All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

ilakkiyamani

Bronze Winner
sri mam uangaloda kalyana kanavu pattriya kavithai varigal arumai 👏👏👏,anjali in payam satthiyamanathu kuda.avalukku ulla marathi in payathai muyarchi seithu vendru ennala mudiyum sollra avaloda mananilai sema(y)(y).anjali is back nu kuda sollalamo...?nice epi sri mam
 

Subasini

Well-known member
அமரஞ்சலி...


நீண்ட நெடிய காத்திருப்பிற்கு பின் அமர் அவளை கை பிடிக்கிறான்...


என்ன டெரர் ஆக இருந்து என்ன அவ மனசு வச்சா தான் கல்யாணம் அவனுக்கு 😂😂😂😂


தினம் தினம் இழக்கும்
நினைவுகளால் அன்றாடம்
புதியவளாய் பிறப்பவள்...


தன் வயிற்று பிள்ளைக்காய்
மறையும் நினைவுகளை
மீட்டெடுப்பவள்...


உயிரோடு உறைந்த காதலனின்
உணர்வுகளை மறந்தவளால்
தாய்மை மறைக்க இயலாதவள்..


அவனுக்காய் தன்னை தொலைத்தவள் பிள்ளைக்காய்
தன்னை தேடிக்கொண்டவள்...


காதலியாய் தடுமாறியவளை
பிள்ளைக்கு தாயாக
நிமிர்ந்து நிற்பவள் அமர்வின்
அஞ்சலி!!!


ஸ்ரீ மா சூப்பர் எபி...
தன் நிலை புரிந்து அவள் எடுக்கும் முடிவு எல்லாம் அவள் எந்த அளவுக்கு திடமான பெண் என புரிய வைக்கும்...
கடந்த காலத்தை புரட்டி பார்த்தால் அவளின் இந்த திடம் எதனால் என நமக்கு புரியும்...


எந்த இடத்திலும் அவளை தவறோ என யோசிக்க வைக்காத உங்க ஸ்டைல் சூப்பர் தான்....


பி.கு...
அஞ்சலி தான் அவனோட பலம் என்று அவன் வார்த்தை எல்லாம் பிரதிபலிக்குது...😂😂😂 இந்த டெரர் ஹீரோவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
 

Chitra Balaji

Bronze Winner
Woooooooooooooow wooooooooow.... Semma semma episode mam..... அஞ்சலி romba paavam la..... Konja nerathula ye maranthura ellaathayum nalavelai kutty ah anga velai senjavanga kaapaathitaanga illaana enna aagi irukkum.... Ava avalodaya நிலமை ku payanthutaan கல்யாணம் vendaam nu solli இருக்கா.... Kuzhanthai thavirkirathum athuku thaan.... அதுல இருந்து avanga rendu perayum ஓயாமல் manasula ninaichikira.... அவன் kita photos கேட்டு வாங்கி vechi kita.... அவளே கொஞ்சம் konjamaa முயற்சி panni வெளிய வர paakura...... Aathmika vaala ava இல்லமல் இருக்க முடியல kuzhanthai ஏக்கம் jorame வந்துடுச்சி..... அமர் enna solla rendu பேருமே அவன் தான் thaayumaavana irunthu paathukuraan.... Papa vuku odambu seri illanu odanji poitaan.... அஞ்சலி வந்த பிறகு தான் கொஞ்சம் samaatham ஆனா..... அவளும் பழைய அஞ்சலி ah avanuku தைரியம் kodukura...... அலாரம் vechi kuzhanthai oda தேவைய kavanichikira....... Avaluku avala முடியும் ra confidence வந்த ஒடனே kalyanam pannikilamaa nu kettutaan amar kita avanuku avvallavu santhosham......rendu peroda உணர்வுகளை yum semma describe panni இருந்திங்க semma.... Super Super mam
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

மனங்களின் தேடல்
மயக்கமாய் இருந்தாலும்
மறக்கும் நிஜத்தில்
மறுதலிக்கும் காதல்!

கனவுகளின் தேடல்
கற்பனையாய் இருந்தாலும்
கனவான நிஜத்தில்
மறுதலிக்கும் காதல்!

பிள்ளையின் தேடல்
பிரம்மாண்டமாய் இருந்தாலும்
பிரிவான நிஜத்தில்
மறுதலிக்கும் காதல்!

அன்னையின் தேடல்
அன்புருவாய் இருந்தாலும்
அரண்னான நிஜத்தில்
மறுதலிக்கும் காதல்!

தந்தையின் தேடல்
தவிப்பாய் இருந்தாலும்
தளர்ந்திட்ட நிஜத்தில்
மறுதலிக்கும் காதல்!

காதலின் தேடல்
காலடியில் இருந்தாலும்
கானலான நிஜத்தில்
மறுதலிக்கும் காதல்!

மறதியின் தேடல் மனதினில்
பிறவியின் தேடல் காதலில்
உறவினின் தேடல் உயிரினில்
உயிரினின் தேடல் உரிமையில்
உரிமையின் தேடல் கூடலில்!

நினைவுகளின் தேடல்
நிழல்களாய் இருந்தாலும்
நிஜத்தில் காதலால்
கூடும் அழகு! பேரழகு!



வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? மிகவும் உணர்ச்சி பிழம்பான பதிவு என்றாலும் அஞ்சலி இந்தரை புரிந்து கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தது இந்தரை மட்டும் கண்ணீரும் காதலுடன் கூடிய புன்னகையுடன் அவளை பார்க்கவில்லை நாங்களும் தான்... அப்பாடி.. இப்போதாவது சம்மதித்தாளே என்று... அழகான பதிவு...

தன் குழந்தை சாவின் விளிம்பு வரை தொட்டு விட்டு வந்த போது குழந்தை பயத்தில் அழ, அஞ்சலி அதிர்ச்சியில் அழ, பாவம் அமர்! இருவரும் இரு கண்கள் இருவரையும் ஒரு சேர சமாதானப்படுத்தினான் தன் துக்கத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு... அஞ்சலி தன் மறதியால் குழந்தைக்கு என்னவாகுமோ என்று பயந்து தான் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.. ஆனால் அவளாலும் அமரையும் குழந்தையையும் பார்க்காமல் இருக்க முடியவில்லை...

காய்ச்சல் வந்த குழந்தையை கண்டு பதறி தவித்த அமர்... தன் சரிபாதியை கண்டவுடன் தாங்க முடியா துக்கத்தில் அவளை அணைத்து கொண்டு அழுகையில் குலுங்கிய அமர்... அவன் குழந்தைக்காக குழந்தையாய் அவளிடம் ஆறுதல் தேடிய அமர்...அஞ்சலி இதேபோல் படுத்து அவள் உயிரோடு மீண்டு வரும் வரை பதறி துடித்த அமர்... நிறைய பட்டு விட்டான் போல..

அமரின் வேதனையை கண்ட அஞ்சலி தன் வேதனையை மறைத்து கொண்டு அவனை ஆறுதல் படுத்தியது அழகு... மறதியே என்றாலும் அஞ்சலி அமருக்காக தைரியத்தை வரவழைத்து கொண்டு தன்னை எப்படி படிப்படியாக மாற்றி கொள்வது என்று யோசித்து செயல் பட்டாள் பாருங்க அங்கே நிற்கிறாள் நம் அஞ்சலி...

ஓரே நாளில் தன்னால் தம் குழந்தையை பார்த்து கொள்ள முடியும் என்று அமருடனான வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள சம்மதத்தை கேட்ட அஞ்சலி.. இங்கே அமரின் காதலே அவளை அவனிடம் வர வழைத்த து... அற்புதம் ஸ்ரீ மேம்...

கவிதை அழகோ அழகு.. கன்னியர்களுக்கு மட்டும் சொந்தமில்லை கல்யாண கனவு காளையர்களுக்கும்... உறங்கா இரவில் உன் உள்ளத்தோடு உறவாட...

அப்பப்பா! மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள் ஸ்ரீ மேம்... உணர்ச்சிகளை வார்த்தையால் வடித்து எங்கள் நெஞ்சில் ஊற்றி அதிலேயே நாங்கள் வாழ்ந்து... அபாரம் ஸ்ரீ மேம்... வாழ்த்துக்கள்...
 
Top