All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கதை திரி

Status
Not open for further replies.

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர் 1

என்னை ம(று)ற(த்)ந்ததேன் கண்மணியே!!!!!

18 வருடங்களுக்கு முன்….ளின்

பதினோரு வயது தயாவிடம்… நாம விக்கி கூட விளையாடிடலாம் வாங்க என அழைத்து கொண்டிருந்தாள் ஐந்து வயது நித்திலா…


அவனோ, நாம மட்டும் விளையாடலாம்… இல்ல உனக்கு விக்கி கூட விளையாடனும்னா நீ மட்டும் போய் விளையாடு பொம்மா…. நான் வரலை என்றான்….

தன், தயா அத்துவின் பதிலால் முகம் வாடியவள்…. தன் பிஞ்சு விரல்களால் அவன் தாடையை பற்றி…. கெஞ்சி…. கொஞ்சி… கொண்டிருந்தாள்… இது எப்பொழுதும் நடக்கும்… அவன் பொம்மா, அவனிடம் கெஞ்சுவதும்… கொஞ்சுவதும் அவ்வளவு பிடிக்கும் அவனிற்கு... பிடித்தம் என்பதினை விட அவ்வளவு ரசிப்பான் அவளின் அச்செயலை....



அதற்குள் விக்கி வந்துவிட… மீண்டும் அவனிடம் கேட்டாள் … விளையாட போலாமா அத்து என….



அவனோ…. நீ வேணா தனியா போய் அவன் கூட விளையாடு… நான் வரலை என்றான் முடிவாக…



விக்கியோடு விளையாட சென்றாலும்.. தன் தயா அத்துவை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்…



அவளின் தயா அத்துவோ, நான் வரலை சொன்னா, என்னை விட்டு அவனோட தனியா விளையாட போவியா பொம்மா… என மனதோடு சொல்லிக்கொண்டவன் பார்வை செல்லும் அவளையே வெறித்து கொண்டிருந்தது….


*********************************

நித்திலா ஸ்ரீ, சென்னையை சேர்ந்தவள்… M.C.A முடித்து…. பெங்களூருக்கு வேலைக்கு வந்துள்ளாள்… வயது 23, பாலில் மஞ்சள் கலந்த நிற மேனி… அழகிய அகன்ற விழிகள்… சிரித்தாள் சிறியதாக குழியும் இடபக்க கன்னம்… ஐந்தாரை அடி உயரம் என பார்ப்பவரை சற்று என்னையும் கவனி என சொல்ல வைக்கும் அழகி….


#################


அவளின் டீம் ஹெட் விஷ்ணு… வயது30, பெயருக்கு ஏற்றது போல் உயரமும் நெடுமாலே… ஆறு அடிக்கும் மேல்… சிவந்த நிறம்…. அகன்று விரிந்த மார்பு… ஒட்டிய வயிறு… போட்டிருக்கும் சட்டையையும் மீறி தெரியும் அவனின் கைகளின் தசைகள்… மொத்தத்தில் பல பெண்களின் கனவு நாயகன் இவன்… ( இவனுக்கு இவ்வளவு வர்ணனை ஏன்னு கதையில் புரியும்)



நித்திலாவிற்கு விஷ்ணு மேல் காதல் இருந்தாலும்… அதை அவனிடம் அவள் வாய்விட்டு சொன்னதில்லை… அவனை தூரத்தில் இருந்தே ரசிப்பாள்… விஷ்ணுவிற்கு அவள் மேல் காதல் உள்ளதா என கேட்டாள் அதுவும் தெரியாது அவளிற்கு…. இவளை பார்க்கும் பார்வையில் ஒருவித பிடித்தமும் உரிமையுணர்வும் அவன் கண்ணில் மின்னலென தோன்றி மறைவதை கண்டிருக்கிறாள்….


*************************

இந்நிலையில் அவர்களின் நிறுவனம் சார்பாக… நால்வர் வெளிநாட்டிற்கு ஒரு ப்ராஜெக்ட்டிற்காக தேர்தெடுக்க பட அவர்களின் தலைமை விஷ்ணு… அந்த குழுவில் நித்திலாவும் அடக்கம்….

ப்ராஜெக்ட் வேலை வெற்றிகரமாக முடிந்து அவர்கள் அனைவரும் இன்னும் இரண்டு நாளில் பெங்களூர் திரும்ப இருப்பதினால் அனைவரும் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினார்கள்…
---------------------------
---------------------------


இரவும் குளிரும் தனிமையும் அவர்கள் உறவை வளர்க்க… நித்திலா முழுதாக விஷ்ணுவின் உயிரோடும் உணர்வோடும் கலந்திருந்தாள்….

*******************************

அடர்ந்த சிகையோடும், முகத்தில் முக்கால் பகுதியை அவனின் தாடி மறைத்திருக்க… மீதம் உள்ளதை அவன் அணிந்திருந்த கருப்பு கண்ணாடி மறைத்திருந்தது… அவன் முகத்தில் தெரிந்தது நெற்றி, நாசி, அவனின் அழுத்தமான உதடுகள்….




அந்த பள்ளியின் புது கரெஸ்பாடெண்ட்டை வரவேற்கும் பொருட்டு அனைவரும் கூடியிருந்தனர்…. நித்திலா ஸ்ரீ… அங்கே பள்ளி அலுவலகத்தில் பணி புரிகிறாள்… அவளின் குழந்தைகள் அங்கே தான் படிக்கின்றனர்..



நெற்றியில் சிறிய பொட்டு…. துடைத்து வைத்த விளக்கு போல் எந்தவித ஒப்பனையும் இல்லாத முகம்…. என துறவி போன்ற தோற்றத்தில் இருத்தவளை கண்டு அவனின் கண்கள் மின்னின….



பின்னே பல வருடங்கள் கழித்து பார்க்கும் அவன் பொம்மாவினை கண்டதும்... அவள் தயா அத்துவின் கண்கள் மின்னதானே செய்யும்… அந்த மின்னல் அன்பின் வெளிப்பாடா… இல்லை அவனின் கோபத்தின் விளைவா என அவனின்றி யார் சொல்லகூடும் ...



அவன் தான் முழு முற்றாக மாறி போயிருந்தானே… அன்று அவளின்
" தயா அத்துவாக" மட்டும் இருந்தவன் இன்றோ… பலபேர் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கும் "தி கிரேட் சைதன்யா" அல்லவா….
 
Last edited:

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர் 2…

15021

" முழுமதி அவளது முகமாகும்


மல்லிகை அவளது மணமாகும்

மின்னல்கள் அவளது விழியாகும்

மௌனங்கள் அவளது மொழியாகும்

மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்

மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்


அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்

இதயம் கொடு என வரம் கேட்டேன்

அதை கொடுத்தாள் உடனே எடுத்து சென்றுவிட்டாள்"......



என உயிர் உருகும் குரலில் பாடிக்கொண்டிருந்தான் விஷ்ணு… அவனின் கண்பாவை.... தன் பாவையை தான் காதல் மீதுற பார்த்து கொண்டிருக்க



நித்திலாவோ, உயிரும் மெய்யும் உருக விழிகளில் காதல் கசிய… இமைக்கவும் மறந்து நின்றிருந்தாள் தன்னவனின் குரலிலும்... பார்வையிலும் …..



அங்கு உள்ளவர்கள் அனைவரும் அவன் குரலில் மயங்க…. விஷ்ணுவே தன்னவளின் வதனத்தில் தோன்றும் வர்ணஜாலத்தில் மயங்கினான் ….



***********************



சைதன்யா கேட்கும் கேள்விகளுக்கு அவனின் முகம் பார்க்காமல்… மிகவும் சிரத்தையாக பதில் சொல்லி அவனின் பொறுமையை சோதித்து கொண்டிருந்தாள் நித்திலா….



ஒரு அளவிற்கு மேல் பொறுமை இழந்தவன்… அவளின் மனதினை காயப்படுத்த வேண்டி…. எள்ளலாக " இதென்னடி கோலம், உன் புருஷன் என்ன செத்து போயிட்டானா… என அவன் வாக்கியத்தை முடிக்கவில்லை… கண்களில் கனல் தெறிக்க அவனை ஏறிட்டு பார்த்தாள்…




பெண்ணவளின் பார்வையில் அவனின் மனதில் ஏனோ இதம் பரவ… கடையிதழ் ஓரம் சிறிய முறுவல் தோன்றியது….


அவனின் சிரிப்பில் கோபம் பொங்க……. இப்ப இந்த கேள்வி ரொம்ப அவசியமா என்றவள்…. அவனைவிட எள்ளலை தன் குரலிலும் பார்வையிலும் கொண்டு வந்து…. ஏன், தரகர் வேலை பார்க்க போறீங்களா என்றாள்…




அதில் கோபம் கொண்டு கண்கள் சிவக்க…. ஏய் என்ற உறுமலோடு அவளை நெருங்க…. சைதன்யாவின் கத்தலில் பயந்த நித்திலா ரெண்டாடி பின்னோக்கி நகர்த்தவள் அங்கிருந்த சுவற்றில் மோதி நிற்க… மேலும் அவளை நெருங்கி…. தன் இரு கைகளையும் அவளின் இரு பக்கமும் அரணாக அமைத்து பெண்ணவளை சிறை செய்து….


அவளின் உயரத்திற்கு தோதாக சற்று குனிந்து அவனின் மூச்சி காற்று அவளின் முகத்தில் மோத... பெண்ணவளின் கண்கள் தானாக முடி கொண்டன அவனின் நெருக்கத்தில்...


என்னை பார்த்தா கேனையன் மாதிரி இருக்கா… உனக்கு தரகு வேலை பார்க்குறவனையும் கொல்லுவேன்…. உன்னை சொந்தம் கொண்டாட வரவனையும் கொல்லுவேன்… அப்படி இருக்க நான் ஏன் அந்த வேலை பார்க்கணும்…. நீ அன்னைக்கு, இன்னைக்கும் என்னைக்கும் இந்த தயாக்கு மட்டும் தான் சொந்தம்…. என்றவனின் குரலில் அத்தனை உறுதி, அழுத்தம் இறுக்கம்…. அதில் நித்திலாவின் உடல் நடுக்கம் கொள்ள….

************


கூல் பேபி…. ஜஸ்ட் கூல், உனக்கு இன்னமும் உன் அத்துவை பற்றி தெரியலையே பொம்மா என சொல்லி மெல்ல அவள் கன்னம் தட்ட… அவனின் தீண்டலில் விழி திறந்தவளை பார்த்து கண் சிமிட்டி புன்னகைக்க….


நித்திலா தான்… அவனின் செய்கையில் தடுமாறி போனாள்….
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....



சாரி.... சாரி.... ரொம்ப ரொம்ப சாரி டியர்ஸ்....


நான் டீஸர் போட்டதே லேட்... இதில் யூடியும் லேட் ஆகுது... நாளைக்கு எப்படியும் யூடி கொடுக்க பார்க்குறேன்....


ஸ்டெல்லா டியர்... சாரி நீங்க அனுப்புன msg ரிப்ளை பண்ண முடியலை.... என்னையும் ஒரு ஜீவன் தேடி இருக்கு.... தனசுதா ஹாப்பி அண்ணாச்சி☺☺☺☺☺☺☺☺☺☺....


ஒரு குட்டி டீஸர் போட்டிருக்கேன்... நாளைக்கு யூடியோட வரேன்... கொஞ்சம் பொறுத்துக்கோங்க பிரெண்ட்ஸ்... பச்ச புள்ளைய மன்னிச்சி🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை ம(று)ற(த்)ந்ததேன் கண்மணியே!!!!!


அத்தியாயம் 1

15084


18 வருடங்களுக்கு முன்….


திருச்சி.....


சோழர்களின் பெருமை சொல்லும் நகரம்... தமிழகத்தின் நெற்களஞ்சியம், சோழ வளநாடு என இன்னும் பல சிறப்புகளை பெற்ற திருச்சி மலைக்கோட்டையின் அருகில் உள்ள ஒரு சிற்றூரின் ஊர் பெரியவர் ஜம்புலிங்கம் அவரின் சகதர்மினி அகிலாண்டம் …. இவர்களுக்கு ஒரே மகன் ராஜேந்திரன்….




ராஜேந்திரன்…. தந்தை சொல்லை தட்டதா தனையன்… ராஜேந்திரனின் மனைவி விசாலாட்சி…... அவர்களின் ஆஸ்திக்கும்.... அன்பிற்கும் ஏகபோக வாரிசு.... அவர்களின் ஓரே மகன் தயா..



பெயருக்கு ஏற்றது போல் தயாள குணம் கொண்டவன் தான்… மற்ற எல்லா விஷயத்திலும்…. அவனின் பொம்மா மட்டும் அதற்கு விதிவிலக்கு… அன்னை தந்தை இருவருக்கும் மகன் என்றாள் உயிர்.... தயாவிற்கோ அவனின் "பொம்மா" என்றாள் உயிர்....


"பொம்மா" வேறுயாரும் இல்லை... அவனின் அத்தை மகள்.... ராஜேந்திரனுக்கு உடன் பிறந்தவர் யாரும் இல்லை என்றாலும்..... பங்காளி முறையில் ஓரு தங்கை உண்டு.... வசுமதி... சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்தவர்.... ராஜேந்திரனின் தந்தையும் தாயும்... தங்களுக்கு பெண்பிள்ளை இல்லை என்று அவரை தங்கள் மகள் போல் வளர்த்து.. திருமணமும் செய்து வைத்து… தங்களுடனே வைத்து கொள்ள பிரியப்பட வசுமதியின் கணவன் ராஜ சேகர் அதற்கு சம்மதிக்கவில்லை… அவருக்கும் பெரிதாக எந்த சொந்தபந்தமும் இல்லைதான்… இருந்தாலும் எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என எண்ணி தனி குடித்தனம் இருக்க முடிவு செய்தாலும்... பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து அவர்களின் வீட்டிற்கு எதிரிலேயே குடியேறினர்….


ராஜ சேகர் ஒரு வியாபாரி.... வசுமதி ராஜ சேகர் தம்பதியரின் மகள் தான் நித்திலா ஸ்ரீ... தயாவின் பொம்மா... அவளிற்காக அனைத்தையும் விட்டு கொடுப்பவன்... அவளை மட்டும் யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டான்.... அது அவன் தாய் தந்தையாகட்டும்... அவளின் தாய் தந்தையாகட்டும்... அவன் அருகில் இருக்கும் பொழுது... அவளிற்கு அவன் மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்…



தயாவிற்கு, நித்திலாவின் மீது இத்தகைய உரிமை உணர்வு வர காரணம். அவனின் பாட்டி அகிலாண்டம் தான்…


நித்திலா பிறந்ததும் தயாவிடம் குழந்தையை காண்பித்தவர்… " ராசா, இவ தான் உன் பொண்டாட்டி…. இவளை நீ தான் பத்திரமா பார்த்துக்கனும் " என கூற அழகான வெண்ரோஜா குவியலென பால் வண்ணத்தில் சின்ன சின்ன கை கால்கள் அசைத்து , துறுதுறுவென கருவண்டு கண்களை சிமிட்டி சிமிட்டி பார்க்கும் மழலையின் பொக்கைவாய் சிரிப்பும்.., அகிலாண்டத்தின் வார்த்தைகளும் ஏழு வயது சிறுவன் தயாவின் மனதில் பசுமரத்து ஆணிபோல் பதிந்துவிட்டது….



பள்ளி செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரம் எல்லாம் அவன் பொம்மாவோடுத்தான்….



காலங்கள் உருண்டோட… தயா, வயதிற்கு மீறிய வளர்ச்சியும்… அறிவாற்றலும் கொண்டிருந்தான்…. ஒற்றை பிள்ளை என்பதால் சற்று பிடிவாத குணம் அதிகம்…. ஆனால் அவனின் அதனை குணங்களும் தலை கீழாக மாறுவது அவன் பொம்மாவிடம் மட்டும் தான்…

அவளின் சந்தோசத்திற்க்காக எந்த செயலையும் செய்ய சற்றும் யோசிக்கமாட்டான்...


இருவரும் ஒரே பள்ளியில் பயின்று கொண்டிருந்தனர்…. தயா அவனின் பொம்மாவை தானே தயார் செய்து அழைத்து செல்வான்…. அவள் வகுப்பில் யாரோடு வேணாலும் பேசலாம் விளையாடலாம்… ஆனால், அவன் முன்னிலையில் தன்னை விட வேறு யாருடனோ அவர்கள் தான் முக்கியம் என்பது போல் சிறுபார்வையின் மூலமோ அல்லது செயலில் காட்டி விட்டாலோ … தனக்குள் இறுக்கி விடுவான்… இவன் உடன் இருக்கும் பொழுது அவள் மற்றவருடன் பேசுவதையோ.. பழகுவதையோ விரும்பமாட்டான்…


தயாவின், இந்த குணம் அவர்கள் வாழ்விற்கு நன்மை பயக்குமா என காலம் தான் சொல்ல வேண்டும்...




பதினோரு வயது தயாவிடம்… நாம விக்கி கூட விளையாடிடலாம் வாங்க அத்து என அழைத்து கொண்டிருந்தாள் ஐந்து வயது நித்திலா….




விக்கி வேறு யாரும் இல்லை. நித்திலாவின் பள்ளி தோழன்… இவர்கள் வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி உள்ளது விக்கியின் இல்லம்….

அன்று வார விடுமுறை ஆதலால்…

அவனை விளையாட தங்கள் வீட்டிற்கு வர சொல்லி இருந்தாள் நித்திலா, அவள் தயா அத்துவின் குணம் தெரியாமல்…..



அவனோ, நாம மட்டும் விளையாடலாம்… இல்ல உனக்கு விக்கி கூட விளையாடனும்னா நீ மட்டும் போய் விளையாடு பொம்மா…. நான் வரலை என்றான்….


தன், தயா அத்துவின் பதிலால் முகம் வாடியவள்…. தன் பிஞ்சு விரல்களால் அவன் தாடையை பற்றி…. கெஞ்சி…. கொஞ்சி… கொண்டிருந்தாள்… இது எப்பொழுதும் நடக்கும்… அவன் பொம்மா, அவனிடம் கெஞ்சுவதும்… கொஞ்சுவதும் அவ்வளவு பிடிக்கும் அவனிற்கு... பிடித்தம் என்பதினை விட அவ்வளவு ரசிப்பான் அவளின் அச்செயலை....


தயாவின் உதடுகளில் மென்னகை மிளிர்ந்தது…. அவன் பொம்மாவின் செய்கையில்…. இன்னும் சிறிது நேரம் அவள் கெஞ்சி இருந்தால் சம்மதம் சொல்லியிருப்பனோ என்னவோ…

அதற்குள் விக்கி வந்துவிட… அவனை பார்த்து கை அசைத்தவள்…. மீண்டும் அவனிடம் கேட்டாள் விளையாட போலாமா அத்து என…


அவனோ…. நீ வேணா தனியா போய் அவன் கூட விளையாடு… நான் வரலை நிலா என்றான் முடிவாக… பொம்மா, நிலாவாகி போயிருக்க…. அமைதியாக

விக்கியோடு விளையாட சென்றாலும்.. தன் தயா அத்துவை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்…



அவளின் தயா அத்துவோ, நான் வரலை சொன்னா, என்னை விட்டு அவனோட தனியா விளையாட போவியா பொம்மா… என மனதோடு சொல்லிக்கொண்டவன் பார்வை செல்லும் அவளையே வெறித்து கொண்டிருந்தது….



நித்திலாவும்.. விக்கியும் வேறு எங்கும் விளையாட செல்லவில்லை… அவர்கள் சென்றது தயா வீட்டின் பின் உள்ள தோட்டத்திற்கு தான்… அதற்கு தான் இவ்வளவு அலப்பறை செய்தான் அவன்….




விளையாட சென்றவளின் மனம் சிறிது நேரம் மட்டுமே விளையாட்டில் திளைக்க… மீண்டும் அவளின் மனம் அவள் அத்துவிடம் மையம் கொள்ள… அதன் பிறகு அவளின் மனம் விளையாட்டில் லாயிக்கவில்லை…. சீக்கரமே விளையாட்டை முடித்து கொண்டவள் தன் அத்துவை பார்க்க சென்றாள்…. ஆனால் அவனோ…. தன் அறையின் கதவுகளை சாத்தி தாழ்யிட்டு சவுண்ட் சிஸ்டெமில் சத்தமாக பாடலை கேட்டு கொண்டு அமர்ந்திருந்தான்…. இவள் எவ்வளவு தட்டியும் திறக்கவில்லை அதில் நித்திலாவின் கண்கள் கலங்கி கண்ணீர் வழிய தொடங்கியது…



அங்கே வந்த விசாலாட்சி நித்திலாவின் கலங்கிய முகத்தினை கண்டு விசாரிக்க… அவளும் தன் மழலை மொழியில் நடந்தவற்றை கூற… நித்திலாவை தூக்கி கொண்டு…. மீண்டும் தயாவின் அறை கதவினை தட்ட… அப்பொழுதும் திறக்கவில்லை…

மீண்டும் ஒருமுறை சத்தமாக அழைத்தும் பார்த்தார்…. ம்ஹும், எந்த எதிர்வினையும் இல்லை உள்ளிருந்து….



பேரன் அறையின் வாயிலில் மருமகள் நின்றிருப்பதை பார்த்து அங்கு வந்த அகிலாண்டம்…. எதுக்கு கதவை சும்மா தட்டிக்கிட்டு இருக்க… சத்தம் கேட்டிருந்த ராசா இந்நேரம் வந்து தொறந்து இருப்பான்…. பாத்ரூம்ல இருக்கானோ என்னவோ…. என்றவர், நித்திலாவிடம், ராசாத்தி உங்க அப்பா வந்திருக்காங்க… எதுக்கு கண்ணு கலங்கி இருக்கு …. அத்தான் கதவு திறக்கலைன்னா…. உன் குரல் கேட்டிருந்த திறந்து இருப்பான் கண்ணு… இதுக்கு போய் அழுத்துகிட்டு… என நித்திலாவை சமாதானம் செய்தார்


விசாலாட்சியோ, தன் மனதிற்குள் இவன் பிடிவாதத்தை வளர்ந்து விடுறதே இவங்க கொடுக்குற அதிக செல்லம் தான் … இந்த பிடிவாதம் எதுல கொண்டு போய் விடுமோ தெரியலை…. அவனுக்கா நிலா கூப்பிடுறது கேக்கலை… கேடி பைய… எவ்வளவு தூக்கத்தில் இருந்தாலும் அவளோட சின்ன சிணுங்களுக்கே பதறி முழிச்சிக்குறவனுக்கு அவள் இவ்வளவு தூரம் கூப்பிடுறது கேட்கிலையாம்…. இதை நான் நம்பணும், அதுக்கு இவங்க வேற சப்போர்ட்…


அன்னைக்கு தெரியாத மகனின் குணம்…. இவனுக்கு இதே பொழப்பா போச்சி… வெளியா வாடா உனக்கு இருக்கு என நொடித்து கொண்டவர்…


நித்திலாவை அழைத்து சென்று முகம் கை கால் அளம்பிவிட்டவர்… வேறு உடை மாற்றி, தலைவாரி அவர்கள் தோட்டத்தில் மலர்ந்த நித்யமல்லி சூடி… என அவளை அழகாய் தயார் செய்து அழைத்து வந்தார் விசாலாட்சி….



பாட்டு சத்தத்தில் நித்திலாவின் குரல் தயாவிற்கு கேட்காமல் ஒன்றும் இல்லை…. அவள் வருவதை பார்த்து விட்டு தானே இவன் தன் அறையின் கதவடைத்து பாட்டை அலறவிட்டான்…. அவனின் பொம்மா, அவனை விடுத்து விக்கியோடு விளையாட சென்றதினால் வந்த கோபத்தின் விளைவு இது…




ராஜதுரை வந்தது நித்திலா மற்றும் தயாவை அழைத்து கொண்டு செல்ல தான்… ஏனெனில் இன்னும் ஒரு வாரத்தில் தயாவின் பிறந்தநாள் வரவுள்ளது , அதற்கு துணி வாங்க தான்… நித்திலா மட்டும் வர கேள்வியாக நோக்கியவர்….


விசாலட்சியிடம் , தயா எங்கே என… நடந்தவற்றை கூறியவர்… இதற்கு மேல் அவன் வந்து தயாராகி இன்னும் நேரம் தான் பிடிக்கும் நீங்க பாப்பவையும், அண்ணியையும் அழைச்சிக்கிட்டு போயிட்டு வாங்க என்றார் விசாலாட்சி….



நிலவோ, அத்தை அத்துக்கு தான் டிரஸ் எடுக்க அப்பாவை கடைக்கு கூட்டிகிட்டு போக சொன்னேன்… அத்து இல்லாம எப்படி போறது என …. மகளின் கூற்றிக்கு தந்தையும் ஆதரவு தர….



விசாலாட்சியோ, அம்மு… நீ எதை எடுத்துக்கிட்டு வந்தாலும் உன் அத்துவுக்கு பிடிக்கும்… நீயே போய் செலக்ட் பண்ணி வாங்கிக்கிட்டு வா… அண்ணா, அவ தான் சின்ன குழந்தை… நீங்களுமா…. குழந்தையை கிளம்பியாச்சு…. அவளை ஏமாத்தாமா கூட்டிகிட்டு போயிட்டு வாங்க என்றார்….




வசுமதியும் கிளம்பிவர, அவர்கள் மூவரும் கிளம்பி சென்றனர்….. நிலவோ, அவனின் அறையையே திரும்பி திரும்பி பார்த்து கொண்டு சென்றாள்….




அவர்கள் கிளம்பியவுடன், ராஜேந்திரன் தன் மனைவியிடம் என்னம்மா உனக்கு கோபம் , அனல் இங்க வரை அடிக்குது என தானாக வந்து சிக்க… விசாலாட்சி அவரை பிடிப்பிடியென பிடித்துவிட்டார்….




உங்க மகனுக்கு இவ்வளவு அழுத்தம் ஆகாதுங்க…. நிலா அந்த விக்கி பையனோட விளையாட போனதுக்கு இவன் கதவை அடைச்சிக்கிட்டு அந்த புள்ளைய அழவைக்குறான்…. பாவம் நிலா, எவ்வளவு நேரமா கதவுகிட்ட நின்னுகிட்டு இருந்தாலோ தெரியலை… அவளுக்கு என்ன தெரியும் , இந்த வயசிலேயே இவ்வளவு பிடிவாதம் இருந்தா போக போக எப்படி இருப்பானோன்னு பயமா இருக்குங்க…. அதுவும் இவன் நிலாகிட்ட நடத்துகிறத பார்த்த ஒரு புறம் சந்தோஷமா இருக்கு… அதே சமயம் பயமாவும் இருக்கு… என முதலில் கோபமாக ஆரம்பித்து கடைசியில் ஆற்றாமையில் முடித்தார்...



விசாலி, அவளும் குழந்தை, இவனுக்கும் விவரம் புரியாத வயசு (அப்படினு நீங்க தான் சொல்லிக்கணும்) நாம பண்றது நல்லதா இல்லைனு அவனுக்கு தெரியலை…. எடுத்து சொன்னா புரிஞ்சிப்பான், இதுக்கு போய் பெருசா கவலை பட்டுகிட்டு… என தன் மனைவிக்கு தேறுத்தல் சொன்னவற்கு தெரியவில்லை…. தன் மகன் நிலா விஷயத்தில் மட்டும் யார் அறிவுரையையும் செவி மடிக்க மாட்டான் என்று….



மறுநாளும் நிலாவின் கண்ணில் சிக்காமல் அவளோடு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்ட… நிலாதான் தவித்து போனாள்…. என்ன இருந்தாலும் குழந்தை அல்லவா…. தன்னை எப்பொழுதும் தூக்கி கொண்டு சுற்றும் தன் அத்துவை அவள் மனம் தேட… தயாவோ அவன் தாத்தா பாட்டியோடு தோட்டத்திற்கு சென்றிருந்தான்….




நேற்று வெகு நேரம் அழுததின் காரணமா… இல்லை அவள் அத்துவை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கமா தெரியவில்லை…. மாலையில் அவளுக்கு லேசாக காய்ச்சல் அடிக்க… விசாலாட்சிக்கு தன் மகன் மீது அவ்வளவு கோபம் வந்தது…. சிறுகுழந்தையை அல்லல்பட வைக்கிறானே என்று….



தோட்டத்திலிருந்து தயா திரும்பியவுடன்…. உன் மனசுல என்ன தான்டா நினைச்சிக்கிட்டு இருக்க… நேத்துலயிருந்து அந்த குழந்தையை இப்படி அலையவிடுற .. உன்னால பாப்பாக்கு காய்ச்சல் வந்துடுச்சு…. உனக்கு என்னடா அவ்வளவு கோபமும் பிடிவாதமும் என்றவர்… கொஞ்சம் இரு அவளுக்கு நாட்டு கோழி ரசம் மிளகு தூள் போட்டு வச்சிருக்கேன் அதை கொண்டு போய் கொடுத்திட்டு… அவளை பார்த்து சமாதானம் பண்ணிட்டு வா… என்றவர் உள்ளே சென்று திரும்ப அங்கு யாரையும் காணோம்…



இவ்வளவு தூரம் சொல்றேன்… இவனுக்கு என்ன ஒரு நெஞ்சழுத்தம் … இவனை தயா… தயா…. என சத்தமாக அழைக்க… அந்நேரம் அங்கு வந்த அகிலாண்டம், நீ ராசத்திக்கு ஜுரம் சொன்னா உடனே உன் புள்ளை அப்பவே சிட்ட பறந்துட்டான் அவளை பார்க்க… அது தெரியாம கத்திகிட்டு இருக்கா …. போ போய் நிலா கண்ணுக்கு நாட்டு கோழி ரசம் வச்சிருக்க இல்ல கொண்டு போய் கொடுத்திட்டு வா… அங்க போய் அவனை திட்டிக்கிட்டு இருக்காதா என்றார்…



அகிலாண்டதின் சொல்லுக்கு எப்பொழுதுமே விசாலாட்சி மறுவர்த்தை பேச மாட்டார்…. அதே போல் மருமகளை தன் சொந்த மகள் போல் பார்த்து கொள்ளும் மாமியார் தான் அகிலாண்டமும்…. அவர்கள் இருவரும் வேறுபட்டு நிற்பது தயாவிடம் மட்டும் தான்…



அவனை ஒரு சொல்ல சொல்லவிட மாட்டார் அகிலாண்டம்…. அவன் ஒற்றை பிள்ளை என்பது ஒரு காரணம் என்றாலும்…. சாயலில் தன் கணவனை கொண்டிருப்பவனை பார்த்து பார்த்து பூரித்து போவார் … விசாலாட்சியும் , மாமியாரின் மனம் அறிந்து அவனை எதுவும் சொல்ல மாட்டார்…. ஆனால் ஒருசில நேரம் இது போல் மாட்டிக்கொள்வார்…




இதற்கு காரணமாகவோ, அங்கே அவன் பொம்மாவை கெஞ்சி கொஞ்சி கொண்டிருந்தான்…..



எப்பொழுதும் சிரித்து கொண்டு துறுத்துறுவென ஓடிக்கொண்டு இருப்பவளின் ஓய்ந்த தோற்றம் தயாவின் மனதை வருத்த தான் செய்தது…. அமைதியாக படுத்திருந்தவளின் அருகில் சென்று அவளின் நெற்றியை வருட… அவனின் அந்த ஒரு ஸ்பரிசத்தில் கண்விழித்தவள்… அத்து என அவனின் இடையோடு கட்டிக்கொண்டு கண்ணீர்விட… மெதுவாக அவளின் தலை கொதியவன்… பொம்மா… இங்க பாரு என அவன் கூறிய வார்த்தைகள் எதுவும் அவள் காதில் ஏறவில்லை… ஏன் அத்து நீ நேற்றிலிருந்து என்னை பார்க்க வரலை… உன் பேச்சி கா…. போ அத்து , இனிமே என்னை தனியா விட்டு எங்கையாவது போன நான் உன்கிட்ட பேசவே மாட்டேன் என சொன்னவள் சட்டமாக அவன் மடியில் தலை சாய்த்து படுத்து கொண்டாள்… அவளின் செய்கையில் உதடுகளில் புன்னகையோடு அவளின் தலையினை கோதி கொடுத்து கொண்டிருந்தான் அவளின் அத்து….

(ஆனால் அவளுக்கு தெரியவில்லை… தன் அத்துவை பிரியும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதையும்… தானே தங்கள் பிரிவிற்கு காணரமாக போவதையும் உணரவில்லை)


நான் எங்க பொம்மா, தனியா போனேன்… நீ தானே அந்த விக்கியோடு தனியா போனே… நான் நீ விளையாட போனதுனால… கதவை சாத்திக்கிட்டு பாட்டு கேட்டேன்…. கொஞ்ச நேரம் கழிச்சி வந்தா அம்மா, நீ மாமா கூட கடைக்கு போயிருக்குறதா சொன்னங்க…. சரி கடைக்கு போயிட்டு வந்து டையர்டா இருப்பேன்னு தான் நான் உன்னை கூப்பிடமா தோட்டத்துக்கு போனேன்… அதுக்குள்ள நீ இப்படி ஜுரத்தை வாங்கி வச்சிக்கிட்டு இருக்கே என சாதாரணமாக தன் மேல் தவறே இல்லை என்பது போல்

கூறியவனை முறைத்து கொண்டே வந்தார் விசாலாட்சி….


அவர் முறைப்பை எல்லாம் புறம் தள்ளியவன்…. எழுந்திரு பொம்மா, அம்மா உனக்கு நாட்டு கோழி ரசம் கொண்டு வந்திருக்காங்க கொஞ்சம் கூடி… என அவளோ வேணா அத்து ஸ்… காரமா இருக்கும் என மறுத்தாள்…




அதெல்லாம் ஒன்னும் காரமா இல்லை… என்றவன்…அவளோடு கதை அளந்தபடி அவளுக்கு தானே ஊட்டிவிட… அவளும் சமந்தாக குடித்திருந்தாள்…



விசாலாட்சி தான் அவனின் செய்கையை கண்டு நொடித்து கொண்டார்…. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…. என



எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது… தயாவின் பன்னிரெண்டவது பிறந்தநாள் வரை…. அந்த பிறந்தநாள் தயா நிலா இருவரின் வாழ்வையும் முற்று முழுதாக மாற்றி அமைத்திருந்தது….




நினைவில் வருவனோ😍😍😍😍😍




 
Status
Not open for further replies.
Top