All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணி ஸ்ரீயின் காதல் இல்லா காதல் _ கதை திரி

Status
Not open for further replies.

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் இல்லா காதல் 1:

நாயகன் : தேவ் ஆதித்யா.
நாயகி :ப்ரீதா

10343

10344

அந்த 12 மணி அளவு ஆள் அரவம் ஏதும் இல்லாமல் நிசப்தம் நிறைந்து , வயலுக்கு மடை மாற்ற செல்பவர்கள் கூட,, சென்று திரும்பிவிட்ட பின் இரவு நேரம்…

சருகின் மேல் காலை வைத்தால் கூட சட சட வென்று ஊரை கூட்டும்.. அந்த அளவுக்கு அமைதி..ஒரு நிலவா இல்லை ஒரு கோடி நிலவா என்று அறிய முடியா அளவு தன் இதமான வெளிச்சத்தால் தம்பிக்கோட்டைக்கே ஒளி ஊட்டும் ஒரு பௌர்ணமி நாள்…


தம்பிக்கோட்டை என்ன சிறப்பு இல்லை இங்கே …வடக்கரை…தென்கரை.கீழை, மேலை ,என நான்கு ஊர்களின் தொகுப்பு தான் தம்பிக்கோட்டை தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைக்கோடு…ஊரின் நுழைவே ரயில் நிலையம் தான்… ஊருக்கு தெற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் கடல் , வடக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் காவேரியின் கிளை ஆறு என்ற இயற்கையின் வரம்…

வரிசையாக தென்னத்தோப்புகள், ஓவ்வொரு தோப்புக்குள்ளும் ஓவ்வொரு வீடும் அந்த தோப்பிற்கு சொந்தமான ஒரு பெரிய குளமும்,ஒரு கிணறும் இருக்கும் எப்பொழுதும் வற்றாத நீரோடு…

எல்லா ஊர்களில் இருப்பது போல வீடுகள் பக்கம் பக்கமாக இல்லாமல் தோப்பிற்கே ஒன்றாக இருக்கும்..ஊருக்கு வெளிபுறத்தில் வயல்வெளிகள் கோடைகால பயிரான எள்ளு.,உளுந்தில் ஆரம்பித்து நீர்வரத்து அதிகம் தேவைப்படும் நெல், நிலக்கடலை வரை அனைத்தும் விளையும் சத்தான மண்ணோடும் இதமான தட்ப வெட்ப நிலையோடும்…
அங்கு உள்ள எல்லோரும் ஓரளவு வசதியோடுதான் காணப்படுவார்கள்,அதிக வசதி ,குறைந்த வசதி என்றே பிரிக்கலாம், தவிர வசதி ,சொத்து பத்து சுத்தமாக இல்லை என்ற வகையில் பிரிக்க முடியாது…


அந்த ஊர் பிரிந்து காணப்படும் ஒரே விஷயம் அவர்களின் ஜாதி,சமூகம் மட்டுமே.. ஜாதி வரிசையின் கடை நிலையில் உள்ளவர்கள் எந்த ஈடுபாடும் இல்லாமல் தனியே வடக்கரை மற்றும் தென்கரையில் இருப்பார்கள்…

எப்பொழுதும் அதிக ஜாதி சார்ந்த பிரச்சனைகள் வருவது மேலை மற்றும் கீழை ஊர்களில் மட்டுமே ,கெளரவக் கொலைகள் ,ஜாதி கலவரம் என்று இரு ஊரும் அடித்து பிரண்டு கொள்வார்கள்…


இரு ஊர்களிலும் இதற்கு தலைமை தாங்கும் இரு பெரிய மனிதர்கள்…அந்த பெரிய மனிதர்களின் மகனும் மகளும் பாதி இரவில் அங்கு உள்ள களத்து மேட்டு சொனையில் வைக்கோல் தரிகளால் தங்கள் உடலை போர்த்திக்கொண்டு ஆடைகளுக்கு சுதந்திரம் கொடுத்து ஒருவர் மற்றவர்களுள் புதைந்து போகும் அளவுக்கு இறுக்கி அணைத்துக்கொண்டு தங்களை மறந்த நிலையில், கிறக்க கண்களுடன் கட்டுண்டு கிடந்தார்கள்…


வார்தைகள் சங்கமிக்காமல் இருவரும் ஒருவருடன் ஒருவர் உடல் அளவில் சங்கமித்து கொண்டு இருந்தார்கள். மாயாமோ மயக்கமோ ,காதலோ, மந்திரமோ தந்திரமோ அந்த இரவை இருவரும் கொண்டாடி தீர்த்தனர்..

அவளின் விழி அவனோடு சங்கமிக்கிறது அவள்தான் ப்ரீதா…கதையின் நாயகி…காயங்கள் பல படப்போகும் பாவி… சுப்பையா தேவர் மகன் வழி பேத்தி உத்திராபதி ரூபிணி தம்பதியினரின் செல்ல மகள்…அவள் அண்ணன் குமரனின் குலசாமி…தாத்தா,அப்பா அண்ணனை காட்டிலும் தேவர் திமிர் பிடித்தவள்…தான் ஒரு சொல் செயலிலும் தேவச்சி என்று அடையாளத்தை விரும்பியே காட்டுபவள் தன் நடை, உடை பேச்சு என்று அனைத்திலும் பெருமையுடன் வெளி காட்டுபவள்..அழகி இல்லை இல்லை .. பேரழகி.



தோற்று போவோம் என்றே தெரிந்தே பாலின் நிறமும்..பட்டின் மிருதுவும், கார்மேக கருப்பும் இவள் நிறதோடும் இவள் மென்மையோடும், இவள் குழலோடும் விரும்பியே போட்டி போடும்..இவள் நல் குணங்கள்யாவும் இவள் இனக்கொள்கையால் இவள் உள்ளே புதைந்து கிடக்கிறது ….


இதோ இவள் உள்ளே புதைந்து கிடக்கிறானே தேவ் ஆதித்ய நாடர் இவனை போல.. தேவ் ஆதித்யா…தன் குடும்பத்தின் ஒற்றை வாரிசு தன் தாத்தா ராஜாப்ப நாடாரின் மறு வார்ப்பு … தன் அப்பா கலையரசை போல, ஜாதிக்காக உயிரைவிட்ட சித்தப்பன் செழியனை போல மிடுக்கும்..கம்பிரமும் நிரம்ப பெற்றவன்..பழக்க வழக்கம் , உதவி செய்வது…பிரச்சனை என்றால் முன்னே முதல் ஆளாக நிற்பது என எல்லாம் எல்லா சமூகத்திடம் என்று இருந்தாலும்…, தான் ,தன் வீடு தன் குடும்பம் என்று வந்தால் முதலில் எல்லாவற்றையும் எடுத்து கட்டிக்கொண்டு நிற்பவன்..

ஆண்களின் அடையாளமான தைரியமும் வீரமும் , அசாத்திய செயல் திறனும் ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு வைத்து இருப்பவன் … கருமையும் அல்லாத வெள்ளையும் அல்லாத நம் நாட்டிற்கே உரிய கோதுமை நிறத்தில் நல்ல உயரத்தில் எப்பொழுதும் வேஷ்டி சட்டையில், முறுக்கு மீசை தாடியுடன் அந்த பகுதியில் உள்ள எல்லா பெண்களின் மனதில் இருக்கும் தன் எதிர்கால கணவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவு இருக்குமோ அவை எல்லாவற்றையும் கொண்ட அய்யனார் அவன்…


அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் ஆகாத ஒரே குடும்பம் உத்திராபதி தேவரின் குடும்பம்( ப்ரீதாவின் குடும்பம்)…சாதரண பகை இல்லை தலைமுறை தலை முறையாய் இருக்கும் தீரா பகை..வாய்ப்பு கிடைத்தால் அவ்வீட்டில் உள்ள ஆண்களை எல்லாம் கொன்று புதைக்கும்,கருவருக்கும் அளவு வெறி கொண்ட பகை…


இப்படி பழி உணர்ச்சி கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் இப்படி ஆலிங்கனம் செய்ய காரணம் என்ன…யாரை யார் பழி வாங்குகிறார்கள்…இல்லை விதி செய்த சதியா…ஒன்றும் விளங்கவில்லை....காலமும் காயமும் தான் பதில் சொல்ல வேண்டும்
மறுநாள் காலை 8 மணி மேலையில் உள்ள அந்த மாடிவீடு சாம்பிராணி புகையால் நிரம்பி இருக்க டிவியில் சுப்பிரபாதம் சத்தமாக ஒலித்துக்கொண்டு இருக்க உத்திராபதி தன் ஆட்களுடன் ஊரில் உள்ள ஏதோ பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்தார்…


வரப்பு பிரச்சினையில் ஆரம்பித்து கோவில் திருவிழா என அனைத்தும் இந்த வீட்டில்தான் முடிக்க படும்…உத்திராபதி தோற்றத்திலே பயமுறுத்தும் ரௌத்திர குணத்தையும் கடா மீசையுடன் முக அமைப்பையும் கொண்டவர்..

இப்பொழுது கொஞ்ச காலமாக வயதின் காரணமாகவும் தந்தை,தம்பியை இழந்து தனியே நிற்பதாலும் எல்லாம் குறைந்து ஒளி க்குன்றி காணப்பட்டார்..ஆனால் மனதில் உள்ள பழி உணர்ச்சி மட்டும் சிறிதும் குறையவில்லை..தன்னால் முடியவில்லை என்றாலும் தன் காலத்திற்கு பிறகு தன் ஒற்றை பிள்ளை கண்டிப்பாக முடிப்பான் என்ற நம்பிக்கையில் இருப்பவர்…


ஏதோ யோசனையில் இருந்தவர் உள்ளே ஒலிக்கும் தன் தன் தம்பி மனையாள் வாசுகியின் குரலில் சிந்தனை கலைத்தார்…”ஏய் குழலி எழுந்திரி டி தினம் காலேஜ் போக தார் குச்சி வச்சி எழுப்ப வேண்டியதா இருக்கு “ அண்ணன், மில்லுக்கு போய்ட்டு வாரத்துக்குள்ள சாமியை கிளம்பி இருக்க சொல்லு சித்தி”ன்னு சொல்லிட்டு போயிருக்கான், அவன் போயி ஒரு மணிநேரம் ஆகுது நானும் அப்ப புடிச்சி எழுப்பிட்டு இருக்கேன் காதுல வாங்க மாற்ற”என கத்த


அதன் பிரதிபலிப்பு ஏதும் இல்லாமல் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருந்த குழலி..பிறந்த அன்னைக்கே தந்தையை பறிக்கொடுத்தவள்…ராசி கெட்டவள் என்று ஒதுக்கி வைக்கபடாமல் இந்த குடும்பத்தாலே குலசாமி என்று கொண்டாட படுபவள்…


“ஏன் வாசுகி புள்ள தூங்கட்டும்…புள்ளை நைட் டிவி பார்த்துட்டு லேட்டாதான் தூங்குனா..காலேஜ்க்கு வேணுனா லீவ் போட்டுக்கலாம்” என்று அவளின் பெரியம்மா சொல்ல..

( ஏய் கிழவி ஏதோ படிச்சிட்டு லேட்டா தூங்குனது மாறி எதுக்கு இப்ப பில்டப் பண்ற)..

“அப்படி சொல்லு என் தங்க பெரியம்மா “என அவளின் பெரியம்மா மடியில் முகம் புதைத்துக்கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள்…

“ அக்கா நீங்க 3 பேரும் கொடுக்குற செல்லம்தான்…இப்படி பண்ற “என வாசுகி அங்கலாய்த்துக்கொண்டாலும் அவ்வளவு சந்தோசம் அவரின் முகத்தில் ஒரு வருட திருமண வாழ்க்கையில் குழந்தை பிறந்த அன்றே கணவனை பறிகொடுத்த பின் இந்த குடும்பத்தின் அன்பும் ஆதரவும் இல்லை என்றால் தானும் தன் குழந்தையும் என்ன ஆகி இருப்போம் என்று யோசிக்க கூட முடியவில்லை..

பணம் இருந்தாலும் அதை கொண்டு இந்த நேசத்தை வாங்கமுடியுமா….

ஒருவழியாக கெஞ்சி கொஞ்சி குழலியை எழுப்பி அவள் கிளப்பவும் தேவ் ஆதித்யா முகத்தில் மோதும் முடியை இடது கையால் மேலே ஏற்றி வலது கையால் தன் வெள்ளை வேட்டியின் முனியை பிடுத்துக்கொண்டு வேக நடையுடன் உள்ளே வரவும் சரியாக இருக்க…


தந்தை உத்திராபதி தன் தங்கைக்கு சோறு ஊட்டிக்கொண்டு இருக்கும் காட்சி கண்ணில் பட்டது…”பெரியப்பா சிந்தாம ஊட்டுங்க “என்க..” சரி தாயி சரி தாயி “என அவரும் பதமாக ஊட்டிவிட்டுக்கொண்டு இருந்தார்…

தன் தாத்தாவிற்கு எதிராக பொய் சாட்சி சொன்னவனின் தலையை துண்டாக வெட்டி 3 நாள் வீட்டு வாசலிலையே நட்டுவைத்த ராஜாப நாடாரின் வாரிசு சின்ன பிள்ளைக்கு ஆமாம் சாமி போடுவதை பார்த்து சிரித்த படி உள்ளே வந்தான்..தேவ் ஆதித்யா..

நேற்று இரவின் அவனவளுடனான கூடலின் அடையாளங்கள் ஏதும் இன்றி ..

”ஏய் கழுதை இதையெல்லாம் நீயா சாப்பிடமாட்டியா, மாமா நீங்க கொடுங்க நான் ஊட்டுறேன் என அவரிடம் இருந்து தட்டை வாங்கியவர் தானே ஊட்டிவிட்டார்..வழக்கப்படி “ எவளோ பெரிய மனுசன உனக்கு எடுபிடி வேலை பார்க்க வைக்குற” என்று திட்டியபடியே…

உத்திராபதி “விடுத்தா..என் தம்பியேதான் சாமி ரூபத்துல பொறந்து இருக்கான் ,நான் செய்யாம யாரு செய்வா” என்றவர் ஆதியை நோக்கி “பாப்பா கொண்ட காலேஜ்விடுப்பா..நான் கோவில் திருவிழா பத்தி கோவில் நிர்வாகிக்கள்ட பேசிட்டு வரேன் என்றார்.“ சரிங்கப்பா “ என்றவன் சாப்பிட அமர்ந்தான்..


அவர் வாசலை விட்டு இறங்கியதும் அந்த கம்பீரம் எப்படிதான் வந்து ஒட்டிக்கொள்ளுமோ அவ்வளவு கம்பீரம் அவர் நடையில்…பின் ஆதி குழலியை அழைத்துக்கொண்டு பக்கத்து டவுனில் உள்ள கல்லூரி வாசலில் இறக்கிவிட்டு திரும்பி வரும்போது எதிரில் ப்ரீதா உத்திராபதி கூடிய சீக்கிரம் ப்ரீதா தேவ் ஆதித்யா.. ஆக போகும் நம் கதையின் நாயகி அவளின் இரு சக்கர வாகனத்தில்

ஆதியின் கண்கள் சூரியனை விட அதிக வெட்பத்தோடு அவளை எரித்தது…மற்றவர் என்றால் அந்த பார்வையில் பயந்து ஒதுங்கி பொசுக்கி இருப்பார்..ஆனால் ப்ரீதாவோ அவனை விட அதிக கனலை கண்களில் தாங்கி அவனை முறைத்து கொண்டு இருந்தாள்.. இருவரின் கண்களிலும் துளி நேசம்..துளி பரிச்சயம் இல்லை மாறாக பழி..பழி வேட்கை மட்டும்தான்…

இதில் எது போய்…நேற்று நடந்த காதல் போரா..இல்லை இதோ யார் முதலில் சுட்டு பொசுக்கவது என்று வீரியம் அதிகமாக கொண்டு நடக்கும் இந்த பார்வை போரா…

தொடரும்…


உங்கள் கருத்தை கிழே உள்ள லிங்கில் கொடுங்க செல்லங்ளா...


இப்படிக்கு

மிளாணி...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் இல்லா காதல் 2 :

10449



அவனை பார்க்க பார்க்க ப்ரீதாவுக்கு அடக்க முடியாத கோபம்.தனது ஸ்கூட்டியான சில்கியை திட்டி தீர்த்தாள்…வீட்டில் இருந்து கிளம்பும் நேரத்தில் ஸ்டார்ட் ஆகாமல் சதி செய்துவிட்டது..அவளும் குழலி படிக்கும் கல்லூ ரியில்தான் இளங்கலை ஆங்கிலம் படிக்கிறாள்..படித்து பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அவளுக்கு அறவே இல்லை..

இப்பொழுதெல்லாம் அவர்கள் இனத்தில் மாப்பிளை வீட்டார்கள் எல்லாம் பெண்கள் குறைந்தது ஒரு டிகிரியாவது படித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை வைப்பதாலும் ,தன் அண்ணன் குமரனின் தொல்லை தாங்காமலும் வந்து கொண்டு இருக்கிறாள்…படிப்பு அருமையாக வரும் என்றாலும் அதை பெரிதாக மானிக்காமல் ஏனோ தானோ என்றுதான் படிப்பது, பரிட்சை எழுதுவது எல்லாம்…..

அவள் அதிக பட்ச எண்ணம் எல்லாம் அவள் அப்பாவை போல இனத்திமிர் பிடித்து சுற்றுவது ,அதை பிடித்துக்கொண்டு எல்லோரையும் காயப்படுத்துவதுதான்…


கலையரசு, தேவ் ஆதித்யா மீது கூட தனிப்பட்ட பகை கோபம் என்று பார்த்தால் எதுவும் இல்லை..அவள் அப்பா உத்திராபதிக்கு பிடிக்காது அது மட்டும்தான்…அவருக்கும் அவர் இனத்துக்கும் தீராத அசிங்கத்தையும், அவமானத்தையும் அந்த குடும்பம் செய்துவிட்டது என்ற அவரின் வாய் வார்த்தையாக பலமுறை கேட்டு இருக்கிறாள்..அது போதாத தந்தை சொல்லை வேத வாக்காக நினைக்கும் அவளுக்கு என்னவே காலில் சலங்கை கட்டாத குறையாக ஆடி தீர்த்து …உத்திராபதியை தாண்டி பழி வெறியை வளர்த்துக்கொண்டு திரிகிறாள்…

ஆனால் ஆதி அப்படி கிடையாது அவர்களால் அவன் குடும்பம் பரம்பரை பரம்பரையாக இழந்தது, அனுபவித்தது ..பின்னும் சில ஆறாத மாறாத காயங்களை தன் கண்ணாலையே கண்டது என எல்லாவற்றையும் அறிந்தவன்

…அதற்காக அந்த வீட்டில் உள்ள பெண்களை கொல்லும் அளவெல்லாம் வெறி பிடித்தவன் அல்ல பெண்களின் மேல் கோபத்தை காட்டுபவன், வன்முறையை காட்டுபவன் சத்ரியனே இல்லை என்ற எண்ணம் உச்சமாக கொண்டவன்

ஆனாலும் 1 வருடத்திற்கு முன்பே ப்ரீதாவுடன் ஆன அனுபவம் அவளை அடியோடு வெறுக்க வைத்தது…

(யம்மா ரைட்டரு போதும்…அதுங்க ரெண்டும் ரொம்ப நேரமா பஸ்டாப்பில் முறைச்சிக்கிட்டு நிக்குது அதுங்கல போய் ரிலீஸ் பண்ணு அருக்காம..)


இந்த வெளங்கா பய மூஞ்சிலலாம் முழிச்சிக்கிட்டு காலேஜ்ல போய் படிச்சு கிழிச்ச மாதிரிதான்” என்று நினைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்லலாம் என முடிவு செய்தாள்..,

வீட்டிற்குச்செல்லும் பஸ்ஸிற்கு ரோட்டை கிராஸ் செய்ய வேண்டும் என்பதால் ரோட்டில் இறங்கி இரண்டு அடி வைக்க ,பின் நின்று எதையோ யோசித்தவள் சுற்றும் முற்றும் ஒரு சோதனை பார்வை பார்த்து எதையோ முடிவு செய்து அவன் அருகே வரபார்க்க ..

இவள் இப்படி ஆழ்ந்த யோசனையில் இருப்பதால் பின்னே ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக வரும் தண்ணீர் லாரி ப்ரீதாவின் கருத்தில் கவனத்தில் எதிலும் பதியவில்லை..

ஆதியும் கடந்த கால காயங்களை நினைத்து நெற்றி புடைக்க வந்த கோபத்தை அடக்கிய படி ஆக்சிலேட்ட்டரை உர் உர் என்று சத்தம் கொடுத்த படி வேக மூச்சுடன் நின்றதால் லாரியை கவனிக்கவில்லை..

10 வினாடி தூரத்தில்தான் லாரி வருவதை பார்த்தது ,பார்த்தவுடன் அனிச்சை செயலாக அவளின் துப்பாட்டவின் முனியை பிடித்து அவன் நிற்கும் புறமாக கீழே தள்ளினான்…

ஆதி இழுத்த வேகத்தில் அவள் கைப்பை, கையில் வைத்து இருந்த கத்தி எல்லாம் திசைக்கு ஒன்றாக விழ அவளும் ஒரு புறமாக சரிந்தாள்..

ஆதி அனிச்சை செயலாய் செய்தானே தவிர மாறாக அது அவள் என்றோ ,உத்திராபதியின் வாரிசு என்றோ அவன் மூளை அறிவுறுத்தி இருந்தாலோ அவளை காப்பாற்றி இருப்பானா என்பது சந்தேகம் தான்.. காப்பாற்றி இருப்பான் என ஒரு இருபது சதவிகிதமும் லாரி அடித்து தூக்கி எரியும் போது நிறைவான பார்வையோடு பார்ப்பான் என்று ஒரு எண்பது சதவிகிதமும் வைத்துக்கொள்ளலாம்…

எனவேதான் தான் அவளை காப்பாற்றிவிட்டோம் என்று மூளை அறிவுறுத்திய அடுத்த நொடி அவள் துப்பட்டாவை தொட்ட தன் கையை கொதித்து கிடந்த சைலன்சரில் வைத்தான்..

கீழே விழுந்த ப்ரீதாவும் ஒரு நொடியில் தன் உயிர் போய் இருக்கும் ,தன்னை காப்பாற்றிய தெய்வமாகவோ ,இல்லை தன்னை தொட்ட கையை இப்படி நெருப்பில் பொசிக்கி கொள்கிறானோ அவ்வளவு பகையாக தன் மேல் என வருத்தமாகவோ, ஆற்றமையாகவோ பார்க்காமலே “ச்சை தப்பித்துவிட்டானே “என்ற எண்ணத்தில்தான் பார்த்தாள்..

ஆம் தான் பாதுகாப்பிற்காக வைத்து இருந்த கத்தியை அவன் தொண்டையில் இறக்கத்தான்... சென்று கொண்டிருந்தவள் திரும்பினாள்…தன் தந்தை இவன் தலைக்கும் இவன் குடும்பத்திள் உள்ளவரின் தலைக்கும் ஒரு விலை வைத்து இருப்பதை ப்ரீதா அறிவாள்..இப்பொழுது இவனை கொன்று அந்த செய்தியை தன் அப்பாவிடம் சொன்னாள் எவ்வளவு சந்தோசப்படுவார் என்ற எண்ணத்தில் அவனை முடிக்க முடிவு செய்துதான் திரும்பியது…

உத்திராபதி என்றாள் அவளுக்கு கொள்ளை பிரியம் அவர் முகத்தில் தெரியும் சந்தோசத்திற்காக எதையும் செய்பவள்..குழந்தையில் அவள் தன்னை தேவச்சி, தேவச்சி என்று விளையாட்டாக சொல்லும்போதெல்லாம் அவர் தன் மீசையை முறுகிக் கொண்டி கண் நிறைய பெருமையை கொண்டு என் பொண்ணு என மார்தட்டி கொள்ளவதை பார்த்து பார்த்து ,அதுதான் அப்பாவின் பிடித்தம் என்று அதை மட்டுமே அதிகமாக வளர்த்து கொண்டவள் கொள்பவள்..


அவள் இன்று இப்படி இருப்பதற்கு முக்கிய காரணமே அவளின் தந்தை உத்திராபதிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

..பாவம் தான் உயிருக்கு மேலாய் நேசிக்கும் தன் தந்தையாலேயே பின்னாளில் தன்னை கொல்வதற்கான திட்டம் அரங்கேற போவது என்றோ,அதை தெரிந்தே தான் தயாராய் செல்ல போவோம் என்றோ இப்பொழுது தெரியாதவள்..

விழுந்து வேகமாக எழுந்தவள் அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு அவன் தொட்ட துப்பட்டாவை கீழே எரிந்து பக்கத்தில் பொட்டி கடையில் உள்ள தீப்பெட்டியை எடுத்து தீ வைத்தவள்… அதன் பின்னே… கீழே சிதறிய தன் கைப்பையை எடுக்க சென்றாள்..

உன் கை என் மேலே பட்டு இருந்தாள் என்னையும் இப்படித்தான் கொளுத்தி கொல்வேன் என்று சொல்லாமல் அவனிடம் சொல்லி அவன் தன் கையை சுட்டு கொண்டதுக்கு பதில் சொன்னாள்…

அதை பார்த்தா ஆதிக்குமே கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கும் நெருப்புக்கும் இவளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை …

என்ன அழுத்தம் இவளுக்கு இவ்வளவு திமிர்..உயிரை காப்பற்றியவன் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல்… கோபம் மட்டு படாமல்.. அவளை நோக்கி ”உன் உயிர் கூட நான் காப்பாத்தி கொடுத்த பிச்சைதான் .மானம் ரோஷம் உள்ளவளா இருந்தா நீயும் அந்த நெருப்புலையே விழுந்து செத்துடு” என கூறிய தனது பைக்கை நோக்கி திரும்ப

கீழே குனிந்து கைப்பையை எடுத்துக்கொண்டு இருந்தவள் அவன் குரலில் திரும்பி. அவனை நோக்கி ஏளனமாக சிரித்தவள் “ என்னது என் உயிரை நீ காப்பாற்றினாய…நல்ல காமெடி.. நீ என்னை பிடிச்சி இழுக்கல நான் சாகுற ஒரு நொடிக்கு முன்னடி இந்த கத்தியை உன் கழுத்துல 10 இன்ச் இறக்கிருப்பேன் ,உன் உயிரைத்தான் நீ காப்பாத்திகிட்ட,இப்ப உன் உயிர்தான் நான் போட்ட பிச்சை” என்றவள் கீழே சிதறி கிடந்த எதையும் எடுக்காமல் விறுவிறுவென்று ரோட்டை கிராஸ் செய்து ஆட்டோவை மறித்து ஏறி சிட்டாக மறைந்தாள்..

ஒரு நிமிடம் ஆதியே அவளின் வார்த்தையில் அதிர்ந்துவிட்டான் வீரம் துணிவு எல்லாம் உடல் வலிமையலோ இல்லை பாலினத்திலோ இல்லை என்ற உணர்த்தியதால்..

ஆனால் அவனை கொல்ல வருவாள் என்ற கோணத்தில் கிஞ்சத்திற்கும் அவன் யோசிக்கவில்லை.., குள்ளமாக .. ஒடிசல் தேகத்தோடு அடர்ந்து பரந்து கிடக்கும் அவள் கூந்தலின் எடையை கூட தாங்க முடியாமல் 45 48 கிலோ இருப்பவள் 5 நிமிடத்தில் இவ்வளவு பெரிய திட்டம் தீட்டுவாள் என்று..

நினைக்க நினைக்க அவள் மேல் உள்ள கோபம் வெறுப்பு இன்னும் அதிகமாக பெண்ணா இவள் ராட்சசி, என மனதில் உரக்க கத்திக்கொண்டு அந்த இடம்விட்டு அகன்றான்..

இப்படி வெறுப்பில் இருப்பவர்களை விதி ஏன் ஒன்று சேர்க்க நினைக்கிறது … அதன் கட்டாயம் என்ன..காலமும் கதையும் தான் முடிவு செய்ய வேண்டும்.. …

(அடேய் அப்ப நேத்து நைட் கஜக்க..முஜாக்காலம் பண்ணது என்ன டா…ஒன்னும் புரியல. வேற யாரும் டிவின்ஸா இருப்பாங்களோ..….)

இவர்கள் இருவரையும் 100 அடி தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண் உருவம் ஆதி மற்றும் ப்ரீதாவின் செய்கையை கண்டு திருப்தியாய்..நிறைவாய்..நெஞ்சம் எல்லாம் சாந்தமாக புன்னைகைத்து கொண்டது.. இரு குடும்பங்களின் அழிவும் இன்னும் கொஞ்ச நாளில் என்பதை போல



ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தவளை வரவேற்றது அவளின் அப்பா, அவளின் தோற்றத்தை பார்த்தவுடனே பதறியவர் “ ஏன் டா ஆயி என்ன என்ன” என்று கேட்க..அவளும் நடந்ததை கூற அவரின் முகத்தில் அவ்வளவு கோபம் தன் பெண் பிள்ளை உயிர் பிழைத்து வந்துவிட்டாலே என்ற ஆசுவாசத்தை விட வாய்ப்பு கிடைத்தும் விட்டு விட்டாலே என்று…” ஏன் ஆயி இப்படி பண்ணிடீங்களே…முடிச்சி இருக்கலாம்லா அப்பாவை தாண்டி யாரு என்ன பண்ண முடியும்”என ஆதங்க பட..

”கவலைப்படாதீங்க அப்பா அடுத்த தடவை சான்ஸ் கிடைச்சா முடிச்சிறேன் என அதை இதை பேசி அவர் முகத்தில் சிரிப்பையும் ,கர்வத்தையும் பார்த்த பிறகே அந்த இடம் விட்டு அகன்றாள்…


அவர்கள் இருவர் பேசுவதையும் கேட்டு கொண்டே வந்த அவளின் அண்ணன் குமரன் “ஏன் அப்பா அவள் மனசுல இப்படி நஞ்ச விதைக்குறீங்க..இன்னொரு வீட்டுக்கு வாழ போற பொண்ணு..அவளை இப்படி கொலை காரியா போக சொல்றீங்க.நீங்க இப்படி ஜாதி ஜாதின்னு சொல்லக்கிட்டு பண்ற அநியாயத்தையே நான் நிறுத்த சொல்றேன். நீங்க என்னன்னா அவளுக்கு என்னென்னே தெரியாத பகைக்கு அவளுக்கு கொம்பு சீவி கூட்டு சேக்குறீங்க…

இந்த ஊருல எல்லா கலுசடைகளையும் உங்க சொல்ல கேட்குற கிணற்று தவளையா மாத்தி வச்சு இருக்கீங்க…

சாகும் போது இதெல்லாம் உங்க கூட வரவா போகுது ஏன் அப்பா “என கத்த..

“ சாகும் போது வராது மகனே வாழும் போது வேணும் …என் மூச்சி நிக்கிற வரைக்கும் என் இந்த அடியாளத்தை மாத்திக்க மாட்டேன், என்ன சார்ந்த்தவங்களையும் மாத்திக்க விடமாட்டேன்..உன்னை மாதிரி பொம்பளயா இல்லாம என் பொண்ணு வீரமா இருக்குறத நினைச்சி எனக்கு பெருமையாதான் இருக்கு.. இதுக்கு எதுக்கு நான் கவலை படனும் “என்க..
.
அவரை நோக்கி பரிகாசமாக சிரித்த குமரன் “என்னை நீங்க பொட்டைன்னு சொன்னா கூட கேவலமான இந்த அடையாளம் எனக்கு வேணா” என்றவன்


“அம்மும்மா…அம்மும்மா என்ற தங்கையை தேடி சென்றான்..குமரன் ஜாதி மதம் எதிலும் துளி கூட நாட்டம் இல்லாதவன் அப்படியே அவள் தங்கைக்கும் அப்பாவிற்கும் நேர்பதம்.. அந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்கிறான்..எல்லாரையும் சமமாக நடத்துபவன்..என்றாவது இந்த எண்ணத்தை குறைந்த பட்சம் தன் குடும்பத்தில் இருந்தாவது விலக்க வேண்டும் என்று போராடுபவன்…

அதில் ஒரு காரணம் வேற்று இனத்தை சார்ந்த அவனின் காதலி இனியாழ்..ஒரு காரணமே தவிர அவளை பார்ப்பதற்கு முன்பு இருந்தே இந்த கொள்கையில் உறுதியாக இருந்தவன்..

(விளங்கிடும் குடும்பமே குழப்பத்துக்கு பொறந்த மாதிரி பண்ணுதுங்க.)

“ஏன் அண்ணா கத்துற “ என்ற படியே வந்து சேர்ந்தாள் ப்ரீதா ..”என்ன அம்மும்மா தேவை இல்லாத விஷயத்துல எல்லாம் தலையிடாதன்னு எத்தனை தட உன்கிட்ட சொல்றேன்.”

அப்பாவுக்கு பிடிக்காதவங்கள கொலை செய்றது எனக்கு எப்படி தேவை இல்லாதது ஆகும் அண்ணா ..எல்லாம் தேவை உள்ளதுதான்”என்றாள்..


“அவங்க குடும்பத்துக்கும் நம்ப குடும்பத்துக்கும் என்ன பகைன்னு உனக்கு தெரியுமா” என குமரன் கேட்க,”தெரியாது” என்றாள்..

என்ன எதுன்னே தெரியாம எப்படி நடு ரோட்டுல அவனை கொல்லபார்த்த “என்க….”

அதெல்லாம் எனக்கு தேவை இல்லை அண்ணா, அப்பாவுக்கு பிடிக்கலனா எனக்கும் பிடிக்காது அவ்ளோதான்” என நகர போக..

அவள் கையை பிடித்து”பாப்பா அவங்க குடும்பத்துக்கும்..நம்ப..” என சொல்ல ஆரம்பித்தவனின் வாயை மூடியவள்..” எனக்கு தெரிய வேணாம்டா எப்படியும் அப்பாவுக்கு எதிராதான் சொல்லுவ..அத நான் நம்பவும் மாட்டேன், எனக்கு தெரியவும் வேண்டாம்” என்றுவிட்டு சென்றாள்..


அவள் செல்லும் திசையே வேதனையோடு பார்த்தான் சின்ன வயதில் எல்லோரையும் அரவணைத்து கொள்ளும் அவனின் குட்டி தங்கையை தவறவிட்ட அண்ணனாய்…

******

அந்த பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஒரு 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் உடம்பில் ஒரு இடம் விடாமல் மருத்துவ உபகரணங்களால் கண்காணிக்கப்பட்டு அசைவில்லாமல் தன்னை, தன் உலகத்தை, தன் காதல் மனைவியை என எல்லாம் மறந்த நிலையில் படுத்து இருந்தான்..

அவன் அருகிலே அவனை விழி கொட்டாமல் பார்த்துக்கொண்டு அன்றலர்ந்த மலர் போல விழிகளில் சோகத்தை தாங்கி,குன்றாத அழகோடு ,குறையாத காதலோடு தன் கணவனை பார்த்து இருந்தாள் இனியா…

இனியா,இனியன் பெயர் பொருத்தம் இருந்து என்ன..வாழ்க்கை பொருத்தமாக இல்லையே .


“இனியன் எப்படி எப்படியோ தொடங்க இருந்த நம் வாழ்க்கை இப்படி பாதிலையே முடிஞ்சிட்டே..கண்டிப்பா நீங்க கண் முழிக்கும் போது அந்த 2 குடும்பத்துல எல்லாரையும் அழிக்காம விடமாட்டேன்…” என சத்தமாக பேசினால் அவன் காதில் விழாது என்பதால் மனதோடு மௌனமாக பேசிக்கொண்டு கண்ணீர் வடித்தாள்..…

தொடரும்…

 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்...

சர்பிரைஸ்....

#காதல்இல்லாகாதல்

நான்தான் உங்க மிளாணிஸ்ரீ...காதல் இல்லா காதலோட அடுத்த அத்தியாயம் போட்டாச்சி படிச்சி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு ஒரு சூ.. சொல்லுங்க...

திங்கள் கிழமை வரேன்னு சொல்லி இருந்தேன் அன்னைக்கு நீங்க எல்லாம் தீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிட்டு தூங்கிட்டு எபி யாரும் படிக்க மாட்டிங்க அப்பறம் நானும் என் எபியும் அழுகுவோம்..

அதனால இன்னைக்கே உங்களை பார்க்க வந்துட்டோம்...படிச்சிட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க லாஸ்ட் எபிக்கு லைக் கமெண்ட் போட்ட எல்லோருக்கும் என் நன்றிகள்...

இனி அடுத்த நெக்ஸ்ட் நெக்ஸ்ட் சண்டே இல்லை மண்டேதான்...

In advance happy and safe deepavali...


உங்கள்

மிளாணிஸ்ரீ
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
13581




காதல் இல்லா காதல் :



அத்தை எங்க இருக்க ", அத்தை என்று தன் வீட்டிற்கு அடுத்த தெருவில் இருக்கும் தன் தந்தையின் தங்கை வீட்டிற்கு தெருவே அலறும் படி பிரசன்னம் ஆனால் நம் கதையின் நாயகி ப்ரீதா , தமிழரசி , உத்திராபதியின் ஒற்றை தங்கை , ஒரே ஊரில் ஒன்று விட்ட அத்தை பையனை கட்டிக்கொண்டு இருப்பவர்,

பிரீதாவின் எந்த சத்தத்திற்கும் பதில் கொடுக்காமல் அடுக்களையில் சோகமே உருவாக அமர்ந்து கொண்டு இருந்தார் தமிழரசி , இருக்காதே பின்னே ஒற்றை ஆசை மகள் எங்கு இருக்கிறாள் , எப்படி வாழ்கிறாள் என்று தெரியவில்லை, கணவனோ பக்கவாதம் வந்து படுத்த படுக்கை , இதில் எங்கு இருந்து நிம்மதி கொள்வது ...பிரீதா கத்தி கத்தி பார்த்துவிட்டு நேராக அடுப்படி சென்று பார்க்க அங்கே தான் எங்கயோ வெறித்த படி அமர்ந்து இருந்த அவரை உலுக்கி நிகழ்காலம் கொண்டு வந்தாள் நம் இனப்போராளி ,

பின் தன் சிந்தை கலைந்தவர் " வா சாமி " என்று சுரத்தே இல்லாமல் சற்று கோபமாகவும் வருத்தமாகவும் ஒலித்தது அவரின் குரல், அவரின் கோபத்திற்கு காரணம் தெரிந்தாலும் பெரிதாக அலுத்துக்கொள்ளாமல் எப்போதும் போல சமைத்து வைத்துவிட்டு மேல் வேலை செய்பவர் எல்லோருக்கும் வேலை கொடுத்துவிட்டு தினப்படி சம்பளம் கொடுப்பவர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு மாமாவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அத்தையின் அருகில் சாப்பாடு தட்டுடன் அமர்ந்தார்,

அவளின் மாமா செல்வம் உடம்பு முடியாமல் படுத்த காலமாய் குமரனும் இவளும் தான் இவர்களின் வரவு செலவை பார்ப்பது ,குமரன் தோப்பு, வெளி வேலைகளை பார்த்துக்கொள்வான் , பிரீதா வேதத்தின் வரவு செலவுகளை பார்த்துகொள்ளவாள் ,இரண்டு வயதில் மஞ்சள் காமாலை காரணமாக தன்னையும்
தன் அண்ணனையும் தனியாக அவள் அன்னைவிட்டு இறந்து சென்றதில் இருந்து இன்று வரை தங்களை தாயில்லாத குறை தெரியாமல் வளர்த்தவர் என்பதால் அத்தையின் மீது தனி பிரியம் பிரீதாவிற்கு,

யார் கேட்டாலும் அம்முவுடன் சேர்த்து மூன்று பிள்ளைகள் என்று சொல்லியே அனைவரிடமும் சொல்வார், அத்தை மகள் அம்முவின் மீது அவ்வளவு கோபம் அவளுக்கு , அவளின் பிறப்பின் குணம் " ஐயோ எங்கு இருப்பாளோ எப்படி இருப்பாளோ என்று பாசத்தில் விஞ்சினாலும், அவளின் ஜாதிக்கொள்கை எங்கயாவது எப்படியாவது கெட்டு ஒழியட்டும் " என்று அந்த வெறுப்பு அவளின் அந்த பாசத்தை விஞ்சிவிட்டது ,

தமிழரசி அவள் கொடுத்த சாப்பாட்டை அளந்து கொண்டே " அம்முலு அம்முவை பத்தி ஏதாவது தெரிஞ்சதா டி ,என்க, பிரீத்தா கோபமாக " அத்தை அவளை பத்தி பேசாதீங்க நம்ம குடும்பத்தை இவளோ அசிங்க படுத்தி இருக்கா ,மாமா இப்படி இருக்குறத்துக்கு காரணமே அவள் தான் , அவள் கையில கிடை ச்சா நானே அவளை நானே கொன்னுடுவேன் என்று சொன்னவள் அத்தையின் அதிர்ந்த பார்வையில் அப்படியே கடைசி செய்தியை விழுங்கிவிட்டு அத்தை இடத்தை விட்டு எ அகன்றாள் , தனக்கு கடவுள் வைத்து இருக்கும் கணக்கு என்னவென்று தெரியாமல் ....


கீழையில் தேவின் வீட்டிற்கு வெளியில் பஞ்சாயத்திற்காக போடப்பட்ட சிமெண்ட் பெஞ்சிலும் , பிளாஸ்டிக் சேரிலும் ஊரின் பெரியமனிதர்கள் அமர்ந்து இருக்க , நடுநாயகமாக அமர்ந்து இருந்தார் கலையரசு, வீட்டின் பெண்கள் இருவரும் உள்ளே இருக்க, குழலி இன்னும் காலேஜில் இருந்து வரவில்லை , தேவும் நேற்று பிரீத்தாவை பார்த்துவிட்டு அவளின் மீது வெறுப்புடன் மில்லிற்கு சென்றவன் காய் காயத்திற்கு மருந்திட்டுவிட்டு வீட்டில் வேலை என்று சொல்லிவிட்டு மில்லிலே தங்கிவிட்டான் ,

எப்பொழுதும் தம்பிக்கோட்டையில் நடக்கும் எந்த கலவரமோ, சண்டையோ , ஏன் கொலை கூட பஞ்சாயத்தில் தான் பேசி முடிக்கப்படும் , ஊருக்கு ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருந்தாலும் அதன் பயனோ ,விளைவுகளோ இங்கு தேவை பட்டது இல்லை, அந்த நான்கு ஊரின் பஞ்சாயத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் அந்த ஊரை தான் தாண்டி வெளியில் சென்றதில்லை,

அப்படியே சிறை தண்டனை அவசியம் என்னும் பட்சத்தில் இவர்கள் முடுவு செய்யதால் தான் , போலீசோ
நீதிமன்றமோ உள்ளேவரும்,,

அப்படி ஒரு பஞ்சாயத்துதான் இங்கே நடந்து கொண்டு இருக்கிறது ,உடம்பெல்லாம் ரத்தத்தோடு , கையில் ஒரு வெட்டி தனியாக உள்ள கையோடு ஒருவன் நிற்க அங்கே சல சல வென்று ஒரே சத்தம் , கரணம் இதுதான் பக்கத்து ஊர் அதாவது பிரீத்தாவின் ஊரில் உள்ள ஒரு பையன் வயல் பம்பு செட்டில் குளிக்கும் தேவ் ஊரின் பெண்ணின் மாற்று உடையை எடுத்து வைத்துக்கொண்டோதோடு இல்லாமல் ஏற்றி கட்டிய பாவாடையோடு இருக்கும் அந்த பெண்ணை போட்டோ எடுப்பதை போல பாசாங்கு செய்ய அதை பார்த்த தேவ் ஊரின் இளைஞன் இளநீர் வெட்ட வைத்து இருந்த அருவாளை எடுத்து அவனின் கையை வெட்டி எடுத்துக்கொண்டு நேராக இங்கே வந்துவிட்டான் ,

இப்படி இரு ஊர் காரர்களும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இப்படி சின்ன சின்னதாய் ஒருவரை ஒருவர் சீண்டி கொள்வதும் , கை கலப்பு ஆவதும் இயல்பே , இருந்ததும் கீழை ஊரில் இவ்வளவு கீழ்த்தனமான வேலையை யாரும் செய்யவில்லை , கொலை செய்தால் கூட காப்பாற்றும் தேவும் கலையரசும் இந்த மாறி கீழ்த்தனமான விஷயங்களை அனுமதிப்பது இல்லை ,

எப்படியோ அந்த ஊர் அசிங்க பட்டால், கலையரசு குடும்ம் அசிங்கப்பட்டால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கும் உத்திராபதி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதோடு மட்டும் இல்லாமல் சப்போர்ட்டும் செய்வார், இந்த மாதிரி விஷயங்களை தன் மகளின் காதிற்கு வராமலும் பார்த்துக்கொள்வார்.....


ஒருவழியாக பஞ்சாயத்தை முடித்துவிட்டு கலையரசு உள்ளே செல்ல குழலி அவளின் பெரியப்பாவின் முன் ஆஜராக , அடுத்த பஞ்சாயத்திற்கு ரெடி ஆனார் கலையரசு, பெரிப்பா ஏன் இப்படி பண்றீங்க ,
அவங்க கோபத்துக்கு இப்படியே கொம்பு சீவி விட்டா என்ன அர்த்தம் ,எதுக்கு இப்ப போலிஷ் கேஷ் இல்லாம மருது அண்ணனை காப்பாத்துதுனீங்க , என்க

கலையரசு " இல்லத்தா அவனுங்க பண்ணது தப்புதான , பாவம் இவன் குடும்பஸ்தன், 4 மாத கை குழந்தை வேற , ஏதோ பொம்புள புள்ளைய தப்பா படம் எடுக்குறான்ற கோபத்துல பண்ணிபுட்டான் , என்க

"குடும்பம் குட்டி இருக்கின்ற நினைப்பு அவங்களுக்கு இருக்கணும் பெரிப்பா ", என இவளும் அன்னை வாசுகி பேசாத என அதட்டுவதை கூட பொருட்படுத்தாமல் கத்த ,
கலையரசுவோ "அந்த நினைப்பு இருந்தாலும் அவங்க அப்படித்தான் பண்ணுவாங்கடா ராஜப்பன் வம்சம் காப்பாத்தும்ன்னு நம்பிக்கையில ,அவன் தப்பு பண்ணி இருந்தா நானே அவனுக்கு தண்டனை கொடுத்து இருப்பேன் டா, ஒரு ஆம்பளையா யாரை இருந்தாலும் அந்த இடத்தில் அதா செஞ்சி இருப்பாங்க " என பதமாக கூற ,

இதற்கும் மேலும் எதுவும் பேசாதே என வாசுகி அவளின் வாயை பொத்த, குழலியோ பொத்துக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு “ ஏன்பா அவங்களை பகைச்சிக்கிறீங்க , நான் அப்பா இல்லாம இருக்கிறது மட்டும் இல்லாம என் பெரியப்பா அண்ணன் கூட இல்லாமல் இருக்கணுமா, ஏற்கனவே இப்படி ஒரு பெண் விஷயத்துல தான் பொறந்த அன்னைக்கே அப்பாவை பறிகொடுத்துட்டு , 25 வயசுல என் அம்மா புருஷனை இழந்திட்டு நிக்கிறாங்க , அந்த உத்திராபதி ஒரு கேடு கெட்டவன் பெரியப்பா அவன் பகை நமக்கு வேணாம் என்னும் சொல்லும் போதே ஒரு முகம் அவளின் கண் முன்னே வந்து போக கண்ணீருடன் முடித்தாள்…

இது எப்பொழுதும் பஞ்சாயத்து நடக்கும் போது நடக்கும் விஷயம்தான்..ஊர் தலைமை , ஊரின் நாட்டாமை,நியாயம் சொல்வது எல்லாம் புலி வாலை பிடித்த கதைதான் விடவும் முடியாது,விடாமல் இருக்கவும் முடியாது , தாம் சரி செய்வோம், தங்களிடம் நியாயம் கிடைக்கும் என்று வருபவர்களிடம் என்ன சொல்வது , ஊர் நியாயம் சொல்வதும்,நீதி சொல்வதும் அத்தனை ஆத்மார்த்தமான செயல் அதை எப்படி இந்த குழந்தை பிள்ளையின் அழுகை நியாயமாவே இருந்தாலும் கேட்பது ,என அனைவரும் நினைக்க குழலியை ஒரு வழியாக சமாதானம் செய்து தூங்க செய்தனர்…

அந்த இரவு மணி இரண்டை கடக்க தேவ் ஆதித்யாவின் புல்லட் போக கூடாத ஊரை நோக்கி போய் கொண்டிருந்தது..ஆம் மேலையை நோக்கி பிரீதாவின் வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தது..கண்கள் முழுக்க மயக்கத்தை சுமந்து கொண்டு, காதலை காமம் என எந்த வகையிலும் சேர முடியாத முட்டி மோதிக்கொண்டு வரும் உணர்வை சுமந்து கொண்டு…
பைக் பிரீதாவின் வீட்டிலிருந்து 100 அடி தொலைவில் தள்ளி இருக்க எட்டு முழ வேஷ்டியை எடுத்து மடித்து கொண்டு அரக்கு நிற முழக்கை சட்டையை ஏற்றிக்கொண்டு வேக வேகமாக யார் இருக்கிறார்கள் இருந்தாலும் கவலை இல்லை என்னும் நினைப்பு போல , முல்லை கொடியின் அறையை வேகமாக அடைந்தது இந்த கொழு கம்பு..
அங்கே வெள்ளை நிலா,வெண்பட்டு தேவதை, விரசம் வீசும் பனி காற்று, விழி பேசும் வீணை மீட்டுபவனுக்கு ஏதுவாய் கட்டிலில் சயணித்து இருந்தது…
வந்தவன் கதை படித்தானா, காவியம் படைத்தானா, கவிதைக்கு எதுகை மோனை ஏற்றம் இறக்கம் என இயல் படைத்தானா தெரியவில்லை..அங்கே கண்ணில் அழைப்போடு கிடக்கும் அந்த குந்தவியை விழி முதல் விரல் நகம் கொண்டாடி தீர்த்தான்..விடிய விடிய விளையாண்டு விதியும் இவர்களும் ஓய்ந்து கிடக்க..

விடியும் தருவாயில் உறங்கும் அவள் மணிவயிற்றில் ஒரு முத்தம் வைக்க வெற்று உடம்பு கூசி சிலிர்க்க எரியும் நெருப்பும், இறை தேடும் கழுகும் குழந்தையென ஒரு போர்வையில் உலகம் மறந்த கிடந்தனர்

மேலை கட்டில் இப்படி ஓய்ந்து கிடக்க ,அங்கே மருத்துவமனையில் ஒய்யாரமாக இனியா குத்துயிரும் கொலை உயிருமாய் கிடக்கும் தன் கணவன் இனியனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள்..
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்.

காதல் இல்லா காதல் அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்..

படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க அடுத்த அத்தியாயம் எப்பன்னு சரியா சொல்ல முடியாது ஆனால் வாரம் ஒரு அத்தியாயம் தர முயற்சி பண்றேன்..

மன்னிப்பு மன்னிப்பு இதை தவிர வேறொன்றும் இல்லை..

இப்படிக்கு

மிளாணிஸ்ரீ
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் இல்லா காதல் 4 :

13649



13650


தேவ் பிரீதாவின் வீட்டில் இருந்து வந்து கொண்டு இருந்தான்..ஒரு 6 மணி இருக்கும் மனம் முழுக்க குழப்பம் மிஞ்சி இருக்க அதை தாண்டி ஒரு இதம் பரவி இருக்க அந்த காலை வேலையின் சுகந்தமான காற்றை அனுபவிக்க பிடிக்காமல் கடமையே என வந்து கொண்டு இருந்தான்…


கொஞ்சம் நாட்களாகவே மனம் இப்படித்தான் சொல்ல முடியாத உணர்வில் சிக்கி தவிக்கிறது..அந்த உணர்வு பிடித்த உணர்வா இல்லை பிடிக்கவில்லையா என தெரியவில்லை.. யோசிக்க யோசிக்க அவனுக்கு குழப்பம்தான்..


ஆனால் ஒன்று நெஞ்சை கீறியும்விட்டு மருந்தும் விடுகிறது அந்த உணர்வு .


நேற்று பிரீத்தாவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் சுட்டுக்கொண்ட கையின் எரிச்சல் வேறு பயங்கரமாக வலி இருக்க மெதுவாக சென்று கொண்டு இருந்தான்..

தம்பிக்கோட்டை ஊரை ஒட்டிய சாலை பகுதி ஹை வேஷ் என்பதால் அங்கு உள்ள நான்கு ஊரின் நுழைவாயில் செக் போஸ்ட்டுடன் தான் காணப்படும்…இவன் செல்லவே அங்கு உள்ள போலிஷ் லஞ்சத்திற்க்காகவே இல்லை அது தேவ் என்பதற்காவோ அவனை மறைக்க என்ன என்பது போல தேவ் ஆதித்யாவும் நின்றான்..

“ஹெல்மெட் எங்க “, பாஸ்போர்ட் எங்க,என ஒண்ணு ஒண்ணாக கேட்க அவனிடம் எதும் இல்லை..நேற்று வண்டி சர்வீஸ்க்கு கொடுக்கும் போது எடுத்து வைத்தது எடுத்து வைக்க மறந்துவிட்டான்…


பைக்கில் இருந்து இறங்காமல் கையை குறுக்காக கட்டிக்கொண்டு அந்த போலிஷ்காரனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்து“ எதும் இல்லை”, இப்ப வழிய விடு நாளைக்கு காட்டுறேன் “ என பைக்கை எடுக்க போக , அதற்குள் அந்த போலீஸ்காரர் அவனின் பைக்கின் சாவியை புடுங்க தேவ் கோபத்தின் உச்சிக்கு போக ,


அந்த போலீஸ்காரரின் மணிக்கட்டில் ஒரு சுண்டு சுண்டுவிட சாவி கை நழுவி அவனிடம் விழ,


“ போலீஸ்காரன் மேலையே கை வைக்குறியா” என அந்த போலீஸ்காரன் தேவ்வின் சட்டையை பிடிக்க அவ்வளவுதான் தேவ் ஆதித்யாவின் கொஞ்ச நஞ்ச நிதானமும் பறந்தது..


வேகமாக பைக்கை விட்டு இறங்கியவன் பக்கத்தில் வைக்கப்பட்டு இருந்த வேலிக்கான போத்தை இடது கையால் ஒரே பிடுங்காய் பிடிங்கி வலது கையால் வேஷ்டியின் நுனியை பிடித்து கொண்டு அடி வெளுத்துவிட்டான்…

மற்ற போலிஸ் வந்து தடுக்கும் வரை ..
கோபமாக கையில் உள்ள களியை கீழே போட்டவன்” உங்க போலிஷ் ஸ்டேஷன் இருக்கிறது,இதோ இந்த போலிஷ் பூத் இருக்கிறது எல்லாம் என் இடம் கொட்டையா பிரிசிக்கிட்டு ஊருக்கு ஓடிரனும் இன்னும் ஒரு மணி நேரத்துல..

இந்த ஊருக்கு கேஷ் வராததால கவேர்ட்மெண்ட் ஸ்டேஷன் வேணானு சொல்லிட்டு சம்பளத்தையும் நிறுத்திட்டு,சரி பக்கத்து ஊருகாரணுவ மாத்தி எங்கும் போட்டுட்டா குடும்பம் குட்டியை விட்டுட்டு தூரமா இருக்கணும்னு பேசி சரி பண்ணி பொழைப்பை கொடுத்தா என் மேலையே கை வைப்பியா,வெதுப்பிவிட்ருவேன்”,


என்ன அந்த மேலை ஊருகாரனா நீ என் மேலை கைவச்சா உன் ஊரு பெரிய மனுஷன் எதும் தரேன்னு சொன்னாரா, போய் சொல்லு தேவ் ஆதித்யா…….,என்ன அடிச்சி தொங்க விட்டுட்டாருன்னு..என சொல்லி சென்றுவிட்டான்..


அதும் உண்மை என்பதால் அடிவாங்கிய போலிஸ் அமைதியாக நின்றான்..ஆம் கலையரசின் குடும்பத்தை எந்த அளவிற்கு அவமானத்திற்கோ,கோபத்திற்கோ ஆள் ஆக்குகிறார்களோ அந்த அளவு சம்மந்த பட்டவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் உத்திராபதி குடும்பத்தில் இருந்து..நேற்று கை வெட்டப்பட்டு கடப்பவனும் இதில் அடக்கம்..


இவளவு பெரிய எதிர்வினை இந்த சின்ன விஷயத்துக்கு தேவை இல்லைதான் இருந்தும் ஏதோ யார் மேலையோ உள்ள கோபத்தை இங்கே காட்டிவிட்டான்..

மில்லிற்கு சென்று அங்கேயே குளித்து ரெடியாகி வீடு செல்ல அங்கே குழலி மூஞ்சை தூக்கி மூன்று முழம் வைத்துக்கொண்டு காலேஜ் கிளம்பி கொண்டு இருந்தாள் நேற்று நடந்த விசயத்திற்கு, இவள் எவ்வளவு முயன்றாலும் ஊரின் பொறுப்பிலிருந்தோ ,அந்த வீணா போன ஜாதி கோட்பாடுகளிலிருந்து கலையரசையும் தேவ்வையும் வெளியே கொண்டு வரமுடியவில்லை..


அதும் கொஞ்ச நாளாக ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என அவள் மனம் கடந்து அடித்து கொள்கிறது..அதை காது கொடுத்து கேட்கத்தான் யாரும் இல்லை …


உள்ளே வந்த தேவ் கலையரசிடம் பேசிக்கொண்டு ஹாலிலையே அமர குழலி கிளம்பி அவர்களை கண்டு கொள்ளாமல் வெளியே செல்ல தேவிற்கு சொல்லாமலே புரிந்தது அவளின் கோபம்..இப்ப தான் கொண்டுவந்து விடுவதாக சொன்னாலும் பெரிதாக எதும் மதிப்பு இருக்காது என அவன் அமைதியாக சிரித்தபடி இருக்க,

அதற்கும் கோபம் கொண்டவள்” என்னை காலேஜில கூட விடமாட்டியாடா கலையரசு பெத்த காண்டாமிருகமே,அப்பறம் நாளைக்கு வந்து குலசாமி சாமி, கும்புடு போட்ட சாமின்னுட்டு வா என அவள் தலையை போட்டு உலுக்க அவள் கண்ணில் பட்டது தேவின் சுண்டுவிரலை ஆக்கிரமித்து இருக்கும் மோதிரம்..


“ஏய் அண்ணா இந்த மோதிரம் என்ன புதுசா இருக்கு, அதும் பொண்ணுங்க போடுற மோதிரம் மாறி இருக்கு” என கேட்க..அப்பொழுது தான் அவனும் அதை கவனித்தான் , அதிர்ச்சியுடன் ஒரு சில மங்கலான காட்சி அலைகள் வந்து அவன் முகத்தை வேர்க்க வைக்க..,

அதை கவனித்த கலையரசு சந்தேகமாக அவனை பார்க்க ,”அது,அது, நம்ம ட்ரஸ்ட்ல படிக்கிற பொண்ணு ஒண்ணு முதல் மாசம் சம்பளம் வாங்கி வாங்கி கொடுத்தது அப்பா” , என பதுசாய் சொன்னவன் அந்த இடம்விட்டு வேக வேகமாய் காலி ஆனான்..


குழலி “இந்த அண்ணன் எதோ மறைக்குறானே” என யோசித்தபடி கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி யோசித்த படியே செல்ல..அவள் முன் குரங்கென ஆஜர் ஆனான் உத்திராபதியின் மூத்த பையன், நம் இனக்காரி பிரீத்தாவின் அண்ணன், மேலை ஊரின் கிராம நிர்வாக அலுவலர் குமரன் எம். காம்,



“ஹாய் இனியாழ்..எப்படி இருக்க” என அவளின் தாவணி அழகை ரசித்து கொண்டே கேட்க, இருக்க கடுப்புக்கு இந்த குரங்கு வேறையா என காண்டாக்கியவள் “ ஹலோ மிஸ்டர் என் பேரு குழலினியாழ், உங்க இஷ்டத்துக்கெல்லாம் கூப்பிடாதிங்க,மொரோவர் என்னை நீங்க கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை எப்போதும்” என அவனை கடந்து செல்ல

மீண்டும் அவள் முன் நின்றவன் காதலன் காதலியை செல்லமா பேர்வச்சி கூப்பிடுறது வழக்கம்தானே கண்ணம்மா”..,என இன்னும் கொஞ்ச..


குழலி எதும் சொல்லாமல் அவனை கடந்து செல்ல மேலும் குமரன் “நானும் ஊருக்கு வந்த 6 மாசமா உன் பின்னே சுத்துறேன் , எனக்கு எதும் பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்” என அவள் கையை பிடிக்க..

வெடுக்கென கையை உதறியவள் அவன் கன்னம் சிவக்க ஓங்கி ஒரு அறைவிட்டு “பொறுக்கி நீ என் மேல கையை வச்சது மட்டும் என் அண்ணனுக்கும், என் அப்பாவுக்கும் தெரிஞ்சது உன்னை மாறு கை மாறு கால் வாங்கிடுவாங்க, ஜாக்கிரதை “ என கர்ஜித்துவிட்டு சென்றாள்..


இந்த கீழை ஊருகாரிங்களுக்கெல்லாம் கொஞ்சம் ஏத்தம்தான் போல என மனதில் நினைத்துக்கொண்டு ,ஒரு vio இப்படி ஒரு பெண்ணின் கையாலே அடிவாங்கி நடு ரோட்டில் நிக்கிறோமே என சொரணை ஏதும் இல்லாமல் ,அதை உதறி தள்ளியவன்,


மீண்டும் அவள் பின்னே சென்று “அதை நானே சொல்லிக்கிறேன் உன் நொண்ணன்டையும் கொப்பார்ட்டையும் நீ உன் வீட்டுக்கு என்னை அழைச்சிக்கிட்டு போ,நான் உன்னை பொண்ணு கேட்குறேன்” என்க,


அவனை பார்த்து அலட்சியமாக சிரித்தவள் “ என் குடும்பம் பத்தி உனக்கு என்ன தெரியும் என்க

,அவனோ “ என்னை தெரியணும், எதும் தெரிய வேணாம், நான் உன்னை காதலிக்கிறேன் , கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்,நீ என் இனத்து பொண்ணு இல்லை, உன் ஊருக்கு என் ஊருக்கும் ஆகாது அதானே அதெல்லாம் நான் சமாளிச்சிகிறேன்” என்க..



இன்னும் சத்தமாக சிரித்த குழலி “ என் பெரியப்பா பேரு கலையரசு, என் அண்ணன் பேரு தேவ் ஆதித்யா, என் அப்பா பேரு செழியன், இன்னும் சரியா சொல்லனும்னா உன் அப்பா மற்றும் மற்ற இத்தியாதிகள்னால 44 இடத்துல வெட்டு பட்டு 23 வருஷத்துக்கு முன்ன செத்தவரு” , என அவன் அதிர்ந்து நின்றதை பொருட்படுத்தாமல் கலங்கி நின்ற மனதை திடப்படுத்திக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றாள் புயலென..


அன்று காலை எழுந்தவுடன் பிரீதாவிற்கு ஒரே அசதி தூங்கிக்கொண்டே இருக்கவேண்டும் போல தோன்ற கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு மீண்டும் தூக்கத்தை தொடர அந்த கத கதப்பான கனவு எப்பொழுதும் அவள் விரும்பும் அந்த கனவு , அவனின் கனவு நாயகனோடு அழகாய் ஆரம்பித்தது…

அங்கே மருத்துவமனையில் இனியாவயோ தன் இனியனுடன் பேசி க்கொண்டு இருந்தாள்.. கோமாவில் இருப்பதால் அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை , முழித்து இருந்தாலும் இவளின் கேள்விக்கு அவனிடம் பதில் இருக்க போவது இல்லை..எதோ ஏதோ அவர்கள்.காதல் ஆரம்பித்த கதை அவனை பார்த்த கதை, அவள் கர்ப்பம் ஆனதை சொல்வதர்க்குள் நடந்த அசம்பாவிதம் ஆன கதை என அனைத்தையும் சல சலவென்று ஒப்பித்துக்கொண்டு இருந்தாள்..



“அப்பா கூட பரவாயில்லை இனியன் அம்மாதான் ரொம்ப பாவம் நான் இல்லாம ரொம்ப கஷ்டப்படுவாங்க, நீங்க சரி ஆனதும் நாம போய் பார்க்கலாம் யாருக்கும் தெரியாம” என ஏதோ ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தாள் விடியும் வரை..

இரவு 10 மணி பிரீத்தாவின் வீடு நச நச என ஒரே சத்தம் ஊரின் இத்துப்போன கும்பல் மொத்தமும் கூடி இருந்தது..பிரீத்தா அவளின் அத்தை மாமாவை பார்த்துவிட்டு வீடு நுழைந்தாள்.. பேச்சின் சாராம்சம் இதுதான் ஊரில் ஒரு பையன் தான் காதலித்த வேற்று இன பெண்ணை அழைத்துகொண்டு ஊரைவிட்டு சென்றுவிட்டான்..அதற்கு என்ன செய்வது என்பதுதான் பேச்சி…
ஒரு புறம் பையனின் பெற்றோர் தலை குனிந்து நிற்க தருதலைகள் எல்லாம் ஆளுக்கு ஒரு பக்கம் நியாயம் பேசியது..


சிறிது நேரத்துக்கு பின் உத்திராபதி “நம்ம இனத்தை கேவலபடுத்திட்டான் உன் மவன், அவனுக்கும் உங்களுக்கு இனி எந்த சம்மந்தமும் இல்லை, இனி ஓட்டும் இல்லை ஒரவும் இல்லை , எழுதி கொடுத்துட்டு போங்க என்று சொன்னவர்,

அவர்கள் சென்ற சிறிது நேரத்துக்கு பின் தன் நம்பிக்கையானவர்களிடன் “கொஞ்ச நாள் போகட்டும் அப்பறம் என்ன செய்யணுமோ செஞ்சீவிட்டுடுங்க” என சொல்லி சென்றார்..


சொல்லிவிட்டு கூட்டம் கலையவே சென்று படுத்தவற்கு 3 மணிநேரம் வரை தூக்கம் வரைவில்லை..சரி சிறுது நேரம் தோட்டத்தில் நடக்கலாம் என்று தோன்ற அங்கே சென்றார்..


அங்கே அவருக்கு உச்ச பட்ச அதிர்ச்சி காத்திருக்க போகிறது என தெரியாமேலே…தான் வினைத்த வினை எல்லாம் சீக்கிரம் அறுக்க போகிறோம் என்பதை அறியாமலே..

மெதுவாக அங்கே நடந்து கொண்டு இருக்க அவரின் ஜென்ம எதிரி, வம்சத்தையே வேரறுக்க காத்திருக்கும் வம்சத்தின் ஒற்றை ஆண் வாரிசு தேவ் ஆதித்யா அவரின் பெண்ணின் அறையிலிருந்து வெளியேறிக்கொண்டு இருந்தான்…

கசங்கிய உடையுடனும் கண்ணில் கரை காண மோகத்துடனும்.. நிஜமா இல்லை பிரம்மையே..என பிரிக்க முடியாமல் பேடித்து பொய் நின்றார் உத்திராபதி..


கருத்து திரி

 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்..

காதல் இல்லா காதல் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு படிச்சிட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட்ல ஒரு சூ சொல்லிட்டு போங்க..

Im waiting..

சீக்கிரம் அடுத்த எபியோட வரேன்

இப்படிக்கு

மிளாணிஸ்ரீ
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் இல்லா காதல் 5:

13730


13731


13732

13733


ஆதியைபார்த்த உத்திராபதிக்கு கோபம் நம்ம முடியாத தன்மை , ஒருவேளை கனவாக இருக்குமோ,எப்போதும் நாம் அவனை அழிப்பதை பற்றியே யோசிப்பதால் எங்கும் அவனே தெரிக்கிறான என யோசித்து கண்ணை மூடி திறக்க அவன் தேவ், நடந்து சென்ற பாதை வெறுமே என்று இருந்தது…ஒரு வேலை பிரம்மை தானோ,இவ்வளவு காவலையும் மீறி அவன் எப்படி உள்ளே வந்து இருக்க முடியும் வாய்ப்பு இல்லை, அப்படியே வந்தாலும் தன் மகளின் அறையிலிருந்து இப்படி முழுதாக வெளியே வந்து இருப்பானா “என் மகள் ,என் இரத்தம்,இவனை இந்நேரம் பார்த்து இருந்தால் கொரவலையை கடித்து துப்பி இருக்கமாட்டாளா, என்னை விட அவர்களை அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டி திரிப்பவள் ஆயிற்றே “ என யோசித்தவர் மெதுவாக சென்று தன் மகளின் அறையை திறக்க அங்கே பிரீதா அன்றலர்ந்த மலர் போல அழகாய் தூங்கி கொண்டு இருந்தாள்..

தன்னுடையை பிரம்மைதான் இது என நினைத்தவர் தூங்க சென்றார்..ஆனால் பிரீதாவோ ஆளப்பட்ட களைப்பில் அசந்து தூங்கி கொண்டு இருந்தாள்..
இங்கே குமரனின் அறையிலே அவனுக்கு பொட்டு தூக்கம் இல்லை குழலி அந்த ஊர்காரி என்று தெரியும் ஆனால்,அவள் செழியன் மகள் என்று அறவே தெரியாது.. பள்ளிப்படிப்பு மட்டும் உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தவன் கல்லூரி படிப்பு முழுவதும் சென்னையில் தான் ,தங்கை, மாமா,தந்தையின் இனக்கொள்கையில் அவ்வளவு பிடித்தம் இல்லாதவன்,அந்த வயதில் சொன்னாலும் அவன் சொல்வதை கேட்பவர்கள் யாரும் இல்லாததால் வெறுப்பில் சென்னையிலே தங்கி படித்தவன் ,


படிப்பு முடிந்து அரசாங்க வேலைக்கும் அங்கேயே பயிற்சி வகுப்பு சென்று தேர்வு எழுத ஆரம்பித்துவிட்டான்.. ஊருக்கு வந்தாலும் இரண்டொரு நாள்தான் இருப்பான் சென்றுவிடுவான்..இப்பொழுது ஒரு 6 மாதமாகதான் போஸ்டிங் கிடைத்து இங்கு இருக்கிறான்..


அதனால் அவனுக்கு குழலியை பற்றி தெரிய வாய்ப்பு அமையவில்லை..அவளின் பெயர் தெரிந்தது கூட அன்று அவள் தவறிவிட்ட நோட்புக்கில் இருந்துதான்..

அவ்வளவுதானா தான் 5 மாதமாக பொத்தி பொத்தி வளர்த்த காதலுக்கு சங்குதான.. கனவில் எல்லாம் பைக்கில் வைத்து க்கொண்டு ஊர் சுற்றியது எல்லாம் கானல் நீரா…


கீழை ஊர் பெண்ணென்றாலே உயிருக்கு உத்திரவாதம் இல்லை அதுவும் கலையரசு குடும்பத்து பெண் என்றால் சுத்தம் தலை துண்டுபடுவது உறுதி என மூளை யோசிக்க அவன் மனமோ “ all is fair in love and war” என்று குழலியை சந்தித்த நாளின் நினைவுகளோடு பின் சென்றது…


அவன் வேலையில் சேர்ந்து 1 மாதம்தான் ஆகி இருந்தது , அவன் அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் அது ஊருக்கு வெளிப்புறமாக உள்ள ஆதியின் நிலத்தை தாண்டிதான் செல்லவேண்டும்..அப்படி ஒரு நாள் செல்கையில் பைக் தட தட வென்று சத்தம் இட்டு கீச் என்று பஞ்சர் ஆகி தன் இயக்கத்தை நிறுத்தியது

“அடச்சீ கருமம் ” என பைக்கில் இருந்து இறங்கி காலை உதைத்து கொண்டு குமரன் திரும்பி பார்க்கும் போது அவனின் கள்ளச்சி , கிராமத்து எறுக்கஞ்செடி, வள்ளிமேட்டு வயல்நண்டு உள்பாவாடை தெரிய தூக்கி கட்டிய அழுக்கு கலர் பாவாடையோடு , ஒரு பழைய தடிப்பான ஆண் சட்டையோடு முகம் முழுக்க புழுதியோடு தலையில் ஒரு கட்டம்போட்ட சிவப்பு துண்டை கொளுத்து வேலை செய்வது போல கட்டிக்கொண்டு பருத்தி எடுத்துக்க்கொண்டு இருந்தாள்..

காலை 11 மணி அடிக்கும் வெயிலில் முகம் எல்லாம் சிவந்து போய் அவள் முகத்தில் இருக்கும் பருக்களுக்கு கூடுதல் அழகை கொடுக்க வேர்த்து வலியும் அவள் நெற்றிக்கு வெண்சாமரம் வீச சொல்ல இவன் மனமும் கையும் ஆளாய் பறந்தது..

அவள் அள்ளி கொட்டும் அழகில் எல்லாம் இருக்கவில்லை..பார்த்தால் சுமார் ரகம்தான்.. இப்பொழுது இந்த அழுக்கு உடையில் இன்னும் சுமார்.ஆனால் கலையான முகவெட்டு,
ஆனால் குமரனுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு அந்த முகத்தின் மீது ,பார்த்துக்கொண்டே இருடா என செல்லமாய் அவள் மனம் சிணுங்குவதை போல இவனுக்கு , பிரம்மை, உலகம் அப்படியே இயக்கத்தை நிறுத்தி இருக்க கூடாதா என்று ஒரு பேர் அவா..

சில பேரை பார்த்தாலே காரணமே இன்றி பிடிக்காது,சில பேரை பார்த்ததுமே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பிடிக்குமே அந்த ரகம் …



வெகுநேரம் யாரும் கருத்தையும் கவராமல் அவளை பார்த்துகொண்டே நின்றவன் பின் தன் வீட்டில் வேலை செய்பவன் மாற்று பைக்கை எடுத்துகொண்டு வர அதை வாங்கி அலுவலகம் சென்றான்..


அவளின் தோற்றமும் இல்லாத வீட்டு பெண் போல இருந்ததால் அவனுக்கு அவள் அப்படியே பதிந்து போனாள், யாரோ கூலி வேலைசெய்யும் குடும்பத்தின் பெண் என்றுதான் நினைத்தான் இன்று கீழை ஊர் என்று தெரிந்தாலும் பெரிதாக எந்த வீட்டு பெண்ணாய் இருப்பாள் என ஆழமாக யோசிக்க அவன் மூளைக்கு தோன்றவில்லை..



அவன் அந்த பக்கம் செல்லவே குழலியுடன் வேலை செய்யும் வேலைக்கார கிழவியோ “ ஏன் தாயி நீ இப்படி வெயில்ல கஷ்டப்படுற , இந்த ஊரு பாப்பாத்தி நீ சொகுசா உட்கார்ந்துகிட்டு வேலை வாங்கமா…, உன் தாத்தான் மட்டும் இல்லனா , பஞ்சம் வந்தப்ப ஊரே எலி மருந்து குடிச்சு செத்து இருக்கும், இந்த ஊரே காலம்முழுக்க உன் வம்சத்துக்கு வேலை செய்யும்.. போ ஆத்தா போய் உட்காரு “என கரிசனமாய் சொல்ல..


“அட போ தஞ்சாரம்வீட்டு பெரியாத்தா, நீ தான் மெட்சிகணும்,காலை வெயில் கழுத்தைக்கு நல்லாத்தாம் , என்னதான் வசதி இருந்தாலும் எல்லா வேலையும் பெண் புள்ளைகள் பழகனுமாம்,உங்க முதலாளி கழுதை அங்க பம்பு செட் கொட்டையிலிருந்து என்னை வேவு பார்க்காது பாரு என தன் தாய் வாசுகியை காட்டி,


பெரியம்மா, அண்ணனா இருந்து ஏமாத்திடுவேன் இந்த தாய்கிழவியை ஏமாத்த முடியல “ என புலம்பி கொண்டே தன் இடுப்பு உயரம் இருக்கும் பருத்தி செடியில் இருந்து பருத்தி எடுத்து கொண்டு இருந்தாள்..


அவள் இப்படி அலுத்து கொண்டாலும் இந்த வேலையெல்லாம் அவளுக்கு அவ்வளவு பிடித்தம்…இது எல்லாம் தூரமாக இருக்கும் குமரன் கண்ணிலும் காதிலும் பட வாய்ப்பு இல்லை..


தன் சிந்தனையில் இருந்து கலைந்த குமரன் எப்படி விடுவது அவளை இந்த மனம் அந்த காட்டுக்காரி இல்லாமல் வாழ்ந்துவிடுமா என்ன, 4 மாதமாக பின்னே லோ லோ என்று அலைந்தும் ஏர் எடுத்தும் பார்க்காமல் திமிறிக்கொண்டு திரியும் அவளை காதலால் அடக்கி , மூக்கனாம் கயிறு போட்டு ,மூனே மாசத்துல நான் வாந்தி எடுக்க வைக்கல,நான் உத்திராபதி…….புள்ளை இல்லை,என தீர்க்கமாகி முடிவெடுத்த பின்னே விடியல் காலையில் தூங்கி போனான்..


ஒரு வாரம் எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக போக குமரன் குழலியை காண செல்லவில்லை..உண்மை தெரிந்ததும் ஓடிவிட்டான் என குழலி மனதில் இளக்கராமய் நினைத்துக்கொண்டாளோ..இல்லை நினைப்பது போல் ஒலமிடும் மனதிற்கு சமாதானம் செய்துகொண்டாளோ..

இரவு நேரத்தில் நடக்கும் கட்டில் யுத்தமோ,காம ரசாபாசங்களோ,முத்தம் கொட்டும் முழு நீள அருவியோ நடந்ததா என்னவென்று இருட்டுக்கும், , அதில் கொட்டம் அடிக்கும் அந்த தூக்கனாம் குருவிகளுக்கோ தான் வெளிச்சம்..


அன்று விடுமுறை நாள் ஆதி குளித்துக்கொண்டு இருக்க, பெண்கள் இருவரும் சமையல் கட்டில் இருக்க, கலையரசு பின்னே இருக்கும் தென்னந்தோப்பில் லோட் ஏற்றுவதை மேல்பார்வை பார்த்துக்கொண்டு இருக்க ,குழலி வாசலில் யாரையோ வெளியே செல்லுமாறு சொல்லிக்கொண்டு இருந்தாள்..



“தாயி இந்த பச்சை குழந்தையை பார்த்து கூட உனக்கு இரக்கம் வரலையா, இப்படி தாலி அறுந்து புருஷனை எறிந்த எடத்தொட சூடு கூட ஆறாமல் வந்து புலம்புறேனே , உனக்கு இரக்கம் இல்லையா,பெரிய்யா ,இல்லை சின்ன அய்யா யாராவது கூப்பிடுமா” என கதற..
அந்த பெண் கதறுவதை பார்த்து குழலிக்கு துக்கம் தொண்டையை அடைத்தாலும் ,தன் அண்ணனையோ, பெரியப்பாவையோ இந்த மேலை ஊர்கார பெண்மணியிடம்.காட்டுவதாக இல்லை..”இல்லை அந்த ஊருக்கெல்லாம் என் வீட்டிலிருந்து யாரும் வரமாட்டாங்க , உங்க ஊருகாரவங்களை வச்சி பஞ்சாயத்து பண்ணிக்கோங்க,பிளீஸ்” என கை எடுத்து கும்பிட கொல்லை புறம் இருந்த “ யாரு சாமி இது “ என கலையரசுவின் குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பினாள் குழலி…

“அது… அது ஒன்னும் இல்லை பெரியப்பா, பணம் வேணுமா ஏதோ அவசரத்துக்கு ,என வேகம் வேகமாக கையில்,கழுத்தில் உள்ள நகை எல்லாம் கழட்டி கொடுத்து அந்த பெண்ணை வாசல் புறமாக திருப்பி அனுப்பபார்க்க ,


” இனியாழ்” என அவள் பெரியபாவின் இடி என்ற கர்ஜனை இனி வாய் திறக்க கூட அனுமதி இல்லை என்பதை அவளுக்கு உணர்த்தியது..அவள் என்னதான் கலையரசிடம் செல்லம் கொஞ்சினாலும் இந்த குரலின் மேல் அவ்வளவு பயம் கலந்த மரியாதை அவளுக்கு..


அவரை நோக்கி திரும்பி “ பெரியப்பா “ என வாயை திறக்க “ உள்ளே போ” என ஒரே வார்த்தையில் முடித்தவர் “ பெரியவனே “என ஆதியின் அறையை நோக்கி குரல் கொடுத்தார்.. ஆதி சட்டையை கூட போடாமல் உள் பனியனுடன் “ சொல்லுங்க அப்பா “ என ஆஜர் ஆனான்..


“என்னம்மா இப்ப சொல்லு”என கூற அந்த பெண்ணிற்கு சொல்ல வந்த செய்து மறந்து போனது.. ஆர்ப்பாட்டம் இல்லாமல் ,ஆள் பலம் இல்லாமல் தனி ஆளாய் கர்ஜிக்கும் போது வரும் நிமிர்வெல்லாம் ஒரு சிலருக்கே, அதில் கலையரசுவும் அடங்குவார்..


“ம்ம்ம்ம் “என மறுபடியும் ஒரு அதட்டல் போட அந்த பெண்ணோ “அய்யா நான் மேலை ஊருகாரிய்யா,நேத்து ராவு நாத்துக்கு மடை மாத்திட்டு வீட்டுக்கு வந்த என் புருஷன , 3 பேரு குடிச்சிட்டு வெட்டி வம்பு இழுத்து , அடிச்சி கிணத்துல தூக்கி போட்டுடாங்க அய்யா, பாவிங்க , நின்ன இடம் மண்னா போக , பட்ட இடமெல்லாம் பத்திகிட்டு எரிய, என் புருஷனை அடிச்சே கொன்னுட்டாங்க அய்யா, 6 மாச குழந்தையும் என்னையும் அனாதையாவிட்டுட்டு என் குலவேறு போய்டியா” என கதற..



ஆதியோ கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு “உம் ஊரு பஞ்சாயத்து என்ன பண்ணுது, இங்க வந்து சொல்ற “ என கேட்க.. அந்த பெண்ணோ “ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை பண்ண மூணு பேரும் (அதாவது உயர்திரு உத்திராபதியின் உடன் பங்காளிறதால) , கால் தவறி விழுந்துட்டானு சொல்லி ராவோட ,ராவ எல்லாத்தையும் முடிச்சி , வச்சி என் புருஷன் பிணத்தை எறிச்சிட்டாங்க,ஊர்காரவங்களும் அவங்க பேச்சை மீறி உதவி செய்யல,

போலீஸ்ட போனாலும் அவனுங்க உன்னையும் கொன்னு புருஷன் இழந்த துக்கத்துல தற்கொலை பண்ணிக்கிட்டேன்னு சொல்லிடுவானுவ ஆத்தா போய் புழைப்பை பாருன்னு சொல்லி கேஷ் எடுத்துக்கமாற்றாங்க ,நீங்க தான் அய்யா அவனுங்களை தண்டிக்கனும்” என கலையரசுவின் காலில் அந்த குழந்தைய போட்டுக்கொண்டு அழ ,
உடனே சற்று விலகிய கலையரசு “ எழுந்திரு மா நான் பார்த்துகிறேன் , நீ போ..நாளைக்கு தெரியும் உனக்கு என்ன நடக்க போகுதுன்னு”என அந்த பெண்ணை வழி அனுப்பிவைத்து ஆதியை நோக்கி திரும்பியவர் ,


“ஆதி ,நாளைக்கு காலையில 10 மணிக்கு அந்த 3 பேரும் நம்ம புளியமரத்துல கட்டி இருக்கணும் , வரட்டும் அந்த ஊர்காரணுவ பஞ்சாயத்துக்கு “ என மீசையை முறுக்கி கொண்டு உள்ளே சென்றார்.. “ஆகட்டும்ங்க அப்பா”என்று சொன்ன ஆதி மஞ்சள் கரை வைத்த வேட்டியை மடித்து கொண்டு பனியனோடு தன் புல்லட்டை நோக்கி சென்றான்.. அவனின் அப்பா சொன்னால் அதை செய்துமுடித்துவிட்டாதான் அவனுக்கு சாப்பாடே இறங்கும்…

மறுநாள் காலையில் 9 மணிக்கெல்லாம் அந்த மூவரையும் உரி உரி அவர்களின் ஊருக்கே சென்று அடித்து இழுத்துக்கொண்டு வந்து அவன் அப்பா சொன்னது போல இரத்தம் சொட்ட சொட்ட மரத்தில் ஜட்டியுடன் கட்டி வைத்து இருந்தான்..


பரபரப்பாக இரு ஊர் காரர்களும் பஞ்சாயத்தில் கூடி இருக்க, போலிஸ் காரர்களும் இருக்க பலவருடங்களுக்குக்கு பிறகு உத்திராபதியும் , கலையரசும் ஒருவரை ஒருவர் சந்தித்திக்கொள்ள அந்த குள்ள நரியும்,கர்ஜிக்கும் சிங்கமும் இருக்கும் இடம் கருதி அமைதியாக இருந்தது..


பஞ்சாயத்து ஆரம்பித்து சிறிது நேரத்தில் புருஷனை பறி கொடுத்த பெண்” என் புருஷன் தெரியமதான் கிணத்துல விழுந்து செத்துட்டாரு , அவர யாரையும் கொலை செய்யல “ என அழுத்தம் திருத்தமாக சொல்ல உத்திராபதியின் முகத்தில் ஒரு அலட்சியமாக சிரிப்பு ,,கலையரசுவின் முகம் யோசனையில் விழ, ஆதியின் புருவம் லேசாக சுருங்கி அதை விட அலட்சியத்தை பூசிக்கொண்டது…
 
Last edited:

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#காதல்இல்லாகாதல்5

ஹாய் செல்லம்ஸ்...

காதல் இல்லா காதல் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு..படிச்சிட்டி எப்படி இருக்குன்னு கமெண்ட்ல வந்து ஒரு சூ சொல்லுங்க ..

லாஸ்ட் எபிக்கு கமெண்ட் அண்ட் லைக் பண்ண எல்லோருக்கும் என் நன்றிகள்..கீப் சப்போர்ட்...

இப்படிக்கு

மிளாணிஸ்ரீ

 
Status
Not open for further replies.
Top