All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐம்பத்தி மூன்றாம் பகுதி...

யானை வாயிற் கதவை தும்சம் செய்துவிட்டு, தோட்டத்தை பிய்த்து எரிந்து தறிகொட்டு வீட்டை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தது.

பவித்ரன் வாயிலை நோக்கி ஓட, நாய்கள் அவனை நோக்கி சீறிப் பாய்ந்தன.

யானையும், பவித்ரனும் எதிரெதிரே வர, அவர்களுக்கிடையேயான தூரம் சட்டென குறைய, பவித்ரனை துரத்தி வந்த நாய்கள், அவனை பிடிக்க ஒரே பாய்ச்சலில் தாவியது.

பவித்ரன், சட்டென பக்கவாட்டில் பாய்ந்துவிட்டான். பலம் கொண்ட யானை, பாய்ந்த ஒரு நாயை, தும்பிக்கையால் தூக்கி வீசியது. மற்றொரு நாயை ஓங்கி மிதித்து கொன்றது.

ரத்தம் உறைய இதை அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். யானை முன்னேறவும் சுதாரித்த அனைவரும் வீட்டுக்குள் ஓடினர்.

யானை சில நிமிடங்களில் வீட்டை நெருங்க, முன் வராண்டாவில் ராஜா இதை அறியாமல் விளையாடிக்கொண்டிருந்தான். வள்ளி, ராஜா உள்ளே வந்திடு டா என கத்தவும்தான் அனைவரும் அவனைப் பார்த்தனர்.

ராஜா தலையை நிமிர்ந்து பார்க்க யானை வேகமாக ஓடிவருவதைக் கண்டவன், பயத்தில் அம்மா!! என அழ ஆரம்பித்தான்.

ரஞ்சனி யானை வரும் முன் அவனை காப்பாற்ற நினைத்து அவனை தூக்கிக்கொண்டு நிமிர்ந்தவள் எதிரே, யானை தும்பிக்கையை தூக்கியபடி நின்றது. ராஜாவின் வாயை மூடி அவனது அழுகையை பட்டென நிறுத்தியவள், தானும் அசையாது நின்றாள்.

ரஞ்சனி மூச்சைப் பிடித்துக்கொண்டு நிற்க, யானை மூச்சையாகி பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. யானையின் தும்பிக்கை அவளது இடதுதோளில் பட்டு சரிய, ரஞ்சனியின் மனது பட்பட்டென அடித்துக்கொண்டது.

யானை கீழே விழவும்தான் அனைவருக்கும் மூச்சு சீரானது. அனைவரும் ரஞ்சனியை நோக்கி ஓடி வந்தனர்.

பவித்ரன் வேகமாக வந்து ரஞ்சனியை உலுக்கினான். அவள் கையிலிருந்த ராஜாவை வாங்கி, ஓடிவந்த வள்ளியிடம் நீட்டியவன், டாலி ஆர் யூ ஓகே!! என்றான்.

ரஞ்சனியின் மனதை சற்றுமுன் நடந்த சம்பவம் உலுக்கியதில், அவள் பேச்சற்று ம்..என்றுமட்டும் சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த சுவற்றை ஆசுவாசத்திற்கு பிடித்தாள்.

யானை எப்படி வீழ்ந்தது என அவள் அதை ஆராய, கால்களில் முடுச்சுகளும், சுருக்குகளிலுமான கயிறு, அது கயிறு என்று சொல்வதை விட வடம் என்றுதான் சொல்ல வேண்டும் .அதில் யானையின் கால்கள் சிக்குண்டு கிடந்தது. கழுத்தில் மயக்க மருந்து கொண்ட ஊசி சொருகப்பட்டிருந்தது.

பவித்ரன் உள்ளங்கையில் வெட்டுப்பட்டு ரத்தம் வழிந்தது. ரஞ்சனி அவனது கையைக்கண்டதும் பதறினாள்.

இப்படி ஏதேனும் பெரிய மிருகம் உள்ளே வரும்போது, அதன் ஓட்டத்தை தடுக்கவும், அதை வீழ்த்தவும் இந்த கயிறு வாயிலில் இருப்பது வழக்கம். அதை எடுக்கத்தான் ஓடினேன் என்றான் பவித்ரன்.

கயிற்றை வேகமாக வீசியதில், கையில் கயிற்றிலிருந்த செத்தை கிழித்திருக்கும். கால்களில் கயிறு சரியான சமயத்தில் சிக்குண்டதால் தான் யானை நகர முடியாமல் தும்பிக்கை தூக்கி நின்றது. நல்லவேலை மருது அதற்குள், மயக்க மருந்து செலுத்தியதில், எல்லோரும் பிழைக்க முடிந்தது என்றான் பவித்ரன்.

ரஞ்சனி, பவித்ரனை உள்ளே அழைத்துச் சென்று, உள்ளங்கையின் குறுக்காக வெட்டுபட்ட இடத்தில், மருந்திட்டாள்.

பேண்டேஜின் முடிச்சை அவள் இறுக்கியதில், பவித்ரன் ஸ்... எனவும் பதறி அவனைப் பார்த்தவள், சாரி... சாரி பவி. ரொம்ப வலிக்குதா பவி?? டாக்டரை கூப்பிடவா?? என்றவளின் கண்களை உற்றுப் பார்த்தவனுக்கு அவளது கனிவு இனித்தது.

இதுவும் பொய்யாக இருந்துவிடக்கூடாதே என தவித்தான். வேண்டாம்!! சரியாயிடும் என்றவன் தனது கையை உறுவிக்கொண்டான்.

முதலுதவிப் பெட்டியை மூடி இடது கையில் அதை தூக்கியவளின் தோள்பட்டை சுருக்கென வலிக்க, கையிலிருந்த பெட்டி நழுவி விழுந்தது.

பெட்டி விழுந்த சத்தத்தில் திரும்பி ரஞ்சனியை பார்த்தான் பவித்ரன். அவள் எதுவும் சொல்லாமல் மடமடவென படியேறிச் சென்றுவிட்டாள்.

சிதறிய பொருட்களை கூட எடுத்துவைக்கவில்லை. என்னானது இவளுக்கு??? என நினைத்தவன், பின்பு, வனத்துரையினர் வரவே அதை மறந்து போனான்.

யானை லாரியில் ஏற்றி அனுப்பப் பட்டது.

டிரைனர்கள் இருவரும் என்ன செய்வதென தெரியாமல் முழித்தனர்.
யானைகாலில் மிதிபட்ட நாய் இறந்துவிட்டது. தூக்கி வீசப்பட்ட நாயோ, படுகாயமுற்று துடித்துக்கொண்டிருந்தது.
பவித்ரன் கால்நடைகளுக்கான மருத்துவமனைக்கு படுகாயமுற்ற நாயுடன், அதன் டிரைனரை அனுப்பி வைத்தான்.
காலையில் எடுந்ததும் ஆரம்பித்த கலவரம், அனைத்தையும் முடிக்க மதியம் தாண்டிவிட்டது.

காபி கொட்டிய சட்டையை மட்டும் கழற்றி வீசியிருந்தான். வெள்ள பனியனில் சற்றே காபிகரைபடிந்த கோடுகள் தெரிந்தன.

வள்ளி மதிய உணவிற்கு அழைத்ததும், குளித்துவிட்டு வருகிறேன் என்றவன், தனது அறைக்குச் சென்றான்.

காணாமல் போன துணிகள் திரும்பியிருந்தன. மேசையிலிருந்த செல்போன் மீது அதன் சிம்கார்டு வைக்கப்பட்டிருந்தது.

அடுத்த டிராமாவாக்கும், இருக்கட்டும் என நினைத்தவன், குளித்துவிட்டு உணவருந்தச் சென்றான்.

ரஞ்சனி காலையில் தனது அறைக்குச் சென்று கதவடைத்துக்கொண்டவள், இன்னும் வெளியில் வரவில்லை.

நான் கதவதட்டி கூப்பிட்டு பாத்தேன், ஆனா, அவங்க, எனக்கு சாப்பாடு வேணாம்னு உள்ளயிருந்தே சொல்லீட்டாங்க என பவித்ரன் கேட்காத கேள்விக்கு வள்ளி விடையளித்தாள்.

ம்... என்றவன் வேறேதும் சொல்லாமல் சாப்பிட்டுக் தொழிற்சாலைக்குக் கிளம்பினான்.

அப்போது அவனிடம் வந்த வள்ளி, ஐயா நான் நம்ம கோயம்புத்தூர் வீட்டுக்கு போறேன். ராஜா யானைய பக்கத்துல பாத்ததுல வேற பயந்துட்டான். சின்ன பையன் பாம்பு வந்தாலும் அவனுக்குத் தெரியாது , அதனாலதான் என்றாள்.

மருது, வள்ளியிடம் கோபம் கொண்டான். வள்ளி!! அம்மாவும், சாரும் இங்க இருக்கும் போது, நீ அங்க என்ன செய்யப்போற என்றான்.

மருதுவின் போச்சை கைநீட்டி நிறுத்திய பவித்ரன், வள்ளியிடம், உன்னோட பயம் எனக்கு புரியுது. சரி வா, நானும் கோயம்புத்தூர் தான் போறேன் என்றான்.

மருதுவிடம் திரும்பி, தோட்டத்தை சரிபண்ண ஏற்பாடு செய்துரு, அடுத்து அந்த வாசல பழைய படி கட்ட ஆளுங்கள வரச்சொல்லு என்றுவிட்டு வாடகைக் காரை எடுத்துக்கொண்டு ஊட்டி வீட்டைவிட்டு கிளம்பினான் பவித்ரன்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீட்டில் வள்ளியையும், ராஜாவையும் இறக்கிவிட்டவன், தனது காரை எடுத்துக்கொண்டு, தொழிற்சாலைக்குக் கிளம்பினான்.

தொழிற்சாலை கதவு ரிமோட்டில் இயங்கும் வண்ணம் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

பவித்ரனுக்கு தொழிற்சாலையில் அனுமதி அளிக்கப்படவில்லை. கோபத்தில் போலீஸ் டேஷனுக்கு சென்றவன், சற்று நேரத்தில் இன்ஸ்பக்டருடன், தொழிற்சாலைக்குள் நுழைந்தான்.

வாட்டசாட்டமான ஒரு ஆள் அவர்களை உள்ளே அழைத்துச்சென்றான்.

தொழிலாளிகள் அனைவருக்கும், அஸ்ஸெஸ் கார்ட், அடையாள அட்டை தரப்பட்டது. கழுத்தில் தொங்கவிடப்பட்ட அந்த அட்டை ஸ்கேன் செய்துதான் வருகைப்பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பார்த்துக்கொண்டுதான் பவித்ரன் தனது பழைய அறைக்குள் நுழைந்தான்.

பவித்ரன் சீட்டில் இப்போது ராஜா உட்கார்ந்து, அவனது கம்பியூட்டரை இயக்கிக்கொண்டிருந்தான்.

இன்ஸ்பெக்கட், யார் நீங்க?? இவருடைய பேக்ரடீல உங்களுக்கு என்ன வேலை என்றார்.

ராஜா, உக்காருங்க சார், என்றவன் போனில் பேசிவிட்டு வைக்க, இரண்டு ஜூஸ் வந்தது.

எடுத்துக்கோங்க சார் என்றவன், ஒரு பைலை எடுத்து அவர்களிடம் நீட்டினான்.

அதில் 60% பங்குகள் ரஞ்சனி பெயரில் இருந்தது. இந்த கம்பெனியின் அதிக பங்குகளை வைத்திருப்பவர் என்ற முறையில் எங்க மேடம்தான் எம்.டி என்றான் ராஜா.

அதெல்லாம் தெரியும். பவித்ரனிடம் மீதம் 40 % உள்ளது. இவரை எதற்காக பேக்டரிக்குள் அனுமதிக்கவில்லை எனக் கேட்டார் போலீஸ்.

அது இந்ந கம்பெனியின் ரூல்ஸ். மீட்டிங் நேரம் தவிர மற்ற சமயம் பங்குதாரர்களுக்கு நுழைவு அனுமதி இல்லை. இது மேடம் எடுத்த முடிவு என முடித்துக்கொண்டான் ராஜா.

பவித்ரன், ராஜாவை பார்த்து முறைக்க, அவனோ பவித்ரன் பக்கமே திரும்பவில்லை.

உங்கள் மேடமை ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுங்கள் என எழுந்தார் இன்ஸ்பக்டெர்.

மேடம் சொந்த வேலையாக வேறு ஊரில் உள்ளதால், எங்கள் கம்பெனி வக்கீல் வந்து பேசுவார் என்றான் ராஜா.

பவித்ரனிடம் இன்ஸ்பெக்டர் காதில் முணுமுணுக்க அவர்கள் கிளம்பினர்.

தொழிற்சாலைக்கு வெளியில் வந்தபின் இன்ஸ்பெக்டர், பவித்ரனிடம் வினவினார்.

வேணுனா ஒன்னு பண்ணலாம், நல்லா ஒரு வெள்ளிக்கிழமை. இவனையும் இவங்க மேடத்தையும் உள்ள தள்ளி ஒரு காட்டு காட்டலாம் , அதுகூட திங்கக்கிழமை வரைக்குந்தான், அதுக்கப்பறம் ஜாமீன்ல போயிடுவாங்க. ஆனா பேக்டரி திரும்ப வாங்குறது கஷ்டம், எல்லா டாக்குமெண்டையும் பக்காவா வச்சாருக்கான் என்றார் இன்ஸ்பெக்டர்.

பவித்ரன் பார்வை புதிதாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் கேட்டிலே இருந்தது. சொல்லுங்க பவித்ரன் என்ன செய்ய என அவர் கேட்க, எனக்காக என்னோட வந்ததுக்கு நன்றி சார், நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான்.

ஐம் சாரி பவித்ரன். அங்க ஷேரை சீக்கிரம் வாங்க முயற்சி பண்ணுங்க, அவங்க தொழிற்சாலையில் பணத்த செலவு பண்றதப்பாத்தா, அவங்க பேக்டரினே முடிவு பண்ணீட்டாங்க போல, பாத்து டீல் பண்ணுங்க என்றார்.

அவரிடம் கைகுலுக்கி அனுப்பியவன் மனம் உலைகலமாய் கொதித்தது.

பவித்ரனின் கார் ஊட்டியை நோக்கி சீறிப்பாய்ந்தது.

பவித்ரன் வீடு வந்து சேரும்போது நன்றாக இருட்டிவிட்டது. பவித்ரனின் நாய்கள் இப்போது சுதந்திரமாய் சுற்றித் திரிந்தது.

படிகளில் இரண்டிரண்டாக தாவியவன், ரஞ்சனியின் அறை கதவைத் தட்டினான். கதவு திறக்கப்படவில்லை. எந்த பதிலும் இல்லை.

ஒழுங்கா வந்து கதவை திற!! என கத்தினான் பவித்ரன். வீடு முழுவதும், பவித்ரனின் குரல் எதிரொலிக்க, அவனது கோபம் கண்டு யாரும் வாய்திறக்கவில்லை.

கதவை உடைக்கவா!! என்ற அவன் கேள்விக்கும் பதிலில்லை.

ரஞ்சனி அறையில் அலமாரியின் கதவு தானாக திறந்து கொள்ள, பவித்ரன் ரஞ்சனி அறையில் நுழைந்தான்.

இது பழங்காலத்தில் ஓரறையிலிருந்து மற்றொரு அறைக்கு உள்பக்கமாக செல்வதற்கு கட்டப்பட்டிருந்த அலமாரி போன்ற கதவு அமைப்பு. இந்த கதவை யாரும் பயன்படுத்தியது இல்லை. அதனால் அலமாரியாக இதுநாள்வரை இருந்தது.

ரஞ்சனி அறையில் இல்லை, எங்கே என தேடியவன், பால்கனியிலிருந்த சாய்வு நாற்காலியில் அவளைக் கண்டான். ரஞ்சனி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

ரஞ்சனி என பவித்ரன் கோபமாய் அழைக்க அவளிடம் அசைவு இல்லை. அவளை தொட்டு எழுப்ப அருகில் வந்தவன், அந்த மாற்றத்தை உணர்ந்தான்.

அவள் முழுக்கை சட்டை இடது கையின் வீக்கத்தில் கிழியத்தயாராகி இருந்தது. அவள் கைகளை மூடி இருந்த புடவை முந்தானையை சற்றே விலக்கியவன் அதிர்ந்தான்.

அவளது மெலிந்த அழகிய விரல்கள் தடித்து ஒருவிரல் மறுவிரலை இடித்துக்கொண்டிருந்தது.

ரஞ்சனி... என அவள் தடையை திருப்ப, அவளது உடல் சூட்டை உணர்ந்தான். வேகமாக அவளை உலுக்க, அவளிடமிருந்து லேசான முனங்களைத் தவிர எந்த பதிலும் இல்லை.

அவளை தூக்கிவந்து கட்டிலில் கிடத்தியவன், மருத்துவருக்கு அழைத்தான்.

பெண் மருத்துவர் ஒரு நர்சுடன் வந்திருந்தார்.

என்ன நடந்தது, எப்படி இப்படி வீங்குச்சு, என விசாரித்தார் அவர்.

காலையில் யானை வந்ததை சொன்னவன், அதனது தும்பிக்கை லேசாக அவள்மேல் பட்டது, அதனால்தான் வீங்கியிருக்கும் என நினைக்கிறேன் என்றான்.

காலைலயா?? ஏன் இவ்வளவு நேரம் பாக்காம விட்டீங்க, வலில காச்சல் வந்து மயங்கி இருக்காங்க, என்ன பண்ணீட்டு இருந்தீங்க என கடிந்தார் அவர்.

அவங்க காலைல எந்த வலியும் சொல்லல, நான் இப்பத்தான் வீடு வந்தேன் என்றான்.

சட்டையை கழட்டமுடியாது . கட்பண்ணீடுங்க, நர்ஸ் என டாக்டர் கூற, பவித்தன், நான் வெளில இருக்கேன் என கதவடைத்துச் சென்றுவிட்டான்.

வேலைக்காரர்களிடம், ரஞ்சனியை ஏன் யாரும் கூப்பிடவில்லை என கடிந்தான். காபி குடுக்க கூப்பிட்டோம். எதுவும் சொல்லலை என்றனர்.

ம்சூ.. அவங்க காலைல உள்ள போனாங்க, வெளில வரல, சத்தமும் குடுக்கலனா எனக்கு ஒரு போன் பண்ண வேண்டியது தான என கத்தினான்.

நர்ஸ், ஓடிவந்து பவித்ரனிடம், டாக்டர் உங்கல கூப்பிடுறாங்க என்றாள்.

பவித்ரன் ரஞ்சனி அறையில் நுழைய, ரஞ்சனி போர்வையில் படுத்திருந்தால். டாக்டர் கடும் கோபத்தில் அமர்ந்திருந்தார்.

என்ன டாக்டர் என பவித்ரன் கேட்கவும், படபடவென பொரிந்து தள்ளினார்.

நீங்கல்லாம் ஒரு கணவனா?? மனைவியை இப்படித்தான் நடத்துவதா?? ஒரு பெண் உடம்பில் எத்தனை காயம்?? உங்களையெல்லாம் நிக்கவச்சு சுட்டாலும் அது தப்பில்ல என்றார்.

என்னாச்சு டாக்டர், அவங்கல காலையில் இருந்து கவனிக்காதது தப்புதான். ஆனால் நீங்க இப்படி கோபப்படும் அளவிற்கு என்னாச்சு என்றான்.

நீங்க ஒரு சைகோவா?? இல்ல ..என கடுமையாக திட்டவந்தவர், அவங்க உடம்ப கொஞ்சம் போய் பாருங்க என்றார் கடுப்பாக!!

பவித்ரன் சற்றே போர்வை விலக்கி பார்க்க, இதயம் நின்றது போல் உணர்ந்தான்.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 
Top