All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

🔥Kindle Free Download Treat🔥

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
🔥Kindle Free Download 🔥

#அழகான_இராட்சசியே_அடிக்கரும்பாய்_இனிக்கிறியே..!!

💘Mr.Perfect Weds Miss.Casual💘

⏰ August 31, Thursday afternoon 12.30 PM to September 1, Friday afternoon 12.30 PM⏰

#Romantic #Entertainment.
#strict_hero
#naughty_heroine
#age_difference_couples
#sudden_marriage
#Tom_and_Jerry_couples
#Feel_good_family
#Childhood_friends
#College_love
#Comedy_romance_supense_twist_thrill

#நாயகி: "ஸ்ரீவள்ளி" (Miss.Causal) ♀👸

குறும்புத்தனம் மற்றும் சேட்டைகளின் உறைவிடமானவள். கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் இருக்கும், பத்தொன்பது வயது, அழகான இராட்சசி. கஷ்டம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாதவள். தந்தையின் ஒரே செல்ல இளவரசி. 💃

#நாயகன்: "ஆர்யன் மகாதேவ்" (Mr. Perfect) ♂🤴

அனைத்திலும் நேர்த்தியையும், நேர்மையையும் கடைப்பிடிக்கும், இருபத்தியாறு வயது அரிமா. தன் சொந்த முயற்சியில், வளர்ந்து வரும் இளம் தொழிலதிபன். ❤🔥

📌தான் திருமணம் செய்துக்கொள்ள போகும் பெண், சிறு குறையின்றி, அவனை போலவே, அனைத்திலும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் ஆர்யன். 🙊

📌ஆர்யன் என்ற பெயரை கேட்டாலே, "அச்சோ அவனா", என்று பத்து தெரு தள்ளி, ஓடி ஒளிந்துக்கொள்ளும் ஸ்ரீவள்ளி. 🏃🫣

அவளை பொருத்தவரை அவன் ஒரு ரோபோ, சிடுமூஞ்சி🤣

அவனுக்கு அவள் ஒரு கிரேசி🤭

இப்படி இருக்கையில், விதியின் அழகான சதியால், ஸ்ரீவள்ளி எப்படி ஆர்யனுடனான திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தாள், ஆர்யன் எப்படி ஸ்ரீவள்ளியை தன் மனைவியாக ஏற்றுக்கொண்டான். இடையில் நடந்தது என்ன? 🔎 என்பதே கதை. 💘

அழகான குடும்பம், அதில் உள்ள பாசம், தினம் தினம் அங்கு நடக்கும் குறும்புகள், சிரிப்புகள், ஆர்யன் ஸ்ரீக்குள் நடக்கும் சண்டைகள், சேட்டைகள், காதல் இம்சைகள், ரொமான்ஸ், சிறுவயது நட்பு, கல்லூரி நாட்கள், சொந்த பந்தங்கள் தரும் சிறு சிறு சச்சரவுகள் மற்றும் கொஞ்சம் சஸ்பென்ஸ் டிவிஸ்ட் என்று அனைத்தும் சேர்த்து, சுவாரசியமான வகையில் தொடுத்த, அழகான மாலை.. 🎬

♾️Love doesn't need to be perfect. It just needs to be true ♾️

Teaser-1🦋

ஒரு வெற்று அறையில் போடப்பட்டு இருந்த நாற்காலியில், வாயிலை பார்த்தவாறே, மெழுகு பாவையாக அமர்ந்து இருந்தாள் ஷிவானி.

அப்பொழுது அவ்வறைக்குள், கையில் சில பிரிண்ட் அவுட் எடுத்த பேப்பர்களுடன், நுழைந்தான், ஆர்யன்.. ஆறடிக்கு மேல், எந்தவித வஞ்சனையும் இன்றி ஓங்கி, பரந்து விரிந்து ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்தவனின் தோற்றத்தை பார்த்த, ஷிவானியின் இதயமோ, வெளிவர அங்கும் இங்கும் எகிறி குதிக்கத் தொடங்கியது.

வந்தவனோ, கொஞ்சமும் ஈவு இரக்கம் எதுவும் இன்றி, அவள் முன்பு போடப்பட்டு இருந்த மேசையின் மீது, தான் கொண்டு வந்த பேப்பர்களை அடுக்கத்தொடங்க, அதை மெல்ல தன் கரத்தில் எடுத்து படித்து பார்த்த ஷிவானி, மறுகணம் பதட்டத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள்.

அதையெதையும் சிறிதும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஆர்யன், "ஹம்ம் சீக்கிரம் ஷிவானி, எவ்ளோ நேரம் தான் கொஸ்டின் பேப்பரையே பார்த்துட்டு இருப்ப.. ஆன்சர் ஷீட் எடுத்து எழுத ஆரம்பி.. இன்னும் 12த் மேக்ஸ் இருக்கு.. பிசிக்ஸ் இருக்கு", என்று, மெல்ல ஒவ்வொரு குண்டாக அவள் தலையில் இறக்க.

'விடுகதையா இந்த வாழ்க்கை' என்று பேக் கிரௌண்டில் அவளின் மனசாட்சி மியூசிக் போட, வேறுவழியின்றி தன் கரத்தில் பேனாவை எடுத்த ஷிவானி, அல்ஜீப்ரா ஈக்வேஷன் கணக்கினை எடுத்து, தலை கிறுக்கிறுக்க போடத் தொடங்கினாள்.

முன்தினம் இருவரும் ஹோட்டலில் சந்தித்தப் பொழுதில் இருந்து அவளுக்கு ஆரம்பித்தது இந்த சனி. ஹோட்டலுக்குள் ஷிவானி நுழைந்த மறுகணமே, அவளுக்கான இன்டர் வியூ ஆரம்பம் ஆனது.

ஆர்யன், முன்பே கூறி இருந்ததுப்போல், தனக்கு வரும் பெண் அனைத்திலும் பர்ஃபெக்டாக, சிறு குறையும் இன்றி இருக்க வேண்டும் என்ற கண்டீஷனுடன், அவள் கையில் இருந்த ஃபைல்லை வாங்கி புரட்டி பார்க்க தொடங்கி, "என்ன இது.. டென்த்ல வெறும் 70 பர்செண்ட் தான் வாங்கி இருக்க.. நான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் 99.9 பர்செண்ட் தெரியுமா.. அதுவும் மேக்ஸ்ல போயிட்டு பார்டர் பாஸ் தான் ஆகி இருக்க.. நீயெல்லாம் எப்படி டாக்டருக்கு படிச்ச..", என்றவன்..

அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மார்க் ஷீட்டை எடுத்து பார்த்து.. "சுத்தம்.. டூ பேட்.. பிசிக்ஸ் சுத்தமா பிச்சுகிச்சு போல.. நான் ட்வெல்த் பிசிக்ஸ்ல சென்டம்", என்றவன், அடுத்து மருத்துவ சான்றிதழை எடுத்து பார்க்கத் தொடங்கினான். அவன் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, பிஸ்னெஸ் லைனில் இருப்பதால், அது ஒன்றும் அவனுக்கு புரியவில்லை..

நல்ல வேளையாக ஷிவானி அதில் தப்பித்தாள். இறுதியில் பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில், எதில் எல்லாம் மிகவும் குறைந்த மதிப்பெண்களை ஷிவானி எடுத்து இருந்தாளோ, அதையெல்லாம் மீண்டும் படித்து, தான் வைக்கும் எக்ஸாம் அனைத்திலும், அவள் முழு மதிப்பெண்கள் எடுத்தால் தான், திருமணம் என்றுவிட்டு இருந்தான் ஆர்யன்.

*************

அதே நேரம் அங்கு காலேஜில் கம்ப்யூட்டர் லேப் முழுக்க மாணவர்கள் சலசலத்தப்படி இருக்க..

ஸ்ரீவள்ளியும் வயிற்றில் நெருப்பைப் கட்டிக்கொண்டு வரிசையில் நின்று இருந்தாள்..

அன்று முந்தைய செம்மிற்கான ரிசல்ட் முடிவுகள் வந்து இருந்தது..

ஒவ்வொருவராக சென்று ரிசல்ட்டை பார்த்துவிட்டு வெளியேற..

ஸ்ரீயின் முறையும் வந்தது..

தன் ஹால்டிக்கெட் நம்பரை அவள் கூற.. கம்யூட்டரில் அமர்ந்து இருந்த லாவண்யா அதை டைப் செய்தாள்…

மறுகணம் திரையில் கண்ட ரிசல்ட்டில் அவளோ, "அடிப்பாவி.. என்னடி இது..", என்று அலற..

சுற்றி இருந்த மாணவர்கள் அனைவரின் பார்வையும் பட்டென ஒருசேர கம்யூட்டரின் திரையில் படிந்தது..

ஸ்ரீயின் கண்களும் மீண்டும் மேலிருந்து கீழ் வரை பயணித்தது..

Fail
Fail
Fail
Fail
Fail
Fail

என அனைத்து பாடங்களிலும் பாராபட்சம் இன்றி சமமாக கோட்டை விட்டு இருந்தாள்..

*****************************

Teaser-2 🦋

பூனைக்கு பயந்து, புலியிடம் மாட்டிய கதையாக… மேலே வந்துவிட்ட ஸ்ரீவள்ளிக்கு, ஆர்யனின் அறைக்கதவை தட்டவே கைகள் நடுங்கியது..

அதுவும் திருமணத்திற்கு முன் தினம் அவள் தோழிகள் இட்டுக்கட்டி கூறியிருந்த, முதலிரவு கதைகள் எல்லாம் வேறு, அவள் கண்முன் வந்துச்செல்ல.. பயம் பிடித்துக்கொண்டது..

ஒருபக்க மூளை, "மூளைவீங்கி நிச்சயம் அப்படி எதுவும் பண்ண மாட்டான்..", என்று, இத்தனை வருடங்களாக அவளறிந்த அவன் குணம், எடுத்து உரைத்தாலும்..

மறுப்பக்க மூளையில் அவள் தோழிகள் கூறிய.. "ஆம்பளைங்க புத்தி எல்லாம் ஒரே மாதிரி தானாம்டி.. நம்ம ஃபைனல் இயர் காவ்யா அக்கா கூட இப்போ பிரக்ணென்ட்டாம்…..", என்று அது இதுவென்ற பல கதைகள்..

அவள் அடிவயிற்றில் புளியை கரைப்பது போல் இருந்தது…

அதிலும் எப்பொழுதும் அவளிடம் சிடுசிடுவென, சிடுமூஞ்சியாக, நடந்துக் கொள்ளும்… ஆர்யனின் கடந்த ஒரு வார திடீர் அனுசரணை..

காலையில் அவன் கூறியிருந்த மிஸ்ஸஸ் ஸ்ரீவள்ளி.. அனைத்தும் சேர்ந்து, குறைக்குடம் அவளை தழும்பச்செய்ய…

அல்லாடினாள்..

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் அப்படியே நின்று இருந்தாள்..

அப்பொழுது பார்த்து, கீழே எரியும் விளக்குகள் அனைத்தையும் பைரவி நிறுத்திவிட்டு.. மிகச்சிறு நைட் லேம்ப்பை ஒளிரச் செய்துவிட்டு.. அவர் அறைக்குள் சென்றுவிட…

அந்த ஒளி எதுவும் மேலே வரவில்லை…

திடீரென்ற இருட்டு.. ஸ்ரீக்கு பயத்தை கொடுக்க..

உடனே படப்படவென தன் முன் இருந்த அறைக்கதவை தட்டத்தொடங்கினாள்..

அப்பொழுதான் தான் ஆர்யன், தன் அறைக்குள் இருந்த, சிறு லிவ்லிங் ஹால் போன்ற டிவி பார்க்கும் அறைக்குள் ரெமோவை அழைத்துச்சென்று..

அவனுக்கான பொம்மைகளை விளையாட எடுத்துப் போட்டுக்கொண்டு இருந்தான்..

கதவு தட்டும் சத்தத்தில்..

வெளியே ஓடிவந்தவன்..

ஓடிவந்து கதவை திறக்க….

ஸ்ரீ படக்கென்று அறைக்குள் அடி எடுத்து வைத்துவிட்டாள்..

"டோர் ஓப்பன்ல தானே இருந்துச்சு.. ஏன் அத்தனை தடவை நாக் பண்ண.. திறந்துட்டு வர வேண்டியதுதானே, ஸ்ரீ", என்ற ஆர்யன்.. அவள் கையில் இருந்த சொம்பை பார்த்துவிட்டு.. வெளியே யாரும் இருக்கின்றனரா.. என எட்டிப்பார்க்க..

-
-

"சரி நகரு..", என்றவன்… கதவை அடைத்து தாழ்ப்போட…

ஸ்ரீயின் கைகள் நடுங்க ஆரம்பித்தது.. சொம்பை இறுக்கப்பற்றிக்கொண்டு.. முகத்தில் எதையும் காட்டாது அவள் நிற்க…

"இந்த சொம்பை இங்க வச்சுட்டு முதல்ல உள்ளே வா.. இப்பவே எல்லாம் பேசி முடிச்சுடலாம்.. நைட் எனக்கு நிறைய வேலையிருக்கு..", என்றவன், மிகச்சிறிய வராண்டா போன்ற வரவேற்பு அறையை தாண்டி, படுக்கை அறைக்குள்‌ நுழைய…

'ஐயையோ.. நைட் வேலையா.. ஆத்தி.. ஒழுங்கா என்ன வேலைன்னு சொல்லிட்டு போடா மூளைவீங்கி….', என்று.. ஏதேதோ நினைத்துக்கொண்டு.. மெல்ல ஸ்ரீ உள்ளே செல்ல..

அங்கு அவளின், கற்பனைகளுக்கு அப்பார்ப்பட்ட அவளின் கணவன்

-
-

***************************

Link 👇

இந்தியா 👇


USA- America 👇


Canada 👇


Uk 👇


Australia 👇


***********************
Tag செய்ய வேண்டும் அல்லது என்னுடைய மற்ற கதைகளை படிக்க விருப்பம் உள்ளவர்கள்.. கீழே உள்ள என் குழுவில் இணைந்து இருங்கள் 🎉

சுவாதி லக்ஷ்மி தமிழ் நாவல்கள் குழு | Facebook

🎊September 15 புது கதை பற்றிய அறிவிப்புடன் சந்திக்கலாம்🎊

With Lots of Love and hugs 😘

சுவாதி லக்ஷ்மி 💘
 
Top