All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி, குளித்துவிட்டு, இரவு உடைக்கு மாறி, அறைக்குள் நுழைய, படுக்கையில் பவித்ரனும், பிரணவும் கதைபேசியபடி படுத்திருந்தனர்.

தூங்கவைக்க வந்திருப்பான் என நினைத்தவள், சோபாவில் அமர்ந்து செல்லை நோண்டிக்கொண்டிருந்தாள்.

கதைபேசி முடித்தது, பவித்ரன் மேலேயே படுத்து பிரணவ் தூங்கிவிட்டான். பவித்ரன் பிரணவை குட்டி பொம்மைவீட்டில் படுக்க வைத்துவிட்டு நிமிர, ரஞ்சனி கதவை திறந்துவிட்டு, அவன் வெளியேற வழிவிட்டு நின்றாள்.

பவித்ரன் புன்னகைமலர, நடந்துவந்தவன், வாயிலைக் கடக்காமல், கதவை மூடி தாளிடவும், ரஞ்சனி இதயம் படபடத்தது.

புருவம் சுருக்கி பவித்ரனை அவள் நிமிர்ந்து பார்க்க, அவளை அள்ளி எடுத்தவன், மெத்தையில் கிடத்தினான்.

பவித்ரன், பவி,!! என்ன இது என்றவளை பேச விடாமல் வாயை தனது கையால் மூடி, தூங்கும் மகனை சுட்டிக்காட்டியவன், சத்தம்போடாதே என்றான்.

ரஞ்சனி, அவனது கைதட்டிவிட்டு, சரி சத்தம்போடல, நீங்க உங்க ரூம்க்குபோங்க என்றாள்.

நம்ம டீல் என்னாச்சு என்றான். ரஞ்சனி, அது கேலி இல்லையா??எனவும், இல்லை என்றவன், வாய்பேச்சு நின்றது. கைகள் பேசத்தொடங்கின.

ரஞ்சனி திக்குமுக்காடிப்போனால், ஆனால் எதிர்ப்பு எதிர்பார்ப்பாக மாறியதே தவிர, அங்கே சண்டையில்லை.

ரஞ்சனியின் கையில் வலி ஏற்படுத்திவிடக்கூடாது என கவனமாக இருந்தவனை, ரஞ்சனியும் நன்கறிந்து கொண்டாள்.

ஒருகட்டத்தில், அவன்மீதே உறங்கி விழுந்தவளை, புன்னகையுடன் ஏந்தியவன், பக்கத்தில் கிடத்தினான்.

மருந்து கையிலெடுத்தவன், கவிழ்ந்து உறங்கியவளின் முதுகில் போட ஆரம்பித்தான்.

இன்று அவனிடம் கண்ணீர் இல்லை. சரி செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

ஆனால், மருந்தின் குளிர்ச்சியில், கண்விழித்தவள், பவித்ரனின் செய்கையை அறிந்து, நெகிழ்ந்தாள். கண்கள் சற்றே கலங்கி மெத்தையை நனைத்தது.

மறுநாள் அழகாக விடிந்தது. ரஞ்சனி பரபரப்பாக கிளம்பிக்கொண்டிருந்தாள். பிரணவையும் கிளப்பினாள்.

பவித்ரனிடம் ரெடியாகுங்க, பேக்டரிக்கு போகணும் என்றாள்.

இருவர் மனமும் அடுத்தவரிடமிருந்து வரும் பதிலுக்காக காத்திருந்தது. ரஞ்சனி தானாக முன்வந்து சேர்ந்து வாழலாமா என கேட்க, கூசினாள்.

பவித்ரன் அவளது வாயிலிருந்தே வரட்டும் எனக் காத்திருந்தான்.

பேக்டரியில் பங்குகளை தொழிலாளர்களிடமே ஒப்படைத்தவள், இனி உங்கள் முடிவு, பங்குகளை நீங்கள் எனக்கு கொடுத்தால், நான் இனிமேல் உங்களை நிர்வகிப்பேன், அல்லது, பவித்ரன் நிர்வகிப்பார் எனவும், அனைவரும் பவித்ரன் பவித்ரன் என சத்தமிட, ரஞ்சனி கங்கிராட்ஸ் என்றுவிட்டு மடமடவென வெளியேறினாள்.

ரஞ்சனி மட்டும் காரில் ஏற டேடி வேர்?? என்றான் சின்னவன்.

அவர் உள்ளே வேலையா இருக்கார். நாம பாட்டிய பாக்க போறோம் என்றவள், இருக்கையில் தலைசாய்த்து கண்முடிக்கொண்டாள்.

கார் ஸ்டார்ட் ஆனதை உணர்ந்தவள், சென்னைக்கு போங்க னா!! என்றாளே ஒழிய கண்ணைக்கூட திறக்கவில்லை.

ராஜாவிடம், முதலிலேயே கூறியதால் பேக்டரியை கண்காணிக்க வந்தவர்களும், ராஜாவும், முதல் நாளே சென்னை சென்றுவிட்டனர்.

ரஞ்சனியின் போன் ஒழிக்க, அதை எடுத்து காதில் வைத்தவளிடம் ராஜா பேசினான்.

மேடம், பேக்டரிக்கு நாம எதிர்பாத்த பெரிய ஆர்டர் கிடைச்சிருச்சு என சொன்னான்.

பேக்டரி பவித்ரன் கைக்கு மாறிவிட்டது. நீங்க அவருக்கு போன் செய்து சொல்லுங்கள் என்றாள்.

மேடம் நான் உடனே பவித்ரன் சாருக்குதான் பேசினேன். அவர் லைன் கிடைக்கல, பேக்டரிக்கு பேசினதுக்கு, உங்க கூட கார்ல போறதா சொன்னாங்க, அதனாலதான் போன் பண்ணேன். உங்க கூட இல்லைனா எங்க போனார் என ராஜா வினவ, அப்போதுதான் ரஞ்சனி கண்களை திறந்து பார்த்தாள்.

பிரணவ், அம்மா, டேடி என காரை ஓட்டிக்கொண்டிருந்த பவித்ரனை அமைதியாக சுட்டிக்காட்ட, ரஞ்சனியின் முகம் மலர்ந்தது.

கார் பவித்ரன் வீட்டைநோக்கி பயணித்தது.
 
Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வள்ளி ஆலம் கரைத்து மற்றொருமுறை பவித்ரனையும், ரஞ்சனியையும் வரவேற்றாள். ஆனால் இந்த முறை வரவு மூன்றானது.

பவித்ரன், லதாவிடம் ராஜனிடமும் பேசினான். அவனது மகிழ்ச்சி கண்ட அவர்களுக்கும் மகிழ்ச்சியே!!

லதா, ராமாசாமிடம் சென்று நன்றிகூறினார். நான் எதுவும் செய்யல மா, ரஞ்சனி அம்மா செஞ்ச நல்லதே போதும். நீங்க சந்தோசப்பட்டாலும் எனக்கு வருத்தமாத்தான் இருக்கு எனவும் லதா அதிர்ந்து பார்க்க, இனிமே தினமும் ரஞ்சனிய பாக்க முடியாதே எனவும். லதாவிற்கு கண்கலங்கியது.

பெண்ணுனா அப்படித்தான, பிரிஞ்சு இருந்தாத்தான், அவங்க சந்தோசமா இருக்குறத பாக்க முடியும். இவ்வளவு நாள் சேந்தே இருந்தாதான், அவளும் சுகப்படல, நாங்களும் தான் என லதா கூறினார்.

ராமசாமி, ஆமோதிப்பாக தலை யசைக்க, விடைபெற்று கிளம்பினார் லதா.

பவித்ரனும் ரஞ்சனியும் சேர்ந்த விசயம் நந்தினிக்கு தெரியவர, பரபரப்பானவள், நிவிசனை நச்சரித்து இந்தியா வந்தாள்.

விருந்து உண்டு, வாழ்த்திவிட்டு , ரஞ்சனியின் சந்தோசமான முகத்தைப் பார்த்தவள், மனம் நிறைந்தது.

யாழினி நிவிசன் மடியில் அமர்ந்திருக்க, நிவிசனும் பவித்ரனும் பேசியபடி உணவுண்டனர்.

பிரணவ் உடனே பவித்ரன் மடிக்குத் தாவினான். இது மை டேடி என்றவனை, அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்தது.

இதை கேள்வியுற்ற ஜீவிதா, பவித்ரனிடம் நான் ரஞ்சனியை பார்த்தே ஆக வேண்டும் என அடம்பிடித்தாள்.

சரி!! வாங்க என்றதும் உடனே ஓடிவந்தாள். ரஞ்சனியை கண்டிக்கொண்டு கண்ணீர்விட்டாள். நீங்க மட்டும் இவரை அனுப்பி வைக்கலைனா நான் என்ன ஆயிருப்பேன்னே தெரியல அக்கா!! என்றாள்.

கண்ணன், அக்கா இல்ல, அண்ணி டி என திருத்தினான்.

ரஞ்சனி, கண்ணனை இன்முகமாக பார்க்க, இல்லமேடம் என இழுத்தவனிடம்,

பழசையெல்லாம் விடுங்க கண்ணன். எனக்கு உண்மையில் உங்க காதல் சந்தோசம்தான். ஜீவிதாவை கலங்க வைக்காமல் கைபிடித்து அவளை துன்பத்திலிருந்து காப்பாற்றினீர்களே. அது தான் சிறந்த ஆண் என்றான்.

பவித்ரன் அருகே வர, எல்லாத்துக்கும் சார்தான் காரணம் என்றான். சார் மட்டும் இல்லைனா, இவங்க அப்பா இருந்த கோபத்துல நான் உயிரோட இருக்குறதே அதிசயம் என்றான்.

பவித்ரன், அவனது கேலியில் சிரிக்கவும், அவன் முகம் பார்த்த ரஞ்சனியும் புன்னகைத்தாள்.

இப்ப என்ன பண்றீங்க கண்ணன் என ரஞ்சனி வினவ, ஜீவிதாவுக்கு புருஷனா இருக்கேன் மேடம் என சிரியாமல் சொன்னவனை வெறியாகப் பார்த்தாள் ஜீவிதா.

ஏங்க, இப்படி!! என ஜீவிதா பேச, கண்ணனுக்கு ஆபீசிலிருந்து போன்வர எக்கியூஸ் மி என நகர்ந்து கொள்ள, பவித்ரன் ரஞ்சனியிடம், கண்ணன் இப்ப பெரிய ஆளு, அங்கிளுக்கு முழு ஓய்வுதானாம். கண்ணன் எடுப்பதுதான் அங்கே முடிவாம். என்றான்.

கண்ணன் பேசிவிட்டு, மறுபடி பேச்சில் நுழைந்தான். ஜீவிதாவிற்கு முழுநேர வீட்டுக்காரரா என கண்ணன் தொடர, ரஞ்சனி முறைப்பதைப் பார்த்துவிட்டு, பாதியில் நிறுத்தினான்.

ஜீவிதா, இப்பத்தான் அண்ணா உண்மைய சொன்னாங்க, கதை அளக்க வேண்டாம் எனவும், ஜீவிதாவின் தோளில் கைபோட்டவன், சரி சரி சும்மாத்தான என்று சமாதானப்படுத்தினான்.

பவித்ரன், ரஞ்சனியிடம் ரகசியமாக, கண்ணன் பெரிய காதல் மன்னன், ஒரு அஞ்சே நிமிசத்துல ஜீவிதா காதலை சொல்ல வச்சுட்டான் என கேலிபேசி சிரித்தான்.

நீங்க வேற சார். அதுக்கு முன்னாடி, எத்தன கண்ணீர், எத்தனை திட்டு, அடி, மிதின்னு எனக்குத்தான் தெரியும் எனவும் அனைவரும் சிரித்தனர்.

பிரணவ் பள்ளி சென்றிருந்தான்.

ரஞ்சனி கண்ணாடி முன் நின்று ஆடை அணியாமல் தன்னை நோட்டமிட்டுக்கொண்டிருந்தாள்.

பவித்ரன் குளியலறையிலிருந்து வெளிவர அவசரமாக அணிந்து கொண்டவள், கண்ணாடியைவிட்டு நகர, அவளது கைப்பிடித்து, நிறுத்தியவன், திரும்பவும் கண்ணாடி முன் நிறுத்தி, பின்னிருந்து அணைத்து அவளது தோளில் தாடையைப் பதித்தவன், அவளது கண்ணத்தை உரசியவாறே என்னப் பாத்துட்டு இருந்த டாலி .என்றான்.

அவள், புன்னகை மேலெழும்ப ஒன்றுமில்லை என்றாள். நீ சொல்லு இல்லனா, நானே பாத்து கண்டுபிடிப்பேன் என சொன்னதும், அவனது விலாவில் இடித்து அவனை நிறுத்தியவள், திரும்பி நின்று அவனைப் பார்த்து சிரித்தாள்.

சொல்லு ... இல்ல நானே சொல்றேன் எப்படி இவ்வளவு அழகானோம்னு தான, அது ஐயாவோட கைங்கர்யம் என்றான், காலரை தூக்கிவிட்டபடி,

இல்லை என்றவள், அவனது சட்டைக்காலரை பிடித்து இழுக்க குனிந்தவனின், வாயோடு முத்தமிட்டவள், இப்ப சொல்லுங்க என்றாள்.

ரஞ்சனி முதல்முறை கொடுத்த முத்தத்தால் மயங்கியவன், அவளை தூக்க முற்பட்டவனை, என்ன பவி இது !! கண்டுபிடிக்க!! என்றாள்.

அவனுக்கு உண்மையில் என்ன கேட்கிறாள் என தெரியவில்லை. இந்த முத்தத்திற்கு பிறகு சுத்தமாகத் தெரியவில்லை.

எது???டாலி என மீண்டும் அணைக்க வந்தவனின் தோளில் செல்லமாக அடித்தவள், அவனது கையை எடுத்து அவளின் வயிற்றில் வைத்தாள்.

அவனது முகம் மலர்ந்தது. டாலி!!!! என அவளை தாவி அணைத்துக்கொண்டான். என்ன நல்லா பழிவாங்கீட்டீங்க என்றவள், முகம் சந்தோசத்தில் ஜொலித்தது.

நன்றி...
 
anandhie

Member

supera finish panittenga sis romba nalla irunthu sis
 
Top