு மருத்துவர் கொடுத்த ஆயின்மென்டை மென்மையாக அவள் கையில் பூசி விட்டவன் கட்டிலில் அவள் அருகில் உட்கார்ந்து கொண்டு தலையை கோதிவிட வலியை மறந்து சுகமாக உறங்கிப் போனாள் நித்திலா..

அவள் உறங்கியதும் அவள் கையை பார்த்தான் ஆதி.. அவனுக்கு தெரியும் தீக்காயம் எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று.. அவளது கையில் பட்டும் படாமல் முத்தமிட்டவன் அந்த கையை தன் மடிமீது வைத்துக்கொண்டு உறங்கும் அவளின் முகத்தையே வெகுநேரம் பார்த்திருந்தான்..

தூக்கத்தில் அசைந்தவள் அவன் மடியில் தன் தலையை வைத்துக்கொண்டு உறங்க அதில் இன்பமாக அதிர்ந்தவன் ஆசை மேலிட அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டான்.

லேசாக தூக்கம் கலைந்தவள் “அத்தான்...” என்று முணகியவாறே அவனை நன்றாக அணைத்துக்கொண்டு உறங்க ஆரம்பிக்க அவனுக்குத்தான் மிகுந்த அவஸ்தையாகி போனது..

அவளது உடல்நிலையை மனதிற்கொண்டு தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டவன் “நிலாம்மா விடுடா..” என்றான்.

இவள் இப்படியே எதையாவது செய்து கொண்டிருந்தால் அதற்குமேலும் தன்னால் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாது என்பதை உணர்ந்தவனாக மெல்ல அவளை தன்னிடமிருந்து பிரித்துவிட்டவன் கட்டிலில் இருந்து இறங்கி சோபாவில் சென்று உறங்க ஆரம்பித்தான்...




#############################





“ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு விஷேசத்துக்கு போக போறோம்.. இதுல உனக்கு புடிச்சதெல்லாம் எடுத்துக்கம்மா...” மீராவிடம் கூறினார் சரஸ்வதி..

அவர்களது உறவில் ஒரு திருமணம்... மீராவுக்காக புடவைகளும் நகைகளும் வீட்டுக்கே வரவழைத்திருந்தார்..

ஒவ்வொரு புடவையின் விலையும் லட்சங்களில் இருக்க “எதுக்கு அத்தை இவ்வளவு காஸ்ட்லியா...” என்று தயங்கினாள் மீரா..

அவள் சொல்வது எதையும் கண்டுகொள்ளாமல் அவரே அவளுக்கு ஒவ்வொரு புடவையாக வைத்துப் பார்த்து தேர்ந்தெடுக்க அர்ஜுன் அங்கு வந்தவன் மீராவின் பக்கம் திரும்பியும் பாராமல் அங்கிருந்த புடவைகளில் வைன் ரெட் நிறத்தில் இருந்த ஒரு புடவையை கையில் எடுத்து பார்த்தான்.

ஆசையாக அந்த புடவையை வருடியவன் “இதையும் எடுத்துக்கங்கமா...” என்றான் சரஸ்வதியிடம்.

அப்போதுதான் அந்த புடவையை கண்ட சரஸ்வதி “அட இந்த புடவை என் கண்ணுல படவே இல்லை.. கொடு பார்க்கலாம்..” என்று அவனிடமிருந்து அந்த புடவையை வாங்கியவர் அதை மீராவுக்கு வைத்து பார்க்க அர்ஜுன் விழிகள் தீயை கக்கியது..

“அம்மா...” என்று கத்தியவன் “அது என் ஃப்ரென்டுக்கு கொடுக்க எடுத்தேன்...” என்றான் கோபமாக..

“ஃப்ரென்டா.... அது யாருப்பா உனக்கு புடவை கட்டுற ஃப்ரென்டு..” சரஸ்வதி புரியாமல் கேட்க “கூட படிச்ச பொண்ணும்மா...” என்றவன் சரஸ்வதியின் கையில் இருந்த புடவையை இழுத்து பறிக்க முயற்சித்தான்

மீராவின் முகம் விழுந்துவிட்டது... அவளுக்கு தெரியும் அவன் யாருக்காக அந்த புடவையை எடுத்திருப்பான் என்று... அந்த புடவையை தொடும்போது அவன் முகத்தில் தோன்றிய அந்த மென்மையும் கனிவும் ஒரே ஒரு பெண்ணுக்கானதாகத்தான் இருக்க முடியும் என்பதை இத்தனை நாட்களில் அவள் நன்றாகவே உணர்ந்திருந்தாள்..

சரஸ்வதி அந்த புடவையை கடைசிவரை அர்ஜுனிடம் தரவில்லை... “இங்கபாரு உன் ஃப்ரென்டுக்கு வேணும்னா வேற புடவை எடுத்துக்க... இது மீராவுக்குத்தான் ரொம்ப பொருத்தமா இருக்கு....” என்றுவிட்டார்..

அவன் எவ்வளவோ வற்புறுத்தி கேட்டும் அவர் கொடுக்காமல் மீராவின் கையில் அந்த புடவையை திணித்து “இவன் கெடக்குறான்... மீராம்மா இந்த புடவை உனக்குத்தான்.. நீ கல்யாணத்துக்கு இதைத்தான் கட்டிக்கிட்டு வர்ர சரியா...” என்க அவரை மறுத்துப்பேச முடியாமல் “ம்ம்ம்...” என்றாள் மீரா சங்கடத்துடன்..

வெறுப்புடன் அவளை உறுத்துப் பார்த்தவன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்...


அதன்பிறகு மீராவுக்கு எதிலுமே மனம் செல்லவில்லை... சரஸ்வதி பிடித்திருக்கிறதா என்று கேட்க புடவைகளை பார்க்காமலே ஆம் என்று தலையை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்..

தேர்ந்தெடுத்த புடவை, நகைகளை அவளிடம் கொடுத்து பத்திரமாக வைக்க சொல்ல அவற்றை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றவளை கோபத்துடன் எதிர்கொண்டவன் அவளது தலைமுடியை கொத்தாக பிடித்து “என் அம்மாவ கைக்குள்ள போட்டுக்கிட்டு உன் இஷ்டத்துக்கு ஆடலாம்னு நினைச்சியா... கொன்னுடுவேன்...” ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவன் அவளை அப்படியே உதறிவிட்ட வேகத்தில் அவளது நெற்றி கதவில் அடிபட இரத்தம் பீறிட்டது..

அதில் அவளை நோக்கி ஓரெட்டு எடுத்து வைத்தவன் பின்பு என்ன நினைத்தானோ “சை...” என்றுவிட்டு அவளை தாண்டி வெளியே சென்றுவிட்டான்...

இரக்கமே இல்லாமல் தன்னை கடந்து செல்பவனை கண்ணீருடன் பார்த்துக் கொண்டு நின்றாள் மீரா..

மருமகள் தலையில் இரத்தம் வழிய நிற்பதை கண்ட சரஸ்வதி பதறிப்போய் என்னவென்று கேட்க மீரா அவரிடம் எதுவும் சொல்லவில்லை..

மகன் கோபமாக வெளியில் சென்றதை கண்டிருந்தவருக்கு அவளது அந்த மௌனம் என்ன நடந்திருக்கும் என்பதை உணர்த்த அவளை பாவமாக பார்த்தார்..

“அம்மாடி என்னை மன்னிச்சிடும்மா... அந்த புடவைய வேணும்னுதான் உன்கிட்ட கொடுத்தேன்... இவன் இப்படி பண்ணுவான்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலம்மா...” என்றார் வேதனையுடன்..

இத்தனை நாட்களில் அவருக்கு மீராவை மிகவும் பிடித்துவிட்டிருந்தது.. மனதுக்குள் எவ்வளவு வேதனை இருந்தாலும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாது அமைதியாக சொன்னதை மட்டும் செய்துகொண்டு வலம்வரும் மருமகளை எந்த மாமியாருக்குத்தான் பிடிக்காது..

இதை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று நினைத்தவருக்கு என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.. சிவாவை அழைத்து விடயத்தை கூறியவர் “ஏதாவது பண்ணு சிவா.. இவன் தினம் தினம் எதையாவது செஞ்சி அந்த பொண்ண கஷ்டப்படுத்திட்டு இருக்கான்... இப்போ அவமேல கை வைக்கிற அளவுக்கு வந்துட்டான்.. இப்படியே போனா அவன் நாசமாகிடும்...” என்று அழுதார்...

“நீங்க கவலப்படாதீங்க மா... நான் பார்த்துக்கிறேன்... இத்தன நாளா அவனே அந்தப்பொண்ண மறக்க முடியாம தவிச்சிக்கிட்டு இருக்கான் நம்மளும் எதுவும் சொல்லி அவன கஷ்டபடுத்த கூடாதுனுதான் பொறுமையா இருந்தேன்... எப்போ அவன் மீரா மேல கை வெச்சானோ இனிமேல் நான் இத இப்படியே விட்டுட மாட்டேன்மா...” என்றவன் அப்போது அறியவில்லை அர்ஜுன் தன் முட்டாள்தனத்தால் தன்னுடைய வாழ்க்கையையும் சீரழித்துக் கொண்டு நித்திலாவின் நிம்மதியையும் கெடுத்துவிடப் போகிறான் என்பதை..





############################





காலை நேரம் நித்திலா கண்விழித்து எழும்போது ஆதியை காணவில்லை... அவளது கையில் காயம்பட்ட இந்த நான்கு நாட்களாக அவன்தான் காலையில் காபியுடன் அவளை எழுப்பி விடுவான்..

‘எங்கே காணோம்...’ என்று நினைத்தவள் அறைக்கு வெளியில் சென்று பார்க்க கீழே ஹாலில் மாட்டப்பட்டிருந்த ஜெயதேவின் படத்திற்கு மாலை போட்டுக்கொண்டிருந்தான் கனகவேல்.. கூடவே தாத்தாவின் படத்தை பார்த்துக் கொண்டு ஆதியும் அவன் அருகில் நின்றிருந்தான்..

அப்போதுதான் நியாபகம் வந்தவளாக ஓடிச்சென்று குளித்து தயாராகி கீழே வந்தாள் நித்திலா.. அவள் வரும்போது ஆதி அங்கு இல்லை... ஜெயதேவ் பயன்படுத்திய அறையில் கனகவேலுடன் உட்கார்ந்து எதையோ பேசிக் கொண்டிருந்தான்.

இவளை கண்டதும் பேச்சை நிறுத்திவிட்டு “வா..” என்பதுபோல் தலையசைத்தான்.. கனகவேல் நித்திலாவிடம் நலம் விசாரித்துவிட்டு அறையைவிட்டு வெளியேற ஆதியின் முகம் பார்த்தாள் நித்திலா.. எப்போதும் இறுக்கமாக காணப்படும் அந்த முகத்தில் லேசான சோகம் இழையோட தாத்தாவின் நினைவில் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவள்,,,

“அத்தான் ஆர் யு ஆல்ரைட்...” என்றபடி அவன் தோளில் கைவைக்க ஒரு பெருமூச்சுடன் தலையாட்டியவன் எதுவும் பேசாமல் அவளது கையை பிடித்துக்கொண்டு சற்று நேரம் உட்கார்ந்திருந்தான்..

பின்பு இருவரும் அறையை விட்டு வெளியேறும் போது
“அத்தான் ஒரு நிமிஷம்...” என்று அவனை தடுத்தவள் ஜெயதேவின் அறைக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு அறையை காண்பித்தாள்..

“கேட்கனும்னு இருந்தேன்... இந்த ரூம் மட்டும் எதுக்கு பூட்டியே இருக்கு... யாரோட ரூம் இது???” என்றாள் கேள்வியாக...

அதில் அவளை இனம்புரியாத பார்வை பார்த்தவன் “என்னோட ரூம்தான்...” என்றான்... “சின்ன வயசுல நான் யூஸ் பண்ணது...”

“உங்க ரூமா..???” ஆர்வமாக கேட்டவள் “நான் உள்ள போய் பார்க்கவா???” என்றாள் அதே ஆர்வத்துடன்..

மீண்டும் அதே பார்வையை அவள்மீது வீசியவன் “கண்டிப்பா பார்க்கனுமா..???” ஒரு மாதிரி குரலில் கேட்டான்..

அதற்கு வேகமாக தலையை ஆட்டினாள் நித்திலா..

“ஒன் மினிட்..” என்றவன் அவனுடைய ஆஃபிஸ் ரூமிற்குள் சென்று கையில் ஒரு சாவியுடன் திரும்பி வந்தான்.. அந்த அறையை திறந்துவிட உள்ளே சென்ற நித்திலா ஒரே இருளாக இருக்கவும் அவனை திரும்பி பார்த்தாள்.. பின்னால் வந்தவன் அங்கிருந்த லைட்டை போட்டுவிட அதில் அந்த அறையை பார்த்தவள் ஒரு நொடி ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டாள்..

அத்தனையும் அவள்....

இரண்டு வயது,,, மூன்று வயது,,, நான்கு வயது என்று அவளது ஐந்தாவது வயது வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள்... சிலது அவள் மட்டும் தனியாகவும் சிலவற்றில் ஆதி அவளை தூக்கி வைத்துக் கொண்டிருப்பது போலவும் சிறியது பெரியது என விதம் விதமான ஃபோட்டோக்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தன..

ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தவள் இறுதியாக மிகப் பெரியதாக இருந்த ஃபோட்டோ ஒன்றை விரல்கள் நடுங்க தொட்டுப் பார்த்தாள் நித்திலா.. ஆதி அவளை தூக்கி வைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிடுவது போல் எடுக்கப்பட்டிருந்தது அந்த புகைப்படம்...

அவள் அதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே பின்னாலிருந்து அவளை அணைத்தவன் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான் ஆதி.. அவனது அணைப்புக்குள் அடங்கியவாறே திரும்பி நின்றவள்...

“எப்போ???” என்று கேட்டாள்...

“உன்னோட மூனு வயசுல எடுத்தது...” என்றான்...

“எனக்கு எதுவுமே நியாபகம் இல்ல அத்தான்...”

அவளது தலையை மென்மையாக தடவியவன் “நீ ரொம்ப சின்ன பொண்ணுடா...” என்று கூறி நெற்றியில் முத்தமிட்டான்.

“அப்போலாம் உங்களுங்கு என்ன ரொம்ப பிடிக்குமா...” அறியாக் குழந்தையாக கேட்டவளை வாஞ்சையுடன் பார்த்தவன் “எப்பவுமே உன்ன பிடிக்கும்... உன்ன மட்டும்தான் பிடிக்கும்...” கரகரப்பான குரலில் கூறினான்.

“அப்புறம் ஏன்....” என்று நித்திலா எதையோ கேட்கவர அவள் வாயில் ஒற்றை விரல் வைத்து “ஸ்ஸ்ஸ்....” என்றவன் “எதுவும் கேட்காதடி...” அடுத்த வார்த்தை அவள் பேசுமுன் அவளது உதடுகள் அவனிடம் சிக்கியிருந்தன..

அவளது கரங்களும் அவன் முதுகில் படர்ந்து இறுக்கிக் கொள்ள இருவரும் ஒருவரில் ஒருவர் மூழ்கியிருந்த நேரம் “சின்ன முதலாளி...” என்று கனகவேல் அழைக்கும் சத்தம் நெருக்கத்தில் கேட்கவும் விழிகள் சிவக்க அவளை விடுவித்தவன் வேகமாக அங்கிருந்து வெளியேறிவிட்டான்...

அவன் சென்றதும் லேசான வெட்கத்துடன் அந்த அறையை சுற்றிப்பார்த்தவள் அங்கிருந்த கப்போர்டை திறந்து பார்க்க அவளது சிறுவயது உடைகள், காலனிகள், இன்னும் சில அணிகலன்கள் போன்றவை இருக்க ஒவ்வொன்றையும் ஆர்வமாக பார்த்தாள் நித்திலா..

இறுதியாக அங்கிருந்தில் ஒரு ஃபோட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தவள் அதை அவர்களுடைய தற்போதைய அறையில் மாட்டி வைத்தாள்...

அன்று மாலை அவளை அழைத்தவன் ஒரு முக்கியமான இடத்திற்கு செல்வதற்காக தயாராகுமாறு கூறினான்.

“அத்தான் எங்கே போறோம்னு சொல்லுங்க ப்ளீஸ்....” செல்லும் வழியெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தாள் நித்திலா...

“போனதும் தெரிஞ்சிட போகுது...” என்று மட்டும் கூறியவனை முறைத்தவள் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்..

காரை ஒரு பங்களாவின் முன் சென்று நிறுத்தியவன் “வா...” என்றுவிட்டு இறங்க அவளும் கோபமாகவே இறங்கியவள் அவர்களை நோக்கி ஓடி வந்த அந்த குழந்தையை கண்டதும் முகம் மலர “நிலா...” என்றாள்...

அந்த நிலா ஓடி வந்து நித்திலாவை கட்டிக்கொள்ள இருவரையும் பொறாமையுடன் பார்த்தான் ஆதி... “உன் ஆன்ட்டிய பார்த்ததும் என்னை கழட்டி விட்டேல்ல...” என்று அவன் குழந்தையை முறைக்க அதைப்பார்த்து நித்திலாவும் குட்டி நிலாவின் பெற்றோரும் வாய்விட்டு சிரித்தனர்...

“பேபி.. உன் ஆதி அங்கிள் விட்டா அழுதுடுவார் போல இருக்கு... அவர்கிட்டயே போடா கண்ணா...” என்றவள் குழந்தையை அவனிடம் நீட்ட உடனே வாங்கிக் கொண்டவன் அவளை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடியபடி வீட்டுக்குள் நுழைந்தான்...

பொதுவான சில நல விசாரிப்புக்களின் பின் அவர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க ஆதி நிலாவுடன் விளையாடுவதை ரசித்துப் பார்த்தாள் நித்திலா... இதுவரை அவனை இப்படி அவள் பார்த்ததே இல்லை... சுற்றத்தை மறந்து குழந்தையோடு குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டிருந்த இந்த ஆதி அவளுக்கு புதிது...

அவளது பார்வையை உணர்ந்த ஹரிணி நிலாவின் தாய் “ஆதிக்கு நிலான்னா உயிர்...” என்க அவளை திரும்பி பார்த்தாள் நித்திலா... “அவ பொறந்ததுல இருந்து அவனுக்கு எல்லாமே அவதான்... அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நாங்க கூட போக முடியாது...” என்றவள் “அவளுக்கு நித்திலான்னு பெயர் வெச்சதும் ஆதிதான்...” சேர்த்து சொன்னாள்...

அதைக் கேட்டதும் நித்திலாவின் முகம் மாறிவிட்டது..

“இதே மாதிரிதான் சின்ன வயசுல ஒரு பொண்ணு... அவமேல அவன் உயிரே வெச்சிருந்தான்.. இப்பவும் அவமேல உயிர வெச்சிருக்கான்... அவள எப்படியெல்லாம் பார்த்துக்குவான் தெரியுமா...” ஹரிணி சொன்னதும் விழிகள் கலங்க அவளை ஏறிட்டாள் நித்திலா..

உடனே நித்திலாவின் கையை பற்றிக் கொண்டவள் “உங்கள கஷ்டப்படுத்தனும்னு சொல்லல... அவன் ரொம்ப கஷ்ட பட்டுட்டான் நித்திலா அதனால சொல்றேன்...” அதற்குமேல் அவர்களுடைய சொந்த விடயத்தை பற்றி தான் பேசுவது நன்றாக இருக்காது என்பதால் அந்த பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டாள் ஹரிணி..

ஹரிணியும் அவளது கணவன் கிஷோரும் ஆதியுடன் சிறுவயதிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள்... அவர்களுக்கு ஆதியை பற்றி நிறைய விடயங்கள் தெரிந்திருந்தாலும் நித்திலாவுக்கும் அவனுக்கும் இடையில் நடந்த எதுவும் சரியாக தெரிந்திருக்கவில்லை... நித்திலாவுக்கு எதையோ புரிய வைத்துவிடும் நோக்கத்தில் சொல்லியிருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை அவர்கள்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்...

குழந்தையுடன் பேசியபடி திரும்பியவன் நித்திலா தன்னை பார்ப்பதை உணர்ந்து கேள்வியாக ஒற்றை புருவம் உயர்த்த
குழந்தையை தன்னிடம் அனுப்புமாறு செய்கை செய்தாள் நித்திலா..

அவன் அனுப்பியதும் அவள் குழந்தையுடன் பேசுவதும் ஆதியை பார்வையிடுவதுமாக இருக்க அதை கண்டவனுக்கு மிகுந்த சங்கோஜமாக இருந்தது.. அவளது விழிகளில் தெரிந்த மயக்கம் அவனை வேறு ஒரு உலகிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தது..

கிஷோருடன் பேசிக் கொண்டிருந்தவன் அவள் பக்கம் திரும்பாமலே அவள் தன்னை மீண்டும் மீண்டும் பார்ப்பதை உணர்ந்து உடல் சூடேற தலையை கோதிக்கொண்டான்..

அவனுக்கு இப்போதே நித்திலா வேண்டும்போல் தோன்றியதில் அதற்குமேல் அங்கு உட்கார்ந்திருக்க முடியாமல் கொஞ்ச நேரத்திலே அவளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்..

அவளும் அவன் அழைத்ததும் மறுக்காமல் உடன்வர காரை அசுர வேகத்தில் செலுத்தியவன் வீடு வந்து சேரும் வரை இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை...

அவன் காரை நிறுத்தியதும் அவள் இறங்கப்போக கை பிடித்து தடுத்தவன் அவளது கன்னத்தை பற்றி “எதுக்குடி அப்படி பார்த்த???” என்று கேட்க அவளிடம் எந்த பதிலும் இல்லை... பார்வையை தழைத்து அமைதியாக இருந்தவளை பார்க்க பார்க்க அவனுள் மோகத்தீ கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்தது... “நித்திலா...” தாபத்துடன் அவளை அழைத்தவன் அடுத்தநொடியே அவள் இதழ்களை சிறை செய்திருந்தான்..

அவள் தடுக்கவில்லை..

அவனாகவே அவளை விடுவித்தவன் காரிலிருந்து இறங்கி மறுபக்கம் வந்து அவளை கைகளில் ஏந்தியவன் அவளது இதழோடு இதழ் பதித்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்து படுக்கையறையை நோக்கி சென்றான்..

அவளை மென்மையாக கட்டிலில் கிடத்தி அவள் மீது கவிழ்ந்தவன் நித்திலாவின் முகமெங்கும் முத்தமிட்டான்... அவளும் அவனை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டவள் பதிலுக்கு அவன் முகமெங்கும் முத்தமிட அவளாக கொடுத்த முதல் முத்தத்தில் ஒரே ஒருநொடி அவன் உடல் அசைவற்று நின்றது..

தனது லேசர் பார்வையால் அவளது விழிகளை ஊடுறுவி அந்த விழிகளுக்குள் எதையோ தேடியவன் பின்பு அவள் காதோரமாக குனிந்து அவளது காதில் முத்தமிட்டு “ஐ லவ் யூ நித்திலா... ஐ லவ் யூ சோ மச்....” ஹஸ்கி வாய்சில் கூற அந்த வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தில் இப்போது செயலற்று உறைந்து போவது நித்திலாவின் முறையானது..

அவள் முத்தமிட்ட அந்த நொடியிலேயே அவன் மனதில் காலம் காலமாக குடிகொண்டிருந்த தவிப்பு கரைந்து காணாமல் போக அதற்குமேல் தன் மனதை அவளிடம் திறக்க அவனுக்கு எந்த தடையும் இருக்கவில்லை... அவனது இத்தனை வருட காதலை அவளிடம் கூறிவிட்டான்...



அவளை முழுதாக ஆட்கொள்ள துடித்த மனதிற்கு கடிவாளமிடாமல் அதன் போக்கிலே விட்டுவிட அங்கு அழகிய ஒரு யுத்தம் ஆரம்பித்தது... (ஜஸ்ட் ஆரம்பிச்சது அவ்வளவுதான்..😏😏) அத்தனை நேரம் அவனுக்கு இசைந்து கொடுத்துக் கொண்டிருந்தவள் அவன் அடுத்த கட்டத்திற்கு செல்ல முனையும்போது “அத்தான் இப்ப... இப்ப வேண்டாம் ப்ளீஸ்....” என்றாள்..

அதில் புருவங்கள் முடிச்சிட அவளை நிமிர்ந்து பார்த்தவன் “ஏன்???” என்றான்.. விழிகளில் கோபம் துளிர்விடத் தொடங்கியிருந்தது..

“இப்ப இதெல்லாம் வேண்டாமே.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்...” தயங்கி தயங்கி கூறியவளை அனல் பார்வையால் துளைத்தவன்,,

“அதான் ஏன்???” என்றான்... நொடியில் அவன் முகம் கோபத்தை தத்தெடுத்துக் கொண்டது... “பிடிக்கலையா...?? அப்புறம் எதுக்குடி இவ்ளோ நேரம் என்கூட....” அதற்குமேல் பேச முடியாமல் கட்டிலில் கையை ஓங்கி குத்த அவனது கோபத்தை உணர்ந்தவள் தன் கரங்களால் அவன் முகத்தை தாங்கி முத்தமிடப்போக..

“ஏய் விடுடி...” அவன் அவளை உதறித்தள்ளினான்..

“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க அத்தான் ப்ளீஸ்..” என்று கெஞ்சும் குரலில் கேட்டவள் அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்..

அதில் சற்று மலையிறங்கியவன் “நான் ரொம்ப வருஷம் வெய்ட் பண்ணிட்டேன் நித்திலா..” என்றான் அவள் முகம் பார்க்காமல்..

அவன் முகத்தில் தெரிந்த தவிப்பை உணர்ந்தவள் “அத்தான் எனக்கு டூ மன்த்ஸ் போதும்... உங்க பேர்த்டே வருதில்ல அதுவரைக்கும்....” என்றாள் அவன் தலையை கோதிவிட்டபடி...

“ஏய் அதுக்கு இன்னும் ரெண்ண்ண்டு மாசம் இருக்குடி....”

“ம்ஹூம்... வெறும் ரெண்டு மாசம்தான்....” என்க விழிகளை மூடித்திறந்தவன் ஒரு பெருமூச்சுடன் அவளை விட்டு விலகினான்... பின்பு சீரியஸாக “ரெண்டு மாசத்துக்கப்புறம் மறுபடியும் ஏதாவது சொன்னே...” என்று அவளது கன்னத்தை பற்றி “நான் விட்டுக் கொடுக்கிறது இதுவே கடைசியா இருக்கட்டும் நித்திலா..” குரலில் தீவிரத்துடன் கூற,,,

“தேங்க்ஸ் அத்தான்...” என்றவள் புன்னகையுடன் அவனை அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தாள் நித்திலா...





படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் மக்களே......

 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 34 (1):




“பொண்டாட்டி என்னடி பண்ற....” என்று கேட்டபடி அவளை பின்னாலிருந்து அணைத்தான் ஆதி...

“ம்ம்ம்.... பார்த்தா தெரியல...” என்றவள் அவனது சீண்டல்களில் “அத்தான் விடுங்க... இப்படி கிஸ் பண்ணியே என்னை சாகடிக்கிறீங்க...” என்று அவன் கையில் காபி கப்பை கொடுக்க “நீதான் வேற எதுவும் பண்ண விடமாட்டேங்கறியே...” என்றான் அவன் சோகமாக..

“அதுக்குனு இப்படியா...” என்று போலி கோபத்துடன் அவனை முறைத்தவள் அங்கிருந்து நகரப்போக அவளைப் பிடித்து இழுத்தவன் தான் குடித்த காபி கப்பை அவள் கையில் திணித்து விட்டு அவள் குடித்துக் கொண்டிருந்ததை தான் எடுத்துக் கொண்டான்...

அவனது அந்த செயலை வெகுவாக ரசித்தாள் நித்திலா... அது என்று இல்லை அவன் எதை செய்தாலும் ரசிப்பாள்... அவள் ரசிப்பதை அவன் ரசிப்பான்..

இந்த இரண்டு மாதங்களில் அவன் காட்டிய காதலில் மூழ்கி திளைத்துதான் போனாள் அவள்.. அவன் எதை செய்தாலும் அதில் கட்டுக்கடங்காத காதல் இருக்கும்.. ஆசை இருக்கும்... அக்கறை இருக்கும்...

அவன் உலகமே அவள்தான் என்பதுபோல அவ்வளவு காதலை காட்டினான்.. இருவருமே காலம் காலமாக காதலித்து கொண்டிருப்பவர்களை போல நடந்து கொண்டனர்..

மறந்தும்கூட நித்திலாவோ ஆதியோ பழைய விடயங்கள் எதையும் பேசுவதில்லை.. நித்திலா கேட்பாள் என்றுதான் அவன் முதலில் நினைத்தான் ஆனால் அவனை பற்றி ஏற்கனவே அவள் தெரிந்து வைத்திருந்ததனாலோ அல்லது பழையதை பேசி இப்போதிருக்கும் மகிழ்ச்சியை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்தாளோ அவள் ஒன்றுமே கேட்கவில்லை...

அது அவனுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது... அவள் கேட்டாலும் எதையும் சொல்லும் மனநிலையில் அவன் இல்லை.. இந்த நிமிடம் அவனுடைய நித்திலா அவனுடன் இருக்கிறாள்.. அவனை காதலிக்கிறாள்... அவனுடன் ஒன்றி வாழ்கிறாள்.. அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது.. அவளுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் அவன் ஆழ்ந்து அனுபவித்தான்..

அவர்களுக்கிடையில் யாரும் வருவதை கூட அவன் விரும்பவில்லை... அவளுக்கு அப்பாவாக, அம்மாவாக, காதலனாக, தோழனாக அனைத்துமாக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவனது பல வருட ஆசையை இப்போது ஆசை தீர நிறைவேற்றிக் கொண்டான்..

அவளும் அவனுக்கு சற்றும் சளைக்காமல் தன் காதலை காட்டினாள்... இருவரும் ஓருயிராய் கலந்து அழகிய காதல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.. அவளது அருகாமையில் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள அவன் படாத பாடு பட்டாலும் அவள் கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காக அவளிடம் எல்லை மீறி நடந்து கொண்டதில்லை..

உலகில் அவன் பார்த்த,, ரசித்த அத்தனை இடங்களுக்கும் அவளை அழைத்துச் சென்று காண்பித்தான்... கிட்டத்தட்ட ஒருமாதமாக அவர்கள் ஒவ்வொரு நாடாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர்... தற்போது இருவரும் நெதர்லாந்தில் இருந்தார்கள்...

கால்வாய்களே தெருக்களாக மிளிரும் ஆம்ஸ்டர்டாம் நகரின் ப்ரைவேட் டின்னர் க்ரூஸில் அன்று இரவு உணவிற்காக அவளை அழைத்துச் சென்றான் ஆதி... சுற்றி சுற்றி குறுக்கும் நெடுக்காக ஓடும் கால்வாய்களும் பார்க்கும் இடமெல்லாம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கும் பாலங்களும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு...

மனதிற்கு பிடித்த இடம்.. அருகில் உயிரான மனைவி... அவனுக்கு சொர்க்கத்தில் இருப்பதை போல இருந்தது.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அதை கண்டவள் “இப்படியே பார்த்துட்டு இருந்தா எப்போ சாப்பிடுறது.. எனக்கு பசிக்குது..” என்று சிணுங்கினாள்..

“நான் பார்க்கலடி... நீ சாப்பிடு..” என்று அவன் அவளுக்கு ஊட்டிவிட பதிலுக்கு அவளும் அவனுக்கு ஊட்டி விட்டாள்..

அவர்களது மகிழ்ச்சியான தருணத்திற்கு இடையூறு விளைவிப்பது போல் நித்திலாவின் அலைப்பேசி அழைக்க அதனை எடுத்து பார்த்தவள் கட் செய்து வைத்துவிட்டாள்...

விடாது மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டிருக்க அவளை கேள்வியாய் நோக்கியவன் “யாரு??” என்றான்.

“வேற யாரு... பாட்டிதான்...” என்றாள் நித்திலா சலிப்புடன்..

“ஓஹ்...” என்றவன் வேறு எதுவும் பேசவில்லை.. ஆனால் பார்வை மட்டும் நித்திலாவை துளைத்து கூறு போட்டுக் கொண்டிருந்தது..

ஒரு கட்டத்தில் கடுப்பானவள் “ப்ச்ச்... இவங்களுக்கு வேற வேலையே இல்ல... எப்ப பாரு கால் பண்ணி எதையாவது சொல்லிக்கிட்டு இருப்பாங்க...” என்று ஃபோனை ஆஃப் செய்து தன்னுடைய ஹேன்ட் பேக்கில் போட்டுவிட அதன்பிறகுதான் அவன் முகம் இயல்பு நிலைக்கு திரும்பியது...

வழக்கமாக இரவுகளில் அவளை முத்தமிட்டு கொஞ்சி அவள் காலில் விழாத குறையாக கெஞ்சிய பிறகுதான் அவளை தூங்க விடுவான் ஆதி... அன்று அப்படி எந்த சேட்டைகளிலும் ஈடுபடாமல் சாதாரணமாக அவளை தன் கைவளைவுக்குள் வைத்துக் கொண்டு புருவங்கள் முடிச்சிட யோசனையுடன் படுத்துக் கொண்டிருந்தவனை புரியாமல் பார்த்தாள் நித்திலா..

அவன் கன்னத்தை கை தாங்கியவள் “என்னாச்சு அத்தான்...” என்று கேட்க தன் சிந்தனை கலைந்தவனாக அவள் முகம் பார்த்தவன் ‘ஒன்றுமில்லை..’ என்பதுபோல் தலையாட்டினான்..

நித்திலா உறங்கும் வரை அவளது தலைமுடியில் விரல்களை நுழைத்து கோதிவிட்டவன் அவள் நன்றாக உறங்கியதும் எழுந்து அவர்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் பால்கனியில் வந்து நின்று கொண்டான்..

இந்த இரண்டு மாதமாக இல்லாத அலைப்புறுதல் இப்போது அவன் மனதில் தோன்ற ஆரம்பித்திருந்தது.. தவிப்புடன் வெகுநேரம் நின்று கொண்டிருந்தவன் பின்னாலிருந்து மிருதுவான கரங்கள் தன்னை அணைப்பதை உணர்ந்ததும் “பேபி தூங்கலயாடி...??” என்றான்..

“மஹூம் இப்போல்லாம் உங்க பக்கத்துல தூங்கினாத்தான் தூக்கம் வருது அத்தான்.. நீங்க எழுந்ததும் என் தூக்கமும் போயிடுச்சு...” என்றவள் எம்பி அவன் பின் கழுத்தில் முத்தமிட அதில் கிளர்ந்தவன் இத்தனை நேரம் இருந்த இறுக்கமான மனநிலை மாறி அவளை முன்னோக்கி இழுத்தான்...

தன் மீது மோதி நின்றவளை அலேக்காக தூக்கி கொண்டவன் “நான் இல்லேன்னா தூக்கம் வராதா...” கிறக்கத்துடன் கேட்க,,, அவள் இல்லையென்பது போல் தலையசைத்தாள்..

“நான் இருந்தாலும் தூக்கம் வராதுதான்...” என்றான் அவன் கட்டிலை நோக்கி நடந்தவாறே...

“எப்படி..???” அவள் புரியாமல் கேட்க,,, “ம்ம்ம் இப்படித்தான்...” என்றவன் அவளை கட்டிலில் கிடத்தி அவள் மீது சரிந்தான்...

அவனை தடுத்தவள் “அத்தான் இது தப்பு... நான் டைம் கேட்டிருக்கேன்...” என்றாள் அவனை தன்னிடமிருந்து பிரித்துவிட்டவாறு...

“ஏய் எனக்கு தெரியும்டி.... அதெல்லாம் பண்ணல... இதுவேற..” என்றவன் அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டான்...

கூடலில்லாத கூடலில் அனலில் பட்ட மெழுகாய் துடித்தவளை திருப்தியுடன் விடுவித்தவன் “இன்னும் ஒரே ஒரு வாரம்தான்... அப்புறம் இருக்குடி உனக்கு...” என்றதும் முகம் சிவக்க அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் நித்திலா...

தன் ஒட்டு மொத்த தாபத்தையும் ஒற்றை முத்தமாக்கி அவளது உச்சந்தலையில் பதித்தவன் மனக்கிலேசம் நீங்கி சுகமாக அவளை அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்..


மறுநாளே இருவரும் இந்தியா திரும்பி விட்டனர்.. இத்தனை நாள் நித்திலாவுடன் சுற்றிக்கொண்டு திரிந்ததில் அவனுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் தலைக்கு மேல் இருந்தன.. ஆதி தன் கம்பெனி,, வேலையென்று மூழ்கிவிட நித்திலா குட்டி நிலாவுடன் தன் நேரத்தை கடத்தினாள்..

ஆதி காலையில் கிளம்பியதும் இவள் ஹரிணி வீட்டுக்கு சென்று நிலாவை அழைத்துக் கொண்டு வந்து விடுவாள்.. நாள் முழுக்க குழந்தையை தன்னுடன் வைத்து பார்த்துக் கொள்வாள் நித்திலா.. நிலாவும் நித்திலாவுடன் ஒன்றிக் கொண்டாள்... அவர்களுக்குள் அழகான ஒரு உறவு மலர்ந்திருந்தது..




###########################






அந்த வீட்டில் சாப்பிடக்கூட முடியாமல் தட்டை அளைந்து கொண்டிருந்தாள் மீரா.. கொஞ்ச நாட்களாக அவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் பறிபோனதைப் போல் உணர்ந்தாள் அவள்...

இப்போதெல்லாம் அர்ஜுன் அவளை கண்டாலே திட்டுவதும் எரிந்து விழுவதுமாக இருந்தான்... அவன் எதிரில் செல்லக்கூட பயந்து கொண்டு மறைந்து மறைந்து வலம் வருவாள்.. அந்த அளவுக்கு அர்ஜுனும் அவனது பாட்டியும் அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தனர்...

வேண்டாத மருமகள் கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்பது போல் அவள் எதை செய்தாலும் அதில் குறை சொல்லி அவளை எடுத்தெறிந்து பேசிக் கொண்டிருப்பார் அர்ஜுனின் பாட்டி....

அர்ஜுன் அதற்கும் ஒருபடி மேல சென்று அவளை மற்றவர்கள் முன் அவமானப்படுத்த ஆரம்பித்திருந்தான்.. இரண்டு நாட்களுக்கு முன்பு புவனா மீராவை பார்க்க வந்திருந்தாள்.. அவளது மகனுக்கு உடம்பு சரியில்லை மருத்துவ செலவுக்கு பணம் தர முடியுமா என்று கேட்க மீராவும் சரஸ்வதியிடம் கூறி வாங்கி கொடுத்தாள்...

அர்ஜுன் வீட்டுக்கு வரும்போது புவனாவை கண்டவன் சரஸ்வதியிடம் என்னவென்று கேட்க அவரும் விகல்பமில்லாமல் மகனிடம் நடந்ததை கூற மீராவை அழுத்தமாக பார்த்துக் கொண்டே,,, “இவளே இந்த வீட்டுல தண்டசோறு சாப்பிட்டுக்கிட்டு ஒட்டிக்கிட்டு இருக்கா... இதுல இவள தேடி வர்ரவங்க போறவங்களுக்கெல்லாம் பணத்த தூக்கி தூக்கி கொடுத்தா கொஞ்ச நாள்ள நான் பிச்சை தான் எடுக்கனும்..” என்றான் சத்தமாக அத்தனை பேர் காதிலும் விழுவதை போல்...

அவனுடன் வந்திருந்த அவனது நண்பர்களில் சிலர் அவன் பேச்சை கேட்டதும் தங்களுக்குள் எதையோ கூறி சிரித்தனர்..


இதே அர்ஜுன்தான் ஒரு காலத்தில் நித்திலாவுடன் பழக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக பொது தொண்டு செய்கிறேன் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணத்தை வாரி வாரி இறைத்துக் கொண்டிருந்தான்... புவனாவுக்கு பணம் கொடுத்ததெல்லாம் அவனுக்கு ஒரு விடயமே இல்லை... மீராவை காயப்படுத்த வேண்டும் என்று நினைத்தான்.. அதை மிகச்சரியாக குறி தவறாமல் அடித்தும் விட்டான்...

பேரன் ஆரம்பித்து விட்டதை முடிக்கும் விதமாக அர்ஜுனின் பாட்டியும் தன் பங்குக்கு பேச ஆரம்பித்தார்...

“இவள மாதிரி அன்னக்காவடி கூட வாழ்ந்தா கடைசியில பிச்சைதான் எடுக்கனும் பேராண்டி... இவள அடிச்சி துரத்தி விட்டுட்டு உனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வெச்சாத்தான் என் கட்டை வேகும்...” என்க சரஸ்வதிக்கே அவரது பேச்சில் ஆத்திரம் வந்துவிட்டது...

மாமியாரை எதிர்த்து பேசினால் மீராவுக்கு பேசியதை போல இரண்டு மடங்கு சரஸ்வதியை பேசுவார் என்பதை அறிந்திருந்ததால் கையாலாகாதவராக நின்றிருந்தார் அவர்... வழியும் கண்ணீரை துடைக்க கூட மறந்தவளாக பார்த்திருந்தாள் மீரா...

அவளது தந்தை அவ்வளவாக வசதி இல்லாவிட்டாலும் அவளை எந்த குறையும் இல்லாமல் பொத்தி பொத்தி வளர்த்திருந்தார்.. மற்றவர்களிடம் சாதாரணமாக பேசுவதற்கே தயங்கும் கூச்ச சுபாவமுள்ள பயந்த பெண் அவள்.. இதுபோலெல்லாம் பேசும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதே அவளுக்கு இப்போதுதான் தெரிகிறது... அவள் இதுவரை பார்த்த,, வாழ்ந்த உலகம் வேறு.... கொடிய மிருகங்கள் நிறைந்த காட்டுக்குள் தனித்து விடப்பட்டதை போல உணர்ந்தாள் அவள்…

அதையும் விட அவளை அதிகம் தாக்கியது அப்போதுதான் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியில் சென்ற புவனா பின்பக்க வழியாக சமயலறை பக்கம் திரும்பி வந்தவள் அங்கு கண்ணீருடன் நின்ற மீராவை அழைக்க தன்னுணர்வுக்கு வந்தவள் புவனா அறியாத விதமாக முகத்தை துடைத்துக் கொண்டு “என்னக்கா...” என்றாள்.. எவ்வளவோ முயன்றும் அழுகையில் கமறிய குரலை மறைக்க முடியவில்லை..

“அது... அது வந்து மீராம்மா இன்னொருத்தங்க கிட்ட கூட பணம் கேட்டிருந்தேன்... இப்போத்தான் கால் பண்ணினாங்க...” என்று தன் கையிலிருந்த அந்த பழைய மாடல் ஃபோனை காட்டியவள் “அவங்களே பணம் கொடுக்கிறதா சொல்லிட்டாங்க மீராம்மா... அதனால இந்த பணத்தை உன் அத்தைகிட்டயே கொடுத்துடும்மா...” என்றவள் மீராவை பரிதாபமாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள்..

அந்தப்பார்வையே சொல்லாமல் சொல்லியது அர்ஜுன் பேசிய அனைத்தையும் அவள் கேட்டுவிட்டாள் என்று... அவள் மட்டுமல்ல அந்த வீட்டுக்கு தொடர்புள்ளவர்கள் அனைவருக்கும் அவளது நிலை தெரியும்... ஒருசிலர் அவளை பரிதாபமாக பார்ப்பார்கள்.. ஒருசிலர் ஏளனமாக பார்ப்பார்கள்.. அது இரண்டையுமே அவளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை... ஒவ்வொரு முறையும் கூனிக்குறுகி போவாள் மீரா... இப்படி இத்தனை பேர் முன்னிலையில் தினம் தினம் அவமானப்படுவதற்கு பதிலாக உயிரை மாய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது அவளுக்கு...





###########################



நிர்மலாதேவி ஒரே கொதிப்புடன் சுற்றிக் கொண்டிருந்தார்... இப்போதெல்லாம் நித்திலா அவருடன் சரியாக பேசுவதே இல்லை.. எப்போது அழைத்தாலும் அழைப்பை துண்டித்து விடுகிறாள் அல்லது அவளது ஃபோன் ஆஃப் செய்யப்பட்டிருக்கும்...

அவள் ஆதியை பழிவாங்குவதற்காகத்தான் திருமணம் செய்திருக்கிறாள் என்றுதான் அவரும் இத்தனை நாள் நினைத்திருந்தார்.. அவர்களுக்குள் காதல் மலர வாய்ப்பே இல்லை என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்..

ஆனால் போற போக்கை பார்த்தால் அவர் நினைத்தது தவறோ என்று தோன்றியது.. காலம் காலமாக காதலிப்பவர்கள் போல இருவரும் நாடு நாடாக சுற்றுவதும் நெருக்கத்துடன் நின்று கொண்டு நித்திலா வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் போடுவதும்... சஞ்சனா அவளுடைய ஃபோனில் இருந்த ஆதி, நித்திலாவின் புகைப்படத்தை அனைவரிடமும் காண்பிக்க அதை வாங்கிப் பார்த்த நிர்மலாவின் முகம் கோபத்தில் சுருங்கியது... ‘இவ மனசுல என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கா...’

ஆதியுடன் இப்படி நெருங்கி பழக வேண்டாமென அவளை எச்சரிப்பதற்காக அழைத்தால் அவள் அவருடன் பேசினால்தானே.. அன்று காலை சாரதாவுடன் பேசிக் கொண்டிருந்தவள் நிர்மலா ஃபோனை வாங்கி பேச ஆரம்பிக்கும் போது கட் செய்து விட்டாள்...

அவள் வேண்டுமென்றே செய்கிறாள் என்று புரிந்து போனதில் அவருக்கு கொலைவெறியே வந்துவிட்டது... ஏற்கனவே அவனிடம் சூடு பட்டும் மீண்டும் இப்படி முட்டாள்தனம் செய்கிறாளே என்றிருந்தது அவருக்கு.. ‘இவளுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..’ இன்னும் இரண்டே நாட்களில் அவரை வானில் பறக்க வைக்கும் சம்பவம் நடக்கவிருப்பதை அறியாமல் பொருமிக் கொண்டிருந்தார்..




தொடரும்......


 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2BDE1427-BAB8-48D8-825F-1B0479ED6BEF.jpeg

அர்ஜுன் மீராக்கு ஒரு டீ........




அவன் வழக்கமாக நள்ளிரவு தாண்டித்தான் வீட்டுக்கு வருவான்... இதுவரை இவ்வளவு சீக்கிரமாக வந்ததில்லை... அவனை கொஞ்சமும் இந்த நேரத்தில் அவள் எதிர்பார்க்கவில்லை... அவனுமே மழையில் நனைந்திருந்தான்...

அவளை பார்த்துக் கொண்டே கதவை அறைந்து சாத்திவிட்டு உள்ளே நுழைந்தவன் லேசான தடுமாற்றத்துடன் அவளை நெருங்கவும் அடுத்து அவன் என்ன செய்ய போகிறான் என்பதை அவளது மனம் உணர்த்த பயத்துடன் சேலையை அள்ளி தன்மீது போர்த்துக் கொண்டவள் பயத்தில் பின்னோக்கி நகர ஒரே தாவலில் அவளை எட்டிப் பிடித்து தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் அவளுடன் கட்டிலில் சரிந்தான்...





யூடி ஈவ்னிங் வரும் என்று கூறிக்கொண்டு 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 34 (2):


நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிசினஸ் பார்ட்டிக்காக நித்திலாவை அழைத்து வந்திருந்தான் ஆதி... இருவரும் ஜோடியாக அவன் கருப்பு நிற சூட்டிலும் அவள் பழுப்பு வண்ண புடவையிலும் மற்றவர்களின் கவனத்தை கவர பலரும் அவர்களது ஜோடி பொருத்தத்தை பாராட்டினர்..

அவளை வீட்டில் வைத்து புடவையில் பார்த்ததிலிருந்தே அவன் பார்வை அவளை விட்டு இம்மியும் நகரவில்லை...

ஹரிணி, கிஷோர் இருவரும் நிலாவை அழைத்துக் கொண்டு வந்திருந்ததால் நிலா நித்திலாவிடம் தாவிக் கொண்டாள்.. ஆதியும் கிஷோரும் வேறு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க நித்திலா, ஹரிணி இருவரும் வேறு பக்கம் சென்று உட்கார்ந்திருந்தனர்..

நிலா அங்கேயும் இங்கேயுமாக ஓடித்திரிந்தவள் கண்ணிலிருந்து மறைய அவளை தேடிச்சென்ற நித்திலாவின் முன் சட்டென்று வந்து நின்றான் ஒருவன்...

“ஹாய்.....” என்று அவள் முன் கை நீட்டியவன் “ரன்வீர்...” என்று தன் பெயரை கூற நித்திலாவுக்கும் அவனை ஏற்கனவே தெரிந்துதான் இருந்தது.. அதை அவனிடம் காட்டிக் கொள்ளாது தலையை மட்டும் அசைத்து “ஹாய்...” என்றவள் அங்கிருந்து நகரப்போக,,,,

“ஒன் மினிட்.....” என்று அவளை தடுத்தவன் தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து அவளிடம் நீட்டினான்... “நம்ம மீட் பண்ணனுமே நித்திலா....”

ஏதோ காலம் காலமாக பழகியவர்கள் போல அவன் பேசியதில் கடுப்பானவள் “நம்ம எதுக்கு மீட் பண்ணனும்...” என்றாள் சற்று காரமாக...

“மீட் பண்ணி பேசலாம்.... பழகலாம்... ஆதி பாய் பத்தி நீ தெரிஞ்சிக்க நிறைய விஷயம் இருக்கு ஹனி..... எல்லாமே பேசலாம்....” என்க “ஷட் அப்...” என்று சீறியவள் விலகி நடக்க ஆரம்பித்தாள்....

செல்லும் அவளையே நக்கல் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் “போடி போ... இன்னும் கொஞ்ச நாள்ள இந்த ரன்வீர் யார்னு தெரிஞ்சிக்குவ.....”



###############################





மொட்டை மாடியில் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் மீரா... அன்று மாலைதான் அவளது தந்தையை பார்த்துவிட்டு வந்திருந்தாள்... நாட்கள் செல்லச்செல்ல அவரது நிலை மேலும் கவலைக்கிடமாகத்தான் மாறிக் கொண்டிருந்தது.. அன்றுகூட அவளிடம் எதையோ சொல்ல வந்தவர் அப்படியே நினைவிழந்து விட்டார்....

கொஞ்ச நாட்களாகவே அவர் தன்னிடம் எதையோ சொல்ல நினைக்கிறாரோ என்று அவளுக்கு ஐயம் தோன்றியது.. அவளும் அவர் என்ன சொல்கிறார் என்று ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள் ஆனால் அவருக்கோ பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்னமே மூச்சுத்திணறி அப்படியே மூர்ச்சையாகி விடுகிறார்....

எப்படி வாட்டசாட்டமாக இருந்த மனிதர் இப்படி உருக்குலைந்து போய் விட்டாரே... தந்தையை நினைத்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்... தன்னுடைய வாழ்க்கையை எண்ணி அழுதாள்.. இந்த வீட்டில் தன்னுடைய நிலை என்ன என்பதை நினைத்து அழுதாள்..

அவளைப் பார்த்து வானமும் அழுததோ.... சர சரவென்ற சத்தத்துடன் மழைத்துளிகள் அவள் மீது விழுந்து நனைக்க அதன்பிறகுதான் மழை பொழிவதை உணர்ந்து அங்கிருந்து எழுந்து சென்றாள்... அதற்குள்ளாகவே அவளது ஆடை பாதி நனைந்து விட்டிருந்தது...

ஒருவழியாக அறைக்குள் வந்து சேர்ந்தவள் நனைந்த சேலையை மாற்ற துவங்கினாள்... அவளது நேரமோ என்னவோ ஏதோ யோசனையிலே வந்தவள் கதவை சரியாக தாழிட மறந்து போனாள்...

வேறு புடவையை மாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் ஏதோ உறுத்த அறை வாசலை நோக்கி திரும்பியவள் அங்கு கதவு நிலையின் இரு புறமும் கைகளை ஊன்றிக் கொண்டு குடிபோதையில் சொருகிய விழிகளுடன் நின்றிருந்தவனை கண்டதும் மூச்சு விடவும் மறந்தவளாக அச்சத்துடன் நின்றிருந்தாள்...

அவன் வழக்கமாக நள்ளிரவு தாண்டித்தான் வீட்டுக்கு வருவான்... இதுவரை இவ்வளவு சீக்கிரமாக வந்ததில்லை... அவனை கொஞ்சமும் இந்த நேரத்தில் அவள் எதிர்பார்க்கவில்லை... அவனுமே மழையில் நனைந்திருந்தான்...

அவளை பார்த்துக் கொண்டே கதவை அறைந்து சாத்திவிட்டு உள்ளே நுழைந்தவன் லேசான தடுமாற்றத்துடன் அவளை நெருங்கவும் அடுத்து அவன் என்ன செய்ய போகிறான் என்பதை அவளது மனம் உணர்த்த பயத்துடன் சேலையை அள்ளி தன்மீது போர்த்துக் கொண்டவள் பயத்தில் பின்னோக்கி நகர ஒரே தாவலில் அவளை எட்டிப் பிடித்து தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் அவளுடன் கட்டிலில் சரிந்தான்...

அவளுடைய அத்தனை எதிர்ப்புக்களையும் மீறி அவளை ஆட்கொள்ள தொடங்கியவன் “நிலா பேபி ஐ லவ் யூ...” என்று நொடிக்கொரு முறை கூறிக் கொண்டே அவளை ஆண்டு முடித்திருந்தான்...

எந்த பெண்ணாலும் ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒரு காரியத்தை செய்துவிட்டு தான் என்ன செய்தோம் என்பதை கூட உணராதவனாக நித்திலாவின் பெயரை புலம்பியவாறே உறங்கிப் போனான் அர்ஜுன்..
அவனிடமிருந்து தன்னை பிரித்தெடுத்துக் கொண்டு குளியலறைக்குள் ஓடியவள் கொட கொடவென வாந்தியெடுத்தாள்.... அருவருப்பில் அவளது உடம்பெல்லாம் தகித்தது...

ஷவரைத் திறந்துவிட்டு அதன் அடியில் நின்றவள் ஓவென்று கதறியழ ஆரம்பித்தாள்.... தன் கணவன் இன்னொரு பெண்ணை மனதில் நினைப்பதையே ஒரு மனைவியால் தாங்கிக் கொள்ள முடியாது... இவன் தன்னையே இன்னொருத்தியாக நினைத்து தொட்டுவிட்டதை எண்ணி தாங்கமாட்டாமல் தரையில் சரிந்தவள் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்...

விடியும் வரை அவள் குளியறையிலே அழுது கரைய ஒருத்தியை குற்றுயிராக்கிய உணர்வேயில்லாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.......




#############################





காலை எழுந்ததில் இருந்தே பரபரப்பாக இருந்தான் ஆதி... அன்று அவனது பிறந்தநாள்..

“ஹாப்பி பேர்த்டே அத்தான்......” அவனது நெற்றியில் முத்தமிட்டு அதிகாலையிலே எழுப்பி விட்டிருந்தாள் நித்திலா...


குளித்து தயாராகி வந்தவன் “பேபி இன்னைக்கு ஆஃபிஸ் போகலடி... என் செல்ல குட்டில... இப்பவே ஆரம்பிச்சிடலாம்டி...” என்க இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள் “அத்தான் ஒழுங்கா ஆஃபிஸ் கிளம்புங்க... மத்ததெல்லாம் நைட்க்குத்தான்... “ என்றாள்...

“பேபி ப்ளீஸ்டி....” என்று கெஞ்சியவன் அவளை அப்படியே சுவற்றில் தள்ளி இதழ்களை சிறை செய்தான்....

வெகு நேரத்திற்கு பின் விடுவித்ததும் மயக்கத்துடன் அவன் முகம் பார்த்தவள்... “இப்போ இது போதும்... நீங்க சமத்தா ஆஃபிஸ் போயிட்டு வருவீங்களாம்... ஈவ்னிங் நீங்க வந்ததும் நம்ம ரெண்டு பேரும் உங்க பேர்த்டே செலிபிரேட் பண்றோம்...” என்றாள் அவனது டையை சரி செய்து விட்டபடி..

“உயிர வாங்குறேடி...” அவன் கோபமாக கூறினான்..

“அத்தான் நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்... அதுக்காகத்தான் சொல்றேன்...”

“யாருக்குடி வேணும் உன் சர்ப்ரைஸெல்லாம்.... எனக்கு நீதான் வேணும்....” அவன் விழிகளில் மோகம் வழிந்தது.. விலகி நின்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான்...

அந்த பிடிவாதக்காரனின் நெற்றியில் இதழ் பதித்தவள் “அத்தான் இந்த சர்ப்ரைஸ் நீங்க லைஃப் லாங் மறக்கவே கூடாது... அதுக்கு நான் எல்லாம் ரெடி பண்ண வேண்டாமா... நீங்க வீட்டுலேயே இருந்தா எப்படி பண்றதாம்.... இப்ப கிளம்புங்க.... ஈவ்னிங் நீங்க என்ன சொன்னாலும் நான் வேற பேச்சே பேசாம கேட்டுக்குவேன்....”

ஒருவழியாக அவனை கிளப்பிவிட்டவள் அவன் சென்றதும் வீட்டை அலங்கரிக்கும் வேலைகளை ஆரம்பித்தாள்...

ஆதி காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் நித்திலாவின் நினைவில்தான் மூழ்கியிருந்தான்... அவனுக்கு அன்று வீட்டை விட்டு கிளம்பும் எண்ணமே இருக்கவில்லை.. நாள் முழுக்க அவளுடனே இருக்க வேண்டும் என்று நினைத்தான்.. அன்று அவன் முக்கியமான ஒருசில ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும்.. அந்தே ஒரே காரணத்துக்காகத்தான் சென்று கொண்டிருக்கிறான்...


எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனையும் முடித்துவிட்டு நேரத்துடன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தான்... பாவம் அன்று தனக்கு அடிமேல் அடி விழப்போவதை அவன் அறியவில்லை...

அலுவலகம் சென்றதும் காதில் விழுந்த முதல் செய்தியே முக்கியமான இரண்டு ஒப்பந்கள் கைநழுவிப் போனதைதான்.. அதைக் கூட அவன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.. ஆனால் அவனுக்கு கிடைக்க வேண்டிய பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசாங்க கான்ட்ராக்ட் வேறொருவருக்கு கிடைத்திருந்தது.. இதை அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை...

அவனுடைய பிஏ சொன்ன தகவலை கேட்டு எதுவோ அவன் மனதை உறுத்த ஆரம்பிக்க அந்த உறுத்தலை ஒதுக்கித்தள்ளியவன் அடுத்து என்ன செய்ய வேண்டிய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்...





##################################






“டேய் மச்சான் என்னடா ஆச்சு... சொல்லித் தொலையேன்டா.....” சிவந்த விழிகளுடன் தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தவனை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தான் ப்ரசாத்.....


அன்று காலை அர்ஜுன் தாமதமாக எழுந்தவன் கட்டிலில் தான் கிடந்த கோலத்தை கண்டு பதறிப்போய் சுற்றுமுற்றும் பார்த்தான்... கட்டிலுக்கடியில் சிதறிக் கிடந்த அவனுடைய உடைகள் நடந்து முடிந்த கதைகளை சொல்லாமல் சொல்ல தலையை பிடித்துக் கொண்டவன் ஒவ்வொன்றாக யோசிக்க ஆரம்பிக்க இரவு முழு போதையில் இருந்ததால் முழுவதுமாக நினைவில் வரவிட்டாலும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் நிழல்போல் அவன் கண்முன்னால் தோன்றி செல்ல அவனுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது....

முட்டாள்தனமான காரியத்தை செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தவன் குளியலறைக்குள் சென்று உடம்பெல்லாம் மீண்டும் மீண்டும் சோப்பை தேய்த்து தேய்த்து குளித்தான்... அவனுக்கு அவ்வளவு அருவருப்பாக இருந்தது...

“போயும் போயும் இந்த மீராவை.....” என்று நினைத்தவன் ஏதோ நித்திலாவுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டது போல அவன் மனதில் பாரம் ஏறிக்கொள்ள அதற்குமேல் அவனால் ஒரு நிமிடம்கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை... உடனே ப்ரசாத்தை தேடி சென்றுவிட்டான்....

அர்ஜுன் அருகில் உட்கார்ந்தவன் “மச்சான் நீ இப்புடியே உட்கார்ந்திருந்தா என்னடா அர்த்தம்... ப்ராப்ளம் என்னன்னு சொன்னாத்தானேடா தெரியும்.....” ப்ரசாத் மீண்டும் மீண்டும் கேட்க “தப்பு பண்ணிட்டேன் மச்சான்..... ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.....” என்றவன் பின்பு நடந்த அனைத்தையும் ப்ரசாத்திடம் கூற ஆரம்பித்தான்...

அவன் சொன்னதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன் “அடச்சே இவ்வளவுதானா... இதுக்காடா இவ்வளவு ஃபீல் பண்ற....” என்றான் ப்ரசாத்.... “நீயென்ன வேணும்னா பண்ணின??? ட்ரிங் பண்ணியிருந்த அதனால இந்த மாதிரி ஆகிடுச்சி... இதுவே நீ கான்ஷியஸா இருந்திருந்தா அவள இப்படியெல்லாம் பண்ணியிருப்பியா....????”

“சே... சே... அவ பக்கத்துல கூட போயிருக்கமாட்டேன்...” உடனடியாக பதில் வந்தது அவனிடமிருந்து...

“அவ்வளவுதான்.... மேட்டர் ஓவர்.... குடிச்சட்டு உனக்கே தெரியாம செஞ்ச தப்புக்கெல்லாம் எதுக்குடா இப்புடி ஃபீல் பண்றே.... ஒருவேள நீ போதையில இருக்கேன்னு தெரிஞ்சி அவளே உன்ன சாட்யூஸ் பண்ணிருக்கலாம்...”

அர்ஜுனுக்கும் அப்படித்தான் தோண்றியது... “ஆமாடா... எனக்கு சரியா நியாபகம் இல்ல பட் நான் ரூம்க்குள்ள போகும்போது அவ சாரிய என்னமோ பண்ணிக்கிட்டு இருந்தா......” என்று அவன் யோசிக்க ஆரம்பிக்க,,,,

“விடு மச்சான்... ரொம்பலாம் யோசிக்காதே.... உன்ன கைக்குள்ள போட்டுக்க அவ வேணும்னே இதெல்லாம் பண்ணியிருக்கா.... அப்பத்தானே அவ இஷ்டத்துக்கு ஆட முடியும்... இதை வெச்சி ஏதாவது ப்ளான் பண்ணிருப்பா.... நீ எதுவுமே நடக்காத மாதிரியே மெயின்டைன் பண்ணு.... அவள கண்டுக்கவே கண்டுக்காத... முதல்ல நைட் டைம்ல குடிச்சிட்டு வீட்டுக்கு போறத நிறுத்து மாம்ஸ்.....” அவன் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச குற்ற உணர்ச்சியையும் துடைத்து எறிந்துவிட்டு பழியை அழகாக மீராவின் பக்கம் திருப்பிவிட்டான் ப்ரசாத்.....




################################







முக்கியமான ஒரு வேலையில் மூழ்கியிருந்தவன் அப்போதுதான் எதேர்ச்சையாக ஃபோனை பார்க்க மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருப்பதை கண்டதும் “ஷிட்....” எழுந்துவிட்டான் ஆதி...

அன்று அவனுக்கு இருந்த டென்ஷனில் வேறு எந்த நினைவும் இல்லாமல் வேலையிலே மூழ்கியிருந்தவனுக்கு அப்போது அன்றைய நாளின் நினைவு வர அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்... நித்திலா தனக்காக காத்திருப்பாள் என்ற நினைவில் வேகமாக காரை செலுத்தியவன் காலையில் அவன் அலுவலகத்திற்கு வந்ததிலிருந்து ஒரு முறை கூட அவள் தன்னை அழைக்கவில்லை என்பதை உணராது போனான்...

போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவனை வரவேற்றது பிங்க் மற்றும் வெள்ளை நிற தீமில் அழகுற அலங்கரிக்க பட்டிருந்த வீடு... அதை கண்டதுமே அன்று நாள் முழுக்க அவனுக்கு இருந்த மன உளைச்சல் மறைந்து போக உல்லாச மனநிலையுடன் வீட்டை சுற்றி பார்த்தவன் ‘அனைத்தும் அவளா செய்தாள்....’ என்ற நினைவில் நித்திலாவை பார்வையால் துழாவினான்.....

அவள் கண்ணிலேயே படவில்லை...

அவள் காலையில் சர்ப்ரைஸ் என்று கூறியிருந்ததால் எங்காவது ஒளிந்து கொண்டு எதையோ செய்யப்போகிறாளாக இருக்கும் என்று நினைத்தவன் இதழோரம் தோன்றிய குறுநகையுடன் அவள் தென்படுகிறாளா என்று பார்வையை சுழற்றியபடி தன் அறையை நோக்கி சென்றான்..

மூடியிருந்த அறையின் கதவை அவன் திறந்த நொடியில் மேலிருந்து ரோஜா இதழ்கள் அவன் தலைமீது பொழிய அதில் சிரித்தவன் “ஏய் என்னடி இதெல்லாம்.... வெளிய வா முதல்ல...” என்றான் அவள் இங்குதான் ஒளிந்திருக்கிறாள் என்று எண்ணியவனாக...

அவர்களுடைய கட்டிலில் இருதய வடிவில் மலர்களால் அலங்காரம் செய்திருந்தாள்... அதைக்கண்டதும் அவன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் தறிகெட்டு ஓட ஆரம்பிக்க “நித்து போதும்டி... வெளிய வா பேபி....” என்று மீண்டும் கூறியவன் அப்போதுதான் அறையின் மறுபக்கம் இருந்த காபி டேபிளை கவனித்தான்...

அதன்மேல் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அவனது பிறந்தநாள் கேக் அவளே செய்து வைத்திருந்தாள்... ‘ஹேப்பி பேர்த்டே அத்தான்...’ என்று அதன் மீது எழுதப்பட்டிருந்தது... அந்த கேக்கை பார்த்தவன் கண்கள் அடுத்து அதற்கு அருகில் கடிதம் போல மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதத்திற்கு சென்றது... அதன் மேல் ஒற்றை ரோஜாவை வைத்திருந்தாள்...

இத்தனை நேரமாக ஆளே கண்ணில் படாமல் கடிதம் வைத்திருக்கிறாளே என்று நினைத்தவனின் அடிமனம் அந்த லெட்டரை எடுக்காதே என்று கூற அவனது கையோ அதற்கு முன்னமே அதனை எடுத்துவிட்டிருந்தது.. பிரித்து பார்த்தவன் அதிலிருந்த முதல் வார்த்தையிலயே அவனது விழிகள் இடுங்கியது.....

“அதெப்படி மிஸ்டர் ஆதிதேவ்.... ஒரு உலகம் தெரியாத பதினேழு வயசு பொண்ணு மனச கெடுத்து அவளுக்கு அவ்வளவு கொடுமையும் பண்ணி அவ உயிரா நினைச்சிருந்த அத்தனை பேரையும் விட்டுட்டு ஊர விட்டே ஓட வெச்சிட்டு அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சம்கூட இல்லாம அதே பொண்ண கல்யாணம் பண்ணி அவகூட சந்தோஷமா குடும்பம் நடத்தனும்னு ஆசை படுறீங்க....

சரி அதுகூட விட்டுடலாம்... உங்கள பழிவாங்குறதுக்காகவே நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சும் எந்த தைரியத்துல நீங்க என்னை முழுசா நம்புனீங்க... அது எனக்கு சுத்தமா புரியவே இல்லை... நீங்க செஞ்ச அத்தன பாவமும் சேர்ந்து உங்கள என்னை நம்ப வெச்சிருக்குனு நினைக்குறேன்...

என்னை நம்பினதுக்கான தண்டனைதான் இன்னைக்கு காலையில இருந்து அனுபவிச்சிக்கிட்டு இருக்கீங்க... இதுல என் தப்பு எதுவுமே இல்ல... கூட இருந்து குழிப்பறிக்கிற வித்தையெல்லாம் எனக்கு நீங்கதான் கத்துக் கொடுத்தீங்க... குருதட்சணையா அதையெல்லாம் நான் உங்ககிட்டயே காட்ட வேண்டியதா போச்சு.....

இதுவரைக்கும் உங்களுக்கு ஏமாத்திதானே பழக்கம்... ஏமாந்து பழக்கம் இல்லைல... அதான் கொஞ்சம் கேர்லஸ்ஸா இருந்துட்டீங்க போல... இனிமேலாவது இப்படி முட்டாள்தனமா யாருக்கிட்டயும் ஏமாறாம இருக்க பாருங்க....

இந்த லெட்டர் நீங்க படிக்கும்போது நான் உங்கள விட்டு ரொம்ப தூரம் போயிருப்பேன்..... நீங்க ஆசையா இத்தனநாள் காத்திருந்த உங்க ஃபர்ஸ்ட் நைட்...... தனியா என்ஞாய் பண்ணுங்க..... குட் பை......”


படித்து முடித்தவன் ஒருசில நொடிகள் அந்த கடிதத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்... அவன் என்றைக்குமே நித்திலாவை நம்பியதில்லை... அவளது விழிகளில் தெரிந்த காதலைத்தான் நம்பினான்... அன்று ஹரிணி வீட்டில் அவள் அவனை பார்த்த பார்வையில் அத்தனை காதல் இருந்தது... அதைத்தான் அவன் நம்பினான்.... ஒவ்வொரு முறையும் அவனை பார்க்கும் போது அவள் கண்களில் தோன்றும் காதல் இப்போது பொய்த்துப்போனதை அவனால் நம்ப முடியவில்லை...

விழிகளை இறுக மூடி அதனை ஜீரணிக்க முயன்றவன் முகத்தில் அத்தனை வேதனை... அன்று காலையில் இருந்து அவனை உறுத்திய விடயம்... அவன் மிகவும் ரகசியமாக வைத்திருந்த ஒருசில முக்கிய டாக்குமெண்ட்ஸ் அவனது எதிரிகளின் கையில் கிடைத்திருந்தது... ஒரேநாளில் அவனுக்கு கோடிக்கணக்கில் இழப்பு... நிச்சயமாக வெளி ஆட்கள் யாரும் இதனை செய்திருக்க வாய்ப்பில்லை.... யார் செய்திருப்பார்கள் என்று யோசிக்கும்போது அவனது அறிவு ஏனோ நித்திலாவைத்தான் கூறியது... ஆனால் காதல் கொண்ட மனம் அந்த நினைவையே விரட்டியடித்து அவளை முழுதாக நம்ப வைத்தது...

பணம் போனால் போகிறது... அவனுக்கு அதெல்லாம் ஒரு விடயமே இல்லை... எண்ணி இரண்டே நாட்களில் இழந்ததை விட அதிகமாகவே சம்பாதித்துவிடுவான்... ஆனால் இவள்.... இவள் அவனது உணர்வுகளுடன் அல்லவா விளையாடி விட்டாள்....

“நி..த்...தி...லா.....” ஆங்காரமாக கத்தியவன் காபி டேபிளை உதைத்து தள்ளிவிட கேக்குடன் சேர்ந்து அது சுவரில் மோதி சிதறியது...

முழங்கால் தரையில் பதிய சரிந்தவனின் விழிகளிலிருந்து அவனையும் மீறி ஒன்றிரண்டு கண்ணீர் துளிகள் நிலத்தில் விழுந்து தெறித்தன....


சென்னையில் விஸ்வநாதன் வீட்டில் காலிங் பெல் அடிக்க மற்றவர்கள் அனைவரும் அப்போதுதான் உறங்க சென்றிருந்தனர்... நிர்மலாதேவி மட்டும் தூக்கம் வராமல் ஹாலில் உட்கார்ந்திருந்தவர் சென்று கதவை திறக்க அங்கு அவரது அருமை பேத்தி பெட்டியும் படுக்கையுமாக இறுகிய முகத்துடன் நின்றிருந்தாள்...

“என்ன இந்த நேரத்துல வந்திருக்கா...” என்று நினைத்தவர் ஒருவேளை ஆதியுடன் வந்திருப்பாளோ என்று எண்ணிக்கொண்டு அவள் பின்னால் பார்க்க அங்கு வேறு யாரும் வந்திருப்பதற்கான அறிகுறி இல்லை.. அவள் மட்டும்தான் வந்திருக்கிறாள்...


அன்று ஆதியின் பிறந்தநாள் என்பது நினைவுவர “என்ன அவன் பொறந்த நாளும் அதுவுமா இவ மட்டும் தனியா வந்திருக்கா... அதுவும் இந்த நேரத்துல.... முகம் வேற சரியில்லையே...” என்று நினைத்தவருக்கு அப்போதுதான் எதுவோ புரியவர உடனே முகம் மலர்ந்தவர் “வாடா கண்ணா.... வா வா... உள்ள வா....” என்று வாயெல்லாம் பல்லாக பேத்தியை வரவேற்றார்.....




தொடரும்.........


படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் மக்களே.......


 
Last edited:

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 35 டீசர்:




“தேவ்...” என்றபடி அவனை நெருங்கி அணைத்துக் கொண்டாள் மித்ரா... அவளது மடியில் முகம் புதைத்தவன் “அவ வேணும் மித்ரா.... அவ இல்லைன்னா நான் செத்துடுவேன்டி.....” என்க அவனது கண்ணீரை உணர்ந்தவளின் அழுகையும் அதிகரித்தது..

ஒருகாலத்தில் இதே வேதனையைத்தான் அவனும் நித்திலாவுக்கு கொடுத்திருந்தான்.. ஆனால் அதனை இவனிடம் கூறிவிட முடியாது... சொன்னாலும் புரிந்து கொள்ளவும் மாட்டான்... அவனுக்கு அவனது நியாயம்... மித்ராவினால் அப்போதைக்கு ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது....

“வந்திடுவாடா... அவ உன்மேல உயிரே வெச்சிருக்கா... அப்படியெல்லாம் நீ இல்லாம அவளால இருக்க முடியாது.. கண்டிப்பா உன்கிட்ட வந்துடுவா...”


#####################



“ஆமா இவங்க யாரு..???” அவனுக்கு பின்னால் வந்து நின்ற மீராவை பார்த்து கேட்டாள் நித்திலா...

மீராவை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் “இது... இது எங்க வீட்டுல வேல பார்க்கிற பொண்ணு... இவங்களதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேன்...” குரலில் பிசிர் தட்டாமல் கூறினான்...

“நீ ஒரு ஆட்டோ பிடிச்சிட்டு வீட்டுக்கு போயிடு...” என்று மீராவிடம் சொன்னவன் அதற்குமேல் அவளை திரும்பியும் பாராது நித்திலாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்..
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னைக்கு யூடி பார்த்துட்டு யாரும் என்னை அடிக்க வரப்படாது... திட்ட வரப்படாது... ஜொள்ளிட்டேன் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Status
Not open for further replies.
Top