ammu2020
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -6
முதலில் யாழினி, “குமாரசாமி அய்யாவின் “ குமாரசாமி கார்மெண்ட்ஸ் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் தான் வேலைக்கு போனார் அங்கு அவர் ஆடை தைக்கும் பெண்களுக்கு சூப்பர்வைசர் ஆக வேலை செய்தார், அது மட்டுமின்றி அங்கு வித விதமான ஆடைகளை வடிமைத்து இருந்தார், புதுமைகளை புகுத்தி இருந்தார் ,இதனால் அந்த நிறுவனத்தில் லாபம் பல மடங்கு உயர்த்தது, அந்த அளவு அவர் தன்னோட திறமைகளை காட்டி இருந்தார்..
இவை அனைத்தையும் குமாரசாமி அய்யா காதுகளை கூட எட்டியது..
தன்னுடைய பையன்கள், மருமகளின் பொறுப்பு அற்ற தன்மை, ஆடம்பரம் இதனால் தான் பரம்பரை பரம்பரையாக காட்டி காத்த தொழில் மற்றும் பாரம்பரியம் தனக்கு பிறகு, இல்லை இல்லை தன்னோட கண்ணு முன்னாடியே அழிந்து விடுமோ என்று பயந்தவர் , யாழினி மூலம் தனது நிறுவனத்தில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களை நெனைத்து சந்தோச பட்டவர், யாழினியை பயன்படுத்தி தனது தொழிலில் செய்த மாற்றதை, தன்னோட வீட்டிலும் செய்ய நினைத்தார்..
யாழினி கொண்டுள்ள வேலை நேர்த்தி, நிர்வாக திறமை, சுறுசுறுப்பு, வேகம், அறிவு மட்டும் இன்றி அவரது பல கலைகள் பற்றி கேள்வி பட்ட, குமாரசாமி அய்யா தனது வீட்டில் உள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கொஞ்சம் அனைதையும் முடிந்த அளவு கற்று தருமாறு யாழினிடம் கூறினார்,
தனக்கு பிறகு தன்னோட தொழிலை கட்டிக்காக்க தனது யாரவது வீட்டில் ஒருவராது உருவாக வேண்டும் என்று ஆசை பட்டார் அந்த நல்ல மனிதர்..
யாழினியை ஒருநாள் கூப்பிட்டு பேசினார், “ அம்மாடி உன்னோட நிர்வாக திறமைய பார்த்து ரொம்ப ஆச்சரியமா, வியப்பா இருக்குமா எனக்கு..
இதை எல்லாம் எங்கமா கத்துகிட்ட என்று கெட்டவரிடம்” அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க அய்யா, அதெல்லாம் எங்க அம்மா எனக்கு சின்ன பிள்ளைல இருந்து கற்று கொடுத்தது அதுவும் இல்லாம, ஏதோ என்னோட மனசுக்கு தோன்றியதை செஞ்சேன் அவ்வளவு தான் என்றார்..
இல்லையேமா உன்னை பார்த்த எனக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு தோணுது மா, உன்னோட தோற்றம், கம்பிரம் நடை இப்படி எல்லாமே எங்கையோ, யாரு கிட்டவோ பார்த்த நியாபகம்.....
யாழினியை பார்க்கும் பொழுது எல்லாம் அவரால் தன்னிடம் மாத சம்பளம் வாங்கும் பெண்ணாக பார்க்கவே முடியவில்லை,
அவரை ஒரு சாதாரண பெண்ணாக கூட நினைக்க முடியவில்லை அப்படி ஒரு தோற்றம் கொண்டு இருந்தார் யாழினி..
உண்மையா சொல்லுமா நீ யாரு மா? உன்னோட சொந்த ஊரு எது? உங்க அப்பா அம்மா யாரு? எங்க இருக்காங்க? என்ன பன்றாங்க?
உன்னோட வீட்டுக்காரரை எப்படி தெரியும் யாரு? அவரை பத்தியாது கொஞ்சம் சொல்லுமா என்று கேட்க,
யாழினியோ அய்யா நான் ஒரு சாதாரண குடும்பத்த சேர்ந்த பொண்ணு, ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தேன் அதனால் தான் எங்க அம்மா எங்களுக்கு எல்லாதையும் கற்று தந்தார், வாழ்க்கைல நாங்க கஷ்ட படக்கூடாது என்று, அவோளோ தான் மற்றபடி வேற எதுவும் தயவுசெய்து என்கிட்ட கெடக்காதிங்க,
என்னோட பொண்ணுகளுக்கே எங்கள பற்றி தெரியாது, ஏன்னா அவுங்களுக்கு எங்களை பற்றி எங்க கஷ்டமான வாழ்க்கை பற்றி எதுவும் தெரிஞ்சா கவலைபடுவாங்க, என்மேல பரிதாப படுவாங்க, நான் அவுங்கள தைரியமா வளர்க்க நெனைக்கிறேன், இப்போது வரை அவுங்க கிட்ட கண்டிப்பாக ஒரு வாழ்க்கை முன் மாதிரியாவே இருக்கேன்... அவுங்க என்மேல, என்னை பரிதாப பார்வை பார்ப்பது பிடிக்கல,
எங்க அம்மா என்னை எப்படி வளர்த்தங்களோ அப்படியே அவுங்கள வளர்க்க நினைக்கிறேன், அவுங்களுக்கு எனக்கு தெரிஞ்ச கலைகள் எல்லாமே நன்றாகவே தெரியும் என்றார் அவர், எனக்கு என பொண்ணுக இளவரசி மாதிரி வாழனும், வாழுவங்க எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொன்னார்.. ( இந்த அம்மவோட பேச்சை கேட்டு எனக்கே கண்ணு கலங்கிடுச்சு மக்கா )
இந்த மாதிரி தாயோட வயிற்றில் பிறக்க அந்த பொண்ணுக கொடுத்து வச்சு இருக்கணும், அந்த பொண்ணுக எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் தானும் அதுக்கு உறுதுணையாக இருப்பதாக மனதுக்குள் சத்தியம் செய்தார்...
சரி விடுமா உன்னோட நல்ல மனசு மாதிரியே எல்லாம் நடக்கும் உனக்கு எப்போ உன்னை பற்றி சொல்ல தோணுதோ அப்ப சொல்லு கேட்குறேன்,
இப்ப எனக்கு ஒரு பெரிய உதவி பண்ணு முடியுமா உன்னால?
என்னோட வீட்டு பெண்களுக்கு நீ கொஞ்சம் உனக்கு தெரிஞ்ச விஷயங்களை கத்து கொடுமா,
ஏன் என்றால் எனக்கு பிறகு என்னோட தொழில் வாரிசு யாரவது வேணும் மா, அதனால அவுங்களுக்கி கத்து கொடுமா என்றார்..
யாழினி முதலில் முடியவே முடியாது என்று மறுத்தார், ஏன் என்றால் அவர்கள் இவளை விட வசதியான, கவுரவமான குடும்பத்து பெண்கள், அவர்கள் போய் எப்படி தன்னிடம், அவர்களது கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணிடம் எப்படி கற்று கொள்ள சம்மதிப்பார்களா? என்று பல விஷயங்களை யோசித்தவர் முடியவே முடியாது என்று மறுத்தார் .
மேலும் இதனால் தன்னோட பெண்களுக்கு கூட பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு, அய்யா ரொம்ப நல்லவர் தான் ஆனால் அவுங்க குடும்ப நபர்கள் குணம் எப்படியோ என நினைத்தவர்,
அதை குமாரசாமி அய்யாவிடம் கூட தான் யோசிப்பதை மறக்காமல் சொன்னார்...
அதைகேட்ட அவர் “நீ அதை பற்றி எல்லாம் கவலைபடாதமா” நான் அவர்களுக்கு புரிய வைப்பேன், என்னோட பேச்சுக்கு அங்க யாரும் மதிப்பு கொடுப்பாங்க, என்றவர் மேலும்,
அம்மாடி என்னோட பசங்க ரொம்ப நல்லவுங்க தான் ஆனால் என்னோட மருமகள் எல்லாருக்கும் என்னோட சொத்துகளை அழிக்க தெரியுதே தவிர, அதை எப்படி நேர்தியா உன்ன மாதிரி காப்பாத்த தெரியல? என்னோட மகன்களுக்கு நிர்வாக திறமை போதலைமா, அவுங்க பொண்டாட்டிகள் பண்றது தெரிஞ்சும் எனக்காக சண்டை போடாம இருக்காங்க மா...
மேலும் என்னோட மனைவி “ சிவகாமி அம்மா தான் அவுங்கள இப்ப வழி நடத்துறாங்க மா, ஆனால் அவுங்க அந்த காலத்து மனுஷினால, அவுங்களுக்கு இப்ப இருக்க உங்கள மாதிரி பொண்ணுக மனநிலை தெரியல அதான் அவுங்க வயசு உள்ள நீ சொன்ன கொஞ்சம் கத்துப்பாங்கனு நானும், என்னோட சிவகாமி அம்மாவும் நெனைக்குறோம் மா என்றார்
உன்னை என்னோட சொந்த மகளாகவே நெனைச்சி கேட்க்குறேன் செய்வியா என்றவர்,
யாழினியை அப்படி இப்படி என்று பேசி மிகவும் கட்டாயப்படுத்தி தன்னோட வீட்டுக்கு வர வச்சு சொல்லி தர வைத்தார்... ஆனால் அவரது குடும்ப பெண்களுக்கு தான் யாழினியை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை “
குமாரசாமி அய்யா வீட்டில் இருக்கும் பொழுது கற்று கொள்ளுவது போல நடிப்பவர்கள், அவர் இல்லாத பொழுது யாழினியை மிகவும் கொடுமை படுத்தினார்கள் என்றே சொல்லலாம்.. அவருடைய அழகு, குணம், சாந்தமான முகம்,சந்தன நிறம், தோற்றம் திறமை, பழகும் விதம் குமாரசாமி அய்யா அவர் மீது காட்டிய பாசம் மற்றும் அக்கறை, அனைத்துமே அவர்களை பொறாமை பட வைத்தது...
ஏதோ ஒரு சிறப்பு அவரிடம் இருப்பதை கண்டு கொண்ட அவர்கள், போயும் போயும் ஒரு வேலைக்காரி கிட்ட நாங்க கத்துக்கணுமா என்று அவரை வீட்டு வேலைகள் செய்ய வைத்தனர்,
குமாரசாமி, சிவகாமி மற்றும் தன்னோட கணவர் முன்பு நல்லவர் போல நடிப்பவர்கள் அவர்கள் வீட்டை விட்டு சென்ற உடனே யாழினியை கொடுமை படுத்துவார்கள், அதில் ரொம்ப முக்கியமானவர் அவருடைய கடைசி மருமகள் “ குணவதி தான் “ ரொம்ப முக்கியமான நபர்,
பெயரில் மட்டுமே குணத்தை வைத்து இருக்கும் குணவதிக்கு தன்னோட வயதை உடைய யாழினியை கண்டாலே பொறுக்காது..
எப்பொழுதும் யாழினியை ஏதாவது சொல்லி கொண்டே இருப்பர்,
யாழினியும் குமாரசாமி அய்யாவிற்காகவும், அவரோட குடும்பத்தில் தன்னால் குழப்பம் வேண்டாம் என்றே பொறுமையாக இருந்தார்.. மேலும் இவர் சொல்லி கொடுக்கும் கலைகளை பிசுறு இன்றி கற்று கொண்டு வந்தது இரண்டு ஜீவன்கள் மட்டும் தான்..
அது வேறு யாரும் அல்ல கெட்ட குணம் மட்டுமே கொண்டுள்ள குணவதியோட பொண்ணுக மீரா மற்றும் மித்ரா தான்,
அவர்கள் இருவருமே குணத்தில் அவுங்க தாத்தா குமாரசாமி மற்றும் பாட்டி சிவகாமியை கொண்டு இருந்தனர்..
அந்த இரு சிறு பெண்களுமே யாழினி மகள்களின் வயதை உடையவர்கள் தான் மேலும் யாழினியோட பெண்களுடன் கூட நெருங்கிய தோழிகளாய் பழகி கொண்டு இருந்தனர்..
அந்த ரெண்டு பெண்களுக்குமே தனக்கு தெரிந்த அனைத்துமே கற்று கொடுத்தார் யாழினி...
அந்த பெண்களும் யாழினியம்மா என்று உருகினார்கள் அதை பார்த்து குமாரசாமி தம்பதி உருகினார்கள் என்றால், குணவதி கருகினாள்..
பெற்ற தாய்க்கு பிடிக்காத அவ கூட என்ன பழக்கம் இவர்களுக்கு, அந்த வேலைக்காரியை பார்த்து அம்மா அம்மா யாழினி அம்மானு உருகுதுக என்று பொருமினாள்...
இவள் அம்மாவாக தன்னோட கடமையை ஒழுங்கா செஞ்சா, அவுங்க ஏன் யாழினியை கொண்டாடணும்,
குணவதி பெற்றது மட்டும் தான் வளர்த்தது எல்லாமே அவுங்க பாட்டி சிவகாமி மற்றும் தாத்தா குமாரசாமி தான்..
இவளுக்கு நல்லா சாப்பிடுட்டு தூக்கவே நேரம் போதாது ...எப்ப பாரு நகை, பட்டு சேலை வாங்கி பணத்தை செலவழிக்க நேரமே போதவில்லை இதில் எங்கே பொண்ணுகள வளர்க்க...
இவளது பொண்ணுகளை வளர்க்கும் பொறுப்பை குமாரசாமி, சிவகாமி தபதியர் எடுத்து கொள்ள, அவர்களுக்கு பல நல்ல விஷயங்களை யாழினி தாயாக இருந்து கற்று தந்தார் எனலாம்..
எனவே யாழினி தனக்கும், தன்னோட குடும்பத்துக்கும், குறிப்பாக அவளது மகள்களுக்கு, செய்த நல்லா விஷயங்களை யோசிக்காத இந்த ஐந்து அறிவு குணவதி ஜீவன், யாழினி மீது கோபமாக வே இருந்தது... .
ஏழையாக இருந்து கொண்டு இவளுக்கு எதுக்கு இவோலோ திறமை “ ஏதோ சமஸ்தான இளவரசி மாதிரி நினைப்பு அவளுக்கு நடை கூட அப்படி தான், இருக்கு, சாப்பிடுறது பழைய சோறுனாலும் குளிக்குறது பன்னிரு மாதிரி பன்றா, புருஷன் இல்லாத பொம்பள மாதிரியா இருக்கா, இப்படி அவரது தோற்றதை கூட விடவில்லை அந்த விட்டு பெண்கள்,
இத்தனைக்கும் யாழினி கட்டுவது சாதாரண பருத்தி வெள்ளை புடவை தான், நெற்றியில் பொட்டு வைக்க கூட மாட்டார் .
கணவன் இல்லாத தன்னை யாரும் குறை சொல்லவோ, தவறாக நடந்து கொள்ள கூடாது என்றே நினைத்தவர் தன்னால் தோற்றத்தில் எவ்ளோ முதுமை மற்றும் எளிமையவே காட்ட நெனைச்சார் ஆனால் அவர் என்ன செய்தாலும் அவருடைய 38 வயதும், அவருடைய உடல் அமைப்பும், வாழ்க்கை முறையும் அவரை இளமையோடும், அழகோடு காட்டி மற்ற பெண்களை அவர் மீது பொறாமை பட வைத்தது எனலாம்..
என்னமோ இவள அவரு தாங்குறதும் இந்த அம்மா அப்படியே அய்யா அய்யானு உருகுறதும், என்று யாழினி மீது வன்மம் கொண்டாள் “ குணவதி”
யாழினி எப்பொழுது தனியாக சிக்குவார் என்று பார்த்து கொண்டு இருந்தாள் அந்த வீட்டு இளைய மருமகள் குணவதி...
குணவதி எதிர் பார்த்த சந்தர்ப்பமும் அவளுக்கு கூடிய விரைவிலே கிடைத்தது “ அதை அவள் நன்கு பயன்படுத்தி கொண்டாள் என்று கூட சொல்லலாம்...
அப்பொழுது விதுஷா பள்ளி இறுதி ஆண்டு படித்து கொண்டு இருந்தாள் அவள் அக்கா Bsc பேஷன் டிசைனிங் இறுதி ஆண்டு, மதுரையில் உள்ள கல்லூரியில் படித்தாள்..
அன்று சனிக்கிழமை என்பதால் யாழினி இன் பிள்ளைகள் விடுமுறையில் வீட்டில் இருந்தனர்.. பக்கத்து விட்டு பிள்ளைகளோடு விளையாடி கொண்டு இருந்தனர்,
அவர்கள் எப்பொழுதுமே தங்களை விட சின்ன குழந்தைகளுடன் தான் சிரித்து விளையாடுவது வழக்கம்,
யாழினி சீக்கிரமே சமையல் வேலைகளை முடித்தவர், தனது பொண்ணுகளை கூப்பிட்ட போனார், அப்பொழுது பக்கத்து வீட்டு பிள்ளைகள் இருவரை ஏதோ கிண்டல் செய்து பாட்டு பாடி கொண்டு இருந்தார்கள்... அதை ரசித்தவர் தன்னுடைய பிள்ளைகளின் அழகை ரசித்தார்..
சின்னவள் தோற்றம் மற்றும் குணம், அனைத்துமே முழுக்க முழுக்க குட்டி யாழினி போல தான் இருந்தது..
பெரியவள் குணம் அவர்களது அப்பா போல அமைதி...பயந்த சுபாவம்... தோற்றம் மட்டும் யாழினி போலவே இருந்தது...
மொத்தத்தில் இருவருமே பேரழகியே.... எந்த ஒரு சமஸ்தான இளவரசனும் பார்த்தால் மயங்கி விட கூடிய அழகிகள் “ ஆனால் எளிமையான தோற்றம் கொண்டு இயற்கை அழகுடன் இருந்தார்கள்....
ஒரு நிமிஷம் தனது பெண்களின் அழகில் லயித்தவர், சட்டென்று நியாபகம் வந்தவராக அவர்களை வீட்டுக்கு சாப்பிட வரும்படி கூப்பிட்டார்..
யாழினிக்கு , காலையில் இருந்தே ஒரு மாதிரி இருந்தது...ஏதோ ஒரு விபரீதம் நடக்க போவதை போல உணர்ந்தார்... மேலும் தான் ரொம்ப நாள் உயிருடன் இருக்க மாட்டோம் என்பதை முன்பே தெரிந்து வைத்து இருந்தவர், தன்னுடைய மகள்களை தான் முடிந்த அளவு நல்ல முறையில் வாழ்க்கை வாழ வைத்த பின்பே கடவுள் தன்னை கூப்பிடுவார் என்று நெனைத்து இருந்தார்..
ஆனாலும் இன்று ஏதோ நடக்க போவதை போல உணர்ந்தவர், குமாரசாமி அய்யாவிடம் தான் கொடுத்த மஞ்சள் பையை பற்றி சில விஷயங்கள் நேரில் பார்த்து சொல்ல குமாரசாமி வீட்டுக்கு போக நினைத்தவர்... அதற்கு முன்பு சிறிது மகள்களுக்கு சில விஷயங்களை கூற நினைத்தார்... ஆனால் அது அவரை பற்றியோ, அவர்களது அப்பாவை பற்றியோ உண்மைகள் அல்ல...
தன்னோட மகள்களுக்கு பிடித்த உணவை செய்தவர் அவர்களிடம் பேசி கொண்டே, அவர் கையாலே ஊட்டிவிட்டவர், அவர்களுக்கு அப்பொழுது கூட தன்னோட வாழ்க்கையில் நடந்த முக்கியமான எதையுமே சொல்ல தோன்றவில்லை... ஆனால் அவர்கள் வாழ்க்கையை எப்படி வாழனும் என்று சொன்னார்.
நீங்கள் இருவரும் எப்பவும் ஒற்றுமையாக இருக்கணும், ஒருத்தர ஒருத்தர் விட்டு கொடுக்க கூடாது, நல்லா படிக்கணும் ஒழுக்கமா வாழனும்..
வித்யாமா நீ ஏற்கனவே BSC பேஷன் டிசைனிங் படிப்ப முடிக்க போற, அதனால் நீ முடிச்ச உடனே வேற எங்கையும் வேலைக்கு போக வேண்டாம்மா, நம்ம குமாரசாமி அய்யா கம்பனிலேயே சேர்ந்து முதலில் வேலை பாரு, பிறகு ஒரு அனுபவம் கிடைச்ச பிறகு வேற இடத்தில் சேர்ந்துவிடுகிறேன் . என்றவர்..
தனது அம்மாவ இது!!!! நம்மகிட்ட இப்படி எல்லாம் பேசுறது, என்று தாயை போலவே அறிவில் சிறந்து இருக்கும் சின்ன பொண்ணு விதுசா மனசுக்குள்ள நினைத்த நேரம் சட்டென்று சின்ன மகள் பக்கம் திருப்பியவர்,
“ என்ன விதுக்குட்டி நம்ம அம்மாவா இது என்னைக்கும் இல்லாம இன்னைக்கு வந்து நம்ம கிட்ட இப்படி பேசுறாங்கனு, பார்க்குரியாமா?
என்னமா பண்றது உங்கள எவ்ளோ நாள் தான் என்கிட்ட இருந்து தள்ளியே வைக்கிறது, எவ்ளோ நாலு தான் கண்டிப்பாக இருக்குறது,
உங்களுக்கும் வயசு குடிக்கிட்டே போகுது, வித்யா கல்லூரி படிப்ப முடிக்க போறா, விதுக்குட்டி பள்ளி படிப்பை முடிச்சுட்டு கல்லூரிக்கு போக போறா, உங்களுகும் மற்ற அம்மா மாதிரி நானும், உங்க கிட்ட அன்பா, ஆசையா பேசனுமுனு தோணும்ல மா.. அதனால் தான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி மாற நெனச்சேன்...
உங்க கிட்ட நான் மனசு விட்டு பேசலைனாலும், உங்கள பற்றி எனக்கு எல்லாமே தெரியும் மா, ஏன் என்றால் நீங்க தான் என்னோட உலகமே.
.உங்களுக்காக தான் நான் என்னோட உயிர கைல பிடிச்சுக்கிட்டு இருந்தேன் இல்லைனா உங்க அப்பா போனப்பவே போய் இருப்பேன்...
எல்லாமே உங்களுக்காக தான் மா , நீங்க இல்லைனா நான் இல்லை..
நான் உங்க கிட்ட கடுமை, கண்டிப்பு காட்டாம வளர்ந்து இருந்தா, நீங்க இவ்வளவு தூரம் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து இருப்பிங்களா? என்று கேட்டால் சந்தேகம் தான் மா..
உங்க அப்பா இல்லாம ஒரு தனி மனுசியா உங்களை வளர்க்க இந்த கண்டிப்பு எனக்கு தேவை பட்டுச்சு, நான் எதிர்பார்த்த பக்குவம் முதிர்ச்சி என் பிள்ளைகளிடம் இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம்..
இப்ப தான் நான் உங்கள பெத்ததோட பலனை அடைஞ்ச மாதிரி இருக்கு,
இனி உங்க வாழ்க்கையை நீங்க பார்த்துப்பிங்க நான் தேவை பட மாட்டேன்,
நான் நல்லா இருந்தா உங்க வளர்ச்சியை வேடிக்கை பார்த்து சந்தோச படுவேன் மா...
என்ன விதுக்குட்டி நான் சொல்லுறது சரி தானே? உன்னோட லட்சியம் அப்படியே தானே இருக்கு மாறலையே, “ உங்க வித்யா அக்கா கிட்ட சொல்லுவியே எப்பவும் “ நான் இந்தியாவிலே பெரிய பேஷன் மேக்கர் ஆவேன் நெறைய பணம் சம்மதிச்சு உன்னையும், அம்மாவையும் ராணி மாதிரி வச்சுப்பேன்னு.. இப்ப சொல்லு... பார்ப்போம் என்றார்...சிரித்த முகத்துடன்...
மீண்டும் விது குட்டியிடம்,
“என்னோட பொண்ணுக பெரிய பொண்ணுக ஆகிட்டாங்க, உனக்கு இப்போது 17 வயது, உங்க அக்காக்கு 20 வயது, அதனால் அவுங்க அவுங்க வாழ்க்கைல பொறுப்பு என்னனு புரிஞ்சு இருக்கும்.. என்ன செய்யணும், செய்ய கூடாது என்று தெரியும் அதனால், இனிமே நான் உங்க கிட்ட அன்பா தான் நடப்பேன் என்றவரை பார்த்து இருவரும் அமைதியா இருந்தனர்..
.
யாழினி தன்னோட பொண்ணுகள நல்லா வளர்த்து இருக்காங்கனு எங்க போனாலும் நல்லா பேரு வாங்கி தரணும்...
இன்னும் கொஞ்ச வருசத்துல உங்களுக்கு கல்யாண வயசு வந்துடும், அதுவரை நல்லா படிச்சு உங்களுக்கு என்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திகிரனும் மா,
யாரையும் நம்பி இருக்க கூடாது, நல்லவங்க கேட்டவுங்கன்னு பாகுபாடு பார்த்து பழகுங்க எல்லாரையும் நல்லவுங்கனு நம்பாதீங்க, பொய் சொல்லவோ , திருடவோ, ஏமாற்றவோ கூடாது...
இன்னொரு முக்கியமான விஷயம் என்னனா,
இனி போற காலத்துல உங்க வாழ்க்கையில் காதல் வரலாம் ஆனால் வராமலும் போகலாம் ஆனால் அப்படி வந்தாள் ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையாக இருக்கணும், உங்க கிட்ட ஒளிவு மறைவே இருக்க கூடாது, எதையுமே மறைக்க கூடாது..
காதல் பண்றது தப்பு இல்லை ஆனால் அந்த காதலுக்கு உரியவர் நல்லவராக, முக்கியமாக ஸ்ரீராமராக இருக்கணும் உங்க அப்பா மாதிரி, உங்க ஒருத்திய மட்டும் தான் மனைவியாக அவரு நெனைச்சு வாழனும்...
பணம், எல்லாம் ஒரு விஷயம் இல்லாமா நல்ல குணம் வேண்டும். உங்களை கடைசி வரை நல்லாபடியா வச்சு காப்பாத்துற ஆளாக இருக்கணும் என்று நெறைய பேசினார்... இது தான் அவரது கடைசி பேச்சு என்று தெரியாமல்...
ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா அன்பா இருக்கணும்...
நீங்க இருவரும், வாழும் காலம் முழுவதும் ஒண்ணா, ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருப்பேனு எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க...
அம்மா இதுவரை சொன்னதை ஆச்சரியமா பார்த்தாலும் இருவரும் சத்தியம் பண்ண தவறவில்லை...
சரி இப்ப வரை சீரியஸாக பேசியாச்சு இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவோம்மா, என்றவர்.. சின்ன மகளை பார்த்து குறுப்பாக சிரித்தவர்...
விதுக்குட்டி, “நீ அந்த பக்கத்து விட்டு பையன் அப்பறம் அந்த பொண்ண பார்த்து ஏதோ பாட்டு பாடுனேல அதை பாடுமா என்றார்..
அம்மா எப்போ இதை கவனிச்சாங்க என்று யோசித்தவள் “ அம்மா அது வந்து.... என்று இழுக்க...
என்னமா விது அம்மா ஒன்னும் சொல்ல சொல்ல மாட்டேன் “ சும்மா பாடுமா என்றார் ஆர்வமாக,
அம்மா அந்த பையன் பேரு “ மனு மூர்த்தி “ ஆனால் அவன் கிட்ட உன்னோட பேரு கேட்ட, மண்ணு முட்டி என்று சொல்லுவான் மா
அப்பறம் அந்த பொண்ணு பேரு சங்கவி அவளை நாங்க “சங்கி “ என்று கூப்பிடுவோம் மா
நேத்து ஒரு பாட்டு பார்த்தேன் மா அதை வச்சு அவுங்கள கிண்டல் பண்ணு பாடினேன் மா...
அது என்ன பாட்டுனா...
“ ஏன் பேரு மண்ணு முட்டி ( மனு மூர்த்தி ) நான் போறேன் தேரு முட்டி....
அப்பறம் அந்த சங்கவி பொண்ணுக்கு
ஏன்பேரு சங்கி (சங்கவி ) தானே நான் ஒரு மங்கி (குரங்கு) தானே என்று அவள் பாடி முடிக்க...
அவளது அம்மா சிரித்து கொண்டே” ஏய் வாலு “ உன்னை,... இங்க வா உன்னை என்ன பண்றேன்னு சொல்லி “ அவளது கன்னத்துல முத்தம் வைத்தவர், வித்யா வை அருகில் அழைத்து காட்டி பிடித்து முத்தம் கொடுத்தார்..
பின்பு சிறிது நேரம் அவர்க்களுடன் பேசி சிரித்து விட்டு சாப்பாடு ஊட்டி முடித்தவர்...
குமாரசாமி அய்யாவின் வீட்டுக்கு அவரை பார்க்க போவதாக சொல்லி விட்டு சென்றார்..
இது தான் அவர்கள் தன்னோட மகள்களுக்கு கொடுத்த கடைசி முத்தம் என்றும்,
தான் போகும் இடத்தில் எமன் எகாதலமிட்டு அமர்ந்து இருப்பது தெரியாமல்...
இதுவரை கண்டிப்பை மட்டுமே காட்டி வந்த தாய் அன்பாக பேசிய பேச்சுகளும், அறிவுரைகளும், நடந்து கொண்ட விதம் , அவர் சிரித்த போது தங்களை போலவே விழும் கன்ன குழி, சிரிச்ச போது அவரது அழகான காந்த கண்ணும் சேர்ந்து சிரித்தது... அவர் கொடுத்த முத்தம் .... இவை எல்லாவற்றையும் நெனைத்து மகிழ்ச்சியில் ஆச்சர்யமாக தாய் போகும் திசையவே பார்த்தனர்.. அவர்கள் அம்மா உயிருடன் திரும்பி வர போவது தெரியாமல்..
அம்மா வந்த உடன் தாங்கள் அம்மாவிடம் இது வரை தங்களது மனதில், அவரிடம் பேச வேண்டும் என்று இதுவரை நினைத்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல, அவர்களது அன்பு அம்மாவின் வருகையை நெனைத்து வாசலை பார்த்து காத்து கொண்டு இருந்தார்கள், சகோதரிகள், வித்யாவும் மற்றும் விதுஷாவும் ...
விழிகள் தொலையும்..