All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் கள்வனே காதலனாக! கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யுத்கார்ஷின் வீட்டில் அமர்ந்திருந்த பெரியவர்கள் அப்போது தான் தங்கள் பேச்சை முடித்துக் கொண்டு நேரத்தை பார்க்க நேரம் நள்ளிரவை தொட்டுக் கொண்டிருந்தது...


அதை பார்த்து சப்தமாய் சிரித்த அகிலாண்டேஸ்வரி “சாப்பிட்டு மாத்திர போட்டுட்டு எட்டு மணிக்கெல்லாம் தூங்குற நான் எவ்ளோ நேரம் உற்கார்ந்து பேசியிருக்கேன்னா அதிசயம் தான் போங்க...” என மீண்டும் சத்தமாய் சிரிக்க அதை கேட்டு மற்றவர்களும் அவருடன் இணைந்து சிரிக்க அதை பார்த்து தானும் வேறு வழியின்றி இளித்து வைத்தாள் பின்டோ...


‘இந்நேரம் வின்னி மட்டும் இங்க இருந்திருக்கணும்... இவங்கள ஓட்டியே தள்ளியிருப்பா....’ என எண்ணியவளுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்து தொலைக்க சத்தம் போட்டு சிரித்து வைத்தாள் அவள்...


அவளது சிரிப்பு சத்தத்தில் மற்றவர்கள் அனைவரும் அவளை ஒரு மாதிரியாய் பார்த்து வைக்க அதில் கடினப்பட்டு தன் சிரிப்பை அடக்கியவள் எல்லோரையும் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்து வைத்தாள்.


அதை பார்த்து தனக்கு வந்த சிரிப்பை அடக்கிய ஜொகி அவளை பார்த்து என்னவென்று கண்களால் வினவ... அவளோ ஒன்றும் இல்லை எனும் விதமாய் தலையசைத்து வைத்தாள்.


அதை கவனித்த ருத்ரா பின்டோவை நோக்கி “என்னம்மா... தனியா சிரிக்கிற... எங்ககிட்ட சொன்னா நாங்களும் சேர்ந்து சிரிப்போமே...” கிண்டலாய் கேட்க...


அதில் திடுக்கிட்டவள் ‘இப்போ மட்டும் நான் நினைச்சத சொன்னேன்... கிரேன்ட்மா சாமி ஆடினாலும் ஆடுவாங்க...’ என எண்ணிக் கொண்டவள் என்ன சொல்றது என யோசித்துக் கொண்டிருக்க அதே சமயம் அவளுக்கு உதவுவதற்காய் கடவுளால் அனுப்பப்பட்ட சோதனை எலியாய் தானே வலியப் போய் மாட்ட போவது தெரியாமல் அவளை பார்த்து சிரித்து வைத்தான் ஜொகி.


அதேநேரம் சரியாய் அவன் பக்கம் திரும்பிய பின்டோ அவனின் சிரிப்பை பார்த்து ‘ஐ... எலி சிக்கிடிச்சு...’ என சந்தோசப்பட்டு கொண்டு..


“அது ஒன்னுயில்ல ஆன்டி... ஒமி தான் ஜோக்ன பேர்ல ஏதோ சொன்னாரு... அத கேட்டு தான் சிரிச்சேன்...” என கூறி இளித்தவள்...


“ஒமி நீங்க சொன்ன ஜோக்... எனக்கு சரியா புரியல ப்ளீஸ்... இன்னுமொரு தடவ சொல்லுங்களேன்...” என சிரிக்காமல் கூற.. அதை கேட்டு பல்லை கடித்து வைத்தான் ஜொகி..


‘நான் என்ன ஜோக் சொன்னேன்னு இவ இப்போ என்ன மாட்டிவிட்டிருக்கா... இல்ல நான் அவகிட்ட உண்மையிலேயே ஏதாவது ஜோக் சொன்னேனா... இல்லையே... எனக்கு ஞாபக மறதி இருந்தாலும் இந்தளவுக்கு இருக்காதே...’ என தலையை பிய்த்து கொண்டிருக்க அதை பார்த்து அவன் மேல் பரிதாபப்பட்ட யுத்கார்ஷ் தன் செல்போனில் நேரத்தை பார்த்து விட்டு “ஓகே மாம்... எனாப்... ரொம்பவே லேட் ஆகிடிச்சு... எல்லாரும் போய் ரெஸ்ட் எடுங்க...” என அழுத்தமாய் உரைத்தவன் தேவியின் குடும்பத்தினரை பார்த்து “நீங்களும் இங்கயே ஸ்டே பண்ணிக்கோங்க... மிட் நைட் ஆகிடிச்சே...” எங்க...


அது புரிந்தாலும் அது இதுவென காரணம் சொல்லி அங்கயிருந்து தன் குடும்பம் சகிதம் அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தார் அகிலாண்டேஸ்வரி...


அவர்களுடன் இணைந்து கிளம்ப எத்தனித்த தன் அண்ணனையும் அண்ணியையும் வற்புறுத்தி அங்கு தங்க வைத்த ருத்ரா அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் உடல் ஓய்வு கேட்டு கெஞ்ச தன் அறைக்குள் போய் கணவனின் உதவியுடன் படுக்கையில் சாய்ந்து மருந்து மாத்திரையை உண்டவர் அப்படியே இருந்தவாக்கிலே துயிலில் ஆழ அதை பார்த்து சிரித்த சித்தார்த் மனைவியை சரியாய் கட்டிலில் உறங்க வைத்துவிட்டு மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவர் தானும் உறங்கிப் போனார்.


எல்லோரும் உறங்க சென்றதும் தன் அறைக்குள் நுழைந்தவனுக்கு வெறுமை சூழ்ந்து கொள்ள அங்கிருக்க பிடிக்காமல் மனைவி இருந்த அறைக்கு வந்தவன் அங்கு அவள் தூங்கும் அழகாய் சிறிது நேரம் ரசித்து விட்டு தானும் அவளருகில் படுக்கையில் சரிந்தவன் அவள் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டு அவள் இடையில் கை போட்டவன் வெறுமை மறைந்து மகிழ்வுடன் துயிலில் ஆழ்ந்தான்.


ஆழ்ந்த துயிலில் இருந்த மலர் குழந்தையின் அழுகுரலில் தூக்கம் கலைந்து எழ முயற்சித்தவள் அதுமுடியாமல் வயிற்றில் ஏதோ கனப்பது போலிருக்க பதட்டத்தில் விழி விரித்து பார்த்தவள் அங்கு கணவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.


‘ஐயோ.... இவரா...’ என முதலில் பதறியவள் ‘இவர் எப்போ இங்க வந்தாரு... அவரோட ரூம தவிர எங்கயும் தூங்க மாட்டாரே... அப்றோம் எப்பிடி...’ என எண்ணியவள் அதற்கான விடைக்காது போகவும் தலையை தட்டிக் கொண்டு மீண்டும் எழ முயற்சித்தவள் அப்போது தான் சரியாய் கவனித்தாள்.


தன் கணவன் தன் இடையில் கை போட்டுக் கொண்டு சுகமாய் துயிலில் ஆழ்ந்திருந்ததை.. அதை பார்த்து திடுக்கிட்டவள் ‘இவர் எதுக்கு என்மேல கைய போட்டுக்கிட்டு தூங்குறாரு’ என படபடப்புடன் எண்ணியவளுக்கு உண்மையிலேயே அந்த நொடி படபடப்பாய் தான் இருந்து வைத்தது...


தான் அருகில் வந்தாலே எடுத்தெறிந்து பேசும் கணவன்.... தான் அருகில் வந்தால் தன் தகுதி குறைந்து விடும் என எண்ணும் கணவன்.... தன்னால் தன் நிம்மதி போய்விட்டதென புலம்பும் கணவன்.... தன்னை சாதாரணமாய் கூட மதிக்காத கணவன்.... தன்னை வேசியாய் எண்ணி தொடும் கணவன்.... இன்று முதன் முதலில் அந்த எண்ணங்கள் எதுவுமின்றி தன்னை அணைத்து கொண்டு தூங்குவதை பார்த்தவளுக்கு மனதுக்குள் அத்தனை நிம்மதியாய் இருந்தாலும் ஒருபுறம் காதலில்லாமல் தன் கணவன் தன்னுடன் இழைகிறாரே என அத்தனை வெறுப்பாகவும் இருந்தது...


ஒரு சில நிமிடங்கள் தன்னை மறந்து சிந்தனை வயப்பட்டு இருந்தவள் குழந்தை உரக்க சத்தமிட்டு அழவும் பதறிப்போய் கணவனின் கையை உதறிவிட்டவள் அவசரமாய் தொட்டிலில் இருந்த குழந்தையை எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டு அதன் பசியை ஆற்றினாள்.


தன் தாயின் மார்புக்குள் அடங்கிய நிம்மதியோ என்னவோ அவளின் மகவு சமர்த்தாய் தன் பசியை ஆற்றி விட்டு மீண்டும் சிறிது நேரத்தில் துயிலில் ஆழ.... தூங்கும் தன் மகளையே சிறிது நேரம் கையில் வைத்திருந்தவள் அவளின் நெற்றியில் மென்மையாய் இதழை ஒற்றி எடுத்து விட்டு மீண்டும் அவளை தொட்டிலில் போட்டு விட்டு தனக்கு தலையணையும் போர்த்துவதற்கு போர்வையையும் எடுத்தவள் கீழே அதை விரித்து அதில் படுத்துக் கொண்டாள்.


தன்னவள் தன்னை விட்டு அகன்றதை ஆழ்ந்த தூக்கத்திலும் கூட உணர்ந்த யுத்கார்ஷ் பதட்டத்தில் எழுந்தமர்ந்து தன்னவளை தேடியவன் அவள் கீழே உறங்குவதை பார்த்ததும் இதயம் ரணமாய் வலிக்க தானும் அவளருகில் சென்று அவளுடன் ஒட்டி உரசியவாறு மீண்டும் துயிலில் ஆழ்ந்தான்.


இதுவரையிலும் எதற்காகவும் தரையில் அமரக்கூட செய்யாதவன் இன்று தன் மனையாட்டிக்காய் அவளருகில் தரையில் படுத்து துயிலில் ஆழ்ந்தான்.


ஆனாலும் அத்தனை சுலபத்திலும் அவனுக்கு உறக்கம் வந்தபாடாய் இல்லை. இதுவரையிலும் தரையில் படுத்து பழக்கமில்லாதவனின் உடல் வலியில் முனகினாலும் அதையும் தாண்டி அவன் மனைவியின் மேல் கொண்ட காதல் அந்த வலியை கூட சுகமாய் ஏற்கவே அவனை தூண்டியது...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத்தனை நாளாய் அதுவும் அவள் இந்த வீட்டை விட்டு சென்றதிலிருந்து சரியாய் தூங்காமல்... சாப்பிடாமல் இரவுபகல் பாராது அலுவலகமே கதி எனக் கிடந்தவன் இன்று தான் பல நாட்களின் பின் நிம்மதியான தூக்கத்தை தழுவியிருந்தான்


ஆதவனின் கதிரொளி அந்த அறைக்குள் நுழைந்து அங்கு துயில் கொண்டிருந்த பெண்ணவளின் மலர் முகத்தை மலரச்செய்ய அதில் அவளின் விழியிரண்டும் கூச தன் தளிர் விரல்கள் கொண்டு விழியை மூடியவள் கண்களை மூடியபடியே எழுந்தமர்ந்து தன் விழிகளை மலர்த்தினாள்.


முகத்தை அழுந்த துடைத்து கொண்டு கண்களை நன்றாக மலர்த்தி அருகில் இருந்த குழந்தையை பார்க்க முயற்சித்தவள் அப்போது தான் தரையில் படுத்திருந்த கணவனை பார்த்து பதறிப்போய் எழுந்து நின்றாள்.


‘இவரு கட்டில்ல தானே படுத்திருந்தார்... அப்றோம் எப்பிடி...’ என புரியாமல் தலையை சொரிந்தவள்...


‘அச்சச்சோ... அப்போ நான் கனவுன்னு நெனச்சு கட்டிப்பிடிச்சது எல்லாம் இவர தானா... ஐயோ... என்ன என்னன்னு நினைச்சிருப்பாரு.... சும்மாவே வேசி... வேசின்னு வார்த்தைக்கு வார்த்தை பேசுவாரு... இப்போ என்ன சொல்ல போறாரோ...’ என அவனின் விஷயம் தோய்ந்த வார்த்தைக்களுக்கு அஞ்சி உள்ளுக்குள் பயத்துடன் எண்ணிக் கொண்டவள் தொட்டிலில் இருந்த குழந்தையை அள்ளிக் கொண்டு கீழிறங்கி சென்றுவிட்டிருந்தாள்.


அவள் அவசரமாய் விரையும் போது கிணுகிணுத்த அவளின் கொலுசொலியில் கண் மலர்த்திய யுத்கார்ஷ் அவள் விரைவாய் செல்வதன் காரணம் புரிந்தது போல் அவனின் முகம் ஒரே சமயத்தில் மகிழ்ச்சியையும் வலியையும் பிரதிபலித்தது.


மகிழ்ச்சி அவள் தூக்க கலக்கத்தில் தன்னை கட்டியணைத்துக் கொண்டு தூங்கியதால்.... அந்த மரண வலியோ தன்னவளை தான் வார்த்தையால் துன்பப்படுத்தியதால்...


தன் துன்பத்தையெல்லாம் தனக்குள் போட்டு புதைத்தவன் முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று குளித்து அலுவலகம் செல்ல தயாராகியவன் படிகளில் நிதானமாய் இறங்கி வந்தான்...


அதேநேரம் சமையல் அறையில் இருந்து வெளியில் வந்த மலர் கணவனின் காலடியோசை கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த கணவனையே இமைக்க மறந்து வெறித்தாள்.


பளீர் வெள்ளை நிற ஷேர்ட்டும் கருநீல நிற கால்சட்டையும் அதே நிறத்தில் கோர்ட்டும் அணிந்திருக்க அந்த நிறம் அவனின் அழகை மேலும் எடுப்பாய் கட்டியிருந்தது.


‘அவருக்காவே பார்த்து பார்த்து அளவெடுத்து தச்சது போல எம்புட்டு அழகா உடுத்திருக்காரு...’ என தனக்குள் எண்ணியவள் தன்னை குனிந்து பார்த்தாள்...


அன்று மலர்ந்த மலர் போல் ரோஜா வண்ண சாதாரண சேலையில் அதுவும் குழந்தையை வைத்திருந்தததில் அது ஆங்காங்கே கசங்கிப் போய் இருக்க முகத்தில் வியர்வை வழிய பெண்மையின் இலக்கணத்தில் அழகாய் அவள் மிளிர்ந்தாலும் அவளுக்கு ஏனோ தான் வெற்று கிரகவாசி போல் இருப்பது போலவே ஒரு மாயை உருவாக அதை தடுக்கும் வழியறியாது தன்னுடன் அவனை நிலைநிறுத்தி பார்த்தவளுக்கு காட்டு யானைக்கு அருகில் நிற்கும் சுண்டெலி போல் தன்னை எண்ண தோன்றிற்று..


அந்த எண்ணமே உடனடியாய் அவன் வாழ்க்கையில் இருந்து விலகி செல்ல வேண்டும் என்ற அவளின் முடிவை உறுதியாக்க அந்த முடிவு அவள் இதயத்தை இரண்டாய் பிளந்தும் கூட அதை தாங்கிக் கொண்டாள் அதுவும் தன் கணவனுக்காக....


“பேபி... ஒய்... பேபி.... சின்னு... அழகி...” என விதவிதமாய் தன் முன் நின்ற மனைவியை அழைத்து பார்த்தவன் அவள் அசையாது சிலை போல் அப்படியே நிற்கவும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு மெதுவாய் அவளருகில் நெருங்கினான்.


அவளருகில் நெருங்கியவனின் நாசியில் அவளுக்கே உரித்தான மனம் அவன் சுவாசத்தை தீண்டி அவனின் உணர்வுகளை தூண்டி விட அவள் அனுமதியின்றி (அவன் புதிதாய் எடுத்த சபதமுங்கோ) அவளை தீண்டவும் முடியாமல் அவளை தீண்டாமல் விலகவும் முடியாமல் தவித்தவன் அவனுக்கும் அவளுக்கும் ஒரு இன்ச் இடைவெளியில் நின்று கொண்டவன் அவள் கழுத்தருகில் நெருங்கி அழ மூச்சிழுத்து விட்டவனுக்கு சரக்கடிக்காமலே போதை குப்பென ஏறியது போல் இருக்க தன்னை கட்டுப்படுத்தியவன் அவள் காதுக்குள் “கூஊஊஊஊஊஊ” என சத்தமிட்ட கத்த....


“ஆஆஆஹ்ஹ்.... ஹான்ன்ன்...” என திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தவள் விலக எத்தனித்த போது அவனின் உடலில் அவளின் அங்கங்கள் உரச அதில் அவள் பெரிதும் கலங்கிப்போனாலென்றால் அதைவிட ஒரு படி அதிகமாய் அவன் கலங்கிப்போனான்.


எங்கே தான் தவறாய் நினைத்து விடுவோமோ என மனைவி தன்னையே வருத்தி கொள்வாளோ என்று தான் அவன் கலங்கிப்போனான்.


அவன் எண்ணியது சரியே என்பது போல் ‘கடவுளே... இது தெரியாம நடந்துடிச்சு... அவர் என்னப்பத்தி எதுவும் தப்பா நினைக்காம பார்த்துக்கோ...’ என கடவுளிடம் வேண்டியவள் அவனிடம் மன்னிப்பு கேட்க எத்தனிக்க அதை கண்டு கொண்டவன் அவளின் எண்ணத்தை திசை மற்றும் பொருட்டு...


“ஹலோ மேடம்... நான் ரொம்ப ஹேண்ட்சம்மான பையன்னு எனக்கே நல்லா தெரியும்... அதுக்காகெல்லாம் நீங்க இப்பிடி என்னை வெறிச்சு வெறிச்சு பாக்கனும்னு எந்த அவசியமும் இல்ல... அண்ட் என்னை செக்அவுட் பண்ணதும் போதும்...” என குரலில் கிண்டல் தெளிக்க கூறியவன் அவளை இடிப்பது போல் வந்து அவளை தாண்டி தன் தாயின் அறைக்குள் கதவை தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு நுழைந்தான்.


அவன் சென்றதும் புரியாமல் அவன் சொல்லிச்சென்ற வார்த்தைகளே அவள் காதினில் ஒலித்து கொண்டிருக்க ‘அச்சச்சோ அப்போ நான் பார்த்தத அவரும் பார்த்திட்டாரா... நேத்து வாய் கிழிய விவாகரத்து பத்தி பேசிட்டு இன்னைக்கு அவர கட்டிபிடிச்சு தூங்கினதும் இல்லாம அவர டாவச்சிக்கிட்டும் இருந்திருக்கேன்... என்னைய பத்தி என்ன நினைப்பாரு....’ என அவள் கலங்க...


அவளது மனசாட்சியோ ‘வேற என்ன நெனைச்சிருப்பான் உன் புருஷன்... இங்க பாருடா நம்ம அருமை பொண்டாட்டி நம்மள நல்லாவே சைட் அடிக்கிறான்னு நெனைப்பான்...’ என சாதாரணமாய் ஆரம்பித்த அவளின் மனசாட்சி....


‘அடிப்போடி லூஸு... கூமுட்ட.... உன்ன ரொம்பே கேவலமா நினைச்சிருப்பான்டி... சும்மாவே உன்ன கேவலமா பேசுவான்... இப்போ சொல்லவா வேணும்.... உன்னை பத்தி எப்பிடியெப்பிடி எல்லாம் நினைச்சிருக்கானோ.... யாருக்கு தெரியும்... ஒன்னு சொல்றேன் நல்லா கேளு.... இனிமே அவன் இருக்கிற திசைப்பக்கமே போகாம கப்புன்னு வாய மூடிக்கிட்டு இரு... என்ன புரிஞ்சதா...’ என அது அவளை அதட்ட ‘பூம்’ ‘பூம்’ மாடு போல் தலையசைத்தவள் சமையல் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த உணவுகளை சாப்பாட்டு மேசையில் அடுக்கி வைத்தவள் தானும் அத்தையின் அறைக்குள் நுழைந்தாள்.


அங்கு தன் மகளுடன் விளையாடிக் கொண்டிருந்த கணவனை பார்த்தவளுக்கு கண்ணில் நீர் சுரந்தாலும் அதை மறைத்து இமை சிமிட்டி சரி செய்தவள் “அத்த... சாப்பாடு எடுத்து வச்சிட்டேன்... வாங்க....” என அழைக்க மனைவியின் குரல் கேட்டு திரும்பியவன் மனைவியை பார்த்து சிரித்து விட்டு தன் மகளுடன் விளையாட ஆரம்பித்தவன் “மாம்... எனக்கு இன்னிக்கு ஆபீஸ் போற மூடே போய்டிச்சு... நான் இன்னிக்கு புல் டே என் பேபி கூட தான் இருக்க போறேன்” என்றவனின் பார்வை என்னவோ குழந்தை மேல் அல்லாமல் மனைவியிடத்தில் தான் நிலைத்திருந்தது...


அதை பார்த்து அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றாலும் அதை மறைத்துக் கொண்டு அவனை முறைத்து வைத்தாள் அவள்....


அதே நேரம் அங்கு வந்த சித்தார்த் “இங்க என்ன பண்ற த்ருவா... நீ ஆபீஸ் போகலையா....” என்க...


அவரை பார்த்து முறைத்தவன் ‘இவருக்கு வேற வேலையே இல்லையா... அது எப்பிடித்தான் நான் இருக்கிற இடத்தையெல்லாம் கண்டுபிடிச்சு வந்துறாரோ.... மனுஷனுக்கு மூக்கு வேர்த்திடும் போல...’ என பல்லை கடித்தவன்...


“எனக்கு ஆபீஸ் போற மூட் இல்ல...” என்றவன் மீண்டும் தன் மகளை கொஞ்ச ஆரம்பிக்க...


அவனை முறைத்த சித்தார்த் “இன்னிக்கு இம்போர்டன்ட் கிளைன்ட் மீட்டிங் இருக்கு....” என கண்டன குரலில் கேட்க...


‘ஷிட்’ என காற்றில் கையை அசைத்தவனுக்கு அது சற்று ஞாபகம் வரவில்லை... தலையை உலுக்கி தன்னை சமன் படுத்திக் கொண்டவன் அதன் அவசியம் புரிந்தவனாய் “ஓகே மாம்... நான் ஆபீஸ் போய்ட்டு சீக்கிரம் வாறேன்...” என்றவன் தன் மகள் அருகில் குனிந்து அவள் நெற்றியில்முத்தமிட்டவன் “டாடி போய்ட்டு வரேன் பேபி... சீக்கிரம் வரேன்... வெயிட் பண்ணுங்க ஒகே...” என்றவன் தன் பிரீப்கேஸுடன் அவசரமாய் கிளம்பியவன் மனைவியை பார்த்து கண்சிமிட்டி விடைபெறவும் தவறவில்லை..


அதை பார்த்து அவசரமாய் தலையை குனிந்தவள் அவன் சென்ற பின்னும் சமனிலைக்கு வர பல நொடிகள் எடுத்துக் கொண்டது...


அதன் பின் அத்தை மாமாவிற்கும் தன் பெற்றோருக்கும் உணவை பரிமாறியவள் தானும் உணவை உண்டு விட்டு குழந்தையுடன் சிறிது கழித்தவள் சிறிது பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்தவளுக்கு அப்படியே நேரம் கடந்து செல்ல மாலை ஆறு மணியளவில் ஏனென்றே தெரியாமல் அவள் நெஞ்சு ஏகத்துக்கும் துடிக்க என்னவோ ஏதொவோவென பதறியவளுக்கு விடையாய் கிடைத்தது கணவனின் விபத்து பற்றிய செய்தி...


--------------------------------------------------------------------


“இப்போ அவனுக்கு ஒரு சின்ன ட்ரெய்லர் காட்டி இருக்கேன்... கூடிய சீக்கிரம் மெயின் பிக்சர் காட்ட போறேன்... அப்போ என்ன பண்றான்னு பார்க்கிறேன்...” என்றவாறு தன் அலைபேசியை வைத்தவனது அக்கௌன்டிற்கு பத்து லட்சம் பணம் போய் சேர்ந்தது..


கள்வன் வருவான்......
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 25


பல மணிநேரங்கள் வெறுமையாய் கழிந்தாலும் குழந்தையுடன் பெற்றோருடனும் அத்தை மாமாவுடனும் பேசிக்கொண்டிருந்ததில் மலருக்கு நேரம் விரைந்து சென்றது போல் தான் தோன்றியது...


மாலை ஐந்தே முக்கால் மணியளவில் மேலே இருந்த தன் அறையில் உலாவிக் கொண்டிருந்தவளுக்கு நெஞ்சு ஏனோ படபடப்பாய் தோன்ற.... உடல் வியர்வையில் வழிய ‘என்னாச்சு... ஏன் ஒரு மாதிரி இருக்கு...’ என படபடப்பாய் உணர்ந்தவள் முகத்தில் அரும்பிய வியர்வையை சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.


அப்போதும் படபடப்பு கூடியதே ஒளிய குறையாது போகவும் தலையை தடவிக் கொண்டு ‘கடவுளே... ஏன் எனக்கு இப்பிடியெல்லாம் தோணுது... இதுக்கு முன்னாலே மூணு தடவ எனக்கு இப்பிடி தோணியிருக்கு.... கொஞ்ச நாளா இல்லாம இருந்தது மறுபடியும் எதுக்கு வருது... ஏதாவது நடக்க போகுதா... யாருக்கு என்ன ஆக போகுது... அன்னைக்கு மகாவுக்கு ஏதோ ஆகபோகுதுன்னும் போது இப்பிடி வந்திச்சு... அப்றோம் ரெண்டு தடவ தேவிம்மாவுக்கு ஏதோ ஆகப்போகுதுன்னும் போது இப்பிடி வந்திச்சு... இப்போ மறுபடியும் இப்பிடி வருதுன்னா யாருக்கு.... ஓ... ஒரு.... ஒருவேல அஅஆஆஅஆ...அவ்....அவருக்கு ஏதாவது....’ என்று என்னும் போதே அவள் நெஞ்சம் தூக்கிகுத்த நெஞ்சை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றவளுக்கு நிற்க முடியாமல் கால்கள் தள்ளாட அங்கயிருந்த சோபாவில் தொப்பென அமர்ந்தவளின் கண்களில் கண்ணீர் திரையிட அவளின் நினைவுகள் பின்னோக்கி ஓடியது....


அதேநேரம் தன் அலுவலகத்தில் வேலையை முடித்து கொண்டு வீட்டிற்கு செல்ல கிளம்பியவன் என்ன தோன்றியதோ வழியில் இருந்த மிகப்பெரிய டெக்ஸ்டைலின் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன் அந்த கடையினுள் நுழைந்தான்.


அக்கடை ஏழெட்டு அடுக்குமாடி கொண்ட அதிநவீன கடை என்பதால் அங்கு பெரிதாக கூட்டம் இல்லாவிட்டாலும் பெரும் புள்ளிகளின் மக்களோ குடும்பமோ தான் அங்கு நுழைய முடியும். நடுத்தர வர்க்கத்தினருக்கு செல்லுபடியாக அந்த கடை.


அந்த கடையினுள் நுழைந்தவன் தன் செல்போனை நோண்டியவாறு முன்னேறி செல்ல அப்போது “சார்... நீங்களா.... வாட் எ சர்ப்ரைஸ் (what a surprise)” என்ற குரலில் திரும்பிப் பார்த்தான்.


அங்கு அவனின் வயதை ஒத்த ஒருவன் நின்று கொண்டிருக்கவும் அவன் யாரென புரியாமல் கூர்ந்து நோக்கியவன் ஞாபம் வரவில்லை எனும் விதமாய் புருவத்தை உயர்த்த அதை கண்டு சிரித்த அவன் “சார்... ஐயம் யக்ஷித்... உங்களுக்கு என்ன தெரிஞ்சிருக்காது.... பட் எனக்கு உங்கள நல்லாவே தெரியும்.... நீங்க போன வருஷம் ‘தி கிரேட் பிசினஸ் மேக்னெட்’ அவார்ட் வின் பண்ண த்ருவ் யுத்கார்ஷ் ராவ் அஹ்லுவாலியா சார் தானே.... நான் உங்க ரொம்ப பெரிய பேன் சார்... நான் இப்போ இந்தளவுக்கு வந்திருக்கேன்னா அதுக்கு நீங்க தான் காரணம்... நானே உங்கள ஒரு நாள் நேர்ல மீட் பண்ணனும்னு நினைத்திருந்தேன்... அது இன்னிக்கு நிறைவேறிடிச்சி... ஐயம் சோ ஹாப்பி சார்....” என மனதுக்குள் வன்மத்தை ஒலித்து வைத்துக் கொண்டு வெளியில் சாதரணமாய் பேசியவன்....


“ஒஹ் சாரி சார்... உங்கள பார்த்த சந்தோசத்துல உங்கள நிக்க வச்சே பேசிட்டேன்... வாங்க சார்... ப்ளீஸ் பீ சிட்....” என்றவன் அங்கிருந்த பணியாளரிடம் “சார்க்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுங்க...” என்றவன் அங்கு நின்று கொண்டிருந்த தன் பணியாளனிடம் “சார்க்கு என்ன வேணும்னு பார்த்து கவனிங்க...” என சமிஞ்சை செய்தவன் “சார்... ஒரு டூ மினிட்ஸ்...” என்றவன் அங்கிருந்து அகன்றான்.


அவன் அங்கிருந்து அகன்றதும் ‘ஷப்பா...’ என பெருமூச்சு விட்ட யுத்கார்ஷிற்கு அவனை எங்கோ பார்த்தது போலிருந்தாலும் நினைவு வராது போகவே தலையை உலுக்கியவன் பணியாள் கொண்டு வந்த ஜூஸை குடித்து விட்டு தன் அருகில் நின்றவனிடம் “ஸாரி செக்சன் எங்க இருக்கு...” என கேட்க...


அவனோ பணிவுடன் “வாங்க சார்...” என்றவாறு அவனை அங்கு அழைத்து சென்றவன் அங்கிருந்த சேல்ஸ்மேனிடம் “சார.... நல்லா கவனிங்க...” என அவன் காதில் முணுமுனுத்தவன் “நீங்க பாருங்க சார்” என்றவாறு அவன் அங்கிருந்து அகல....

தனக்கு முன் வைக்கப்பட்டிருந்த சேலைகளில் பார்வையை ஓட்டியவன் விலையுயர்ந்த சேலைகளை காட்டுமாறு பணிக்க அவன் கேட்டவாறே அவன் முன் விலையுயர்ந்த சேலைகள் குவிக்க பட்டது...


அதில் சில நொடிகள் பார்வையை பதித்தவன் அங்கு இரு சேலைகளுக்கு நடுவில் வீற்றிருந்த அந்த சேலையை கையில் எடுத்தான்.


மில்க் பிங்க் நிறத்தில் இருபக்கமும் தங்க நிற வேலைப்பாடு செய்த அந்த ஷிபான் புடவையை எடுத்தவன் மனக்கண்ணில் மனைவியை நிலைநிறுத்தி அந்த புடவை அவள் அணிந்தால் எப்படி இருக்குமென கற்பனை செய்தவன் முகம் மலர அதை பில் போட சொன்னவன் இன்னும் சில ஆடைகளை தேர்வு செய்து எடுத்துக் கொண்டு அனைத்திற்கும் சேர்த்து பணத்தை கொடுத்தவன் யக்ஷித்திடமும் விடைபெற்று தன் காரில் ஏறி அமர்ந்தான்.


தன்னிடம் விடை பெற்று செல்லும் தன் எதிரியை கண்களில் வன்மம் போங்க பார்த்தவன் ஏளன சிரிப்புடன் கடையினுள் நுழைந்தான்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாதி தூரம் சென்றவன் சற்று தள்ளி பூக்கடை ஒன்றிருக்கவும் அதில் தன்னவளுக்கு பூ வாங்கி செல்லலாம் என நினைத்தவன் காரை ஒடித்து திருப்ப அதற்காகவே காத்திருந்தது போல் வேகமாய் வந்த லாரி அவனை காரை இடித்து தள்ள வர ஒரே ஒரு நொடியில் சுதாகரித்து விலகியவன் விலகிய வேகத்தில் அவனின் கையிலிருந்து கார் விலக அது தன் கட்டுப்பாடின்றி அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது...


அதை சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த லாரிகாரன் “இப்போ அவனுக்கு ஒரு சின்ன ட்ரெய்லர் காட்டி இருக்கேன்... கூடிய சீக்கிரம் மெயின் பிக்சர் காட்ட போறேன்... அப்போ என்ன பண்றான்னு பார்க்கிறேன்...” என்றவாறு தன் அலைபேசியை வைத்தவனது அக்கௌன்டிற்கு யக்ஷித்திடமிருந்து பத்து லட்சம் பணம் போய் சேர்ந்தது...


மோதிய வேகத்தில் அவன் நெற்றியிலும் முழங்கையிலும் பலத்த அடி விழ “சின்னு” என முனகியவாறு ஸ்டியரிங்கில் தலை சாய்த்தவனது நினைவுகளும் பின்னோக்கி ஓடியது.


சில வருடங்களுக்கு முன்பு.....


ஹோட்டல் சவேராவில் இருந்து தன் மீட்டிங்கை பாதியில் முடித்துக் கொண்டு வந்த யுத்கார்ஷ் தனக்கு முன்னால் வந்த வாகனத்தை சரியாய் கவனிக்காமல் காரை செலுத்தியவன் அப்போது தான் அந்த லாரியை கவனித்தவனாய் சுதாகரித்து விலகியவன் பதட்டத்தில் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு மூச்சை இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவனது நிலையை அவனால் சிறிதும் புரிந்து கொள்ளமுடியவில்லை.


‘யுத்கார்ஷ்... உன்னோட கோன்சென்ரெட் எங்க இருக்கு.... இன்னிக்கி நீ நீயாவே இல்ல...’ என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன் காரிலிருந்த டின் பியரை எடுத்து குடித்துக் கொண்டு காரை செலுத்தியவன் வழக்கமாய் செல்லும் வழியை தவிர்த்து வேறு வழியில் காரை ஓட்டினான்..


அது தவறுதலாய் நடந்ததா அல்ல விதி அவனை வழி நடத்தி அப்படி செய்ய வைத்ததா என்பது அவனுக்கு அன்று புரியாத புதிராகவே இருந்த போதும் ஒரு வருடத்திற்கு முன்பு அது அவனுக்கு தெள்ளத்தெளிவாய் புரிந்து போனது.


அப்போது தான் வேறு வழியில் தான் வண்டியை செலுத்தியதை எண்ணி தலையிலடித்துக் கொண்டு காரை திருப்ப எத்தனித்தவன் தூரத்தில் ஏதோ இருப்பது போல் தெரியவும் கண்களை கசக்கிக் கொண்டு என்னவென்று பார்த்தவன் தெளிவாய் விளங்காது போகவும் காரை அதனை நோக்கி செலுத்தினான்.


காரை அந்த மரத்தடியில் நிறுத்தியவன் கீழிறங்க முயற்சிக்கும் போது காற்று வேகமாய் வீசி மண்துகல்களை வாரியிறைக்க கண்களை கசிக்கிக் கொண்டு அது என்னெவென பார்க்க அருகில் செல்லும் போது அவளின் சேலை முந்தானை அவளின் முகத்தை மறைத்து விட்டிருந்தது.


என்னவோ ஏதொவோவென எண்ணி அங்கு போனவன் அங்கு ஒரு பெண் நிலைகுலைந்த நிலையில் இருக்கவும் பதறிப்போய் விட்டான்.


நெஞ்சுக்குழி ஆத்திரத்தில் ஏறியிறங்க மூச்சு விடக்கூட சிரமப்பட்டவனுக்கு ஏனென்றே தெரியாமல் இதற்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் எனும் அளவு வெறி கிளம்ப அதை கட்டுக்குள் கொண்டு வந்தவனுக்கு ‘முதல்ல இந்த பொண்ண எப்பிடியாவது காப்பத்தனும்’ என்ற எண்ணம் தோன்ற அவளருகில் நெருங்கியவன் அவள் நெஞ்சில் குடிகொண்டிருந்த கல்லை ஆத்திரத்துடன் தட்டி விட்டாவாறு அவளை கைகளில் அள்ளிக் கொண்டவனது காதில் “ப்லீச்ச்சச்ச்ச்ஸ் எ.....என்ன.... விட்டிடுங்க........” என்ற மெல்லிய குரல் ஒலிக்க துடித்து போனவனுக்கு அந்த பெண்ணை நினைக்கவே பாவமாய் இருந்தது...


உடம்பெல்லாம் நகக்கீறல்களும் ரத்தக்கறையும் கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடங்களும் என சிதைந்து போயிருந்த பெண்ணவளை கண்டவனின் மனம் உள்ளுக்குள் வேக வேகமாய் துடிக்க அவனின் கரங்களோ அதை விட அதிக வேகமாய் காரை வைத்தியசாலை நோக்கி செலுத்தியது..


தன் நண்பன் ராகுலின் மருத்தவமனை முன்பு அவனின் கார் ‘க்ரீச்’ என்ற சத்தத்துடன் நிற்க அதிலிருந்து விரைந்து இறங்கியவன் பின் பக்க கதவை திறந்து அங்கு சரிந்திருந்த பெண்ணை கைகளில் அள்ளியவன் “டாக்டர்ர்ர்ரர்ர்ர்ர்” என்ற அலறலுடன் ஐசியு நோக்கி விரைந்தான்...


இவனின் காட்டு கத்தலில் அங்கிருந்த வார்ட்பாய் ஸ்ட்ரேச்சரை எடுத்துக் கொண்டு வர அதில் அவளை கிடத்தியவன் தன் அருகில் நின்ற செவிலிப்பெண்ணிடம் “டாக்டர் ராகுல் எங்க...” என வினவ...


அவளோ தங்கள் சீப் டாக்டரின் பெயரை சொல்கின்றாரே ஒருவேளை இவர் அவருக்கு தெரிந்தவராய் இருப்பாரோ என ஒரு நொடி எண்ணியவள் “இருங்க சார் வர சொல்றேன்” என்றவாறு ராகுலின் அறை நோக்கி விரைந்தாள்.


அவனோ அகிலாண்டேஸ்வரி தேவி அழைத்து வந்த மலரின் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருந்தான். அவள் “வேண்டாம் வேண்டாம்” என கெஞ்சுவதை சற்றும் கேளாமல்...


ராகுலின் அறைக்குள் நுழைந்தவள் அங்கு ராகுல் இல்லாது போகவும் அவனை எங்கே சென்று தேடுவது என மலைப்பாய் எண்ணியவள் வெளியில் வர எத்தனிக்க அதே நேரம் சரியாய் அங்கு வந்து சேர்ந்தான் ராகுல்...


அவனை பார்த்ததும் ‘தேடுற வேலையை மிச்சப்படுத்திட்ட கடவுளே’ என எண்ணிக் கொண்டு “டாக்டர்” என அவனை அழைக்க இவளின் குரல் கேட்டு திரும்பியவன் அவளை முறைத்துக் கொண்டு “டியூட்டி டைம்ல இங்க என்ன பண்றீங்க மிஸ் சரளா” என கண்டனக் குரலில் கூறியவன் வெளியில் விளையாட்டு பிள்ளையாய் இருந்தாலும் வேலையென்று வந்துவிட்டால் பொறுப்பானவனாய் மாறிவிடுவான்
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனின் கண்டனக்குரலில் உள்ளுக்குள் நடுங்கியவள் “அதுயில்ல... அது...அதுவந்து எமெர்ஜென்சி கேஸ் ஒன்னு வந்திருக்கு... பார்த்தா ரேப் கேஸ் மாதிரி இருக்கு... அந்த பொண்ணு கூட வந்தவரு உங்கள ரொம்ப தெரிஞ்சவரு மாதிரி கூட்டிட்டு வர சொன்னாரு....” என மனப்பாடம் செய்தவள் போல் கடகடவென ஒப்பித்தவள் அங்கிருந்து ஓடாத குறையாய் அகன்றால்.


அது சென்றதும் தன் தந்தையிடம் விஷயத்தை கூறியவன் அவர் வருவதாய் கூறியதும் ஐசியு நோக்கி விரைந்தவன் அங்கு பொக்கெட்டில் கையை வைத்துக் கொண்டு இறுகிப்போன உடலுடன் நடை பயின்று கொண்டிருந்த யுத்கார்ஷை சற்றும் எதிர்பார்க்கவில்லை.


பல நாட்களின் பின்பு கண்ட நண்பனை நோக்கி அதிவேகமாய் விரைத்தவன் “த்ருவ்...” என்றழைக்க அவனின் குரலில் சட்டென திரும்பிய யுத்கார்ஷ் “ராகுல்” என்றவாறு அவனை கட்டியணைத்தவனின் அணைப்பே சொன்னது அவன் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றான் என்று...


அதை உணர்ந்து கொண்ட ராகுல் அவனின் தோளை ஆதரவாய் தட்டியபடி “என்னாச்சு த்ருவ்... ஏதாவது ப்ரோப்லமா...” கேட்க...


அதற்காகவே காத்திருந்தது போல் அந்த பெண்ணை பற்றி கூறியவன் “ராகுல் ப்ளீஸ்... எப்பிடியாவது அந்த பொண்ண காப்பாத்திடு... எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல... நான் வேணா பாரின்ல இருந்து டாக்டர்ஸ வர வைக்கட்டுமா.... என்ன செய்யணும்னு சீக்கிரம் சொல்லு ராகுல்... ப்ளீஸ் ஐ கான்ட் வெயிட்... இன்னும் டூ ஹவர்ஸ்ல எனக்கு யுஎஸ்கான ப்ளைட்... அதுக்குள்ள அந்த பொண்ண எப்பிடியாவது காப்பாத்த ட்ரை பண்ணு... ரெண்டு மூணு.... பேர் சேர்ந்து பணியிருப்பாங்கன்னு தோணுதுடா... ஐ கான்ட் இமேஜின்...” என குரல் உடைய கூறியவன் அந்த இடத்தில் ராகுலை தவிர்த்து வேறு யார் இருந்தாலும் இந்தளவு உணர்ச்சிவசப்பட்டிருக்க மாட்டான்


ஏனென்றால் ராகுல் அவனின் சிறு வயது தோழன்... தன்னை பெற்றவர்களிடம் கூட எதையும் பகிர்ந்து கொள்ளாத யுத்கார்ஷ் ராகுலிடம் எல்லாவற்றையும் கொட்டிவிடுவான்


அந்தளவு அவன் நம்பிக்கை ஆனவன்... அவனுடன் உண்மையான அன்புடன் பழகியவர்கள் ஒரு சிலர் தான்... ஏராளமானவர்கள் அவனிடமுள்ள பணத்தை கண்டு தான் அவனிடம் பழகுவர்... அவர்களை எல்லாம் தன் ஒற்றை பார்வையிலேயே தூர விலக்கி வைக்கும் யுத்கார்ஷிற்கு அன்றிலிருந்து இன்றுவரை சற்றும் மாறாமல் இருக்கும் ராகுல் மட்டும் தான் உயிர்த்தோழன்...


தன் நண்பனின் கவலை புரிந்த கொண்ட அவன் அவனை ஆறுதல்படுத்தி “நீ ஒன்னும் வோரி பண்ணிக்காத த்ருவ்... நான் இருக்கேன்... டாடி இருக்கார்... நாங்க பார்த்திக்கிறோம்.... நீ முதல்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு ஏர்போர்ட் கிளம்பு... உனக்கு ப்ளைட்க்கு நேரம் ஆயிடிச்சில்ல... எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்....” என சமாதனப்படுத்தியவன் அவனை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு தானும் ஐசியுவிற்குள் நுழைந்தவன் அங்கு பேச்சுமூச்சில்லாமல் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த தேவியை சற்றும் எதிர்பார்க்கவில்லை..


‘தே.... தேவிக்கா.... யார் இப்பிடி பண்ணியிருப்பாங்க.... ஒஹ் மை கோட்...(oh my god) இத எப்பிடி ஆன்டி, அங்கிள்கிட்ட சொல்றது...’ என நெஞ்சம் அதிர எண்ணியவனுக்கு தன் உடன் பிறவாத குட்டி தங்கைக்கு ஏற்பட்ட நிலையை ஜீரணிக்கவே சற்று நிமிடங்கள் பிறந்தது..


தான் ஒரு மருத்துவன் என்பதையும் மறந்து வாய் விட்டு அழ துடித்த வாயை கட்டிப் போட்டவன் பொத்தென தரையில் விழுந்தான்.


தங்கள் சீப் டாக்டர் பொத்தென தரையில் விழவும் அவனுடன் அந்த அறையில் இருந்த மற்ற மருத்துவர்கள் அவனை தூக்கி நிறுத்தி வெளியில் அழைத்து வந்து அங்கிருந்த இருக்கையில் அமர வைக்க..


அதில் தன் மொத்த சக்தியும் வடிந்தவனாய் கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தவன் சற்று நேரத்தின் முன் யுத்கார்ஷிற்கு ஆறுதலளித்த ராகுல் இல்லை.. இவன் பாசத்திற்கு அடிமையான ராகுல்... உடன் பிறப்பென யாருமில்லமால் ஒற்றையாய் வளர்ந்தவனுக்கு தன் தந்தையின் நண்பரான ராஜா சிவனேந்திர பூபதியின் மகள் தேவி தான் எல்லாமே...


தன் உயிர்தோழியாய், உற்ற சகோதரியாய், சிறந்த ஆசானாய் விளங்கும் தன் குட்டி தங்கையின் நிலையறிந்து அவன் கண்ணீர் விடுவதிலும் ஆச்சரியமில்லை.


தேவிக்குமே தன் உடன் பிறந்த சகோதரனை விட ராகுலைத்தான் அதிகம் பிடிக்கும்... எப்போதும் கண்டிப்புடன் இருக்கும் தன் சகோதரனை காட்டிலும் தன்னுடன் தோழமையுடன் பழகும் ராகுலை தான் அவளுக்குமே மிகவும் பிடிக்கும்...


தன் எண்ண அலைகளில் மூழ்கியிருந்த ராகுலின் தோளில் யாரோ கைவைக்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவன் அங்கு தன் தந்தை நிற்கவும் “டாட்...” என பாய்ந்து அவரை கட்டிக் கொண்டவனது கண்ணில் கண்ணீர் நில்லாமல் வழிய அவரோ அவனின் அழுகைக்கான காரணம் புரியாமல் முழித்தார்.


“என்னாச்சு ராகுல் வாட் ஹெப்பென்... (what happen) எனிதிங் சீரியஸ் (anything serious)” என பதட்டத்துடன் வினவினார்.


எப்போதும் விளையாட்டு தனமாய் இருக்கும் மகன் இன்று அழுகையை தத்தெடுத்திருக்கவும் அவருக்கும் சற்று பதட்டமாய் தான் இருந்தது... ஆனால் அதை கொஞ்சமும் தன் செய்கையில் காட்டாது கம்பீரமாய் நிமிர்ந்து நின்றவர் “என்னாச்சுன்னு கேக்கிறேன்ல...” என குரலை உயர்த்த அதில் அவரை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் உயிர் போகும் வலியை பிரதிபலித்தது...


கள்வன் வருவான்....
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 26


அதன் பின் என்ன நடந்தது என்ன ஆனது என ஒன்றும் அவன் நினைவலைகளில் இல்லை.. தன் தந்தையிடம் விஷயத்தை கூறிய ராகுல் தந்தை நினைகுலைந்து போகவும் அவரை மீண்டும் தன் இயல்பு நிலைக்கு மாறி அவரை சமாதனப்படுத்தியவன் விரைவாய் அவளுக்கு சிகிச்சை ஆரம்பித்தான்.


அதற்குள் அவனின் தந்தை ராஜ்சேகர் தன் நண்பனிடம் ஒரு வழியாய் தேதேவிக்கு நடந்ததை பற்றி கூறி அவர்களை சமாதனப்படுத்த அவர்களோ தன் குடும்பத்தின் வாரிசிற்கு நடந்த நிகழ்வை ஜீரணிக்க முடியாமல் துவள மலரோ அதை தாங்க முடியாமல் உயிர் பிரிந்த வலியை உணர்ந்தவள் அந்த நொடியே மயங்கிச் சரிந்தாள்.


அவளையும் அங்கேயே வைத்து அவளின் மயக்கத்தை தெளிய வைக்க முயற்சித்தவர்கள் அவளின் பெற்றோரையும் அங்கு வரவழைத்தனர்.


தமயந்தியும் சுந்தரபாண்டியனும் அவர்கள் விஷயத்தை கூறவும் பதறியடித்துக் கொண்டு சென்னை வந்தவர்கள் மலரை அதிலிருந்து மீட்டெடுக்க எவ்வளவோ முயற்சித்தும் அது பலனளிக்காது போகவும் அவர்களும் தேவிக்கு குணமாகும் வரை சென்னையில் தங்குவதென முடிவெடுத்து அங்கேயே இருக்க துவங்கினர்.


தனக்கு நெருங்கிய ஒவ்வொருவரையும் தான் ஒவ்வொரு விதத்தில் கஷ்டப்படுத்திகிறோம் என்பதை உணர முடியாத நிலையில் இருந்த தேவி சரியாய் ஐந்து நாட்களின் பின் தான் கண்களை திறந்தாள்.


அவள் கண்விழிக்கும் வரை விரதம் இருந்த மலர் அவள் கண்விழித்ததும் அனைவரையும் முந்திக் கொண்டு தேவியை பார்க்க விரைந்தாள்.


சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்த தேவி தன் அறையில் மலரை கண்டதும் அவளை வெறித்து பார்த்தாள். அவளுக்கு கண்விழித்த நொடியில் இருந்து யாரையும் கண்களுக்கு தெரியவில்லை. தனக்கு நடந்த நிகழ்வு தான் அவள் கண்முன்னே தோன்றி அவளை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்ல அதை தாங்க முடியாமல் இருந்தவளுக்கு மலரை கண்டதும் அந்த உணர்வு வெடித்துக் கிளம்ப தன்னிலையை எண்ணி நெஞ்சே வெடித்து விடுமளவு கதறி அழுதவளை மயக்க மருந்தின் உதவி கொண்டு அமைதிப் படுத்தினர்.


நாட்கள் அதன் போக்கில் நகர அமெரிக்காவில் இருந்த யுத்கார்ஷிற்கு அங்கிங்கு அசையக்கூட முடியாமல் வேலைப்பளு அழுத்த அதில் மூழ்கியவனுக்கு எப்போதாவது அந்த பெண்ணை பற்றி ஞாபகம் எழும்... அப்படி எழும்போதெல்லாம் அதற்கு காரணமானவர்களை உண்டில்லை என ஆக்கவேண்டும் வேண்டும் எனும் என்ற எண்ணமும் அதன் கூடவே எழும்...


அதை தாங்க முடியாமல் ராகுலிற்கு அழைத்து அந்த பெண்ணை பற்றி கேட்டவன் அந்த பெண்ணிற்கு ஒன்றுமில்லை என்றவுடன் தான் ஆசுவாசப்பட்டான்.


தேவிக்கு ஒன்றுமில்லை எனக் கூறிய ராகுல் அப்படியே அவளை பற்றிய விபரத்தையும் கூறி இருக்கலாமோ... அந்த இடத்தில் விதி தன் சதிவேலை தொடங்கி தேவியை பற்றி அவனிடம் கூறவிடாமல் தடுத்திருக்க அதன் பின் யுத்கார்ஷ் அவளை மறந்தே போய்விட்டிருந்தான்.


இங்கு தேவியோ எப்போதும் அழுதே கரைய ஆரம்பிக்க அதை தடுக்கும் வழியறியாது ஒரு மிகப்பெரிய மனநல மருத்துவர் மூலம் அவளுக்கு நடந்த அந்த கேட்ட நிகழ்வுகளை அவளின் அடி ஆழ்மனதில் போட்டு புதைத்து அப்படியொரு சம்பவம் நிகழ்ந்தையே அவளுக்கு மறக்கும் படி செய்திருந்தனர்...


அதன் பின் தன் கூட்டிலிருந்து வெளிய வந்து சகஜமாய் பழக ஆரம்பித்தவளுக்கு திடீர் திடீரென தலைவலி, வாந்தியும் வர ஆரம்பிக்கவும் அவசரமாய் அவளை அழைத்து சென்று பரிசோதித்த போது மருத்துவரோ அவர்களின் தலையில் மெல்லாமல் முழுங்காமல் இடியை தூக்கி போட்டார்..


அன்று தான் அவர்களுக்கு தெரிந்தது தேவின் மரணத்திற்கான நாள் குறிக்கப்பட்டிருக்கின்றது என்று... ஏற்கனவே அவளுக்கு நடந்த நிகழ்வை எண்ணி கலங்கிப்போய் இருந்தவர்கள் இதை கேட்டதும் மொத்தமாய் ஒடுங்கிப் போயினர்...


தங்கள் மகள் தங்களை விட்டு போக போகின்றாள் என்பதை அறிந்தால் எந்த பெற்றோரால் தான் அதை தாங்க முடியும்... அன்றிலிருந்து மொத்த குடும்பமுமே அவளை தலையில் வைத்து தாங்காத குறையாய் கொண்டாட அவர்களின் திடீர் பாசத்தை காண சகியாதவள் தனக்கு என்னவோ ஏதொவோவென எண்ணி தங்களுக்கு பழக்கிமில்லாத மருத்துவர் ஒருவரை நாடியவள் தன்னை பரிசோதிக்கும் படி கூற அவரும் பரிசோதித்து விட்டு அவளுக்கு வந்திருக்கும் நோயை பற்றி கூறியவர் ‘எந்த நிலையிலும் மரணம் வரலாம்’ என அதை சேர்த்துக் கூற அதில் மனமுடைந்தவளுக்கு தன் மரணத்தை பற்றிய கவலை கூடயில்லை..


அவள் கவலை கொண்டதன் காரணம் இத்தனை நாளாய் வேலை வேலையென ஓடிக் கொண்டிருந்த பெற்றோர் தனக்கு மரணம் என்ற ஒன்று நிச்சயமாகி விட்டதை அறிந்ததும் இப்படி பாசம் காட்டுகின்றார்களே... என எண்ணியவளுக்கு ஏனென்றே அறியாமல் கண்களில் கண்ணீர் சுரந்தது..


தனக்கு ஏதோ பெரிய நோயென்று அறிந்து தானா இவர்கள் பாசத்தை பொழிய வேண்டும்... இத்தனை நாளாய் நான் எதிர்பார்த்தது இந்த பாசத்தை தானே... அதை நான் விரும்பும் போது தராமல் இப்போது தருகின்றனரே... என நினைக்க நினைக்க அவளுக்கு ஆத்திரம் அதிகரிக்க அன்று தான் முடிவெடுத்தால் தான் இனிமேலும் இங்கிருக்க கூடாதென்று...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அதன் பின் தன் முடிவை பற்றி வீட்டினரிடம் கூறியவள் அன்றே தன் நண்பர்களுடன் பாரிஸ் வந்துவிட்டாள்.


அவளுக்கு எதுவும் ஆகவில்லையே என அப்போதும் கொஞ்சமும் ஈவுஇரக்கமில்லாமல் ஸ்ரே எண்ணினாலும் அவளின் மரணத்திற்கான நாள் குறிக்கபட்டுவிட்டதை எண்ணி மகிழ்ந்தே போனாள்.


அப்படித்தான் அவர்களின் பாரிஸ் வாழ்க்கை ஆரம்பமானது...


இப்படித்தான் எல்லோரும் நினைத்து இருந்தனர்... ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல... உண்மையான காரணம் தேவி அவளுக்கு நிகழ்ந்தவற்றை மறந்ததாக மற்றவர்களிடம் நடித்துக் கொண்டிருந்தாள். தன் குடும்பத்தினருக்காக தன் கவலைகளை எல்லாம் உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு வெளியில் கலகலப்பாக இருப்பவள் நடிப்பவள் தினமும் உள்ளுக்குள் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருந்தாள்.


அவள் எவ்வளவோ தடுத்தும் கூட அன்று தனக்கு நடந்ததை மறக்க முடியாமல் துடிதுடிப்பவள் அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்க அதற்கு அவளுக்கு பக்கபலமாய் துணையாய் நின்றான் ராகுல்...


இதை போலீசிடம் சொல்லி கோர்ட் கேஸ் என போக விரும்பாத ராகுல் தனக்கு தெரிந்த மிக நம்பகமான துப்பறிவாளன் ஒருவன் மூலம் அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்திருந்தான்.


அம்மூவரை தவிர இவ்விடயம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டவர்களுக்கு சரியாக ஒரு மாதத்தின் பின் இதற்கு காரணமானவர்கள் யார் என தெரிய வர வந்த தகவலைத் தான் யாராலும் நம்பமுடியவில்லை. முக்கியமாய் தேவிக்கு... எத்தனை நம்பிக்கை வைத்திருந்தாள்... ஒரு நொடியில் அத்தனையும் சிதைந்து போய்விட்டிருந்தது... தன் உயிர்த்தோழி என நம்பிக்கொண்டிருந்த ஸ்ரேயா தான் இதற்கு காரணம் என அறிந்த போது அவள் நெஞ்சுக்குள் ‘சுருக்’ என ஒரு வழி பரவியது..


அதையும் தாங்கிக் கொண்டவளால் அவள் அப்படி செய்ததற்கான காரணத்தை தான் அறவே ஜீரணிக்க முடியவில்லை. அவள் தன் மேலுள்ள பொறாமையினால் தான் இப்படி எல்லாம் செய்திருக்கிறாள் என தெரிந்த போது அவள் துடித்த துடிப்பை அவளுடன் நின்ற ராகுலாலும் புரிந்து கொள்ள முடிந்தது... அதற்காகவே அவளை கொல்ல வேண்டும் என ஆத்திரம் அடங்காமல் கிளம்பப் போனவனை தடுத்து நிறுத்திய தேவி....


“இந்த விஷயம் நம்ம ரெண்டு பேரையும் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது ராகுல்... என்மேல நீ சத்தியம் பண்ணிக்கொடு... எக்காரணத்தை கொண்டு இந்த விஷயம் வெளியில் லீக் ஆகக்கூடாது ராகுல் ப்ளீஸ்... அதுமட்டுமில்லாம உன்னால அவளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது ராகுல்... எனக்கு ப்ராமிஸ் பண்ணிக் கொடு...” என அவனை கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியவள் அவன் சத்தியம் செய்த பின் தான் அமைதியானாள்.


ராகுலுக்கோ தன் தங்கை தன்னிடம் கெஞ்சுவதா என்ற எண்ணம்... அதுவும் ஒரு ராஜ வம்சத்தை ராஜகுமாரி தன்னிடம் கெஞ்சுவதா என்ற எண்ணத்தில் தான் தன் மனதை கல்லாக்கிக் கொண்டு அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்தான்.


இன்று வரையிலும் அவன் அந்த சத்தியத்தை காப்பாற்றிக் கொண்டு தான் இருக்கின்றான்.


அவன் தனக்கு சத்தியம் செய்த கொடுத்த பின் தான் அவள் ஸ்ரேயாவையும் அழைத்துக் கொண்டு பாரிஸ் நோக்கி சென்றாள். ஆனால் இதுவரையிலும் கூட தனக்கு அதைப்பற்றி தெரிந்து விட்டதென ஒரு வார்த்தை கூட அவள் ஸ்ரேயாவிடம் கூறியதில்லை.


உண்மையான நட்பிற்கு மன்னிக்கவும் தெரியும் மறக்கவும் தெரியும்... அதை தான் தேவியும் தன் தோழியின் விஷயத்தில் செய்திருந்தாள். அவளால் அதை மறக்க முடியாவிட்டாலும் பரந்த மனம் கொண்ட பெண்ணவளால் தன் தோழியை மன்னிக்க முடிந்திருந்தது...


காலம் அனைத்தையும் மாற்றக்கூடிய வல்லமை மிக்கது என்றாலும் அந்த மெல்லிய மனம் கொண்ட பெண்ணவளின் மனப்பாரத்தை மட்டும் அது கடைசிவரையிலும் மாற்றவில்லை.


அதுவும் தன் காதலனில் வாயிலிருந்து தான் தீண்ட தகாதவள் என்ற வார்த்தையை பெற்ற போது அவள் எந்தமாதிரி உணர்ந்தால் என்றால் யாரோ பழுக்க காய்ச்சிய கத்தியை இதயத்தினுள் நுழைத்து வலிக்க வலிக்க அவள் கதற கதற திருகியது போல் உணர்ந்தாள்.


அந்த நொடி தன் வாழ்வில் நடந்த கருப்பு பக்கங்கள் அவள் கண் முன்னே தோன்ற அதை தாங்க முடியதவளாய் தன்னவனின் வார்த்தைகளை ஜீரணிக்க முடியாதவளாய் தன் அபார்ட்மேன்டிற்கு வந்தவளுக்கு மீண்டும் நெஞ்சினுள் சுருக்கென தைக்க மூச்சு விடவும் சிரமப்பட்டவளை அள்ளியெடுத்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்தவர்கள் அவளை மருத்துவமனையில் சேர்த்த சில நிமிடங்களில் தன் பாட்டியிடம் மலருக்கும் யுத்கார்ஷிற்கும் திருமணம் செய்து வைக்கும் படி கூறி விட்டு தன் உயிரை துறந்திருந்தாள் எந்த பாவமும் செய்யாத அப்பாவிப் பேதைப் பெண்...


அதுவும் இதய நோய் கொண்ட இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய குழந்தையான ஜியாவிற்கு தன் இதயத்தை தானமாய் வழங்கி விட்டே அவள் கண்களை மூடிக் கொண்டாள்.


தன் மரண தருவாயிலும் கூட தனக்கு நடந்த கருப்பு பக்கங்களினால் உண்டான வலியை அனுபவித்துக் கொண்டு தான் அவள் தன் உயிரை துறந்தாள்


இவள் இங்கு உயிரை விட்டிருக்க அங்கு தன் தவறை உணர்ந்து அவளை தேடி அலைந்த கொண்டிருந்த யுத்கார்ஷிடம் ஒரு போனையும் அதனுடன் சேர்த்து ஜியாவையும் ஒப்படைத்தாள் பின்டோ.


இருவருக்குள்ளும் என்ன நடந்தேன யாருக்கும் தெரியாது.. மற்றவர்களை பொறுத்தவரை அவளுக்கு ஏற்கனவே மரணத்திற்கான நாள் கொடுக்கப்பட்டுவிட்டது... அதுவும் எப்போது எப்படி வரும் என யாராலும் சொல்ல முடியாது என்ற அறிவுரையுடன்... இப்போது எல்லாரும் அதன் விளைவால் வந்த மரணம் என்றே எண்ணியிருந்தனர்.. ஆனால் உண்மை காரணம் தெரிந்தவர்கள் அவர்கள் மூவரும் தான்.


அம்மூவரில் ஒருத்தி உயிரை விட்டிருக்க மற்றொருத்தியான ஸ்ரேயாவோ அதை அவள் வேண்டுமென்றே செய்ததால் அதை யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமும் அவளுக்கில்லாது போயிற்று. மற்றது யுத்கார்ஷ்.... அவனும் யாருக்கும் விளக்கம் சொல்லக் கூடியவன் அல்லவே...


அதனால் தேவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் யார்க்கும் தெரியாமலேயே போய்விட்டிருந்தது...


யுத்கார்ஷ் பின்டோ விட்டுவிட்டு சென்ற ஜியாவை துயிலில் ஆழ்த்திவிட்டு அவள் கொடுத்திருந்த செல்போனை உயிர்ப்பித்தவன் அதில் அவள் கடைசியாய் பேசிய வார்த்தைகள் ஒலிக்க அதை தாங்க முடியாமல் கல்லாய் சமைந்தவனுக்கு அவள் இறுதியாய் கூறியது ஆத்திரத்தை வரவழைத்திருந்தது..
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘நான் யாரை கல்யாணம் பண்ணனும் பண்ணக் கூடாதென்று முடிவெடுக்கும் உரிமை எனக்கு மட்டும் தான் உண்டு... அதை வேறு யாரும் முடிவு செய்ய முடியாது’ என ஆத்திரத்துடன் எண்ணியவன் தன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு சென்னை சென்றான்.


ஆனால் சென்னை சென்ற பின்பு தான் அவனுக்கு தெரிந்தது தன்னவள் தன்னை திருமணம் செய்ய கூறியிருந்தது அவள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியை என்று...


அது தெரியவும் ஆத்திரத்துடன் அவளை நாடிச் சென்றவனுக்கு அதையும் விட ஆச்சரியம் காத்திருந்தது.... அவள் தன் மாமாவின் வளர்ப்பு மகள் என்று... அதுவும் தன் தாய் அதிக பாசம் பொழியும் சுந்தரபாண்டியன் மாமாவின் வளர்ப்பு மகள் என தெரியவும் அவனுக்கு ஆத்திரம் மட்டுப்பட்டாலும் அவளை திருமணம் செய்து கொள்ள அவனுக்கு விருப்பமில்லாது போயிற்று....


அவனுக்கு விருப்பமில்லை என்பது கூட சாதாரண விஷயம் தான்... அவனின் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் அவள் சற்றும் ஈடில்லை தான்.. ஆனால் இந்த திருமணத்தை பற்றி கேள்விப்பட்ட மலரோ திருமணம் வேண்டாமென கூறி தற்கொலை வரையும் முயலவே.... தன்னை ஒருத்தி வேண்டாமென்பதா என்று அவனின் ஈகோ அவனை சீண்ட மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அவளை மணக்க சம்மதித்து கொண்டான்.


அதற்கிடையில் தான் காப்பாற்றிய பெண்ணும் தன்னவளும் ஒன்றென தெரிந்து துடிதுடித்து போன யுத்கார்ஷ் ராகுலிடம் அதை பற்றி கூற....


அது தான் சமயம் என்றெண்ணிய ராகுலும் தான் அவளின் வாக்கை மீற கூடாது என்று எண்ணினாலும் ‘அவள் அவளின் குடும்பத்தினரிடம் தான் இதை பற்றி கூற கூடாது என்றால்... ஆனால் இவன் என் நண்பன் அதுவும் அவளை காதலிப்பவன் இவனிடம் கூறினால் எந்த தப்புமில்லை’ என தன்னை தானே நியாப்படுத்திக் கொண்டு யுத்கார்ஷிடம் இதற்கு காரணமான ஸ்ரேயாவை பற்றிக் கூறினான்...


அதேவேளை அன்று அந்த காதலர் தினத்தன்று தன் காதலை தேவியிடம் சொல்வதற்காக சென்ற யுத்கார்ஷை வழிமறித்து தேவியை பற்றி தன்னிடம் கேவலமாய் பேசி தன்னை குழப்பி அவளை வார்த்தையால் கொல்ல தூண்டிய அவளும் தன்னவளை களங்கப்படுத்திய இவளும் ஒன்றென தெரியவும் ஒட்டு மொத்த ஆத்திரத்தில் அவளை கடத்தும் படி தன் ஆட்களிடம் கூறியவன் மூன்று நாட்கள் இருட்டு அறையில் அவளை அடைத்து வைத்து மூன்றாவது நாள் அவளை வெளியில் விடுவது போல் விடுவித்து லாரியை கொண்டு அவளை இடித்து தள்ளும் படி கூறினான்.


அவனின் விசுவாசமான வேலைக்காரனும் அவன் சொன்னபடியே செய்து முடிக்க அந்த பலத்த விபத்தில் அவளின் சித்தம் கலங்கி மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்..


அது மட்டுமன்றி தேவியின் குடும்பத்தினரிடமும் ஸ்ரேயாவின் குடும்பத்தினரிடமும் இதை பற்றி கூறியவன் அவளை யார் பார்க்க சென்றாலும் அவர்களை உண்டில்லை என ஆக்கிவிடுவேன் என கட்டளையும் இடவே அவளை எட்டிக் கூட பார்ப்பதற்கு நாதியற்று போய்விட்டது..


யுத்கார்ஷை பொறுத்தவரை இது அவன் வழங்கிய மிக குறைந்த பட்ச தண்டனை... இதையும் விட அவன் அவளை பெரிதாய் தண்டிக்கத்தான் விரும்பினான். ஆனால் ராகுல் தான் தேவிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை பற்றி கூறி அவனை ஒன்று செய்ய விடாமல் தடுத்து விட்டிருந்தான்.


பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த மலரை யாரோ உளுக்குவது போலிருக்க “என்னங்கககககககககககக......” அலறிக் கொண்டு எழுந்தமர்ந்தவள் தன் கண் முன் நின்ற தன்னவனை பதட்டத்துடன் ஏறிட்டவள் அவன் கைகளில் பென்டேஜ் சுற்றியிருக்கவும் பதறிப்போய் “என்னாச்சு.... எப்படிங்க ஆச்சு... ஹையோ... வலிக்குதாங்க.... ஏங்க பேசாம நிக்கிறீங்க... தயவு செஞ்சு ஏதாவது சொல்லுங்க....” என கண்ணீர் மல்க கூறியவளை கண்டு இழுத்தணைக்க வேண்டும் போல் இருந்தாலும் தான் எடுத்துக் கொண்ட சத்தியம் நினைவு வர ‘சே... ஏன் தான் அப்பிடியொரு சத்தியம் செஞ்சிக்கிட்டோமோ... பேசாம அத வாபஸ் வாங்கிட்டா தான் என்ன... பக்கத்துல இப்பிடி ஒரு க்யூட் பொண்டாட்டி நிக்கும் போது என்னென்னமோ பண்ண தோணுதே... ஆனா நானே எனக்கு செல்ப் ஆப்பு வச்சுக்கிட்டேன்... சை...’ என மனசாட்சியுடன் வாதம் புரிந்து கொண்டு....


“ஒன்னும் இல்ல மேடம்.... சின்ன ஆக்ஸிடென்ட் தான்...” என கூறி சிரிக்க.....


அதில் தனக்கு வந்த படபடப்பு காரணம் புரிந்தவளுக்கு அவன் அதை சாதாரணமாய் கூறி சிரிக்கவும் ஆத்திரம் அதிகரிக்க எங்கிருந்து தான் அத்தனை தைரியம் பெண்ணவளுக்கு வந்ததோ பட்டென அவன் கன்னத்தில் அறைந்தவள் இதுவரைக்கும் அவனை பார்த்து பயந்து சென்ற அவனின் அழகி இல்லை... அவள் பழைய வாயாடி மலர்... எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் மலர்...


மனைவி தன்னை அறைவாள் என எதிர்பார்க்காத யுத்கார்ஷிற்கு அவள் அறைந்ததும் சுறுசுறுவென கோபம் வரத்தான் செய்தது... ஆனால் தன் சிகையை கோதி அதை கட்டுப்படுத்தியவன் உள்ளுக்குள் தன்னவள் பழைய படி கொஞ்சம் கொஞ்சமாய் மாறுகிறாள் என சந்தோசப்பட்டுக் கொண்டு வார்த்தையில் கோபத்தை வைத்து வேண்டுமென அவளை வம்பிழுக்க ஆரம்பித்தான்.


“ஏய்... எதுக்குடி என்ன அறைஞ்ச.... ஆமா நான் யாருன்னு நீ என்ன அறைஞ்ச... நீ அன்னைக்கு சொன்னியே எனக்கு விவாகரத்து கொடுக்க போறதா... அப்றோம் எதுக்குடி எனக்கு அறைஞ்ச... பொண்டாட்டியே இல்லேன்னு அன்னைக்கு பெரிசா பேசிட்டு இப்போ எதுக்குடி அறைஞ்ச...” என கோபமாய் கேட்பது போல் கேட்டாலும் உள்ளுக்குள் அவனுக்கு சந்தோசம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது...


“என்ன... மரியாத இல்லாம ‘டி’ போட்டு பேசுறீங்க... இதெல்லாம் நல்லா இல்ல... அதுவுயில்லாம அதுயென்ன மேடம்னு கூப்புடுறீங்க... அது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவேயில்ல... அதுவுயில்லாம ஆக்ஸிடென்ட் நடந்திருக்கு நானே பயந்துட்டி இருக்கேன்... ஆனா நீங்க கொஞ்சங்கூட பயமேயில்லாம லூஸு மாதிரி சிரிச்சிக்கிட்டு சின்ன ஆக்ஸிடென்ட்னு சொல்றீங்க... எனக்கு வர ஆத்திரத்த்க்கு உங்கள கன்னம் கன்னமா அப்பலாம்னு தோணுது... போனா போகுதுன்னு ஒரே அறையோட விட்டிட்டேன்னு சந்தோசப்பட்டுக்கோங்க.... அப்றோம் என்ன சொன்னீங்க.... விவாகரத்தா.... இப்போ சொல்றேன்.... நான் எப்பவும் உங்களுக்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன்... நீங்க இந்த வேசிய சகிச்சிக்கத்தான் வேண்டும்...” என்றவள் உதட்டை சுழித்துக் கொண்டு போனாலும் அவள் கடைசியாய் சொன்ன ‘வேசி’ என்ற வார்த்தை இருவர் உள்ளத்திலும் அளவு கடந்த காயத்தை உண்டாக்கியே இருந்தது..


ஆனாலும் அவள் அதை சாதாரணமாய் சொன்னாலும் அதை சொல்லும் போது அவள் எத்தைகைய வலியை அனுபவித்திருப்பாள் என எண்ணியவனது உள்ளம் தன் மனைவியை பார்த்து தான் கூறிய வார்த்தைகளை எண்ணிய தன்னையே வெறுத்தான்.


ஆனால் அதிலும் அவனுக்கு ஒரு சின்ன சந்தோசம்.... இனி அவள் தன்னுடனே இருப்பாள் என அவள் வாயாலே கூறியதை கேட்டவுடன் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது...


ஆனால் அவன் ஒன்றை புரிந்து கொள்ள தவறியிருந்தான். தன் மனைவி இனி விவாகரத்தை பற்றி மட்டும் தான் பேச மாட்டேன் எனத்தான் கூறியிருக்கிறாள்... தன் மனம் மாறிவிட்டதாக அல்ல.... அதையும் அவன் மேலோட்டமாய் புரிந்து தான் இருந்தான்... அதை சரி செய்யவும் அவள் பல யோசனைகளையும் வைத்திருந்தான்.


கள்வன் வருவான்.....
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 27


தன் அறையில் கட்டிலில் அமர்ந்து கொண்டு தன் கன்னத்தை தடவிக் கொண்டிருந்த யுத்கார்ஷிற்கு மனம் அத்தனை பரவசமாய் இருந்தது...


எந்தவொரு கணவனும் தன் மனைவியின் கையால் அறை வாங்கிவிட்டு இந்தளவு மகிழ்ச்சியாய் இருந்திருக்க மாட்டான். ஆனால் யுத்கார்ஷோ ஏதோ ஆஸ்கார் விருது வாங்கியவன் போல் கன்னத்தை தடவுவதும் அதை கண்ணாடியில் பார்ப்பதுமென விசித்திரமாய் எதையெதையோ செய்து கொண்டிருந்தான்.


இதற்கிடையில் கணவனை உணவருந்த அழைக்க வந்த மலர் கணவனின் விசித்திர செய்கையில் அவனை புரியாமல் பார்த்தவள் ‘என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு... எதுக்கு கன்னத்த இந்த தடவு தடவுறாரு... ஒரு வேல ஏதாவது கடிச்சு வச்சிடிச்சோ...’ என தலையை சொரிந்தவள் தொண்டையை கனைக்க...


அதில் திரும்பிப் பார்த்தவன் அங்கு மனைவி விசித்திர பார்வையுடன் தன்னை பார்த்துக் கொண்டு நிற்பதை பார்த்ததும் அசடு வழிந்தவன் “என்ன மே....க்கும்...க்கும்...” என மேடம் என சொல்ல வந்தவன் மனைவி லேசாய் முறைக்க ஆரம்பிக்கவும் தொண்டையை சரி செய்வது போல் பாவ்லா செய்தவாறு ‘எதுக்கு வந்த’ எனும் விதமாய் அவளை ஒரு பார்வை பார்க்க...


அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் அவனை மீண்டும் குழப்பமாய் நோக்கியவள் அவன் மீண்டும் அவ்வாறே பார்க்கவும் கடுப்பாய் வர “வாய் இருக்கில்ல...” என அவனை பார்த்து பல்லை கடித்துக் கொண்டு கேட்க...


அவள் அப்படி கேட்டதும் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி கொண்டு மனைவி எதற்காக இப்படி கேட்கிறாள் என தெரிந்தாலும் அதை வெளிக்காட்டாமல் ‘எதுக்கு கேக்கிற...’ எனும் பார்வையை அவளை நோக்கி வீச அதில் கடுப்பின் உச்சிக்கு போனவள்...


“ஆஹ்... எதுக்கு கேக்குறேன்னா.... இப்பிடி கண்ணாலேயே பேசுறீங்களே... உங்களுக்கெல்லாம் எதுக்கு வாய்ன்னு ஒன்னு...பேசாம அதை யாருக்காவது தானமா கொடுத்திடுங்க...” என எடக்காய் கூற அதை கேட்டு அவளை முறைத்தவன்...


“அதெல்லாம் யாருக்கும் கொடுக்க முடியாது... எனக்கு அது ரொம்ப முக்கியம்...” என அவனுமே எடக்காய் மொழிய..


“இப்போ தான் நீங்க கண்ணாலேயே பேசுறீங்களே... அப்றோம் எதுக்கு....” என்றவள் ‘கண்ணாலேயே’ என்றதில் சிறு அழுத்தம் கொடுக்க...


“வாயில்லாம கண்ணால கூட பேசலாம் தான்... ஆனா...” என்றவன் அவளருகில் மெல்ல மெல்ல நெருங்க அவளோ அவனை பேசுவதை உன்னிப்பாய் கவனித்து கொண்டிருந்ததில் அவன் தன்னை நெருங்குவது புரியாமல் அவனின் கண்ணையே பார்த்துக் கொண்டு “ஆனா....?” என அவனைப் போலவே இழுத்துக் கேட்க....

அதை கேட்டு கண்கள் மின்ன சிரித்தவன் “ஆனா... வாய் இருந்தா தானே லிப் டு லிப் கிஸ் பண்ண முடியும்....” என ஒரு ஒரு எழுத்தாய் அழுத்தி விசமத்துடன் கூற....


அவன் சொன்னது தெளிவாய் புரியாமல் “ஓஹ்...” என சாதாரணமாய் சொன்னவள் அதன் பின்பே அவன் சொன்னதின் முழு அர்த்தம் புரிந்து அவனை பார்த்து இதழை சுழித்தவள் ‘எப்போ பாரு இந்த மனுசனுக்கு இதே நினைப்பு தான் போல....’ என உள்ளுக்குள் அவனை திட்டிக் கொண்டு “கீழ எங்க அத்தையும் மாமாவும் உங்க அத்தையும் மாமாவும் காத்திருக்காங்க சீக்கிரம் சாப்பிட வாங்க... அதவிட்டிட்டு வேலைவெட்டியில்லாம லூசுத்தனமா பேசிக்கிட்டு...” என தலையை சிலுப்பியபடி கூறிவிட்டு அவள் வெளியேற..


அதை பார்த்து பல்லை கடித்தவன் ‘மனுசனோட பீலிங்க்சே உனக்கு புரியமாட்டேங்குது சின்னு...’ என சிறுபிள்ளை போல் தரையில் காலை உதைத்துக் கொண்டு அவள் பின்னால் கீழிறங்கி சென்றவன் டைனிங் டேபிளில் சென்று அமர இவனுக்காகவே காத்திருந்தவர்கள் இவன் வந்ததும் அவனின் உடல் நிலையை பற்றி விசாரித்து விட்டு உணவுண்ண ஆரம்பிக்க அவர்களுக்கெல்லாம் பார்த்து பார்த்து பரிமாற ஆரம்பித்தாள் மலர்.


ஒவ்வொருவருக்கும் பரிமாறி கொண்டு வந்தவள் கணவனின் அருகில் வந்து அவனுக்கு தேவையானதை வைத்துக் கொண்டிருக்க அதை பார்த்து போதும் போதும் என தடுத்தவாறு எதேர்ச்சியாய் திரும்பியவனுக்கு விருந்தளித்தது மனைவியின் பளீர் இடை.


அதை பார்த்தும் தன்னை கட்டுப்படுத்த இயலாதவனாய் அவள் இடை வரை தன் கையை கொண்டு சென்றவன் தான் செய்த சத்தியம் நினைவு வர கையை இறுக பற்றிக் கொண்டு தன் பக்கம் இழுத்துக் கொண்டவன் தரையில் காலால் குத்த “உன்பொண்டாட்டினு நினைச்சு என் கால்ல குத்திட்ட த்ருவ்....” என அவனின் மறுபக்கம் அமர்ந்திருந்த சித்தார்த் மகனை கேலிச்சிரிப்புடன் பார்த்தவாறு கிண்டலுடன் கூற அதை கேட்டு அவன் முறைக்க மற்றவர்களோ சிரிப்பை அடக்கிக் கொண்டு நமுட்டு சிரிப்பு சிரிக்க மலரோ ‘கொல்லென’ சிரித்து வைத்தாள்.


அதை பார்த்து அவளை ‘வெட்டவா? குத்தவா?’ எனும் ரீதியில் முறைத்த யுத்கார்ஷ் அவசரமாய் சாப்பிட்டு விட்டு எழ முயற்சிக்க அவனை தடுத்த ருத்ரா தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.


“நான் நம்ம சொந்த பந்தம் எல்லாரையும் கூப்பிட்டு ஒரு விசேஷம் மாதிரி பண்ணலாம்னு இருக்கேன்...” என மொட்டையாய் கூற.


“என்ன சொல்றீங்க மாம்... புரியும் படி சொல்லுங்க...” என யுத்கார்ஷ் சிறு எரிச்சலுடன் மொழிய...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மகனின் எரிச்சல் கலந்து ஒலித்த குரலில் பல்லை கடித்து வைத்தார் சித்தார்த்... ‘என் பொண்டாட்டி பேச ஆரம்பிச்சா போதும் இவனுக்கு எங்க இருந்து தான் எரிச்சல் வந்திடுமோ...” என அவனை முறைத்து பார்க்க அதை பார்த்த யுத்கார்ஷ் அவருக்கும் மேலாய் அவரை முறைத்து விட்டு தன் தாயை நோக்கி பார்வையை திருப்பினான்.


அவரோ “அதான்பா உங்களுக்கு குழந்தை பொறந்த விஷயம் யாருக்குமே தெரியாதே... அதான் அதை சொல்றமாதிரி குழந்தைக்கும் அப்படியே பெயரையும் வச்சிடலாமே...” என்க... அவரின் யோசனையை கேட்டு தாடையை தடவியவன் ‘சரி’ என்பது போல் தலையை அசைக்க அதை பார்த்து சிரித்த ருத்ரா “அப்போ இப்போவே ஒரு நல்ல நாள் பார்த்திடலாமா...” என மகிழ்சியுடன் கேட்க...


“பார்த்திடலாம் மா... ஆனா குழந்தைக்கு காதுகுத்து வைக்க வேணாமா... அதுவும் நம்ம குலசாமி அம்மன் முன்னாடி பண்றது தானே நம்ம வழக்கம்...” என சுந்தரபாண்டியன் தன் கருத்தை கூற...


அதை கேட்டு “ஆமாண்ணா... ஆனா முதல்ல பெயர வைப்போம்... அதுக்கப்றோம் ஒரு நல்ல நாளா பார்த்து குலசாமி கோவிலுக்கு போய்ட்டு வந்திடலாம்...” எனக்கூற அதை ஆமோதித்தவராய் சுந்தரபாண்டியன் தலையசைக்க இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மலருக்கு அப்போது தான் தான் இங்கு வந்ததிலிருந்து கோவிலுக்கே செல்லவில்லை என்பது உறைக்க ‘நாளைக்கு எப்பிடியாவது கண்டிப்பா கோவிலுக்கு போய்ட்டு தான் மறுவேலை பார்க்கணும்... இங்க எங்க கோவில் இருக்கும்னும் தெரியல அத்தைக்கிட்ட விசாரிக்கணும்...’ என எண்ணிக் கொண்டு அனைவரும் சாப்பிடத் முடித்தும் தானும் உணவுண்டவள் அனைத்தையும் எடுத்து வைத்து தன் தாயின் கையில் சுகமாய் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை வாங்கியவள் தன் அறைக்குள் செல்ல அனைவரும் தத்தமது அறைக்குள் முடங்கிக் கொண்டனர்.


மனைவி அவள் அறைக்குள் நுழைவதை சிறிது நேரம் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த யுத்கார்ஷ் அவள் கதவை அடைக்க முற்பட்டதும் மின்னல் வேகத்தில் அவனும் அவளின் அறைக்குள் நுழைந்து விட்டிருந்தான்.


இப்போதெல்லாம் அவன் செய்யும் செயல்கள் அவளை பெரிதும் குழப்பவே ‘என்ன’ எனும் விதமாய் அவனைப் போலவே அவளும் புருவத்தை உயர்த்தி இறக்க அதில் நெஞ்சுக்குள் மின்னலடிக்க கிறங்கிப் போய் நின்றவன் ‘ஷப்பா.... முடியலேயே.... இன்னும் எத்தன நாளைக்கு இப்பிடி கையகட்டிக்கிட்டு வேடிக்கை பார்க்கிறது’ என உள்ளுக்குள் புலம்பியவனின் குரல் அவளின் காதை சென்றடைந்ததோ என்னவோ மீண்டும் அவள் புருவத்தை ஏற்றி இறக்க அதில் தன் கட்டுப்பாட்டை இழந்தவன் மறுபுறம் திரும்பி நின்று கொண்டு அங்கிருந்த சுவற்றில் கையால் குத்தினான்.


அவன் சுவற்றில் கையால் குத்திக் கொண்டிருப்பதை பார்த்த மலர் குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு அவனருகில் விரைந்தவளுக்கு ‘காத்து கருப்பு பிடிச்சிடிச்சோ...’ என்ற எண்ணம் தான் மனதுக்குள் தோன்றிக் கொண்டிருந்தது..


எப்போதும் கம்பீரமாய் வளைய வந்து கொண்டிருக்கும் கணவனையே அதிகமாய் பார்த்திருந்தவளுக்கு அவனின் இந்த முகம் புதிது...


யார் எது பேசினாலும் எடுத்தெறிந்து பேசிக்கொண்டு தான் செய்ததே சரி என்பது போல் எப்போது கடுகடுவென இருக்கும் கணவன் இப்போதெல்லாம் எதையோ பறிகொடுத்து போலவும் விசித்திர செய்கைகளை செய்து கொண்டிருப்பதையும் பார்த்தால் அவளாலும் வேறு என்ன நினைக்க தோன்றும்..


இதுவரையிலும் தன் காதலை வார்த்தையால் கூறாமல் செயல்களால் மட்டுமே உணர்த்திக் கொண்டிருந்தவனின் காதல் அவளின் அறிவிற்கு எட்டவேயில்லை...


அவளை பொறுத்தவரை தன் கணவன் தன் குழந்தையின் தாயாய் தான் தன்னை நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்பது அவள் எண்ணம்..


இந்த எண்ணத்தை வளரவிட்டதும் கூட அவன் தானே... ஆரம்பத்திலிருந்து அவளை வார்த்தையால் குத்தி கீறி காயப்படுத்தி அவளின் தன்மானத்தை வேரோடு அளித்து என அவளின் பெண்மையையே மதியாமல் வேசி என்பவளுக்கு இணையாய் அவளை பற்றி கேவலமாய் பேசி என ஏகப்பட்ட செயல்கள் மூலம் அவளை அவமானப்படுத்தி விட்டு இப்போது வந்து தன் செயல்கள் மூலம் காதலை நிரூபித்தால் அவளாலும் தான் எப்படி அவனின் காதலை புரிந்து கொள்ளமுடியும்..


இதுவரையிலும் தன்னை மனுசியாய் கூட மதியாதவன் தன் குழந்தையை பார்த்தும் தன்னுடன் இழைவதை போல் தோன்றவும் தான் இதற்கு மேலும் காதலில்லா வாழ்க்கையில் வாழ மனமற்று அவள் அவனியம் விவாகரத்து பற்றி பேசியது...


அதுவும் அப்படி பேசும் போது அவள் காதல் கொண்ட மனம் என்ன பாடுபட்டதென அவளை தவிர வேறுயாராலும் உணர்ந்து கொள்ளமுடியாது... அந்தளவு தன் வேதனை எதையும் வெளிக்காட்டாமல் தன் கணவனின் மகிழ்ச்சிக்காய் தன் காதலை கூட தியாகம் செய்ய துணிந்தவள் அவள்... அவளுக்கு அவன் தன் காதலை புரிய வைத்தால் தானே அவளாலும் புரிந்து கொள்ளமுடியும்...


சொல்லா காதல் செல்லா என்பது போல் தன் காதலை வார்த்தையால் வெளிப்படுத்தாது இருக்கும் யுத்கார்ஷின் காதலும் கூட செல்லாது போய்விடுமோ?


அவனருகில் விரைந்த மலர் அவனின் கையை பிடித்து தடுத்து “என்னாச்சு... ஏன் இப்பிடி லூசுத்தனமா எதையெதையோ செய்றீங்க... என்னன்னு சொன்னா தானே எனக்கு புரியும்... அதுவும் கொஞ்ச நாளா நீங்க சரியேயில்ல.... என்ன விஷயம்... ஏதாவது என்கிட்ட சொல்லனுமா... இல்ல ஏதாவது வேணுமா.... ம்ம்ம்...” என அவனின் கையை பிடித்து அவனின் கையை தடவிக் கொண்டே கேட்க...


தன் கையை தடவிக் கொண்டிருக்கும் தன்னவளின் ஸ்பரிசத்தில் மெய்சிலிர்த்து போய் நின்றவனின் ஒவ்வொரு அணுவும் தன் மனைவிக்காய் ஏங்க ஆரம்பிக்க அதை அடக்க முடியாமல் கண்களில் தாபம் வழிய அவளை பார்த்தவன் “நான் என்ன கேட்டாலும் செய்வியா...” என சன்னக்குரலில் முணுமுணுக்க அவனின் குரலின் வித்தியாசத்தை கண்டு கொண்டவள் ‘என்னத்த கேக்கபோறாரோ...’ என எண்ணிக் கொண்டு “முதல்ல நீங்க என்ன வேணும்னு சொல்லுங்க... அதுக்கப்றம் நான் செய்யலாமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்...” என விலாங்கு மீனை நழுவிய படி கூற....


அதை கேட்டு மெதுவாய் அவன் இதழ் பிரித்து சிரிக்க அதை பார்த்தவளுக்கு அவனை முதல் தடவை பார்த்த ஞாபகம் நெஞ்சில் எழ தன்னை மறந்து அவனின் சிரிப்பையே இமைசிமிட்டது நோக்கியவள் அவனின் கன்னத்தில் மெதுவாய் கையை படரவிட்டாள்..


அதில் மனைவியின் மென்மையை உணர்ந்தவன் தன் கையை அவள் கை மீது வைத்து அழுத்த அதில் திடுக்கிட்டு போய் தன்னிலைக்கு வந்தவள் அவசரமாய் அவன் கையிலிருந்து தன் கையை பிரித்தெடுத்துக் கொண்டு “நான் தூங்கனும்... நீங்க உங்க ரூமுக்கு போக போறீங்களா... இல்ல...” என்றவள் அவனின் முறைப்பில் தன் பேச்சை இடையில் நிறுத்த அவனோ தன் நிலையை மனைவியிடத்தில் எப்படி கூறுவது எனப் புரியாமல் விழித்தான்.
 
Status
Not open for further replies.
Top