All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் வானின் துருவ(வ்) நக்ஷத்தி(ரா)ரம் - கதைத் திரி

Status
Not open for further replies.

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருபுறம் ஈஷா மற்றும் துருவ் ஆட துவங்கினர். ஈஷாவின் அசைவுகள் எல்லாம் அவன் மீது ஊறும் ஏதோ அட்டை பூச்சி போல், அவனை ஒட்டிக்கொண்டே இருக்க, அவ்வப்போது அவர்கள் இருவர் மீது படியும் ஒளியின் புண்யத்தில் அவர்களைப் பார்த்த நக்ஷத்திரா முகம் சுளித்தாள்.



அதுவும் அவள் அணிந்து இருந்த உடை, அவளது உயரத்திற்கு மிகவும் குறைவாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவளது கால் பகுதியை துருவ் தாங்க, அவன் முகத்தில் கையைப் பதித்து, அவனை முத்தமிட துவங்கினாள். அவனும் சளைக்காது, அவளது செயலை தனதாக்கிக் கொள்ள,



'சீ' என்று நக்ஷத்திராவிற்கு ஆனது. பிற மக்களுக்கு அது பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. அது தான் டிஸ்கொத்தே கலாச்சாரம் என்று இருந்தனர். நக்ஷத்திரா விற்கு அது அன்பின் பரிமாற்றம் என்று தோன்றவில்லை. உடல் பசியின் முதல் படி என்று தான் தோன்றியது, அவர்கள் இருவரின் நிலை கண்டு. அவளுக்கு சாப்பிட்டது எல்லாம் வெளியே வந்து விடும் போல இருக்க, ரஞ்சனை விட்டு விலக முயற்சித்தாள் .



"என்ன ஆச்சு ?" என்று அவளைத் தனியாக அழைத்து கொண்டு அவன் விசாரிக்க, நக்ஷத்திரா,



"வாஷ் ரூம் போகணும் ! யு கேரி ஆன் " என்று வெளியே சென்றும் விட்டாள். கழிப்பறைக்குச் சென்றவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. சாப்பிட்டவையை வாந்தி எடுத்தாள்.



தொண்டை எல்லாம் எரிய, ஏன்தான் இங்கே வந்தோமோ என்று ஆயிற்று, ரஞ்சனிடம் சொல்லிவிட்டு வீடு செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு வெளியே வர, துருவ் பெண்கள் கழிப்பறை வெளியே நின்று கொண்டிருந்தான்.



'எங்க வரணும்ன்னு விவஸ்தை இல்லே இவனுக்கு' என்று அவளுக்கு ஆத்திரம் எடுத்தது. உடல் உபாதை வேறு அவளை படுத்த, கோபம் எளிதாக முகத்தில் பிரதிபலிக்க, துருவ் அவளது முகத்தை படித்தாலும்



"ஆர் யு ஓகே " என்று விசாரித்தான்.



"நாட் ஓகேன்னு சொன்னா என்ன பண்ணறதா உத்தேசம் " என்று எரிந்து விழுந்தாள். அதில் அவளை முறைத்தவன், அவளை நெருங்கினான் திடமான அடிகள் கொண்டு. அதில் அவள் பின்வாங்கி சுவற்றை முட்டி விட,, அவளது தாடையை இறுக்க பிடித்தவன்,



"மருத்துவ முத்தம் கொடுத்து சரி செய்வேன், செய்யட்டுமா " என்று இறுக்கம் கலந்த ஆத்திர குரலில் அவள் இதழ் தேன் பருகும் தூரத்தில் அவன் கூற, நக்ஷத்திராவின் கண்கள் பீதியில் தெறித்து வெளியே வந்து விடும் போல ஆக, அந்தப் பயத்தை கண்டவன் முகத்தில் பரமத்திருப்தி.



தனது கைகளை அவள் முகத்தில் இருந்து அப்புறப்படுத்தியவன்,

"இனி கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல பழகு ! இல்லே நெஸ்ட் டைம் சொல்லாம செய்வேன் " என்று மிரட்டி விட்டு சென்றான்.



அவனது விரல்கள் அவளது வெண்ணிற கன்னங்களில் அழுந்தப் பற்றியதால், அவளது கன்னங்களில் விரல் தடம் பதிந்து இருந்தது. வலி வேறு கன்னத்தில், அதை விட அவன் தொட்ட இடம் பற்றி எரிந்தது. மீண்டும் கழிப்பறை சென்றவள், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொண்டாள், இருந்தாலும் அவன் கைப்பட்ட இடம் வலிக்க தான் செய்தது.



டிஸ்கொத்தே உள்ளே சென்று ரஞ்சனை தேட அவனோ சாவகாசமாக மது அருந்தும் இடத்தில் இருந்தான். அது நடன மேடையை விட்டு சற்று தள்ளி இருந்தது. அங்கே ஆண்களும் பெண்களும் எவ்வித பாகுபாடின்றி மது அருந்தி கொண்டிருக்க, நக்ஷத்திராவால்,

'என்ன சமத்துவம் !' என்று இகழ்வாக எண்ணாது இருக்கமுடியவில்லை.



இம்மாதிரி எல்லாம் திரையில் கண்டு இருக்கிறாள், ஆனால் நேரில் காண என்னவோ போல் அவளுக்கு இருந்தது, ஏழ்மை நிலை இல்லை அவளது நிலை, ஆனால் கைநிறைய பணமும் இல்லை. இம்மாறி நிலையில் வாழ்பவளுக்கு இது எல்லாம் அதிகப்படிக்கு மேல் அதிகப்படி.



ரஞ்சனை எவ்வாறு அழைத்து விஷயத்தைச் சொல்வது என்று பட்டிமன்றம் நடத்தி கொண்டிருக்க, அவள் புறம் வந்த ஒரு பணக்கார குடிமகன்,



"வான்னா டேன்ஸ் !" என்று அவளது கையை பிடித்து இழுக்க, அவளோ அதில் இன்னும் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என்று செயல்படாது முழித்தாள். உடல் நிலையும் அவளது மூளையைக் கட்டிப்போட, அவளது அதிர்ந்த நிலை அந்த ஹை க்ளாஸ் பொறுக்கிக்குச் சாதகமாக, அவளை இழுத்து கொண்டு நடனமேடை சென்றும் விட, நக்ஷத்திராவின்



"என்னை விடுடா ! ராஸ்கல் " என்ற சத்தம், எல்லாம் பாட்டு இரைச்சலில் கரைந்து போனது. அவளைத் தொட கூடாத இடங்களில் அவனது கைகள் தீண்ட எத்தனிக்க, அந்த கைகள் பின்புறமாக வளைக்கப்பட்டன.



"ஆ …" என்ற அவனது சத்தம் நக்ஷத்திராவின் சத்தம் போல், பாட்டு இரைச்சலில் கலக்க, துருவ்



"ஷி ஐஸ் மைன், டேர் யு டச் ஹர் !" என்று அவனைப் பிடித்து தள்ளியும் விட்டான். அப்போது தான் பிற மக்களும் இந்த ரகளையைக் கவனித்தனர். அதற்குள் அவன் எழுந்து நின்று, துருவ்வைத் தாக்க முயல, துருவ் அசராது, அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்தும் விட்டான்.



அதற்குள் டிஸ்கொத்தே பவுன்சர்ஸ் அங்கே வர, துருவ்வை அடையாளம் கண்டு கொண்டு அவர்கள்

"எனி ப்ராப்ளேம் சர் ? " என்று விசாரிக்க, துருவ்



"எஸ் ! குடிச்சிட்டு, இவங்க கிட்ட மிஸ்பிஹேவ் பண்ண பார்த்தான் " என்று புகார் வாசிக்க, அந்த குடிமகன் அவ்விடம் விட்டு அப்புறத்தப்பட்டான். நக்ஷத்திராவின் கரங்களை உரிமையாக பற்றியவன், அவளைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு நடனமேடையை விட்டுத் தள்ளி அழைத்து சென்றான். அங்கு குளிர் பானங்கள் மற்றும் மதுவை விநியோகம் செய்து கொண்டிருந்த பேனரை வரவழைத்து



"ஒன் லைம் ஜூஸ் வார் திஸ் லவ்லி லேடி" என்று அவளுக்கு ஒரு எலுமிச்சைப்பழ சாறை தருவித்தான்.



"குடி " என்று அதிகாரம் தூள் பறக்க, அவளுக்கு அவனைப் பிடிக்காவிட்டாலும், இந்நேரம் அவளுக்கு சற்று தெம்பு வேண்டும் என்று அதனை குடித்தாள்.



"இப்போ வா " என்று அவளை நடன மேடைக்கு இழுத்துச் சென்றான்.



"நான் வரலே !" என்று அவளது மறுப்பு எதுவும் செல்லுபடி ஆகவில்லை.



"டான்ஸ் வித் மி" என்று அவளை, ஆடும் தனது கைப்பாவையாக ஆக்க முயல, அவளோ,



"உன் கூட ஆட பதிலா என் கால் உடைஞ்சு போனா சந்தோஷப்படுவேன்" என்று அவளது கத்தல், அந்த இரைச்சலை மிஞ்சி அவன் காதில் விழுந்தது.



"ரியலி! உன்னோட ஆசைய கண்டிப்பா நிறைவேத்தறேன்" என்று நடன ஆயுதத்தை கையில் எடுத்து கொண்டான்.



நடனப் புயல், நாட்டிய பேரொளி என்றெல்லாம் சிறப்பாக ஆடுவோர்க்குக் கொடுக்கப்பட்டப் புனை பெயர்களை அவள் கேள்விப்பட்டு இருக்கிறாள், ஆனால் இவன் நடனப் பிசாசு என்று தான் நக்ஷத்திரா கூறுவாள். பின்ன, தற்போது வந்த ஒரு ஹிந்தி பாடலை ரீ மிக்ஸ் செய்து அலற விட, அவன் அதற்கு ஆடிய நடனத்தை என்ன என்று கூறுவாள்!



ரோபோ அசைவு, ராக் நடன அசைவு, குத்துப்பாட்டு அசைவு என்று சகலதும் கலந்து அவன் ஆடிய விதத்தில் அவள் அடுத்து என்ன அசைவு செய்யப் போகிறான் என்ற பீதி தான் நெஞ்சில் நிரம்பி வழிந்தது. ஏனென்றால் அவன் மட்டுமா ஆடினான், கைகளைக் கோர்த்து, இடையில் கரம் கொடுத்து அவனுக்கு இணையாக அவளையும் தானே ஆட்டுவித்தான் . அவளது கால்கள் துவண்டு, மூச்சு வாங்க, அவனோ இந்த மேடை எனக்காக தான் படைக்கப்பட்டது என்று ஆட, இறுதியில் அந்த பாடல் நிறைவு பெற, அவள் இடையில் கை கொடுத்து அலேக்காக தூக்கி ஒரு சுற்று சுற்றிவிட்டு கீழே இறக்கினான். இறக்கிவிட்டவன் அவளை ஒரு நிமிடம் கூர்ந்து நோக்கி முயற்சி செய்தான், அவளோ அவனிடம் இருந்து விடுபட்டால் போதும் என்று ஒருவித அவஸ்தையுடன் அவனைப் பார்த்தாள்.



அவள் இடையை தழுவி இருந்த கரங்கள் நழுவ, இது தான் தருணம் என்று அவள் அந்த நடன மேடையை விட்டு ஓடியே விட்டாள். அவள் எங்கே சென்று இருக்கிறாள் என்று பார்த்தவன், மது வழங்கப்படும் இடத்திற்கு சென்றான். மது விநியோகம் செய்யப்படும் இடம் நடன மேடையை விட்டு தள்ளி இருந்தது, அதனால் ரஞ்சன், நக்ஷத்திரா திரும்பி வந்தது, துருவ்வுடன் நாட்டியமாடியதைக் கவனிக்கவில்லை. அங்கே ஈஷா மற்றும் ரஞ்சன் எத்தனையோ சுற்றுக்கள் மது அருந்தி முடித்து இருந்தார்கள் என்று தெரியவில்லை, அவர்கள் உடலில் ஒரு தள்ளாட்டத்தை கண்டான்.



"1 விஸ்கி வித் எக்ஸ்ட்ரா ஐஸ் " என்று அவன் தனக்கும் மதுவை தருவிக்க, ரஞ்சன்



"எங்க என் நக்ஷி பேபி " என்று குழறி கேட்க, துருவ் அவள் இருக்கும் இடத்தை காண்பித்தான். அவள் புறம் அவன் செல்ல, நக்ஷத்திரா என்ன செய்யப்போகிறான் என்று பார்க்க ஆர்வம் ஆனான். குலமகனாக இருந்த ரஞ்சன் இப்போது குடிமகனாக, அவளது உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என்ற ஆர்வம் அது. மதுவை அருந்திக் கொண்டே ரஞ்சன் சென்ற திசையை பார்க்க, அங்கே நக்ஷத்திரா அவனிடம் ஏதோ அதிருப்தியாக மொழிவது போல இருந்தது.



மது விநியோகம் செய்பவர்,



"சார் ! அந்த சார் இதை ஆர்டர் செஞ்சாரு ! எங்கே போயிட்டாரா ?" என்று துருவ்விடம் வினவ, துருவ் அதை வாங்கி கொண்டு ரஞ்சனிடம் கொடுக்கச் சென்றான்.



"நான் கிளம்பறேன் ரஞ்சன் ! ஒரு பொண்ணை கூட்டிகிட்டு வந்து இருக்கே ! இப்படி தான் குடிப்பியா ! பொறுப்பே இல்லாதவன் நீ " என்று நக்ஷத்திரா அவனிடம் கத்திக் கொண்டு இருந்தாள்.



"லிசன், நான் குடிச்சு இருக்கேன் ! ஸ்டில் என்னால உன்னை டிராப் பண்ண முடியும் , இரு நான் வரேன் " என்று அவளைத் தடுத்து நிறுத்த முயல, துருவ்வும் அங்கே சரியாக நுழைந்தான்.



"எப்படி ! தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டி மேலே ஒரேடியா போறதுக்கா இல்ல யார் மேலேயாவது மோதி அவங்களை மேலே அனுப்பவா ? அறிவு இல்லையா உனக்கு? ட்ரங்கன் டிரைவிங் இஸ் அஃபேன்ஸ் " என்று சமூகப் பொறுப்புடன் அவனை திட்ட ,



"ஹேய் சும்மா கத்தாதேடி ! இதோ இது குடிச்சா கூட நான் ஸ்டெடி தான் " என்று அவள் திட்டியக் கோபத்தில் துருவ் கையில் இருந்த மதுக் கோப்பையை வாங்கி ஒரே மடக்காகக் குடித்தான். அதன் பின் குடித்த வேகத்தில் அவன், நக்ஷத்திரா மீது வாந்தியும் எடுத்தான்.



"சீ ! தூர போடா ! ப்ளடி இடியட் ! குடிகாரா!" என்று ரஞ்ஜனைத் திட்ட ஆரம்பிக்க, அவனோ அதிக போதையின் அடுத்த கட்டமான மட்டை ஆகி விழுவதற்கு தயாரானான், அதுவும் அவள் மீதே. நல்லவேளை துருவ் அவனைப் பிடித்து கொண்டான், இல்லையென்றால் நக்ஷத்திரா மீது அவன் வீழ்ந்து இருந்து இருப்பான்.



ஒருவழியாக ரஞ்சன் மற்றும் ஈஷாவைப் பாதுகாப்பாக டிஸ்கொத்தே விட்டு வெளியே கொண்டு வந்து, தகுந்த உதவியுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டுச் செல்ல துருவ் முயற்சிகள் மேற்கொண்டான், ஈஷாவின் வீட்டில் இருந்து ஆள் வந்து விட அவளது பாடு சுலபமானது. ஆனால் ரஞ்சன் தங்கி இருக்கும் இடம் நக்ஷத்திராவிற்கு தெரியவில்லை, அதை கண்டுபிடிக்கச் சற்று நேரம் பிடித்தது.



அவனையும் பத்திரமாக அனுப்பி வைத்தவன் , நக்ஷத்திராவிடம் வந்தான்,



"கமான் ! உன்னை டிராப் பண்ணறேன் " என்று அவளிடம் அழைப்பு விடுக்க, அவளோ அதீத வெறுப்புடன்



"ஒரு மண்ணும் வேண்டாம் ! நானே போய்க்குவேன் " என்று வெளியே செல்ல எத்தனிக்க, துருவ்



"என்ன பிடிவாதம் இது ! ஆளும் வளரலே ! அறிவும் வளரலே ! இந்த நேரத்தில் தனியா போகறது நாட் சேஃப் " என்று அவளைக் கடிந்தான் .



"உன் கூட வரதுக்கு பதிலா கால்நடையா நடந்து போவேன் " என்று அவளது பிடிவாதம் தொடர, துருவ் அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தி,



"அப்படி என்ன உன்னை நான் செஞ்சேன்! சொல்லு ! நமக்குள்ள இருக்கற இந்த சண்டையை தீர்க்கலாம் வா! " என்று அவனும் திவீரமானான்



அவனது கையை உதற முயன்று தோற்று போய்,



"என்ன செய்யலே நீ ! வலுக்கட்டாயமா என்னை உன்கூட டான்ஸ் பண்ண வெச்சே ! ரஞ்சனை குடிக்க வச்சு என் மேலே வாந்தி எடுக்க வச்சே ! என் ட்ரெஸ் ஸ்பாயில் ஆகிருச்சு ! இது நான் ரத்தினா அக்கா கிட்ட இருந்து ஓசி வாங்கினது ! திருப்பி ஒழுங்கா ரிட்டர்ன் பண்ணனும் ! நீ வந்து கெடுத்து குட்டி சுவரா ஆக்கிவச்சு இருக்கே !உன்னால தான் எல்லாம் " என்று அவனிடமும் இயலாமையால் கத்தி விட, அவர்கள் நின்று கொண்டிருந்த வரவேற்பறையில் இருந்த கொஞ்ச நஞ்ச மக்கள் அவர்களை, முக்கியமாக நக்ஷத்திராவை உற்று உற்றுப் பார்க்க,



துருவ் அவளது மடத்தனமானப் பேச்சில் காண்டானான்.



"வடி கட்டின முட்டாள் ! நீ தான் இப்போ என்னை பார் ! அழுக்கா ஆகியிருக்க என்னோட ட்ரெஸை பார்னு அழுது சீன கிரியேட் பண்ணி இருக்கே ! அறிவு இல்லையா! மட சாம்பிராணி " என்று அவளைத் தரதரவென்று இழுத்து கொண்டு போய் ஒரு ஓரமாக இடத்தில் வைத்து திட்டித் தீர்த்தான்.



கோபத்தில் தான் சுற்று புறத்தை கவனிக்காது விட்டது தவறு என்று நக்ஷத்திரா புரிந்து கொண்டாள் , இருந்தாலும் அது கால தாமதம் தான். ரஞ்சன் வாந்தி எடுத்தபின், அவள் தனது உடையை சற்று சுத்தம் செய்தாள் , இருந்தாலும் கரை போகவில்லை. அதில் வந்த கோபம், துருவ் மீது முழுவதும் காட்டிவிட, அது அவளுக்கு எதிராக திரும்பும் என்று அவள் உணரவில்லை. 18 வயதின் பருவ கோளாறு கோபமா இல்லை, துருவ் என்றவன் மீது இருக்கும் நெடுநாள் வருத்தமா என்று அவள் அறிந்து இருக்கவில்லை.



ஆனாலும் அவள் கோபம் குறையாது இருக்க, அவன் தான் தனது ஜாக்கெட்டை கொடுத்து

"இதை போட்டுக்கிட்டு வா ! உன்னை கொண்டு விடறேன் " என்று சற்று தணிந்தான். அவனது கையில் இருக்கும் ஜாக்கட்டை வாங்காது, அவள் அங்கிருந்து ஹொட்டேல் வெளியே செல்ல, துருவ்



"நீ இதுக்கு நல்ல படுவே, நக்ஷத்திரா" என்று அவனையும் மீறி கத்திவிட்டான் .
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 4



காலை 6 மணிக்கே துருவ்விற்கு முழிப்பு வந்துவிட்டது. இத்தனைக்கும் அவன் நேற்று தூங்க செல்கையில் 1 மணி மேல் ஆயிற்று. எல்லாம் அவளால் வந்தது.



நேற்று இரவு அவன் அவளைக் கொண்டு விடுகிறேன் என்று சொல்லியும், பிடிவாதக்காரியான அவள், அவன் உதவியை முகத்தில் அடித்தார் போல் நிராகரித்தாள். அதன் பலனையும் அனுபவித்தாள்.



அவளது நிராகரித்தலில் அவனும் ரோஷம் பொங்க, தனது வண்டியை எடுத்துக்கொண்டு விருட்டென்று அவளைக் கடந்து சென்று விட்டான்.



ஆயினும் அவள் என்னச் செய்திருப்பாள் என்ற கவலை அவனுள் இருக்கத்தான் செய்தது. அரை மணிநேரம் கழித்து, மீண்டும் ஹோட்டல் வந்தான், அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் அவள் இருக்கவில்லை. தனியாக ஏதேனும் வாடகை வண்டிப் பிடித்துச் சென்று இருப்பாள் என்று தோன்றினாலும், அவள் பத்திரமாகச் சென்று இருப்பாளா என்ற ஒரு சின்ன அரிப்பு அவன் மனதில் இல்லாது இல்லை. கொஞ்சம் அந்த பகுதியைச் சுற்றி வட்டம் அடித்தான், சற்றே சந்து பொந்துகளில் கூட சென்றான்.



அவ்வாறு செல்லும் போது தான், ஒரு காவல்துறை வண்டி மற்றும் ஒரு ஆட்டோவைப் பார்த்தான். ஆட்டோ வெளியே நம் அம்மணி தான்! காராசார விவாதம் போல் தோன்றியது.



வெளியே இவனும் இறங்கினான். நேரே சென்று அவளுக்கும், காவல்துறை அதிகாரிக்கும் இடையே புகுந்தான்.



"என்ன பிரச்சனை சார்?" என்று கேட்க, காவல்துறை அதிகாரி இவன் குறுக்கே வந்துவிட்டானே என்ற எரிச்சல் இருந்தாலும், துருவ் என்பதால் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில்



"ஆட்டோக்காரன் எங்கியோ தப்பான ரூட்டில் கூட்டிகிட்டு போறான்னு மேம் கம்ப்ளயின் பண்ணினாங்க! அதான்" என்றார்.



அதுவரை அந்த காவல்துறை அதிகாரியின் பார்வை தன் மீது நிலைத்து இருந்த இடத்தினால் ஏற்பட்ட எரிச்சலை, துருவ்வின் வரவு சற்று தணித்தது. ஆயினும் அவளுக்கு அவன் மீதான கோபம் ஒன்றும் குறையவில்லை.





காவல்துறை அதிகாரியை பார்த்துக்கொண்டே, தனது ஜாக்கெட்டை பின்பக்கமாக கழற்றி விட்டு, அவளிடம் அப்படியே கொடுத்தவன்,



"கம்ப்ளெயின் ஃபைல் பண்ணி முடிச்சாச்சா ?" என்று கேட்டவன், அவளை இழுத்து, தோளோடு அணைத்துக் கொண்டு இவள் என்னைச் சார்ந்தவள் என்ற செய்தியைக் காவல்துறை அதிகாரிக்குக் கொடுத்து விட்டு, அவளைப் பார்க்க, அவளோ அவனை கோபமாக பார்க்க முடியாது, கோபத்தைக் கட்டுக்குள் வைக்க முயல, காவல்துறை அதிகாரிக்கு,



'இவள் தான் துருவ்வின் அடுத்தவள் !" என்ற செய்தி மனதில் பதிந்தது.



"எஸ் சார் !" என்று பெரிய இடத்தை ஒன்றும் சொல்ல முடியாத இயலாமையில் கூற, நக்ஷத்திரா அவரிடம்



"செக்ஷன் 511 இல் போட்டீங்களா ?" என்று தோண்டி துருவ, அவர் வேறு வழி இன்றி அதையும் செய்தார். ஏனென்றால் இவ்வளவு நேரம் அவள் அதற்கு தான் சண்டை போட்டு கொண்டிருந்தாள். கடத்தல் முயற்சிக்குத் தனியாக ஐ பி சி பிரிவு இல்லை, ஆனால் செக்ஷன் 511 எந்த ஒரு தவறான, நீதிக்கு புறம்பான செயல்களை செய்யும் முயற்சிக்குத் தண்டனை வழங்க கூடிய ஒரு பிரிவு .



அவரோ இவளிடம் கொஞ்சம் பணம், ஆட்டோ ஓட்டுனரிடம் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு வழக்கை சாலை நீதிமன்றத்தில் முடிக்கப் பார்க்க, துருவ்வின் வருகை வேறு விதமாக ஆக்கிவிட்டது.



"போட்டாச்சு ! ஆனா கோர்ட் வந்து சாட்சி சொல்லணும் ! அப்போ ஜகா வாங்க கூடாது " என்று கூற, அவளோ



"கோர்ட் வாசப்படிய கண்டிப்பா மிதிப்பேன் ! இப்போ சாட்சியா அப்பறம் ஒருநாள் லாயரா !" என்று நம்பிக்கை தெறிக்க கூற, அவளை துருவ் புருவங்கள் சுருங்கப் பார்த்தான், புதிராக.



"லெட்ஸ் கோ ஹனி பன்ச் " என்று அவளை அழைத்துக் கொண்டு காரில் ஏற்றினான்.



"சோ சும்மா 500 க்கு மேலே உனக்கு பிடிச்ச நம்பரை நீ சொல்லலே !" என்று கிண்டல் தெறிக்க வினவ,



"துருவ் ! உனக்கு பொண்ணுங்க கொஞ்சம் புத்திசாலியா இருந்தா பிடிக்காதா ! அப்படி என்ன லேடீஸ் மேலே அவ்வளவு வெறுப்பு?" என்று அவனைப் பெண்களுக்கு எதிரானவன் என்று சீறலாக கூற, துருவ்



"எல்லாத்தையும் சீரியஸா எடுத்து கிட்டா தான் லாயர் ஆகமுடியும்னு யாராச்சும் சொல்லி இருக்காங்களா ?" என்று அவனும் விடவில்லை.



'இவன் கிட்ட பேசறதுக்கு சுவரில் போய் முட்டிகிட்டு மண்டையை உடைச்சிக்கலாம் ' என்று மனதில் பொருமியவள் ,



"ஹா ஹா சிரிச்சிட்டேன் " என்று கூறி அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.



"சொல்லு ! ஏன் நடிக்க வந்தே !" என்று உண்மையான அக்கறையில் விசாரித்தான். ஏன் இந்த அக்கறை என்றெல்லாம் அவன் ஆராயவில்லை, அவளுக்கு ஏதேனும் ஒருவிதத்தில் உதவ வேண்டும் என்று அந்த நிமிடம் அவனுக்கு தோன்றியது.



"வேண்டுதல்! அதான் வந்தேன் " என்று இவனுக்கு நான் ஏன் என்னுடைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்ற மறைமுகச் செய்தியுடன் அவளது பதில் இருக்க, துருவ்



"நக்ஷத்திராக்கு யாரும் நல்லவிதமா பேசினா பிடிக்காதா ? அப்படி என்ன ஆண்கள் மேலே வெறுப்பு?" என்று அவளை ஆண்களுக்கு எதிரானவள் என்று அவளது பாணியிலேயே கூறிவிட்டு, காரை வேகப்படுத்தி , அவளை அவளது வீட்டில் விட்டான் .



அவளது நன்றியை வாங்கவும் இல்லை, தனது ஜாக்கெட்டை வாங்கவும் இல்லை.



இதெல்லாம் முடிந்து அவன் உறங்கும் போது மணி 1. உறங்கவிடாது இம்சை செய்துவிட்டாள். ஏன் என்று தெரியவில்லை, ஏதோ விதத்தில் அவள் அவனைப் பாதித்தாள். அவளைப் பார்க்கும் போது , அவன் தன் மனதில் புதைக்க விரும்பும் ஞாபகங்களும் வரிசையாக வர , அதில் என்ன மாதிரி உணர்கிறான் என்று அவன் புரியவில்லை.



ஒரு நேரம் சுகமாக இருக்கிறது, பல நேரங்களில் கொடுமையாக இருக்கிறது.



இது சரியாக வராது என்று உடற்பயிற்சியில் மனதைத் தொலைக்க விரும்பினான். இன்று சற்று வித்யாசமாக தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு நீண்ட நேரம் ஓட்ட முடிவு செய்தான். சைக்கிள் ஓட்டத்துக்கு ஏற்றவாறு, உடை அணிந்து கொண்டு, அவன் தனது கடற்கரை வீட்டில் இருந்து ஆரம்பித்தான். இங்கே வந்ததை சூர்யாவிடம் கூட சொல்லவில்லை.



ஏனோ தனியாக இருக்க வேண்டும் என்று அப்படி ஒரு வேட்கை. கிட்டத்தட்ட 6 கி மீ சைக்கிளில் பயணம் செய்து இருப்பான். ஓரிடத்தில் நிறுத்தி அந்த பகுதியில், சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருப்பதைப் பார்த்தான்.



சைக்கிளை நிறுத்திவிட்டு, அவர்கள் முன் சென்று



"நானும் விளையாடலாமா உங்கக்கூட?" என்று தன் குளிர் கண்ணாடியை அவிழ்த்து கேட்க, அச்சிறுவர்கள்



"ஹை! துருவ் அண்ணா! " என்று அவனைச் சூழ்ந்து, ஆர்ப்பரித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்க, துருவ் உண்மையில் நெகிழ்ந்து போனான்.



திரைஉலகு அவனது மிகப்பெரிய அடையாளம். அதன் மீது நிறைய மரியாதை உண்டு அவனுக்கு. முதன்முறையாக தன் தாத்தா நீலகண்டனிடம்



"தாத்தா! நான் மூவியில் வர்க் பண்ண போறேன்" என்று சொன்னவுடன் அவரது துரித பதில்



"நோ!" என்பது தான். இத்தனைக்கும் அவர், சினிமாவில் பொருள் முதலீடு செய்பவர். ஒரு வியாபாரமாக அவருக்கு திரை உலகம் பிடிக்கும், ஆனால் அதில் அதற்கு மேல் அவருக்கு எவ்வித ஈடுபாடு கிடையாது. முக்கியமாக நடிப்பு துறை மீது அதீத வெறுப்பு என்றே கூறலாம்.



ஆனால் துருவ்வோ,



"நான் உங்க கிட்ட தகவல் சொன்னேன் செஞ்சேன். அனுமதி கேக்கலே" என்று முகத்தில் அடித்தார் போல் ஒரு பதிலைக் கூறிவிட்டான். அவன் இப்படி தான், முகத்திற்கு நேராகப் பேசுபவன். அதில் நீலகண்டன் சற்று தழைந்து



"ப்ளீஸ் வேணாம் துருவ்! உனக்கு நான் ஏன் வேணாம்னு சொல்லறேன்னு தெரியும்" என்று கெஞ்ச, அவரது கைகளைப் பிடித்துக் கொண்டவன்



"நான், எந்த ரிலேஷன் ஆனாலும் அதில் நேர்மையா தான் இருப்பேன். " என்று சொல்லி முடித்துவிட்டான்.



நடிப்புத் துறையில் பணியாற்ற தகுந்த பயிற்சிகளை மேற்கொண்டான். அவனது தாத்தாவே அவனது முதற் படத்தை தயாரிக்கவும் செய்தார். பெரிய அளவில் வெற்றி அதில். அதன் பின் அவனுக்கு தோல்வி என்பதே இல்லை. ஆனால் இந்த திரை உலகம் வந்த பின், அவன் அவனாக இருக்கும் தருணங்கள் மிகவும் கம்மி.



இதோ, இப்போது இவன் இவனாக இருக்க முயல்கிறான். இந்தச் சிறுவர்களை பார்க்கும் போது அவனுள் ஏதோ ஒரு உணர்வு, எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள், இஷ்டம் போல விளையாட்டு, யாரை பற்றியும் கவலை இல்லை. தங்கள் குழந்தை பருவத்தை நன்கு அனுபவிக்கின்றனர் என்று அவர்கள் மீது அவனுக்கு பொறாமையே வந்தது.



"நான் பவுல் செய்யலாமா?" என்று வினமயமாக அவர்கள் இடம் இருந்து பந்தை வாங்கி போட்டான், மட்டை அடி செய்யும் போது வேண்டும் என்றே அவுட் ஆனான். அவர்களுடன் சந்தோஷமாக, அவர்கள் எடுத்து வந்திருந்த காலை உணவை அவர்களுடன் சாப்பிட்டான், எவ்வித பந்தா இன்றி.



"போட்டோ எடுத்துக்கே! பட் நெட்டில் போடாதே" என்று அவர்கள் எடுத்த புகைப்படங்கள் பற்றி அறிவுறுத்த, ஒரு சிறுவன்



"ஐயோ! நான் என் அண்ணா அக்கொண்டில் இருந்து போஸ்ட் பண்ணிட்டேன்! சாரி" என்று மன்னிப்பு கேட்க, ஒரு நேரம் என்னடா உலகம் இது, இந்தச் சிறுவ பருவத்தில் சமூக வலைதளங்கள் தேவையா இவர்களுக்கு என்று எண்ணாது இருக்க முடியவில்லை.



"இப்போ இதெல்லாம் உனக்கு தேவையா! படி! விளையாடு! அம்மா, அப்பா, பிரெண்ட்ஸ்ன்னு லைஃப் என்ஜாய் பண்ணு" என்று அறிவுறுத்தினான்



சற்று நேரத்தில் சூர்யா அவ்விடம் வந்து விட்டான்.



"எப்படிடா கண்டு பிடிச்ச ?" என்று பேட்டை கையில் ஏந்தியபடி கேட்க,



அவன்



"சோஷியல் மீடியா ! லைட் ஸ்பீட்! போஸ்ட் போட்டவனை டிராக் பண்ணி, கேட்டு தெரிஞ்சு கிட்டு வந்தேன் " என்று கூற , துருவ்



"ஷூட் ! இப்போ தான் கேட்டேன் , அந்த பையனை ஏண்டா இப்படி பண்ணினேன்னு , அதுக்குள்ள எல்லா மீடியாவிலும் வந்தாச்சு ! நான்,நானா இருக்க முடியாதா " என்று கடுப்பானான்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அதை விட இதை பாருங்க ! " என்று வேறோர் செய்தியைக் காண்பித்தான், அதில் துருவ் மற்றும் நக்ஷத்திரா இருவரும் அந்த நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துப் பேசிய நிமிடங்களைப் புகைப்படமாக எடுத்துத் தள்ளி, இணையத்தில் ஒரு கிசுகிசு பக்கத்தில் போட்டு இருந்தனர்.



" என்ன கூத்து இது !" என்று வெளிப்படையாக வெறுத்துக் கொண்டான். அந்த பக்கத்தின் பொறுப்பில் உள்ளோரை அழைத்து கடிய முடியும், ஆனால் ஒருமுறை இணையத்தில் வந்து விட்டால், அதை எத்தனையோ பேர் பிரதி எடுத்து இந்நேரம், இன்னும் கொஞ்சம் மசாலா தடவி தங்கள் பக்கத்தில் போட்டு இருப்பார்கள். அத்துடன் நிற்காது, பத்திரிகைகளுக்குப் பெருந்தீனி இது. அவனால் கண்டிப்பாக எல்லா இடத்தில இருந்தும் இதை நீக்க முடியாது. ஒருமுறை வந்தது என்றால், அது வந்தது தான்



இறுக்கமான குரலில்



"லெட்ஸ் கோ " என்று அவன் ஏதோ நினைவில் தனது சைக்கிளை அங்கே விட்டு விட்டு போக, சிறுவர் பட்டாளத்தில் ஒருவன் ,



"அண்ணா! சைக்கிள்" என்று நினைவு படுத்த, அவன் திரும்பி



"நீயே வச்சுக்கே ! ஆனா சோஷியல் நெட்வர்க்கில் போடாதே " என்று சொல்லிட்டே சென்றான்.



"ஏன் சார் ! இந்த மாறி பி ஆர் வேலை வேணாம்னு சொல்லறீங்க !" என்று காரில் வரும்போது சூர்யா கேட்க, துருவ்



"எதுக்கு ! அரசியலில் நடிகர் துருவ் களம் இறங்குவாரா? அடுத்த சி எம் துருவ்வான்னு சொல்லி ஒரு கோஷ்டி கிளம்பும் ! ஆக்டர்ஸ் ஆர் நாட் பொலிடீஷியன்ஸ் ! பாலிடிக்ஸ் இல் இருக்க, அதுக்கு ஏத்த மாறி படிச்சு இருக்கணும், நான் படிச்சது எம் பி ஏ . பிசினஸ் மேனேஜ்மேண்ட், அண்ட் பாலிடிக்ஸ் இஸ் நாட் எ பிசினஸ் டு மி. அதுக்கு நிறைய ஆளுங்க இருக்காங்க ! இருக்கற பிசினஸை பார்க்கவே நேரமில்லை" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.



சூர்யாவிற்கு அவனது பல்வேறு பரிணாமங்கள் அத்துப்படி, அவனது தாத்தாவின் தோல் வியாபாரம் மும்பையில், கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் எஸ்டேட் பிசினஸ் அதை எல்லாம் அவன் இங்கிருந்தே கண்காணிக்கிறான். தாத்தாவிற்குக் கொடுத்த வாக்கின் படி, அதை நன்கு பராமரிக்கிறான். தகுந்த ஆட்களை அங்கே வேலையில் வைத்து, சரியான நேரங்களில் ஆலோசனை வழங்கி தனது படிப்பை அவன் வீணடிக்கவில்லை. எல்லாவற்றையும் அவனுக்குச் செய்ய வேண்டும், அந்த ஆக்கிரகம் நிறைய உண்டு. அத்தோடு இந்த பெண்களுடன் சுற்றுவதற்கு எப்படி தான் நேரம் கிடைக்கிறதோ என்று சூர்யா ஆச்சர்யப்பட்டு இருக்கிறான்.



வீடும் வந்து விட ,



"சூர்யா ! ஒரு ப்ளூ கலர் ப்ராக் டைப், இதோ இந்த மாறி " என்று நக்ஷத்திராவின் புகைப்படத்தை அந்த இணைய செய்திகளில் இருந்து எடுத்து காண்பித்து



"ஆர்டர் செய்ஞ்சிடு அண்ட் அது கூட நல்ல பீச் கலர்லே ஒரு காஞ்சிபுரம் சாரி இல்ல நார்த் இந்தியன் டைப் சாரி ஒன்னு ஆர்டர் பண்ணிடு " என்று படி ஏறியபடி கூற, சூர்யா மனதில்



'நெஸ்ட் இன் லைன்' என்று முணுமுணுத்துக்கொள்ள, அது சுமாராக அவன் காதில் விழ



"என்ன ஆச்சு ? எனி பிராப்ளேம் ?" என்று வினவியே விட்டான்.



"நத்திங் சார் " என்று அவன் மறுத்தாலும், மாடிப்படி பாதி ஏறியவன் கீழே வந்து



"சொல்லு சூர்யா ! இது யாருக்குன்னு தானே கேக்க வந்தே ?" என்று தோளில் கை வைத்து கேட்க, அவனது குரலில் கடுமை இருக்கவில்லை, ஆனாலும் அது சூர்யாவை என்னவோ செய்தது. ஏனென்றால் நடிகன் துருவ்வுக்குள் ஒரு கடுமையான தொழில் அதிபன் இருக்கிறான் என்று அறிவான். இன்றும் படங்களுக்குப் பொருள் உதவி செய்து கொண்டு இருக்கிறான், தாத்தா வழியில். அப்படி தான் பொருள் உதவி செய்யும் தயாரிப்பாளர் மூலம் தானே அந்த சுவாதியின் பட வாய்ப்புகளை ஒன்றும் இல்லாது ஆக்கினான். மிகவும் கஷ்டப்படுகிறாள் என்று கேள்விப் பட்டான் சூர்யா.



எங்கே தனது நிலை அம்மாதிரி ஆகிவிடுமோ என்று அஞ்சினான்.

"நத்திங் சார் ! பிலீவ் மி " என்று அவன் கூறியும், துருவ்



"உனக்கு பொய் சொல்லும் போது நிமிர்ந்து பேச வரலே ! உன் அம்மா உன்னை நல்ல வளர்த்து இருக்காங்க ! நான் எல்லார்கிட்டயும் எல்லாம் சொல்லறதில்லை, அஸ் மை பி ஏ , உன் கிட்ட கொஞ்சம் அதிகமா பேசி இருக்கேன், உன்னோட பாடி லாங்குவேஜ் எனக்கு அத்துப்படி ! நீ கேக்க விரும்பிய கொஸ்டின் அதானே ! இது வித்தவுட் டவுட் நக்ஷத்திராக்கு தான்! அவ அட்ரஸ் சாலிகிராமம் பக்கத்தில், கண்டுபிடிச்சி அனுப்பு ! அண்ட் ஷி ஐஸ் நாட் மை நெஸ்ட் " என்று சொல்லியே விட்டான். சுருக்கமாகப் பேசும் துருவ் இன்று தான் அதிகமாக சூர்யாவிடம் பேசி இருக்கிறான்.



தன்னை எவ்வாறு துருவ் நடத்தி இருக்கிறான் என்று எண்ணிப்பார்த்தவன் உண்மையில் குற்ற உணர்வால் வெட்கமடைந்தான்.

"சாரி சார் !" என்று மன்னிப்பு வேண்ட, துருவ் அவனது தோளைத் தட்டியபடி



"இட்ஸ் ஓகே ! நான் என்னை தேடி வர பெண்களோட சுத்தறேன் ! அண்ட் ரெஸ்ட் யு நோ ! அவ அந்த லிஸ்டில் இல்ல! நானா எந்த பொண்ணையும் தேடி போக மாட்டேன்" என்று தீர்மானமாக கூறிவிட்டான். ஆனால் அவனுக்கு அப்போது தெரியவில்லை, நக்ஷத்திரா எப்படி எல்லாம் அவனைச் சுத்த வைக்கப் போகிறாள் என்று.



"அந்த ட்ரெஸ் ஆர்டர் செய்யறேன் " என்று சொல்லிவிட்டு சூர்யா விடை பெற்று கொண்டவன்,



"ஒன்னு கேக்கலாமா ! தப்பா எடுக்க கூடாது ! ஏன் சார் காதல், கல்யாணம்னு ஸ்திரமா போகாம இப்படி ...ஏதாச்சும் லவ் ஃபெயிலியரா " என்று பொறுக்க முடியாது கேட்டே விட்டான்.



"ஃபெயிலியர் ஆக கூடாத ஒன்னு , எனக்கு ஃபெயிலியர் ஆகிடுச்சு " என்று துருவ் , பழைய இறுக்கமான துருவ்வாக மாற, சூர்யா அவ்விடம் நீங்கினான் .

**********



சூர்யா தருவித்திருந்த ஆடைகள் வந்து விட, ஒருமுறை துருவ்வின் பார்வைக்கு வைத்திருந்தான். ஜிம்மில் ஓடி, எடை தூக்கி, சைக்கிள் ஒட்டி என்று பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொண்டு விட்டு, துருவ் தனது அலுவலக அறைக்கு வர, அந்த பார்சலைக் கண்டான்.



நக்ஷத்திரா அணிந்திருந்த அதே நீல நிற உடை, முன்பக்கம் இருந்த எம்ப்ராய்ட்ரி வேலைப்பாடு சற்று மாறுதலாக இருப்பது போல் அவனுக்கு தோன்றியது. விலைப்பட்டியை பார்த்து திருப்தி அடைந்து கொண்டான். வட இந்தியர்கள் உடுக்கும் புடவை ரகம், சூர்யா தருவித்திருந்தது. அழகாக அவன் தன் வேலையைச் செய்திருந்தான்.



ஒரு காகிதத்தை எடுத்த துருவ்



"ஹேய்! அந்த இன்டர்நெட் நியூஸ்! ஜஸ்ட் இக்னோர்! உன்னோட ப்ளூ ட்ரெஸ். நீ போட்டு கிட்டு இருந்தமாறி தான் வாங்கிருக்கேன்" என்று கிறுக்கியவன், தன் கையெழுத்திற்காக, ஆங்கிலத்தில் D என்று மட்டும் எழுதினான்.



பின்னர் என்ன தோன்றியதோ, மற்றோர் காகிதம் எடுத்து



"ஏதோ விதத்தில் உன்னை நான் ஹர்ட் பண்ணிருந்தா, அம் சாரி! என்னை மன்னிச்சு இருந்தா, இந்த பட பூஜைக்கு, நான் அனுப்பி இருக்கற புடவையை கட்டிக்கிட்டு வா" என்று அந்த புடவைக்கு இடையே அந்த காகிததை சொருகி வைத்தான். அவனா இது! ஒரு பெண்ணிடம் இறங்கி வருவது!



அவனாலேயே நம்பமுடியவில்லை. இப்படி எல்லாம் ஏன் செய்ய தோன்றுகிறது என்று அவனால் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனோ அவளது கிட்டத்தட்ட அழும் நிலையில், முகம் சுணங்கி கடன் வாங்கிய அந்த உடை பாழானதைப் பற்றி கூறியது, தான் ஒரு வழக்கறிஞராக நீதி மன்றம் செல்வேன் என்று உறுதியாகச் சொன்னது என்பதில் இருந்து அவளது நிதிநிலையை அவன் ஊகித்து விட்டான். எத்தனை திரைக்கதை கேட்டு இருக்கிறான், பார்த்து இருக்கிறான் அவனுக்கா புரியாது !



ஆனால் எதை அவன் புரிந்து கொள்ள வேண்டுமோ அதை அவன் புரிய கொள்ள முற்படவில்லை. சூர்யாவிடம் அந்த ஆடைகளை அவளுக்கு அனுப்பச் சொல்லி விட்டான்.



இங்கே நக்ஷத்திரா வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கொண்டிருந்தாள். ஏற்கனவே அந்த நீல நிற உடை பாழானதில் மன வருத்தம். எவ்வளவு முறை பார்வதியிடம் சொல்லி இருப்பாள், தன்னுடைய உடையை அணிந்து கொண்டு செல்கிறேன் என்று, கேட்டாரா ? ரத்னா வேறு அவளைச் சத்தம் போட்டுவிட்டு போனாள் . அவளுக்கு அது வயிற்றுப் பிழைப்பு அல்லவா ! அந்த கோபம் !

இந்த கூத்து ஒருபுறம் என்றால், மறுபுறம் அவளை பற்றி வந்த அந்த இணையச் செய்தி. அதை கண்டு பார்வதி பொங்கி



"ஒரு படம் நடிச்சா !நீ என்ன அதுக்குள்ள பெரிய இதுவா ! அதுக்குள்ள …." என்று ஏதோ கூற வந்தவர்



"இதோ பாரு ! வயத்து பொழைப்புக்கு இந்த சினிமா போதும் " என்று கூறியதில் பல்வேறு அர்த்தங்கள் . அது புரியாதா என்ன அவளுக்கு!



"நானா அந்த ட்ரெஸ்ஸை போட்டுக்கிட்டு போறேன்னு சொன்னேன் ! நானா அந்த கெட் டுகெதர் போறேன்னு சொன்னேன்? அன்னிக்கி நைட்டே என்ன ஆச்சுன்னு சொல்லிட்டேன் , அதுக்கு மேலே யாரோ என்னவோ போட்டா, அதுக்கு நான் எப்படி பொறுப்பு ! இந்த சினிமாவை என் மேலே திணிச்சது நீங்க ! இப்ப கூட நான் விடுவேன் , உங்களுக்காக தான் கண்டவனை எல்லாம் பொறுத்துகிட்டு அந்த பார்ட்டிக்கு போனேன் " என்று கத்தி விட, அப்போது தான் துருவ் அனுப்பிய தூதஞ்சல் வந்தது.



பிரித்துப் பார்த்தது என்னவோ பார்வதி தான்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"பாரு ! அந்த துருவ் தம்பி தான் அனுப்பி பாரு! நீ போட்டுக்கிட்டு போன அதே ட்ரெஸ் , நார்த் இந்தியன் புடவை வேற " என்று அந்த நீல நிற உடையை எடுத்து காண்பிக்க, நக்ஷத்திரா ஏக கடுப்பில் அதைப் பிடுங்கி விட்டெறிய போனாள்.



"கிறுக்காடி உனக்கு ! ட்ரை க்ளீன் பண்ணியும் கரை போகலேன்னு சொன்னியே ! இப்போ பாரு புது டிரஸ் . இதை எடுத்து அந்த ரத்னா மூஞ்சியில் வீசு !" என்று அவர் அவளைக் கடிய,



"அவன் யாரு எனக்கு ட்ரெஸ் அனுப்ப ? சரி அந்த ப்ளூ ட்ரெஸ் அனுப்பினான் ..எதுக்கு இந்த சாரி ? என்ன நினைச்சு கிட்டு இருக்கான் ? அவன் இந்த மாறி செஞ்சா நான் அப்படியே அவன் கிட்ட போய் இழைஞ்சு கிட்டு இருக்கணுமா ? பொறுக்கி ! எப்போடா ஏதாச்சும் ஒரு பொண்ணு வருவா ! அவளுக்கு பிராகெட் போடலாம்னு நினைக்கிற கேடு கெட்டவன் ! அந்த புடவைய நான் திருப்பி அனுப்ப போறேன் " என்று அவரிடம் இருந்துப் பிடுங்கி, அந்த புடவையைப் பிரித்து பார்க்காது அனுப்பிவிட்டாள் . அவளது தற்போதைய நிலையில் அந்த நீல நிற உடையை மட்டும் எடுத்து கொண்டு ரத்தினாவிடம் கொடுத்து விட்டாள் .




பட பூஜை நாளும் வந்தது. அவள் தன்னிடம் இருக்கும் உடைகளில் உருப்படியான ஒரு சல்வாரை அணிந்து கொண்டுச் சென்றாள். அவளை மிகவும் எதிர்பார்த்திருந்தான் துருவ். அவள் வரும் வழியை நோக்கியவனுக்கு, அவளை சல்வாரில் பார்த்து வந்த கோபம் அலாதி. தனிமையில்



"ஏன் நான் அனுப்பின புடவையை கட்டலே ?" என்று உரிமையாக வினவினான். அதில் அவள்



"நீ எனக்கு யார் ? ஜஸ்ட் மை கோ ஸ்டார் இந்த மூவியில் ! அவ்வளவு தான் ! வேற எந்த உறவும் இல்ல ! உன் பின்னாடி அலைய ஆயிரம் பொண்ணுங்க இருக்காங்க ! நான் இல்ல ! டைம் வேஸ்ட் பண்ணாதே மிஸ்டர் !" என்று முகத்தில் அடித்தார் போல் கூறியும் விட்டாள் .



இம்மாதிரி எல்லாம் யாரும் துருவ்விடம் பேசியது இல்லை. அவளுடைய உடல் எடை முழுவதும் கொழுப்பு தான் என்று முடிவு கட்டியவன், அவளிடம் தன்னுடைய மற்றோர் முகத்தைக் காண்பிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டான்.



"நீ இதுக்கு நிறைய வருத்தப் பட போறே ! என்கிட்ட வந்து கெஞ்சி நிக்க போறே ! கண்டிப்பா இதை நான் நடத்தி காட்டுவேண்டி " என்று சூளுரைத்தான். ஏளனமாக அவனைப் பார்த்து சிரித்தவள்,



"இன் யூர் ட்ரீம்ஸ் !" என்று அவனை ஒரு நக்கல் பார்வை பார்க்கத் தவறவில்லை. அவளுக்கு துருவ் பற்றி அன்று தெரியவில்லை, தெரியும் நாள் வெகு விரைவில் வரும் என்றும் அவள் நினைக்கவில்லை. அவளிடம் சாதாரணமாக பழக முற்பட்டவனை முழுவதும் சீண்டி விட்டாள். அவளது தவறு என்று கூறலாம், ஆனால் அது அவள் வளர்ந்த விதம் , ஆண்கள் மீது நம்பிக்கை இல்லாது வளர்ந்து விட்டாள். முக்கியமான உறவுகள் பொய்யாகும் போது அந்த உணர்வு வரும் , யாரையும் இனி நம்பக்கூடாது, எனக்கு நான் மட்டுமே என்ற ஒரு உறுதி வரும், அது அவளுக்கு பிஞ்சு வயதிலேயே வந்து விட்டது.



பணம் இல்லாத வாழ்வில் அவள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் இல்லை, ஆனால் அவள் அறியாதது, அவனுக்கு பணம் இருந்தும் எல்லாம் இருந்ததா என்பது தான் ! உண்மைகள் வெளி வரும் நேரங்கள் சரியாக இருக்கவும் போவதில்லை! அவர்கள் இருவருக்கும் இழந்தவை, இழந்தவையே !



************



ஒரு வழியாகப் படப்பிடிப்பு துவங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பில் துருவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.



எளிமையான ஒன்றாக தோன்றும், படத்தின் நாயகன் செய்யும் காட்சிகள். ஆனால் அந்த நாயகன் அதை செய்ய படும் பாடு, அவனே அறிவான்.



நடனக்காட்சி, தமிழ் திரை உலகின் சாஸ்திர சம்பராதயம் ஆன, நாயகனின் அறிமுகப் பாடல். நடன அசைவுகளில், நாயகன் முடிந்தால் தான் ஒரு சூப்பர் மேன் என்று காண்பித்து விட வேண்டும். இவ்வாறெல்லாம் எதிர்பார்ப்பு உருவாக்குவதில் ரசிகர்கள் பங்கு அதிகம்.



'பார்த்தியா! எங்க தலே ஸ்டெப் ஒன்னு எடுத்து வுட்டாரு பாரு! உன் தலைவன் போட்டானா! அம்மாதிரி! லாஸ்ட் இன்றோ சாங்கில் சும்மா சாணிய மிதிக்கற ஸ்டெப் போட்டார்யா' என்று உலக அளவு பிரச்சினைகள், இந்திய நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் , இவ்வளவு ஏன் வீட்டில் எல்லாம் பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, வெறித்தனமாக வாய்ச் சண்டையைக் குத்து விளக்கு ஏற்றாது துவக்கி வைக்கும் ரசிகர் கூட்டத்தைத் திருப்தி படுத்துவதற்காகவே, நாயகர்கள் செய்யும் சர்க்கஸ் வித்தைகள் அதிகம்.



நாயகனைச் சுத்திவளைத்து படமாக்க ரயில் தண்டவாளம் போன்றதை வைத்து, அதன் மீது காமிராவை ஓட்டுவர். அம்மாதிரியான அமைப்புகள், செட் என்று தயாராகி விட்டது படப்பிடிப்பு. நடன இயக்குனர் தனது சிஷ்யப்பிள்ளைகளை தயார் படுத்தி கொண்டு இருந்தார்.



"இப்ப நேர நீங்க இவங்க மேலே ஏறி, ஒரு போஸ்… எங்க! ஒருமுறை கூட காமிங்க!" என்று நடன இயக்குனர் கேட்க, துருவ்வும் செய்து காண்பித்தான். ஷாட் தயாராக எல்லோரும் தயாராயினர்.



"ஷாட் ரெடி! காமெரா! ஆக்ஷன்" என்ற சத்தம் இடப்பட, பாடல் ஒலிபரப்பாகத் தயாரானது.



துருவ்விற்கு இப்போது குனிந்து கொண்டு இருக்கும் 5 பேர் முதுகில் ஏறி, ஒரு ராஜாவை போல் அவர்கள் மீது ஏறி நிற்க எத்தனித்தான். அவனும் மனிதன் தானே, ஒருமுறை குனிந்த நபர், சற்று விலகி விட, அடுத்த முறை இவன் சற்று திணற, மற்றோர் முறை இயக்குனர்



'ரீ-டேக்' என்று கத்த, ஒரு முறை காமெரா இயங்காது இருக்க, என்று கிட்டத்தட்ட 4-5 முறை அந்த காட்சி எடுக்கப்பட்டது. அடுத்த ஷாட் ரெடியில் துருவ் சரியாக ஏறினான், குனிந்தவர்களில் ஒருவன் சற்று திடீரென நிமிர, துருவ் திணறி கீழே விழப் போனான், அவனே சமாளித்து நின்று விட இயக்குனர்



"ஏன்யா! ஒழுங்கா குனிய முடியாதா! நீ எல்லாம் ..." என்று சரமாரியாகத் திட்ட துவங்க, அங்கே வந்து இருந்த நக்ஷத்திரா அவன் திணறியதில் ஏதோ ஹாஸ்யத்தை பார்த்தது போல் சிரித்து விட்டாள், சற்று பலமாக.



அது எல்லோர் காதிலும் விழுந்தது.



"யாருமே இது!" என்று உதவி இயக்குனர் சத்தமிட, அவள் தலையைக் குனிந்து கொண்டாள். ஆனால் அவள் குனியும் முன்னே துருவ்வின் கழுகுப் பார்வையில் மாட்டிக் கொண்டாள். நிச்சியமாக அவனுக்கு தெரியும், சிரித்தது இவள் தான் என்று. அவர்கள் இடையே நிலவிக் கொண்டிருந்த பனிப்போர், ஒரு உஷ்ண நிலையை அடைய அது ஒரு தீப்பொறி.



சமயம் கிடைக்கும் போது அவளை ஒருவழியாக்க வேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு இது பெரிய தூண்டுகோல். மனம் நிறைய கோபமும், வெறுப்பும் போய், வஞ்சம் குடிக்கொள்ள ஆரம்பித்தது. அதன் பலனை வெகு சீக்கிரம் அவள் உணர ஆரம்பித்தாள்.



வஞ்சம் சூழ் உலகை நக்ஷத்திரா, துருவ் மூலம் கண்டாள்.



வஞ்சகம் எனும் நோய்க்கு மன்னிப்பு உண்டா



சிலர் அன்பு இருக்க பயமேன் என்பர்…



ஆனால் அன்பு அம்பானால்?
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 5



துருவ்வின் உடற்பயிற்சி அறையில் குத்துப் பயிற்சி செய்ய ஒரு குத்துப்பை உண்டு. கல்லூரியில் குத்துச் சண்டை செய்வான். அப்போதிருந்த பழக்கம். இன்று பலநாள் கழித்து குத்து பயிற்சி.. குத்துப்பயிற்சி என்று சொல்வதை விட, கோபத்தின் வடிகால்.



காரணம், மின்னும் பெண் தான். அவன் அனுப்பிய புடவையைத் திருப்பி அனுப்பி இருந்த தூதஞ்சல் இன்று தான் அவன் கையில் கிடைத்தது.



புடவைக்குள் அவன் வைத்திருந்த காகிதம் அப்படியே இருந்தது. பார்சலில் மற்றோர் காகிதம், அவள் கைப்பட எழுதியது.



"மிஸ்டர். வுமனைசர், இது தவறான அட்ரஸுக்கு அனுப்பி இருக்கீங்க. உன் கூட வெட்கம் இல்லாம் சுத்தற பெண்களில் நான் இல்ல " என்று ஆங்கிலத்தில் அவளது பெயரின் முதல் எழுத்தான N - ஐ போட்டு இருந்தாள்.



அவள் அவனைப் பெண்கள் பின்னால் அலைப்பவன் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருந்தாள். அவளுக்கு தெரியுமா அது! அவள் யார், தன்னை இவ்வாறு கூற. துருவ் ஓங்கி அடித்தால், கோமா நிலைக்குச் சென்று விடுவாள், அவ்வளவு தான் சத்து அவள் உடலில்.



என்ன தைரியம் அவளுக்கு ! அவனிடம் அவ்வாறு பேசுவதற்கு ? அதுவும் இருவருக்கும் எளிதாக 9 வயது வித்யாசம் வேறு. கூப்பிடுவது எல்லாம் ஒருமையில், வாடா போடா மட்டும் தான் இல்லை. அவன் செய்தக் குத்துப்பயிற்சியில், மார்பில் வியர்வையானது அருவி போல் வழிந்து கொண்டு இருந்தது. அங்கிருந்த இருக்கையில் இரண்டு கைகளை முட்டிக்கு மேல் வைத்து கொண்டு, அந்த குத்துப்பையையே பார்த்து கொண்டிருந்தான். அவன் உட்கார்ந்து இருந்த நிலையில் அவனது புஜங்கள் இன்னும் உருண்டு, திரண்டு தெரிந்தன. 'பைசெப்ஸ் ' 'ட்ரைசெப்ஸ்' என்றெல்லாம் கூறுவார்களே , அதெல்லாம் அவனது புஜங்களில் தெளிவாக வரையறுக்கும் படி, நரம்பு மண்டலத்தின் பாதையுடன் தெளிவாக இருந்தன. தோள் மேற்புறத்தில் ஒரு 5 கி எடை வீற்றிருப்பது போல் இருந்தது. மார்பானாது எஃக்கினால் செய்தது போல் செதுக்கப்பட்டு, அவனது மார்பில் வெறும் கையினால் குத்தினால் அந்த கை எலும்பு முறிவது உறுதி போல இருக்க, அவனோ கோபத்தை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்று தெரியாது தவித்தான்..



கோபமான கிரேக்க சிலை தான், அவன் மனமும் இறுகிப் போய் இருந்தது. வாழ்வில் நெடுநாள் கழித்து வந்த இளக்கம், அவளது இளகாரத்தில் , காற்றில் பறக்கும் பஞ்சு போல் பறந்து விட்டது. இனி அவன் அவளிடம் எப்படி நடப்பான் என்று அவன் அறிவான், அவள் அறியாள். மீண்டும் ஒருமுறை அந்த குத்துப்பையைத் தனது வடிகாலாக்க அவன் எழுந்து, கோப நடைகளுடன் அதை அடைந்து, 'ஹிக்' என்று குத்தினான்.



கைவலி தெரியவில்லை, மனதில் அந்த அவமான வலி அதிகமாக இருந்தது. ஒருவேளை நக்ஷத்திரா அவனது இந்த கோபத்தை கண்டு இருந்தால், அடுத்து அவள் விபரீதமாக வேறொன்று செய்து, அவனை அவளின் ஜென்ம சத்ருவாக உருவாக்கி இருக்க மாட்டாள். ஆனால் பெண்ணின் மனது மிகவும் விசித்திரமானது, உடனே செயல்படக்கூடியது. முக்கியமாக தனது மானத்திற்குப் பங்கம் ஏற்படும் நிலை வந்தால், சூர்ய வெளிச்சத்தின் வேகம் கொண்டு செயல்படும்.



அவளும் அதைத் தான் செய்யப் போகிறாள். அதனால் துருவ் என்பவன், நீல வானத்தில் இருந்து கருமையான வானமாக மாறி, அவளை அடக்கினான். நட்சத்திரமானவள் அவனுள் அடங்கி போனாள். அதில் மிஞ்சியது துன்பம் மட்டுமே, இருவருக்கும்.



சூர்யா வந்து அவனை கூப்பிடும் வரை, எத்தனை முறை அந்தக் குத்துப்பையைக் குத்தி இருந்து இருப்பான் என்று அறியான்.



"சார்! ரோஹினி வந்து இருக்காங்க!" என்று கூப்பிட, துருவ்



"யார் ரோஹினி!" என்று விசாரித்தான்.



"ரோஹினி சிங்கானியா!" என்று சொல்லி முடிக்கவும், அந்த சிங்கானியா என்ற வார்த்தை கேட்ட உடனே அவனுக்கு வந்த கோபம் கரை கடந்து போயிற்று.



"சென்ட் ஹர் அவுட்" என்று தயவு தாட்சண்யம் இல்லாது சொல்லிவிட்டான்.



"உங்களைப் பார்த்தே ஆகணும்னு சொல்லறாங்க, கிட்ட தட்ட 2 மணி நேரம் வெயிட்டிங்" என்று கூற, அப்போதே அந்தக் குத்துப்பை, ரோஹினி சிங்கானியாவாக மாறியது.



கீழே உடை மாற்றாது வந்தவன், விருந்தினர் உட்கார வைக்கப்படும் இடத்திற்கு வந்து, அவள் கையைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு, வெளியே தள்ளி,



"நான் உன்னோட இந்த அசிங்கம் பிடிச்ச மூஞ்சிய பார்க்கவே கூடாது..எவர்..நெவர் இன் மை லைஃப்" என்று கர்ஜிக்க, ரோஹிணி அவன் நடவடிக்கையால் அதிர்ந்தாள் என்று சொல்வதை விட, திடீரென ஒரு துப்பாக்கி சூடு நடந்தால் அவள் மீது நடந்தால் எப்படி இருப்பாளோ, அப்படி ஆகிவிட்டாள்.



"துருவ்..ப்ளீஸ் லிசன்" என்ற வார்த்தைகளை கேட்க அவன் அதன் பின் அங்கு இல்லை. அவள் தவறா இது, அவன் இம்மாதிரி நடக்க. இம்மாதிரி புவியில் வர வேண்டும் என்று அவள் வரம் வாங்கவில்லை. அவன் கோபம் நியாயமானதே, தாங்கிக் கொள்ள தான் வேண்டும்.



என்றாவது ஒருநாள், அவனே வருவான் அல்லது மனம் நிறைந்து அவளை, அவளுக்காக ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கை குறைய வில்லை. அவளை அவன் அவமானப்படுத்தியது, அவன் கோபத்திற்கு வடிகால், இருந்தாலும் அவளும் ஒரு மனித பிறவி அல்லவா, அந்நேர ரோஷம் பொங்க,



"ஒருநாள் நீ என்னை ஏத்துப்பே, டைம் ஸ்டார்ட்ஸ் நவ்" என்று உரக்க உரைத்துவிட்டு சென்றாள். அவளது மொழிகள் அவன் காதினை எட்டினாலும் மனதினைத் துளி கூட தொடவில்லை.



"சூர்யா! இன்னிக்கி ஷூட்டிங் கான்சல் பண்ண சொல்லு" என்று சூர்யாவிடமும் பாய, சூர்யா



"எஸ் சார்" என்று சொன்னாலும், யாருடா இந்த பொண்ணு என்று அவனால் எண்ணாது இருக்க முடியவில்லை. துருவ்வுடன் இருந்த நாட்களில், இவள் யாரென்றே அவனால் யூகிக்க கூட முடியவில்லை.



*************



இன்று நக்ஷத்திராவுக்கும், துருவ்விற்கும் இடையே உள்ள காட்சிகள் படமாக்கப்படுவதாக இருந்தது. துருவ் வராத காரணம், அது நடக்காது போக, அவளுடைய வேறு காட்சிகள் படமாக்கப்பட்டன. அவன் வராததால், நிம்மதியாக நடித்தாள், இயக்குனர் பாராட்டு வேறு. அதில் சந்தோஷம் இருந்தாலும், இதை அவன் காணவில்லையே என்ற எண்ணம் இருக்க தான் செய்தது.



'அப்படியே பாராட்டிட்டாலும்' என்று நொடித்தும் கொண்டாள். துருவ்வோ தன்னை மறந்த நிலையில் இருந்தான். பழையன கழிதல் என்பது அவனுக்கு என்றும் நடவாது போல் என்று நினைத்துக் கொண்டவன்



"ஒன் மோ….ர் விஸ்….கி.." என்று குழறிக் கொண்டே மதுவை மீண்டும் வேண்ட, சூர்யா



"போதும் சார்.. இன்னிக்கி அதிகம்" என்று தடுத்த போதும், அவன் கேட்கவில்லை.



"நீ போடா. ...வீட்டுக்கு போ...டா...எ...னக்கு யாரும்..வேண்டா...ஐ வா..ன்னா பி அ...லோன்..யூ நோ வை! மை பேரண்ட்ஸ் ஆர் டெ...ட் டு மி...என்னோட அம்மா ... எனக்காக போராடாத….உத்தமி...என் அப்பா… அவ…." என்று ஆரம்பித்தவன், அதன் பின் பேச முடியாது மதுவால் செயல் இழந்தான்.



அடுத்த நாள் காலை, முன்தினம் போட்டு கொண்டிருந்த அதே உடையில் எழுந்தவன், முதலில் பார்த்தது சூர்யாவை தான்.



தலை விண்விண் என்று தெறிக்க, தலையில் கையை வைத்து அழுந்தப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.



"காபி வித் ஆஸ்பிரின்" என்று சூர்யா அவன் தேவையை உணர்ந்து செயலாற்ற, அதை மறுப்பேச்சு பேசாது வாங்கிக்கொண்டு உட்கொண்டவன்,



"சூர்யா! எனக்கு பி ஏ வா இருக்க கஷ்டமா இருக்கா!" என்று கேட்டான். ஏனென்றால் சூர்யா தான் தன்னை பத்திரமாக இங்கே வீடு வந்து சேர்ப்பித்தான் என்று உணர்ந்து கொண்டான்.



"இது என்னோட கடமை சார்" என்று அவன் கையில் இருந்து டம்ளரை வாங்கிக் கொள்ள, துருவ்



"நீ என் பி ஏ, அடிமை இல்ல. பிடிக்கலைன்னா சொல்லு" என்று முகத்தில் அடித்தார் போல அவன் வாக்கியம் இருக்க, சூர்யா புன்னைகைத்தவன்,



"யூ நோ சார்! நீங்க நல்ல ஆக்டர், நிஜ வாழ்க்கையிலும். என்னிக்காச்சும் உங்களுக்கு மனசு விட்டு பேசனும்ன்னா, நான் இருக்கேன்" என்று சொல்லிட்டே சென்றான். அதில் நெகிழ்ந்தவன்,



"தேங்க்ஸ்" என்று நன்றி உரைக்க, அதை ஏற்றுக்கொண்ட சூர்யா,



"இன்னிக்கி டான்ஸ் ரிகர்சல்! கான்சல் செய்யணுமா! எப்படி இருக்கீங்க?!" என்று அக்கறையாக விசாரிக்க, துருவ் படுக்கையில் இருந்து எழுந்தவன்,



"இல்ல, கான்சல் பண்ணாதே" என்று தயாராகி விட்டான். அவனுக்கு நடனம் மிகவும் பிடித்த ஒன்று. அதை கொடுத்தவரைப் பிடிக்காது, ஆனால் நடனம் பிடிக்கும்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிறு வயதில் அவன் நடனமாடினால், அவன் அன்னையோ, தாத்தாவோ அவனை அடி பின்னி விடுவார்கள். அந்த அளவு அவர்களுக்கு அவன் நடனம் ஆடும்போது கோபம் வரும். ஆனால் அவனுக்கோ ஆடுவதில் தனி பிடித்தம். படிப்பான், தேறி விடுவான், அந்த அளவு தான் படிப்பில் நாட்டம். தற்காப்புக் கலைகள், விளையாட்டு, நடனம் இவையெல்லாம் தான் அவனுக்குப் படிப்பை விட, அதிக விருப்பம். யாருமில்லாத நேரங்களில், அவளுக்காக அவன் ஆடுவான். அவன் ஆடும்போது, அவன் தான் உலகம் அவனுக்கு.



"எனக்கும் ஆட சொல்லி தா" என்று குழந்தைத்தனமாக அவள் கேட்கும் போது, அவள் மூக்கைப் பிடித்து, ஆட்டி



"இந்த சுண்டைக்காய்க்கு கை கால் முளைக்கும் போது சொல்லி தரேன்" என்று கூறுவான்.




அவனை போல, அவளும் ஆட முயன்று, அது நடவாது போகும் போது வரும் அவளது கோபம், எரிச்சல், அதை அவன் சீண்ட என்று அந்த நாட்கள் இன்னும் பசுமையாக அவன் மனப்பெட்டகத்தில் இன்றும் இருக்கிறது. ஆனால் அவள்!!




எங்கே என்று அறியான், இனி பார்ப்பானா என்று அறியான் ஆனால் பார்த்தால் இந்த ஜென்மம் முழுதும் அவளை விடமாட்டான். குளிர்ந்த தண்ணீர் அவனது தேடலின் உக்கிரத்தை தணிக்க வில்லை. இப்போதெல்லாம் அவள் அதிகம் அவன் நினைவில் வருகிறாள், அது பிடிக்கவில்லை.



அவன், அவனாக அவளிடம் மட்டுமே இருப்பான். ஆனால் அவனுக்கு அது வேண்டாம். இந்த இறுக்கம் தான் அவனைக் காக்கிறது, வேதனை அடையாது வாழ வைக்கிறது என்று திடமாக நம்புகிறான். ஷவர் கேபினில் கைகளை வைத்தவன் முதுகில் சில்லென்ற நீர் விழ, முகத்தில் அது வழிந்தோடியது. அதனை வழித்தவன்



'நீ வேண்டாம்! போ!' என்று முணுமுணுத்துவிட்டு, அவள் நினைவுகளையும் அப்புறப்படுத்த முயன்று வெற்றியும் கண்டான்.




இப்போதெல்லாம் பெரும்பாலான படங்களின் நடன காட்சிகள், ஒரு நடன ஸ்டுடியோவில் வைத்து ஒத்திகை பார்க்கப்படுகிறது. எளிதாக 2/3 நாட்களிருந்து, 1 வாரம் கூட ஆகலாம். பாடல் படப்பிடிப்பு அதனால் எளிதாக நடக்கும் என்று நம்பப்பட்டாலும், நடனத்தின் அதிகபட்ச நெளிவு சுளிவுகள் கொண்ட பாடல்கள் சிலபடமாக்கப்பட, 10 நாட்கள் கூட எடுக்கும்.



திரையில் 4.5 நிமிடங்கள் வரும் பாடலுக்கு பின்னால், கடின உழைப்பு இருக்கிறது. ஒத்திகை, கலை, நடன கலைஞர்கள், நாயக-நாயகி என்று எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும், நாள் கணக்கில்! அதுவும் நடனப் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் அன்று இருக்கும் உற்சாகம் அதன் கடைசி நாள் வரை இருக்க வேண்டும், எவ்வளவு உடல் உபாதைகள் நேர்ந்தாலும்.



நக்ஷ்திராவிற்கு நடனம் என்றாலே பாசமான பக்கத்து நாட்டிற்குப் போவது போல. இருந்தாலும் இன்று அந்த பாசமான பக்கத்து நாட்டிற்கு தான் நுழைந்து இருக்கிறாள். ஏனென்றால் நடன இயக்குனர், இந்தியாவின் முன்னணி நடன கலைஞர். அவர் நடராஜ வம்சம் என்றால், நம் அம்மையார் நடன திணறல் திலகம்.



ஒரு பக்கம் முழுவதும் ஆளுயர கண்ணாடி பதிக்கப்பட்டு இருக்கும் அந்த அறைக்கு நுழையும் போதே, அவளுக்கு குளிர் சாதன இயந்திரத்தால் அதிகம் குளிர் எடுத்தது.



"கொஞ்ச ஏசி கம்மி பண்ணுங்க" என்று அங்கு உதவிக்கு இருக்கும் பையனிடம் கூற, அவனோ



"துருவ் சாருக்கு ஏசி அதிகம் வேணும், வந்து கிட்டு இருக்காரு" என்று மறுத்துவிட, அந்த குளிர் இப்போது, வெம்மையான காற்றாக மாறியது, அவளது கோப உஷ்ண மூச்சுகளால்.



"போய் பென்குவினை கட்டிபிடிச்சு கிட்டு அண்டார்டிக்காவில் போய் டேட்டிங் பண்ணிக்கிட்டு இருக்க வேண்டியது தானே! என் உயிரை வாங்க, இந்த் சென்னை இல் இருக்கனுமா?" என்று முனங்கி கொண்டாள். ஏற்கனவே அவளுக்கு அவன் மீது காரணம் கொண்ட, காரணம் கொள்ளாத கோபம் எக்கச்சக்கம். நேற்று படப்பிடிப்பிற்கு வேறு அவன் வரவில்லை, அதில்



'ஹீரோன்னா என்ன வேணாலும் செய்யலாம், அவன் இஷ்டம் தான் ஷூட்டிங். ராஸ்கல்! இவன நம்பி பணம் போடற பிரட்யூசரை சொல்லணும், இர்ரெஸ்பான்சிபில்' என்று தாளித்து கொண்டு இருந்தாள். ஒருவேளை நேற்று அவன் வந்திருந்தால், அவன் இருந்த மனநிலைக்கு, அவளை என்ன செய்து இருந்து இருப்பான் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. நேற்று படப்பிடிப்பு நடந்து இருந்தாலும், நடவாத போல் தான்.



மேலும் இன்று நடன ஒத்திகைக்கும் அவன் வர தாமதம் ஆகிற்று.



'இவனுக்கு வெயிட் பண்ண ஒன்னும் நான் இங்கே வரலே' என்று



அவள் பயிற்சியை ஆரம்பிக்க, துருவ் வந்தான். கையில்லா பனியன், தொப்பி, டிராக் பேண்ட் என்று நடனத்திற்காக ஏற்ற உடையில் அவன் இருக்க, இவளோ ஒரு சல்வார் அணிந்து, கதக் ஆடுவோர் போல் துப்பட்டாவை மேலே பின் வைத்து போர்த்தி இருந்தாள்.



அவன் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை. மலர்ச்சியும் இல்லை.



'மார்னிங் பிரேக் பாஸ்டில் இஞ்சி நிறைய தின்னு இருப்பானோ' என்ற நக்கல் அவள் மண்டைக்குள் ஓட, நடன இயக்குனர்



"நக்ஷத்திரா! டான்ஸ்" என்று அவள் ஆட வேண்டிய நடன பகுதியை தன் உதவியாளர் கொண்டு சொல்லித் தர, அவளும் சற்று திணறினாலும் படித்துக் கொண்டாள். ஆனால் துருவ்வுடன் ஆடும் போது, அவள் படித்தது எல்லாம் மறந்து போனது. அந்த ஒரு பக்க கண்ணாடியில் அவள் பார்த்த, அவனது தீண்டல், அவன் ஆடும் வேகம், அவனது நெருக்கம் என்பதில் அவள் கற்றதெல்லாம், அந்த குளிர்சாதனக் காற்றில் கரைந்து போக, ஒரு கட்டத்தில், அவள் இடுப்பில் கட்டி இருந்த துப்பட்டவின் நுனி அவன் கையில் சிக்கி, அது இழுக்க பட, இழுக்கப்பட்ட வேகத்தில் அவளது துப்பட்டாவை சொருகி வைத்து இருந்த பின், தோள் பகுதியில் இருக்கும் அவள் ஆடையைக் கிழித்துக் கொண்டு வந்து விட, நக்ஷத்திரா அந்த அதிர்வில் சிலையென நிற்க, அவளது துப்பட்டாவை கையில் சுற்றியவன் அதைக் தூக்கி அவள் மீது எறிந்து



"ராங் சாய்ஸ்! நீயும் உன்னோட ட்ரெஸ்ஸும் " என்று கூறிவிட்டுச் சென்றும் விட்டான். அவன் வேண்டும் என்றே தான் செய்தான் என்று நம்பினாள், அது தான் உண்மையும் கூட என்று உறுதியாக நினைத்தாள்.



அவர்கள் நடன அசைவுகளில், அவன் கரங்கள் அவள் இடையைத் தீண்டுவது போல் அந்த இடத்தில் அமைக்கப்படவில்லை. அவன் இயல்பாக அந்த அசைவை எளிதாக மாற்றி, அவளை அவமானப்படுத்தி விட்டான். சல்வார் மேல் பகுதி சற்று கிழிந்து இருக்க, அதை இழுத்து பிடித்துக் கொண்டே அவள் அவ்விடம் நீங்கி, ஆடை மாற்றும் இடத்திற்கு வந்தாள்.



ஒரு மூலையில் உட்கார்ந்தவளுக்குக் கோபம் குறையவில்லை, எவ்வளவு திமிர் அவனுக்கு? பெண் என்றால் ஒரு பொம்மையா, அவனுக்கு! அவன் செய்ததில், அவள் ஆடை விலகி, உள்ளாடையின் பகுதி வெளியே தெரிந்து விட்டது. அவர்களைச் சுற்றி, எளிதாக 5 பேர் இருந்தனர். எல்லோரும் பார்த்து இருப்பர். அதுவும் கண்ணாடி வேறு, அதில் வரும் பிம்பத்தில், அவள் பின்னால் இல்லாதோரும் பார்த்து இருப்பர்.



"சீ!" என்று மற்றவர் பார்வைக்கு விருந்தாகி விட்டோமே என்று எண்ணி மறுகினாள். கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு, முட்டி மீது முகத்தை வைத்து ஆறுதல் தேட முனைந்தவள், கண்ணில் நீர் துளிகள் குறையாது பெருக, அவள் முன்னால் ஒரு நிழல்.



நடன உதவியாளர், அந்தப் பெண். அனிதா என்பவள்,



"இதை போட்டுக்கே!" என்று ஒரு டீ ஷர்ட் மற்றும் லெக்கிங்ஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.



"யாரோடாது இது!" என்று நக்ஷத்திரா வினவ, அனிதா



"என்னோட மாத்து ட்ரெஸ்" என்று கூறிவிட்டாள். அவளும் தான் இருந்த நிலையில், ஒன்றும் கூறாது அதை அணிந்து கொண்டு வந்தாள். பின்னர் நடனப் பயிற்சி தொடர, இம்முறை நக்ஷத்திரா எந்த விதத்திலும் துருவ்வால் சலனம் அடையவில்லை. தான் பயின்றதை, ஒழுங்காக ஞாபகத்தில் கொண்டு வந்து ஆடி முடித்தாள்.



கண்டிப்பாக துருவ் அளவு அவள் ஆடவில்லை, அது இப்போது முடியவும் முடியாது, ஆனால் அவள் அளவில் நன்றாக ஆடினாள். 2-3 நடன ஒத்திகை ஒருவாறு நிறைவு பெற, அந்த பாடலுக்கு ஒழுங்காக நடனம் ஆடினான் என்று எல்லோரும் துருவ்வைப் பாராட்ட, இவளை யாரும் பாராட்டவும் இல்லை, ஆறுதலாக ஒன்றும் கூறவும் இல்லை. தனக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு கதாபாத்திரம் என்று அறிவாள், இருந்தாலும் ஒரேடியாக ஓரங்கட்டப் படுகிறோம் என்று வெளிப்படையாக அவள் உணர்ந்தாள். அதில் வேதனை இல்லாது இல்லை.



சம்பளம் வாங்கிக் கொண்டு செய்யும் வேலை தான், இருந்தாலும் அதில் உற்சாகம் கொள்ள ஒரு சின்னப் பாராட்டு வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பே. கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு, யாரையும் மதிக்காது முக்கியமாகப் பெண்களை ஒரு பொருட்டென்று கருதாது, திமிர் பிடித்து அலையும் துருவ் சென்று கொண்டிருந்த விலையுயர்ந்த கார் செல்லும் திசையைப் பார்த்து கொண்டிருந்தவள்



'இன்னும் 3.5 வாரம், அப்பறம் இனி இவன் மூஞ்சிய பாக்கவே கூடாது, ஜென்மத்துக்கும்' என்று நினைத்து கொண்டவளுக்குத் தெரியவில்லை, அவள் விதியை, அவன் இனி நிர்ணயிக்க போகிறான் என்பது. அதே விதி அவனையும் புரட்டிப் போட்டு தாக்கப் போகிறது என்பதும் விதியே! அப்போது இவளே அவ்விதி ஆகப்போகிறாள்.



**********

கடுமையான நடன ஒத்திகையின் பலன், அவளது முதல் முழுமையான நடனக் காட்சி நல்லவிதமாக படம் பிடிக்கப்பட்டது. அதிகமுறை டேக் வாங்காது செய்ததே பெரிய சாதனை போல் அவள் உணர்ந்தாள். அடுத்து அவளுக்கு ஒரு சண்டை காட்சியில் இடம் பெற வேண்டி இருந்தது.



நடன ஒத்திகை போல், இதற்கும் ஒத்திகை உண்டு, படப்பிடிப்பு போது. அடியாட்கள், நாயகன் அடித்தால் பறக்கும் காட்சிகள், குப்புற விழும் காட்சிகள் எவ்வாறு எடுக்கின்றனர் என்று நக்ஷத்திரா பார்த்துக் கொண்டிருந்தாள். ஆட்கள், புவியீர்ப்பு விசை மீறிப் பறக்க, அவர்கள் இடுப்பில் ஒரு பெல்ட் போன்ற சாதனத்தைக் கட்டிவிட்டு, அந்த பெல்டில் நல்ல ஸ்திரமான கயிறு அல்லது கம்பிகளை கட்டி, பொம்மலாட்ட பொம்மைகள் போல், அவர்களை இயக்குவார்கள்.



அது போல், நாயகனுக்கு 'சிங்கிள் பேக்கோ' அல்லது 'சிங்கிள் செப்போ' இருந்தாலும் அவனை வீர, தீர, அசகாய சூரன் என்று காண்பிக்க அவன், சில பீம் பாய்சை அடிக்கும் போது, அந்த புஜபராக்கிரமசாலி பீம் பாய்ஸ் தலைக் குப்புற விழ வேண்டும் என்பது ஒரு எழுத படா விதி. முதற் கண், இருவர் அடித்து கொள்ள வேண்டும் என்றால் , அவர்கள் இருவர் இடையே உள்ள தூரம் ஒரு கை தூரமாக இருக்கவேண்டும். அதாவது பள்ளி அஸ்ஸெம்பலி நடக்கும் போது, பிள்ளைகள் 'ஒன் ஆர்ம் டிஸ்டன்ஸ்' என்று கையை நிமிர்த்தி, தன் முன் இருக்கும் பிள்ளையின் தோள் மீது வைக்கும் தூரம், அதில் தான் இருவரும் நிற்க வேண்டும்.



அப்போது அடிக்க ஒருவன் கை தூக்கினான் என்றால், அவன் கை எதிரில் இருப்பவன் முகம் பக்கம் வரும் போது, எதிராளி சரியாக அதே நேரம் முகத்தை திருப்பிக் கொள்வான். அப்படி திருப்பி கொள்ளும் போது, அவன் அடி பட்டு முகம் திரும்பினான் என்று எண்ணும் படி அமையும். உண்மையில் யாரும் யாரையும் அடிக்க மாட்டார்கள் என்பதை விட, யாரும் யாரையும் அடிக்க கூடாது, அது தான் சரி.



சினிமா என்பது பல மாயாஜால வித்தைகள் நிரம்பிய தொகுப்பு. சோக காட்சியில் பிழிய பிழிய அழ க்ளிசரின், சண்டை காட்சியில் அடிபட்டது போல் தென்பட, அதற்கேற்ப உடல் அசைவு என்று இருந்தாலும் முக்கியமான காட்சியான மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் காதல் காட்சிகளில் நிஜமாகவே ஒழுங்காக நடிக்க வேண்டும். அதை எப்படிச் செய்வது, முக்கியமாக துருவ்வுடனான காதல் காட்சியில் எவ்வாறு நடிப்பது என்று யோசித்து கொண்டே நக்ஷத்திரா ஒரு சிறிய சண்டைக் காட்சியில் நடிக்க களம் இறங்கினாள்.



கதை படி, ஒரு ரவுடி அவளைத் தொந்திரவு செய்ய, அவள் அவனை செருப்பால் அடிப்பது போன்றது. அதற்கு எதிராளி இடம் இருந்து, தகுந்த இடைவெளியில் நின்று கொண்டாள்,. முகத்தில் ஆவேசம் இருக்க வேண்டும், ஆனால் உணர்ச்சி வசப்பட்டு அடிக்கக் கூடாது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டே தயாரானாள்.



'ஷாட் ரெடி', 'ரெடி டேக்' , 'காமெரா','ஆக்ஷன்' என்று காட்சி படமாக்கப்பட, நக்ஷத்திரா அடிக்கும் இடமும் வந்தது. காட்சியில் ஒன்றியது மட்டுமில்லாது, இயக்குநர் அருகே குளிர் கண்ணாடி அணிந்து, அவளை இளக்காரமாக, உதட்டை வளைத்து(அவளை பொறுத்தவரை) பார்த்துக் கொண்டிருந்த துருவ்வைக் கண்டவளுக்கு அந்நேரத்தில் எந்த வெறி வந்து ஆட்கொண்டதோ, ரவுடியாக நடித்த துணை நடிகரைச் செருப்பினால் ஓங்கி அறைந்து விட்டாள்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று அவளுக்கு கூர்மையான குதிகால் வைத்த காலணிகள் வேறு கொடுக்கப்பட்டு இருக்க, ஹீல்ஸின் தடம் அவர் முகத்தில் பதியுமாறு அறைந்து விட, எதிராளி முகத்தில் சிறிதளவு ரத்தம் வேறு வந்துவிட்டது. அதிர்ச்சியில் அவள் தன் கரங்களை வைத்து வாயில் பொத்திக் கொள்ள, 'ஷாட் கட்' என்று இயக்குனர் கூக்குரல் இடவும் சரியாக இருந்தது. இயக்குனர், துருவ் என்று இன்னும் சிலர் அந்தத் துணை நடிகர் அருகே ஓடிவர, நக்ஷத்திரா பதறியவள்,



"சாரி சார்! வெரி சாரி" என்று இறஞ்சினாள். அவருக்கோ வலி வேறு, சத்தியமாக



'பரவாயில்லை' என்று பெருந்தன்மையாகச் சொல்ல முடியவில்லை. வலியில் கோபமாக முறைத்தார். இயக்குனர் வந்து, காயத்தை ஆராய்ந்தவர்



"வேலு! போய் மருந்து போட்டுக்கே" என்று அக்கறையாகச் சொல்லவிட்டு



"ஏம்மா! இதென்ன நிஜமா? நடிக்கணும். அடிக்கற மாறி நடிக்கணும். நடிப்பு என்ன அவ்வளவு சுளுவான வேலையா? நடிக்கணும், ஆனா நிஜமா செய்ய கூடாது. உனக்கு யாராச்சும் அடிச்சு பார்க்கணும்னு ஆசை இருந்தா, தில்லா ஒரு ரவுடியை போய் அடிச்சு பாரு! உன்னால ஷாட் கண்டின்யுட்டி போச்சு!" என்று ஏக வசனத்தில் திட்டிவிட, அவள் முகம் கூம்பி போனது.



எல்லோர் முன்னால் இப்படி திட்டு வாங்குவாள் என்று அவள் நினைக்கவில்லை, எல்லாம் அந்த துருவ் கடங்காரனால் வந்தது. உதட்டை இளக்காரமாக மட்டுமா வளைத்தான், குவித்து பறக்கும் முத்தமொன்றைக் கொடுக்கவும் செய்தானே!



'ராஸ்கல், ப்ள**** ******' என்று ஆங்கிலத்தில் அவள் அறிந்த மோசமான வார்தைகளினால் அவனை அர்சிக்க, துருவ் அவளையே பார்த்து கொண்டிருந்தான், இன்னும் கேலியாக. அவள் அருகில் வந்தவன்,



"நெஸ்ட் டைம், லாங் டிஸ்டன்ஸ் கிஸ் கிடையாது, கண்டிப்பா உன் பக்கத்துல வந்து….." என்று அவள் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தவன்,



"லவ்லி லிப்ஸ்! " என்று அவனது மூச்சுக்காற்று அவள் கன்னத்தில் உரச, மெலிதாக அவனது தடித்த இதழ்கள் அவளது செவி மடலைத் தீண்டுமாறு உரைத்துவிட்டுச் சென்று விட்டான். அந்த மெல்லிய தீண்டலே, அவளுக்கு தீ பரவிய மூங்கில் காட்டில் இருப்பது தோன்றியது. அவன் மீது கோபம், அதை காட்ட இயலாது வெறும் கோபப்பார்வை கொண்டு அவனை எரிக்க முயன்றாள். அந்தோ பரிதாபம்! அவள் முக்கண்ணனின் சரி பாதி அல்லவே!



***********



ஒருவாறு அவள் அன்று சொதப்பிய காட்சி, மறுமுறை எடுக்கப்பட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்தது. இம்முறை காட்சியில் அவள் துருவ்விடம் கெஞ்ச வேண்டும், தன்னை ஒன்றும் செய்யாதே என்று.



"ப்ளீஸ் என்னை ஒன்னும் செய்யாதே...விட்டுடு" என்று கண்ணீர் மல்க இறைஞ்ச, அவனோ அதை கண்டு கொள்ளது அவளை நோக்கி முன்னேறினான்.





அவள் கால்கள் பின்னோக்கிச் செல்ல, அவன் மேலும் முன்னேற, ஒரு கட்டத்தில் அவளது முதுகு ஒரு சுவற்றின் மீது மோதியது. அவள் அணிந்திருந்த ரவிக்கை படாத பகுதி மீது அந்தக் குளிர்ந்த சுவர் தீண்டி அவளுள் ஒருவித நடுக்கத்தை உருவாக்கியது. இதற்கு மேல் அவளால் எங்கும் தப்பிக்க முடியாத நிலை, திடமாக அவனை எதிர்கொள்ள வேண்டும், காட்சி படி.



அவளும் அதைச் சரியாக செய்தாள். அடுத்து அவளால் ஒன்றும் இயலாது போக, அவனை எதிர்க்க வேண்டும், அவனை அறைய வேண்டும். இருவரும் சரியான இடைவெளியில் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டாள். அவள் பார்வைக்கு, அவள் சரியாக தான் இருந்தாள். கையை ஓங்கி அறைய முற்பட, கை அவனது கன்னத்தை நிஜத்தில் தீண்ட கூடாது, ஆனால் நிழலில் தீண்டுவது போல் இருக்க வேண்டும். அதை 2 முறை ஒத்திகை பார்த்துக்கொண்டு தான் வந்து இருக்கின்றனர்.



ஒத்திகைச் சரியாக செய்த திருப்தியில், அவள் கை அவன் கன்னத்தைத் தீண்டும் தூரம் எட்ட, அவன் சரியாக முகத்தை திருப்புவதற்குள் அது நிகழ்ந்தது. அவளது கூரிய நகம் அவன் மேல் கன்னத்தில் இருந்து மீசைக்கு மேற்புறம் வரை ஒரு கோட்டைக் கிழிக்க



"பேக் அப்" என்று ஆங்காரமாக ஒரு குரல் ஒலித்தது.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 6


"ஏம்மா என்ன செய்யுது" என்று ஆதுரமாக விசாரித்தாள் நக்ஷத்திரா. பார்வதிக்கு இப்போதெல்லாம் அடிக்கடி உடல் நிலை சரியாக இருப்பதில்லை. முன் போல், படப்பிடிப்பு தளத்திற்கு அடிக்கடி வருவது இல்லை.


வளர்த்தப் பாசத்தில் கரைந்த பார்வதி,


"ஒன்னும் இல்ல கண்ணு! வயசாகிடிச்சு. அவ்வளவு தான்" என்று அவர் தன் உடல்நிலையை மறைத்துக் கூற, அதை கண்டுகொண்ட நக்ஷத்திரா


"மாஸ்டர் ஹெல்த் செக் அப் பண்ணி கண்டு பிடிப்பேன், உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு?" என்று செல்லமாக மிரட்டிவிட்டு படப்பிடிப்பிற்குத் தயாரானாள். அவளுக்கு மனதே இல்லை, இன்று படப்பிடிப்பு செல்ல. ஏதோ தகாத ஒன்று அவளுக்கோ, அல்லது பார்வதிக்கோ நடக்கப் போகிறதோ என்ற ஐயம் பரவ ஆரம்பித்தது.


"தனியா இருப்பீங்களா?" என்று பல முறை கேட்டு இருப்பாள்.


"ஒன்னும் இல்ல, நீ கிளம்பு, பக்கத்து வீட்டில் இருக்காங்க. நான் சமாளிப்பேன்" என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார். வெளியே வாடகை ஆட்டோவிற்குக் காத்திருக்கும் போது, சரியாக ரஞ்சனும் வந்தான்.


'இவனோட ஒரே தொல்லை!' என்று மனதில் அவனைத் தாளித்தவள், காரை நிறுத்திவிட்டு அவளிடம் வந்த ரஞ்சனிடம்


"சும்மா என் பின்னாலே வந்து டைம் வேஸ்ட் பண்ணாதே!" என்று பொரிய ஆரம்பிக்க, ரஞ்சன்


"நக்ஷி! கூல் பேபி!" என்று கைகள் இரண்டையும் உயர்த்திக் கொண்டு அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.


"சீ! போடா" என்று அவள் சீற, ரஞ்சனுக்கு அவளது சொற்கள் கடுமையாக தான் இருந்தது, ஆயினும் பொறுத்துக் கொண்டான். ஏனென்றால் தவறு அவனுடையது.


அன்று துருவ் சிறிதளவு மது அருந்தலாம் என்று கூறிய உடன், இவன் சென்றது தவறு. ஒரு பெண்ணை தன் பாதுகாப்பில் வீட்டில் விட வேண்டும் என்னும் போது, அது மது அருந்த சரியான நேரமில்லை. அளவுக்கு அதிகமாக அருந்தியது இன்னும் பிழை. இத்தனைக்கும் துருவ் அளவாக தான் அருந்தினான்.


அடுத்த நாள் எழுந்தவன், போதை தெளிந்த நிலையில் முன்தினம் நடந்ததை ஞாபகப்படுத்த முயன்றான். எல்லாம் ஒரே மேகமூட்டமாக நினைவுகள். அவன் நக்ஷத்திரா மீது வாந்தி எடுத்தது போன்ற நினைவுகள் திரும்ப,


"ஹோலி ****!" என்று அதிர்ந்தவன், உடனே அவளுக்கு அழைத்தான். அவள் எடுக்கவேயில்லை. கண்டிப்பாக மாட்டாள் என்று எதிர்பார்த்தால். ஏனென்றால் அவன் தெரிந்த நக்ஷத்திரா, எளிதில் மன்னிக்க மாட்டாள். அவளுக்குக் கோபம் சற்று அதிகமாக வரும். நல்லவள், நேர்மையானவள், தைரியமானவள், அதே நேரம் ஆண்கள் என்றால் அவளது எதிர்பார்ப்புகள் சற்று அதிகமோ என்று தோன்றினாலும், ஏதோ விதத்தில் ஆண்களால் பாதிக்கப்பட்டவள் என்ற ஐயம் அவனுக்கு உண்டு. அம்மா மட்டுமே, தந்தையைப் பற்றி அவள் பேசி கேட்டதில்லை. ஒருவேளை அது தான் காரணம் என்ற ஊகம் அவனுக்கு உண்டு.



மன்னிப்பு வேண்டி அவன் அனுப்பிய பூங்கொத்து, சாக்லேட்ஸ் எல்லாம் அவள் கடாசி விட்டு எறிந்தது எல்லாம் வேறு கதை. 2/3 நாள் கழித்து போனால், அம்மணி சற்று சாந்தசொரூபி ஆகி இருக்கலாம் என்ற ஊகத்தில் வந்தவனுக்கு அவள் எவரெஸ்ட் மலையை விட ஒரு சாண் உயரத்தில் இருக்கும் அவளது கோப மலையில் இருந்து இறங்காது இருப்பது சற்று சலிப்பை தந்தது.



"எத்தனை நாள் இப்படி கோபமா இருக்க போறே! கொஞ்சம் மலை இறங்கு தாயே! இல்ல பூசாரி கூப்பிடனுமா!" என்று விளையாட்டாகப் பேச்சை திசைத் திருப்ப முயல, அவளோ


"நான் உன்னை இங்க வான்னு சொன்னேன்னா ! இல்ல ஃபிளவர்ஸ், சாக்லேட்ஸ் அனுப்புன்னு சொன்னேன்னா! ஜஸ்ட் கெட் லாஸ்ட் யூ மோரான்!" என்று திட்டி தீர்க்க, ரஞ்சனும் கடுப்பானான்.


"வாச் யூர் வேர்ட்ஸ் லேடி! உன் பிரச்சினை உன் வாய் தான். என்னிக்காச்சும் உன் வாயால தான் கெட போறே! " என்று அவனும் பேச, நக்ஷத்திரா


"ஷட் அப் ரஞ்சன்! உன் உபதேசம் ஒன்னும் தேவையில்லை. உன் வேலையை பாரு! உன்னை இந்த ஜென்மத்தில் எனக்கு பார்க்க வேண்டாம்" என்று அவனை நோக்கடித்தாள்.


"என்னடி பிரச்சினை உனக்கு. எஸ் தப்பு பண்ணினேன்! என்னோட தப்பு தான். குடிச்சு இருக்க கூடாது. என்னால இப்ப அதை மாத்த முடியாது. ஆனா மன்னிப்பு கேக்கறவனை இப்படி இன்சல்ட் செய்யறது சரி இல்ல. இதான் உனக்கு சொல்லி கொடுத்து இருக்காங்களா!" என்று அவனும் சாடினான். இருவரும் அவள் வீட்டு வாயிலில் வைத்து தர்க்கம் செய்து கொண்டு இருக்க, அப்போது அவள் வாடகைக்கு ஏற்பாடு செய்திருந்த ஆட்டோவின் ஓட்டுநர்


"இன்னாமே! படா ட்ராப்பிக்கா இக்கிது. வேற சவாரி பாத்துக்கே" என்று கை கழுவி விட, நக்ஷத்திரா படப்பிடிப்பிற்குத் தாமதம் ஆகிவிடும் என்ற நெருக்கடியில்


"எனக்கு உன் கூட சண்டை போட டைம் இல்ல, ஏதாச்சும் உபயோகமா போயி செய்யி!" என்று அங்கிருந்து வேறு ஆட்டோ பிடிக்கச் செல்ல எத்தனிக்க, பார்வதியும் கீழே வந்தாள். இவர்கள் இருவரும் ஏதோ விவாதம் செய்வதை மாடியில் இருந்து பார்த்து கொண்டிருந்தார். அதன் விளைவு,


"என்னடி பிரச்சினை உனக்கு?" என்று அவளைச் சாட, நக்ஷத்திரா


"நான் ஷூட்டிங்க்கு கிளம்பறேன். இவன் தான் என்னை தேவையில்லாம ஃபாலோ செஞ்சுக்கிட்டு இருக்கான்" என்று ரஞ்சனைக் கோர்த்து விட, ரஞ்சனும் காண்டில்


"உங்க பொண்ணுக்கு நெனப்பு ஜாஸ்தி, தப்பு பண்ணிட்டேன் ஒத்துக்கறேன். அதுக்கு மன்னிக்கவே மாட்டேன்னு உச்சாணி கொம்பில் உட்கார்ந்து இருக்கா! நக்ஷத்திரா! உன் பேரில் ஸ்டார் இருக்கறனால், நீ ஒன்னும் வானத்தில் மின்னர ஸ்டார் இல்ல, இன்னும் இந்த பூமியில் தான் இருக்கே" என்று ஷொட்டு வைக்க, நக்ஷத்திரா எதிர்த்து பேசுவதற்குள் பார்வதி


"சரி ! தப்பு நடந்து போச்சு விடேன்! பொட்ட பிள்ளைக்கு இவ்வளவு ஆங்காரம் இருக்க கூடாது. தம்பி! அவ தப்பா ஏதாச்சும் பேசி இருந்தா, நான் மன்னிப்பு கேக்கறேன். அவளுக்கு ஷூட்டிங்க்கு டைம் ஆகுது! இன்னொரு நாள் சாவகாசமாக ரெண்டு பேரும் பேசி தீர்த்துக்குங்க" என்று அமைதி புறாவாக மாற, நக்ஷத்திரா


"நீங்க ஒன்னும் மன்னிப்பு கேக்க தேவையில்லை. ஆட்டோகாரன் வரலே! நான் வேற ஆட்டோ தான் பார்க்கணும், வரேன்" என்று சொல்லிவிட்டு கிளம்ப, பார்வதி அவளிடம் கேட்காது


"அவள ஏ வி எம் வரை கொண்டு விட முடியுமா தம்பி!" என்று ரஞ்சனிடம் உதவி கோர, பார்வதியின் இந்த பேச்சில் சென்னை வெயிலை விட, உஷ்ணமான நக்ஷத்திரா


"உங்களுக்கு வேலை இல்லையா! போய் ரெஸ்ட் எடுங்க! என் வேலையை நான் பார்த்துக்கறேன். யார் உதவியும் வேண்டாம்" என்று அவரிடமும் பாரபட்சம் இன்றி கத்தினாள்.


"உன் அம்மா இவங்க! மரியாதை வேணாம்! வந்து ஏறு, காரில் வச்சு என்கிட்ட ஆசை தீர சண்டை போட்டுக்கே" என்று அவளது கைப்பையைப் பிடுங்கியவன், பார்வதியிடம்


"நீங்க கவலைவிடுங்க ஆன்டி! நான் ட்ராப் பண்ணறேன்! எனக்கு அங்க வேலை இருக்கு" என்று சொல்லிவிட்டு காரில் ஏற போக, நக்ஷத்திரா


"ஏம்மா ஏன்!" என்று அவரை கடிந்து கொண்டே சென்றாள். காருக்குள்ளும் முகத்தை தூக்கி தான் வைத்து கொண்டிருந்தாள். அவனை கண்டு கொள்ளாது இருக்க வேண்டும் என்பதற்காகவே அவள், அவனிடம் இருந்து தனது கைப்பையைப் பிடுங்கி, நோண்டி கொண்டிருந்தாள். அவளது கூரிய நகங்கள் அவன் பார்வையில் பட,


"சூர்ப்பனகைக்கு உன்னை மாறி லாங் நெயில்ஸ் இருக்கும் போல" என்று ரஞ்சன் கூற, அவள் கோபத்தில்


"நீ அப்போ என்ன .." என்று பொரிய ஆரம்பிக்க, ரஞ்சன்


"உன்னை ஈஸியா பிரவோக் பண்ண முடியுது. ரொம்ப சென்சிட்டிவ்வா இருக்கே! எப்படி லாயரா ஆக போறே!" என்று நிதானமாக வினவ, அவன் கேட்ட கேள்வியில் இருந்த நியாயத்தில் அவள் பதிலுக்குச் சண்டை போடாது அமைதியாக இருந்தாள்.


"நக்ஷி! என்னை மன்னிக்க சொல்லி இனி கேக்க மாட்டேன். உன் கோபம் நியாயமானதே! ஸோ ஐ வில் வெயிட். பட் அதே நேரம் நீ இப்படி சென்சிடிவா இருக்காதே..நல்லது இல்ல. சொல்லணும்னு தோணுது சொல்லறேன்..வேணும்னா எடுத்துக்கே இல்ல.." என்று கூறிவிட்டான்.


"ம்ம்..யூ ஆர் ரைட். நான் கொஞ்சம் சென்சிட்டிவ்..இட்ஸ் பிகாஸ்...லீவ் இட். கண்டிப்பா என்னை மாத்த முயற்சி செய்யறேன்" என்று தணிந்து ஒலித்தது அவள் குரல். ஒரு கையில் ஓட்டும் சக்கரத்தைப் பிடித்து கொண்டே, அவன் மறுகையால் அவள் கரத்தைப் பிடித்து கொண்டான்.


"நீ நல்லவ நக்ஷி! நீ கோபப்பட்டாலும், ஐ லைக் யூ" என்று கூறியும் விட்டான்.


"என்ன ஃபிளர்ட் பண்ணறியா!" என்று அவள் சற்று குறும்புடன் கேட்க, அவன் சிரித்தபடி


"வாவ்! கொஞ்சம் பல்ப் எரியுது" என்று அவளிடம் இருந்து செல்ல மொத்துக்கள் வாங்கி கொண்டான். இலகுவாக பேச்சுக்கள் தொடர, ஏ வி எம் ஸ்டுடியோவும் வந்தது.



"சரி! டேக் கேர், ஸீ யூ" என்று அவன் அவள், கைகுலுக்கி விடை பெறும் போது, அவள் நகம் சற்று கீறிவிட்டது.


"ஆ! நீ இந்த படத்தில் என்ன பேயா நடிக்கிறியா! எவ்வளவு ஷார்ப்..சரியான சூர்ப்பனகை தான்" என்று சொல்லி கொண்டே இருக்கும் போது, துருவ் அங்கே நுழைந்தான். காவியங்களில் ராவணன் நடக்கும் போது, அவனது உடல் வலிமையால் பூமி அதிர்ந்து போனது என்று எப்போதோ நக்ஷத்திராவிற்கு படித்த ஞாபகம்.


'அது எப்படி பூமி அதிரும், ராவணன் என்ன டெக்ட்டோனிக் பிளேட்ஸ் மூவ் பண்ணினானா?' என்று எள்ளி இருந்து இருக்கிறாள். இந்த டெக்ட்டோனிக் தகடுகள் பூமியின் அடியில் இருக்கும் தகடுகள். தேசங்கள் உருமாற காரணமாக இருக்கும் இந்த தகடுகள் நகர்ந்தால் பூகம்பம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். ஆனால் இன்று அந்த ஆழ் பூமி தகடுகள் நகரும் சம்பவம் உண்மையோ என்று எண்ணும் அளவு அவன் நடை இருப்பது போல் தோன்றியது. 6 அடிக்கு சற்று அதிகமான அவனது உயரம், அதற்கு ஏற்றாற்போல்..ம்ஹூம்..அதற்கு அதிகமான அளவில் அவனது உடல் ஆகிருத்தி இருக்க,


'ஒத்த தலை ராவணன்' என்று நெற்றியில் விரலை வைத்து தேய்த்து கொண்டு முனங்கியவள்,


"நான் வரேன் ரஞ்சன்" என்று அங்கிருந்து சென்று விட்டாள். ஏனென்றால் துருவ் அவர்கள் புறம் நடந்து வந்து


"ஹேய் ரஞ்சன்! ஹவ் ஆர் யூ?" என்று குசலம் விசாரிக்க ஆரம்பித்தான்.


நக்ஷத்திரா தன்னை கண்ட உடன் மரியாதை நிமித்தம் கூட நிற்காது சென்றதைப் பார்த்துவிட்டான்.


'மேனேர் லெஸ் கேர்ள்' என்று கோபப்பட்டான்.


"குட் சார்" என்று ரஞ்சன் சிறிது நேரம் பேசிவிட்டு, விடைபெற்றுக் கொண்டான். ஒப்பனை நேரம் முடிவடைய, கடைசி நிமிட ஒப்பனையான டச் அப் - ஐ துருவ் மேற்கொண்டு இருந்தான். அவன் முன் கண்ணாடி நீட்டப்பட, அவனே ஒரு பஞ்சை வைத்து முகத்தை சீர் செய்து கொண்டிருந்தான்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதே நேரம் ரஞ்சன், ஒரு கைப்பையுடன் அங்கு மீண்டும் வருகை தந்தான். நேரே நக்ஷத்திரா இருக்கும் அறை வாயிலை தட்டிவிட்டு அதைக் கொடுக்க, அவள் வெளியே வந்து வாங்கும் போது, ஏதோ தடுக்கி அவன் மீதே விழ போக, ரஞ்சன் அவளைத் தாங்கிக் கொண்டான்.


"சாரி" என்று அவள் மன்னிப்பு வேண்டியது,


"இட்ஸ் ஒகே! ஆர் யூ ஒகே?" என்று அவன் கேட்டது எல்லாம் அவர்கள் எதிரில் டச் அப் செய்து கொண்டிருந்த துருவ்விற்கு அவர்கள் வாயசைப்பில் இருந்து புரியாது இல்லை. ரஞ்சன் கண்ணில், அவள் பால் க்யூவிண்டால் கணக்கில் வழிந்து கொண்டிருந்த காதலும், அவள் கண்ணில் ஒரு மில்லி கிராம் அளவு கூட வழியாத காதலும் அவன் கண்ணில் படாது இல்லை. அதில் ஏனோ, அவனுக்கு ஒரு புறம் நிம்மதி தான்.



'அவளை பற்றி உனக்கென்னடா' என்று காறித் துப்பிய மனசாட்சியிடம்


'அவளுக்கு படிக்கணும். ஸோ நோ லவ் நவ்' என்று அவளது காட் பாதர் ரேஞ்சிற்கு மூளை சமாதான உடன்படிக்கை வேறு மேற்கொண்டது.


ஒரு வழியாக காட்சிப் படப்பிடிப்பு ஆரம்பித்தது. அது ஒரு சண்டை காட்சி. கதை படி, துருவ் ஒரு காவல் அதிகாரி, ரவுடி வேடத்தில் இருக்கும் காவல் அதிகாரி. நக்ஷத்திரா ஒரு கல்லூரி மாணவி. அவள் படிக்கும் கல்லூரியில் இளம் பெண்கள் காணாமல் செல்கிறார்கள், சில நாள் கழித்து அவர்கள் இறந்த உடல் கிடைக்கிறது. இதை கண்டறிய துருவ் ரவுடி வேடத்தில் வருகிறான். இந்த கதையைக் கேட்ட நக்ஷத்திரா முதலில்


'பொறுக்கிக்கு திவ்யமா என்ன ஒரு ரோல்' என்று அவனை மனதில் வறுத்தெடுத்தாள். கதைப்படி நக்ஷத்திராவும் கடத்தப்படுகிறாள். அவளை கடத்தும் ரவுடி கும்பலில் தான், துருவ் இருக்கிறான். மற்ற ரவுடிகளை அவன் அடித்து விளாசும் காட்சி முதலில் எடுத்தனர். துருவ் அடிக்க ஒரு சண்டை காட்சி நிபுணர், வானில் ஒரு குட்டிகரணம் போட்டு நிலத்தில் விழும் காட்சி, அவனது ஒரு குத்தில் மற்றோருவன் ஆகாயத்தில் பறந்து சென்று, ஒரு இயந்திரத்தின் மீது விழும் காட்சி என்று பல காட்சிகள் அதிகம் டேக் வாங்காது அவன் செய்து முடித்து இருந்தான்.


துருவ் அடித்து, சண்டை காட்சி நிபுணர் கீழே விழும் காட்சிகளில் நல்ல குஷன் அடங்கிய மெத்தை கீழே விரிக்கப்பட்டு இருந்தது. அதில் விழுந்தால் தான் அவர் முதுகுத்தண்டு தப்பித்தது, இல்லை என்றால் ஆள் செயல் இழந்து போய் விடுவார். இதை எல்லாம் நக்ஷத்திரா கவனித்து கொண்டிருந்தாள். பழைய படங்கள் போல் அல்லாது, புதிய படங்களில் சண்டைக் காட்சிகளில் அதிகளவு புது புது யுக்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.


அடுத்த ஒரு காட்சிக்கு 360° அதாவது வட்ட வடிவாக பல்வேறு காமிராக்கள் பொருத்தப்பட்டன. அதாவது அந்த காட்சியை வட்ட கோணத்தில் படம் பிடித்து, தொகுப்பு செய்யும் போது, படமாக்கப்பட ஒரு நொடிக் காட்சி அப்படியே ஸ்தம்பித்து நிற்பது போல், அதாவது 'ப்ரீஸ்' செய்தது போல் செய்வர். முக்கியமாக அந்த ஒரு நொடி காட்சி, ஸ்லோ மோஷனில் இருப்பது போல் இருக்கும். இதை டைம் ஸ்லைஸிங்(time slicing) என்று கூறுவர். ஆங்கில படங்களில் இந்த யுக்தி மேட்ரிக்ஸ் எனும் படத்தில் மூலம் வெகு பிரபலம்.


இப்போது பல்வேறு படங்களில் இதை செய்து வருகின்றனர், பாடல் காட்சிகளில் கூட வருகிறது. சண்டை காட்சியில், அதன் உக்கிரத்தைக் காண்பிக்க இது உதவுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இம்மாதிரி படங்கள் எடுக்கப்படும் போது, தொகுப்புவேலை மிகவும் முக்கியமானது மட்டுமல்ல, அதிக நேரமும் எடுக்கும்.


இதை எல்லாம் ஒளிப்பதிவாளர் இடம் பேச்சுக் கொடுத்து கேட்டறிந்து கொண்டாள், நக்ஷத்திரா


"ஸோ, ஒரு சோதா, சாதா மேனை சூப்பர் மேன் ஆக்கிடுவீங்க, இந்த எடிட்டிங் இல், அப்படி தானே" என்று ஏனோ குதர்க்கம் தழுவ அவள் கேள்வி இருக்க, ஒளிப்பதிவாளர்


"அதில் என்ன தப்பு! டிக்கெட் வாங்கி படம் பாக்கிறவன் சந்தோஷமா இருக்கணும், அதுக்கு எதுவும் தப்பில்லை. 2.5 மணி நேரம், அவன் தன் பிரச்சினை மறந்து இருக்கணும் . இது தான் பொழுதுபோக்கு தொழில்" என்று அவளுக்கு சரியானப் பதிலை வழங்க, அவள்


"அதுக்காக இப்படியா" என்று குறை படுவதை நிறுத்தவில்லை.


"நக்ஷத்திரா! இதில் யாருக்கு என்ன பாதிப்பு சொல்லு! குழந்தைகளுக்கு இந்த மாறி ஸ்டண்ட் ட்ரை பண்ணாதீங்கன்னு அட்வைசரி போட்டு தானே படம் போடறோம். மீறி செஞ்சா என்ன பண்ண முடியும்." என்று வாதிட, அவள்


"அதை முடிஞ்சா இன்னும் பெரிய எழுத்துக்களில் போடுங்க" என்று வாக்குவாதத்தை முடித்தாள். உண்மை தானே! சிகரெட் டப்பாவாவில் புகைப்பிடிக்கக் கூடாது என்ற அறிவுரை பூதக் கண்ணாடி வைத்து பார்க்கும் படி தானே, எழுத்துகளைப் பொறிக்கிறார்கள். அது போல் தானே இந்த அறிவிப்பும், சிறு எழுத்துக்களில் தான் போடுகிறார்கள். அந்தக் குறை தான் அவளுக்கு. புது தொழில்நுட்பத்தின் மீது கோபம் இல்லை.


ஏற்கனவே முன்தினம் சில சண்டை காட்சிகள் எடுத்து இருந்ததால், இன்று குறைந்தளவே காட்சிகள் இருந்தன. அதுவும் கடகடவென்று முடிந்தும் விட்டன. அந்த டைம் ஸ்லைஸிங் காட்சி முடிந்து, துருவ் மற்றும் நக்ஷத்திரா சம்பந்த காட்சிகள்.


அவளை கட்டி வைத்து இருப்பார்கள், ஆனால் அவள் எப்படியோ கட்டுகளை அவிழ்த்து இருந்து இருப்பாள், அவளை அடைத்து வைத்திருக்கும் அறைக்குள் துருவ் நுழைய வேண்டும். அவள், துருவ் தன்னை ஏதேனும் செய்து விடுவான் என்று எண்ணி அஞ்ச வேண்டும். பின்னாடி சென்று கொண்டே, ஒரு கட்டத்தில் அவளால் அங்கிருந்து நகர முடியாத நிலை வரும் போது, அவனை அவள் அறைய கை தூக்க வேண்டும்.


எல்லாம் திட்டமிட்ட படி தான் நடந்தது. ஆனால் எதிர்பாராதது, அவள் அவனை பிராண்டிவிட்டது தான். யார் தவறு என்று வரையறுத்து கூற முடியவில்லை. அவன் சற்று முன்னே வந்தானா, இல்லை அவள் கையை தவறாக கொஞ்சம் அதிகம் நீட்டி விட்டாளா! ஆனால் முடிவோ


'பேக் அப்' என்பது தான். அதுவும் படத்தின் நாயகன் பேக் அப் என்று சொன்னால், அது பெரிய விஷயம் என்று பொருள். அவள் இட்ட கீறல், அவன் கன்னத்தில் நன்றாகவே பதிந்து இருந்தது. நெருப்பு ஜ்வாலையைக் கக்கும் போல் அவனது கனல் பார்வை, அதில் அவளது சர்வமும் ஒடுங்கியது.


அவன் கோப நடையில் நிலம் இன்னும் அதிருவது போல் அவள் உணர்ந்தாள். தவறு அவளுடையது! அதை உணர்ந்து, அவள் அவன் பின்னே சென்றாள், மன்னிப்பு கேட்க.


"துருவ்..ப்ளீஸ்! அம் சாரி, வேணுன்னு பண்ணலே, வெரி சாரி" என்று அவள் மன்றாடியது காற்றில் கரைய, துருவ் தனது காரவானில் புகுந்து கொண்டான். நக்ஷத்திரா என்ன செய்வது என்று அறியாது அவன் காரவான் வெளியே கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.


சூர்யா காரவான் வெளியே வந்தவன், இவளைக் கண்டு கொள்ளது, துருவ்விற்கு மருந்து எடுத்துக் கொண்டு வர செல்ல, இயக்குனர் தைரியமாக அவன் காராவனுக்குள் புகுந்தார். இடையே சூர்யாவும் மருந்துடன் உள்ளே செல்ல, இவளோ எப்படி உள்ளே செல்வது என்று தெரியாது விழி பிதுங்கி நின்றாள்.


சிறிது நேரம் கழித்து, சூர்யாவும் இயக்குனரும் வெளியே வந்து, அவளிடம் உள்ளே செல்லச் சொல்ல, உலகில் மிக கஷ்டமான காரியத்தை செய்யப் போகும் நிலையில் அவள்.


எவரெஸ்ட் சிகரம் ஏறுவது போல், தடுமாறி தான் அந்த காராவானின் படிக்கட்டில் ஏற ஆரம்பித்தாள். உள்ளே ஒரு படுக்கை அறை, சின்ன சமையல் அறை, ஒப்பனைப் புரிய ஒரு இடம் என்ற காராவானின் நேர்த்தி, அழகு என்றும் எதுவுமே அவள் கண்ணில் படவில்லை.


பிரம்ம ராட்சன் போல் ஒரு நாற்காலியில் கோபத்துடன் உட்கார்ந்து கொண்டிருக்கும் அவனது ரூபம் தான் அவள் கண்ணில் நிறைந்து வழிந்து இருந்தது. அவள் கண்மணி முழுவதும் அவன் பிம்பமே. கொடுமையான வில்லப் பார்வைப் பார்த்து கொண்டிருக்கும் அவனிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று புரியாது இவள் இருக்க, அவனோ கேள்வியாக பார்த்தான் அவளை.


அதாவது 'சொல்ல வந்ததை சொல்லி தொலைடி' என்ற பார்வை அது.



"சாரி.. துருவ்.. சார்..வெரி சாரி..நான் வேணும்ன்னு செய்யல. நிஜமா தெரிஞ்சு செய்யல. வெரி சாரி..மன்னிச்சிருங்க" என்று மனதார மன்னிப்பு வேண்டினாள்.


"ம்ஹூம்.." என்ற ஒற்றை பதிலில் அவளது ரத்த அழுத்தத்தை எகிற வைத்தவன், அவளை நோக்கி வர, இந்த பிரம்ம ராட்சசன் இன்று தன்னைக் கொன்று தான் போடப் போகிறான் என்ற பீதி அவளுள் பரவினாலும், தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். தவறு அவளுடையது என்றாலும், மன்னிப்பு கேட்டாயிற்று, இதற்கு மேல் என்ன செய்வது என்ற இயலாமை தான் அவளிடத்தில். அதே நேரம், கொலை குற்றம் ஒன்றும் தான் செய்யவில்லை என்ற நிமிர்ந்த நேர்கொண்டப் பார்வை அவளுடையது.



அவள் நின்று கொண்டிருந்தது, அந்த காராவானின் சிறிய சமையல் அறை மேடையின் புறம். அவன் நெருங்க நெருங்க, அவள் சற்று பின்னால் செல்ல, ஒரு கட்டத்தில் அந்த சமையல் அறை மேடை மீது மோதியும் கொண்டாள்.


படக்காட்சியில் வந்த அதே போன்ற சூழ்நிலை. என்ன செய்ய போகிறான் என்ற படபடப்பு அதிகமாக, அது அவளது உடல் மொழியில் பிரதிபலித்தது. சற்று மூச்சு முட்ட அவள் நிற்க, ஒரு பிடிமானத்திற்கு மேடையை இறுக்கப் பிடித்து கொண்டாள். அவள் அருகே வந்தவன், தனது கரத்தைக் கொண்டு, அவளிடை தீண்டாது அவளை வளைத்து, அவள் பின்னால் இருந்த மருந்தினை எடுத்தான்.



அவன் செய்கையில் அவள் திடுக்கிட்டாலும், அவன் தீண்டாததால் நிம்மதி அடைந்தாள்.


அவளிடம் அந்த மருந்தினை கொடுத்து,


"போட்டு விடு" என்று ஆணையாக கூறிவிட்டு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். ஏனென்றால் அவன் நின்றால், அவள் குதிகால் செருப்பு அணிந்தால் கூட, அவனது கன்னம் அவளுக்கு எட்டாது. அப்படிப்பட்ட உயர வித்தியாசம் அவர்களுக்குள்.



தவறுக்குப் பிராயச்சித்தம் இது என்று ஏற்றுக் கொண்டவள், மருந்தை பஞ்சினால் எடுத்து மெல்ல அவனை தீண்டாது மிகவும் ஜாக்கிரதையாக இட ஆரம்பித்தாள். முதல் மருந்து தீண்டலில், அவனுக்கு சற்று எரிந்தது போலும்.


'ஸ்ஸ்ஸ்' என்று மெல்ல முனங்கினான். ஆனால் அவள் அதை கண்டுகொள்ளவே இல்லை. மருந்திட்டு விட்டு இங்கிருந்து செல்ல வேண்டும் உடனே என்பதில் குறியாக இருந்தாள். அவளுக்குக் கொடுக்கப்பட்ட பாவாடைச் சட்டை தாவணி உடையில், மருந்திடம் போது அவளது தாவணி சற்று விலக, அன்று காணாதத்தை இன்று துருவ் கண்டு கொண்டான்.



அரக்கு நிற நூலாடை விலகி, பாலாடை நிறத்தில் இருக்கும் அவள் ஆலிலை வயிற்றை அவன் கண்டதை அவளும் பார்த்து விட்டாள். அவன் தன் அழகை, கண்டு ரசிக்கிறான், எப்பேர்ப்பட்ட ஈனச் செயல், முன்பின் தெரியாத, ஒரு பெண்ணின் அழகை ஒரு அந்நிய ஆடவன் இப்படி ரசிப்பது என்று கோபம் கொண்டவள் மருந்தை தூக்கி எறிந்தாள்.


அத்துடன் நிற்காது, அவனை அறைய முயல, அவளது கையை இறுக்கப் பற்றி பின்புறமாக வளைத்து, அவள் காதில்


"உன் சைஸுக்கு இது அதிகம்" என்று தள்ளிவிட்டான். கீழே விழாது தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்,


"சீ! பொறுக்கி! சென்சல்ஸ் மோரான்" என்று கத்த, துருவ் வெகுண்டு எழுந்தான்.



"ஷட் அப்! என் தப்பு இல்ல!உனக்கு ட்ரேஸ் சென்ஸ் இல்ல" என்று அவனும் உறும, நக்ஷத்திரா


"ஸோ! ஸ்டில் பார்த்தது உன் தப்பு! இதெல்லாம் போய் உன்கிட்ட சொல்லறேன் பாரு. எப்போடா..யாராச்சும்...சீ! யூ ஆர் அ ப….." என்று அவள் ஆங்கிலத்தில் தகாத வார்த்தை உபயோகிப்பதற்குள் அவளது தாடை அவன் இடது கையின் பிடியில். அழுந்தப் பற்ற, அவளது வாய் இயங்காது, மெல்லிய முனகல் ஒன்று அவளிடம் இருந்து வெளி வந்தது. அவன் பிடித்த பிடி அவ்வாறு இறுக்கமாக இருந்ததில், கிட்டத்தட்ட முகத்தின் கீழ் பகுதியில் இருக்கும் எலும்பு உடைந்து விடுமோ என்ற நிலை. இத்தனைக்கும் அவன் இடது கையால் தான் அவளைப் பற்றி இருந்தான். வலக்கையில் பிடித்து இருந்தால், அவள் நிலை இன்னும் மோசம்.


தன் கரங்களால் தன்னை விடுவிக்க போராடியதும் ஒன்று தான், போராடாது இருப்பதும் ஒன்று தான் என்று ஆக, அவள் கண்களில் 'விடு என்னை' என்ற பாவம் வர, துருவ் அதனைக் கண்டுகொள்ளாது அவள் முகம் நோக்கி குனிந்தான். இரு ஜோடி இதழ்கள் நடுவே இருக்கும் தூரம், மயிரிழை தூரம் தான். அந்த தூரத்தை அவனால் இப்போதே கடக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாது


"அதிகம் பேசாதே! உடம்புக்கு நல்லது இல்ல" என்று ஆத்திரமாகச் சொல்லிவிட்டு தன் பிடியை விட்டான். முகத்தையும் உடலையும் தனித்தனியாக பிரித்து எடுக்கும் இயந்திரம் ஒன்றில் இருந்து விடுபட்டது போல் அவள் உணர்ந்தாள். இரு கன்னங்களிலும் தன் இரு கை வைத்து வருடி வலியைப் போக்க முயன்றவள்,


"பேசுவேன்! நீ ஒன்னும் யோக்கியன் இல்ல..யூ ஆர் அ ப……." என்று மீண்டும் அதே வார்த்தைகளைச் சொல்ல விழைய அவளது இதழ்கள் அவளுடைய இதழ்கள் அல்லாது போயின. இதழ்கள் நான்கும் இணைய, தன்னால் தடுக்க முடியாத இந்த இதழ் வன்முறையில், கண்ணீராக அவள் உதடுகள் சற்று ரத்தத்தைக் கசிய, இருவரும் வேறு விதமாக ஆரம்பித்த அவர்கள் உறவு, செல்ல கூடாத கோணத்தில் செல்ல, அவள் ரத்தம் ஒரு ஆரம்பப்புள்ளி ஆயிற்று.


நடந்தது அன்று இறைவன் வகுத்த விதி


நடக்கிறது, இன்று அவனது வழியில்


நடக்க போவது, அவள் வழியில்!


வானில் மின்னும் நக்ஷத்திரம் ஒரு ஜிகினா வஸ்து அல்ல


அணுமின் உலை


தீப்பிழம்பு


அணுகினால், எரிந்து சாம்பல் ஆவர்.


ஆனால் நக்ஷத்திரத்தை கொண்ட வான், தீப்பிழம்பை தாங்கிக் கொள்ளும்


தேவைப்பட்டால், நக்ஷத்திரத்தை தன்னுள் அடக்கியும் விடும்.


துருவ் அவனது வானா?


அல்லது அவள் என்ற தீப்பிழம்பில் ஒன்றாகி விடுவானா??
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 7



முத்தத்தின் ஆயுள் மூச்சு உள்ளவரை என்பது போல், அவளுக்கு சுவாசம் முட்ட, அவளை அவன் விடுவித்தான். அதுவரை எந்த மாதிரி போதை உலகில் அவன் இருந்தான் என்று அவனுக்குத் தெரியவில்லை. முத்த போதை விடாது அவளை பார்க்கையில், அவளது சிவந்த அதரங்கள் இன்னும் சிவப்பாக அவனது முத்த வன்முறையில் இருக்க, அதன் மேல் அவளது உதிரச் சொட்டு, பூவின் மீது இருக்கும் பனித்துளி போல் வீற்று இருப்பதை பார்த்தபின் தான், அவன் தனது பலத்தையும், அவள் மீது காட்டிய வீரியத்தையும் உணர்ந்தான்.



அவளது இந்நிலையில், நியாயமாக அவனுக்கு அவன் மீது தான் கோபம் வரவேண்டும். ஆனால் அவள் மீது இருந்த அசாத்தியமானக் கோபத்தில்



"அவுட் ஆப் மை வேன்!" என்று கத்தி விட்டான். அவளது கோபம் இன்னும் குறையவில்லை, அவனிடம் இருந்து தன்னை விடுத்துக் கொள்ள அவள் போராடினாள், ஆனால் அது சிங்கத்திடம் ஒரு சுண்டெலி மோதுவது போல் தான். முடியாத போது, அவன் நெஞ்சில் பிராண்டியும் விட்டாள். அவன் அசரவில்லையே. ஒருகட்டத்தில் அவளுக்குத் தான் காயங்கள் அதிகம் இதில். அப்படியும் தன் பலத்தைத் தோற்க விடக் கூடாது என்று அவனைத் தள்ளி விட்டு பார்த்தாள். எங்கயாவது கிரானைட் சுவரை கையினால் உடைக்க முடியுமா! அது போல் தான் அவளது முயற்சியும்.



அவளும் விடவில்லை

"நீ இதுக்கு நல்ல படுவே!" என்று சூடாகப் பதில் உரைத்து விட்டு தான் சென்றாள். வெளியே எப்படி செல்வாள் இம்மாதிரி. ஒரு நடிகை, ஒரு நடிகருடன் சிரித்து பேசினாலே, வேறு மாதிரி தான் திரையுலகில். விட்டால், அவர்கள் இருவருக்கும் திருமணமே செய்து வைத்து, அவர்கள் பிள்ளைங்களுக்குப் பள்ளியில் இடமும் வாங்கிக் கொடுத்து விடுவர். தலையில் முந்தானையைப் போட்டுக் கொண்டு, வாயை தாவணியால் மூடிக் கொண்டு, நக்ஷத்திரா யார் கண்ணிலும் படாது, கழிப்பறைச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டாள்.



உதடுகள் வீங்கியது போல் இருந்தது, வலி வேறு. இன்று இதற்கு மேல் படப்பிடிப்பு நடக்காது என்று உணர்ந்தவள், அப்படியே கைப்பையை எடுத்துக் கொண்டு வீடு சென்று விட்டாள்.



வீட்டில், பார்வதியின் நிலை மோசமாக இருந்தது. உடனே சற்று பெரிய மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்றாள்.



"ஒரு ஸ்கேன் வேணா செய்யலாம். இவ்வளவு நாள் சரியாகலைன்னா, தென்… வேற ட்ரீட்மெண்ட் தான் செய்யணும்" என்று வைத்தியர் நிதானமாக, நக்ஷத்திராவின் வயிற்றில் புளியை கரைத்தார்.



ஆட்டோவில் வீடு திரும்பும் போது,



"எனக்கு ஒன்னுமில்லே! இந்த ஸ்கேன் எல்லாம் வேணாம், தண்ட செலவு" என்று பார்வதி மறுக்க, நக்ஷத்திரா



"நீங்க 10 ஆம் க்ளாஸ், நான் 12 ஆம் க்ளாஸ். டாக்டர் தான் எம் பி பி எஸ், ஸோ அவர் சொல்லறத தான் கேக்க போறோம்" என்று தீர்க்கமாக உரைத்து விட்டாள். அதற்கு மேல் பார்வதி ஒன்றும் பேச வில்லை. வீடு வந்து, ஏதோ சமையல் என்ற பேரில் நக்ஷத்திரா சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.



இந்த சிறுவயதில் அளவுக்கு அதிகமானப் பொறுப்பை அவளுக்குக் கொடுத்துவிட்டோமோ என்று பார்வதி மனதில் குமைந்தார். எல்லாவற்றையும் விட, மருத்துவர் எதற்கும் ஒரு ஸ்கேன் எடுத்துவிடலாம் என்று வேறு சொன்னது, அவருக்குள் ஒரு கிலியை ஏற்படுத்திவிட்டது.



நக்ஷத்திராவின் பொறுப்போ தீரவில்லையே, நல்லவனாக ஒருவனைக் கண்டு, அவனிடம் இவளை ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவேற, அவருக்கு ரஞ்சன் ஞாபகம் வந்தது, ஆனால் அவனோ பெரும் பணக்காரன், இந்த திரையுலகில் தான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை இல்லை அவனுக்கு.



இவர்களோ, மத்திய தர வகுப்பினர், வீட்டில் ஆண்பிள்ளைகள் இல்லாது, அல்லி ராஜ்ஜியம் தான். எங்கிருந்து அவளும் அவனும்! காதல் வந்தாலும் நிலைக்குமா! இப்படி எல்லாம் யோசித்து கொண்டே தூங்கியும் விட்டார். நக்ஷத்திரா அவரை எழுப்பி உணவளிக்க, அப்போது தான் அவளது உதட்டில் இருக்கும் காய்ந்த ரத்தத்தை பார்வதி கவனித்தார்.



"என்ன ஆச்சு? எப்படி உதட்டில் காயம்?" என்று குறுக்கு விசாரணை செய்ய, நக்ஷத்திரா அதுவரை அந்த உதட்டு காயத்தை பற்றி அவர் கேக்காது பொறுத்து நிம்மதியாக இருந்தவள், இப்போது என்ன சொல்வது என்று சற்று திணறினாள். கூடிய வரை உண்மை மட்டுமே பேசும் பழக்கம் உடையவள் அவள். என்ன பதில் சொல்ல என்று யோசிக்கும் நேரம் கூட இல்லாது போக,



"இன்னிக்கி ஸ்டண்ட் சீன், அதில் எப்படியோ அடி! கொஞ்சம் காலிலும் பட்டு இருக்கு!" என்று தன் இரவு உடையை சற்று நீக்கி காண்பித்து,



"பாருங்க!" என்று அவரது கவனத்தை வாயில் இருந்து காலுக்குத் திருப்பிவிட்டாள். உண்மையில் அவள் காலில் அடி பட்டு தான் இருந்தது. ரத்தமும் கன்னி இருக்க, பார்வதி



"போய் அந்த ஆயின்ட்மெண்ட் எடுத்துக்கிட்டு வா!" என்று பதறி விட்டார், அந்த காயத்தைப் பார்த்து.



"பாவி மனுஷங்க! இப்படியா செய்வாங்க! ஒரு பொண்ணுன்னு அக்கறை வேண்டாமா! இனி என்ன ஆனாலும் உன்கூட ஷூட்டிங் க்கு நான் வருவேன், இந்த மாறி மட்டும் நடக்கட்டும் அப்பறம் பாரு" என்று கோபத்தில் கொந்தளிக்க, நக்ஷத்திரா கண்ணில் நீர் கட்ட ஆரம்பித்தது.



"என் தப்பு தான் அம்மா! நான் தான் கொஞ்சம் கேர்லஸ்ஸா இருந்திட்டேன்" என்று சமாதானம் செய்ய, பார்வதி



"இருந்தாலும்! ஒரு மருந்து கூட கொடுக்க மாட்டாங்களா! இதே ஹீரோக்கு அடிப்பட்டா, ஷூட்டிங் கான்சல் செய்வாங்க! என்னவோ இங்கிலீஸில் சொல்லுவியே...மேல்லு சாணி விஸ்ட்..அதான் அவங்க!" என்று பொரிய, நக்ஷத்திரா அவரது ஆங்கில தடுமாறலில் களுக்கென்று சிரித்து விட்டாள்.



"அது மேல் ஷாவனிஸ்ட்! இன்னிக்கி தான் உண்மையை ஒத்துகிட்டு இருந்து இருக்கீங்க" என்று இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.



பார்வதி உறங்க செல்ல, அவர் மடியில் நக்ஷத்திரா படுத்து கொண்டாள், என்றும் இல்லாது.



ஏதோ மனக்கஷ்டம் அவளுக்கு என்று புரிந்து கொண்ட பார்வதி, அவள் முடியைக் கோதி விட, நக்ஷத்திரா



"இதுக்கு மேல என்னை நடிக்க சொல்லாதீங்க! ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று தன்னிரக்கக் குரலில் கூற, பார்வதி உருகியே விட்டார்.



"வலிக்குதா! செல்லம்?" என்று எப்போதாவது, அதிக பட்ச பாசத்தில் அவர் கூப்பிடும் செல்லம், அவள் காதில் அமுதென பாய, நக்ஷத்திராவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்து விட்டது. அழுதால், நம்பிக்கை குன்றி விடும், வீழ்ந்து விடுவாள் என்று அவளுக்கு நெருங்கிய யாரோ சொல்லி கொடுத்தது ஞாபகம், அழுகையை விஷம் போல் விழுங்கிக் கொண்டாள்.



"சரியாகிடும் அம்மா!" என்று அவரை சமாதானம் செய்து விட்டு தூங்கச் சென்று விட்டாள்.



இங்கே துருவ், அகலமான பெரிய கண்ணாடி முன் அமர்ந்து, கால்களை ராஜ தோரணையில் விரித்து கொண்டு, 8 பேக்குகள் பொருந்திய பலமான தன் வெற்று மார்பில், அவளிட்ட கோட்டை பார்த்து கொண்டிருந்தான். நன்றாக தான் பிராண்டி விட்டிருந்தாள். தேசத் தந்தை சொன்னதைக் கடைபிடிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டவனுக்கு அவள் பயன்படுத்த சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வர, அவள் மீதான கோபம் துளிர் விட்டு, அவனை முழுவதும் விழுங்கி கொண்டது.



அப்போது தான் யோசித்தான், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள் இவள், கான்வென்டில் படித்து இருப்பாளா என்பது சந்தேகம். ஆயினும் ஆங்கிலப் புலமை நன்றாக தான் இருந்தது.



"ஏதாச்சும் சிட்**** இல்ல எம் அண்ட் பி படிச்சு கெட்டு குட்டி சுவரு, அந்த மோகினி பிசாசு" என்று வைதான். இருந்தாலும் அவள் மீது ஒரு ஈர்ப்பு இருக்க தான் செய்தது. அவள் ஏற்படுத்தியக் காயங்களை, ஒருமுறை தடவிப் பார்த்தான்.



'நெஸ்ட் டைம், அவ நகத்தை முதலில் கட் பண்ணனும், முடிஞ்சா நானே அவ கைய பிடிச்சு….' என்று யோசிக்க ஆரம்பித்தவன் எண்ணங்கள் வேறு திசையை நோக்கிச் செல்ல,



'வேண்டாம் துருவ்! அவ உனக்கு சரிப்பட்டு வர மாட்டா! உன்னோட அட்டாச்மெண்ட் வேண்டாத கொள்கைக்கு ஈஷா மாறி பொண்ணுங்க தான் லாயக்கு' என்று அந்த நினைவுகளை அப்புறப்படுத்த, அவன் மனசாட்சி,



'அப்போ ஏண்டா அன்னிக்கி ரஞ்சன் ட்ரிங்க்சில் டோப் கலந்தே?' என்று காறித் துப்ப, மனசாட்சியை அடக்க முடியாது தவித்தான்.



ரஞ்சனை எப்படியாவது இவளிடம் இருந்துப் பிரிக்க வேண்டும் என்று அவன் மூளை திவீரமாக அன்று வேலை செய்தது. நக்ஷத்திரா பற்றி துருவ் ஒன்று அனுமானித்திருந்தான், ஆண்பிள்ளைகளை நண்பனாகக் கூட எளிதில் ஏற்று கொள்ளத் தயக்கம் காட்டுவாள் என்று. அப்படி தப்பித் தவறி ஏற்றுக்கொண்டு விட்டாள் என்று அவனுக்கு அவளிடத்தில் அதிக பட்ச மரியாதை இருக்க வேண்டும் என்பது தான்.



துருவ் அவளிடம் சாதாரண முறையில் பழக விழைந்தான், ரயில் சிநேகம் போல் பட சிநேகம். அந்த அளவாவது அவர்கள் உறவு இருக்க வேண்டும், அப்போது தான் படப்பிடிப்பு எவ்வித குளறுப்படி இல்லாது நடக்கும். அவனது எண்ணங்களுக்கு ஆரம்பித்திலேயே ஆப்பு வைத்து விட்டாளே,நம் பெண்ணரசி.



அதன் விளைவு, அவளைச் சீண்டி, அதிர வைத்துப் பார்க்க வேண்டும் என்ற விஷ விதை அவனுள் விதைந்து விட்டது. அவனாக நிறுத்த வேண்டும் என்று நினைத்தாலும், அவள் விடுவதில்லை. அதுவும் இனி வரும் காலங்களில் அவனது உக்கிரம் அதிகமாகத் தான் இருக்கப் போகிறது, அவளும் அதற்கு குறைவில்லாது நடக்கத் தான் போகிறாள்.



முதலில் ரஞ்சனை இவளிடம் இருந்து முற்றிலும் விலக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் துளிர்விட, அதற்கு தகுந்த உபாதை ஒன்று கண்டெடுத்தான். அதை யோசித்தவன் முகத்தில், இடது புறம் ஒரு சிறு உதட்டு சுழிப்பு.
 
Status
Not open for further replies.
Top