All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐம்பத்தி ஐந்தாம் பகுதி..

பதில் சொல் ரஞ்சனி, என்னிடம் மறைக்க வேண்டிய அவசியமே இல்லையே என்றான் பவித்ரன்.

நான் எதையும் மறைக்க முயற்சிக்கவில்லை என்றவள், பவித்ரனை முறைத்துவிட்டு, அதற்காக கண்டவரிடமும் எனது ரகசியங்களை உடைத்துக்காட்டும் பைய்த்தியமும் நானில்லை என்றாள் ரஞ்சனி.

ஓ.. சரி நீயே கஷ்டப்படு!! என்றவன், குளியலறையை விட்டு வெளியேறிவிட்டான்.

ரஞ்சனி குளித்து வெளியில் வந்து, தோளில் தசைபிசைவுக்கு கட்டுவதற்கான பெல்டை எடுத்து ஒரு கையால் முயற்சித்து கட்டிக்கொண்டிருந்தாள்.

பவித்ரன் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் உதவ வரவில்லை.

ரஞ்சனியின் அடிபட்ட இடக்கரத்தைவிட இப்போது வலக்கரம் வலித்தது. அவள் அவன் பக்கத்தில் உட்கார்ந்து ஆஸ்வாசப்படுத்திக்கொண்டாள். இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் முயற்சித்தாள்.

பவித்ரனது பார்வை அவளது ஈரமான புருவத்திலேயே இருந்தது. அதன் நுனியில் ஒரு சொட்டுநீர் தொக்கி நின்று விழாமல் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தது.

ஒரு வழியாக ரஞ்சனி கட்டிவிட்டு நிமிர, அந்தத் துளி கீழே விழுந்தது.

பவித்ரன் டாலி... என்று அவள் தாடையை நிமிர்ந்த, பவித்ரனை நன்கு அறிந்தவளாக ரஞ்சனி, அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளினாள்.

ஆனால் பவித்ரனிடம் காட்டுத்தனமான முத்தம் இல்லை. தூரிகை ஓவியம் தீட்டுவது போல ரசனையாக மென்மையாக மாறி இருந்தது. ரஞ்சனி பவித்ரனின் கண்களைப் பார்த்தாள். மிக அருகில், ஆனால் பவித்ரனது பார்வையும் வேலையும் அவள் இதழ்களிலே இருந்தது.

பவித்ரன் பார்வை ரஞ்சனியின் கண்களுக்கு வர, இருவர் பார்வையும் சந்தித்ததும், வேகமாக ரஞ்சனி தள்ள, பவித்ரனும் பட்டென விலகிக்கொண்டான்.

பவித்ரன் புன்னகையுடன் ரஞ்சனியைப் பார்க்க, அவளது மனம் அதே பிரகாசமான முகம் எனவும், இவ்வளவு தூரமா பவித்ரன் என்நினைவில் இருக்கிறான் என தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.

பவித்ரனுக்கு மனம் உற்சாகமானது, சாப்பாடு கொண்டுவர சொல்றேன் என எழுந்து சென்றான்.

லதா ஊருக்கு கிளம்புவதாக கூற, பவித்ரன் நீங்க பிரணவ கூட்டீட்டு வந்ததுக்கு நன்றி என அவரிடம் கூறினான்.

பவித்ரன் முகம் மகிழ்ச்சியில் இருக்க, லதா பவித்ரனிடம் ரஞ்சனிய பாத்துக்கோங்க தம்பி. இத நான் இரண்டாவது முறை சொல்றேன். உங்க மகனை நீங்க சொல்லாமலே நாங்க நல்லா பாத்துக்கிட்டோம். இப்ப உங்ககிட்ட ஒப்படுச்சிட்டேன்.

அதேமாதிரி எம்பொண்ணையும் பாத்துக்கோங்க, என்றார் பவித்ரன் கைகளை பிடித்துக்கொண்டு.

பவித்ரன் முகம் சீரியசாக மாற, நான் உங்கல தப்பு சொல்லல, எனக்கு என்ன நடந்ததுணுகூட அவ சொல்லல, ஆனா எம்பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. அவ தோத்த ஒரே விசயம் இதுதான்.

இந்த கல்யாணத்தை அவசரமா நடத்தினது நான்தான். பலநாள் அதை நினைச்சு நான் தூங்காம இருந்திருக்கேன். இப்ப ரஞ்சனிய இங்க வரவழச்சதும் நான்தான். அவ மனச மாத்துங்க. உங்களால முடியும். உங்களால மட்டும்தான் முடியுங்கிறனாலதான் எல்லாரோட எதிர்ப்பையும் மீறி இத செய்றேன்.

உங்கள எம்மகனாத்தான் பாக்குறேன். உங்க வாழ்க்கையும் நல்லா இருக்கணும். ரஞ்சனியும் நல்லா இருக்கணும்னு தான் பிரணவ கூட்டீட்டு வந்தேன்.

எம்பொண்ணுக்கு அழவே தெரியாதுணு நெனச்சேன். நீங்க அத பொய்னு நிரூபிச்சுட்டீங்க. எம்பேரனுக்கு அழுகைனா என்னனே கத்துகொடுக்காம வளத்திருக்கேன். அத இனிமே நீங்கதான் காப்பாத்தணும் என சொன்னவர் கண்கள் கலங்கிவிட்டது.

லதா ஒருதாயாக தனது கவலையை கொட்டிவிட்டு அழ, பவித்ரன் பேச ஆரம்பித்தான்.

அத்தை, நான் ஞானி இல்லை. ஆனா கொடூரனும் இல்ல, இத நீங்க நம்பணும். ஆனா என்னோட பொருளை இனியும் தவறவிடமாட்டேன் என்றான் உறுதியாக.

லதா, தலையசைத்துவிட்டு, ஊட்டியைவிட்டு கிளம்பினார். ரஞ்சனியிடம் சொல்லாமலே கிளம்பிவிட்டார்.

லதா மனது கனத்தது. பெண்ணை பிரிந்து சென்றாலே கவலையாக இருக்கும், லதா தனது பேரனையும் விட்டு விட்டு தனியாக காரில் சென்றார். பிரணவ் பாட்டி என்று அழைக்கும் குரல் அவரது காதுகளில் ரீங்காரமிட்டது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணவை வேலையாள் கொடுத்துவிட்டு செல்ல, பவித்ரன் பிரணவுடன் ரஞ்சனி அறைக்கு வந்தான்.

ரஞ்சனி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். பவித்ரன் பிரணவிற்கு விளையாட்டு பொம்மையை கொடுத்துவிட்டு, அமைதியாக ரஞ்சனி அருகில் அமர்ந்தான்.

அவன் மனதில் சற்றுமுன் லதா பேசிய வார்த்தைகளே எதிரொலித்தது.

அம்மா என்ன பண்றாங்க, என்றாள் ரஞ்சனி. கிளம்பீட்டாங்க என்றான் பவித்ரன்.

ரஞ்சனி பல்லைக்கடித்தாள். பிரணவை கூட்டிச்செல்ல சொன்னால், என்னிடம் சொல்லாமல் சென்றிருக்கிறார். ரஞ்சனி பிரணவை பவித்ரனிடம் விடக்கூடாது என முடிவுக்கு வந்தாள்.

பவித்ரன் ஒரு முடிவிற்கு வந்தவனாக, ரஞ்சனியை நொருங்கினான்.

அவள் கைகழுவிவிட்டு நிமிர, பவித்ரனை அருகில் கண்டவள், சற்றே தலையை பின்னுக்கு இழுத்துக்கொண்டாள்.

என்ன வேண்டும் என்றாள் கோபமாக! கேலியாக சிரித்தவன், அவளது மடியில் ஒரு காலிதட்டை வைத்தவன் , ஊட்டு!! என்றான்.

அவள் ஏதோ சொல்லவர, அவனது வலதுகை கட்டை அவளிடம் உயர்த்தி காட்டினான்.

அவனுக்கு தட்டில் பரிமாறியவள், இட்டிலியை பிய்த்து போட்டு விட்டு அவனது கையில் ஒரு போர்க்கை திணித்துவிட்டு எழுந்து கொண்டாள் ரஞ்சனி.

பவித்ரன், யார் ஊட்டுவாங்க எனவும், ரஞ்சனி திரும்பிப்பார்த்து முறைக்க, டாடி நான் ஊட்டுறேன் என பிரணவ் ஓடிவந்து பவித்ரன் மடியில் அமர்ந்தான்.

பவித்ரன் முகம் மலர்ந்தது. ரஞ்சனியின் புருவம் சுருக்கினாள். பிரணவ் வேகவேகமாக தந்தைக்கு ஊட்ட, பவித்ரன் சந்தோசமாக உண்டான்.

அதன் பிறகு பிரணவை மடியில் வைத்து அமர்ந்திருந்த ரஞ்சனியிடம் பிரணவ் ரொம்ப வலிக்குதாம்மா?? என அவளது காயத்தை லேசாக தடவியபடி கேட்டான்.

ரஞ்சனி ஒரு முடிவெடுத்தவளாக, ஆமா பிரணவ். வலிக்குது என்றாள்.

நான்வேனா மருந்து தேய்க்கவா?? என மருந்தை எடுக்க எழுந்தவனிடம், வேண்டாம் பிரணவ். நீ அம்மாகூட உக்காந்து பேசிகிட்டு இருந்தாலே போதும் என்றாள்.

அது எப்படிமா பேசினா வலிபோகுமா?? என கேட்டான் பிரணவ்.

இப்போ நீ சிரித்துக்கொண்டே அழமுடியுமா என அவனிடம் கேட்டாள் ரஞ்சனி.

அவன் குழந்தைத்தனமாக அதைமுயற்சித்துவிட்டு முடியல என்றான்.

அதேமாதிரிதான் அம்மாவுக்கு நீ பேசினா சந்தோசமா இருக்குமா, அதனால, வலிதெரியாது, சிரிக்கும் போது அழவும் முடியாது என்றாள்.

பிரணவ் அறியாத பாலகனாக அதை நம்பிவிட்டான். அன்னையைவிட்டு எங்கும் நகரவில்லை.

பவித்ரன் ரஞ்சனி அறைக்கு வந்தான். ஒரு புதுப் பெரிய புதுவித பந்தை பிரணவ் மீது தூக்கிப்போட்டான். பிரணவின் கண்கள் பந்தைப் பார்த்ததும் விரிந்தது. ஆனால் ரஞ்சனியைவிட்டு நகராமல் அவளையே கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

வா விளையாடலாமா என பவித்ரன் அழைத்தான்.

இல்லை டேட் நான் அம்மாகூட பேசணும் என்றவன் அடுத்து ரஞ்சனியிடம் கார்டூன் கதையை பேச ஆரம்பித்துவிட்டான். பவித்ரனை கண்டுகொள்ளவில்லை. பவித்ரன் புருவம் சுருக்கி பார்க்க, ரஞ்சனி பவித்ரனைப்பார்த்து கேலியாக சிரித்துவிட்டு, மகனிடம் கதைகேட்க ஆரம்பித்துவிட்டாள்.

பவித்ரன் பார்வை ரஞ்சனியைத் துளைத்தது. அதை அவள் கண்டு கொள்ளவில்லை.

பவித்ரனிடம் தாவி வந்து ஒட்டிக்கொள்பவன், இரவுவரை ரஞ்சனியைவிட்டு நகரவில்லை. கதையும், சிரிப்பும், விளையாட்டும் அன்னையுடனேயே முடித்துக்கொண்டு, அவளின் மடியிலேயே உறங்கியும் விட்டான்.

மறுநாள் காலை ரஞ்சனி விழித்தபோது பிரணவ் ரஞ்சனி அருகில் இல்லை. எங்கே என வேலையாட்களிடம் கேட்டபோது, குழந்தை இறங்கி வரவே இல்லை என்றனர்.

பவித்ரன் தோட்டத்தில் நடைபயிற்சியில் இருந்தான். ரஞ்சனியின் சந்தேகம் பவித்ரன் மீது பாய, அவனிடம் சென்று எங்கே பிரணவ் என்றாள்??

ரஞ்சனி முகம் சிவக்க, மூச்சுவாங்க கேட்டவிதம், பவித்ரனுக்கு சுவாரஸ்யத்தைக்கூட்ட, எனக்குத் தெரியாதே என்றான் கேலியாக!!

அவனது கேலியே, அவனுக்குத் தெரியும் என காட்டிக்கொடுத்துவிட, எம் பையன ஒழுங்கா குடுத்துடுங்க பவித்ரன். என்னப்பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும், எனக்கு கோபமூட்டுனா, எந்த எக்ஸ்டென்டுக்கும் நான் பேவேன் என்றாள்.

ஓ... அப்படியா!! சரி போ!, இப்ப வழிவிடு நான் நடக்கணும் என்றவன், அடுத்து அவளை கண்டுகொள்ளவில்லை.

வாட்ச்மேனிடம் விசாரித்தாள். யாரும் இரவிலிருந்து வெளியே செல்லவில்லை என தகவல் சொன்னார்.

வீடு முழுவதும் அலசினாள். பிரணவ் பிரணவ் என கூப்பிட்டு கூப்பிட்டு அவளுக்கு தொண்டை வறண்டது.

கையில் வலிஎடுக்க ஆரம்பித்தது. சோபாவில் அமர்ந்து கண்ணைமூட, கண்ணீர் அவளையும் அறியாமல் வெளிவந்தது.

வாக்கிங் முடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தவன், தேடிக் கலைத்த ரஞ்சனியைக் கண்டான்.

இந்தா குடி!! என தண்ணீர் நீட்டினான். கண்ணைத் திறந்து அவனைப் பார்த்து முறைத்தவள், பிரணவுக்கு எதுவும் மயக்கமருந்து கொடுத்துட்டீங்களா?? இல்ல கொன்னே போட்டீங்களா?? என்றாள்.

பவித்ரனின் கண்கள் சினந்தன. தண்ணீரை அவள் முன்னிருந்த டேபிளில் வைத்துவிட்டு, அவனறைக்குச் சென்று கொண்டிருந்தான்.

வேகமாக அவன் முன் சென்று கைநீட்டி தடுத்தவள், உங்களுக்கு இப்ப என்ன வேண்டும் சொல்லுங்க, நான் தரேன். ஆனா நான் இப்பவே எம்பையன பாக்கணும் என்றாள்.

பவித்ரன் அமைதியாக சிரித்து, அவன் என் மகன் என்றான் அழுத்தமாக.

ரஞ்சனி அவனது பேச்சில் அதிர்ந்து நிற்க, பவித்ரன் தொடந்தான். பிரணவ் இந்த வீட்டில்தான் இருக்கிறான் என தெரியும். என்னிடம்தான் இருக்கிறான் என்பதும் நன்றாகவே தெரியும், என்னால் அவனுக்கு துன்பம் நேருமா?? என்பதும் உன்மனதிற்கு தெரியாமல் இல்லை. ஆனால் அவன் நீ பார்க்க நினைத்து தேடிய இந்த ஒரு மணிநேரத்தில் கிட்டத்தட்ட பதட்டத்தின் உச்சத்தில் இருக்கிறாய்.

இத்தனை வருடங்கள் பிறந்ததிலிருந்தே என்கண்ணில் படாமல் நீ வளத்தபோது என்நிலைமை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்???

காலை கட்டிக்கொண்டு திரிந்தவனை, இப்போதும் என்னிலிருந்து ஒதுக்கிவைக்க எவ்வளவு வஞ்சம்?? நீயும் அனுபவி, என்றவன் அவளது கையை தட்டிவிட்டு விறுவிறுவென அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

அடுத்த இரண்டே நிமிடத்தில் மூச்சிரைக்க அவனது அறைக்குள் நுழைந்தவள், பவித்ரன் பிரணவை நீங்கள் திருப்பிக்கொடுக்க உங்களுக்கு என்ன வேண்டும்??? என்றாள்.

அவன் குளிக்க தயாராகிக்கொண்டிருந்தான்.

அவனது அலட்சியம் கண்டு கோபமுற்றவள், உங்க பேக்டரி வெர்கர்சை எல்லாரையும் மொத்தமா வேலைவிட்டு எடுக்கவா? எனக்கேட்டாள்.

பவித்ரன், என்பேக்டரியா?? அப்படி ஒன்று என்னிடம் இப்போது இல்லை என்றான்.

இப்போ உங்களுக்குத்தேவையானது என்ன?? பேக்டரிதான தந்துவிடுகிறேன் என்றாள் ரஞ்சனி பட்டென.

பவித்ரன் தலை இடவலமாக ஆடியது. எனது தேவை அதுவல்ல என்றான்.

பிரணவைத்தவிர எதையும் கேளுங்கள் நான் தருகிறேன் எனவும் பவித்ரன் கண்கள் மின்னின.

ஓ.. அப்படியானால் தந்துவிடு!!!

எதை??

உன்னை.

ரஞ்சனி தலையைப்பிடித்துக்கொண்டு சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

இந்த நிலையிலா??? காயங்களை மனதில் வைத்துக்கொண்டு அவள் கேட்க..

எந்த நிலையிலும் என அவள் அருகில் அமர்ந்தவனும் அவளது காயங்களை மனதில் வைத்துக்கொண்டே சொன்னான்.

அவனை குத்தி எரியும் நோக்குடன், நிமிர்ந்தவள், எத்தனை இரவுகள்?? எனக்கேட்க, சரியாக அது பவித்ரனை தாக்கியது.

ரஞ்சனியை முறைத்தவன், கண்ணில் கோபத்துடன், உதட்டில் உண்டான போலிச்சிரிப்பில், ஏன் பகலில் கூடாத எனக்கேட்டான்.

ரஞ்சனி அவனது கேள்வியில் அதிர்ந்துவிட்டாள். அதை மறைத்தவாறு எதிர்பார்ப்புடன் எத்தனை நாட்கள் என்றவளிடம், இரண்டு வாரம் என்றான்.

ரஞ்சனியின் எதிர்பார்ப்பு என்ன?? ஏமாற்றம் என்ன??? அதை அவளே அறிவாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்தரன் குளியலறைக்குள் புகுந்தான். இப்பவாவது சொல்லுங்க, எம்பையன் எங்க?? என சோபாவில் அமர்ந்தவாறு கத்திக்கேட்டாள்.

பவித்ரனுக்கு அவளது தேவையற்ற பதற்றம் சிரிப்புமூட்ட, தனக்குத்தானே சிரித்துக்கொண்டான். ரஞ்சனிக்கு பதில் சொல்லவில்லை.

ரஞ்சனி பிரணவ் விசயத்தில் ஒருமுறை சரிக்கியதில், அவளது கவனம் இருமடங்கானதில் வந்த பதற்றமே இது.

பவித்ரன் பதில் சொல்லாததால்,, திறந்திருந்த குளியலறை முன் சென்று நின்று, பவித்ரன்!! என அழைத்தவளை, திரும்பி ஆச்சர்யமாக பார்த்தவன், நான் உனக்கு உதவி செய்ய உனது குளியலறைக்கு வந்தேன், அப்போது என்னை அடித்துவிட்டாய்.

நானெல்லாம் பரந்த மனம் படைத்தவன், உன் உதவியை மதிக்கிறேன், வலதுகால் வைத்து உள்ளே வா! என்றான்.

ரஞ்சனிக்கு, அத்தனை கோபமும் அவனுடைய கேலியிலும், அபினயத்திலும் காணமல் போக, சிரிப்பில் அவளது உதடுகள் துடித்தன.

ம்.. என அவன் வரபேற்பாக அபினயம் பிடிக்க சிரித்தே விட்டாள்.

அதைசமயம் பவித்ரனது அறைக்கு பிரணவ் ஓடிவந்தான். வரும்போதே டேடி!! டேடி!! என அவன்வர, பவித்ரன் எட்டிப் பார்த்தான்.

ரஞ்சனி பிரணவை கண்ட சந்தோசத்தில் மண்டியிட்டு அவனை கட்டிக்கொண்டாள்.

இவ்வளவு நேரம் எங்க இருந்த பிரணவ் எனக்கேட்ட ரஞ்சனியை ஆச்சரியமாக பார்த்தவன், நம்ம ரூம்ல தான் தூங்கீட்டு இருந்தேன். இப்பதான் எழுந்தேன் என்றான்.

ரஞ்சனி புருவம் சுருக்கினாள். சட்டென பவித்ரனை திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு ஏதும் விளங்கவில்லை.

பவித்ரன் சிரித்துக்கொண்டு நின்றிருந்தான். ஆனால் நான் எதற்கும் காரணமில்லை என்றான் செய்கையால்.

ரஞ்சனி புரியாமல் நிற்க, அவளுக்கு விளக்கும் பொருட்டு ரஞ்சனி அருகில் வந்தான் பவித்ரன்.

டாடி!! டாடினு கூப்பிட்டையே என்னாச்சு பிரணவ்?? என்றான் பிரணவ்.

நான் எழுந்திரிக்கும் போது யாரும் பக்கத்துல இல்ல அதனாலதான் தேடினேன் என்றான்.

எதுக்கு தேடின என்னப் பாக்க இங்க வந்திருக்கவேண்டியது தான என்றான் பவித்ரன்.

வந்தேன் டேடி!! நீங்க இல்லை. எல்லாரூம்லயும் தேடினேன். தோட்டத்துல தேடினேன். அப்பறமாதான் இங்க வந்தேன் என்றான்.

நான் வீட்டுக்குள்ளதான இருக்கேன் என்ன எதுக்கு இப்படி கஷ்டப்பட்டு தேடின.

உங்களையும், அம்மாவையும் பாக்காம நான் மட்டும் தனியா எப்படி இருப்பேன் அதனாலதான் தேடினேன் என்றான்.

ஓ... சரி இப்ப டேடிய பாத்துட்டதான, எனக்கு என்ன வச்சிருக்க என பவித்ரன் கேட்க, தாவி வந்து கட்டிக்கொண்டவன், அவனது கண்ணத்தில் முத்தமிட்டு இறங்கி ஓடினான். நீங்க முதல்ல கிளம்புறீங்களா?? இல்ல நானான்னு பாப்போம். என்ற பிரணவின் வார்த்தைகள் காற்றோடு கரைந்தது.

அவனாவது சின்னப் பையன், வீட்ல இருக்குற என்னத்தான் தேடினான், நீ உன்னோட ரூம்ல விளையாட்டு வீட்டுக்குள்ள பொம்மையோட தூங்குன பிள்ளையத் தேடியே, வீடெல்லாம் அலஞ்சிருக்க, போதாக்குறைக்கு எம்மேல வேற சந்தேகம் என்றான்.

விளையாட்டு வீட்ல அவன் தூங்கினது உங்களுக்கு எப்படி தெரியும் என ரஞ்சனி கேட்க பவித்ரன் முறைத்தான்.

இப்பவும் சந்தேகமா?? நான் அவனை எதுவும் செய்யல, உன்னப் பாக்க ரூம்க்கு வந்தப்ப, பெய்ண் கில்லர் போட்டு தூங்கீட்டு இருந்த, பிரணவக் காணோம், பக்கத்துல இருந்த குழந்தைகளுக்கான, குட்டி வீட்டுல, பொம்மையோட தூங்கீட்டு இருந்தான், அத சொல்ல வந்தா, நீ என்ன கொலைகாரன்னு சொல்ற,

போதா குறைக்கு, டீல் வேற!! முட்டாள்!! என்றான் அழுத்தமாக.

ரஞ்சனி அந்த அலமாரிக்கதவு வழியாக திருட்டுத்தனமா என்னோட ரூம்க்கு, அதுவும் நான் தூங்கும் போது வந்தீங்களோ புத்திசாலி!! என்றாள்.

பவித்ரனின் ஆச்சர்யமாக ரஞ்சனியைப் பார்த்தான்.

அவனது அறையிலிருந்து ரஞ்சனி வெளியேற எட்டு வைக்க, அவளது கையைப்பிடித்து தடுத்தவன், இப்போ பதட்டம் குறைந்ததா?? எனக்கேட்டான்.

அவள் அமைதியாக சாரி!! எனவும், அவன் நானும் அதையே தான் சொல்கிறேன் சாரி டாலி!! நீ என்னை மன்னிப்பாயா?? என அவள் இருகைகளையும் பிடித்துக்கொண்டு கேட்டுவிட்டான்.

மன்னிப்பாயா?? மறப்பாயா??.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே!!

நான் அடுத்த பகுதியோடு கதையை நிறைவு செய்கிறேன். உங்கள் கருத்துக்களுக்காக மிகவும் ஆர்வமாக உள்ளேன். உங்கள் கருத்துக்களை கருத்து திரியில், மட்டுமே எதிர்பார்க்கிறேன்.

நன்றி.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இறுதிப்பகுதி...

ரஞ்சனி பவித்ரனின் மன்னிப்பைப் பார்த்தவள், அமைதியாகவே பேசினாள். மன்னித்துவிடுகிறேன்.

இன்றுடன் நான் இங்கு வந்து நான்கு நாட்கள் முடிந்தது. நாளை எனது அலுவலகத்தை கவனிக்க சென்னை செல்கிறேன். இனியும் எதையும் பிடித்துக்கொண்டிருக்க வேண்டாம். மறப்பது அனைவருக்குமே நல்லது.

பழி உணர்வு இப்போது எனது மனதில் இல்லை. உங்கள் மனதிலும் இல்லை.

எனக்கு உண்டான பழைய கோபங்களை எடுத்துக்கொண்டுதான் இங்கே வந்தேன். ஆனால் யானையும் நீங்களும் எதிரெதிரே ஓடிவந்ததைக் கண்டதும், உங்களுக்கு எதிரான கோபங்கள் அனைத்தும் செத்துவிட்டது.

இன்று நான் நடந்துகொண்ட முறைக்கு மிகவும் வருந்துகிறேன். தேவையற்ற பதற்றமும், பேச்சுமாகிவிட்டது.


உங்கள் பேக்டரியை பறித்து உங்களை வெளியேற்றுவது எனது நோக்கமல்ல. உங்கள் பேக்டரியில் நடந்த தப்புக்களுக்கும் நான் பொறூப்பல்ல. ஆனால் அது பணியாளர்களின், கவனக்குறைவு, மற்றும் உங்களிடம் அவர்களுக்கு பயம் இல்லாததே காரணம்.

அதனால்தான், அதை சரிசெய்யவும், பங்குகள் மற்றவர்கள் கைக்கு கிடைக்காமல் இருப்பதற்காகவும், அதை வாங்கினேன்.

உங்கள் தொழிலாளர்களை பேக்டரி இழுத்துமூடும் நிலைக்கு வந்துவிட்டது. நீங்கள் வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள் எனக் கூறி பயம்பட வைத்தேன்.

மிரண்டவர்கள், என்னிடம் அவர்கள் பங்கை கடனாக ஒரு ஐந்து நாட்களுக்கு கொடுத்தார்கள்.

அதை வைத்துக்கொண்டு நான் பல விசயங்களை அங்கே நடத்தினேன். இப்போது எப்போதடா பவித்ரன் உள்ளே வருவார்?? என அவர்கள் காத்திருக்கிறார்கள். இந்த ரஞ்சனியின் கெடுபிடியில் கலங்கிப்போய்விட்டனர். இனி அவர்களின் ஒற்றுமையும் குறையாது. உங்கள் மீது மதிப்பும் கூடி இருக்கும் எனவும் பவித்ரன் ஆதிசயமாக ரஞ்சனியைப் பார்த்தான்.

இதற்கிடையில் நீங்கள் பேக்டரிக்குள் போனால் எனது திட்டங்கள் நிறைவேறாது என்றுதான், உங்களை வீட்டிலேயே கட்டிவைக்க நினைத்தேன்.

என்னை மீறி நடந்த சம்பவங்கள் என்னையே படுக்கவைத்துவிட்டது என்றாள்.

எனக்கு பேக்டரியைவிட, இப்போது பிரணவும் நீயும்தான் முக்கியம். உனது சம்மதம் கிடைக்குமா என அவள்புறம் வலக்கரம் நீட்டினான்.

ரஞ்சனி ஒருமுறை ஏமார்ந்த இடத்தில் மறுமுறை வியாபாரம் செய்வது, முட்டாள்தனம். நீங்கள் நிறைய மாறி இருக்கிறீர்கள் என புரிந்தாலும், நான் கற்றுக்கொண்ட பாடம் என்னைத் தடுக்கிறது என்றவள், அவளது கையை உருவிக்கொண்டு வெளியேறிவிட்டாள்.

பவித்ரனும் பிரணவும் காலை உணவை உண்டனர். தந்தையை அப்படியே காப்பி அடித்தவன், போக்கை வைத்து இட்லியை குத்திக்கொண்டிருந்தான்.

பவித்ரன் கையை திசுவால் துடைத்துவிட்டு வாயை துடைக்க அவனும் அதையே செய்தான்.

இதை பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சனியின் உதடுகள் விரிந்தன. பவித்ரனும் ஓரக்கண்ணால் தன்மகனை பார்த்துவிட்டு, படிகளில் இரண்டிரண்டாக தாவி மேலே ஏறினான்.

பிரணவ் தனது குட்டிக்காலால் படியை ஒரு உதைவிட்டுவிட்டு, அம்மா என ரஞ்சனியிடம் ஓடினான்.

அவனது செய்கை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தவள், எழுந்த சிரிப்பில் என்ன பிரணவ் என்றாள்??

எனக்கு எப்போ டேடி மாதிரி பெரிசா கால் வளரும் எனக்கேட்டான்.

பவித்ரன் கடைசி படியில் நின்று நடப்பதைத்தான் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தான்.

ரஞ்சனி மகனிடம், இன்னும் கொஞ்சம் வருசம் ஆகும் பிரணவ் என்றாள்.

கொஞ்சம் என்பதை புரிந்து கொண்டவனால், வருடம் என்ற ரஞ்சனியின் வார்த்தைகளை புரிந்துகொள்ளவில்லை.

மலர்ந்த முகத்துடன் தந்தையை நோக்கியவன், டாடி இன்னும் கொஞ்சந்தான் நாளாகும் என்னம்மா!! அப்பறமா நான் உங்கள விட வேகமா ஏறுவேன் என சவால் விட, ரஞ்சனி சிரித்துவிட, பவித்ரன் சந்தோசத்தில் ஓடிவந்து மகனை தூக்கிப்போட்டுபிடித்தான்.

பவித்ரனின் கழுத்தை கட்டிக்கொண்டவன், அம்மா நான் எப்பமா அப்பாவ இப்படி தூக்கிபோட்டு கேட்ச் பண்றது என அவன் அடுத்த சந்தேகத்தை கேட்க,

பவித்ரன், ஹே!! பிரணவ், என பயந்ததுபோல் நடிக்க ரஞ்சனி விழுந்துவிழுந்து நகைத்தாள்.

ரஞ்சனியின் புன்னைகைக் கண்டவன். மகனை ஒருகையில் பிடித்தவண்ணம், மறுகையால், இருக்கையில் அமர்ந்திருந்த ரஞ்சனியின் தாடையை நிமிர்த்த, ரஞ்சனி விழிசற்றே மிரண்டு அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, நீ அப்பா கூட விளையாடு பிரணவ், நான் மேல போறேன் என்றவள், எழுந்து சென்றுவிட்டாள்.

பவித்ரனுக்கு, ரஞ்சனியின் விலகல் யோசனையைத்தந்தாலும், பவித்ரன் தொட்டதும், கோபமாகும் விழிகள் இப்போது, அக்கம் பக்கம் பார்த்து மருண்டுவிழிப்பது மனதில் சற்றே சாரல் தூவாமல் இல்லை.
 
Top