All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானுவின் "மௌனம் ஏனடி கண்மணியே...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மொத்தமாக உடைந்த ஸ்ரீ, “ எனக்கு உங்க பணம் எதுவும் தேவை இல்லை .. நான் சொன்னது ஒரு நாள் நடக்கும் .. இந்த உறவு , காதல் , அன்பு இது எல்லாத்தையும் நீங்க புரிஞ்சுக்குவீங்க. அப்போ நீங்க ரொம்ப தவிப்பீங்க.. அப்படி தவிக்குறதை பார்த்து ஆறுதலுக்கு கூட உங்க பக்கத்துல ஒரு உண்மையான ஜீவன் கூட இருக்காது.. இதோ இப்போ செக் எடுத்துக்கோன்னு சொன்ன அந்த பணம் , உங்களை ஒரு வினாடிக்கு கூட ஆறுதலை தராது .. இது என்னோட சபதம் , சாபம் எப்படி வேணும்ன்னாலும் வச்சுக்கோங்க.. இனி என்னோட வாழ்க்கைல குறுக்க வராதீங்க..” என்று ஆதங்கத்துடன் , நிமிர்வுடன் கூறியவள் , கடைசியில் அழுது கரைந்தாள்.


“சாபம் .. அப்படியே நீ சாபம் குடுத்து பலிசுட்டாலும்... நான் ரிஷி டி .. தே க்ரேட் பிசினஸ் டைகர் ரிஷி.. உன்னை மாறி எத்தனை பொண்ணுங்களை பார்த்து இருப்பேன் .. இப்போ நீ கேட்டுக்கோ.. எல்லாருக்கும் தெரிஞ்ச பிசினஸ் மேன் ரிஷியோட முகத்தை பார்த்து இருப்ப , பொண்ணுகளுக்கு மட்டும் தெரிஞ்ச என்னோட இந்த முகத்தையும் பார்த்து இருப்ப .. இனி நீ என்னோட மூன்றாவது முகத்தை பார்ப்ப.. இது என்னோட சேலஞ்.. நீயே என்னை தேடி வருவ.. என்னோட கால்ல விழுந்து மடிபிச்சைஎடுப்ப.. நோ நோ ... இந்தளவுக்கு எளிதான சபதம் குடுத்த எப்படி.. நீயா வந்து என்னோட கால்ல விழுந்து கெஞ்சுவ.. அப்போ உனக்கு இந்த உலகத்திலேயே உனக்கு வாழுறப்போவே நரகத்தை காமிப்பேன் .. கூடிய சீக்கிரம் நீ நரகத்தை நேர்ல பார்க்க தயாரா இரு .... “ என்று அவளை வெளியே தள்ளி கதவை சாத்தினான்.

அவன் வெளியே தள்ளியதை உணராமல் , அவனது வார்த்தைகளிலேயே உழன்று கொண்டு இருந்த ஸ்ரீ , தனது நிலையை எண்ணி பரிதாபமாக தன்மீதே கழிவிரக்கம் கொண்டாள்.

‘ லெட்ஸ் ஸீ மிஸ்டர். ரிஷி.. நான் உன்னை எந்த அளவுக்கு காதலிச்சேன்னோ

அந்த அளவுக்கு நான் உன்னை வெறுக்குறேன் ரிஷி.. ‘ என்று தனது காதலை கொன்று புதைத்துவிட்டு வெளியேறினாள்.



*****************************************************************************************************

சந்தோஷமான மனநிலையுடன் , சக்தியை நெருங்கி விட்டோம் , அவளை கண்டுபிடித்துவிட்டேன் .. என்று மமதையில் , மகிழ்ச்சியில் சென்று கொண்டு இருந்தான்.

'லவ் யு சக்தி .. இந்த நிமிசம் வரை நான் உன்னை காதலிக்குறேனு உங்கிட்ட சொன்னதே இல்லை... இப்போ என்னோட உடம்புல இருக்க ஒவ்வொரு செல்லும் உங்கிட்ட என்னோட காதலை சொல்ல துடிக்குது .. ஆனால் நான் இதை உங்கிட்ட சொல்லுறதுக்கு நீ என்னோட பக்கத்துல இல்லையே ..

ஒருதடவை நீ என்கிட்ட வந்துட்டா போதும் .. அதுக்கு பிறகு யாராலயும் உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது ' என்று மனதில் காதலுடன் , சென்று கொண்டு இருந்தான்.



நாம என்னதான் வேகமா ஒரு கணக்கு போட்டாலும் , விதி நம்மளை விட வேகமா ஒரு கணக்கு போட்டு , நமக்கு முன்னாடி பெரிய பிளானை வச்சு காத்துகிட்டு இருக்கும் .. அதுதெரியாம ரிஷி , இந்த அளவுக்கு நம்பிக்கையோட போறான்..





ரிஷி மருத்துவமனைக்குள் நுழைந்து , நேராக தலைமை மருத்துவரின் அறைக்குள் நுழைய , அவனை தடுத்தபடி காவலாளிகள் இருக்க , உள்ளே நுழைந்ததும் அவன் நேரடியாக , ' where is my sakthi ? ( எங்கே என்னோட சக்தி )' என்று கர்ஜித்தான். அவனது தோற்றமும் , கர்ஜனையும் தலைமை மருத்துவரை ஒரு நிமிடம் கதி கலங்க வைத்துவிட்டது. அந்த மருத்துவர் , தலையில் வழிந்த வியர்வையை தனது கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு, அவனை பார்த்து,

“ ஹூ இஸ் சக்தி?” என்று நிதானமாக கேட்டார்.



“ஒன் வீக் முன்னாடி ஆக்சிடென்ட் ஆகி இங்க கொண்டு வந்து ஒரு பொண்ணை அட்மிட் செஞ்சு இருந்தாங்க. அவங்க பேர் தான் சக்தி .. என்னோட சக்தி ..” என்று அடக்கபட்ட ஆத்திரத்துடன் உறும ,

“ஓ தட் ஆக்சிடென்ட் கேஸ்... அவங்க இறந்து 2 நாள் ஆச்சு.. அப்போவே அவங்க உறவுகாரங்க வந்து பிணத்தை வாங்கிட்டு போயிட்டாங்க..”



' noooooooooooooooooooooooo ' என்று தன்னுடைய வலிமையை அங்கே இருந்த மேஜை மீது காட்ட , மேஜை மீது இருந்த கண்ணாடியால் ஆன இடங்கள் நொறுங்க அவனது கைகளில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.



“கண்ட்ரோல் யுவர்செல்ஃப்..” என்று டாக்டர் அறிவுரை கூற ,



'இந்த மாறி நடக்க வாய்ப்பே இல்லை.. அவள் என்னை விட்டு போயிருக்க மாட்டாள்.. இங்க இங்க தான் எங்கேயோ இருக்கா '...



என்று தனது ரத்தம் வழிந்த கையை எடுத்து தனது இதயத்தை தடவி கொடுத்தபடி , நடக்க தொடங்கினான்.





அவன் தான் ரிஷி தி கிரேட் பிசினஸ் டைகர் என்று யாராவது கூறினால் சத்தியமாக மற்றவர்களால் அதை நம்பமுடியாது.. அந்த அளவுக்கு சக்தியின் மீது பைத்தியமாக இருந்தான். காதலிப்பது சுகம் .. காதலிக்க படுவது அதைவிட சுகம்..



தன்னுயிரைவிட ,காதல் துணையின் உயிரை தேடி அலையும்



ரிஷியின் காதலை அவனைப்பற்றி அறிந்த யாராலும் நினைத்து பார்த்துஇருக்க முடியாது.



சக்தி இல்லை, என்று அவன் மனதில் டாக்டர் கூறிய வார்த்தையே எதிரொலிக்க, காரை எடுத்தவன் மிக அதிகமான வேகத்தில் தாறுமாறாக ஓட்டிக்கொண்டு சென்றான்.



‘எப்படி நீ என்னை விட்டு போகலாம் .. உனக்காக நான் இங்க ஒருத்தன் தவிய தவிக்குறேன்னு உனக்கு தெரியலையா.. என்னோட உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லையா.. எங்கடி இருக்க ...... என்னை உயிரோட கொன்னுட்டியே.. இனி நீ இல்லாத உலகத்துல நான் எதுக்கு டி இருக்கணும் .. நானும் உன்னோடவே வருகிறேன்.. வந்துகிட்டே இருக்கேன் .. ‘ என்று வேகத்தை கூட்ட, அவனது கார் , ஒரு பள்ளத்தில் விழுந்து வெடித்து சிதறியது.

அங்கே மருத்துவமனையில் , மனப்போராட்டத்தில் இருந்த சக்தி, ‘ போகாத ரிஷி.. என்னைவிட்டுட்டு போகாத .. நான் உயிரோட தான் இருக்கேன் .. உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன் .. சீக்கிரமே உன்னை தேடி வருவேன்.... எந்தவிதமான தப்பான முடிவுக்கும் போகாத டா .. நீ இல்லாம என்னால வாழவே முடியாது .. உன்னோட உயிரை அந்த எமனே வந்தாலும் பறிக்க முடியாது. என்னோட உயிர் போன மறுநிமிஷம் தான் எமன் உன்னை நெருங்க முடியும்.. ‘ என்றுஅவள் மனதில் ரிஷியுடன் கதைத்துக்கொண்டு இருக்க , அவளது இதயம் அவனக்கு தனது இதய துடிப்பின் மூலம் தூது அனுப்பியது.

ரிஷியின் உயிர்(சக்தி ) அவன் கைவசம் வருமா ?

மறுநாள் காலையில் , அனைத்து செய்தித்தாள்களிலும் , 'இளம் தொழிலதிபர் ரிஷி ஒரு வாகன விபத்தில் இறந்துவிட்டார்' என்ற தலைப்பு செய்தி இந்தியா முழுக்க பரவியது.


இந்த செய்தியை கேட்டதும் , இரண்டு மனங்கள் சந்தோஷத்தில் மிதக்க , தன்னவனுக்கு ஏதோ ஆபத்து என்பதை அறிந்த காதல் மனம் , துடித்தபடி , மரணத்துடன் போராடி பலநாட்கள் கழித்து கண்களை திறந்தாள் சக்தி.
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Status
Not open for further replies.
Top