All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா செம செம கா. சூப்பர் எபி கா.. இந்த ராம் பையனை புரிஞ்சுக்கவே முடியலையே கா. ஒரு பக்கம் அவளுக்கு வில்லன் போல் இருக்கான். மற்றொரு பக்கம் நல்ல நண்பனாய், மற்றொரு பக்கம் பொறாமை தலை தூக்க காதலானாய். என்ன தான் கா இவன் பிரெச்சனை..🤔🤔🤔

டேய் செல்லம் உன்னை பத்தி யோசிச்சே எனக்கு தூக்கம் போச்சு டா.. ஆனாலும் நல்லா தான் இருக்கு..

ஆத்மி நட்பு என்னும் ஒரே உணர்வில் சரியா தான் இருக்கா. ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பது அவள் மனதை காட்டுகிறதேன்றால், செருப்பை போட்டு விடுவது அவன் மனதை காட்டுகிறது..

வேலைகரான் என்னும் வார்த்தை ராமை ரொம்பவும் உறுத்துதோ கா..அதில் எதாவது இருக்கா 🤔🤔🤔

இந்த நிர்மலா யாரு கா. எங்க தலையே வில்லன். வில்லனுக்கே வில்லி வேல பாக்குதே..🤭🤭🤭..

ரன்வீர் இப்படி சரியா யோசிக்காம பச்ச மண்ணா இருக்கையே டா. கடைசியில் நீ டைமண்ட் நெக்லஸ் வாங்கி கொடுக்க போறவளே தான் டா உன் விதி. ஆத்மீ எங்க தலைக்கு தான்..

எங்க தல பீல் பண்ணும் ரகம் மாதிரி தெரியலையே கா. அடுத்த பதிவிள் எதாவது அதிரடி எதிர்பார்க்கலாமா. இந்த அமர் வேற ராம் ராம் னு சொல்லிட்டு இருக்கான்.. அக்கா அப்படியே சீக்கிரமா அடுத்த ud கொடுங்கோ கா...

***********************

நண்பனாய் மட்டுமே நான் அறிந்தவனுள் எத்தனை எத்தனை பரிமானங்கள்

ஒரு பக்கம் வில்லனாய்

ரசிக்கும் போது காதலானாய்

உரிமையுடன் கோபம் கொள்ளும் இடத்தில்

பழைய நண்பனாய்

யாராடா நீ..!

என் ராமாக மீண்டுவிட மாட்டாயா

எனையும் உன் அம்முவாக மீட்டுவிட மாட்டாயா..!

ஏக்கங்களும் குழப்பங்களும் முடியும் நாள் எந்நாளோ..!!!!!
 

Chitra Balaji

Bronze Winner
அந்த நிர்மலா ஏன் ராம் பாத்துட்டு ஆத்மி ku avan seiyaatha paaththutu avanga பொண்ணு ku avana maapillai aakidalaam nu decide panni ரன்வீர் ah ஆத்மி ku பேசி முடிக்கலாம் nu ava அண்ணன் kita solli அதை செயல் yum padithitaanga போல நிச்சயமே நடந்து mudinjidichi... ராம் ku இது avvallavu அதிர்ச்சி ஆனா அவன் சும்மா irukara ஆளு illaye....... அமர் ku ram ku thaan ஆத்மி ah Kodukanum nu எண்ணம் but அஞ்சலி ku இஷ்டம் இல்ல அதே maari thaan ஆத்மி yum avana friend மட்டும் தான் paakka முடியுது athuyum avan avaluku panninathu avala avana மன்னிக்க முடியல..... ரன்வீர் kita உண்மை sollanum nu ninaikira but அந்த lady ஆத்மி oda face reaction ah பாத்தே ellaathayum mudichidichi.... Enna aaga pooguthoo தெரியல... Super Super mam... Semma semma episode
 

ilakkiyamani

Bronze Winner
arumaiyaana pathivu sri mam,nirmala yaaru ivangalukku ram pattri etho therinjirukku.. adhanala ram & amar rendu peraiyum serthu adikka edho plan seithu athula aathmiya sikka vakkiraangaa...ippo ram enna panna porannu theriyalauyee... :love::love::love::love:
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆத்மா : 6

ஆத்மிகா ஷாப்பிங் மாலில் இருந்த கடை ஒன்றில் உடைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். ஒவ்வொன்றின் விலையும் ஆயிரத்திற்கு மேல் இருந்தது. அவளது வசதிக்கு இது எல்லாம் சாதாரணம் தான்... ஆனாலும் இவ்வளவு விலை கொடுத்து உடை வாங்க அவளுக்கு விருப்பம் இல்லை.

"ப்ச்..." என்று உதட்டினை சுளித்தபடி அவள் அங்கிருந்து அகல முயல...

"ஹாய் ஆத்மி..." என்று புன்னகையுடன் அவள் முன் தரிசனம் தந்தான் ரன்வீர்.

அவனைக் கண்டதும் அவளது மனதில் கோபம் முகிழ்த்த போதும் நடந்த சம்பவத்தில் அவனது தவறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்தவளாய் அவள் அவனைக் கண்டு,

"ஹாய்..." என்று பதிலுக்குப் புன்னகைத்தாள்.

"தேங்க் காட்... என் மேல் கோபமா இருப்ப... பேச மாட்டியோன்னு நினைச்சேன். ஆனால் நீ பேசிட்ட..." என்று அவன் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான்.

"உங்க மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை... எல்லாம் விதி..." என்று விரக்தியுடன் சொன்னவளின் மனதில் அந்த விதிக்கு சொந்தக்காரனான ராம் ராகவேந்தரின் முகம் மின்னி மறைந்தது.

"இங்கேயே இருந்து பேசணுமா? காபி ஷாப் போய்ப் பேசலாமா?" என்று ரன்வீர் கேட்க... அவளும் மறுக்காது சரியென்று சம்மதித்தாள்.

அங்கிருந்த உயர்தரக் 'காபி ஷாப்'பினுள் இருவரும் நுழைந்தனர். மெல்லிய வெளிச்சத்தில் இயங்கி கொண்டிருந்த கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. இருவரும் ஒரு மேசையில் சென்று அமர்ந்தனர். ரன்வீர் பேரரை அழைத்து இருவருக்கும் தேவையானதை ஆர்டர் கொடுத்து அவனை அனுப்பி விட்டு ஆத்மிகாவை பார்த்தான்.

"ஆத்மி, நான் எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை... நான் உனக்கு நல்லது செய்யத் தான் நினைத்தேன். ஆனால் எப்படித் தவறாக முடிந்ததுன்னு இப்பவரை எனக்குத் தெரியலை?" அவன் நெற்றியை நீவியபடி தனக்குள் யோசித்துப் பார்த்தான். எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது என்று இப்போதும் அவனுக்குத் தெரியவில்லை.

"நீங்க இந்தளவுக்கு எனக்குத் தொழிலை கற்று கொடுத்ததே போதுமானது. எங்க கம்பெனி உங்களுக்குப் போட்டி கம்பெனி என்று தெரிந்தும் நீங்க எனக்கு உதவி பண்ண நினைச்சீங்களே... இந்த நல்ல மனசு யாருக்கு வரும்? நான் உங்களைத் தப்பா நினைக்கலை ரன்வீர்." அப்போதும் அவள் ராம் ராகவேந்தரை பற்றி அவனிடம் சொல்ல விரும்பவில்லை.

"என்னைப் புரிந்து கொண்டதற்கு ரொம்பத் தேங்க்ஸ்..." என்றவனைக் கண்டு அவள் புன்னகைக்க... அதற்குள் ஆர்டர் கொடுத்த காபி வந்து சேர்ந்தது.

"ம், எடுத்துக்கோ..." என்று காபி கோப்பையை அவள் பக்கம் நகர்த்தியவன் தானும் காபியை எடுத்துப் பருகலானான். அங்குக் கனத்த மௌனம் நிலவியது. அவன் தனக்குள் யோசித்தபடி இருந்தான். காபி அருந்தி முடித்ததும் அவன் அவளிடம்,

"இனி நீ என்னை லவ் பண்றியான்னு நான் உன்னிடம் கேட்க போறது இல்லை." என்று சொல்ல... அதைக் கேட்டு அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

"ரன்வீர்..."

"எஸ், லவ் மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு ஆசையா இருந்தேன். ஆனால் அது இப்போதைக்கு நடக்கிற மாதிரி தெரியலை. அதனால் ரூட்டு மாத்தி லவ் மேரேஜை அரேன்ஜ்டு மேரேஜா மாத்த போறேன். எஸ், உங்க அப்பா கிட்ட நம்ம மேரேஜை பத்தி பேசலாம்ன்னு இருக்கேன்." என்று அவன் புன்னகையுடன் சொல்ல... அவள் பதில் தெரியாது திகைத்து இருந்தாள்.

"நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு மெதுவா லவ் பண்ணலாம்..." என்றவனின் புன்னகை இன்னமும் விரிந்தது.

"ரன்வீர், இது சரியா வராது..." என்றவளின் மனதில் துக்கம் எழுந்தது. தனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? என்று...

"ஏன் சரி வராது ஆத்மி? உனக்கு என்னைப் பிடிக்கலையா? பிடிக்கலைன்னா சொல்லிரு..." அவன் சற்று பதற்றத்துடன் கேட்டான்.

ஆத்மிகா அவனுக்குப் பதில் சொல்லாது கண்ணீர் விட ஆரம்பித்தாள். அதைக் கண்ட ரன்வீருக்கு தான் பெருத்த வருத்தமாக இருந்தது. அவளது கண்ணீரை காண அவனுக்குச் சகிக்கவில்லை.

"ஆத்மி..." என்றபடி அவன் எழுந்து அவள் அருகே வர முயன்ற போது அங்கு வேகமாய் வந்த ராம் ராகவேந்தர் இருவருக்கும் இடையில் நின்றபடி அவனது சட்டை காலரை இறுக பற்றியபடி,

"எங்க அம்முவை எதற்காக அழ வைத்தாய்? என்ன செய்தாய், சொல்?" என்று கோபமாய்க் கேட்டபடி அவனை அடிக்கக் கையை ஓங்க...

"ராம், அவரை விடு... அவர் என்னை ஒன்றும் சொல்லலை." ஆத்மிகா பதறியபடி ராம் ராகவேந்தரின் ஓங்கிய கையைப் பிடித்து இழுத்தாள்.

"அப்போ நீ ஏன் அழுத?" ராம் ராகவேந்தர் அவளைக் கண்டு கோபமாய்க் கேட்க...

"ஒரு காரணமும் இல்லை... நீ வா..." என்று ராம் ராகவேந்தரின் கையைப் பற்றி இழுத்து சென்றவள் பின்பு ஞாபகம் வந்தவளாய் ரன்வீர் புறம் திரும்பி,

"பை ரன்வீர்... இன்னொரு நாள் பேசலாம்." என்று அவனிடம் விடைபெற்றாள்.

ரன்வீர் திகைப்புடன் இருவரையும் பார்த்திருந்தான்.

சிறிது தூரம் சென்றதும் ஆத்மிகா ராம் ராகவேந்தரின் கையை விடுவித்தவள், "உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் ராம்? ரன்வீர் என்னை ஒண்ணும் சொல்லலை." என்று அவனைச் சமாதான படுத்துவது போல் கூற...

"அது தான் எனக்குத் தெரியுமே..." என்று அலட்சியமாகச் சொன்னவனைக் கண்டு அவள் திகைப்புடன் பார்த்தாள்.

"அப்படி என்றால்...?"

"எஸ், உன்னை வேவு பார்த்தேன்... அதனால் எல்லாம் என் காதில் விழுந்தது..." என்றான் அவன் சிறிதும் அலட்டி கொள்ளாது...

"ச்சீ, உனக்கு வெட்கமாய் இல்லையா?" அவள் கோபமாய்ச் சீற...

"இதற்கு எல்லாம் வெட்கப்பட்டால் முடியுமா? கொஞ்சம் விட்டால் நீ அவன் கிட்ட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி எல்லா விசயத்தையும் சொல்லிருப்ப... அவனும் இரக்கப்பட்டு உனக்கு வாழ்க்கை தர ஒத்துக்கிட்டு இருப்பான். இதெல்லாம் நடக்க நான் விட்டுருவேனா? நான் இருக்கும் போது இது நடக்குமா என்ன?"

"ராம், நீ தப்பு மேல தப்பு பண்ற?"

"இருக்கட்டுமே... இருந்துட்டு போகட்டும். ஒரு நஷ்டமும் இல்லை." என்று அவன் நக்கலாய் சொல்ல...

"ச்சீ..." என்றவள் அவனைக் கடந்து செல்ல முயல...

அவளது கரம் பற்றித் தடுத்து நிறுத்தியவன், "அவன் கூடக் காபி குடிக்கப் போனேல்ல... இப்போ என் கூட ஐஸ்க்ரீம் சாப்பிட வா..." என்று அவன் வம்பிழுக்க... அவனை முறைத்து பார்த்தவள்,

"தேவையில்லை..." என்க...

"உனக்குப் பிடிச்ச டபுள் சாக்லேட் ஐஸ்க்ரீம் கூட வேண்டாமா?" அவன் அவளுக்கு ஆசை காட்ட...

"இதற்கு எல்லாம் ஆசைப்பட்ட ஆத்மிகா செத்து ரொம்ப நாளாயிற்று ராம்... இப்போது இருப்பது உயிரற்ற, உணர்வுகளற்ற ஆத்மிகா..." என்று விரக்தியுடன் சொன்னவளை கண்டு அவனது கரங்கள் தளர்ந்தது. அவள் அவனை ஆச்சிரியமாய்ப் பார்க்க...

"போ..." என்றவன் அவளைத் திரும்பி பார்க்காது சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

அவனது இறுகி போன முகத்தில் இருந்து அவனது உணர்வுகளை அவளால் அவதானிக்க முடியவில்லை. அவனை இப்படியே விட்டு செல்லவும் அவளால் முடியவில்லை. சில நாட்களாகத் தானே அவன் அவளுக்கு வில்லன்... முன்பு அவன் அப்படியில்லையே... அன்று அவன் அவளது அன்பன் அன்றோ! அவளுக்கு மனம் தாங்கவில்லை.

சிறிது நேரம் சென்று ஆத்மிகா ராம் ராகவேந்தரின் அருகில் சென்று அமர்ந்தவள், "ராம்..." என்று அவனை அழைக்க... அவனோ அவளைத் திரும்பி பார்க்காது எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

"ராம்..." அவள் அழுத்தமாய் அவனை அழைக்க... அப்போதும் அவன் அவளைத் திரும்பி பார்க்கவில்லை.

"அங்கே என்ன பார்க்கிற?" அவன் பார்வை சென்ற பக்கம் பார்த்தவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடும் நீ, எல்லாப் பெண்களுக்கும் நல்லவனா?" அவள் ஆத்திரத்துடன் கேட்க...

"ஏய், யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற?" அவன் அடக்கப்பட்ட கோபத்துடன் பல்லை கடிக்க...

"உன்னைத் தான் சொல்றேன்... நீ அந்த க்ரீன் சுடியை தானே பார்த்துட்டு இருந்த..."

"லூசு, லூசு... போடி..." என்று அவன் கோபமாய் அவளது தலையில் கொட்ட...

"உன் மேல் பரிதாபப்பட்டு உனக்காக, உனக்குப் பிடிச்ச கேரமல் பிளேவர் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்தேன் பாரு... என்னை..." என்றவளின் கைகளை அப்போது தான் அவன் கவனித்தான்.

அவளது ஒரு கையில் அவனுக்குப் பிடித்த ஐஸ்க்ரீமும், மற்றொரு கையில் அவளுக்குப் பிடித்த ஐஸ்க்ரீமும் இருந்தது. அதைக் கண்டவன் கோபம் எல்லாம் சூரியனை கண்ட பனி போல் மறைந்து போனது. ஆத்மிகா முதல் முதலாக அவனுக்குக் கொடுத்த ஐஸ்க்ரீம் பிளேவர் 'கேரமல்'... அதிலிருந்து அது அவனுக்குப் பிடித்தமானதாய் போயிற்று...

ராம் ராகவேந்தர் அவளது கையிலிருந்து ஐஸ்க்ரீமை எடுக்க முயல... அவளோ அவன் எடுக்க முடியாதபடி கையை மறுபக்கம் தள்ளி கொண்டு போனவள்,

"நீ உண்மையை ஒத்துக்கோ... அப்போ தான் நான் ஐஸ்க்ரீம் தருவேன்." என்று அவள் கறார் குரலில் சொல்ல...

"ப்ச், எந்தப் பெண்ணையும் சைட் அடிக்கும் மனநிலையில் நானில்லை... நீ உட்பட..." என்றவனைக் கண்டு அவளது விழிகள் சுருங்கியது. அவன் சொல்வதும் சரி தான்... அவன் தன்னை எப்போதும் ஒரு மாதிரியாய்ப் பார்த்தது இல்லை. அதனால் தான் அவளுக்கு அவளது பெற்றோருக்கு அடுத்து அவனை மிகவும் பிடிக்கும்.

"சரி, நம்பறேன்..." என்றவள் அவனது கையில் ஐஸ்க்ரீமை கொடுத்தாள். அவன் அதை வாங்கிக் கொண்டு அமைதியாக உண்ண... அவள் தான் ஐஸ்க்ரீமை உண்ணாது தனக்குள் யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.

"நீ சாப்பிடலையா?" என்று கேட்டவன் அவளது ஐஸ்க்ரீமையும் உரிமையுடன் எடுத்துக் கொள்ள... அவள் ஒன்றும் பேசாது தன்னுடையதையும் அவனிடம் கொடுத்து விட்டாள்.

"ராம்... நான் ஒண்ணு சொன்னால் கோபப்படக் கூடாது..."

"கோபப்படுற மாதிரி நீயும் எதுவும் சொல்லாதே..."

"ராம், நடந்ததை நாம ரெண்டு பேரும் மறந்திரலாம். நாம முன்ன மாதிரியே நல்ல நண்பர்களாக இருப்போம்." என்றவளை ஒரு பார்வை பார்த்தபடி கடைசி வாய் ஐஸ்க்ரீமை வழித்து எடுத்து தனது வாயில் போட்டு கொண்டவன்,

"உன்னுடைய உடம்பில் ................. இடத்தில் இருக்கும் மச்சத்தை நான் பார்த்த பிறகும் நீ எப்படி எனக்குத் தோழியா இருக்க முடியும் ஆத்மி..." என்று நிதானமாகக் கேட்க... அவள் திகைப்புடன் தனது துப்பட்டாவை சரி செய்து கொள்ள... அதைக் கண்டு அவன் வாய்விட்டுச் சிரித்தான்.

"இப்போது மறைத்து என்ன பயன்? எல்லாம் முடிந்து போனது... தத்தி, தத்தி..." என்று அவன் சிரிக்க... அவளது விழிகளில் கண்ணீர் நிரம்பியது.

"நீ மாற மாட்ட... வில்லன் நீ..." என்று கழிவிரக்கத்தில் கரைந்தபடி சொன்னவள் கோபமாய் அங்கிருந்து செல்ல முயல... அவன் அவளது கரத்தினைப் பிடித்துத் தடுத்து நிறுத்த முயன்றான். அதில் அவள் நிலைதடுமாறி அவன் மீதே விழுந்தாள். பூக்குவியல் போல் மென்மையாக இருந்தவளை கண்டு அவனது கரங்கள் ஒரு நொடி இறுக அணைத்தது. பிறகு என்ன நினைத்தானோ, அவளை எழும்பி நிற்க வைத்தவன் தானும் எழுந்து நின்று,

"வா, வீட்டில் விட்டுட்டு போறேன்..." என்று அவளது முகம் பார்க்காது சொன்னான்.

"இல்லை நான் காரில் தான் வந்திருக்கேன்." அவளுக்குமே அவனது தொடுகை என்னமோ செய்தது. அவளுக்கு வார்த்தைகள் வராது சதி செய்தது.

"இருட்டி விட்டது. தனியே போவது நல்லதல்ல... சொன்னால் கேளு..." என்றவனை மறுக்கும் துணிவு அவளுக்கு இல்லை.

இருவரும் இணைந்து காரிலேறி வீடு வந்து சேரும் வரை இருவருக்கும் இடையில் மௌனமே ஆட்சி செய்தது. வீடு வந்ததும் அமைதியாக இறங்கியவளை கண்டு,

"இனி ரன்வீரை பார்க்க முயற்சிக்காதே அம்மு..." என்றான் சற்றுக் குரலில் மென்மையைத் தேக்கி...

"நீ எதுக்கு இதை எல்லாம் சொல்ற? என் அப்பா சொல்லட்டும்." அவள் கோபமாகச் சொல்ல...

"அப்பாவுக்கு அடுத்து கணவன் தானே... அதனால் தான் நான் சொல்கிறேன்." என்று கண்சிமிட்டி அவளைக் கேலி செய்து சிரித்தவன் காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

அவள் கோபத்தில் புசுபுசுவென்று மூச்சு விட்டபடி நின்றிருந்தாள். அவளும் அவனிடம் கோபம் கொள்ளக் கூடாது என்று தான் நினைக்கிறாள். ஆனால் அவன் அவளைச் சீண்டி சீண்டி கோபமூட்டி விட்டுச் செல்கிறான்.

************************

அதே நேரம் ரன்வீர் தனது அலுவலகத்தில் கண் மூடி அமர்ந்தபடி பெருத்த யோசனையில் இருந்தான். ராம் ராகவேந்தரின் உரிமை கலந்த கோபம் அவனுக்குச் சரியாகத் தோன்றவில்லை. ஏதோ ஒரு உறுத்தல் அவனது மனதில் எழுந்தது. ராம் ராகவேந்தரின் இந்தக் கோபத்திற்கும், அவனது தொழில் நஷ்டத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ? என்று அவன் யோசித்தான். ஒருவேளை ராம் ராகவேந்தர் ஆத்மிகாவை விரும்புகிறானோ? அந்த நினைவு எழுந்ததும் அவனுக்குக் குப்பென்று வியர்த்தது. ராம் ராகவேந்தரை பற்றி அவன் நன்கு அறிவான். தொழிலில் நின்று சாதிக்கும் அவனது குணத்தினை இவன் அறிவானே!

வெகு நேரம் யோசித்தவன் பின்பு வீட்டிற்குக் கிளம்பி சென்றான். அவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனது தந்தை அரவிந்தன் அவனுக்காகக் காத்திருந்தார்.

"ரன்வீர், உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..."

"சொல்லுங்கப்பா..." என்றபடி அவன் அவர் முன்னே வந்தமர்ந்தான்.

"பிசினசில் என்ன நடக்குது? ஏனிந்த இறங்குமுகம்? ஒவ்வொரு வாய்ப்பும் நம்ம கை விட்டு போகுது. இப்படியே நஷ்டமாகிட்டே போச்சுன்னா நாம தொழிலை இழுத்து மூட வேண்டியது தான்." அரவிந்தன் கோபமாய்ப் படபடக்க...

"இனி இது மாதிரி நடக்காது... நான் பார்த்துக்கிறேன்."

"இனி என்ன பார்த்துக்கப் போற? எனக்கு என்னமோ சரியா படலை..." என்று அவர் பொரிந்து தள்ள...

"ப்ளீஸ்ப்பா... ரொம்ப டயர்டா இருக்கு." என்றவன் அவரது பதிலை எதிர்பாராது எழுந்து சென்று விட்டான்.

"என்ன அண்ணா? என்ன பிரச்சினை?" கோபம் அடங்காது மகன் செல்வதை முறைத்தபடி அமர்ந்திருந்த அரவிந்தன் அருகில் வந்து அமர்ந்தார் நிர்மலா.

"சொல்லி வச்ச மாதிரி நம்ம பிசினசில் தொடர்ந்து நஷ்டம்... அது பத்தி தான் ரன்வீர் கிட்ட கேட்டுட்டு இருந்தேன்."

"யாருன்னு தெரிஞ்சதா?"

"ம், எல்லாம் அமரேந்தர் தான்..."

"ஓ..." அமரேந்தரை பற்றி நிர்மலா கேள்விப்பட்டு இருக்கிறாரே!

"இப்போ எதுக்கு நம்ம கம்பெனியை குறி வைக்கிறாராம்..." நிர்மலா கேட்க...

"அமரேந்தர் என்றால் அமரேந்தர் இல்லை..."

"அப்படி என்றால் வேறு யார்?" நிர்மலா யோசனையுடன் சகோதரனை பார்த்தார்.

"அமரேந்தர் கவனம் எல்லாம் காஸ்மெட்டிக்ஸ் கம்பெனி மேல் தான்... அவருக்கு மத்த தொழில்களைப் பார்க்க நேரம் கிடையாது."

"அப்போ இதைச் செய்வது யார்?"

"ராம் ராகவேந்தர்... அவருடைய கம்பெனியில் வேலை செய்பவன்... ஆல் இன் ஆல்..."

"ஒரு வேலைக்காரன் இந்தளவுக்குப் புத்திசாலியாக இருப்பானா? அவனைப் பத்தின டீடெயில்ஸ் எனக்கு வேணுமே?"

"நான் விசாரிச்ச வரை... அவன் ஆசிரமத்தில் வளர்ந்த பையன்... பதினெட்டு வயசில் தொழிலுக்கு வந்து ஐந்து வருடங்கள் அமரேந்தர் கிட்ட டிரையினிங்... அதுக்குப் பிறகு பத்து வருசமா அவன் தான் இந்தத் தொழில்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறான். இதில் அமரேந்தர் கூட அவனது செயலுக்கு மறுப்புத் தெரிவிப்பது இல்லை. அவர் அவ்வளவு சுதந்திரம் அவனுக்குக் கொடுத்திருக்கார்."

"யார் அந்தப் பையன்? எனக்குமே பார்க்கணும் போலிருக்கு?" என்று நிர்மலா ஆர்வமாய்ச் சொல்ல...

அரவிந்தன் தனது அலைப்பேசியில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து காட்டி, "இதோ இவன் தான்... எவ்வளவு பவ்யமா அமரேந்தர் பின்னாடி நிற்கிறான் பாரு... அமரேந்தருக்கு மூளையாகச் செயல்படுவது இவன் தான்..." என்று சொல்ல...

நிர்மலா ராம் ராகவேந்தரின் புகைப்படத்தைப் பார்த்தபடி தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தார்.

**************************

ஆத்மிகா மாடிப்படியில் இருந்து இறங்கி வருவதைக் கண்டபடி ராம் ராகவேந்தர் நின்றிருந்தான். சாதாரணப் பருத்தி புடவையில், கழுத்து, காது, கைகளில் சிறிய முத்துக்களாலான அணிகலன்களை அணிந்து எளிமையிலும் தேவதையாகத் தெரிந்தாள். அவனது பார்வை தன்னை இமைக்காது பார்ப்பதை கண்டு அவளது விழிகள் சுருங்கியது. பெற்றோர் அங்கே இருந்ததால் அவள் எதுவும் அவனைச் சொல்லவில்லை.

"ராம், அம்மு அழைச்சிட்டு போயிட்டு அதே மாதிரி திரும்பப் பத்திரமா அழைச்சிட்டு வந்திரு. எங்களுக்கு வேறு ஃபங்கசன் இருக்கு. இல்லைன்னா அம்மு கூடப் போயிருப்போம்." அமரேந்தர் சொல்லவும்...

"நான் பார்த்துக்கிறேன் சார்... நீங்களும் மேடமும் கிளம்புங்க..." என்றவன் இருவரையும் கார் வரை சென்று வழியனுப்பி வைத்தான்.

பெற்றோருக்கு விடை கொடுத்தபடி நின்றிருந்த ஆத்மிகா அருகில் வந்து காரை நிறுத்தியவன்,

"ஏறு..." என்க... அவளும் மறுபேச்சு இல்லாது காரிலேறி அமர்ந்தாள்.

ஆத்மிகாவின் தோழி ஒருத்தியின் திருமண வரவேற்பிற்குத் தான் இருவரும் சென்று கொண்டு இருக்கின்றனர்.

"அப்புறம்..." என்று ராம் ராகவேந்தர் ஆரம்பிக்க...

"ஒன்றும் இல்லை... ரோட்டை பார்த்து காரை ஓட்டு..." என்று அவள் சிடுசிடுக்க...

"பொன்னகையை விட உன் புன்னகை தான் உனக்கு அழகு... இப்ப எல்லாம் கோபப்பட்டு உன் அழகை கெடுத்துகிற..." என்று அவன் சொல்ல...

"ஆமா, எனக்கு வேண்டுதல்..." என்றவள் வெளிப்புறம் வேடிக்கை பார்க்க... அவனும் அவளைச் சீண்டுவதை விடுத்து அமைதியாகக் காரை ஓட்டினான்.

இருவரும் நட்சத்திர விடுதியினுள் வரவேற்பு நடக்கும் இடத்தை நோக்கி சென்றனர். அப்போது அவளுக்குப் பின்னால் வந்தவர் அவளது செருப்பினை காலால் மிதித்துவிட... அவள் எப்போதும் போல் வேகமாய் நடக்க முயல... செருப்பின் வார் பட்டென்று அறுந்து போனது.

"ஐயோ..." என்றபடி அவள் தடுமாறி கீழே விழ போக...

"அம்மு, பார்த்து..." என்று பதறியபடி ராம் ராகவேந்தர் அவளைப் பிடித்து நிறுத்தினான்.

அத்தனை பேர் முன்னிலையில் அவன் இப்படிச் செய்ததும் அவளுக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. அவள் முகம் சிவக்க அவனது பிடியில் இருந்து விலகி நின்றாள். அவன் அவளது முகச்சிவப்பினை வியப்பாய் பார்த்தபடி விலகி நின்றான். அவள் காலை நொண்டியடித்துக் கொண்டே செல்ல...

"என்னவாயிற்று?" என்று அவன் கேட்க...

"செருப்பு அறுந்து போச்சு..." அவள் பாவமாய்ச் சொல்ல...

"நீ வா..." என்றவன் அவளைக் கைத்தாங்கலாய் அழைத்துச் சென்று முன் வரிசையில் அமர வைத்தவன்,

"செருப்பைக் கழற்றி கொடு..." என்று சொல்ல...

"வேண்டாம், இருக்கட்டும்... நீ உட்கார்." என்று அவள் மறுக்க...

"சொன்னா கேட்க மாட்ட..." என்றவன் குனிந்து அவளது செருப்பினை கழற்றி கையில் எடுத்துக் கொண்டு சென்றான்.

இந்தக் காட்சியை அங்குச் சற்று தள்ளி அமர்ந்திருந்த நிர்மலா பார்த்துக் கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் புதுச் செருப்புடன் வந்த ராம் ராகவேந்தரை கண்டு அவரது புருவங்கள் ஆச்சிரியமாக உயர்ந்தது. செருப்பு வாங்கி வந்ததற்காக அல்ல... அவன் குனிந்து அவளது கால்களில் செருப்பைப் போட்டு விட்டதற்காக...

"நீ எதுக்கு இதை எல்லாம் செய்கிறாய்... விடு... நானே போட்டு கொள்கிறேன்." என்று தடுத்தவளை ஏறிட்டு பார்த்தவன்,

"நான் வேலைக்காரன் தானே... இதைச் செய்வதில் தப்பில்லை." என்று சொல்ல...

"ப்ச், இப்போ எதுக்கு இந்தப் பேச்சு?" அவள் சலித்துக் கொள்ள...

"வேலைக்காரன் என்பதால் தானே என்னை வீட்டுக்காரனாக்க யோசிக்கிறாய்..." என்று கூறியபடி அவன் அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

"புரியாமல் பேசாதே... நண்பனை கணவனாக நினைக்க முடியாது ராம்..." என்று அவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.

"உடல் ஏற்றுக் கொண்டதை உள்ளமும் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்." அவன் மெல்ல முணுமுணுக்க... அதைக் கேட்டு அவளது முகம் கோபத்தில் சிவந்து போனது. இந்த முறை அவன் வியப்பாய் பார்க்காது அவளது முகச்சிவப்பை ரசித்துப் பார்த்திருந்தான்.

மணமக்களுக்குப் பரிசு கொடுப்பதற்காக மேடையேறிய ஆத்மிகாவை ஒருவன் வேண்டுமென்றே இடித்து விட்டு செல்ல... அதைக் கண்டு ராம் ராகவேந்தருக்குக் கோபம் வந்தது. ஆனாலும் அவன் எல்லோர் முன் ஒன்றும் செய்ய முடியாது தனது கோபத்தினைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான். பரிசு கொடுத்து முடித்ததும் மணமேடையை விட்டு கீழே இறங்கியவளை கண்டு அவன்,

"நீ போய்ச் சாப்பிடு... நான் இதோ வந்து விடுகிறேன்." என்று கூறியவன் அவளது பதிலை எதிர்பாராது சென்று விட்டான்.

ஆத்மிகா அவனைப் புரியாது பார்த்தபடி உணவு உண்ண செல்ல... ராம் ராகவேந்தரோ அவளை இடித்தவனைத் தேடி சென்றான். தனியே மாட்டியவனை அடித்து வாயில் இரத்தம் வரவழைத்த பிறகே அவன் அமைதியானான். இதை எல்லாம் யாரும் அறியாது கவனித்துக் கொண்டிருந்த நிர்மலாவின் உதட்டில் வஞ்சக புன்னகை வந்தமர்ந்தது.

அன்றிரவு வீட்டிற்கு வந்ததும் நிர்மலா தனது அண்ணனிடம், "அண்ணா, நம்ம ரன்வீருக்கு அமரேந்தரோட பொண்ணு ஆத்மிகாவை பேசி முடிங்க..." என்றார்.

"அப்போ ஷப்னம்?" அரவிந்தன் அதிர்ச்சியாகி போனார்.

"அவளுக்கு என்ன?"

"ரன்வீருக்கு ஷப்னத்தைத் தானே பேசி முடித்து இருக்கிறோம்."

"நாம பேசினால் போதுமா? இருவருக்குமே அந்த எண்ணம் இல்லையே..." தங்கை சொன்னதைக் கேட்டு அரவிந்தனும் யோசித்தார்.

"நீ சொல்றதும் சரி தான்... இப்போ என்ன திடீர்ன்னு? அந்தப் பொண்ணு எப்படின்னு விசாரிக்க வேண்டாமா?"

"நான் ஆத்மிகாவை நேரில் பார்த்துட்டேன். நம்ம ரன்வீருக்கு ஏத்த பொண்ணு தான்." நிர்மலா சொன்னதும் அதற்கு மேல் அரவிந்தன் யோசிக்கவில்லை.

மறுநாளே அரவிந்தன் மகனிடம் விசயத்தைச் சொல்லி அவனது சம்மதம் கேட்க... அவனோ பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக மகிழ்ந்து விரிந்த புன்னகையுடன் முழுமனதாய் சம்மதித்தான். அந்த நொடி அவனது நினைவில் இருந்து ராம் ராகவேந்தர் கூட மறைந்து போய்விட்டான். ஷப்னமோ ஒரு படி மேலே போய்,

"ஹப்பாடி, இந்தச் சிடுமூஞ்சி ரன்வீரிடம் இருந்து தப்பிச்சேன்..." என்று போலி பெருமூச்சு விட்டாள்.

"என் கல்யாணத்துக்கு உனக்கு டையமண்ட்ல நீ கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன். என்னைச் சிடுமூஞ்சின்னு சொன்ன காரணத்தால் உனக்கு எதுவும் கிடையாது."

"ப்ளீஸ் ரன்வீர், நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்." என்று அவள் அவனிடம் கெஞ்ச... அவன் மிஞ்ச... இதைக் கண்டு பெரியவர்கள் வாய்விட்டு சிரித்தனர்.

அரவிந்தன் தாமதிக்காது அன்றே அமரேந்தரிடம் பேசினார். அமரேந்தர் தனது குடும்பத்தினருடன் கலந்து பேசி விட்டுச் சொல்வதாகச் சொன்னான். அஞ்சலியிடம் சொன்னதற்கு அவள் மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்.

"ரன்வீர் நம்ம பேபிக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன்..." என்று அவள் சொல்ல...

"ராமும் எந்த விதத்திலும் ரன்வீருக்கு சளைத்தவன் இல்லை பேபி..." அமரேந்தர் தன்னையும் அறியாது சொல்லிவிட...

"இந்தர், நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?" அஞ்சலி வருத்தத்துடன் கணவனைப் பார்த்தாள்.

"இல்லை பேபி... ஏதோ ஞாபகத்தில்... சாரி..." அமரேந்தர் மனைவியிடம் மன்னிப்பு கேட்க... அவளும் இந்த விசயத்தைப் பெரிதுப்படுத்தவில்லை. அமரேந்தர் தான் யோசித்துக் கொண்டே இருந்தான்.

அமரேந்தர் ஆத்மிகாவை அழைத்து விசயத்தைச் சொல்லி அவளது அபிப்ராயத்தைக் கேட்க... அவளோ அதிர்ச்சி அடைந்தாள். திருமணம் என்ற ஒன்று அவளது வாழ்க்கையில் சாத்தியமா?

"கொஞ்ச நாட்கள் போகட்டுப்பா... இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்...?" அவள் எப்போதும் பாடும் பல்லவியைப் பாட...

"இப்போ நிச்சயம் பண்ணிக்கலாம். கல்யாணம் பிறகு பண்ணலாம்." அமேரந்தர் மகளைச் சமாதானப்படுத்த...

"நான் ரன்வீர் கிட்ட பேசணும்..."

"பேசலாம்... நாளைக்கு வர்றேன்னு சொல்லியிருக்காங்க... பேசி பாரு... உனக்குப் பிடித்திருந்தால் தான் எல்லாம்..." அமரேந்தர் சொல்லவும் அவள் சரியென்று தலையாட்டினாள்.

ரன்வீரிடம் தன்னைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று அவள் முடிவு செய்து கொண்டாள். அதன் பிறகு விதி விட்ட வழி... அவளால் ராம் ராகவேந்தரையும் காட்டி கொடுக்கவும் முடியவில்லை. அதேசமயம் ஒரே மகளின் திருமணத்தைக் காண ஆசைப்படும் பெற்றோரின் எண்ணத்தைத் தகர்க்கவும் அவள் விரும்பவில்லை.

அமரேந்தர் ராம் ராகவேந்தரிடம் விசயத்தைக் கூறாது 'மறுநாள் காலையில் சீக்கிரமே கிளம்பி வா' என்று மட்டும் சொல்ல... அவன் எப்போதும் போவது போல் தானே என்று அலட்சியமாக இருந்து விட்டான்.

மறுநாள் காலையில் ரன்வீர் குடும்பம் அமரேந்தர் வீட்டிற்கு வந்தது. ரன்வீர் மிகவும் சந்தோசத்துடன் காணப்பட்டான். ஆத்மிகாவை அழைத்து வந்து ரன்வீர் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள் அமரேந்நதர், அஞ்சலி தம்பதியினர். அமைதியான, எளிமையான பெண்ணான அவளைக் கண்டதும் அரவிந்தன், வைஷ்ணவி இருவருக்கும் மிகவும் பிடித்துப் போனது.

"ரன்வீருக்கு ஏத்த ஜோடி தான்..." ஷப்னம் ஆத்மிகாவிற்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தாள்.

நிர்மலா ஆராய்ச்சியாய் ஆத்மிகாவின் முகத்தைப் பார்த்தார். அவள் ஏதோ பதற்றத்தில் இருப்பதை அவர் குறித்துக் கொண்டார். அதன் பிறகு நிர்மலா யாரையும் பேசவும் விடவில்லை, யோசிக்கவும் விடவில்லை.

"இன்னைக்கே நல்ல நாளாக இருக்கிறது. இரண்டு பேரும் மோதிரத்தை மாத்திக்கட்டும்." என்று அவர் சொல்ல...

இதில் மறுப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால் அனைவரும் இதற்குச் சம்மதித்தனர். ஆத்மிகா மட்டும் இருண்டு போன முகத்துடன் ரன்வீரை பார்த்தாள். அவனோ குறும்பாய் அவளைக் கண்டு கண்சிமிட்டி புன்னகைத்தான்.

"ரன்வீர், ஆத்மிகா ரெண்டு பேரும் இங்கே வாங்க..." நிர்மலா இருவரையும் நடுவிரல் நிற்க வைத்துத் தாங்கள் வாங்கி வந்த மோதிரங்களை இருவரது கைகளிலும் கொடுத்தார்.

ரன்வீர் புன்னகை முகத்துடன் பலவித கனவுகளுடன் மோதிரத்தை தன்னவள் கைவிரலில் போட்டு விட... ஆத்மிகா திக்திக் மனதுடன் வியர்த்து வழிய தனது கையிலிருந்த மோதிரத்தை மேனி நடுங்க ரன்வீர் கைவிரலில் போட்டு விட்டாள். அப்போது அவளது மனதிற்குள் ஏதோ ஒன்று உறுத்த அவள் ஏதேச்சையாக நிமிர்ந்து பார்க்க... அங்கே ராம் ராகவேந்தர் பெரும் அதிர்ச்சியுடன் இந்தக் காட்சியைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

"ராம்..." அவளது இதழ்கள் மெல்ல முணுமுணுக்க...

அவள் அழைத்தது அவனுக்குக் கேட்டதோ என்னவோ! அவளைக் கோபமும், வெறுப்புமாய்ப் பார்த்தவன் அங்கிருந்து சென்று விட்டான்.

படபடக்கும் மனதுடன் காரை ஓட்டி கொண்டு வந்த ராம் ராகவேந்தர் கடற்கரை ஓரம் காரை நிறுத்தி விட்டு கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். கடற்கரை ஓரமாக மண் அரிப்பதை தடுப்பதற்காகப் போட்டு வைத்திருந்த கற்கள் மீது ஏறி நின்றவன் தொடுவானை வெறித்துப் பார்த்திருந்தான். அந்தக் கணம் அவன் கொண்டிருந்த கனவு கலைந்து போனது, அவனது கற்பனை கோட்டை நகர்ந்து போனது. ஆகமொத்தம் எல்லாம் அவனது விட்டுப் போயிருந்தது. அப்போது ராட்சச அலை ஒன்று ஆளுயரத்திற்கு எழும்பி அவன் மீது மோதி அவனை முழுவதுமாய் நனைத்தது.

கடல் நீரின் குளுமை கூட மன்னவனின் மனதின் வெம்மையைத் தணிக்க இயலவில்லை!!!

“மௌனமான மரணம் ஒன்று
உயிரைக் கொண்டு போனதே
உயரமான கனவு இன்று
அலையில் வீழ்ந்து போனதே
இசையும் போனது, திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது, நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்”

ராகமிசைக்கும்...!!!
இந்த நிர்மலா வில்லியாக முயற்சி பண்ணுதோ🤔🤔

ராம் பற்றி சொல்லுறதுக்கு ஒண்ணுமில்ல🤷🏼‍♀️🤷🏼‍♀️

சூப்பர் யூடி ஸ்ரீமா😍😍😍😍
 

Srini Sharmila

Active member
அருமையான ud மா
ராம் அப்படி ஈஸியா அவனோட அம்முவை விட்டு தர மாட்டானே
அடுத்து என்ன அதிரடி பண்ண போறான்
அந்த நிர்மலா ராமுக்கே duff கொடுக்கறாளே

செம்ம செம்ம ராமின் அடுத்த அதிரடியை காண waiting ஸ்ரீ மா ❤❤❤❤
 
Top