All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS தளத்தின், "சுட்டிக் குழந்தைகளின் குட்டித் திருவிழா"

marry

Bronze Winner
#சுட்டிக்_குழந்தைகளின்_குட்டித்_திருவிழா

SMS தளத்தின், " சுட்டிக் குழந்தைகளின் குட்டித் திருவிழா" .

நிகழ்வு 1 :

வாண்டுகளுக்கு வண்ணக் கிறுக்கல் போட்டி .

பொறுப்பாளர் : @Hema india , @Abirami Mahi

ஹாய் வாண்டூஸ்..,

வண்ணக் கிறுக்கல் போட்டியில் உங்களுடைய ஓவியம் தீட்டும் திறமையை வெளிப்படுத்த, உங்க விருப்பத் தலைப்பில் ஓவியம் வரைந்து,அதனைப் புகைப்படம் எடுத்து எங்களுக்கு அனுப்பி வைங்க பட்டூஸ்.

7 முதல் 14 வயது வரை இருக்கும் வாண்டூஸ்கள் கலந்து கொள்ளலாம். ஒருவர் ஒரே ஒரு படைப்பை மட்டுமே ஜூலை 1 முதல் 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த லாக் டவுன் நேரத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்துங்கள் வாண்டூஸ்.

நிகழ்வு 2 :

செல்ல சிட்டுக்களுக்கு ,“கட்டுரைப் போட்டி "

பொறுப்பாளர் @Chitra Balaji

உங்கள் குட்டி சுட்டிகளுக்காகக் கட்டுரை திருவிழா நமது SMS தளத்தில். அவர்களின் தமிழ் ஆர்வத்திற்கு ஒரு திறவுகோல்...

கீழே உள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரை எழுத வேண்டும்.

தலைப்புகள் :

1. நானும், எனது சமுதாய கடமையும்

2. லாக் டவுனில் கற்றதும் ,பெற்றதும்

3. கால இயந்திரத்துடன் ஒரு நாள்

#விதிமுறைகள்

வார்த்தைகளின் எண்ணிக்கை :1000-1500
வயது வரம்பு: 10-14

படைப்புகள் தமிழில் இருக்க வேண்டும்.

தட்டச்சு செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
kuttythiruvizha@gmail.com

கடைசி தேதி : 5 ஜூலை 2020

நிகழ்வு 3 :

அரும்புகளின், “ கதை சொல்லும் திருவிழா "

பொறுப்பாளர் : @Josyyy & Abi abinaya

நாம என்ன பண்ண போறோம் ,
"கதை சொல்ல போறோம்" .
எங்கே சொல்ல போறோம் 'SMS' தளத்துல.
ஆம் ,உங்கள் அரும்புகளும் ஆகலாம் டோரா!!!

உங்கள் அரும்புகளுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு விசயத்தை ஆடியோ கதையாகச் சொல்ல வேண்டும். கார்ட்டூன் கதைகளைத் தவிர்க்கவும்...

#விதிமுறைகள்
கதையின் கால அளவு: 3-5 நிமிடங்கள்

வயது வரம்பு: 5-10 அகவை

அனுப்ப வேண்டிய முகவரி:
kuttythiruvizha@gmail.com

கடைசி தேதி: 5 ஜூலை 2020

நிகழ்வு 4 :

பட்டூஸ்க்கு, “கைவினைப் போட்டி ”

பொறுப்பாளர் : @sandyvenkat

ஹலோ குட்டீஸ் அண்ட் சுட்டீஸ்., உங்களோட கைவினைத் திறனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. உங்களோட கற்பனைத் திறனை அள்ளி விடுங்க, தூள் கிளப்பிட்டு போங்க...

கீழே உள்ள பிரிவின் படி உங்கள் கிராப்ட் இருக்க வேண்டும் ...

1.பேப்பர் கிராப்ட்

2.ஆர்ட் கிராப்ட்

3.ஹாண்ட் கிராப்ட்

#விதிமுறைகள்..
மூன்று நகல்படம் வேண்டும்...
1.உங்கள் கிராப்ட் ஆரம்ப படமும்,
2.பாதி முழுமை அடைந்த படமும்,
3.கடைசியாக முழுமை அடைந்த கிராப்ட் படமும் வேண்டும்.. அல்லது வீடியோவாகவும் அனுப்பலாம்.
4.ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும்.

வயது வரம்பு : 7 முதல் 14 வரை.

கடைசி தேதி : ஜூலை 5

நிகழ்வு 5 :

சுட்டீஸ்க்கு " சூப்பர் சிங்கர் போட்டி"

பொறுப்பாளர் : @Anuya

ஹலோ சிட்டுகளே....
நீங்கள் குயில்களாக மாறி வீட்டில் உள்ளவர்களை உங்கள் இசையினால் ரிதமீட்டுகிறீர்களா.?
உங்களுக்குள் இருக்கும் இப்பாடல் திறமைகளை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அமையப் போகிறது நமது சுட்டீஸ் சூப்பர் சிங்கர்.
சிட்டுக்களே இந்த கான வைபவத்தில் பங்குபெற, உங்க பாடல்களை ஆடியோவாக பதிவு செய்து எங்களுக்கு அனுப்ப வேண்டும்.

5 முதல் 10 வயது வரை இருக்கும் சிட்டுக்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

நேர வரையறை :3 - 5 நிமிடங்கள்.

மழலையின் இசை மழையில் நனைந்து திளைத்திட நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

சிட்டுக்கள் தங்களுடைய படைப்பை ஜூலை 1 முதல் 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி : kuttythiruvizha@gmail.com

களத்தில் சந்திப்போம்.

நிகழ்வு 6 :

குட்டீஸ்களின், “ குட்டிக் கவிதைப் படைக்கும் திருவிழா "

பொறுப்பாளர் : @Shalini M , @Srisamyuktha & @Ammubharathi

ஹாய் கண்மணிகளா, கவிதை திருவிழாவில் கலந்துகொண்டு, உங்கள் கவிப்பின்னும் திறமையை மென்மேலும் மெருகேற்றுங்கள். ஏதேனும் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அந்த தலைப்பில் கவிதை எழுதி kuttythiruvizha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

# விதிமுறைகள்

7 முதல் 14 வயது வரை இருக்கும் கண்மணிகள் கலந்து கொள்ளலாம்.
ஒருவர் ஒரே ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும்.
கவிதை வரிகள் - 10 முதல் 15 வரிகள் இருந்தால் நலம்.

அனுப்ப வேண்டிய கடைசி தேதி : ஜூலை 5

நிகழ்வு 7 :

மலர்மொட்டுக்களுக்கு, "பயன்படாத பொருளில் புதிதாய் ஒன்றை உருவாக்கும் போட்டி"

பொறுப்பாளர்: Reetuvenkat


குட்டி மொட்டுக்களே உங்களது தனிதிறமையையும் கற்பனை திறனையும் சேர்த்து பயன்படாத பொருளை கூட பயன்படும் பொருளை, புதிதாய் பயன்பெறும் வகையில் உருவாக்கும் திறமை உங்களுக்கு இருக்கின்றதா?

இது உங்களுக்ககான வாய்ப்பு.


#விதிமுறைகள் :
1.வயது 7-14
2.கடைசி தேதி ஜூலை 5
3.மூன்று நகல்படம் அனுப்ப வேண்டும்
(ஆரம்ப படம், பாதி முடிந்த படம், முழுதாய் முழுமை அடைந்த படம் அனுப்பவும் )

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : kuttythiruvizha@gmail.com

அனுப்ப வேண்டிய கடைசி தேதி : ஜூலை 5




நிகழ்வு 8 :

தளிர் கரங்களின் தனித்திறமைகள்

பொறுப்பாளர் : @Srisha

ஹாய் குட்டி நண்பர்களே .., மேல சொன்ன எந்த மாதிரியும் இல்லாம, வேறு விதமா திறமையின் தேடல் இருந்து ,எந்த போட்டியில எதில் கலந்து கொள்ளனு தெரியலையா ?

கவலையை விடுங்க, இந்த களத்தில் உங்கள் பெயரைப் பதிவு செஞ்சுகோ, உங்களோட எந்த திறமையின் தேடல் என்றாலும் எங்களுக்கு அனுப்புங்க.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : kuttythiruvizha@gmail.com

அனுப்ப வேண்டிய கடைசி தேதி : ஜூலை 5


ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும்.படைப்பை அனுப்புவரிடம் எங்களது ஒற்றை விண்ணப்பம்.மின்னஞ்சல் அனுப்பும் வேலை, subject களத்தில் உங்கள் சுட்டிக் குழந்தைகள் கலந்து கொள்ளும் பிரிவைக் குறிப்பிட்டு அனுப்பினால், எங்களுக்கு அது பயனாகும்.

இறுதியில் உங்களது படைப்புகளுக்குக் கவிதைக் கோர்த்து வர்ணிக்கப் போகும் நண்பர்கள் @saranya R @Samvaithi007

உங்களது பங்களிப்பில் மகிழ்வுடன் நாங்கள்.

நன்றி
SMS event group
Superrrrr👌👌👌👌
kalakkunga
Enga kutties join pannalamay😄😄😄
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நண்பர்களுக்கு,

SMS தளத்தில் நடைபெற்ற, “சுட்டிக் குழந்தைகளுக்கு குட்டித் திருவிழா" நிகழ்வில் உங்களது பங்களிப்பில் மகிழ்வுடன் நாங்கள்.

சிகரமாய் சில திறமைகள்,
சிந்திக்க வைக்கும் பல திறமைகள்,அனைத்தும் சிறப்பாய் பட்டைத் தீட்டப்பட்டு எங்களை அடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.


ஓவியம் மற்றும் கைவினைப் பொருள் தயாரிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட குழந்தைகளின் படைப்பைக் காண 👇





கதைச் சொல்லுதல் மற்றும் பாட்டு பாடும் நிகழ்வில் கலந்து கொண்ட குழந்தைகளின் பதிவைக் காண 👇




குழந்தைகளுக்கு உங்களது அன்பைத் தெரிவிக்க 👇



விரைவில் குழந்தைகளுக்கான காணொளி சமர்ப்பிப்பு இங்கு ஒலிபரப்பப்பட்டு ,அதோடு பங்கேற்பு சான்றிதழும் உங்களது மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும் 😍

நன்றி
SMS event group
 

Chitra Balaji

Bronze Winner
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் 🙏

அனைவரும் ஏங்கி நிற்கும் பருவம், “குழந்தைப் பருவம்". அப்பருவத்திற்கு செல்ல முடியாவிடினும், உங்கள் குழந்தைகளின் திறமை வெளியீட்டில், அவர்களுடன் இணைந்து பயணித்ததில் எங்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.

எஸ்எம்எஸ் தளத்தில் நடைபெற்ற, “சுட்டிக் குழந்தைகளுக்கான குட்டித் திருவிழா" நிகழ்வு பெரும் நிறைவோடு முடிவுற்றது.

சிகரமாய் சில திறமைகள்,
சிந்திக்க வைக்கும் பல திறமைகள்,அனைத்தும் சிறப்பாய் பட்டைத் தீட்டப்பட்டு எங்களை அடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் , சான்றிதழ் மின்னஞ்சல் வழி அனுப்ப இருக்கிறோம்.அதோடு குழந்தைகளின் பங்களிப்பிற்கு எங்களது சிறு பாராட்டு ,அவர்களின் படைப்பையே கவிதையாக வடித்து, அதனை காணொளி காட்சியாக இங்கு சமர்ப்பிக்க இருக்கிறோம்.

உங்களது மகிழ்வில் நிறைவாய் நாங்கள்.காணொளி பதிவுகள் முடிவுறும் நாள் ,அனைவருக்கான நன்றியுரையுடன் வருகிறோம்,அதுவரை சுட்டிக் குழந்தைகளுக்கான ஒலி(ளி)பரப்பு மட்டும் தொடரும்.


இக்காணொளியில் இடம்பெற்ற
குழந்தைகளின் பெயர்கள் ...

1.Akilan Saravanan
2.K.Jeba Samuel
3.S.Bhuvaneshwari
4.M.Kiruthika
5.B.Karthiha Lakshmi
6. Rithanya
7.Dharshitha sree
8.Abithan Nathan
9.Akilan Saravanan
10.R.Joann Nithilaa

காணொளிக்கான திரியை கீழே பதிவிட்டு உள்ளோம்.👇







நன்றி
SMS event group
 
Top