All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் 'உயிர் கொன்ற காதல் உறவகுமா!' கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மறந்து விட்டாலோ என்று கூட தோன்றியது.. ஆனால் இல்லை என உறுதியாய் மறுத்தது அவன் மனது. அவனின் ஆழ்மனதை என்றும் நம்புவான். இக்கணமும் அது போய் இல்லை என்றே தோன்றியது. இருந்தும் அமைதி காத்து அவளையே பார்த்தவாறு நின்றான்.



அதில் உள்ளே சிவந்தாலும் வெளியில் முகத்தை கோபம் போல் கடினமாய் வைத்துக் கொண்டவள் “ஏலே... யாருலே நீயி... எதுக்குவே இப்பிடி பார்குதவ... முன்னே பின்னே பெண்டுகள பார்த்ததில்லையோ...” கேலி செய்ய...



அவளின் நோக்கம் புரிந்து “உம்ம போல அழகிய பார்த்தது இல்லவே..” என்றான். காந்தம் போல் ஈர்க்கும் குரலில்.



அந்த குரல் அவளை மொத்தமாய் புரட்டிப் போட்டது. வசியம் செய்யும் குரலுக்கு சொந்தக்காரன். பேச்சிலே எல்லோரயும் மயங்க வைத்து விடுவான். அது தான் இன்றும் அவனுக்கு கைகொடுத்தது.



இத்தனை நாளாய் தன் அழகை நினைத்து பெருமை படாதவளையே தன் அழகின் மேல் கர்வம் கொள்ள வைத்தான்.



இருந்தாலும் அவள் அதை காட்டி கொள்ளவில்லை. “பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்வே... உம்ம பொய்யையும் புரட்டையும் வேற எந்த சிறுக்கி கிட்டயாவது வச்சுக்கோவே... என்ர கிட்ட வம்பு பேசினே தல வேற முண்டம் வேறயா உருளும்வே... பேச்ச பாரு பேச்ச... போய்யா... போய் ஊர் போய் சேரும்..” என அவன் வந்த வழியை காட்டினள்.



அவன் அசையவில்லை. அவளை பார்ப்பதை நிறுத்தவும் இல்லை.



அதில் அவளுக்கு சினம் துளிர்த்தது. என்னதான் மனதிற்கு பிடித்தவனாய் இருந்தாலும் அந்நிய ஆடவனின் பார்வை தன்னை உரிமையுடன் பார்வையிடுவதை அவள் விரும்பவில்லை..



“என்னவே சொன்ன கேக்க மாத்திகளோ... எதுக்குவே திரும்ப திரும்ப இப்பிடியே பாக்குதவே... கண்ணை நோண்டிப் போடுவேன்லே... என்னைய பத்தி உமக்கு சரியா தெரியாவே... பார்க்கத்தான்வே இப்பிடி இதுப்பேன்... சீண்டிப் பார்த்தா அருவா எடுத்து ஒரே சீவா சீவிடுவேலே... ஐயா ஆத்தாக்கு ஒத்த புல்லையாலே நீயி... இல்லன்னா சொல்லுவே சீவிடுதேன்...” என எகிற...



அவளின் பேச்சை ரசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தவன் “நான் கடைக்குட்டி தான்லே... நீ அருவா எடுத்து வந்து சீவு புள்ள...” என சீண்ட..
அவனின் பேச்சை கேட்டு ஆடிப்போனவள் ‘அம்மாடியோ இந்த எடுபட்ட பயலு சரியான ஆளா இருப்பான் போலவே... இப்ப என்ன பண்ண போத மத...’ என தனக்குள் கேட்டுக் கொண்டவள் அவனை முறைத்தவாறு “அப்பிதியா... அப்போ இங்கனவே நில்லுவே... வூட்டுக்கு போய் அருவா எடுத்து வருதேன்...” என்றவள் திரும்பி ஓடினாள்.



ஓடும் அவளை கண்கொட்டாமல் ரசித்தவன் “ஏய் சண்டிராணி... எங்கடி ஓடுத... தகிரியம் இருந்தா நில்லுவே...” என்றான் உரத்த குரலில்.
அதில் ஆணியடித்தது போல் அதிர்ந்து நின்றாள் மதை. ‘டி போட்டு பேசுதாவே... இந்த பயலுக்கு யார் கொடுத்த தகிரியம்வே... எடுபட்ட பயலு.. ஆளையும் மொகரையும் பாரு..’ என முன்தினம் போல் இன்றும் அவனிற்கு வசை மழை பொழிந்தவள் அவனின் புறம் திரும்பி மீண்டும் அவனருகில் நடந்து வந்தாள்.



“ஏன்வே எதுக்குவே என்ன சீண்டுத... பேயாம போய்டுவே... என்ர கோவத்த பத்தி உமக்கு தெரியாது சொன்னா கேளுவே...” என அடக்கப்பட்ட குரலில் கூற...



“அப்புடி என்ன பொல்லாத கோவம்னு நானும் பாக்குதேன் காட்டுவே சண்டிராணி...” கிண்டலுடன் உரைத்தான்.



“ஏய்... யாருலே சண்டிராணி... என்ர பெயரு உமக்கு சண்டிராணியா... கொன்னுருவேன்... என்ர பெயரு எத்தன அழகான பெயருன்னு உமக்கு தெரியுமாவே... சண்டிராணியாம்... சண்டிராணி.... தோள உரிச்சிப்புதுவேன்...” என மூச்சு வாங்க சிறு குரலில் கத்தினாள்.



பதிலுக்கு எதுவும் பேசாமல் அவளின் கோபத்தையும் ரசித்தான் அந்த வசியக்காரியின் மனதை வசியம் செய்தவன்.



இருவருக்குள்ளும் ஒரு முழுமையான நிறைவு. இருவருமே ஒருவருடன் ஒருவர் வார்த்தையாட விரும்பினர்.



பார்த்து ஒரு நாள் கூட முழுமையாக கழியாத பொழுதும் கூட இருவரினுள்ளும் ஆண்டாண்டாய் பழகியது போல் புரியாத உணர்வு.



இருவருக்கும் இது காதலா என பிரித்தறிய முடியவில்லை. ஆனால் இருவருக்கும் ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு பித்து பிடித்ததை போல் இருந்தது.



ஆனால் ஏனென தெரியவில்லை. தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பந்தம் கடவுள் போட்ட முடிச்சு என்பதை இருவரும் அறியவில்லை.
அறிந்தாலுமே விதிப்படி தான் அனைத்தும் நடைபெற போகின்றது எனும் போது அதை இவர்களால் தடுக்கவா முடியும்.



சற்று நேரத்தின் முன்பு தனக்கும் தன் மாமன் மகளுக்கு நடந்த நிச்சயத்தை மறந்திருந்தான் பார்த்திபன். அவன் அவளிடத்தில் மறைக்க நினைக்கவில்லை. ஆனால் அவளை பார்த்தாலே அவனுக்கு எதுவும் நினைவில் நிற்பதில்லையே.. அவளை தவிர...



ஒருவேளை அதை அவளிடத்தில் முன்பே சொல்லியிருந்தால் அவள் மடிந்து போவதை தடுத்திருக்காளோ..



ஆனால் யாராலும் எதையும் முன்கூட்டி அறியமுடியாதே.. பாவம் அவனும் என்ன செய்வான். தன்னால் தன் வசியக்காரி மடிந்து போவாள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லையே. அறிந்திருந்தால் இதோ இக்கணமே அவன் அதை உரைத்திருப்பான்.



ஆனால் அவன் நினைவலைகளில் சற்று முன் நடந்த வைபோகம் எதுவும் நினைவு இல்லை.



இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் தழுவிக் கொண்டனர். எதுவும் பேசவில்லை. வாயாடியான மதை கூட இன்று அவனின் விழி வீச்சில் மயங்கிப் போய் இருந்தாள்.



அத்தனை வீரியத்துடன் அவன் விழிகள் அவளை பருகியது. அவளை அங்குலம் அங்குலமாய் பிரித்தறிந்து அவள் மேனி எங்கும் ஊர்ந்தது.
அதில் அவளின் தளிர் மேனி நடுங்கியது. அந்த பார்வையை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதில் பயம் கவிழ்ந்தது. இந்த பட்ட பகலில் யாராவது இவ்வழியால் வந்தால்.. தங்கள் இருவரையும் பார்த்தால்.. என்ன ஆகும்... அதன் பின் நடப்பதை பற்றி யோசிக்க விரும்பாதவளாய் அவனின் பார்வையை தவிர்த்து மறுபுறம் திரும்பியவளின் கை விரலகள் நடுங்கியது. மேனி சில்லிட்டு போயிருந்தது.
அதை அவனிடத்தில் காட்ட விரும்பாதவளாய் முந்தானையை விரலால் சுருட்டி விளையாடினாள். ஏனோ ஆறுதலாய் இருந்தது. அப்போது தான் தெளிவாய் சிந்திக்கவும் முடிந்தது. இனி இதற்கு மேல் இங்கு நிற்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றவும் அவனை பார்க்காது காலை எட்டி வைத்தவளின் கைகளை அழுந்த பற்றினான் பார்த்திபன்.



அதில் அச்சத்துடன் அவனை பார்த்தவள் “எதுக்குவே என்ர கைய பிடிக்குதே... கைய விடுவே... ஏலே கைய விதப்போரீயா இல்லையாலே... யாரவது இங்கன வந்தா பிரச்சினை ஆகிடும்வே...” என்றபடி கையை உருவ முயன்றாள்.



முடியவில்லை... அத்தனை இறுக்கமாய் பிடித்திருந்தான்... அவனின் மனமும் இறுகிப் போனது. இவளை இழந்து விடுவோமோ எனும் பயத்தில்.



அப்போது தான் அவனிற்கு அவனின் மனநிலை புரிந்தது. இவளின்றி தானுமில்லை. நேற்று ஒரு சில நிமிடங்கள் பார்த்த பெண்ணிடத்தில் தனக்கு தோன்றியது காதல் என அவன் புரிந்து கொண்ட உண்மை அவனை சிறகின்றி வானில் பறக்க வைத்தது.



வேகமாய் வீசிய காற்று அவர்களை தழுவிய நொடி அசையாது நின்றது போல்... இணையுடன் பறந்து கொண்டிருந்த புள்ளினங்கள் இவர்களின் ஜோடிப்பொருத்தத்தை அதிசயித்து அந்தரத்தில் அசைய மறுத்து நிற்க... பாய்ந்தோடிக் கொண்டிருந்த காவேரியின் பரிசுத்தமான நீரலைகள் தன் தோழியின் மனதை வெல்லப்போகும் ஆடவனை பார்த்து அவளுக்கு வாழ்த்து கூறுவதற்காய் மேலெழும்பி நிற்க... அந்த கணம் தனக்காவள் யாரென புரிந்து கொண்டவனின் மனநிலை பிரசவம் முடிந்து தன் குழந்தையை கையிலெடுக்கும் அன்னையின் மனநிலையை ஒத்து இருந்தது.



உன் மணாளனின் மனதில்
வேறு பெண்ணொருத்தி குடியிருப்பதை
அறிந்தால் வேதனை கொண்டு வீழ்வாயா?

வீறு கொண்டு எழுவாயா...?


உறவாகும்...


தொடரும்....
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்...

அடுத்த பதிவை பதிவு பண்ணிவிட்டேன்...
பார்த்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
எப்படி இருந்தது... எது பிடித்தது.... எங்கு சொதப்பியது.... எல்லாத்தையும் சொல்லுங்க டியர்ஸ்...


(கருத்து சொல்ல யாராவது மறந்தீங்க நான் உங்க யார் கூடவும் பேசமாட்டேன் டியர்ஸ்...:cry::cry:;))

உங்கள் கருத்துகளுக்காக
ஆவலுடன்

RJ
:smiley3:
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரென்ட்ஸ்...
எனக்கு சிறிது நாட்களாக உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கதையை பாதியில் நிறுத்துகிறேன்..
எப்போது ஆரம்பிப்பேன் என தெரியவில்லை..
கூடிய விரைவில் வர முயற்சி செய்கிறேன்.
கருத்துக்கள் பதிவிட்ட அத்தனை பேருக்கும் நன்றி...
பதில் போடாமல் விட்டதற்கு மன்னிக்கவும்.

RJ...
 
Status
Not open for further replies.
Top