All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
ஆஹா! ஸ்ரீ மேம் reply செய்ய ஆரம்பித்து விட்டார்கள்... இனி தளமே அதிர போகிறது... ஹா! ஹா! நான் உங்களை வரவேற்கலாமா? நல்வரவு ஸ்ரீ மேம்...
வரவேற்கலாம்... அரட்டை அடிக்கலாம் வாங்க 😍😍😍😘😘😘
 
ஶ்ரீகலா

Administrator
ஏன் mam , இந்த ராமுக்கு இப்படி ஒரு கொலைவெறி ??? 10 வருடமாக அமரின் தொழிலை கையகப்படுத்த நேர்மையாய் நடந்து அமரின் நன்மதிப்பை பெறுவதும், குறுக்கு வழியில் ஆத்மியை மிரட்டி பகடைக் காய் ஆக்குவதும் என என்ன ஒரு வில்லத்தனம். ஒரு வழியாக நம் ஆத்மிக்கு தைரியம் வந்துடுச்சின்னு சந்தோச பட்டால் அஞ்சலி அமரை உயிருக்கு ஆபத்து என மிரட்டுகிறான். என்ன ஒரு வில்லத்தனம்???
நன்றி தீபா :)
இவன் கொஞ்சம் முரண்பாடு கவிதை... கொஞ்சம் பொறுத்துக்கோங்க...
 
Laksu

Member
நன்றி லக்‌ஷூ :)
இது யாரு? நம்ம புள்ளங்க மாதிரியே இருக்கே 🤔🤔🤔 ஹா ஹா ராம் மேல் கோபம் வருதா? ஹப்பாடி வெற்றி வெற்றி... நானும் ஆன்டி ஹீரோ எழுதறேன் 😉😉😉 தினமும் தர முயற்சிக்கிறேன். ஏதாவது வேலை இடையில் வந்துவிடுகிறது. இனி தினமும் எபி வரும்ன்னு நினைக்கிறேன்.

😍😍😍எல்லாம் உங்க வாசக ரசிகைல ஒருத்தர் தான் ஸ்ரீ மேம் 😍😍😍😘😘😘😘😘😘😘 அய்ய்ய் ஜாலி இனி தினமும் ஆத்மராகத்துல நனையலாம் ஹஹா😍😍😍😜
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? லீனாவை மனதில் வைத்து ஆத்மிகா தன்னை தைரியப்படுத்தி கொண்டாலும் ஆத்மிகாவின் அலட்சிய பார்வையால் ராம் அவளிடம் விவாதிக்க அவள் அம்மாவின் உடல்நிலையை வைத்து ராம் அவளை மிரட்டிய பதிவு...

அனைவரின் பார்வைக்கும் ராம் நல்லவன் வைத்திக்கு உட்பட... ஆனால் ஆத்மிக்கு மட்டும்... இவ்வளவு மிரட்டும் போதும் தன் தந்தையிடம் சொன்னால் ராமின் உயிரற்ற உடலை மனக்கண் மூலம் காணும் ஆத்மிகா அதற்காகவே சொல்ல பயப்படுகிறாள்...

லீனா அவளுடைய தன்னம்பிகையால் மீண்டு வந்தாலும் அவளை அவளிற்காகவே அன்பு செலுத்தி அவளை திருமணம் செய்து கொண்ட ஜோசப் ஒரு ஆண் தேவதையே... அற்புதமானவன்...

தன் தந்தையான அமரிடம் லீனாப்பற்றி விசாரித்த ஆத்மி அவள் திருமணத்தைப்பற்றியும் விசாரிக்க அற்புதமான விளக்கம் அமருடையது... ஆனால் யாரையாவது காதலிக்கிறாயா என்று அமர் கேட்டதற்கு ஆத்மிக்கு ரன்வீரின் முகம் ஞாபகம் வந்தது ஏன்? ஆத்மிகாவின் தடுமாற்றத்தை கண்ட அமர் அவளின் நிலைமையை அறிந்து கொள்வானா? இல்லை பெறாத மகன் என்று சொல்லி கொள்ளும் ராமிடமே இதற்காக தீர்வை விவாதிப்பானா?

லீனாவின் வாழ்வு மற்றும் தந்தையின் விளக்கம் கேட்ட ஆத்மி ராமை அலட்சியப்படுத்தி அவள் தந்தையிடம் சொல்வதாக மிரட்ட ராம் அவள் அம்மாவை வைத்து... பாவம் ஆத்மிகா..

இருந்தாலும் பணத்திற்காக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ராம் அவளின் கண்ணீரை கண்டால் மட்டும் எதுவும் சொல்லாமல் ஓடி விடுவது ஏன்?

ஸ்ரீ மேம் ராமின் மிரட்டலும் ஆத்மிகாவின் பயந்த பார்வையும் எங்கள் கண் முன் நிஜ உருவங்களாய்.. அற்புதம் ஸ்ரீ மேம்... அபாரமான பதிவு...
 
நன்றி சாந்தி :)
அவன் மீது அன்பு இருக்கிறது. ஆனால் காதல்? அந்த அன்பை அவன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறான். இதிலிருந்து மீள்வாளா? என்பதை கதையில் பார்க்கலாம்.
 
Shanthigopal

Well-known member
முடிவில் உள்ள கவிதை இருவருக்குமே பொருத்தமாக உள்ளதே ஸ்ரீ மேம்! தன் பிரச்சனையை தனக்குள் வைத்து மருகும் அவள்... சின்ன மீனை போட்டு பெரிய மீனான அமர் தொழிலை கைப்பற்ற துடிக்கும் ராம் யாருமில்லாமல் தனிமையில் தானே தனக்காக போராடி கொண்டுள்ளான்...

பணம் மட்டுமே பிரதானம் என்றால் எத்தனையோ வழி இருக்கிறதே ஏமாற்ற.. எப்படியோ எங்கள் மண்டையை குழப்ப செய்வதில் வல்லவர் நீங்கள்... ஹா! ஹா! முரண்பாடு காதல் என்று சொல்லி விட்டீர்கள்... பார்ப்போம்..
 
Banumathi Balachandran

Well-known member
ராமின் இலக்கு பணம் மட்டும் தானா இல்லை வேறு எதுவும் இருக்கா🤔🤔🤔

ஆத்மி இப்போது தான் அமரின் தயவால் கொஞ்சம் தெளிந்து வந்தாள் அதையும் அஞ்சலி பேரை சொல்லி அவள் தைரியத்தை குறைத்து விட்டான் இந்த ராம்

அஞ்சலிக்கு ராமை ஆத்மிக்கு திருமணம் செய்து வைக்க விருப்பம் இல்லை பின் எப்படி இவர்கள் திருமணம் நடக்கும் 🤔🤔🤔

அவளை தத்தி, முதுகெலும்பு இல்லாதவள் என்று நன்றாக திட்டி விட்டு அவள் அழுதவுடன் தாங்க முடியவில்லை ஏன்டா ராம்
 
ஶ்ரீகலா

Administrator
அருமை அடுத்த எபிக்காக வெயிட்டிங் சீக்கரம் வாங்க ஸ்ரீ.
கொஞ்சம் லேட்டாகும். நாளை காலையில் வந்து படியுங்கள்...
 
ஶ்ரீகலா

Administrator
ராமின் இலக்கு பணம் மட்டும் தானா இல்லை வேறு எதுவும் இருக்கா🤔🤔🤔

ஆத்மி இப்போது தான் அமரின் தயவால் கொஞ்சம் தெளிந்து வந்தாள் அதையும் அஞ்சலி பேரை சொல்லி அவள் தைரியத்தை குறைத்து விட்டான் இந்த ராம்

அஞ்சலிக்கு ராமை ஆத்மிக்கு திருமணம் செய்து வைக்க விருப்பம் இல்லை பின் எப்படி இவர்கள் திருமணம் நடக்கும் 🤔🤔🤔

அவளை தத்தி, முதுகெலும்பு இல்லாதவள் என்று நன்றாக திட்டி விட்டு அவள் அழுதவுடன் தாங்க முடியவில்லை ஏன்டா ராம்
நன்றி பானுமதி :)
இப்போதைக்கு பணம் மட்டுமே பிரதானம்... அவன் அப்படித்தான் 🤭🤭🤭
 
Top