All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கதை புத்தகங்கள் மற்றும் அமேசானில் வெளியீடு...

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..


ப்ரீ போட்டுருக்கேன். படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களை அங்கே தெரிவியுங்கள்..


பிகு: போஸ்ட் போடுவதற்குள் ஆர்டர் 200 யை தாண்டிருச்சு.. 😀😀 அத்தனை பேரிடம் இருந்தும் கமெண்ட்டும் ஸ்டாரும் வருமா..🙄




 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்..

தற்பொழுது ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கும் "கொஞ்சும் காதல்..!" கதையில் இருந்து சின்ன டீசர்..

வழக்கமான என் கதையில் இருந்தும் கதை ஹீரோக்களில் இருந்தும் கொஞ்சம் வித்தியாசமாக எழுதியிருக்கிறேன்.

தலைப்பிற்கு ஏற்ற மாதிரி.. கதை இருக்கிறதா என்று வாங்கி படித்துப் பார்த்து சொல்லுங்கள்..

#################

பந்து ஒன்று அவனது தோளின் மேல் பலமாக விழவும், இயல்பு போல் வலியில் நெளிய நினைத்தவன்.. காலையில் லாவண்யா சொல்லியது, நினைவு வரவும்.. மனதிற்குள் ‘ஆட்டிட்யுடு ப்ரதிவ்! ஆட்டிட்யுடு’ என்றுச் சொல்லிக் கொண்டு தோளில் விழுந்த தூசியைத் தட்டிவிடுபவன் போல்.. தட்டிவிட்டவாறு எழுந்தான். தனக்கு முன்னால் விழுந்த பந்தை கையில் எடுத்தவன்.. அதைத் தனக்கு மேல் தூக்கி வீசி.. அதை கால் முட்டியால் தட்டி மேலே எழுப்பி பின் கீழே வந்த பந்தைச் சற்று தொலைவில் நின்றிருந்தவர்கள் பக்கம் உதைத்தான். பின் எப்படி என்பது போல் கோர்ட்டை இழுத்துவிட்டுக் கொண்டு லாவண்யாவை பெருமையுடன் பார்த்தான்.

லாவண்யாவோ வாயில் இருகைகளையும் வைத்துக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை ஆச்சரியமாக பார்க்கிறாள் என்று நினைத்த ப்ரதிவ் “யா..! இட்ஸ் மீ! சர்பரைஸ் பேக்கேஜ்” என்று இரு கைகளையும் பக்கவாட்டில் விரித்து தலையை ஆட்டினான்.

ஆனால் லாவண்யா வாயில் இருந்து கரங்களை எடுக்காமல் மறுப்பாக இடமும் வலமுமாக தலையசைத்தாள்.

அவளது கண்களில் இருந்த பாவனையைக் கண்ட ப்ரதிவ்விற்கு என்னமோ சரியில்லை என்றுத் தெரிந்தது. எனவே மெதுவாக “என்னாச்சு லாவண்யா..?” என்றுக் கேட்டான்.

லாவண்யா தன் கரங்களை வாயில் இருந்து எடுத்துவிட்டு “அந்த பால் அவங்களது இல்லை.. இதோ இங்கே நிற்கிறாரே.. இவரோடது! பால் விழுந்ததும் ஸாரி சொல்லி பால் வாங்க கையை நீட்டினார். ஆனால் நீ அதைக் கவனிக்காமல்.. அங்கே உதைத்து ஏறிஞ்சுட்டே..” என்றாள்.

அவள் சுட்டிக்காட்டிய பக்கம் பார்த்த ப்ரதிவ் எச்சிலை மெல்ல விழுங்கிக் கொண்டான். ஏனெனில் ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் திடக்காத்திரமான உடற்கட்டுடன் ஒற்றை புருவத்தை உயர்த்தியவாறு அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

####################

புத்தகங்கள் ஆர்டர் செய்ய.. இந்த லின்கில் செல்லுங்கள்..

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...


#pentopublish4 long from க்கிற்கு நான் எழுதிய அழகான காதல் கதை..


"மலர்ந்த காதல் கொடியிலா..! கையிலா..!"


படிச்சிட்டு எப்படியிருக்கென்று அங்கே ரிவியூ கொடுங்க நன்றி..


சிறு டீசர்..


பளபளக்கும் தரைகளும், தூண்களும் தற்பொழுது மங்கி போய் காணப்பட்டது. திரைச்சீலைகள் இல்லை..! கண்ணைப் பறிக்கும் விளக்குகள் இல்லை..! சமீபத்திலேயே சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரிந்தது. நாற்காலிகளும்.. பூச்சாடி வைக்கும் தாங்கிகளும் பொலிவிழந்து காணப்பட்டது. ஆனால் அவள் அண்ணாந்து பார்க்க வைக்கும் உயரமும், கண்களால் முழுவதும் அடக்கி விட முடியாத விசாலமும் மட்டும் மாறாமல் அவளை இன்னும் திகைப்பிலேயே கட்டிப்போட்டது. சுற்றிலும் பார்வையை ஓட்டியவளுக்கு தீக்கிரையான அடையாளங்கள் சிலவை மறைக்கபடாமல் கண்களில் தட்டுப்படவும்… அவளது முகத்தில் கொதிநீர் ஊற்றி நனவுலகிற்கு கொண்டு வந்தது.


இந்த மாளிகை தீக்கிரையானதிற்கும்.. இந்த மன்னர் பரம்பரையின் இளைய வாரிசின் வாழ்க்கை மாறிப் போனதிற்கும் அவளுக்கு இருக்கும் தொடர்பு நினைவு வந்தது. உடனே இந்த இடத்தை விட்டு சென்றுவிட வேண்டும் என்று நினைத்து திரும்ப முயன்றவளுக்கு யாரோ அவள் பின்னால் வந்து நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவளிடம் விளையாட்டு காட்டியவன் என்று அவளது உள்ளுணர்வு சொன்னாலும்.. அவனிடம் சண்டைப் போட்டு நீ யார்..? இங்கே எப்படி வந்தாய்? என்றுக் கேட்க நினைத்ததெல்லாம் செயலாற்ற முடியாமல் சில்லிடும் உணர்வு தோன்றியது.


தொண்டையைக் கூட்டி எச்சிலை விழுங்கியவள்.. மெல்ல திரும்பினாள்.


திரும்பியவளுக்கு அவனது உயரமே முதலில் தெரிந்தது. அவனது அகன்ற மார்பில் இருந்து மெல்ல முகத்தை நிமிர்த்தியவளின் கண்களில் அவனது திண்ணிய தோள்கள் தென்பட இன்னும் முகத்தை நிமிர்த்தி பார்த்தவள் அதிர்ந்தாள் என்றுச் சொல்வதை விட ஒரு நொடி இறந்து பிறந்தாள் என்றுச் சொல்லலாம். ஏனெனில் கம்பீரமாய் நின்றுக் கொண்டு முகத்தில் எந்தவித உணர்ச்சிகளுமின்றி கூர்ப்பார்வையால் அவளைத் துளைத்துக் கொண்டிருந்தவன்.. யாருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்று இந்த எட்டு ஆண்டுகளாக குற்றவுணர்வில் குமைந்துக் கொண்டிருந்தாளோ.. அரச பரம்பரையின் இளைய ராஜாவான ரோஹீத் தான்..!





 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

மலர்ந்த காதல் கொடியிலா..! கையிலா..!

. படிச்சிட்டு உங்க விமர்சனங்களை அங்கே தெரிவியுங்கள்..

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...💜💜💜


கிராமத்து பிண்ணனியில் நான் எழுதிய கதை "கற்றேன் காதலை.." தற்பொழுது அமேசானில் படித்து மகிழலாம்.


இந்த கதை படித்தவர்களால் வெற்றி மற்றும் சுஜாதாவை மறந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.




 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...


பதினாறு வருடக்காதலைச் சொல்லும் நான் எழுதிய கதையான..

"காதலால் விளையாடி உறவாடிக் கொல்(ள்)..!"

தற்பொழுது அமேசான் கிண்டிலில் கிடைக்கும். படித்து மகிழுங்கள்..




 
Status
Not open for further replies.
Top