All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Poorni

Active member
as usual u stole my heart raji ma. different a try panni adhula succeedum aytinga. menmelum ezhudhi ezhuthulagil ungaluku nu oru thani idam kandipa pidipinga. luv u so much raji ma. keep rocking....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்து அவன் காதலை உணர்ந்ததிலிருந்து இருவரின் உணர்வுகளையும் மிகவும் அழகாக காட்டியிருக்கீங்க. ஒரே வீட்டில் இருந்தாலும் கூட இருவரும் ஒருவரின் அருகாமையை மற்றவர் விரும்புகிறார்கள். ரித்வி இந்த ஹர்டில் ரேஸ்ஸில் உன் இலக்கு நான் தான், அதை நீ அடைந்துவிட்டாய் என்று சொல்வது அருமை. அழகுநிலையத்தில் நித்துவின் விளையாட்டு இரசிக்க வைக்கிறது.ஒரே இடத்திற்கு இருவரும் தனி தனியாக பயணம் செய்கிறார்கள். அங்கே சென்றவுடன் இருவரையும் சேர்த்து எடுக்கும் போட்டோ ஷூட் அற்புதமான தருணம், அதை குலைக்கவென மிருதுளாவின் வருகை. நித்து ரித்வியை அவளுடன் வேண்டுமென சிக்க வைத்து விட்டு செல்கிறாள். ஒவ்வொரு இடத்திலும் ரித்வி பின்தொடர இவள் அவ்விடம் விட்டு நகர என கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறார்கள். பாவம் ரித்வி தான் தவிக்கிறான். ரித்வியை தெரியாதது போல் காட்டிக்கொண்டு பின் ஏதோ இரகசியம் என்றவுடன் ரித்வியிடம் அது என்ன என்று கேட்டு அவள் உரிமையை காட்டுவது நன்றாக இருந்தது. பின் அவர்களிடம் ரித்வியை மாட்டிவிடுவது என அசத்துகிறாள். ரித்வி சிறுவனிடம் கடிதத்தை கொடுத்து இப்படி செய்தால் நம் காதலை அறிவிப்பாயா என பேரம் பேசுவது செம க்யூட்டாக இருந்தது. நீங்கள் சொன்னது போல் இப்போது தான் இருவரும் காதல் விளையாட்டை மிக சரியாகவும் அழகாகவும் விளையாடுகிறார்கள். மிருதுளாவின் திட்டத்தை நித்து தனது திட்டமாக மாற்றி அவர்கள் காதலை அனைவருக்கும் தெரிய படுத்தி விட்டாள். ரித்வி சொல்லும்போது மறுத்தவள் எங்கே அவனுக்கு தவறான பெயர் வந்து விடக்கூடாது என்று தங்கள் காதலை உலகறிய வைத்துவிட்டாள்." நீ என்னை விடு என்று சொல்லும்போதெல்லாம் உன்னை இறுக்கமாகவே பிடித்துக்கொள்ள தோன்றுகிறது " என்னும் வரிகள் அற்புதம். அவன் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பதை ஐஸ்கிரீம்மோடு ஒப்பிட்டு சொல்லிய விதம் அருமை. என் வலியை காட்டினால் நீ நொடிந்து விடுவாய் என்று அவன் சொன்னதற்கு அர்த்தம், அவன் கற்பனையில் அவளோடு வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் உணரமுடிகிறது. அதை கண்டவுடன் நித்துவின் நிலை தான் நமக்கும். அவனின் காதல் வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. அவனின் நண்பரிடம் இருந்து வரும் அழைப்பு இன்னும் அதை பறைசாற்றுகிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை,.. நித்துவின் மனநிலையே நமக்கும். அவளின் 16வருட காதலுக்கு இவனின் நான்கு வருட காதல் கொஞ்சமும் சளைத்தது இல்லையே. இன்னும் மேலே என்று தான் சொல்ல வேண்டும். இதை விட வேறு என்ன வேண்டும் நித்துவுக்கு. வைரம் இன்னும் பல மடங்காக மின்னுகிறது. அந்த பொக்கிஷத்தை தேடி நித்து ஓடுகிறாள். கேட்டெல்லாம் அவளுக்கு ஒரு தடையாக முடியுமா (அவள் அதை ஏறி தாண்ட முற்படும் முன் நானே சீக்கிரம் ஏறி குதித்து செல் நித்து என்று சொல்கிறேன் ) அவள் அதை தாண்டி குதித்து ஓடும் போது எனக்கு தோன்றிய எண்ணம், முதன் முறை அவள் தாண்டி குதித்ததில் அவளிடம் அவன் வீழ்ந்து காதலை ஏற்று கொண்டான், இப்போது அவன் காதலில் அவள் திக்கு முக்காடி போய், ஆழ்கடலான அவன் காதலில் மூழ்க போகிறாள். தடையை தாண்டி அவள் இலக்கை அடைந்து விட்டாள். அந்த ஹர்டில் ரேஸ்ஸிலும் வென்று விட்டாள், அவன் அவளை வெல்லவைத்து விட்டான். அவனை கட்டியணைத்து முகமெங்கும் முத்தமிட்டு ஐ லவ் யூ என்று அவள் உச்சரித்த வார்த்தை அவன் மனதை நிறைத்ததை போல் எங்கள் மனதையும் நிறைத்தது. வாவ் வாவ் வாவ் பதிவுகள் 😍😲
வாவ்.. வாவ்.. விமர்சனம் உங்களுடையது இருமுறை படித்தேன்.. மிக்கநன்றி..😍🙏🌹

அழகாய் கதையோடு பயணித்திருக்கீர்கள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சீக்கிரம் கதையை தாங்களேன். ராஜி அக்காவின் ரொமேன்ஸ் சீன் வாசிக்க ஆசையாக உள்ளது.
போட்டுட்டேன்..🙈😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima , nanthan producer nengadhana director, vanga raji ungalukku pudicha hrithik a pudichi padatha start panalam nu solanuman irukku😆😆😆😜semma concept, nejama solren inthat knot romba pudusu romba super❤❤❤❤
மிக்க நன்றி 😍🙏🌹

வாங்க வாங்க போகலாம்.. பேன்க் பேலன்ஸ் புல் தானே..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

காதலால் விளையாடி கொன்றவன்
காதலால் உறவாடி கொள்கிறான்...!

காதலால் விளையாடி கொண்டவன்
காதலால் உறவாடி கொல்கிறான்...!

காதல்...
ஆரம்பத்தில் ஆர்ப்பரிப்பு
அவசரத்தில் அவமதிப்பு
காலங்கள் கடந்தாலும்
உணர்வுகளால் உயிர் துடிப்பு!

காதல்...
உயிர் தொட்ட உணர்வில்
கொல்லுகின்ற போதை...
உயிர் குடித்த உணர்வில்
சொல்லுகின்ற பாதை...
காலங்கள் கடந்தாலும்
உள்ளூரும் அதன் துடிப்பு..
காத்திருந்த காதல் மகள்
காதலுக்கு அது சிறப்பு!

காதல்...

உணர்வில்லா காதலுக்கு
உருவமில்லா காதலுக்கு
உயிர் கொடுத்த வேளையிலே
உயிர் குடிக்கும் வலியிருந்தும்
உருக் கொடுத்த மன்னனவன்...
உற்றவனாய் வாழ்ந்தாலும்
உரிமையாய் சாய்ந்தாலும்
கன்னியவள் காதலுக்கு
காத்திருந்த காலமதில்
கற்பனையாய் வாழ்ந்தாலும்
கண் நிறைத்தான் காதலனே...!

காதல்...
கண்ணால் பார்க்காத
காவியக் காதலுக்கு
கண்ணாடி காட்டியது
கண்மணியே உன் படைப்பு!

எத்தனை கதைகள்
காவியமாய் வந்தாலும்....
காதலின் இலக்கணத்தை
கற்பனையாய் சொன்னாலும்...
உன் நடை அழகில்
காட்டும் காதல்
கண்ணீரில் கரைந்த கணம்...
கனவல்ல நிஜம் என்று
கனாக் காணும் சத்தியமே...!

அருமை, அருமை அருமை ராஜி, எப்படி சொல்ல என்ன ஒரு தெளிவு, என்ன ஒரு அழுத்தம், என்ன ஒரு நடை, இருவரையும் கண் முன் நிறுத்தி , கரை கண்ட காதல் கண்டு, கண்ணீர் விட்டு ரசித்த நடை. அற்புதம் ராஜி, அதி அற்புதம்.

முடிந்து விட்டது என்று ஆரம்பித்தேன், மாலை ஆரம்பித்து முடித்தும் விட்டேன், ஆனால் இன்னும் கதை முடிய வில்லையா? என்று அர்த்த ராத்திரியில் தவிக்கிறேன்......

காத்திருக்கிறேன் ராஜி.....
இந்த கதைக்கு அழகு சேர்ப்பது போல் உங்க கவிதை நடை விமர்சனம் மிக்க நன்றி..😍🙏🌹
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji maa Rithivik rombaaaaaaaa miss pandren ungaloda azhuthayum than please please two epis kuda azhuthunga paa anagu Rithivik avaloda karpanaiyala vazhuran tha avan nijam thula vazharatha parkanum please avan love anagalugum unaranum unga fans manasa kastata padutha matringa namburen love you so much Raji maa 😍😍😍😍😍
கொடுத்துட்டேன்.. திருப்தியா என்று நீங்க தான் சொல்லணும்
 
Top