ammu2020
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -11
தன்னுடைய மன கட்டுப்பாட்டையும் மீறி.... தன்னோட அக்கா தன்னை விட மூத்தவள் என்பதையும் மறந்து.... வித்யாவை கன்னத்தில் அறைய வைத்து இருந்தது.. வித்யா சொன்ன வார்த்தைகள் .... அதுவரை தங்கையாக நடந்து கொண்டு இருந்த விதுசா.. வித்யா கேட்ட கேள்வியால்.....சட்டென்று தங்களது அன்னை யாழினியாக மாறி அவளை தன்னை மறந்து அடித்து இருந்தாள்.....
மேலும் அதே கோபத்தில்.....தன்னையும் மீறி வந்த ஆத்திரத்தில் அறிவை இழந்தவளாக...விட கூடாத வார்த்தைகளை விட்டாள் “ உனக்கு அந்த பொண்ணோட மோசமான நிலைமையை பார்த்த பின்னும் அவளோட இடத்தில் நீ இருந்தா எப்படி இருக்குமுன்னு கேட்க்குற..... சரி இப்ப உனக்கு அந்த மாதிரி உனக்கு நடந்தால்.... அந்த நிலையில் நீ இருந்தால் நான் என்ன செய்யவேணு தெரிஞ்சுக்கணும் அவோளோ தானே....
அந்த பொண்ணு இடத்தில் நீ இருந்தால்......கண்டிப்பாக உன்னை கொன்னுடுவேன்....உன்னை அப்படி ஒரு நிலைமைக்கு காரணமான, உன்னை ஏமாற்றியவனையும் கொன்னுடுவேன்.... ஏன்னா நான் யாழினி அம்மா வளர்த்த பொண்ணு..... நான் எப்பொழுதும் நல்ல காதலுக்கு எதிரி இல்லை ஆனால் காதல் என்ற பேருல இப்படி அந்த பொண்ணு மாதிரி அசிங்கம் பண்ணுறவுங்கள சும்மா விட மாட்டேன்.. காதலால் நம்ம அம்மா பட்ட கஷ்டம் போதும் நீ இன்னொரு யாழினியா உருவாக வேண்டாம்.... .என்றாள் சற்று ஆவேசமாக....
இது எல்லாமே நான் மட்டும் பேசுற பேச்சு இல்லை இது நம்ம அம்மா யாழினி உயிரோட இருந்து இருந்தால் இதை தான் சொல்லி இருப்பாங்க.....அதுவும் இல்லாம இது உனக்கு மட்டும் இல்லை எனக்கும் சேர்த்து தான் சொல்லுறேன்.. ஆனால் அந்த அளவு நிலைமைக்கு நாம போக மாட்டோம் என்று நான் நினைக்கிறேன்....ஏன்னா அந்த அளவு நம்ம அம்மா நம்மள வளர்க்கவில்லை..... என்று தான் சொல்ல வேண்டிய பதிலை சொல்லிமுடித்தவள் சற்றே ஆவேசம் குறைத்தவளாக.....
அப்பொழுது தான் தனது அக்காவை கவனித்தாள்...தான் இவ்வளவு நேரம் ஆவேசமாக பேசியும்... அதற்கு முன்பு அறைந்த அறைக்கும் தன்னோட அக்காவிடம் இருந்து இதுவரை எந்த ஒரு எதிர்வினையும்.....எந்த ஒரு பதிலும் வராததையும்...
ஆனால் அங்கு தனது தங்கை கையால் அடி வாங்கியவளோ.... தன்னுடைய தங்கையின் ஆவேச பேச்சையும்...கேட்ட பின்பும் எந்த ஒரு பதிலும்... எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல்.... அமைதியாக எதையோ மனதிற்குள் யோசித்து கொண்டு தலை குனிந்து நிற்க....
விதுஷாவோ தன்னோட அக்காவின் இந்த மௌனத்தை பார்த்து...தலை குனிவை பார்த்து.... அப்பொழுது தான் சுயநினைவு வந்தவளாக..... ஒரு வேளை நாம் தான் ஏதோ தவறாக பேசிவிட்டோம் போல... என்று தனது தவறை உணர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல்... அக்காவை அடித்துவிட்டு ஆத்திரத்தில் வேறு தன்னை மறந்து பேசிய முட்டாள் தனமான பேச்சுக்களை நினைத்து.... குற்ற உணர்ச்சியில் ...இனி அக்காவை எப்படி சமாதான படுத்துவது என்று தெரியாமல் கலங்கி நிற்க.....
அங்கு சிறிது நேரம் இருவருக்கும் இடையே ஒரு மௌன போராட்டம் நடந்து கொண்டு இருந்தது....
முதலில் பேசியவள் விதுஷா தான்..... தன்னுடைய தவறை உணர்ந்து.... விதுகா என்ன வார்த்தை சொல்லிடக்கா.... உன்னை பத்தி நீயே இப்படி தப்பா பேசலாமா.... .... உன்னை நீயே தவறாக யோசிக்கலாமா..... அந்த மாதிரியா நம்ம அம்மா நம்மள வளர்த்தாங்க..... சாகும் பொழுது கூட ஒழுக்கமா வாழணுமுன்னு தானே சொன்னாங்கக்கா நம்ம அம்மா.... சத்தியம் கூட வாங்கினங்களே.... அப்படிப்பட்ட அம்மாவுக்கு பெறந்துட்டு இப்படி யாரோ ஒரு பொண்ணு தெரியாம பண்ண தப்பை நீயும் பண்ணினால் எப்படி இருக்குமுன்னு என்கிட்டயே கேள்வி கேட்க்குற..... இப்பவரை அந்த பொண்ணோட நிலைமையவே நினைச்சாலே என்னால தாங்க முடியல....... இப்போ என்னடானா நீயே அந்த பொண்ணு இடத்தில் இருந்தால் எப்படி இருக்குமுன்னு கேட்க்குற..... மனசு வலிக்குதுக்கா........ நம்மள நம்ம அம்மா எப்படி எல்லாம் வாழ வைக்க நெனைச்சாங்கன்னு தெரியாதா என்ன.... சாகும் போது கூட அன்றைக்கே சொன்னாங்களே... அப்படி இருக்கும் பொழுது நீ இப்படி ஒரு தப்பான வழிக்கு போனால் எப்படி இருக்குமுன்னு என்கிட்டவே கேட்டேனே எனக்கு எப்படி இருக்கும் சொல்லு ... அப்படியே மனசு வலிக்குதுகா.... இப்படியே உயிரு போயிடாதான்னு இருக்கு கா...... உன்னை அந்த பொண்ணு மாதிரி பார்க்கவா அம்மா இவ்வளவு நாளா நம்மள கஷ்ட்டப்பட்டு வளர்த்தாங்க சொல்லு..... அதனால் தான் வார்த்தைகளை பொறுக்க முடியாமல் என்னை அறியாமல் உன்னை இப்படி அடிச்சுட்டேன்....அதுவும் இல்லாம ஆத்திரத்தில் அறிவு இல்லாம பேசிட்டேன்..... என்னை மன்னிச்சுடுகா... என்னால தாங்க முடியலக்கா..... என்று விசும்பி விசும்பி அழுக ஆரம்பிக்க.. .
அதுவரை விதுஷா பேச்சை... அவள் அடித்த காரணத்திற்காண விளக்கத்தை அமைதியாக தலை குனிந்து கேட்டு கொண்டு இருந்தவள்.... சட்டென்று தனது தங்கையின் அழுகையை கேட்டு தலை நிமிர்ந்தவள்..... அவளது தங்கையின் அழுகையை தாங்க முடியாமல்...அவள் அருகில் சென்று அவளை அணைத்து ஆறுதல் சொன்னாள்.....
ஏய் விது குட்டி இதுக்கு போய் ஏன்டா அழகுற அக்கா சும்மா இப்படி சொன்னால் நீ என்ன சொல்லுறேன்னு பார்ப்போமுனு சொன்னேன்..... ஆனால் நீ இப்படி அம்மாவா மாறி சட்டென்று இப்படி ஒரு அறை விடுவேன்னு தெரிஞ்சு இருந்தால் சும்மா கூட சொல்லி இருக்க மாட்டேன்.... ஆத்தாடி ஒரு அறை என்றாலும் செம அறை.... ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன் பா என்று தனது அறை வாங்கிய கன்னத்தை தட வியவள் .... மேலும் அப்படியே அம்மாவாவே மாறிட்ட போல அடிக்கிறப்ப..... பேச்சு கூட அம்மா மாதிரி தான்.... எவ்வளவு நாளா இப்படி என்னை அடிக்கனுமுனு ஆசை பட்டியோ தெரியல ... இப்போ நானாகவே வந்து உன்கிட்ட வாய கொடுத்து வாங்கி கட்டிகிட்டேன் போல..... என இயல்பாக பேசி சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்ய........
ஆனால் அடித்தவளால் தான் அதை அவ்வளவு எளிதில் ஏற்று கொள்ள முடியாமல் திணறினாள்....அய்யோ அக்கா என்னை தயவுசெய்து செய்து மன்னித்து விடு....நான் வேண்டும் என்று உன்னை அறையவில்லை... . உன்னை கற்பனையில் கூட அந்த நிலைமையில் வைத்து பார்க்க முடியாமல்....மனசு தாங்காமல் தான் அடித்து விட்டேன் என்று மீண்டும் கதற ஆரம்பிக்க......
அதற்குள் வித்யாவோ தன்னுடைய அன்பு தங்கையை மீண்டும் அணைத்து அவளது கன்னங்களில் முத்த மழை பொழிந்தவள்.... ஏய் விது குட்டி இப்போ என்ன நடந்து போச்சுன்னு இவ்வளவு வருத்தப்பட்டு கதறி அழுகுற..... நான் சும்மா தான் உன்னை சீண்டி பார்க்க நெனைச்சு சொன்னேன்....நீ எப்படி நடந்துக்கிறேன்னு தெரிஞ்சுக்க தான் அப்படி பேசினேன்....இனிமே அந்த மாதிரி பேச மாட்டேன்.... இந்த அக்காவை மன்னிச்சுடும்மா.....
என்மேல நீ வச்சு இருக்க பாசத்தை நினைக்கும் போது எனக்கே ரொம்ப சந்தோசமா இருக்கு தெரியுமா...எனக்கு இப்படி ஒரு தங்கச்சியை கொடுத்த நம்மோட யாழினி அம்மாக்கு தான் நான் நன்றி சொல்லுவேன்... உன்னோட கோபத்தில்.... நீ உரிமையோடு அடிச்ச அடில..... நீ பேசுன பேச்சுல கூட கூட உன்னோட உண்மையான பாசத்தை நான் பார்த்தேன்.... என்றாள் வித்யா...
தன்னோட அக்காவின் பேச்சை கேட்டு நிமிர்ந்த விதுசா..... உண்மையிலே நானும் தான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் கா.... இந்த மாதிரி அக்கா கிடைக்க.....உன்னை விட வயசுல சின்னவ தப்பே பண்ணாத உன்னை திட்டுனதுக்கு.. அடிச்சதுக்கு நியாயமா நீயும் கோபபட்டு என்னை திருப்பி அடிச்சு, திட்டி இருக்கலாம்.. .ஆனால் நீ அப்படி எதுவுமே செய்யாம நான் அடிச்சதுக்கு நீயே நியாயம் சொல்லி கிட்டு சந்தோசமா எனக்கும் சேர்த்து சமாதானம் சொல்லுறியேக்கா..... எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்றாள் விதுஷா....
அதற்கு மேல் பேச்சை வளர்க்க நினைக்காத விதுஷா... இதற்கு மேல பேசினால் தேவை இல்லாத பிரச்சனை வந்து விடுமோ என பயந்து......
சரி சரி இப்படியே நாம ரெண்டு மாற்றி மாற்றி பெருமைபட்டு சந்தோசப் பட்டது போதும்........ இப்போவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு நாளைக்கு வேற நீ ஊருக்கு போகணும்ல..... சீக்கிரம் சாப்பிடுட்டு தூங்கலாம் என்றாள் வித்யா. .
ஆமாம் நீ சொல்லுறது சரி தான் நாளைக்கு ஊருக்கு போறதையே மறந்துட்டேன்..... என்று சொல்லி விட்டு தன்னோட அக்கா கையால் சமைத்த உணவை உண்டு விட்டு அக்கா மடியிலேயே தூங்கினாள்.....
விதுஷா தூங்கும் வரை அமைதியாக இருந்த வித்யா..... தனது தங்கையை மெதுவாக தலையணையில் படுக்கவைத்து விட்டு மெதுவாக எழுந்து...... வாசல் கதவை திறந்து வெளியே வந்தவள்..... வீட்டுக்கு வெளியே இருக்கும் திண்ணை போன்ற அமைப்பில் அமர்ந்து எதையோ யோசிக்க அவளது கண்களில் இருந்து தானாக கண்ணீர் வந்தது... .
வித்யா எதற்காக அழுக வேண்டும்....அதற்கு யாரு காரணம்..... விதுஷாவிடம் வித்யா ஏன் எதையோ மறைக்க வேண்டும் என்பதை விதி தான் சொல்ல வேண்டும்...
இவ்வாறு அன்று தனக்கும் தனது அக்காவுக்கும் நடத்த கடைசி சந்திப்பை நினைவு கூர்ந்தாள் விதுஷா.... ஒருவேளை அன்று நாம் பேசிய வார்த்தைகள் எதுவும் அவளை காயப்படுத்தி விட்டதா? இல்லையே அக்கா கூட எதுவும் கோப படலையே சாதாரணமாக தானே இருந்தாள்..... வேற எதுவும் சொல்ல நெனைச்சுட்டு... நாம எதுவும் சொல்லிடுவோமுனு பயந்து மறைச்சலானு தெரியலையே.... .என்று குழப்பினாள்... .ஆனால் அப்படினா மொத்தத்தில் அக்காவை பாத்து ரெண்டு மாசமா ஆகிடுச்சு.... போனில் பேசி ஒரு மாசம் ஆச்சு..... அவள் தங்கி இருந்த அறையை காலி செய்து அவள் சென்னைக்கு போய் 10 நாள் ஆகிடுச்சு.....
இப்படி என்கிட்டே சொல்ல முடியாத அளவுக்கு என்ன பிரச்சனை அவளுக்கு.... ஏன் இப்படி சென்னைக்கு திடிர்னு போனாள்... அங்க யாரு இருக்காங்க.....ரெண்டு மாசமா என்னை வந்து பார்க்க தோணல முடியல ஆனால் இப்ப சென்னை போய் இருக்கின்றாள் என்றாள் என்ன அர்த்தம் என்று யோசித்தவள்... .
சரி இப்போ யோசிச்சு ஒன்னும் பயன் இல்லை இன்னும் ரெண்டு நாட்களில் கல்லுரி இறுதி தேர்வு வருது.... அதை முடிச்சுட்டு அடுத்து என்ன பண்ணலாமுன்னு யோசிக்கலாம்..... என்று தனக்குள் சொல்லி கொண்டாள்.......
மேலும் அவள் அக்கா வேறு அவள் தங்கி இருந்த அறை உரிமையாளரிடம் சென்னைக்கு வேலை கிடைத்தபடியால் செல்வதாக தெளிவாக காரணம் சொல்லி இருந்ததால்... அவளுக்கு கொஞ்சம் பயம் நீங்கி இருந்தது.......
மேலும் அவள் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் அவளுடன் பணிபுரிந்த பெண்களிடம் கேட்டதில் அவள் எங்கு சென்று இருப்பாள் என்ற ஒரு யூகம் கிடைத்தது......
அவளது அக்காவின் அறை தோழி கவிதாக்கு மீண்டும் அழைத்து அக்காவுடன் பணி புரிந்த பெண்கள் சொன்ன விவரங்களை கேட்டு உறுதி செய்தவள்... மேலும் ஒரு சில விவரங்களும் அவளுக்கு ஒரு நம்பிக்கை தர....அது வரை பொறுமையாக ஒரு மனதாக தேர்வு முடிந்த பின்பே சென்னை போக முடிவு செய்தாள்...
அவள் உடனே சென்று இருந்தாள் கூட அவள் அக்காவை பார்த்து இருக்க வாய்ப்பு கிடைத்து இருக்கலாம் ஆனால் அவள் தேர்வு முடிந்து சென்ற பொழுது அவள் நினைத்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை..... இதோ அவள் சென்னைக்கு வந்து மூன்று மாதம் ஆகி விட்டது....பார்வதி மகளிர் விடுதியில் சேர்ந்து மூன்று மாதம் முடிந்து விட்டது.... அக்காவை பார்த்து 5 மாதம் ஆகி இருந்தது....
அவள் கல்லூரி படிக்கும் பொழுது துணி தைத்து சேர்த்த சேமிப்பும் கரைந்து கொண்டு இருக்கிறது.... யாழினி வங்கி கணக்கில் இருந்த பணம் ஏற்க்கனவே படிப்பு செலவுக்கு செலவு ஆகி இருந்தது... இனி வேலைக்கு போகவில்லை என்றால் சாப்பாடுக்கு மற்றும் ஹாஸ்டல் செலவுக்கு என்ன செய்வது என்று அவள் நினைக்கும் பொழுது தான்.....
அவள் அன்றைய செய்தி தாளில் பார்க்கும் பொழுது அந்த குறிப்பிட்ட.... அவள் இது வரை சேர நினைத்த நிறுவனத்தில் இருந்து ஆட்கள் தேவை என்ற விளம்பரம் வந்து இருந்தது...
அந்த விளம்பரத்தை பார்த்தவளுக்கு ஒரே ஆச்சரியம்.... மற்றும் அதிர்ச்சியாக இருந்தது..... இப்படி கூட விளம்பரம் கொடுக்க முடியுமா என்று யோசித்தாள் அவள்.....