All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணி ஸ்ரீயின் காதல் இல்லா காதல் _ கதை திரி

Status
Not open for further replies.

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் இல்லா காதல் 6

13851


13852

13853


கீழை ஊரின் பஞ்சாயத்து சும்மா அப்ப சப்பை ஆகவெல்லாம் நடக்காது..அது நீதிமன்றத்தை தாண்டி நீதி வழங்க கூடிய இடம் தராசென, பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் அன்னபறவையென தவறையும்,சரியையும் அத்துணை துல்லியமாக பிரித்து சொல்லிவிடும் தன்மை கொண்டது…

நீ கொலையே செய்து இருந்தாலும் நியாயம் உன் பக்கம் இருக்கும் பட்சத்தில் கீழை ஊரின் பஞ்சாயத்து உன்பக்கம் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.சில வருடங்களுக்கு முன்பு தன் அக்காவின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்து தங்கிய தன் மனைவியின் தங்கையை வன்புணர்வு செய்ய முயலும் போது அந்த தங்கை பெண் அருவாமனையில் அவன் கழுத்தை வெட்டி கொலை செய்த போது


கூட பிறந்த அக்காவே கூட நிற்காத போது கீழை ஊரின் பஞ்சாயத்து உடன் நின்றதோடு மட்டும் இல்லாமல் அந்த பெண்ணிற்கு திருமணமும் நடத்திவைத்தது..ஆம் இந்த பக்கம் உள்ள இளைஞர்கள் கொஞ்சம் அதிகம் நியாயவாதிகள், தனக்கு முதல் திருமணம்தான் என்றாலும் விதவை பெண், முதல் கணவன் இழந்தவர்கள் , இல்லை முதல் கணவன் சரி இல்லாதவர்கள் என அனைத்து பெண்களுக்கும் சராசரி வாழ்க்கையை வாழ அவர்களை திருமணம் செய்ய முழு மனதுடன் ஒத்துக்கொள்வார்கள்..


அதுவும் பெரிதாக வாழ்க்கை கொடுத்தோம் என்ற பெயரில் எல்லாம் இருக்காது, மிகவும் இயல்பாக நடந்தேறும் , அதில் முக்கியம் தன் இனத்துக்குள்,தன் சமூகத்திற்குள் என்றே இருக்கும் அதுவே சற்று நெருடலான விஷயம்,இப்படியாக இன்னும் நிறைய ஊரில் நல்லது நடப்பது எல்லாமே இனத்துக்குள்ளே முடிந்துவிடுவதால்,நல்லதே என்றாலும் அது வெளி மக்களால் இனக்கொள்கையாகவே பார்க்கப்பட்டது,


தம்பிக்கோட்டையை சார்ந்த நான்கு ஊர்களும் இப்படித்தான் இருக்கும்.. இருந்தும் மேலை ஊரில் இருக்கும் பல வருடமாக நஞ்சான உத்திராபதி,அந்த ஊரையும் நஞ்சாக்கினார்…


அப்படியாக நீதி வழங்கும் ஊரில், தலைமுறை தலைமுறையாக நீதிவழங்கும் குடும்பம் கூட்டிய பஞ்சாயத்தில் புருசனை இழந்த பெண்ணே சரியாக சாட்சி சொல்லாததால் மொத்த பஞ்சாயத்தும் யோசனையிலும் நம்ம முடியா தன்மையிலும் இருந்தது,சல சல என சத்தங்கள் கேட்க உத்திராபதி தன் கணீர் குரலில் “ என்னய்யா ஊரே சேர்ந்து பம்மாத்துறீங்களா,


என் ஊரு பொண்ணுவந்து என் புருசன கொன்னுட்டாங்கன்னு இந்த பெரியமனுஷன்ட சொன்னங்களாம் ,உடனே அந்த சின்ன பெரியமனுஷன் என் பங்காளி எல்லாம் அடிச்சி கட்டிப்போட்டு என்னைய பஞ்சாயத்துக்கு அழைச்சிட்டாரு,

என்னோட உள்ள சொந்த பிரச்சனைக்கு ,என்ன அசிங்கப்படுத்தணும்னு ஊரை கூட்டி இருக்கான் இந்தாளு,அதுக்கு நீங்க எல்லாம் கொடி பிடிச்சிட்டு வந்துடீங்க ,வெட்கமா இல்லை” என மரியாதை இல்லாமல் கலையரசை பேச மொத்த ஊருக்கும் கோபம் வந்தாலும் தவறு நம்மூர் பக்கம் இருப்பதால் அமைதி காக்க ,


ஆதியோ நரம்பு புடைக்க கை முட்டி இறுக ஒரு அடி எடுத்து வைக்க போக கலையரசின் “ஆதி”என்ற ஒற்றை சொல்லுக்கு கட்டுப்பட்டு வேர் என்ன, விழுது பாய்ந்த ஆலமரம் என புதைந்து நின்றான் அந்த இடத்திலையே

அந்த சாட்சி சொன்ன புருசனை பறிகொடுத்த சாந்தியின் நிலையோ, அதோ பரிதாபம்..நமக்கமாக பஞ்சாயத்து கூட்டிய பெரிய மனுஷனுக்கு தெரிந்தே இவ்வளவு பெரிய அவமானம் தேடி தருகிறோம் என்று..

ஆனால் அந்த அபலையின் நிலையோ அதற்கு மேல் பிறந்த ஆறு மாத குழந்தை என மொத்த குடும்பமும் உத்திராபதியின் அடியாட்களின் கத்திமுனையில் இருக்க,மேலும் பஞ்சாயத்தில் உண்மையை சொன்னால் ,நீ நடத்தை கெட்டவள் அதனால் தான் உன் புருஷன் தற்கொலை பண்ணிக்கிட்டான்னு, மொட்டை அடிச்சி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்தி ஊர்வலம் கொண்டு போறதோடு இல்லாமல் ,


உன் கூட அந்தரங்கமா நான்தான் இருந்தன்னு ஒருத்தன் சாட்சி சொல்லுவான் ,பின்னாடி 3 தங்கச்சி இருக்க உனக்கு இதெல்லாம் தேவையா “ என கத்தி இன்றி ரத்தம் இன்றி உத்திராபதியின் அடியாட்கள் மிரட்டினால், ஒழுக்கமே உயிர் மூச்சென நினைக்கும் 5 ஆம் வகுப்பை கூட தாண்டாத,10 கிலோ மீட்டர் உள்ள டவுனுக்கே வருடம் ஒரு முறை செல்லும் அந்த கிராமத்து கிளி வேறு என்னதான் சொல்லும்..நீதி தவறியது ,அநியாயம் வென்றது,


மேலும் உத்திராபதி “அவனுங்கல கட்டை அவிழ்த்துவிடுங்கடா”என தன் தாரை தப்பட்டைகளுக்கு கட்டளையிட்டு “பஞ்சாயதாம், பஞ்சாயத்து, இதுக்கு தீர்ப்பு சொல்ல நாலு பெரியமனுசனுங்க வேற …த்த்து..”எனகாரி உமிழ்ந்தபடி கலையரசை பார்த்து விசப்பார்வை கக்கியது அந்த கிராமத்து கட்டுவிரியான்..


அந்த பார்வை “ உன் வம்சத்தையே வேர் அறுக்காமவிட மாட்டேன்” என்பதாகவே இருந்தது “ஆனால் விதியோ அந்த வம்சத்தின் விதையே உனக்கு சொந்தமான நிலத்தில்தான் பயிரிட படபோகிறது” என எள்ளலாய் சிரித்தது..


ஒரு பெருமூச்சுடன் மன்னிப்பு கேட்பதற்காக கலையரசு எழுந்து கை கூப்ப போகவே அதை உணர்ந்த ஆதி அவரின் கை அந்தரத்தில் ஒரு இஞ்ச் உயர்வதற்குள் “அப்பா” என உயர்ந்த அவரின் கையை அமத்தியவன் அவரின் முன் வந்து நின்று பஞ்சாயத்தில் மன்னிப்பு கூறினான்


” சரியான விசாரிப்பு, சாட்சி இல்லாம , பஞ்சாயத்து கூட்டனத்துக்கு, அந்த ஊர்காரவங்ககிட்டையும், என்னிடம் அடிவங்கியவங்க கிட்டையும் மன்னிப்பு கேட்கிறேன் , “ பஞ்சாயத்துக்கு கட்ட வேண்டிய அபராத தொகையும் நானே கட்டிறேன் “ என கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்க கீழை ஊர் எல்லாம் தலை குனிந்து நிற்க உத்திராபதி வெற்றி சிரிப்பு சிரித்தார்.


அந்த சிரிப்பை பார்த்த கலையரசு இது எல்லாம் உத்திராபதியின் நாடகமோ என யோசிக்க ஆதியோ பின் வேறு எதோ உள்குத்து உள்ளது என சரியாக யோசித்தான்..பின் அவன் அப்பாவை நோக்கி “போலாம் அய்யா” என சிந்தனை கலைக்க அவ்விடம்விட்டு அகன்றார்.

பிரீதாவிற்கு நன்றாக சோர்வு செமஸ்டர் லீவ் என்பதால் தூங்கி தூங்கி எழுவதை வேலையாக வைத்து இருக்கிறாள்,பக்கத்து தெருவில் இருக்கும் அத்தை மாமாவை பார்க்க கூட செல்வது இல்லை இங்கு இருந்தே சமையல் செய்து கொடுத்து,சம்பள கணக்கை எல்லா குமரனை பார்க்க சொன்னாள்..

ஏதோ சத்து கேட்டது போலெ திரிக்கிறாள்..காலையில்.அவளின் தந்தை சொல்லி போன விஷயம் கூட அவளின் இரத்த கொதிப்பை அதிகபடுத்த அரை மயக்கத்திற்கே சென்றுவிட்டாள்..என்னதான் அரை மயக்கம் என்றாலும் அதிலும் “ ஆதியை கொள்ளவேண்டும் , அவன் அப்பாவை கொள்ள வேண்டும்”,”அவன் குடும்பத்தை கொல்ல வேண்டும்”என அவள் மூளை அவளுக்கு தொடர்ந்து கட்டளை இட்டு கொண்டு இருந்தது..


ஆம் இன்று நடக்க இருக்கும் பஞ்சாயத்தும் உத்திராபதியால் அப்படியே திரித்து கூறப்பட்டது “ உத்திராபதியின் குடும்பத்தை அவமானப்படுத்த , இயல்பாக நடந்த மரணத்தை திரித்து அந்த பெண்ணை மிரட்டி பஞ்சாயத்தில் எனக்கு எதிராக சாட்சி சொல்ல வைக்கப்போகிறார்கள் ஆதியின் குடும்பம் ”என்பதாக…


இப்படியாக அவள் பிறந்ததில் இருந்து நடக்கும் அனைத்து விஷயங்களும் வேறு ஒரு கோணம் கொடுத்தே அவளுக்கு சொல்லபட்டது , பசுமரத்தானி போல அந்த பச்சை மண்ணில் எல்லாம் தவறாகவே விதைக்கப்பட்டு இப்பொழுது ஒரு இனதிமிர் பிடித்தவளாக , தந்தை சொல்லை அப்படியே நம்புபவளாக மாறி நிற்க வைத்து இருக்கிறது..



இன்னும் கொஞ்ச நாள் போனால் அவள் தந்தை” தான் தான் தவறு செய்கிறோம்’ என்று சொன்னாலும் கூட அவர் பக்கமே நிற்கும் செம்மறி ஆடேன மாறி போனாலும் ஆச்சர்யம் இல்லை,

ஓரளவு அரைமயக்கத்தில் இருந்தவள் பஞ்சாயத்து நமக்கு சாதகம் ,நியாயம் ஜெயித்தது “என அவள் தந்தை என்ற குள்ளநரி சொல்லவே முழு தூக்கத்திற்கு சென்றாள்…குமரனுக்கு அப்பா சொல்வதில் பெரிதாக நம்பிக்கை இல்லை என்றாலும் அந்த அளவிற்கு விஷயங்களை அலசி ஆராய மாட்டான்…இருவரும் இப்படியாக தந்தை செயலுக்கு மறைமுக வழி வகுத்து கொண்டிருந்தனர்..


இங்கே குழலி என்பவளுக்கோ கையும் ஓடவில்லை ,காலும் ஓடவில்லை ,பிராதில் சமந்தப்பட்டால் ஒழிய பெண்கள் பஞ்சாயத்திற்கெல்லாம் வரக்கூடாது.. என ஒரு கட்டுப்பாடு இருக்க அவளால் செல்ல முடியவில்லை அப்படி வரலாம் என்று சொல்லி இருந்தால் இந்நேரம் நான்கு கால் பாய்ச்சலில் சென்று இருப்பாள் இவளும் ,

சென்று தன் பெரிய தந்தைக்கும்,அண்ணணுக்கும் அரண் என நின்று இருப்பாள், வீட்டிற்கும் வாசலுக்கும் நடையோ, நடை என்று நடந்து கொண்டு இருக்கிறாள் இரண்டு மணிநேரமாக தந்தையை இழந்தவள்,மேலும் வேறு யாரையும் இழந்துவிடுவோமோ விவரம் தெரிந்த நாளாய் துடித்து கொண்டு இருப்பவள் ,ஒரு வழியாய் வந்து சேர பஞ்சாயத்தில் நடந்ததை விட தன் தந்தையும் அண்ணனும் நல்ல படியாய் வந்து சேர்ந்ததே போதும் என இருக்க வேறு எதற்கும் அவள் வருத்த பட்டதாய் தெரியவில்லை சிறுது நேரம் தன் பெரிய தந்தையின் தோளில் சாய்ந்து இருந்தவள் இயல்பாகி போனாள் ..



கலையரசிற்கோ பெண் அழுததால் தீர விசாரிக்காமல் பஞ்சாயத்து கூட்டி விட்டோமோ என யோசிக்க..ஆதியோ வேறு வகையில் அதற்கான பதிலை கண்டுபிடித்து கொண்டு இருந்தான் தன் சுண்டுவிரலை அலங்கரிக்கும் அந்த குட்டி மோதிரத்தை தன்னை அறியாமல் திருகியே..படியே

மறுநாள் காலை 11 மணி ஆதி ஏதோ முக்கியமான விஷயமாக டவுன் வரை சென்று இருக்க தோப்பில் லோட் ஏற்ற வந்து இருப்பதால் அங்கே சென்றாள் குழலி ,லோட் ஏற்றப்பட்டு கணக்கு முடிக்கப்பட்டு எல்லோரும் கலைந்து போக .தூரத்தில் சிலர் மட்டும் வேலைபார்த்து கொண்டு இருக்க…இளநீர் சாப்பிடலாம் என்று ஒரு காயை எடுத்து சைசாய் அதை சீவ இளநீரும், அருவாலும் அவள் கையில் விளையாடியது,


“ பரவாயில்லையே கீழை ஊருகாரிங்க எல்லாத்துலயும் பெஸ்ட்டா தான் இருப்பாளுங்க போலையே” என பின்னாளில் இருந்து குமரனின் குரல் கேட்க ஒரே ஒரு நொடி கை வேலை நிறுத்தம் செய்து அந்த குரலுக்கு சொந்தகாரனின் முகம் கண் முன்னே மின்னி மறைந்து சுரீர் என்று சுகம் தர அடுத்த நொடி அதற்கான அறிகுறி ஏதும் இன்றி பின்னே திரும்பி பார்க்காமல் அவள் வேலையை செய்து கொண்டு இருக்க..

“உன்னதாம் டி மச்சான் கேக்குதம்ல திரும்புறது” என அவள் கையை பிடிக்க போக நொடியில் அவன் புறம் திரு ம்யவளின் கையில் உள்ள அருவாள் அவன் கழுத்தை நோக்கி சென்று அவன் குரவலையில் முத்தம் கொடுத்து நின்றது..இன்னும் சற்று அழுத்தினால் சங்கு அருப்படுவது நிஜம்..


“இளநீர் மட்டும் இல்ல கீழை ஊரு காரிங்க தலையும் நல்லா சீவுவோம் “என நிறுத்த உச்சி வேலை என்பதால் எல்லாம் வேலையில் கவனமாக இருக்க இவர்களை யாரும் கவனிக்கவில்லை..” குமரனின் கண்ணில் சிறு மெச்சுதல் தெரிந்தாலும் பயம் அறவே இல்லை


“ அப்ப தலையை வெட்டியாவது அத்தான காப்பத்திடுவன்னு சொல்லு”என சொன்னதும் அருவாள் இன்னும் கொஞ்சம் அவன் கழுத்தை அமுக்க ஒரு சொட்டு ரத்தம் வந்தது..

ரத்தத்தை பார்த்தவள் சட்டென்று அரிவாளை விலக்கி அவனை பார்க்காமல் நடந்து செல்ல “ ஏய் காட்டுக்காரி உன் வீட்டுக்கு வந்து எப்ப பொண்ணு கேட்க” என கர்ச்சிப்பால் கழுத்தில் வடியும் ரத்தத்தை துடைத்து கொண்டே கேட்க திரும்பி பார்த்து உக்கிரமான பார்வையுடன் “ இப்ப நீ உத்திராபதி பையன்னு சொன்னாலும், உன்னை செதில் செதிலா செத்தி தென்னை மரத்துக்கு ஓரமா போட்டுடுவானுவ என் பக்காளிங்க, உசுரை காப்பத்திட்டு ஓடுற வழிய பாரு,பொண்ணு கேட்குறான பொண்ணு” என கூறியவள் விறு விருவென அவ்விடம் விட்டு அகல..


“அப்ப சீக்கிரம் பொண்ணு கேட்க வரேன்..என் மாமனுவல ஒளராத்தை எல்லா( புல் செத்தும் கருவி) சாணம் புடிச்சி வைக்கசொல்லு “என சொல்லி சிரித்தபடி அவ்விடம்விட்டு நகர்ந்தான் குமரன்..அவன் சொன்ன எதுவும் அவள் காதில் விழ வில்லை,விழுந்த மாதிரியும் காட்டிக்கொள்ள வில்லை..,


இரண்டு நாட்கள் அதன் போக்கில் போக மூன்றாம் நாள் இரவு 12 மணிக்கு அன்று பஞ்சாயத்தில் உத்திராபதியால் காப்பற்ற பட்ட மூவரும் மாறு மாறு கால் வாங்கி மேலை ஊரின் சத்திரத்தில் கிடந்தனர்..

அதே 12 மணிக்கு ஒரு பெரிய சம பரப்பில் 50 அடி உயரம் உள்ள ராட்சச காளி சிலை.

மிகவும் உக்கிரமாக , கண்கள் இரண்டும் வெளியில் தெறித்து விழுவது போல இருக்க..வாய் பிழந்து கூர் பற்கள் இரண்டும் 10 இஞ்ச் அளவு நீட்டி இருக்க, இருக்கும் 14 கைகளில் 11 கைகள் ஆளுக்கு ஒரு கொடூர ஆயுதத்தை தாங்கி இருக்க ஒரு கை ஒரு அரக்கனின் மண்டையை தாங்கி, மற்ற இரு கைகளும் சூலாயுதத்தை தாங்கி காலில் இருக்கும் அரக்கனின் தலை இல்லாத உடலின் நெஞ்சு பகுதியை குத்தி கிழிக்க,


அந்த அரக்கனின் குடல் பகுதி மேலாக சென்று காளி தேவியின் கூர் பற்களை அலங்கரிக்க அப்படி ஒரு ராட்சத தோற்றத்தோடு வீற்று இருந்தாள் அந்த ஊரின் எல்லைசாமி..பார்க்கும் யாவருக்கும் இதயம் ஒருமுறை நின்று துடிக்கும், பக்தியை விட பயம் அதிகம் வரும்..அப்படி ஒரு மாகாளி அவள்..


அந்த சிலைக்கு, முன் இடுப்புக்கு கீழே உள்ள முடி கற்றையென விரிந்து கிடக்க நெற்றியில் ஒரு ரூபாய் காசு அளவு குங்குமம் வட்டமென இருக்க…சுமங்கலி என்பதற்கான அடியாளமாய் நெற்றியின் வகுட்டில் குங்குமம் இருக்க,தலைமுடி அடர்த்தியை தாண்டு மல்லிகை பூ சரம் சரமாக தொங்க , பெரிய கண்களில் அடர்த்தியாக மை தீட்டி, வெள்ளையில் அரக்குநிற பார்டர் உள்ள புடவையில் அந்த காளிக்கு ஒத்த அமைப்பில் சுற்றி சுழற்றி அடிக்கும் காற்றை பொருட்படுத்தாமல் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தாள் இனியா.இருக்காதே பின்னே அவளுக்கு வேண்டியது, அவள் ஆசைபட்டது ,அவளுக்கான நியாயம் விரைவில் கிடைக்க போகிறதே ..

.சாந்தமே வடிவான இனியாவை இப்படி மாற்றியது, அவள் கணவன் இனியனை இப்படி ஆக்கியது,விதியா,இல்லை விதி என்னும் பொம்மலா ட்டியிடம் ஆடும் மனிதற்களா..
 

Attachments

Status
Not open for further replies.
Top