All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிர்வரை பாயும் நேசக்கதிரொளி நீ...!"கதை திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...!

எனக்கு மிகவும் பிடிச்ச வரிகள்...


"எங்கு நீங்கள் நிராகரிக்கப் படுகிறீர்களோ அங்கு இருந்தே

உங்கள் வெற்றியின் பாதை தொடங்குகிறது...!"

இந்த வரியோடு இதோ அடுத்த
புது கதையுடன் வந்துவிட்டேன்...

"உருக்கி கோர்த்தாய் உன் உயிரில்..." கதையின் அடுத்த பார்ட் தான் "உயிர்வரை பாயும் நேசக் கதிரொளி நீ..."

மியூசிக் கம்போசர் - மிஸ்டர் நல்லுருத்திரன்
சக்தி - சத்தியேந்திரன்
சுதிர் - சுதர்சனன்

இவர்களோடு நம்ம மிருதணும் மிருதியும் வருவார்கள்.

இவர்களை சுற்றி தான் கதை வரும்...

கதையின் முன்னோட்டம்...

“இந்த கதையை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க மிஸ்டர் நல்லுருத்திரன்” என்று கேட்டாள் இசை அமைப்பாளரிடம்.. அவனது முழு பெயரையும் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் உச்சரித்தாள்.
எஸ் நம்ம முயூசிக் கம்போசர் நேம் தான் நல்லுருத்திரன்...

தன்னிடம் கேள்வி கேட்ட மிருளாணியை ஒரு பார்வை பார்த்தவன் நீண்ட காலத்துக்கு பிறகு அதுவும் தன் பெயரை முதல் முறையாக இவ்வளவு அழுத்தமாக உரைத்தவளை கூர்ந்து பார்த்தவன் அவளை விட்டு விலகிப் போக,

“இப்படி எவ்வளவு நாளுக்கு தான் என்கிட்டே இருந்து ஓட முடியும் மிஸ்டர் நல்லுருத்திரன்” மீண்டும் சரளமாக அவனது பெயரை சொல்லி அழைத்தாள்.

அதில் கோவம் அடங்காமல் பீரிட்டு வர அதை முயன்று அடக்கிக்கொண்டு,

“என்கிட்டே வாங்காம போக மாட்டியாடி” அடிக்குரலில் சீறினான்.

“வட்டியும் முதலுமா போட்டு குடுங்க... எல்லாத்தையும் வாங்கிக்கிறேன்” என்று அவனோடு மல்லுக்கு நின்றாள். முன்பு இருந்த ஒத்துக்கத்தை இப்பொழுதும் கடை பிடித்தால் இவன் இன்னும் உச்சிக் கொம்பில் ஏறி அமர்ந்து விடுவான் என்று அவளின் அண்ணி மிருதி தூபம் போட்டு விட இவளுக்கு சொல்லவும் வேண்டுமா...?

வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் அவனை சீண்டி விட்டுக் கொண்டே இருக்க ஆரம்பித்தாள். அவளை அடிக்கவும் முடியாமல் அடக்கவும் முடியாமல் திணறியவன் அவளை விட்டு முழுமையாக விலக ஆரம்பித்தான்.

ஆனால் அவள் அதற்கு விட வேண்டுமே...! தன்னை விட்டு செல்கிறவனை விட்டுவிடாமல் இழுத்து பிடித்துக் கொண்டு அல்லவா இருக்கிறாள் இதோ இப்பொழுது போல...

பேச்சிலே அவனுடன் மல்லுக்கு நின்று அவனின் வாய் வார்த்தைகளை பிடுங்காமல் அவள் ஓய்வதே கிடையாது. முன்பு மௌனகுருவாய் இருந்தவன் அவளின் சீண்டலில் அடிக்குரலில் அவளிடம் தன் கோவத்தை கொட்ட ஆரம்பித்து இருந்தான் மியூசிக் கம்போசர்.

அதுவே நல்ல முனேற்றம் என்று மிருதி இன்னும் ஏற்றிவிட ஏற்கனவே சாமி வந்தவள் போல் தான் இருக்கிறாள் மிருளாணி. இப்பொழுது அவளது கையில் வேப்பிலை வேறு கொடுத்து அடிக்க சொல்ல தன் ஆட்டத்தை நிதானமாக தொடங்கினாள் மிருளாணி.

அவளின் இந்த பரிமாணம் கண்டு முகத்தை சுளித்தவன் அவளை விட்டு விலகப் பார்க்க,

“இன்னும் எத்தனை நாளுக்குன்னு பார்க்கிறேன்” என்றாள் அவள் சவாலாக... அந்த கூற்றில் முன்னாடி சென்ற நல்லுருத்திரன் நிறுத்தி நிதானமாக பின்னாடி திரும்பி பார்த்தான்.

அந்த பார்வையில் உள்ளுக்குள் ஜெர்க்கானாள் மிருளாணி. ஆனாலும் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவள் ஸ்டெடியாக நிற்க, அவளை நெருங்கி வந்தவன்,

“அவ பேச்சை கேட்டு நீ ஆடிட்டு இருக்க... என்னைக்கு நீ என்கிட்டே செமத்தியா வாங்க போறன்னு தெரியல. உன் அண்ணன் முகத்துக்காக மட்டும் தான் உன்னை என்கிட்டே வேலை செய்ய அனுமதித்து இருக்கேன். இல்லன்னா உன்னை எல்லாம் என்கிட்டக்க கூட சேர்த்து இருக்க மாட்டேன்” என்று அடிக்குரலில் உறுமினான்.

அவனது பேச்சில் அவளது இதயம் காயம் கொண்டது என்றாலும்,

“அப்போ எனக்காக நீங்க என்னை சகிச்சுக்கல இல்லையா?” என்று கேட்டவளிடம்,

“காது உனக்கு நல்லா தானே கேட்குது. இல்ல அதுல எதுவும் பிரச்சனையா?” என்று அதற்கு பதில் சொல்லாமல் அவன் பேச,

“ரைட்... எனக்கு நல்லா தான் காது கேட்குது. நீங்க தான் பதில் சொல்லாம இழுத்து அடிக்கிறீங்களே” என்றவள் அவன் முறைக்கவும் “தட்ஸ் ரைட்...” என்று அவனை நிதானமாக பார்த்து “நீங்க என் அண்ணனுக்காகவே என்னை சகித்துக்கோங்க... நோ ப்ராப்ளம்...” என்று அசால்ட்டாக தோளை குழுக்கியவள்,

“ஆனா நீங்க சகித்துக்கிட்டு இருக்கிறது என்னை என்பதை மட்டும் மறந்துடாதீங்க மிஸ்டர் நல்லுருத்திரன். இந்த மிருளாணி யாருன்னு உங்களுக்கு தெரியும்... அதே போல இந்த நல்லவன் யாருன்னும் எனக்கு தெரியும்.” என்றவளை பார்த்து நக்கலாக சிரித்தான். அவனது ஏளன சிரிப்பில் உள்ளுக்குள் உடைந்துப் போனாலும், அவனது சட்டையை பிடித்து தனக்கு மிக அருகில் கொண்டு வந்து நிறுத்தியவள்,

“இந்த நெருக்கம் என்னை தவிர வேறு யாராலும் உங்களுக்கு கொடுக்க முடியாது மிஸ்டர். இதுக்கு இந்த நல்லவன் விடவும் மாட்டான்.” என்று அவனின் நெஞ்சை சுட்டிக் காட்டியவள்,

“இது எனக்கு மட்டுமே சொந்தமான பிராப்பர்டி...” என்றவளின் கையில் இருந்து தன் சட்டையை விடுவித்துக் அதை நீவி விட்டவன்,

“நான் உனக்கு சொந்தமானவன் இல்லை என்பதையும், நான் நல்லவன் இல்லை என்பதையும் உனக்கு ரொம்ப சீக்கிரமா நிரூபிக்கிறேன்டி” என்று கருவினான்.

“அதையும் தான் பார்க்கலாம்... இந்த நல்லவன் இந்த மிருளாணிக்கு மட்டும் தான்” என்று விட்டு அவள் போக,

“கண்ணையும் கருத்தையும் அங்கும் இங்கும் அலைய விடாம சீக்கிரம் பாடல் வரிகளை தயார் பண்ணு... இல்லன்னா ஆளை மாற்ற வேண்டி வரும்” என்று நக்கலாக அவன் சொல்ல, வேகமாய் அவனை திரும்பிப் பார்த்தவள்,

“உங்களால அதை செய்ய முடியுமா மிஸ்டர்...?” நிதானமான அவளது கேள்வியை அலட்சியப்படுத்தி விட்டு தன் காரில் ஏறி போய் விட்டான்.

“அது தானே மனதை திறந்து சொன்னா எங்க நான் கண்டு பிடுச்சிடுவனோன்னு ஓடுறதை பாரு. கண்டிப்பாக ஒரு நாள் என்கிட்ட மாட்டுவீங்க” என்று பொறுமியவள் தானும் அவ்விடத்தை விட்டு கிளம்பினாள்.

---

“உங்க தனிப்பட்ட பொழுதை நான் வீணாக்குறேன்னு எனக்கு புரியுது... ஐ ஆம் சாரி... ஒரு மணி நேரம் வேணாம்... ஜஸ்ட் ஒரு பைவ் மினிட்ஸ்.. என் அம்மா இந்த அறையை தான் பார்த்துக்கிட்டு இருப்பாங்க... சோ அவங்க போனதுக்கு பிறகு நான் போய்க்கிறேன். அது வரை என்னை பொறுத்துக் கோங்க சார்...” என்றவளின் தவிப்பை புரிந்துக் கொண்டவன்,

மனமே இல்லை என்றாலும் அவளின் கற்புக்காக அவள் இவ்வளவு தூரம் போராடுவது அவனை என்னவோ செய்ய “ம்ம்ம்” என்றான்.

“தேங்க்ஸ்...” என்றவள் ஒரு இருக்கையில் அமர்ந்து தன் போனை பார்க்க ஆரம்பித்தாள். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவள் வெளியே போக பார்க்க,

“எனக்கு தெரிஞ்சு உன் அம்மா இங்க தான் இருப்பாங்க... பெட்டர் நீ ஒரு மணி நேரம் கழிச்சே வெளில போ..” என்று ஒப்புதல் கொடுத்தவன்,

“ஆமா நான் எப்படி இதுக்கு சம்மதிப்பேன்னு நினைச்ச... ஒரு வேலை இந்த ஒரு மணி நேரம் உன்கிட்ட நான் தவறா நடந்துக்கிட்டா என்ன பண்ணுவ” என்றான் நக்கலாய்.

“வெரி சிம்பிள்.. எனக்கு கராத்தே தெரியும்” என்றாள். அதில் அவனுக்கு இதழோரம் ஒரு புன்னகை எழுந்தது.

“குட்” என்றவன் கண்களை மூடிக் கொண்டான். காலையிலிருந்து ஓடிய ஓட்டம் அவனை அசத்தி இருக்க மிகவும் களைப்பாக உணர்ந்தான்.

மென்முழியாள் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. தலை குனிந்து போனை பார்த்த வண்ணமாகவே இருந்தாள். இருவரும் அவரவர் இடத்தில் இருந்து கொஞ்சமும் அசையவில்லை.

நேரம் அப்படியே செல்ல இருவரும் அவர்களை அறியாமல் அப்படியே உறங்கிப் போய் இருந்தார்கள். காலை நீட்டலாம் என்று சத்தியேந்திரன் முயற்சி செய்ய அது முடியாமல் போனது. நீண்ட நேரமாக காலை கொஞ்சமும் அசைக்காமல் அப்படியே தொங்க விட்டு இருந்ததில் மறுத்துப் போய் இருந்தது...

அதில் மெல்ல கண்களை விழித்தான். கால்களை மீண்டும் அவன் அசைத்துப் பார்க்க “அவுச்...” வலியில் சற்றே முணகினான்.

அந்த முணகளில் கண் விழித்தாள் மென்முழியாள். எங்கே இருக்கிறோம் என்று ஒரு கணம் தடுமாறியவள் முன்னிரவில் நடந்தது எல்லாம் நினைவுக்கு வர அப்பொழுது தான் தான் இங்கேயே தூங்கி இருக்கிறோம் என்று புரிந்தது. அமர்ந்த வாக்கிலே கால்களை இருக்கையில் குறுக்கி அதிலே தலை சாய்ந்து அவள் தூங்கி இருக்க அவளால் சட்டென்று அசைய முடியவில்லை.

ஒரு மணி நேரம் பெர்மிஷன் கேட்டுவிட்டு விடியற்காலை மூன்று மணி வரை இங்கேயே இருந்து இருக்கிறோமே என்று தடுமாறினாள். தனக்குள் எந்த மாறுபாடும் இல்லாததை வியப்புடன் பார்த்தாள்.
முதல் முறை நிம்மதியாக தூங்கி இருக்கிறாள். அதற்கு காரணமானவன் சத்தியேந்திரன் என்று உணர்ந்தவளுக்கு அவன் மீது ஒரு மதிப்பு வந்தது. அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை என்பது புரிய அவன் மீது நம்பிக்கையும் வந்தது.

அதற்குள் மீண்டும் சத்தியேந்திரனிடமிருந்து முணகள் சத்தம் வர கைக்கால்களை உதறிக்கொண்டு வேகமாய் அவனிடம் சென்றாள்.

அவன் முன்பு படுத்த போஷிஷனிலே இருந்தான்.

“என்ன ஆச்சு சார்...?” என்று கேட்டவளுக்கு,

“நீ இன்னும் போகலையா? ஒன்னவர் தானே பெர்மிஷன் கேட்ட?” என்றவன்,

“கால் மறுத்துப் போயிடுச்சு. இட்ஸ் பெயினிங்” என்றான்.

“நீங்க அப்படியே பின்னால நகர்ந்து மேல கட்டில்ல ஏறிப் படுங்க... நான் காலை தூக்கிக்கிறேன்” என்றாள். அவள் சொல்படி இரு கைகளையும் பின்னால் ஊன்றி நகர்ந்து நன்றாக ஏறிப் படுத்தான். அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து அவனது காலை தூக்கிக் கொண்டவள் அவன் நேராக கட்டிலில் படுக்கவும் காலை சரியாக சுழட்டி அவனுக்கு நேராக வைத்தாள்.

“தேங்க்ஸ் முழியாள்” என்றான்.

“இட்ஸ் ஓகே சார்...” என்றவள் “உங்க அசிஸ்டென்ட் யாரையாவது வர சொல்லவா?” கேட்டாள்.

“நோ நீட்.. ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ்... இரத்த ஓட்டம் சீரா இருந்தா சரியாகிடும்”

“அப்போ ஓகே சார். நான் கிளம்புறேன்” என்று அவனிடமிருந்து விலகி கதவு வரை சென்றவள் அவனை திரும்பி பார்த்து,

“ரொம்ப வருடத்துக்கு பிறகு நிம்மதியா தூங்கி இருக்கிறேன்... தேங்க்ஸ் சார்...” என்று விட்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே...!
எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்களது ஆதரவு வேண்டும்...
இந்த கதையும் உங்களை மகிழ்விக்கும் என்று எண்ணுகிறேன்...

என்றும் அன்புடன்
ரம்யா ராஜ்...!
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தினமும் 2 பதிவுகள் குடுக்க முயற்சிக்கிறேன் தோழமைகளே...! இல்லை என்றால் முன் கூட்டியே சொல்லி விடுகிறேன்... கதையை கடித்து விட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்...


அத்தியாயம் 1
 
Last edited:
Status
Not open for further replies.
Top