Uthaya
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி, குளித்துவிட்டு, இரவு உடைக்கு மாறி, அறைக்குள் நுழைய, படுக்கையில் பவித்ரனும், பிரணவும் கதைபேசியபடி படுத்திருந்தனர்.
தூங்கவைக்க வந்திருப்பான் என நினைத்தவள், சோபாவில் அமர்ந்து செல்லை நோண்டிக்கொண்டிருந்தாள்.
கதைபேசி முடித்தது, பவித்ரன் மேலேயே படுத்து பிரணவ் தூங்கிவிட்டான். பவித்ரன் பிரணவை குட்டி பொம்மைவீட்டில் படுக்க வைத்துவிட்டு நிமிர, ரஞ்சனி கதவை திறந்துவிட்டு, அவன் வெளியேற வழிவிட்டு நின்றாள்.
பவித்ரன் புன்னகைமலர, நடந்துவந்தவன், வாயிலைக் கடக்காமல், கதவை மூடி தாளிடவும், ரஞ்சனி இதயம் படபடத்தது.
புருவம் சுருக்கி பவித்ரனை அவள் நிமிர்ந்து பார்க்க, அவளை அள்ளி எடுத்தவன், மெத்தையில் கிடத்தினான்.
பவித்ரன், பவி,!! என்ன இது என்றவளை பேச விடாமல் வாயை தனது கையால் மூடி, தூங்கும் மகனை சுட்டிக்காட்டியவன், சத்தம்போடாதே என்றான்.
ரஞ்சனி, அவனது கைதட்டிவிட்டு, சரி சத்தம்போடல, நீங்க உங்க ரூம்க்குபோங்க என்றாள்.
நம்ம டீல் என்னாச்சு என்றான். ரஞ்சனி, அது கேலி இல்லையா??எனவும், இல்லை என்றவன், வாய்பேச்சு நின்றது. கைகள் பேசத்தொடங்கின.
ரஞ்சனி திக்குமுக்காடிப்போனால், ஆனால் எதிர்ப்பு எதிர்பார்ப்பாக மாறியதே தவிர, அங்கே சண்டையில்லை.
ரஞ்சனியின் கையில் வலி ஏற்படுத்திவிடக்கூடாது என கவனமாக இருந்தவனை, ரஞ்சனியும் நன்கறிந்து கொண்டாள்.
ஒருகட்டத்தில், அவன்மீதே உறங்கி விழுந்தவளை, புன்னகையுடன் ஏந்தியவன், பக்கத்தில் கிடத்தினான்.
மருந்து கையிலெடுத்தவன், கவிழ்ந்து உறங்கியவளின் முதுகில் போட ஆரம்பித்தான்.
இன்று அவனிடம் கண்ணீர் இல்லை. சரி செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
ஆனால், மருந்தின் குளிர்ச்சியில், கண்விழித்தவள், பவித்ரனின் செய்கையை அறிந்து, நெகிழ்ந்தாள். கண்கள் சற்றே கலங்கி மெத்தையை நனைத்தது.
மறுநாள் அழகாக விடிந்தது. ரஞ்சனி பரபரப்பாக கிளம்பிக்கொண்டிருந்தாள். பிரணவையும் கிளப்பினாள்.
பவித்ரனிடம் ரெடியாகுங்க, பேக்டரிக்கு போகணும் என்றாள்.
இருவர் மனமும் அடுத்தவரிடமிருந்து வரும் பதிலுக்காக காத்திருந்தது. ரஞ்சனி தானாக முன்வந்து சேர்ந்து வாழலாமா என கேட்க, கூசினாள்.
பவித்ரன் அவளது வாயிலிருந்தே வரட்டும் எனக் காத்திருந்தான்.
பேக்டரியில் பங்குகளை தொழிலாளர்களிடமே ஒப்படைத்தவள், இனி உங்கள் முடிவு, பங்குகளை நீங்கள் எனக்கு கொடுத்தால், நான் இனிமேல் உங்களை நிர்வகிப்பேன், அல்லது, பவித்ரன் நிர்வகிப்பார் எனவும், அனைவரும் பவித்ரன் பவித்ரன் என சத்தமிட, ரஞ்சனி கங்கிராட்ஸ் என்றுவிட்டு மடமடவென வெளியேறினாள்.
ரஞ்சனி மட்டும் காரில் ஏற டேடி வேர்?? என்றான் சின்னவன்.
அவர் உள்ளே வேலையா இருக்கார். நாம பாட்டிய பாக்க போறோம் என்றவள், இருக்கையில் தலைசாய்த்து கண்முடிக்கொண்டாள்.
கார் ஸ்டார்ட் ஆனதை உணர்ந்தவள், சென்னைக்கு போங்க னா!! என்றாளே ஒழிய கண்ணைக்கூட திறக்கவில்லை.
ராஜாவிடம், முதலிலேயே கூறியதால் பேக்டரியை கண்காணிக்க வந்தவர்களும், ராஜாவும், முதல் நாளே சென்னை சென்றுவிட்டனர்.
ரஞ்சனியின் போன் ஒழிக்க, அதை எடுத்து காதில் வைத்தவளிடம் ராஜா பேசினான்.
மேடம், பேக்டரிக்கு நாம எதிர்பாத்த பெரிய ஆர்டர் கிடைச்சிருச்சு என சொன்னான்.
பேக்டரி பவித்ரன் கைக்கு மாறிவிட்டது. நீங்க அவருக்கு போன் செய்து சொல்லுங்கள் என்றாள்.
மேடம் நான் உடனே பவித்ரன் சாருக்குதான் பேசினேன். அவர் லைன் கிடைக்கல, பேக்டரிக்கு பேசினதுக்கு, உங்க கூட கார்ல போறதா சொன்னாங்க, அதனாலதான் போன் பண்ணேன். உங்க கூட இல்லைனா எங்க போனார் என ராஜா வினவ, அப்போதுதான் ரஞ்சனி கண்களை திறந்து பார்த்தாள்.
பிரணவ், அம்மா, டேடி என காரை ஓட்டிக்கொண்டிருந்த பவித்ரனை அமைதியாக சுட்டிக்காட்ட, ரஞ்சனியின் முகம் மலர்ந்தது.
கார் பவித்ரன் வீட்டைநோக்கி பயணித்தது.