All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

“ஆதியின் நிலா” பாகம் 2 கதை திரி

Status
Not open for further replies.

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 35:





சிறிய வெளிச்சம் கூட இல்லாமல் இருள் சூழ்ந்திருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்த மித்ரா தட்டுத்தடுமாறி சென்று மின் விளக்குகளை எரிய விட்டாள்... வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாத்து போல நிசப்தமாக இருந்தது அந்த வீடு... வீட்டை சுற்றி பார்வையை ஓட விட்டவள் அங்கு பூட்டியிருந்த ஒரு அறையை நோக்கி சென்றாள்...

கதவை மெல்ல திறந்து பார்க்க அவள் எதிர்பார்த்தது போல் அங்குதான் சோபாவில் சரிந்து கிடந்தான் ஆதி.. உள்ளே சென்று இவள் லைட்டை போட்டதும் விழிகளை மூடி ஏதோ நினைவில் இருந்தவன் கண்திறந்து பார்க்க எதிரில் நின்றவளை கண்டதும் எதுவும் பேசாமல் மீண்டும் கண் மூடிக் கொண்டான்...

அவனது அந்த செயலே அவனது நிலையை எடுத்துக்கூற அவனை நெருங்கியவள் “தேவ்...” என்று அவனை தொடுவதற்காக கரத்தினை நீட்ட கண்ணை திறக்காமலே அவளது கரத்தை பற்றி தன்னை தொட விடாமல் உதறித்தள்ளி விட்டவன் “எதுக்குடி வந்த....” என்றான் கோபமாக.... “நான் இருக்கேனா செத்துட்டேனான்னு பார்க்க வந்தியா....”

“தேவ்.... என்னடா பேசுற.....” அவளுக்கு அழுகையே வந்துவிட்டது...

“வேற என்ன பேச சொல்ற......”

ஆத்திரத்துடன் எழுந்தவன் “இங்க வந்து அழுது சீன் க்ரியேட் பண்றியா... வெளிய போ முதல்ல....” கத்தினான்...

“எனக்கு எதுவும் தெரியாதுடா.... நேத்துதான் அம்மு கூட பேசினேன்.. அவதான் நித்திலா சென்னைக்கு வந்துட்டதா சொன்னா.... நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கீங்கன்னு நினைச்சுத்தானே நான் இத்தனநாள் நிம்மதியா இருந்தேன்.... அப்புறம் எப்படிடா இப்படி ஆச்சு....” என்றவளை கண்களில் தீப்பொறி பறக்க பார்த்தவன்,,,,,

“இப்ப உனக்கு சந்தோசமாடி.....” அவளது தலைமுடியை கொத்தாக பற்றிக் கொண்டான்…. “உன் ஆசைய நிறைவேத்திக்க இவள என் கண்ணுல காட்டி என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டேல்ல....” வெறுப்புடன் கூறினான்...

“அன்னைக்கு மட்டும் நீ என்ன வர வைக்காம இருந்திருந்தா நான் என் வழியில போயிட்டே இருந்திருப்பேன்.... எதுவும் வேணாம்னு தானேடி அத்தன வருஷம் ஒதுங்கி இருந்தேன்... உனக்கு அவன் வேணும்கிற ஒரே காரணத்துக்காக என்னை இப்படி பைத்தியக்காரன் மாதிரி நிக்க வெச்சிட்டேல்ல....” அவளை அறைவதற்காக கையை ஓங்கியவன் அதை செய்ய முடியாமல் “சை....” என்றபடி கையை சுவற்றில் ஓங்கி குத்தினான்....

“தேவ் சத்தியமா அன்னைக்கு நான் வேற எந்த ரீசன்காகவும் உன்ன வரவைக்கலடா... உன் நித்திலாவ நீ பார்க்கனும்னு தான் உன்ன வர சொன்னேன்... என்னை மன்னிச்சிடுடா......” கண்ணீருடன் கூறியவளை ஆற்றாமையுடன் பார்த்தவன் “போயிட்டாடி.... மறுபடியும் என்ன விட்டுட்டு போயிட்டா...” என்றவன் தொப்பென்று சோபாவில் விழுந்து முகத்தை மூடிக்கொண்டான்....


“தேவ்...” என்றபடி அவனை நெருங்கி அணைத்துக் கொண்டாள் மித்ரா... அவளது மடியில் முகம் புதைத்தவன் “அவ வேணும் மித்ரா.... அவ இல்லைன்னா நான் செத்துடுவேன்டி.....” என்க அவனது கண்ணீரை உணர்ந்தவளின் அழுகையும் அதிகரித்தது..

அவனும் ஒருகாலத்தில் இதே வேதனையைத்தான் நித்திலாவுக்கு கொடுத்திருந்தான்.. ஆனால் அதனை இவனிடம் கூறிவிட முடியாது... சொன்னாலும் புரிந்து கொள்ளவும் மாட்டான்... அவனுக்கு அவனது நியாயம்... மித்ராவினால் அப்போதைக்கு ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது....

“வந்திடுவாடா... அவ உன்மேல உயிரே வெச்சிருக்கா... அப்படியெல்லாம் நீ இல்லாம அவளால இருக்க முடியாது.. கண்டிப்பா உன்கிட்ட வந்துடுவா...”

அவன் அழுது முடிக்கும் வரை காத்திருந்தவள் பின்பு அவனை சமாதானப்படுத்தி விட்டு உணவு சமைத்து அவன் மறுக்க மறுக்க தானே ஊட்டியும் விட்டாள்...

வேலைக்காரர்களை கூட வீட்டை விட்டு அனுப்பியிருந்தான் அவன்..

அவனை உறங்க வைத்தது வரை இன்னொரு தாயாய் அவனுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவள் மறுநாள் அதிகாலை காலிங்பெல் சத்தத்தில்தான் கண்விழித்தாள்..

தன் மடியில் தலை வைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை எழுப்ப மனமில்லாது மெல்ல அவனை நகர்த்திவிட்டு எழுந்து சென்று கதவை திறந்து பார்க்க அங்கு நின்றிருந்தவனை கண்டதும் அவளது புருவங்கள் யோசனையுடன் சுருங்கியது..

“என்ன கனகவேல்... இவ்வளவு தூரம்....???” என்றாள் கேள்வியாக அவனை பார்த்து..

“சின்ன முதலாளி இல்லைங்களா... அவர்கிட்ட பேசனும்...” என்க அவன் தூங்குவதாக கூறியவள் கனகவேலை உள்ளே அழைத்து உட்கார வைத்தாள்...

வெகுநேரம் கழித்து எழுந்து வந்த ஆதியை கண்ட கனகவேல் விழிகள் கலங்கிப்போயின...

“இப்படி இளைச்சி போயிட்டீங்களே சின்ன முதலாளி...” என்று வேதனையுடன் கூறினான்...

ஆதி எதுவும் சொல்லவில்லை.. ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்தான்...

“இங்க என்னதான் நடக்குதுங்க... நிர்மலா அக்காவும் சகுந்தலா அக்காவும் என்னென்னமோ பேசிக்கிறாங்களே...”

“என்ன பேசிக்கிறாங்க....” அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்று தெரிந்தும் கேட்டான்...

“அது... அது வந்து சீக்கிரமா நித்திலாம்மாவுக்கும் உங்களுக்கும் விவாகரத்து வாங்கி கொடுத்துட்டு ஆர்யா தம்பிக்கு கட்டி வைக்கனும்னு பேசிக்கிறாங்க....” என்று ஆரம்பித்தவன் மேலும் சில விடயங்களை கூற முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான் ஆதி...

மித்ராதான் கொதித்துப் போனாள்.... ஏற்கனவே பாட்டியின் மேல் வெறுப்பில் இருந்தவளுக்கு இப்போது நிர்மலாவை கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் வந்தது..

“தேவ்.. இதை சும்மா விடக்கூடாது.. ஏற்கனவே....” என்று கோபமாக ஆரம்பித்தவள் கனகவேல் இருப்பதை உணர்ந்து வாயை மூடிக்கொண்டாள்..

“ஒரு வார்த்த சொல்லுங்கையா நித்திலாம்மாவ தூக்கிட்டு வந்தாவது உங்ககிட்ட ஒப்படைச்சிடுறேன்....” என்றான் கனகவேல்...

அதற்கு “நான் பார்த்துக்கறேன் கனகவேல்...” என்று மட்டும் கூறி வைத்தான் ஆதி...

கனகவேல் அவனுக்கும் அவனுடைய தாத்தாவுக்கும் எப்பேர்ப்பட்ட விசுவாசி என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் நித்திலாவை பற்றி ஒரு மூன்றாம் நபரிடம் எதையும் பேச அவன் விரும்பவில்லை...

கனகவேலை சமாதானப்படுத்தி அவன் மறுக்க மறுக்க பணமும் கொடுத்து அனுப்பி வைத்தான்.. அவன்மீது அதிக பாசம் வைத்திருக்கும் ஒருசில நபர்களில் கனகவேலும் ஒருவன்....


############################




“நித்து சாப்பிட்டாளா....” விஜயாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார் நிர்மலா...

“அவ எங்க சாப்பிட்டா... ரூம்ல தனியா எதையோ பறிகொடுத்தா மாதிரி உக்கார்த்துக்கிட்டு இருக்கா....” என்றாள் விஜயா... “இதுக்குத்தான் அப்பவே ஆதிகிட்ட சொல்லி அவள மும்பைக்கே கூட்டிட்டு போக சொல்ல சொன்னேன்... நீங்கதான் கேட்கல... ஏதோ சின்னஞ்சிறுசுங்க சண்டை போட்டுகிட்டு இவ புருஷன் வீட்டுல இருந்து கிளம்பி வந்துட்டா அப்படியே விட்டுர்ரதா...” என்றாள் மாமியாரிடம் கோபமாக....

விஜயாவை பொறுத்தவரை கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட ஏதோ சண்டையால் நித்திலா கோபித்துக்கொண்டு வந்திருக்கிறாள் என்று நினைத்தாள்...

மருமகளின் பேச்சு நிர்மலாவுக்கு அவ்வளவாக ரசிக்காவிட்டாலும் அவள் சொல்வது போல்தான் நித்திலாவின் நிலையும் இருந்தது... அவள் ஆதியை விட்டுவிட்டு வந்தபோது நிர்மலா மிகவும் சந்தோசப்பட்டார்தான்... ஆனால் அந்த சந்தோசத்திற்கு ஆயுள் வெறும் ஒருநாள் மட்டுமேதான்...

அவனை பிரிந்து வந்ததிலிருந்து இவள் சரியாக சாப்பிடுவதுமில்லை,, தூங்குவதுமில்லை,, மற்றவர்களிடம் முகம் கொடுத்து பேசுவதுமில்லை... எதையோ பறிகொடுத்தாற்போல சோகமாக வளைய வந்து கொண்டிருந்தாள்....

அவரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டார்.. அவள் மசிவதாகவே தெரியவில்லை... இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்பது போல் இருந்தது நிர்மலாவின் நிலை...


வீட்டிலுள்ள அனைவருக்குமே ஏதோ பிரச்சினை என்று தெரிந்துதான் இருந்தது.. ஆனால் யாராலும் நித்திலாவை நெருங்கி கேள்வி கேட்க முடியவில்லை... ஆதியை பற்றித்தான் அவர்களுக்கு தெரியுமே.. அவள் மனம் புண்படும்படி எதையோ செய்திருக்கிறான் அதனால் கோபித்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்றுதான் அனைவரும் நினைத்தனர்...

இவளை பேசி சமாதானப்படுத்தி அவனிடம் திரும்ப அனுப்பவும் யாருக்கும் மனமில்லை சாரதா உட்பட... விஜயா மட்டும்தான் அவ்வப்போது நித்திலாவுக்கு புத்திமதி கூறி ஆதியுடன் பேச சொல்லி வற்புறுத்திக் கொண்டிருப்பாள்.. அதையும் அமைதியாக கேட்டுவிட்டு கடந்து போய்விடுவாள் நித்திலா... அவள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை..


பேத்தியை பற்றியே யோசித்தவண்ணம் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த நிர்மலா எதுவோ தடுக்கி கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டார்... காலில் பயங்கர அடி...

அனைவரும் அடித்துபிடித்து அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை, அவரை அதிகம் நடக்க விடவேண்டாம் என்று வைத்தியர் கூறியிருந்தார்...

பாட்டிக்கு அடிபட்டதில் இருந்து தன்னுடைய பிரச்சினையை மறந்தவளாக நித்திலாதான் பாட்டியை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தாள்.. அது நிர்மலாவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது...

அவள் கொஞ்சம் வாடித் தெரிவதை கண்டாலும் காலில் இல்லாத வலியை இருப்பதாக கூறி அவளது எண்ணத்தை திசை திருப்பி விடுவார்...





############################




சேதுபதி மிகுந்த பரபரப்புடன் ஏர்போட்டில் நடந்து கொண்டிருந்தார்... ஏழு ஆண்டுகளாக அவர் தேடிக்கொண்டிருந்த ஒருவன் தற்போது நேபாளில் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்திருந்தது...

அவன் இருக்கும் இடம் வரை அத்தனையும் கண்டுபிடித்து வைத்திருப்பதாகவும் அவரை உடனே கிளம்பி வருமாறும் அவர் நியமித்து வைத்திருந்த ஆட்கள் கூற தாமதிக்காது கிளம்பிவிட்டார்...

அவனை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் இத்தனை நாளாக விடை தெரியாமல் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும்... எதையோ நினைத்தவரின் விழிகள் ஆத்திரத்தில் சிவந்தன...

ஆனால் அவருக்கு முன்பே வேறொருவன் அவர் தேடிக் கொண்டிருந்த அந்த நபரை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதை பாவம் அவர் அறியவில்லை...

வேகமாக சென்று கொண்டிருந்தவர் யார்மீதோ மோதிவிட “சாரி...” என்று நிமிர்ந்தவர் எதிரில் நின்றவனை கண்டதும் எதையோ நியாபக படுத்த முயன்றவாறே “வரதராஜன் பையன்தானே???...” என்றார் கேள்வியாக...

“ஆமா அங்கிள்... அப்பாவ தெரியுமா.???” என்றான் அவன் பதிலுக்கு...

“ஆமாப்பா... பிசினஸ் விஷயமா வரதராஜன பல தடவை சந்திச்சிருக்கேன்...”

“ஓஹ்...”

“அப்பா விஷயம் கேள்விப்பட்டேன்பா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது...” என்றார்....

தந்தையை பற்றி பேசியதும் அர்ஜுன் முகமும் வேதனையை பிரதிபலித்தது...

அதை உணர்ந்தவர் “சந்திக்கலாம்....” என்று அவன் தோளில் லேசாக தட்டி விடைபெற்றவராக சேதுபதி அவர் வழியில் சென்றுவிட அர்ஜுனும் தன்வழியில் சென்றுவிட்டான்.. இருவருக்கும் இடையில் பிரிக்க முடியாத ஒரு முடிச்சு விழப்போவது இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை..

அர்ஜுன் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அவனிடம் ஓடி வந்த சரஸ்வதி மீராவுக்கு உடம்பு சரியில்லை, ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லுமாறு கூற அதில் கடுப்பானவன்,,,

“டாக்டர வர சொல்லி பார்த்திருக்க வேண்டியதுதான...” என்றான் கோபமாக....

“அதெல்லாம் டாக்டர் வந்து பார்த்திட்டுதான் போனாரு... அவளுக்கு அவங்க அப்பா நியாபகம் வந்துடுச்சி போல.. அப்பாவ பார்க்கனும்னு சொல்லிக்கிட்டே இருக்கா... சிவா வேற இல்ல.. அவன் இருந்திருந்தா அவனே கூட்டிட்டு போயிருப்பான்... எனக்காக ஒரு தடவ அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் வந்திடுப்பா...” என்று அவர் கெஞ்சும் குரலில் கேட்க வேறு வழியில்லாமல் “சரி சரி.... கூட்டிட்டு போய் தொலைக்கிறேன்....” என்றான் வேண்டா வெறுப்பாக...


—————————————————


நிர்மலாவை செக்கப்புக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாள் நித்திலா.. அவரை மருத்துவர் பரிசோதித்ததும் தனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால் பாட்டியை விக்ரமுடன் அனுப்பிவிட்டு இவள் ஹாஸ்பிடலில் இருந்து வெளியேற போகும் சமயம் அர்ஜுனும் வெளியே வந்து கொண்டிருந்தான்...

இவளை கண்டதும் முகம் மலர “நித்திலா..!!!!” என்க நித்திலாவும் “அர்ஜுன்!!! என்ன இந்த பக்கம்... ஏதாவது உடம்பு சரியில்லையா???” அவனுக்கு என்னவோ என்று அவள் சற்று பதட்டமாக கேட்க அவனது அடி நெஞ்சு வரை இனித்தது..

“ஹேய் கூல் கூல்.... எனக்கு ஒன்னுமில்ல... தெரிஞ்சவங்களுக்கு உடம்பு சரியில்ல... அதான் கூட்டிட்டு வந்தேன்... நீ எதுக்கு ஹாஸ்பிடல் வந்திருக்க...” என்று அவன் பதிலுக்கு கேட்க...

“பாட்டிய கூட்டிட்டு வந்தேன் அர்ஜுன்....”

வெகுநாள் கழித்து இருவரும் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்..

அர்ஜுனை காணாமல் தேடி திரிந்த மீரா அவனை கண்டு அருகில் செல்லப்போக அங்கு நித்திலா நின்றிருப்பதை பார்த்ததும் தயக்கத்துடன் அவர்களை நெருங்கினாள்...

“ஆமா இவங்க யாரு..???” அவனுக்கு பின்னால் வந்து நின்ற மீராவை பார்த்து கேட்டாள் நித்திலா...

மீராவை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் “இது... இது எங்க வீட்டுல வேல பார்க்கிற பொண்ணு... இவங்களதான் உடம்பு சரியில்லைனு கூட்டிட்டு வந்தேன்...” குரலில் பிசிர் தட்டாமல் கூறினான்...

நித்திலாவுக்கு மீராவை பார்த்தால் வேலைக்காரி போலவும் தெரியவில்லை... ஒரு வேலைக்காரியை இவ்வளவு பெரிய மருத்துவமனைக்கு அதுவும் தானே அழைத்து வந்திருக்கிறான் என்பதும் நம்பும்படியாக இல்லை... மனதை எதுவோ உறுத்தினாலும் அர்ஜுன் தன்னிடம் எதற்கு பொய் சொல்ல வேண்டும் என்ற நினைவில் அவன் சொன்னதை நம்பினாள்...

“ஓகே அர்ஜுன்.... டைம் ஆச்சு நான் கிளம்புறேன்... இன்னொரு நாள் பார்க்கலாம்...” என்று நித்திலா விடைபெற,,,,

“ஹேய் நித்து... ஒன் மினிட்....” என்று அவளை தடுத்தவன் “நானும் அந்த பக்கமாத்தான் போறேன்... நானே உன்ன கூட்டிட்டு போறேன் வா....” என்றான்..

“பரவாயில்ல அர்ஜுன்... நானே போய்க்கிறேன்...”

அவள் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் பிடிவாதமாக அவளை தன்னுடன் வருமாறு வற்புறுத்த வேறுவழியின்றி தலையாட்டினாள் நித்திலா....

“பட் இவங்க???” என்று அவள் மீராவை கை காட்ட “அவ ஆட்டோல வீட்டுக்கு போயிடுவா....” என்றான்..

மீராவை நெருங்கி “நீ ஒரு ஆட்டோ பிடிச்சிட்டு வீட்டுக்கு போயிடு...” என்று சொன்னவன் அதற்குமேல் அவளை திரும்பியும் பாராது நித்திலாவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்..

மகனுடன் சென்ற மருமகள் ஆட்டோவில் தனியாக திரும்பி வருவதை கண்ட சரஸ்வதி பதட்டத்துடன் “என்னாச்சு மீராம்மா நீ மட்டும் வர்ர... அர்ஜுன் எங்க??” எனக்கேட்க “ஒரு வேலையா போறாங்க அத்தை....” என்றவள் “ஆட்டோக்கு பணம் கொடுக்கல...” என்று கையை பிசைந்து கொண்டு நின்றாள்..

“இரு நான் கொடுக்கிறேன்...” என்று பணத்தை கொடுத்துவிட்டு வந்தவருக்கு மகன்மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது... உடம்பு சரியில்லாத பெண்ணை ஆட்டோவில் தனியாக அனுப்பியதும் இல்லாமல் பணம் கூட கொடுக்காமல் விட்டிருக்கிறானே என்று...

மீரா அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தவள் குலுங்கி குலுங்கி அழுதாள்... கடந்த சில நாட்களாக அவளுக்கு வாழ்வில் ஒரு பிடித்தமே இல்லாமல் போயிருந்தது.. அவளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதைத்து விட்டான் அர்ஜுன்...

தினமும் இழிசொல்லும் ஏதோ தரம் தாழ்ந்தவளை பார்ப்பது போன்ற பார்வையும் சின்னச்சின்ன செயல்களில் கூட அவள் மீதான அவனது காழ்ப்புணர்ச்சி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்... அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் இன்று நித்திலாவிடம் அவளை வேலைக்காரியென்று கூறியது...

ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெறுவது எவ்வளவு கடினம் என்பதை உணராமல் மீராவின் உள்ளத்தை தன்னால் முடிந்தவரை சுக்குநூறாக உடைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்....

மீராவை தேடி வந்த சரஸ்வதி அவள் அழுவதை கண்டு ஏதோ நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவர் மருமகளின் நிலையை நினைத்து மனம் வருந்தினார் அந்த தாய்...


நித்திலா வீட்டுக்கு வருமாறு அழைத்தும் மறுத்தவன் வேறொரு நாள் நிச்சயம் வருவதாக கூறி அவளை டிராப் செய்துவிட்டு கிளம்பிவிட்டான்...

அவன் சென்றதும் கேட்டை தாண்டி வீட்டுக்குள் செல்லும் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தவள் உள்ளுணர்வு உந்த சாரதாவின் வீட்டு பக்கம் பார்வையை திருப்பினாள்... பின்பு ஏமாற்றத்துடன் ஒரு பெருமூச்சை வெளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவளை வரவேற்றது மித்ராவின் குரோதப் பார்வை...

தனஞ்செயன் மற்றும் சந்திரலேகா மித்ராவுடன் பேசிக் கொண்டிருந்தனர்.. நிர்மலா ஒரு பக்கம் கடுகடுப்புடன் மித்ராவை முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்...

அவளது வருகை அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. விஸ்வநாதன்தான் தனஞ்செயன் எதிரில் மித்ராவை எதுவும் பேசிவிட வேண்டாம் என்று நிர்மலாவை எச்சரித்து வைத்திருந்ததால் ஒன்றும் பேச முடியாமல் முறைத்துக் கொண்டிருந்தார்....

நித்திலாவை கண்டதும் முகம் மலர “வாடா கண்ணா... ஷாப்பிங் முடிஞ்சதா???” என்று அவள் கையிலிருந்த ஷாப்பிங் பைகளை பார்க்க “ம்ம்ம்...” என்றவள் வேறு எதுவும் பேசாமல் மாடியில் இருக்கும் தன்னுடைய அறையை நோக்கி சென்றுவிட்டாள்.. மித்ராவின் குற்றம் சாட்டும் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை..

அறைக்குள் வந்து கதவை தாளிட்ட பிறகுதான் அவளால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது... அன்று முழுக்க வெளியில் செல்லாமல் ரூமுக்குள் அடைந்து கிடந்தவள் இரவு உணவுக்காக விஜயா பலமுறை அழைத்த பிறகுதான் வெளியே வந்தாள்...

பெயருக்கு எதையோ கொறித்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று கதவை அடைக்கப்போக கதவை இடித்து தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மித்ரா..

வந்ததும் வராததுமாக நித்திலாவின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டவள் “என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல.... அங்க ஒருத்தன உயிரோட கொன்னுட்டு இங்க வந்து ஷாப்பிங் அது இதுன்னு ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கியா??? உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடி.???” என்றாள் கோபமாக.

“ஏன்... அவரு எனக்கு செஞ்சததான் நான் திருப்பி செஞ்சேன்...” என்றாள் நித்திலா கலங்கிய விழிகளை மறைக்க வேறுபக்கம் திரும்பியபடி...

“எங்கே என் முகத்த பார்த்து சொல்லு... அவன் உன்மேல உயிரே வெச்சிருக்கான்னு உனக்கு தெரியாது...” அவளது தாடையை பற்றி தன்புறம் திருப்பினாள் மித்ரா..

கலங்கியிருந்த அவளது விழிகளில் என்ன கண்டாளோ “ஏன்டி இப்படி அவனையும் கஷ்டபடுத்தி உன்னையும் கஷ்டபடுத்திக்கிற... நீங்க ரெண்டுபேரும் சந்தோசமா இருக்கனும்னுதானே நான் என் பெயர கெடுத்துக்கிட்டு அத்தனையும் பண்ணேன்....” என்றாள் ஆற்றாமையுடன்..

பின்பு நித்திலாவின் கன்னத்தை தன் இரு கரங்களில் தாங்கியவள் “நித்தும்மா ஆதிகிட்ட போயிடுடா... அவன் மட்டும்தான் உன்ன நல்லபடியா பார்த்துக்குவான்... வேற யாரையும் நம்பாதே... நீ நல்லவங்கனு நினைக்கிறவங்கலாம் நிஜமாவே நல்லவங்க கிடையாது...” ஒரு குழந்தைக்கு கூறுவதை போல் கூறினாள்...




#########################




மறுநாள் காலை ஆள் அரவமற்ற ஓர் இடத்தில் நித்திலா, மித்ரா இருவரும் காரில் உட்கார்ந்திருந்தனர்... நித்திலா விரல் நகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.. ஏனோ அவ்வளவு படபடப்பாக இருந்தது அவளுக்கு...

நொடிகளே யுகங்களாக தோன்றிய ஒருசில நிமிட காத்திருப்புக்கு பிறகு இவர்களை தாண்டிச்சென்ற ஒரு கார் புழுதி பறக்க யு டர்ன் அடித்து இவர்களது காருக்கு எதிரே சற்று தூரத்தில் நின்றது...

நித்திலாவின் தோளை தொட்ட மித்ரா “போ நித்து... போய் பேசிட்டு வா...” என்க மிகுந்த தயக்கத்துடன் காரை விட்டு இறங்கினாள் நித்திலா...

அவனும் காரை விட்டு இறங்கினான்... தரையில் பார்வையை பதித்து மெல்லிய எட்டுக்களுடன் தனை நோக்கி நடந்து வருபவளை பார்த்துக் கொண்டே அழுத்தமான நடையுடன் முன்னேறினான் ஆதி...

அவள் எந்த தவறும் செய்யவில்லை... அவன் அவளுக்கு செய்த துரோகத்துக்கு ஒரு மிகச்சிறிய பதிலடியாகத்தான் அவனை விட்டுவிட்டு அவள் வந்தது.. அவள் நினைத்திருந்தால் அதைவிட பெரிதாக கூட அவனை காயப்படுத்தி இருக்கலாம்.. அவளால் அப்படி செய்ய முடியவில்லை...

சொல்லப் போனாள் தான் அவனை எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதை கூட அவனை பிரிந்து வந்த இத்தனை நாட்களில் அவளால் நன்றாகவே உணர முடிந்தது.. அந்த காதல் கொடுத்த குற்ற உணர்வில்தான் அவனுக்கு ஏதோ பெரிய தவறை இழைத்து விட்டது போல அவளால் அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லை...

அவனை நெருங்கியதும் தன் நடையை நிறுத்தியவள் என்ன பேசுவதென்று தெரியாமல் அவனது ஷூவை பார்த்துக் கொண்டு நிற்க அவன்தான் ஆரம்பித்தான்...

“என்னடா இளைச்சிட்ட... சரியா சாப்பிடலையா???” அவள் தலையை மென்மையாக தடவி வெகு இயல்பாக அவன் கேட்க இப்படி ஒரு கேள்வியை அவன் கேட்பான் என்று அவள் சத்தியமாக நினைத்து பார்க்கவில்லை...

கோபத்தில் கத்துவான்,,, தாம்தூம் என்று குதிப்பான் என எதிர்பார்த்து வந்தவள் அவனது இந்த கேள்வியில் மெல்ல விழியுயர்த்தி அவன் முகம் பார்த்தாள்...

சவரம் செய்யப்படாமல் வளர்ந்திருந்த தாடியும் கறுத்து மெலிந்திருந்த முகமும் அவனும் அவள் நினைவில் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறான் என்பதை பறைசாற்ற “ஐம் சாரி...” என்று அவள் கூறிய அதே நேரம் அவனும் அதே வார்த்தையை அவளிடம் கூறினான்...

இருவரது பார்வைகளும் ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டன...

அவளது கரங்களை பற்றி தன் கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன் சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்..

இருவருக்குமே அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை... ஒரு சிறிய மௌனத்திற்கு பின் அவன்தான் தொடர்ந்தான்...

“உன்கிட்ட எதையும் பேசி க்ளியர் பண்ணாம உன்னை தொடனும் நினைச்சது என் தப்புத்தான்..”

நித்திலா அப்போதும் ஒன்றும் சொல்லாமல் நின்றிருக்க அவள் முன் மண்டியிட்டவன் “நீ எனக்கு எந்த வலிய கொடுக்கனும் நினைச்சியோ அதை கொடுத்துட்ட... இனிமேல் இந்த மாதிரி என்னை தவிக்க விட்டுட்டு போயிடாதடி... என்னால சத்தியமா தாங்கிக்க முடியாது....” உடைந்த குரலில் வேதனையுடன் கூறினான்...

அப்போதுதான் உணர்வு வந்தவள் போல் அவனது தோளில் கை வைத்தவள் “அத்தான் ப்ளீஸ் எழுந்திருங்க...” என்றாள் கெஞ்சும் குரலில்...

“ஆசையோ கோபமோ உன்ன தவிர வேற எந்த பொண்ணையும் நான் நினைச்சி கூட பார்த்ததில்லடி.. எனக்கு எப்பவுமே நீ மட்டும்தான்... நீ என்ன விட்டுட்டு போனப்போ செத்துடலாம் போல இருந்துச்சுடீ....”

“ஏன் அத்தான் இப்படில்லாம் பேசுறீங்க... உங்களுக்கு புரிய வைக்கனும்னு தான் விட்டுட்டு வந்தேன்... நீங்க தேடி வருவீங்கன்னு நினைச்சேன்... நீங்க வராம போனதும் என்னை வெறுத்துட்டீங்களோனு பயமா இருந்துச்சி...” என்றாள்... “முதல்ல எழுந்திருங்க ப்ளீஸ்... இல்லைனா நான் போயிடுவேன்...” என்க உடனே எழுந்துவிட்டான்...

“நான் இல்லாம உன்னாலயும் இருக்க முடியாதுனு தெரியும்... அதை உனக்கு புரிய வைக்கத்தான் இத்தன நாளா வராம இருந்தேன்....”

பின்பு அவளது முகத்தை தன் கரங்களில் தாங்கியவன் “நான் உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்ல பேபி...” என்றான்.. “அன்னைக்கு நடந்ததுக்கெல்லாம் ஐம் ரியலி ரியலி சாரிடா....”

மித்ரா என் ஃப்ரென்ட்மா... நீயும் சஞ்சயும் எப்படியோ அப்படித்தான் நானும் மித்ராவும்.... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எங்களுக்குள்ள எந்த தப்பான ரிலேஷன்ஷிப்பும் கிடையாதுடா.... அவ எனக்கு அம்மா மாதிரி...” என்றான் தன்னை புரிய வைத்துவிடும் நோக்கத்தில்...

“எனக்கு தெரியும் அத்தான்... நான் உங்களையும் மித்ரா அக்காவையும் என்னைக்குமே தப்பா நினைச்சதில்ல...”

“ஆனா இதெல்லாம் ஏன் அத்தான்?? ஏதோ காரணத்துக்காக செஞ்சிருக்கீங்கன்னு தெரியுது... ஏன்??”

அவன் வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டான்... என்னவென்று சொல்வான்.... அதை சொல்ல வேண்டும் என்றால் அவளிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும்... ஆனால் இவள் அதை நம்புவாளா.. நித்திலா அவனை நம்பாமல் ஒரு பார்வை பார்த்தால் கூட அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது...

அவனை பெற்ற அன்னை, உயிராக வளர்த்த அவனுடைய தாத்தா... அவர்களே அவன் சொன்னதை கடைசிவரை நம்பவில்லை.... ஏன் மித்ராவே கண்ணால் பார்த்த பிறகுதானே அத்தனையும் நம்பினாள்... நித்திலா எப்படி நம்புவாள்... எதையும் நிரூபிக்கவும் அவனிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை..

அவள் நம்பமாட்டாள் என்று உறுதியாக தெரிந்திருந்ததால் தான் அவன் இத்தனை நாள் இந்தப் பேச்சையே அவளிடம் பேசாமல் தவிர்த்து வந்தான்..

“அதுக்கான நேரம் வரும்போது நான் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்றேன்டா... இப்ப வேண்டாம் பேபி...”

அவனுக்கு சொல்ல இஷ்டமில்லை என்பதை புரிந்து கொண்டவள் “ம்ம்ம்...” என்றாள்...

“ஆனா அன்னைக்கு நான் உன்ன வேற எதுவும் பண்ணலடா... ஒரு பதினேழு வயசு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிற அளவுக்கு நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவன்லாம் கிடையாது..... அன்னைக்கு நீ மயங்கினதுக்கு அப்புறம் என் விரல் கூட உன்மேல படல...”

“தெரியும்..” என்றாள் அவள்... “அப்போ தெரியல... அப்புறம் பாட்டி வீட்டுக்கு போனதுக்கப்புறம் தெரிஞ்சிக்கிட்டேன்... நான் ரொம்ப பயந்ததுனால பாட்டிதான் என்னை வெர்ஜினிட்டி டெஸ்ட்.......” சொல்லிக்கொண்டிருக்கும் போதே நித்திலாவை இழுத்து அணைத்துக் கொண்டான்... அவனது கரங்கள் லேசாக நடுங்கின...

தான் செய்த முட்டாள்தனமான செயலின் பாரதூரம் அவளது வாய்மொழியாக கேட்கும்போதுதான் அவனுக்கு புரிந்ததோ என்னவோ... துடித்துப் போய்விட்டான்...

“சாரி... சாரி... சாரி பேபி... என்னை மன்னிச்சிடுடி... அப்போ அன்னைக்கு நான் செஞ்சது எதுவும் உன்ன எந்த அளவுக்கு பாதிக்கும்னு நான் யோசிக்கவே இல்ல... நான் நினைச்சத செய்யனும்னு அது மட்டும்தான் என் மைன்ட்ல ஓடிட்டு இருந்தது.. உன்ன பத்தி நான் யோசிக்கவே இல்ல... ரொம்ப பயந்திருப்ப இல்லடா....” என்றான் விழிகள் கலங்க...

நித்திலாவினால் இல்லையென்று சொல்ல முடியவில்லை... அந்த நேரத்தில் அவள் அனுபவித்த வேதனை அப்படி..

“நான் என்னைக்குமே உன்கிட்ட தப்பா நடந்துக்கனும்னு நினைச்சதே இல்ல பேபி... அப்பப்ப உன் கிஸ் பண்ணனும் மாதிரி ஆசையா இருக்கும்... நீ தூங்கினதுக்கு அப்புறமா உன் ரூமுக்கு வருவேன்... அதையும் உன் அக்காகாரி எப்படித்தான் கண்டுபிடிப்பாளோ தெரியாது.. நான் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே கால் பண்ணி என்னை ஆஃப் பண்ணி விட்டுடுவா....” என்றான் பெருமூச்சுடன்...

“அதுவும் தெரியும்... பால்ல தூக்க மாத்திரை போட்டு கொடுத்துட்டு வருவீங்களாம்...” என்றாள்..

“சௌர்யா சொன்னானா..???”

“ம்ம்ம்..... ஆனா... ஆனா எதுக்கு அவ்வளவு சின்ன வயசுல என் கழுத்துல தாலி கட்டினீங்க அத்தான்.????”




தொடரும்.......

அத்தியாயம் 35 பதிந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.....


 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியின் நிலா 36:




அவளது கேள்வியை தொடர்ந்து ஆதியின் பார்வை சற்று தூரத்தில் காருக்குள் உட்கார்ந்திருந்த மித்ராவின் மீது படிந்தது.. நித்திலாவின் கழுத்தில் அவன் தாலி கட்டியதற்கு முழுமுதற் காரணம் மித்ரா மட்டுமே...

அவனுக்கு அந்த சிறு வயதில் நித்திலாவை திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இருக்கவில்லை.. அவள்மீது அதிக பாசம் தான் இருந்தது.. அவன் மனதில் இந்த திருமண எண்ணத்தை விதைத்தது மித்ராதான்..

தன் தோழியை நித்திலாவிடம் காட்டிக் கொடுக்க மனமில்லாது “அதுவும் ஒரு காரணமாத்தான்டா கட்டினேன்... என்னை நம்புற தானே பேபி... கண்டிப்பா ஒருநாள் எல்லாமே உன்கிட்ட சொல்லுவேன்டா...” என்றவன்
தன் அணைப்பிலிருந்து லேசாக விலகி நின்றவளை மீண்டும் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்...

அவளது நெற்றியில் நெற்றி பதித்து “ஐ லவ் யூ நித்திலா...” என்க,,, “ஐ லவ் யூ டூ அத்தான்...” அவளும் பதிலுக்கு கூறினாள்..

இருவருக்குமே இத்தனைநாள் மனதில் இருந்த தடைகள் நீங்க ஏதோ பெரும் பாரம் கழிந்ததை போல் நிம்மதியாக இருந்தது..

ஆதிக்கு நித்திலா அவனை புரிந்து கொண்டு தானாக அவனிடம் வர வேண்டும்... நித்திலாவுக்கு அவன் செய்த தவறை அவன் உணர வேண்டும்.. இருவரும் நினைத்தது நடந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்... நித்திலா அவனை புரிந்து கொண்டுதான் இருந்தாள்... அது முழுமையான புரிதல் இல்லை... அதேபோல் ஆதியும் தன் தவறை உணர்ந்திருந்தான்... அதுவும் முழுமையான உணர்தல் இல்லை... அது முழுமையடையும் போது அவர்களது வாழ்க்கையே திசை மாறிப் போயிருக்கும்...

அவன் தன்னிடம் எதையும் சொல்லவில்லையென்ற வருத்தம் இருந்தாலும் அவன் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இருந்தது..

எவ்வளவு நேரம் நின்றிருந்தார்களோ மித்ரா தொண்டை செருமும் ஓசை அருகில் கேட்க இருவரும் திரும்பி பார்த்தனர்..

“டைம் ஆச்சு தேவ்... நான் நித்துவ வீட்டுக்கு கூட்டிட்டு போகனும்... ரொம்ப லேட் ஆகிட்டா அப்புறம் பாட்டிக்கு டவுட் வந்துடும்....” என்க ஒரு பெருமூச்சுடன் மனமேயில்லாமல் நித்திலாவை விடுவித்தவன் “நீ போ பேபி.....” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டு விடை கொடுக்க அவளும் அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்று காரில் ஏறினாள்..

அவர்களது கார் சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றவன் மனதில் மீண்டும் வெறுமை சூழ்ந்து கொண்டது....

இதற்குமேல் அவளில்லாமல் தனக்கு ஒரு வாழ்வே வேண்டாம் என்ற நிலையில் தான் அவனும் இருந்தான்.. தனக்கும் நித்திலாவுக்கும் நடுவில் யாராவது வந்தால் கொலை செய்தாலும் செய்வானே தவிர அவனால் யாருக்காகவும் நித்திலாவை விட்டுக் கொடுக்க முடியாது..




###################





நித்திலா வீடு வந்ததும் நிர்மலா அவளை பிடி பிடியென்று பிடித்துக் கொண்டார்...

“என்கிட்ட கூட சொல்லாம திடுதிப்புனு எங்கே போயிட்ட...???” என்று ஆரம்பித்தவர் அவளை கேள்விகளால் துளைத்தெடுக்க பழைய சிநேகிதி ஒருத்தியை பார்க்க சென்றதாக ஏதேதோ கூறி அவரை சமாளித்துவிட்டு சாரதா வீட்டுக்கு சென்றாள் நித்திலா...

“அத்தை....” என்று அழைத்துக் கொண்டே சென்றவள் அங்கு அவளை முறைத்தபடி எதிரில் வந்து கொண்டிருந்த கனகவேலை கண்டதும் முதலில் பயந்து பின்பு யோசனையுடன் அவனை ஏறிட்டாள்...

கனகவேல் வாட்டசாட்டமான உடலமைப்பை கொண்டவன் கூடவே சிவந்த விழிகளும் அய்யனார் மீசையும்... இப்படியொரு தோற்றத்தில் தன்னை கோபமாக முறைத்து பார்த்தால் யாராக இருந்தாலும் பயப்படத்தான் செய்வார்கள்..

தன்னை எதற்கு முறைக்கிறான் என்று நினைத்தவள் ஒன்றும் பேசாது சாரதாவை தேடி சென்றாள்.. அறையில் ஏதோ யோசனையுடன் உட்கார்ந்திருந்த சாரதாவை நெருங்கியவள்

“அத்தை...” என்று அவளது தோளை தொட மருமகளின் குரல் கேட்டதும் சாரதா மறுபக்கம் திரும்பி கலங்கியிருந்த தன் விழிகளை துடைத்துக்கொண்டு “வாடா..” என்றாள் புன்னகைக்க முயன்றவாறே...

“என்னாச்சு அத்தை.... அழுதீங்களா???”

“அதெல்லாம் இல்லைடா...” என்று சமாளிக்க முயன்றவளை பார்த்து மறுப்பாக தலையசைத்த நித்திலா “நீங்க அழுதத நான் பார்த்தேன்... என்னாச்சு அத்தை... என்கிட்ட சொல்லமாட்டீங்களா..??? சாரதாவின் அருகில் அமர்ந்து கொண்டு கேட்டாள்.

சொல்லாமல் தன்னை விடமாட்டாள் என்பதை உணர்ந்த சாரதா “ஆதி வந்திருக்கானாம்....” என்றாள் ஒரு பெருமூச்சுடன்...

நித்திலா ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள்..

“வீட்டுக்கு கூட வரல்ல... ஹோட்டல்ல தங்கி இருக்கானாம்... ஏதோ அம்மாவ வீட்டை விட்டு போக சொல்லிட்டான்கிற கோபத்துல நானும் வீட்டை விட்டு கிளம்பிட்டேன்... அதுக்காக இப்படி மாச கணக்குல ஒரு கால் கூட பண்ணி பேசாம இருப்பானா... அப்படி என்ன பிடிவாதம் அவனுக்கு...”

சாரதா சொன்னதை பொறுமையாக கேட்டுக் கொண்டவள் “சரி... அத்தான்தான் பேசல... நீங்க கால் பண்ணி பேசியிருக்கலாமே...” என்றாள் நித்திலா பதிலுக்கு..

“அது.... அது....” சாரதா தடுமாற லேசாக சிரித்தவள் “அத்தானுக்கு இவ்வளவு பிடிவாதம் எங்கிருந்து வந்திருக்குனு இப்போ புரியுது அத்தை...” என்றாள்..

“அவன் செஞ்சது தப்பு இல்லையா நித்தும்மா... அந்த மித்ராவுக்காக எங்க அம்மாவ அப்படி வீட்டை விட்டு வெளிய போக சொல்லலாமா... அவனுக்கு சின்ன வயசுல இருந்தே அம்மாவ கண்டாலே பிடிக்காது... அப்பவே அம்மாவ பத்தி தப்பு தப்பா ஏதேதோ பேசுவான்....” சொல்லிக்கொண்டே போனவள் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு நித்திலாவின் முகம் பார்த்தாள்... பின்பு,,,,

“அது... அம்மாவுக்கும் ஆதி தாத்தாவுக்கும் அவ்வளவா ஒத்துப்போகாதுடா... ஆதிக்கு அவங்க தாத்தா மேல பாசம் அதிகம்... அவங்க தாத்தாவுக்கு பிடிக்காததுனால இவனும் அம்மாகிட்ட ரொம்ப பேசமாட்டான்...” என்றாள்..


“ஓஹ்....” என்று கேட்டுக் கொண்டாள் நித்திலா... “அத்தான் வந்திருக்கிறது உங்களுக்கு யார் சொன்னாங்க...???”

“கனகவேல் தான்டா சொன்னான்...”

“உங்ககிட்ட கேட்கனும்னு இருந்தேன் அத்தை... கனகவேல் அங்கிள் முன்னாடி மும்பைல உங்க வீட்டுலதானே வேலை பார்த்தாங்க... அப்புறம் ஏன் சகுந்தலா பாட்டி வீட்டுக்கு போனாங்க..???”

“அது எனக்கும் சரியா தெரியலடா... திடீர்னு போயிட்டான்… என் மாமனார் கூட எதுவும் சொல்லாம கனகவேல அனுப்பி வெச்சதுதான் எனக்கும் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.. அதுவும் அவருக்கு ஒரு சின்ன வேலை ஆகனும்னா கூட கனகவேல் கனகவேல்னு அவன் பேரைத்தான் நாள் முழுக்க கூப்பிட்டுக்கிட்டே இருப்பார்...”

“அத்தானுக்கும் கனகவேல் அங்கிள் மேல ரொம்ப பாசம் இல்லையா...??”

“ஆமாடா... ஆதி பொறந்ததுல இருந்து அவன தூக்கி வளர்த்தது கனகவேல்தான்... எப்பவும் ரெண்டு பேரும் ஒன்னாத்தான் இருப்பாங்க... எப்ப நேரம் கிடைச்சாலும் ஆதிய பார்க்க ஓடி வந்திடுவான் கனகவேல்... ரொம்ப பாசம்... இப்பக்கூட உனக்கும் ஆதிக்கும் ஏதாவது பிரச்சினையா... நீ எதுக்கு மும்பைக்கு போகாம பாட்டி வீட்டுலயே குடியிருக்கேன்னு கேட்கத்தான் வந்தான்... நான்தான் அப்படில்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பி வைச்சேன்....”

“ஓஹ்... அதான் என்னை முறைச்சிக்கிட்டே போனாங்களா.....” என்று சிரித்தாள் நித்திலா...

“உன்னை முறைச்சானா.???? ம்ம்ம்..... இருக்கும் இருக்கும்.... விட்டா உன்னை தூக்கிட்டு போய் ஆதிகிட்ட கொடுத்துட்டு வந்திருப்பான்...” என்று சிரித்தவள் பின்பு நித்திலாவின் கையை பற்றிக் கொண்டு “இதோ பாருடா... ஆதி ரொம்ப நல்ல பையன்... என்ன சட்டுனு கோபபட்டுடுவான்... உன் மனசு கஷ்டபடுற மாதிரி அவன் நடந்திருந்தா அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. எந்த காரணத்துக்காகவும் என் பையன வெறுத்துடாத நித்தும்மா...”

“எனக்கு தெரியாதா என் அத்தான பத்தி... நீங்க எதையும் நினைச்சி மனச குழப்பிக்காதீங்க... நான் கொஞ்ச நாளைக்கு உங்க எல்லார்கூடவும் இருக்கனும்னுதான் இங்க வந்தேன்... இன்னும் ரெண்டு, மூனு நாள்ள கிளம்பிடுவேன் அத்தை...” என்று கூறியவள் மறந்தும் தான் ஆதியை சந்தித்துவிட்டு வந்ததை பற்றி சாரதாவிடம் வாயே திறக்கவில்லை....






########################





அறையில் சோர்வுடன் உறங்கிக் கொண்டிருந்த மீரா சடாரென்று கதவு திறக்கும் ஓசையில் திடுக்கிட்டு கண்விழித்தாள்... ஏற்கனவே அந்த வீட்டில் அவளால் நிம்மதியாக ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிட முடிவதில்லை.. இப்போது உடம்பு சரியில்லாததால் இன்னும் பலவீனமாக இருந்தாள்...

தலையெல்லாம் விண்விண்ணென்று தெறிக்க மிகுந்த சிரம்ப்பட்டு விழிகளை திறந்து பார்த்தவளின் எதிரில் ஆக்ரோஷமாக வந்து நின்றான் அர்ஜுன்...

“ஏய் அம்மாகிட்ட என்னடி சொன்ன....????”

அவனுடைய உறுமலான கேள்வியில் இல்லையென்பது போல் தலையாட்டியவள் “நான் எதுவும் சொல்லல....” என்றாள் பலகீனமான குரலில்...

“நீ எதுவும் சொல்லாமலா அவங்க என்னை இத்தன கேள்வி கேக்குறாங்க...” சீறினான்...

“சத்தியமா நான் எதுவும் சொல்லல....”

“பொய்.. பொய்... பொய் சொல்லாதடி... உன் நடிப்பையெல்லாம் என் அம்மாவும் சிவாவும் வேணா நம்பலாம்... நான் நம்பமாட்டேன்... உண்மைய சொல்லு அம்மாகிட்ட என்ன சொன்ன....”

“நான் எதுவும் சொல்.......” அவள் சொல்லி முடிப்பதற்குள் “திரும்ப திரும்ப பொய்யா சொல்ற.....” கன்னத்தில் பொறி பறக்க மயங்கிவிட்டிருந்தாள் மீரா...


அவள் மயங்கிய பிறகுதான் தான் அடித்து விட்டிருப்பதை உணர்ந்தவன் “சை.....” என்றபடி அங்கிருந்து நகரப்போக பின்பு என்ன நினைத்தானோ நின்று அவள் முகம் பார்த்தான்...

வெளிரிப் போய் கிடந்த அவள் முகத்தை கண்டு துணுக்குற்றவன் மெல்ல குனிந்து தொட்டுப்பார்க்க தனலாய் கொதித்தது... காய்ச்சலில் இருந்தவளை அடித்துவிட்டோமே என்று தன்மீதே கோபம் கொண்டவனாக தலை முடியை கோதிக்கொண்டான்...

அவன் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக சரஸ்வதி அவனை திட்டி தீர்த்து விட்டார்.. அவர் என்னவோ மீராவை ஹாஸ்பிடலில் இருந்து தனியாக அனுப்பியற்காகத்தான் திட்டினார்...

இதுநாள்வரை தன்னை ஒரு வார்த்தை பேசாத அன்னை இப்போது திட்டியதில் ஆத்திரமடைந்தவன் மீராதான் அவன் நித்திலாவுடன் சென்றதை பற்றி எதையோ கூறியிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான்...

இப்போது அவள் மயங்கி விட்டதை கண்டு குற்றவுணர்வு மேலோங்க தலையணையை சரி செய்து அவளை கிடத்தியவன் போர்வையை போர்த்திவிட்டு அவள் முகத்தை மறைத்து கிடந்த கூந்தல் கற்றையை ஒதுக்கிவிட அதேநேரம் “மச்சான்... என்னடா இதெல்லாம்???...” என்று அறைவாசலில் கேட்ட குரலில் நிமிர்ந்து பார்த்தான்...

அங்கு இவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் ப்ரசாத்..

அர்ஜுன் பார்த்ததும் “வாடா வெளிய....” என்றுவிட்டுஅங்கிருந்து சென்றான் ப்ரசாத்... இவனும் அறையை விட்டு வெளியேறி ப்ரசாத்தின் பின்னால் செல்ல “என்னடா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல... அவளுக்கு சேவகம் பண்றியா???” எகிறினான் அவன்..

“சே... சே... அதெல்லாம் இல்ல மச்சான்... அவளுக்கு உடம்பு சரியில்ல... நான் வேற கோபத்துல அடிச்சிட்டேன்... அதான்....” என்றான்...

அவனது முகத்தை உற்று நோக்கிய ப்ரசாத் “ஓஹ்... அதனால உனக்கு திடீர்னு அவமேல அக்கறை வந்துடுச்சி போல... நான் சொன்ன மாதிரியே அவ உன்னையும் மயக்கிட்டாடா....” என்க பல்லை கடித்தான் அர்ஜுன்...

“அடச்சீ நிறுத்து.. நான் செத்தாலும் சாவேனே தவிர இவ வலையில எல்லாம் விழவே மாட்டேன்... நான் அடிச்சதுல அவளுக்கு ஏதாவது ஆகிடுச்சோனுதான் பார்த்தேன்... வேற ஒரு மண்ணும் இல்ல... முட்டாள்தனமா எதையாவது பேசி என் கடுப்ப கிளப்பாதே.....”

ப்ரசாத்தின் முகம் தெளியவில்லை... அவனை பொறுத்தவரை நித்திலாவை உயிருக்கு உயிராக காதலிக்கும் அவனது நன்பனை மீரா மயக்கி தன்பக்கம் ஈர்த்துக் கொள்ள பார்க்கிறாள்... அந்த மீராதான் அர்ஜுனுக்கு உரிமையான மனைவியென்பதோ நித்திலா இன்னொருத்தனின் மனைவியென்பதோ அவனது மரமண்டைக்கு உறைக்கவே இல்லை...

“ம்ம்ம்.... ம்ம்ம்..... அவள விடு... சிஸ்டர பார்த்ததா சொன்னியே... என்னாச்சி...????” என்று நித்திலாவை பற்றி கேட்க ஆரம்பித்தான்....

நித்திலாவை பற்றி கேட்டதும் அர்ஜுனும் மீராவை மறந்துவிட்டு முகம் மலர நித்திலாவை பற்றி பேச ஆரம்பித்துவிட்டான்...

“ஆனா மச்சான் சிஸ்டர் ரொம்ப நாளா அந்த ஆதிய விட்டுட்டு சென்னையிலயே வந்து இருக்காங்களே... ஏதாவது ப்ராப்ளமா இருக்குமோ??” யோசனையுடன் கேட்டான்...

“தெரியலையேடா...”

“ஆதிதேவ் ஒன்னும் லேசுபட்ட ஆள் இல்ல மச்சான்... பொண்டாட்டிய இப்படி வார கணக்குல பாட்டி வீட்டுல விட்டுட்டு இருக்கான்னா.... யோசிக்க வேண்டிய விஷயம்தான்....” என்றான் ப்ராசாத் “நீ எதையும் போட்டு குழப்பிக்காதேடா.... நான் விசாரிக்கிறேன்....”

“என் நித்திலாவுக்கு யாராலயும் எந்த கஷ்டமும் வரக்கூடாது மச்சான்... அப்படி யாராவது அவள கஷ்டபடுத்தினாங்கனு தெரிஞ்சது நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்....” அர்ஜுனின் குரல் இரும்பின் உறுதியுடன் ஒலித்தது...






######################





அந்த பங்களாவின் முன்னால் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான் ஆதி... அவன் வருவதை கண்டதும் வீட்டுக்குள் இருந்து பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த ரேணுகா “ஆதி!!!.... வா வா.... உள்ள வா..... உட்காரு...” அவனை வரவேற்று உட்கார வைத்தவள்,,, “அம்மா.... இங்க வாங்க... யார் வந்திருக்கான்னு பாருங்க.....” என்று தன் அன்னையை அழைத்தாள்...


அறைக்குள் இருந்து வெளிப்பட்ட சகுந்தலாதேவி “அடடே ஆதி கண்ணா!!!!.... நீயா.... எத்தனை வருஷம் ஆச்சு நீ இந்த வீட்டு பக்கம் வந்து.... இப்பதான் உனக்கு எங்க நியாபகம் வந்துச்சா....” தேனொழுக கூறியவர் அவனை நெருங்கி உட்கார்ந்து அவனது கையை பற்றிக் கொண்டார்... “எப்படி இருக்கேப்பா??? நல்லா இருக்கியா....????”

“நான் நல்லா இருக்கேன் பாட்டி... நீங்க எப்படி இருக்கீங்க..???” என்று அவரது நலம் விசாரித்தவன் மேலும் அவர்களது குடும்பம் மற்றும் தொழில் பற்றி பொதுவாக கேட்டுவிட்டு அடுத்து தான் பேச வந்த விடயத்தை ஆரம்பிக்குமுன் சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தான்...

ரேணுகா சகுந்தலாவை பார்த்து என்னவென்பது போல் கண்ணை காட்ட அவரும் தனக்கு தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்கி தோளை குலுக்கினார்...

எதற்காகவோ வந்திருக்கிறான் என்பது அவருக்கும் புரிந்தது.. எதுவாக இருந்தாலும் அவனே ஆரம்பிக்கட்டும் என்பது போல் பார்த்திருந்தார்...

ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தவன் பின்பு தொண்டையை செறுமிக் கொண்டு பேச ஆரம்பித்தான்...

“நான் உங்ககிட்ட மித்ரா கல்யாண விஷயமா பேச வந்திருக்கேன் பாட்டி...”

‘மித்ரா கல்யாண விஷயம் பேச நம்ம வீட்டுக்கு எதுக்கு வந்திருக்கான்...’ ரேணுகா குழப்பத்துடன் அவனை பார்க்க சகுந்தலாவோ பார்வை கூர்மையேற அவனை நோக்கினார்..

“ஐ மீன் மித்ராவுக்கும் உங்க பேரன் ஆத்... ஆத்ரேயாவுக்கும் கல்யாணம் பண்றத பத்தி பேசலாம்னு வந்தேன்...” என்க சகுந்தலாவும் ரேணுகாவும் அதிர்ந்துபோய் அவனை பார்த்தனர்...

இதனை அவர்கள் எதிர்பார்க்கவில்லையென்பது அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது...

“மித்ராவா....” என்று முகத்தை சுளித்தாள் ரேணுகா...

“ஏன் மித்ராவுக்கு என்ன...????” என்றான் ஆதி பதிலுக்கு அமர்த்தலாக

“மித்ராவுக்கு ஒன்னுமில்லப்பா.... அவ நல்ல பொண்ணுதான்... ஆனா சந்திரலேகாவுக்கும் எங்களுக்கும் சுத்தமா ஆகாதே..........” என்று இழுத்தார் சகுந்தலா...

“நான் சந்திரா அத்தைய கட்டி வைக்க சொல்லலையே... அவங்க பொண்ணு மித்ராவதான் ஆர்யாவுக்கு கட்டி வைக்கலாம்னு சொல்றேன்... இதுல சந்திரா அத்தை எங்கிருந்து வந்தாங்க....”

“அது... அது வந்து ஆதி......” என்று இழுத்தாள் ரேணுகா.... அவர்கள் வருடக்கணக்கில் திட்டம் போட்டு காய் நகர்த்திக் கொண்டிருந்தால் இவன் புதிதாக எதையோ கிளப்பி விடுகிறானே என்றிருந்தது அவளுக்கு....

அவனது நோக்கத்தை கண்டு கொண்ட சகுந்தலா உடனே ஆதி அறியாமல் கண்ணை காட்டி ரேணுகாவை தடுத்தவர் தான் பேச ஆரம்பித்தார்,,,

“சந்திரா எல்லாம் ஒரு விஷயம் இல்லைப்பா... ஆனா.... ம்ஹூம்.... இத்தன வருஷம் கழிச்சி நீ எங்க வீட்டு படியேறி வந்து கேட்கிற.... உனக்கு ஒரு நல்ல முடிவை சொல்ல முடியாத நிலமைல நாங்க இருக்கோமே கண்ணா....” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினார்....

“ஏன்....?? ஆத்ரேயாவுக்கு வேற யாராவது பொண்ண பார்த்து வெச்சிருக்கீங்களா???”

“சே.. சே... அதெல்லாம் இல்லப்பா....” என்றவர் ஒரு பெருமூச்சுடன் “நீ கேள்விபட்டிருப்ப.... ஆர்யாவுக்கு நித்திலாவ கட்டிவைக்க நாங்க குடும்பமா போய் உங்க தாத்தா வீட்டுல பேசிட்டு வந்ததை......” என்றார்...

அவன் எதுவும் சொல்லவில்லை.... கூர்மையான பார்வையுடன் அவரை ஏறிட்டான்...

“ஏதோ எங்க நேரம் அந்த கல்யாணம் நடக்காம போச்சு... நித்திலாவ நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட... சரி நீயும் என் பேரன்தானேன்னு அப்பவும் நான் சந்தோசம்தான் பட்டேன்....”

“ஆஹான்....” என்றான் அவன் பதிலுக்கு..

“ஆனா.... ஆனா....” என்றவர் அதற்குமேல் எப்படி சொல்வது என்பதைப்போல் அவர் தயங்க உடனே ரேணுகா பேச ஆரம்பித்துவிட்டாள்.

“சொல்லுங்களேன் மா.... எதுக்கு தயக்குறீங்க.... இதுல ஆதி வாழ்க்கையும் தானே சம்மந்தப்பட்டிருக்கு.....” என்க,,,, “ரேணுகா... நீ கொஞ்சம் பேசாம இருக்கியா....” என்று மகளை அதட்டினார் சகுந்தலாதேவி.... “நான்தான் பேசிக்கிட்டு இருக்கேன்ல....”

ஆதியின் புறம் திரும்பியவர் “கண்ணா நான் சொல்றத கேட்டு நீ கோப படக்கூடாது....” என்று பீடிகை போட்டார்....

“இல்ல சொல்லுங்க.....” என்றான் இறுகிய குரலில்...

“அது... உனக்கே தெரியும் நிர்மலாவுக்கு நித்திலா மேல பாசம் அதிகம்... அதே மாதிரிதான் எங்க ஆர்யா மேலயும் நிர்மலா ரொம்ப பாசமா இருப்பா... சின்ன வயசுல நீ வருஷத்துக்கு ஒரு தடவைதான் ஊருக்கு வருவ.... உன்மேல காட்ட முடியாத பாசத்த எல்லாம் ஆர்யா மேல காட்டுவா... ஆத்ரேயாங்கிற அவன் பெயர நாங்கெல்லாம் ஆர்யான்னு கூப்பிடும் போது அவ மட்டும் ஆதின்னு கூப்பிடுவா....” நிறுத்தி அவன் முகம் பார்த்தார்....

அவன் முகம் எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காது சாதாரணமாக இருந்தது...

‘கல்லுளிமங்கன்...” என்று நினைத்துக் கொண்டவர் அவனை காயப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வார்த்தைகளை கோர்த்து பேச ஆரம்பித்தார்...

“உன்மேல காட்ட வேண்டிய பாசத்த அவன்மேல காட்டினதாலோ என்னவோ சொந்த பேரன் உன்னை விட்டுட்டு நித்திலாவ ஆர்யாவுக்குதான் கட்டி வைக்கனும்னு அவளா முடிவு பண்ணிக்கிட்டா... அவளால உங்க கல்யாணத்த ஏத்துக்கவே முடியல ஆதி... உன் கல்யாணம் நடந்து ஒருநாள் கூட தாண்டியிருக்காது எங்க வீட்டுக்கு வந்த அழவே ஆரம்பிச்சிட்டா...”

“என் கால்ல விழுந்து கதறினா எப்படியாவது நித்திலாவ ஆர்யாவுக்கே கட்டி வெச்சிடலாம்,,, என் பேத்திய உங்க வீட்டு மருமகளா ஏத்துக்கங்க அக்கான்னு....”

ஆதியின் கை முஷ்டிகள் இறுக ஆரம்பித்தன....

அதை உணர்ந்து கொண்டவருக்கு உள்ளுக்குள் குதூகலமாக இருந்தது... மேலும் தொடர்ந்தார்....... “நான் எவ்வளவோ எடுத்து சொல்ல முயற்சி பண்ணியும் கேட்காம ஆர்யாவ வரவழைச்சி அவன் கிட்டயும் கெஞ்ச ஆரம்பிச்சிட்டா... அவன் என்ன பண்ணுவான் சின்ன பையன்... நிர்மலா அழுததும் அதை தாங்கிக்க முடியாம சரி பாட்டி உங்க பேத்திய நான் கட்டிக்கிறேன்னு வாக்கு கொடுத்துட்டான்...” என்றார் சோகமாக....

அவரைத் தொடர்ந்து ரேணுகா பேச ஆரம்பித்தாள்... “ஆமா ஆதி நாங்க எவ்வளவு எடுத்து சொல்லியும் சித்தி கேட்கவே இல்ல... ரொம்ப பிடிவாதமா இருந்தாங்க... போதாதைக்கு எப்படியாவது எங்கள சம்மதிக்க வைக்கனும்கிறதுக்காக அவங்க பெயர்ல இருக்கிற அத்தனை சொத்தையும் ஆர்யா பெயருக்கு மாத்துறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க.... சொத்து என்ன சொத்து ஆனா சித்தி எங்க வீட்டுல இருக்கிற ஒவ்வொருத்தர் கால்லயும் விழுந்து என் பேத்திக்கு வாழ்க்கை கொடுங்கன்னு கேட்கும்போது எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியலப்பா... ரொம்பவே தர்மசங்கடமான நிலமையில மாட்டிக்கிட்டோம்...”

“இப்பவும் அடிக்கடி வீட்டுக்கு வந்து நச்சரிச்சிக்கிட்டே இருக்காங்கப்பா... நாங்களும் என்னதான் பண்றது சொல்லு... அவங்க சொல்றதுக்கெல்லாம் சரி சரின்னு தலையாட்டி அவங்கள சமாதானப் படுத்தி வெச்சிருக்கோம்... நாங்க முடியாதுனு சொல்லிட்டா ஏதாவது பண்ணிக்குவாங்களோன்னு பயமா இருக்கு ஆதி...”

ரேணுகா சொல்லி முடிக்க “ஆமா கண்ணா... ஆனா அதுக்காக எல்லாம் நீ வருத்தப்படாதப்பா... நான் இருக்கிற வரைக்கும் அதெல்லாம் நடக்க விடவேமாட்டேன்... உன் பொண்டாட்டி உனக்குத்தான்ப்பா.....” என்றார் சகுந்தலாவும்...

ஆதி அவரை பார்த்து புன்னகைத்தவன் “அதை பத்தியெல்லாம் நீங்க கவலையே படாதீங்க பாட்டி.... எங்க வாழ்க்கைய நானும் என் பொண்டாட்டியும் பார்த்துக்குவோம்.... பாட்டி இல்ல செத்துப்போன அவங்க அப்பா, அம்மாவே நேர்ல வந்து சொன்னாக்கூட என் நித்திலா என்னை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டா... அதனால நீங்க கண்டதுயும் நினைச்சி கவலைப்படாம உங்க உடம்ப பார்த்துக்கங்க....” என்றுவிட்டு எழுந்தான்...

“சீக்கிரமே உங்க பேரன்கிட்ட மித்ரா விஷயத்த பேசிட்டு எனக்கு சொல்லுங்க.... அப்புறமாத்தான் நான் தனா மாமாகிட்டயும் மத்தவங்ககிட்டயும் இதை பத்தி பேச முடியும்.... நான் வரேன்....” என்றவன் அங்கிருந்து கிளம்பிவிட,,,,,

“என்னம்மா... இவன் இப்படி சொல்லிட்டு போறான்......” என்றாள் ரேணுகா...

“அவன் வேற என்ன சொல்லுவான்னு நினைக்குற... அவன் இப்படித்தான் பேசுவான்... ஆனா பாவம் அவனுக்கு நிர்மலாவ பத்தியும் தெரியல... நம்மள பத்தியும் தெரியல.... இப்ப நம்ம இவன்கிட்ட பேசினது கூடிய சீக்கிரமே ஏதோ ஒரு ரூபத்துல நிர்மலா வீட்டுல வெடிக்கும் பாரு.....” என்றார் குரூரமாக.. ஆனால் அது அன்றே வெடித்து சிதறப்போகிறது என்பதை சகுந்தலாவும் அறிந்திருக்கவில்லை....




######################




இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்கச் செல்லுமுன் பாட்டியின் காலில் மருந்து தடவி விட்டுக்கொண்டிருந்தாள் நித்திலா.... ஏனோ பேத்தியிடம் இத்தனை நாட்களாக இல்லாத உற்சாகம் திடீரென தோன்றியிருப்பதை உணர்ந்தவர்...

“என்னடா ரொம்ப சந்தோசமா இருக்கே.....” என்றார்.....

அதற்கு நித்திலா எதுவும் கூறாமல் பாட்டியை பார்த்து சிரித்து வைக்க அவர்களுடன் உட்கார்ந்திருந்த அம்ரிதா... “ஆமா பாட்டி நித்து அவ மனசுக்கு பிடிச்ச யாரையோ பார்த்திருக்கா... அதான் இந்த சந்தோசம்.....” நித்திலாவை கிண்டல் செய்வதற்காக அவள் கூற ஜெல் தடவிக் கொண்டிருந்த நித்திலாவின் கை ஒருநொடி நின்று பிறகு தன் வேலையை தொடர்ந்தது...

பாட்டியின் முன்னால் அம்ரிதா இப்படி சொல்லவும் மித்ராவுக்கு திக்கென்றானது... மேலே பேசாதே என்பது போல் அவளது காலை லேசாக மிதித்து வைத்தாள்.... அதன்பிறகுதான் தான் செய்த தவறை உணர்ந்த அம்ரிதா பேச்சை மாற்றும் விதமாக “ஆமா நித்து உன் பெஸ்ட் ஃப்ரெண்ட் தியாவ பார்க்க போறதா சொன்னியே.... பார்த்தியா???” என்றாள்...

“பார்த்தேன்....” ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள்...

“அப்புறம் பெஸ்ட் ஃப்ரென்ட்ஸ் ரொம்ப நாள் கழிச்சி மீட் பண்ணிருக்கீங்க... கட்டிப்புடிச்சி பாசமழை பொழிஞ்சிருப்பீங்களே.....” அம்ரிதா கிண்டலாக கேட்க “ம்ம்ம்... பொழிஞ்சோம் பொழிஞ்சோம்.....” உதடுகடித்து சிரிப்பை அடக்கியவாறு சொன்னாள்...

அவர்கள் இருவரும் பேசுவதை நிர்மலா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதை கண்ட மித்ரா “சரி சரி டைம் ஆச்சு... வா அம்மு போய் தூங்கலாம்....” என்று அவளை இழுத்துக்கொண்டு சென்று விட்டாள்..

நித்திலாவும் ஜெல்லை பூசிவிட்டு பாட்டியை கைப்பிடித்து அவரது அறைக்குள் அழைத்து சென்று விட்டவள் “குட்நைட் பாட்டி....” விடைபெற்றுக் கொண்டு மாடியில் தன்னுடைய அறையை நோக்கி சென்றாள்...

அறைக்குள் வந்ததும் சௌர்யாவுக்கு அழைத்தவள் அன்று நடந்த அனைத்தையும் அவனுடன் பகிர்ந்து கொண்டாள்... ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவனுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு அருணாவுக்கும் அழைத்து பேசினாள்..

பின்பு குளியலறைக்குள் சென்று குளித்துவிட்டு வந்தவள் ஒரு நைட்டியை எடுத்து அணிந்து கொண்டு திரும்ப அங்கு நின்றிருந்தவனை கண்டு திடுக்கிட்டு “அத்.... அத்தான் எப்போ வந்தீங்க???” என்றாள் திடீரென்று அவனைக் கண்டு பயந்ததால் நெஞ்சில் கைவைத்து தன்னை ஆசுவாசப் படுத்தியபடி...

“ம்ம்ம்... நீ டவல கழட்டி போட்டியே அப்பவே வந்துட்டேன்...” அவளை மேலிருந்து கீழாக பார்த்துக்கொண்டே கூறினான்..

“ச்சீ.....” என்றவள் அவனது பார்வையில் நெஞ்சம் தடதடக்க பின்வாங்க அவனும் அவளை கடித்து தின்றுவிடுவதை போல் பார்த்துக் கொண்டே முன்னேறினான்...

சுவற்றில் மோதி நின்றவளை உடலோடு உடல் உரச ஒட்டி நின்றவன் மார்பில் கைவைத்து தள்ளியவள் “சொந்த பொண்டாட்டிய திருட்டுத்தனமா வந்து இப்படில்லாம் பார்க்கறீங்களே... உங்களுக்கு வெட்கமா இல்லையா....” என்றாள் வேண்டுமென்றே...

“இதுல வெடகப்பட என்னடி இருக்கு.... இதெல்லாம் ஹிஸ்டரி பேபி.... செம்ம கிக்கா இருக்கு......” என்றவன் “அதெல்லாம் உனக்கு புரியாது...” என்று சேர்த்து சொன்னான்...

“எனக்கு அதெல்லாம் புரியவே வேணாம்...” என்றாள் அவள்..

மிக நெருக்கத்தில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்...

அவன் அவளிடம் பேசிவிட்டு போகத்தான் வந்திருந்தான்.. அவன் வந்த நேரத்தில் இவள் உடை மாற்றிக் கொண்டிருப்பதை கண்டதும் அவனுக்கு பேச வந்ததெல்லாம் மறந்தே விட்டது...

அங்கங்கே அவள் முகத்தில் ஒட்டியிருந்த நீர்த்துளிகளை கண்டு உதடு குவித்து மென்மையாக ஊதிவிட்டான்....

அவனது மூச்சுக்காற்றின் வெப்பமும் தன் முகத்துக்கு வெகு அருகே குவிந்திருந்த உதடுகளும் பெண்ணவளை இம்சிக்க விழிகளை மூடிக்கொண்டாள் நித்திலா...

அவனது உதடுகள் மெல்ல கீழிறங்கி அவளது கழுத்தில் கோலமிட கரங்களோ அவளது உடலின் ஏற்ற இறக்கங்களை அளவெடுத்துக் கொண்டிருந்தன... அவனது கரங்களில் உருகி குழையும் உடலின் தகிப்பை அடக்கும் வழிதெரியாமல் அவனிடமே அடைக்கலம் தேடியவளாக கணவனை இறுக அணைத்துக் கொண்டாள்...

அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்... “இதுக்கு மேலயும் உன்ன விட்டு வெச்சா கடவுள் என்னை மன்னிக்கவே மாட்டார்டி....” என்றவன் அவளை தூக்கிக்கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான்.... (கடவுள்: “வாய்ப்பில்ல ராஜா.... வாய்ப்பில்ல..”)

நிர்மலா உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.... அவரது மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது... அன்று நடந்த விடயங்களை மனதுக்குள் அசைபோட்டுக் கொண்டு வந்தவர் இறுதியில் அம்ரிதாவின் பேச்சு நினைவுவர அவர்கள் இருவரும் நிச்சயமாக நித்திலாவின் தோழியை பற்றி பேசவில்லை என்று அவர் மனம் அடித்து சொன்னது.....

அன்று மாலைதான் சாரதா பேச்சுவாக்கில் ஆதி சென்னைக்கு வந்திருப்பதை பற்றி அவரிடம் கூறியிருந்தாள்... மித்ராவின் திடீர் வருகை,,, நித்திலாவின் நடத்தையில் தெரிந்த மாற்றம்.... கொஞ்ச நாட்களாக எதையோ பறிகொடுத்தாற்போல் சுற்றிக்கொண்டு திரிந்தவள் இன்று திடீரென்று அந்த முகத்தில் பல்ப் எரிகிறதே..…

பேத்தியை பற்றியே இரவு பகலாக சிந்தித்துக் கொண்டிருப்பவருக்கு அவளது சிறிய மாற்றம் கூட அவரது கண்ணிலிருந்து தப்பவில்லை... போதாதைக்கு அம்ரிதாவின் பேச்சும் மித்ரா அவளை பேசவிடாமல் அழைத்துச் சென்றதும் என்று அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தவருக்கு இறுதியில் ஒரே ஒரு விடைதான் கிடைத்தது...

உடனே எழுந்து உட்கார்ந்து விட்டார்.......

ஏதோ தவறு நடப்பதை போல மனதுக்கு தோன்றிக்கொண்டே இருந்ததில் அருகில் உறங்கிக் கொண்டிருந்த விஸ்வநாதனின் தூக்கம் கலையாதவாறு சிரம்ப்பட்டு எழுந்தவர் நித்திலாவின் அறையை நோக்கி செல்லத்தொடங்கினார்...


அங்கே அவரது பேரனும் பேத்தியும் ஒருவரை ஒருவர் அணுஅணுவாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள்... பேச்சுக்களுக்கே இடமில்லாமல் வேகமூச்சுக்களும் மெல்லிய முணகல்களும் மட்டுமே அங்கு ஒலித்துக் கொண்டிருந்தன.... நிர்மலா சென்று கதவை தட்டும்வரை....

“நித்தும்மா....” என்று கதவை லேசாக தட்டிய நிர்மலாவின் குரலில் பதறிப்போனவள் “ப.... பாட்டி அத்தான்...” என்றாள் அவனிடம் மெல்லிய குரலில்....

அதில் எரிச்சலடைந்தவன் “இந்த நேரத்துல எதுக்கு வந்திருக்காங்க...” என்றான் கோபமாக...

“என்னன்னு தெரியலயே அத்தான்... இப்ப என்ன பண்றது....” என்று அவள் எழுந்து கொள்ள முயற்சிக்க அவளை தடுத்தவன் “ஸ்ஸ்ஸ்....நீ சத்தம்போடாதே... தூங்கிட்டன்னு நினைச்சி போகட்டும்... பேசாம இரு....” என்றவன் அவளை பேசவிடாமல் தடுக்கும் பொருட்டு அவளது இதழ்களை அழுத்தமாக சிறை செய்து கொண்டான்...

நிர்மலா இரண்டு, மூன்று முறை அழைத்து பார்த்தவர் பேத்தி கதவை திறக்காததால் தூங்கிவிட்டாளோ என்று நினைத்துக்கொண்டு திரும்பி நடந்தார்... ஒருசில எட்டுக்கள் சென்றவர் என்ன நினைத்தாரோ மீண்டும் வந்து கதவை தட்டினார்... இம்முறை சற்று பலமாக....

ஆதியின் இதழ் யுத்தத்தில் தன்னை மறந்து கொண்டிருந்தவள் மீண்டும் கதவு தட்டப்படவும் அவளுக்குமே அது எரிச்சலை கிளப்பினாலும் வயதான பாட்டி, இந்த நேரத்தில் வந்து தன்னுடைய அறை கதவை தட்டிக்கொண்டிருக்கிறார்... அதுவும் காலில் அடிபட்டிருக்கும் இந்த நிலையில் படியேறி வந்திருக்கிறார் என்ற உணர்வு தோன்ற மறுநொடியே ஆதியிடமிருந்து தன்னை பிரித்துக்கொண்டு விடுபட்டவள்

“அத்தான் விடுங்க ப்ளீஸ்.... பாட்டி எதுக்கு வந்திருக்காங்களோ... அவங்களுக்கு கால்ல வேற அடிபட்டிருக்கு...” என்றாள்....

“ப்ச்.... அவங்க சும்மா வந்திருப்பாங்க நித்திலா.... நீ பேசாம வா...” என்று மீண்டும் அவளை தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவர முனைய அதில் முகம் சுளித்தவள் “உடம்புக்கு முடியாத பாட்டி கதவை தட்டிட்டு இருக்காங்க... உங்களுக்கு இப்ப இதுதான் முக்கியமா.... விடுங்க முதல்ல...” பாட்டிக்கு என்னவோ என்ற பதட்டத்தில் கணவனிடம் வார்த்தையை விட்டுவிட்டாள் அது அவனை எந்த அளவுக்கு தாக்கும் என்பதை அறியாதவளாக...

உடனே அவனிடமிருந்து விலகி கட்டிலில் கிடந்த உடையை எடுத்து வேகமாக அணிந்து கொண்டவள் அவளது பேச்சினால் அவனது முகத்தில் தோன்றிய மாற்றத்தை கவனிக்க தவறிவிட்டாள்...

கட்டிலிலிருந்து இறங்கி நின்று “அத்தான் வாங்க....” என்றபடி அவனது கையை பிடித்து அழைக்க அவள் இழுத்த இழுப்புக்கு உடன் சென்றவனின் பார்வை மட்டும் நித்திலாவின் முகத்தில் நிலைத்திருந்தது...

அவனது பார்வையை உணரும் நிலையில் அவளும் இல்லை... ஒருவேளை அவனது அந்த பார்வையை கண்டிருந்தால் நிச்சயமாக நித்திலா பாட்டிக்காக கதவை திறக்க வேண்டும் என்று நினைத்திருக்கவே மாட்டாள்...

பால்கனி கதவை திறந்து அவனை அங்கு நிறுத்தியவள் “இங்க இருங்க அத்தான்....” என்றுவிட்டு வேகமாக அறைக்குள் நுழைந்து கதவை திறக்க “இவ்வளவு நேரமா கதவை திறக்காம என்ன செஞ்ச....” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் நிர்மலா...

“தூங்கிட்டேன் பாட்டி.....” என்றவள் “என்னாச்சு பாட்டி... இந்த நேரத்துல வந்திருக்கீங்க...”

“ஏன் இந்த நேரத்துல நான் வரக்கூடாதா....” முகத்திலடித்தாற்போல் கேட்டவரை கண்டு நித்திலாவுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது...

“அதுக்கில்ல பாட்டி... கால் வலியோட படியேறி வந்திருக்கீங்களே...” என்றாள்...

அவரோ அவளை கண்டுகொள்ளாது அவளது அறையை சுற்றி பார்த்துக் கொண்டே “உன்ன பார்க்கனும் மாதிரி இருந்ததுடா... அதான் வந்தேன்.....” என்றார்..

குளியலறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.... ஜன்னல் திரைச்சீலைகளை ஒவ்வொன்றாக இழுத்து பார்த்தார்...

அதன்பிறகுதான் அவரது நோக்கம் புரிய நித்திலாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது... பாட்டியை கோபமாக பார்த்துக் கொண்டு நின்றவளின் கண்களில் தரையில் கிடந்த ஆதியின் டீஷர்ட் பட உடனே காலால் அதனை கட்டிலுக்கடியில் தள்ளி விட்டாள்...

நிர்மலா பால்கனி கதவை நெருங்க பதறிப்போனவள் “பாட்டி... அங்கெல்லாம் எதுக்கு போறீங்க...” என்றபடி அவர் பின்னால் செல்ல அதற்குள் அவர் பால்கனி கதவை திறந்துவிட்டு முன்னேறியிருந்தார்...

நித்திலாவின் மூச்சே நின்றுவிட்டது...

“போச்சு போச்சு... அவ்வளவுதான்...” என்று நினைத்துக் கொண்டு பால்கனியில் நுழைந்தால் அங்கு ஆதியை காணவில்லை...

நிர்மலா சற்றுநேரம் சுற்றிவர பார்த்தவர் பின்பு அறைக்குள் நுழைந்து “சரிடா கண்ணா நீ தூங்கு... மறக்காம கதவை லாக் பண்ணிடு...” என்றுவிட்டு அவர் சென்றுவிட அதன்பிறகுதான் நித்திலாவின் சுவாசம் சீரானது...

கதவை அடைத்தவள் கணவனின் நினைவில் பால்கனி பக்கம் செல்ல கதவை திறந்துகொண்டு புயல்போல் உள்ளே நுழைந்தான் ஆதி.... அவனை ஆச்சர்யமாக பார்த்தவள் “அத்தான் பாட்டி வரும்போது எங்கே இருந்தீங்க... நான் பயந்தே போயிட்டேன்... எங்கே பாட்டி உங்கள பார்த்துடுவாங்களோன்னு....” என்க “டீஷர்ட்????” என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே அவனிடமிருந்து வந்தது..

கட்டிலுக்கு கீழே தள்ளிவிட்ட அவனது டீஷர்ட்டை இவள் எடுக்க அதனை அவளிடமிருந்து பிடுங்கி அணிந்து கொண்டவன் “டைம் ஆச்சு நித்திலா.... குட் நைட்...” என்றுவிட்டு கிளம்பப்போக உடனே “அத்தான்............” என்று நித்திலாவும் எதையோ சொல்ல ஆரம்பிக்க அவள் சொல்வதை கேட்பதற்கு அவன் அங்கு இருக்கவில்லை...

நிர்மலா நித்திலாவின் அறையிலிருந்து வெளியே வந்தவர் கீழே செல்வதற்கு படியை நெருங்க அத்தனை நேரம் காணாமல் போயிருந்த கால்வலி அப்போது மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது... “இதுவேற....” என்று நினைத்தவர் சற்று நேரம் இருந்துவிட்டு செல்லலாம் என்ற எண்ணத்தில் அங்கிருந்த சோபாவில் சோபாவில் உட்கார்ந்திருந்தார்...

அந்த நேரத்தில் மீண்டும் நித்திலாவின் அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கவும் பார்வையை கூர்மையாக்கிக் கொண்டு நோட்டமிட அறையிலிருந்து வெளியே வந்தது அவரது பேரன் ஆதியேதான்...

அவர் இருந்த இடத்தில் மின்விளக்குகள் அணைக்கப் பட்டிருந்ததால் மிகவும் இருளாக இருந்தது.. அதனால் ஆதியோ நித்திலாவோ அவரை பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை... ஆனால் நித்திலாவின் அறைக்குள் இருந்து வந்த லைட் வெளிச்சத்தில் அவரால் தெளிவாகவே ஆதியை பார்க்க முடிந்தது....

“ஓஹ்... புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து என்னையே முட்டாளாக்க பார்க்கிறீங்களா....” என்று கோபமாக நினைத்தவருக்கு ஆதியைவிட நித்திலா மீதுதான் அதிக ஆத்திரம் வந்தது... ‘ஒன்னுமே தெரியாத மாதிரி எப்படி நின்னா...’ என்று பல்லைக்கடித்தார்

பாவம்.... பேத்தியின் வாழ்க்கையை தானே உருக்குலைத்து விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர் அறியும்போது காலம் கடந்து போயிருக்கும்....



தொடரும்........



படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே


 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 37(1):





தயாராகி படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்த தன் செல்ல மகனை சோகத்துடன் பார்த்திருந்தார் நிர்மலாதேவி…

“அம்மா….” என்றபடி அவரை நெருங்கியவன் “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா….” என்று கால்களில் விழுந்தான்…

“நல்லா இருப்பா….” என்று அவனை எழுப்பிவிட்டவர் “எவ்வளவு சொல்லியும் கேட்காம அம்மாவ விட்டுட்டு அவ்வளவு தூரம் போகப்போற இல்ல….” என்றார் விழிகளில் நீர் கோர்க்க…


அதற்கு அரவிந்தன் எதையோ சொல்லப்போக “கிளம்புற பையன்கிட்ட இதையெல்லாம் பேசி அவன கஷ்டப்படுத்தனுமா நிர்மலா….” என்றபடி அங்கு வந்து சேர்ந்தார் விஸ்வநாதன்… “ஏம்மா அவன் என்ன நாடு விட்டு நாடு போறானா இங்க பக்கத்துல இருக்க பெங்களூருக்கு தானே போறான்…”

அரவிந்தனும் அன்னையின் கன்னத்தில் கை வைத்து தாங்கியவன் “அம்மா… உங்களுக்கு எப்ப என்னை பார்க்கனும்னு தோனுதோ ஒரு கால் பண்ணுங்க ஓடி வந்திர்ரேன்….” என்றான்..

“எனக்கு உன்ன தினமும் பார்க்கனும்டா…..” என்க “அம்மா….” என்று அவரை அணைத்துக் கொண்டான்.. அவனுக்குமே விழிகள் கலங்கியது… “என் செல்ல அம்மால… இது என்னோட எத்தனை வருஷ கனவு தெரியுமா… நீங்க இப்படி வருத்தப்பட்டா நான் எப்படிம்மா போறது… எனக்கு மட்டும் உங்கள விட்டுட்டு போறது வருத்தமில்லைனா நினைக்குறீங்க…”

அங்கு நின்றிருந்த அவனது சகோதரர்களின் விழிகளும் கலங்கியது… ஒரு வழியாக நிர்மலாவை சமாதானப்படுத்தி அண்ணன் அண்ணிமார்களிடமும் விடைபெற்றவன் தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணமானான்..

படிப்பை முடித்துவிட்டு தந்தையின் தொழிலில் தலையிடாமல் தன்னுடைய சொந்தக்காலில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் பல முயற்சிகளுக்கு பிறகு இதோ இப்போதுதான் அவனும் அவனது நண்பர்கள் இருவரும் சேர்ந்து பெங்களூரில் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள்…

எல்லாம் அவன் நினைத்தபடிதான் நடந்து முடிந்திருந்தது.. அவனது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதை தவிர… அவன் கடைக்குட்டி என்பதாலோ என்னவோ அந்த வீட்டில் அனைவருக்கும் அவன் மீது பாசம் அதிகம்… அதிலும் நிர்மலா சொல்லவே வேண்டாம்… மகனென்றால் அவருக்கு உயிர்.. அவனுக்கும் அப்படித்தான்..

குடும்பத்தாரை பிரிந்து செல்வதை நினைத்து அவன் தயங்கவும் விஸ்வநாதன்தான் மகனை தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்..

ஒருவழியாக அதையும் கடந்து இப்போது பெங்களூருக்கும் வந்து சேர்ந்து விட்டான்… முதல் இரண்டு நாட்கள் வீடு, குடும்பம், பெற்றோர் என்று மிகவும் சிரம்ப்பட்டவன் பின்பு மெல்ல மெல்ல தன்னை வேலைகளில் மூழ்கடித்துக் கொள்ள ஓரளவு குடும்பத்தின் நினைவிலிருந்து வெளிவரவும் முடிந்தது..

நண்பர்கள் வீட்டில் தங்கிக்கொள்ளுமாறு வற்புறுத்தியும் மறுத்துவிட்டு தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தான்.. காலையில் அலுவலகம் மாலையில் வீடு இடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தாருக்கு அழைத்துப் பேசுவதென்று சென்று கொண்டிருந்த அவன் வாழ்க்கையில் புயல்போல் வந்து சேர்ந்தாள் ஒருத்தி…

ஒரு மாலை நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவன் அவனுடைய குடியிருப்பு பகுதியில் ஆட்கள் கும்பலாக நின்றிருக்க என்னவென்று பார்த்தான்..

பெண்ணொருத்தி ஒருவனை அடித்து துவைத்துக் கொண்டிருந்தாள்.. அவளது முகத்தை பார்த்தவனுக்கு சற்று அதிர்ச்சிதான்.. அவள் மிகவும் அழகாக இருந்தாள்.. நாகரீகமாக உடை அணிந்திருந்தாள்.. ஆனால் நடுத்தெருவில் ரவுடியை போல ஒரு ஆண்மகனை அடித்துக் கொண்டிருந்தாள்..

கார் கண்ணாடியை இறக்கிவிட்டு அங்கிருந்த ஒருவரிடம் விசாரிக்க “லவ் லெட்டர் கொடுத்துட்டான்னு அடிக்கிறா சார்…” என்றார் அவர்..

“ஓஹ்…” என்றவன் அவளை மீண்டும் ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்… அத்துடன் அவளை மறந்தும் போனான் மறுவாரம் அவளை நேருக்கு நேராக சந்திக்கும்வரை…





தினமும் காலையில் ஜாகிங் செல்வது அரவிந்தனின் வழக்கம்.. அவனுடன் இணைந்து கொள்வார் டாக்டர் சங்கர்.. இருவரும் சில நாட்களுக்கு முன்புதான் சந்தித்துக் கொண்டார்கள்.. சாதாரணமாக பேச ஆரம்பித்து அதுவே இப்போது நட்பாக துளிர்விட்டிருந்தது..

அவருடைய வீடும் பக்கத்து தெருவில்தான் இருந்தது.. ஆனால் அவன் இதுவரை அவரது வீட்டுக்கு சென்றதில்லை.. தினமும் காலையில் ஜாகிங் செல்லும் போது பார்த்து பேசிக் கொள்வார்கள்..

அன்றும் அப்படித்தான் இருவரும் ஏதேதோ பேசியபடி ஓடிக்கொண்டிருந்தார்கள்… திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு “இவளா!!!!” என்றான் அரவிந்தன் லேசான அதிர்ச்சியுடன்..

“யாரு அரவிந்த்… என்னாச்சு??” என்றார் சங்கர் புரியாமல்…

“எதிர்ல பாருங்க சார்…” என்றான் அரவிந்தன்…

சங்கர் திரும்பி பார்க்க அவர்களுக்கு எதிரில் ஜாகிங் வந்து கொண்டிருந்தவளை கண்டவர் “இந்த பொண்ணா இவளுக்கு என்ன அரவிந்த்..???” என்க,, “இவளுக்கு என்னவா…. சரியான பஜாரி சார்… லவ் லெட்டர் கொடுத்துட்டான்னு ஒரு பையன நடு ரோட்ல போட்டு அடிச்சிட்டு இருந்தா….” என்றான் அவன்..

அதில் குபீரென்று சிரித்தவர் “என்னது நடுரோட்ல ஒருத்தன அடிச்சாளா… இருங்க அவகிட்டயே கேக்கலாம்….” என்றவர் அரவிந்தன் அவரை தடுப்பதற்கு முன்பே அவளை அழைத்துவிட்டிருந்தார்….


“என்ன டாக்டர் சார் ஜாகிங்கா??” என்றபடி அவர்களை நோக்கி வந்தாள்.. “சார் யாரு புதுசா இருக்கார்….”

“ஆமாம்மா தெரிஞ்ச பையன்…” என்றவர் “என்னம்மா நடுத்தெருல ஒருத்தன போட்டு அடிச்சியாமே…” என்றார் கேள்வியாக…

“நானா???” என்று யோசித்தவள் பின்பு நினைவு வந்தவளாக “ஆமா.. போனவாரம் ஒருத்தன அடிச்சேன்…. இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்றது டாக்டரே???” அவரை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டாள் அவள்..

“தம்பிதான் சொன்னாப்புல… லவ் லெட்டர் கொடுத்ததுக்கெல்லாமா அடிப்பாங்க…. ரொம்ப தப்புமா….” என்றார் அவர்..

“ஆஹா இவகிட்ட நம்மள கோர்த்துவிடுறாரே….” என்று நினைத்தாலும் வெளியில் கெத்தாக பார்த்துக்கொண்டு நின்றான் அரவிந்தன்..

“ஓஹ்….” என்று அரவிந்தனை அற்பமாக பார்த்தவள் “அவன் லவ் லெட்டர் கொடுத்ததை சொன்ன உங்க தொம்பி… அவன் நடுரோட்ல அத்தனை பேர் முன்னாடி என் கைய பிடிச்சி இழுத்ததையும் அதுக்காகத்தான் நான் அவன அடிச்சேங்கிறதையும் சொல்லாம விட்டுட்டாரே, ஏன் மறந்துட்டாரா??? இல்லை மறைச்சிட்டாரா???” சங்கரிடம் கேட்டாள்..

‘என்னது!!! கைய புடிச்சி இழுத்தானா… அடப்பாவி அதை சொன்னவன் இதை சொல்லாம விட்டுட்டானே…’ நொந்துபோன அரவிந்தன் அவளது பார்வையை சந்திக்க தயங்கி வேறு பக்கம் பார்த்தான்..

“கைய புடிச்சி இழுத்தவன வெறும் அடிச்சதோடவா விட்ட போலிஸ்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டியிருக்க வேணாம்???..” என்றார் சங்கர் பதிலுக்கு…

“அட நீங்க வேற டாக்டரே… அவன போலிஸ்ல புடிச்சு கொடுத்தா அப்புறம் எங்கப்பன எவன் சமாளிக்கிறது…” என்று தோளை குலுக்கினாள் “கண்டவன் கூட எதுக்கு வம்ப வளர்த்துக்கிட்டு வர்ரேன்னு என்னை முட்டிக்கு முட்டி தட்டிடுவாரு அந்த மனுஷன்…” என்றாள்…

பின்பு அரவிந்தனை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு “கண்ணால பார்க்கிறதும் பொய் காதால கேட்கிறதும் பொய்னு சொல்லி வைங்க டாக்டர் உங்க ஃப்ரென்ட்டுகிட்ட….” என்றுவிட்டு அவர்களை கடந்து சென்றாள் அவள்…

அவள் சென்றதும் “உஃப்ப்ப்…” என்றவன் “இவ மட்டும்தான் பஜாரின்னு பார்த்தா இவ குடும்பமே அப்படித்தான் போல… நீங்க வாங்க சார்..… இனிமேல் இவ இருக்கிற பக்கமே திரும்ப கூடாது…” என்றான் அரவிந்தன்…

அதற்கு சங்கரும் சிரித்துவிட இருவரும் தங்களது ஜாகிங்கை தொடர்ந்தனர்… அரவிந்தன் என்ன நினைத்தானோ எதுவோ உந்த சட்டென்று பின்னால் திரும்பி அவளை பார்த்தான்… அதே நேரம் ஓடிக்கொண்டிருந்த அவளும் இவனை திரும்பி பார்க்க இருவரது பார்வைகளும் ஒருவரையொருவர் தொட்டு மீண்டன…

அன்றிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு சங்கர் அரவிந்தனை தன் திருமணநாள் விழாவிற்கு அழைக்க அவனும் சென்றிருந்தான்.. எவ்வளவோ முயற்சித்தும் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு அவன் வந்து சேர்வதற்குள் அங்கு விருந்து ஆரம்பமாகி விட்டிருந்தது..

அதற்காக சங்கரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டவன் அவரது மனைவி அருணாவை அறிமுகம் செய்து வைக்க அவருடன் பேசிவிட்டு விருந்தில் கலந்து கொண்டான்…

அந்த சமயத்தில்தான் மீண்டும் அந்த பெண்ணை பார்த்தான்.. முழு அலங்காரத்தில் கொள்ளை அழகுடன் பட்டாம்பூச்சி போல் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருந்தவளை விட்டு அவனால் தன் பார்வையை திருப்பவே முடியவில்லை…

என்ன சாப்பிட்டோம் எதை சாப்பிட்டோம் என்பதை கூட உணராமல் அவளையே மொய்த்து கொண்டிருந்தது அவன் பார்வை..

இறுதியில் உணவை முடித்துவிட்டு வந்தவன் வீட்டை சுற்றி பார்வையிட அங்கிருந்த ஒரு ஃபோட்டோவை கண்டதும் அப்படியே அசையாமல் நின்றுவிட்டான்..

அதில் இருபுறமும் அருணாவும் சங்கரும் உட்கார்ந்திருக்க அவர்களுக்கு பின்னால் இருவரின் கழுத்தையும் கட்டிக்கொண்டு சிரித்தபடி நின்றிருந்தது இதுநேரம் வரை அவன் சைட் அடித்துக்கொண்டிருந்த அந்த அழகிய பஜாரிப்பெண்தான்…

அவன் தனியாக நின்றிருப்பதை கண்ட அருணா என்னவென்று விசாரிக்க “இது… இது யாரு???” என்று கேட்டான் அவரிடம்..

“இது எங்க ஒரே பொண்ணு… பெயர் சந்தியா…” என்றார் அவர்..

“என்னது உங்க பொண்ணா!!!” என்று கேட்டவனை வினோதமாக பார்த்தவர் “ஆமா எங்க பொண்ணுதான்… ஏன் தம்பி??? என்னாச்சு???” அவன் முகம் ஒரு மாதிரி மாறிவிட்டதை உணர்ந்து கேட்டார்…

அவன் அன்று நடந்த சம்பவத்தை கூற அதைக்கேட்டு வாய்விட்டு சிரித்தவர் “அப்பாவும் பொண்ணும் உங்களையும் விட்டு வைக்கலையா…..” என்றார்…

தன் மகளை அழைத்தவர் அவள் அரவிந்தனை கண்டு ஓடிப்போக முயல அவளது காதை பிடித்து திருகி “அப்பாவுக்கும் பொண்ணுக்கும் யார்கிட்ட விளையாட்டு காட்டுறதுன்னு இல்லையா…???” என்றார்…

“ஏன் இவர் மட்டும் என்னை பஜாரின்னு சொல்லலாமா??” என்றாள் தன் காதை தேய்த்துவிட்டபடி…

“பின்னே நீ தெருல ஆம்பள பையன அடிச்சா பஜாரின்னுதான் சொல்லுவாங்க….” என்றார் அவர் பதிலுக்கு…

சங்கரும் அங்கு வந்து சேர அருணா அவரையும் ஒரு பிடி பிடித்துவிட்டார்… அப்பாவும் மகளும் அன்னையிடம் மாட்டிக்கொண்டு விழிப்பதை ரசனையுடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அரவிந்தன்.. அத்தனை நாள் தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாடிக் கொண்டிருந்தவன் இவர்களது அழகிய, மகிழ்ச்சியான குடும்பத்தை கண்டதும் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது… அதுவும் அவர்களது மகளை மிக மிக பிடித்துவிட்டது…

இனி என்ன… அவன் அடிக்கடி சங்கரை தேடி அவர்கள் வீட்டுக்கு செல்வதும் அதுவும் அவர் நிறைய படிப்பதால் தேடித்தேடி அவருக்கு பிடித்த புத்தகங்களாக வாங்கிக் கொண்டு செல்வான்… சங்கர் அப்படியே மகிழ்ந்து போவார்..

“உங்களுக்கு எதுக்கு சிரம்ம் அரவிந்த்… சொல்லிருந்தா நானே வந்திருப்பேனே…” தனக்காக அவன் சிரம்ப்படுவதாக நினைத்து அவர் சில சமயங்களில் கூறினாலும் அவன் கண்டு கொள்வதில்லை…

அருணாவுக்கும் அரவிந்தனை மிகவும் பிடித்துவிட்டிருந்தது.. பார்வையில் கூட கண்ணியத்தை பேணும் ஆண்களை காண்பது இந்த காலத்தில் மிகவும் அரிது என்பதால் அரவிந்தன் மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் உண்டானது.. அவன் ஹோட்டலில் சாப்பிடுவதை அறிந்து அவனுக்கும் சேர்த்து தான் சமைத்து அனுப்பிவிடுவார்… மிகக் குறுகிய கால அளவுக்குள் அவர்கள் வீட்டில் தானும் ஒரு அங்கமாகிவிட்டான் அவன்…

அதைக்கண்டு சந்தியாவுக்கு தான் பொறாமை பொறாமையாக வரும்… ஏதோ அவளுடைய இடத்தை அவன் ஆக்கிரமித்து கொண்டது போல… வெளிப்படையாக அவனை முறைத்துக் கொண்டு திரிவாள்… அவனும் அவளை விடுவதில்லை… எதையாவது பேசி எப்போதும் வம்பிழுத்துக் கொண்டே இருப்பான்…

இப்படி சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கான நேரமும் வந்தது… ஒருநாள் அவன் சென்றபோது வீட்டில் சந்தியாவை தவிர யாரும் இருக்கவில்லை….

“அப்பா இல்ல???” என்று அவன் கேட்க “அப்பா ஹாஸ்பிடல் போயிருக்காங்க…. அம்மா ஏதோ மீட்டிங் போயிருக்காங்க….” என்றவள் சற்று நேரம் யோசனையுடன் நின்றிருந்தாள்… அவனை உள்ளே அழைப்பதா வேண்டாமா என்ற யோசனையில் இருந்திருப்பாள் போல…

பின்பு என்ன நினைத்தாளோ “உ… உள்ள வாங்க….” என்றாள்..

அவனுக்கும் அவளுடன் தனியாக பேச வேண்டி இருந்ததால் அவள் அழைத்ததும் மறுக்காமல் சென்றுவிட்டான்..

ஆளுக்கொரு கிண்ணத்தில் ஐஸ் கிரீமை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தவள் தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டு அவனை கண்டு கொள்ளாமல் டீவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த குழந்தைகள் நிகழ்ச்சியில் மூழ்கிவிட்டாள்…

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்… அவள் இப்போதைக்கு தன்பக்கம் திரும்புவாள் போல தெரியாததால் தொண்டையை செருமிக்கொண்டு பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்…

“இந்த குழந்தை ரொம்ப அழகாயிருக்கால்ல….???” என்றான் திரையில் தெரிந்த பெண் குழந்தையை பார்த்து…

“ஆமா… இவ பெயர் ஸ்ருதி… அஞ்சு வயசுதான் எவ்ளோ அழகா பாடுவா தெரியுமா…” என்றாள் சந்தியா ஆர்வமாக… மேலும் அந்த குழந்தை பற்றி ஏதேதோ கூற அதை கவனமாக கேட்டுக்கொண்டவன் “குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்குமோ???” என்றான்…

“ம்ம்ம்… ரொம்ப பிடிக்கும்… அதுவும் அழகான பெண் குழந்தைங்கன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்….” என்றாள் கண்கள் மின்ன… இத்தனையும் அவன் முகத்தை பார்க்காமல் டீவியில் பார்வையை பதித்தபடிதான் சொல்லிக் கொண்டிருந்தாள்..

“ஓஹ்….” என்றவன் “நமக்கு பெண் குழந்தை பொறந்தாக்கூட ரொம்ப அழகா இருக்கும்ல???” அவளை அளவிடும் பார்வையுடன் கேட்டான்…

“ஓ இருக்குமே… நம்ம ரெண்டு பேருக்கும் பொறக்கிற குழந்தை ரொம்ம்ம்ப அழகா இருக்கும்… உங்க கண்ணு, என் மூக்கு…….” என்று சொல்லிக்கொண்டே போனவள் சட்டென்று நிறுத்திவிட்டு அவன் முகம் பார்த்தாள்.

“என்… என்ன சொன்னீங்க???”

“நான் சொன்னது உன் காதுல தெளிவாத்தான் விழுந்துச்சி… நீ அதுக்கு பதிலும் சொல்லிட்ட…” என்றான் அவன் நமட்டு சிரிப்புடன்..

அதை கேட்டதும் அவள் முகம் ஒரு மாதிரி மாறிவிட்டது…

“வாட் இஸ் திஸ் அரவிந்த்…” என்றாள் கோபமாக… “என் அப்பா, அம்மா உங்க மேல ரொம்பவே மரியாதையும் நம்பிக்கையும் வெச்சிதான் உங்கள இந்த வீட்டுக்குள்ள வர அலோ பண்ணிருக்காங்க… உங்க மனசுல இந்தமாதிரி ஒரு சீப்பான எண்ணம் இருக்குனு தெரிஞ்சா அது அவங்களுக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கும்…” என்றாள் அப்பட்டமான அதிருப்தியை முகத்தில் வெளிக்காட்டியபடி…

அவள் சொன்ன உண்மை மனதினை சுட அவன் முகம் அவமானத்தில் சிறுத்துப் போனது…

உடனே எழுந்துவிட்டான் அரவிந்தன்…

“ஐம்… ஐம் சாரி…..” அவள் முகம் பார்க்காமல் கூறியவன் வேகமாக அங்கிருந்து வெளியேறினான்….





தொடரும்….

ஆதியை கேட்டவங்களுக்கு குட்டி ஆதி திங்கள் வருவான் என்று கூறிக்கொண்டு 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 37 (2):




அந்த அதிகாலை நேரத்தில் பெங்களூர் குளிரில் ஜாகிங் செய்து கொண்டிருந்தான் அரவிந்தன்… பனிமூட்டம் சூழ்ந்திருக்க தெருவில் ஒரு ஈ, காக்கையை கூட காணவில்லை.. தனியாக ஓடிக் கொண்டிருந்தவனின் எதிரில் வந்து நின்றாள் அவள்..

இடைப்பட்ட காலத்தில் மெல்ல மெல்ல அரவிந்தன் சந்தியாவின் குடும்பத்தை விட்டு விலக ஆரம்பித்திருந்தான்… சங்கரை தவிர்ப்பதற்காக ஜாகிங் செல்லும் நேரத்தையும் மாற்றிக்கொண்டான்.. அருணா சாப்பிட அழைத்தாலும் நேரமில்லை அது இதுவென்று சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தான்..

இத்தனை நாள் நெருங்கி பழகிவிட்டு இப்போது ஒதுங்கிப்போவது அவனுக்குமே மிகவும் கடினமான ஒன்றாகத்தான் இருந்தது.. அதுவும் சந்தியாவின் நினைவில் அவளை பார்க்க வேண்டும் போல் தவிக்கும் மனதை அடக்கும் வழி தெரியாமல் திணறித்தான் போனான்..

இது சரிப்பட்டு வராது என்று நினைத்தவன் இரண்டு வாரம் ஊருக்கு சென்று தன் குடும்பத்தாருடன் இருந்துவிட்டு நேற்றுத்தான் திரும்பி வந்திருந்தான்..

“ஏன் அரவிந்த் இப்போலாம் வீட்டுக்கு வர்ரதில்ல???” என்றாள் கேள்வியாக “நான் அன்னைக்கு கொஞ்சம் கோபமா பேசிட்டேன்… ஐம் சாரி… அதுக்காக எல்லாம் வீட்டுக்கு வராம இருக்காதீங்க.. அப்பா, அம்மா ரொம்ப வருத்தப்படுறாங்க…”

அவள் சொல்லி முடித்ததும் அவளை ஒரு மாதிரி பார்த்தான் அவன்…

அவனது பார்வையில் தடுமாறியவள் “எ.. என்ன???” என்றாள்..

அவளை பார்த்துக்கொண்டே நெருங்கியவன் “அப்போ அப்பா அம்மாவுக்கு மட்டும்தான் வருத்தம்… உனக்கு இல்ல அப்படித்தானே..” என்றான்…

உடனே “இல்ல இல்ல எனக்கும் வருத்தம்தான்…” என்றாள் அவள்…

“உன்ன பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே… என் சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிட்டு நல்லா கொளு கொளுன்னு தானே இருக்க…”

“சத்தியமா எனக்கும் வருத்தம்தான் அரவிந்த்… நீங்க இத்தன நாள் வந்து போயிட்டு இப்போ திடீர்னு வராம போனது ரொம்ப கஷ்டமா இருந்தது…. ப்ளீஸ் எனக்காக வீட்டுக்கு வாங்க…”

“லுக் சந்தியா நீ சொன்ன அந்த சீப்பான எண்ணம் இன்னும் என் மனசுல இருந்துட்டுதான் இருக்கு… அந்த நினைப்போட என்னால கண்டிப்பா உன் வீட்டுக்கு வர முடியாது…”

அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் அவளை கடந்து செல்ல போனவனை கை பிடித்து தடுத்தவள் “நான் உங்கள லவ் பண்றேன்னு சொன்னா வருவீங்களா அரவிந்த்…” என்றாள்..

அதில் ஒருநொடி அவளை ஆழ்ந்து பார்த்தவன் “என்னடி பிச்சை போடுறியா… ஒன்னும் வேணாம் போடி….” என்றான் கோபமாக… “அன்னைக்கு அந்த பேச்சு பேசின… இப்போ என்ன.. ஆஹ்….”

“தெரில்ல அரவிந்த்… உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்… உங்கள பார்க்காம இருந்த இத்தன நாள்ள தான் எனக்கே அது புரிஞ்சது… ஐ திங் ஐம் இன் லவ் வித் யூ….” பட்டென்று சொல்லிவிட்டாள் அவள்..

அதில் அவளை ஆழ்ந்து பார்த்தவன் “இப்ப மட்டும் உன் அப்பா, அம்மா என்னை தப்பா நினைக்க மாட்டாங்களா??? இவனை நம்பி வீட்டுக்குள்ள சேர்த்ததுக்கு நம்ம பொண்ண மயக்கிட்டான்னு….” என்றான்…

“நினைக்கமாட்டாங்க….” என்றாள் அவள்… “அவங்க கேட்டா நான்தான் உங்க பின்னாடி சுத்தினேன்னு சொல்லிடுறேன்….”
என்க அவளது தைரியத்தில் அவன்தான் பேச்சிழந்து நின்றிருந்தான்…

“அதெல்லாம் சரியா வராது… வழிய விடு…” என்றுவிட்டு அவன் அவளை தாண்டி செல்ல “அதான் நானும் லவ் பண்றேன்னு சொல்றேன்ல அப்புறம் என்ன…” என்று கத்தினாள் அவள்…

அவன் கண்டுகொள்ளாமல் செல்லவும் “ஓஹ்.. அப்போ எனக்கு நூல் விட்டு பார்த்திருக்க… நான் உஷாரா இருக்கேன்னு தெரிஞ்சதும் நழுவுற அதானே…” என்றாள்..

அவளது வார்த்தைகள் கொடுத்த ஆத்திரத்தில் அவளை நோக்கி திரும்பி வந்தவன் “யாரை பார்த்து என்ன வார்த்தைடி சொன்ன…” என்று அவளை அடிக்க கையோங்க அசராமல் அவனை பார்த்துக்கொண்டு நின்றாள் அவள்…

அவளது முகத்தில் தெரிந்த எதுவோ ஒன்றில் தன் கையை கீழே விட்டவன் “மைன்ட் யுவர் வெர்ட்ஸ் சந்தியா…. நான் அந்த மாதிரி பையன் கிடையாது…” என்றான்.. “இன்னைக்கே உன் அப்பாகிட்ட பேசுறேன்…”

“என்ன பேச போறீங்க???”

“ம்ம்ம்.. உன்ன பொண்ணு கேட்க போறேன்…..”

“கேட்டு???”

“கல்யாணம் பண்ணிக்க போறேன்….”

“வாட்… அதுக்குள்ளயா…. நோ… நோ… அவ்வளவு அவசரமா எல்லாம் பொண்ணு கேட்டு வரவேண்டாம்… கொஞ்ச நாளைக்கு லவ் பண்ணி ஊர் சுத்தலாம்… அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் என்ன.… நான் எவ்வளவு ப்ளான்லாம் வெச்சிருக்கேன் தெரியுமா… இப்படி சட்டுனு தாலிய கட்டி என் கனவுல மண்ணள்ளி போட்டுடாதே அரவிந்தா……” என்று அவள் சோகமாக கூற அவளை முறைத்தவன் “உன்ன….” என்று அவளை நெருங்க அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டாள் அவள்…

இதழில் உறைந்த புன்னகையுடன் அந்த டைரியை மூடி வைத்தாள் நித்திலா…. அவளுடைய அம்மாவின் டைரி அது.. பெங்களூரில் இருந்தபோது அருணா அவளிடம் கொடுத்திருந்தார்… அவளுக்கு இருந்த மனநிலையில் அப்போது அதனை எடுத்துப்பார்க்க தோன்றவில்லை… இப்போது ஆதியின் காதலை உணர்ந்த பிறகுதான் படிக்கிறாள்… என்னவோ அந்த டைரியில் இதுவரைதான் எழுதியிருந்தாள் சந்தியா…



#########################




அதே நேரம் நிர்மலாவும் தன் மகனை பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்…. அவன் ஒரு பெண்ணை காதலிப்பதாக வந்து சொன்னபோது அவர்கள் வீட்டில் ஒரு பிரளயமே வெடித்து விட்டது…

“யாரை கேட்டு கண்டவள காதலிச்சிட்டு வந்து நிற்கிற நீ???” என்று மகனிடம் சத்தம்போட்டார் விஸ்வநாதன் “நான் உனக்கு ஏற்கனவே பொண்ணு பார்த்து வெச்சிருக்கேன்…. அவங்க அப்பாகிட்ட பேசி எல்லாம் முடிவு பண்ணியாச்சி…. அந்த பொண்ணதான் நீ கட்டிக்கனும்…” என்றவரை நம்ப முடியாமல் பார்த்தான் அரவிந்தன்…

“என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம நீங்களா எப்படிப்பா முடிவு பண்ணுவீங்க… உங்ககிட்ட இதை நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல… ஐம் சாரிப்பா… என்னால சந்தியாவ தவிர வேற யாரையும் கட்டிக்க முடியாது….” அவனும் தன் பிடியில் உறுதியாக நின்றான்..

“அது உன் அண்ணியோட தங்கச்சியா இருந்தாலும் கட்டிக்கமாட்டியா????”

அதன்பிறகுதான் அரவிந்தனுக்கே தெரிந்தது சந்திரலேகாவின் தங்கையை தனக்கு பேசி வைத்திருக்கிறார் என்று… கணவரும் மகனும் அவரவர் முடிவில் உறுதியாக இருக்க நடுவில் நிர்மலாவின் பாடுதான் திண்டாட்டமாகி போனது… மகனுக்காக அப்பாவிடம் பேசுவதும் அப்பாவுக்காக மகனிடம் பேசுவதும் என்று ஓய்ந்து போனார்…

அரவிந்தனும் தந்தை வீம்புக்காக பேசிக்கொண்டிருக்கிறார் கொஞ்சநாளில் மனம் மாறிவிடுவார் என்று பொறுத்துப் பார்த்தான்… நிர்மலாவும் அப்படித்தான் சொல்லி அவனை அமைதிப்படுத்தி வைத்திருந்தார்… ஆனால் கடைசிவரை அவர் தன் பிடியிலிருந்து இறங்கி வரவே இல்லை…

மகன் எந்தவிதத்திலும் பிடி கொடுக்கமாட்டான் என்பதை உணர்ந்த விஸ்வநாதன் ஒருநாள் “என்னோட எல்லா பசங்களும் நான் கை காட்டினவங்கள கட்டிக்கிட்டு சந்தோசமா இருக்காங்க… உனக்காக எல்லாம் அந்த நடைமுறைய மாத்த முடியாது அரவிந்த்….” என்றார்…

“ஏன்…. கர்ணா அண்ணா விஜயா அண்ணிய காதலிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டார்… அப்ப நீங்க வாயே திறக்கலையே……” என்றான் அவனும் கோபமாக….

“விஜயாவும் நீ காதலிக்கிற பொண்ணும் ஒன்னா??? விஜயா குடும்பம் நம்ம குடும்பத்துக்கு நிகரான அந்தஸ்தோட இருந்ததாலதான் அவள இந்த வீட்டு மருமகளா ஏத்துக்கிட்டேன்…. கர்ணா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு நீயும் கண்ட கண்ட நாயெல்லாம் கல்யாணம் பண்ணி இந்த வீட்டு மருமகளா கொண்டுவரலாம்னு கனவுல கூட நினைக்காதே…”

“அப்பா பார்த்து பேசுங்க….” அவர் நாய் என்று சொல்லிவிட்டதில் அவனுக்கு கோபம் வர தந்தையை எச்சரித்தான்…

“டேய் நான் அப்படித்தான்டா பேசுவேன்…. நான் சொல்ற பொண்ண கட்டிக்கிறதுனா கட்டிக்க இல்லைன்னா ஒரு நிமிஷம் கூட என் வீட்டுல இருக்காதே வெளிய போயிடு….” மகனை மிரட்டுவதற்காக அவர் கூற அவன் நிஜமாகவே வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்…

நிர்மலா எவ்வளவோ கெஞ்சியும் அவன் கேட்கவில்லை…. விஸ்வநாதனின் பேச்சு அந்தளவுக்கு அவனை கோப படுத்தியிருந்தது… தன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் அந்தஸ்துதான் முக்கியம் என்று பிடிவாதம் பிடிக்கும் மனிதரிடம் எதையும் பேச அவனுக்கு இஷ்டமில்லை… அவர்மீது இருந்த அன்பினால்தான் இத்தனைநாள் பொறுமையாக இருந்தான்… ஆனால் அவர் இறங்கிவரவே இல்லை…

வீட்டை விட்டு வெளியேறியவனுக்கு இருந்த அடுத்த பிரச்சினை அருணா மற்றும் சங்கரை எப்படி சமாளிப்பது என்பதுதான்… அவர்களிடம் சென்று அவன் தங்கள் காதல் விவகாரத்தை பற்றி கூறியபோது அவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை…

அவர்களே காதல் திருமணம் செய்தவர்கள்தான் மகளுடைய காதலை எப்படி மறுக்க முடியும்… அத்தோடு அரவிந்தனின் குணம் தெரிந்ததால் அவனைப்போல் நல்ல பையன் எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டான் என்பதை அறிந்தே இருந்தார்கள்…

ஆனால் இருவருமே அவனிடம் கூறியது என்னவென்றால் அவனுடைய குடும்பத்தாரின் சம்மதம் முக்கியம் என்பதுதான்.. தன்னுடைய விருப்பத்திற்கு வீட்டினர் மறுப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் அவன் வந்தால் கடைசியில் இப்படியாகிவிட்டது..

என்ன செய்வதென்று தெரியாமல் தன் அக்கா சாரதாவிடம் சென்று கேட்டான்… சாரதா ஜெயதேவிடம் கேட்டுப்பார்க்க சொல்ல அவரோ “இதோ பாரு அரவிந்தா உனக்கு எந்த உதவி வேணாலும் என்கிட்ட கேளு செய்றேன்… இந்த காதல் விவகாரமெல்லாம் போய் உன் அப்பாக்கிட்ட பேச சொல்லாதே…” என்றுவிட்டார்…

அவரும் கைவிரித்துவிட “வேற வழியில்ல அரவிந்த்.. நீ பெரியம்மாகிட்ட போய் எல்லாத்தையும் சொல்லு… அவங்களால மட்டும்தான் அப்பாகிட்ட இதை பத்தி பேசமுடியும்…” என்றாள் சாரதா…

அரவிந்தனுக்கும் அது சரியாக பட்டதால் உடனே சகுந்தலாவின் வீட்டுக்கு கிளம்பிவிட்டான்…

“முதல்லயே இதை என்கிட்ட வந்து சொல்றதுக்கென்ன அரவிந்தா….. எல்லார்கிட்டயும் உதவி கேட்டுட்டு உனக்கு கடைசியிலதான் இந்த பெரியம்மா நியாபகம் வந்துச்சா….” என்று சொன்னாலும் தான் விஸ்வநாதனிடம் கண்டிப்பாக இது பற்றி பேசுவதாக கூறி அவனை அனுப்பி வைத்தார்…

சொன்னது போலவே இரண்டு நாட்களில் அவனை அழைத்தவர் “வேண்டாம் அரவிந்தா இனிமேல் உங்க அப்பாகிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்ல… நீ அவர் பையனே இல்லைன்னு சொல்லிட்டாரு… என்னென்ன எல்லாமோ பேசிட்டாருப்பா.. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அடுத்த வாரமே உனக்கும் நீ காதலிக்கிற பொண்ணுக்கும் நானே கால்யாணம் பண்ணி வைக்கப்போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்… உன் குடும்பத்த பத்தி எதையும் யோசிக்காதே… உனக்காக பொண்ணு வீட்டுல நான் வந்து பேசுறேன்….” என்றார் சகுந்தலா…

அரவிந்தனுக்கு ஏனோ தயக்கமாக இருந்தது.. கடைசியாக ஒருமுறை தந்தையிடம் பேசப்போவதாக கூறியவனை தடுத்துவிட்டார் அவர்…

“முதல்ல அந்த பொண்ணு அப்பா, அம்மாக்கிட்ட பேசிடலாம்… அப்புறமா வேணும்னா உங்க அப்பாக்கிட்ட போய் பேசி பார்….” என்றவர் மறுநாளே பெங்களூர் சென்று சந்தியாவின் பெற்றோரை சந்தித்து பேசினார்…

அவர்கள் அரவிந்தனின் பெற்றோர் சம்மதிக்காமல் மேற்கொண்டு எதுவும் பேசத்தேவையில்லை என்று எவ்வளவோ மறுத்தும் சகுந்தலா கேட்கவில்லை… எப்படியோ அருணா, சங்கரிடம் பேசிப்பேசியே அவர்களது மனதை கரைத்துவிட்டார்…

அதுவும் காதலித்தவனுடன் சேர முடியாமல் உங்கள் பெண் ஏதாவது தவறான முடிவை எடுத்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்க அந்த பெற்றோர் சற்று அரண்டுதான் போனார்கள்…

ஆனால் சந்தியா மட்டும் பிடிவாதமாக மறுத்துவிட்டாள்… சகுந்தலாவின் முயற்சிகள் எதுவுமே அவளிடம் பலிக்கவில்லை….

வேறுவழியில்லாமல் இறுதி முயற்சியாக சகுந்தலா, சேதுபதி, சங்கர் மற்றும் அரவிந்தன் நால்வரும் விஸ்வநாதனிடம் பேசுவதற்காக அவர்கள் வீட்டுக்கு சென்றனர்…. பலன் என்னவோ பூஜ்யம்தான்… விஸ்வநாதனுடன் சேர்ந்து கொண்டு சந்திரலேகாவும் சந்தியாவை பற்றி தரக்குறைவாக பேச ஆரம்பிக்க சகுந்தலா சந்திரலேகாவை அறைந்தேவிட்டார்..

அரவிந்தன் விஸ்வநாதன் காலில்கூட விழுந்து பார்த்தான்.. அப்போதும் அவர் இரங்கவில்லை… அனைவரையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு சத்தம்போட சங்கருக்கு வெறுத்துவிட்டது.. அதற்குமேல் ஒரு நிமிடம் கூட அந்த வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறிவிட்டார்….

அதன்பிறகு அனைத்தும் சகுந்தலாவின் சொல்படிதான் நடந்தது… யாரும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை.. சந்தியாவுக்குத்தான் மனதை உறுத்திக்கொண்டிருந்தது.. அவள் சங்கரிடம் இதுபற்றி பேச,,,

“சை…. என்ன மனுசன்மா அந்தாளு… நாக்குல நரம்பே இல்லாம பேசுறான்… கூட சேர்ந்து அவன் மருமகளும் என்ன பேச்சு பேசுறாங்க தெரியுமா… பாவம் அரவிந்த்… அந்த மனுசன் கால்லயும் விழுந்து பார்த்தார்… கல்லு மாதிரி நின்னான்… வேண்டாம்மா அவங்க யாரும் வேண்டாம்… அரவிந்த்தும் அவர் பெரியம்மாவும் உனக்காகத்தான் எல்லாரையும் பகைச்சிக்கிட்டு வந்திருக்காங்க… நீ எதையும் பேசி அவர் மனச கஷ்டப்படுத்திடாத… அவங்க பெரியம்மா என்ன சொல்றாங்களோ அதை செய்வோம்…” என்றுவிட்டார்…

மறுவாரமே சகுந்தலாவின் தலைமையில் அரவிந்தனுக்கும் சந்தியாவுக்கும் பெங்களூரில் மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்துமுடிந்தது.. மணமகன், மணப்பெண் அவளது குடும்பத்தினரை விட சகுந்தலாவும் அவரது பிள்ளைகளும்தான் இந்த திருமணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள்…

“சீக்கிரம் ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடும்மா… அப்பவாவது உன் மாமனார் மனசு மாறுதான்னு பார்க்கலாம்..” கிளம்பும் போது சந்தியாவிடம் கூறிவிட்டு வேறு சென்றார்…

மகனின் திருமணத்தை அறிந்து நிர்மலாவுக்கு மிகுந்த வருத்தம்… எப்படியெல்லாம் அவனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தார்.. இப்போது பெற்ற அன்னை அவர் இல்லாமலே மகனது திருமணம் நடந்தேறிவிட்டதே…

அரவிந்தனின் திருமணத்துக்கு யாராவது செல்வதாக இருந்தால் அவருடைய பிணத்தை தான்டித்தான் செல்ல வேண்டும் என்று விஸ்வநாதன் அனைவரையும் எச்சரித்திருந்தார்… அவரது பேச்சை மீறும் தைரியம் அந்த வீட்டில் யாருக்குத்தான் இருக்கிறது… அனைவரும் உள்ளுக்குள்ளேயே மறுகிக் கொண்டிருந்தனர்…

ஆனால் சாரதாவுக்கு அந்த பிரச்சினை இருக்கவில்லை… தம்பியின் திருமணத்தை பற்றி ஜெயதேவிடம் கூறியபோது அவரே மருமகளையும் பேரனையும் அனுப்பி வைத்தார்… அதேபோல் மணமக்களையும் சந்தியாவின் பெற்றோரையும் மும்பைக்கு வரவழைத்து திருமண விருந்தும் கொடுத்தார்... ஆனால் இது எதுவும் விஸ்வநாதனுக்கோ, நிர்மலாவுக்கோ அவர்களது மற்ற பிள்ளைகளுக்கோ இன்றுவரை தெரியாது…

தந்தைக்கு தெரிந்தால் வருத்தப்படுவார் என்பதற்காக சாரதா மறைத்துவிட்டாள்…

அதன்பிறகு ஒன்றரை வருடம் கழித்து நித்திலா பிறந்தாள்… சந்தியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்டவுடனே அவள் ஆதியை அழைத்துக்கொண்டு பெங்களூர் சென்றுவிட்டாள்… அவர்கள் சென்று சேர்வதற்கும் குழந்தை பிறப்பதற்கும் சரியாக இருந்தது…

பிரசவ அறைக்கு வெளியே நின்றிருந்தவர்கள் குழந்தையின் அழுகை சத்தம் கேட்க “ம்மா பேபி அழுதுமா… வாங்க உள்ள போய் பார்க்கலாம்….” ஒன்பது வயது ஆதி பதற்றமாக சாரதாவிடம் கூற “பிறந்ததும் எல்லா குழந்தையும் அழதான்டா செய்யும்…” என்று அவள் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை…

இப்போதே குழந்தையை பார்க்க வேண்டும் என்று அடம்பிக்க இறுதியில் அரவிந்தன்தான் அவனுக்கு எடுத்து சொல்லி புரியவைக்கும்படி ஆயிற்று…

அம்மாவையும் குழந்தையையும் வேறு அறைக்கு மாற்ற அனைவரும் உள்ளே சென்று பார்த்தனர்…. முதல் ஆளாக ஓடிச்சென்றது ஆதிதான்…. தொட்டிலில் கருகருவென்று வளர்ந்திருந்த முடியுடன் ரோஜாப்பூ குவியலைப் போல் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்தவன் மெல்ல விரல் நீட்டி அதன் முகத்தை தொட்டுப் பார்த்தான்… பூவிதழை விடவும் அத்தனை மென்மையாக இருந்த அந்த குழந்தையை அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது..

அதன்பிறகு ஒருவாரம் சாரதாவும் ஆதியும் அரவிந்தன் வீட்டில்தான் தங்கினார்கள்… இரவில் தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரம் எல்லாம் குழந்தையின் அருகில்தான் உட்கார்ந்திருப்பான் ஆதி…

அவனுக்கு குழந்தையை தூக்கி பார்க்க வேண்டும்போல் ஆசையாக இருக்க சாரதாவிடம் கேட்டான்… அவள் மறுத்துவிட்டாள்… அதனால் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருந்தான்… அதைக்கண்ட அரவிந்தன்தான் ஆதியை ஓரிடத்தில் உட்கார சொல்லி குழந்தையை அவன் மடியில் வைத்து கொடுக்க முதன்முதலாக நித்திலாவை தன் கைகளில் தூக்கிக்கொண்டான் ஆதி…

“டேய் மருமகனே பார்த்துடா… குழந்தைய விட்டுடாதே… கெட்டியா புடிச்சிக்க…” அரவிந்தன் கூற… “விடமாட்டேன் மாமா….” என்றவன் குழந்தையின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்..

அவன் மும்பை சென்ற பிறகும் சாரதாவை வீட்டில் இருக்கவிடாமல் நச்சரித்துக் கொண்டிருப்பான்… பேரனின் தொல்லை தாங்க முடியாமல் ஜெயதேவ் அரவிந்தனுக்கு அழைத்தவர் “வர வர ஆதி தொல்ல தாங்க முடியலடா… சாரதாவ இருக்க விடமாட்டேங்கிறான்… தயவு செஞ்சி உன் வொய்ஃபையும் குழந்தையும் கூட்டிக்கிட்டு கொஞ்ச நாளைக்கு இங்க வந்து இருந்துட்டு போ…. அவன அங்க அனுப்ப முடியாது அப்புறம் அவன் ஸ்கூல், படிப்பு எல்லாம் சிக்கலாகிடும்…” என்றுவிட்டார்…

அவரது பேச்சை மறுக்க முடியாமல் பிறந்து இரண்டே மாதமான நித்திலாவையும் அவனது மனைவியையும் சாரதாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்று ஒரு மாதம் தங்கிவிட்டு வந்தான் அரவிந்தன்…






############################





மகனுக்கு குழந்தை பிறந்ததை அறிந்த நிர்மலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை… விஸ்வநாதனிடம் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் அவர் அனுப்பவில்லை… வீட்டிலுள்ள மற்றவர்களின் நிலையும் அதுவாகத்தான் இருந்தது… அனைவருக்கும் உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் விஸ்வநாதனுக்கு பயந்து யாரும் வாயே திறப்பதில்லை…

அடிக்கடி தன் அக்கா வீட்டுக்கு சென்று புலம்புவார் நிர்மலாதேவி… சகுந்தலாவும் ஏதாவது கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பார்… இப்படியே இரண்டு வருடங்கள் சென்று விட்டிருந்தன…

நித்திலாவின் இரண்டாவது பிறந்தநாளை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் நிர்மலாவுக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போக அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள்… முழுதாக ஒருநாள் பேச்சுமூச்சில்லாமல் கிடந்தவரை கண்டு குடும்பத்தினர் பதறித்தான் போயினர்…

அனைவரையும் கலங்கடித்துவிட்டு மறுநாள் கண்விழித்தவர் விஸ்வநாதனிடம் முதலாவதாக கேட்டது அரவிந்தனை பார்க்க வேண்டும் என்பதைத்தான்… மனைவி பிழைத்து வந்தால் போதும் என்று இருந்த மனிதர் இதை மறுக்கவா போகிறார்… ஒரு நொடி விழி மூடித்திறந்தவர் “சரிம்மா…. உன் இஷ்டம்…” என்றுவிட்டார்…

கணவர் சம்மதம் தெரிவித்ததும் ஹாஸ்பிடலில் வைத்தே அரவிந்தனுக்கு அழைத்து பேசினார் நிர்மலா… அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பதை சாரதா மூலமாக அறிந்து கொண்டிருந்தவனும் சென்னைக்கு கிளம்பத்தான் தயாராகிக் கொண்டிருப்பதாக கூற “நல்லதாப்போச்சு அரவிந்தா…. சந்தியாவையும் குழந்தையையும் கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்திடுப்பா….” என்றவர் மகனிடம் விடயத்தை கூற அவனால் நம்பவே முடியவில்லை…

குழந்தை பிறந்தாலாவது தந்தை தன்னையும் மனைவியையும் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்த்திருந்தவன் அவர் அப்போதும் மனம் மாறாததால் மிகுந்த வருத்தத்துடன் இருந்தான்… இப்போது நிர்மலா வீட்டுக்கு வர சொன்னதும் அவனுக்கு சந்தோசம் தாளவில்லை… வானில் பறக்காத குறைதான்….

உடனே சேதுபதிக்கும் சகுந்தலாவுக்கும் அழைத்து விடயத்தை கூறினான்… அவர்களும் சந்தோசப்பட்டார்கள்… அதுவும் சகுந்தலா மிகவும் சந்தோசப்பட்டார்… ஆனால் அங்கு செல்வதற்கு முன்னர் தன்னுடைய வீட்டுக்கு விருந்துக்கு வந்துவிட்டு செல்லுமாறு கூற கண்டிப்பாக வருவதாக வாக்களித்தான் அரவிந்தன்…

அதன்படி மறுநாளே அதாவது நித்திலாவின் இரண்டாவது பிறந்தநாளைக்கு முன்தினம் சகுந்தலாவின் வீட்டுக்கு தன் மனைவியையும் மகளையும் அழைத்துச் சென்றான் அரவிந்தன்… அருணாவுக்கு செல்ல விருப்பமாக இருந்தாலும் சங்கர் மறுத்துவிட்டார் அதனால் அவர்கள் இருவரும் வரவில்லை…

சகுந்தலாவும் அவரது குடும்பமும் அப்போது அவர்களுடைய கிராமத்து வீட்டில்தான் வசித்தார்கள்.. அன்றைய நாள் அங்கு தங்கிவிட்டு மறுநாள் அதிகாலை மூன்று மணியளவில் சென்னைக்கு கிளம்பினார்கள் அரவிந்தனும் சந்தியாவும்…. நித்திலாவின் பிறந்தநாள் அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது..

உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் திருநீறு பூசிவிட்ட சகுந்தலா “சந்தோசமா போயிட்டு வாங்க….” என்று மூவரையும் வழியனுப்பி வைத்தார்… தன் குடும்பத்தாரை பார்க்கப்போதும் மகிழ்ச்சியுடன் அவர்களிடம் விடை பெற்று கிளம்பியவர்கள் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்தின் பின்னர் சாலையில் சென்று கொண்டிருந்த அரவிந்தனின் கார் மீது மோதியது எதிரில் வேகமாக வந்த லாரி ஒன்று….

லாரி மோதிய வேகத்தில் கார் சாலையில் கவிழ்ந்து நசுங்கி அருகில் இருந்த நிலத்தில் சரிந்து விழுந்தது… சந்தியாவின் உடல் காருக்கு வெளியில் தூக்கியெறியப்பட்டு கிடக்க, குழந்தையை காப்பாற்றுவதற்காக தலையைக் குனிந்து வயிற்றுடன் சேர்த்து அணைத்து பிடித்திருந்ததில் அவளுடைய தலை சிதைந்து போயிருந்தது….. அரவிந்தனின் உடல் இடுப்புக்கு மேல் பகுதி காருக்கு வெளியிலும் கீழ்ப்பகுதி காருக்கு உள்ளேயும் சிக்கி நசுங்கிக் கிடந்தது….


அந்த லாரியிலிருந்து இறங்கிய இருவர் வேகமாக இவர்களை நோக்கி வந்தார்கள்…. ஒருவன் அரவிந்தனை நோக்கி செல்ல மற்றொருவன் சந்தியாவிடம் சென்றான்… இத்தனை பெரிய விபத்திலும் விட்டுவிடாமல் தன் குழந்தையை இறுக பற்றியிருந்தவளை கண்டு அவனுக்கு ஆச்சரியாக இருந்ததோ….

அரவிந்தன் அருகில் சென்றவன் டார்ச் லைட்டை அடித்து பார்த்துவிட்டு “இவனுக்கு இன்னும் உசிர் இருக்கு அண்ணாத்த…” என்றான் மற்றவனிடம்…

அதற்கு கைநீட்டி அவனை பொறுக்குமாறு சைகை செய்தவன் அங்கு சிதறிக்கிடந்த காரின் இரும்பு பாகம் ஒன்றை கையில் எடுத்தவன் ஏற்கனவே சிதைந்து போயிருந்த அவளது தலையில் மேலும் அடிக்க ஆரம்பித்தான்… அவனது வெறி தீரும்வரை அடித்து முடித்தவன் அரவிந்தனை நோக்கி வருவதற்கும் தூரத்தில் ஏதோ வாகனம் வந்து கொண்டிருப்பதற்கான சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது…

“அண்ணாத்த ஏதோ வண்டி வர்ர மாதிரி தெரியுது… வா போயிடலாம்…” என்று உடனிருந்தவன் அவசரப்படுத்த குற்றுயிராக கிடந்த அரவிந்தன் தலையிலும் பலமாக இரண்டு அடி அடித்துவிட்டு லாரியில் ஏறி மின்னல் வேகத்தில் கிளப்பிக்கொண்டு சென்று விட்டார்கள்..





#######################




மகனது விபத்தை அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த விஸ்வநாதன் குடும்பத்தினர் அங்கு சில மணி நேரம் கழித்து ஒப்படைக்கப்பட்ட சந்தியாவின் உடலை கண்டு விதிர்விதிர்த்துப் போக விஜயா, கல்பனா இருவரும் மயங்கியே விழுந்துவிட்டார்கள்…

அரவிந்தனின் உயிர் பிரியவில்லை… ஆனால் காப்பாற்றவும் வாய்ப்பு குறைவு என்று கூறிவிட்டார்கள்… இறுதியாக ஒருவாரம் கழித்து அவனை பார்க்க இருவர் மட்டும் செல்லலாம் என்று அனுமதித்தபோது நிர்மலா, விஸ்வநாதன் இருவரும் சென்றார்கள்…

கால்கள் இரண்டும் ஒரு கையும் நீக்கப்பட்டிருந்தது…. உடல் முழுக்க கட்டுக்களுடன் தன் இறுதி நிமிடங்களில் இருந்த மகனை உயிர் வலியுடன் பார்த்தனர் அந்த பெற்றோர்… விஸ்வநாதன் இமைக்கக்கூட செய்யாது மகனின் முகத்தில் பார்வை நிலைகுத்த பார்த்திருந்தார்…

நிர்மலா மகனின் அருகில் சென்றவர் கண்ணீருடன் அவன் பெயரை சொல்லி அழைத்தார்… அவனிடம் எந்த பதிலும் இல்லை…

அன்று மாலையே அரவிந்தனின் உயிரும் பிரிந்துவிட அடுத்து மீதமிருந்தது குழந்தை நித்திலாதான்… அப்போதைக்கு அவளை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை… அருணா மற்றும் சங்கர் இருவரும் வைத்தியர்கள் என்பதால் அவர்களால் சென்று பார்க்க முடிந்தது…

குழந்தையின் உயிருக்கு இனி ஆபத்து இல்லை என்ற கட்டத்தை தாண்டியவுடன்தான் மற்றவர்களை பார்க்க அனுமதித்தார்கள்…

உடலில் முகத்தை தவிர அனைத்து இடங்களிலும் கட்டுக்கள் போடப்பட்டு அங்கங்கு பொருத்தப்பட்ட டியூப்களுடன் கண்களை திறக்காமல் கிடந்த இரண்டு வயது பிஞ்சுக் குழந்தையை கண்டவர்கள் இப்படியொரு நிலையிலா தங்கள் வீட்டு குழந்தையை முதன்முதலாக பார்க்க வேண்டும் என்று அனைவர் நெஞ்சிலும் உதிரம் வடிந்தது….

அவர்களை விட ஆயிரம் மடங்கு வேதனையுடன் இன்னொருவனும் அந்த குழந்தையை பார்த்திருந்தான்…..



தொடரும்…..


ரொம்ப அவசரத்துல டைப் பண்ணது… ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருந்தா சாரி மக்களே….


படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்…..


 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 38:






ஆதிக்கு மீண்டும் மீண்டும் அழைத்து ஓய்ந்துபோய் உட்கார்ந்திருந்தாள் நித்திலா.. கடைசியாக அவன் அவளை பார்த்துவிட்டு நான்கைந்து நாட்கள் ஆகிவிட்டது…. அதன்பிறகு அவன் அவளை ஒருமுறை கூட அழைக்கவில்லை… இவள் அழைத்தாலும் எடுத்து பேசுவதில்லை….

அவன் மும்பைக்கு சென்றுவிட்டதாக மித்ரா கூறினாள்… அவளிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவன் பாட்டுக்கு கிளம்பிவிட்டானே என்று மனதில் சுணக்கமாக இருந்தாலும் ஏதாவது அவசர வேலையாக இருக்கும் என்று தன்னை தேற்றிக் கொண்டிருந்தாள்…

ஆனால் இப்படி நாள்கணக்கில் பேசாமல் இருப்பது ஏனோ அவளுக்கு உள்ளுக்குள் பயப்பந்து உருள ஆரம்பித்தது.. மித்ராவை தேடிச்சென்றவள் மித்ரா சந்திரலேகாவுடன் உட்கார்ந்திருப்பதை கண்டு தயங்கி நிற்க,,

“வா நித்து….” என்றாள் மித்ரா நித்திலாவை கண்டதும்…

“இல்ல பரவால்ல மித்ராக்கா…. நீங்க பெரிம்மா கூட பேசிட்டு இருங்க….” என்றுவிட்டு சென்றுவிட்டாள் நித்திலா….

நித்திலா சென்றதும் சந்திரலேகாவின் முகம் மாறிவிட்டது…

“இதோ பாரு மித்ரா…. இவகூட பேசுறத முதல்ல நிறுத்து…. இவங்கம்மா என் தங்கச்சி வாழ்க்கைய பறிச்சா,,, இவ உனக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கைய தட்டிப்பறிச்சிட்டா………..” என்று சொல்லிக்கொண்டே போனவள் மகளின் முகத்தை கண்டு பேச்சை நிறுத்தினாள்…… “நான் என்ன சொல்ல வரேன்னா…..”

கை நீட்டி சந்திரலேகாவை மேலே பேசவிடாது தடுத்தவள் “நீ எதுவும் சொல்ல வேண்டாம்….. உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு…. உனக்கு மகளா பொறந்த ஒரே காரணத்துக்காக நான் நிறையவே இழந்துட்டேன்…. இதுக்கப்புறம் என் விஷயத்துல ஏதாவது மூக்கை நுழைச்ச,,,, அம்மான்னு கூட பார்க்கமாட்டேன்…….” வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றாள் மித்ரா….

நேராக நித்திலாவை தேடி வந்தவள் அவளிடம் என்னவென்று கேட்க அவள் சொன்னதும் “என்னது ஆதி உன்கிட்ட பேசலையா….. இன்னைக்கு மார்னிங் கூட என்னோட பேசினானே…..” என்றவள் நித்திலாவை யோசனையுடன் ஏறிட்டாள் “ஏதாவது பிரச்சினையா நித்து உங்களுக்குள்ள???”

“அதெல்லாம் ஒன்னுமில்ல கா… அன்னைக்கு கூட நல்லாத்தான் பேசிட்டு போனார்….” என்றாள்….

மித்ராவுக்கும் ஒன்றும் புரயவில்லை…. அவன் தினமும் மித்ராவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறான்… நித்திலாவுடனும் பேசுகிறான் என்றுதான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்….

‘மறுபடியுமா….’ என்று நினைத்தவள் அவனுக்கு அழைத்துவிட்டு நித்திலாவிடம் ஃபோனை கொடுத்து பேச சொன்னாள்….

முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவன் “சொல்லு பேபி….” என்றான்…

நித்திலாவுக்கு கண்கள் கலங்கிவிட்டது…. அவள் ஐந்து நாட்களாக அவனுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு தடவை கூட எடுத்து பேசவில்லை அவன்.. மித்ராவின் நம்பரிலிருந்து அழைத்ததும் உடனே பேசுகிறான்…

“நான் நித்திலா…..” உள்ளே சென்றுவிட்ட குரலில் கூறினாள்…

அவள் சொன்னதும் அவனிடம் எந்த பதிலும் இல்லை…

“அத்தான் இருக்கீங்களா… ஹலோ…….”

அவள் இரண்டு மூன்று முறை அழைத்தபின் “ம்ம்ம்…. சொல்லு…” என்றான் விட்டேற்றியாக…

அவனது தொனியே ஒருமாதிரி அந்நியத் தன்மையுடன் ஒலித்ததில் அவளுக்கு அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை…. ஏனோ அழுகை வரும் போல இருந்தது…

“ஏன் அத்தான் ஒரு கால் கூட பண்ணல…. ஊருக்கு போகும்போதும் என்கிட்ட சொல்லாமலே போயிட்டீங்க… மித்ரா அக்கா சொல்லித்தான் நீங்க மும்பை போனதே தெரியும்…. அப்புறமாவது கால் பண்ணுவீங்கன்னு பார்த்தேன்… நான் கூப்பிட்டா கூட எடுத்து பேசமாட்டேங்கறீங்க….”

“நா எதுக்கு உனக்கு கால் பண்ணனும்???” என்றான் ஒரு மாதிரி குரலில்….

“அத்தான்…. என்மேல ஏதாவது கோபமா?? நான்……”









“ஏய் நிறுத்துடி...” அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்தவன் “இன்னொரு தடவ அத்தான் ஆட்டுக்குட்டினு சொல்லி எனக்கு கால் பண்ணின நடக்கிறதே வேற... இனிமேல் உனக்கும் எனக்கும் நடுவுல ஒன்னுமே கிடையாது.. உன் வாழ்க்கைய நீ பாரு.. என் லைஃப நான் பார்த்துக்கிறேன்.. உன்னையெல்லாம் நம்பவே கூடாதுனு என்னைக்கோ முடிவெடுத்தவன்டி நான்.. என் கெட்ட நேரம் உன்ன நம்பி தொலைச்சிட்டேன்...”

“இப்போ நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படியெல்லாம் பேசுறீங்க...” அழுகை குரலில் கேட்டாள் நித்திலா..

“நீயே தப்புதான்டீ.. உன்கிட்ட ஒன்னு ஒன்னா சொல்லி புரிய வைக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது.. இத்தோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்.. பெங்களூர்க்கு பாட்டி வீட்டுக்கு போனாலாவது அறிவு வளரும்னு பார்த்தேன்… ம்ஹூம்…. அதே முட்டாள் நித்திலாவாத்தான் இப்பவும் இருக்க… அப்படியே அங்கேயே உன் பாட்டி கூடவே இருந்துக்க... மும்பை பக்கம் உன்ன பார்த்தேன் கொலை பண்ண கூட யோசிக்கமாட்டேன்... வைடி ஃபோனை..”

அவன் இணைப்பை துண்டித்துவிட்டான்…. அவளுக்கு அவளையே துண்டித்துவிட்டது போல இருந்தது.. திடீரென்று அவனுக்கு என்னவானது என்றும் அவளுக்கு புரியவில்லை…

விழிநீர் கன்னத்தில் வழிந்தோட அப்படியே நின்றிருந்தவளை நெருங்கிய மித்ரா “என்னாச்சு நித்து???” என்றாள் அவளது தோளை தொட்டு…

“அக்கா….” என்றவள் மேலே பேச முடியாமல் தொண்டை அடைக்க அப்படியே நின்றிருந்தாள்…

“என்னாச்சுனு சொல்லு நித்து…. ஆதி என்ன சொன்னான்… என்னன்னு சொன்னாத்தானே ஏதாவது பண்ண முடியும்..” என்றாள் மித்ரா…

அவளுக்கு நித்திலாவை பார்க்க பாவமாக இருந்தது.. ஆதிக்கு கோபம் வந்தால் கண்மண் தெரியாமல் பேசுவானே..

அவளை அங்கிருந்த இருக்கையில் உட்கார வைத்து குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்…. சற்றநேரம் பொறுத்துவிட்டு “இப்ப சொல்லு நித்து என்ன நடந்தது…” என்று கேட்க நித்திலாவும் சொல்ல தொடங்கினாள்..

கேட்டுக்கொண்டிருந்த மித்ராவின் முகம் மெல்ல மெல்ல கோபத்தை தத்தெடுக்க ஆரம்பித்தது….

அவள் சொல்லி முடித்ததும் தீர்க்கமான பார்வையுடன் நித்திலாவை ஏறிட்டவள் “இதோ பாரு நித்து…. உனக்கு ஆதி வேணும்னா அவன பத்தி யோசி வேற யாரையும் பத்தி கவலைபடாதே…. இல்ல மத்தவங்கதான் வேணும்னா அவன மறந்திடு…. நீ ஒன்னும் சின்ன குழந்தையில்ல…. உனக்கு எல்லாத்தையும் எடுத்து சொல்லி புரிய வெச்சிட்டு இருக்க முடியாது… அவன் எதையாவது செய்ய வேண்டாம்னு சொன்னா அதை செய்யாத புரியுதா…” கூறிவிட்டு அதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை என்பதுபோல் எழுந்து சென்றுவிட்டாள் அவள்..

நித்திலாவுக்கு அப்போதும் அவன் இந்தளவுக்கு கோபப்படும்படி தான் என்ன தவறு செய்தோம் என்று புரியவில்லை… வயதான பாட்டிக்காக கதவை திறந்துவிட்டது அவ்வளவு பெரிய கொலை குற்றமா… கணவன் நினைவில் மீண்டும் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு…. அவன் இப்படி பேசுவான் என்று அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை…

அதுவும் உனக்கும் எனக்கும் இடையில் இனி எந்த உறவும் இல்லை என்று அவன் சொன்னது… எத்தனை சுலபமாக சொல்லிவிட்டான்…. அவளால் அவனை பிரிந்து இருந்துவிட முடியுமா…. ‘இத்தனை நாள் பிரிந்துதானே இருந்தாய்..’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு அதுவேறு இதுவேறு என்று தனக்குத்தானே கூறிக்கொண்டவள் இதை இப்படியே வளரவிடக் கூடாது என நினைத்தவள் உடனே மும்பைக்கு கிளம்ப வேண்டும் என்று முடிவெடுத்தாள்…

அதனை மித்ராவிடம் கூறியபோது அவள் மறுத்துவிட்டாள்… “இப்ப நீ போக வேண்டாம் நித்திலா… ஆதி பிசினெஸ் விஷயமா நாளைக்கே யூரோப் போறதா சொன்னான்… திரும்பி வர நாளாகும்.. அவன் வந்ததுக்கு அப்புறம் நீ மும்பைக்கு போ….” என்றாள்…

அதன்படி நாட்களை நெட்டித்தள்ளிக் கொண்டிருந்தாள் நித்திலா…. ஆனால் ஆதி ஒரு நாள்கூட அவளை அழைக்கவுமில்லை,, பேசவுமில்லை…

“அவன் ரொம்ப பிஸியா இருப்பான் நித்து… எனக்கு கூட கால் பண்ணவே இல்ல….” என்பாள் மித்ரா….

அது உண்மையோ அல்லது நித்திலா வருந்துவதை காணமுடியாமல் சொல்லப்பட்டதோ அவளுக்கு தெரியாது…

ஒருசில நாட்களில் மித்ராவும் அமெரிக்கா சென்றுவிட அவள் அந்தப்பக்கம் சென்றதும் இந்தப்பக்கம் வந்து சேர்ந்தான் சௌர்யாவின் தம்பி சூரஜ்…

வந்தவன் அடிக்கடி சந்திரலேகாவுடன் தனியாக உட்கார்ந்து பேச ஆரம்பிக்க மாமாவின் மனைவியும் நாத்தனாரின் மகனும் சாதாரணமாக பேசிக் கொண்டிருப்பதாக மற்றவர்கள் நினைக்க உள்ளுக்குள் இவர்கள் இருவரும் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதை யாரும் அறியவில்லை…. ஒருவேளை மித்ரா இருந்திருந்தால் அவனை கண்டுபிடித்து நித்திலாவின் அருகில் கூட நெருங்கவிடாமல் செய்திருப்பாள்…… நித்திலாவின் நேரமோ என்னவோ இந்த சமயத்தில் மித்ராவும் இல்லாது போய்விட்டாள்…





###########################





திக்பிரமை பிடித்தது போல் தந்தையின் உடலை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் மீரா… அவளுக்கு சொந்தமென்று இருந்த ஒரே ஜீவன்… இப்போது அவரும் இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டார்… அவளை அநாதையாக விட்டுவிட்டு… ஏனோ மீராவுக்கு அழுகை கூட வரவில்லை… அவள் உணர்வுகள் மரத்தவளாக தனக்குள் இறுகிப்போய் இருந்தாள்….

சரஸ்வதிக்கு தான் மருமகளை காணக்காண உள்ளுக்குள் பயம் பிடித்துக் கொண்டது…

“மீராம்மா அழுதுடும்மா…..” பலமுறை சொல்லிப் பார்த்துவிட்டார்… அவளது விழிகளிலிருந்து துளி நீர் கூட சிந்தவில்லை…



அர்ஜுனும் அவ்வப்போது தன்னையும் மீறி அவள் பக்கம் பார்வையை செலுத்திக் கொண்டுதான் இருந்தான்… அவள் இருந்த நிலை கண்டு அவனுக்குமே ஒரு மாதிரி பயமாகத்தான் இருந்தது….

குணசேகரனின் இறுதிச் சடங்குகள் முடிந்ததும் முதல் வேலையாக மனைவியை தேடி ஓடி வந்துவிட்டான்…

அறையில் சென்று மீராவை தேடியவன் அவளை காணாமல் சரஸ்வதியிடம் வந்து “அம்மா…. அவ…. ம்க்ஹூம்…. மீரா எங்கேம்மா…” திக்கித்திணறி ஒரு வழியாக கேட்டுவிட்டான்…

“எதுக்குப்பா???” சரஸ்வதிக்கு நிஜமாகவே புரியவில்லை… ஒருவேளை எதற்காகவாவது அவளை திட்டப்போகிறானோ என்று நினைத்தவர் “அவளே அப்பா செத்துப்போன துக்கத்துல இருக்கா… நீயும் ஏதாவது சொல்லி அவள கஷ்டப்படுத்திடாத அர்ஜுன்…” என்றார்…

“நீங்க வேறம்மா…. இந்த நேரத்துல போய் யாராவது திட்டுவாங்களா…” என்றான் எரிச்சலுடன்…. “அவ ஏதாவது சாப்பிட்டாளா???”

சரஸ்வதிக்கு ஒரு நிமிடம் தலையை சுற்றிவிட்டது… அவனை மேலிருந்து கீழாக பார்த்தவர் “இல்லப்பா அவ ஒன்னுமே சாப்பிடலயே….” என்றார்…

“சரி நீங்க சாப்பாடு எடுத்து வைங்க நான் கூட்டிட்டு வரேன்…. எங்க அவ??”

“ரூம்ல தானேப்பா இருந்தா…..”

“நான் ரூம்ல பார்த்துட்டுதான்மா வர்ரேன்…. அவ இல்ல…”

“என்னது ரூம்ல இல்லையா….” சரஸ்வதிக்கு பதட்டம் பிடித்துக் கொண்டது…. மகனை தாண்டி சென்றவர் “ஐயோ எங்க போனான்னு தெரியலையே… மீரா… மீரா…” என்றபடி ஒவ்வொரு அறையாக சென்று தேட ஆரம்பித்தார்…

சரஸ்வதியின் பதற்றம் அர்ஜுனையும் தொற்றிக் கொள்ள அவனும் ஒவ்வொரு அறையாக தேடினான்….

தன் கையிலிருந்த கடிதத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா….

தன்னுடைய முடிவை அறிந்திருந்தாரோ என்னவோ அத்தனை நாட்கள் பேச முடியாமல் கிடந்த குணசேகரன் முதல்நாள் பார்க்கச் சென்ற மீராவின் கையை பற்றிக்கொண்டு எதையோ கூறினார்…

தந்தையை நெருங்கி அவர் கூறுவதை கவனிக்க “பீரோ…” “பெட்டி…” என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தார்…

எதுவோ புரிய அப்போதே அவர்களுடைய வீட்டுக்கு சென்றவள் அங்கிருந்த தந்தையின் அலமாரியை திறந்து தேட ஆரம்பித்தாள்.. உடைகளுக்கு நடுவில் ஒரு சிறிய பெட்டி இருப்பது கண்ணில்பட அதை திறக்கப்போகும் சமயம் மீண்டும் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது திடீரென்று குணசேகரனின் உடல்நிலை மோசமாகிவிட்டதாக….

பெட்டியை கையோடு எடுத்துக்கொண்டு அப்படியே கிளம்பிவிட்டாள்… அன்றிரவே குணசேகரன் இறந்துவிட அவளுக்கு பெட்டியின் நினைவே மறந்துவிட்டது..

இதோ கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் அறைக்குள் சென்றவள் மேசை மீது வைக்கப்பட்டிருந்த பெட்டி மீண்டும் கண்ணில்பட எடுத்து திறந்து பார்த்தாள்… உள்ளே ஒருசில புகைப்படங்களும் கடிதங்களும் இருந்தன…

புகைப்படங்களை பார்க்க அதில் அவளது தந்தையும் இன்னொரு பெண்ணும் திருமணக் கோலத்தில் இருந்தனர்… அதாவது அவளுடைய அம்மா… நினைவு தெரிந்த நாள்முதல் தந்தையை மட்டுமே அறிந்தவள் இப்போதுதான் முதல் முறையாக தன் அம்மாவின் முகத்தை பார்க்கிறாள் மீரா…

ஒவ்வொரு ஃபோட்டோவாக எடுத்துப்பார்க்க சிலதில் அவளுடைய அம்மா மட்டுமாக எடுத்திருந்தவை,, வரதராஜன், அவருடைய முதல் மனைவி மற்றும் சிறுவயது அர்ஜுனுடன் அவளுடைய பெற்றோர் நின்று எடுத்திருந்தவை என்று பல புகைப்படங்கள்…. அனைத்தையும் பார்த்து முடித்தவள் அடுத்து கடிதங்களை எடுத்து பார்த்தாள்… அதில் அவளுடைய பெற்றோரின் ஒருசில காதல் கடிதங்கள் இருந்தன… இறுதியாக ஒரு கடிதம் அதன்மேல் “மீரா…” என்று அவள் பெயர் எழுதப்பட்டிருந்தது.. அவளுடைய தந்தை இந்த கடிதத்தை அவளிடம் சேர்ப்பிக்கத்தான் இத்தனைநாள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்திருக்கிறார் என்று தோன்ற அவசரமாக அதை பிரித்து படிக்க ஆரம்பித்தாள்…

படிக்க படிக்க அவளையும் மீறி உடல் வெடவெடக்க தொடங்க நெஞ்சில் கைவைத்தபடி கட்டிலில் உட்கார்ந்துவிட்டாள் மீரா… அவளுக்கு பயத்தில் நா வரண்டு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது…

‘கடவுளே இந்த கடித்த்தை தான் படிக்காமலே இருந்திருக்கலாமே….’ என்று நினைத்தவள் பெட்டியை அவளுடைய உடைகளுக்கடியில் மறைத்து வைத்துவிட்டு கடிதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு யார் கண்ணிலும் படாமல் வீட்டின் பின்பக்கம் வந்தவள் தன் கையோடு கொண்டுவந்த தீப்பெட்டியை கொண்டு அந்த கடிதத்தை எரித்து அதன் சாம்பலையும் மண் தோண்டி புதைத்துவிட்டுத்தான் வீட்டுக்குள் நுழைந்தாள்…


“எங்க போயிட்ட மீராம்மா…. உன்னை எங்கேல்லாம் தேடுறது…” என்றபடி அவளை நெருங்கிய சரஸ்வதியிடம் “இங்கதான் உட்கார்ந்திருந்தேன்…..” அவர் முகம் பார்க்காமல் கூறினாள்..

மருமகளின் முகத்திலும் பேச்சிலும் எதுவோ சரியில்லை என்று உணர்ந்தவர் அவளது நெற்றியை தொட்டுப் பார்த்துவிட்டு “உடம்பு நல்லாத்தானே இருக்கு…. சரி வா… வந்து சாப்பிடு…..” என்றார்..

“இல்ல வேண்டாம்…. எனக்கு பசிக்கல….” மறுத்தாள் மீரா..

“நேத்து இருந்து வாயில பச்சை தண்ணி கூட படல்ல… கொஞ்சமாவது சாப்பிடும்மா….” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்த அர்ஜுன் “அம்மா…. அவகிட்ட எதுக்கு கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க… நீங்க போய் சாப்பாடு எடுத்து வைங்கம்மா… அவ சாப்பிடுவா….” என்றான்...

சரஸ்வதி சென்றுவிட மீராவை அழுத்தமாக பார்த்துக்கொண்டே நெருங்கியவன் அவளது கையை பற்றினான்… முன்பு இருந்த மீராவாக இருந்தால் அவனது இந்த கரிசனத்திலும் தொடுகையிலும் அகமகிழ்ந்து போயிருப்பாளோ என்னவோ…. இப்போது வெறுப்பில் அவளுக்கு உடல் தகித்தது…

ஆனால் எந்த உணர்வையும் முகத்தில் வெளிப்படுத்தவில்லை… வெளிப்படுத்த அவள் விரும்பில்லை… பொம்மை போல் அவனுடைய இழுப்புக்கு உடன் சென்றவள் சாப்பாட்டு மேசையில் அவன் உட்கார வைத்ததும் எதுவும் பேசாமல் உட்கார்ந்து கொண்டாள்…

சரஸ்வதி உணவை கொண்டுவந்ததும் மீரா உண்ணாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க என்ன நினைத்தானோ தானே எடுத்து ஊட்டிவிட ஆரம்பித்தான் அர்ஜுன்.. இதை சுத்தமாக எதிர்பார்க்காதவள் அதை மறுக்க நினைத்து பின்பு மறுப்பதற்காக கூட அவனிடம் பேச பிடிக்காமல் வேண்டா வெறுப்பாக அவன் ஊட்டி விட்டதை விழுங்கிக் கொண்டிருந்தாள்…

“டேய் என்னடா பேராண்டி இது….” கேட்டுக்கொண்டே அவர்களை நெருங்கினார் அர்ஜுனின் பாட்டி… “அப்பன் செத்துட்டான்னு அழுது நாடகம் போட்டு உன்னையும் மயக்கிட்டாளா இவ….”

“பாட்டி…” பல்லைக் கடித்தான் அர்ஜுன்… அவரை திரும்பி பார்த்தவன் “இன்னும் ஒரு வார்த்த பேசின பாட்டின்னு கூட பார்க்கமாட்டேன்…. வீட்டி வாசல்ல தலைகீழா கட்டி தொங்க விட்டுடுவேன்…. மூடிக்கிட்டு போ….” குரலை தாழ்த்தி அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக கூறினான்…

அவன் குரலே நிச்சயமாக சொன்னதை செய்துவிடுவேன் என்பதுபோல் ஒலிக்க பேரனை முறைத்தவர் வேறெதுவும் சொல்லாமல் கோபமாக அங்கிருந்து சென்றுவிட்டார்…. பாட்டியை பார்த்து வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவன் தொடர்ந்து மீராவுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான்…

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த சிவாவும் ப்ரசாத்தும் இந்த காட்சியை பார்த்து அசையாமல் நின்றுவிட்டனர்… சிவா மகிழ்ச்சியுடன் நண்பனை பார்த்துக் கொண்டு நின்றானென்றால் ப்ரசாத் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டு நின்றான்.. அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது…






#############################





ஆதி இந்தியா திரும்பிவிட்டதை மித்ரா மூலமாக அறிந்து கொண்டவள் வீட்டில் அனைவரும் கூடியிருக்கும் நேரம் தான் மும்பை செல்லப்போவதாக கூறினாள் நித்திலா….

அவள் சொன்னதும் அத்தனை பேரும் சந்தோசத்தில் முகம் மலர நிர்மலாவின் முகம் மட்டும் கூம்பிப்போனது… அன்று மாலை நித்திலாவின் அறைக்கு வந்தவர் அவள் துணிமணிகளை அடுக்கிக் கொண்டிருப்பதை இறுகிய முகத்துடன் பார்த்திருந்துவிட்டு ஒன்றும் பேசாமலே வெளியேறிவிட்டார்…

அவளது அறையிலிருந்து வெளியே வந்து மாடிப்படியில் இறங்கும் போது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படியிலிருந்து உருண்டு விழ அந்தப் பக்கமாக வந்த அஜய் நிர்மலா விழுவதை கண்டதும் “பாட்டி…..” என்றபடி கத்திக்கொண்டு அவரை நோக்கி ஓட அவன் நெருங்குவதற்குள் நெற்றியிலிருந்து ரத்தம் வழிய தரையில் விழுந்து கிடந்தார் நிர்மலா….

அதன்பிறகு நித்திலாவால் எப்படி மும்பை செல்ல முடியும்… அதுவும் நிர்மலாவுக்கு இம்மென்றால் நித்திலாதான் தேவைப்பட்டாள்… சென்றமுறை பாட்டியை விழுந்து விழுந்து கவனித்தது போல இந்த முறை நித்திலாவால் கவனிக்க முடியவில்லை… சில சமயங்களில் தன்னையும் மீறி பாட்டியின் மீது எரிச்சல் மூழ்வதும் உண்டு…

அவளது முக பாவனைகளையே எப்போதும் நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார் நிர்மலா….

“இன்னேரம் நீ மும்பைல ஆதி கூட இருந்திருக்க வேண்டியது…. ம்ப்ச்…. நான் விழுந்ததனால எல்லாம் தடைப்பட்டு போச்சில்ல…” என்றார் ஒருநாள்…

“அதெல்லாம் ஒன்னுமில்ல பாட்டி….” என்றாள் நித்திலா பாட்டியின் முகம் பார்க்காமல்…

நிர்மலாவின் முகத்தில் எள்ளலான முறுவல் ஒன்று தோன்றி மறைந்தது…

‘நான் உன் அப்பனுக்கு அம்மாடி…. அவன்கூட சேர்ந்துக்கிட்டு என்கிட்டயே உன் வேலைய காட்டுறியா…. நீ எப்படி மும்பை போறேன்னு நானும் பார்க்கிறேன்….’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்…


ஆனால் நித்திலா ஒன்றும் முட்டாள் இல்லையே… இரண்டு நாட்களிலே பாட்டியின் நாடகத்தை கண்டுபிடித்துவிட்டாள்…

பாட்டிக்கு உணவு எடுத்துச் சென்றவள் அவர் ஊட்டிவிட சொல்லவும் ஊட்டிவிட்டாள்… அந்த சமயத்தில் நிர்மலாவின் அலைப்பேசி இடைவிடாது அடித்துக் கொண்டிருக்க கட் செய்துவிட்டு வேகவேகமாக உண்டு முடித்தவர் “சரிடா… எனக்கு போதும்… நீ போய் ரூம்ல ரெஸ்ட் எடு….” என்றார் அவளிடம்….

“சரி பாட்டி…” என்றவள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு திரும்பிச் செல்லும் சமயம் நிர்மலா மீண்டும் ஃபோனை எடுத்துப் பார்ப்பது அங்கிருந்த கண்ணாடியில் தென்பட ஏனோ வெளியே வந்தவள் சுவரோரமாக நின்று கொண்டாள்…

சற்று நேரத்திலே நிர்மலா தன் அக்காவுடன் ஃபோனில் பேசுவது தெளிவாக இவள் காதில் விழுந்தது…

“இப்போதைக்கு அவ மும்பை பக்கமே போகமாட்டாக்கா…. என்னை இந்த நிலமையில விட்டுட்டு அவன்கிட்ட போகனும்னு நித்திலா யோசிச்சி கூட பார்க்கமாட்டா…”

“……………………….”

“சே… சே… என்மேல அவளுக்கு எந்த சந்தேகமும் வரல… கூடவே இருந்து கவனிச்சிக்கிறா…”

“………………………….”

“நீங்க எதை பத்தியும் கவல படாதீங்கக்கா… நித்திலாவ அவன்கிட்ட இருந்து பிரிச்சி ஆர்யா கூட சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு….”

அதற்குமேல் அவர் பேசுவதை கேட்க நித்திலா அங்கு நின்றிருக்கவில்லை… வேகமாக தன் அறைக்கு வந்து கதவை சாத்தியவளுக்கு ஆத்திரத்தில் முகமெல்லாம் சிவந்தது… எவ்வளவு கேவலமான எண்ணம் இந்த பாட்டிக்கு… தன் சொந்த பேரனிடமிருந்து அவளை பிரித்து அக்காவின் பேரனுக்கு கட்டி வைக்க போகிறாராமே… அவளுக்கு நினைக்கவே குமட்டிக் கொண்டு வந்தது….

‘சை… பாட்டிக்கு என்ன மூளை கீளை கெட்டுவிட்டதா… அதுவும் நாடகமாடி தன்னை போகவிடாமல் தடுத்திருக்கிறார்.. என்று நினைத்தவள் இதற்கு மேல் ஒரு நிமிடம்கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்ற முடிவுடன் உடனே கிளம்பிவிட்டாள்…

“எங்க கிளம்பிட்ட நித்து….” பெட்டி படுக்கையுடன் தயாராகி வந்தவளை கண்டு விஜயா மற்றும் கல்பனா இருவரும் ஒருசேர கேட்க,

“நான் என் வீட்டுக்கு போறேன் பெரிம்மா…. எல்லாருக்கும் சொல்லிடுங்க….. முக்கியமா பாட்டிக்கு…..” என்றவள் அவர்கள் ஏதோ சொல்லவர காதுகொடுக்காமல் தன்னுடைய லக்கேஜை தள்ளிக்கொண்டு முன்னேற எதிரில் வேகமாக வந்த விக்ரம் “நித்து…..” என்றபடி மூச்சுவாங்க நித்திலாவை நெருங்கியவன் அவனுடைய ஃபோனை அவளுக்கு முன்னால் நீட்டி “இந்த நியூஸ பாரு…” என்றான்…

அவனை புரியாமல் பார்த்தவள் அவன் காட்டிய செய்தியை படிக்க ஆரம்பித்தாள்…. அதில் தொழிலதிபர் ஆதிதேவ் விரைவில் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சிறுவயது தோழியான தொழிலதிபர் முகேஷின் மகள் ஜீவிகாவை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் சமீபகாலமாக இருவரும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒன்றாகவே சென்று வருவதாகவும் சொல்லப்பட்டிருந்தது..

கூடவே நேற்று முன்தினம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற பிரபல திரை நட்சத்திரத்தின் திருமண விழாவுக்கு இருவரும் ஜோடியாக சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஒரு ஃபோட்டோவையும் போட்டிருந்தார்கள்….. அதில் ஜீவிகாவின் இடை வளைத்து அணைத்தாற் போல் அவள் முகம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் அவளுடைய கணவன் ஆதி …





தொடரும்……


அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்…. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்….

 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 39:



தன் கைவிரல்களை பார்த்தபடி உட்கார்ந்திருந்த மருமகளிள் கைமீது தன் கரத்தை வைத்தவள் “நீ பயப்படுற அளவுக்கெல்லாம் ஒன்னுமே இருக்காதுடா…… கட்டின பொண்டாட்டி இருக்கும்போது இன்னொருத்திய தேடிப்போற ஈன புத்தி என் பையனுக்கு கிடையவே கிடையாது… அந்த விஷயத்துல எல்லாம் அவன் சொக்கத்தங்கம்….” என்றாள் சரதா…

சாரதாவை திரும்பி பார்த்து லேசாக புன்னகைத்தாள் நித்திலா “எனக்குத் தெரியாதா அத்தை…. நீங்க இதை சொல்லனுமா..”

அவளுடைய பயமே வேறு… ஆதிக்கு ஜீவிகா மற்றும் ரன்வீரால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்குமோ என்பதுதான் அவளது மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது… எதற்காகவாவது அவனை மிரட்டுகிறார்களோ என்று நினைத்தாள்… அதனால்தான் ஆதி அந்த ஜீவிகாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறானோ…

ஆதியின் விடயம் கேள்விப் பட்டதிலிருந்தே வீட்டில் அத்தனை குழப்பம்… யாருக்குமே இதை நம்புவதா இல்லையா என்று தெரியவில்லை… அவர்களுக்கு ஆதியை பற்றியும் தெரியும் அதே சமயம் அந்த செய்தியும் மிகவும் நம்பகமான மீடியாக்களில் தான் வெளியாகிக் கொண்டிருந்தது…

நித்திலா மட்டும்தான் தெளிவாக இருந்தாள்…. எதுவாக இருந்தாலும் தான் மும்பை சென்று பார்த்துக் கொள்வதாக கூறினாள்.. யாருக்கும் அவளை தனியாக அனுப்ப மனமில்லை… முக்கியமாக நிர்மலாவுக்கு… தானும் அவளுடன் வரப்போவதாக கூறிக்கொண்டு கிளம்பினார்…

“உடம்பு சரியில்லாத நேரத்துல நீங்க எப்படி பாட்டி அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வரப்போறீங்க… அதுவும் உங்களால ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியாம இருக்கும்போது….” வேண்டுமென்றே கூறினாள் நித்திலா…

நிர்மலாவுக்கு ஒன்றும் சொல்லமுடியாத நிலை…. ஆம் என்றால் அவளுடன் செல்ல முடியாது… இல்லையென்றால் போட்ட வேஷம் கலைந்துவிடும்….. ஆனால் நித்திலாவை தனியாக அனுப்பவும் அவருக்கு மனமில்லை..

இறுதியில் சாரதா கிளம்பி வந்தவள் தான் நித்திலாவுடன் செல்வதாக கூற அதன்பிறகுதான் அவருக்கு சற்று நிம்மதியாக இருந்தது.. அப்போதும் மனது கேட்காமல் கருணாகரனின் மகன் விக்ரமை அழைத்தவர் அவர்களுக்கு துணையாக சென்று வருமாறு கூறியிருந்தார்…

நித்திலா, சாரதா, விக்ரம் மூவரும் இருவரும் மும்பை வந்திறங்கியவர்கள் ஏர்போட்டில் இருந்து ஆதியின் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்….

காம்பவுண்டை தாண்டி உள்ளே செல்லும்போது போர்டிகோவில் ஆதியின் கார்கள் அல்லாத வேறு சில கார்கள் நின்றுகொண்டிருந்தன…

விக்ரம் சென்று காரை நிறுத்தியதும் மூவரும் இறங்கி வீட்டுக்குள் நுழையும்போதே ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தம் காதில் விழ சந்தேகமே இல்லாமல் அது ஜீவிகாதான் என்பதை உணர்ந்து கொண்டார்கள் மூவரும்…

ஏனோ சாரதாவுக்கு இத்தனை நேரம் இருந்த நம்பிக்கை மெல்ல மெல்ல ஆட்டம் காணத்துவங்கியது… நித்திலாவோ உணர்வுகள் துடைக்கப்பட்ட முகத்துடன் முன்னேறினாள்… ஆனால் தலைக்குள் ஆயிரம் யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன…

உள்ளே சென்று பார்க்க ஹாலில் வழக்கம் போல அரைகுறை ஆடையுடன் ஜீவிகா உட்கார்ந்திருக்க அவளிடம் எதையோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான் ரன்வீர்…. வேலைக்கார்ர்கள் இருவருக்கும் ஜூஸ்,, ஸ்நாக்ஸ் என்று கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்…

ஜீவிகா வேலைக்கார பெண்ணை சொடக்கிட்டு அழைத்தவள் “நான் ஆரேஞ்ச் ஜூஸ் சாப்பிடமாட்டேன்… பைன் ஆப்பிள் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா…” என்று சொல்ல சாரதாவுக்கு வந்ததே ஆத்திரம்….

யார் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு யார் யாரை ஏவுவது என்று ஜீவிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிடும் ஆத்திரத்துடன் அவள் முன்னேற “இங்க என்ன பண்றீங்க???” மாடியிலிருந்து கர்ஜனையாக ஒலித்தது ஆதியின் குரல்..

அவனது குரலில் சாரதாவும் நித்திலாவும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க அதேசமயம் ரன்வீர் ஜீவிகாவும் அப்போதுதான் நித்திலா சாரதா ஆகியோர் வந்திருப்பதை உணர்ந்தார்கள்…

கண்கள் இடுங்க நித்திலாவை பார்த்துக் கொண்டே இறங்கி வந்தவன் “என்னடா ஆதி இதெல்லாம்???” என்று சாரதா கேட்டதை காதில் வாங்காமல் நித்திலாவின் முன்னால் சென்று நின்றான்….

“உன்ன இங்க வரவேண்டாம்னு சொன்னேன்..” சீறினான் அவளிடம்…

“அத்தான் நான்…..” என்று ஆரம்பித்தவளை கை நீட்டி தடுத்தவன் “இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க இருந்தாலும் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…. ஒழுங்கா வெளிய போயிடு…”

வேகமாக அவனது கையை பற்றிக் கொண்டு “ஐம் சாரி அத்தான்…. நான்தான் உங்கள புரிஞ்சிக்காம தப்பு பண்ணிட்டேன்… இனிமே உங்கள விட்டு எங்கேயும் போறதா இல்ல… எனக்கும் நீங்க மட்டும் போதும்….” என்றவள் ஜீவிகா, ரன்வீர் புறம் திரும்பினாள் “இவங்களால உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளமா அத்தான்??”

தன் கையை பிடித்திருந்த அவளது கையை பிரித்து விட்டு விட்டவன் “எனக்கு இருக்கிற ஒரே ஒரு ப்ராப்ளம் நீ மட்டும்தான்…. நீ என்னை விட்டு போனாலே போதும் நான் ரொம்ப நிம்மதியா சந்தோசமா இருப்பேன்….” என்றான்…

உடனே மகனை நோக்கி வந்த சாரதா “டேய் ஆதி வேணாம்டா… பெண்பாவம் பொல்லாதது அதுவும் அவ அப்பா, அம்மா இல்லாத பொண்ணுடா… அவளுக்கு துரோகம் பண்ணினா கடவுள் உன்ன மன்னிக்கவே மாட்டார்… உன் கால்ல வேணா விழுறேன் இந்த சனியன முதல்ல அடிச்சி விரட்டிவிட்டுட்டு நித்திலா கூட வாழுற வழிய பாரு…. நானும் வேணும்னா இனி இங்கேயே உங்க கூடவே இருந்துக்கிறேன்….”

ஒற்றை புருவம் உயர்த்தி அன்னையை பார்த்தான் ஆதி “ரொம்ப கெஞ்சுறீங்களேம்மா…. இப்ப என்ன இவள என் கூடவே வெச்சிக்கனும் அதானே…” என்றபடி தாடையை தடவியவன் “சரி.. ஒன்னு பண்ணலாம் இவளும் இங்க இருக்கட்டும்… கூடவே அவளும் இருக்கட்டும்… ரெண்டு மருமக இருந்தா உங்களுக்கும் ரொம்ப வசதியா இருக்கும் பாருங்க….என்றான் நமட்டு சிரிப்புடன்…

“ஆதீஈஈஈ” மகனை அறைந்தே விட்டாள் சாரதா…. “என்னடா பேசுற…. சை…. நீ என் வயித்துலதான் பொறந்தியா… உன்ன எப்படில்லாம் நினைச்சிருந்தேன்…. கடைசியில இவ்வளவுதானா நீ….” கண்ணீர் வழிய கூறினாள்…

ரன்வீர் ஜீவிகா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்….

“இப்ப எதுக்கு இங்க வந்து சத்தம் போட்டுட்டு இருக்கீங்க… ஜீவிகா என்கூட தான் இருப்பா…. நாங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்…. இவளும் என்கூட இருக்கனும்னு ஆசைப்பட்டா கூட இருந்துக்கட்டும்னு சொல்றேன்…. இதுல என்ன தப்ப கண்டுட்டீங்க நீங்க…” என்றான்….

மகன் பேசுவதை கேட்கமுடியாமல் “கடவுளே…” என்றபடி சாரதா காதுகளை மூடிக்கொள்ள நித்திலா ஆதியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் சாரதாவின் அருகில் வந்து அவளது தோளில் கைவைத்து “நம்ம இங்கேருந்து போயிடலாம் அத்தை….” என்றாள்….

ரன்வீர் நித்திலாவை பார்த்து நக்கலாக சிரிக்க அவனை கண்டு கொள்ளாமல் ஆதியை நேருக்கு நேராக நிமிர்ந்து நோக்கியவள் “என்னால உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது… நீங்க இனி நிம்மதியா சந்தோசமா இருக்கலாம்….” என்றாள்….

சாரதா மகனை மேலும் எதுவோ சொல்ல வாய்திறக்க அவளை தடுத்தாள் நித்திலா “வேண்டாம் அத்தை…. இதுக்கு மேலயும் நம்ம எதுவும் பேச வேண்டாம்….” சாரதாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற விக்ரமும் ஆதியை முறைத்துவிட்டு கிளம்பினான்….

அவனுடைய அம்மா விஜயா எது நடந்தாலும் வாயை திறக்க வேண்டாம் என்று கூறி அனுப்பியதால் அவனால் எதுவும் பேச முடியவில்லை….

மூவரும் திரும்பி செல்வதை இறுகிய முகத்துடன் பார்த்திருந்தான் ஆதி….






######################






அறையில் தூங்கிக் கொண்டிருந்த மருமகளை எழுப்பினார் சரஸ்வதி….

“மீராம்மா… உடம்புக்கு என்ன பண்ணுது… இப்பெல்லாம் ஒரே தூங்கிட்டே இருக்கியேம்மா… உனக்கு என்னதான் ஆச்சு??? ஒரு தடவ டாக்டர்ட போயிட்டு வந்துடலாமா…” என்றார்…

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் அத்தை… அப்பா நியாபகமா இருக்கு…. அதான்….”

“அதுக்குனு இப்படி சாப்பிடாம இருப்பியா…. சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்… சாப்பிட்டுட்டு தூங்குமா…” என்க, “நீங்க வெச்சிட்டு போங்க அத்தை… நான் சாப்பிட்டுக்கிறேன்…” என்றாள் அவள்…

“அதெல்லாம் வேணாம் நான் அந்த பக்கம் போனதும் நீ இந்த பக்கம் தூங்கிடுவ… இப்பவே சாப்பிடு…” அவர் பிடிவாதமாக கூற வேறு வழியில்லாமல் எழுந்து சென்று கைகழுவி வந்தவள் உணவை எடுத்து வாயில் வைத்ததுதான் தாமதம் தட்டை கட்டிலில் போட்டுவிட்டு குளியலறைக்குள் சென்றவள் கொடகொடவென வாந்தியெடுக்க ஆரம்பித்துவிட்டாள்….

மருமகளின் நிலை கண்ட சரஸ்வதி பதறிப்போய் அவளை நோக்கி ஓடியவர் “ஐயோ!! என்னாச்சு மீரா??” என்றபடி அவளை தாங்கி பிடித்துக் கொண்டார்…

வாந்தியெடுத்து ஓய்ந்து போனவள் மாமியார் மீதே சரிய அவளை கைத்தாங்கலாக கட்டிலுக்கு அழைத்து வந்து உறங்க வைத்தவர் யோசனையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தார்…

அர்ஜுன் அப்போதுதான் வீடு வந்து சேர்ந்தவன் சரஸ்வதி அவர்களது அறைக்குள் இருப்பதை கண்டு “என்னம்மா??” என்று கேட்க நடந்ததை கூறியவர் “கொஞ்ச நாளாவே எதுவும் சரியில்ல அர்ஜுன்… எனக்கென்னமோ பயமாவே இருக்கு… டாக்டர்கிட்ட போகலாம்னு சொன்னாக்கூட எனக்கு உடம்புக்கு ஒன்னுமில்ல அதெல்லாம் வேண்டாங்கிறா…” கவலையுடன் சொன்னார்..

“பயப்படுற அளவுக்கெல்லாம் ஒன்னும் இருக்காதும்மா…. இவ சரியா சாப்பிடாதுனால கேஸ்ட்ரிக் ப்ராப்ளம் ஏதாவது இருக்கும்… நாளைக்கே நான் அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்… நீங்க மனசு போட்டு குழப்பிக்காதீங்க….” அன்னைக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தவன் மனைவியின் முகம் பார்த்தான்….

வாடிய கொடிபோல் படுத்துக் கிடந்தவளை கண்டதும் அவனுக்கு மனதை பிசைய கட்டிலில் அவள் அருகில் உட்கார்ந்தவன் அவளை நோக்கி கரத்தை கொண்டு சென்றவன் ஒருநொடி தயங்கினான்….

ஒருநொடிதான்….

மறுநொடியே தயக்கம் மறைந்துவிட அவளது தலையில் கைவைத்து மென்மையாக தடவியவன் கதவோரம் நிழலாடுவது போல் தோன்ற நிமிர்ந்து பார்த்தான்… ப்ரசாத் தான்… விறுவிறுவென்று திரும்பி சென்றுகொண்டிருந்தான்…

அவன் கோபமாக செல்கிறான் என்பது புரிய மனைவியை விட்டுவிட்டு நண்பனை தேடி சென்றான் அர்ஜுன்.. தோட்டத்திலிருந்த கல் பெஞ்சில் தலையில் கைவைத்தபடி அவன் உட்கார்ந்திருப்பதை கண்டதும் அவனை நெருங்கியவன் “டேய் மச்சான்…. என்னடா வந்துட்டு திரும்பி வந்துட்ட… கூப்பிட்டிருக்கலாம்ல….” என்றான்…

அதில் தலையை நிமிர்த்தி அர்ஜுனை ஏளனமாக பார்த்தவன் “எதுக்கு கரடி மாதிரி உன்ன டிஸ்டர்ப் பண்ணனும்னு தான் திரும்பி வந்துட்டேன்…” என்றான் ப்ரசாத்…

“மச்சான் அவளுக்கு கொஞ்ச நாளாவே உடம்பு சரியில்லடா… எப்படி இருக்கான்னு நீயும் பார்த்தேல்ல… இப்பக்கூட சாப்டுட்டு வாந்தி எடுத்திருக்கா… என்னாலதான் இப்படி ஆகிட்டாளோன்னு ஒரு மாதிரி உறுத்தலா இருக்கு மச்சான்… என்னதான் இருந்தாலும் அவ குணசேகர் அங்கிள் பொண்ணு….” பாதி உண்மையை கூறினான்…

ப்ரசாத் எதுவும் சொல்லவில்லை… வேறு எங்கோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்…

“மச்சான்… நீ என்ன நம்பலையாடா… இத தவிர சத்தியமா எனக்கு அவமேல வேற எந்த இன்ட்ரெஸ்டும் கிடையாதுடா…” என்றான் தன்னை புரிய வைத்துவிடும் நோக்கத்துடன்..

நண்பனை திரும்பி பார்த்தவன் தன் கையிலிருந்த ஃபோனை அர்ஜுன் மீது வீசியெறிந்தான் ப்ரசாத்…. “இதை சொல்லத்தான் நான் வந்தேன்….”

தன்மீது பட்டு புற்தரையில் விழுந்த ஃபோனை எடுத்து பார்த்த அர்ஜுன் அதிலிருந்த செய்தியை படித்ததும் “என்னடா இது!!!” என்றான் அதிர்ச்சியுடன்… “ஆதிதேவ் வேற பொண்ணு கூட…..”

“ஆமா… நீ எதுக்கு இப்ப டென்ஷன் ஆகுற…. இது நித்திலா பிரச்சினை… அவளும் அவ குடும்பமும் பார்த்துக்குவாங்க… நீ போய் உன் பொண்டாட்டிக்கு கை, கால் புடிச்சிவிட்டு சேவகம் பண்ணு போ….” என்றான் ப்ரசாத் கோபமாக…

“டேய் ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு…” என்றான் அர்ஜுனும் கோபமாக “இவளும் நித்திலாவும் ஒன்னா?? நிலா என் உயிர்டா….”

கடகடவென சிரித்தான் ப்ரசாத்….. “நிலா என் உயிர் உயிர்னு சொல்லிக்கிட்டே இவகூட எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்க நீ….” எள்ளலாக கூறினான்… “நித்திலா மேல அவ்ளோ லவ் இருந்தா நீ இல்ல இந்த விஷயத்த என்கிட்ட முதல்ல வந்து சொல்லிருக்கனும்…. அவமேல உனக்கு அக்கறை இருந்தா அவ சம்மந்தப்பட்ட எல்லா விஷயமும் தெரிஞ்சி வெச்சிருப்ப… எனக்கென்னமோ உனக்கு அவமேல இருந்தது வெறும் அட்ராக்ஷன்னுதான் தோனுது….”

“ப்ரசாத்….” பாய்ந்து அவன் சட்டையை பிடித்தான் அர்ஜுன்.. “என்னடா சொன்ன நித்திலா மேல எனக்கு லவ் இல்லையா…. அவளுக்காக என் உயிர கூட கொடுப்பேன்டா….”

பதிலுக்கு அவனை தீர்க்கமாக பார்த்தவன் “கொடுக்க வேணாம்…. எடுத்துடு…..” என்றான் ப்ரசாத்… “அந்த ஆதி உயிர எடுத்துட்டு நித்திலாவ கல்யாணம் பண்ணிக்க அப்ப நம்புறேன்….”





#######################





“நித்திலாவுக்கு அவன் சரிப்பட்டு வரமாட்டான்னு தலப்பாடா அடிச்சிக்கிட்டேனே… யார் என் பேச்ச கேட்டீங்க…. போச்சு போச்சு எல்லாம் போச்சு என் பேத்தி வாழ்க்கையே நாசமா போச்சு…..” வானத்துக்கும் பூமிக்குமாக குதித்துக் கொண்டிருந்தார் நிர்மலாதேவி….

அவருக்கு இருந்த கால்வலி, தலைவலி எல்லாம் பறந்து போயிருந்தது…. அப்போதிருந்த மனநிலையில் மற்றவர்களும் இதனை கருத்தில்கொள்ளவில்லை…. நித்திலாவுக்கு ஏற்கனவே பாட்டியின் இந்த நாடகம் தெரிந்திருந்தாலும் தற்போது யாருடன் பேசும் மனநிலை இல்லாததால் தன்னுடைய அறைக்குள் முடங்கி கிடந்தாள்…

தலையில் கைவைத்தபடி யோசனையுடன் உட்கார்ந்திருந்த கணவரை நெருங்கியவர் “அன்னைக்கு என்ன சொன்னீங்க…. ஆதி நித்திலா மேல உயிரே வெச்சிருக்கானா….” என்றார் … “இன்னுமா உங்க பேரனோட லட்சணம் உங்களுக்கு புரியல…”

விஸ்வநாதன் நிர்மலாவை பார்த்தவர் “நான் நாளைக்கே மும்பை போய் ஆதிகிட்ட இது பத்தி பேசலாம்னு இருக்கேன்….” மனைவிக்கும் மற்றவர்களுக்கும் சேர்த்தே கூறினார்..

“ஆஹா… நீங்க போனதும் அப்படியே உங்க பேரன் சிகப்பு கம்பளம் விரிச்சி உங்ககூட பேச்சுவார்த்தை நடத்தி நம்ம பேத்தியையும் ஏத்துக்குவானாக்கும்…. சாரதா அவன் அம்மாங்கிறதால அவள எதுவும் பண்ணாம அனுப்பி வெச்சிருக்கான்… நீங்க போனா உங்க கழுத்த புடிச்சி வெளிய தள்ளி விட்டுடுவான்…….” என்றார் நக்கலாக….

அவன் செய்தாலும் செய்வான் என்று தோன்றியதால் விஸ்வநாதனால் மறுபேச்சு பேச பேசமுடியவில்லை….

அடுத்து மகளை நோக்கி வந்தார் நிர்மலா “இதுக்கு மேலயும் உன் தம்பி பொண்ணு உன் மகன் கூட சேர்ந்து வாழனும்னு ஆசை படுறியா சாரதா…. எத்தனை பாடு பட்டு அவ உயிர காப்பாத்தினோம்…. எப்படியெல்லாம் அவள வளர்த்தோம்… இல்ல அவ ஆதி கூடத்தான் வாழனும்னு நீ நினைச்சா சொல்லிடு…. எல்லாரும் சேர்ந்து அவளுக்கு விஷத்த வெச்சி கொன்னுடலாம்…..”

“அம்மா!!!!! வேண்டாம்மா…. அவ இனிமேல் ஆதி கூட சேர்ந்து வாழவே வேண்டாம்…. எங்கே இருந்தாலும் அவ சந்தோசமா இருந்தா எனக்கு அதுவே போதும்…. என் மகன் செத்துட்டான்னு நினைச்சிக்கிறேன்…..” என்றாள் விழிநீர் வழிய….

மகளை அணைத்துக் கொண்டவர் “உன்ன காயப்படுத்தனும்னு சொல்லல சாரதா…. உன் பையன் குணத்துக்கு நித்திலாவ இனிமேல் அவன் கூட சேர்த்து வைக்கனும்னு நினைக்கவே முடியாது…. அதை நீ புரிஞ்சிக்கனும்மா….” என்றார்…

இந்த கூத்தையெல்லாம் மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் சூரஜும் சந்திரலேகாவும்….

“பார்த்தியா கிழவி போடுற பிட்ட…. எல்லாம் நித்திலாவ அவங்க அக்கா பேனுக்கு கட்டி வைக்கனும்னு தான் இத்தன பேச்சும் பேசுது….” சந்திரலேகா…

பதிலுக்கு சிரித்தவன் “இப்ப நான் போடுறேன் பாருங்க பிட்டு ….” என்றவன் கீழே சென்றான்…

பாட்டியின் முன்னால் சென்று நின்றவன் “நீங்க பேசினதெல்லாம் கேட்டுட்டுதான் இருந்தேன் பாட்டி… கண்டிப்பா இனிமே நித்துவ ஆதி கூட சேர்த்து வைக்கிறத நினைச்சி பார்க்க முடியாது… அவங்க ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் வாங்கி கொடுத்துட்டு ஆரம்பத்துல பேசின மாதிரி ஆர்யாவுக்கே நித்துவ கட்டி வைச்சா என்ன??” என்றான்…

பேரனை நெகிழ்ச்சியுடன் பார்த்தார் நிர்மலா…. அவர் மனதிலும் அதுதானே இருக்கிறது… இருந்தாலும் அக்காவின் கெத்தை மற்றவர்கள் முன்னால் விட்டுக் கொடுக்க முடியாது “அதுக்கு எங்க அக்கா சம்மதிக்கனுமேப்பா…. அவங்க ஒத்துக்குவாங்களான்னு தெரியாதே….” என்றார்…

“உங்களுக்காக உங்க அக்கா இதைகூட பண்ணமாட்டாங்களா பாட்டி… நீங்க கேட்டா கண்டிப்பா ஒத்துக்குவாங்க…” என்றான் அவனும்…

“அதுவும் சரிதான் எனக்காகன்னா அக்கா எது வேணும்னாலும் பண்ணுவாங்க…..” என்றவர் பேரனை பார்த்து சிரித்தார்… அவனும் அவரை பார்த்து சிரித்தான்… அந்த சிரிப்புக்கு பின்னால் இருக்கும் வஞ்சகம் சந்திரலேகா மட்டுமே அறிந்த ஒன்று….





தொடரும்……..



இன்னொரு எபி இருக்கு.
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 40:





தன்னுடைய அபார்ட்மென்ட் பால்கனியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் மித்ரா… ஒரு வாரமாக ஆதியை தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருக்கிறாள்….

முடியவில்லை….

நன்றாக பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று அவளுடன் பேசுவதை நிறுத்திவிட்டான்…. அவளும் பல அழைப்புகள், மெஸேஜ் என்று அனைத்தும் பண்ணி பார்த்துவிட்டாள்… ஒன்றும் பயனில்லை…

இறுதியாக இன்று காலை மிகவும் முக்கியமாக பேசியே தீரவேண்டும் என்று அவள் அனுப்பிய குறுஞ்செய்திக்கு மாலை ஐந்து மணியளவில் அழைப்பதாக பதில் அனுப்பியிருந்தான்… அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறாள்…

சரியாக ஐந்து மணிக்கு அவனிடமிருந்து அழைப்பு வர ஃபோனை எடுத்து காதில் வைத்தவள் படபடவென பொரியத்தொடங்கினாள்…

“தேவ் உன் மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்க… யாரை கேட்டு அந்த ஜீவிகா கூட சுத்திக்கிட்டு திரியுற…. என்னடா ஆச்சு உனக்கு… நித்திலாவ கடுப்பேத்தனும்னு கண்ட ****** கூட சுத்துவியா…. நித்து மனசு என்ன பாடு படும்னு கொஞ்சமாவது நினைச்சு பார்க்கமாட்ட…. அவ வீட்டுக்கு வந்தப்போ ஏதேதோ பேசி விரட்டிவிட்டியாம்… என்னடா இதெல்லாம்…..”

“இதை சொல்லத்தான் ரொம்ப அவசரம் பேசியே ஆகனும்னு சொன்னியா…” ஆதி

“தேவ் நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சிதான் பண்றியா…. நித்து எனக்கு கால் பண்ணிக்கிட்டே இருக்காடா… அவளுக்கு என்ன சொல்றதுனு தெரியாம நான் எடுத்து பேசவே இல்ல…. பாவம்டா அவ……… நீ………….”

“ஹே நிறுத்து….. என்ன விட்டா உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே போற… அவ கேட்டா சொல்லு ஆதி ஜீவிகாவத்தான் கல்யாணம் பண்ணிக்க போறான்னு…..”

“தேவ்…. உளராத…” கத்தினாள் மித்ரா…

“இப்ப எதுக்கு நீ கால் பண்ணிருக்க… நித்திலாவ நான் கழட்டிவிட்டா உடனே பாட்டி உன் ஆர்யாவுக்கு அவள கட்டி வெச்சிடுவாங்கன்னு தானே…. கவலையேபடாத அவன ஆள் வெச்சி தூக்கியாவது உன் கழுத்துல தாலி கட்ட வெச்சிர்ரேன்…. அவனுக்காக தானே நீ முளைக்கிறதுக்கு முன்னாடி இருந்தே அத்தன திருட்டுதனமும் பண்ணின…. கடைசியில உன்னால நாசமா போனது என் வாழ்க்கைதான்…. உனக்கும் ஆத்ரேயா…. சாரி சாரி… உனக்கு அவன் ஆதில்ல…. ம்ம்ம்…. உனக்கும் உன் ஆதிக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும்…. என் பெர்ஸனல் விஷயத்துல மூக்க நுழைக்கிறத இத்தோட நிறுத்திக்க… குட் பை……”

அவன் கட் செய்ததை கூட உணராமல் சற்று நேரம் அப்படியே நின்றிருந்தவள் மெல்ல மெல்ல அவன் பேசிய பேச்சுக்கள் உறைக்க அழுகை பொத்துக்கொண்டு வந்தது… கையிலிருந்த அலைப்பேசியை தூக்கி எறிந்துவிட்டு கட்டிலில் உட்கார்ந்தவளுக்கு எண்ணமெல்லாம் நித்திலாவை பற்றியே இருந்தது…

தன்னாலே அவன் பேச்சுக்களை தாங்கிக் கொள்ள முடியவில்லை…. நித்திலாவை என்னவெல்லாம் பேசினானோ….

தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள் மித்ரா…. எவ்வளவு நேரம் இருந்தாளோ அழைப்பு மணி அடிக்கவும் ‘இந்த நேரத்தில் யார்…’ என்று நினைத்தவள் சென்று பார்த்தாள்..

சௌர்யா…….

சௌர்யா நின்று கொண்டிருப்பது தெரிய கதவை திறப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு நின்றவள் பின்பு என்ன நினைத்தாளோ கதவை திறந்தாள்… அவள் தனக்காக கதவை திறந்து விட்டதில் அவனது புருவங்கள் ஒருமுறை ஏறி இறங்கியது…

“வா…. வாங்க….” என்றாள்…

உள்ளே நுழைந்தவனின் நாசி தன்னவளின் வாசனையால் நிரம்ப அவளை ஏக்கத்துடன் பார்த்தான் சௌர்யா…. அவளோ சுத்தமாக அவனது பார்வையை உணரும் நிலையில் இல்லை… அப்படியே உணர்ந்தாலும் கண்டுகொள்ளவும் மாட்டாள்…

அவனை அழைத்து உட்கார சொன்னவள் சமையலறைக்குள் நுழைந்து வேகமாக இரண்டு காபி போட்டு கொண்டு வந்து அவனிடம் ஒன்றை நீட்டிவிட்டு தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள்…

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை… அவள் ஏதோ யோசனையில் இருக்க அவன் காபியை குடிப்பதும் அவளை பர்ப்பதுமாக இருந்தான்…

“காபி சூப்பர்….” என்று அவன் கூற “ம்ம்ம்….” என்றவள் தன்னுடையதை அருந்த தொடங்க வாயில் வைத்ததும் சர்க்கரை போடவில்லை என்பதை உணர்ந்தவள், “ஐம் ஐம் சாரி…. ஏதோ நியாபகத்துல சுகர் போட மறந்துட்டேன்…” என்றாள் சங்கடத்துடன்…

லேசாக சிரித்தவன் “கூல் மித்ரா…” என்றான் “நான் சுகர் கம்மியா தான் சேர்த்துக்குவேன்….. அதனால இது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல…”

அவனை நம்பாத பார்வை பார்த்தாள் அவள்….

‘நீ என்னைக்கு என்னை நம்பியிருக்க…’ கசப்புடன் நினைத்தவன் அவள் முகம் பார்த்தான்….

தேவதை போல் கொள்ளை அழகுடன் இருந்தவளை கண்டு அவன் மனம் மயங்கியது…. அவனுக்கு தெரியும் அவளுக்கு அவனை சுத்தமாக பிடிக்காது… பல வருடங்களாக அவள் மனதில் வேறொருவன் குடியிருக்கிறான்…. எல்லாமே அவனுக்கு தெரியும்.. அப்படியிருந்தும் அவன் மனம் பித்து பிடித்ததை போல் அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறது…


அவன் நியூயோர்க்கில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக அந்த பக்கமும் செல்லாமல் கலிபோர்னியாவில் தங்கியிருப்பவள் அவள்….


அத்தை வீடு என்று அவள் ஒருமுறை கூட சௌர்யா வீட்டுப்பக்கம் சென்றதுமில்லை… சௌர்யாவின் தாய் எப்போது அழைத்தாலும் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்து விடுவாள்…. இறுதியில் சாறுலதாதான் வந்து மித்ராவை பார்த்துவிட்டு செல்வாள்…

அத்தனைக்கும் காரணம் அவளுக்கு சௌர்யா மீதிருந்த வெறுப்பு….. அந்த வெறுப்பு ஏற்பட காரணமும் அவன்தான்… அதற்காக இன்றுவரை அவன் வருந்தியதுமில்லை… அதே சமயம் அவள் மீது அளவுகடந்த காதலும் அவனுக்கு இருந்தது..

தன் நினைவுகளிலிருந்து மீண்டவன் அடுத்து தான் வந்த விடயத்தை பற்றி பேச ஆரம்பித்தான்…

“அப்புறம்…. ஆதி பேசினானா….” என்றான் கேள்வியாக….

“ம்ம்ம்…. இப்பத்தான் பேசினேன்….” என்றாள்..

“என்ன சொல்றான்???”

தெரியவில்லை என்பதுபோல் தலையாட்டினாள் அவள்… “என்னென்னமோ பேசுறான்… அவன் மனசுல என்ன இருக்குனே புரிய மாட்டேங்குது….” என்றவள் ஆர்யா பற்றிய விடயத்தை தவிர்த்து ஆதி கூறிய மற்றையதை அவனிடம் சொன்னாள்…

அவள் சொல்லி முடித்ததும் சிரித்தான் சௌர்யா….

என்ன சிரிப்பு என்பதுபோல் அவள் அவனை முறைக்க தன் சிரிப்பை அடக்கி கொண்டவன்.. “ஆதி அந்த ஜீவிகாவ கட்டிக்க போறானாமா……. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு….” என்றான்…

“நானும் நம்பலதான்…. ஆனா அவன் ரொம்ப சீரியஸா பேசுறத பார்த்தா ரொம்ப குழப்பமா இருக்கு….. அவன் என்கிட்ட இவ்வளவு வெறுப்பா அவாய்ட் பண்ற மாதிரிலாம் இதுவரைக்கும் பேசினதே இல்ல…. யார்மேலயோ இருக்க கோபத்துல அந்த ஜீவிகா கூட சேர்ந்து ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணிடுவானோன்னு பயமா இருக்கு….”

“எனக்கு அப்படி எதுவும் தோனல மித்ரா… ஆதிக்கு ஜீவிகா பத்தி நல்லாவே தெரியும்… அந்த ரன்வீர் ஆதிய கொலை பண்ண ஆள் அனுப்புனவன்…. அப்படிபட்டவங்கள தன்கூட சேர்த்து வெச்சிருக்கான்னா எங்கேயோ இடிக்குது….” என்றான் சௌர்யா….

விலுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தாள் மித்ரா… “அப்படி ஏதாவது இருந்தா கண்டிப்பா என்கிட்ட சொல்லிருப்பான்… என்கிட்ட தேவ் எதையும் மறைச்சதில்ல….”

“உன்கிட்ட சொல்லமுடியாத மேட்டரா கூட இருக்கலாம் மித்ரா….”

“அப்படியென்ன என்கிட்டயே சொல்லமுடியாத மேட்டர்….” அவள் புரியாமல் கேட்க தெரியவில்லை என்பதுபோல் உதட்டை பிதுக்கி தோளை குலுக்கினான் அவன்… “எதுவா இருந்தாலும் அவனா சொன்னாத்தான் தெரியவரும்…. ஆனா கண்டிப்பா நித்திலாவ ஹர்ட் பண்ணனும்கிறதுக்காக ஆதி இந்த மாதிரி ஒரு காரியத்த பண்ணிருக்க மாட்டான்னுதான் எனக்கு தோனுது…”

“எதுவா இருந்தாலும் இந்த விஷயத்தால நித்து மனசு ஹர்ட் ஆகத்தான் செய்யும்… எனக்கு அவள நினைச்சாத்தான் சௌர்யா ரொம்ப கஷ்டமா இருக்கு…..”

இந்த நேரத்திலும் அவள் ‘சௌர்யா’ என்று தன் பெயரை கூறியதை அவன் மனம் ரசித்தது…

நெற்றியில் இரு கை விரல்களை பதித்து முகத்தை மூடினாற்மோல் இருந்தவளை கண்டவன் “மித்ரா… நீ இந்த அளவுக்கு வருத்தப்பட வேண்டியதில்ல… நம்மளவிட நித்து நல்லாவே ஆதிய புரிஞ்சி வெச்சிருக்கா…. அவ அப்படியெல்லாம் உடைஞ்சி போயிடமாட்டா….” என்றபடி தன்னையும் அறியாமல் அவள் முகத்தில் இருந்த கரத்தினை விலக்குவதற்காக தொட்டவனுக்கு ஷாக்கடித்தது போல் இருந்தது…

தன்னவளின் முதல் ஸ்பரிசம் அவனை எங்கேயோ இழுத்து செல்ல மனமோ ‘சௌர்யா எதுக்கு வந்துட்டு என்ன பண்ணிட்டிருக்க… இப்பதான் முதல் தடவ உன்கிட்ட முகம் கொடுத்து பேசுறா… கிறுக்குத்தனம் பண்ணி கெடுத்து விட்டுடாம ஓடிடு….” என்று எச்சரித்தது…

மனமே இல்லாமல் தன் கரத்தினை விலக்கியவன் “சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்னு நம்புவோம்….” என்றுவிட்டு எழுந்தான்…. “நான் கிளம்புறேன் மித்ரா…. டைம் ஆச்சு…..”

“எங்கே ஸ்டே பண்ணிருக்கீங்க…..” என்ற அவளது கேள்விக்கு “ஹோட்டல்ல தான்…. நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு முடிச்சிட்டு கிளம்பிடுவேன்….” என்றவன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு எதிலிருந்தோ தப்பித்து செல்பவன் போல வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான்….. காருக்குள் வந்து உட்கார்ந்த பிறகுதான் அவனால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது…

அவளை லேசாக தொட்டதற்கே தனக்கு இந்த நிலமை என்றால் ‘இதுக்கு இவ எப்பவும் போல என்கிட்ட பேசாமலே இருந்திருக்கலாம்….’ என்று நினைத்தவனுக்கு இத்தனை நாட்கள் இல்லாத வலி, தவிப்பு, பாரம் எல்லாம் இப்போது மனதில் ஒன்றாக வந்து ஒட்டிக்கொள்ள அழுத்தமாக தலையை கோதிக் கொண்டவன் சீட்டில் சாய்ந்தபடி வேதனையுடன் விழிகளை மூடினான்….

அதேசமயம் மித்ராவும் தன்னுடைய அறையில் ஆர்யாவின் ஃபோட்டோவை வைத்துக் கொண்டு எதிர்காலமில்லாத தன்னுடைய காதலை நினைத்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்….




#######################





வீட்டுக்குள் இருக்க முடியாமல் தோட்டத்தில் வந்து உட்கார்ந்திருந்தாள் நித்திலா…. அவளுக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை…. அருணா, சங்கர் இருவரும் வெளிநாடு சென்றிருந்ததால் அவர்கள் திரும்பி வந்ததும் முதல் வேலையாக பெங்களூர் சென்றுவிட வேண்டும் என்று முடிவுடன் இருந்தாள்…. அந்தளவுக்கு நிர்மலாவின் ஆட்டம் எல்லைமீறி போய்க் கொண்டிருந்தது…

பார்க்கும் நேரமெல்லாம் அவளுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார்….. அவருடைய அக்காவை பற்றியும் அக்காவின் குடும்பத்தை பற்றியும் அவர்களது அருமை பெருமைகளை பாடம் எடுப்பது வேறு…
அது போதாதென்று இறுதியாக இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதியை விவாகரத்து செய்துவிட்டு ஆர்யாவை திருமணம் செய்வது பற்றி அவளிடம் பேச ஆரம்பிக்க நித்திலாவுக்கு வந்த ஆத்திரத்தில் பாட்டியை பயங்கரமாக திட்டிவிட்டாள்…. அதன்பிறகு இன்னும் அவருடன் பேசவில்லை…


ஆதியின் விடயத்தில் அவளது மனம் எந்த குழப்பமும் இல்லாமல் மிகவும் தெளிவாக இருந்தது… நிச்சயமாக அவளுடைய கணவன் அவளை தவிர வேறு எந்த பெண்ணையும் மனதால்கூட நினைத்துப் பார்க்கமாட்டான்…

அவனுடைய இந்த செயலுக்கு பின்னால் ஏதாவது வலுவான காரணம் இருக்கும்… அதனால்தான் அவனை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கியருக்கிறாள்.. அன்று அவள் சாரதாவை திரும்ப அழைத்து வந்தது கூட அவர்களை வீட்டை விட்டு விரட்டுவதற்காக அவன் மேலும் மேலும் எதையாவது பேசி சாரதாவை காயப்படுத்தி விடுவான் என்பதால்தான்….

ஆனால் அதையும் நிர்மலா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாரதாவின் மனதையும் கரைத்துக் கொண்டிருந்தார்…. பாட்டியின் பைத்தியகார தனத்தை நினைத்து நித்திலாவுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை…..

வெகுநேரம் தோட்டத்திலேயே உட்கார்ந்திருந்தவள் நிர்மலா சூரஜுடன் காரில் ஏறி கிளம்புவதை கண்டதும்தான் நிம்மதி பெருமூச்சுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்….

நிர்மலா நேராக தன் அக்கா வீட்டுக்கு சென்றவர் பேத்தியை பற்றி கூறி புலம்ப ஆரம்பித்துவிட்டார்….

“என்ன நிர்மலா நீ… உன் புருஷன் புள்ளைங்க யாரும் உன் பேச்சுக்கு மறு பேச்சு பேசாம அப்படியே கேட்டுக்கும்போது,, நித்திலா சின்னபொண்ணு அவ மனச உன்னால மாத்த முடியலையா…..” தங்கையை அதிருப்தியுடன் பார்த்தார் சகுந்தலா….

“நான் எவ்வளவோ பேசி பார்த்துட்டேன் கா… என் பேச்சை கேக்கவே மாட்டேங்கிறா….”

அக்கா, தங்கை இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் சூரஜ்… அவன் இப்போதெல்லாம் பாட்டியுடன்தான் சுற்றுவது… அப்படி சுற்றியதால்தான் அவனால் நிறைய விடயங்களை தெரிந்து கொள்ளவும் முடிந்தது…

“பாட்டி…” என்று சகுந்தலாவை அழைத்தவன் “நீங்க வேணும்னா நித்திலாகிட்ட பேசி பாருங்களேன்…. நீங்க பேசினா அவ கண்டிப்பா புரிஞ்சிக்குவான்னு நினைக்கிறேன்…” என்றான்…

சகுந்தலா யோசனையுடன் அவனை நோக்க உடனே நிர்மலா “ஆமாக்கா… ஒருவேள நீங்க பேசினா அவ புரிஞ்சிக்குவா… நீங்க அவகிட்ட ஒருதடவ பேசி பாருங்கக்கா….” என்றார்…

“என்ன நிர்மலா புரியாம பேசுற…. நான் எங்கேன்னு போய் உன் பேத்திகிட்ட பேசுறது…. என்னால உன் வீட்டுக்கெல்லாம் வர முடியாது….” சகுந்தலா…

“நீங்க வரவேண்டாம் பாட்டி….” என்றான் சூரஜ் “நித்துவ இங்க வர வைப்போம்…. நான் போய் கூட்டிட்டு வரேன்…. நீங்க பேசுங்க….”

நிர்மலா முகம் மலர பேரனை பார்த்தார்…. மாமா மகள் மீது அவனுக்கு எவ்வளவு அக்கறை என்று நினைத்தவர் உள்ளம் பூரிக்க “ஆமாக்கா…. சூரஜ் போய் கூட்டிட்டு வந்துடட்டும்… நீங்க அவளுக்கு புரியுற மாதிரி எடுத்து சொல்லுங்க….” சகுந்தலாவிடம் சொன்னார்….

“அப்படியா சொல்ற…??? ஆனா அவ மறுத்துட்டா நான் ரொம்ப எல்லாம் வற்புறுத்த முடியாது… அதையெல்லாம் நீதான் பார்த்துக்கனும்… நான் ஒருதடவ சொல்லி பார்க்கிறேன்… அவ்வளவுதான்….” என்றார் சகுந்தலா..

“அதுவே போதும் கா….” என்றவர் பேரனிடம் திரும்பி “சூரஜ் நீ கிளம்பு… வீட்டுக்கு போய் நான் சொன்னேன்னு நித்திலாவ கூட்டிட்டு வா….” என்க “பாட்டி அவ என்கூட வருவாளோ தெரியாது…. நான் வீட்டுக்கு போனதும் கால் பண்ணி அவகிட்ட தரேன்…. நீங்களே சொல்லுங்க….” என்றான்….

நிர்மலா “சரிப்பா…. நான் சொல்றேன்….” என்க சூரஜும் வீட்டுக்கு பயணமானான்….

அவன் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் ஆண்கள் யாரும் இருக்கவில்லை… நேராக நித்திலாவின் அறையை நோக்கி சென்றவன் கதவை தட்டினான்….

நித்திலா கணவன் நினைவில் மூழ்கியிருந்தவள் கதவு தட்டப்படவும் எழுந்து சென்று பார்க்க அங்கு சூரஜ் நின்றிருந்தான்… அவளுக்கு சௌர்யாவின் தம்பி என்பதை தவிர அவனை பற்றி வேறு ஒன்றுமே தெரியாது…. சௌர்யாவும் தன் தம்பியை பற்றி அவளிடம் எதுவும் சொன்னதில்லை…. அவன் சொல்ல விரும்பவில்லை என்பதுதான் உண்மை…

“என்ன??” என்றாள் நித்திலா அவனிடம் கேள்வியாக…

“பாட்டி லைன்ல இருக்காங்க….” என்றபடி தன்னுடைய ஃபோனை அவளிடம் நீட்டினான் சூரஜ்….

அவனிடம் மறுக்க முடியாமல் வாங்கி காதில் வைத்தவள் “சொல்லுங்க….” என்றாள் ‘பாட்டி’ என்ற வார்த்தையை தவிர்த்து…

அவர் தன் அக்கா வீட்டுக்கு வருமாறு கூற அதில் கடுப்பானவள் “எதுக்கு…” என்றாள் கோபமாக….

“அக்கா உன்கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொல்றாங்க…. சூரஜ் கூட கிளம்பி இங்கே வா….” நிர்மலா சொல்ல “முடியாது….” என்று மறுக்க நினைத்தவள் பின்பு “சரி வரேன்…” என்றாள்…

அவளை பொறுத்தவரை பாட்டியிடம் இனி எதையும் பேசி பயனில்லை என்பது புரிந்துவிட்டது…. அதனால் நேரடியாக சகுந்தலா முன்னிலையிலே அக்கா, தங்கை இரண்டு கிழவிகளுக்கும் நன்றாக உறைக்கும்படி பேசிவிட்டு வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் கிளம்பினாள் நித்திலா…

செல்லும்போது விஜயா எதிரில் வர சூரஜுடன் சகுந்தலா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாள்…

அவளுக்காக கார் கதவை திறந்துவிட்டவன் நித்திலா ஏறி உட்கார்ந்ததும் மறுபக்கம் வந்து காரை கிளப்பினான்….

வேகமாக கார் சென்றுகொண்டிருக்க அங்கு சென்றதும் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று மனதுக்குள் யோசித்துக் கொண்டு வந்தவள் “நித்திலா….” என்று சூரஜ் அழைக்கவும் அவன்புறம் திரும்பினாள்…

மறுநொடியே நித்திலா மூர்ச்சையாகி சீட்டில் சரிய அவள் மூக்கில் சற்று நேரம் எதையோ அழுத்தி பிடித்து கொண்டிருந்தவன் அவள் நன்றாக மயங்கியதும் தனது ஃபோனை ஆஃப் செய்து சாலையில் வீசியெறிந்தவன் தன்னிடமிருந்த மற்றொரு ஃபோனை எடுத்து ஆன் செய்து யாருக்கோ அழைத்தான் “என் மாமா பொண்ண தூக்கியாச்சி குரு…..” என்றான்…..

பின்பு ஆளரவமில்லாத ஓரிடத்தில் சென்று காரை நிறுத்த அங்கு இன்னொருவன் இவனுக்காக காத்திருந்தான்…. இவனது காரை அங்கு விட்டுவிட்டு மற்றவன் காரில் மயங்கி கிடந்த நித்திலாவை தூக்கி போட்டுக்கொண்டு இருவரும் பயணமானார்கள்…

நீண்ட நேர பயணத்திற்கு பின் காட்டுப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் முன் காரை நிறுத்தினார்கள்… மற்றவன் வீட்டு கதவை திறந்துவிட நித்திலாவை உள்ளே தூக்கி சென்றான் சூரஜ்…. அங்கிருந்த படுக்கையறை கட்டிலில் நித்திலாவை கிடத்தியவன் “ஏதாவது கயிறு இருந்தா கொடு குரு இவ கைய கால கட்டி போட்டு வைக்கலாம்….” என்றான்…

“அதெல்லாம் வேணாம் சூரஜ்… அவ கண் முழிக்கவே டென் ஹவர்ஸ்க்கு மேல ஆகிடும்… அப்படியே கண் முழிச்சாலும் நகர கூட முடியாது….” என்றான் குரு….


பின்பு சூரஜ் அந்த வீட்டை சுற்றி பார்வையிட்டவன் “இது உன்வீடா??” என்றான் கேள்வியாக…

“இல்ல…. என் ஃப்ரென்ட் வீடு….”

“ஓஹ்…. ஒன்னும் ப்ராப்ளம் ஆகாதுல… உன்ன நம்பித்தான் இவள தூக்கிட்டு வந்திருக்கேன்….” சொல்லிக் கொண்டே அங்கிருந்த கப்போர்டை திறந்தவன் உள்ளே விதவிதமான மது பாட்டில்கள் அடுக்கப்பட்டிருக்க அவற்றில் தனக்கு விருப்பமானவற்றை கையிலெடுத்துக் கொண்டு வந்தவன் அங்கிருந்த ஷோபாவில் உட்கார்ந்து ஊற்றி குடிக்க ஆரம்பித்தான் சூரஜ்…..

“நீயும் வா குரு….” என்று குருவை அழைக்க “நான் இந்த டைம்ல குடிக்கமாட்டேன்…. நைட்லதான் குடிப்பேன்….” என்று மறுத்துவிட்டான் அவன்….

“நான் நினைக்கிற நேரமெல்லாம் குடிப்பேன்……” என்ற சூரஜ் தன் பாட்டுக்கு குடித்துக் கொண்டிருக்க மற்றவன் அவனுக்கு எதிரிலிருந்த ஷோபாவில் வந்து உட்கார்ந்து கொண்டான்…..

திறந்திருந்த கதவின் வழியாக கட்டிலில் கிடந்த நித்திலாவை பார்த்தவன் “எப்படி இருக்கா பார்த்தியா என் மாமா பொண்ணு… இல்லயில்ல…. ஆதிதேவ் பொண்டாட்டி….” என்றான் குழறலாக “இவள பேசிட்டேன்னு அன்னைக்கு என்னை எப்படி அடிச்சான் தெரியுமா….. அப்பவே முடிவுபண்ணிட்டேன் இவள தூக்கனும்னு…..”

ஒரு அளவே இல்லாமல் அவன் இஷ்டத்துக்கு ஊற்றி ஊற்றி குடித்துக் கொண்டு அவளை கொச்சையாக வர்ணித்து அவன் பேசிக் கொண்டிருக்க மற்றவன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்….

“என் ஆசை தீர்ர வரைக்கும் இவள அனு அனுவா அனுபவிச்சி அதையெல்லாம் அந்த ஆதிக்கு வீடியோ ரெக்கார்ட் பண்ணி அனுப்பிவிடனும்….. அதை பார்த்ததும் அவன் மூஞ்சி எப்படி மாறும்…..” என்று நினைத்து சிரித்தவன் பின்பு தீவிரமாக “கண்டிப்பா இவள தேடி வருவான் குரு…. அப்படி வந்தான்னா அவன என் கையாலயே துடிக்க துடிக்க கொலை பண்ணனும்…. பண்ணலாம்ல?? சொல்லு குரு…. உன்ன நம்பித்தான் அவன கொலை பண்ற வரைக்கும் ப்ளான் போட்டு வெச்சிருக்கேன்…. அவன கொன்னுடலாம்ல…..”

போதையில் கேட்டுக் கொண்டிருந்தவனை நோக்கிய மற்றவன் “ம்ம்ம் கொன்னுடலாம்….. முதல்ல உன்ன…. அப்புறம் உங்க அண்ணன…..” கூறியபடி மது பாட்டில் ஒன்றை எடுத்து சூரஜின் தலையிலேயே அடிக்க இரத்தம் வழிய மயங்கி சரிந்தான் சூரஜ்…..

எழுந்து வந்து மயங்கி கிடந்தவனை தரதரவென இழுத்து சென்று அங்கிருந்த இன்னொரு அறைக்குள் போட்டு பூட்டியவன் நித்திலா இருந்த அறையை நோக்கி சென்றான்….

மயங்கி கிடந்தவளை பார்த்துவிட்டு தன்னுடைய ஃபோனை எடுத்து அழைத்தவன் மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் “அர்ஜுன் சிஸ்டர நம்ம இடத்துக்கு கொண்டு வந்தாச்சு…. நீ கிளம்பி வா…..” என்றான் அத்தனை நேரம் குரு என்று சூரஜினால் அழைக்கப்பட்ட குருப்ரசாத்…




தொடரும்……..




படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்….


 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 41:





“உன்னை யாரு நித்திலாவ சூரஜ்கூட உங்க அக்கா வீட்டுக்கு வர சொல்ல சொன்னது… உனக்கு அவன பத்தி ஏதாவது தெரியுமா முட்டாள்….” மனைவியை திட்டிக் கொண்டிருந்தார் விஸ்வநாதன்….

வாழ்வில் இன்று திட்டியதுபோல் என்றைக்குமே அவர் இப்படி திட்டியதில்லை… முந்தானையால் வாயை மூடியபடி அழுது கொண்டிருந்தார் நிர்மலா… கணவர் திட்டிக்கொண்டிருப்பது கூட அவருக்கு உறைக்கவில்லை… பேத்திக்கு என்னவானதோ என்று மனம் அடித்துக் கொண்டிருந்தது…. அதுவும் இப்படி ஆனதற்கான தானும் ஒரு காரணம் என்ற நினைவு அவரை மேலும் குற்றுயிராக்கிக் கொண்டிருந்தது….

நித்திலாவை அழைத்துவர சொல்லி சூரஜை அனுப்பி வைத்தவர் வெகுநேரம் காத்திருந்தும் அவர்கள் வராததால் சூரஜுக்கு அழைத்துப் பார்த்தார் அவனது ஃபோன் ஆஃப் செய்யப்பட்டிருந்து…

நித்திலாவின் நம்பருக்கு அழைக்க அதுவும் ஆஃப் செய்யப்பட்டிருந்தது… எதுவோ சரியில்லை என்று உணர்ந்தவர் விஜயாவுக்கு அழைத்து கேட்க…. “என்ன அத்தை சொல்றீங்க… நித்துவும் சூரஜும் கிளம்பி ரெண்டு மணி நேரத்துக்கும் மேல ஆகுது…. இன்னுமா அங்க வந்து சேரல….” என்றாள்….

அப்போதே நிர்மலாவுக்கு பதட்டம் பிடித்துக் கொண்டது… ஆனால் சகுந்தலாதான் அப்படி ஒன்றும் இருக்காது… ஏதாவது டிராபிக்கில் மாட்டியிருப்பார்கள் அல்லது சூரஜுக்கு இங்குள்ள சாலைகள் பழக்கமில்லாததால் வழி மாறி சென்றிருப்பான்…. இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் என்று நிர்மலாவை சமாதானப்படுத்தி வைத்திருந்தார்….

ஆனால் நேரம் சென்றதே ஒழிய சூரஜும் வரவில்லை நித்திலாவும் வரவில்லை… இறுதியில் நிர்மலா வீட்டுக்கு கிளம்பி சென்றபோது அங்கு ஏற்கனவே விஜயா கருணாகரனிடம் விடயத்தை கூறியிருந்ததால் அவர்கள் அப்போதே நித்திலாவை தேட ஆரம்பித்து விட்டிருந்தனர்….

அவரை கண்டதும் “அம்மா நீங்களா நித்துவ சூரஜ் கூட போக சொன்னீங்க??” என்று கேட்டான் கருணாகரன்…

“ஆமாப்பா… அக்கா நித்துகிட்ட பேசனும்னு சொன்னாங்க… அதான் அவன கூட்டிட்டு வர சொல்லி சொன்னேன்…” என்றார் தான் ஏதோ பெரிய குற்றத்தை செய்து விட்டது போல் அவர் மனம் அப்போதே உணர ஆரம்பித்திருந்தது…. அதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்தது கருணாகரன் அடுத்தது பேசியது…

“ஏன்மா இப்படி செஞ்சீங்க… உங்களுக்கு அவன பத்தி என்ன தெரியும்… அவன் ஆள் சரியில்லமா….” என்றவன் சூரஜை பற்றி ஒருசில விடயங்களை கூற,,,

“அவன் செய்யாத தப்பே இல்லம்மா… ட்ரக்ஸ் பழக்கத்துல இருந்து பொண்ணுங்க,, பசங்கன்னு ஒருத்தரையும் விட்டு வைக்கிறதில்ல… அமெரிக்கால பக்கத்து வீட்டு சின்ன பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பண்ணான்னு அவங்க கேஸ் போட்டு மாப்பிள்ளையும் சௌர்யாவும் அந்த குடும்பத்துக்கு கோடி கணக்குல பணம் கொடுத்துதான் அந்த விஷயத்த பெரிசு பண்ணாம மூடி மறைச்சாங்க.. இதெல்லாம் உங்களுக்கும் மத்தவங்களுக்கும் தெரிஞ்சா வருத்த படுவீங்கன்னு நாங்க சொல்லாம விட்டதுதான் இப்ப ரொம்ப பெரிய தப்பா போச்சு…. அவன் இங்க வர்ரான்னு தெரிஞ்சப்பவே நானும் தானாவும் அவன் மேல ஒரு கண்ணு வெச்சிட்டு தான் இருந்தோம்…. அவன் பசங்க யார் பக்கமும் போகாம உங்ககூடவும் சந்திரா கூடவும் சுத்திட்டு இருந்ததாலதான் கொஞ்சம் கேர்லஸ்ஸா இருந்துட்டோம்…”

அவ்வளவுதான் நிர்மலா பயத்தில் உறைந்து போனார்…. அடுத்து வீட்டுக்கு வந்து சேர்ந்த விஸ்வநாதன் கண்மண் தெரியாமல் நிர்மலாவை திட்ட ஆரம்பித்துவிட நிர்மலா வாயே திறக்கவில்லை….




########################






தன் முகத்தில் யாரோ தண்ணீரை அடித்துக் கொண்டிருக்க மிகவும் சிரம்ப்பட்டு விழிகளை திறந்து பார்த்தான் சூரஜ்… தன் எதிரில் கொலைவெறியுடன் உட்கார்ந்திருந்த புதியவனை கண்டு அவனுக்கு உள்ளுக்குள் கிலி பரவியது…

“என்ன அர்ஜுன் எழுந்துட்டானா…..” என்னு ப்ரசாத்தின் குரல் அறை வாசலில் கேட்க “ம்ம்ம்….” என்றான் அர்ஜுன்…

வலியெடுத்த தலையை கூட பொருட்படுத்தமல் எழுந்து உட்கார்ந்தவன் “டேய் யார்டா நீங்கல்லாம்…..” என்று கத்தினான் சூரஜ்…

“ஆ…. உங்கப்பன்டா….” என்றவன் அவனை அடித்து துவைக்க ஆரம்பித்தான் அர்ஜுன்….

அவனை எதிர்க்க முயன்று முடியாமல் இறுதியில் அர்ஜுன் காலை பிடித்துக்கொண்டு கதறினான் சூரஜ்….

“ப்ரோ…. என்னை விட்டுடுங்க ப்ரோ…. உங்களுக்கு அவதானே வேணும்…. நீங்க ரெண்டு பேரும் அவள என்ன வேணா பண்ணிக்கோங்க… நான் யார்கிட்டயும் எதுவும் சொல்லமாட்டேன்….. என்னை மட்டும் விட்டுடுங்க ப்ரோ…..” அவன் கெஞ்ச கெஞ்ச அர்ஜுனின் வேகம் இன்னும் அதிகரித்தது…

“உன்கூட நம்பி வந்த பொண்ண தூக்கிட்டு வந்துட்டு இப்ப உயிர் பிச்சை கேக்குறியா…..” சொல்லி சொல்லி அடித்தவன் “ப்ரசாத்….” என்று சத்தம்போட சற்று நேரத்தில் கையில் ஒரு சட்டியை தூக்கிக் கொண்டு வந்தான் ப்ரசாத்….

முகமெல்லாம் வீங்கி இரத்தம் வழிய தரையில் சுருண்டு கிடந்தான் சூரஜ்….. அவனை நோக்கி குனிந்தவன் “அவன் கைல இருக்கிறது என்ன தெரியுமா???” கேட்டான் அர்ஜுன்.. “எண்ணெய்டா….”

சூரஜ் கண்களில் மரண பயத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருக்கும்போதே “ப்ரசாத் கழட்டுடா இவன் பேன்ட்ட…” என்றான் உறுமலாக…

“நோ… நோ…. ப்ரோ என்ன விட்டுடுங்க ப்ளீஸ்…. ஐ பெக் யூ…” சூரஜ் கதறிக் கொண்டிருக்க ப்ரசாத் அர்ஜுன் சொன்னதுபோல் அவனது பேன்ட்டை கழற்றிவிட்டு வந்தவன் கத்திக்கொண்டிருந்த சூரஜின் வாயில் தன் ஷூ காலை வைத்து மிதிக்க அவனது சத்தம் வெளியில் வராமல் அடங்கிப்போனது…..

“இனிமேல் நித்திலா இல்லடா…. வேற எந்த பொண்ணையும் நீ கற்பனை கூட பண்ணி பார்க்க கூடாது…..” சொல்லிக் கொண்டே அவனது ஆண்மையில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை ஊற்றினான் அர்ஜுன்….

உயிர்வலியில் துடித்துக் கொண்டிருந்தவனை திருப்தியுடன் பார்த்தவன் “ப்ரசாத்…. இவன் உயிர் மட்டும் போயிட கூடாது… இவன் சாகுற வரைக்கும் இதை நினைச்சி நினைச்சி கதறனும்….” என்றவன் அந்த அறையை விட்டு வெளியேறினான்….

நித்திலா இருந்த அறைக்குள் வந்தவனின் விழிகளில் அத்தனை நேரம் இருந்த கடுமை மாறி மென்மை குடிகொண்டிருந்தது… மயக்கம் தெளியாமல் உறங்கிக் கொண்டிருந்தவளை காதலுடன் பார்த்தவன் விலகிக் கிடந்த அவளது துப்பட்டாவை சரி செய்துவிட்டு பெட்சீட்டை எடுத்து அவள் மீது போட்டுவிட்டான்…

அவன் முதன்முதலில் பார்த்தபோது இருந்த அதே கள்ளம் கபடமில்லா குழந்தை முகம்…. இந்த முகம்தானே அவனை ஈர்த்தது… நான்கு வருடங்களாக அவளை மனதில் சுமந்து கொண்டிருக்கிறான்…. தனக்கு கிடைக்காமலே போய்விடுவாள் என்று நினைத்திருந்தவள் இப்போது கையருகில் இருந்தபோதும் அதற்காக சந்தோசப்பட முடியாமல் ஏதோ ஒரு உணர்வு அவன் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது…





#############################






அதே சமயம் இன்னொரு பக்கம் நித்திலாவை தேடி ஊரையே இரண்டாக்கிக் கொண்டிருந்தான் ஆதி…. நித்திலாவை காணவில்லை என்று அவனுக்கு தெரிவிக்கப்பட்டதுமே அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னையில் இருந்தான்….

“வீட்டு பொண்ணுங்கள கவனிக்காம அப்படி என்னத்த புடுங்கிட்டு இருந்தீங்க??” தாத்தாவையும் மற்ற ஆண்களையும் சத்தம் போட்டவன் போலிசை மட்டும் நம்பி பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்து தன்னுடைய ஆட்கள் ப்ரைவேட் இன்வெஸ்டிகட்டர்கள் என்று நித்திலாவை தேடும் பொறுப்பை ஒப்படைக்க ஐந்து மணிநேர தீவிர தேடுதல் வேட்டையின் பின் சூரஜின் அலைப்பேசி மற்றும் அவனது கார் இரண்டையும் கண்டுபிடித்திருந்தனர்….

ஆனால் அதற்கு மேல் பெரிதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை… அவனது ஃபோனிலும் காரிலும் கூட பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இருக்கவில்லை…


ஆதியின் நிலை நிமிடத்துக்கு நிமிடம் மோசமாக மாறிக்கொண்டிருந்தது… அவனிடம் பேசவே யாருக்கும் பயமாக இருந்தது… அப்போதைக்கு ஜெகன் மற்றும் கமிஷனர் வீரேந்தர் இருவர் மட்டும்தான் ஆதியிடம் பேச முடிந்தது… மற்ற எவரும் அவனை நெருங்கவே முடியவில்லை…

போலிஸ் தரப்பில் நிச்சயமாக சூரஜ் இதனை தனியாக செய்திருக்கமாட்டான்,, அவனுக்கு பின்னால் வேறு யாரோ இருந்திருக்க வாய்ப்பு அதிகம் என்றார்கள்…

ஆனால் சூரஜ் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன் அவனுக்கு இங்கு விஸ்வநாதன் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் தெரிந்தவர்களோ நண்பர்களோ கிடையாது…. அப்படியிருக்கும்போது யார் அவனுக்கு உதவி செய்திருக்க முடியும்..

அடுத்து சூரஜ் எங்கெல்லாம் தன்னுடைய கார்டை பயன்படுத்தியிருக்கிறான் என்று தேடிப்பார்த்தார்கள்… ஒரு பிரபலமான ஹோட்டலில் அடிக்கடி பயன்படுத்தியிருப்பது தெரிய அங்குள்ள சிசிடிவி காட்சிகளை செக் செய்து பார்த்தனர்…

அதில் ஒருவனுடன் வெகுநேரம் பேசிக் கொண்டிருப்பது பதிவாகியிருக்க அந்த நபர் யார் என்னவென்று விசாரித்துக் கொண்டிருந்தனர்… ஆதி கமிஷனரிடம் பேசிக்கொண்டிருக்க மூச்சுவாங்க ஓடி வந்த ஜெகன் “தேவ் பாய் உங்கள பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க… நித்திலாவ எங்கேன்னு தெரியும்னு சொல்றாங்க….” என்றான்…

வீரேந்தரும் ஆதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்…
அவர்கள் சென்றுபார்த்தபோது அங்கு ஒரு ஆணும் பெண்ணும் உட்கார்ந்திருந்தனர்…. இவர்களை கண்டதும் எழுந்து நின்ற அவன் “வணக்கம் சார்….. என் பேர் சிவா…. இது என் தங்கச்சி மீரா…..” என்றான்….







###########################






ப்ரசாத் மற்றும் சூரஜின் முதல் சந்திப்பு ஆதி, நித்திலாவின் ரிசப்ஷன் அன்றுதான் நிகழ்ந்தது…. அன்றொருநாள் ஆதி அவனை அடித்து கண்ணில் படக்கூடாது என்று சொன்னபிறகு அவனை கைகொடுத்து எழுப்பிவிட்ட சந்திரலேகா அவனை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டவள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதற்காக ஆதியை நீ பழிவாங்கியே ஆக வேண்டும் என்று ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தாள்….

ஆனால் அவன் ஆதி மீது இருந்த பயத்தின் காரணமாக ஆதி இருக்கும் திசைப்பக்கம் கூட செல்லவில்லை… அப்படித்தான் ரிசப்ஷனுக்கு குடும்பத்தினர் அனைவரும் மும்பை கிளம்பிவிட இவன் மட்டும் சென்னையில் தங்கிவிட்டான்….

அன்றிரவு இவன் பாரில் உட்கார்ந்து கொண்டு நித்திலாவின் ரிசப்ஷன் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்க அங்குதான் அர்ஜுனும் அதே வீடியோவை பார்த்தபடி குடித்துக் கொண்டிருந்தான்…

கிளம்பி செல்லும் நேரத்தில் அர்ஜுனின் நண்பர்களுக்கும் சூரஜுக்கும் ஏதோ தகராறு ஏற்பட ப்ரசாத் தான் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்… அவனை பார்த்ததுமே நித்திலாவின் உறவுக்காரன் என்பதை புரிந்து கொண்ட ப்ரசாத் அவனுடன் நட்பு பாராட்டி பழகவும் அவனுக்கும் இவனை பிடித்துவிட்டது… அப்படித்தான் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது….

அதன்பிறகு சூரஜ் அமெரிக்கா சென்றுவிட ப்ரசாத் அவனுடன் அவ்வப்போது பேசுவது, மெஸேஜ் அனுப்புவது என்று தொடர்பில்தான் இருந்து கொண்டிருந்தான்…


நித்திலா ஊருக்கு வந்தவள் மும்பைக்கு திரும்பாமல் இருந்ததும் மித்ராவின் திடீர் வருகையும் சந்திரலேகாவுக்கு ஏதோ சந்தேகத்தை கிளப்ப உடனே சூரஜுக்கு அழைத்து விடயத்தை கூறினாள் அவள்…. அவனும் சௌர்யாவை நித்திலாவுடன் பேசுவதை ஒட்டுக்கேட்டு ஆதிக்கும் நித்திலாவுக்கும் பிரச்சினை என்பதை கண்டுகொண்டவன் மித்ரா கிளம்பும்வரை காத்திருந்து அவள் சென்றதும் அவனும் வந்து சேர்ந்துவிட்டான்….

சந்திரலேகாவுடன் சேர்ந்து ஆதி நித்திலா வாழ்க்கையில் குழப்பம் விளைவிக்க திட்டம்தீட்டிக் கொண்டிருந்தபோதுதான் அவன் மீண்டும் ப்ரசாத்தை சந்தித்தான்…

ப்ரசாத்தும் எடுத்தவுடன் ஆதியை பற்றியோ அவனது குடும்பத்தை பற்றியோ ஒன்றும் கேட்டுவிடவில்லை… அவனுக்கு சந்தேகம் வந்துவிட கூடாது என்பதற்காக சாதாரணமாகவே பழகிக் கொண்டிருந்தான்…

ஆதி, ஜீவிகா விடயம் மீடியாக்களில் வெளியாக ஆரம்பித்த சமயத்தில்தான் சூரஜிடம் மெல்ல ஆதியின் பேச்சை ஆரம்பித்தான்…. அவனும் ஆதியின் மேல் இருந்த பலநாட்களாக ஆத்திரத்தில் இருந்தவன் தன் நண்பன் கேட்டதும் தனக்கு தெரிந்தது தெரியாதது என அனைத்தையும் உளறிக்கொட்டிவிட,,

“என்னது அவன் பொண்டாட்டிய பத்தி நீ சும்மா ஒரு வார்த்த பேசினதுக்கு உனக்கு அந்த அடி அடிச்சானா?? அவன நீ சும்மாவா விட்ட மச்சி??” என்று ஆரம்பித்த ப்ரசாத் பேசிப்பேசியே அவனை நன்றாக ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தான்…

ஏற்கனவே ஆதியின்மேல் பழிவெறியுடன் அவனை எப்படி பழிதீர்ப்பது என்று யோசித்துக் கொண்டு சுற்றித்திரிந்தவன் ப்ரசாத் தனக்கு சாதகமாக பேச ஆரம்பித்ததும்,,

“ஆமா குரு… அவன ஏதாவது பண்ணனும்… ஆனா எப்படி என்ன பண்றதுதான் தெரியல…” என்றான் சூரஜ்…

“நீ கவலையே படாத மச்சி… நான் இருக்கேன்ல அவன ஒரு கை பார்த்திடலாம்…” ப்ரசாத்…

இப்படி ஆரம்பித்தது…

வெறும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அழகாக திட்டம் போட்டு நித்திலாவை தூக்கிவிட்டார்கள்…


அனைத்தும் செய்து முடித்த பிறகுதான் இதைப்பற்றி அர்ஜுனிடமே கூறினான் ப்ரசாத் … அர்ஜுன் முதலில் தயங்கினான்…

“டேய் இதெல்லாம் வேண்டாம் மச்சி… நித்திலா இதை எப்படி எடுத்துக்குவாளோ தெரியாது…. எனக்கென்னமோ சரியா படலடா…. எதுவா இருந்தாலும் நானே அவகிட்ட பேசி என் லவ்வ புரிய வைக்கிறேன்…. இந்த ஐடியாவ விட்டுடு….” என்றுதான் சொன்னான்….

ப்ரசாத் ஒத்துக்கொள்ளவில்லை….

“நீ எப்ப உன் லவ்வ அவகிட்ட சொல்லப்போற… கிழவன் ஆனதுக்கு அப்புறமா…. நீ இந்த ஜென்மத்துல அவக்கிட்ட லவ்
சொல்லமாட்ட…. ஓஹ்….. ஒருவேள வேற ஏதாவது ப்ளான் வெச்சிருக்கியா மச்சி, உன் பொண்டாட்டி கூட சேர்ந்து வாழனும்னு… அப்படி ஏதாவது…… அந்த மாதிரி ஐடியா இருந்தா இப்பவே சொல்லிடுடா நான் இந்த நித்திலா பக்கமே போகல….”

அதற்குமேல் அர்ஜுன் வாயே திறக்கவில்லை…

“உன் இஷ்டம் ப்ரசாத்….. நித்திலா இதை எப்படி எடுத்துக்குவாளோன்னு தான் பயமா இருக்குடா….” என்றான்….

“அதை பத்தியெல்லாம் நீ எதுவும் யோசிக்காத மச்சி… அந்த ஆதியால அவ ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கா… நீதான் இதுல இருந்து நித்திலாவ வெளிய கொண்டுவரனும் அர்ஜுன்… உன் லவ்வ கண்டிப்பா சிஸ்டர் புரிஞ்சிக்குவாங்க….”

“அதுக்குனு இப்படி கடத்திக்கிட்டு போய் லவ் சொல்லனுமான்னு தயக்கமா இருக்குடா…”

“இப்ப நம்ம தூக்கலைன்னா அந்த சூரஜ் உன் நித்திலாவ தூக்கிட்டு போய் குடும்பம் நடத்திடுவான் பரவாயில்லையா…”

எங்கு அடித்தால் காரியம் நடக்கும் என்று தெரிந்திருந்த ப்ரசாத் இந்த வார்த்தைகளை கூற அதில் ஆத்திரமடைந்த அர்ஜுன் “அந்த நாய முதல்ல கொல்லனும்டா….” என்றான்…

“இரு மச்சான்… அவன வெச்சித்தான் நம்ம காரியத்த முடிக்கனும்”

“சரிடா… நித்திலாவ நம்ம இடத்துக்கு கொண்டுவந்ததும் சொல்லு… அப்புறம் இருக்கு அவனுக்கு….”



தன் நண்பனுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தவன் மீரா அந்தப் பக்கம் வந்ததையோ இவன் பேசுவதை கேட்டு அதிர்ந்து நின்றதையோ அறியவில்லை….

தனக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் சிவா சொல்ல சொல்ல இறுகிய முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் ஆதி…

“அவங்க இப்போ எங்க இருப்பாங்கன்னு ஏதாவது தெரியுமா??” என்று வீரூந்தர் சிவாவிடம் கேட்க “எனக்கு சரியா தெரியல சார்…..” என்றவன் அவர்கள் எங்கெங்கு சென்றிருக்க வாய்ப்பு அதிகம் என்று தான் ஊகித்த இடங்களை கூற உடனே வீரேந்தர் அந்த பகுதிகளில் விசாரிக்குமாறு கட்டளையிட்டார்…

“ஜெகன் உன் ஆளுங்கள வர சொல்லு…..” என்றுவிட்டு ஆதி கிளம்ப அவனை நோக்கி ஓடி வந்தவள் அவன் காலில் விழுந்தாள் மீரா….. தன் தாலியை கைகளுக்குள் ஏந்தி அவனை நிமிர்ந்து பார்த்தவள் “அண்ணா…. அவர எதுவும் பண்ணிடாதீங்கண்ணா….” என்றாள் கண்ணீருடன்….

ஒருநொடி தன் விழிகளை இறுக மூடித்திறந்தவன் “அவன் உயிருக்கு எதுவும் ஆகாது….” அவள் முகம் பார்க்காமல் கூறியவன் தன் வேக நடையுடன் அங்கிருந்து சென்றான்….






##########################




நித்திலா கண்விழித்து பார்த்தபோது ஏதோ ஒரு புதிய இடத்தில் தான் இருப்பதை உணர்ந்தவள் வேகமாக எழ முயற்சிக்க அவளது உடல் சற்றும் ஒத்துழைக்காததால் தொப்பென்று கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டாள்…

அந்த சத்தத்தில் உள்ளே ஓடி வந்த அர்ஜுன் “நிலா…” என்றபடி அவளை நெருங்கி தூக்கிவிட அவனை புரியாமல் பார்த்தவள் “அர்ஜுன்…..” என்றாள் “நான் எப்படி அர்ஜுன் இங்க வந்தேன்… நீ ஏன் இங்க இருக்க….??? இது எந்த இடம்???” கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்…

“சொல்றேன் நித்திலா…. அதுக்கு முன்னாடி…..” என்றவன் வேகமாகமாக அங்கிருந்து சென்றவன் இரண்டே நிமிடத்தில் உணவுத்தட்டுடன் திரும்பி வந்தான்….

“இதை சாப்பிடுடா….” என்றான் அவளிடம்…

“அர்ஜுன் நான் எப்படி இங்க வந்தேன்னு சொல்லு…. அந்த சூரஜ் எங்க போனான்…. அவன் என் முகத்துல எதையோ….” என்று நியாபகப் படுத்திக் கொண்டிருந்தவள் அருகில் உட்கார்ந்தவன் “நான் சொல்றேன்டா….. நீ முதல்ல சாப்பிடு ப்ளீஸ்….” என்று வற்புறுத்தி உண்ண வைத்தான்…

அவளால்தான் சரியாக சாப்பிட முடியவில்லை… அவளது உடல் சரியான நிலையில் இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்க அவள் சாப்பிட தடுமாறுவதை உணர்ந்து அவன் ஊட்டிவிட்டான்… அவள் மறுக்கவே மீண்டும் சென்று பழங்களை கொண்டு வந்தவன் அதையாவது சாப்பிட சொல்ல கொஞ்சமாக சாப்பிட்டவள் ஓரளவு அவளது உடல் நிலைக்கு வந்ததும் “சொல்லு அர்ஜுன்…. எனக்கு என்னாச்சு?? நான் எப்படி இங்க வந்தேன்??” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க அவள் முகத்தை ஒரு நொடி உற்று நோக்கியவன் பின்பு எழுந்து சென்று ஜன்னல் அருகில் நின்று கொண்டான்….

“அர்ஜுன் சொல்லு ப்ளீஸ்….”

தொண்டையை செருமிக் கொண்டவன் அவள் பக்கம் திரும்பாமலே “நான்தான் நித்திலா சூரஜ் வெச்சி உன்னை இங்க வரவைச்சேன்…..” என்றான்…


“நீயா!!!! ஏன்???” அவளுக்கு அப்போதும் புரியவில்லை….

திரும்பி அவள் முகம் பார்த்தவன் “ஏன்னா…… ஏன்னா நான் உன்ன லவ் பண்றேன்…..” என்க அத்தனை நேரம் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவின் முகம் இப்போது ஏதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டது போல ஒரு மாதிரியாக மாறிப்போனது…..

“என்ன உளர்ர……” என்றாள்….

“உளரல….. உண்மையதான் சொல்றேன்…… நம்ம ரெண்டுபேரும் முதல் முதலா எப்போ பார்த்துக்கிட்டோம்னு உனக்கு நியாபகம் இருக்கா நித்திலா???”

அவர்கள் இருவரும் முதல்முதலாக எங்கு எப்போது சந்தித்தார்கள் என்று அவன் சொல்ல சொல்ல நம்பமுடியாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்….

என்றைக்கோ எப்போதோ பீச்சில் பார்த்த ஒருவன் இப்படி அர்ஜுனாக மாறி நிற்பான் என்று அவள் என்ன கனவா கண்டாள்…. அவளுக்கு அந்த சம்பவமே சுத்தமாக நியாபகத்தில் இல்லை…. அதை மறக்கடிக்கக் கூடிய எத்தனையோ விடயங்கள் அதனை தொடர்ந்து அவள் வாழ்வில் நடந்தேறி விட்டன…. இப்போது இவன் வந்து காதல் என்று பிதற்றிக் கொண்டிருக்கான்…..

“அர்ஜுன் நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்க….. நான் அந்த மாதிரியெல்லாம் உன்னை நினைச்சதே இல்ல…. உன்னை ஒரு நல்ல ஃப்ரென்டா நினைச்சித்தான் உன்கூட பழகினேன்….” என்றாள் அவள் உடனே….

“தெரியும் நீ என்னை ஒரு ஃப்ரென்டாத்தான் பார்க்கிறேன்னு தெரியும்…. ஆனா நான் உன்னை வெறும் ஃப்ரென்டா மட்டும் பார்க்கல நித்திலா….” என்றவன் அவள் அருகில் வந்து அவளது கைகளை பற்றிக் கொண்டவன் “நீ என் உயிருக்கும் மேல நித்திலா…..” என்று தன் காதல் கதையை அவளிடம் கூற ஆரம்பித்தான் திருமணம் உட்பட…

அதைக்கேட்டு நித்திலாவுக்கு தான் அத்தனை கோபம் வந்தது… வீட்டில் மனைவியென்று ஒருத்தியை வைத்துக்கொண்டு தன்னிடம் இப்படி பேசுகிறானே என்று…. முட்டாள் மாதிரி பேசிக்கொண்டிருப்பவனிடம் என்னத்தை சொல்வது என்றும் அவளுக்கு புரியவில்லை….. இவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று மூளையின் ஒரு பக்கம் யோசனை ஓடிக்கொண்டிருந்தது….

“உன்கிட்ட முன்னாடியே என் லவ்வ சொல்லாம விட்டது என் தப்புதான் பேபி…. ஒவ்வொரு தடவையும் உன்கிட்ட சொல்லனும்னுதான் வருவேன்…. ஏதோ ஒரு பயம், தயக்கம்…. சொல்லமலே போயிடுவேன்….. ஒருவேள அப்பவே சொல்லியிருந்தா நம்ம ரெண்டு பேரும் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டி வந்திருக்காது….”

நித்திலாவுக்கு பகீரென்று ஆனது…. இவனென்ன நம்ம ரெண்டுபேர் என்று தன்னையும் கூட்டு சேர்க்கிறான் என நினைத்துக் கொண்டவள் “இதோபார் அர்ஜுன் நீ முதல்லயே லவ் சொல்லியிருந்தாலும் நான் கண்டிப்பா அக்செப்ட் பண்ணியிருக்க மாட்டேன்…. ஏன்னா நான் என் அத்தான லவ் பண்றேன்…. அவர தவிர வேற யாரையும் என்னால நினைச்சி கூட பார்க்க முடியாது அர்ஜுன்….” என்றாள்….

“யாரு அந்த ஆதியா…. அவன பத்திதான் ஊரே பேசுதே….” என்றான் நக்கலாக….

“அர்ஜுன் அது உனக்கு தேவையில்லாத விஷயம்….” கணவனை பற்றி பேசியதும் அவளுக்கு கோபம் வந்துவிட்டது…

“எது தேவையில்லாத விஷயம்… அவன் கண்ட பொண்ணுங்க கூட குடும்பம் நடத்திட்டு இருப்பான்… நீ இங்க அவன நினைச்சி உருகிட்டு இருக்கனுமா….” என்று கோபமாக கூறியவன் பின்பு தணிவான குரலில் “நிலா பேபி பழசையெல்லாம் நம்ம மறந்திடலாம்டா.. நமக்கு யாருமே வேண்டாம்.. இந்த ஆதி,,, மீரா இவங்க யாருமே இல்லாத ஒரு இடத்துக்கு போயிடலாம்... அங்க உனக்கு நான் எனக்கு நீன்னு நம்ம ரெண்டு பேரும் மட்டும் சாகுற வரைக்கும் ஒன்னா சந்தோசமா வாழலாம்...”

‘என்ன பேசுகிறான் இவன்….’ நித்திலாவுக்கு கேட்கவே அருவருப்பாக இருந்தது… அதே சமயம் இவனிடம் சண்டை போட்டு வேலைக்காகாது என்பதை உணர்ந்தவள்,

“அர்ஜுன் நான் சொல்றத கேளு ப்ளீஸ்...” என்க,,

“வேணாம் நிலா.. நீ எதுவும் சொல்லாதே... நீ இல்லைன்னா நான் செத்துடுவேன் பேபி.. உன்மேல உயிரே வெச்சிருக்கேன்..” அவளது கன்னத்தை இரு கரங்களால் தாங்கி கொண்டவன் “மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதே பளீஸ்... நம்ம யார் கண்ணுலயும் படாம எங்கேயாவது போயிடலாம் பேபி...”

அவனது செயலில் பொறுமையிழந்து அவன் கையை தட்டிவிட்டவள் “என்மேல கை வெச்ச நடக்கிறதே வேற….” ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தாள் நித்திலா…. “நானும் எடுத்து சொல்லி புரிய வைக்கலாம்னு பார்த்தா உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே போற… இன்னேரத்துக்கு என் அத்தான் உன்னை கண்டுபிடிக்காம விட்டிருப்பார்னா நினைக்கிற…” என்றாள் சூடாக….

“உன் அத்தான் உன்னை தேடி வருவான்னா நினைக்கிற…” என்றான் அப்படி நடக்கவே நடக்காது என்ற நிச்சயத்துடன்… “அப்படியே வந்தாலும் இது என் இடம் நித்திலா… உன் அத்தான் உள்ள கால் வெச்ச அடுத்த நிமிசமே…..” மேலே கை காட்டிவிட்டு தோளைக் குலுக்கினான் அவன்….

“என்ன மிரட்டுறியா???”

“நான் எதுக்குமா உன்ன மிரட்ட போறேன்… உண்மையதான் சொல்றேன்…. இதுகூட உனக்காகத்தான்… அவன் இருக்கிற வரைக்கும் உன் வாழ்க்கையில சந்தோசமே இருக்காது…..”

நித்திலா எதுவும் பேசாமல் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்….

“நீ என்னை ஏத்துக்கலைன்னாலும் பரவால்ல… ஆனா அந்த ஆதி இதுக்கு மேலயும் உன்ன கஷ்டப்படுத்த நான் விடமாட்டேன் நித்திலா…. அவன் உனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவன்…. கட்டின பொண்டாட்டி இருக்கும்போது இன்னொருத்தி கூட…. சை…..” என்றான் அருவருப்புடன்…. தான் அதைவிட கேவலமான ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அந்த நொடியில் மறந்துதான் போனான் அவன்…..


மீண்டும் அவளை நெருங்கியவன் அவளது வெறித்த பார்வை கண்டு “அப்படி பார்க்காத பேபி… நான் ஒன்னும் வில்லன்லாம் கிடையாது… உன்னை எந்தளவுக்கு லவ் பண்றேன்னு உனக்கு தெரியாதுடி….” என்று கூற “கிட்ட வராதே அர்ஜுன்….” என்றாள் அவள்…..

“ப்ளீஸ் நித்திலா என்னை புரிஞ்சிக்கோடா… நான் வாழ்றதே உனக்காகத்தான்…..”

“கிட்ட வராதே அர்ஜுன்….”

“நான் உன்ன ஒரு தேவதை மாதிரி பார்த்…………” சொல்லிக் கொண்டிருந்தவன் “ஏய் என்னடி பண்ற…..” என்று பதறிப்போய் அவளை தொடப்போக…. “என் புருஷன தவிர வேற யார் என்னை நெருங்கனும்னு நினைச்சாலும் இதுதான் அர்ஜுன் நடக்கும் …” என்றவள் அவன் பழம் வெட்டுவதற்காக கொண்டு வந்திருந்த கத்தியை எப்போது எடுத்தாளோ…. மீண்டும் மீண்டும் தன் கையை அறுத்துக் கொண்டாள்….

ஏற்கனவே நடந்திருந்த சம்பவங்களால் மிகுந்த மன அழுத்ததில் இருந்தவள் அர்ஜுனின் செயல் அவளை இன்னும் கோப படுத்த எல்லாம் சேர்ந்து அவளை இப்படியொரு காரியத்தை செய்ய வைத்துவிட்டது….

அதை சற்றும் எதிர்பார்க்காத அர்ஜுன் அதிர்ந்துபோய் நின்றிருக்கும்போதே அந்த அறையின் கதவை இடித்து தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஆதி…

அர்ஜுனை கண்டதும் அவன்மீது பாய்ந்தவன் கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பிக்க அவன் எதையோ சொல்லவந்தபோது கூட விடாமல் புரட்டியெடுத்துவிட்டான்…. அர்ஜுன் திருப்பி அடிக்கவும் இல்லை… அடிக்க முயற்சிக்கவும் இல்லை… ஆதியின் அத்தனை அடிகளையும் தாங்கிக் கொண்டவன் “நித்திலா….” என்று அவள் பக்கம் கைநீட்ட “அவ பெயர சொல்லாதடா….” என்று உறுமியவன் அர்ஜுனின் வாயிலேயே அடித்தான்….

தன் ஆத்திரம் தீரும்வரை அவனை அடித்து முடித்தவன் “உன் வொய்ஃப் உன்னை எதுவும் பண்ணிட கூடாதுனு என் கால்ல விழுந்து கெஞ்சினா….. அந்த பொண்ணுக்காக உன் உயிர விட்டுட்டு போறேன்…..” என்றான்……

அவன் அதை வேண்டுமென்றுதான் சொன்னான்…..

அது சரியாக சென்று தாக்க மீரா தனக்காக இன்னொருவன் காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறாள் என்ற உணர்வை ஜீரணித்துக் கொள்ள முடியாதவனாக மெல்ல மெல்ல நினைவிழந்தான் அர்ஜுன்…

அதன்பிறகுதான் நித்திலாவின் புறம் திரும்பிய ஆதி கையிலிருந்து இரத்தம் சொட்ட சொட்ட சுவரில் சாய்ந்தபடி தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளை கண்டு பதறிப்போனவன் “நித்திலா…..” என்றபடி அவளை நெருங்கியவன் உடனே அவளது துப்பட்டாவை இழுத்து கையில் இறுக கட்டிவிட்டான்….

அவளை தூக்கிக் கொண்டு வெளியில் வந்த “ஜெகன்…” என்று சத்தமிட வெளியில் ப்ரசாத்தை அடித்து துவைத்துக் கொண்டிருந்த ஜெகன் அவனை விட்டுவிட்டு வந்தவன் ஆதி வண்டியை எடுக்க சொல்லவும் ஓடிச்சென்று காரை எடுத்தான்….

நித்திலாவை தூக்கிக் கொண்டு காரில் ஏறி உட்கார்ந்தவன் தன்னையே இமைக்காமல் பார்த்தபடி இருந்தவளிடம் “ஏன்டி இப்படி பண்ணின….” என்றான் கோபமாக…. ஆனால் அதற்கு மாற்றமாக அவனது கண்களிலிருந்து விழிநீர் வழிந்து கொண்டிருந்தது….

அவள் பதிலேதும் சொல்லாமல் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்…. அவளது மனதில் இருப்பதை அவனும் உணர்ந்திருந்தனோ என்னவோ அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டவன் “நீ இல்லாம நான் மட்டும் எப்படிடீ இருப்பேன்…. உனக்கு ஏதாவது ஆச்சுனா அடுத்த நிமிஷமே நானும் செத்துடுவேன்டி……” என்றான்…




#######################





ஆதியை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தவள் அறைக்குள் சென்று தன் உடமைகளுடன் வெளியே வந்தாள் மீரா… மகனின் விடயம் சிவா கூறியிருந்ததால் இப்படி ஒரு காரியத்தை செய்ய துணிந்திருக்கிறானே என்று நொந்து போய் உட்கார்ந்திருந்தாள் சரஸ்வதி….

மீரா பெட்டி படுக்கையுடன் வருவதை கண்ட சிவா “மீரா எங்க கிளம்பிட்ட??” என்றான் சிவா…

“அண்ணா ப்ளீஸ்….. இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாத சிவாண்ணா… இத்தன நாள் என் தன்மானம், சுயமரியாதை எல்லாத்தையும் விட்டு கொடுத்துட்டுதான் இந்த வீட்டுல இருந்தேன்…. ஆனா இன்னைக்கு நடந்தது….” கண்ணீருடன் அவனை கையெடுத்து கும்பிட்டவள் “என்னை விட்டுடுங்கண்ணா….” என்றாள்…

“அதுக்கில்லம்மா…..” என்று சிவா எதையோ சொல்லவர “வேண்டாம் சிவா அவள விட்டுடு…..” என்றார் சரஸ்வதி….

ஒரு முடிவுடன் மருமகளை நோக்கி வந்தவர் “போயிடு மீராம்மா…. இனிமேல் இந்த வீட்டுல நீ இருக்க வேண்டாம்…. எங்கேயாவது போ…. போய் நிம்மதியா உன் வாழ்க்கைய வாழு….” என்றுவிட்டு தன் அறைக்குள் சென்று எதையோ எடுத்து வந்து அவளிடம் அதனை கொடுத்து “வேண்டாம்னு சொல்லாம எனக்காக இதை வெச்சிக்கோம்மா….” என்றவர் “பத்திரமா போ….” அவளை வழியனுப்பி வைத்தார்…

“அம்மா…. என்னம்மா பண்றீங்க…..” என்று கோபமாக கேட்ட சிவாவிடம் “வேற என்ன பண்ண சொல்ற சிவா…. அந்த பொண்ணு ஒரு அப்பாவி…. உன் ஃப்ரென்ட் அவன என் பையன்னு சொல்லவே வெட்கமா இருக்கு…. அவன் இப்படியொரு காரியத்த செஞ்சதுக்கு அப்புறமும் அவ எப்படிடா அவன்கூட சேர்ந்து வாழ முடியும்…. அவள அவன்கூட வாழ சொல்றதும் ஒன்னுதான் அவ கழுத்த அறுத்து கொன்னு போடுறதும் ஒன்னுதான்… அவ போகட்டும்டா….” என்றார் சரஸ்வதி…

வீட்டை விட்டு வெளியேறி ஒரு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவளுக்கு ஓவென்று கதறி அழ வேண்டும் போல இருந்தது…. ஆனால் அழுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே…. கசப்புடன் நினைத்துக் கொண்டவளது கரங்கள் தன் வயிற்றை தடவிக் கொண்டன…

அந்த வீட்டின் வாரிசு தன் வயிற்றில் வளர்ந்து கொண்டிருப்பதை அறிந்தால் நிச்சயமாக சரஸ்வதி அவளை வீட்டைவிட்டு வெளியேற அனுமதித்திருக்க மாட்டார்…. யாரிடமும் சொல்லாமல் விட்டது நல்லதாகப் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டாள்….

பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்தவள் அங்கு திருநெல்வேலி செல்லும் பஸ்ஸில் ஏறியவள் தன் கையிலிருந்த புகைப்படத்தை பார்த்தாள்…. அவளது வாய் தானாக முனுமுனுத்தது “அம்மா….”






#########################





மருத்துவமனை அறையில் கண்மூடி படுத்திருந்தவளின் கரத்தில் மென்மையாக முத்தமிட்டான் ஆதி…..

“இதுக்கெல்லாம் நான் தகுதியே இல்லாதவன் பேபி…. எனக்காக நீ உயிர விடுற அளவுக்கெல்லாம் நான் நல்லவன் இல்லைடி…. கெட்டவன்…. ரொம்ப ரொம்ப கெட்டவன்…. என்னால நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும்…. இதுக்கு மேலயும் உன்ன கஷ்டப்படுத்த உன் வாழ்க்கையில நான் வரமாட்டேன்… எனக்கு ஒரு கடமை இருக்கு.. அதை முடிச்சிட்டு உன் கண்ணுலயே படாம போயிடுறேன்டி…..”


அவளை விட்டு பிரிய முடியாமல் அடம்பிடித்த மனதை அடக்கிக் கொண்டு வெளியேறியவன் நேராக நிர்மலாவை நோக்கி சென்றான்…

அழுதழுது ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தார் நிர்மலாதேவி… நித்திலாவை அந்த கயவர்களிடமிருந்து காப்பற்றி விட்டார்கள் என்று சந்தோசப்பட முடியாமல் அவள் கையை அறுத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாள் என்ற செய்தியும் சேர்ந்து வர ஆடிப்போய்விட்டார்….

பேத்திக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று அவர் வேண்டாத தெய்வமில்லை… நித்திலாவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்று மருத்துவர் சொன்னபிறகுதான் அவரது உயிரே திரும்ப வந்தது…

ஏதேதோ நினைவில் மூழ்கியிருந்தவர் ஆதி எதிரில் வந்து நின்று “பாட்டி….” என்று அழைக்கவும் தன் நினைவு கலைந்து அவனை பார்த்தவர் ஏதோ பிரம்மை என்று நினைத்துக் கொண்டார்….

ஆதி ஏன் தன்னை அழைக்கப் போகிறான் என்ற எண்ணம் அவருக்கு…

அருகில் இருந்த விஜயாதான் “அத்தை… ஆதி தம்பி உங்களத்தான் கூப்பிடுது…” என்று உலுக்க ‘என்னையா…’ என்று நம்ப முடியாததுபோல் மருமகளை பார்க்க அவளும் “உங்களதான் அத்தை….” என்க பேரன் புறம் திரும்பியவர் அவன் நின்று கொண்டிருப்பதை உணர்ந்து தானும் எழுந்து நின்றார்…

அவனுக்கு பதிலளிக்க வேண்டும் என்று மனம் உணர்ந்தாலும் அவருக்கு பேச வார்த்தை வரவில்லை… பதினைந்தோ இருபதோ எத்தனையோ ஆண்டுகள் கழித்து அவரை தன் வாயால் பாட்டி என்று அழைக்கிறான்….

அவர் எழுந்ததும் பாட்டியின் கரங்களை பற்றிக் கொண்டான் ஆதி… பேரனின் கரங்களுக்குள் நிர்மலாவின் கரங்கள் நடுங்க தொண்டை அடைத்துக் கொண்டது அவருக்கு….

“உங்க பேத்திய எப்படி எடுத்துக்கிட்டேனோ அதே மாதிரி உங்க கிட்ட திருப்பி கொடுத்துட்டேன்…. இனிமே உங்க ரெண்டு பேருக்கும் நடுல நான் வரமாட்டேன் பாட்டி… என் உயிர உங்ககிட்ட விட்டுட்டு போறேன் …. அவள பார்த்துக்கங்க…..” என்றவன் அவர் கண்கலங்க பார்த்துக் கொண்டிருக்கும்போதே திரும்பி நடக்க ஆரம்பித்தான்….


செல்லும் பேரனின் முதுகையே கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார் நிர்மலா….




தொடரும்……..

சாரி பேபிஸ்….. கொஞ்சம் பிஸி…. யாருக்கும் ரிப்ளை பண்ண முடியல…. தப்பா எடுத்துக்காதீங்க…. சீக்கிரமே பழைய மாதிரி வந்துர்ரேன் 😍😍😍


 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi பேபிஸ்….

Health issuesனால என்னால கதை எழுத முடியல… கதைய பாதியில விட்டுட்டு போற ஐடியாலாம் சுத்தமா இல்ல.. நிறைய பேர் ரொம்ப ஆர்வமா படிக்கிறீங்க உங்கள அப்படில்லாம் ஏமாத்திட்டு போயிட மாட்டேன்… recover ஆனதும் சீக்கிரம் கதையோட வர்ரேன்…. அதுவரைக்கும் எனக்காக கொஞ்சம் பொறுமையா காத்திருங்க ப்ளீஸ்….
 
Status
Not open for further replies.
Top