All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் " இனி எல்லாமே நீ தானே " கதை திரி....

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super maa... Nice episode... Bharathi oda owner ah avala பெங்களூர் அனுப்பி vechi taaru அங்க இருந்தா பாதுகாப்பு illanu.... ருக்மணி அம்மா பொறுப்பு la ulla ilathuke vanthutaanga அவளும் ava அம்மா yum.... வெற்றி company la. Join yum pannita... Abi kita friendum aaita...
நன்றி சகி
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
7 இனி எல்லாமே நீ தானே
பாரதி வெற்றியின் கம்பெனியில் சேர்ந்து ஒரு மாதம் ஆகியது அந்த கம்பெனியில் அக்கோண்ட் ஷேக்சன் என்பதால் முதலில் திணறியவள் பின்பு ஒரளவு சமாளிந்திருந்தாள். மைதிலி வெற்றியிடம் நெருங்க பல வழிகளில் இறங்கினாள் ஆனால் வெற்றி அவளை சிறிதும் கண்டுக்கவில்லை வேலையை தவிர வேறு விஷயம் கூட அவளிடம் பேசவில்லை ‌...
இதையெல்லாம் கண்டு அவமானத்தில் இருந்த மைதிலி தேவையே இல்லாமல் பாரதி யின் மீது அந்த வன்முறையை வளர்த்து கொண்டாள். எல்லோரும் ஒரே மாதிரி இருக்க பாரதி மட்டும் புடவை அணிந்து வந்தது எல்லோரிடமும் சற்று வேறுபட்டு நிற்பது ஏதேச்சையாக வெற்றி இவளிடம் பேசினால் கூட என எல்லாம் சேர்ந்து இவளுக்கு அவளின் மேல் வன்முறை அதிகமானது....
மைதிலி " பாரிதி இன்னைக்கு இந்த பைல் ஆடிட்டிங் போகனும் நீ கொஞ்சம் கரைட் பண்ணி குடு "
பாரதி " இப்பவா இப்ப ரொம்ப டைம் ஆயிடுச்சு நான் மார்னிங் சீக்கிரமா வந்து பாக்குறேன் "
மைதிலி " என்ன நீ உன் இஷ்டத்துக்கு பேசுற இப்ப நீ இத முடிக்கனும் பாஸ் தான் சொன்னாங்க காட் இட் "
ஏற்கனவே மணி ஆகிவிட்டது இதில் இது வேற என நினைத்து தன் தலை விதியை நொந்தவாறு அந்த வேலையை செய்ய ஆரம்பித்தாள்...
இரவு ஆகியது தான் ஏற்கனவே பட்ட துயரம் மனதில் வர ஏதும் போசாமல் வேகமாக தனது வேலையை முடித்து கொண்டு கிளம்பினாள்..
அந்நேரம் வெற்றியும் தனது வேலையை முடித்து வீடு கிளம்பும் போது பாரதி தனது அறை கதவை திறப்பது ஒன்றாக இருந்தது... இருவரும் ஒருவரை ஒருவர் இடித்து கொள்ளும் தருணம் கடைசி வினாடியில் வெற்றி சுதாரித்து நகர்ந்தான்..
பாரதி " சாரி சாரி சார் தெரியாம "
என தன்னை தவறாக நினைக்க கூடாது என விளக்கம் கொடுக்க முயன்றாள் பாரதி..
வெற்றி " இட்ஸ் ஓகே ஒன்னும் பிராப்ளம் இல்ல "
" இப்ப தான் வீட்டுக்கு போறிங்களா "
பாரதி " எஸ் சார் கொஞ்சம் வோர்க் இருந்துச்சு கம்ப்ளீட் பண்ணிட்டு போறேன் "
வெற்றி " ஒகே வீடு எங்கனு சொல்லுங்க டிரைவர அனுப்பறேன் இல்ல நான் கூட ட்ராப் பண்ணுறன் "
பாரதி " இட்ஸ் ஓகே சார் நான் பாத்துக்குறேன் வாக்கிங் டிச்டெண்ஸ் தான் நான் போய்பேன் "
வெற்றி " ஆர் யூ ஷோர் "
பாரதி " எஸ் சார் ஐயம் ஷோர் "
வெற்றி " ஓகே பாய் "
என வெற்றி தனது காரை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்...
பாரதியும் அவன் சென்ற பிறகு பஸ் ஸ்டாப் சென்று தங்களது இல்லத்திற்கு செல்லும் பஸ்ஸில் ஏறினாள்..
காரில் செல்லும் போது சிக்கனில் நிற்கும் போது ஏதேர்ச்சையாக திரும்பும் போது பஸ்ஸில் உள்ள பாரதியை கண்டுவிட்டான்...
" வாக்கிங் டிச்டெண்ஸ் சொன்னாங்க இப்ப பஸ்ல போறாங்க "
என்று எண்ணியவன் தனது வேலையை பார்த்து விட்டு கிளம்பினான்...
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்பு இல்லம்...
அபி " பாரதி "
என்று இரு கைகளையும் நீட்டி கொண்டு வேகமாக பாரதியை நோக்கி ஓடி வந்தான்..‌
பாரதி " அபி கண்ணா பொறுமையா வாடா "
என்று கூறி இருக்கைகளாலும் அணைத்து கொண்டாள்..
அபி " பாரதி நான் ஒன்கிட்ட ஒன்னு சொல்லட்டா "
என இருவரும் தங்களது உலகத்தின் உள்ளே சென்றனர். இனி யார் வந்தாலும் இவர்கள் உலகத்தின் கதவு திறக்கப்பட மாட்டாது‌...
அன்று அபியுடன் வெற்றியும் வந்திருந்தான்.
ருக்மணி " வாடா இப்பதான் சாருக்கு இங்க வரனும் தோனுச்சா "
வெற்றி " அப்படிலா இல்லமா கொஞ்சம் வொர்க் அதான் பட் அபி இங்க வர முன்னடிய விட இப்ப ரொம்ப ஆர்வமா இருக்கான் அது எப்படி "
ருக்மணி " ஆமா டா அவனுக்கு இப்பதான் இங்க ஒரு புது பிரண்ட் கிடைச்சு இருக்காங்க அதான் "
" ஓஓஓ அப்படியா " புது பிரண்ட் என்றவுடன் அவனின் வயது ஒத்த குழந்தை என நினைத்து கொண்டான் வெற்றி...
அங்கே வந்த தனம் யை கூப்பிட்ட ருக்மணி
" வெற்றி இவங்க தான்டா தனம் இவங்க பொண்ணு கூட வந்தாங்க நான் சொன்னல அவங்க தான் "
வெற்றி " ஓஓ சரி மா வணக்கம் மா என் பேரு வெற்றி "
தனம் " தெரியும் தம்பி உங்கள பத்தி ருக்மணி நிறைய சொல்லிருக்காங்க "
வெற்றி " என்னமா மரியாதையாலா பேசுறிங்க நீ வா போ னே கூப்பிடுங்க நான் உங்க புள்ள மாதிரி "
அவன் எதை நினைத்து கூறினானோ தனத்திற்கு தனது மகன் ருத்ரன் நினைவு வந்து தானாக கண்கள் கலங்கியது.
வெற்றி " அம்மா உங்களுக்கு எல்லாம் இங்க வசதியா தானே இருக்கு "
தனம் " அதலாம் ரொம்பவே வசதியா இருக்கு பா "
அதன்பிறகு சிறிது நேரம் தனம் ருக்மணி அம்மா வுடன் பேசிய பின் வெற்றி அபியை அழைக்க சென்றான்..
வெற்றி " அபி கிளம்பலாமா டைம் ஆயிடுச்சு "
அபி " அப்பா கொஞ்சம் நேரம் பா என பிரண்ட் வரட்டும் சொல்லிட்டு போலாம் நான் உங்களுக்கு என் பிரண்ட் இன்ட்ரோ பண்ணுறேன் "
" சரி " என சிறிது நேரம் காத்திருக்க பாரதி தங்களுடன் இருக்கும் வயதான பாட்டி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாதால் பாரதி உடன்இருந்து அவரை கவனித்து கொண்டு இருந்தாள்.
வெற்றி " அபி லேட் ஆகுது டா நெக்ஸ்ட் டைம் உன் பிரண்ட் ஆ மீட் பண்ணலாம் இப்ப வா போலாம் "
அபி " ம்ம் ஒகே பா "
இருவரும் செல்லவும் பாரதி அவர்களை தேடி வரவும் சரியாக இருந்தது. ஆனால் அவர்கள் காரில் ஏறி செல்வதை பார்த்த பாரதி போகிறவர்களை கூப்பிடுவது முறை அல்ல என உணர்ந்து அமைதியாக இருந்து விட்டாள்...
சிலநாட்கள் செல்ல ஒருநாள் வெற்றி அபியை ஸ்குல் முடிந்தவுடன் மறுநாள் தனது ஆபிஸ்ற்க்கு அழைத்து வந்தான்..
அபி எதிர்பாராத விதமாக பாரதியை அங்கு கண்டு விட்டான்.
பாரதி என சந்தோஷத்துடன் தனது தந்தையின் கையினை உதறிவிட்டு பாரதியை நோக்கி ஓடினான்..
ஃபோன் பேசுவதில் கவனமாக இருந்த வெற்றி அபியை கவனிக்கவில்லை. வேகமாக ஓடிய அபி சரியாக மைதிலி காஃபி உடன் வரம் போது அவளின் மேல் மோதி விட்டான்..
மைதிலி " யூ இடியட் எப்படி ஓடி வர யாரு டா நீ "
என அவனின் தோளிளை பிடித்து கேட்டாள். அவள் அழுத்தியதில் உண்டான வலியால் அபி பாரதியை நோக்கி கைகாட்டி அவளிடம் ஓடி தஞ்சம் புகுந்தான்...
தீடிரென அபியை அங்கு எதிர்பார்க்காத பாரதி
" அபி நீ இங்க எப்படி டா "
என பேசும் போதே .
மைதிலி " ஓஓ இது உன் குழந்தை யா என்ன திமிரு இரண்டு பேருக்கும் "
பாரதி " இங்க பாருங்க மைதிலி இது தெரியாம நடந்தது இவன் குழந்தை எதுக்கு இப்படி பேசுறிங்க "
மைதிலி " ஓஓ குழந்தை னா என்ன வேணா பண்ணலாமா இந்த டிரஸ் ஓட ரேட் என்னனு தெரியுமா யூ யூஸ்லெஸ் இடியட் "
பாரதி " போதும் மைதிலி வார்த்தை அளந்து பேசுங்க "
இவர்கள் பேசி கொண்டு இருக்கும்போதே அங்கு வந்த வெற்றி " அபி "
அபி " டாடி "
என ஓடி சென்று இப்போது தன் தந்தையின் அருகில் நின்று கொண்டான்...
வெற்றி " என்னச்சு எனிதிங்க பிரபளம் "
மைதிலி தன்னை பற்றி பாரதி காட்டி கொடுத்திட கூடாது என முந்தி கொண்டு
" நந்திங் சார் குட்டி பையன் என் மேல மோதிட்டான் அதான் அப்படிலா செய்ய கூடாது கவனாமா இருக்கனும் சொல்லிட்டு இருந்தேன் சார் "
வெற்றி " உங்களுக்கு ஒன்னும் இல்லலா "
என்றவன் அபி புறம் திரும்பி
" அபி கேர்ஃபலா இருக்கனும் தெரியாதா சாரி கேளு "
என்று சற்று கண்டிப்புடனே கேட்டான்...
அபி " சாரி "
என்றவன் அவர்களது அறைக்கு சென்று விட்டான்....
வெற்றி " சாரி காய்ஸ் உங்க வொர்க் continue பண்ணுங்க "
என்றான்......
தொடரும்....

வணக்கம் நட்புகளே
இனி எல்லாமே நீ தானே கதை எப்படி போயிட்டு இருக்கு இது ஒரு சாதாரண அம்மா மகன் கதை தான் பெருசா எந்த சஸ்பென்ஸ்ம் இருக்காது பட் கதை எல்லாருக்கும் பிடிக்கும் படிக்குற எல்லாரும் தயவு செய்து உங்களோட கருத்துக்கள சொல்லுங்க...
நன்றி
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Abi kum Bharathi thaan friend nu வெற்றி ku theriyala.... இந்த mythili தேவை இல்லாமால் ava mela ஏன் வன்மம் paaraatura.....abi ah என்ன பேச்சி pesuthu அப்படியே plate ah maathita பாருங்க
 
Top