விழிகள் -3
விதுஷாவிடம் பேசிவிட்டு தன்னோட ரூம்க்கு வந்த அகிலாம்மா, தூக்கம் வராமல் மணியை பார்த்தார் நேரம் 3 மணியை காட்ட, கைபேசியை எடுத்து தன்னுடைய அன்பு மகன் கவுதமுக்கு அழைத்தார், அவன் போன் எடுப்பான் என்ற நம்பிக்கையில், அந்த பக்கம் அழைப்பு எடுக்க பட நிம்மதி பெற்றவராக,
என்னப்பா கவுதம், உனக்கு கொஞ்சம் கூட இந்த அம்மா நினைப்பே இல்ல போல தெரியுதே, நான் தான் இந்த ஹாஸ்டல் பொண்ணுகளை கட்டி கிட்டு அழுகுறேன் என்றால்,
நீ என்னடானா எப்ப பாரு ஒரே வேலை வேலைனு சொல்லிக்கிட்டு ஊரு ஊரா அலைகிற போல... என்று தன் மகனுக்காக பொய்யாக சலித்தவர் உனக்கு என்னப்பா ? கொடுத்துவச்சவன், உன்னை சுற்றி எப்பவும் கலர் கலரா, வித விதமா, புதுசு புதுசா, அழகு அழகா கண்களுக்கு குளிர்ச்சியா, எல்லாம் இருக்கும், அப்படி இருக்கும் போது இந்த பழைய அம்மா, வயசான அம்மாவோட, நினைப்பு எப்படி வரும் என்று ஒரு விதமான நக்கல் சிரிப்புடன் கேட்டார்..
என்னமா நீங்களும் இப்படி பேசுறீங்க... என்னை பற்றி, என்னோட வேலை பற்றி, எல்லாம் நன்றாக தெரிஞ்ச நீங்களே இப்படி பேசுறது கொஞ்சமும் உங்களுக்கு ஓவரா படல? இல்லை சும்மா என்னை ஏதாவது கேட்கனுமுன்னு கேட்க்குறீங்களா என்ன .. என்று சற்று கோபதோடவே அவரை கேட்டான்.
என்னப்பா அப்படி என்ன கேட்க கூடாத கேள்வி கேட்டுட்டேன்னு இதுக்கு போய் ரொம்ப கோப படுற சரி விடு, நம்ம பையன் ரெண்டு நாளா போன் எதுவும் நமக்கு பண்ணலையே, நாம பண்ணாலும் போன் எடுக்கலேயே, அதான் சரி கொஞ்சம் அக்கறையா என்ன ஏதுன்னு கேட்க போன் பண்ண எரிஞ்சு விழுற.. என்றார்
ஆமாமா ஆமா பிள்ளை ரெண்டு நாளா போன் பண்ணவே இல்லையே, ஏதோ வேலை விஷயமா ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு போனானே அவனுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ, நேரத்துக்கு சாப்பிடானா? தூங்குனானா? தினமும் நம்ம கிட்ட பேசிட்டு தானே தூங்குவான், இப்படி நெனைச்சு அக்கறையா நீங்க கேள்வி கேட்ட ரொம்ப சந்தோஷம் தான்.
ஆனால் நீங்க என்னடானா அப்படி எல்லாம் என்கிட்டே கொஞ்சம் கூட அக்கறையா விசாரிக்காமால், உன்னை சுற்றி கலர் கலரா, புதுசு புதுசா, அப்படி இருக்கும், இப்படி இருக்கும், அதை எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியா பார்த்துட்டு இந்த பழைய அம்மாவை மறந்துட்டியானு நக்கலாக கேட்க்குறீங்களே இது நியாயமா மா?
இப்ப என்ன தப்பா கேள்வி கேட்டுவிட்டேன் என்று உனக்கு இவ்வளவு கோபம் வருது, நீ போனது ஊட்டிக்கு தானே அங்க கலர் கலரா, புதுசு புதுசா, கண்ணுக்கு குளிர்ச்சியா, மலர்களும், மலைகளும், மரங்களும், குளுகுளு கிளைமேட் என்று எல்லாமே நல்லா இருக்குமே அதை எல்லாம் பார்த்தியா, ரசிச்சியானு தானே ஒரு ஆர்வ கோளாறுல, அக்கறைல கேட்டேன் அதுக்கு போய் இப்படி கோபப்படுற நீ... என்று அவனை மடக்கினர்.
உங்களுக்கு தான் என்னோட பாஸ் பற்றி எல்லா விஷயமும் ரொம்ப நல்லா தெரியுமே மா, அப்பறம் எதுக்கு என்னை இப்படி நக்கலா கேள்வி கேட்டு கடுப்பு ஏதுறிங்க? அவருகிட்ட நான் எதையுமே பார்க்க முடியாது, ரசிக்க முடியாது என்று உங்களுக்கு தெரியாதா என்ன? இன்னொரு விஷயம் என்னனா நான் போனது விளம்பர பட சூய்ட்டிங் எடுக்க, நீங்க நெனைக்குற உங்க மருமகள் கூட புதுசா கல்யாணம் ஆகி தேனிலவுக்கு போகல ஊட்டிய சுற்றி பார்க்க, அதுவும் எங்க பாஸ் கூட ஊட்டிக்கு போனதும் சென்னை மெரினா கடற்கரை வெயில படுத்து கெடக்குறதும் ஒன்னு தான், அவரு என்ன படுத்துன கொடுமைல “எப்படா தப்பிச்சு ஊருக்கு போவமுனு ஓடி வந்துட்டேன் என்றான் சற்று எரிச்சலுடன்.
சரி சரி மகனே நீங்க இப்ப என்கிட்டே எவ்ளோ தான் கோபமா எரிச்சலா பேசுனாலும், கொஞ்சம் பேச்சுக்கு நடுவுல உங்க மனசுல உள்ள ரொம்ப நாள் ஆசைய என்கிட்ட சொல்லிடீங்க போல என்று அர்த்தத்துடன் சிரித்தார்..
என்னது ரொம்ப நாள் ஆசையா? நான் எப்பம்மா உங்ககிட்ட அப்படி சொன்னேன்? கொஞ்சம் எனக்கு புரிகிற மாதிரி சொல்லுங்கமா..
அதுவா அதான் நீ தான் இப்போ சொன்னேல்லபா “ ஊட்டிக்கு உங்க மருமகள் கூட தேனிலவுகா போனேனு” அதை சொன்னேன் உன்னோட நீண்ட நாள் ஆசைனு... என்று அவர் மறுபடியும் அவனை நக்கல் கொடுக்க..
அம்மா, ஏன்மா எப்ப பாரு என்னை வம்புக்கு இழுக்குறீங்க, கொஞ்சமாவது பெரிய மனுசி மாதிரி பொறுப்பா, ஒரு அம்மா பிள்ளை கிட்ட பேசுற மாதிரி பேசுறிங்களா? எப்ப பாரு கிண்டல், நக்கல், தான் என்கிட்டே என்று மீண்டும் கோபமாக கேட்டான் ..
அதற்கு அவர் சரி, நான் உன்கிட்ட எப்பவும் பொறுப்பா பேசலைன்னு சொல்லுற அப்படி தானே, சரி விடு இப்போ உன்கிட்ட நான் பொறுப்பான, பெரிய மனுசியா, அம்மாவா ஒண்ணு சொல்லுறேன் நல்லா கேட்டுக்க “ நான் உனக்கு கல்யாணம் பண்ணலாமுன்னு முடிவு பண்ணி இருக்கேன் “ போதுமா பொறுப்பா பேசுனது... இவ்வளவு பொறுப்பு போதுமா உனக்கு இன்னும் கொஞ்சம் வேணுமா “ என்று பாட்டு பாடினார் ராகதோட......
ஐயோ அம்மா போதும்மா விட்டுடுங்க... ஹா ஹா ஹா என்னால சிரிக்காம இருக்க முடியல...ஹா ஹா ஹா என்று அடக்க முடியாமல் சிரித்தவன்.
அப்படினா மை சன் உங்களுக்கு, “கோபமாக பேச வராதுன்னு” ஒதுக்கங்க அப்போ தான் நான் என்னோட காமெடிய நிறுத்துவேன்.
உடனே சரிமா ஓகே இப்ப நான் தான் அவுட் ஒத்துகிறேன், இன்னைக்கு நீங்க தான் ஜெய்ச்சிங்க போதுமா.. நீங்க அன்றைக்கு சொன்னது சரி தான் எனக்கு கோபம் சுட்டுபோட்டலும் வராது தயவுசெய்து உங்க காமெடிய நிற்படுங்க.. என்னால தாங்க முடியல ஹா ஹா ஹா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. விட்டா கோவை சரளா ரேஞ்சுக்கு நடிப்பிங்க போல...
ஓகே மை சன் ஊட்டி பயணம் எப்படி இருந்துச்சு?
ரொம்ப நல்லா ரசிச்சீங்களா? இயற்கையா? சூய்ட்டிங் எல்லாம் முடிஞ்சுடுச்சா? ஒழுங்கா சாப்பிட்டியா? தூங்குனியா?
எல்லாம் சூப்பர்மா அதெல்லாம் நோ ப்ரொப்லெம் எங்க பாஸ் இருக்குறப்ப நான் எதுக்கும் கவலை பட வேண்டியது இல்லை மா , சரி நீங்க ஊருக்கு போனீர்களே? எப்ப வந்திங்க? போன காரியம் நல்லபடியா முடிஞ்சுதுதா?
எல்லாம் நல்ல படியா முடிச்சது பா..இன்னைக்கு நைட் தான் வந்தேன். உன்கிட்ட ஒண்ணு கேட்கனுமுன்னு நெனச்சேன், உண்மைய சொல்லு, நீ எப்ப தான் ஒரு கல்யாணம் பண்ண நினைப்ப? வயசு வேற கூடிக்கிட்டே போகுது உனக்கு...
எப்ப பாரு பாஸ் பாஸ் என்று அவன் பின்னாடி சுத்துறத விட்டுட்டு , ஒழுங்கா கல்யாணம் பண்ணி எனக்கு ஒரு பேரன் இல்லை பேத்திய பெத்து கொடுக்குற வழிய பாருடா...
அம்மா, எங்க பாஸ அவன் இவனு சொல்லாதீங்க ப்ளீஸ் அப்பறம், உங்களுக்கு எங்க பாஸ எப்பவும் திட்டலைனா தூக்கம் வராதே,
ஆமா அவனை பற்றி அவரு இவருனு பேசிட்டாலும் ...
சரி அதை விடுடா கண்ணா, உன்கிட்ட ஒரு பொண்ணு பற்றி சொன்னேல்ல, நியாபகம் இருக்க உனக்கு?
எந்த பொண்ணுமா ஓஓ கல்யாணதுக்கு பொண்ணு பார்த்து இருக்கீங்களா? அட போங்கம்மா, வெட்கமா இருக்கு என்று வெட்க பட்டவன நெனைச்சு தலைல அடித்து கொண்டவர்...
டேய் பொண்ணுனா கல்யாணம் தான் உனக்கு நியாபகம் வருமா? வேற விஷயமே தோணாத உனக்கு என்றார்..
இப்ப தானே மா நீங்க கல்யாணம், குடும்பம், குழந்தைனு இருனு சொன்னிங்க அதுக்குள்ள நீங்க சொன்னதை நீங்களே மறந்துட்டு என்னை திட்டுறீங்க, கல்யாணம் பண்ணு பண்ணுனு சொல்லுறிங்களே தவிர எனக்குணு ஒரு பொண்ணு பார்க்க தோணுச்சா உங்களுக்கு? போங்கம்மா எப்ப பாரு என்னையே குறை சொல்லிகிட்டு, உங்க கூட நான் சண்டை பேசு மாட்டேன் போங்க என்றான் பொய் கோபத்தோடு..
சரி மகனே நம்ம சண்டையை அப்பறம் போட்டுக்கலாம் இப்ப நான் கேட்க்குறதுக்கு பதில் சொல்லுங்க..
நான் அன்னைக்கு விதுஷானு ஹாஸ்டல்ல தங்கி இருக்க பொண்ண பத்தி சொன்னேல்ல”
ஆமாம் அதுக்கு இப்ப என்ன அந்த பொண்ண நான் கட்டிக்கணுமா சொல்லுங்க உங்களுக்கு பிடிச்சா எனக்கு ஓகே தான்... நோ ப்ரொப்லெம் அம்மா எந்த வழியோ அடியேன் அந்த வழி....
ஹலோ மை சன் உங்கள மாதிரி ஆளுக்கு எல்லாம் அந்த பொண்ணு செட் ஆகாதுமா, உனக்கு எல்லாம் ஒரு வாயாடி தான் சரி வரும் உன்னை அடிச்சு துவைச்சு காய போட்டு இஸ்த்திரி போடா சரியா இருக்கும்.
இப்போ நான் சொன்ன பொண்ணு ஒரு வாய் இல்லாத பூச்சி தெரியுமா உனக்கு? இவ பேசவே ஒரு லட்சம் கேட்ப்பா சரியான அமுகுணி அவ, அவளை எல்லாம் மறந்தும் மனசுல நெனைச்சுடாத, அப்படி எதுவும் மனசுல நெனைச்சேன்னா இப்பவே ரப்பர் வச்சு அழிச்சுடுங்க மை சன்.. எனக்கு எல்லாம் நல்லா வாய் பேசுற, சண்டை போடுற பொண்ணு தான் மருமகளா வரணும், இல்லைனா லைப் ரொம்ப போரடிக்குமே டா செல்லம்.
ஏன்மா கூட வாழ பொண்ணு பார்க்க சொன்ன குத்து சண்டைக்கு பொண்ணு பார்க்க நெனைக்கிறிங்க...
சரி அதை அப்பறம் பேசிக்கலாம் பொண்ணு பார்குறப்ப.,
இப்ப நீங்க சொல்லுற பொண்ணு பேரு கூட ஏதோ சொன்னிங்களே...ம் ம் விதுஷா...
அந்த பொண்ணு பார்க்க எப்படி இருப்பானு சொல்லுங்கமா.. என்று கேட்டான் கொஞ்சம் ஆர்வமாகவே...
அந்த பொண்ணுக்கு என்னப்பா அவோளோ அழகு, அப்படியே பார்க்கறதுக்கு தேவதை தான் போ, பறக்க சிறகு தான் இல்லை என்று சொன்னவர்..
சரி அதை விடு நீ எதுக்கு இப்போ அவ அழக பற்றி எல்லாம் கேட்க்குற, அவ எப்படி இருந்த உனக்கு என்னடா “ அவ உனக்கு செட் ஆக மாட்டான்னு இப்ப தானே உன்கிட்ட சொன்னேன் என்றார்..
அது ஒன்னும் இல்லை மா எப்ப பாரு போன் எடுத்தாலே அந்த பொண்ண பற்றியே ஏதாவது பேசுறீங்க அப்படி என்ன தான் அவ கிட்ட இருக்குனு கேட்டேன் எங்க அகிலாம்மா மனசுல இடம் பிடிக்குற அளவு, ஏன்னா எங்க அம்மா மனசுல இடம் பிடிக்குறது அவ்வளவு எளிது அல்ல, ரொம்ப கஷ்டம், பிடிச்சவுங்களுக்காக எதையும் விட்டு கொடுப்பாங்க (வாழ்க்கையை கூட என மனதுக்குள்ளே நினைத்தவன் ) அப்படி அந்த பொண்ணு கிட்ட என்ன இருக்கு ஹாஸ்டல் வந்த மூணு மாசத்துல, ஏன்னா இதுவரை நீங்க ஹாஸ்டல இருக்க யாரை பத்தியும் என்கிட்டே சொன்னது இல்லை அதான் எனக்கு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்குமா அவ்வளவு தான்..
மற்றபடி அந்த பொண்ணு மேல எனக்கு எதுவும் தோன்றவில்லை, ஒருவேளை அவளை அதுதான் உங்களுக்கு சிறகு இல்லாத தேவதைய நேர்ல பார்த்த அய்யா பிளாட் ஆவேனோ என்னமோ, ஆனால் நான் எங்க விளம்பர கம்பெனில பார்க்காத அழகிகளா, பெண்களா ? நீங்க சொல்லுற தேவதையா விட அவோளோ அழகுமா, அவுங்கள பார்த்தே அய்யா விழுகல,
நேற்று கூட மும்பை பொண்ணு ஒருத்தி ‘அம்புட்டு அழகு அந்த பொண்ணு என்ன ஒரு நிறம் என்ன ஒரு முகம் எல்லாமே அழகு” ஆனால், என்று அவளை வாயை திறந்து வர்ணிக்க கனவு உலகுக்கு போனவன், தனது அம்மாக்கு தெரிஞ்சா திட்டு விழும் என்பதை எண்ணி நினைவுக்கு வந்தவன் சரி இனி என்னமா உங்க தேவதையை பாத்தா நான் மயங்கி விழுக போறேன்னு நெனைக்கிறிங்க, போங்கம்மா... என்றான் சலிப்பாக சொன்னவனுக்கு தெரியவில்லை, தான் அந்த தேவதைய பார்த்தால் இனி என்ன ஆவானோ, இல்லை சாகக்கூட துணிவனோ என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம் )
சரி, இப்போ நான் சொல்லுறத கொஞ்சம் கேளு உன்னோட அழகிகள் புராணத, ராமாயணதை கொஞ்சம் நிறுத்திடு நான் சொல்லுறத கேளு. என்றார்
எனக்கு அந்த பொண்ணோட கண்ண பார்த்தாலே எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு டா.. என்னனு புரியல டா...என்றார்
ஐயோ அம்மா நான் பார்க்காத கண்ணா என்று ஆரம்பித்தவனை “ டேய் மறுபடியும் உன்னோட கம்பெனி அழகிக கண்ண பற்றி பேச ஆரம்பிச்சுடாத அம்மா பாவம் அழுதுடுவேன்...
ஏன்மா நீங்க உங்க அழகி பற்றி சொல்லுறத மட்டும் நான் பொறுமையா கேட்கணும் , ஆனால் நான் எங்க கம்பெனி அழகிகளை பற்றி பேசுனா மட்டும் நீங்க கேட்க மாட்டேன் என்று அழுகுறீங்க போங்கம்மா..
இப்படியே இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டதில் நேரம் போனது தெரியாமல் காலை பொழுது 5:30 மணியை காட்ட, இருவரும் ஒரு வழியாக விடிந்ததை உணர்ந்து, ஓகே மை சன் இப்ப நேரம் ஆகிடுச்சு மீதி சண்டையை நாளைக்கு வச்சுக்கலாம் என்று சொன்னவர், மீண்டும் ஒரு சில விஷயகளை அவனிடம் கேட்டு தெரிஞ்சு கொண்டவர் ஓகே டா கண்ணா, நீயும் போய் கொஞ்சம் தூங்கு , நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன் என்று சொல்லி விட்டு போனை அணைத்தார்கள்...
தனது இந்த மகனால் தான் அவரது பட்டு போன வாழ்க்கைக்கு ஒரு உயிர்ப்பு கிடைத்தது என்பதை நினைத்து இந்த தாய் தினமும் பெருமை கொண்டார், அவனுடன் பேசும் போதும் சிரிக்கும் போது சின்ன குழந்தையாகவே மாறுவதை உணர்ந்தார்..
அவனோட பதிலுக்கு பதில் பேசி போடும் சின்ன சின்ன சண்டைகள், கிண்டல்கள், தான் அவரை இன்று வரை உயிருடன் சந்தோசமாக வைத்து உள்ளது என்று கூட சொல்லலாம், ஒரு காலத்தில் உயிராய் நினைத்த உறவுகள் நம்பிக்கை துரோகம் செய்து இவரது முதுகில் குத்திய பொழுதே அவர் இறந்து இருப்பர் ஆனால் தன்னுடைய மகனுக்காக தான் இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த மகனுக்காக உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார்.
இப்படி ஒரு அன்பான மகன் கிடைக்க காரணமான, இன்று வரை தினமும் வணங்கும் ஈசனுக்கு நன்றி சொன்னார்...
விழிகள் பேசும்.....