All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணிஸ்ரீ காதலன் கதை திரி

Status
Not open for further replies.

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 26:

கோழிகுஞ்சாட்டம் ..
உன் கையில் சுருண்டு நான் கிடக்கணும்...!

மஞ்சமே தேவை இல்லை
உன் மார்பில் மயங்கி நான் கிடக்கணும்.....

நீ....
பிச்சி பிச்சி என்னைத்திண்ண
பித்து நான் பிடிக்கணும்..

பிறந்த பலனெல்லாம்..
உன் அணைப்பிலே உணரனும்..

இச்சி இச்சி நீ கொடுக்க
நான் இன்பமா லயிக்கணும்..

இன்னதுன்னே தெரியாம
உன் உலத்துல நான் தொலையனும்....

இறுக்கமா நான் இருந்தா
உன் இதழொற்றல் கொடுக்கணும்..

இன்பமா நான் இருந்த
எனக்கு இனக்கமா நடக்கணும்...

வினாடி கூட பிரியாமல் உன் நூலாடையில்
நான் புதையனும்...

நோகாமல்,கோணாமல்... அதை நீ ரசிக்கணும்.....

இப்படி நொடிக்கு நூறு ஆசை இருக்க ... நூத்த கிழவி ஆகும்
முன்னே வந்துவிடு என் மாமா...

அவளை ஒரு நொடி கூட யோசிக்க விடாமல் தன் காரியத்தை கச்சிதமாக முடித்தான் விஸ்வா... அவன் அந்த செயினை போடும் வரையிலும் அவனுக்கு பதட்டம்தான்.

ஆனால் அவன் நினைத்த படி எதுவும் இல்லாமல் நல்ல படியாக அவர்களின் திருமணம் அரசு பதிவோடு முடிந்தது.
எல்லோருடைய பார்வையும் வித்யாசமாக தன் மேல் படுவதை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அகலி.

அவன் அந்த செயினை கழுத்தில் போடும் போது அவள் உடலும் ஒரு முறை அதிர்ந்தே அடங்கியது.அவள் மனதில் பதிந்து போன விஷயங்கள் அதை தாண்டி அதிகம் யோசிக்க விடவில்லை.

அகலியின் உடல்நிலை ஓரளவு பரவாயில்லை என்று ஜனனி சொல்லவே அவளை டிஸ்சார்ஜ் செய்து எல்லோரும் தமிழின் வீட்டிற்கு வந்து விட்டனர்.

எல்லோரும் ஹாலில் அமர்ந்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது

சுந்தரி அகலியின் அப்பாவை நோக்கி ” அண்ணா எங்க பூர்வீக ஊருல வைகாசி திருவிழா ஆரம்பிக்க போறாங்க..ஒரு வாரம் முழுசும் ரொம்ப விசேஷமா இருக்கும்,

நீங்க எல்லோரும் குடுப்பத்தோடு கண்டிப்பா வரணும்,நாம எல்லோரும் போவதற்கு நான் ஜனனி அப்பாவை ஏற்கனவே ஏற்பாடு பண்ண சொல்லிட்டேன்,அகலிக்கும் மனசுக்கு ஒரு மாறுதலா இருக்கும் ”என்றார்.

ரத்தினம் “ இல்லமா அங்க எல்லாம் போட்டது போட்ட படி கெடக்கு... பாப்பாக்கு உடம்பு முடியலனோனதான் பார்க்க வந்தோம்... நான் ,அண்ணன், மூர்த்தி.மூன்றுபேரும் மூனுபக்கம் போனதா சமாளிக்க முடியும்,

மூர்த்தி” ஆமாங்க நான் பெத்துவச்சிருக்குறத தார் குச்சி வச்சி பின்னடியே விரட்டுனாதான் வேலை பார்ப்பான்,இல்லை படுத்து தூங்கிட்டு அரைபயலுவலோட சுத்திக்கிட்டு இருப்பான்,

அவனும் லோன் விஷயமா அலைஞ்சிட்டு இருக்கான் ,” என்றார்.

( அவன் சீன்ல இல்லனாலும் அவனை கலாய்க்காம இருக்கமாட்டீங்க போல பாவம் ராஜா).

சுந்தரிக்கும் அவர்கள் சொல்வது நியமாகவே பட்டது,தன் கணவனும்,தன் பிள்ளைகளும் தொழில் தொழில் என்று அலைவதை பார்த்தவர் ஆயிற்றே.

சரி என்று ஒத்துக்கொண்டவர்.” திருவிழாக்கு ஒரு நாள் முன்னாடியேவாவது கண்டிப்பா எல்லோரும் வரவேண்டும்" என்றும்

"இப்ப நாங்க அகலியையும் ,சந்தோஷையும் அலைச்சிக்கிட்டு போறோம்”என்றார்.

உடனே குறுக்க புகுந்த விஸ்வா” அம்மா சந்தோஷுக்கு கூட இங்க நிறைய வேலை இருக்குமா,அவன் கம்பெனில அவனுக்கு கொடுத்த வேலையை முடிச்சிட்டு ,அவன் அந்த வேலையை ரிசைன் பண்ண போறான்,இல்ல டா சந்தோஷ்” என்று அவனை அர்த்த பார்வை பார்த்தான்.

“நான் எப்படா அதெல்லாம் உன்னிடம் சொன்னேன்..நீ மட்டும் இல்லாமல் நான் மட்டும் எப்படி டா என் வேலையை பார்ப்பேன்,வேலையே உன் கம்பெனில தானடா” என்று நினைத்தவன்
அவனை முறைத்துக்கொண்டே “ ஆமா விஸ்வா” என்றவன்.

சுந்தரியிடம் திரும்பி அவன் சொன்ன அத்தனை விஷயங்களுக்கும் பெப்பர் ,காரம் எல்லாம் போட்டு கொஞ்சம் தூக்கலாகவே சொன்னான்,அவரும் நம்பி விட்டார். .

ஜனனியும் அவளுக்கு நிறைய அப்பாய்ன்மென்ட் இருப்பதால் 2 நாட்கள் கழித்து வருவதாக ஒப்புக்கொண்டாள்.

கடைசியாக அகலி ,விஸ்வா,முருகன்,சுந்தரி,டாக்டரிடம் கான்செல் செய்துவிட்டு கண்ணனையும் அழைத்துச்செல்வதாக முடிவுசெய்யப்பட்டது.

இவ்வளவு நேரம் வெறும் பார்வையாளராக இருந்த அகலிக்கு ஒன்னும் புரியவில்லை. மாமாவின் குடும்பத்தார் தீடீரென்று காட்டும் இவ்வளவு நெருக்கம்,அதேபோல் தன் குடும்பமும் நடந்து கொள்வது எல்லாம் வித்யாசமாக பட்டது.

கடைசியாக தான் மட்டும் அவர்களின் ஊருக்கு செல்லவேண்டும் என்றதும்,முனுக்கென்று கண்களில் கண்ணீர் வர “ நான் எங்கேயும் வரல” என்று அழுதுக்கொண்டே சொன்னாள்.

அவளின் அழுகையில் விஸ்வாவின் இலகு நிலை காணாமல் போய் குற்ற உணர்ச்சி தலை தூக்க அது கோபமாக உருமாறியது.

அவன் கோபமுகத்தை பார்த்தவள் அனிச்சை செயலாய் “ சந்தோஷ் “ என அவனிடம் செல்ல எழவே

விஸ்வா “ இருக்க இடத்த விட்டு நகர்ந்த நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்றான்.

அவள் பயபார்வையை பார்த்த சந்தோஷ் ”குழந்தை பயப்படுற டா விஸ்வா” என்க

டேய்”இன்னொரு தட இவளை கொழந்தைன்னு சொன்னா, உன்னை கொன்னுடுவேன் பாத்துக்க ,குழந்தையாம் குழந்தை,

அவளை சரி பண்ணனும் டா,அதுக்கு கொஞ்சிக்கிட்டு இருந்தா லாயக்கு படாது,முன்னாடியெல்லாம் எப்படி இருந்தவள் துரு துருன்னு"

அப்பெல்லாம் உன் குழந்தை என்னை எவளோ டார்ச்சர் பண்னிருக்கானு தெரியுமா, நான் தான் இவளுக்கு பயந்துகிட்டு எங்கயாவது ஒளிஞ்சிப்பேன்,

நீ நல்ல பெங்களூருல போய் எண்ஜாய் பண்ண,இவள்ட என்னை கோத்துவிட்டுட்டு,

(ரொம்ப பாதிக்க பட்டுருப்பானோ,
அந்த லவ் டார்ச்சர் தானடா விச்சுகுட்டி நான் எதுக்கு இருக்கேன் எல்லோரிடமும் நான் சொல்றேன்....என்னா அடி.. குழந்தையாம் குழந்தை...ம்க்கும்)

என்று கோபத்தில் ஆரம்பித்தவன் சிரிப்புடன் முடித்தான்.அங்கு உள்ள விஸ்வாவின் குடும்பத்தை தவிர பழைய அகலியின் டார்ச்சர் தெரியும் என்பதால் சிரிப்புடன் அமைதியாகி விட்டனர்.

அகலியின் பக்கம் திரும்பியவன் “என் கூட நீ ஊருக்கு வர யாரு வந்தாலும் வரலானாலும்,இன்னொரு தடை உன் கண்ணுல கண்ணீரோ,பயமோ தெரிந்தது இந்த விஸ்வா உயிரோட இருக்கமாட்டான்”.

அந்த வார்த்தையில்,அந்த பார்வையில் சொன்னதை செய்வேன் என்ற உறுதியை தவிர வேறொன்றும் இல்லை.

அவன் சொல்லிமுடித்தவுடன் அவள் கண்களில் கண்ணீர் அணைப்போட்டது போல நின்றது...அந்த பயத்தை கூட மிகவும் சிரமப்பட்டு கண்களில் தெரியாமல் மறைத்தாள்.

“அம்மா நீங்க கிளம்புங்க, வீட்ல போய் ட்ரெஸ்லாம் பேக் பண்ணிட்டு தமிழ் வீட்டுக்கு வந்துடுங்க,நான் அண்ணனுக்கு இன்னைக்கு செக்கப் இருக்குல அவனை நான் ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போய்ட்டு வந்துடுறேன்” என்றான்.

ஜனனி நேராக ஹாஸ்பிடல் செல்ல சுந்தரியையும்,முருகனையும்,அபார்ட்மெண்ட் வாசலில் இறக்கிவிட்டவன் ,” அப்பா அண்ணாவை கொஞ்சம் ரெடியா இருக்க வைங்க,நான் ஒரு அரை மணிநேரத்தில் வந்துடுறேன்” என்றவன் சென்றுவிட்டான்.

வீட்டுக்கு வந்த சுந்தரிக்கு தன் பெரிய மகனின் நினைவு வரவே..

“ ஏங்க கண்ணனோட இந்த நிலைமைக்கு நான்தானங்க காரணம்,இவளோ முட்டாளா இருந்து இத்தனை வருசமா இப்படி என் புள்ளைங்களோட வாழ்க்கையை பாலாக்கிட்டேனேங்க” என்று அழுத படி சொன்னார்.

முருகன் “ நூறு சதவிகிதம் நீ மட்டும் காரணம் இல்லை நானும்தான், அன்னைக்கு நீ செஞ்ச எல்லாத்தையும் நான் தடுத்திருந்தேனா இன்னைக்கு இந்த நிலமை யாருக்கும் வந்திருக்காது,ஆனால் விதியை மீறி,ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதை மீறி நம்மால எதுவும் செய்ய முடியாது சுந்தரி”என்றார்.

கண்களை துடைத்துக்கொண்டு தங்கள் பெரிய புள்ளையின் ரூமிற்கு சென்ற சுந்தரி நேராக சென்று அங்கு உள்ள ஒரு பெண்ணின் போட்டோவின் காலில் விழுந்து கதறிவிட்டார்.

“என்னை மன்னச்சிடுமா உன் உயிரை பரிச்ச பாவி நான் மாசு மறு இல்லாமல் மாமி மாமினு எவளோ அசிங்க படுத்துனாலும் சொட்டு மரியாதை குறையாம பேசுவியே உன்னை கொடுமைபடுத்த நான் எப்படித்தான் துணிஞ்சேன்னு எனக்கு தெரியல,

அன்னைக்கு நான் உன்னை பேசும் போதெல்லாம் என் புருஷன் உயிருத்தான் பெருசா தெரிஞ்சது,ஆனால் உன்னை கொன்னுட்டு இப்படி என் புள்ளைய பட்டமரமா நிற்க வச்சிட்டேனே, நான் பாவி,

நீ செத்து போனப்ப கூட இனி என் புருஷன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைனு சுயம்நலமா நினைச்சிட்டேனே என் தாயி என்னை மன்னிப்பியா..

என் உயிர எடுத்துக்கிட்டு உன் உயிரை கொடுத்து அந்த கடவுள் என் புள்ளையோட வாழ்க்கையை திருப்பி கொடுப்பானா” என புலம்பி கொண்டிருந்தார்.

இதை எல்லாம் தடுக்க முடியாமல் வேதனையோடு அமைதியாக நின்றார் முருகன்.

அவர் அழுது புலம்பிக்கொண்டு இருப்பது அவன் காதில் கேட்டாலும் அவன் எதுவும் செய்யவில்லை.

மனைவி இறந்தவுடன் சிறிது நாட்கள் தன்னுணர்வு இல்லாமல் இருந்தவன் கொஞ்சநாட்கள் கழித்து தெளிந்தான்,
தன்னை அனைவரும் நோயாளி போல் பார்க்கவும் அதையே தனக்கான அடையாளமாய் மாற்றிக்கொண்டான்.

ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி ,,அவள் வாழ்க்கையை அழித்த தனக்கு இது தேவையான ஒன்று தான் என்று தனிமையை அவன் நிரந்தர துணையாக்கி கொண்டான்.

சில நேரங்களில் தன் அம்மா தான் செய்த தவறை உணராமல் ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டதை உணராமல் இருப்பதை பார்க்கும் போதுதான் அவன் தன்னையும் மீறி கோபத்தில் எல்லாவற்றையும் போட்டு உடைப்பது கத்துவது எல்லாம்.

அப்படிபட்ட தன் அம்மா இன்று தான் செய்த தவறை உணர்ந்து கதறும் போது அவன் மனதில் ஏதோ ஒன்று இதமாவதை உணர்ந்தான்.
அவர் சொன்ன கடைசி வார்த்தையில் அவனுமே உடைந்துவிட்டான்.

எப்பொழுதுமே அன்பை மட்டும் காட்டும் அம்மா ,தன் மனைவியிடம் கோபமாக நடந்துகொண்டாலும் அவனிடம் பாசமாகவே நடப்பார் அதற்குமேல் அவனாலும் முடியவில்லை.

வேகமாக தன் இடத்தைவிட்டு எழுந்தவன் தன் அம்மாவின் அருகில் அமர்ந்து” அம்மா போதும் விடுங்க,அழாதீங்க,

அவளும் இவளோ கோழையா இருந்துருக்க வேண்டாம் விடுங்க, நீங்க அழாதீங்க,என்று தன் தாயை சமாதானப்படுத்தினான்.

சில வருடங்களுக்கு அப்பறம் தன் மகனின் குரலை கேட்டவரின் சந்தோசம் அதிகரிப்பதற்கு பதிலாக துக்கம் அதிகமாகி அவர் இன்னும் அழுதுவிட்டார்.

பின் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டு சமாதானம் சொல்லி,சுந்தரி கண்ணனுக்கு சாப்பாடு ஊட்ட அதை முருகன் நிறைவுடன் பார்த்து கொண்டிருக்க, விஸ்வா வந்துவிட்டான்,

தன் அண்ணன் ஹாலில் அமர்ந்து கொண்டு தன் அன்னையிடம் சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருந்ததை பார்த்துவிட்டான்.

தன் அண்ணனின் கண்களில் எப்பொழுதும் தெரியும் ஒரு வெறுமை,வெறுப்பு எதுவும் இல்லாமல் தெளிவாக இருக்க அதை பார்த்த விஸ்வாவிருக்கு எல்லையில்லா சந்தோஷம்

அவனை கட்டிக்கொண்டு முத்தத்தால் அர்ச்சித்துவிட்டான் .

“என் சின்ன மருமகள் வந்த நேரம் என் புள்ளை எனக்கு கிடைச்சிட்டான் “என்று முகம் முழுவதும் சந்தோஷத்துடன் நடந்ததை பகிர்ந்துகொண்டார் சுந்தரி.

“சின்ன மருமகளா , டேய் விச்சு என்று அவன் வயிற்றில் குத்த, அவன் சிரித்து கொண்டே நடந்ததை கூறினான்.

கண்ணன் மிகவும் சிரமப்பட்டு தன் அம்மாவின் மேல் வரும் கோபத்தை விரட்ட போராடி வெற்றியும் கண்டான்.

மாலை வீட்டிற்கு வந்த ஜனனியும் கண்ணனை கண்ணீரால் அர்ச்சித்து விட்டாள்.

அதன் பின் வேலைகள் மல மல வென்று நடந்தது.,கண்ணனுக்கு நார்மல் செக்கப் செய்துவிட்டு விஸ்வா தனக்கு தேவையான சில விவரங்களை அந்த டாக்டரிடம் தெரிந்து கொண்டு மறுநாள் குடும்பம் முழுவதும் தமிழின் வீட்டிற்கு செல்லலாம்.. என் நினைத்து கண்ணனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றான்.

சென்றவனின் வேதனையை அதிக படுத்தியது அங்கு அவன் தெரிந்து கொண்ட விஷயங்கள்..உயிரோடு இருக்கும் போது இதய அறுவை சிகிச்சை செய்தது போல துடித்து போனான் விஷ்வா..

நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் மல்லிப்பூ பட்ட அத்தனை கஷ்டத்திற்கும் தானேதான் காரணம் என்று தெரிய வந்த தருணம் அப்ப அவன் கண்ட வலி வார்த்தையில் அடங்காது...

ஆணவனின் சர்வமும் அடங்கியது.தொண்டை அடைக்க சுயம் தொலைக்க கடினப்பட்டு தன்னை கட்டுக்கொள் கொண்டுவந்தவனின் மனம் சீக்கிரம் தன்னவளை சரி செய்ய வேண்டும் என்று சபதமே எடுத்தது..

நேற்றே அகலியின் குடும்பம் ஊருக்கு சென்றுவிட்டதால் தமிழ், காவியாஅகலி,சந்தோஷ் மட்டுமே இருந்தனர்.

சந்தோஷிடமும் ,தமிழிடமும் கண்ணனை அறிமுகப்படுத்திகியவன் சந்தோஷிடம்” டேய் எங்க டா என் பொண்டாட்டி” என்று கேட்டான்,

சந்தோஷ்” மச்சான் தேனுக்குட்டி டா” என்று விஸ்வாவின் பின்னாடி பார்த்து பதறினான்.

விஸ்வாவிருக்கு இதயம் ஒருமுறை நின்று துடிக்க திரும்பி பார்த்தான்.

அங்கு யாரும் இல்லை என்றதும் சந்தோஷை முறைக்க” அது எப்படி எப்படி என்னை கழட்டிவிட்டுட்டு ,உன் ஆபிஸ் வேலையும் என் தலையில கட்டிட்டு ஜாலியா போறல்ல அதுக்கு தண்டனை “என்றான்.

அவனை துரத்தி அடித்து கொண்டிருக்க அகலி வந்தாள்.

முழு வெள்ளை நிற சுடிதாரில் கையில் 2 நாட்களுக்கு முன் கிழித்து கொண்டதால் உண்டான கட்டுடன் தலைமுடியை இரண்டு பக்கமும் எடுத்து கேட்ச் கிளிப் போட்டு ,
கருப்பு நிற கடுகளவு போட்டுட்டேன் சிறு குங்கும கீற்றுடன்

அவன் அணிவித்த சிறிது தடிமனான தாலி செயின் அவளின் குட்டி கழுத்திருக்கு பெரிதாக தெரிய முகத்தை நிதர்சனமாக வைத்துக்கொண்டு வந்த தன்னவளை விழி ஆகலாமல் பார்த்தான்.

அவளை பார்த்ததும் தன் மல்லிப்பூவை தான் தவிக்கவிட்ட தருணங்கள் நியாபகம் வர நெருப்பில் நின்றான்..இருந்தும் தானும் கலங்கினால் யார் அவளை தேற்றுவது என்று தன்னை சமாதான படுத்துக்கொண்டான்...

வந்தவள் இயல்பு போல் சந்தோஷின் மணிக்கட்டை பிடித்துக்கொண்டு நின்றாள்.

அவன் பதட்டத்துடன் விஸ்வாவின் பெற்றோரை பார்க்கவே அவர்கள் இதமான சிரிப்புடன் “ அவள் உனக்கு குழந்தை மாறின்னு எங்களுக்கு தெரியும் சந்தோஷ்” என்றனர்.

அவனுக்கு நிறைவாக இருந்தது,அதே நிறைவுடன் ஜனனி பார்க்கவும் அவள் கண்களும் அதையே சொன்னது.

அகலியை கண்ணனுக்கு அறிமுகப்படுத்திவிட்டு அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.

சந்தோஷ் ஜனனியை வீட்டில் ட்ராப் செய்கிறேன் என்று சொல்லிவிட்டான்.

விஸ்வாவை காரை ஓட்ட சொல்லிவிட்டு,கண்ணன் முன்னேயும் ,முருகன் ,சுந்தரி, அகலி மூவரும் பின்னால் அமரந்தனர்.

விஸ்வா சுந்தரியிடம் “ அம்மா அவள் என் பொண்டாட்டி மா,நேத்துதான் எங்களுக்கு கல்யாணம் ஆகிருக்கு கொஞ்சம் ரொமான்ஸ் பண்ண விடாம என்ன இப்படி கார் ஓட்ட சொல்றீங்களே “ என்று சண்டை போட்டு கொண்டிருந்தான்.

( மெதுவாதான்).

“விச்சு இதை நீ உன் குட்டிமாட சொல்லி அவள் என்னைக்கு பயப்டாம வெட்கப்படுறாளோ,அன்னைக்கு உன் பொண்டாட்டி உன் கன்ரோல்.அதுவரை என் மருமகள் என் கூடத்தான்” என்றார்.
விஸ்வா தன் தாயை பொய்யாக முறைத்துக்கொண்டே காரை கிளப்பினான்.


வருவாள்..
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 27.

விளக்கு அணைக்கும் நேரம்மேலாம் விரும்பி களித்தேன் உன்னோடு....

மனம் நோகாமல் மனைவியாய் வாழ்ந்தேன் உன்னோடு...

மானப்பெண்ணாய் இருப்பதை விட உன் மணப்பெண்ணாய் இருப்பதே சிறந்தது என்று..

கொட்டிகிடக்கும் வார்த்தைகளில் கிழிந்து தொங்கும் என் இதயம் என்றாவது புரியுமா உனக்கு....

அடித்து நொறுக்கும் மழையிலும் புழுங்கி சாகும் என் மனம் புரியுமா உனக்கு என்றாவது ....

நூறு டிகிரி வெயிலிலும் எதிர்காலத்தை பற்றிய என் நெஞ்சின் குளிர் புரியுமா உனக்கு என்றேனும் .....

பயம் சுமந்த மனதால் இறக்க முடியவில்லை என்னால்....

உனை சுமந்த உயிரால் வாழ முடியவில்லை என்னால்....

இரண்டு நாட்கள் அதன் போக்கில் பரபரப்பாக சென்று கொண்டிருக்க மூன்றாம் நாளை 12 மணி அளவில் சந்தோஷ் ஒரு முக்கியமான பைலை எடுக்க விஸ்வாவின் அப்பார்ட்மென்ட்டிற்கு சென்றான்.

அவன் காலேஜ் படிக்கும் போது விஸ்வாவோடு தான் தங்கியிருந்த அதே அப்பார்ட்மெண்ட்.

காலிங்பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க அவனின் அவள், கையில் மசாலா பூசிய தோசை கரண்டியுடன் முடியை தூக்கி சுற்றி கேட்ச் கிளிப் போட்டிருக்க முனியில் உள்ள முடி மட்டும் அவள் தலைக்கு மேல் கிரீடம் போல் இருக்க

கருப்பு நிற ஸ்கர்ட் முட்டி வரை இருக்க அதே கருப்பு நிற டீசேர்ட்டில் உதயமானாள்

அவளின் லேசாக பூசிய உடம்பிற்கு அந்த உடை அதிக கவர்ச்சியை கொடுக்க” ஹாய் சந்து என்ன வீடு வரைக்கும் வந்துருக்க என்ன விஷயம் ” என சந்தோசமாக கேட்டாள் ஜனனி.

ஏற்கனவே பலவருடங்களாக ஒரு தீண்டல் கூட இல்லாமல் பட்டினியாக இருப்பவன் யாரும் இல்லாத தனிமையில் தன்னவளை பார்க்க அவனின் இளமை உணர்வுகள் எல்லாம் விழித்துக்ககொள்ளவில்லை என்றால் தான் அதிசயம்.

அகலியும் இதேபோல் உடை அணிவாள் தான்.அவள் எப்படி இருந்தாலும் பிறந்த 3 நாட்களில் தன் விரலை இறுக பிடித்துக்கொண்டு விடாமல் இருந்த அந்த குழந்தைதான் அவனுக்கு

ஆனால் ஜனனியோ தன் இளமையை உணரவைத்தவள் ,தானும் காதலிக்கபடுகிறோம் என்ற கர்வத்தை கொடுத்தவள்,

ஒருவார்த்தை கூட செல்லாமல் பிரிந்து சென்றாலும் தனக்காக குறையாத காதலுடன் காத்திருப்பவள் ,

தான் திரும்பி வந்த போதும் ஒரு வார்த்தை கூட கேட்காமல் தன்னை, தன் சூழ்நிலையை புரிந்து கொண்டவள்.
அவன் தன் யோசனையில் உழன்று கொண்டிருக்க அவனை பிடித்து வேகமாக “ டேய் பிளாக்கி”உலக்கினான்.

அதில் சிந்தை களைந்தவன் அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து “ ஏய் குண்டு என்ன டி இது ட்ரெஸ் ,இப்படி எல்லாம் ட்ரஸ் பண்ண அத்தான் காலி” என்றான்.

அப்பொழுதுதான் தன் உடை நினைவு வந்தவளுக்கு வெட்கம் பிடுங்கி திங்க..வேகமாக அங்கு உள்ள சோபாவில் உட்கார்ந்தவள்

இடுப்பிற்கு கீழே இறங்காத டீசேர்டையும் ,முட்டிக்கு கீழே இறங்காத ஷ்கேர்ட்டையும் இரண்டு கைகளாலும் கீழே இறக்கி விட அவள் முயற்சி செய்து கொண்டிருக்க

அதை பார்த்ததும் அவளை சீண்டும் எண்ணம் அதிகமாக “ஏய் தக்காளி கீழே இறக்குறனு மேலே கலண்டுக்க போகுது டி” என்றான்.

அவன் என்னவோ எதார்த்தமாகத்தான் சொன்னான் அதை கற்பனையில் நினைத்து பார்த்தவளுக்கு “ஐயோ” என்று இருக்க

“ நான் உனக்கு டீ எடுத்துட்டு வரேன்” என்றவள் ஒரே ஓட்டமாக கிச்சனுக்குள் ஒழிந்தாள்.

அவள் போவதை சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவன் டிவியில் நியுஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

ரொம்ப நேரமாகியும் வராததால் என்னவென்று பார்க்க கிச்சனுக்குள் நுழைந்த்தவன் அவள் சமையல் செய்யும் அழகை பார்த்து மலைத்து போய் நின்றுவிட்டான்.

( மலைத்து போயா இருக்காதே ,நம்ம ஜனனி அவளோ ஒர்த் இல்லையே )

அந்த மலைப்பு“ வாவ் “ என்று இல்லாமல் “வ்வே” என்று இருந்தது. ஆம் அவள் பச்சை மீனை காஸ் அடுப்பில் உள்ள கடாயில் போட்டு அதன் மீது மிளகாய் தூளை அள்ளி போட்டு இன்னும் அதன் மீது உப்பு தூளை அள்ளி போட்டு,

அதை கரண்டியால் புரட்டி போடுவதும் அதை கூர்ந்து பார்ப்பதுவுமாக இருக்க,

அவளை நெருங்கியவன் “ எங்க டி என் டீ” என்றான்.

அவன் சொன்னதும் “ஐயோ “ என்று பக்கத்து அடுப்பை பார்க்க சில்வர் நிற அந்த வெசல் கருமை நிறத்தில் மாறி இருந்தது.அதை வேகமாக அணைத்தவள்

“சாரி சந்தோஷ் மீன் வருக்குற ஆர்வத்துல மறந்துட்டன் “ என்றாள்.

“எது இது மீன் வறுவலாடி உனக்கு” என்றான்.

“ம்ம்ம்ம்” என்று அவனை ஒரு இயலாத பார்வை பார்த்தவள்,”போ சந்தோஷ் நானே சமைக்க தெரியாம கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்,அம்மாவும்,அன்னம்மா அக்காவும் வருக்குற மீன்ல நான் சாப்பிடும் போது காரமும்,உப்பும் தான் தெரியும் ,அதான் நான் ட்ரை பண்ணேன்” என்று தனக்கு சமையலில் டீயை தவிர எதுவும் தெரியாது என்று நிருபித்தாள்.

( பாருடா இந்த பொன்னு சாப்பிட்டு பார்த்தே சமைக்குற அளவுக்கு பெரிய அப்பாடக்கரா இருக்கும் போல அட த்து....)

“அடிப்பாவி “என்று அவளை வேகாமாக விலக்கியவன்..

( டேய் அப்ப நீ பைல் எடுக்க வரலையா?).

ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்த மீனை எடுத்து போட்டவன் தேவையான மிளகாய் தூள்,உப்பு தூள் போட்டு ஒரு முட்டையின் வெள்ளை கருவை அதில் உடைத்து ஊற்றி,நறுக்கிய நான்கு வெங்காயம்,நசுக்கிய பூண்டை போட்டு அரை எழும்பிச்சசை பழ சாரை ஊற்றியவன் நன்று பிசைந்து அதை சிறிது நேரம் மூடிவைத்து விட்டு , அந்த கேப்பில் சாதம் குக்கரில் வைத்து விட்டு,

நறுக்கிய சின்ன வெங்காயம்.தக்காளியை மைய அரைத்து,காய்ந்த மிளகாய், கொஞ்சம் மிளகும் அரைத்து வெங்காயம்.தக்காளி போட்டு தாளித்து அரைத்த தக்காளி சாறை ஊற்றி மீனை போட்டு
மீன் கொழம்பை தாளித்துவிட்டு அவன் ஊறிய மீனை வறுக்க,

அவன் மீன் வறுக்கும் அழகை பார்க்க அவளுக்கு 2 கண்கள் போதவில்லை. அவன் சமைக்க ஆரம்பிக்கும் போதே கையில் நோட்டுடன் வந்தவள் அவன் செய்யும் வேகத்துக்கு இவளால் எழுத கூட முடியவில்லை.

அந்த முயற்சியை கை விட்டவள் தன் கையை கன்னத்தில் வைத்து தன் கருப்பனை வாயை பிளந்து சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

அவன் எல்லா வேலையும் அரை மணி நேரத்தில் முடித்தவன்,அவளை பார்க்க அவள் கையை லேசாக தூக்கி இருப்பதால் அவள் ஸ்கேர்ட்டின் மேல் உட்கார்ந்திருந்த அவள் டீசேர்ட் சற்று தூக்க அவள் தள தள இடுப்பு கண்ணில் பட

அவனின் மோட் ரொமாண்டிக் மூடிற்கு மாற

“ தக்காளி” என்று அவளை நெருங்கியவன் அவள் இடுப்பில் கை வைத்து அருகில் இழுத்து அவள் இதழில் இதழ் பதித்தான்

இல்லை இல்லை தூர்வாறினான் என்றே சொல்லலாம்,

(இந்தாப்ப சந்தோஷ் எங்க வீட்ல கிணறு தூர்வாரனும், கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ண நல்லா இருக்கும்,)

இத்தனை நாள் பிரிவு தன்னவளின் செழுமை,மென்மை , புதிதான சுகம் தன் உடம்பில் அணு அணுவாக பரவும் விதம்,என அனைத்தும் அவனை எங்கோ இட்டு சென்றது.

ஜனனிக்கோ அவள் உயிர் மட்டும் அல்ல அவளின் உடல் உறுப்புகளை எல்லாம் அவன் வாய் வழியே முழுங்குவதை போல் இருந்தது.

தன் உயிர் போனாலும் இந்த சுகம் வேண்டும் வேண்டும் என்று அவள் பெண்மை பறைசாற்ற அவளும் அவனுக்கு வலைந்து கொடுத்தாள்.

ஓரளுக்கு மேல் அவளுக்கு மூச்சி திணற நொடிகள் நிமிடங்களாக ,நிமிடங்கள் மணிநேரமாக அவன் ஆரம்பித்த அதே வேகத்தில் இருக்க அவன் கைகளும் அவள் மேனியின் மென்மையான பகுதியில் பரவ உச்ச சுக வேதனையா?

முதல் அனுபவமா எது என்று தெரியாமல் அவள் அப்படியே மயங்கி விழுந்தாள்.

அவள் மயங்கி விழுந்ததும் ஒரு நொடி விதிர்த்தவன் ,அவளை அப்படியே போட்டுவிட்டு பத்து அடி சென்று நின்றுகொண்டு “ஏய் தக்காளி எழுந்திரி டி, ஏய் ஏய் என்று எழுப்பினான் பயந்துகொண்டே,

(அட கொக்கமக்க முத்தம் கொடுத்துட்டு பண்ற வேலைய பாத்தீங்களா,)

அவன் முத்தம் கொடுப்பதை நிறுத்தியதும் அவள் உடம்பில் உணர்ச்சியின் ஆதிக்கம் குறையவே அரை மயக்க நிலையில்,அவன் நிற்பதும் ,சொல்வதும் கேட்க அந்த நிலையிலும் “என் செல்ல கருவாயன் “ என்று கொஞ்ச தோன்றியது அவளுக்கு.

அவனை கை நீட்டி அருகில் அழைத்தவள் “தண்ணீர்” என்றாள்.
அதன் பின்னே அவன் மூளை வேலைசெய்து அவளின் மயக்கத்தை சரி செய்தது.

அதன் பின் அமைதியாக அவன் இருக்க இவளுக்கு “ஏண்டா மயங்கி விழுந்தோம் “ என்று ஆகிவிட்டது
அது அவர்கள் சாப்பிடும் வரை தொடரவே “இது வேலைக்காவது” என்று நினைத்தவள் சாப்பிட்டுவிட்டு அவன் கேட்ட பைலை எடுத்து கொடுத்தவள் அவன் “கிளம்புகிறேன்” என்று திரும்பும்போது

அவன் கையை பிடித்து தன் பக்கமாக திரும்பியவள் அவன் கன்னங்களில் தன் இரு கையையும் வைக்க அவளின் குளுமையான உள்ளங்கை அவன் சூடான கன்னத்திற்கு இதமாக இருக்க பைலை கீழே வைத்தவன் அவள் கைகளின் மேல் கையை வைத்து தன் கன்னத்தில் அழுத்தமாக புதைத்துக்கொண்டான்.

ஜனனி” இப்ப எதுக்கு இந்த சோகம் ,உன்னவள் உன்னிடம் உணர்ந்து கொண்ட உணர்வின் பரிசுதான் அந்த மயக்கம்,

(இது என்ன புதுசா இருக்கு)

நீ வேணுன்னா இப்ப கிஸ் பண்ணு எனக்கு மயக்கம் வராது “என்றாள்.

அதை கேட்ட சந்தோஷின் கண்கள் சிரிக்க

அவள் மேலும் அவன் இரு கண்களிலும் தன் இதழை பதித்தவள்.

உன்னிடம் எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த கருப்புதான் டா” என்று அவன் கன்னத்தை அழுத்தியவள் “என்னை இறுக்கி பிடிச்சிக்கோ,டைட்டா இன்னும் டைட்டா உனக்குள்ள புதைந்து போய் உன் கருப்பு முழுக்க எனக்கு வேணும், அந்த கருப்புல நான் கறைஞ்சி காணம போகணும்” என்றாள் மென்மையாக

அவளின் ஓவ்வொரு வார்த்தைக்கும் அவனின் அணைப்பு அதிகமாக அவனின் நெஞ்சுக்குள் நிஜமாகவே புதைந்துவிட்டாள்.

அவனின் கைகள் மீண்டும் தன் வேலையை ஆரம்பிக்க சிறு நேரத்தில் சுதாரித்தவன் இதற்கு மேல் சென்றால் தான் எல்லை மீறி விடுவோம் என்றும், அவளும் தடுக்கும் நிலையில் இல்லை என்ற தோன்ற அவளை விலக்கி அவள் முடியை சரி செய்தவன்

“நாளைக்கு மதியம் ஊருக்கு போகணும் ரெடியா இரு” என்றவன் அவள் நெற்றியில் தன் முத்திரையை கொடுத்தவன் கிளம்பிவிட்டான்.

இங்கே ஊரில் விஸ்வாவின் நிலைமையே மிகவும் மோசம்.

இரண்டு நாட்களாக தன் பொண்டாட்டியுடன் தனியா இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

முயற்சி முயற்சியாக மட்டுமே இருக்க அவள் தனியே மாட்டும் வழியை தான் காணவில்லை.

எப்பொழுதும் தன் அம்மாவின் பின்னாடி” அத்தம்மா”.” அத்தம்மா” என்று வாள்பிடித்து கொண்டு திரிவது, இல்லை அப்பாவுடன் ஊரை சுற்றி பார்க்க செல்வது,

அல்லது இரவில் பக்கத்து வீட்டில் உள்ள குட்டி பசங்களுடன் குடும்பமே சேர்ந்து பூஸ்ட் விளையாடுவது இதில் தன் அண்ணன் கண்ணன் , அப்பா முருகன் எல்லோரும் அடக்கம்.

அது அந்த காலத்தில் கட்டப்பட்ட மச்சி வீடு என்பதால் இரவில் நிலா வெளிச்சத்தில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட அகலி அப்படியே சுந்தரியின் மடியில் அங்கேயே தூங்கியும் விடுவாள்.

அவளை தூக்கி ரூமில் படுக்க வைப்பது மட்டும் விஸ்வாவின் வேலை.அதுவும் சுந்தரியின் ரூமில் தான்.

“இதுக்கு மட்டும் நான் வேணுமா” என்று கோபம் போல் சொன்னாலும் அந்த வாய்ப்பை இழக்க விரும்பாமல் அவளை பூ போல் அழுங்காமல் தூக்கி செல்வான்.

தன் மகன் இரும்பைபோல் இருப்பவன், தன் சிரிப்பை கூட அளந்து இடத்திற்கும்,தேவைக்கும் ஏற்ப மாறி அளவோடு கொடுப்பவன் ,

ஒரு சின்னவளின் காதலில் கரைந்து ,தொலைந்து, சின்னா பின்னமாகி கொண்டிருப்பதை பெருமையுடன் பார்த்து கொண்டனர் முருகன் தம்பதிகள்.

அகலியின் குடும்பம் முழுவதும் அவளிடம் சோக முகமே இரண்டு வருடமாக காட்டிக்கொண்டிருக்க, சாந்தோஷிற்கும் அகலியின் இந்த நிலையில் அவன் மூளையும் வேலை நிறுத்தம் செய்ய ,

அவளை சகஜசமாக்கும் வேலையை யாரும் செய்யவில்லை.

ஆனால் இங்கே சுந்தரி அதற்கான முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டார்.அவளின் குழந்தைத்தனம் தெரிந்து தன் அக்கம் பக்கம் உள்ள எல்லா குழந்தைகளையும் தன் வீட்டிலே இருக்குமாறு பார்த்துக்கொண்டார்..

அவளுக்கும் , நிகழ்ந்த கொடுமை சென்னையில் நடந்ததால் அங்கு இருக்கும் வரை ஏதோ பிரச்சனைக்கு மிக அருகில் இருப்பது போல் ஒரு தோற்றம்

ஆனால் இங்கே வந்ததிலிருந்து அதிலிருந்து தூரமாக வந்தது போல் ஒரு விடுதலை உணர்வு.

அவளின் துயரங்கள் எல்லாம் அவளின் நியாபக பரணில் கடைசி பரணில் இருக்க,

முன்னதாக இருக்கும் பரணில் இருப்பது என்னவோ அவளின் மாமனும்,தன் குடும்பத்தில் உள்ளவர்களை போல் தன்னை தாங்கும் மாமானின் குடும்பமே.

கழன்று கொண்டிருக்கும் எரிமலை குழம்புகள் மேல் அளவில் அணைந்து சம நிலையில் அமைதியாக இருந்தாலும் அதன் ஆழத்தில் அதற்கான மிச்சம் இருந்து கொண்டுதான் இருக்கும் .

அது போல் அகலியின் காயங்கள் ஆழ்மனதில் புதைந்தாலும் அந்த கொடூர நினைவுகளின் மிச்சம் இருக்கத்தான் செய்தது.

அது என்றாவது வெடிக்கும் என்று விஸ்வா அறிந்தே இருந்தான் ,அதை நிரந்தரமாக அணைக்க தன்னால் முடிந்த சில வேலைகளை செய்து அதில் சிறிதளவு வெற்றியும் கண்டிருக்கிறான்.

மூன்றாவது நாள் காலையில் தன் வீட்டில் உள்ள அனைவரும் கொஞ்சம் வேலையாக இருக்க அகலி தூங்கும் அறையை பூனை பதத்தோடு நெருங்கினான்.

உள்ளே சென்றதும் ரூமை லாக் செய்துவிட்டு அவள் தூங்கும் கட்டிலின் கால் பகுதியில் நின்றவன் பெட்ஷீட்டை போர்த்திக்கொண்டு தூங்கும் அகலியை கொஞ்சம் நேரம் கண் அசைவு இல்லாமல் பார்த்தவன்,

கட்டிலின் கால் வழியே பெட்ஷீட்டுக்கள் தலையை விட்டவன் அவளின் பக்கவாட்டில் ஊர்ந்த படி பெட்ஷீட்டின் உள்வழியாக மேலே சென்றான்.

அவளின் பக்கத்தில் சென்றவன் அவளின் இடுப்பில் கை போட்டு அவளின் முகத்துக்கு மிக அருகில் சென்று “ மல்லி பூ” என்று கிசு கிசுப்பாக அழைத்தான்.

அவனின் ஒரு வார்த்தையிலே கண்களை திறந்தவள் “ மாமா” என்று கண்களில் சிரிப்போ என சந்தேகம் கொள்ளும் அளவுக்கு ஒரு சிறு சிரிப்புடன் மென்மையான குரலில் அது சோகமா ,இல்லை சாதரணமாக இருந்ததா என்று யாராலும் அறிய முடியாத அளவுக்கு பதில் சொன்னாள்.

“ குட்டிமா மாமாக்கு ஒரு முத்தம் கொடு” என்றான்.

இது என்ன கேள்வி என்பது போல் அவனை பார்த்தவள் அவன் இரு கன்னங்களிளும் அழுத்தமாக முத்தம் கொடுத்தாள்.

“ குட்டிமா இங்க இல்ல டா இங்க,கன்னத்துலதான் நீ எல்லோருக்கும் கொடுப்பியே ” என்று தன் இதழை அவளின் இதழுக்கும் ஒரு இன்ச் இடைவெளியில் வைத்துக்கொண்டு கேட்டான்.

அவளின் இமைகள் இரண்டும் பட படவென்று அடிக்க அவளின் நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ள

“ மா...மாமா ஒருமாறி இருக்கு தள்ளிப்போங்க “என்று காற்று போன குரலில் அவள் சொல்ல

“ நோ வே , என்றவன் அவளின் இதழ் மேல் தன் இதழை வைத்து தனக்கும் மற்றவருக்கும் உள்ள வித்தியாசத்தை வார்த்தைகளே இல்லாமல் அவளுக்கு விளக்கி கொண்டிருந்தான்.

அகலி அவனின் சட்டை காலரை பிடித்துக்கொள்ள அவனுக்கும் இந்த நிலை நீளத்தான் ஆசை இதற்கே அவளின் எதிரொலி என்னவென்று தெரியவில்லை என்று

தன் சொல் பேச்சி கேட்காத தன் இதழை முயன்று அவளிடம் இருந்து விடுவித்து அவள் முகம் பார்த்தான்.

அவன் காலரை பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டிருந்தவள் கண்களை திறக்க அவள் உடம்பில் இருக்கும் அரை லிட்டர் ரத்தமும் அவள் முகத்துக்கே வந்துவிட செக்க சிவேல் என்று இருந்த அவள் முகமும் ,

ரத்தமென கலங்கி இருந்த அவள் விழிகளும் அவளின் வெட்கத்தின் அளவை காட்ட விஸ்வா குஷியாகி போனான்.

( அடக்கடவுளே மக்களே இந்த பொண்ணுக்கு தாலி கல்யாணம்னு சொன்னதான் பயம் போல.

ரொமான்ஸ்க்கெல்லாம் ஒன்னும் இல்லை போல...அய்யோ கடவுளே இவன் தொல்லை இனி தங்காதே...என் வாசகர்களுக்கு கண்ணை மூடிக்கிட்டு படிக்க வேற தெரியாதே நான் என்ன பண்ணுவேன்).

தன் கனவில் ஒரு வித லயிப்பில் இருந்தவன் அகலியின் “ அத்தம்மா “ என்ற குரலில் சிந்தை களைந்து

அவன் என்னவென்று யோசிக்கும் முன் அவனை தள்ளிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றவள் “அத்தம்மா “ அத்தம்மா “ என்று கிட்சனை நோக்கி ஓடினாள்.

அவளின் குரல் கேட்டிக்கொண்டே வெளியே வந்த சுந்தரி...”என்ன டா” பயந்து கொண்டே கேட்க கண்ணன் ,முருகன் எல்லாம் அடுக்களையில் கூடி விட்டனர்.

சுந்தரியின் கையை பிடித்துக்கொண்டே விஸ்வாவை நோக்கி ஒரு கையை நீட்டி “ அத்தம்மா மாமா என்னை பேட் டச் பண்றாங்க,எனக்கு இங்க முத்தம் கொடுத்துட்டாங்கா” என்று ஒரு முகச் சுருக்கத்து தன் உதட்டை காட்ட கண்ணணுக்கும்,முருகனுக்கும் ஒரு மாறி ஆகிவிட ஆளுக்கு ஒரு பக்கம் சென்றுவிட்டனர்.

சுந்தரிக்கும் ஒரு மாறி ஆகிவிட்ட “அய்யோ இவளோ குழந்தையா இருக்காளே “ என்று தோன்றியது.

அவளை பின்தொடர்ந்து கொண்டே வந்த விஸ்வாவிர்க்கோ தன் மானத்தை அவள் வாங்கிக்கொண்டு இருப்பதை விட அவள் தான் முன்பு பார்த்த அகலியை போல் இருக்க அவனுக்கு நிறைவாக இருந்தது.

சுந்தரி “ விச்சு கண்ணா ஏன் டா மானத்தை வாங்குற” என்றார்.

அவனோ தன் அன்னையின் கையை பிடித்துக்கொண்டு உதட்டை சுழித்துக்கொண்டு “ எப்படி மாட்டிவிட்டுடன் பாத்தீங்களா” என்று அவனை பார்த்துக்கொண்டு நின்ற அகலி மேலே இருந்தது.

விஸ்வா ” அம்மா உங்களை கொல்ல போறேன் பாருங்க ,நீங்க தான் இவள்ட நான் ஏதாவது பண்ணுனேனா சொல்ல சொல்லிருப்பீங்க,

அதான் இவள் கரெக்ட்டா உங்கள்ட வந்து சொல்ற, பிளீஸ் அவளுக்கு எதை எதை சொல்லணும் சொல்ல கூடாதுன்னு சொல்லி குடுங்க,

என் மானத்தை வாங்குறதயே முதல் வேலையா செய்வாள்” என்று பழைய அகலியின் நினைவில் சொன்னான்.

அவன் சொல்வதை மருமகளும் ,மாமியாரும் துளி கூட கண்டு கொள்ளாமல் செல்வதை சந்தோஷத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்..

12 மணி அளவில் கிச்சனில் சுந்தரியுடன் நின்ற அகலியை “ குட்டிம்மா உன்னை பார்க்க நம்ம வீட்டுக்கு ஒருத்தவங்க வந்துருக்காங்க என்று அவளை அழைக்க அவளும் செம்மறி ஆடு மாறி அவன் பின்னயே செல்ல

அவள் கண்களை தன் கைகளால் மூடிக்கொண்டு காலுக்கு அழைத்து சென்றவன் கண்களை திறக்க அங்கே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.

அவளின் பின் வழியே அவளின் தோளை பிடித்துக்கொண்டே “ குட்டிம்மா இது யாருன்னு தெரியுதா” என்று கேட்டான் .

“ ம்ம்ம்ம்” , என்று யோசித்தவள் “ இவங்க இவங்க ரீனா அக்காவோட அக்காவோ தங்கச்சியோ” என்றாள்.

விஸ்வா ” இல்லைடா இவள் ரீனா தான்” என்றான்.எவ்வளவு முயன்றும் அவன் குரலில் தெரியும் கோபத்தை ரீனா உணர்ந்தே இருந்தாள்.

ரீனா என்றதும் வேகமாக அவள் அருகில் சென்றவள் “ அக்கா எப்படி இருக்கீங்க,எவ்வளோ நாள் ஆகுது , நீங்க ரீனான்னு என்னால நம்பவே முடியல நிறைய மாறிட்டிங்க” என்றாள்.

அவளின் நம்பிகையின்மைக்கு காரணம் இருந்தது
எப்பொழுதும் கர்வத்தை காட்டும் அடர்ந்த மை பூசிய அவள் விழிகள் அமைதியை கடன் வாங்கிக்கொள்ள,

பளிச்சிடும் உதட்டு சாயம் பூசி எப்பொழுதும் ஏளன வளைவுடன் இருக்கும் அவள் இதழ்கள் வெளிறி போய் வெறுமையுடன் இருக்க,

விரித்து விட்ட முடியுடன் எப்பொழுதும் “பெர்மிங் ஹேர் “ஸ்டைலில் இருப்பவள் முடியை தூக்கி போனிடைல் போட்டிருக்க.

முட்டியை விட்டு இறங்காத அவள் உடை இன்று பிங்க் நிற குர்த்தாவகவும் டார்க் ஒசன் நிற ஜீன்சாகவும் மாறி இருந்தது.

தன் கை பிடித்துகொண்டு தன்னிடம் பேசும் அந்த குட்டி பெண்ணை பார்க்க பார்க்க தன்னையே அழித்துக்கொள்ளும் வெறி வந்தது ரீனாவிற்கு.

என்ன பேச எது பேச என்று அவளுக்கு தெரியவில்லை எப்பொழுதும் அகங்கார வார்த்தைகளை மட்டுமே பேசிய வாயிற்கு அமைதியாக பேச தெரியவில்லை .

அதானால் கொஞ்ச நாட்களாக அவள் வாய்க்கு உள்பூட்டு போட்டிருந்தாள்.

சுந்தரி கொஞ்சம் நல்லவளாக இருந்தாள் கண்ணனின் மனைவி இறந்திருக்க மாட்டாள்.

விஸ்வா கொஞ்சம் கெட்டவனா இருந்தால் ரீனாவை அசிங்கபடுத்தாமல் அவள் அழைப்பை ஏற்று இருப்பான் அவள் அகலி மேல் வன்மம் வளர்த்திருக்க மாட்டாள்.

Rk(ரீனாவின் அண்ணன்) கொஞ்சம் நல்லவனாக இருந்திருந்தால் ரீனா கொஞ்சம் நல்லவளாக வளர்ந்திருப்பாள்

ரீனா கொஞ்சம் நல்லவளாக இருந்தாள் அகலியின் வாழ்க்கையை சிதைத்திருக்க மாட்டாள்.

அகலி கொஞ்சம் கெட்டவளாக இருந்திருந்தால் அந்த சம்பவத்தை அவள் ஈசியாக மறந்திருப்பாள்.

கண்ணனின் மனைவி இறக்காமல் இருந்திருந்தால் விஸ்வா அகலியின் காதலை ஏற்ற இருப்பான்.சுந்தரியின் கொடுமையில் அகலி பலியாடாக ஆகி இருப்பாள்.

நல்லவருக்கு நல்லது நடக்கும் ,கெட்டவர்களுக்கு கெட்டது நடக்கும் என்பதெல்லாம் மனித வாழ்க்கையில் கிடையாது போல

ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதையில் பொம்மையாக இருக்கும் நாமெல்லாம் விதி என்னும் நூலால் வித விதமாக ஆட்டப்படுகிறோம் என்பதே உண்மை...

வருவாள்....
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 28:

எனக்கே தெரியாமல் எனக்குள்ளே வந்தவனே....

கணக்கே தெரியாமல் காயங்கள் நூறு தந்தவனே...

ஏறெடுத்தும் நீ பார்க்காமல் என் ரத்தம் உறையுதடா....

என் நரம்பே என்னை இன்று கட்டிப்போட்டு சிரிக்குதடா.....

நான்கு அறையில் நான் மாட்டியே நாளுக்கு நாள் சாகுறேனே..

உன் அன்பில் நான் மாட்டியே உயிர் போக வேண்டுகிறேனே....

ஆசையோடு நான் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும்..

அசையாமல் நீ நின்னு ஒத்துழைப்பு கொடுக்கணும்....

கூண்டுக்கிளியாய் இருந்த என்னை கவ்விப்போனாய் பூனையாய்...

சாகடித்தாலும் பரவாயில்லை கூட்டிப்போ கணவனாய்.....

விஸ்வாவின் வீட்டிற்கு வந்ததிலிருந்து அமைதியை கடன் வாங்கிக்கொண்டாள் ரீனா.

அப்படி இருக்க வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை ஆனால் அவளுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை.

அழுக்காகவே பிறந்து,அழுக்கிலையே வளர்ந்து அவள் செய்த பாவங்கள் ஒன்றா இரண்டா....?

இப்பொழுது கூட அவள் செய்த விஷயங்கள் சரியா தவறா என்று அவளுக்கு சொல்ல தெரியவில்லை...

அது சராசரி வாழும் பெண்களிலிருந்து,மனிதர்களிலிருந்து வித்யாசமாக இருந்திருக்கிறது,அடுத்தவர்களை நரகத்தில் தள்ளியிருக்கிறது,பலரின் கண்ணீருக்கு காரணமாக இருக்கிறது,பலரின் இறப்பிற்கு திறப்பு விழா செய்திருக்கிறது

அது மட்டுமே அவள் இப்பொழுது உணர்வது அதுவும் தனக்கு நடந்த அந்த நிகழ்விலிருந்துதான்.அதற்கு முன் அவள் மனநிலை தான் மிகவும் அதிருஷ்டசாலி தான் கேட்டது அனைத்தும் தனக்கு கிடைத்துவிடும்,எனக்கு விருப்பம் உள்ளதை நான் எடுத்துக்கொள்வேன், அதில் அடுத்தவர்களுடனான விருப்பம் ,வாழ்க்கை,எதுவும் அவளுக்கு தேவை இல்லை

தேவை இல்லை என்று சொல்வதை விட தெரியவில்லை என்றேதான் சொல்லவேண்டும்.

நியாயங்கள் ,அநியாயங்கள் எல்லாமே தான் வளர்க்க பட்ட விதம்,சூழ்நிலை , சுற்றி உள்ளவர்களை வைத்தே நம் மூலையியிலும் ,செயலிலும் வார்க்கப்படுகின்றன.

அதனால் தான் குழந்தைகள் முன் சண்டைபோடுவதையோ, கொச்சை வார்த்தைகள் பேசுவதையே நம் முன்னோர்கள் ஆதரிப்பது இல்லை.

மீன்,கோழி, ஆடு இன்னும் சில கடல் வாழ் உயிரினங்களை நாக்கை சுழற்றி வித விதமாக சமைத்து சாப்பிடும் நாம் ,மாட்டு கறி தின்பவர்களையும், வெளிநாடுகளில் பாம்பு கறி, பண்ணி கறி தின்பவர்களையும்,இன்னும் சில காட்டு பகுதிகளில் மனித மாமிசத்தை தின்பவர்களையும் அருவருப்பாகவும், கொடியவர்களாகவும் கொலைகாரர்களாக பார்ப்பது
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை..

இதில் வெஜ் பிரியர்களும் அடக்கம் அவர்களின் நியாயம் லெதர் ஷூ,லெதர் பேக் என்றும் ,ஆயிரம் தேனீக்களை அழித்து “நாங்கள் மலைத்தேன் தான் சாப்பிட்டுவோம் “ என்ற பெருமையிலும், பிரசவம் முடிந்து 4 நாட்களே ஆன பசுவின் காம்பை அது சிவக்கும் வரை கறந்து சுத்தமான பால்,சுத்தாமன நெய் என்று அவர்கள் சுத்தம் பேசுவதிலும் அநியாயங்களாக மாற்றப்படுகிறது..

நம்மை கடிக்கும் ஒரு கொசுவை கொன்றாலும் அதுவும் ஒரு உயிர் இழப்புதான்.....ஒரு மனிதனை கொன்றாலும் அது உயிர் இழப்புதான்

நல்லது,கெட்டது, சரி ,தவறு எல்லாம் நம் சாதகமான நிலை(comfortable zone) மற்றும் நமக்காக எழுதிக்கொண்ட ரூல் புக்கின் அடிப்படையில் இடத்தை பொறுத்து மாறுபடுகிறது.

அதே போல் அநீதியின் பக்கத்திலையே வளர்ந்த ரீனா இப்படி இருப்பது பெரிய ஆச்சரியம் இல்லை என்றே தோன்றுகிறது...

மகாபாரத போரின் பெரும் மனித இழப்பில் கண்ணனை பார்த்து ஒரு சாமானியன் “எதற்கு இவ்வளோ பெரிய போர் ,இவ்வளவு பெரிய மனித இழப்பு , நீயோ இயக்குபவனாய் இருக்கையில் “ என்று கோபமாக கேட்டானாம்.

அதற்கு கண்ணன் சிரித்துக்கொண்டே “ பூமியில் மனிதத் தொகை அதிகமாகி விட்டது இப்படி ஏதாவது போர் வைத்தால் தான் அதை குறைத்து சரி செய்ய முடியும்” என்றானாம்...

(என்ன ஒரு வில்லத்தனம் உனக்கும் ,சகுனிக்கும் பெரிய வித்தியாசம் இல்லைனு சரியதான் எல்லோரும் சொல்றாங்க)

கொஞ்சம் யோசித்து பாருங்கள் யாரும் சாகவில்லை ,எந்த உயிர்களும் சாகவில்லை நம் உலகின் நிலைமையை

இருக்க இடமில்லாமல் நிரம்பி வழிவதோடு மட்டும் இல்லாமல் எல்லாவற்றிலும் பற்றாக்குறை ஏற்படும்.

உலகில் எல்லோரும் வெஜ் மட்டும் சாப்பிட்டால் உலகின் உணவு பற்றாகுறையின் அளவும், மற்ற உயிர்களின் உற்பத்தியும் நினைக்கவே நம்மால் முடியவில்லை அது மட்டும் நடந்தால் ...?

அதனால் தான் ஆறு அறிவு உள்ள மனித இனத்தை அழிப்பதை கடவுள் வேலையாகவும், நம்மை விட குறைந்த அறிவுடைய மற்றவற்றை அழிக்க நம்மையும் படைத்திருக்கிறான் போல இறைவன் ....

அவரின் சேவகர்களாக முன் ஜென்ம கர்மாவின் அடிப்படையில் கே, ஆர்( ரீனாவின் அண்ணன்), ரீனா போன்றவர்களை படைத்து அவரின் தேவையோ, அல்ல அவர்களின் கர்மாவின் தண்டனை காலம் ஏதோ ஒன்று முடித்த பிறகு அவர்களை யாரோ ஒருவரை வைத்து அழிப்பதோ இல்லை ,அவர்களை திருந்த செய்யும் வேலையையும் செய்து விடுகிறார்.

( இப்ப என்னமா உனக்கு ....ரீனா கெட்டவளா இருக்குறதுக்கு, அவளோட சூழ்நிலையும்,ஏற்கனவே விதிக்க பட்டதும் தான் காரணம் அவ்வளோதான.. புரிஞ்சிடிச்சு...நீ கிளம்பு ......எப்ப பாரு பத்து பக்கத்துக்கு பிலாசபி பேசிக்கிட்டு....)

ரீனாவின் மனநிலை பிறந்த குழந்தையின் மன நிலையில் இருந்தது, இந்த மனிதர்களின் உலகம் புதிதாக இருந்தது ,அதில் வாழ வேண்டும் என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை குறைந்த பட்சம் அதை புரிந்து கொள்ளவேண்டும்..

தான் இதுவரை செய்தது பாவம் என்று அறிந்ததற்க்கே அவள் தன்னை அழித்துக்கொள்ள முடிவு செய்து விட்டாள்.

ஆனால் அது ஒரு நொடி வலியல்லவா,அது அவளுக்கு வேண்டாம் என்று நினைத்தவள் தான் உயிருடன் வாழ்வதுதான் தனக்கான சரியான தண்டனை என்று அவள் வாழ ஆரம்பித்தாள்.

அது அவ்வளவு சுலபாமாக இல்லை..கொஞ்சம் கொஞ்சமாக. தன் பாவத்தின் வீரியமும் ,அதனால் வாழ்க்கை இழந்தவர்களை பார்க்கும் போது அவளின் வலியை அவளால் தங்க முடியவில்லை...

இருந்தும் இந்த தண்டனை தனக்கு வேண்டும் என்று அனுபவித்து கொண்டிருக்கிறாள்.

மற்றவர்களை விட அவள் அகலிக்கு கொடுத்த வலி சாதாரணம் தான்.

அதற்கே அவள்படும் துன்பங்களை அன்று விஸ்வா சொன்னதை கேட்டவள் “ஒரு பூ மனதுகாரியை பிய்த்து எரிந்து விட்டோமே “என்று அவள் அன்று வரை தூங்கவில்லை...

அதுவும் நேற்று தான் வந்ததிலிருந்து அவள் தன் கூடவே இருந்து தன்னை” அக்கா அக்கா” என்று அழைத்து உயிரை விடுவது

அப்பொழுது அவள் அடைந்த உணர்வை அவளால் சொல்ல முடியவில்லை...
விஸ்வாவின் தோழி என்றே ஒரே காரணத்திற்க்காக அவர்கள் வீட்டார்கள் காட்டும் அன்பு இதுவரை

அவள் அறிந்து இருக்கிறாளா என்றால் கண்டிப்பாக இல்லைதான்..

எல்லாவற்றையும் யோசித்து கொண்டு அமர்ந்தவளை “ மாமா வலிக்கும், வேண்டாம் வேண்டாம் பிளீஸ்” என்று கெஞ்சும் அகலியின் குரல் கலைத்தது.

அவள் நிமிர்ந்து பார்க்கும் போது ப்ளூ கலர் 3 4த் பேண்ட் ,வைட் கலர் டீசேர்ட்டில் ஓடிவரும் அகலி கண்ணில்பட்டாள்...

அந்த உடையில் மிகவும் குட்டி பெண்ணாக இருந்தவளை பார்க்க மீண்டும் நொந்து போனாள்..

அவளை துரத்திக்கொண்டு விஸ்வாவின் குடும்பமே வர அகலி ரீனாவின் அருகில் வந்ததும் கண்ணன் அவளை நோக்கி பிடிக்குமாறு கண்ணை காட்ட

அவளுக்கு எங்கே அதெல்லாம் புரியும்.அவள் அப்படியே நிற்க மீண்டும் சத்தமாக சொல்லவும் அவளை பிடித்துவிட்டாள்.

கையில் ஒரு “மெடிக்கல் கிட்” டுடன் நிற்கும் அகலி ரீனாவை நோக்கி “ அக்கா பிளீஸ் அக்கா விடுங்க என்று கண்ணீரோடு சொல்ல அவள் கண்ணீர் ஒரு மாதிரி ஆக அவள் பிடியை தளர்த்த அந்த கேப்பில் அவள் கையில் உள்ளதை அந்த வீட்டின் பின் உள்ள கிணற்றில் போட்டு வந்தவள்...

“அப்பாடா” என்று அங்கு உள்ள சோபாவில் அமர,

அவள் குடும்பமே அவளை முறைத்துக்கொண்டு நின்றது.விஸ்வா மட்டும் அசதியான சிரிப்புடன் அவள் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.

காரணம் இதுதான் விஸ்வாவிருக்கு தொடர் அலைச்சலால் உடம்பு வலி ,காய்ச்சல்,தலை வலி வந்துவிட்டது

காலையில் டாக்டர் வந்து அவனை பரிசோதித்து” ஒரு இன்ஜெக்க்ஷன் போட்டால் சரியாகிவிடும்” என்று சொல்லி அவர் ஊசியை போட வர

ஒரே எட்டில் அவர் அருகில் சென்றவள் “ ஊசியை பிடிங்கி ஜன்னல் வழியே வெளியே எறிந்தவள்

“ ஊசியெல்லாம் போடாதீங்க ,மாமக்கு வலிக்கும் அப்பறம் கை வீங்கி போயிடும், கசக்காத டானிக் கொடுங்க அதுலயும் சரியா போகலானா மாத்திரை கொடுங்க “என்றாள்,

( அவனுக்கு போட்டு அந்த ஊசிக்கு வலிக்காம இருந்தா சரி...வானத்து அளவு வளர்ந்து நிக்கிறான்..வலிக்குமா வலிக்கும் )

தான் அவனுக்காக ஹாஸ்ப்பிட்டலில் பட்ட துயரங்கள் , இரண்டு வருடமாக தான் பட்ட கஷ்டம் எல்லாவற்றையும் விட தன் மாமானின் இந்த வலி அவளுக்கு பெரியதாய் தெரிவதை பெருமை படுவதா வேதனை படுவதா என்று அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க

டாக்டர் கடமையே கண்ணாக” இது என்ன சின்ன புள்ளை தனமா” என்று மீண்டும் ஒரு ஊசியை எடுக்க போக நொடியில் அவரின் மெடிக்கல் கிட்டை அபேஷ் செய்து கொண்டு

“ குட்டிமா” என்ற விஸ்வாவின் குரலில் இப்போது திரும்பி அவன் கண்களை பார்த்தால் கண்டிப்பாக அவன் சொல்வதை செய்ய தோன்றும் என்று தெரியவே

“மாமா வலிக்கும் “ என்று திரும்பி பார்க்காமல் சொன்னவள் ரீனாவின் கையில் மாட்டிக்கொண்டாள்.

“ அய்யோ மாமாவிற்கு ஊசி போட்டுடிவங்களோ “என்று கண்கள் கண்ணீருடன் அவளுடன் மன்றாடி அதை டிஸ்போஸ் செய்துவிட்டே ஓய்ந்தாள்..

தன் அருகில் அமரும் தன் மாமனை பார்த்தவள் “அய்யோ திட்ட போறங்களே “என்று பயம் வர

“ஊசி வலிக்கும் மாமா “என்று தலையை குனிந்து கொண்டே சொல்ல அங்கு உள்ள எல்லோரும் விஸ்வா உட்பட அனைவரும் சிரிக்க

நடந்ததை முருகன் ரீனாவிடம் சொன்னார்

அதை கேட்ட ரீனாவிற்கு சிரிப்பிற்கு பதில் அழுகை வந்தது “ அய்யோ குழந்தை” என்று..

சுந்தரி ”அப்பறம் உன் மாமனுக்கு எப்படிமா காய்ச்சல் சரியாகும்” என்க

அகலி “ அத்தம்மா அம்மா சின்ன வயசுல எங்கயாவது விழுந்து எனக்கு அடிப்பட்டுட்டுனா எனக்கு எங்க அடிப்பட்டதோ அங்க ஒரு கிஸ் கொடுப்பாங்க சரியாகிடும்” என்று சொன்னவள்

விஸ்வாவின் இரண்டு கண்ணகளையும் பிடித்து இரண்டு நெத்தி பொட்டுகளிலும் முத்தம் கொடுத்தாள்.

( தலை வலிய சரி பணரங்களாம்..... கருமம் கருமம்)

சுந்தரிக்கு வெட்கம் வந்துவிட கல்யாணம் என்று ஒன்று ஆனது தெரிந்தாலாவது அம்மா என்ற முறையில் அவளுக்கு எதுவும் சொல்லி கொடுக்கலாம்

இப்ப அதற்கும் வழி இல்லை என்று தன்னை நொந்து கொண்டவர் அந்த இடத்தை தன் கணவனோடு காலி செய்ய
உள்ளே அழுதுக்கொண்டு வெளியே மரம் போல் நின்றவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கண்ணனும் அந்த இடத்தை காலி செய்தான்.

அவன் கையை இழுத்ததும் சுயம் திரும்பியவள் எதுவும் பதில் சொல்லாமல் அவனிடம் இருந்து கையை உருவியவள் நிதர்சனமான முகத்தோடு

அந்த இடத்தை விட்டு காலி செய்தாள். அவள் சென்ற திசையையே பார்த்து கொண்டு நின்றான் கண்ணன்.

இங்கே விஸ்வாவோ அகலியை சீண்டி கொண்டிருந்தான்

“குட்டிமா தலை வலி சரியாயிட்டி அப்படியே அந்த உடம்பு வலியையும் ,காய்ச்சலையும் சரி பண்ணிடு” என்று விசமமாக சிரிக்க

( நீ இப்படியே குடும்பம் பண்ணு விளங்கிடும்)

அது புரிந்தாள் இது நம் அகலி இல்லையே அவனிடம் “ம்ம்ம்ம் “என்றவள், தலைவலிக்கு தலையில முத்தம் கொடுத்தோம் உடம்பு வலிக்கு தனக்கு தானே பேசிக்கொண்டவள்.
“மாமா எங்கே வலிக்குது “என்றாள் அவன் தன் தலை முதல் கால்வரை தன் கைகளால் காட்டினான்.
அவன் முகத்தை இரு கைகளால் பிடித்துக்கொண்டவள் அவன் நெத்தி,கண்,காது, கன்னம் என்று தன் முத்திரையை பதித்துக்கொண்டே வர

அது அவனுக்கு பொக்கை வாய் உள்ள பல் இல்லாத அறு மாத குழந்தை முத்தம் கொடுக்கிறேன் பேர்வழி என்று முகத்தை எச்சில் பண்ணுமே அது போல் தான் இருந்தது..அதில் அவனின் அந்தரங்க உணர்வுகள் எதுவும் தூண்ட படவில்லை ,

மாறாக என்னவள் கள்ளம்,கபடம் இல்லாமல் தூய்மையானவள் என்றே தோன்ற “போதும் டா இப்ப வலி போய்டிச்சி “என்றவன்

அவளை தன் நெஞ்சோடு இறுக்க அணைத்துக்கொண்டான்,அவளும் சொகுசு பூனையாய் அவனின் பொசு பொசு மார்பு முடிகள் உரச அவனுக்குள் புதைந்து கொண்டாள்..

விஸ்வாவின் அருகில் அவளின் கவலைகள் துயரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது..ஒருவேளை விஸ்வாவிருக்கு அவளின் நிலை முன்னமே தெரிந்திருந்தாள் அப்பவே அவளுக்கு விமோச்சனம் கிடைத்திருக்குமோ என்னவோ..

அன்று மாலை விஸ்வாவின் வீட்டின் முன் உள்ள ஆற்று மணலில் ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டியபடி தன் கைகளால் மணலை நீள வாக்கில் குவித்து அதில் ஒரு சின்ன குச்சியை ஒழித்து வைத்து பக்கத்து வீட்டு குட்டி பெண்ணோடு விளையாடி கொண்டிருக்க அவள் விளையாடுவதை விஸ்வா நிறைவோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

கண்ணன் தன் தம்பி மனைவியை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான் தன் குழந்தை போல என்பதை தவிர வேறு ஒரு கோணத்தில் பார்க்க முடியவில்லை அவ்வளவு குழந்தைத்தனம் அவள் முகத்தில்..

இந்த குழந்தையை வைத்துக்கொண்டு தன் தம்பி எப்படி குடும்பம் நடத்த போகிறான் என்ற கவலையும் இல்லாமல் இல்லை
அவளை பார்த்துக்கொண்டே பார்வையை திருப்பியவனின் கண்ணில் வெறுமையாக அமர்ந்திருக்கும் ரீனா பட்டாள்.

அது அமைதியா ,சோகமா என்று அவனுக்கு தெரியவில்லை வந்ததிலிருந்து அவள் பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அது அவள் பேசக்கூடாது என்பதை போல் அல்லாமல் பேசத் தெரியாத நிலையாகவே அவனுக்கு தெரிந்தது தனிமையின் கொடுமை அவனுக்கு தெரியுமே அவன் அனுபவித்த நரகம் ஆயிற்றே..

அவளை பார்க்கும் போதெல்லாம் தன்னை பார்ப்பதை போல் தான் அவனுக்கு தெரியும்..

அவள் ஒரு முறை சிரித்தால் அழகாக இருக்கும் என்று அவன் மனம் சொன்னது

( அந்த ஆணவ சிரிப்பை நீ பார்த்தே ஆகனுமா டா தம்பி வேண்டாம் அவள் பிளாஷ்பேக் கேட்ட நீ காலி...)
அவர்கள் அவர்கள் எண்ணத்தில் எல்லோரும் மூழ்கி இருக்க அங்கே ஒரு கார் நின்றது..

அதில் ராஜா ,சந்தோஷ், ஜனனி மூன்று பேரும் இறங்கினார்கள்...

சந்தோஷை பார்த்ததும் அவளின் சொந்த உணர்வு தோன்ற வேகமாக அவனை அருகில் சென்று பக்கவாட்டில் நின்று கொண்டு அவன் இடுப்பை பிடித்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..

கண்ணீரோடு அவளை தன் வலக்கையால் அவளை அணைத்துக்கொண்டான்.

அவன் இறங்கியதும் அவளை பார்த்துவிட்டான் உடல் முழுவதும் மண்ணோடு அவளின் வெள்ளை சட்டை முழுவதும் அழுக்கு கலரில் இருக்க

“இவள் என் தேனுகுட்டி , இரண்டு வருடமாக தொலைந்து போன என் குழந்தை, தொலைத்தவனாளையே கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டிருக்கிறாள்” என்ற நிறைவு தந்த கண்ணீர் அது.

நன்றி உணர்வோடு தன் நண்பனை பார்த்தான்.
அருகில் உள்ள ராஜாவை பார்த்து “ டேய் தம்பி எப்படி இருக்கு “ என்க

ரொம்ப நாட்களுக்கு பிறகு அவளின் தன்னை சீண்டும் அழைப்பு அவனுக்கும் கண்களில் கண்ணீரே “ உன்னை விட நான் ஒரு வயசு பெரியவன் டீ என்றான் குரலில் கரா கரப்புடன்

அவளும் “ சாந்தோஷிற்கு தம்பினா எனக்கு தம்பித்தான்” என்று எப்பொழுதும் சொல்லும் பதிலை சொல்லிக்கொண்டு சந்தோஷி அழைத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

சந்தோஷ்” தேனுகுட்டி நீ இன்னும் சின்ன புள்ளை இல்லை ,இந்த மாறி சின்ன புள்ளை விளையாட்டலாம் விளையாட கூடாது,அப்பறம் எப்பொழுதும் புடவை கட்ட முடியாலனாலும் சுடிதார் போட்டுகனும்,இந்த மாறி ட்ரெஸ்ல்லாம் போட கூடாது என்று பெண் வீட்டானாய் அவளுக்கு அறிவுரை வழங்கினான்.

திடிரென்று ஏன் இதெல்லாம் சொல்கிறான் என்று அவளின் குட்டி மூளை யோசிக்காமல் சந்தோஷ் சொன்னாள் அது சரியே என்ற மனநிலையில் பிறந்ததிலிருந்து இருந்தவள்

“ சரி சந்தோஷ்” என்றவள் உடனே உடை மாற்ற உள்ளே சென்றாள்

“ குட்டிமா எல்லோருக்கும் வேலைக்கார அக்காட சொல்லி குடிக்க எடுத்துட்டு வா” என்ற விஸ்வாவின் குரலில் “சரி மாமா” என்று சொல்லி உள்ளே சென்றாள்.
“ அவள் இஷ்டத்துக்கு இருக்கட்டும் அவளை இப்படி இரு அப்படி இருன்னு தொல்லை பண்ணதா டா,எனக்கு இவள்ட பிடிச்சதே இந்த குழந்தைதனம் தான்” என்றான்.

சந்தோஷ்” அது இல்லை டா மச்சான், கட்டிக்கிட்டு வந்த வீட்டில இப்படி இருக்குறது தப்பு அதான் “ என்றான்.

விஸ்வா “ அப்ப ஜனனி உங்க வீட்டுக்கு வந்தாலும் அவளை இப்படி எல்லாம் இருக்க சொல்லி கட்டாயப்படுத்துவியோ” என்றான் சற்று காட்டமாக

இந்த காரணத்தால் ஜனனியை தனக்கு திருமணம் செய்து கொடுக்காமல் போய் விடுவானோ என்ற எண்ணம் மட்டும் மனம் முழுவதும் ஆக்கிரமிக்க
தலையில் கைவைத்து நின்ற ஜனனியோ, “அண்ணா மாட்டிக்கிட்டானே “ என்ற முழித்துக்கொண்டு நிற்கும் ராஜாவையோ ,நமட்டு சிரிப்புடன் நிற்கும் கண்ணனையோ அவன் கவனிக்காமல்

சந்தோஷ்” இல்லை டா விச்சு,தக்காளி எங்க வீட்டில எப்படி வேணுன்னா இருக்கலாம், எங்க வீட்டில் யாரும் எதுவும்சொல்ல மாட்டாங்க,

அகலிய நான் இனி எதும் சொல்ல மாட்டேன் நீ எதும் விபரீதமா முடிவு எடுக்காத “ என்று மூச்சு விடாமல் சொன்னவன் எல்லோரும் தன்னை வித்யாசமாக பார்த்த பின்னே தான் உளரியது புரிய நாக்கை கடித்து கொண்டான்.

தான் சொல்லாமல் அவனுக்கு தெரிந்து விட்டதே என்று குற்ற உணர்வோடு தன் நண்பனை பார்க்க அவன் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட விஸ்வா அவனை அணைத்துக்கொண்டு

“உன்னை விட ஒரு நல்ல அடிமை என் தங்கச்சிக்கு தேடினாலும் கிடைக்க மாட்டான் டா, அதனால நீ என்னிடம் சொல்லனு வருத்த படாத,நான் உன் தேனுக்குட்டிக்கு பண்ணத விட இதெல்லாம் கம்மி தான்” என்றான் துயரம் அப்பிய குரலில்

அவனின் துயரத்தை கேட்டு தன்னை தெளிந்து கொண்ட சந்தோஷ்

” அதெல்லாம் இல்ல டா நான் உடனே உன்னிடம் வந்து பேசிருந்தா இவ்வளோ நாள் ஆகிருக்காது,என் மேலே தான் எல்லாம் தப்பும்” என்றான்.

உண்மையில் இந்த பிரச்சனைக்கு காரணம் ஆனவள் அவர்களின் இந்த பாசத்தை ஏதோ ஒரு புது உலகத்தை பார்ப்பது போல் பார்த்தாள்.

இது வரை அவளுக்கு இது மாதிரி ஒரு நிகழ்வு நடந்திருக்கா என்று யோசித்தால் அவளின் பதில் இல்லை என்றே இருந்தது.

தன் அண்ணன் இறந்த போது கூட தனக்கு அழுகை வர வில்லை ,மாறாக தன் கூட இருக்கும் ஒரு நபர் இனி இல்லை என்ற லேசான வருத்தம் மட்டுமே இருந்தது.

அதை நினைத்து இன்று பார்ப்பவளுக்கு கஷ்டமே “ சராசரி மனிதனுக்கு உள்ள சாதரண உணர்வுகள் கூட எனக்கு மறுக்கபட்டது ஏன் என்று குழம்பி போனாள்.

இப்பொழுதுதான் சந்தோஷ் ரீனாவை கவனித்தான்

ரீனாவை பற்றி அவனுக்கு நன்கு தெரியும் அவளின் குணம் என்றுமே அவனுக்கு பிடிக்காது.

இருந்தாலும் தனக்கு தெரிந்தவளை கண்டு அவனுக்கு முகம் திருப்பவும் மனம் இல்லாமல் “ ரீனா நீங்க என்ன இங்க , எப்படி இருக்கீங்க” என்றான்.

அவனின் கேள்விக்கு “ ம்ம் இருக்கேன்” என்ற பதிலோடு அவள் அங்கிருந்து சென்றுபவிட்டாள்.

அவளின் மாற்றம் அவன் கண்களிலும் தப்பாமல் விழுந்தது..

சந்தோஷ் விஸ்வாவை கேள்வியாக பார்க்க சொல்கிறேன் என்பதோடு நிறுத்திக்கொண்டான்.

ஜனனி சந்தோஷமாக தன் அண்ணனின் அருகில் வந்தவள் “ விச்சு உனக்கு எப்படி தெரியும் “ என்று கேட்டாள்.

விஸ்வா” நீங்க அன்னைக்கு ஹஸ்ப்பிட்டலில் முழிச்சு முழிலையே எனக்கு லேசா சந்தேகம் வந்தது, அதுக்கு அப்புறம் உன் பிரண்ட் நிம்மிட போன் பண்ணி கேட்டப்ப அவள் எல்லாத்தயும் சொல்லிட்டாள்.

அகலி பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்பறம் இதை பத்தி பேசிக்கலாம்னு நானும் விட்டுட்டேன்,அம்மா ,அப்பாட்ட எப்பவோ பெர்மிஷன் வாங்கியாச்சி,

அம்மா இனி என் பசங்களோட விருப்பம்தானு சொல்லிட்டாங்க ,ஆனால் அண்ணன் கல்யாணம் என் கல்யாணம் எல்லாம் அவசரகதில முடிஞ்சதால கொஞ்சம் நாள் ஆனாலும் ரொம்ப சிறப்பாக செய்யணும் என்று மட்டும் சொன்னார்கள் “ என்றான்

கல்யாணம் என்றதும் சந்தோசம் என்றாலும் எல்லோருடைய நினைவும் அகலியை நோக்கி செல்லவே அதை புரிந்து கொண்ட விஸ்வா “ குட்டிமா ட நான் பேசிக்கிறேன்” என்றான்.

அவர்களின் எண்ணத்தின் நாயகி சாக்கலேட் கலர்முழு கை சுடிதாரில் அவர்களை நோக்கி வந்து கொண்டிருக்க அவர்களின் பேச்சு தடைப்பட்டு போனது.

விஸ்வா சந்தோஷின் காதில் “ டேய் இப்ப பாரு உன் தேனுகுட்டி உன் பக்கத்துல வந்து உட்காருவா பாரு”, நீ வந்தா அவளுக்கு என் நியாபகமே வரவே வராது பாரு” என்க

அவன் வாக்கை காப்பாற்றுபவள் போல் அவள் சந்தோஷின் அருகே போக

விஸ்வா “ அம்மு இங்க என் பக்கத்துல வந்து உட்காரு டி, அவன் கருப்பு உனக்கு ஒட்டிக்க போகுது “என்றான் விளையாட்டாய் .

ஜனனி தன் அண்ணனை பார்த்து பொய்யாக முறைக்க அவன் சும்மா என்று கண்ணை காட்ட அவளும் சிரித்துக்கொண்டே எதுவும் சொல்லவில்லை.

அகலியும்” சரி “ என்று அவன் அருகில் சென்று அமர்ந்து அவன் காதில் மெதுவாக “ மாமா பக்கத்துல உடகார்ந்தலாம் கலர் ஒட்டிக்காது”,என்று ஏதோ அவனுக்கு தெரியாததை சொல்வது போல் கண்ணை உருட்டி உருட்டி சொல்ல

அவனும்” அப்படியா டி அய்யோ எனக்கு தெரியாதே” என்றான்.

எல்லோரும் அவர்களின் சிரிப்பை தொண்டைக்குள்ளையே முழுங்கினர்.

அதன் பின் வெளியில் சென்ற முருகனும் ,சுந்தரியும் வந்து எல்லோரும் சந்தோசத்துடனும் ,ரீனா சொல்ல முடியாத ,சொல்ல தெரியாத உணர்வுடன் இரவு உணவை முடித்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு எல்லாம் அவர்கள் அவர்கள் அறையில் நுழைய

அகலியும் , விஸ்வாவும் தங்கள் அறைக்கு சென்றனர்.

ஆம் அன்று விஸ்வா முத்தம் கொடுத்ததிலிருந்தது இருவரும் ஒரு அறையில் தான் தூங்குகிறார்கள்.

அதற்கு தான் தன் அன்னையிடம் போட்ட குட்டிக்காரணம் எல்லாம் நினைவு வந்து தானே சிரித்துக்கொண்டான்.
அவரும் கண்டிப்பான வார்த்தைகளை அவனுக்கு அறிவுரை சொல்லியே அதற்கு ஒத்துக்கொண்டார்.

இயல்பான பெண்களுக்கே உள்ள மறுப்பு,கூடாது என்ற உள்ளுணர்வு அகலிக்கும் வந்தது.
ஆனால் அவை எல்லாம் தன் மாமன் ,தன் வீர் என்ற நிலையில் பின்னுக்கு தள்ள தன் தாய் தந்தை,அப்பத்தா மாதிரி அவனும் தன் குடும்பம் என்று நினைத்து ஒத்துக்கொண்டாள்.

அவள் உள்ளே சென்றதும் கதவை மூடியவன் தன் இரு கைகளையும் அகல விரித்து “ குட்டிமா மாமாவை கட்டிக்கோ” என்றான்.

அவளும் சந்தோசமாக அவனை அணைத்துக்கொண்டு அவனின் நெஞ்சு வரை மட்டுமே இருப்பவள் அவன் இடுப்பை கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் தன் தாடையை வைத்து அண்ணாந்து அவன் முகத்தை பார்த்து கண்களை விடாமல் நான்கு சிமிட்டு சிமிட்டவும் அந்த அழகில் தன்னை தொலைத்தவன் அவள் கண்களில் இரு முத்தம் வைத்து அவளை இறுக்கி கொண்டான் இன்னும் நன்றாக

“குட்டிமா நான் உன்னிடம் ஒன்னு சொல்ல போறேன் அதுக்கு முன்னாடி மாமா எப்பொழுதும் உன் கூட இருப்பேன் ,உனக்கு சின்ன கஷ்டம்னா கூட நான் துடிச்சு போய்ட்டுவன்,எனக்கு நீ மட்டும்தான் எல்லாம் “ என்றான்.

“தெரியும்” என்றவள் அவனை நன்கு கட்டிக்கொண்டாள்

அவனும் அவளை பாதுகாப்பாக பிடித்துகொண்டு “ அம்மு ஜனனியும் , சந்தோசும் ஒருத்தவங்க ஒருத்தவங்களை விரும்புறாங்க ,

நம்ம வீட்டுல எல்லோருக்கும் சம்மதம் ...அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமா.. என்றான்...

கல்யாணம் என்ற ஒரு வார்த்தையில் அவள் உடல் அதிர விஷ்வா இன்னும் அவளை தன்னில் புதைத்து கொண்டான்...

வருவாள்...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 29:


வறண்ட என் கோடையில் எல்லாம் வந்து போன வசந்தம்...நீ...

மூடிய விழிகளுக்குள்ளும்..
முயன்று அமர்ந்துவிடும் என் அதிசயம் நீ...

படிப்பே ஏறாத பாலகன் என்னையும்...
உன் ம்ம்ம் முதல் ம்ஹூம் வரை படிக்க வைத்த பலே வாத்தி நீ....

போர்க்கால நடவடிக்கையாய் நீ இழுத்து சொருகும் இடையழகில் எல்லாம் இடிந்து போகிறது என் இளமை...

அச்சு என்று தும்மும் போது ஆறுதலாய் அணைக்கும் உன் கைகளுக்கு காய்ச்சல் என்ன காலானே வந்தாலும் சம்மதமே...

என் வாழ்க்கையை வரம்பு மீறி அழகாய் ஆக்கிரமித்து..
கட்டிய உன் காதல் கோட்டைக்கு திறப்புவிழா எப்போது...
கல்யாணம் என்னும் கதவை திறந்து....



அவள் உடல் ஒருமுறை அதிரவே அவளை இறுக்கி தன்னோடு புதைத்து கொண்டான் விஷ்வா.தான் அவளுக்கு செய்த மடத்தனத்தை எண்ணி தன்னை தானே நொந்து கொண்டவன் “ குட்டிமா” என்று அவன் ஆரம்பிக்கும் முன்னே

அகலி “ மாமா கல்யாணம் வேண்டாம் கொன்னுடுவாங்க மாமா உன்னை,என கருவிழிகள் அங்கும் இங்கு அலைய உதடு துடிக்க அவன் அணைப்பிலையே அவள் உளற அவளை இன்னும் இறுக்கிக்கொண்டான்.
அவள் மயங்கி விழாததும் அவன் அணைப்பிலிடுத்து விலகாமல் ,திமிராமல் இருப்பதே அவனுக்கு அவளின் சிறு முன்னேற்றத்தை உணர்த்தியது..

மேலும் அகலி “ ஏன் மாமா அன்னைக்கு என்னை விட்டுட்டு போன அன்னைக்கு... அன்னைக்கு....நீயும் இல்லை கருவாயனும் இல்லை நான் எவளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா” . என்றாள்

இந்த விஷயத்தை பற்றி யோசிக்கும் போதே சுயம் தொலைப்பவள், மயங்கி விழுபவள் இன்று அதை விளக்க முயற்சிப்பது அவளுக்கே ஆச்சரியம்தான்.

சந்தோஷை கூட கதறி அழ, பயந்து ஒதுங்கி கொள்ள ஒரு பற்றுக்கோலாக தானே மனம் தேடியது... ஆனால் இப்பொழுது அதை கடக்க விரும்புகிறதே அதை குறைக்க விரும்புகிறதே ஏன்.

எப்பொழுதும் சுழற்றி அடித்து தூக்கி எறியும் சூறாவளியாய் பயத்தை கொடுக்கும் அந்த சம்பவம் இன்று கொஞ்சம் வேகமாக அடிக்கும் காற்றை போல பயத்தை குறைகிறதே எப்படி..

என தன் குட்டி மூளையை குடைந்து வெகு நேரம் யோசித்தவள் தலையை நிமிர்த்தி பார்த்தாள் அங்கே அவளின் மாமனின் இறுகிய அணைப்பும் அவன் கண்களிலிந்து வரும் கண்ணீரும் பதிலாகி போனது அவளின் ஒட்டு மொத்த கேள்விக்கும்.

இப்பொழுது தான் தன்னை எப்பொழுதும் துரத்தும் தன் மாமன் தன்னை மறுபடி பார்த்தலிருந்து தன்னை பொத்தி வைத்துக்கொள்வது தனக்காக கண்ணீர் விடுவது என அனைத்தையும் உணர்ந்தாள் அதுவே அவளை இன்னும் கொஞ்சம் சகஜமாக்கியது.இதற்காக அவள் செய்த சாகசங்களும் குரங்கு சேட்டைகளும் ஒன்றா ரெண்டா

இது போதுமே அவளுக்கு இனி அவனுடன் உரசிக்கொண்டே அவள் காலத்தை அந்த கசப்பை கடந்துவிடுவாளே இத்தனை நாள் பயத்தில் அவன் நெருக்கத்தை அனுபவித்த மனம் இன்றே அவள் மூளைக்கு செய்தி அனுப்பி அவளை சந்தோஷப்படுத்தியது.

அதுதானே காதலின் மகத்துவம் தான் பிறந்தது முதல் தன்னுடன் இருப்பவர்கள் தன்னை பொத்தி பொத்தி வளர்த்தவர்கள் என யாரையும் விட ஏன் தன்னையும் ,தன் உயிரையும் விட அதிகமாக நேசிக்கும் வேர்விட்டு விருட்சம் ஆக்கும் ஆலமரம் அல்லவா.

அதீத அன்பு,ஆழ் கடலின் அமைதி,மொட்டை மாடி முழு நிலவு..,ஜன்னல் ஓர மழைச்சாரல் , பனிக்கால கம்பளி போர்வை,இளையராஜா இசை,மல்லிப்பூ வாசம்,மயில் தோகை ஸ்பரிசம் என எந்த அதி அற்புதமான வருணனைகளாலும் அடக்க முடியாத அந்த பொல்லாத ஹார்மோன் செய்யும் புரட்சிகரமான சூழ்ச்சி அல்லவா காதல்.

அது உயிர் கொடுக்கும் ,உயிர் வாங்கும்,உயிர் கேட்கும்,காயப்படுத்தும்,காயத்திற்கு மருந்தாகும்,கலவரப்படுத்தும்,கவிதை படைக்கும்,பைத்தியமாக்கும், இதம் தரும், இதயம் அறுக்கும்,என முரண்பாடுகளின் முழு உருவம் அல்லவா காதல்.எல்லாவற்றையும் நிகழ்த்தும் அற்புதம் அன்றோ..



(அப்பறம் அடிக்கும் கடிக்கும் கிள்ளி வைக்கும் இதை எல்லாம் விட்டுட ஆள பாரு எப்ப பாரு புரியாத மாதிரி பேசிகிட்டு)

அது கொடுத்த தைரியம் அகலியும் வாயை திறந்து அன்று நடந்ததை கூற சொல்லியது. “மாமா நான் அன்னைக்கு” என்று ஆரம்பித்தவளின் வாயின் கையை வைத்து மறுப்பாக தலையை அசைத்தவன் தன் அணைப்பிலிருந்து அவளை விலக்கி நடத்தி வந்து கட்டிலில் அமர வைத்தான்.

அவளின் காலடியில் அமர்ந்து அவளின் இரு கைகளையும் எடுத்து தன் கன்னகளில் அழுத்தி புதைத்து கொண்டவன் “ நீ எதும் சொல்ல வேண்டாம் குட்டிமா” என்ற கனத்த குரலில் கூறினான் .

அவளின் வலி நிரம்பிய குரலில் அவள் பட்ட துன்பங்களை கூறுவதை அவனால் கேட்கவும் முடியுமோ.விஷ்வா இதுவரை அடைந்த வெற்றிகள் எல்லாவற்றையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுமே அந்த துயரம் அப்பிய குரல்.தான் அவளை கடலளவு நேசித்து அவளை துன்பத்தில் தள்ளியது என அவனை குற்ற உணர்ச்சியில் குறுகுருக்க செய்யுமே அந்த பேதை குரல்... அதனால் தடுத்துவிட்டான்.

அவனுக்குதான் தெரியுமே அந்த நாட்களில் அவனின் மல்லிப்பூ பட்ட துயரங்கள்..

அதுவும் செய்ய சொல்லியவள் வாயாலேயே உணர்ச்சி துடைத்து குரலில் கேட்கும் போதே கை முஷ்டி இறுக ரத்தம் உயர் நிலையில் கொதிக்க கோபத்தை அடக்கியதால் அவன் மூக்கிலிருந்தும் நாக்கை கடித்ததால் வாயிலிருந்து கூட இரத்தம் கூட வந்தது.

அந்த கோபத்தில் ரீனாவை ஒரு அடி ஒரே அடி அவன் அடித்தாலே அந்த இடத்திலையே உயிர் விட்டிருப்பாள்.

ஆனால் செத்த பாம்பை எத்தனை முறை சாவடிப்பது. மரணம் என்பதுவே சிறு வலி என்பது போல கடவுள் அவனின் மல்லிப்பூ க்கு செய்ததற்கு பலி தீர்த்து விட்டார் ரீனாவை .

அவனின் முடி நிறைந்த கன்னத்தில் அழுந்தி முத்தம் கொடுத்தவள் மீண்டும் அவன் கன்னங்களில் கை வைத்துக்கொண்டு அவனையும் அவன் செய்கையையும் ஆர்வமாக பார்த்தாள்.
இது எல்லாம் அவள் மாமனிடமிருந்து புதிது அல்லவா அவளுக்கு..

லேசான சிரிப்புடன் அவள் உள்ளங்கையில் ஒரு முத்தம் வைத்தவன் “ கண்ணை மூடு அம்மு” என்றான்

“ம்ம்ம்” என்றவள் கண்களை மூடினாள்.

“ குட்டி இதுவரைக்கும் நம்ம வாழ்க்கையில என்ன நடந்து இருந்தாலும் அதை பற்றி இனி நாம எப்போதும் பேச வேண்டாம் ,உன் வாழ்க்கையில் நடந்த எல்லா கெட்டதுக்கும் நான் ஒரு முக்கியமான காரணம் ஆகிவிட்டேன்,

“அப்படில்லாம் இல்லை “என்று சொல்ல வந்தவளின் வாயை மூடியவன் “ மூச் நான் பேசி முடிக்கிற வரை நீ எதும் பேச கூடாது இல்லை உங்க அத்தம்மாட்ட சொன்ன டீல்லாம் காத்துல விட்டுட்டு பேட்டச் தான்” என்றான் நமட்டு சிரிப்புடன்.

( பாவி குழந்தைய எப்படி மிரட்டுறான் பாருங்க.. கட்டுன பொண்டாட்டிய பேட் டச் பண்ணலனாதான் டா தப்பு)

அவள் எங்கே இனி பேச போகிறாள் அமைதியாகிவிட்டாள்.

விஷ்வா “ நீயாவது அள்ள அள்ள குறையாத உன் நினைவுகளை எனக்கு துணையா கொடுத்துட்டு போனாய் ஆனால் நான்...நான் உனக்கு...என்றவனின் கண்களிலிருந்து வந்த கண்ணீர் அவள் கைகளை நனைந்தது....”ஆனால் வேணுன்னு பண்ணலடா...

,என்னைக்கு உன்னை நான் முதல் முதலாக பார்த்தேனோ அன்னையிலிருந்து நீ தான் டா என் உயிர்மூச்சு நீ எதுமே செய்யாமலே மாமா உன்னிடம் டோட்டல் சரண்டர் அதுக்கு அப்பறம் நீ பண்ணுனது எல்லாம் உன்மேலான உள்ள காதலை அதிகரிக்க தான் செய்தது....உன் ஒவ்வொரு தீண்டலும் என்னை பற்றி எரிய வச்சதுன்னு சொன்ன நீ நம்ப மாட்ட....என் வாய் மட்டும் தான் நீ சொல்றத தடுக்கும் மத்த படி என் எல்லாமே உன்னை.. உன் சேட்டைய ரசிக்கும் நேசிக்கும்...பூஜிக்கும் ஆராதிக்கும்..

“இப்ப. இப்ப கூட. உன் கை குள்ள என் உலகம் அழியுதுன்னு சொன்ன நான் சந்தோசமா அழிந்து போவேன்” என்று கூறும் போது தன் கன்னத்தை பிடித்திருந்த கைகளில் தன் கைகளால் அழுத்தி பிடித்து கொண்டான்.

மேலும் இது வரை நடந்தது அவன் விலகிய காரணம் என அனைத்தும் கூறியவன் மறந்தும் அவளிடம் அன்று நடந்தவற்றை கேட்கவோ அவளை சொல்லவோ விடவில்லை.கண்களை திறக்கவும் அனுமதிக்கவில்லை...

அவள் புருவங்களை லேசாக வருடியபடி“ குட்டிமா உன் அழ் மனசுக்கிட்ட சொல்லு என் மாமா இருக்கும் போது யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது நீ என்ன சொன்னாலும் நீ எந்த விஷயத்தை என்னிடம் திரும்ப திரும்ப நியாபக படுத்துனாலும் மாமாவை என்னிடமிருந்து பிரிக்க முடியாது.. நீ கூறும் அனைத்தும் என் வாழ்வில் நடந்த ஒரு நிழல்படம் அது எப்பொழுதும் என்னையும் என் எதிர்காலத்தையும் எந்த விதத்திலும் பாதிக்காது அப்படின்னு சொல்லுடா” என்றான்

அவளும் அவன் சொல்வதை அந்த ஏகாந்த அமைதியில் அவளின் மனதிடம் பதியும் படி திரும்ப திரும்ப கூறினாள்.

ஏற்கனவே ஒரு வித தெளிவில் இருந்தவள் இன்னும் அவன் செயலில் தெளிவானாள்.

ஆமாம் உண்மைதானே ஆழ் மனம் நம்பும் விசயங்கள் தானே நம் வாழ்வை நெறிப்படுத்துகிறது அது காதாலகட்டும் ஒருவர் மீதான சந்தேகம் ஆகட்டும் அதே தானே தீர்மானிக்கும்

அதனால் தான் மனோதத்துவ மருத்தவர்கள் ஆழ் மனம் சென்று ஹிப்நோட்டிசம் செய்வதும்..ஆழ்மனதை நேர்மறையான சிந்தனைகளால் நிரப்புங்கள் என்று கூறுவார்கள் போல....

“ குட்டிமா இப்ப சொல்லு நம்ப கருவாயனுக்கும் ஜனனிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமா “ என்றான்.

இப்பொழுதும் அவள் கைகளில் சிறு நடுக்கம் மிக சிறிய அளவில் ஒரு நடுக்கம் .

அவன் கன்னத்திலிருந்து இறங்கிய கை அவனின் சட்டை காலரை இறுக்க பிடித்துக்கொண்டு “ ம்ம்ம் நீங்க என் கூடவே இருக்கணும் அப்பதான்” என்றாள் கண்களை திறவாமலே...

அவன் பார்த்த முதல் நாளே உன்னை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்பதே அவளுக்கு எல்லாவற்றையும் மறக்க செய்துவிட்டு..இது போதுமே அவளுக்கு எல்லாம் இயல்பு நிலைக்கு வர .

விஷ்வா “ என் வாலு குண்டானோட நான் இருக்காம வேற யாரு இருப்பா,உன் இம்சை எல்லாம் தாங்கதான் எனக்கு ஒரு வருஷம் ட்ரைனிங் கொடுத்தியே” என்று கூறும்போது அகலியின் இதழுக்கு அடியில் ஒரு குறுஞ்சிரிப்பு...

அவள் கைகளை எடுத்து அவளின் மார்பிற்கு நேராக இரு கைகளையும் ஒன்றாக்கி வாங்குவது போல உள்ளங்கையை விரித்து வைத்தவன்

( இந்தா டா அந்த புள்ளை இன்னும் எவளோ நேரம் கண்ணை மூடிக்கிட்டு இருக்கும் சொல்ல வந்தத சொல்லி தொலை நீயும் இந்த ரைட்டர் மாறி புள்ளி சதுரம் வட்டம் செவ்வகம்ன்ட்டு...)

குட்டிமா நீ முன்னெல்லாம் அடிக்கடி கேட்பல்ல “wil u marry me”, என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றனு, அதுக்கு இப்ப பதில் சொல்லவா “ என்றவனின் கை அவளின் கழுத்திற்கு சென்று இருந்தது.


(அட.. ஆத்தி.. அதையா சொல்ல போறா...)

கழுத்தில் எதோ குருகுருக்க அதை ஒதுக்கிய படி விஷ்வாவின் கேள்விக்கு அகலியின் தலை சம்மதமாக ஆடியது.

அவளின் ஜெயினை வெளியே எடுத்து அதில் இதயவடிவில் உள்ள லாக்கெட்டை மட்டும் தனியாக எடுத்துவிட்டு தாலி தாங்கிய அந்த ஜெயினை அவளின் உள்ளங்கையில் வைத்தான்.

“ நீ அகலிகை விஷவேந்திரன் ஆகி ஒரு வாரம் 21 மணி நேரம் ஆகிடிச்சி உன் மாமன்,அவனை சுத்தி உள்ளவங்க, உன்னை சுத்தி உள்ளவங்க யாருக்கும் எதும் ஆகலை இதுதான் இதை மட்டும் உன் மனசுக்கிட்ட 1000 தட சொல்லிடு... இப்ப கண்ணை திற டா” என்றான்.

“மிஸ்ஸஸ் அகலிகை என்று சொல்லும் போதே கண்களில் தாரை தாரையாக கண்ணீர். இப்பொழுது கண்களை திறந்தவளின் எதிரில் மங்கலான அவளின் மாமாவின் உருவம் அப்படியே கண்களை இறக்கி அவள் உள்ளங்கையை பார்த்தாள் தாலியுடன் அவள் கழுத்து செயின் இப்பொழுது அவளின் பயம் எல்லாம் காணாமல் போனது தன் எத்தனை வருட தவ வாழ்க்கை ,இப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது என்று விரும்பியவளை முழு விருப்பத்தோடு ஏற்று கொள்ள வைத்துவிட்டான் தன் தலைவன்.தாலியை நெஞ்சோடு அழுத்திக்கொண்டவள் இப்பொழுது ஒரே அழுகை இது பயத்தால் அல்ல ஆனந்தத்தால் .

ரீனாவோ இல்லை சுந்தரியின் இடையூரோ இல்லாமல் இருந்திருந்தால் அகலி விஷ்வாவின் காதல் எல்லாவற்றையும் போல சாதரணமான காதலாகியிருக்கும் ஆனால் இப்பொழுது துன்பம் துயரம் கஷ்டம் எல்லாம் நிரம்பிய கல்வெட்டில் பதிய கூடிய சரித்திர காதல் ஆனது.

ஊழ்வினை, தந்திரம் ,மாங்கொடுஞ்செயல் அதர்மங்கள் இவை யாவுமேதான் பல மறக்க முடியாத சரித்திரங்களையும் புராணங்களையும் தந்திருக்கிறது.அது போல தான் இதுவும்

( இது என்னப்பா இந்த பொண்ணு எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லிடுது..போய் தொல கொஞ்சம் ஏத்துகிற மாறி இருக்குறதால மன்னிச்சி விட்டோம்)

வெகு நேரம் அழுதவள் தன் காலுக்கு அடியில் முட்டி போட்டு தன்னையே பார்க்கும் தன் மாமனை தாவி அணைக்க அவன் பேலன்ஸ் இல்லாமல் பின் சாய அகலியும் அவன் மேலேயே சாய இச்சு இச்சு என்று அவன் முகம் முழுக்க முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டாள்.

விஷ்வாவோ சுகமாய் அவள் முத்தங்களை தாங்கி கொண்டான்.
அப்படியே அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.ஒரு 5 நிமிடம் அப்படியே கடக்க தலையை லேசாக தூக்கி பார்க்க அவனின் மல்லிப்பூ அவன் மார்பிலேயே தூங்கிவிட்டாள்.

“வாலு “ என கொஞ்சியவன் அவளை தூக்க முயற்சிக்க அவளின் ஒரு கை அவளின் தாலியையும் இன்னொரு கை அவனின் இறுக்கி பிடித்து இருந்தாள் அதுவே அவள் அவை இரண்டிற்கும் பட்ட துன்பத்தை அவனுக்கு காட்டியது.இனி எப்பொழுதும் அவளை கலங்க வைக்க கூடாது என்று உறுதி எடுத்து கொண்டான்

அவளை மெதுவாக தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவன் அவளை அணைத்த படி தூங்கி போனான்.

இருவருக்கும் வெகுவருடம் கழித்து நிம்மதியான நித்திரை.

காலை 6 மணிக்கு விஷ்வாவின் அலாரம் அடிக்க அதை அணைத்து வைத்த படி எழுந்தவன் தன் மனையாளுக்கு நெத்தியில் முத்தம் கொடுத்துவிட்டு குளிக்க போனான்.

குளித்து திரும்பி வரும் வரை அவள் எழுந்த பாடாக இல்லை .அவளை எழுப்பி குளிக்க அனுப்பிட்டு வெளியில் வர அங்கே ஹாலில் சந்தோஷ், கண்ணன், முருகன், ராஜா என அனைவரும் அமர்ந்து இருக்க ரீனா மட்டும் எப்பொழுதும் போல வெறித்த பார்வையோடும் உணர்ச்சி துடைத்த முகத்தோடும் வாசலில் அமர்ந்து இருந்தாள்.

ஜனனியும்,சுந்தரியும் சமையல் அறையில் இருந்தனர்.எல்லோரையும் ஹாலுக்கு அழைத்தவன் தன் மனைவியை உரக்க அழைத்தான் “ குட்டிமா குட்டிமா இங்க வா” எங்க

“ம்ம்ம் இதோ வரேன் மாமா” என்றவள் விஷ்வாவின் அருகே வர அவளின் தோள் மேல் கை போட்டு தன்னோடு அணைத்து “ பூக்குட்டி நான் சந்தோஷுக்கும் ஜனனிக்கும் கல்யாணம் பண்ணி வைக்காலம்ன்னு இருக்கேன் , நீ என்ன நினைக்குற” என்க

( ஸ்ஸ்ஸ்ஸ் எத்துனை பேரு மல்லிப்பூ வோட சார்ட் நேமா...முடியல)

எல்லோரும் மனதில் கலவரத்துடன் அகலியை பார்க்க சந்தோஷிர்க்கோ வெளிப்படியாக கைகள் நடுங்க கண்களில் கண்ணீர் வந்தது.

விஷ்வா ஏன் இப்படி கேட்குறான்னு அகலியோட குட்டி மூளைக்கு புரிந்ததோ என்னவோ அவளும் “புருஷன் எவ்வழியோ பொண்டாட்டயும் அவ்வழியே , உங்களுக்கு எது சரிபடுதோ அதே பண்ணுங்க மாமா எங்க கருவாயனும் கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான்” என்று கூறி எல்லோர் வயிற்றிலையும் லிட்டர் கணக்கில் பால் வார்த்தாள் அகலி


வருவாள்...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலன் 30:

அவனுக்கென்ன ஆளைவிழுங்கும் விழிகள்...
அல்லல் படுவது நான்தானே...
*******
தொடுதிரையில் தொட்டு மீள்கிறேன்...

தொடாத அவள் இதழ்களை...
*********
கூர்வாளெல்லாம் கிழிக்குமா...
என்னை கொஞ்சிகிறதே
அவன் கூர்ப்பார்வை .....
********

கூர்வாளெல்லாம் கிழிக்குமா...
என்னை கொஞ்சிகிறதே
அவன் கூர்ப்பார்வை .....

*******


பெர்முடாஸ் முக்கோணமா பெண்ணவள்..

தொடர்பே இல்லாமல் தொலைந்து போகிறேனே...

*******

அகலியின் தெளிவான பேச்சைக் கேட்டு அங்கு உள்ள அனைவருக்கும் தொலைந்த சந்தோஷம் திரும்பி வந்தது...

வாசலில் விரக்தியே உருவமாக உட்கார்ந்து இருந்த ரீனாவிற்கும் சந்தோஷம் தான் அழித்த எத்தனையோ குடும்பங்களிலும்,மனிதர்களுலும் ஒருத்தியின் இயல்பான வாழ்க்கையையாவது திரும்ப கிடைத்ததே என்று...

அக்னி சொன்னதை கேட்ட சந்தோஷ் உடல் அதிர ,நிம்மதி பெருமூச்சுடன் அப்படியே அங்கு உள்ள சோபாவில் அமர கண்கள் தானாக கண்ணீரை சொறிந்தது...
அவன் தூக்கம் தொலைத்து இரவுகள்தான் எத்தனை.. குற்ற உணர்ச்சியில் குறுகிய நாட்கள்தான் எத்தனை...

அவன் அதிருந்து அமரவே ஜனனி வேகமாக சென்று அவன் தோளில் ஆறுதலாக கையை வைக்க அப்படியே அவள் வயிற்றில் சாய்ந்து கொண்டான்...

தன் கருவாயன், தன் பெற்றோருக்கு மேல் தான் நேசித்த,தன்னை நேசித்த கருவாயன் ,தன் உயிர் தோழன் இப்படி உடைந்து அமரவும் வேகமாக அவன் முன்னே சென்று சோபாவின் கீழே அமர்ந்தவள்..
அவன் கையை பிடித்துக்கொண்டு “ ரொம்ப படுத்திட்டேனா டா” என்றாள்...

லேசாக கை சிவந்து இருந்தாலே துடித்து போகுபவன் தன் இந்த நிலையை நினைத்து எவ்வளவு வருந்தி இருப்பான்...

இத்தனை நாள் சுயநினைவு இன்றி துயரத்தில் இருந்தவள் இன்று தன் மாமனின் ஆறுதலோடு கரை வந்தவளுக்கு தன் நண்பனின் துயரம் கண்டு, துடித்து போனாள்...

இருவரும் அழுது கரைய விஷ்வா அகலியின் அருகில் சென்று அமர்ந்து அவள் தோளில் கை போட்டு “ டேய் சந்தோஷ் இப்பவே அழுது முடிச்சிடாத உன் தேனுக்குட்டி பேக் டூ தி பார்ம் கொஞ்சம் மீதி வச்சிக்க “ என்க..

அந்த இடத்தின் இறுக்கம் குறைந்து அனைவரும் சற்று சிரிக்க அகலி விஷ்வாவை முறைத்தாள்...
ராஜா இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தன் வீட்டினாருக்கு போன் செய்ய வெளியே சென்றான்....

அவர்கள் அனைவரும் கலைந்து சென்று ஒரு மணிநேரம் மேல் ஆகியும் ரீனா எதுமே இல்லாத வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள்...
எதார்த்தமாக வெளியில் வந்த கண்ணன் ரீனாவை பார்க்கும் போது தோன்றும் கலவையான உணர்வுடன் பார்த்து கொண்டிருந்தான்...

ஏதோ ஒரு யோசனையில் இருந்த ரீனா எழுந்து உள்ளே வர வாசல் படி தடுக்க கிழே விழுந்தாள்...

அவளின் வலது காலில் பொறுத்தபட்ட செயற்கை கால் தனியாக விழ,காலில் ரத்தம் வர, எழுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தாள்..
கால் அகற்றப்பட்டு சில நாள் மட்டுமே இருந்ததால் ரத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது


அதை பார்த்த கண்ணன் வேகமாக அருகில் வந்து அவள் கை பிடித்து மெதுவாக எழவைத்தவன் அவள் ரத்தம் வரும் காலை வருத்தமாக பார்த்த படி “ பார்த்து வர மாட்டியா ராணிமா” என் கடிய..

அதற்கு ரீனாவிடம் எந்த பதிலும் இல்லை ,எதற்கு ....? எதற்குதான் தகுதியானவள்..அடுத்தவரின் பார்வைக்காகவாது தான் தகுதியானவள் இல்லையே என மனதில் நினைத்தவள் , மனம் கூச

அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவனிடமிருந்து விலகி சுவற்றை பிடித்துக்கொண்டு மெதுவாக உள்ளே சென்றாள்..

மறுபடியும் பிடிக்க வந்தவனை வேண்டாம் என்று பார்வையாலே தடுத்தவள் சென்றுவிட்டாள்

இந்த காலின் இழப்பு மட்டும்தான் தன் மாறுதலுக்கு காரணமா என அவளின் நினைவுகள் அந்த நாளுக்கு பயணம் ஆனது...

அன்று கார் பார்க்கிங்கில் விஷ்வாவை மிரட்டி கொண்டு வீட்டுக்கு வந்தவளை வரவேற்றது ஆர்.கே யின் இறந்த உடல்தான்....
தமிழ்நாட்டிற்கே சிம்ம சொப்பனமாக இருந்த அவனை சீக்ரெட் அசைன்மெண்ட்டின் மூலம் என் கவுண்டர் செய்து இருந்தது காவல் துறை....

அதை பார்த்த ரீனா அழுதாள், வருத்தம் கூட கொண்டாள் ஆனால் அது கூட பிறந்த அண்ணனை நினைத்து அழுதது போல் அல்ல,அந்த அழுகை வருத்தம் எல்லாம் மூன்றாம் தெருவில் இருக்கும் ஒருவர் இறந்தால் வருமே ஒரு வருத்தம் அந்த அளவுக்கு அவ்வளவு நாசுக்காக இருந்தது...

எல்லாவற்றையும் செய்ய ஆள் இருப்பதால் வராத சோகத்தை வரவைத்து மிகவும் சிரமப்பட்டு போனாள் அந்த நாள் முழுவதும்...

தங்கையும் அண்ணனும் மனிதரை மனிதராய் பார்த்தால் தானே அந்த உணர்வுகள் எல்லாம் வரும்...அங்கே அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது..

அது அவளின் குணத்தை எந்த அளவிற்கும் மாற்றவில்லை..
அன்று இரவு தன் அறையில் தூங்கிக் கொண்டிருக்க பூட்டிய அறையினுள் இத்தனை நாள் அவளுக்கு காவலாய் இருந்த அவளின் காவல் நாய் இன்று ஓநாயாய் மாறி அவளின் அருகில் அமர்ந்து இருந்தது...

ஏதோ உறுத்த கண்களை திறந்தவள் எதிரில் உள்ளவர்களை பார்த்து அதிர்ந்து எழுந்தவள் “ காளி இங்க என்ன பண்ற” என அதட்ட...
“மேடம் மேடம் உங்களை மாதிரி ஹை கிளாஸ் பிகர்ட்ட நான் ........போனதே இல்ல மேடம்...

கொஞ்சம் நேரம் மட்டும் என் ஆசையை தீர்த்து வைங்க “ என்றவன் அவள் முகத்தை நோக்கி குனிய அவளுக்கு ஏனோ அருவருப்பு, குடல் பிரட்டல் என அனைத்தும் வர அவள் தலையில் யாரோ சம்பட்டியால் அடித்தபோல் அப்படியே அதிர்ந்து போனாள்...
ஆக இத்தனை நாளாய் தான் தொட்ட அத்தனை பேருக்கும் இப்படித்தான் இருந்திருக்குமா என கூசி போனாள்...

அதற்கு மேலயும் எதையும் யோசிக்க விடாமல் காளி அவளை நெருங்கி அவள் கையை பிடிக்க...
முதல் முறையாக பயத்தை உணர்ந்தாள் என்றாள் மிகை இல்லை..அவன் தொட்ட இடம் தீயாய் தகிப்பதை விட அது நியாபகப்படுத்தும் தன் கீழ் தனமான செயலை அவளால் சகிக்க முடியவில்லை...

காளியோ அவளை நெருங்கி “என்ன டி பெரிய பத்தினி மாதிரி பண்ற,நானே உனக்கு எத்தனை பேருக்கு விளக்கு பிடிச்சி இருக்கேன்,ரொம்ப துள்ளாத “என்றான்..

அவனின் ஒவ்வொரு செயலும் அவளுள் இத்தனை வருடங்களாய் புதைந்து கிடந்த, மரித்து போன பெண்ணிற்கான குணாதிசயங்களை தோண்டி கொடுக்க...

முடிந்த அளவு அவனிடம் போராடினாள்
அவனை விலக்கி விட்டு வெளியே ஓடினாள்..அவளுக்கு தெரியவில்லை தன்னிடம் இல்லாத ஒன்றை காக்க தான் ஏன் ஓடிகிறோம் என்று...

இருந்தும் ஓடினாள்...தான் விருப்பப்பட்டு மட்டுமே எல்லாம் செய்தவள்,இப்பொழுது தனக்கு விருப்பம் இல்லாதது நடக்கும் போது ஒரு சராசரி பெண்ணின் இயல்பு எல்லாம் வெளிவந்தது...


காளியும் அவளை துரத்திக்கொண்டு வெளியே வர இரவு உடையோடு ஓட அவளின் பின்னே வந்த கார் அவள் கையை தட்டிவிட்டு போக அப்படியே ரோட்டில் ரீனா விழ,எதிரில் வந்த கார் அவள் கீழே விழுவாள் என்று எதிர்பார்க்காததால் நிறுத்த முடியாமல் அவள் வலது காலில் ஏறி சென்றது...

வலது கால் முழுசேதாரத்துடன் அவள் சுயநினைவின்றி கடக்க அங்கு வந்த காளி அவளின் அந்த நிலையிலும் அவள் மீது அவன் இச்சைய தீர்த்துவிட்டு “ செத்து ஒழி “ என்று சொல்லிவிட்டு அவளின் ஆஸ்திகளை அனுபவிக்கலாம் என்று நிம்மதியுடன் சென்றான்...

ரீனா இப்பொழுது முழுமையாக உணர்ந்தாள் தான் என்ன செய்தோம் தன் இறந்த காலத்தில் என்பதை... மேலும் தான் விதைத்தது எல்லாம் தனக்கு வருகிறது என்று...

அதற்கு வருத்தம் கொள்ளவில்லை சாகும் தருவாயிலாவது தான் செய்த தவறை உணரவைத்த கடவுளுக்கு நன்றி சொல்லி மயங்கிடந்தாள்

சுயநினைவு இன்றி மயங்கி கிடந்தவளை காப்பற்றி மருத்துவமனையில் சேர்த்தது வேறு யாரும் இல்லை அன்று காலேஜில் தன்னை விட அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக ஒரு பெண்ணை கொன்றாளே அந்த பெண்ணின் பெற்றோர்கள்தான் ...

அவர்கள் வளர்ந்த சமூகம் அவர்களை அப்படி நடக்க சொன்னது..இவள் வளர்ந்த சூழ்நிலை இவளை இப்படி நடந்துக்க சொன்னது.. இதில் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை...

மறுநாள் காலையில் கண்விழித்தவள் எதிரில் இருந்தவர்களை யார் என்பது போல பார்த்தாள்... அந்த தம்பதியினர் தங்களை அறிமுகபடுத்தி கொண்டனர் அவள் அவர்களுக்கு செய்த கொடுமையோடு...

அடுத்த அடி அவள் மனதில் பலமாக..மன்னிப்பை விடவா பெரிய தண்டனை இவ்வுலகில் இருக்கப்போவது அவள் கண்கள் கலங்க அப்படியே மூடிக்கொண்டாள்..

மன்னிப்பு என்ற வார்த்தையை கூட அவள் கேட்கவில்லை..மன்னிக்க கூடிய காரியங்களா அவள் செய்தது...

அவர்களும் மறு படியும் அதை பற்றி கேட்கவில்லை..ரீனாவை பார்க்கும் போது ஒரு ஷபாயில்ட் சயில்டாகவே தெரிந்தாள்... பிறந்த குழந்தையை பார்த்துக்கொள்வதை போல அவளை பார்த்து கொண்டனர்...

ரீனாவும் அவர்களிடம் எதுவும் பேசவும் இல்லை ,அவர்கள் செய்வதை தடுக்கவும் இல்லை..அவளுக்கு எப்படி அவர்களிடம் பேசவேண்டும் என்று தெரியவில்லை...பணம் தாண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதை கண் கூடாக உணர்ந்தவள் எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என கூட தெரியாமல் இருந்தாள் ...

அவளின் வலது கால் முற்றிலும் அகற்ற பட்டு கட்டு போடப்பட்டு இருந்தது..காயம் ஆறியதும் செயற்கை கால் பொறுத்திக்கொள்ளலாலாம் என்று மருத்துவர் சொல்லி இருந்தார்...

தன் சொத்து,தன் பணம் தன் அகம்பாவம் எல்லாவற்றையும் மறந்த நிலையில் இருந்தாள் ரீனா ..அமைதி அமைதி அது மட்டுமே அவளுக்கு துணை,அந்த தம்பதியினர் செய்வதை ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் பார்த்தாள்... பயம்,மரியாதை இல்லாமல் பாசம் மட்டுமே அதில் இருப்பதில்...

இதுவரை பார்க்காத உலகம் இது வரை உணராத உணர்வு.. ஒரு வேளை தான் இந்த உலகத்தில் பிறந்து இருந்தால் தானும் இவர்களை போல குணங்களோடு பிறந்திருப்பேனோ என மனதுக்கள் ஆயிரம் கேள்வி கேட்ட படி அமைதியாக இருந்தாள்..

அடிப்பட்டதிலிருந்து எதுவும் பேசாமல் இருந்தவள் அன்றுதான் அவர்களை நோக்கி “ நான் உங்களை அம்மா அப்பா ன்னு கூப்பிடவா” என்றாள்,ஒற்றை புள்ளையையும் பறிகொடுத்த அவர்களுக்கு கசக்குமா சந்தோசத்துடன் சம்மதம் என்றனர்...

தன்னலம் இல்லாமல் உதவி செய்வது பெற்றோர்கள் மட்டும்தான் என அவள் உணர்ந்து இருந்தாலோ என்னவோ.. பிறந்த குழந்தை நடைபயில்வதை போல அவர்களிடம் ஒவ்வொன்றாய் கத்துக்கொண்டிருந்தாள்.


மேலும் 5 நாட்கள் கரைந்து இருக்க அன்றுதான் விஷ்வா தன் அண்ணனை அந்த மருத்துவ மனைக்கு அழைத்துவந்தான்..
சரியாக சொல்லவேண்டும் என்றால்.. விஷ்வாவின் குடும்பம் தன் சொந்த ஊருக்கு செல்வதற்கான முதல் நாள்..

ஏதார்த்தமாக ரீனாவை கண்டவன் ,பிடிக்காதவர்களாகவே இருந்தாலும் இப்படி இருக்கும் போது பார்க்காமல் எப்படி செல்வது என்று அவளை பார்க்க செல்ல அதுவரை அகலியின் நினைவு இல்லாமல் இருந்த ரீனா மீண்டும் மீண்டும் தன் அக்கிரமங்களை உணர்ந்து உறைந்து போனாள்...

எப்படி ஆனது என்ற கேட்ட விஷ்வாவிடம் அதை சொல்லாமல் தான் அகலிக்கு செய்ததை உணர்ச்சி துடைத்த குரலில் சொன்னாள்..ஏனோ மறைக்க தோன்றவில்லை..

அவள் சொல்ல சொல்ல தன் மல்லிப்பூவின் மர்மம் அவிழ்வதையும்,அவள் பட்ட, படும் வேதனையும் உணர்ந்தவன் கைய முட்டியை இறுக்கி அவளை கொல்லும் கோபத்தை கட்டினப்பட்டு குறைத்தான்....

இருந்தும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகவே பக்கத்தில் உள்ள தலையணையை வைத்து அவள் முகத்தில் வைத்து அமுக்கினான்..

ஒரு காலை இழந்தவள் உடல் முழுவதும் அடியுடன் இருப்பவள் என அவன் மூளை நொடிக்கு 1000 கட்டளைகளை அனுப்பினாலும் அவன் காதல் கொண்ட மனம் அதை ஏற்காமல் அவன் கைகள் அவள் முகத்திற்கு முழு அழுத்தத்தையும் கொடுத்தது..

ரீனாவும் மூச்சிவிட முடியாமல் கை கால்களை அசைத்தாலே தவிர அவனை தடுக்கவில்லை..

அந்த தம்பதியினர் மருந்து வாங்க சென்றுவிட்டு கதவை திறக்கும் போது நடக்கும் விபரீதத்தை உணர்ந்து விஷ்வாவை பிரிக்க முடியாமல் பிரித்தனர்..

இருந்தும் கோபத்தை குறைக்க முடியாமல் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வர நரம்பு புடைக்க நின்று இருந்தான்..


கொல்லாமல் விட்டுவிட்டானே என்ற வருத்த பாவனையை கண்ணில் தாங்கி தன்னை நிலை படுத்திக்கொண்டு மேலும் தன் அண்ணன் இறந்தது,தனக்கு நடந்தது என அனைத்தும் கூற அவனின் கோபம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது...இருந்தும் முழுதும் தீரவில்லை...

அவளின் அம்மா “ இவள் சேருல முளைச்ச செந்தாமரை தம்பி, ஆனால் தான் செந்தாமரைன்னு கூட தெரியாம அந்த சேரோடு சேராவே வளர்ந்து இருக்காள், பாவம் செஞ்ச கொழந்தைபா இவள்” என்க..

தன் பெண்ணை முழுதாக பறிகொடுத்தவர்களே இவளுக்கு இவ்வளவு பேசும் போது விஷ்வாவும் மன்னிப்பே தண்டனையாக தந்து அவளை இன்னும் ஒடுக்கினான்..
இருந்ததும் ஒரு ஓரத்தில் முனுக் முனுக்கென்ற கோபம் இருந்து கொண்டே இருந்தது...

பின் தான் அகலியை கல்யாணம் செய்தது அவளின் நிலை எல்லாவற்றையும் சொல்ல , பாதி ஆறிய காலோடு செயற்கை காலை பொருத்தி கிளம்பிவிட்டாள் அகலியை காண..

அகலியாவது தனக்கு தண்டனை தருவாளா என்று நப்பாசையோடு.. அவளின் சொத்தை பற்றி கேட்டதற்கு அது எதுவும் எனக்கு வேண்டாம் என்றுவிட்டாள்..
ஆனால் விஷ்வாதான் தனக்கு நம்பிக்கையானவரை வைத்து பார்த்துக்கொண்டு அதில் வரும் லாபத்தை நல்ல காரியங்களுக்கு கொடுப்பதாக சொல்லி,அந்த காளியை, வீட்டை காலி செய்ய வைத்து தான் ஆட்களை வைத்து மிரட்டி வந்தான்...

அந்த தம்பதியினரை அழைக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள்.. அவளை அங்கு சென்று இருக்க சொல்லியும் அவள் எப்போது திரும்பி வந்தாலும் இந்த அம்மா அப்பாவின் வீடு உனக்காக திறந்து இருக்கும் என்பதோடு...

எல்லோருமே அவளுக்கு மன்னிப்பையே கொடுத்து குற்ற உணர்ச்சியிலே அவள் கடைசி வரை வாழ்வதே அவளுக்கான தண்டனை என நினைத்து வாழ ஆரம்பித்துவிட்டாள்.

இப்பொழுதுதான் கொஞ்சமே கொஞ்சம் வாழ்க்கையை கத்துக்கொண்டு இருக்க கண்ணனின் பார்வை அவளுக்கு அவன் எண்ணத்தை உணர்த்தியது..

அவள் மனது தும்பை போல தூய்மையாக இருக்க,அவள் உடலும் அவள் எண்ணமும்,அவள் கடந்த காலமும் தூய்மையாக இல்லையே ,எல்லோரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசுபவள் அவனிடம் அதையும் பேசுவது இல்லை...

அவனின் ராணிமா என்ற அழைப்பு அவளுள் கொண்டு வரும் உணர்வு இதுவரை அவள் அறியாதது....
தன் சிந்தனையிலிருந்து வெளியில் வர ,கதவு சத்தம் கேட்க கதவை திறக்க அங்கே விஷ்வாவின் மொத்த குடும்பமும் அங்கே நின்றது..
கூடவே சந்தோஷ், ராஜாவும்..

வருவாள்
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலன் 31:


வன்முறையாளனின் மென் முத்தங்கள் எல்லாம் முரணானவை...

கருமை நிறம் அது வெளிச்சம் ஆன விந்தை எல்லாம் அவன் அன்பில்.....

கண்ணுக்குள் பொத்தி வைத்து கருத்துக்குள் ஒழித்து வைத்து ,கொண்டாடி குதுகளிப்பவன்...


அன்பால் அன்னையாவன்..
அணைப்பால் அகிலம் ஆவான்..
சிரிப்பால் சிறை செய்வான்...

சின்ன சின்ன செய்கையால் சிலிர்க்கவைப்பான்...

இனிப்பான முரடன் அவன்...

விட்டுச்சென்ற அவன் வாசங்கள் எல்லாம் விலைமதிபற்றவை...

வேர்வை கொண்ட அவன் அஸ்திரங்கள் எல்லாம் வரம் கொடுப்பபவை..

கொடுப்பனை இல்லாமல் கொடுத்து வைத்தவள்..

கூடி வாழ வழி இல்லையே...




என்ன என்பது போல ரீனா பார்க்க அங்கு உள்ள லேடி டாக்டர் உள்ளே வந்து அவளின் செயற்கை காலை அகற்றி அவள் காயத்தை சுத்தம் செய்தவர் ..

காயம் ஆறாததால் கொஞ்ச நாள் ஊன்றுகோலை வைத்து நடக்க சொல்லி சென்றார்..கண்ணன் தான் தான் சொன்னாள் கேட்க மாட்டாள் என்பதால் மொத்த குடும்பத்தையும் அழைத்து வந்தான்..டாக்டருடன்..

அதன் பின் அவளை எல்லோரும் நலம் விசாரித்து ,கவனமாக இருக்க சொல்லி செல்ல..அகலி மட்டும் அவள் கூடவே இருந்து தொன தொனத்து கொண்டு இருந்தாள்..

இரவு விஷ்வா வந்து அவளை இழுத்து செல்லும் வரை..நாளை காப்பு கட்டு இருக்க அகலியின் குடும்பம் நாளை வருவதாக இருக்க எல்லோரும் அவர் அவர் அறையில் அடைந்தனர்...
நேராக அறைக்கு சென்ற அகலி பெட்டில் படுத்து காலை விஷ்வாவின் மீது போட்டுகொண்டு கையால் கழுத்தை கட்டிக்கொண்டு தூங்க தயாராக...

விஷ்வாதான் அவளின் செயலில் சூடாகி மூடாகி போனான்...அவளின் புறம் திரும்பியவன் எதுவும் சொல்லாமல் அவளின் இதழில் புதைத்தான் அவன் இதழை தீண்டியதும் அடிவயிற்றில் ஒரு இதம் பரவ கண்கள் சொருக
அவளின் ஒரு கை அவனின் பின் தன்னிச்சையாக முடியை பிடித்து விலக்குவதற்கு பதிலாக தன் முகத்தோடு புதைத்தது..

மற்றொரு கை உணர்ச்சி பெருக்கத்தில் அவனின் முதுகில் முத்தத்தின் அடையாளத்தை காயங்களாக வரைந்துகொண்டு இருந்தது...

நீண்டு கொண்டே இருந்த முத்தம் பயணம் முடிவு பெறாமல் விஷ்வாவின் கைகள் அவளின் மேனியின் மென்மை பிரதேசங்களில் பரவ உடல் ஒரு முறை அதிர்ந்து அடங்கினாலும் அவன் கைகளை தடுக்கவில்லை...
உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் சுரீர் சுரீர் என்று சுகம் கொடுக்க புது உணர்வில் நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் கண்கள் சொருக ஏதோ ஆனால் அகலி


வெண்ணையில் குழைத்த,மைதா மாவில் செய்த , சீராவில் ஊறவைத்த, தன் பொம்மை , தன் நெஞ்சுகுள்ளையே புதைத்து ஒழித்து வைத்தும் கொள்ளும் அளவு சிறிய உருவம் உள்ள அவனின் மல்லிப்பூவின் போதை தீரவில்லை அவனுக்கு...

உடுக்கை போல் இருக்கும் இடுப்பு, குட்டி குட்டி வெண்டை விரல்கள்..., சிவந்து கிடக்கும் கண்ணக்கதுப்பு, காது மடல்...., மலர் குவியல், என ஒரு இடம் விடாமல் அவன் இதழ்களும் இமைகளும்,விரல்களும் பயணிக்க உடல் எல்லாம் தூக்கி தூக்கி போட துவண்டு போனாள் அகலி...

உணர்வை தாங்க முடியாமல் அவளின் விரல் நகங்களும்,பற்களும் அவன் மீதி பதியம் போட ஆரம்பித்தது..

தன் இரு கைகலுக்குள் அடங்காத அவனின் உரமேரிய நெஞ்சை அணைக்க முடியாமல் சோர்ந்து போனாள் அகலி...
அவன் சம்மதமா என்றும் கேட்கவும் இல்லை அவள் தடுக்கவும் இல்லை..வருட கணக்கில் ஒருவருக்கு ஒருவர் ஏங்கியவர்கள்..இதில் கேட்பதற்கும் தடுப்பதற் க்கும் என்ன இருக்கு...

இருவர் கண்களும் கண்ணீரை சரிந்தது...வலியாலா ,வருதத்தினாலா,ஆனந்த கண்ணீர் ,அவஸ்தை கண்ணீரா என தெரியாமல் எல்லா உணர்வும் கலந்து கண்ணீரை தந்தது இருவருக்கும்...

இன்று மதியமே அகலியின் அம்மா ,பெரியம்மா,அத்தை,காமாட்சி என்று அனைவரும் இதை பற்றி அவளுக்கு விளக்கி இருக்க அகலி கொஞ்சம் தெளிவாக இருந்தாள்..

ஆனாலும் தன் மாமன் இவ்வளவு சீக்கிரம் இப்படி தன்னை சுயம் தொலைக்க வைப்பான் என அவள் எதிர்பார்க்கவில்லை.

கூடல் உச்சத்தை அடையும் வரை விஷ்வாவின் வேகம் அதிகரித்து கொண்டே இருந்தது...பூ உடல் கொண்டவள் தாங்க மாட்டாள் என்று தெரிந்தாலும் அவனால் நிறுத்த முடியவில்லை..

வார்த்தைகள் அன்றி மீண்டும் மீண்டும் குட்டிமா குட்டிமா என்று அவளை கொண்டாடி தீர்த்தான்.. யார் பசியை யார் தீர்த்தார்கள் என தெரியவில்லை ...ஆனால் இருவரும் பசி தீர்ந்தனர்..

அழகென்ற விருந்தொன்றை பரிமாறுவேன்..
பரிமாறும் போதே நான் பசு ஆறுவேன் “
என்ற கண்ணதாசனின் பாட்டை போல...

விடிகாலை வெள்ளி முளைத்தும் அவளை பிரியாமல் ஒவ்வொரு முறையும் ஒரு புது உலகத்துக்கு அழைத்து சென்றான் ...அவளும் சுணக்கம் இல்லாமல் அவனுள் சுரண்டு போனாள்.

5 மணிக்கு அவளை விட்டு விலகியவன் “ புருஷன் பொண்டாட்டிய பேட் டச் பண்ணலாம் குட்டிமா” என்றான் அவளின் கன்றி சிவந்த உதடுகளை வருடியபடி..

சீ போ மாமா “என சினிங்கியவள் அவனின் நெஞ்சில் புதைந்து போர்வையால் தன்னை மூடிக்கொண்டாள்...

11 மணிக்கு மேல் விஷ்வா கண் முழிக்க தன் டீசேர்ட்டை மட்டும் போட்டு தூங்கும் தன் மனையாளை குளிக்கும் அறைக்கு தூக்கி சென்று குளிக்கிறேன் பேர்வழி என்று அவளை அழுகாக்கினான்...பின் இருவரும் குளித்து வெளியே வர அவளை ஆடை கூட மாற்ற விடாமல் அவளை ஆக்கிரமித்து ,ஆண்டுவிட்டு மீண்டும் குளிக்க அனுப்பிய பின்னே வெளியில் சென்றான்...

குழந்தை மனம் கொண்டவளை குமரியாக மாற்றிவிட்டான் அவளவன்.
அகலியின் வீட்டில் இருந்து அனைவரும் வந்து இருக்க அகலி இன்னும் வெளியே வரவில்லை...

அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அகலிதன் நிறைமாத வயிறை தூக்க முடியாமல் முதுகின் புறம் இரண்டு கையையும் கொடுத்து வயிற்றை முன்தள்ளி நடக்க முடியாமல் நடந்து வர...

( இவ்வளவு சீக்கரமாவா....)

எல்லோருக்கும் விளையாட்டு என்று தெரிந்தாலும் அவளின் செய்கை அவர்களின் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு சென்றதை உணர்ந்து சந்தோசம் அடைந்தனர்..

விஷ்வாவோ அய்யோ இப்படி எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுறாளே என்று வெட்கமாகிவிட செய்தித்தாளில் தலையை விட்டுக்கொண்டான்..

காமாட்சிக்கு மட்டும் விவரம் புரியாமல் வயத்தானவரின் மூளை கொஞ்சம் வேலை நிறுத்தம் செய்ய வேகமாக எழுந்தவர் “ பார்த்து சாமி..” என கைதங்களாக அவளை அமர வைக்க....

எல்லோருக்கும் கொல்லென ஒரே சிரிப்பு..” ரீனா கூட தன்னை மறந்து சிரித்து இருந்தாள்...

அகலி “ கிழவி நானே நேஷனல் அவார்ட் வாங்குற மாறி நடிக்கிறேன்...நீ என்னை தாண்டி ஆஸ்கர் அவார்ட் வாங்குற அளவுக்கு ஆக்ட் பண்ற” அவள் மடியில் உள்ள ஏர் பில்லவை எடுத்து அவர் தலையில் போட்டு "இந்தா உன் பேரப்பிள்ளை "என்றாள்..

அப்பொழுதுதான் காமாட்சிக்கு தன் பேத்திக்கு கல்யாணம் ஆகி ஒருவாரம் தான் ஆகி இருப்பது நினைவு வர அவரும் சேர்ந்து சிரித்தார்...தங்கள் பழைய அகலியை திரும்பி பார்த்த அவள் குடும்பத்தாருக்கு அவ்வளவு நிறைவு..

அந்த கனவை நினைவாக்கி கொடுத்த விஷ்வாவை நன்றி தழும்ப பார்த்தனர் விழிகளில் நீரோடு..

பின் அனைவரும் பேசி சிரிக்க..அவள் வீட்டில் உள்ள சின்னுவில் ஆரம்பித்து எல்லோரையும் நலம்விசாரிக்க நேரம் கடந்தது...

இரவு காப்பு கட்ட மறுவாரம் திருவிழா என்று இருக்க வீட்டில் உள்ள விச்சு, அகலி,சந்தோஷ்,ஜனனி நால்வரும் மலை கோவிலுக்கு சென்றுவிட்டு வரும்போது மாந்தோப்பை பார்த்துவிட்டு வருவதாக கிளம்பினார்கள்..

ரீனாவும் வீட்டில் இருப்பது ஒரு மாறி இருக்க...மலை மேல் ஏற முடியாது என்று சொல்லியும் கேட்காமல் ஊன்றுகோலை ஊன்றியபடி அவர்களோடு கிளம்பிவிட்டாள்...

விஷ்வாவிற்கு அவள் மேல் கொலை செய்யும் அளவு கோபம் இருந்தாலும் எதுவும் இல்லாமல்
அனாதையாக ,சொத்து சுகம் எல்லாவற்றையும் விட்டு நிற்கும் அவளிடம் என்னவென்று கோபம் கொள்பான்...

விஷ்வாவை பொறுத்த வரை அவள் ஒரு ஷபாயில்ட் சைல்ட் ஆக தான் தோன்றினாள்... கொஞ்ச நாள் நம்மோடு இருந்தே அவள் இவ்வளவு மாற்றத்தோடு இருக்க...அவளின் அடித்தளம் தான் சரி இல்லை நம்பினான்..தாய் இருந்து வளர்ந்து இருந்தாள் இப்படி இருந்திருக்க மாட்டாள் என உணர்ந்து அவளை மன்னிக்கவில்லை என்றாலும் அவளை தண்டிக்கவும் இல்லை..

எதையும் ஆராய்ந்து உணரும் விஷ்வா இதையும் ஆராய்ந்து அமைதியானன் இனியாவது அவளுக்கு அமைதியான வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்று.

ஆனால் சந்தோஷ் அப்படி இருப்பான் என்று நாம் எதிர் பார்ப்பது தவறு..அவளின் பூக்குட்டி என்று வந்தாள் அவளின் மூளை எல்லாம் வேலை நிறுத்தம் செய்துவிடும் அதன் பின் அவன் எங்கே அலசுவது ஆராய்வது...

எல்லோரும் கோவிலுக்கு போக கண்ணனும் அவர்களுடன் சென்றான்...

மலை அடியில் இருந்து 200 படி மேலே ஏறுவதுபோல மலை மேல் இருந்தது அந்த முருகன் கோவில்...ஜனனி “ அச்சோ இத்தனை படி எப்படி ஏறுவது என்று போல் மலைத்து நிற்க..., ரீனாவால் கண்டிப்பாக ஏற முடியாது என்பதால் கீழே நிற்க..அவளுக்கு துணையாக கண்ணனும் கிழே இருப்பதாக சொல்லிவிட்டான்...

ரீனாவின் மீதான அண்ணனின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தாலும் விஷ்வா எதையும் தடுக்கவில்லை.காதலின் முன் எல்லாமே அடிபட்டு போகும்தான்..ஆனால் ரீனாவின் கடந்தக்காலம் எதையோ யோசித்த படி படி எறியவனின் முதுகில் தொங்கியது அவனின் செல்லக்கிளி திடீரென்று யாரோ பின்னால் இருக்க தன் மனையாள் என்று தெரிந்து சிரித்தபடி சுமந்து சென்றான்...

அகலியோ ஜானு நீங்க உங்க கருவாயன தூக்க சொல்லி வாங்க என்று சொல்ல...சந்தோஷ் அச்சோ என தன் குண்டு தக்காளியை பார்க்க அவள் வேகமாக அவன் முன் வந்து அவள் கழுத்தின் மேல் ஒரு கையை போட்டு தூக்கு என்பது போல சிரித்து சொல்ல

“ஏய் குண்டு அவள் ஒரு யூசர் பிரண்டிலி பிராடக்ட் டி... நீ அப்படியா என அழுவது போல சொல்ல...

அவள் மறுபடியும் முறைக்க வேகமாக அவளை கையில் அள்ளிக்கொண்டான்...அவன் முகத்தை சுமையை சுமப்பது போல வைத்துக்கொண்டாலும் சுகமாக சுமந்து சென்றான்...

அவன் முகத்தை பார்த்து ஜனனி “பிளாக்கி நான் வேணுனா இறங்கிகிறேன் டா “
ஏய் பஞ்சுமூட்டை பேசாம வாடி அத்தான் குடிச்ச நாட்டு முட்டையெல்லாம் இதுக்கு கூட உதவலான எப்படி” என கண் அடித்த படி சுமந்து சென்றான்...

என்னதான் இருவரும்
கட்டுமஸ்தான உடம்பு காரர்கள் என்றாலும் ஏறுமுகத்தில் 50,55 கிலோவை சுமந்து செல்வது மூச்சி வாங்க ஒருவழியாக மேலே சென்றனர்..

கோவிலுக்கு வருவதால் வேஷ்டி சட்டையிலும் புடவையிலும் வந்து இருந்தனர்.....
கிழே ரீனா அங்கு உள்ள மரத்தின் நிழலில் அமைதியாக அமர்ந்து இருக்க அவளையே ஆராய்ச்சியாக பார்த்து கொண்டு நின்றான்...கண்ணன்..

லாங்க் ஸ்கெர்ட் முழுக்கை டீஷிர்ட் கழுத்தை 2 3 முறை சுத்திக்கொண்டு இருக்கும் ஒரு ஷால்..எப்பொழுதும் ஒரு யோசனை இல்லை ஒரு வெறுமை...

என்ன இருக்கும் இவளுக்குள் தெரியவில்லை... அவளை நோக்கி தன்னை எது ஈர்க்கிறது தெரியவில்லை..ஏதோ ஏதோ. தன் ருக்குவை இவள் நியாபக படுத்துகிறாளா எதுவோ தெரியவில்லை 3 நாட்கள்தான் ஆனால் நிறைய நாட்கள் அவளை ஆராய்வது போல அவனுக்கு பிரம்மை...

இவன் பார்வை தன்னை துளைத்தாலும் அதை கண்டுகொள்ளாமல் தனக்குள் அமைதியானள்..
உன் சோதனைக்கு நானா கிடைத்தேன் என் பாவங்களின் எண்ணிக்கையாவது குறைத்து இருக்கலாமே..இப்படி எதுக்குமே என்னை தகுதியாக்காமல் விட்டுவிட்டாயே...என மலைமேல் இருக்கும் கடவுளிடம் கேள்வி கேட்டாள்..

அன்று தான் தவறு செய்யாத போது கூசாத அவள் உடல் இன்று கூசிப்போனது...எல்லாவற்றையும் விட தன் அடையாளமான பெண்மைகூட பாதுகாக்க வில்லையே என நினைக்கும் போது வரும் கோபம்...இரவில் அவள் உடம்பிற்கு வெயில் படா இடங்களில் கத்தியால் தண்டனை வழங்கி கொண்டு இருந்தாள்...

அதிக நேரம் அமர்ந்து இருந்ததால் கால் மறத்து போக எழலாம் என்று ஊன்றுகொலை எடுக்க அங்கு உள்ள கல்லால் ஒரு காலில் பேலன்ஸ் பண்ண முடியாமல் தடுமாறி கீழே விழ...

வேகமாக அவள் அருகில் சென்று கண்ணன் அவளை தூக்க போக “ வேண்டாம் “ என்றவள் அவளே எழ முயற்சி செய்ய இது என்ன பிடிவாதம் என்பது போல அவன் மீண்டும் கை பிடிக்க இப்பொழுதும் கோபமாக உதறியவளை நோக்கி கோபம் வர “ஏன் உன் கையை பிடிக்க கூட எனக்கு தகுதி இல்லையா “ என கேட்க ..

அவனை வலி நிறைந்த விழியுடன் பார்த்தவள் “ உங்களுக்கு இல்லை எனக்குத்தான் எந்த தகுதியும் இல்லை... என்னை தொட்ட உங்க கைய முடிஞ்ச நீங்க வெட்டி கூட போட்டுருங்க..அந்த அளவுக்கு பாவம் செஞ்சவள் நான் “ என்றவள் மீண்டும் எழ முயற்சிக்க முழு நீள பாவாடை..ஒற்றைக்கால் என எழ முடியாமல் அவதிப்பட...

கண்ணன் ஒரு நொடி என்ன மாதிரியான பதில் என யோசித்தவன் அடுத்த நொடி “பரவாயில்லை என் கையை வெட்டிக்கிறேன்”என்று அவள் எழுவதற்கு ஒரு கையையும் ,இடுப்பையும் பிடித்து தூக்கி நிறுத்தி அவள் கையில் ஊன்றுகோலை எடுத்துக்கொடுத்தான்.

கண்ணன் அவளிடம் எதையோ கேட்பதற்குள் சாமி கும்பிட்டுவிட்டு நால்வரும் வர அமைதியாகி போனான்...
அகலி ரீனாவின் நெற்றியில் பொட்டைவைத்து “ அக்கா சீக்கிரம் உங்களுக்கு கல்யாணம் ஆகணும்னு வேண்டிக்கிட்டேன், அதனால தங்கச்சியோட வேண்டுதலை நிறைவேத்துங்க “ என்றவள்..

கண்ணனின் நெற்றியில் திருநீறு வைத்து “அத்தான் நீங்களும் ஒரு எனக்கு அக்கவா கூட்டிகிட்டு வாங்க “ என்றான்..

“ கண்டிப்பா பாப்பா “என்று கண்ணன் ரீனாவை பார்த்துக்கொண்டே சொல்ல அண்ணனின் மனம் புரியும் ஆதலால் விஷ்வா அமைதியாக நிற்க ..

ஜனனி தன் பெரிய அண்ணனை சந்தோஷமும் ஆச்சர்யமும் கலந்து பார்த்தாள்.. ஏதோ அகலி வந்தவுடன் தன் குடும்பத்தில் தொலைந்த மொத்த சந்தோஷமும் திரும்பி வந்தது போல நிறைவாக உணர்ந்தாள்..

பின் ஆறு பேரும் அவர்களின் மாந்தோப்பிற்கு செல்ல முன்னே தான் நினைத்தன் படி விஷயத்தை சந்தோஷிடம் சொல்ல முடிவெடுத்தேன்...

அவனிடம் சொல்லாமல் மறைப்பதற்கு தனக்கு எந்த உரிமையும் இல்லை என சொல்லலாம் என முடிவெடுத்தான்..
அகலியிடம் சொன்னாலும் அவனின் மல்லிப்பூ மன்னிப்பையே தண்டனையாக வழங்குவாள்.. இருந்தாலும் அந்த சம்பவத்தை மீண்டும் அவளுக்கு நியாபக படுத்த அவன் விரும்பவில்லை..அந்த சம்பவம் போது அவள் பட்ட பாடு அப்பப்பா இப்பொழுது அந்த அளவு இல்லை என்றாலும் அவள் சிறு காயப்படுவதை கூட அவன் விரும்பவில்லை...

கண்ணன் ,ரீனா, சந்தோஷ் மட்டும் அவர்கள் தோப்பில் உள்ள பண்ணைவீட்டில் இருக்க சொன்னவன் ஜனனியை நோக்கி “பாப்பு நீயும் அகலியும் சுப்பு அண்ணன் கிட்ட சொல்லி சுத்தி பார்த்துட்டு தென்ன தோப்புல போய் இளநீர் எடுத்துட்டு வாங்க “ என்று அனுப்ப..

அகலி “ மாமா ரீனா அக்காவையும் வர சொல்லுங்க என்க, அவனோ “அவளுக்கு கால் முடியல குட்டிமா நீங்க போயிட்டு வாங்க” என்றான்...
கண்னனுக்கும் அவளின் இறந்த காலம் தெரியவேண்டும் என்பதால் அவனையும் இருத்தி கொண்டான்...

கண்ணனின் மனதில் காதல் இருக்கும் பட்சத்தில் அவளின் இறந்த காலம் தன் குடும்பத்திற்கு தெரிய கூடாது என்று ஜனியையும் அனுப்பிவிட்டான்...

இது எல்லாவற்றிற்கும் பார்த்த ரீனா எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் அமைதியாக இருக்க விஷ்வா தன்னை நிலைப்படுத்திக்கொண்டு “சந்தோஷ் “ என ஆரம்பித்து அனைத்தையும் சொல்ல
சொல்லி முடித்த அடுத்த நொடி சந்தோஷ் கோபமாக ரீனாவின் கழுத்தை நெறிக்க...

உயிர் போகும் வழி எடுத்தாலும் இவனாவது தன் தப்பிற்கு மன்னிப்பை தண்டனையாய் கொடுத்து தன்னை குற்ற உணர்ச்சியில் குறுக செய்யாமல் இப்படி ஒரு தண்டனை தருகிறானே என்று

வருவாள்...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலன் 32 :

தொட்டு செல்லும் அலைகளே....

சுமந்து செல்லுங்கள் என் இதயத்தை...

அக்கரையில் அவன் கண்டிப்பாக இருப்பான்...

அழுங்காமல் அதை அவனிடம் கொடுங்கள்...
உள்ளே அவனுக்கான காதல் உள்ளது...

கொஞ்சம் ரசிப்பான்
கொஞ்சம் மறுப்பான்..
காதலே இல்லை என்று கட்சி கொடி தூக்குவான்....

ஆனால் கண்டிப்பாக காதல் கொள்வான்..நான்கில் மூன்று பங்கு நீங்கள் இருப்பது போல...

அவன் நான்கு திசைகளிலும், மூன்று உலகத்திலும், இரண்டு விழிகளும் , ஒரு இதயத்திலும் என் மேலான நேசம் நிறைந்து கிடக்கும்



விஷ்வா சந்தோஷை தடுக்க அவனின் கையை அவளிலிருந்து பிரிக்க முடியவில்லை...முயன்று அவனை பிரித்த பின் அவனை இறுக்கி பிடிக்க.. தொண்டையை நெருக்கியதால் கண்ணில் தண்ணீர் ஊற்ற இருமிய படியே தன்னை நிலைப்படுத்தியவள்

“விஷ்வா அவனை விடு அவனாவது எனக்கு தண்டனை கொடுக்கட்டும் , அவன் என்னை கொன்றாலும் பரவாயில்லை , சந்தோஷை நோக்கி “ என்னை கொன்னுடு ,நான் வேணும்னா என் சாவுக்கு யாரும் காரணம் இல்லைன்னு எழுதி கொடுத்துறேன் “என அவனை நோக்கி கண்ணீரோடு கெஞ்ச

அந்த கெஞ்சல் சந்தோஷை கொஞ்சம் அமைதிப்படுத்தியது..
பின் விஷ்வா அவள் வாழ்வில் அவன் அண்ணன் இறந்தது,காலை இழந்த போது அவள் வாழ்வில் நடந்த சம்பவம்,சொத்து அனைத்தையும் வேண்டாம் என்று உதறியது என அனைத்தையும் சொல்ல இன்னும் கொஞ்சம் அவனை நிதானிக்க சொன்னாலும் கோபம் குறையாமல் நின்று இருந்தான்...


விஷ்வா சொல்லியதும் சிலை என சமைந்தான் கண்ணன்...அவனின் நிலையை ரீனா உணர்ந்து இருந்தாலும் எதிர்பார்த்ததுதான் என்பது போல அமைதியாக நின்றாள்...

வேண்டுவதற்கும், வருத்தபடுவதற்கும் தகுதி தன்னைவிட்டு முழுதாய் நீங்கிவிட்டது என முழுதாய் நம்பினாள்... ஆனால் கண்ணன் யோசித்தது எல்லாம் தவறான இடத்தில் பிறந்து ,தவறான வழிகாட்டலில் வளர்ந்து இப்படி வாழ்க்கையை தொலைத்துவிட்டாலே என்றுதான்...

அவளை நேசிக்கவில்லை என்றாள் அவளை கொடுமைகளின் உச்சமாக பார்ப்பான்..காதல் கொண்ட மனம் அவள் புறம் கொண்ட நியாங்களை தேடி கண்டுகொண்டது..

சிறிதுநேரம் அந்த இடமே அமைதியாக இருக்க சந்தோஷ் ரீனாவை நோக்கி “உன்னை மன்னிக்கிற அளவுக்கான தப்ப நீ பண்ணலை இருந்தாலும் திருந்தி இருக்க உன்னை தண்டிக்க எனக்கு விருப்பம் இல்லை , கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முயற்சி செய்றேன் “ என்றவன் அந்த இடத்தை விட்டு அகன்றான்...

ஜனனி ,அகலி வந்ததும் சிறிதுநேரம் அங்கு இருந்துவிட்டு கிளம்ப.. இரவு காப்பு கட்டிற்கான வேலைகள் ஆரம்பிக்க மொத்த குடும்பமும் அங்கே சென்றது...
காலம் காலமாக விஷ்வாவின் குடும்பத்திற்கே முதல் மரியாதை என்பதால் ஐயர் “ மூத்த மகனும் மருமகளும் சபையில் நடுவுக்கு வாங்க” எங்க

சுந்தரி கண்ணனை மட்டும் தனியாக நிற்க வைக்க முடியாததால் அகலியையும் விஷ்வாவையும் செல்ல சொல்லலாம் என்று சொல்வதற்குள் கண்ணன் ரீனாவின் கையை பிடித்துக்கொண்டு சபையின் நடுவில் போய் நின்று “ ஆரம்பிங்க “ என்றான்..

எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி இது எப்பொழுது என்பது போல சுந்தரிக்கும் அதிர்ச்சியே என்றாலும் அதில் கோபம் இல்லை விஷ்வா இதை எதிர்பார்த்தே இருந்ததால் எந்த அதிர்ச்சியும் இல்லை...

அகலி,ஜனனிக்கும் சந்தோசம் கண்ணனின் இந்த முடிவில்...முருகனும் தன் பிள்ளைகளின் எதிர்காலம் தான் முக்கியம் என்பதால் அமைதியாக இருந்தார் சந்தோஷ் மட்டும் ஒரு வித கோபத்தோடும் ஒரு இயலாமயோடும் நின்றான்...

ஊராருக்கும் கண்ணனின் திருமணம் மட்டுமே தெரியும் மனைவி யார் என்று தெரியாததால் ரீனாவையே அவன் மனைவி என்று நினைத்தனர்...
ரீனாத்தான் மிகவும் துடித்து போனாள்..கண்ணனின் கைகளிலிருந்து தன் கையை உருவ முடியாமல் அவனை நோக்கி இயலமையாய் ஒரு பார்வை பார்த்தாள்...

என்னை ஏன் இப்படி எல்லாரும் இப்படி பண்றீங்க ,எனக்கு இது மரணத்தை விட அதிக வலியை கொடுக்குது “என அவனோடு மெதுவாக குரல் கரகரக்க சொல்ல “ராணிமா நிகழ்ச்சியை கவனி “ என்பவன் அமைதியாகி போனான்...

எல்லாம் முடிந்து வீட்டுக்கு போக மணி 10 ஆனது உள்ளே வந்ததும் ரீனாவை அணைத்துக்கொண்டு சுந்தரி கண்ணனை நோக்கி “எப்ப பார்த்தாலும் எனக்கு தெரியாமையே பொண்ண பாருடா” என செல்லமாக அழுத்துக்கொண்டார்..

அகலி “அத்தம்மா அப்ப நானு நானு” என கேட்க..சுந்தரி “ ரீனா என் மருமாகள்னா நீ என் குழந்தைடா செல்லம்” என அவளையும் மறுபுறம் அணைத்துக்கொண்டார்..

ரீனாவிற்கு என்ன பேச தெரியவில்லை தான் பேசும் வார்த்தைகள் அவர்களை காயப்படுத்துமோ என அஞ்சினால் இந்த நிகழ்வுக்கு தன் எதிர்வினையை அவர்களை காயப்படுத்தாமல் எப்படி சொல்வது என்று கூட தெரியவில்லை...

இதை ஏத்துக்கணுமா விலக்கனுமா எதும் தெரியல இன்னும் சரி எது தப்பு எது என்று தெரியாத அவள் எதையும் செய்வது இல்லை...இப்பொழுதும் என்ன சொல்வதும் என்று தெரியவில்லை

கொஞ்ச நேரம் பேசிவிட்டு அனைவரும் உறங்க செல்ல கண்ணன் ரீனாவிடம் பேசலாம் என்று சென்று அவளின் ரூமின் கதவை தட்ட போக அது தானாக திறந்து கொண்டது...

அங்கே கண்டா காட்சியில் கண்ணன் துடித்து போனான்..அங்கே ரீனா இடது கை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து பிளேடால் கோடு கோடாய் கீறிக்கொண்டு இருந்தாள் விடாமல் வெறி பிடித்தவள் போக... அவளின் இடது கை முழுவதும் ரத்தத்தில் குளித்தது போல இருக்க அதன் பிரதிபலிப்பு வழி எதும் இல்லாமல் ரோபோ போல அவளின் கை அந்த வேலையை தொடர்ந்து செய்தது ...

“ராணி மா”கண்ணன் வேகமாக அவள் அருகில் சென்றவன் அவள் கையில் உள்ள பிளேடை தூக்கி போட்டு அவளை கை தாங்களாக பாத்ரூம் அழைத்து சென்றான். ஊன்றுகோல் தூரமாக இருந்ததால் அவளும் பிடிமானம் இன்றி கண்ணனை விலக்க முடியாமல் அவனோடு செல்ல, அவளின் காயத்தை சுத்தம் செய்தான்..

தண்ணீர் கைகளில் பட்டதால் காயத்தின் எரிச்சலில் பல்லை கடித்துக்கொண்டு நிற்க

கண்ணனின் பார்வையில் அவள் கைகளில் இன்னும் காயங்கள் கொஞ்சம் இருந்தது... இரண்டு நாட்களுக்கு முன் இதே போல செய்து இருப்பாள் போல சிவந்து போய் ரத்த கலரில் இருந்தது..

அவளிடம் ஒருவார்த்தை பேசாமல் காயத்தை. சுத்தம் செய்து உள்ளே அழைத்தவன் அவளுக்கு மருந்திட்டான்...

ரீனா “பிளீஸ் இந்த கல்யாணம் வேனாம்னு சொல்லிடுங்க “ என்று கையை உருவியவளிடம் “முடியாது” என்று கூறியவன் மருந்திடும் வேலையை செய்தான்

“நான் உங்க தம்பியையே “என்று அந்த வார்தையை சொல்ல முடியாமல் கதறியவள் “ நான்...நான்....பாவத்தின் மொத்த உருவம் ,எனக்காக நீங்கள் அசைக்கும் சுண்டுவிரலுக்கு கூட தகுதி இல்லாதவள் “என கழுவிரக்கும் அதிகமாக அடுத்தவர்களையே இதுவரை அழ வைத்தவள் அழுது கரைந்தாள்..

அவளை அணைத்து கொண்டு அமைதியாக அமர்ந்தான் கண்ணன் “ மீண்டும் அவள் ஏன் நான் நல்லபடியா பிறக்கல ,நல்லபடியா வளரல என கத்திக்கொண்டே இருக்க..

அவளை விலக்கியவன் “ இங்க பாரு ராணிமா , தண்டனை திருந்தாதவங்களுக்குத்தான் ,உனக்கு இல்லை.. இனி வாழப்போற வாழ்க்கையை நல்ல படியா வாழ்வோம்...

இன்னைக்குத்தான் புதுசா பிறந்தோம்ன்னு நினைச்சிக்கோ, உன்னை பாதுகாப்பா ,சரியா வளர்க்க வேண்டியது என் கடமை,உன் கடந்த காலம் எனக்கு வேணாம் ,உன் எதிர் காலத்துல எனக்கு ஒரு இடம் கொடு,நீ பழையபடி இருந்தாலுமே உன்னை மாற்றனும்னு தான் முயற்சி செய்வேனே தவிர விட்டு போக மாட்டேன்...அப்படி இருக்க இப்ப விடுவேன்னு கனவிலையும் நினைக்காத...” என்று எத்தனை தட வந்தாலும் என் காதல் புனிதமானதுதான் என நிரூபித்து சென்றான் கண்ணன்...

கண்ணன் சொல்லி சென்றதும் ஆக ஓகோ என்று ரீனா ஒன்றும் மகிழவில்லை அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம் அதற்கு தான் செய்த அநியாயங்கள் இல்லை என்று நினைப்பதா என யோசித்து ஒரு முடிவெடுத்தவள் கண் அயர்ந்தாள்...

அங்கே விஷ்வா கட்டிலில் படுத்தபடி தன் அண்ணன் எடுத்து இருக்கும் முடிவு சரியா என்பது போல யோசித்து படுத்துக்கொண்டு இருக்க தன் நெஞ்சில் முகம் வைத்து தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் தன் மல்லிப்பூவை அவன் உணரவில்லை கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தவள் “மாமா இன்னைக்கு கிஜக்காம் முஜாக்காம் இல்லையா” என அவன் தாடியை பிடித்து செல்லம் கொஞ்சியபடியே கேட்க..

விஷ்வா அவளின் கிஜாக்க முஜாக்காவில் தன் கவலை மறந்தவன் அவளை அணைத்து கொண்டு நெற்றியில் முத்தம் கொடுத்து அமைதியாக இருந்தான்..

அகலி “ மாமா நான் இப்ப நல்லா இருக்கேன் அந்த மோசமான சம்பவம் என் மனசவிட்டு போகலனாலும் உங்க அருகாமை எனக்கு எதையும் நியாபக படுத்துறது இல்லை என்னை நினைச்சி கவலை படாத “என்றாள்...

அவளின் பதிலில் சந்தோசம் அடைந்தவன் “ என் குட்டிமா அவளோ வளர்ந்துட்டாங்களா “ என்றவன்...அவளின் கண் சிமிட்டலில் தன்னை மறந்து நேற்று விட்ட இடத்தில் இன்று தன் தேடல்களை தொடங்கினான்....

அவனின் இதுவரையான கவலைகளை மறக்க அடிப்பதில் அவனின் பூக்குட்டிக்கு நிகர் அவளேதான்...

இரவு 2 மணி இருக்கும் சந்தோஷ் ஹாலில் அமர்ந்து எதையோ யோசித்தபடி இருக்க..பாட்டிலில் உள்ள தண்ணீர் தீர்ந்ததால் அதை எடுக்க வந்த ஜனனியின் கண்ணில் பட்டான்...

இந்நேரம் இங்கே என்ன செய்கிறான் என்பது போல அவன் அருகில் வந்து அமர்ந்து அவனின் தோளில் கை வைக்க அவளை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் அவளின் மடியில் படுத்துக்கொண்டான்...

ஏதோ அவன் மனம் மிகவுக் சஞ்சலப்பட்டு போய்கிடந்தது..ரீனாவை எதும் செய்ய முடியாத தன் நிலைக்கா இல்லை ,கண்ணன் வாழ்க்கை துணையாக அவளை தேர்ந்து எடுத்தற்கா.. இல்லை அவளின் கடந்த காலத்தை தன் குடும்பத்திடமும் ஜனனியிடமும் சொல்ல வேண்டாம் என்று விஷ்வா சொன்னதற்கா என்று எதுவும் தெரியவில்லை...

ஜனனிக்கு அவனின் கவலைக்கான காரணம் தெரியவில்லை என்றாலும் ஏதுவாக மடியை கொடுத்து தலை கோதியவள் இமைகளுக்கு பின்னே அலைபாயும் அவன் விழிகளின் மேல் ஒரு சிறிய முத்தம் வைக்க சந்தோஷ் கண்களை திறக்கவும் இல்லை எந்த எதிர்வினையும் காட்டவும் இல்லை ஆனால் விழிகளின் அலைப்புருதல் மட்டும் நின்றது...

எப்படித்தான் பிடித்தமானவர்களின் அருகாமை இப்படி ஒரு அமைதியை கொடுகிறதோ தெரியவில்லை சிறுது நேரத்தில் தன்னை மீட்டுக்கொண்ட சந்தோஷ் தன் நண்பன் விஷ்வாவின் செய்கைகள் என்றும் சரியாக இருக்கும் என்ற நிலையில் தெளிந்தான்...

ஜனனியின் மடியில் இருந்து எழுந்தவன் அவளை பார்த்தான்.இவனின் தெளிவு அவள் முகத்தில் தெரிய நிறைவுடன் அவளை அணைத்து கொண்டான்...

தவம் இன்றி கிடைத்த வரமே...
இனி வாழ்வில் எல்லாம் சுகமே....

மறுநாளில் இருந்து முருகனின் பண்ணை வீடு சொந்தங்களாலும் அகலி, ராஜாவின் சேட்டைக்காளாலும் நிரம்பி வழிந்தது...ராஜா தன் வீட்டினாரிடம் சந்தோஷ் ஜனனியின் கல்யாணத்தை சீக்கிரம் வைக்க சொல்லி போராடி கொண்டு இருந்தான்...அவனின் குடும்பாத்தாருக்கும் அவனின் அவசரம் புரிந்தே இருந்தது...
பின்னே சந்தோஷ் திருமணம் முடிந்தால் தானே அவன் அவனின் சொப்பனசுந்தரியை கல்யாணம் செய்ய முடியும்..அவன் அவசரம் அவனுக்கு...

அதன் படி கோவில் திருவிழா முடிந்து 10 நாளிலே ஜனனி சந்தோஷ் மற்றும் கண்ணன் ரீனாவின் கல்யாணம் முடிவு செய்யபட்டது..கண்ணன் ரீனா கல்யாணம் கோவிலிலும் ,சந்தோஷ் ஜனனி கல்யாணம் மண்டபத்தில் என்றும்...

எல்லாவற்ரிற்கும் கண்ணன்,ரீனா இருவரும் தம்பதிகளாக நிற்க ரீனா எதுவும் சொல்லவில்லை..வீட்டில் உள்ளவர்கள் செய் என்றால் செய்வாள்..இல்லை அமைதியாக இருப்பாள்..ஆனால் வார்த்தைகள் மட்டும் அறவே இல்லை ஒரு நாளைக்கு 10 வார்த்தைகள் என்பதே அதிகம்தான்...ஆனால் கண்ணனை பார்க்கும் பார்வையில் மட்டும் ஏதோ ஒரு செய்தி எவ்வளவு முயன்றும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை..

ஆனால் அவளை அணைத்து அணைத்து பிடித்து அனைத்து செல்வதிலும் அவளால் நடக்க முடியாத இடங்களில் தூக்கி சென்று உனக்காக நான் இருக்கிறேன் என்று அவளுக்கு தொடர்ந்து உணர்த்தி கொண்டே இருந்தான்..

திருவிழா முடிந்து எல்லோரும் சென்னை வந்தனர்..
அகலி ,சந்தோஷின் குடும்பம் சென்னையில் தமிழின் வீட்டிலே தாங்கினார்கள் திருமணத்தின் பொருட்டு..ராஜா மட்டும் ஊருக்கு சென்று தொழிலை கவனித்து வந்தான்...

வேலைகள் எல்லாம் ஜெட் வேகத்தில் நடக்க திருமணம் இன்னும் இரு நாட்களே இருக்க ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள் ரீனா..

அக்கடிதத்தில்..
இந்த குடும்பத்தில் வாழும் தகுதி எனக்கு இல்லை.. உங்களை மறுத்து பேசவும் என்னால் முடியவில்லை..அதே சமயம் சுயநலாமாக இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை...என்னை தேடாதீர்கள் என்பதோடு...

வருவாள்...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலன் 33 :
ரீனாவின் கடிதத்தை பார்த்துவிட்டு அதிர்ந்து உட்கார்ந்தவன்தான் கண்ணன் அதன் பின் அவனிடம் எந்த அசைவும் இல்லை...விஷ்வாவின் மொத்த குடும்பமும் தமிழின் வீட்டில் குழுமி இருந்தனர்.
கல்யாண சடங்குகள் முடிக்கும் பொருட்டு ரீனா தமிழின் வீட்டில் இருந்தாள்... ரீனாவை விபத்தின் போது காப்பாற்றிய தம்பதியினரின் வீட்டிற்கு அழைத்த போது கூட சுந்தரி அவளை அனுப்ப மறுத்துவிட்டார்..

ஏன் தமிழின் வீட்டிற்கே நேற்றுதான் அனுப்பி இருந்தார்..நாளை மறுநாள் பெண் அழைப்பின் பொருட்டு...ஆனால் அவரின் மருமகள் சரியாக கம்பியை நீட்டி இருந்தாள்.. யாருக்கும் தாளவே இல்லை..
எல்லோருக்கும் அடுத்து என்ன வென்று தெரியவில்லை..ரீனா கண்ணன் கல்யாணத்திற்கு பத்தரிக்கை எல்லாம் அடிக்கவில்லை ...கண்ணன் வேணாம் என்று இருந்தான் தங்கள் குடும்பத்தாரை மட்டும் வைத்து கோவிலில் வைத்து செய்து கொள்கிறேன் என்றுவிட்டான்.அதனால் அவள் சென்றது ஜனனி சந்தோஷ் கல்யாணத்தில் எந்த பிரச்சனையும் இருக்க போவது இல்லை..
இருந்தாலும் அவளின் வெளியேற்றம் சாதரணமாக எடுத்துக்கொள்ள யாராலும் முடியவில்லை ..இப்பொழுது தான் கொஞ்ச நாட்களாக நன்றாக இருந்த தன் மூத்த பிள்ளை மறுபடியும் மூர்ச்சை ஆகி அமர்ந்து இருப்பதை பார்க்க அந்த தாயுள்ளம் பொறுக்கவில்லை...
சந்தோஷ் கூட ரீனாவின் முடிவில் அதிர்ந்த்தான் இருந்தான்...கண்ணன் சொன்னதும் உடனே இப்படி ஒத்துக்கொண்டாலே இது தான் இவள் திருந்திய லட்சணாம என்று இறக்கமாக நினைத்து இருக்க ,நான் அப்படி இல்லை என்று நிரூபித்து சென்று இருந்தாள் ரீனா..
அகலி ஒரு புறம் அழுது நிற்க,ஜனனியோ தன் அண்ணனை வேண்டாம் என்று சொல்லிவிட்டாலே என்று பாதி ஆதங்கத்திலும் எங்கு சென்று இருப்பார்களோ என்று பாதி கவலையிலும் நின்று இருந்தாள்..
ஒரு சில நிமிடங்களில் தன்னை நிதானித்து கொண்ட கண்ணன் எல்லோரையும் நோக்கி “அவள் திரும்பி வரும் போது நாங்கள் கல்யாணம் செய்து கொள்கிறோம் ,இப்பொழுது பாப்புவோட கல்யாணம் நல்ல படியா நடத்துவோம் ,நான் ராணிமா தேடி போறேன் விஷ்வா எனக்கு பதிலா இங்க இருந்து எல்லாம் பார்த்துப்பான்...”என்றான்..
விஷ்வா “ எங்கு சென்று இருப்பாள் “என்று யோசித்து கொண்டு இருந்தான். அந்த கடிதத்தை பார்த்தவுடன் அந்த தம்பதியினர் ,அவளின் முந்தைய வீடு என எல்லாவற்றிக்கும் ஆளை அனுப்பி பார்த்துவிட்டான் எங்கும் இல்லை...
எதையும் எடுத்து சென்ற மாறி கூட தெரியவில்லை மாற்று உடை கூட எடுத்து செல்லவில்லை... காயம் ஆறாத காலோடு எங்கு சென்றாள் என்று புரியவில்லை...
ஜனனி கண்ணனை நோக்கி அண்ணா நானும் அண்ணி கிடைச்சதுக்கு அப்பறம் பண்ணிக்கிறேன் என்க கண்ணன் மறுத்துவிட்டான்...எல்லாரும் என்ன செய்வது என்று புரியாமல் இருக்க கண்ணனும்,விஷ்வாவும்,ராஜா என அனைவரும் ரீனாவை தேடி அலைந்தனர்..சந்தோஷ் கல்யாண வேலைகளை பார்த்து கொண்டு இருந்தான்...காப்பு கட்டி, பந்த கால் ஊணி இருப்பதால் அவனை எங்கும் அனுப்பவில்லை..
இதோ கல்யாண தினமும் வந்து இருக்க சென்னையும் தஞ்சாவூரும் திரண்டு வந்து இருந்தனர் கல்யாணத்துக்கு..ஆனால் வீட்டினார் யார் முகத்திலும் சந்தோஷம் இல்லை..விஷ்வாவும் கண்ணனும் அரைமணி நேரம் முன்புதான் மண்டபதிற்கே நேரடியாக வந்து இருந்தனர்..
எவ்வளவு ஆடம்பரமாக பணத்தை வாரி இறைத்து முருகன் இந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்து இருந்தார் .. அந்த நிறைவே இல்லை... பாவம் சுந்தரி தன் பிள்ளைகளின் யாருடன் கல்யாணமும் நிறைவாக மகிழ்ச்சியாக இல்லையே என்று கவலையில் இருந்தார்..
விருந்தினர்களுக்காக முயன்று முகத்தை மலர்ச்சியாக வைத்து இருந்தனர்.. மந்திரங்கள் சொல்ல கெட்டிமேளம் கொட்ட அர்ச்சதை தூவ ஜனனி தன் கருவாயனின் கையில் தாலி வாங்கினாள்.. எல்லாம் பிரச்சனைகள் கவலைகளை தாண்டி இருவர் மனதிலும் சொல்ல முடியாத ஒரு நிறைவு வந்தது என்றாள் மிகை இல்லை..
ஆயிற்று திருமணம் முடிந்து இன்றோடு 20 நாட்கள் ...கல்யாண சலசலப்பு அடங்கி ஜனனி, சந்தோஷ் ஊருக்கு சென்று 10 நாள் இருந்துவிட்டு, இருவரின் வேலையின் பொருட்டு சென்னை வந்து இருந்தனர்...
நிம்மதியான மனநிலை இல்லாததால் அவர்களின் வாழ்க்கை இன்னும் தொடங்கப்படவில்லை
ஆனால் ரீனவாவின் தேடுதலின் பலன் பூஜ்ஜியம்தான்.விஷ்வா வேலை பார்த்துக்கொண்டே ரீனாவை தேட, கண்ணன் முழு நேரமும் அவளை தேடினான்..கோபம் ,இயலாமை, காதல் என அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்க எங்கு இருப்பாளோ ,எப்படி கஷ்டப்படுவாளோ என நினைத்து நினைத்து சோர்ந்து போனான்...

சின்ன துரும்பு கூட கிடைக்கவில்லை அவளை பற்றி...மனம் சமனப்படாமல் தன் அறையில் உள்ள ருக்குவின் படத்திற்கு முன் கண் மூடி நின்று இருந்தான்..அவளை திருப்பித்தா என்று வேண்டவும் இல்லை.. உனக்கு துரோகம் செய்துவிட்டேன் என்பது போல குற்ற உணர்ச்சியில் மன்னிப்பு கேட்கவில்லை...கண் மூடு கை கூப்பி நின்றான்...
அவனின் ருக்குவிற்கு தெரியும் அவனுக்கு வேண்டியது கண்டிப்பாக கொடுப்பாள்..இதில் அவள் ஆத்மா நிம்மதி அடையுமே தவிர காழ்ப்புணர்ச்சி கொள்ளாது...அந்த புனித ஆத்மாவிற்கு தெரியும் கண்ணனின் மனதில் தான் தெய்வமாகி போய் இருப்பது...
அவனின் அந்த சில மாதமே ஆன சிசு அதை நினைக்கையில் அவன் கண்களில் கண்ணீர்....தொடர் பயணம் காலையில் ஆரம்பித்தால் இரவுதான் முடியும்...போலீசில் தனிப்பட்ட முறையில் தேடியும் பலன் இல்லை...
அன்று விடுமுறை என்பதால் விஷ்வாவும் கண்ணனுடன் சென்றான்...அன்று முழுவதும் அவள் படித்த கல்லூரி ,அவளின் நண்பர்கள் என விசாரிக்க யாருக்கும் தெரியவில்லை ..
மதிய 2 மணிவேளை தொண்டை மனம் எல்லாம் வறண்டு போக அந்த ஜனசந்தடி அதிகம் உள்ள பகுதியில் காரை நிறுத்தி கண்ணன் பாட்டிலில் உள்ள தண்ணியில் முகம் கழுவ ,அந்த கழுவிய தண்ணீர் அங்கு ஓரமாக படுத்து இருக்கும் பிச்சைக்கார பெண்ணின் மீது பட்டு அந்த பெண்ணின் உச் என்ற சத்தத்தில் அந்த புறம் திரும்ப உடல் அதிர அவன் உலகம் அப்படியே நின்றது...

ஆம் அந்த பிச்சைக்கார பெண் ரீனாதான் ,22 நாட்கள் நாயாய் பேயாய் அலைந்து தேடிக்கொண்டிருக்கும் அவனின் ராணிம்மாதான்..இப்படி ஒரு கோணத்தில் அவர்கள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை..வீட்டை விட்டு வரும் போது போட்டு இருந்த அதே உடை மித மிஞ்சிய அழுக்கில் இருக்க ,தலை கூட வராமல் மண்டையுடன் சிக்காக ஒட்டி இருக்க ,முகம் முழுவதும் அழுக்குடன் பார்க்கவே யாரோ போல இருந்தாள்...
அவளை அடியாளம் காமித்து கொடுத்தது அவள் கைகளில் உள்ள தழும்பும் அவளின் இல்லாத வலதுகாலும் பக்கத்தில் உள்ள ஊன்றுகோலும்தான்...உடல் பாதியை இழைத்து சரும பொழிவு மறைந்து இரக்கமற்றவர்கள் பார்த்தால் கூட மனம் துடிக்கும் ஒரு தோற்றம்...
“ ராணிமா” என்ற அழைப்புடன் வேகமாக அவளை நெருங்கியவன் அவளை அணைத்து கொண்டான்...அவனின் இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறி வெடிக்கும் நிலையில் இருந்தது..உணவுக்கு என்ன செய்து இருப்பாள்...உறங்க என்ன செய்து இருப்பாள்,அவசரத்துக்கு என்ன செய்து இருப்பாள்..அவளின் 22 நாட்கள் கண்ணனின் கண் முன்னே வந்து கலங்கி போனான்..
ரீனா எதுவும் சொல்லவில்லை அவனின் அணைப்பில் கண்டுண்டு இருந்தாள் வீட்டை விட்டு வந்தநாளாய் அவள் பட்ட கஷ்டங்கள்தான் எத்தனை ..அதற்காக அவள் வருத்த படவில்லை தான் செய்த தவறுகளுக்கான தண்டனை என எடுத்துக்கொண்டாள்... உணவு கிடைக்காமல் பசிதாளாமல் யாசகம் கூட செய்து சாப்பிட்டு இருக்கிறாள்...
அதுவும் இரவுகளில் நிமிடம் கூட தூங்காமல் அந்த காலை வைத்துக்கொண்டு பாதுகாப்பான ஒரு ஒதுக்கிடம் தேடி அழைந்ததுதான் என்ன என்று அதையெல்லாம் நினைத்து நினைத்து இன்னும் ஒன்றினாள்..

பசி.. பசி..2 நாட்கள் ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு இருந்தாள் கண்கள் இருட்டிக்கொண்டு மரணத்தை விருப்பதோடு எதிர் நோக்கி காத்து இருந்தாள்.... அவளின் கண்ணனை கண்டதும் .” கண்ணன் எனக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது வாங்கி தாரீங்களா பிளீஸ் “என கேட்க..இதை கேட்க கண்ணன்” அய்யோ” என அடி குரலில் கத்தினான்
வெளியே சென்ற கண்ணன் இன்னும் வரவில்லையே என்று அவனின் சத்தத்தில் பதட்டமாக காரைவிட்டு வந்த விஷ்வா கண்களிலும் ரீனாவின் தோற்றம் அதிர்ச்சியையும் ,கண்ணீரையும் ஒருங்கே வரவழைத்தது..தெரியாமல் செய்த தவறுக்கு தெரிந்தே இன்னும் எத்தனை தண்டனைதான் இவள் கொடுத்து கொள்ள போகிறாள் என்ற எண்ணம்தான் அவனுக்கு...பின் துரிதமாக செயல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்..

விஷ்வாவிற்கு தெரியும் அவள் நினைத்து இருந்தாள் அவளின் படிப்பை வைத்து நல்ல வேலையில் சேர்ந்து இருக்கலாம்..இல்லை அவளை அன்று விபத்திலிருந்து காப்பாற்றியவர்கள் வீட்டிற்கு சென்றால் அவளை தங்கம் போல் வைத்து இருப்பார்கள் என்று ஆனாலும் வேண்டும் என்றே இந்த தண்டனையை ஏற்று கொண்டாள் என்று...
மீண்டும் ஒரு நீண்ட நெடிய ஒருவாரம் ரீனாவிற்கு மருத்துவ வாசம்... மீண்டும் அவள் கண் முழித்ததும் குடும்பத்தின் முன் மறுபடியும் ஒரு மருத்துவமனை கல்யாணம் ரீனாவின் மறுப்புகளை மீறி...முருகன் சுந்தரி தம்பதியினருக்கு வருத்தமான வருத்தம் தன் பிள்ளைகள் யாரின் கல்யாணமும் மன நிம்மதியோடு இல்லையே என்று.....

கண்ணனுக்கு பயம் மீண்டும் அவள் எங்கும் போய் விடுவாளே என்று..அதனால் அவசர அவசரமாக தாலிகட்டிவிட்டான்..ஆனால் அவர்கள் நினைத்தது போல இல்லாமல் ரீனா அமைதியாக இருந்தாள்..
இன்று தான் மருத்துவமனை முடிந்து விஷ்வாவின் சென்னை ஆபார்ட்மெண்டிற்கு அழைத்து வந்தனர்...ஆலம் சுத்தி உள்ளே அழைத்தனர்..குடும்பத்தின் இயல்பு நிலை ஓரளவு திரும்பி வந்தது..அதற்கு காரணம் நம் அகலி போட்ட டீ என்றாள் மிகை இல்லை..பாலில் போட்ட டீ பார்ப்பதற்கு பிளாக் காபி போல இருந்தது..அவ்வளவு தூளையும் ,அவ்வளவு சர்க்கரையும் அள்ளி கொட்டி இருந்தாள்... அதோடு மட்டும் இல்லாமல் அதை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு விட்டாளே ஒரு லுக்கு செப் தாமு போல...அங்கு உள்ள அனைவருக்கும் கொல்லென ஒரே சிரிப்பு...ரீனா கூட தன் கவலை நிலை மறந்து சிரித்தாள்..

4 வருடத்திற்கு பிறகு...
விஷ்வாவின் அபார்ட்மென்டில்...
“ என் செல்ல அம்மால எழுந்துக்கோ...”
“என் அம்முகுட்டில எழுந்துக்கோ...
“என் பூக்குட்டில எழுந்துக்கோ” என விஷ்வா,அகலியின் 3 வயது ஓட்டிபிறந்த மூன்று ஆண் பிள்ளைகளும் தூங்கும் அவர்கள் அம்மாவை மாற்றி மாற்றி எழுப்பி கொண்டு இருந்தனர்...

ஆம் அகலிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் பிள்ளைகள்...அவர்களை பெற்று எடுப்பதற்குள்ளாகவே அகலி பிரஷர் லோ ஆனதால் மிகவும் சிரமப்பட்டு போனாள்..
குழந்தைகளும் 1 மாதம் இங்கு பெட்டரில் இருந்தனர்...அவ்வளவு சிரமப்பட்டும் தன் கணவனுக்கு பெண் பிள்ளை பிடிக்கும் என்பதால் இதோ அடுத்த குழந்தையை 6 மாதம் சுமந்து சோர்ந்து போய் தன் மாமனின் நெஞ்சு கூட்டு மருந்துக்கு அடம் செய்துகிடக்கிறாள்...
அவள் அசைந்த பாடாக தெரியவில்லை...முதல் குழந்தை துருவ் விஷவேந்திரன் “அம்மா பாட்டி தாத்தா கிளம்பிட்டாங்க ,பெரியப்பா போன் பண்ணி கிளம்பியாச்சான்னு, சந்தோஷ் மாமா,ஜனனி அத்தை குட்டி பாப்பா கூட வந்துட்டங்களாம், எழுந்துகோங்க மா...” என தன் தந்தையை போல பொறுப்பாக இருந்தான்..

அகலி “ம்ம்ம்ம் போடா எனக்கு மாமாவ கூப்பிடு மாமாதான் வேணும்” என சிணிங்கி கொண்டே படுத்து இருந்தாள்..
அவர்களின் அடுத்த பையன் விபீன் “ மம்மி அப்பா பிசினஸ் மீட்டிங் முடிச்சிட்டு பெரியப்பா வீட்டுக்கு வந்துடுவாங்க” என இவன் பங்குக்கு கெஞ்ச...
அகலியின் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது ஏனோ மயக்கம் ,வாந்தி,அதீத சோர்வு என அவளால் முடியவில்லை. எழுந்து போன் செய்ய கூட முடியவில்லை“ போடா எனக்கு மாமா வேணும் “
அவர்களின் கடைக்குட்டி ஜித்து விஷ்வாவிற்கு கால் செய்ய போகவே அவர்களின் அறை கதவு திறந்து அவர்களின் பேச்சின் நாயகன் உள்ளே நுழைத்தான் “குட்டிமா” என்ற குரலோடு.

வேகமாக அகலியின் அருகில் வந்தவன் “என்ன செல்லம்” என அவனை அணைத்துக்கொள்ள துருவ்,விபின், ஜித்து மூன்று பேரும் தன் தாய் தந்தையரை முறைத்து பார்த்தனர்.. அதையெல்லாம் கண்டு கொள்ளாத அகலி அவன் மாமன் கவனிக்க ஜோராக அவளின் ரீனா அக்காவிற்கு வளைகாப்பிற்கு கிளம்பினாள்...
குளிப்பதில் ஆரம்பித்து புடவை கட்டுவது முதல் அனைத்தும் அவளின் கணவன் செய்ய ஜாலியாக இருந்தாள்.. கீழே குனிந்து கொசுவத்தை சரி செய்யும் தன் மாமனை பார்க்க அவர்களின் காதல் கதை அவளை கேட்காமலே அவளின் மனதில் ஊர்வலம் போனது...
நிமிர்ந்தவனின் கண்ணில் தன் மனைவியின் கண்ணில் மிதமிஞ்சி வழியும் காதல்தான்..அவளின் விரிந்த விழியில் ஒரு முத்தம் கொடுத்தவன் அவளை அணைத்துக்கொண்டான்..

ஒரு வழியாக தன் 4 குழந்தைகள் வயிற்றில் உள்ள ஒரு குழந்தை தன் தாய் தந்தை என எல்லோருடனும் தன் அண்ணனின் வீட்டுக்கு கிளம்பினான்...விஷ்வாவின் குடும்பம் அவனின் அபார்ட்மென்டில் இருக்க,ரீனாவும் கண்ணனனும் அவர்களின் பெரிய வீட்டில் இருந்தனர்..சுந்தரியும், முருகனும் மகன்,மகள் வீட்டில் மாறி இருந்து வந்தனர்..
சந்தோஷ் ஜனனி, சந்தோஷ் அவனின் ஊரான தஞ்சாவூரில் உள்ள விஷ்வாவின் கிளை நிறுவனத்தை தன் பங்கை கொடுத்து பார்ட்னராக சேர்ந்து பார்த்துக்கொள்ள ,ஜனனி சிறிய அளவில் மருத்துவமனை ஒன்றை கட்டி குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்தாள்..அவர்களுக்கு செல்லம்மா என்ற 10 மாத பெண்குழந்தை..
ராஜாவிற்கும், அவனின் சொப்பன சுந்தரிக்கும் கல்யாணம் ஆகி ஒருவருடம் ஆகி இருக்க இப்பொழுதுதான் கர்ப்பம் உறுதி ஆகி இருப்பதால் அவர்களால் ரீனாவின் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை..
கண்ணன் ரீனாவின் மாற்றத்திற்காக காத்திருந்து காதல் கணவனாய் அவளைதாங்கி இதோ அவளையும் ஒரு அழகான வாழ்க்கை வாழ வைத்து அதன் அடையளமாய் அவளின் வயிற்றில் அவன் வாரிசு..
வீட்டில் எல்லோரும் வந்துவிட ரீனாவின் வளைக்காப்பு ஆரம்பித்தது..நிகழ்ச்சி ஆரம்பித்து அவள் கைகளில் வளையல் கோர்க்க கோர்க்க என்ன முயன்றும் ரீனாவின் கண்களில் தாரை தாரையாக கண்களில் கண்ணீர்.. எப்படி எப்படியோ போக வேண்டிய தன் வாழ்வை இவ்வளவுவு அருமையாக மாற்றி இருக்கிறார்களே என்று..
இப்பொழுது அந்த நினைவு இல்லை என்றாலும் ஆரம்பத்தில் அகலி விஷ்வாவை பார்க்கும் போது தன் கடந்த காலம் தனக்கு நியாபகம் வருவதால் தனியே வந்து தன் எண்ணத்தை மாற்றி ,தனக்காக காத்திருந்த தன் கணவனை நினைக்கும் போது நிறைவாக உணர்ந்தாள் ரீனா...
நிகழ்ச்சி முடிய அகலியின் மூன்று வாண்டுகளும் அவர்களின் அத்தை மகள் செல்மாவை செல்லம் கொஞ்சி கொண்டிருந்தனர்.. எல்லாம் முடிந்து குடும்ப சகிதமாய் போட்டோ எடுக்க நின்றனர்..

( ஜித்து..செல்லம்மா கதை வேணுமா...)
நடுநாயகமாய் உள்ள சேரில் முருகனும் சுந்தரியும் அமர்ந்து இருக்க கிழே துருவ்,விபின் ,ஜித்து செல்லம்மாவை மடியில் அமர வைத்து ஜனனி, சந்தோஷ் , விஷ்வா,அகலி,ரீனா ,கண்ணன் அனைவரும் நிற்க புகைப்பட காரர் போட்டாவை கிளிக்கினார்..எல்லோர் முகத்திலும் நிலையான ஒரு சந்தோசம் ஒரு பூரிப்பு...அவர்கள் அவர்கள் காதல் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.
நாமும் அவர்களோடு நிறைவாக விடை பெறுவோம் இவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கையை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வருவோம்....
முற்றும்.....

வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் ,நல்லவை கெட்டவை என பெயரிட பட்ட சம்பவங்களும் ஏற்கனவே பிள்ளையார் சுழி போட்டு முழுமையாக எழுதப்பட்டு முற்றும் போட்டு முடிக்கப்பட்டது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்...
அவற்றை தடுப்பவர்கள்,மாற்றி அமைப்பவர்கள் யாரும் இல்லை..அப்படியே மாற்றினாலும் தடுத்தாலும் அவையும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவையே...

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் சொல்லி இருப்பது போல...கல் அசைவிற்கும் கடவுளின் சித்தம் தேவை...

நன்றி...
இதுவரை என்னுடன் பயணித்த அனைவருக்கும் என் நன்றிகள்...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#காதலன்

ஹாய் செல்லம்ஸ்...

நான்தான் உங்களை மிளாணிஸ்ரீ...
காதலன் கதையோட ரைட்டர்..

இப்பொழுது காதலன் கதை அமேசான் கிண்டிலேல கிடைக்கும் ..

இதுவரை கதையை பபடிகாதவங்க படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

Sri அக்கா சைட்ல இன்னும் ஸ்டோரி இருக்கு அது இன்னும் 2 நாள்தான் இருக்கும்..அதுக்குள்ள படிக்கிறவங்க படிங்க..

இல்லனா கிண்டிலேல படிக்கிறதா இருந்தாலும் படிங்க...

அமேசான்ல எப்படி ஸ்டோரி அப்லோட் பண்ணமுன்னு சொல்லி கொடுத்த @Gory vicky maya, பொம்மு அக்கா, அப்பறம் my பாப்பு குட்டி எல்லோருக்கும் என் நன்றிகள்...

இப்படிக்கு..

மிளாணிஸ்ரீ.
 
Status
Not open for further replies.
Top