All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதந்திர தின ஸ்பெஷல் கலந்துரையாடல் 🇮🇳

Spicy Kannamma

Well-known member
ஹாய் செல்லம்ஸ்...
நம்ம தள எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு நல்ல செய்தியோட வந்திருக்கிறேன். செய்தி என்னவென்று சொல்வதற்க்கு முன்னால் கேட்டவுடன் ஒப்புதல் அளித்த நம்ம ஸ்ரீமா😍 -வுக்கு மிக மிக நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.. Thank you so much srima 😍

இதோ விஷயத்துக்கு வந்துட்டேன்..
நம் தளம் சார்பாக அனைவருக்கும் அட்வான்ஸ் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மக்களே... 🇮🇳🇮🇳🇮🇳
சிறிது நாட்களுக்கு முன் நம் தளத்தில் நடத்திய விவாத போட்டியில் பெரும்பாலானோர் ஆர்வமாக பங்கெடுத்து அசத்திவிட்டீர்கள்.. அதனை தொடர்ந்து இப்பொழுது நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்,
சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இரவு 10 மணிக்கு வரை ஒரு அழகிய கலந்துரையாடல் நிகழ்வினை நடந்த ஆசைப்படுகிறோம்..

தலைப்பு என்னவென்றால் "எல்லாம் சுதந்திரம் பற்றி தாங்க.." அதாவது
நாம் மனதார விரும்பிய ஒன்று (அது பொருளாகவோ, உரிமையாகவோ, ஏதேனும் சம்மதமாகவோ எதுவாயினும்) நம் கையில் வந்தடையும் தருணம் மிகவும் அலாதியானது. அதை நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவித்திருப்போம்.. அந்த சுதந்திர புன்னகை பற்றிதான் கலந்துரையாடப் போகிறோம்..

சமீபத்தில் நான் மிகவும் விரும்பிய ஒரு ஆடை மற்றும் நான் பல வருடங்களாக படிக்க எண்ணிய நான் மலாலா புத்தகம் இவை இரண்டும் ஒரே நாளில் என் கைசேர்ந்தது. அவற்றிற்க்கு பின்னால் உள்ள என்னுடைய பைத்தியக்காரதனாமான, குழந்தைத்தனமான காதல் எந்த அளவு இருந்திருக்கிறது என்பது அவை என் கையில் வந்தடைந்த பின்னர்தான் எனக்கே தெரிகிறது.. 😍😍

பெரிதாய் எதையோ சாதித்து விட்ட சந்தோஷம்..!
உச்சி குளிர்ந்து உள்ளங்கால் உறைந்து நிற்கும் ஆனந்தம்..!
கஷ்டப்பட்டு அடக்கினாலும் அடங்கமறுக்கும் அதீத புத்துயிர் என் முகத்தில் அப்பிக் கொண்டது.. 😍😍😍

அந்த ஆடை 3 வாரங்களுக்கு முன்பு ஒரு கடையில் பார்த்தேன்.. அன்றிலிருந்து என்னை வா வா என அழைத்துக் கொண்டே இருந்தது..
நோட்டானந்தா(காசு) லொல்லு செய்வதால் என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு நித்தமும் காலே‌ஜ் போகும் போதும் வரும்போதும் அதை பார்த்து ஒரு ஹாய் பாய் மட்டும் சொல்லிட்டு கடந்திடுவேன்..

2 வாரங்களாக அந்த ஆடையும் அங்கிருந்து நகன்ற பாடில்லை.. அது என்னை ஏக்கத்துடன் பார்த்து " உன்னுடன் அழைத்துச் செல்ல மாட்டாயா ..? " என்று கேட்பது போலவே இருந்தது..

அட கொக்கமக்கா.. உனக்கும் என் மேல் லவ்ஸா... நான் கூட one side -ஆ போய்டுமோனு நினைச்சேன் என்று அடக்கி வைத்த என் காதல் ஆசையை அம்மாவிடம் கட்டவிழ்த்தேன்..
எந்த ஒரு மறுப்பும் வெறுப்பும் இன்றி வாங்கிக்கோ மா.. என்றாள் என் அம்மா.
வெற்றிகரமாக 3-ஆம் வாரமான இன்று எங்கள் காதல் இணையுண்டது..🤩🤩

இதை வாங்கி வந்து என் அம்மா அவளிடம் நான் காட்டி மகிழ்கையில் என் புன்னகை கண்டு வானில் பறந்தாள்.
இன்றைய இளைஞர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் தன் சிறுவயதில் வறுமைப் பிடியில் சிக்கி, ஆசைப்பட்ட எதுவும் கிடைக்கப் பெறாமல் வளர்ந்தவர்களே.. தான் பெறாத இன்பம் தன் பிள்ளைகள் பெறவேண்டுமென எண்ணி நம் வெற்று முகத்தில் ஒற்றை புன்னகையை காண எத்தனை எத்தனையோ தியாகங்கள் செய்யும் நம் பெற்றோர்கள் வாழும் தெய்வங்களே...
Love your Parents.. 😘😘😘

இது அந்த dress -க்கு பின்னால் உள்ள கதை. அந்த Book யாரை பத்தின கதை தெரியுமா..? பாக்கிஸ்தான் போராளி மலாலா யூசப்சாய் அவர்களது வாழ்க்கை வரலாறு தான் அப்புத்தகம்.

அந்த நாட்டில் பெண்கள் கல்வி பயில அனுமதி இல்லை. பெண் கல்விக்கு தடை விதித்த தாலீபான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடி குண்டடிப்பட்டு மரணத்தின் உச்சி வரை சென்றுவந்து இன்னமும் பெண்கல்விக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் 21 அகவை வீராங்கனை அவள்.

2011-ஆம் ஆண்டு பாக்கிஸ்தானின் தேசிய அமைதி பரிசும், 2013-ஆம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் அமைதிப் பரிசும், 2014-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றார். அவரது வாக்குகளில் என்னை புல்லரிக்க வைத்தது " நான் போராடுவது என்னை எதிர்க்கும் தாலீபான் வீட்டு பெண் குழந்தைகளுக்குமான கல்விக்கும் தான்" என்பது.

இவ்வாறு உங்கள் ஆசை நிறைவேறிய அழகிய தருணங்களையோ, வாழ்வில் நீங்கள் போராடி வெற்றி கண்ட உத்வேகமூட்டும் தருணங்களையோ சுதந்திர பெரு மூச்சுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை பாதை பலருக்கு Motivation ஆக இருக்க கூடும். உங்கள் அனுபவம் பலருக்கு தைரியத்தை பரிந்துரைக்கக் கூடும்..
பெண் சக்தியை நிலை நாட்டுவோம்.. பலருக்கு உந்து சக்தியாக விளங்குவோம்..!

விதிமுறைகள்:
1. பொதுவான உங்கள் வாழ்வியல் அனுபவங்களையும் கருத்துக்களையும் மட்டுமே பேச வேண்டும். அரசியல் பேசுதலோ மற்றவர் மனதை புண்படுத்தும் பேச்சுகளோ இருத்தல் கூடாது.
2. ஏதேனும் கதை மற்றும் புத்தகங்கள் குறித்து பேச எண்ணுபவர்கள் பொது அறிவு புத்தகங்கள் மற்றும் நம் தள புத்தகங்கள் & கதைகளை குறித்தே பேச வேண்டும்.

கலந்துக் கொள்ள விரும்புவோர் உங்களது உரையை இப்பொழுதில் இருந்து ஆகஸ்டு 15 இரவு 10 மணி வரை பதியலாம் மக்களே... 😍😍
 
Last edited:

Dhumi

Well-known member
வாழ்க்கையில இரண்டு முறை ரொம்ப சந்தோசமா இருந்தேன்.

1. இது நான் போன வருசம் நடந்துச்சு. என் ஹெச்.ஓ.டி தான் எனக்கு புராஜெக்ட் கைட். அவருக்கு என்ன பிடிக்காது அதனாலயே எல்லார் முன்னாடியும் மட்டம் தட்டுறது அசிங்கப்படுத்துறது என்ன மட்டும் புராஜக்ட் பண்ண விடாம பண்ணுறதுனு எல்லா வேலையும் நல்லா பாப்பாரு. அப்ப தான் டீச்சர்ஸ் டே வந்துச்சு... ஜீனியர் பசங்களாம் சேந்து நான் எழுதின கவிதை போஸ்டர் அடிச்சி என் கையாலயே அவருக்கு கிப்ட் பண்ண வச்சாங்க... அப்ப மனுசன் மூஞ்சிய பாத்துருக்கனுமே மெல்லவும் முடியாம துப்பவும் முடியாமனு... கொடுமை அதோட நிக்காம அதை அவரு டேபிளுக்கு பின்னாடி நியாபகார்த்தமா ஒட்டி வச்சிருக்காரு மனுசன்... கிரகம் அந்த கவிதையை சொல்லி தான் டிபார்ட்மெண்ட் பங்சனே ஆரம்பிப்பாங்க... ரீசன்டா காலேஜ் போனப்ப பாத்தா அதே கவிதைய மெகா சைஸ்ல போஸ்டர் அடிச்சி டிபார்ட்மெண்ட் வாசல்ல தொங்க விட்டிருந்தாங்க... செம சர்ப்ரைஸ்... அன்னைக்கு ரோட்ல போறப்பலாம் சிரிச்சிக்கிட்டே போனேன்😁😁😁

2. முதல்முறைய ஒரு கதையை எழுதி முடிச்சப்ப செம்ம சந்தோசம்... உண்மையாலுமே அந்த பீலிங்ஸ வார்த்தையால சொல்லுறது கம்மி தான்... அன்னைக்கு புல்லா நான் சிரிச்சிக்கிட்டே இருந்தேன்... அம்மா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்கனு கேட்டும் சந்தோசத்தை கன்ட்ரோல் பண்ண முடியல... பல போராட்டங்களுக்கு நடுவுல முடிச்ச முதல் விசயம் முதல் வெற்றி... செம்ம சந்தோசமா இருந்துச்சு
 
அட்டகாசம் துமி மா 😍 உங்கள பிடிக்காம இருந்த H.O.D-அ போஸ்டர் போட்டு வச்சு தினமும் பார்க்க வச்சீங்க பாருங்க.. அங்கே நிக்குறீங்க நீங்க.. Great applause for that 👏👏👏👏

நிஜமா இப்படிதான் இருக்கும். அப்புறம் உங்கள் நாவல் அனுபவம் 😍😍😍😍 உண்மையாகவே அது வார்த்தையால் விவரிக்க முடியாத சந்தோஷம் தான்.. அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.

உங்களுடைய அழகான தருணங்களை பகிர்ந்துக் கொண்டு எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதற்கு மிக்க நன்றி..

உங்கள் எழுத்து பயணம் தொடர்ந்து மேலும் மேலும் பல வெற்றிகளை அடைய நமது தளம் சார்பாக வாழ்த்துகிறோம் துமி மா😍

அட்வான்ஸ் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳
 
நன்றி லட்டு மா😍😍😍😍😘😘😘😘 உங்களுக்கும் அட்வான்ஸ் சுதந்திர தின நல்வாழ்த்துகள் மா
 
தாமரை

தாமரை
"சுதந்திரம்.."😍😍😍😍😍

சொல்லும் போதே.. ஒரு மலர்வு.. மூச்சில் ஒரு துள்ளல்.. வரும்...

அந்த சுதந்திரம்.. கொடுப்பதல்ல.. எடுப்பதல்ல... நமது இயல்பாய்
இருப்பது..

சுக்கா மிளகா ..சுதந்திரம்..யாரேனும் தூக்கிக் கொடுக்க ன்னு கேட்டாராம்.பாவேந்தர்..

எனக்கு சொல்லப்பட்ட கற்றுக் கொடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள்..
. .. எனது தளையல்ல.. எனது வேலி..

எனை புதைத்த போதுதான் நான் வேகமாக முளைத்து வந்தேன்.

எனக்கு கொடுக்கப்பட்ட மகள், மனைவி, தாய், குடிமகள் போன்ற பொறுப்புக்கள்.. எனது பாதையின தடைகளல்ல படிகள்.

அதை நாம் உணர்ந்து பகலவனாய் பவனி வருவோம்.. குளிர் நிலவாய்.. துயில் கொள்வோம்.

க்ரீடங்களை சுமந்த இந்நாட்டின் மன்னராவோம்..

ஸ்பைசி கண்ணம்மா..

எனது வெற்றிகள் எனக்கு அடுத்து.. அடுத்து என்ன... என்ற ஆர்வமாக தான் மாறும்.. எனது சாதனையா.. நான் எதையும் நினைப்பதில்லை என்பதால் ..

சுதந்திரம் பற்றிய எனது உணர்வைப் பகிர்ந்து இருக்கிறேன்.

கண்ணம்மா பேபி.. டாபிக் அ குழப்பிருந்தா... மன்னிச்சுருங்க..
😁😁😁😁😁😁😁
 
அக்கா 😍😍 சூப்பர் கா.. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.. சுதந்திரம் அப்படீங்கற ஒற்றை வார்த்தைக்கு எத்தனை அழகான வாக்கிய விளக்கம்.. 👏👏👏

அருமை அக்கா... பெண்களின் பெருமையையும் அவளின் சக்தியினையும் வெளிப்படுத்தும் உங்கள் வார்த்தைகள் மிக அழகு 😍😍

உங்கள் ஆர்வம் மென்மேலும் வளர்ந்து வெற்றியின் உச்சிகள் பல நீங்கள் காண வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்..

நம் தளம் சார்பாக அட்வான்ஸ் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அக்கா 🇮🇳
 
நன்றி பேபி.. வாழ்த்துக்களுக்கும்.. எனை பாசத்துடன் கருத்துப் பகிர அழைத்து.. எனது கிறுக்கல்களை அனுமதித்ததற்கும்.

சுதந்திரத்தை கொண்டாடுவோம் .. எந்நாளும்😍😍😍👍👍👍👍
 
Top