All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷம்லாவின் "என் விழியை நீங்கி நீ விலகாதே" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

ஐயம் ஷம்லா...

என்னை பத்தி பெருசா சொல்றதுக்கு எதுவும் இல்ல...
எனக்கு கதை வாசிக்கிறது ரொம்ப பிடிக்கும்...
அப்பிடி வாசிச்சி பழகின நானே இன்னைக்கு ஒரு கதை எழுதுறேன்னா அது எனக்கு ரொம்ப பெரிய விஷயமா படுது.
ஐயம் சோ ஹாப்பி...

நான் கேட்டதும் எனக்கு கதை எழுத வாய்ப்பு கொடுத்த ஸ்ரீ மேமிற்கு என்னோட நன்றிகள்...
அண்ட் எனக்கு உதவின ராஜி மேம், திஷி மேம், தியா சிஸ் உங்க எல்லோருக்கோம் ரொம்ப தேங்க்ஸ்...
இங்கு நிறைய பேருக்கிட்ட திறமை இருக்கு... அதை வெளிப்படுத்துவதற்கு தான் அவங்களால முடியல...
ஆனா இந்த தளம் அந்த வாய்ப்பை எல்லோருக்கும் கொடுக்கும்னு நினைக்கிறேன்...
எனக்கே கொடுத்திடிச்சே...

சரி கதையை பற்றி பார்ப்போம்...
'என் விழியை நீங்கி நீ விலகாதே ' எனக்கு தோன்றிய சாதாரண காதல் கதை.
முதல் வாய்ப்பு முதல் முயற்சி முதல் கதை.

ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட முதல் முயற்சி ரொம்ப ஸ்பெஷல் ஆக இருக்கும்.
ஆனா எனக்கு எப்பிடி அமைய போகுதுன்னு தெரியல...
என்னோட இந்த கதை நல்லா அமையணும்னா எனக்கு உங்க எல்லாரோட ப்லேசிங்க்ஸ் அண்ட் உங்க கமெண்ட்ஸ் எல்லாமே வேணும்...

நீங்க எல்லோரும் எனக்கு அதை கொடுப்பீங்கன்னு நம்புறேன்...

அண்ட் கதையை கதையின் ஓட்டத்திலே தெரிந்து கொள்ளுங்கள்.
பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்...
முதல் கதை என்பதால் கொஞ்சம் நேர்வேஸ்னெஸ் ஆ இருக்கு.
கூடிய விரைவில் கதையுடன் வருகிறேன்...

அன்புடன்
ஷம்லா.....
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'என் விழியை நீங்கி நீ விலகாதே.'



அத்தியாயம் 01



அதிகாலை நான்கு மணியளவில் பெங்களூர் செல்லும் பிரதான சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டு சென்றது பத்து
பன்னிரண்டு பி.எம்.டபுள்யூ கார்கள்.... அதுவும் புயலை ஒத்த வேகத்தில்.....



முன்னும் பின்னும் நான்கைந்து கார்கள் செல்ல அதற்கிடையில் அதே புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது அஸ்டன் மார்டின் வென்டேஜ் (aston martin vantage) வெள்ளை நிற கார்....


அதிவேகத்தில் சென்ற கார்கள் அனைத்தும் அதன் வேகத்தை மட்டுபடுத்தி பிரம்மாண்டமான மாளிகையின் போர்டிகோவில் போய் ஓய்வாய் நின்றது...


காரிலிருந்து கோர்ட் சூட் அணிந்திருந்த ஆட்கள் இறங்கி நின்ற சிறிது நேரத்தில் அந்த வீட்டினுள் நுழைந்தது அஸ்டன் மார்டின் வென்டேஜ்....


அக்கார் வீட்டினுள் நுழைந்ததுமே அங்கு நின்ற அனைவரும் செல்யூட் அடித்து கொண்டு விறைப்பாய் நிற்க அதிலிருந்து கம்பீரமாய் இறங்கினான் அவன்...


ஆறடியில் நெடு நெடுவென அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில் வெள்ளை வெளேர் நிறம்... ட்ரிம் செய்யப்பட்ட தாடி... ஓட்ட வெட்டப்பட்ட முடி.... கூர்மையான எதிராளியை செயலிழக்க செய்யும் சக்திவாய்ந்த கண்கள்.... அந்த கண்களை பார்த்து பேசுவதற்கு பயந்து அவனிடம் தலைகுனிந்து பேசுவார்களே அதிகம்...


அவனின் வசீகர தோற்றமும் ஆளை வீழ்த்தும் அவனின் ஆளுமையும் கட்டுக்கடங்காத துணிவும் ஆளை அசரடிக்கும் கம்பீரமும் தானாக அவனுக்கு மரியாதையை அள்ளி வழங்கும்.


ஆண்மையின் கம்பீரத்துடனும் பணக்கார மிடுக்குடனும் காரிலிருந்து இறங்கியவன் தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸை ஸ்டைலாக கழற்றி அதை சுழற்றியவன் மீண்டும் அதை ஸ்டைலாக அணிந்து தன் முன் நின்றிருந்த பாடிகார்ட்ஸை நோட்டம் விட்டவன் வீட்டினுள் நுழைந்தான்.


வீடு என்பதை விட அது மிக பிரம்மாண்டமான ஐந்தடுக்கு மாளிகை..


வீட்டின் உள்ளே இருபுறமும் பறந்து விரிந்த மாடிப்படிகளுடனான முதல் தளம் முழுவதும் அவனுக்கு மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே.


மற்ற நான்கு தளங்களும் அவனுக்கு மட்டுமே உரியது... இரண்டாம் தளம் முழுவதும் விளையாட்டு அறைகளும் மூன்றாம் தளத்தில் அவனின் அலுவலக அறைகளும் நான்காம் தளத்தில் மினி பாருடன் கூடிய அவனின் படுக்கை அறையும் கொண்ட மாயாஜால மாளிகை..


அதன் ஒவ்வொரு அங்குலத்திலும் பணம் விளையாடி இருந்தது... பார்க்கும் இடமெல்லாம் பணத்தின் செழுமை பார்ப்போரின் கண்களை பறிக்கும்... பணமும் ரசனையும் இருந்தாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.


அதற்கேற்ப தன் மொத்த சாம்ராஜ்யத்தையும் பணத்தை தண்ணியாய் செலவழித்து தன் விருப்பப்படி உருவாக்கி இருந்தான் சௌர்யா வர்மா....


பாரம்பரிய பரம்பரை ராஜ குடும்பத்தை சேர்ந்த இளம் தொழிலதிபன்...


ரவீந்திர வர்மா- ஸ்ரீ லக்ஷனா தேவியின் மூத்த வாரிசு... அவனுக்கடுத்து அவனின் தங்கை வர்ஷனா தேவி.


குடும்பத்தின் மேல் மிகையான பாசம் இருப்பினும் எந்தவொரு செயலிலும் அதை வெளிப்படுத்தாமல் இருக்கும்
அழுத்தக்காரன்...



ரவீந்திர வர்மா மகனின் ஆளுமையில் தந்தையாய் பெருமிதம் கொண்டாயினும் சில வேளைகளில் அதுவே அவருக்கு பயத்தையும் விளைத்தது.... காரணமோ ஷௌர்யாவின் மிகையான வேகம்... விவேகம் எந்தளவிற்கோ வேகமும் அதேயளவு...


தான் நினைப்பது நடந்தே தீர வேண்டும் எனும் எண்ணம் கொண்டவன்.. அது நடக்கவில்லையெனில் அதன்
பின்விளைவுகளோ யாரும் எதிர்பாரா அளவு விபரீதமாய் இருக்கும்.



படுக்கையறையினுள் நுழைந்து ஜன்னல் திரைச்சீலையை விலக்கியவன் புலர்ந்தும் புலராமலும் இருந்த வானத்தை மௌனமாய் ரசித்த வண்ணம் குளியலறைக்குள் நுழைந்து’ சவரிலிருந்து கொட்டும் நீரினடியில் நின்றான்.


அவனின் மனம் உளைக்கலமாக கொதிக்க ஆரம்பித்தது... சற்று முன்பு வரை சாந்தமாய் இருந்த அவன் மனது திடீரென மாறி போனது. அவன் மனதின் எண்ணங்களை கூட அவனன்றி வேறு யாராலும் தீர்மானிக்க முடியாது. இதுவரையிலும் எதிலும் தோற்று பழக்கமில்லாதவன் முதன் முறை தோற்று போனதில் ஆத்திரத்தில் இருந்தான்.


தனக்கு கிடைக்க வேண்டிய அரசாங்க டென்டர் தனக்கு கீழ் இருந்தவனுக்கு கிடைத்ததினால் வந்த ஆத்திரம்.


குளித்து தலை துவட்டிய வண்ணம் வெளியே வந்து உடை மாற்றியவன் பால்கனியில் இருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்து வானிலிருந்த நட்சத்திரங்களை ஏறிட்டான். மண்டிக்கிடந்த ஆத்திரம் சற்று மட்டுப்பட்டிருந்தது.


வெளி உலகில் எவராலும் எதிர்க்க முடியாத பலம் வாய்ந்தவன் தன்னுள் மட்டும் மென்மையானவனாய் இருப்பான். அது அவனை பற்றி யாரும் அறியாத ஒன்று...


காரிருள் வானில் வெள்ளிகீற்றாய் மின்னிய நட்சத்திரங்களை சிலநொடி ரசனையாய் ஏறிட்டவன் பின்பு அறையினுள் நுழைந்து தூங்க ஆரம்பித்தான்.


டென்டர் கைநழுவி போன செய்தி கேட்டு இப்போது தான் லண்டனில் இருந்து வந்திருந்தான். அதற்கொரு முடிவு கட்டியே ஆகவேண்டும் எனும் எண்ணத்தில் அவனை பற்றிய முழு விபரத்தையும் விரல் நுனியில் வைத்திருந்தான்.


அதற்கான நாளும் வெகு விரைவிலே வர காத்திருந்தது...


சரியாய் ஒரு மணி நேரத்தின் பின்...


திப்பம்பட்டி கிராமம்... கோயம்பத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சிக்கு வடக்கு தொகுதியில் அமைந்துள்ள கிராமம்...


ஓட்டு வீடுகளும் மாடிவீடுகளும் சரி சமமாய் அமைந்திருந்த அந்த கிராமத்தில் மற்ற வீடுகளை விட அளவிலும் வசதியிலும் பெரிதாய் அமைந்திருந்தது அந்த பழைய காலத்து வீடு..


காலை ஐந்து மணிக்கெல்லாம் அந்த வீடு பரபரப்பாய் இயங்க ஆரம்பித்திருந்தது. சமையல்வேலை, தோட்டவேலைக்கு ஆட்கள் வந்திருக்க அவர்களை மேற்பார்வை பார்த்த வண்ணம் சமையல் வேலையில் ஆழ்ந்திருந்தார் வாசுமதி. மற்ற
வேலைகளை கூட கிடப்பில் போட்டுவிடும் அவர் சமையல் வேலையை மாத்திரம் யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை.
அது அவரின் ராஜ்யம். தன் கையால் கணவனுக்கும் மகளுக்கும் உணவு சமைத்து பரிமாறுவதில் அவருக்கு அத்தனை சந்தோசமும் கூட.



காலையுணவுக்கு காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தவர் பால் கறக்க வந்திருந்த வேலுவை பார்த்து “சீக்கிரம் பாலை கறந்து கொண்டு வா வேலா.... கண்ணம்மா எழுந்த பின்னாடி ஒன்னும் பண்ண முடியாது....” என குரல் கொடுக்க,


அதை கேட்டு ஆமோதிப்பாய் தலையசைத்தவன் அடுத்த சில வினாடிகளில் பால் கிண்ணத்துடன் வாசுமதியின் முன் நிற்க அவனை மெச்சுதலாய் பார்த்தவர் “சரி... போய் வேலையை பாரு....” என்றபடி அடுப்பில் பால் காய்ச்சி மிதமான சூட்டில் அளவாய் சீனி கலந்து சில்வர் தம்ளரில் ஊற்றி மகளின் அறை நோக்கி விரைந்தார்.


அதிகாலையில் அலாரம் அடிக்காமலே எழுந்திருந்தாள் அந்த வீட்டின் இளவரசி அனிகா. பிறந்தது சென்னையில் வளர்வது இந்த கிராமத்திலிருக்கும் பெரியப்பாவின் வீட்டில்...


சென்னையை விட அவளுக்கு பிடித்த இடமும் இது தான்.. அதனாலே பெற்றோரை இழந்த பின் பெரியப்பாவின் அரவணைப்பில் இந்த கிராமத்திலே இருக்கிறாள்.


எப்போதும் போல் அதிகாலையில் நேரத்துடன் கண் விழித்தவள் கைகளை நீட்டி மடக்கி சோம்பல் முறித்த வண்ணம் எட்டி அங்கிருந்த மியூசிக் சிஸ்டத்தை ஆன்(on) செய்தாள்.


“ஒன்னு, ரெண்டு, மூனு, நாழு
சொன்னால் தானா ஆடும் என் காலு
ஐஞ்சு, ஆறு, ஏழு, எட்டு
இந்த ஆட்டம் எப்போதும் போடும் ஹிட்டு


போடிய டைட் ஆக்கிக்கோ
சோல்டர்ர லூஸ் ஆக்கிகோ
நாக்கு மட்டும் நல்ல மடிச்சுக்கோ
இப்போ கை ரெண்டும் சேர்த்துக்கோ
காத்தாடி விட்டுக்கோ
அவ்லோ தாண்டா குத்து டான்சு போ”



பாடலுக்கேற்ப பாடியை லூஸாக்கி சிம்புவின் ஆட்டத்தை கண் முன் படமாக்கி தாவணியை தூக்கி இடுப்பில் சொருகி கையை முன்னால் நீட்டி லோக்கல் குத்தட்டாம் போட்டவளை நெஞ்சில் கை வைத்த வண்ணம் அவளின் அறைவாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார் வாசுமதி.


அன்னையை பார்த்ததும் ஒரு படி அதிகமான உற்சாகத்துடன் “ஐ ஆம் அ குத்து டான்சர்... ஐ ஆம் அ குத்து டான்சர்...” வாய்க்குள் பாடியபடி காலொன்றை முன்னால் நீட்டி கையையும் அதன் படி நீட்டி நாக்கை மடித்துக் கொண்டு தொங்கி வழிந்த கூந்தல் பற்றிய கவனமில்லாமல் தன் முன் நின்றிருந்த மகளை பார்த்து மனதினுள் அரண்டாலும் அதை வெளிக்காட்டாமல் முகத்தை சாதாரணமாய் வைத்துக்கொள்ள அவர் முயற்சிக்க அவரின் கண்களோ மகளின் கோலத்தை பார்த்து அப்பட்டமாய் பீதியை வெளிப்படுத்தியது.


தாயின் கண்களில் இருந்த கலக்கத்தை பார்த்து பெருமூச்சொன்றை வெளியேற்றியவள் சிஸ்டத்தை ஆப்(off) செய்து தொங்கி வழிந்து கொண்டிருந்த இடை தாண்டிய கார் கூந்தலை அள்ளி கொண்டையிட்டவள் தாயை பார்த்து குறும்பாய் கண்சிமிட்டினாள்.


“நேத்தைய விட இன்னிக்கு கொஞ்சம் நல்லா வந்திருக்கில்ல அம்ஸ்...”


‘அடியாத்தி... நல்லவேளை நான் நேத்திக்கு இந்த ரூம் பக்கமே வரலை... மாரியாத்தா என்னைய காப்பாத்திபுட்டம்மா...’


“அம்ஸ்... என்ன சத்தத்தையே காணோம்... பதில் சொல்லு நான் நேத்தைய விட இன்னிக்கு நல்லா ஆடினேன்ல....”


ஆவலாயாய் கேட்டாலும் அதில் அன்னையை சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையே மிகையாய் இருந்தது.


அது தெரியாதவரா வாசுமதி.... மகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது தெரியுமாதலால் அத்தனை நேரம் அவள் கவனிக்காமல் இருந்த பசும் பாலை அவள் கண் முன்னாடி ‘டான்டடைன்’ எனும் ரீதியில் நீட்டினார்.


“இத இன்னிக்காவது முழுசா குடிச்சேன்னா பதில் சொல்றேன் கண்ணம்மா...” அப்பாவியாய் கூற, அதை கேட்டு மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டாள் அனிகா.


அவளுக்கும் பாலுக்கும் தான் ஏழாம் பொருத்தமாயிற்றே.


“அம்ஸ்... என்ன இது சின்னப்பிள்ளத்தனமா இதெல்லாம் சரியில்ல சொல்லிப்புட்டேன்... எக்ஸ்ட்ரா தலைல ஐஞ்சு கொட்டு
வேணா கொட்டிக்கோ இது மட்டும் வேணாம்மா... என் செல்லம்ல.. பட்டுல்ல... ப்ளீஸ்மா... இனிமே உன்மேல்... சேச்சே... செத்து போன தாத்தா மேல சத்தியமா நான் குத்தாட்டம்லாம் போடவே மாட்டேன்மா... தயவு செஞ்சு இந்த பாலை மட்டும் எடுத்திட்டு போய்டு அதை பார்க்கும் போது என்னைய கொல்ல வர்ற வேஷம் மாதிரியே இருக்கு....” அலறியபடி கட்டிலின் மேல் ஏறி நின்று ஒப்பாரி வைக்க,



“அனிம்மா ஒரு வாய் குடிம்மா... காலைல பால் குடிச்சா உடம்புக்கு நல்லது கண்ணு... ஒரு வாய்தேன் ஒன்னே ஒன்னு குடிடா....” வாசுமதி கெஞ்ச,


“அம்ஸ்... வேணாம்... வேணாம்... ப்ளீஸ்யா... வேணாயா....” காதலன் காதலியை கொஞ்சுவது போல் கெஞ்சிப் பார்க்க அவரோ அவளை மிஞ்சிப் பார்க்க இவர்களின் கூத்தை அறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அனிகாவின் பாட்டி ரெங்கநாயகி “காலங்கார்த்தாலேயே அம்மாவும் பொண்ணும் ஆரம்பிச்சிட்டீங்களா...” அந்த வயதிலும் அத்தனை கம்பீரத்துடன் ஒலித்தது அவர் குரல்.


மாமியாரின் குரலில் மரியாதையுடன் வாசுமதி ஒதுங்கிக்கொள்ள அனிகாவோ அவரை எதிரி நாட்டு விரோதியை பார்ப்பது போல் பார்த்தாள்.


‘இங்க எதுக்கு வந்தியாம்...’ கண்களை சுருக்கினாள் அனிகா.


‘உனக்கு தெரியாது...’ பதில் பார்வை பார்த்தார் ரெங்கநாயகி.


வாசுமதி அதை கண்டும் காணாமல் பார்த்து வைக்க அனிகாவினதும் ரெங்கநாயகியினதும் இதழ்களில் மின்னலென ரகசிய புன்னகை பூத்து சடுதியில் மறைந்தும் போனது.


“எதுக்கு இந்த அடங்கா பிடாறிகூட மல்லுக்கு நிக்கிற...”


“ஒன்னுயில்ல அத்த... அனிம்மா பால் குடிக்காம அடம்பிடிக்கிரா அதேன்....”


“இது என்னைக்கு நாம சொல்றதை கேட்டிருக்கு... அதெல்லாம் இவளுக்கு பால் கொடுக்க வேணாம்... சும்மாவே கொழுப்பு கூடிப் போய் ராங்கித்தனம் பண்றா இதில இத வேற கொடுத்து இன்னமும் ஏத்தி விடனுமாக்கும்...” நொடித்துக் கொண்டே வாசுமதியின் கையில் இருந்த பால் கிண்ணத்தை வாங்கி மிச்சம் மீதியின்றி குடித்தவர் காலி தம்ளரை மருமகளின் கையில் திணித்து “போய் சமையல் வேலையை கவனி...” விரட்டியவர் தானும் வெளியேறினார்.


‘அது எப்பிடித்தேன் இந்த அனிம்மாக்கு பால் கொடுக்கும் போதெல்லாம் இவங்க வந்து காப்பாத்துறாய்ங்களோ... நானும் படாதபாடு பட்டு இவளை ஒரு வாய் பாலை குடிக்க வைக்கலாம்னு பார்க்கிறேன்... அது இந்த ஜென்மத்தில நடக்காது போலவே...’ மகளின் நலனில் அக்கறை கொண்ட தாயாய் மனதுக்குள் புலம்பியபடி சமையல் அறைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டார் வாசுமதி.


காலை நேரத்து களேபரம் இனிதே முடிய ‘ஷப்பா காலைல ஒரு குட்டைய குழப்பலன்னா எனக்கு பொழுதே விடியே மாட்டேங்குதே...’ கண்சிமிட்டு குறும்பாய் எண்ணியவள் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.


குளித்து ஆகாய நிற தாவணியும் அதற்கு பொருத்தமான மேல் சட்டையும் அணிந்து கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்தவள் ‘அனிக்குட்டி நீ அழகிடி...’ கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்து தனக்கு தானே திருஷ்டி கழித்து அழகாய் வெட்கப்பட்டவள் நெற்றில் சிறு கீற்றாய் விபூதி வைத்தபடி ஒய்லியாக நடந்து முன்னறைக்கு வந்தாள்.


அங்கு தூணில் சாய்ந்தமர்ந்து இருந்த பாட்டியிடம் “ஆமா எங்க அப்பாவ காணோம்... தோப்புக்கு போயிட்டாரா...”


“ஆஹ்.... உங்க அப்பன நான் என் முந்தானைக்குள்ளையா முடிஞ்சு வச்சிருக்கேன்... என்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும்... போ... போய் உன் அம்மாகிட்ட கேளு சொல்லுவா...”


“இந்த வயசில உனக்கு அப்பிடியொரு ஆச வேறு இருக்கா... கொன்னுடுவேன் கொன்னு... காலம் போன கடைசியில உனக்கெதுக்கு இந்த முந்தானை... முடிச்சு எல்லாம்.... பேசாம வாய மூடிக்கிட்டு கம்முன்னு கெட...” தலையை சிலுப்பியவாறு கூறிக்கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்து அங்கு சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த தன் அம்மாவை பின்னால் இருந்து கட்டி பிடித்துக் கொண்டாள்.


“அம்ஸ்... அப்பா எங்க ஆளையே காணோம்... தோப்புக்கு போயிட்டாரா...” தாயை வாசம் பிடிக்க,


அவளை பார்த்து முறைத்து வைத்தவர் அதை நீண்ட நேரம் தக்க வைத்து கொள்ள முடியாமல் வாஞ்சையுடன் “ஆமாடா... காலையிலேயே தோப்புக்கு போகும் போது முக்கியமான பஞ்சாயத்து இருக்குன்னு சொன்னாரு... இப்போ அங்கதேன் இருக்கனும்....” காலையுணவுக்கு காய்களை வெட்டியவாறு கூறினார்.


“ஓஹ்... என்கிட்ட சொல்லவேயில்ல... சரி... சரி.. நீ மசமசன்னு நிக்காம சமையல் வேலையை பாரு... நான் வயலுக்கு போயாறேன்...” என்றவாறு தாயின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு துள்ளிகுதித்து ஓடினாள்.


“கண்ணம்மா... எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்... காலையில மூஞ்ச எச்சில் பண்ணாதேன்னு... வர வர சொல் பேச்சே கேக்க மாட்டேன்கிற....” ஓடும் மகளை பார்த்து செல்லமாய் குரலுயர்த்த, அவளோ தாயின் குரல் எட்டாத தூரத்திற்கு விரைந்திருந்தாள். அத்தனை வேகம்.


பத்தொன்பது வயது பருவ மங்கை... மெல்லிய தேகம் பிறை நுதல்... பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் கருவண்டு விழிகள்.... கூர் நாசி... தேன் சிந்தும் செம்பவழ இதழ்கள்.... சந்தனத்தை அரைத்தது போன்ற நிறமும் உடைய மண்மனம் மாறா கிராமத்து குயில்..


சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து பெரியப்பா வீட்டில் வளர்கின்றவள்... கதிர்வேலன்-வாசுமதி தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனதால் அவர்களுக்கு எல்லாமே அனிகா தான்..


அந்தளவு பாசம் அவள் மேல் எல்லோருக்கும்... அவளின் ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் அவள் தான் செல்ல பிள்ளை...


தாவணியை தூக்கி பிடித்து கால் தரையில் பாவாமல் துள்ளிக் குதித்துக் கொண்டு தங்கள் வயலுக்குள் நுழைந்தவள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்றிருந்த வயல்வெளியை ஆசைதீர ரசித்துப் பார்த்தாள்.


அதிகாலை பொழுதில் பூமியை உயிர்ப்படையச் செய்யும் சூரிய உதயத்தை காட்டிலும் அதன் வெளிச்சத்தில் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும் செழித்து வளர்ந்த வயல்வெளியை பார்ப்பதில் அவளுக்கு அலாதி பிரியம்.


அதிகாலை நேரத்து புத்துணர்வுடன் மண்வெட்டியை தோளில் சுமந்து கொண்டு வயலுக்குள் நுழைந்த முத்தையா, அங்கு தங்கள் சின்னம்மா நிற்பதை கண்டு மண்வெட்டியை கீழிறக்கி கொண்டவன் பவ்யத்துடன் அவள் அருகில் விரைந்தான்.
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“சின்னம்மா... ஐயா பஞ்சாயத்து நடக்கிற எடத்துல இருக்காக...” அவள் எதற்காக வந்திருப்பாள் என அறிந்து அவசரமாய் உரைத்தான்.


அதை கேட்டு புன்சிரிப்புடன் அவனை திரும்பி பார்த்தவள் “தெரியும் முத்தையா... நான் எப்போவும் போல வயலை பார்க்கத்தேன் வந்தேன்... அப்பா வேலையா இருப்பாக... முடிஞ்சதும் அவரே வரட்டும்... ஆமா... என்ன செய்றா உன்
பொண்ணு... படிப்பெல்லாம் நல்லா போகுதில்ல....” வரப்பில் நடந்த படி கேட்க...



“உங்க புண்ணியத்துல எம்பொண்ணு நல்லா படிக்கிறா தாயி... நீங்க இருக்கும் போது அதுகளுக்கு என்ன குறை வந்திட போகுது....” அன்புடன் உரைத்தான்.


“சரி... நீ வேலைய பாரு” சேறு படாமல் தாவணியை ஒரு கையால் தூக்கி பிடித்தவள் மறுகையில் சிறு குச்சியொன்றை வைத்து வாய்க்குள் பாடலொன்றை முனங்கியபடி வீட்டிற்கு சென்றாள்... ‘அப்பா இந்நேரத்துக்கு வந்திருப்பார்’ மனதிற்குள் கணக்கிட்டவளாய்...


“அப்பா எப்போ வந்தீங்க....” சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.


“இப்போதான் கண்ணு... உனக்காகத்தான் காத்திருக்கேன்....”


“எனக்காகவா... எதாவது சொல்லனுமாப்பா.... என்னவா இருந்தாலும் சொல்லுங்க... ஆனா ஏதோ முக்கியமான விசயத்தை பத்தி பேச போறீங்கன்னு மட்டும் புரியிது...”


“முக்கியமான விஷயந்தேன் கண்ணம்மா... நானும் அதை யோசிச்சு பார்த்தேன்... உங்கண்ணனும் அத்தையும் கூட அத தான் சொன்னாங்க... எனக்கும் அது சரின்னு தான் படுது...”


“என்னப்பா புதுசா சுத்திவளைக்கிறீங்க... எதுன்னாலும் தேங்கா உடைக்கிற மாதிரி பட்டுன்னு சொல்லுங்க... நீங்க சொல்றத நான் என்னைக்கு கேக்காம இருந்திருக்கேன்...”


“நானும் அந்த நம்பிக்கைல தான் கண்ணம்மா உன்கிட்ட இதபத்தி பேசுறேன்... அது என்னன்னா நாங்க என்ன முடிவு பண்ணியிருக்கோம்னா.... உன்னைய சித்தப்பா வீட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கலாம்னு....” என முடிக்கும் முன்பே,


“என்னாது நான் படிக்கனுமா... நோ நோ நோ நோ.. அதெல்லாம் என்னால முடியாது சொல்லிப்புட்டேன்...” நிர்தட்சனமாய் மறுத்தாள்.


“அதுவுயில்லாம உங்க எல்லாரையும் விட்டு என்னால எப்பிடி இருக்க முடியும்...”


அவரோ அவளின் பேச்சை சிறுதும் கண்டுகொள்ளவில்லை.


“இதோ பாரு கண்ணம்மா நான் சொல்றத நீ கேட்டுக்குவீன்ன நம்பிக்கையிலதேன் நான் உன்கிட்ட இதப்பத்தி சொல்லாம உன் அண்ணன்கிட்ட சொல்லி அங்கிருக்கிற காலேஜ்ல அட்மிசன் வாங்கி வைக்க சொல்லிட்டேன்... அதனால நான் சொல்றத கேட்டுக்கிட்டு போய் படிக்கிற வேலையை மட்டும் பாரு கண்ணம்மா...” கண்டிப்புடன் கூறியவர் பூஜை அறை நோக்கி சென்றார்.


‘ஐயோ... ஆண்டவா இந்த அப்பா நான் சொல்றத கொஞ்சமாச்சும் புரிஞ்சிக்கிறாரா... சை... இந்த பழப்போன படிப்ப மூட்டை கட்டின சந்தோசத்துல கிடந்தேன் அதுக்குள்ள ஆப்பு வச்சிட்டாய்ங்களே....’


சிறு நேரத்திலெல்லாம் பூஜையை முடித்துக் கொண்டு வெளியில் வந்தவர் காலையுணவை உண்ண சாப்பாட்டு மேசையில் அமர்ந்து “வசு... கண்ணம்மாவ சாப்பிட கூப்பிடு...” என்க,


காலையுணவை சாப்பாட்டு மேசையில் அடுக்கிக் கொண்டிருந்த வாசுமதி “நீங்க சாப்பிடுங்க... நான் அவளை கூட்டியாறேன்...” என்க,


“ஆஹ்... இல்ல... வேணாம் வசு... கண்ணம்மா பசிக்கும் போது வரட்டும்... இப்போத்தேன் விஷயத்த சொல்லியிருக்கேன் கொஞ்சம் யோசிக்கட்டும்...”


“முடிவு பண்ணிட்டீங்களாங்க....”


“ஆமா வசு... இன்னும் எத்தனை நாளைக்கு வெளியுலகம் தெரியாம இருக்க முடியும்.... அதான் கார்த்திகிட்டையும் பேசிட்டேன்... எல்லாம் நல்ல படியா நடந்தா சரிதேன்....”


“கண்ணம்மா நம்மள விட்டு இருக்கமாட்டாளே... நீங்களுந்தான்..”


“அதுக்காக வீட்டுக்குள்ளயே வச்சிக்க முடியுமா வசு... எனக்கும் கஷ்டந்தேன்... என்ன பண்றது... புள்ளையோட எதிர்காலத்துக்காக இதை பண்ணத்தேன் வேணும்....”


“நீங்க கஷ்டபடுறதை என்னால பார்க்க முடியாதுப்பா... அதனால தான் சொல்றேன் என்னால உங்கள விட்டு எங்கயும் போக முடியாதுன்னு…” அவரின் பேச்சை வைத்தே சாமர்த்தியமாய் மடக்கினாள் அனிகா.


அதை கேட்டு அவளை முறைத்தவர் “இதோ பாரு கண்ணம்மா... அப்பா ஒரு தடவ தான் சொல்லுவேன்... போ.. போய் துணி மணி எல்லாத்தையும் எடுத்து வையி நாங்களே வந்து அங்க விட்டிட்டு வாரோம்...” என்றவர் இதற்கு மேல் யார் எது பேசினாலும் அது செல்லுபடியாகாது எனும் படியான அழுத்தமான குரலில் கூறியவர் வெளியில் சென்று விட்டார்.


அதில் கவலை சுமந்த முகத்துடன் தாயின் அருகில் வந்தவள் “பாருங்கம்மா அப்பாவ... என்னால உங்க எல்லாரையும் விட்டிட்டு வெளியூர் போக முடியாது... அப்பிடியே போறதுன்னாலும் நீங்க என்கூட அங்க வந்து தங்குவீங்கன்னா சொல்லுங்க நான் போறேன்... இல்லன்னா சத்தியமா என்னால முடியாது...” என அடம் பிடித்தவள் தன் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக் கொண்டாள்.


‘என்ன செய்வது... என்ன பண்ணலாம்...’ என அறைக்குள்ளே பல மணி நேரங்கள் நடை பயின்றவள் யோசித்து யோசித்து களைத்து போனதால் இதற்கு வழி மொழிந்த தன் அண்ணனை மனதிற்குள் சபித்துக் கொண்டு அவனுக்கு அழைத்தாள். அழைப்பை எடுக்காது போகவும்,


‘எவ்ளோ தைரியம் இருந்தா இவன் நான் போன் பண்றது தெரிஞ்சும் எடுக்காம இருப்பான்... சிம்பன்சி... இப்போ மட்டும் இவன் போனை எடுக்கல..... இவனுக்கு இருக்கு கச்சேரி...’ என நம்பியார் மாதிரி கையை பிசைந்தவள் மீண்டும் அதே எண்ணிற்கு அழைத்தாள்.


சிறிது நேரத்தில் அழைப்பு எடுபடவும் ஏற்கனவே அவன் மேல் கடுப்பில் இருந்தவள் இப்போது அவன் தன் அழைப்பை ஏற்காது போனதில் கோபம் பன்மடங்கு பெருக அவன் அழைப்பை எடுப்பதற்காகவே காத்திருந்தவள் அவன் அழைப்பை ஏற்றதும் சரமாரியாய் வசை மழை பொழிந்தாள்.


“டேய் வெள்ளைப்பன்னி... காட்டுகுரங்கே... எதுக்குடா இப்பிடி பண்ண என்னைய நல்லாவே பழிவாங்கிட்டல்ல... நீ மட்டும் எங்கைல கிடைச்ச செத்தடா... அவிச்ச இறாலு... டேய் இதோ பாரு நீ மட்டும் இப்போ அப்பாக்கு போன் பண்ணி பெங்களூர் ட்ரிப்ப நிறுத்தல நான் பத்ரகாளியா மாறிடுவேன்... சொல்றத நல்லா கேட்டுக்கோ... நான் போனை கட் பண்ணதும் நீ அப்பாக்கு போன் பண்ணி பெங்களூர் வரத்தேவையில்ல... அவ இங்கயே இருக்கட்டும்னு சொல்ற.... சொல்லலேன்னு வச்சிக்கோ நான் சொல்ல மாட்டேன்... செஞ்சு காட்டிருவேன்... அப்றோம் நீ சின்னா பின்னமா போயிருவேடா குங்க்பு பாண்டா...” அவனை மிரட்டி விட்டு போனை வைத்தவளுக்கு அப்போது தான் நிம்மதியாய் இருந்தது.


‘ஷப்பா... என் பொழப்பு இந்தளவுக்கு நாறிப்போய்டும்னு நான் நெனச்சுக்கூட பார்க்கலை...’ தன்னிலையை நொந்து கொண்டவள் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றாள்.


தான் மிரட்டிய மிரட்டலில் கார்த்திக் அண்ணா அப்பாவிடம் பேசிவிடுவான் என்ற நிம்மதியில் வெளியில் வந்தவள் முன்பு எங்கு இருந்தாரோ இப்போதும் அதே இடத்தில் அதே நிலையில் அமர்ந்து கொண்டு வெற்றிலையை குதப்பிக் கொண்டிருந்த கிழவியை பார்த்து பல்லை கடித்தாள்.


“ஏய் கிழவி நீயும் இதில கூட்டா அதன் கொஞ்சங்கூட கவலையே இல்லாம அப்பிடியே குத்துக்கல்லாட்டம் உக்கார்ந்திருக்க... அப்போ நான் போறதில உனக்கு அம்புட்டு சந்தோசம்... அப்பிடித்தானே...”


“இப்போ ஒன்னு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ.... இந்த அனிகா எங்கயும் போக மாட்டா... இங்கயே இருந்து உன்னைய நல்லா டோர்சேர்தேன் பண்ணுவா...” மெல்லிய குரலில் அவரின் காதில் விழும் படி காட்டத்துடன் கூறியவள் அவரை பார்த்து இதழை சுழித்துக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.


வாசுமதி மதியத்துக்கான சமையலில் ஈடுபட்டிருக்க அவருக்கு உதவியாய் அங்கு வேலை செய்யும் பரமு காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தார்.


அதை பார்த்தபடியே சமையல் கட்டினுள் நுழைந்த அனிகா “அம்ஸ்... எனக்கு ரொம்ப பசிக்குது... சாப்பாடு போடு... பேசிப்பேசி வயிறு காஞ்சு போச்சு...”


மகளின் குரலில் திரும்பிய வாசுமதி அவளுக்கு பசியென்றததும் “என்ன கண்ணம்மா ரொம்ப பசிக்குதா... சரி.. சரி வா...” அவளை கையோடு அழைத்துச் சென்று சாப்பாட்டு மேசையில் அமர வைத்தவர் காலையுணவை பரிமாற அவளோ அதை சாப்பிடாமல் தன் தாயையே பார்த்திருந்தாள்.


பசியுடன் இருக்கிறாள் என சாப்பாடு பரிமாறியும் சாப்பிடாமல் இருக்கும் மகளை திரும்பி பார்த்து “என்னடாம்மா...” பாசத்துடன் தலை வருடியவர்...


“அப்பா சொன்னதையே நினைச்சிக்கிட்டு இருக்கியா...”


அவள் அப்போதும் ஒன்றும் பேசவில்லை. மௌனமாய் தன் தாயையே பார்த்திருந்தாள்.


அதை பார்த்து சிரித்தவர் “என்னாச்சு என் பொண்ணுக்கு... அப்பா சொன்னத நினைச்சு தான் கவலை படுறியா.. அதெல்லாம் விட்டுதள்ளிட்டு சாப்பிடுடா... அப்பா உன்னோட நல்லதுக்குத்தான் செய்வார் அப்பா மேல நம்பிக்கை இருக்கு தானே கண்ணம்மா...” வாஞ்சையுடன் கேட்டவருக்கும் மகளை பிரிந்திருக்க போகிறோம் என்ற எண்ணம் கண்களில் கண்ணீரை துளிர்க்க செய்தது.


அதை மகள் அறியாமல் துடைத்துக் கொண்டவர் ‘சாப்பிடு’ என சைகை செய்ய அதை பார்த்து முடியாது என தலையசைத்தவள் “எனக்கு ஊட்டிவிடு அம்ஸ்...” தாயை கொஞ்சினாள்.


வாசுமதி எத்தனை தான் மறைத்து மறுபுறம் திரும்பி கண்ணீரை துடைத்துக் கொண்டாலும் அவரின் சிவந்த விழிகள் அவரின் மனநிலையை எடுத்துக் காட்ட அதை திசை திருப்ப ஊட்டும் படி கூறியவள் சாப்பாட்டு மேசையில் ஏறி சம்மணமிட்டு அமர்ந்தாள்.


அதில் அவளை முறைத்தவர் “கண்ணம்மா... சாப்பாட்டு மேசையில் ஏறி உக்காரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா... இது என்ன பழக்கம்... போற இடத்திலையும் இந்த மாதிரி சேட்டை பண்ணாம அமைதியா இருக்கணும் சொல்லிட்டேன்...”


“அதெல்லாம் அனிகா எங்கயும் போக போறதில்ல... இங்கதேன் இருக்கப் போறா என் செல்ல அம்ஸ்..” என அவரின் இரு கன்னத்தையும் பிடித்து கொஞ்சியவள் அவர் விழிவிரித்து நோக்கவும் குறும்பாய் சிரித்து தாவணியின் மேல் சட்டையை
தூக்கி விட்டு “நான் யாரு...” கண் சிமிட்டி குலுங்கி சிரித்தாள்.



அதை பார்த்து வலிக்காமல் அவள் தலையில் கொட்டிய வாசுமதி “என்ன கண்ணம்மா பண்ண... ஏதாவது பண்ணியிருப்பேன்னு நான் அப்போவே சந்தேகப்பட்டேன்... இது மட்டும் உன் அப்பாக்கு தெரிஞ்சது உன்னைய ஓட ஓட விரட்டிடுவாறு...”


தாய் ஊட்டிவிட உண்ண ஆரம்பித்தவள் இடையிடையே தாயின் கன்னத்தை கிள்ளுவதும் அவரின் இடையை சுரண்டுவதும் போதும் போதுமென அடம்பிடிப்பதுமென விளையாட்டு கட்டியவாறு ஒருவழியாய் சாப்பிட்டு முடித்தவள் வாயை கழுவி தன் தாயின் முந்தானையால் ஈரத்தை துடைக்க, வாசுமதி மகளின் செயலில் செல்லமாய் அடிக்க கையை ஓங்க சிரித்துக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தவள் அங்கு அமர்ந்திருந்த கிழவியை முறைக்கவும் மறக்கவில்லை.


அதை பார்த்து கழுத்தை வெட்டிக் கொண்டாலும் அவள் அறைக்குள் நுழைந்து கதவை மூடியதும் அருகிலிருந்த தூணில் தலை சாய்த்தவருக்கு பேத்தியை பிரிந்திருக்க முடியுமென தோன்றவில்லை.


அவளை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு தன் மகனினதும் மருமகளினதும் நினைவுகள் தான் வரும்.


மாணிக்கவேலன் ரெங்கநாயகி தம்பதியினருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் ஒரு பெண்ணும்.


மூத்தவர் கதிர்வேலன்- வாசுமதி தம்பதியனர். இரண்டாவது ராஜவேலன்- சுமித்ரா தம்பதியனர். அவர்களின் மகள் தான் அனிகா. இளையது சங்கரவேலன்- மாலதி தம்பதியினர். கடைக்குட்டி பார்வதி- ராமமூர்த்தி தம்பதியினர்.


ரெங்கநாயகியின் கணவர் மாணிக்கவேலன் பார்வதி பிறந்து அவள் பருவ வயதை எட்டிய சில நாட்களிலே இறந்து விட்டார்.


அதற்குள் அவரின் முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடைபெற்று இருந்தது. தங்கள் மாமனாரின் இழப்பில் துவண்டிருந்த கணவன்மார்களையும் மைத்துனன் நாத்தனார் அவர்களுடன் சேர்த்து தங்கள் அத்தையையும் பார்த்துக் கொண்ட தங்கமான மருமகள்கள் தான் அவர்கள்.


அதன் பின் அந்த குடும்பத்திற்கு வாக்கப்பட்டு வந்த மாலதியும் சரி அந்த வீட்டு மாப்பிள்ளை ராமமூர்த்தியும் சரி அத்தனை பேரும் குணத்தில் தங்கமானவர்கள். அவர்களிடமிருந்து ஒரு குறை கண்டு பிடிக்க முடியாது. அந்தளவு பாசக்காரர்களும் தான் பண்பானவர்களும் தான் அவர்கள்..


கணவனை இழந்து ஓரளவு தேறிவந்து ரெங்கநாயகிக்கு அதன் பின்பு இளைய மருமகள் மாலதியின் மகன் கார்த்திக் தான் எல்லாமே.. அவனின் மேல் அத்தனை பாசம்.


மூத்த இரண்டு மருமகள்களும் தங்களை விட இளையவள் குழந்தை பெற்று விட்டாள் நாத்தனாரும் குழந்தை பெற்று விட்டாள் என கவலைப்படாமல் கார்த்திக்கையும் பார்வதியின் மகனான ஆதியையும் தங்கள் பையன்களை போலவே பார்த்துக் கொண்டனர்.


அவர்கள் பிறந்து பார்வதிக்கு ராமும் பிறந்த பின் சுமித்ரா கருத்தரித்தார். பலவருடங்கள் கழித்து அதுவும் பெண் குழந்தை. ஏற்கனவே பிறந்த இரண்டும் ஆண்பிள்ளைகளில் இவள் பெண்ணாய் பிறக்கவும் அந்த மொத்த குடும்பத்திற்கு இளவரசியாய் மாறிப் போனாள் அனிகா...


எல்லாருக்கும் பிள்ளைப்பேறு கிடைத்தும் தனக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லாது போகவும் மனமுடைந்து போன வாசுமதி தனிமையில் அழுது கரைவதை எதேர்ச்சியாய் பார்த்த சுமித்ரா அன்றிலிருந்து தன் மகளை கவனிக்கும் பொறுப்பை எந்த பாசாங்குமின்றி வாசுமதிக்கு வழங்கினார்.


அதில் தான் தன் மருமகளின் மேல் மதிப்பும் மரியாதையும் பாசமும் கூடியது ரெங்கநாயகிக்கு. இப்படி மகிழ்ச்சியாய் சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் விதியின் கோர விளையாட்டால் சென்னை சென்று திரும்பி வந்து கொண்டிருந்த ராஜவேலன் சுமித்ரா தம்பதியினரின் கார் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்து அந்த இடத்திலே உயிரை விட்டிருந்தனர்.


அதில் பெரிதும் பாதிப்புக்குள்ளானது ரெங்கநாயகி தான். தன் மகனும் மருமகளும் இறந்த துக்கத்தை தாளமுடியாமல் எத்தனையோ நாட்கள் படுத்த படுக்கையாய் கிடந்தார். அதன் பின் மற்ற மூவரும் சேர்ந்து தான் அவரை ஓரளவிற்கு மீட்டுக் கொண்டுவந்திருந்தனர். அன்றிலிருந்து அவருக்கு அனிகா தான் சகலமும்.


அவள் எத்தனை அடித்தாலும் பாசத்துடன் வாங்கிக் கொள்வார். அவள் என்ன சொன்னாலும் பதிலுக்கு அவளை கிண்டல் செய்து விட்டு அவளின் ஏச்சுக்களை சந்தோசத்துடன் சேமித்துக் கொள்வார்.


அப்படிப்பட்டவருக்கு இன்று தன் பேத்தி இங்கிருந்து செல்ல போகிறாள் என்பது நெஞ்சில் சிறு வலியை உண்டு பண்ணியது. ஆனால் அவளிடம் அதை காட்டிக் கொள்ளவில்லை. கதிர்வேலன் எதையும் யோசித்து தான் செய்வான் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை என்பதால் அவரால் மகனை மறுத்து எதுவும் பேச முடியவில்லை. மௌனம் காத்தார்.


அறைக்குள் இருந்த அனிகா அன்னை அழைப்பது போலிருக்கவும் கதவை திறந்து வெளியில் வந்தவள் அங்கிருந்த தந்தையை கண்டு ‘கார்த்திக் அண்ணா சொல்லிட்டான் போல அதை பத்தி பேசத்தேன் கூப்பிறாய்ங்களா இருக்கும்...’ மகிழ்வுடன் எண்ணியவள் துளியும் அதை முகத்தில் கட்டாது “என்னப்பா...” அப்பாவியாய் விழிவிரித்தாள்.


மகளின் குரலில் திரும்பிய கதிர்வேலன் “கண்ணம்மா துணி மணியெல்லாம் எடுத்து வச்சிட்டியாம்மா இன்னிக்கு ராவைக்கே சித்தப்பா வீட்டுக்கு கிளம்பிறோம்... ஆயத்தமா இருடா...” மின்னாமல் முழங்காமல் அவள் தலையில் குண்டை தூக்கி போட்டவர் துண்டை உதறி தோளில் போட்டவாறு அங்கிருந்து அகன்றார்.


தந்தையின் கூற்றில் அதிர்ந்து போய் சிலையென சமைந்து நின்றாள் அனிகா.


தான் நினைத்து என்ன... நடந்து கொண்டிருப்பது என்ன... அவளுக்கு சுத்தமாய் ஒன்றும் புரிபடவில்லை.



'என் விழியை நீங்கி நீ விலகாதே'



தொடரும்...
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
MY DEAR FRIENDS,

Don't mistake me...

சில கதைகள் படிக்கும் போது வேறாய் இருக்கும் புத்தகத்தில் வேறாய் இருக்கும் அதாவது சில இடங்களில் திருத்தியோ அல்லது மாற்றியோ எழுதியிருப்பார்கள்..
அதே தான் இங்கும்...
சின்ன சின்ன மாற்றம். சில இடங்களில் வர்ணிப்புகள் அதிகமாகியிருக்கும்.. டயலாக்ஸ் கம்மியா இருக்கும்... அதை தான் மாற்றி இருக்கிறேன்...
மத்தப்படி அதே அனி அதே ஷௌர்யா... அதே காதல் கதை தான்.
உங்களை போல இது எனக்கும் பிடிச்ச கதை தான். காரணம் இது என் முதல் கதை... அதை சிறப்பாக எழுத வேண்டும் என்பது என் எண்ணம். அதை தான் செயலாற்றுகிறேன்...
விட்ட இடத்திலிருந்து கூடிய சீக்கிரம் தொடர்வேன்... அதிலிருந்து படிக்க விரும்புவர்கள் சற்று காத்திருந்து படித்துக் கொள்ளுங்கள்.
தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம்...
it's my kindly request....
please friends understand me....
and keep supporting me....


நன்றி...
:smile1:
 
Last edited:

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'என் விழியை நீங்கி நீ விலகாதே..'



அத்தியாயம் 02



அதிகாலை நேரம் வழக்கம் போல் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தமர்ந்த அனிகா மியூசிக் சிஸ்டத்தை ஆன்(on) செய்ய கைகளை நகர்த்தியவள் தட்டுபடாமல் போகவே குழம்பியவளுக்கு நடந்த நிகழ்வுகள் நினைவு வர முகத்தை சுருக்கி உதட்டை சுழித்து சலிப்புடன் அறையினுள் இருந்த குளியலறைக்குள் நுழைந்தாள்.


மார்புக்கு குறுக்காய் பாவாடை உடுத்தி ஷவரை திறந்து கொட்டும் நீரில் தலைக்கு குளித்ததில் கூந்தலுக்கு சீயக்காய் போட்டு அலசியவளின் கைகள் அதன் பாட்டுக்கு ஷாம்புவை தலைமுடியில் தேய்க்க மனமோ நேற்று இரவு நடந்த அட்டகாசங்களை உதட்டோரம் மின்னிய புன் சிரிப்புடன் அசை போட்டது.


கதிர்வேலன் துணிமணிகளை எடுத்து வைக்கும் படி கூறவும் அதிர்ந்து போனவளுக்கு ஒரு சில கணங்கள் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.


‘அப்போ கார்த்திக் அண்ணா அப்பாகிட்ட பேசலையா... நான் அவ்ளோ தூரம் சொல்லியும் சொல்லலேனா என்ன அர்த்தம்... என்னால அம்மா, அப்பா பாட்டி, இந்த ஊரு, இந்த வீடு இது எல்லாத்தையும் விட்டிட்டு எப்பிடி இருக்க முடியும்... இவங்களெல்லாம் பார்க்கலேன்னா என்னால நிம்மதியா தூங்க கூட முடியாதே... இது எல்லாம் கார்த்திக் அண்ணாக்கும் தெரியுமே.. இருந்தும் ஏன் அவன் அப்பாகிட்ட இத பத்தி சொல்லல...’


ஒரு சில கணங்கள் தான்... மனம் சுய அலசலில் ஈடுபட்ட சில வினாடிகளிலே நடப்புக்கு திரும்பியவள் “அப்பா... இப்போ எதுக்கு இவ்ளோ அவசரம்... இன்னும் ரெண்டு நாள் இருந்திட்டு...” என முடிக்கும் முன்பே...


“இல்லடா கண்ணம்மா... இப்போவே கிளம்பினாத்தான் நீ காலேஜுக்கு போக சரியா இருக்கும்... கார்த்திக் இப்போத்தேன் போன் பண்ணான் நாளை மறுநாள் காலேஜ் ஆரம்பிக்குதாம்... அதான் நான் இப்போவே கிளம்பி வரேன்னு சொன்னேன் அப்போத்தேன் முதல் நாள் காலேஜுக்கு போக வசதியா இருக்கும்...” என்றவர்,


“வசு நீயும் ஒரு நாளைக்கு நிக்கிற மாதிரி துணிய எடுத்து வச்சுக்கோ அம்மாவ விட்டிட்டு போறோம். சீக்கிரம் ஊரு திரும்பனும்...” என்றவர் அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.


அனிகாவோ தந்தை உரைத்துச் சென்ற “கார்த்திக் இப்போத்தேன் போன் பண்ணான்...” என்ற சொல்லில் ஆத்திரம் அதிகரிக்க உள்ளுக்குள் அவனை சபித்தவள் தன்னறைக்குச் சென்று கார்த்திக்கின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.


முதல் ரிங்கிலே அழைப்பு எடுக்கப்பட்டது இருந்தும் கார்த்திக் பேசவில்லை. அதில் அவளின் எரிச்சல் பன்மடங்கு அதிகரித்தது.


‘துரை போன் பண்ணினா அன்செர் பண்ணுவாராம் ஆனா பேசமாட்டாறாம்... பன்னி மூஞ்சு வாயா...’


“டேய்... உனக்கு எத்தன தடவ படிச்சு படிச்சு சொன்னேன்... அப்பாகிட்ட பேசுன்னு... நீயேன்டா பேசல... என்னால அவங்கள பார்க்காம இருக்க முடியாதுன்னு உனக்கு நல்லாவே தெரியும்... இருந்தும் ஏன் இப்பிடி பண்ண... உன்னய பத்தி வீட்டில போட்டு கொடுத்துக்கு என்ன நல்லாவே பழிவாங்கிட்டடா... நீ மட்டும் எங்கைல சிக்கின மவனே சிக்கன் சிக்ஸ்ட்டிபை தான்டியோய்... அப்பா வேற இன்னைக்கே கெளம்பலாம்னு சொல்றாரு.. அதுவும் நான் இன்னிக்கு அவளோ தூரம் உன்கிட்ட சொல்லியும் நீ அப்பாகிட்ட இந்த விஷயத்த பத்தி பேசாம நாளைக்கே கிளம்பி வர சொல்லியிருக்கேன்னா உனக்கு எம்புட்டு தைர்யம் இருக்கணும்... இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்க உன்னய பழிவாங்க மாட்டேன்.. ஆனா லைட்டா பழிவாங்குவேன்...” சூளுரைத்தவள்,


“டேய்.. நான் இவ்ளோ பேசுறேன்.. ஒத்த வார்த்தையாவது பதிலுக்கு பேசுறியா கல்லுளி மங்கனாட்டம் அமைதியா இருக்க காட்டெருமை... உன்னய வந்து கவனிச்சிக்கிறேன்...” திட்டி விட்டு போனை வைத்தவளுக்கு நன்கு தெரியும் இனி தான் தலைகீழாய் நின்றாலும் தந்தை தன் முடிவை மாற்ற போவதில்லை என்று... அதை நினைத்து மனம் கணக்க, வெளிக்காட்டாமல் துணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.


எத்தனை நாழிகையோ வேண்டாவெறுப்பாய் துணிகளை மூட்டை கட்டியவள் திண்ணையில் வந்தமர அவளருகில் தூணில் சாய்ந்தமர்ந்திருந்த ரெங்கநாயகி, பேத்தி ஏதும் பேசுவாளா என அவள் முகத்தையே ஏக்கம் பொங்க பார்த்திருந்தார். தன்னிலையில் இல்லாமல் மனம் சோர்ந்து போய் அமர்ந்திருந்தவளுக்கு யாருடனும் பேசத் தோன்றவில்லை. விட்டத்தை வெறித்துப் பார்த்தாள்.


நேரம் விரைந்து கொண்டிருக்க இரவு ஏழு மணியளவில் வீட்டிற்கு வந்த கதிர்வேலன் இரவுணவை மகளுடனே முடித்துக் கொண்டு புறப்பட தயாரானார்.


வாசுமதி அதற்குள் அனைத்தையும் தயார் செய்திருக்க சரியாய் அரைமணி நேரத்தில் அவர்களின் வீட்டின் முன்பு வந்து நின்றது மாருதி கார்.


ஊருக்குள் வசதியானவர்கள் தான். அந்த ஊரை சுற்றியுள்ள முக்காவாசி தோப்பும் துறவுகளும் அவர்களுடையது தான். இன்னமும் ஏகப்பட்ட நிலபுலங்கள் கிடக்கின்றன தான். இருந்தும் ஆடம்பரத்திற்காக எதையும் செய்ய விரும்பாதவர். எளிமை விரும்பி.


வசதியென்றாலும் எளிமையாக இருக்க ஒரு சிலரால் தான் முடியும். கதிர்வேலன் அந்த வர்க்கத்தை சேர்ந்தவர். அவர் மனைவி வாசுமதியும் அப்பிடித்தான் அவர் வளர்த்த அனிகாவும் அப்படித்தான்.


கார் டிரைவர் இவர்களின் பெட்டிகளை எடுத்து வைக்க உதவி செய்யவும் ஒருவழியாய் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு புறப்பட தயாராக தந்தையின் அருகில் வந்த அனிகா “அப்பா ஒரு நிமிசம்” என்றபடி வீட்டினுள் ஓடினாள்.


வீட்டின் ஒவ்வொரு இண்டுஇடுக்கிலும் அவளின் பார்வைகள் ஆசையுடன் பாய்ந்து மீண்டது. இறுதியாய் தன் அறைக்குச் சென்று கட்டிலிலிருந்த டெடியை ஆசையுடன் வருடி நெஞ்சோடு சேர்த்தணைத்தவளுக்கு அந்த வீடு கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட சாதாரண வீடு அல்ல...


அதன் ஒவ்வொரு செங்கல்லிலும் அவளின் நினைவுகள் ஆழப் பதிந்திருந்தன. பெற்றோரை இழந்து இங்கு வந்ததிலிருந்து அவளும் அவளின் பாட்டியும் சேர்ந்து அடித்த கொட்டங்கள் அண்ணனுடனும் அத்தான்களுடன் அடித்த லூட்டிகள் அத்தை மகள் நித்யாவுடன் போட்ட சண்டைகள் அப்பாவிடம் பாசமாய் வாங்கிய அடிகள் அம்மாவின் செல்லமான திட்டுக்கள்... அத்தனை ஞாபகங்களும் படம் போல் மனதில் வலம் வந்து அவளின் மெல்லிய மனதை இன்னும் வாட்டமுற செய்தது.


மனதின் கணம் நடையில் தெரிய சோர்ந்த நடையுடன் வெளியில் வந்தவள் பாட்டி திண்ணையில் கண் மூடி அமர்ந்திருக்கவும் கவலையுடன் அவர் அருகில் சென்றாள்.


பேத்தியின் வரவை உணர்ந்து கண் திறந்த ரெங்கநாயகி அவளை பார்த்து ஆதுரத்துடன் சிரித்தார்.


அவரின் சிரிப்பில் தன் கவலையை உள்ளுக்குள் புதைத்து அவரை முறைத்தவள் “ஏய் கிழவி நான் போறேன்னு தெரிஞ்சதுந்தேன் உன் முகத்தில சிரிப்பே வருதில்ல.. அப்போ நான் போறது உனக்கு அம்புட்டு சந்தோசம் அப்பிடித்தானே... இனிமே இவ தொல்லை இருக்காதுன்னு தானே இப்பிடி சிரிக்கிற... நல்லா சிரிச்சிக்கோ கிழவி ஆனா நான் இனிமே உன்னய தூங்க விடமாட்டேன்... நீ தூங்கும் போது தெனமும் உன் கனவுல வந்து டோர்ச்சர் பண்ணுவேன்... இது உன் சிரிப்புக்காக நான் உனக்கு கொடுக்கிற சாபம்...”


பேத்தியின் பேச்சில் அவர் மனம் பாகாய் உருகித்தான் போனது.


அனிகா பெற்றோரை இழந்ததில் இருந்து இங்கு தான் இருக்கிறாள். எல்லோருடனும் கலகலப்பாய் பழகுவாள். ஆனால் வெளி உலகம் தெரியாதவள். அவளின் மொத்த உலகமும் அந்த கிராமமும் அவளின் வீடும் தான். யாருடன் எப்பிடி பேச வேண்டுமென்பதெல்லாம் அவளுக்கு சுத்தமாய் தெரியாது. யாரையாவது பிடித்து விட்டாள் அவர்களுடன் வாயோயாமல் பேசியே பொழுதை ஓட்டி விடுவாள்.


இப்பிடியெல்லாம் அவள் இருப்பதால் தான் இந்த பெங்களுர் பயணும் அதனுடன் சேர்த்து இந்த படிப்பும்..


இருபத்து நான்கு மணி நேரமும் யாருடனாவது கடலை போடு என்றால் எந்த தயக்கமுமின்றி கடலை போட ஆரம்பித்து விடுபவளால் இரண்டு மணி நேரங்கூட உக்கார்ந்து படிக்க முடியாது... அப்படிப்பட்டவளை போய் படி படியென்றால் அவளும் என்னதான் செய்வாள்.


அந்த கடுப்பில் இருந்தவள் பாட்டியின் இளிப்பில் பொங்கிவிட்டாள்.


நேரம் கடந்ததில் வெளியில் காத்திருந்த கதிர்வேலன் குரல் கொடுக்க, தந்தையின் அழைப்பில் பாட்டியை பார்த்து “போய்ட்டு வரேன் கிழவி... போறாளேன்னு ரொம்ப சந்தோசப்பட்டுக்காதே... உங்கனவுல வருவேன்...” குறும்புடன் இளித்தவள் வழியனுப்ப நின்ற வேலைக்காரர்களை பார்த்து கனத்த மனதுடன் கையாட்டி விடைபெற்று காரில் அமர்ந்தவள் டெடியை கட்டிக் கொண்டு தாயின் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.


வாசுமதி மகளின் மனமறிந்து அவளின் தலையை பாசத்துடன் தடவிக் கொடுக்க, அதுவே அவரது மகளின் மனதில் பாரத்தை ஏற்றியதை அவர் அறியவில்லை.


‘அம்மா இல்லாம.. இதோ இப்பிடி அவங்க பாசமான வருடல் இல்லாம அப்பாயில்லாம என்னால எப்பிடி அங்க இருக்க முடியும்னு தெரியலையே...’ இனிவரும் நாட்கள் குறித்து உள்ளுக்குள் அனத்தியவளுக்கு சோர்வு காரணமாய் உறக்கம் வர தாயின் பாசமான அரவணைப்பில் அவர் மடியிலே துயில் கொண்டாள்.


திப்பம்பட்டியில் இருந்து பெங்களுர் கிட்டத்தட்ட மூன்று மணிநேர பயணம் தான் என்பதால் டிரைவர் மிதமான வேகத்திலே வண்டியை செலுத்த, இந்த பயணத்தோடு தன் வாழ்வே மாறப்போகின்றது என்பதை அறியாதவளாய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அனிகா.


******


ஆபீஸில் இருந்து வீட்டுக்கு வந்த ஷௌர்யாவை எப்போதும் போல் இன்றும் தனிமையே வரவேற்க அந்த தனிமையை அவனின் இறுக்கமான முகம் காட்டிக் கொடுக்காவிட்டாலும் அவனின் மென்மையான மனம் அதை எண்ணி சலித்துப் போனது.


அவன் அதிகம் நாடுவதும் தனிமை தான் அதிகம் வெறுப்பதும் தனிமை தான். அந்த தனிமையை போக்குவதற்காய் மதுவின் துணையை நாடுவானே ஒழிய மாதுவின் அருகில் கூட செல்ல மாட்டான். அதில் கோபியர்களின் கிருஷ்ணனாய் இல்லாமல் சீதையின் ராமனாய் இருந்தான்.


தான் நினைத்தை மட்டுமே செய்வான். யார் விருப்பத்திற்காகவும் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டான். தன் குடும்பத்தினராக இருந்தாலும் கூட...

அவனின் குடும்பத்தினர் அனைவரும் டெல்லியில் இருக்க அவனோ தனிக்காட்டு ராஜாவை பெங்களூரில் இருந்தான். அவனின் மொத்த சாம்ராஜ்யமும் இங்கு தான் மையம் கொண்டிருந்தது. அவனின் ஒற்றை விரலசைவிற்காக பல பேர் காத்திருக்கின்றனர். அவன் காலால் இட்ட வேலைகளை தலையால் செய்து முடிக்க நிழல் உலகமே காத்துக் கிடகின்றது. அந்தளவு பெரும் புள்ளி.


அதற்கேற்ப அவனுக்கு கர்வமும் அதிகம்... பணத்தினால் வந்த செருக்கு... கர்வமும் பணத்திமிரும் கொடுத்த கம்பீரம்.. ஆளுமை அத்தனையும் அவனிடம் சற்று அளவுக்கு அதிகமே. அது என்றும் அவனிடமிருந்து இம்மியளவும் மாறாது.


மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது..


ஆபீசில் இருந்து வந்த களைப்பில் நான்காவது தளத்தில் இருக்கும் தன் அறைக்குள் நுழைந்தவன் மினிபாரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மிகவும் விலையுயர்ந்த மது பாட்டிலை எடுத்து க்ளாஸில் ஊற்றி அதனுள் சில ஐஸ் கியூப்களை இட்டவன் மிடறு மிடறாய் அருந்தியாவரே படுக்கையறைக்குள் நுழைந்தான்.


அவனின் அறை அத்தனை விசாலமாகவும் நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் பிரம்மாண்டமாய் அமைக்கபட்டிருந்தது. அதன் ஒவ்வொரு இடுக்கிலும் பணம் அதன் பயனை காட்டியிருந்தது.


பத்து பேர் தாராளமாய் புரண்டு படுக்கும் அளவிற்கு பஞ்சு போல் அமிழும் மெத்தையுடன் கூடிய சொகுசு கட்டிலும் உடைமாற்றும் அறையும் அதிநவீன அட்டேச் பாத்ரூமுடன் கூடிய குளியலறையும் அறையை ஒட்டிய பால்கனியும் டெரசில் கலைநயத்துடன் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல்.., நீச்சல் குளத்துடன் கூடிய ரூப் கார்டனும் என ஒவ்வொன்றும் நவநாகரீகத்தின் மறுபிம்பமாய் மின்னியது.


பணத்தை பெருக்குவதிலும் வல்லவன் அதை அதன் மதிப்பு குறையாமல் செதுக்குவதிலும் வல்லவன். அதே சமயம் பண விஷயத்தில் தன்னை ஏமாற்றுவர்களுக்கு நரகாசூரன். மொத்தத்தில் அவன் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு மகா கெட்டவன்.


கைகளில் பாதி அருந்தப்பட்ட நிலையில் இருந்த மதுகுப்பியை கண்ணாடி டீபாயில் வைத்தவன் அதிலிருந்த கார்ட்லெஸ் போனை கையில் எடுத்து நொண்டிக்கொண்டே குளியலறைக்குள் நுழைந்து அதன் ஸ்டாண்டில் பொருத்தியவன் பாத்டப்பினுள் அமிழ்ந்தான்.


நீரினுள் நுழைந்ததுமே களைப்பு நீங்குவது போலிருக்க அதை சுகமாய் அனுபவித்தவன் போனை ஆன் செய்ய அதில் ரெகார்ட் ஆகியிருந்த அழைப்புகள் ஒவ்வொன்றாய் வர ஆரம்பித்தது.


இது அவனின் தனிப்பட்ட கார்ட்லெஸ் போன்... இந்த எண்ணிற்கு வரும் அழைப்புகள் தானாகவே அன்செர் செய்யப்பட்டு ரெகார்ட் ஆகிவிடும். அதில் வந்த அழைப்புகளையும் எதற்காக வந்திருக்கின்றது என்பதையும் நீரினுள் அமிழ்ந்தபடியே கண்மூடி கிரகித்தவனின் காதுகளில் விழுந்தது ஒரு பெண்ணின் கோபமான குரல்...


கோபத்திலும் கூட இனிமையாய் ஒலித்த அந்த குரலிலோ அல்லது எந்த முகஸ்தீபும் இல்லாமல் அவள் திட்டிக் கொண்டே சென்றதில் வந்த எரிச்சலிலோ கண்களை திறந்தவன் அந்த எண் யாருடையது எங்கிருந்து வந்திருக்கின்றது என்பதை பற்றி ஆராயும் படி நொடியில் தன் ப்ரைவேட் ஏஜென்சிக்கு செய்தி அனுப்பினான்.


அந்த குரலின் இனிமையிலோ என்னவோ அவனின் ஆழ்மனதினுள் அக்குரல் தனக்கென ஒரு இடத்தை அழகாய் செதுக்கி தக்க வைத்துக்கொண்டது. ஆனால் அதை புரிந்து கொள்ளாமல்; அவள் வேறு யாருக்கோ அழைப்பதற்கு பதில் தனக்கு அழைத்து விட்டாள் என தெள்ளத்தெளிவாய் புரிந்தும் அந்த குரலிற்கு சொந்தக்காரியை காணவேண்டும் என வன்மத்துடன் எண்ணிக் கொண்டான்.


அவனின் ஆண் என்கிற திமிர் ஏனோ அந்த குரல் தன்னை திட்டுவது போல் ஓர் மாயையை அவனுள் தோற்றுவித்ததே காரணம்.


ஒருவேளை அந்த குரலிற்கு சொந்தக்காரியை பார்க்கவேண்டும் போல் அவனின் ஆழ்மனது துடித்ததோ என்னவோ அவன் அறியான்.


அதன் பின்பு அவளை பற்றிய எண்ணங்களையும் சிந்தனையையும் அவசியமற்றது என ஒதுக்கி தள்ளியவன் அடுத்தடுத்த அழைப்புகளையும் அதில் வந்த தகவல்களையும் கவனமாய் செவிமடுத்து அதனுடன் சேர்த்து களைப்பு தீர சாவதானமாய் குளித்து டவலை கட்டிக் கொண்டு வெளியில் வந்தவன் இரவுடைக்கு மாறி மடிகனணியுடன் டெரசில் அமர்ந்து கொண்டான்.


உலகநாடுகள் முழுவதும் அவனின் எஸ்.வி குரூப் ஒப் கம்பனீஸ் பறந்து விரிந்திருக்கின்றது. ஒவ்வொரு துறையிலும் பல கிளைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன...


தொழிலுக்காகவே ஓடிக் கொண்டிருப்பவனுக்கு எத்தனை சாதித்தும் இன்னமும் முழு திருப்தி ஏற்படவில்லை. இன்னும் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற வெறி தான் ஒவ்வொரு முறையும் அவனுள் எழுகிறது. அதற்காத்தான் பசி தூக்கம் மறந்து அவன் ஓடிக் கொண்டே இருப்பது.


இன்று தான் பல நாட்களின் பின் மனதும் உடலும் சற்று சீராய் இருப்பது போல் தோன்ற லெப்பினுள் தலையை நுழைத்து அதில் மூழ்கிப் போனான்.


எத்தனை மணி நேரமோ அதனை நொண்டிக் கொண்டிருந்தவன் கைகளை விரித்து சோம்பல் முறித்தவாறு நேரத்தை பார்த்தான். நேரம் சரியாய் பன்னிரண்டில் இருந்தது. லெப்பை மூடியவன் பால்கனிக்கு சென்று நள்ளிரவிலும் மின்விளக்குகளின் ஒளியால் ஜெகஜோதியாய் மின்னிக் கொண்டிருந்த பெங்களுர் தி ரோக்கிங் சிட்டியை சாவதானமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.


செல்போன் அலறியது. அவனின் ப்ரைவேட் ஏஜென்சியில் இருந்து தான் அழைப்பு வந்தது. எடுத்து காதில் வைத்தவன் ஒரு காலை சுவரில் ஊன்றி சாய்வாய் நின்று கொண்டான்.


“This phone call comes from the village of Thippampatti...” அழைப்பை துண்டித்தான்.


சிறிது நேரம் மனதின் வெம்மை தனிய இயற்கையின் வருடலை மென்மையாய் ரசித்துக் கொண்டிருந்தவன் அறைக்குள் நுழைந்து விளக்குகளை அணைத்து விட்டு கட்டிலில் விழுந்து தூங்க ஆரம்பித்தான்.


பல நாட்களின் பின் இன்று தாமதிக்காமல் உறங்க செல்கின்றான். அதில் தனக்குள் சிரித்துக் கொண்டவன் கண்களை மூடி உறங்க ஆரம்பிக்க ஓய்வுக்காக கெஞ்சிய உடம்பு படுக்கையில் விழுந்ததுமே தூக்கத்தை தழுவ பல நாட்களின் பின் நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்தான்.


*****


தூக்கம் கலைந்து காரிலிருந்து இறங்கினாள் அனிகா. அவளின் சித்தப்பாவின் வீட்டை அடைந்திருந்தனர்.


சங்கரவேலன், மாலதி, கார்த்திக் அனிகாவின் அத்தை குடும்பமும் அவர்களுக்காக தூங்காமல் வாயிலில் காத்திருந்தனர்.


காரிலிருந்து இறங்கிய கதிர்வேலன் தங்கை குடும்பத்தை ஆச்சரியத்துடன் பார்த்தார்.


“நீங்க எப்போ வந்தீங்க மாப்ள..”


“இப்போ தான் மச்சான்.. என்னோட மருமக இங்க வரபோறதா கேள்விப்பட்டேன்... அதான் அவள பார்க்க ஓடி வந்திட்டோம்” என்ற ராம்குமார் தூக்க கலக்கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த மருமகளின் கோலத்தில் வாய்விட்டு சிரித்தார்.


தந்தையின் சிரிப்பில் அவரின் பார்வை போகும் இடத்தினை பார்த்த நித்யா அனிகாவின் கோலத்தில் நமுட்டு சிரிப்புடன் தோட்டத்தில் கிடந்த ஹோர்சை பைப்பில் மாட்டியவள் நீரை திறந்து விட்டாள்.


திறந்த வேகத்தில் சீறிக்கொண்டு வந்த நீர் அரைதூக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த அனிகாவின் மேல் சர்ரென தெறிக்க... திடீரென தன்மேல் தெறித்த நீரினை பார்த்து தூக்கம் மொத்தமும் கலைய “ஆஆஆஆஆஆ” என அலறினாள்.


ராம்குமார் மகளின் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டில் அவளை முறைத்துப் பார்த்தார்.


“என்ன பண்ற நிது குட்டி... இப்பிடி பண்ணக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...”


தந்தையின் அதட்டலில் அவரை முறைத்தவள் “மாமா...” கூவிய படி கதிர்வேலின் அருகே விரைந்து அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.


“இந்த அப்பாவ பார்த்தீங்களா மாமா... போன தடவ நான் ஊருக்கு வந்தப்போ இவ என்னனெல்லாம் பண்ணால்னு உங்களுக்கே தெரியும்ல அதான் பழிப்பு பழி.. ரத்ததிற்கு ரத்தம்...” சிணுங்கலுடன் கூறி குறும்பாய் சிரித்தாள்.


“சரித்தேன்...” அவளுக்கு ஒத்து ஊதி தங்கை மகளின் தலையை பாசத்துடன் வருடினார் கதிர்வேலன்.


தூக்கம் கலைந்த எரிச்சலில் இருந்த அனிகா தந்தையின் கூற்றில் அவரை கடுப்புடன் முறைத்தவள், தந்தையின் தோளில் வாகாய் சாய்ந்து நின்ற நித்யாவை கோபமாய் பார்த்து ஒற்றை விரல் அசைத்து ‘கொன்னுடுவேன்’ என இதழசைத்தவள் ராம்குமாரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.


அதில் கோபமாய் அவளை முறைத்த நித்யா “ஏய்.. நீ எதுக்குடி என் அப்பா தொங்கி நிக்கிற...”


“நீ மட்டும் என் அப்பா தோள்ல தொங்கலாம்... நான் உங்க அப்பா தோள்ல தொங்க கூடாதோ இது எந்த ஊர் நியாயம்டி...”


“திப்பம்பட்டி நியாயம் முதல்ல நீ நவுரு... நான் தான் என் அப்பா பக்கத்தில் நிப்பேன்...” சிறுபிள்ளை போன்று அடம்பிடித்தவள் அனிகாவை ஓரங்கட்டி தன் ஆருயிர் தந்தையின் தோளில் வாகாய் சாய்ந்து கொண்டாள்.


அதை பார்த்து ஏளனமாய் சிரித்த அனிகா “ஓஹோ இம்புட்டு தூரம் போய்டிச்சா....” உதடு சுழித்தவள் தங்களை வேடிக்கை பார்த்திருந்த சித்தப்பாவையும் தந்தையையும் தன்னருகில் வரும்படி அழைத்து அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றவள் நித்யாவை மிதப்பாய் ஓர் பார்வை பார்த்தாள்.


“உனக்கு ஒரு அப்பா தான் என் அத்த பெத்த மவளே ஆனா பாரு எனக்கு ரெண்டு அப்பாங்க” தாவணியின் மேற்சட்டையை பெருமிதமாய் தூக்கி விட்டவள் கருநாகமாய் நீண்டு தொங்கிய கார்சடையை சிலுப்பி பின்னால் போட்டவாறு தோட்டத்தில் இருந்த கல்மேடையில் போய் அமர்ந்து கொண்டாள். அத்தனை நேர சிறுபிள்ளைத்தனம் மறைந்து அங்கு பெற்றோரை பிரியும் துயரம் குடிகொண்டது.


இவர்கள் இருவரினதும் வாய்ச்சவடாலை வழமை போல் வேடிக்கை பார்த்த குடும்பத்தினர் அனிகா தோட்டத்தினுள் நுழையவும் அவள் பின்னோடு சென்றனர்.


அத்தனை நேரம் வேடிக்கை பார்த்தவண்ணம் அமைதியாய் இருந்த கார்த்திக் தங்கையின் துயரம் உணர்ந்து அவள் அருகில் சென்று அமர, அரவம் உணர்ந்து நிமிர்ந்தவள் அங்கு கார்த்திக்கை கண்டதும் கொலை வெறியுடன் முறைத்துப் பார்த்தாள்.


தங்கையின் காண்டான பார்வையின் அர்த்தம் புரியாது குழம்பிப்போனான்.


‘எதுக்கு இந்த குட்டிபிசாசு இப்பிடி லுக்கு விடுது... நாம ஒன்னும் பண்ணலையே... அப்பறம் எதுக்கு இந்த டேன்ஜெரஸ் லுக்கு...’


“என்ன குட்டிப்... குட்டிம்மா... இங்க வந்திருக்க... போ..போய் தூங்கு டயர்டா இருக்கும்...”


ஏற்கனவே அவன் மீது கொலை வெறியில் இருந்தவள் அவன் குட்டிப்பிசாசு எனக்கூற வந்து பின் குட்டிம்மா என்று மாற்றி அழைத்ததும் வெறி உச்சகட்ட கட்டத்தை அடைந்தது.


“உனக்கு எம்புட்டு தைர்யம் இருந்தா என்னைய படிக்க வைப்ப... நான் கேட்டேனா.. என்னைய படிக்க வையின்னு நான் உன்கிட்ட கேட்டேனா... உனக்கு எதுக்கிந்த அதிகபிரசிங்கி தனோம்ங்கிறேன்... இப்போ எதுக்கு வாயை இறுக்கி மூடிகிட்டு இருக்க...” கடுப்பில் இருந்தவள் ஏகவசனத்தில் அவனை உலுக்க..


“ஏய் ராட்ஷஷி விடுடி... யாராவது என்னை இவகிட்ட இருந்து காப்பாத்துங்க... என்னை கொல்லப்பார்க்கிறா... ப்ளீஸ் ஹெல்ப் மீ... யாராவது இருக்கீங்களா... ரொம்ப பயம்மா இருக்கு.. பக்கத்தில ஒரு ராட்ஷஷி வேற இருக்கா... ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க..” அலறுவது போல் அவளை ஓட்ட...


அதில் பல்லை நறநறத்தவள் நங்கென அவன் தலையில் ஓங்கி கொட்டினாள்.


“அவ்வவ்வ்வ்வ்...” என வடிவேல் பாவனையில் தலையை பிடித்துக் கொண்டு கத்தியவன் தன் குடும்பத்தினரிடம் மட்டும் தான் இப்படி நடந்து கொள்வான்.


வெளி இடங்களில் அவனின் முகமே வேறு. தந்தை ஆரம்பித்த கட்டுமான தொழிலை திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறான். ஷௌர்யாவிற்கு கிடைக்கவிருந்த கவர்மென்ட் டென்டரை கைப்பற்றியவன்.


கார்த்திக்கிற்கு அவனை பற்றி நன்கு தெரிந்தாலும் இத்தனை நாட்களில் அவன் ஒன்றும் செய்யவில்லை என்பதால் அதை அப்படியே விட்டு விட்டான்.


ஷௌர்யாவை பற்றி அவன் முழுமையாக அறியவில்லையோ என்னவோ. எதிராளியின் பலம் பலவீனம் அறிந்து அதனுடன்
மோதும் அசுரன் அவன் என்பதை அறியாமல் போனது கார்த்திக்கின் துரதிஷ்டம் தான்.



மகளின் முதுகில் ஒரு போடு போட்ட வாசுமதி, “என்ன பழக்கம் அனிம்மா... அண்ணன இப்பிடித்தான் மரியாதை இல்லாம பேசுவியா...” அதட்டினார்.


அன்னையின் பேச்சில் கோபமாய் அவரை முறைத்தவள் “இந்த நொண்ணன வேறு என்னதான் பண்றதாம் இவன் பண்ண வேலைக்கு அப்டியே கழுத்த நெரிச்சு கொல்லனும் போலிருக்கும்மா... உங்களுக்கே தெரியும்ல எனக்கும் அந்த பாழாப்போன போன படிப்புக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாதுன்னு... இருந்தும் நீங்க எல்லாரும் இப்பிடி பிடிவாதம் பிடிக்கிறதா பார்த்தா நானும் என்ன பண்றது சொல்லுங்க... சுத்தமா வராத ஒன்ன வா வான்னா அது எப்பிடி வரும்...” தன் மனக்கவலையை கொட்டியவள் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டாள்.


அனிகாவின் பேச்சில் அனைவரும் வாய்விட்டு சிரிக்க அவளுக்குமே கடையோரத்தில் சிரிப்பு எட்டிப்பார்த்தது.


அவளின் கோபம்... வருத்தம் எல்லாம் சில நொடிகள் தான். எந்த உணர்ச்சியையும் அதிக நேரம் இழுத்துப் பிடித்து வைத்திருக்க முடியாத குணவியல்பு அவளது..


அத்தனை நேரம் விடாப்பிடியாய் இழுத்துப்பிடித்திருந்த கோபம் மறைந்து கார்த்திக்கின் புறம் திரும்ப, அவனோ பயத்தில் ஓரடி பின்னால் நகர்ந்தான்.


அதை பார்த்து வாய்விட்டு சிரித்தவள் “ரொம்ப பயப்படுற மாதிரி நடிக்காதண்ணா. உனக்கு கொஞ்சமும் செட் ஆகல...” கேலி செய்ய, அதை கேட்டு அசடு வழிந்தான் கார்த்திக்.


“அத விடு குட்டிம்மா... என்ன படிக்கலாம்னு இருக்க சொல்லு...”


“நானா... நான் B.com இல்லன்னா எதுனாச்சும் படிச்சிக்கலாம்” அசால்ட்டாய் கூற,


அவளருகில் நின்ற குடும்பத்தினர் அனைவரும் அவளின் பதிலில் “என்ன!!!...” ஒரு சேர கேட்க, பதிலுக்கு அவளும் “என்ன... என்ன” கேள்வியெழுப்பினாள்.


அண்ணன் மகளை கடுப்புடன் பார்த்த பார்வதி, “உன்ன பிகாம் படிக்கிறதுக்கா இங்க கூட்டிட்டு வந்தோம்...” கடிய,


ராம்குமார், “உன்னோட மார்க்கிற்கு நீ மெடிக்கல் எடுக்கலாமே...” ஆலோசனை வழங்க,


ஆதி, “மெடிக்கல் கஷ்டம்னா இன்ஜினியரிங் எடுக்க போறீயா...”


ஒவ்வொருவராய் ஆலோசனை என்ற பேரில் அவளை துளைத்தெடுக்க தலைபிடித்துக் கொண்டவளின் மனமோ, ‘அனிகுட்டி இதுக்கு மேலயும் நீ அமைதியா இருந்த இதுக உன்னைய கன்வீன்ஸ் பண்ணியே பெரிய படிப்ப படிக்க வச்சாலும் வச்சிடுவாய்ங்க அதுக்குள்ள நீ முந்திக்க...’ எடுத்துரைக்க தொண்டையை செருமி எல்லோரையும் ஓர் பார்வை பார்த்தாள்..


“இதோ பாருங்க என்னால இந்த மெடிக்கல், இன்ஜினியரிங் எல்லாம் படிக்க முடியாது... படுன்னு சொன்னா படுத்து தூங்குற குழந்தைகளை விட படின்னு சொன்னா படுத்து தூங்குற குழந்தைங்க தான் அதிகம்... அந்த கெட்டகரி தான் நானு புரியும்னு நினைக்கிறேன்... அதனால நானு ஏதாவது ஒரு கோர்சை முடிச்சிட்டு சீக்கிரமாவே ஊரு திரும்ப போறன்...”


அவளின் குடும்பத்தினரோ அவளின் பேச்சை சட்டை செய்யாமல் கேட்காமல் மெடிக்கல் தான் படிக்க வேண்டுமென சொற்பொழிவு ஆற்ற அவர்களின் தொல்லை தாங்காமல் தலையை பிடித்துக் கொண்டாள்.


“ஹையோஒ சரி இப்போ என்ன நான் மெடிக்கல் படிக்கனும் அதானே சரி படிக்கிறேன்... நீங்க சொல்ற மாதிரி நானு மெடிக்கலே படிக்கிறேன்... ஆனா ஒன்னே ஒன்னு அது எனக்கு ஈஸியான veterinary யாத்தேன் இருக்கும்... என்ன ஓகேவா...” என்றவள் தூக்கத்தில் சொக்கிய கண்களை கசக்கியவாறு கார்த்திக்கின் கையிலிருந்த செல்போனை பிடுங்கி நேரத்தை பார்த்தாள்.


நேரம் இரண்டை தொட்டிருந்தது.


குடும்பத்தினரை சோம்பலுடன் பார்த்தவள், “லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட் மீ... என்னால உக்கார்ந்தெல்லாம் படிக்க முடியாது.. உங்களுக்காக போனா போகுதுன்னு இதை படிக்கேன் இனிமே யாரும் இத பத்தி பேச வேணாம்...” என்றவள் இடைமறித்த அத்தையை பார்த்து...


“எனக்கு தூக்கம் தூக்கமா வருது அத்த... நான் தூங்க போறேன்...” வீட்டுக்குள் ஓடியவள் தான் இங்கு வரும் பொழுதுகளில் தங்கும் அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்து உறங்க ஆரம்பித்தாள்.


மற்றவர்களும் நேரம் சென்று கொண்டிருக்கவே அவரவர் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டனர்.


அதை நினைத்துப் பார்த்தவளின் விழிகள் சந்தோசத்தில் மின்னியது.


அதனூடே குளித்து முடித்தவள் தன் பெட்டியில் இருந்து தாவணியை எடுத்தாள்.


இளம் சிகப்பு நிற தாவணியும் கருநீல நிற மேற்சட்டையையும் அணிந்தவளுக்கு அந்த நிறம் வெகு பொருத்தமாய் அவளின் அழகை அபரிதமாய் மேலும் கூட்டியது போலிருந்தது.


எப்போதும் போல் இன்றும் தனக்கு தானே திருஷ்டி கழித்தவள் கண்ணாடியில் தெரிந்த தன் கன்னத்தை கிள்ளி இதழில் ஒற்றி முத்தம் பதித்து இடை தாண்டிய கார்கூந்தலை சடை போட்டவள் துள்ளிக்குதித்துக் கொண்டு கீழிறங்கி சென்றாள்.


அன்னைமார் மூவரும் சமையலறையில் வளவளத்தவாறு சமையல் வேலையில் ஈடுபட்டிருக்க அப்பாக்கள் மூவரும் அரசியல் விவாதத்தில் தங்களை மறந்திருக்க நித்யா தூங்கி வழிந்தவாறு தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டிருந்தாள்.


ஆதி, ராம் மற்றும் கார்த்திக் மூவரும் தொழில் முன்னேற்றம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.


அதை பார்த்து பல்லை கடித்துக் கொண்டாள் அனிகா.


‘ஆளாளுக்கு நல்லா பேசிக்கிட்டு இருக்காய்ங்க என்னைய மட்டும் டீலில் விட்டுப்புட்டு...’


“நல்லா இருக்கு... ரொம்ப நல்லாஆஆ இருக்கு... நீங்க இப்படியே பேசிக்கிட்டு அப்றோம் நேரமாச்சுன்னு ஊருக்கு கிளம்பிடுவீங்க... அப்றோம் நான் என்ன பண்றதாம்... நீங்க எல்லாம் பேசிக்கிட்டு இருந்தது போதும் போங்க... போய் ரெடி ஆகிட்டு வாங்க வெளியில போகலாம்.. எல்லாருக்கும் ஐஞ்சு நிமிசம் தான் டைம் தருவேன் சீக்கிரம்... சீக்கிரம்”


வெட்டியாய் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவர்களை விரட்டியவள் சாவதானமாய் சோபாவில் அமர்ந்து டீபாயில் இருந்த ஆர்டிகளை புரட்டினாள்.


வெண்டைப்பிஞ்சு விரல்கள் பக்கம் பக்கமாய் புரட்ட கயல்விழி நயனங்கள் அதை சுவாரஷ்யமாய் பார்த்திருக்க அலைபாய்ந்த கருமணிகள் ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது.. ‘வர்மா’ என்ற பெயர் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டு அவள் கவனத்தை ஈர்த்ததில்.


அவனின் ஆறடி உயரத்தில் திடகாத்திரமாய் இருந்தவனின் கம்பீரம்... ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியாளும் ஆளுமை... சிவந்த ஆப்பிளை ஒத்த அவன் அழகு... தொழிலை நிர்வாகிக்கும் திறமை... என அவனை பற்றிய முழு விபரத்தையும் பிட்டு பிட்டு வைத்திருக்க அதை பார்த்து வாயை பிளந்தாள்.


‘வாவ்... பெயரே டக்கரா இருக்கு ஆளு எப்பிடியிருப்பான்...’ ஆர்வமாய் பார்த்தவளின் பார்வைக்கு கிட்டியது என்னவோ அவனின் பழைய புகைப்படமொன்று தான்.


‘அட... ஆளும் சூப்பராத்தான்யா இருக்கான்...’ புகைப்படத்தை உற்று நோக்கினாள்.


குளிர்தேசத்திற்கு சென்றிருப்பான் போலும் கூலர் அணிந்து குளிருக்கு ஏற்ற உடையணிந்து பார்க்க ஜம்மென்று இருந்தான்.


‘எம்புட்டு அழகு... எவளுக்கு வாய்ச்சிருக்கோ’ மனதின் ஏக்கமோ என்னவோ வெளித்தள்ளிய மூச்சுக்காற்று நீண்ட பெருமூச்சாய் வெளியேறியது.


அதற்குள் அவளின் குடும்பத்தினர் தயாராகி வந்திருந்தனர்.


“பரவாயில்ல சீக்கிரமாவே வந்துட்டீங்க... சரி வாங்க வாங்க... போலாம்..” என்றபடி வெளியேறியவர்கள் வீட்டில் இருந்த இரண்டு காரிலும் ஏறிக்கொள்ள அவர்களை கடுப்புடன் பார்த்தாள் அனிகா...


“கார்ல ஏறிட்டா மட்டும் போதாது எங்க போறதுன்னு ப்ளான் போடணும் அதவுட்டுபுட்டு என்கிட்டு போறதுன்னு தெரியாம கார்லயே சுத்திக்கிட்டு இருக்கிறதா கடவுளே... எஞ்சாமி இவங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவை வளர்த்து விடுப்பா...”.


அவளின் காதை வலிக்காமல் திருகிய மாலதி “சரியான வாயாடி... அதெல்லாம் நாங்க முடிவு பண்ணிட்டோம்... நீ முதல்ல கார்ல ஏறு...” என்க,


“இஸ் இட்... வெல்டன் மால்ஸ்... அப்போ என்னைய மாதிரி நீங்களும் அறிவாளியாகிட்டு வாரீங்கனு சொல்லுங்க..” கிளுக்கி சிரித்துக்கொண்டு காரில் அமர, இரண்டு கார்களும் அங்கிருக்கும் புகழ்பெற்ற கோவிலை நோக்கி விரைந்தது.


******


அறையில் இருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று தலை கோதிய கொண்ட ஷௌர்யா அடர் நீல நிற பேன்ட்டும் இளம் சிகப்பு நிற முழுக்கை சட்டையும் அதற்கு பொருத்தமாய் அடர் நீல நிற கோர்ட்டும் அணிந்து கம்பீரமாய் இருந்தான்.


கண்களில் விலையுயர்ந்த சொபர்ட் சன்க்ளாஸ் அவனின் உடையை ஒத்த நிறத்தில். கைகளில் ரோலெக்ஸ் டெய்டொனா வாட்ச்.


தயாராகி கீழே வந்தவன் டைன்னிங் டேபிளில் இருந்த உணவை கைகளால் தொட்டும் பார்க்காமல் பிரஷ் மில்க்க்ஷேக் ஒன்றை அருந்தியவன் வீட்டை விட்டு வெளியேறினான்.


அவனுக்காக காத்திருந்த அவனின் பர்சனல் அசிஸ்டென்ட் ராஜூ “ஜி Today we have to visit the place near the temple” என்றான்.


அதை ஒற்றை பார்வையில் ஏற்றவன் காரில் ஏறி அமர்ந்து காரை கிளப்பினான். அவனின் உடைமைகளை அவனன்றி வேறு யார் தொடுவதையும் அனுமதிக்கமாட்டான்.


ஷௌர்யாவின் கார் நகர்வதற்காகவே காத்திருந்தது போல் அவனின் ப்ரோடெக்டேர்ஸ் முன்னாலும் பின்னாலும் காரை செலுத்தினர். அவனது காரினை ஒத்த வேகத்தில்.


காரில் சென்று கொண்டிருந்தவனின் கைகடிகாரத்தில் பொருத்தப்பட்டிருந்த போனின் வைப்றேடில் ப்ளுடூத் ஆன் செய்து பேசியவனின் இதழ்கள் லேசாய் அதிசயமாய் புன்னகை பூத்து மீண்டும் இயல்பிற்கு திரும்பியது.


'என் விழியை நீங்கி நீ விலகாதே..'



தொடரும்.
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'என் விழியை நீங்கி நீ விலகாதே'



அத்தியாயம் 03



தொடர்வரிசையாய் வந்த கார்கள் அனைத்தும் ஓரிடத்தில் அதன் இயக்கத்தை நிறுத்த காரிலிருந்து இறங்கிய ஷௌர்யா தலைமுடியை கோதியபடி கோவிலின் அருகில் இருந்த இடத்தினுள் நுழைந்தான். அவனின் பின்னால் அவனின் பாதுகாப்பிற்காக ப்ரோடெக்டேர்ஸ்.



அங்கிருந்த ஒற்றை இருக்கையில் தன் தேக்கு மர தேகத்தை சாய்த்து உறுதியான பலம் வாய்ந்த காலின் மேல் கால் போட்டு ராஜ தோரணையுடன் அமர்ந்தவன் அணிந்திருந்த சன்க்ளாசை கழற்றி டேபிளின் மீது வைத்தவாறு அம்பு போன்று துளைத்தெடுக்கும் சிங்கத்தினை ஒத்த பளபளக்கும் கூர் விழிகளால் அவ்விடத்தினை ஏறிட்டான்.



பல ஏக்கரில் பரந்துவிரிந்திருந்தது அவ்விடம். அங்கு தான் அவன் ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் கட்டுவதாக இருந்தான். அதன் உரிமையாளரிடம் பேசி இடத்தை வாங்க அனைத்து ஏற்பாடும் செய்துவிட்ட நிலையில் உரிமையாளரின் மகனால் சிறு பிரச்சினை.


எந்தவொரு வேலைக்கும் அவன் நேரடியாக செல்வதில்லை. தன் ஆட்களை வைத்தே அனைத்தையும் ஒரு நொடியில் செய்து முடித்து விடுவான். அவனின் முகத்தை நேரடியாக பார்த்தவர்கள் மிக அரிதானவர்களே. மீடியாவிடம் கூட அவனின் புகைப்படங்கள் சிக்காது. எதிலும் தெளிவு.


இதுவரையிலும் எதிலும் நேரடியாய் தலையிடாதவன் இங்கு வந்ததின் காரணம் அவன் மட்டுமே அறிந்த ஒன்று.


அதை பற்றி எண்ணிக் கொண்டவனின் கண்களில் பளபளப்பு மறைந்து கண்ணுக்கு எட்டாத மெல்லிய புன்னகை தோன்றியது.



சில கணங்கள் மௌனமாய் இருந்தவன் ராஜூவை நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வையின் அர்த்தத்தை கணித்தவனாய் “ஸ்டீப் bring him along” அழுத்தமாய் குரல் கொடுத்தான்.


அடுத்த சில நிமிடங்களில் ஷௌர்யாவின் முன் அழைத்து வரப்பட்டான் அந்த இடத்திற்கு சொந்தக்காரனின் மகன்.


அவனை பார்த்து அலட்சியமாய் உதடு பிதுக்கியவன் “How much are you expecting” வெகு நிதானமாய் அலட்சியத்துடன் கேட்டான்.


“நீ எவ்வளவு கொடுத்தாலும் நான் இந்த இடத்த விற்கமாட்டேன்டா உன்னோட பணத்திமிர வேற எவன் கிட்டயாவது போய் காட்டு என்கிட்டே காட்டாதே... நான் பணத்துக்கு விலை போறவன் இல்ல...”


அவனின் பேச்சில் வெகு சீரியசாய் தலையாட்டி அவன் கூற்றை ஏற்றவன் தலைமுடியை கோதிக் கொடுத்தான். எதுவும் பேசவில்லை... முகத்திலோ உடல் மொழியிலோ எந்தவித மாற்றமுமின்றி அமைதியாய் அமர்ந்திருந்தான்.


“How much are you expecting” இம்முறை குரல் சற்று அழுத்தமாய் வெளிவந்தது. .


அவனுக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. இம்முறை அவன் ஏதாவது ஒரு தொகையை அவனிடத்தில் கேட்டால் அதை விட ஒரு மடங்கு அதிகமாய் கொடுத்து அவன் உயிர் பிழைத்து வாய்பளிப்பான்.


இந்த வாய்ப்பை அவனுக்கு அளிப்பதற்கு காரணம் ஷௌர்யா கொஞ்சமே கொஞ்சம் நல்லவன். நல்லவனிற்கு நல்லவன். இதை பிடித்துக் கொண்டால் அவனின் உயிராவது மிஞ்சும்.



அதை அறியாது “உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாது, நான் தான் பணத்துக்கு விலை போகமாட்டேன்னு சொல்றேன்ல திரும்ப திரும்ப எதுக்கு இதையே கேக்குற அறிவில்லாஆஆஆ” வார்த்தை முற்றுப்பெறும் முன்னமே அவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது ஷௌர்யாவின் கரங்கள்.



தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாய் உறுதியுடன் வைத்திருந்தவனின் கட்டுமஸ்தான உடலும் இரும்பையொத்த வலுவான கரங்களும் உறுதியுடன் அசையாது நிற்கும் கால்களும் என ஆண்மையின் முழு கம்பீரத்துடன் நின்றிருந்தவனின் கரங்கள் அவன் கன்னத்தில் ஆளப்பதிந்ததில் உதடு கிழிந்து ரத்தம் கசிய கீழே சரிந்தான்.



கீழே விழுந்து கிடந்தவனை பார்த்து ஒற்றை விரலசைத்து எச்சரித்தவன் ராஜூவை பார்த்து தலையசைத்தான்.



அதற்காகவே காத்திருந்தவன் ஸ்டீபை பார்க்க அவனின் பார்வையின் அர்த்தம் உணர்ந்து அடுத்த சில வினாடிகளில் அவனை நார்நாறாய் கிழித்தெடுத்தான் ஸ்டீப்.



*****


கோவிலின் முன் கார்கள் நிற்கவும் துள்ளிக் குதித்து இறங்கிய அனிகா கோவிலை பார்த்து சற்று அசந்து தான் போனாள்.


இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கம்பீரமாய் அமைந்திருந்தது அக்கோவில். அதன் அழகை ரசித்தவள், “சித்ஸ் நீ இந்த கோவிலுக்கு என்ன கூட்டி வந்ததே இல்லையே... எம்புட்டு அழகா இருக்கு இடம் கூட செம்ம சூப்பரு...”


“அதான் இப்போ கூட்டிட்டு வந்துட்டேனே இப்போ நல்லா பார்த்துக்கோ...” என்றபடி அவர்கள் சந்நிதானத்துக்குள் நுழைந்தனர்.


அவர்களின் பின்னே கோவிலின் அழகாய் ரசித்தபடி சென்ற அனிகா கண்களை மூடி கடவுளை வேண்டினாள்.


‘கடவுளே என்னோட படிப்பு சீக்கிரம் முடிஞ்சு நான் சீக்கிரமே ஊருக்கு போகணும் எல்லாரும் சந்தோஷமா இருக்கணும் அப்றோம் நான் அந்த ஆர்டிகளில் இருந்த வர்மாவ மீட் பண்ணனும் ஆளு செம்ம சூப்பரா இருக்காரு தெரியுமா அதுவும் என்னோட ஹீரோ ஜான் ஆப்ரஹாம் (John Abraham) மாதிரி செம்ம பாடிபில்டர் அதுக்காகவாவது நான் அவனை மீட் பண்ணனும் அட்லீஸ்ட் அவன்கிட்ட ஒரு ‘ஹாய்’யாவது சொல்லணும்...’


மனதில் தோன்றியதையெல்லாம் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தவளின் அருகில் வந்த பூசாரி “நீ நினைக்கிறது எல்லாம் நடக்கும் குழந்தே.. விபூதி எடுத்துக்கோ...” தட்டை நீட்ட அதில் கண்களை மலர்த்தியவள் சந்தோசத்துடன் தன் பிறை நுதலில் வில்லாய் வளைந்திருந்த புருவங்களின் மத்தியில் மெதுவாய் விபூதி வைத்துக் கொண்டாள்.


பின்பு அங்கு தூணில் சாய்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்த நித்யாவை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தவள் ஓசைபடாமல் அவளருகில் சென்று காதினுள் “கூஊஊஊஊ” என கத்த அதில் திடுக்கிட்டு கண்விழித்தாள் நித்யா.


தன் முன் நின்ற அனிகாவை பார்த்தும் வாய்க்குள் முனங்கியவள் அவளின் தலையில் கொட்ட கையை உயர்த்த நொடியில் அவளிடமிருந்து லாவகமாய் தப்பிய அனிகா பளிப்பு காட்டிக் கொண்டே புள்ளி மானாய் துள்ளிகுதித்து ஓடினாள்.


ஓட்ட பந்தயத்தில் முதலிடம் வரும் அவளுக்கு ஓட கத்துக்கொடுக்கவா வேண்டும் அதில் வேக வேகமாய் ஓடியவளை மனதில் சபித்துக் கொண்டு ஓட முடியாமல் தேங்கி நின்றாள் நித்யா. அனிகாவை விட இரண்டு வயது சிறியவள் ஆனால் கொஞ்சம் குண்டு தக்காளி. அனிகாவினால் செல்லமாய் பப்ளிமாஸ்.


‘இதுக்கு மேல என்னால ஓட முடியாதுப்பா...’ ரேஸ் குதிரையின் வேகத்தில் ஓடியவளை விழி தெறிக்க பார்த்தவள் மூச்சு வாங்கிக் கொண்டு வந்த வழியே திரும்பி விட்டாள்.


இதை அறியாதவளாய் வேகமாய் ஓடிய அனிகா கோவிலின் அருகில் இருந்த இடத்தில் நுழைந்து மதிலில் சாய்ந்து மூச்சு வாங்கிக் கொண்டே நித்யா வருகிறாளா என பார்த்தவள் அவளை காணாது தலையில் அடித்துக்கொண்டாள்.


‘போய்ட்டாளா இவ உடம்ப குறைக்க வைக்கலாம்னு பார்க்கிறேன் சிக்க மாட்டேங்கிறாளே..’ கடுப்புடன் எண்ணியவள் திரும்பிச்செல்ல எத்தனிக்க, விதியின் திருவிளையாடலில் கோவிலுக்குள் செல்ல திரும்பியவளின் செவிகளில் அலறல் ஓசை விழ நெஞ்சம் பதற ஒரு நொடி தயங்கியவள் மறுநொடியே குரல் கேட்ட இடம் நோக்கி விரைந்தாள்.


அங்கு ஆஜானுபான ஒருத்தன் எலும்பும் தோலுமாய் வத்திக்குச்சி போன்றிருந்தவனை அடித்துக் கொண்டிருப்பதை
பார்த்தவளுக்கு மூக்கின் மேல் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அதில் கோபத்துடன் கத்தியவாறு அவர்களை நோக்கி சென்றாள்.


கீழே விழுந்து கிடந்தவனை ஈவு இரக்கமின்றி வெறித்து பார்த்திருந்த ஷௌர்யாவின் செவியினை தீண்டியது ஒரு பெண்ணின் குரல்.


அதே வெறித்த பார்வையுடன் குரல் வந்த இடத்தை கணக்கிட்டவனாய் அவளை நோக்கி தலையை திருப்பினான்.



அவள் முகம் நோக்கியவனின் பார்வை அவளின் விழிகளுடன் சில கணங்கள் உறவாடி மீண்டது அவள் அறியும் முன்னமே.



அவளோ அவனை கவனியாமல் ரத்தம் சொட்ட கீழே விழுந்து கிடந்தவனையும் அவனை அடித்துக் கொண்டிருந்த ஆளையுமே கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.



“ஏய் தடியா யாருடா நீங்கெல்லாம் இப்பிடித்தான் ஒருத்தன போட்டு அடிப்பீய்ங்களா கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லையா உங்களுக்கெல்லாம் உருட்டு கட்ட மாதிரி இருக்கிற இவன் இந்த காக்கா குஞ்ச பொரட்டி எடுக்கிறான் அத நீங்க எல்லாம் வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்களா பார்த்தா பெரிய மனுசங்க மாதிரி தெரியிறீங்க ஆனா இப்பிடியா ஒருத்தர போட்டு அடிக்கிறது...” படபடத்தாள்.



தன் முன் நின்று சிலிர்த்துக் கொண்டிருந்தவளை கண்களில் தோன்றிய மெச்சுதலுடன் நோக்கியவனிற்கு அப்போது தான் அவளின் முழு பிம்பமும் புலப்பட்டது.



இதுவரையிலும் அவன் பார்த்து பழகிய அனைத்து பெண்களும் மேல்தட்டு வர்க்கத்தினர். அவர்கள் உடை முதல் பேச்சு வரை அத்தனையும் நேர்த்தியாய் கவர்ச்சியாய் இருக்கும், இவளோ தாவணியில் நீண்டு இடைதாண்டிய கூந்தலை தளர்வாய் பின்னி அதில் மல்லிகை சரம் சூடி மங்களகரமான தோற்றத்துடன் பட்டிகாட்டின் மொத்த உருவமாய் திகழ்ந்தாள்.



தன் தகுதி தராதரம் உணர்ந்து அதற்கு மேல் அவளை பார்ப்பதே இழுக்கு என்பது போல் அலட்சியமாய் நோக்கினான்.



தன்னை ஒருவன் அலட்சியத்துடன் பார்ப்பதை அறியாதவளாய் கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தாள் அனிகா.



அவளின் பேச்சை கேட்டு கோபத்தில் சிலிர்த்தெழுந்த ஸ்டீப் அவள் கன்னத்தை பதம்பார்க்க கையோங்கினான். திடீரென அவன் கையை ஓங்கவும் உள்ளுக்குள் நடுங்கியவள் பின்பு அவனை வெட்டவா குத்தவா எனும் ரீதியில் பார்த்து வைத்தாள்.



‘எம்புட்டு தைர்யம் இருந்தா இவன் என்னைய அடிக்க கையோங்குவான்... இந்த அனிகா யாருன்னு தெரியாம என்னைய அடிக்க கையோங்குறியா இருக்குடா உனக்கு...’ கருவிக் கொண்டவள் அசையாமல் அவனை பார்த்து நின்றாள். என்ன செய்ய முடியுமோ செய்துகொள் எனும் அலட்சியம் அவள் நிமிர்வில் மிளிர்ந்தது.



அதை பார்த்து புருவங்கள் இரண்டும் மெச்சுதலுடனும் ஆச்சரியத்துடனும் உயர கண்களில் சுவாரஸ்யம் பொங்க அதை வெளிக்காட்டாமல் சன்க்ளாசை அணிந்து கம்பீரமாய் தலை சிலுப்பி நின்ற ஷௌர்யா ஒற்றை விரல் அசைத்து விட்டு விடுமாறு சைகை செய்தான்.



அவனிற்கு கட்டுப்பட்டு தலையை அசைத்தவாறு விலகிய ஸ்டீபின் பார்வை என்னவோ அனிகாவின் மேல் கோபத்துடன் பாய்ந்தது, அதை அலட்சியப்படுத்தியவளோ ‘அற்பப்பதரே’ எனும் ரீதியில் அவனை பார்த்தவாறே அவன் பார்வை போன திக்கில் தானும் பார்த்தாள்.



‘இவன் யாரை பார்த்து தலையை இந்த ஆட்டு ஆட்டுறான்’ ஸ்லோமோஷனில் தலையை திருப்பியவள் அங்கு நின்றவனை கோபத்தில் உறுத்து விழித்தாள்.


‘ஓஹோ.. துரைதான் இம்புட்டுக்கும் காரணமா அப்போ இவன சும்மா விடக்கூடாதே என்ன பண்ணலாம்...’ மனம் வேகமாய் யோசிக்க ஆரம்பித்தது


‘அடியே அனிகுட்டி ஆளு பார்க்க எம்புட்டு அழகா இருக்கான் சினிமா பட ஹீரோவாட்டம்’ மனசாட்சி நேரங்காலம் தெரியாமல் ஜொள்ளி வைக்க அதை அடக்கியவள் அவனை கூர்ர்ந்து பார்த்தாள்.



அவளின் பார்வை தன் மேல் படிவதை உணர்ந்தவன் சன்க்ளாசை ஸ்டைலாக கழற்றி அவள் விழியுடன் தன் காந்த விழிகளை கலக்க விட்டான்.



இருவர் விழிகளும் ஒன்றை ஒன்று கவ்விக் கொள்ள முயன்று இறுதியில் மோதிக் கொண்டது. ஆண்மையின் முழுப்பரிணாமம் கொண்ட ஆடவனின் கூர்மையான காந்த விழிகள் பதின் வயது பாவையின் கயல்விழி நயனங்களுடன் மோதிக் கொண்டதில், அவன் பார்வை வீச்சினை தாள முடியாமல் பேதையின் இமைகள் பட்டாம்பூச்சியாய் பரிதவித்தது.



உள்ளங்கை தொட்டு உள்ளங்கால் வரை வியர்வையில் குளித்திருப்பது போல் உணர்ந்தவளின் நெஞ்சுக்கூடு அச்சத்திலும் மிரட்சியிலும் ரயில்வண்டி போல் தடதடத்தது. முகத்தில் முத்து முத்தாய் வியர்வை துளிகள் அரும்ப பயத்தில் தன் செவ்விதழ்களை அழுந்த பற்றிக் கொண்டாள். அவன் பார்வையின் வீரியம் அந்தளவிற்கு இருந்தது. விழிகளாலே பெண்ணவள் இதயத்தை ஊடுருவினான்.



சட்டென தலை குனிந்தவள் ‘ஆளு அழகாதான்புள்ள இருக்கான் முழி தான் சரியில்ல என்ன ஒன்னு கொஞ்சம் சண்டித்தனமும் வில்லத்தனமும் பண்ணுவான் போல பார்க்கிறதுக்கும் பணக்காரனாட்டாம் தெரியிறான் அப்பறம் எதுக்கு
இவனுக்கு இந்த அடிதடியெல்லாம்...’



மனசாட்சியிடம் அவனை பற்றி கூறிக் கொண்டே கள்ளப்பார்வையால் அவனை வட்டமிட்டாள்.



இம்முறையும் அவள் பார்வையினை உணர்ந்தாற்போன்று கேலியில் வளைந்தது அவன் இதழ்கள். அதில் மயக்கம் தெளிய நேர்கொண்டு அவனை பார்த்தவளின் விழிகள் கோபத்துடன் அவனை சுட்டெரித்தது. அதை அலட்சியப்படுத்தியவன் பேன்ட் பாக்கட்டில் கைகளை நுழைத்து கால்களை அகல விரித்து ஸ்டைலாக நின்றான்.



அவனின் அலட்டலில்லாத நிமிர்வில் தீப்பார்வை செலுத்தியவள் ‘இவன ஏதாவது பண்ணியே ஆவணும்... ரொம்பத்தான் அலட்டுறான்... பண்றதெல்லாம் பக்கா வில்லத்தனம் அதையும் பண்ணிட்டு எப்பிடி திமிரா நிற்கிறான் பாரு... இவனை சும்மா விட்டா சரித்திரத்தில அனிகாவோட பெயரே நாறிப்போய்டும்... என்ன பண்ணலாம்...’ மண்டை நமநமக்க கண்கள் சுற்றுப்புறத்தை அலச, அவள் கண்களில் சிக்கியது பெரிய கல்லொன்று.



‘இதை இவன் தலையிலே போட்டா தான் என்ன...’ மனம் தீவிரமாய் யோசிக்க ‘அடியேய்.. கொலைகாரி பட்டத்தோட ஜெயிலுக்கு போவ ரெடியா இருக்க போலவே..’ மனசாட்சி கிண்டலடிக்க பயந்துபோய் தலையை உலுக்கியவள் என்ன செய்வது என மண்டையை குடைய இம்முறை அவள் கண்களில் தட்டுப்பட்டது பளிங்கு போல் பளபளப்பாய் நின்றிருந்த அவனின் அஸ்டன் மார்டின் வென்டேஜ் கார்.



‘ஐடியா’ மண்டைக்குள் மணியடிக்க அவனை அலட்சியமாய் பார்த்தவண்ணம் குனிந்து கல்லை எடுத்தவள் எடுத்த வேகத்திலே அந்த காரின் மேல் அதை வீசினாள்.



இதுவே சாதாரண கார் என்றால் அவள் வீசிய வேகத்தில் சுக்குநூறாய் உடைந்து சிதறியிருக்கும்; அவனதுவோ பல கோடி விலைமதிப்புள்ள வெளிநாட்டுக் கார்... சிறு கீறல் கூட இன்றி தப்பித்தது.



அதை பார்த்து முதலில் ஆவேன வாயை பிளந்து பின் பல்லை கடித்துக் கொண்டவள் ‘நல்லதானேயா எறிஞ்சேன் ஏன் உடையல...’ மானசீகமாய் தலையை சொரிந்தவள் அவன் முன் அசிங்கப்பட விரும்பாமல் கெத்தாய் அவனை பார்த்தாள்.



“இப்போ கார் கண்ணாடிய உடைப்பேன்னு ட்ரைலர் தான் காட்டியிருக்கேன் அடுத்த தடவ உன்னைய இப்பிடி பார்த்தேன் நிஜமாலுமே கார் கண்ணாடியை உடைச்சிடுவேன்..”



கண்களை சுருக்கி விரல் நீட்டி எச்சரித்தவள் அவனை முறைத்த வண்ணம் கீழே விழுந்து கிடந்தவனின் அருகில் சென்றாள்.



“சீக்கிரம் ஹோஸ்பிடல் போங்க எவ்ளோ ரத்தம் வருது... மாடு மாதிரி போட்டு அடிச்சிருக்காய்ங்க...”



அவனை தூக்கி நிறுத்தியவள் முன்னால் தொங்கிக் கொண்டிருந்த இடைதாண்டிய சடையை தலை சிலுப்பி பின்னால் போட பெண்ணவளின் கார்கூந்தல் ஆடவன் முகம் தொட முனைந்து பட்டும்படாமலும் விலகிச்சென்றது. அதை கவனியாதவளாய் வெட்டும் பார்வையுடன் அவனை திரும்பி திரும்பி பார்த்தபடியே கோவிலை நோக்கி சென்றாள்.



அவளின் பேச்சும் செய்கையும் ஷௌர்யாவின் பாதுகாவலர்களின் ரத்தத்தை எரிமலைக் குழம்பாய் கொதிக்க செய்ய அவளை ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற வெறி அவர்களின் உடல் மொழியில் பிரதிபலித்தது.



அனிகா தற்போது யாரென தெரியாமல் மரியாதையின்றி பேசி நடந்து கொண்டது இந்த ஊரையே தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் அசுரனிடம். தன்னை எதிர்த்து பேசியவர்களை உண்டில்லை என செய்யும் அவனிடம் தான் வரம்பு மீறி பேசி வாய்சவடால் விட்டதை உணராதவளாய் சென்று கொண்டிருந்தாள்.



பெங்களூ நகரை கட்டியாளும் ராஜாவை அதட்டிவிட்டு சென்றிருந்தாள் அனிகா தன் சிறுபிள்ளை தனமான செய்கையால்.


அவள் சென்ற திசையை ஒருவித ஆச்சரியம் கலந்த சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்த ஷௌர்யாவின் அருகில் வந்த சங்கர் “ஜி... இந்த இடத்த நீங்களே வச்சுகோங்கஜி... என்னை விட்டிடுங்க ஜி... நான் பிள்ளைகுட்டிகாரன் ஜி... நான் இனிமே இந்த பக்கம் கூட வரமாட்டேன்ஜி...” அவனின் காலில் விழுந்து கெஞ்சினான்.


அவனை எட்டி உதைத்தவன் “I'm not a beggar... I will take what I need...” ஒவ்வொரு எழுத்தாய் அழுத்தமான குரலில் உச்சரித்தவன், “I don't want your permission” என்றான் அலட்சியத்துடன்.



அவன் குரலும் பேச்சில் இருந்த கடினத்திலும் தன் கதி அதோ கதி என்பதை புரிந்து கொண்ட சங்கரின் உடல் பயத்தில் சிலிர்த்து அடங்கியது.



அடுத்த நொடி அவன் அங்கிருந்து புறப்பட்டிருந்தான். அவன் மனம் ஒருபுறம் கோபத்தில் கொந்தளிக்க மறுபுறமோ தன்னையே தைரியமாய் எதிர்த்து பேசிய பெண்ணவளின் தைரியத்தை மனதினுள் மெச்சிக்கொண்டு இரு விசித்திரமான மனநிலையில் இருந்தது.



யாரென தெரியாதவனை மிரட்டி விட்டு கோவிலுக்குள் வந்தவளை அனைவரும் பிலுபிலுவென பிடித்துக் கொண்டனர்.



“எங்க போய் வேடிக்கை பார்த்திட்டு வார அனிம்மா...” மாலதி கண்டிப்புடன் கேட்க,



“சித்ஸ்... இங்கத்தேன் சும்மா இந்த இடத்த இதோட அழக ரசிச்சு சுத்தி பார்த்திட்டு வரேன்...” அப்பாவியாய் சிணுங்கியவள் அவனை சந்தித்ததை பற்றி மூச்சு கூட விடவில்லை. அதை பற்றி கூறினால் ‘உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை..’ என தன்னையே கடிந்து கொள்வார்கள் என்பதால் அதை அப்படியே மூடி மறைத்திருந்தாள்.



சிறிதுநேரம் அங்கு செலவிட்டவர்கள் ஹோட்டலில் காலையுணவை முடித்துக் கொண்டு அனிகா கல்லூரி செல்வதால் அவளின் உபயோகத்திற்காக தேவைப்பட்ட சில பொருட்களையும் வாங்கிக் கொள்ள பொழுது நில்லாமல் பறந்தது. வீடு செல்லும் வழியில் காரில் அமைதியாய் அமர்ந்திருந்தாள் அனிகா.



இத்தனை நேரம் வராத அவனின் யோசனை இப்போது அவளின் மூளையை ஆக்கிரமித்தது.



யாரென தெரியாத ஒருவனிடம் தான் பேசியது அதிகப்படியோ என எண்ணியவளிற்கு அவனின் விழி வீச்சின் நினைவு வந்து கூச்சத்தில் முகம் சிவந்தது.



‘என்ன கண்ணுடா சாமி... என்னமா பார்த்தான் இப்பிடித்தான் முன்ன பின்ன தெரியாத பொண்ணை பார்ப்பானா... ஆனாலும் நானும் கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டேன்... இருந்தாலும் அனி நீ இப்பிடியெல்லாம் பேசியிருக்க கூடாது... அவன் உன்னைய பத்தி என்ன நினைச்சிருப்பான்... சரியான வாயாடின்னு நினைச்சிருப்பான்... லூஸு... இதுக்குத்தான் அம்ஸ் உன்னய திட்டுறது... இனிமேலாச்சும் உன் வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ அனி...’



அவனின் யோசனையோடே வீடும் வந்து விட ஒருவழியாய் அவனின் நினைவை ஒதுக்கி வைத்தவள் பெற்றோர் செல்லும் கவலையில் ஆழ்ந்தாள்.



நேரம் விரைந்து செல்ல கதிர்வேலன் வாசுமதி தம்பதியனரும் பார்வதி ராம்குமார் குடும்பத்தினரும் புறப்பட தயாராக அவர்களை கட்டியணைத்து முத்தமிட்டு பாசத்துடன் விடை கொடுத்தாள்.



“மாலதி... அவ உலகம் தெரியாத சின்ன பொண்ணு... நீ தான் அவளை பத்திரமா பார்த்துக்கனும்” கண் கலங்கினார் வாசுமதி.



“என்னக்கா நீங்க அவ உங்களுக்கு மட்டும் பொண்ணு இல்ல எனக்கும் தான்... நான் அவள பத்திரமா பார்த்துக்கிறேன்... நீ மனச போட்டு குழப்பிக்காம நிம்மதியா இருக்கா அத்தையும் மனசொடஞ்சி இருப்பாங்க... அவங்களையும் பார்த்துக்கோ...” ஆறுதல் கூறி அவர்களை வழியனுப்பினார்.



“புது ஊரு... ஒரு காலேஜ்... பார்த்து நடந்துக்கோ அனிம்மா... தெரியாதவங்க கிட்டயெல்லாம் அனாசியமா பேச்சு வச்சுக்காத... நல்லா படிடா...” பார்வதி அவள் தலைகோதி விடைபெற, ராம்குமார் அவளின் தலையை ஆதுரத்துடன் கோதிக் கொடுத்து விடைபெற்றார்.



“மிஸ் யு அனி... டேக் கேர்” என்றபடி காரில் அமர்ந்து கொண்டாள் நித்யா.



ராமும் ஆதியும் வாழ்த்து கூறி விடைபெற, கதிர்வேலன் மகளின் கையில் கத்தை பணத்தை திணித்தார்.



கேள்வியாய் நோக்கிய மகளின் தலையை வருடிக்கொடுத்தவர், “எம்பொண்ணு பணத்துக்காக சங்கடப்பட்டு நிக்கக்கூடாது... அண்ணன் வீடு தான்... நீ பணம் கேட்டா தருவான் தான் அதுக்காக எல்லாத்துக்கும் அவன் கிட்ட கேட்டுக்கிட்டு இருக்க முடியாதே அதுக்குதேன் கண்ணம்மா... கவனமா இருந்துக்கோடா...” குரல் தழுதழுத்தது.



அவரின் நரைத்த மீசையை முறுக்கியவள் கலங்கிய விழிகளை காட்டாது “நீங்க என்னய பத்தி கவலப்படாம நிம்மதியா இருந்துக்கோங்க... நேரத்துக்கு மாத்திரை போட்டுக்கோங்க... தினமும் வயலு வயலுன்னு வயலுக்கே போகாம அம்மாவையும் பாட்டியையும் பார்த்துக்கோங்க... நான் லீவு நாள்ல அங்க வந்திடுவேன்... சரியா...” ஆறுதல் கூற முயன்றவளது குரலும் தழுதழுத்தது.



கதிர்வேலன்-வாசுமதி மற்றும் ராம்குமார்-பார்வதி தம்பதியினர் கனத்த மனதுடன் விடைபெற்று செல்ல வீடே வெறிச்சோடி போனது போலிருந்தது.



நேற்றைய கலகலப்பை நினைத்து பார்த்தவள் தன்னறைக்குள் முடங்கிக் கொண்டாள். இரவுணவிற்கு மாலதி அழைத்தும் கூட கீழிறங்கி வரவில்லை. கார்த்திக் தான் உணவு தட்டுடன் போய் அவளை சமாதானபடுத்தி ஊட்டி விட்டு தூங்க வைத்தான். நாளை கல்லூரி சென்றே ஆக வேண்டும் எனும் சிறு அதட்டலுடன்.



*****



மறுநாள் மெரூன் வண்ணத்தில் தாவணி உடுத்தி மாலதி ஊட்டிவிட காலை உணவை உண்டவள் கார்த்திக்கின் காரில் கல்லூரிக்கு புறப்பட்டாள்.



காரில் எப்எம்மை போட்டவள் அதில் ஒலித்துக் கொண்டிருந்த சித் ஸ்ரீராமின் ‘எனை மாற்றும் காதலே’ பாடலை ஹம் செய்தபடி வர அதற்குள் அவள் கல்லூரியும் வந்திருந்தது.



கல்லூரி வாசலில் காரை நிறுத்திய கார்த்திக், “பெஸ்ட் ஒப் லக்” வாழ்த்தி விட்டு “பர்ஸ்ட் டே... பசங்க ரேகிங் பண்ணாங்கன்னா அவங்கள ஓட ஓட விரட்டிடாத... பார்த்துக்கோ குட்டிம்மா...” என கண்சிமிட்டியவன் அவள் ‘அடிங்க’ கையோங்கவும் அவசரமாய் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்..



‘ம்ம்... ரொம்ப பெரிய காலேஜ்ல தான் இந்த படிப்பாளிய சேர்த்திருக்காய்ங்க...’ என்ற நினைவுடன் தான் முதல் நாள் கல்லூரியினுள் அடியெடுத்து வைத்தாள் அனிகா.



சிறிது தூரம் நடந்தவள் கல்லூரி முதல்வரின் அறையை கேட்டறிந்து அவரின் அறைக்குள் நுழைந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள் தன் வகுப்பை பற்றி விசாரித்துக் கொண்டு தன் வகுப்பை நோக்கி சென்றாள்.



முதல் நாள் கல்லூரி என்ற பயமோ பதட்டமோ சிறிதும் அவளிடத்தில் இல்லை. குழந்தைத்தனமான சிரிப்புடன் சீனியர்களிடம் மாட்டிக்கொண்டு முழித்த தன் பேட்ச் மாணவர்களை பார்த்தபடி சென்றவளை அழைத்தது அந்த கும்பல்.



புதிய மாணவர்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்த அந்த கும்பல் இவள் வருகையில் தங்களுக்குள் சிரித்துக் கொண்டே, “டேய்... கிராமத்து குயிலு போல... கூப்பிடுங்கடா அவள வச்சி செஞ்சிடலாம்...” ஆர்ப்பரித்தனர்.



அவர்கள் அழைக்கவும் திரும்பி பார்த்தவள் அந்த கும்பலில் இருந்தவன் அருகில் வரும் படி சைகை செய்யவும் சும்மாவே எல்லோரையும் ஓட ஓட விரட்டும் அவள் இன்று எலிகள் தானாய் சிக்கிக்கொள்ளவும் சந்தோசப் புன்னகையுடன் அவர்களருகில் சென்றாள்..



“எதுக்கு என்னைய கூப்பிட்டீங்க....” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.



“சீனியர்ஸ் இருக்கிறது கண்ணனுக்கு தெரியல இப்பிடித்தான் மரியாதை இல்லாம போவியா...” என ஒருவன் அதட்டினான்.



“அச்சோ... சாரி... நான் என்ன பண்ணனும்...” அழுகுரலில் கேட்பது போல் பாவ்லா காட்ட,



“என்ன சொன்னாலும் செய்வியா...” ஒருவன் கல்மிஷத்துடன் கேட்க...,



உள்ளுக்குள் அவனை முறைத்துக் கொண்டு வெளியில் சாதாரணமாய் முகத்தை வைத்திருந்தவள் “சீனியர்ஸ் சொன்னா பண்ணித்தானே ஆகணும்...” மென்குரலில் முணுமுணுத்தாள்.



“பரவாயில்லா... எல்லாத்தையும் நல்லா தெரிஞ்சி வச்சிருக்க...” பாராட்டினான் ஒருவன்.



கூட்டத்தில் இருந்த ஒருவன், “எங்க நல்ல ஐடெம் டான்ஸ் ஒன்னு ஆடு பார்க்கலாம்...” என்க, அனைவரும் கொல்லென சிரித்து வழிமொழிந்தனர்.



அதை கேட்டு கண்களில் மின்னிய கொலை வெறியுடன் அவனை பார்த்தவள் ‘என்னைய அந்த கண்றாவி டான்ஸ் ஆட சொல்றியா... இருக்குடா மவனே உனக்கு... உன்ன வச்சி செய்யல... நான் என் பெயர மாத்திக்கிறேன்...’ கருவிக் கொண்டாள்.



“எனக்கு அதெல்லாம் ஆட தெரியாது..”



அதை கேட்ட கூட்டத்தின் தலைவன் “டேய் விக்கி... பாப்பாவுக்கு டான்ஸ் தெரியாதாம்டா நீ ஆடிக்காட்டு...” என்றான்
கேலிச்சிரிப்புடன்..



விக்கியும் நண்பனின் கட்டளையை ஏற்று தலையை ஆட்டியவன் அவளருகில் வந்து மொபைலில் இருந்த பாடலை ஒலிக்க விட்டான்.



“ம் ஆ ஹோ
ம் ம் ஆ ம்
ஆ ம் ஹா

நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடி

நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி யம்மா

ஆவோஜி ஆ அனார்கலி
அச்சா அச்சா பச்சக்கிளி”



பாடலுக்கேற்ப உடம்பை வளைத்து நெளித்து அசிங்கமாய் அவன் ஆட, அந்த கண்றாவியை பார்த்த அனிகாவின் முகம் அவமானத்தில் செந்தணலாய் சிவந்து போனது.


இத்தனை நேரம் பயந்தவள் போல் பாவ்லா காட்டியவளுக்கு இப்போது உண்மையிலே சிறு பயம் முளைத்தது கூடவே கோபமும் அவர்களின் அநாகரீகமான செயலில். தன்னை பெரிதும் கட்டுப்படுத்திக் கொண்டவள் கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுத்து மனதை அமைதிப்படுத்த முயன்றாள்.


இருந்தும் உள்ளுக்குள் ஆத்திரம் கனன்று கொண்டிருந்தது. அதை யாரிடமும் காண்பிக்காமல் மறைக்க பெரும் பாடுபட்டவள், “நான் கிளாஸ்க்கு போகணும்...” பல்லை கடித்துக்கொண்டு முணுமுணுத்தவள் நகர எத்தனிக்க கை நீட்டி வழி மரித்து அவளை நகர விடாமல் தடுத்தான் அக்கூட்டத்தின் தலைவன்.


“வழி விடுங்க நான் போகணும்...”


அவன் எதுவும் பேசாமல் நிற்கவும் எரிச்சல் அதிகரிக்க, “பிரதர்... கொஞ்சம் போக வழி விட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்...” என்றாள் கடுப்புடன்.


அதற்குள் அவர்கள் அருகில் வந்த பியூன் அனிகாவின் வழியை மறித்துக் கொண்டிருந்தவனை பார்த்து “தம்பி... ஒருத்தர் உங்கள தேடி வந்திருகாரு... உங்கள அவசரமா வர சொன்னாரு...” என்றவாறு தன் வேலையை கவனிக்க சென்றுவிட, அவனோ “டேய்... இவள போக விடாம பார்த்துக்கோங்கடா... நான் இதோ வரேன்...” என்றவாறு தன்னை அழைத்தவனை பார்க்க சென்றான்.


அடுத்த இரண்டு நிமிடத்தில் முகம் கன்றிப்போய் மூச்சு வாங்க ஓடிவந்தவன் “டேய்... சிஸ்டர எதுக்குடா இன்னமும் நிற்க வச்சிருக்கீங்க...” நண்பர்களை அதட்டினான்.


“சிஸ்டர் நீங்க கிளாஸுக்கு போங்க... உங்க கிளாஸ் இந்த பக்கம்...” அவள் வகுப்பிற்கு செல்லும் வழியை சுட்டிக் காட்ட அவனை ஆச்சரியம் பொங்க பார்த்தாள் அனிகா. அவனின் நண்பர்கள் கூட அதே விசித்திர பாவனையில் அவனை பார்த்திருந்தனர்.


யாரின் பார்வையையும் கண்டுகொள்ளாமல், “சிஸ்டர் ப்ளீஸ் நீங்க உங்க கிளாஸுக்கு போங்க ஏதாவது ஹெல்ப் வேணும்னா எங்ககிட்ட கேளுங்க... உங்களுக்காக நாங்க என்னவேணாலும் பண்ணுவோம்” வெகு பணிவாய் கூறி அவளை அனுப்ப முயற்சிக்க அவளோ ஓரடி கூட நகராமல் அவனை சந்தேகமாய் பார்த்தாள்.


‘மனிஷனோட அவஸ்தை புரியாம இந்த சிஸ்டர் இப்பிடி கல்லுக்குண்டாட்டம் நிற்கிறாங்களே’ பரிதவித்தவன், “சிஸ்டர் ப்ளீஸ் இதுக்கு மேல என்னால அடக்க முடியல.... அழுதிடுவேன்... போங்க...”


அவளை ஒருவழியாய் வகுப்பிற்கு அனுப்பி வைத்தவன் அதன் பின்பே ஆசுவாசமாய் மூச்சு விட்டான்.


நண்பனின் ஓய்ந்து போன தோற்றத்தில் பதறியவர்கள், “என்னாச்சுடா போகும் போது பாகுபலி பட பிரபாஸ் மாதிரி போன வரும் போது சூர்யாகிட்ட அடிவாங்கினா பிரகாஷ்ராஜ் மாதிரி வர என்ன தான் நடந்திச்சு...”


“அதயேண்டா கேக்குற...” பெருமூச்சு விட்டவன், “பியூன் யாரோ பார்க்க வந்திருக்காங்கன்னு சொன்னானா நானும் போனேனா...”


“அதான் தெரியுமே மச்சான்... நீ கூட கெத்தா போனியே...”


“டேய்... கடுப்பேத்தாத சாவடிச்சிடுவேன் மூடிட்டு கேளு... நான் போனேனா... அங்க ஒருத்தன் வெள்ளையும் சொள்ளையுமா பார்க்க வெளிநாட்டுகாரன் போலவே நின்னிருந்தான்... நானும் நம்மள பார்க்க வெள்ளைக்காரனுங்க எல்லாம் வந்திருக்கங்கன்னு பந்தா காட்டிக்கிட்டு என்ன விஷயோன்னு கேட்டேன்... அவன் யாருயில்லாத இடத்துக்கு கூட்டிட்டு போய் அடி பின்னிட்டான் மச்சான்... நானும் எவ்வளவோ தடுக்க முயற்சி பண்ணேன்.. முடியலடா... கடைசியா அவனாவே விட்டிட்டான்...”


“டேய் உன்ன எதுக்குடா அவன் அடிச்சான்... எவ்வளவு தைரியம் இருந்தா காலேஜ் ஸ்டுடென்ட் மேல கை வச்சிருப்பான்... நீ அவனை சும்மாவா விட்ட” ஒருவன் எகிற...



“இதத்தாண்டா நானும் அவன்கிட்ட கேட்டேன்.. அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா...” என்றவனின் மேனி பயத்தில் உதறியது.


“இதுவே நானாயிருக்க போய் உன்னை இத்தோட விட்டிட்டேன் இதுமட்டும் வர்மா ஜீயோட காதுக்கு போயிருந்தது நீ உலகத்தில இருக்கிற கடைசி நாள் இதுதான்னு சொல்லிட்டு போயிட்டான்டா... போய்ட்டான்...” அவன் முடித்த கணம் அத்தனை பேரும் விறைத்துப் போய் எழுந்து நின்றனர்.


“என்னடா சொல்ற.. வர்மா ஜீயா... அவர்கிட்ட மோதுற அளவுக்கு நீ என்னடா தப்பு பண்ணே... இல்ல எங்களுக்கு தெரியாம எதுவும் பண்ணிட்டியா...”


“அடச்சி வாயைமூடு பன்னாட... அதத்தான்டா நானும் அவன்கிட்ட கேட்டேன்...”


“அதுக்கு அவன் என்ன சொன்னான்டா முதல்ல அத சொல்லிதொலை... இப்போவே எனக்கு வயித்த கலக்குது...”


“நம்ம சிஸ்டர் இருக்காங்களே....”


“நம்ம சிஸ்டரா... அது யாருடா புதுசா நம்ம சிஸ்டர்...”


“டேய்... இப்போ நான் அனுப்பி வச்சேனே நம்ம சிஸ்டர்... அவங்கள சொன்னேன்டா...”



“அவளா... அவளுக்கென்னடா...”


“டேய்... வாய மூடுடா... யார் காதிலையாவது விழுந்தது சங்க அறுத்திடுவானுங்க... இனிமே சிஸ்டரா மரியாதையா பேசுடா அவங்க யாருன்னு நினைச்ச வர்மா ஜீயோட லவர்... இனிமே சிஸ்டர் கிட்ட எவனாவது வாலாட்டினீங்க வர்மா ஜீ தொலைக்கிராரோ இல்லையோ நான் அவனுங்கள நாஸ்தி பண்ணிடுவேன்...” என்க அனைவரும் வாயை பிளந்தனர்.


“என்னடா சொல்ற நம்ம சிஸ்டர் வர்மா ஜீயோட லவரா...” என்றவனின் நா உலர்ந்து போனது.


இதுவரைக்கும் யாரும் அவனை நேரில் பார்த்ததில்லை. அவனின் புகைப்படத்தை கூட. ஆனால் பெங்களுர் வாசிகள் அத்தனை பேரும் அவனை பற்றி... அவனின் ஆளுமை, கம்பீரம், அந்தஸ்த்து, அவனின் ரௌத்திரம் அனைத்தையும் பற்றி அறிந்திருந்தனர்.


அப்படிப்பட்ட சிம்மசொப்பனத்தின் காதலியையா தாங்கள் எய்த்திருக்கிறோம் என எண்ணும் போதே இதயம் தொண்டைக்குள் சிக்கியது போல் அவஸ்தைபட்டனர். மேனி அச்சத்தில் சில்லிட்டது.


அடுத்த சில நொடிகளில் இச்செய்தி காட்டுத்தீயை விட வேகமாய் பரவி அனைவருள்ளும் பயத்தையும் ஆச்சரியத்தையும் சரி சமமாய் விதைத்தது.


இந்த கிராமத்து பெண்ணையா அவர் காதலிக்கிறார் எனும் ஆச்சரியமும் இனி தப்பி தவறிக்கூட தங்கள் பார்வை அப்பெண்ணின் புறம் சென்றுவிடக்கூடாது எனும் பயமும் ஒவ்வொருவரையும் ஆட்டிபடைக்க அவனின் மூன்றெழுத்து பெயரே இத்தனை மாயாஜாலத்திற்கும் காரணமாய் அமைந்தது.


அதேநேரம் ஷௌர்யாவிற்கு அழைத்த ராஜூ “டன் சார்...” என்றவாறு அழைப்பை துண்டித்தான். அதில் இகழ்ச்சி புன்னகையினை சிந்தியது அவன் இதழ்கள்.



'என் விழியை நீங்க நீ விலகாதே'



தொடரும்.
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'என் விழியை நீங்கி நீ விலகாதே'


அத்தியாயம் 04

‘அவன் எதுக்கு என்னைய திடீர்னு சிஸ்டர்னு சொன்னான்.... பியூன் கூப்பிட்டு போனதுக்கு அப்றோமாத்தேன் அவன் சிஸ்டர்னு சொன்னான்... ஒருவேளை யாராவது சிஸ்டர்னு சொல்லுன்னு மிரட்டியிருப்பாய்ங்களோ அப்பிடியே மிரட்டி இருந்தாலும் யாரா இருக்கும்... அதயும்விட இவனுங்க மிரட்டி சொல்ல வைக்கிறளவுக்கெல்லாம் நானு வெர்த்தில்லியே...’

கல்லூரி துவங்கிய முதல் நாள் தலையை பிய்த்துக் கொண்டவள் தான் இன்னும் அதற்கான பதில் தான் அவளுக்கு கிடைக்கவே இல்லை.

முதல் நாள் பேராசிரியர்கள் அறிமுகபடலத்துடனே வகுப்பை ஆரம்பித்திருக்க சீனியர்களிடமிருந்து விடுபட்டு வகுப்பறையை அடைந்தவள் காலியாக இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

அருகில் இருந்த இளம் பெண் புதிய கல்லூரியின் பயத்தில் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்க அவளை பார்த்து பாவப்பட்ட அனிகா “ஹாய்... ஐ அம் அனிகா... ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா அனி...” தன்னை தானே அறிமுகபடுத்திக் கொண்டாள்.

அனிகாவின் இலகுவான பேச்சில் புன்னகையில் விரிந்தது அவள் இதழ்கள்.

“என் பெயர் காயத்திரி....”

ஏனோ அனிகாவிற்கு அப்பெண்ணை பார்த்தும் பிடித்து விட்டது. சில உறவுகள் விதியின் வசத்தில் வரமாய் அமையும். சில உறவுகள் சாபமாய் அமைந்துவிடும். அனிகாவிற்கு காயத்திரியின் நட்பு வரமாய் அமைந்தது.

“வாவ்... ஸ்வீட் நேம் உன்னை மாதிரியே... ஆனா ரொம்ப நீளமா இருக்கே... ஆ... எஸ்.... நான் இனிமே உன்ன காயுன்னு தான் கூப்பிடுவேன் ஓகேவா....”

இயல்பாய் கூறி கை நீட்ட அவளின் பேச்சு மனதிற்கு ஆறுதலளிக்க கரம் பற்றி கை குலுக்கினாள் காயத்திரி சரி எனும் தலையாட்டலுடன்.

ஒரு வழியாக முதல் நாளை நெட்டி தள்ளி முறித்தவர்கள் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக மீண்டும் காலையில் நடந்த நிகழ்வுகள் அவள் மனதில் வலம் வந்தது. ஒரு வித யோசனையுடன் அனிகா வெளியேற அவளுடன் காயுவும் வெளியேறினாள்.

அனிகா எல்லோருடனும் சட்டென்று பழகினாலும் அவள் வகுப்பிலுள்ளவர்கள் விலகல் தன்மையுடன் ஒட்டியும் ஒட்டாமலும் உறவாடிக்கொள்ள அதை உணர்ந்து கொண்டவள் அதற்குமேல் யாரிடமும் வலிய சென்று பேசிக்கொள்ளவில்லை. காயத்திரி மட்டுமே அவளுக்கு போதுமாய் இருந்தது. மற்றவர்களிடம் புன்சிரிப்புடன் கடந்து விடுவாள். அதை யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் தங்களிடமிருந்து விலகி இருப்பதே தங்களுக்கு நல்லது எனும் வகையில் ஒதுங்கிக்கொண்டனர். அவளை பற்றி அறிந்ததினாலோ என்னவோ....

அன்று வீட்டிற்கு வந்தவள் முதல் நாள் கல்லூரி அனுபவத்தை சுவாரஸ்யம் பொங்க கூறி விழுந்து விழுந்து சிரிக்க மாலதியும் அவளின் நாடக பாணியான பேச்சில் அடக்க மாட்டாமல் சிரிக்க அனிகாவின் அன்றைய நாள் சில சுவாரஷ்யங்களுடன் நல்லவிதமாகவே கழிந்தது.

கல்லூரி செல்வது காயுவுடன் அரட்டை அடிப்பது வீட்டிற்கு வந்தால் சித்தியை வம்பிழுத்து அன்றைய பொழுதை ஓட்டுவது கார்த்திக்குடன் வெளியே செல்வது சித்தப்பாவுடன் வாக்கிங் என அவளின் நாட்கள் குறுகிய வட்டத்தினுள் இன்பகரமாய் சென்றது.

அன்று ஞாயிற்றுகிழமை... கல்லூரி விடுமுறை என்பதால் கனவில் அல்லு அர்ஜுனுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தவள் சோம்பலுடன் சற்று தாமதமாகவே எழுந்தமர்ந்தாள்.

கண்களை கசக்கி நீண்ட கொட்டாவியை வெளியேற்றியவள் முகத்தை மறைத்திருந்த கூந்தலை தலை சொரிந்து ஒதுக்கி மெத்தையில் கிடந்த மொபலை எடுத்து உதட்டை குவித்து செல்பி எடுத்தாள்.

‘பார்ரா தூங்கியெழுந்தும் அனி குட்டி எம்புட்டு அழகா இருக்கிறத...’ மொபைலில் மிளிர்ந்த நிழற்படத்தை பார்த்து தனக்கு தானே முத்தமிட்டுக் கொண்டவள் ‘நீயி அழகி தான்டி...’ கன்னத்தை பிடித்து கொஞ்சிக் கொண்டே வெட்க சிரிப்புடன் குளியறைக்குள் புகுந்தாள்.

தலைக்கு குளித்து தலை துவட்டிக் கொண்டு வெளியே வந்தவளுக்கு திடீரென ஊரின் ஞாபகமும் கூடவே தன் வீட்டின் எண்ணமும் எழ அத்தனை நேர உற்சாகமும் வடிந்து தான் போனது.

“அனிம்மா அசையாம ஒரெடத்தில நில்லுடா... தலைய துவட்டனும் இல்லன்னா சளி பிடிச்சிக்கும்...” தலை துவட்டும் அலுப்பில் வீட்டை சுற்றி ஓடும் அனிகாவை பார்த்து தலையில் அடித்துக்கொண்டு அவள் பின்னோடு ஓடுவார் வாசுமதி.

மூச்சு வாங்கிக் கொண்டு ஓடும் மருமகள் மீது பரிதாபமும் அவளை ஆட்டம் காட்டும் பேத்தியின் மீது கோபமும் வருவதில் வெற்றிலையை வாய்க்குள் குதப்பும் ரெங்கநாயகி,

“ஏழு கழுத வயசாகுது உருப்படியா ஒரு வேலை செய்யதெரியல...” கழுத்தை நொடித்துக் கொள்வார்.

அதை கேட்டு வாயை மூடிக்கொண்டால் அது அனிகா அல்லவே.

“ஏய் கெழவி... வாயிருக்குன்னு எட்டூருக்கு கேக்கிற மாதிரி கத்தாத சொல்லிப்புட்டேன்...”

“என்வாயி நான் கத்துறேன் உனக்கென்னடியம்மா”

“பாரு கெழவி ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்வாய தக்கிறேனா இல்லையான்னு....”

“அது மட்டுக்கும் என்கையி வெத்தில போட்டுக்கு இருக்குமாக்கும்... வெளக்கமாத்தால விளாசு விளாசிட மாட்டேன்...”

“அதமட்டுக்கும் நான் வேடிக்கை பார்ப்பேன்னு கனவுல கூட நினச்சிடாத அம்புட்டுந்தேன் சொல்லிப்புட்டேன்...”

இதையெல்லாம் கண்டும் காணாமலும் கடந்து செல்வார் கதிர்வேலன். கோபப்படவே தெரியாதவர். அப்பிடியே வந்தாலும் மகளை கை நீட்டி ஒரு சொல் சொல்லிவிடமாட்டார். அந்தளவு அவள் மீது பாசம்.

அவர் அவள் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு சற்றும் குறைவில்லாதது தான் அவர் மேல் அவள் வைத்திருக்கும் பாசமும். அவள் வாலை சுருட்டிக்கொண்டு அடங்குவது அவரிடத்தில் தான்.

சடுதியில் நினைவுகள் பின்னோக்கி ஓடியதில் மனதின் கணம் தாங்காமல் தலையில் இருந்த துண்டு தரையில் நழுவி விழுந்தது.

சோர்வு எனும் ஒன்றே இல்லாதவர் போன்று காலை எழுந்தது முதல் பரபரப்பாய் வேலை செய்யும் அன்னையின் வாசமும் வயலில் இருந்து வீட்டுக்கு வரும் தந்தையின் ‘கண்ணம்மா’ என்ற அழைப்பும் காலை நேர பால் அபிஷேகத்தில் இருந்து காக்கும் அவளின் செல்ல பாட்டியின் நினைவும் சூரிய உதயத்தில் பொற்கதிர்களாய் மின்னும் வயல்வெளியின் பசுமையும் நினைவில் எழுந்து ஊர் நினைவை அதிகப்படுத்தியது.

பசுமையான நினைவுகள் கொடுத்த தாக்கத்தில் விழி கலங்க சோர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தவள், மறுகணமே உற்சாகத்துடன் வீட்டு எண்ணிற்கு அழைத்தாள்.

சமையல்வேலையில் ஈடுபட்டிருந்த வாசுமதி திண்ணையில் இருந்த தொலைபேசி இசைக்கவும் ‘இந்த நேரத்தில யாரா இருக்கும்..’ எண்ணியவாறு சேலை முந்தானையில் ஈரக்கைகளை துடைத்தவர் அழைப்பை ஏற்க வரும் முன்னமே திண்ணையில் அமர்ந்திருந்த ரெங்கநாயகி ரிசீவரை எடுத்து காதில் வைத்திருந்தார்.

“ஹல்லோ யாரு...” கணீர் குரல் அனிகாவின் செவியை ங‌ொய்யென தாக்கியது.

காதை குடைந்தவள் “எட்டூருக்கு கேக்கிற மாதிரி எதுக்கு இந்த கத்து கத்துற கிழவி...”

அந்த குரலிலே அது தன் பேத்தி என்பதை கண்டு கொண்ட ரெங்கநாயகியின் மனது பேத்தியின் குரலில் நெகிழ்ந்து போனது. காட்டிக்கொள்ளவில்லை.

“எவடி அவ என்னைய பார்த்து கிழவிங்கிறது... நீயி மட்டும் எங்கண்ணுல பட்ட தோலை உரிச்சுப்புடுவேன் உரிச்சு...”

“அதுமட்டுக்கும் எங்கையி மாட்டுக்கு வைத்தியம் பார்க்குமாக்கும்... நான் உன்னைய உரிச்சிடமாட்டேன்...”

“அடியேய் ராங்கி... இன்னும் உன் வாயி கொறயலையா...”

“அதெல்லாம் இந்த ஜென்மத்தில குறையாது அடுத்தவொரு ஜென்மம்னு ஒன்னு இருந்தா அப்போ பார்த்திக்கலாம்... நீ லொள்ளுதனமா பேசினது காணும் முதல்ல அம்ஸுகிட்ட போனை கொடு...”

சமையலறை வாசலில் நின்று ஆவலுடன் தன் முகம் பார்த்த மருமகளின் மனநிலையை புரிந்துகொண்ட ரெங்கநாயகி கண்கள் பனிக்க ‘வாம்மா’ கண்களால் அவரை அழைத்தார்.

மாமியாரின் பேச்சிலே அழைத்தது தன் கண்ணம்மா என்பதை கண்டுகொண்ட வாசுமதி; மாமியார் அழைக்கவும் தன் வயதையும் மறந்து கலங்கிய விழிகளுடன் அவரருகில் வந்தவர் ரிசீவரை தன் காதில் வைத்துக்கொண்டார்.

அம்மாவுக்கும் மகளுக்கு தனிமை கொடுக்க எண்ணி அங்கிருந்து நகர்ந்தார் அவர்.

சேலை முந்தானையில் கண்களை துடைத்த வாசுமதிக்கு பேசுவதற்கு வாய் வரவில்லை. மகளின் பிரிவினை எண்ணிய துக்கத்தில் தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக்கொண்டது.

“அம்ஸ்...” தாயினை தேடும் கன்றுக்குட்டியாய் ஏக்கத்தினை சுமந்து வந்தது அனிகாவின் குரல்.

“கண்ணாம்மா...” மகளின் ஏக்கத்திற்கு சற்றும் குறைவில்லா ஏக்கத்துடன் ஒலித்தது தாயுள்ளத்தின் குரல்.

அருகிலிருந்து செல்லம் கொஞ்சிய மகள் இன்று பல மைல் தூரத்திலிருந்து தொலைபேசியில் பேசுவதை எண்ணி குபுக்கென்று கண்களில் நீர் நிறைய சேலை முந்தானையில் ஒற்றிக்கொண்டவருக்கு சந்தோசமிகுதியில் பேச்சு வரவில்லை போலும்... ஏகத்துக்கும் தடுமாறினார்.

“அம்ஸ் எப்பிடி இருக்க...”

“எனக்கென்ன கண்ணம்மா நான் நல்லாத்தேன் இருக்கேன்... நீ எப்புடி இருக்க... வேளாவேளைக்கு நல்லா சாப்பிடு கண்ணு... உடம்ப நல்லா பார்த்துக்கோ....” பாசத்தால் குளிப்பாட்டினார்.

விடாது கேள்விக்கணைகளை தொடுத்த தாயினது உள்ளத்தின் ஏக்கத்தை புரிந்து கொண்டவளின் மனதும் தாயின் அரவணைப்பிற்காய் ஏங்கியது. குரல் பிசிறியது. அடைத்துக்கொண்ட தொண்டையை சரி செய்து கொண்டாள்.

“எனக்கென்ன நான் நல்லா ஜம்முன்னுதேன் இருக்கேன்... என்னிக்கு நான் சாப்பாட்டு பங்கம் வச்சிருக்கேன் அதெல்லாம் நல்லா தின்னுகிட்டுதேன் இருக்கேன்... அதவிடு அம்ஸ்... அப்பா எங்க வயலுக்கு போயிட்டாரா... அதென்ன எப்போ பாரு எந்நேரமும் வயலு வயலுன்னு வயலே கதின்னு கெடக்கிறது நீ இதெல்லாம் என்னன்னு கேக்க மாட்டியா... இதோ பாரு அம்ஸ் இனிமே கொண்டு நீதேன் போகவிடாம அப்பாவ வீட்டிலேயே வச்சிக்கனும்...”

தந்தையின் உடல் உறுதியை அவள் அறிவாள் தான், இருந்தும் தான் உடன் இல்லா நேரத்தில் ஏதாவது ஆகிவிட்டால்... உதவிக்கு பலபேர் இருக்கிறார்கள் தான் இருந்தாலும் அவள் மனம் கேட்கவில்லை. அவளுக்கு வயலையும் விட தன் தந்தையின் உடல்நிலையே முக்கியமாய் பட்டது.

“கண்ணம்மா எப்பிடிடாம்மா இருக்க....” சிந்தையை தடை செய்தது தந்தையின் பாசமான குரல்.

“அப்பா....” அவரின் குரல் கேட்டு வற்றாத ஜீவ நதியாய் கண்ணீர் கண்களில் சூழ தேம்பியவள் அதை அவர் கண்டுகொள்ளாதவண்ணம் சாமர்த்தியமாய் மறைத்துக்கொண்டாள்.

“சாப்பிட்டியா கண்ணம்மா...”

“இப்போத்தேன் எழுந்தேன் இனிமே தான் கீழ போகனும்...” கரகரப்பாய் ஒலித்த கண்ணீர் கறைபடிந்த குரலில் மகளின் தேம்பலை உணர்ந்து கொண்டவர் “முதல்ல போய் சாப்பிடு கண்ணம்மா அப்பறம் நிதானமா பேசிக்கலாம்...”

“இல்லப்பா நான் பேசிட்டு அப்பறமா சாப்பிடுகிறேன்...”

“அதெல்லாம் ஒன்னுவேணாம் முதல்ல போய் சாப்பிடு கண்ணம்மா...” மீற முடியாத குரல். அதை மீற அவளாலும் முடியவில்லை.

“ம்ம்ம்...” விம்மலை அடக்கிக்கொண்டு கூறியவள் செல்போனை துண்டித்து கட்டிலில் வீசினாள். தந்தையின் அதட்டலின் காரணம் அவளுக்கு புரியாமலில்லை. இதற்குமேல் பேசினால் தன்னாலும் தாங்கமுடியாது தந்தையாலும் தாங்கமுடியாது என்பதால் தான் அவர் இப்படி கூறுகிறார் என்பதினை உணர்ந்து கொண்டவள் தண்ணீரில் முகத்தை அலசி கீழிறங்கி சென்றாள்.

மகளின் அழைப்பு துண்டிக்கப்படவும் கனத்த மனதுடன் அறைக்குள் நுழைந்து கொண்டவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து விட்டத்தை வெறித்துப் பார்த்தார்.

வெளியுலகம் உணர மகளை வெளியூருக்கு அனுப்பிவைத்தவர் இப்போது மகளின் பிரிவினை தாங்கிக்கொள்ள முடியாமல் கலங்கிய கண்களுடன் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தார்.

சமையல் அறைக்குள் நுழைந்த வாசுமதிக்கு அழுகையை அடக்கமுடியவில்லை. இப்போதே மகளை தங்களுடன் அழைத்து வரவேண்டும் போல் இருந்தது.

மருமகளின் நிலையை அறிந்தது போலவே சமையல் அறைக்குள் நுழைந்த ரெங்கநாயகி அழுது கொண்டிருப்பவரை வாரி அணைத்துக்கொண்டார்.

“அசடு இப்பிடித்தான் அழுவியா... இதுக்கே இப்பிடி அழுதீன்னா அவளை கல்யாணம் கட்டிகொடுக்கும் போது என்ன பண்ண போற... பொண்ண பெத்தா இதயெல்லாம் தாங்கித்தானாவணும்... இப்பிடியே விடிய விடிய அழுதிட்டு இருக்காம கண்ணா தொடச்சிட்டு வேலைய பாரு...” அதட்டினாலும் அதில் பாசமே மிகையாய் இருந்தது.

மாமியாரின் கூற்றில் நிதர்சனம் புத்தியில் உறைக்க கனத்த மனதுடன் கண்களை துடைத்துக்கொண்டவர் மகளின் நினைவுடனே தன் வேலையில் ஆழ்ந்து போனார்.

முழு துயரத்தையும் குத்தகைக்கு எடுத்துவள் போன்ற தோற்றத்தில் படியிறங்கி சாப்பாட்டு மேசையில் அமர்ந்தவள் இடது கையினை மேசையில் ஊன்றி முகத்தினை தாங்கிக்கொண்டாள். முகம் வேதனையில் கசங்கியிருந்தது.

காலையுணவை முடித்து மேசையில் அடுக்குவதற்காய் வெளியில் வந்த மாலதி சோகத்தில் முக்கியெடுத்தது போலிருந்த அனிகாவின் முகத்தை பார்த்து பதறிப்போனார்.

“அனிம்மா என்னடா... ஏன் முகமெல்லாம் வாடி இருக்கு என்னாச்சு...”

தனக்குள் உழன்று கொண்டிருந்தவள் சித்தியின் குரலோசையில் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னடா...”

வாஞ்சையாய் முடிகோதிய மாலதியின் செயல், அன்னையை நினைவூட்ட அவரின் இடையோடு கட்டிக்கொண்டவளின் விழிகள் கண்ணீரில் நனைந்தது.

“நான் ஊருக்கு போகட்டுமா சித்ஸ்...” பரிதவிப்புடன் அழுகையை கட்டுப்படுத்தி நிமிர்ந்து பார்த்தவளின் செய்கையில் அவர் மனம் உருகித்தான் போயிற்று.

“என்னடா அம்மா அப்பாவ பார்க்கணும் போல இருக்கா...”

“ம்ம்...” முனகலுடன் மீண்டுமாய் அவர் இடையில் முகம் புதைத்தாள்.

“இன்னும் ஒரு வாரத்தில ஹாலிடே வருது நல்லா ஊர் சுத்தனும்னு சொன்ன... இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு நீ நிம்மதியா ஊருக்கு போயிட்டு வரலாம் என்ன சரியா... இப்போ சாப்பிடு... உனக்கு பிடிச்ச மசால் தோசை ஊத்திருக்கேன்... இல்லன்னா கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரியா...”

பேச்சோடு பேச்சாக மசால் தோசையை அவள் வாயில் ஊட்டி விட பசியில் இருந்தவள் நன்றாக ஒரு கட்டு கட்டினாலும், சித்தியின் பேச்சை மனதினுள் குறித்துக் கொண்டாள்.

‘இன்னும் ஒருவாரந்தேன் அதுக்கப்பறம் ஊருக்கு போய் ஒரு கலக்கு கலக்கனும்...’ மனம் கவலையையும் மீறி உல்லாசமாய் பட்டியலிட செல்போனில் காயுவின் எண்ணை ஒற்றினாள்.

முதல் நாளை காட்டிலும் இப்போது இருவரிடையிலும் நெருக்கம் ஏற்பட்டிருக்க, காயத்திரி தன் தயக்கத்தை உடைத்து அனிகாவுடன் சகஜமாய் பழகும் அளவுக்கு முன்னேறி இருந்தாள்.

இன்னும் சில நாட்களில் கலை நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் பர்சேஸ் பண்ணுவதாய் ஏற்கனவே திட்டம் தீட்டிருக்க, இன்னும் சில மாணவர்களும் உடன் வருவதாக கூறியிருந்தனர்... அதை கேட்டு ஏனோ தானோவென தலையை கூட ஆட்டிருந்த அனிகா, வீட்டிலே இருந்தால் ஊரின் நினைவுகள் வாட்டுவதால் சித்தியின் சொற்படி வீட்டிலிருக்க முடியாமல் வெளியில் செல்ல காயுவை அழைத்தாள்.

“காயு ஷாப்பிங் போலாமா...” கெஞ்சலாய் கேட்டவள் காயு கூற வருவதை காதில் வாங்காமல் போனிக்ஸ் அழைத்து வந்தாள்.

கார்த்திக்கு அரசாங்க டென்டர் கிடைத்ததிலிருந்து வேலைகள் நேரத்தை முழுமையாய் ஆக்கிரமித்து கொள்ள, தினமும் அனிகாவை காலேஜ் அழைத்து செல்வது சிரமம் என்பதால் அவளுக்கென ஸ்கூட்டி ஒன்றை வாங்கி கொடுத்திருந்தான். அத்துடன் புது மாடல் செல்போன் ஒன்றும். அவளின் அவசர தேவைகளுக்கென.

முதலில் ஸ்கூட்டி ஓட்ட தெரியாதென அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவளை அதட்டி மிரட்டி ஓட்ட கத்துக் கொடுத்திருந்தான். இப்போதெல்லாம் பிங்கியும் அவளின் இன்றியமையாதவைகளில் ஒன்றாகிவிட அதில்தான் எங்கும் செல்வது. ‘பிங்கி’ என்பது அவள் தன் ஸ்கூட்டிக்கு வைத்த செல்லப்பெயர்.

உள்ளே நுழையவும் சில்லென தாக்கிய ஏசியின் குளுமை; அதை அனுபவித்தபடி ஒவ்வொரு பிரிவையும் புரட்டி போட்டவள் ஒன்றை கூட இதுவரை வாங்கியிருக்கவில்லை.

காயு தனக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ள, அதில் ஆயிரம் குறை சொல்லி அவற்றை எல்லாம் புறம் தள்ளிக் கொண்டிருந்தாள் அனிகா. காலையில் வந்தவர்கள் மதியத்தை நெருங்கிக் கொண்டிருக்க பசியில் அவளை சுரண்டினாள் காயு.

“இன்னும் எவ்வளவு நேரம் அனி...”

“காலைல சாப்பிட்டதுக்கு பச்ச தண்ணி கூட பல்லுல படல... இப்போவாச்சும் போவோமா இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே நின்னேன் மயக்கம் போட்டு விழுந்திடுவேன்...”

“பேபி... ட்ரெஸ் எல்லாம் ரொம்ப சுலபமா எடுக்க கூடியதுன்னு நினைச்சிட்டியா... ம்ஹூம்... அதெல்லாம் நின்னு நிதானமா எடுக்கணும் பேபி... எங்க வீட்டில எல்லாம் துணி கடைக்கு போனா ஒரு நாளு முழுக்க கடையிலயே இருந்து துணிமணியெல்லாம் பார்த்து பார்த்து எடுத்திட்டுதேன் வருவோம் அந்த ரத்தம் என் உடம்புலயும் ஓடுதில்ல அதேன்...”

காயுவிற்கு விளக்கம் கொடுத்தபடியே சேல்ஸ்மேனிடம்,

“அந்த டாப் எடுங்க.. இல்ல அந்த ரெட் கலர்.. ப்ச்... இது நல்லாவே இல்ல.. இது வேணாம் ப்ளூல எடுத்து போடுங்க.. ரெண்டாவதா இருக்கு பாருங்க.... அதான்... பேபி இது நல்லா இருக்கா... ஆனா டார்க் ப்ளூ மாதிரி இருக்கில்ல... இல்லயில்ல இது வேணாம்... வேறது எடுங்க...” கடையை இரண்டாக்கிக் கொண்டிருந்தாள்.

ஊழியர்கள் முழி பிதுங்கிப் போய் மொத்தத்தையும் அவள் முன்பு குவித்து வைத்திருக்க அதில் இருந்த ஒன்று கூட அவளுக்கு பிடிக்கவில்லை. உதட்டை பிதுக்கி தலையசைத்து அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

“ஒன்னு கூடவா பிடிக்கல...”

“நல்ல கடைன்னு சொன்னாய்ங்க ஆனா ஒன்னு கூட நல்லாவே இல்லை...” அசட்டையாய் உதடு பிதுக்கியவள் அங்கிருந்த ஐஸ் கிரீம் பார்லரை பார்த்து நாக்கை சப்பு கொட்டினாள்.

“காயு ஐஸ் கிரீம்டி... சாப்பிடாம போனா சாமி கண்ண குத்திடும்... வா வா...”

இழுத்துக்கொண்டு போனவள் அவளை அங்கிருந்த இருக்கையில் அமர்த்தி விட்டு ஆர்டர் கொடுக்க போனாள்.

“ஒன் க்ரஞ்சி பெரேரோ அண்ட் காரமெல் க்ரஞ்ச்” (one crunchy ferrero and caramel crunch)

ஆர்டர் கொடுத்தவள் காயுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.

“காயு ஒரு குட் நியூஸ் சொல்லட்டுமா...” முகத்தில் சந்தோஷ வர்ணஜாலங்கள் தெறிக்க கண்களை விரித்தாள்.

“ம்ம்..” பசி மயக்கத்தில் இருந்தவள் சோம்பலாய் முனக,

“என்ன காயு நீ... நான் எம்புட்டு சந்தோஷமான சமாச்சாரத்த சொல்லவர்றேன்... நீ என்னடான்னா ‘ம்ம்ம்’ன்னு அரத்தூக்கத்தில இருக்கிறவளாட்டம் முனுங்கிற இதெல்லாம் சரியேயில்ல சொல்லிப்புட்டேன்...”

“உன்னை பத்தி தெரிஞ்சும் ஷாப்பிங் வந்தேன்ல நீ இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ...”

“சரி.. சரி.. கோவிச்சுக்காத காயு அதேன் ஷாப்பிங் பண்ணி முடிச்சிட்டோமே மறுபடியும் எதுக்கு அத ஆரம்பிக்கிற...”

“நான் மட்டும் பண்ணேன்னு சொல்லு கூட உன்னையும் சேர்த்துக்காத.. அதகூட விடு வந்தது தான் வந்த அட்லீஸ்ட் ஒரு கர்சீபாவது எடுத்திருக்கலாமில்ல...”

“நான் என்ன வேணும்னேவா எடுக்காம வந்தேன் ஒன்னு கூட நல்லாவேயில்லை அதேன் நான் எதுவும் எடுக்கல...”

“அப்பிடியா... அப்போ நான் எடுத்ததெல்லாம் கேவலமா இருக்குன்னு சொல்லாம சொல்ற...”

“சீச்சி... நான் அப்பிடியெல்லாம் சொல்லுவேனா காயு...” முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டாள் அனிகா.

“சரி.. சரி அதுக்கெதுக்கு முகத்த ஹைவே நீளத்துக்கு தொங்கபோட்டிருக்க பார்க்க சகிக்கல...”

அதில் பல்லை கடித்த அனிகா காயுவை முறைத்துப் பார்க்க குறு நகை ஓடியது அவளிதழில்.

தோழிகளின் உரையாடல் பேரரின் வரவில் தடைப்பட, ஐஸ்கிரீமை கண்டதும் எச்சில் ஊற நாவை சப்புக்கொட்டிய அனிகா தோழியை மறந்து ஐஸ்கிரீமில் மூழ்கினாள்.

பசியில் இருந்த காயுவும் அதை சுவைக்க ஆரம்பிக்க கிண்ணத்தில் படிந்து மீண்ட கரண்டியின் மெல்லிய ஓசையை தவிர வேறு சப்தமின்றி மயான அமைதியில் இருந்தது அவர்கள் இருந்த இடம்.

திறந்த வெளியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு அதில் மரத்தினாலான வட்டவடிவ மேசையும் கதிரையும் போடப்பட்டிருக்க அதில் தான் அவர்கள் அமர்ந்திருந்தனர்.... அவர்களை போன்று பலரும் அங்கமர்ந்து தங்களுக்கு தேவையானவற்றை சுவைத்துக்கொண்டிருந்தனர்.

சற்று தள்ளியிருந்த நடைபாதையில் மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.... வாகனங்கள் ஒருபக்கம் ஊர்ந்து செல்ல, சாலையை கடக்கும் மக்கள் ஒருபுறம் அக்கம்பக்கம் பார்த்து சென்று கொண்டிருக்க சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்திருந்த ராட்ஷத மரங்கள் காற்றை வாரியிறைத்துக் கொண்டிருந்தது.

இடையிடையே பின்னணி இசையாய் ஹாரன் ஒலிகளும் மக்களின் சலசலப்பும் சிறார்களின் அழுகையொலி சிரிப்பொலியின் கலவைகளும் இன்ப ராகம் மீட்ட மக்கள் பரபரப்பாய் கடந்து சென்ற இடம் நொடியில் மாறுபட்டுப் போனது; சீறிக்கொண்டு வரும் சிறுத்தை போல் சுழன்றடித்த காற்றை கிழித்துக் கொண்டு உடலை அதிரச்செய்து புத்தியை மழுங்கச் செய்து புழுதி பறக்க பெரும் இரைச்சலுடன் சீரான வேகத்தில் ஒரே நேரத்தில் ஒன்று போல் சர்சர்ரென வந்து நின்ற பி.எம்.டபுள்யூ கார்களின் அசுர வேகத்தில்.

சூறாவளி போல் மொத்த புழுதிகளையும் சுருட்டிக்கொண்டு வந்த கார்களின் இரைச்சலில் சர்வாங்கமும் ஆட்டம் காண நடைபாதையில் கூட்டம் கூட்டமாகவும் தனி தனியாகவும் நடந்து கொண்டிருந்த பொது மக்களும், வேடிக்கை பார்த்து நின்ற இளைஞர்கள் கூட்டமும், ஓய்வுக்காய் வெளியில் வந்த ஊழியர்களும் அதிர்ந்து திரும்பிப் பார்க்க, பெரும் இரைச்சலுடன் இயக்கத்தை நிறுத்தி இருந்தது அக்கார்கள்.

ஐஸ் கிரீமை சுவைத்த அனிகா காலி கப்பை குப்பை கூடையில் போட்டு நிமிர்ந்தவள் அசுர வேகத்தில் முகத்தில் அறைந்த புழிதியின் நெடி நாசியில் நுழைந்து அசௌகரியத்தை ஏற்படுத்த மூக்கு விடைக்க கண்களில் கனல் தெறிக்க நிமிர்ந்தவள், ஒரே நேரத்தில் ராட்ஷத வேகத்தில் உறுமலுடன் இயக்கத்தை நிறுத்திய கார்களின் வேகத்தில் மிரண்டு ஓரடி பின்னால் நகர்ந்தாள்.

முன்னும் பின்னுமாய் நின்ற பி.எம்.டபுள்யூ கார்களில் இருந்து பாதுகாவலர்கள் இறங்கிய அடுத்த நிமிடம் நடுவில் நடுநாயகமாய் இயக்கத்தை நிறுத்தியிருந்த ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் (rolls-royce phantom) காரிலிருந்து அலட்சியத்துடன் தலைகோதியபடி இறங்கினான் ஷௌர்யா.

வரிசையாய் அணிவகுத்த கார்களின் வேகத்திலே வந்தது யாரென தெரிந்தாலும் ஒருமுறையேனும் அவன் முகம்பார்த்திட பிரயத்தனம்பட்ட மக்கள் நகரும் பாவனையில் அவன் முகம் காண முயல, அதற்கு தடைவிதிப்பதுபோல் அவனை சுற்றி வளைத்துக்கொண்ட அவனின் பாதுகாப்பு படையினர் அவனுடனே அங்கிருந்த ரிசார்ட்டினுள் நுழைந்தனர்.....

விழிகளை கூர்மையாக்கி ‘எவன் அவன்’ எனும் ரீதியில் காரிலிருந்து இறங்கும் அப்பாட்டக்கரையே கூர்ந்து பார்த்திருந்த அனிகா அதிலிருந்து இறங்கியவனை கண்டு புருவங்கள் சுருங்க யோசனை செய்தவளுக்கு மின்னல் போல் ஓடிமறைந்தது அவனை முதல் முதலாய் பார்த்த நாளின் நினைவுகள்.....

அன்றைய தினத்தின் நினைவெழவே மனதுக்குள் வெகுண்டாள்.

‘இவன் ஒருத்தனுக்கு எதுக்காம் இம்புட்டு காரும் துப்பாக்கி பிடிச்சவனுங்களும்... இருந்தாலும் இந்த திமிரு பிடிச்சவனுக்கு எடுப்பு ஜாஸ்திதான்....’

இதழ் சுழித்து வசைபாடிகொண்டே அவன் முகத்தின் மீது பார்வையை தொடுத்து அவன் செல்லும் வழியே எதிர்திசையினில் முன்னோக்கி நகர்ந்தவள் திடீரென தன் கண்பார்வையிலிருந்து மறைந்தவனை கண்டு அதிர்ந்து விழித்தாள்....

‘எங்கே போய் தொலைஞ்சான்னு தெரியலே.... சரியாத்தானே பாலோ பண்ணேன்.... எப்பிடி மாயாம மறைஞ்சான்.....’ பல்லை கடித்து சுற்றுப்புறத்தில் பார்வையால் அலசியவளின் மேனியில் எதுவோ ஊர்வது போன்றிருக்க பயத்துடன் திரும்பியவள் எதிலோ மோதி நெற்றியை தேய்த்துக்கொண்டு அண்ணார்ந்து பார்த்தாள்....

விழிகள் ஸாசர் போல் அகல விரிந்து நெஞ்சுக்குழிக்குள் படபடப்பு அதிகமானதில் உள்ளுக்குள் நடுக்கம் ஓடிமறைந்து சிறிதாய் எட்டிப்பார்த்த அச்சத்தில் முதுகுத்தண்டுவம் சில்லிட வைரத்துளியாய் அரும்பிய வியர்வையில் உறைந்து நின்றாலும் இயல்பான அசட்டுத்தனம் தலை தூக்கியதில் ஒருசேர தாக்கிய உணர்வுகள் அத்தனையும் வடிய அவனை முறைத்துப்பார்த்தாள் அனிகா.

அவள் தன்னை தொடர்ந்து வந்தது முதல் தன்னை காணாது தேடியது தன்னை கண்டதும் அவள் முகத்தினில் வந்து போன உணர்ச்சி என அத்தனையையும் கூர்விழிகள் படம் பிடிக்க, கால்களை அகற்றி பேன்ட் பாக்கட்டில் கைவிட்டு தோரணையாய் அவள் முகம் பார்த்து நின்றான் ஷௌர்யா...

“யாரையோ காணாம தேடிக்கிட்டு இருக்கபோல... யாருன்னு சொன்னா நானும் தேடிப்பார்க்கிறேன்...” இயல்பையும் மீறி சில்மிஷம் இளையோடியதோ என எண்ணிப்பார்க்கும் குரல்....

தன் முகம் பார்த்து நின்றவளின் தோள் மேல் கரம் பதித்து மறுபுறம் திருப்பியவன் அவள் தோள் வளைவிலே முகம் புதைத்து அவளைப்போன்றே நாலாபுறமும் பார்வையை அலையவிட, சவரம் செய்த தாடியின் சொரசொரப்பான அரும்புகள் அவளின் காதுமடல் தீண்டி சிலிர்க்க வைக்க அவனிதழோரம் தீண்டிய கன்னக்கதுப்போ தீப்பற்றி எரிந்தது...

சொல்ல முடியா உணர்வுப்பிரவாகத்துக்குள் மூழ்கியவளின் கண்ணிமைகள் ஒன்றையொன்று கவ்விக்கொள்ள தோள்சந்தில் படிந்த அவன் கரம், பெண்ணவளின் சிற்றிடை நோக்கி பயணித்தது....

முதல் பார்வையிலே என் இயல்பையும் மீறி கோபம் கொள்ள செய்தவன்... அப்பாவியொருத்தனை கருணையேயின்றி அடித்துக்கொல்லப் பார்த்தவன்... இதோ இப்போதும் பொதுமக்கள் கூடியிருக்கும் இடத்தில் ராட்சஷன் போன்று புடைசூழ காரில் வந்து இறங்கி அசௌகரியம் ஏற்படுத்தியவன் என ஏதேதோ சொல்லி ஏனென்றே அறியாமல் வெறுப்பையும் கோபத்தையும் அவன்மேல் வளர்த்திருந்தவள், இப்போது அவனது தொடுகையில் தன்வசமின்றி தடுமாறிப்போனாள்....

அவளிடையில் ஊர்ந்த அவன் விரல்களின் மாயாஜாலத்தில் மூடிக்கொண்ட விழிகள் மேலும் இறுக அதன் அவஸ்தை தாளாமல் கொழுகொம்பின்றி தடுமாறும் கொடிபோல் தள்ளாடித் தவித்தவள் அவனின் பரந்த மார்பில் தலைசாய்த்துக்கொண்டாள்....

தன்னில் சாய்ந்தவளின் இடையழுத்தி தன்னுள் இறுக்கிக்கொண்டவன் மேலும் ஒன்றி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்... அவனது செயலில் மொத்த சக்தியும் வடிய காய்ந்த சருகாய் துவண்டவளை தன்புறம் திருப்பி தன்னுள் புதைத்தவன் அவளின் செவ்விதழ் வனப்பில் தன்னிலை பிறழ அவள் முகம்நோக்கி குனிந்தவன் அழுத்தமாய் ஆழமாய் தன்னிதழ் கொண்டு மெல்லிதழை கவ்விக்கொண்டான்.

சடுதியில் நடந்தேறிய நிகழ்வுகள், கண்மூடிக் கிறங்கியவளின் மூளையில் ஒளிபரப்பானதில் பெண்மை விழித்துக்கொள்ள பதட்டத்துடன் அவனிடத்திலிருந்து விலகியவளின் மொத்த சக்தியும் வடிந்திருக்க நிற்க முடியாமல் கண்கள் சுழல போதையுண்டவள் போன்று தள்ளாடியவள் அங்கிருந்த சுவரில் சாய்ந்து நிதானித்துக்கொண்டு கோபத்துடன் நிமிர்ந்து பார்க்க, கைகளை மார்புக்கு குறுக்காய் கட்டிக்கொண்டு கண்களை சுருக்கி கோபத்துடன் அவளையே முறைத்துப் பார்த்திருந்தாள் காயு....

தன் முன்னே அவனின்றி தோழி நின்றிருக்கவும் பெரிதும் குழம்பியவள் தலை சொறிந்துகொண்டு அவளை பார்த்திருக்க அனிகாவின் செயலில் கடுப்பான காயு அவளை வெட்டவா குத்தவா எனும் ரீதியில் முறைத்துக்கொண்டிருந்தாள்..

“இங்க என்ன பண்ற அனி... உன்னை எங்கெல்லாம் தேடுறது... இப்பிடித்தான் சொல்லாமகொள்ளாம வரதா...” திட்டியவளின் குரலில் இருந்த படபடப்பே அவள் தன்னை காணாமல் பயந்திருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்ல தன் உணர்வுகளை சாதூர்யமாய் மறைத்துக்கொண்டு அவளை பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்.

“ஹா... ஹா நல்லா பயந்தியா... என்னைய காணோம்னதும் உன்னோட ரியாக்சன் எப்புடி இருக்கும்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன் பேபி... இதுக்கெல்லாம் யாராச்சும் பீல் பண்ணுவாய்ங்களா...” குறும்பாய் சிரித்தவளை ஏகத்துக்கும் முறைத்தவள் “போடி லூஸு...” திட்டிக்கொண்டே முன்னே செல்ல பின்தங்கிய அனிகாவின் பார்வை என்னவோ அந்த இடத்தை வெகுவாய் அலசியது....

இன்னமும் மிச்சம் இருந்தது போல் அவனிதழ் உரசிய கன்னம் குறுகுறுக்க அவனிதழ் படிந்த கழுத்து வளைவு சிலிர்த்துக்கொண்டிருந்தது.... அவன் கொடுத்த முத்தத்தின் ஈரம் காயாமல் இதழில் ஒட்டியிருக்க நாவினால் அதரங்களை தடவிகொடுத்தாள்....

அவனது நெருக்கத்தில் உணர்ந்த படபடப்பை மீண்டும் இதயம் உணர, முகத்தில் அறைந்த காற்றை தாண்டி அவள் பார்வை இண்டுஇடுக்கு விடாமல் ஒவ்வொன்றையும் அலசியது....

அவனின் மீதிருந்த கோபமும் வெறுப்பும் பனிக்கட்டியாய் உருகிக்கரைந்து செல்ல... அவன் வந்தானா? முத்தம் கொடுத்தானா? எனும் எண்ணமே ஓங்கி வளர்ந்து அவளை முழுமையாய் ஆக்கிரமிக்க, சித்தம் தடுமாற தேங்கி நின்றவளின் கரம் பற்றியிழுத்துச் சென்ற காயுவின் இழுவையில் அவளோடு சென்றாலுமே அனிகாவின் நினைவுகள் முழுதும் அவனிடத்திலே சங்கமித்திருந்தது....

அங்கிருந்த பிரபல்யமான ரிசார்ட்டின் மூன்றாம் மாடியின் கண்ணாடியால் அடைக்கபட்ட அறையினுள் இருந்து, பார்வை சுழன்றோட தள்ளாட்டத்துடன் சென்று கொண்டிருந்தவளையே பார்த்திருந்தான் ஷௌர்யா வர்மா....

அவளை பார்க்கும் கணமெல்லாம் அவனிதழில் தோன்றும் அதே பிரித்தறிய முடியாத வளைவுப் புன்னகை இக்கணமும் அதில் நெளிய, சிலுப்பிக்கொண்டிருந்த முடியை வலதுகை விரல்களால் அழுந்தக் கோடிழுத்தான்... ஏதோவொரு நினைவில் இதழ்கள் மேலும் விரிய கண்களில் குறும்பு கூத்தாடியது...


தொடரும்......

எல்லாரும் ரொம்பநாளா வெயிட் பண்றதால போஸ்ட் பண்ணிட்டேன் பிரெண்ட்ஸ்... சோ கண்டிப்பா கமெண்ட்ஸ் லைக்ஸ் பண்ணனும்... ;);)
ஷம்லாவின் "என் விழியை நீங்கி நீ விலகாதே" - கருத்துத் திரி
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் விழியை நீங்கி நீ விலகாதே


அத்தியாயம் 05


“காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை சித்தி, அன்பென்றாலே சித்தி, என் சித்ஸ் போல் ஆகிடுமா?”

காலையில் கண்விழித்த அனிகா பெட்காபியுடன் நின்ற சித்தியை பார்த்ததும் குரல்வளத்தை காட்ட, தலையில் அடித்துக்கொண்டார் மாலதி.

“இன்னிக்காவது நேரத்தோட போகனும்ன எண்ணம் இருக்கா இல்லையா… சீக்கரம் ரெடியாகு அனிம்மா…” செல்லமாய் வைதவர் கீழே செல்ல, பழிப்புக் காட்டியவளோ சோம்பலாய் எழுந்தமர்ந்தாள்.

பால்கனி கதவை விரிய திறந்தவள் இரவடித்த மழையில் குளித்திட்ட தோட்டத்தை கண்கொட்டாமல் பார்த்தாள்.

கிளறப்பட்ட குப்பை போல் பழைய நினைவுகள் மனதில் ஊசலாட உள்ளக் குறுகுறுப்புடன் அசைபோட்டவளின் கன்னங்களிரண்டும் சிரிப்பில் மலர்ந்திருந்தது.

அப்போது அனிகா பத்தாம் வகுப்பு தேர்ச்சியாக களிப்பில் வீட்டை இரண்டாக்கியவள் அன்று நெருங்கிய தோழி மஞ்சுவின் பிறந்தநாள் என்பதால் அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தாள்.

இரண்டு நாட்களாக விடாமல் அடித்த மழையும் தற்போது ஓய்ந்திருக்க ஆயிரம் கவனங்களுடனே மகளை அனுப்பி வைத்தார் வாசுமதி.

ரெங்கநாயகி எப்போதும்போல அவளுடன் வம்பு வளர்க்க பதிலுக்கு முறைத்துக்கொண்டே பக்கத்து தெருவில் இருந்த தோழியின் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாய் விரைந்தவள் ஒரு பை நிறைய அன்னை கொடுத்தனுப்பிய முறுக்கையும் நைஸாக வாய்க்குள் தள்ளிக்கொண்டு கமுக்கமாக செல்ல, வழியிலே இவளுக்காக காத்திருந்த மஞ்சு தோழியை இழுத்துச் செல்லாத குறையாய் வீட்டுக்குள் கூட்டிச்சென்றாள்.

அவளின் வீட்டு பின்பக்கம் சென்றதும் தான் அனிகாவுக்குமே புரிந்தது அவளின் அவசரத்திற்கான காரணம்.

பின்பக்க வாயிலில் இருந்த ஜன்னல் வழியே நைஸாக எம்பிப் பார்த்த தோழியை தலை சொறிந்து ஏறிட்டவள் ஏதும் புரியாமல் தானும் அவளோடு இணைந்துகொள்ள அன்று தான் முதல் முறையாக குஷி படத்தை டிவியில் பார்த்தாள்.

அதுவும் அப்போதுதான் படம் தொடங்கியிருந்தது போலும் மழையில் ஜோதிகா ஆடும் பாடல் போய்க்கொண்டிருக்க அனிகாவுக்கு சொல்லவும் வேண்டுமோ… வாய்க்குள் அடைத்த முறுக்குடன் விழியகற்றாது பார்த்தவள் தன்னை மறந்து விசிலடிக்க, அவ்வளவுதான் உள்ளே படம் பார்த்துக்கொண்டிருந்த மஞ்சுவின் அண்ணன் இருவரையும் விரட்டாத குறையாக விரட்டி விட, பளிப்புக் காட்டிக்கொண்டே ஓட்டமும் நடையுமாய் தெறித்தோடிய இருவரும் விட்டிருந்த மழை சட்டென்று பொழியவும் படம் பார்த்த நினைவில் குத்தாட்டம் போட, இதை கேள்விப்பட்ட வாசுமதி மகளை பெரும்பாடுபட்டுத்தான் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்.

இதோ அன்றிலிருந்து இன்று வரை மழையின் மேல்கொண்ட மோகம் மட்டும் கிஞ்சித்தும் தணியவில்லை பெண்ணவளுக்கு…

இதழ் விரிந்த சிரிப்பில் மொத்த நிகழ்வுகளும் படம்போல் மனதில் அலையடிக்க ஒரு கட்டத்தில் விக்கித்து நின்றவள், உள்ளங்கையால் வாயை பொத்தி அதிர்ச்சியில் உறைய மூளையில் அழியாச்சிற்பமாய் பதிந்த அவன் முகம் சடுதியில் தோன்றி மறைந்ததில் திக்குமுக்காடிப் போனாள்.

நடந்ததோ இல்லை கற்பனையோவென பிரித்தறிய முடியாத வகையில் அன்று நடந்த நிகழ்வு கண்முன்னே தோன்றியதில் தன்னையும் மறந்து நடுங்கிய அதரங்களை அழுந்த துடைத்துக்கொண்டவள் எம்பிக் குதித்திட முனைந்த இதயத்தை அவஸ்தையோடு தடவிக்கொடுத்தாள்.

‘அடச்சி அந்த திமிருபிடிச்சவன் ஞாபகம் எனக்கு எதுக்கு வருது… ஐயோ! அனி செல்லம் இதெல்லாம் சரியேயில்ல சொல்லிபுட்டேன்…’

மூளை அறிவுறுத்த மனதோ ஏதோவொரு வகையில் தன்னை சிறைப்படுத்திய அவன் நினைவுகளை அழிக்கவும் முடியாமல் நினைவில் நிறுத்தவும் முடியாமல் அழிச்சாட்டியம் செய்ய தலையை பிடித்தவளுக்கு தலைவலிப்பது போன்றிருந்தது.

‘ச்சே.. இந்த எடுபட்ட பயல பார்க்கும்போதெல்லாம் தலைவலி மண்டைக்குள்ள புகுந்து நர்த்தனமாடுது… இனி ஜென்மத்துக்கு இந்த மூஞ்சிய கண்ணால பார்த்திறகூடாது…’

ஒற்றை கையால் தலையை தாங்கியபடி வேண்டியவள் சித்தி கொண்டுவந்த காப்பியின் நினைவுவரவே உள்ளே விரைந்தவள் காபி கப்புக்குள் தலையை புகுத்தி இருந்தாள்.

சொட்டும் மீதமின்றி ரசித்து குடித்தவளின் உள்ளங்கையில் குறுகுறுவென இருக்கவும் ஒற்றைக் கண்ணை சுருக்கி செல்போனை பார்வையிட்டாள்.

திரையில் “காயு பேபி காலிங்” என்று விழவுமே விரைவாய் காலி கப்பை அருகிலிருந்த மேசை மீது வைத்தவள், சாவதானமாக கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து செல்போனை காதுக்கு கொடுக்க, அதற்காகவே காத்திருந்தது போல் காச்மூச்சென்று கத்தத் தொடங்கினாள் காயு.

காலையில் இருந்து அனிகாவுக்கு பலமுறை அழைத்தும் அவள் அழைப்பை எடுக்காததில் கடுப்பிலிருந்தவள், எதற்கும் இருக்கட்டுமென்று தற்போது அழைப்பு விடுக்க, இம்முறை அனிகா இணைப்பை ஏற்கவுமே மொத்த கடுப்பையும் கொட்டிக்கவிழ்த்தாள்.

“கொஞ்சமாச்சும் அறிவிருக்காடி… ஏன்டி நீ மட்டும் இப்பிடி இருக்க… காலைலலிருந்து எத்தனவாட்டி போன் பண்ணேன் அட்டென்ட் பண்ணாம மேடம் என்னத்த வெட்டி முறிச்சிக்கிட்டு இருந்தீங்க…”

தோழியின் பேச்சில் ஒற்றை கண்ணை சுருக்கி தலையை சொரிந்தவள் செல்போனை பார்க்க, கிட்டத்தட்ட பத்து மிஸ்ட் காலுக்கும் மேல் அவளிடமிருந்து வந்திருந்தது.

‘அடச்சி எவன்டா அது என் போனை வைப்றேட்ல போட்டது அவன் மட்டும் என்கைல சிக்கட்டும் மவனே சட்னித்தேன்…’ ஏகத்துக்கும் வறுத்தெடுத்தவளை காறித்துப்பியது மனசாட்சி.

‘இந்த கொசுங்க தொல்லை தாங்கலைன்னு நீங்களே வைப்றேட்ல போடுவீங்கலாம் அப்புறம் எவன்டா போட்டான்னு தெரியாத மாதிரியே சீனும் போடுவீங்கலாம்… அடியேய் இது உனக்கே கேவலமாத்தெரில…’

யாருக்கு தெரியப்போகிறது என அவள் செய்த செயலை மனசாட்சி பிட்டு பிட்டு வைத்ததில் முகம் அஷ்டகோணலாக வலது கையை மடக்கி வாயில் வைத்தவள் முகத்தில் வடிவேலின் பாவனையை கொண்டுவர, அழைப்பில் இருந்த காயுவோ பதில் வராததில், “ஹலோ.. ஹலோ.. ஹலோஓஓஓஓ…” உச்சஸ்தானியில் கத்தினாள்.

‘ஙொய்யென’ அடைத்த காதை குடைந்தவளோ ‘அடச்சி இவ ஒருத்தி.. லோ லோன்னு உயிரை எடுக்கிறா…’ பொரிந்து கொண்டே,

“சொல்லு பேபி..” என்க, அவளோ,



“அடியேய்… நேத்து எத்தனை தடவை படிச்சு படிச்சு சொன்னேன்… இன்னிக்கு மியூசிக் பெஸ்டிவல் மறந்திடாதன்னு… நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது ஷார்ப்பா ஒன்பது மணிக்கு லால்பாக்ல இருக்க, இல்ல கொன்னுடுவேன்…”

காயு மிரட்டியதை கேட்க அவள் செல்போனை காதில் வைத்திருந்தால் தானே.. அவள்தான் மியூசிக் பெஸ்டிவல் என்றதிலே தலையில் பாறாங்கல்லை வைத்தது போன்று கைவைத்து அமர்ந்துகொண்டாளே.

‘அப்போவும் சித்ஸ் சொல்லும்போதே நீ யோசிச்சிருக்கனும் அனி செல்லம்.. என்னடா என்னைக்கு இல்லாம இன்னிக்கு பெட்காபி கொண்டு வர்ராங்கலேன்னு நீ அப்போவே யோசிச்சிருந்தா இவளெல்லாம் உன்னைய திட்டி இருப்பாளா..’

நொந்துபோனவள் செல்போனை கட்டிலில் வீசிவிட்டு குளியலறைக்குள் பாய்ந்து அவசரகதியில் காக்கா குளியல் போட்டு மார்புதொட்டு முழங்கால்கள் வரை துண்டால் மறைத்துக்கொண்டு வெளியில் வந்தவளுக்கு அடுத்த சோதனையும் காத்திருந்தது.

அலுமாரிக் கதவை விரியத் திறந்து பார்வையோட்டியவள் எதை உடுத்துவது என புரிபடாமல் சோகப்பதுமையாய் கன்னத்தில் கைகுத்தி நின்றாள்.

அனிகாவை எழுப்பிவிட்டு கீழே சென்ற மாலதி, வெளியில் செல்லும் அவசரத்தில் உணவுண்ண மாட்டாள் என்பதால் அவளுக்கு பிடித்த பூரியும் கிழங்கையும் நொடியில் சமைத்தவர் சுடச்சுடச் எடுத்து கொண்டு அவளின் அறைக்குள் நுழைந்தார்.

கதவை தட்டியும் சத்தமில்லாது போகவும் திறந்து உள்ளே சென்றவர், துண்டால் உடலை சுற்றிக் கொண்டு பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த அனிகாவின் கோலத்தை பார்த்து தலையில் அடித்துக்கொள்ளாத குறை தான்.

‘கர்மம்.. கர்மம்.. இவள…’ அவளருகில் சென்று முதுகில் ஒரு போடு போட்ட பின்பு தான் ஆசுவாசப்பட்டார்.

“அனிம்மா காலங்கார்த்தால இதுயென்ன கோலம்னு இப்பிடிக்கா நிற்க… சீக்கிரம் ட்ரெஸ் எடுத்து போட வேண்டியது தானே…” தலையில் கொட்டினார்.

மண்டையை தடவியபடி பல்லை கடித்தவள் தரையில் காலால் உதைத்துக்கொண்டு சிணுங்கி,

“ஆஆ,, வலிக்குது சித்ஸ்.. அடிக்காத.. நான் என்ன வேணும்னேவா இப்படிக்கா நிக்கேன்… எந்த ட்ரெஸ் போறதுன்னு கன்பியூஸன்ல நிக்கேன்.. இது ரெண்டுலயும் எது நல்லா இருக்குன்னு சொல்லு.. சீக்கிரம் சீக்கிரம்.. லேட்டாகுது…”

பெரும்பாடுபட்டு தான் தேர்ந்தெடுத்த, வெள்ளையும் இளம்சிகப்பும் கலந்த நீள் பாவாடையும் அதே நிறத்தில் கட்டம் போட்ட புல் ஸ்லீவ் சர்ட் மற்றும் ஊதாவும் நீலமும் கலந்த பலாஸ்ஸோவும் வெளிர் நீல நிற குர்தியையும் அவரிடம் காண்பித்தாள்.

அது இரண்டுமே அவளுக்கு பொருத்தமாக இருப்பதாகவே தோன்றியபோதும் ஊதாவும் நீலமும் பலாஸ்ஸோ எடுப்பாக இருப்பது போல் தோன்ற அதை சுட்டிக்காட்டினார்.

“இது நல்லாயிருக்கு அனிம்மா இதையே போட்டுக்கோ..”

“சித்ஸ்… சும்மா சொல்லக்கூடாது சூப்பர் செலக்ஷன்…” கைதட்டி சிறுகுழந்தை போல் ஆர்ப்பரித்தவள்,

“அச்சோ டைமாச்சு.. இன்னிக்கு லேட்டா போனேன் காயு சங்கருத்தாலும் ஆச்சரியமில்ல…”

முன்பாதியை சத்தமாகவும் பின்பாதியை தனக்குள்ளும் சொல்லிக்கொண்டவள், சித்தி வெளியில் சென்றதும் கதவைமூடி வெள்ளையும் இளம்சிகப்பும் கலந்த பாவாடை மற்றும் இளம் சிகப்பு நிற சட்டையையும் அணிந்து கொண்டாள்.

ஆரம்பத்தில் தாவணியை தவிர்த்து வேறு எதையும் அணிய விரும்பாதவள் காயு மற்றும் சித்தியின் வற்புறுத்தலின் பேரில் வேறு உடைகளுக்கு மாறினாலும், தன் மாற்றம் தன்னையும் பெற்றோரையும் எந்தவிதத்திலும் பாதித்திடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தாள்.

இந்த உடையும் பார்ப்பதற்கு நாகரீக தோற்றத்தை கொடுத்தாலும் அளவெடுத்து தைத்தது போன்று கனகச்சிதமாய் பொருந்தியிருந்ததில் பார்ப்பதற்கும் அழகாய் இருந்தாள்.

எதிரிலிருந்த கண்ணாடியில் மிளிர்ந்த தன்னுருவத்தை பார்த்து வழக்கம் போல தனக்கு தானே திருஷ்டி கழித்தவள் அதை செல்பி எடுத்து செல்போனிலும் நிழற்படமாய் பதிவூட்டினாள்.

‘அனி செல்லாம் யார் சொன்னாலும் சொல்லலனாலும் நீ அழகி தானடி...’

நாணத்தில் வெண்தாமரை வதனம் செங்கொழுந்தாய் சிவக்க, கணுக்கால் தொட்ட கருநாகக் கூந்தலை சிறு கிளிப்பினுள் அடக்கியவள் “சித்ஸ் பசி வயித்த பிராண்டுது.. சீக்கிரம் உள்ளார வா…” குரல்கொடுத்தபடி தனக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க தொடங்கினாள்.

இளையவளின் கூப்பாட்டில் உள்ளே நுழைந்தவர், தான் சொன்னதை அன்றி வேறு உடை உடுத்திருந்தவளை முறைத்தார்.

“உனக்கு பிடிச்சத உடுத்துறதுக்கு என்கிட்ட எதுக்கிடி கேட்ட…” பூரியை கிழங்கில் தொட்டு ஊட்டியபடி கேட்க,

சித்தியின் திடீர் கேள்வியில் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை உதட்டுக்குள்ளே அடக்கி நமுட்டு சிரிப்பு சிந்தியவள் அவரை பார்த்து கண்ணடித்தாள்.

“அதுவா… அதுவந்து உன்னோட டேஸ்ட்க்கு ஏத்தமாதிரி நீ சொன்னியா அத்தேன் எனக்கேத்த மாதிரி நான் இத உடுத்திக்கிட்டேன்…”

“உன்ன..” தலையில் விழயிருந்த கொட்டிலிருந்து தற்காலிமாக தப்பித்தவள் தோல்பையை எடுத்துக்கொண்டு படிகளில் லாவகமாய் பாய்ந்து செல்ல, அனிகாவின் செயலில் சிரித்துக்கொண்டே மெதுவாய் படிகளில் இறங்கிய மாலதி; தன்னிடம் விடைபெற வேண்டி காத்து நின்றவளின் நெற்றியில் ஆதுரமாய் முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.

சித்தப்பாவும் கார்த்திக்கும் வேலை காரணமாக அதிகாலையிலே கிளம்பிச்சென்றிருக்க சித்தியிடம் கையாட்டி விடைபெற்றவள், பிங்கியில் அமர்ந்து அதை கிளப்பினாள்.

அதற்குள் பலமுறை வாட்சை திருப்பி திருப்பி பார்த்திருப்பாள்…

நேரம் யாருக்கும் காத்திராமல் சென்று கொண்டிருக்க பெங்களூரின் காலைநேரத்து வாகன நெரிசலில் தட்டுத்தடுமாறி நீந்தி கரையேறியவள், சிக்னலில் மாட்டிக்கொண்டாள்.

‘ஹஅச்சோ… அனி செல்லம் இன்னிக்கு உன் சங்குக்கு ஆபத்து கன்பர்ம்டி…’

மானசீகமாய் தலையில் கைத்தவளின் செல்போன் கிண்கிணியாய் நாதமிசைக்க, பைக்குள் இருந்த செல்போனை பார்த்தவள் ‘காயு பேபி காலிங்’ என்று வரவும், எடுக்காவிட்டால் பயங்கரமாய் திட்டுவாள் என்பதால் அவசரமாய் உயிர்ப்பித்து காதில் வைத்தாள்.

“காயு பேபி.. இதோ வந்துண்டே இருக்கேன் செல்லம் நீ காண்டாவாத அதேன் நான் வரேன்னு சொல்றேன்ல பேபி..” அருகில் நின்றுகொண்டிருப்பவர்கள் தன்னை ஒருமாதிரி பார்ப்பதுபோல் தோன்றியதில் ஹஸ்கி வாய்சில் கிசுகிசுத்தாள்.

இவளின் ஹஸ்கி வாய்ஸ் அவளுக்கு கேட்கவில்லையா இல்லை காதை கிழித்த இசைமுழக்கத்தில் செவியில் விழ மறுத்ததா?!! ஏதோவொன்றில் “அனி.. நீ பேசுறது ஒன்னும் கேட்கலடி.. சத்தமா சொல்லு…” ஹைடெசிபலில் கத்த,

‘இவயொருத்தி, கடைசி மாவுல சுட்ட குட்டி தோசையாட்டம் இருந்திட்டு என்ன கத்து கத்துறா… உன்னைய வந்து கவனிச்சிக்கிறேன்…’ செல்போனை அணைத்து பைக்குள் போட்டவள், காலைநேரத்து வெயிலில் கருவாடாய் காய்ந்து கால்களை ஊன்றி சிக்னலுக்காக காத்திருந்தாள்.

‘இரவடிச்ச மழைக்கும் இப்பத்திய வெயிலுக்கும் கொஞ்சமாச்சும் சம்மந்தமிருக்கா..’ வெயிலின் தாக்கத்தில் தனக்குள் புழுங்கிக் கொண்டாள்.

ஒருவழியாய் சில மணித்துளிகள் அவளை சோதித்த பின்னரே சிக்னல் விழ, ஆசுவாசத்தோடு பிங்கியை கிளப்பியவள் கிளைச்சாலை வழியே புகுந்து கைக்கடிகாரத்தில் அடிக்கடி நேரம் பார்த்தவண்ணம் ஓட்டிச்செல்ல, அவளின் அதிர்ஷ்டமோ துரதிஷ்டமோ கவனியாமல் எதிரே வந்த வண்டியில் எதிர்பாராதவிதமாக மோதியவள் தானும் சமநிலை தவறி குப்புறவிழ இருந்து மயிரிழையில் தப்பித்துக் கொண்டாள்.

கீழே சரிந்திடுவோம் என மூளைக்குள் பரவிய நுண்ணிய உணர்வில் விழியிரண்டும் அழுத்தமாய் மூடிக்கொண்டது.

எங்கே ஏதும் ஆகிடுமோ என்ற பயம் நெஞ்சை கவ்வியதில் ரெயிலோடும் ஓசைக்கு மிகையாய் மார்புக்கூடு தடதடக்க, வெடவெடத்த அதரங்கள் காயத்திரி மந்திரத்தை விடாமல் உச்சரித்தது.

நடுங்கித்துவண்ட கரங்களிரண்டும் செவித்துவாரத்தை அழுந்த மூடிக்கொண்டது.. சக்தி மொத்தமும் ஆவியாய் காற்றோடு காற்றாய் கலந்திருக்க, உடலோ வியர்வை மழையில் முக்குளித்திருந்தது.

தோய்ந்த தேகம் நிலம் நோக்க தயாராய் இருந்தது…. எதையும் உணர்ந்தாளில்லை…. பயம்! பயம்! பயம்!

நாடி நரம்பு முழுதும் ஆக்கிரமித்த பயம் எனும் அணு ஆயுதம் உடலை கிடுகிடுவென நடுங்கச் செய்து புத்தியை மழுங்கடித்திருந்தது….

அழுந்த மூடிய நயனங்களின் இறுக்கம் தளர்ந்துவிட, கூடவே மேனியும் பிடிமானமின்றி தோய்ந்து சரியவிருக்க, இரு கரங்கள் பெண்ணவள் விழுந்துவிடாமல் பாதுகாப்பாய் தனக்குள் பொதித்துக்கொண்டது…

சில நிமிடங்களின் பின்னர்……

விலையுயர்ந்த லம்போர்கினி வெனென் காரின் பின்னிருக்கையில் வசதியாய் சயனித்திருந்த பெண்ணவளை விழியகற்றாமல் பார்த்திருந்தான் ஷௌர்யா.

விரல் அசைவிலே மொத்தத்தையும் கட்டியாளும் அசுரன் அவன்…. நல்லவனுக்கோ நல்லவனாய், கெட்டவனையோ வதம் செய்யும் நரகாசூரனாய், அத்தனையும் அடியோடு ஆட்டிப்படைக்கும் தீரன் அவன்…

இக்கணமோ சுயம் தொலைத்த நிலையில்….

அதை வெளிப்படையாய் கட்டவிரும்பாமல், என்றும் போலே இந்நொடியும் பெண்ணவளை காணும் போதெல்லாம் இதழில் ஒட்டிக்கொள்ளும் வளைவுப் புன்னகையினை சுமந்திருந்தான்…. அதையும் மீறி நெஞ்சுக்குள் இனம்புரியாத தவிப்பு சில்லாய் அரிக்கத் துவங்கியிருந்தது. காட்டிக்கொள்ளாமல் முகமோ செதுக்கிய சிற்பமாய்….

அடங்கமறுத்த சிகையினை ஒற்றைவிரலால் கோதிக்கொண்டவன், இதயத்துள் உண்டான படபடப்பின் காரணமறியாமல், களைத்துப்போன தோற்றத்திலும் பதுமையாய் மடியினில் கிடந்தவளையே உற்று நோக்கியிருந்தான்.

அவளுக்கோ, இரும்புக்குண்டை வைத்ததுபோல் தலை பாரமாய் கனக்க, இருளில் மங்கிய விழிகள் ஒளி தேடித்தவித்து பிரிந்திட முயல, சக்திவற்றிப் போன கைவிரல்கள் மெதுவாய் அசைய மெதுவாய் சுயநினைவுக்கு திரும்பலானாள்.

இன்னமும் எஞ்சியிருந்த பயத்தின் கோரமுகமோ இதயத்தில் போர்முரசிட, சிரமப்பட்டு எழ முயற்சித்தவளின் அத்தனையும் முயற்சியும் தோல்வியில் முடிந்ததில் புருவங்கள் சுருங்கி மீள துவண்டவளின், இடையழுத்தி எழுந்தமர உதவி புரிந்தவன் அருந்துவதற்கு எனெர்ஜி ட்ரின்க் (energy drink) கொடுக்க அதை வாங்கவும் திராணியில்லை அவளுக்கு.

வறண்டுபோன தொண்டை வேறு ‘எதையாவது கொடேன்’ என அழிச்சாட்டியம் செய்ய, நடுங்கிய விரல்களால் அதை தொண்டைக்குள் சரித்தவள் ருசியெல்லாம் உணரவில்லை..

குடித்ததும், போனவை எல்லாம் மீண்டது போலிருக்க சற்று நேரம் தலையை கைகளால் தாங்கி ஆசுவாசத்தோடு அதிர்ச்சியில் இருந்து மீண்டு நிமிர, அவள் முன்னே!!......

இவனா!!! தன் கண்களையே நம்ப முடியவில்லை அவளால்….

யாரை பார்க்கவே கூடாதென சற்று நேரத்தின் முன்னர் எண்ணிக் கொண்டாளோ அவனை அடுத்த சில மணிநேரத்துக்குள்ளே, அதுவும் அவனின் மடியிலே மெத்தை என்றெண்ணி மெத்தென கிடப்போம் என கனவிலும் எண்ணியிறாதவள் முகம் வெளிற மிரண்டுதான் போனாள்.

அவளையும் மீறி நிறப்பூச்சு இன்றியே செம்மை பூசிய அதரங்கள் அவனது ஈர முத்தத்தை நினைவு கூர்ந்ததில் பட் பட்டென ஒன்றையொன்று முத்தமிட்டுக்கொள்ள, தன்னியல்பாய் உள்ளங்கையால் இதழ்களை வழித்தெடுத்தவள் அவன் முகத்தில் ஏதும் தென்படுகிறதாவென பார்வையோட்ட.. சுத்தம்.. செதுக்கி வைத்த சிற்பமாய் கல்லாய் சமைந்திருந்தது.

‘இவன் அப்போவே அப்பிடியா இல்ல இப்போத்தேன் இப்பிடியா… எப்போபாரு இஞ்சி தின்ன குரங்காட்டம்... சேச்சே அந்தளவுக்கு இல்லன்னாலும் எதையோ தின்ன எதுவோ மாதி எப்பிடித்தேன் ஒரே போஸ்லயே இருக்கானோ…’

‘சினிமாக்காரனாட்டம் இருக்கான்னு பார்த்தா அவனுங்களையும் மிஞ்சிடிவான் போல... சரியான திமிரு பிடிச்சவன்… உர்ராங்கோட்டான் மாதியே முகத்த உர்ர்ன்னு வச்சிருக்கான் பாரேன்’

இனம்புரியாத சிலிர்ப்பில் அடங்கமறுக்கும் மனம் ஏகத்துக்கும் வசைமாரி பொழிய முகத்தில் இருந்த படபடப்பான தோற்றம் மட்டும் இம்மியும் அகலவில்லை.

கால்மேல் கால் போட்டு ராஜ தோரணையில் அமர்ந்து, அணுஅணுவாக அவள் மீதே பார்வை பதித்திருந்தவன் விஷம சிரிப்புடன் ஸ்டைலாக புருவத்தை ஏற்றியிறக்க, அரண்டு போனவள் சடுதியிலே சுயத்துக்கு மீண்டு விட்டாள்.

அப்போதுதான் நடந்த நிகழ்வுகள் புத்தியிலும் உறைக்க, முகத்தை ஒரு புறம் திருப்பி நடந்த நிகழ்வை தெளிவாய் ஓட்டிப் பார்த்தாள். (பிளாஷ்பேக்காம்!!)

‘சிக்னல் விழுந்திச்சு… அப்பிடியே ரைட் கட் பண்ணி இந்த பக்கம் வந்தேன்… ஆஆ! இந்த காயு லூஸு போன் பண்ணிக்கிட்டே இருந்தாளா!!… நானும் டைம் பார்த்திட்டே வந்தேனா!!… அப்போத்தேன் முன்னால வந்த கார் மேல மோதிப்புட்டேன்!!… அப்போ விழப்பார்த்திருப்பேனே!!… அதேன் இந்த பாழாப்போன மயக்கம் வந்து தொலச்சிருக்கு!!…’

‘அடச்சை மோதினது தான் மோதிப்புட்டேன் அத இந்த விளங்காதவன் கார் மேலயா மோதனும்… சை.. விட்டாவிடியத்தில இருந்து அப்பிடிக்கா இப்பிடியும் இப்பிடிக்கா அப்பிடியுமாத்தேன் நடக்கிது.. இனிக்கு என் ராசியே சரியில்ல போல…’

முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கிணங்க, இருவரும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் போதெல்லாம் கண்ணுக்கெட்டாத மாயவலை இருவரையுமே ஆட்கொண்டிருக்க, யோசியாமல் வாயை விடும் அனிகாவோ எப்போதும்போல் செவ்வென தன் வேலையை ஆரம்பித்தாள்.

“யோவ் உன் கண்ணு நல்லாத்தானே இருக்கு… நான்தேன் உன்னைய கவனிக்காம சர்ருன்னு மோதிப்புட்டேன்… நீயி என்னை பார்த்திருப்பியில்ல… அப்பறம் ஏன் வேணும்னே வந்து ஒன்னுந்தெரியா பச்சக்குழந்தையாட்டம் என்னைய மோதவுட்டு வெடிக்க பார்த்த… நீயெல்லாம் மனிஷக்கழுதையாயா…”

“அநியாயமா என்வுசுர காவு வாங்க பார்த்திட்டியேயா… ஒன்னுகிடக்க ஒன்னு ஆகியிருந்தா என் குடும்பத்துக்கு யாரு பதில் சொல்லுவா…”

“நான் இந்த கத்து கத்திறேன் எடுபட்டபய அசையிறானா பாரு…. சரியான தலைககனம் புடிச்சவன்… இடியட்…” சத்தமாகவே முணுமுணுத்தாள்..

அடைக்கபட்ட காருக்குள்… கூடவே அவனும் இருக்க… பயமேயின்றி அவனையே எதிர்த்து மல்லுக்கட்டிய அனிகாவை என்னவென்று சொல்லுவது… விதி வலியது போலும்…

எப்படி இருந்தாலும் அவள் டென்ஷன் அவளுக்கு..

‘இந்நேரம் ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆயிருக்கும்... இப்போத்தேன் முத தடவயா மியூசிக் பெஸ்டிவல் பார்க்கப் போறம்னு சந்தோஷமா இருந்தேன்… அது பொறுக்காதே… எப்பல்லாம் நான் சந்தோஷமா இருக்கேனோ அத கெடுக்கிறதுக்கின்னே ஒரு கூட்டம் அலையுதுடா சாமி…’ நொந்து போனாள் பெண்ணவள்.

‘அனி செல்லம் இவன் பார்க்கத்தேன் ஹீரோ கணக்கா வாட்டசாட்டமா இருக்கான்… ஆனா வெளித்தோற்றத்த பார்த்து நம்பிடாத… இவன் மூஞ்ச பார்த்தாலே தெரில இவன் சரியான வில்லாதி வில்லனு…’ தன்னை பார்வையாலே வகுந்து கொண்டிருந்தவனை முறைத்தபடியே எண்ணிக்கொண்டாள்.

சற்று முன்னர் தான் ஹீரோ என்றோம் என்பதையும் வசதியாய் மறந்து போனாள்.

அவனோ அவளின் பேச்சை கவனித்ததாகவே தெரியவில்லை…. அவன் கவனம் முழுதும் அவள் மீது…. பேசும் போதும் கன்னத்தில் விழும் குழியின் மீது…. சொருகி விடும் கார்குழலின் மீது…. இடையிடையே பற்களால் கடித்துக்கொள்ளும் இதழின் மீது….

என அவளின் வதனத்திலே ஊர்ந்து கிடந்தது… இவன் அவளை பார்க்க, அவளுமே அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடங்கமறுத்து சிலுப்பிய சிகை…. அணிந்திருக்கும் ஆடையையும் மீறி திமிறிக்கொண்டிருக்கும் புஜங்கள்… அவனின் தினசரி உடற்பயிற்சியை சொல்லாமல் சொன்னது… வெட்டும் புருவங்கள்… வசியம் செய்யும் கூர் விழிகள்… எடுப்பான நாசி…. நிச்சயம் இவனுக்கு சிக்ஸ்பேக் இருக்கும் என எண்ணத்தோன்றும் தோற்றம்…

அவளையும் மீறி நீண்ட பெருமூச்சு வெளியேற கடைக்கண்ணால் தன்னை குனிந்து பார்த்துக்கொண்டாள்.

காம்பினேஷன் படு கேவலமாக இருப்பதாகத்தான் தோன்றியது…

‘காட்டுப்புலி மாதி இருக்க அவன் எங்க… மொசக்குட்டி கணக்கா இருக்க நான் எங்க… ஏணி வச்சாக்கூட எட்டு படி தாண்டித்தேன் போவத்தோணும்…’

எதற்காக தன்னையும் அவனையும் இணைத்துப் பார்த்தோம் என்பதையெல்லாம் அவள் சுத்தமாக யோசித்தாளில்லை…

அதிலும் முதல் சந்திப்பில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் மிடுக்குடன் அவன் நின்ற தோரணை என்ன!!... இரண்டாம் சந்திப்பில் தன்னிடை பதிந்த கரத்தை விடாது இதழில் தீண்டி ரோமியோவே தோற்பது போல் அட்டகாசமாய் நின்றதென்ன!!... ஆனால் இம்முறை மட்டும் ஏன் அமைதியாய் தன்னை வெறித்துக் கொண்டிருக்கிறான்!!...

‘இதில் எது இவனின் உண்மையான முகம்… இவன் நல்லவனா!! கெட்டவனா!! இல்ல நல்லவன் மாதி இருக்க கெட்டவனா!!... நானும் பார்த்தாலும் பார்த்தேன் இவனைப்போல ஒருத்தன பார்த்ததே இல்லப்பா முருகா!!..’

அவள் முகம் கூர்ந்தே மனம் கணித்தவன்.. இதழ் கடையோரம் ஏளனத்தில் துடித்தது.

முதல் சந்திப்பிலே தைரியமாய் தன்னை எதிர்த்தவள், இரண்டாம் சந்திப்பில் தன்வசமின்றி என்னோடு ஒன்றியவள், இதோ மூன்றாம் சந்திப்பில் பயமமேயின்றி தன்னிடம் முறுக்கிக் கொண்டிருகிறாள்… இவளை எங்கனம் அவனுக்கு பிடித்துத் தொலைத்தோ!…

பிடித்தத்தை காதல் என்று வரையறுக்கவும் மனம்வரவில்லை…

ஆயினும் அவளை பார்க்கும் அந்த சில நொடிகளில் அவனுள் தான் எத்தனையெத்தனை மாற்றங்கள்….

வகைக்குள் அடக்கமுடியாத உணர்வுகள் அவை…. இதுவரை அவன் அனுபவித்திறாததும் கூட….

இந்த பித்துக் கூட பிடித்தமானதாகவே இருக்க, மீண்டும் அவளையே பார்த்தான்… ஏனோ அவளை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போல் ஓர் எண்ணம்…

சுழித்துக் கிடந்த புருவங்கள்.. மறைக்க முயன்றும் வெளிப்பட்ட வேல்விழிகளில் படிந்திட்ட கலக்கம்.. கூர் நாசி.. செம்மை பூசிய கன்னக்கதுப்புகள்.. நெளிந்து கொண்டிருந்த அதரங்கள்.. அதனை இம்சித்த முத்துப்பற்கள்.. படபடப்பில் ஏறியிறங்கிய நளினம் மிகு அங்கலாவண்யம் கொண்ட நெஞ்சுக்குமிழ்.. ஒன்றையொன்று குதறிக்கொண்ட வெண்டைபிஞ்சு விரல்கள்..

வினாடிக்குள் அவன் பார்வை, உடலெங்கும் ஊர்ந்து கூறுபோட்டதில் வெலவெலத்துப் போனாள் அனிகா.

‘எப்பிடி பார்க்கிறான் பாரு கண்ணு ரெண்டயும் நொண்டி காக்காக்கு போடணும்… இடியட்…’

ஏகத்துக்கும் திட்டித்தீர்த்த போதிலும் அவன் பார்வை உடலை கூசச் செய்ததில் மேனியில் ஓடிய நடுக்கம் மட்டும் குறைந்தபாடாய் இல்லை…

தடக்தடக்கென இதயத்துக்குள் ரெயிலோட.. தொண்டைக்குழிக்குள் எதுவோ அடைப்பது போல் சிரமப்பட்டுப் போனவள் வழுக்கிக்கொண்ட கைவிரல்களை இறுக்கமாய் பற்றி அவன் முகம் பார்க்க முடியாமல் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

அதை பார்த்தவனின் இதழ்களில் விஷமமாய் படர்ந்த சிரிப்புடனே, அவளுருவத்தை ஆழமாய் தன்னுள் புதைத்துக் கொண்டான்.

ஒருமுறை எகிறுகிறாள், மறுமுறை என் அருகாமையில் தன்வசமிழக்கிறாள், இதோ இப்போது காரணமேயில்லாமல் முறைத்தவள் தற்சமயம் தடுமாறிக் கொண்டிருக்கிறாள்.. க்ரேஷி கேர்ள்.. செல்லமாய் வைது கொண்டான்.

அவனால் அவளியல்புகளை பிரித்தறிய முடியவில்லையோ என்னவோ.

இருப்பினும் மலர் போன்ற பெண்ணவளினுள் நறுமுகை கமக்கும் பூவினை ஒத்த பலவித குணவியல்புகள் குவிந்திருக்க அதன் மொத்தமும் பெற்று உருவெடுத்த பாவையவளை தன்னவளாக்க ஆவல் கொண்டதோ ஆடவன் மனம்…

மறுகணமே தன் சிந்தை செல்லும் வழியுணர்ந்து விழிகளை குறும்பாய் சிமிட்டிக் கொண்டான் ஷௌர்யா வர்மா…


தொடரும்.....


ஷம்லாவின் "என் விழியை நீங்கி நீ விலகாதே" - கருத்துத் திரி
 
Last edited:

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் விழியை நீங்கி நீ விலகாதே


அத்தியாயம் 06


ஆட்டமும் பாட்டமும் என ஆர்ப்பாட்டத்துடன் மிளிர்ந்த இடத்திற்கு சற்றும் சம்மந்தமின்றி, அலைவரிசைகள் எப்பக்கம் ஓடுகின்றது என்பதையும் கணிக்க மறந்தவளாய் அமர்ந்திருந்தாள் அனிகா.

அவனிடமிருந்து விடுபட்டு எங்கனம் வந்து சேர்ந்தால் என்பதும் துளியளவும் நினைவில் இல்லை.

மந்தமாகிப்போன நிலையில், தான் மட்டும் வேற்றுக்கிரகத்தில் தன்னந்தனியே இருப்பது போன்றதொரு கற்பனையில், பார்வைகள் எங்கோ தொடுவானை வெறிக்க, மனதுக்குள்ளோ பல உணர்வுகள் கிளர்ந்தெழ எதையும் கிரகிக்கும் நிலையை கடந்திருந்தாள்.

இப்போதும் அவன் பார்வையில் கொட்டிக்கிடந்த உணர்வின் பேரென்ன என்ற எண்ணமே, முழுக்க வியாபிக்க அதை சரிவர புரிந்துகொள்ளத்தான் அவளால் முடியவில்லை.

தலையை பிடித்துக்கொள்ள வேண்டும்போல்!

இருகைகளாலும் தாங்கிக் கொண்டவள், அருகில் அமர்ந்து தன்னையே விசித்திரமாய் பார்த்திருந்த தோழியையும் உணர்ந்தாளில்லை… அவளைத்தான் முழுமையாக அவன் நினைவுகள் கூறுபோட்டுக் கொண்டிருந்ததே…

அத்தனை சுலபத்தில் அதிலிருந்து வெளிவரவும் முடியவில்லை… அவன் நினைவுகள் வெளிவரவும் விடவில்லை… காந்தமாய் ஈர்த்துத் தொலைத்தது…

‘அவன் நினைவுகள் கூட அவனைப் போலத்தான் போலும்’ கடுப்புடன் எண்ணிக்கொண்டளுக்குள் திக்கென்றது… தான் ஏன் அவன் நினைவுகளில் சிக்குண்டிருக்கிறோம் என்பது சிற்றளவும் அவள் அறிவுக்கு எட்டவில்லை…

புதிரானது இது புரியாதது! என்றிருந்த அவள் மனநிலையை அவளாலே சரிவர புரிந்துகொள்ள முடியாது போது, யான் என்ன செய்வது?

அதற்கு நேர்மாறாக, காயுவோ முற்று முழுதாய் வேறுவடியில் அமர்ந்திருந்தாள்.

அவளின் அன்னை சொரூபனா, அவளின் பதினைந்தாவது வயதில் இறந்துபோன பின்னர் அவளால் அத்தனை சுலபத்தில் யாரிடமும் ஒன்ற முடியவில்லை…

இதற்கு அத்தனை பெரிய குடும்பம் அவளது!

தாத்தா, பாட்டி, அப்பா, உடன்பிறந்த சகோதரி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அவர்களின் பிள்ளைகள் என நீண்டுகொண்டே செல்லுமளவு பெரும் அங்கத்தினர்கள் கொண்ட குடும்பம்.

இருந்தும் அவ்வளவு எளிதில் அவளால் அவர்களுடன் ஐக்கியமாகிட முடியவில்லை.

தந்தை சகோதிரியிடமிருந்தும் விலகிக்கொண்டு, தனிமை தீவுக்குள் தனித்திருந்தே பழகிக்கொண்டவள் அனிகாவின் வரவின் பின்னர்தான் ஓட்டை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டுக் கொண்டிருந்தாள்.

முன்பு எப்போதை விடவும் முகத்தில் மத்தாப்பு ஒளிர, இசை கச்சேரிகளை உல்லாசமாக தாளமிட்டு ரசித்தவள் அனிகாவின் முகம் பார்த்தபின்பு, யோசனை குடிகொள்ள அவளையே தான் பார்த்திருந்தாள்.

‘என்னவாயிற்று இவளுக்கு? வந்ததில் இருந்து பித்து பிடித்தவள் போல் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கிறாள்?’

எவ்வளவு யோசித்தும் பதில் புலப்படாது போக ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவள் ‘ப்ப்பே!!’ என அவள் முகம் நோக்கி குனிந்து கத்த, சிந்தைகள் கலைந்து பயத்துடன் நெஞ்ஜோசை எட்டூருக்கு கேட்க அலறியடித்து நிமிர்ந்தவள், காயுவை கண்டதும் பல்லை கடித்துக்கொண்டு முறைத்தாள்.

“எதுக்குடி லூசே இந்த கத்து கத்தின? என் கிழவி கூட இம்புட்டு தூரம் கத்தாது…” நறநறத்த பற்களுடே கடித்து துப்பியவளை அசால்டாக பார்த்த காயு, சட்டென்று முகபாவனையை மாற்றிக்கொண்டு சீரியஸானாள்.

“என்னாச்சு அனி? எதுவும் பிரச்சினையா? நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் உன் முகமேம் சரியில்லை. சொல்லு உன் மண்டைக்குள்ள அப்பிடி என்னதான் ஓடிக்கிட்டு இருக்கு…”

விடாப்பிடியாக கேட்டவளின் குரலில் ‘நீ சொல்லித்தான் ஆகவேண்டும்’ என்ற கட்டளையும் நிறைந்தே இருந்தது…

அந்த வில்லாதி வில்லனின் நினைவில் இவளிடம் மாட்டிக்கொண்டாமே என்று, காலம் கடந்து தனக்குள்ளே புலம்பித் தீர்த்தவள் நொடியில் முகத்தை சீராக்கி தோழியை புன்சிரிப்புடன் ஏறிட, அவளோ எமகாதகியாய் ‘இதையெல்லாம் நம்ப நான் ஒன்றும் முட்டாள் இல்லை’ எனும் பாவனையுடன் அவளையே உறுத்து பார்த்திருந்தாள்.

‘அடச்சி… அனி செல்லம் இப்பிடியாடி இவளுக்கிட்ட மாட்டித்தொலைப்ப? இப்போ என்னத்த சொல்லி சமாளிக்கிறது…’ தீவிர யோசனைக்கு சென்றாள்.

“நீ எவ்வளவு வேணா யோசிச்சுக்கோ அனி பேபி.. ஆனா என்கிட்ட உண்மையை மட்டும் சொல்லிடு.. இல்ல அதை எப்பிடி வாங்கனும்னு எனக்கு நல்லாவே தெரியும்…”

அவள் மனதை படித்தாற்போன்று வேடிக்கை பார்த்தவாறே பதில் கொடுத்த காயுவை சபிக்கத்தான் முடிந்தது அவளால்.

‘இவ இருக்காளே.. அது எப்பிடித்தான் நாம அசருற நேரம் பார்த்து கொக்கி போட்டு கேள்வி கேக்கிறாளோ… சை.. இப்போ என்னத்த சொல்லுவேன் எப்பிடி சொல்லுவேன்.. சொன்னாலும் விடமாட்டா சொல்லல்லேனாலும் விடமாட்டா.. கோவிந்தா கோவிந்தா..’

மாடுலேஷனில் ராகமிழுத்தவளுக்கு பல்லை கடிப்பதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.

இத்தனைக்கும் நடுவில், மீண்டும் அவன் நினைவு வந்து தொலைத்தது.

‘அவனு என்னைய பார்த்து பார்த்துத்தேன் பாடாபடுத்துறான்னு பார்த்தாக்கா இவளு என்னைய பார்க்காமலே பாடாபடுத்தி எடுக்கிறா… ரெண்டும் சரியான வில்லாதி வில்லனும் வில்லியுமாத்தேன் இருக்கிதுங்க…’

தன் பாட்டுக்கு எண்ணவோட்டம் ஓட, சடாரென்று பிரேக் போட்டு தடுத்து நிறுத்தியவள் பெரும் யோசனைக்கு உள்ளானாள்….

‘காயு ஞாபகம் வர்றது நியாயம் ஆனா ஏன் சம்மந்தமில்லாமல் இவன் ஞாபகமும் வந்து தொலைச்சது…’

‘சை.. காலைல இருந்து ஒன்னும் நல்லதாவே நடக்கமாட்டேங்குது… இன்னிக்கு எனக்கு ராசியே சரியில்ல போல…’

‘காலைல அவனைய பார்க்கவே கூடாதுன்னு நினச்சேன் ஆனா பார்த்துப்புட்டேன்… இப்போ இவகிட்ட மாட்டிக்கி முழிக்குறேன்…’ நொந்து போனாள்.

இருந்தும் விடாது கருப்பாய் தொடர்ந்த அவன் நினைவுகளில் இருந்தும், அவ்வளவு சுளுவாக அவளால் மீளமுடியவில்லை என்பது தான் உண்மை…

‘ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கினம் உன்னிடத்தில் கண்டேன்..’

அவனை நினைத்த மாத்திரத்தில், ஏ.ஆர் ரஹ்மானின் பிஜிஎம் உடன் நித்யஸ்ரீ பாடிய பாடல் தான் அவளுள் ஒலித்தது…

அதை அவளே எதிர்பார்க்கவில்லை என்பதினை அதிர்ந்த அவள் முகமே அப்பட்டமாய் காட்டிக்கொடுக்க… காயுவை பார்த்தவள், தன் மனதில் என்ன உள்ளது என்பதை தன்னாலே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும்போது இவளிடம் என்னவென்று சொல்வது என செய்வதறியாமல் தவித்தாள்.

விதவிதமான மூன்று சந்திப்புகள்…

அதுவும் பார்த்துக்கொள்ளும் அந்த சில நொடிகளிலும் சண்டையே பெரிதும் போட்டுக்கொண்டவளுள்..

எப்படி இத்தனை வலுவாக அவனின் ஆழப்பதிந்த நினைவுகள்…

அதுதான் அவளுக்கு பெரும் யோசனையாக இருந்தது… இந்தளவுக்கு தன்னுள் பதிந்திருக்கிறானா என்ற சிந்தையே அவளுள் இதமான சுகத்தையும் பரப்பியது…

திக்கித்து திகைத்துப் போனவள், படபடத்த உள்ளத்துடன் காயுவின் கரங்களை அழுந்தப் பற்றிக்கொண்டாள். பதட்டத்தில் வியர்வை அரும்புகள் மேளுதட்டை நனைத்தது… காற்றில் படபடக்கும் ஜன்னல் போல் நெஞ்சுத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறியது…

கிடுகிடுவென நடுங்கிய அனியின் கரத்தை கெட்டியாக பிடித்தவள், பதறிப் போனாள்.

“என்னடி ஆச்சு… ஏன் கையெல்லாம் இப்படி நடுங்குது… முகமெல்லாம் வேற வேர்த்து கொட்டுது… என்னதான் நடந்தது ஏன் ஒருமாதிரியா இருக்க…”

“வாயிலென்ன கொள்ளிக்கட்டையா வச்சிருக்க பதில் சொல்லேன்டி…”

தோளை பிடித்து உலுக்கிக்கொண்டே கேட்கவும், அவளை ஓர் பார்வை பார்த்தவள் கடகடவென அனைத்தையும் ஒப்பிக்க, அதுவரை சீரியஸாக கேட்டுக்கொண்ட காயு அவள் தன் சந்தேகத்தை கூறவும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்கவாரம்பித்தாள்.

அதுவரை கலக்கத்துடனும் என்ன நினைப்பாளோவென்ற தயக்கத்துடனும் தலை குனிந்திருந்தவள், காயு சிரிக்கத் தொடங்கியதும் குழம்பிப்போய் பின்னர் முறைக்க தொடங்கினாள்.

அனியின் முறைப்பில் சிரிப்பை அடக்க முயன்றும் முடியாமல், வாய் பொத்தி சிரித்தவள் ஓரளவுக்கு கட்டுபடுத்திக் கொண்டு அவளை கேலியாகப் பார்த்தாள்.

“திப்பம்பட்டியில் இருந்த வந்த நம்ம அழகுராணி அனிகாவுக்கும்… பெங்களூரு அழகுராஜா… கட் கட் அவரோட பேரு இதுவரைக்கும் தெரியாததால்.. அவரின் பட்டத்துராணியின் கூற்றுப்படி ‘வில்லன்’ என்று செல்லமாக அழைப்படும் அவருக்குமிடையில்… மோதலில் துவங்கி காதலில் முற்றுபெறும் ‘அனிகா வில்லன்’ காதல் கதை கூடிய விரைவில் திருமணத்தில் முடியவும் வாழ்த்துகிறோம்… வாழ்த்துகிறோம்… வாழ்த்துகிறோம்…” என்று நீட்டிமுழக்க, தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அமர்ந்திருந்தாள் அனி.

அதேசமயம் அவள் பேச்சு மனசுக்குள் சுகமாய் சென்று விழுவதையும் அவளால் தடுக்கமுடியவில்லை… இதமான அவஸ்தையை அனுபவித்தது அவளுள்ளம்.

‘பார்த்ததிலிருந்து திமிராகவே நடந்துகொள்ளும் அவனிடம், சந்திக்கும் கணமெல்லாம் சண்டை மட்டுமே போடும் தான் எப்படி காதலில் விழுந்தோம்…’

‘அவன் பேர் கூட எனக்கு தெரியாதே… அப்பறம் எப்பிடி அந்த வில்லன் மேல எனக்கு லவ்ஸ் வந்திச்சு… பார்க்கறச்ச எல்லாம் அடாவடித்தனம் பண்றான் இவன் நல்லவனா கெட்டவனான்னே என்னால கணிக்கமுடியல… அதுவுமில்லாம இது சரி வருமான்னு மனசு கிடந்து அடிச்சிக்குது… இதனால என் குடும்பத்துக்கு கஷ்டம் வந்துருமோன்னு பயம்மாவும் இருக்கு… என்ன பண்ண போற அனி…’ என பலவாறு சிந்தித்து தனக்குள் உழன்று கொண்டிருந்தாள்.

அவள் முகம் பார்த்து தன் கேலியை கைவிட்டவள், அனிகாவின் கரத்தை தனக்குள் பொதித்து ஆறுதலாய் தடவிக்கொண்டு..,

“ரொம்ப யோசிக்காத அனி… உன் மனசு என்ன சொல்லுதோ அதுபடி கேளு… வீணா போட்டு குழப்பிக்காத… நாளையில் இருந்து காலேஜ் லீவு எப்படியும் ஒன் வீக் ஊர்ல தானே இருப்ப… அப்போ இது இன்பாக்ஸுவேஷன்னு தோணிச்சுன்னா கடந்து வந்திடு… லவ் தான்னு கன்பர்ம் ஆச்சுன்னா என்ன பண்ணபோறேன்னு முடிவெடு…”

தோழியாய் தனக்கு தோன்றியதை கூறியவள் அவளை யோசிக்க விட்டு அங்கிருந்து அகன்றாள்.

காயு சொன்னதை ஆழ்ந்து யோசித்தவளுக்கும் அதுவே சரியென்று படவும் இப்போதைக்கு அவனின் எண்ணங்களை சமத்தாக ஓர் மூலையில் ஒதுக்கிவைத்துவிட்டு, பழையபடி மாறியவள் தன் பல நாள் கனவான மியூசிக் பெஸ்டிவலை ஒரு கலக்கு கலக்க ஆயத்தமானாள்.

கூடாரங்கள் பல அமைக்கப்பட்டு ஒவ்வொரு வகையான மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆகியவையும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்க, இன்னொருபுறம் குளிர்பானங்களும் தேவையான உணவுகளையும் வழங்கிக் கொண்டிருந்தனர்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை வயதினரையும் ஒருமுகப்படுத்தி அருமையாக அமைக்கப்பட்ட தீம் பார்ப்பதற்கும் அத்தனை அழகாகவும் இருக்க, சற்றுமுன் கலக்கத்தில் சோர்ந்த முகம் தற்சமயம் பெருமகிழ்வில் மின்னிக் கொண்டிருக்க.. ஒவ்வொன்றாக வேடிக்கை பார்க்கலானாள்…

அதுவும் அங்கிருந்த எபோனி வூடன் (ebony wooden) கறுப்புநிற வயலின் அவளை அதிகமாகவே கவர, வாங்கும் ஆசை இருந்தபோதும் கைகளால் தடவி ஆத்மார்த்தமாக உணர்ந்து கொண்டவளுக்கு சிறு வயதிலிருந்து கறுப்பின் மேல் மிகையான மோகம்…

சற்று தள்ளி இவளை பார்த்தும் பாராததுமாய் கவனித்த காயு, அவள் தொட்டுணர்ந்த வயலினை பார்த்தவள் சிறு சிரிப்புடன் அவளுடன் இணைந்து கொண்டாள்.

ஓரிடத்தில் இசைகச்சேரி களைகட்டிக் கொண்டிருக்க, அனியை இழுத்துக்கொண்டு சென்றவள், அங்கிருந்த சிலரிடம் எதையோ கிசுகிசுக்க.. அவர்களும் பதிலுக்க எதையோ கூறவும்.. இவள் தலையசைப்பதுமாய் இருப்பதை புதிதாக பார்த்த அனி, அவளை தூண்டி துருவாமல் இசை அணிவகுப்பில் பாடிக்கொண்டிருக்கும் வேறு கல்லூரி மாணவனின் கணீர் குரலில் வெளிவந்த பாடலை ரசித்து கேட்கவாரம்பித்தாள்….

அவன் பாடி முடிந்ததும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர் “×××××××× பர்ஸ்ட் இயர் அனிகா…” என்றழைக்க, ஏனோதானோ என்று கேட்டிருந்தவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.

ஒருவேளை வேறு எவரையும் அழைக்கிறார்களா என்றால், அவளின் கல்லூரியில் முதலாமாண்டில் அவளின் பேர் வேறு எவருக்குமே இல்லை… ஆக நிச்சயம் அவளைத்தான் அழைக்கிறார்கள்.

‘இதுங்க எப்புடி அனி செல்லம் உன்னைய பாட கூப்புடலாம்… நீ ‘பாத்ரூம் சிங்கர்’ என்றதை இதுங்களுக்கு யாரு சொல்றது…’ என படுதீவிரமாக யோசித்தவள்,

‘இந்த எட்டப்பன் வேலை பார்த்த நாதாரிப் பயபுள்ள யாரு…’ என்று கண்களால் துலாவ, நொடியில் அத்தனையும் புலப்பட்டது…. சந்தேகமேயின்றி காயு என்பது…

‘இவள… வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கிறாளா… எப்போ பாரு எதையாவது ஒன்ன பண்ண வேண்டியது… காலையில் எழுந்ததில் இருந்து இது என்னைய நல்லா வச்சு செய்யிதுன்னு மட்டும் நேக்கு நன்னா புரியுது…’ வறுத்தெடுத்து விட்டாள்.

ஒரு ஓரமாய் நின்று இவள் முகத்தை பார்த்திருந்த காயு, ‘கிரேட் எஸ்கேப்… கையில் சிக்கியிருந்தேன் செதச்சிருப்பா…’ ஆசுவாசத்தோடு பெருமூச்சை இழுத்து விட்டவள் அவள் கண்ணில் படாதவாறே நின்றுகொண்டாள்.

அதற்குள் மீண்டுமொருமுறை, “அனிகா ப்ளீஸ் கம் இன்…” கூட்டத்தை பார்த்து தொகுப்பாளர் குரல் கொடுக்க, சில நொடிநேர தயக்கத்தின் பின், அவளின் இயல்பான நிமிர்வுடனே மேடை ஏறினாள்…

முதல் நாள் காலேஜ் செல்வதற்கே பயப்படாதவள்! இதற்கா பயப்படபடுவாள்….

அங்கிருந்தவர்களிடம் தான் பாடப்போகும் பாடலை கூறியவளின், தேனுள் முக்கியெடுத்த.. குயிலின் கொஞ்சலை குத்தகைக்கெடுத்த.. கேட்போரின் உடலை சிலிர்க்கச்செய்த.. மதுரகானம் பலரையும் இசையோடு உறையச்செய்தது.



“நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே


கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை


கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்றுதானே காற்று வீசும் வரை

நேற்று இல்லாத மாற்றம் என்னது


காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே!”



மனதின் சலம்பல்கள் வார்த்தைகளால் வடிக்கப்பட்டு.. பொங்கியெழுந்த உணர்வுகளின் வடிகாலாக இதழ்வழி கசிய.... தன்னையும் மறந்து போனாள் பெண்ணவள்.

அவள் மட்டுமா? அவளின் அவனுமே தான்…!

திணறடிக்கும் அவளின் இசை மழையில் சொட்ட சொட்ட நனைந்து அதில் தானும் ஒருவனாக, லம்போர்கினி வெனென் காரில் ஸ்டைலாக சாய்ந்துகொண்டு.. பேன்ட்டில் கைவிட்டு.. கண்களில் கூலர்ஸ் மின்ன.. பெண்ணவளின் முகத்தோடு உறவாடிய பார்வையை மீட்டெடுக்க மனமின்றி, அவள் வசமாகி நின்றான் ஷௌர்யா வர்மா..

பேரறியாமல், பேதையாள் காதல் வயப்பட்ட அவளுக்கே அவளுக்கான வில்லன்…

துளியளவும் புன்னகை சிந்திறாதவன் வதனமோ, அதிசயத்திலும் அதிசயமாய் சிறு சிரிப்பினில் ஜொலித்துக் கொண்டிருந்தது கூட அத்தனை கவர்ச்சியாய் இருந்தது…

அதை அறியாது, இசையோடு ஊனும் உயிரும் உருக ஒன்றென கலந்து பாடிக்கொண்டிருந்தவளின் இதயம் க்ஷணத்திலேயே தாளம் தப்ப… பிரியமாட்டாமல் உறவாடிய கண்ணிமைகள் படக்கென திறக்க… விழியால் அந்த இடத்தை துலாவியவளுக்கு, அவளின் வில்லன் இங்கு எங்கோ தான் இருக்கிறான் என்பது புலப்படலாயிற்று…

அவளையே சொட்டு சொட்டாய் பருகியவனின் விழிகளுக்கும், அவளின் பார்வை பரிவர்த்தனை தெளிவாய் புலப்பட… ஒற்றை விரலிடுக்கால் சிகை கோதியவன் உள்ளுக்குள் அனர்த்தமாய் சிரித்துக்கொண்டே காரிலேறிப் பறந்திருந்தான்….

தேடித்தேடி கிடைக்காமல் போனதில் பூத்துப்போனது அவள் மான்விழிகள்…

ஆதவனை காணாத செந்தாமரையென மயக்கும் அழகினளின் வதனமும் வாடிச்சோர்க்க, மேடை விட்டு கீழிறங்கியவள் அக்கணம் மொத்தமாக தன் நிலையிலிருந்து அவன் வசமாகியிருந்தாள்.

இரண்டு நாட்கள்… வழக்கத்தை விட யுகமாக கழிய, அதை கழிப்பதற்குள் இல்லாத துயரமெல்லாம் பட்டுப்போனாள் அனிகா.

வழக்கமாக கல்லூரி விடுமுறை என்றால்… சித்தியுடன் நேரம் செலவழிப்பது.. சித்தப்பாவுடன் வாக்கிங்.. கிடைக்கும் இடைவெளியில் கார்த்திக்குடன் வெளியில் செல்வது.. புதுப்படங்கள் இருந்தால் பார்ப்பது.. காயுவுடன் ஊர் சுற்றல்.. என படு பிஸியாகவே இருப்பாள்.

அதற்கு விதிவிலக்காக மாறிப்போனது கடந்து சென்ற இரண்டு நாட்களும்…

யாருமற்ற தனிமையில், இதயவறையில் அவன் ஞாபகங்கள் ஊர்வலம் செல்ல, சில்லுசில்லாய் சிதறடித்த அவன் எண்ணங்களால்… பொல்லாத காதல் பாடாய்ப்படுத்த பித்து பிடித்த மங்கையவள் தனக்குள் அமிழ்ந்திருந்தாள்.

உன் எண்ணப்பறவைகள்

எங்கோ சிறகடித்துப் பறப்பதை

என் வானத்தில் உணர்கிறேன்...!

அவளுக்காகவே படைத்த கவிதை போலும்… அம்சமாகப் பொருந்திப்போனது பேதை பெண்ணவளுக்கு…

உதிரத்தின் மிச்சத்தில், உணர்வுகளின் உச்சத்தில், அவன் நினைவுகள் கொடுத்த தொல்லைகள் தாளாமல், இதயம் முழுமையாக அவன் வசத்தில் சிக்கித்தவிக்க, கண்மூடினால் உலாவரும் கனவோடு, இயலாமையும் கலந்து சிதறிக் கொண்டிருந்தாள்.

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை…. புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை!

எப்போதோ படித்த கவிதை… மின்னல் வெட்டுப்போல் ஞாபகத்தில் நிலைக்க, தலையுளுக்கி சிரித்தவளின் நிலையும் அதுதான் என்பதால் வந்த அசட்டு சிரிப்பு!

தடக் தடக்… ஓசையில் தண்டவாளத்தில் தாளமிட்டுச் சென்ற ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில், ஜன்னலோர இருக்கையில் கண்மூடிச் சாய்ந்து… இடையிடையே புகைமூட்டமாய் மேலெழும் வில்லனின் நினைவுகளோடு ரசித்துனுபவித்துக் கொண்டிருந்தாள்.

ஆம் ரெயிலில் தான்… படாதபாடெல்லாம் பட்டு இரண்டு நாட்களையும் நெட்டித்தள்ளி முறித்தவள், தன் ஊரை நோக்கி உல்லாச மனநிலையில் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள்…

காதல் நினைவுகளையும் மீறி ஊருக்கும் செல்வதில் மனம் முழுதும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது…

கார்த்திக் அவளை தனியாக அனுப்ப மறுத்தவன் தானும் உடன் வந்து விட்டுச் செல்கிறேன் என எவ்வளவு கூறியும் அவனின் வேலைகளின் ஆக்கிரமிப்பு தெரிந்தவள் ஆதலால் பல மொள்ளமாரித்தனங்கள் செய்து... இதோ தனியாக ரெயிலிலும் பயணம் செய்கிறாள்.

அவளோடு வயது முதிர்ந்த தம்பதியினரும் ஒன்றாய் பயணிக்க… வழக்கமான துள்ளல் இருந்தபோதிலும் மௌனமாய் இருந்தவளின் செய்கை அவளுக்கே விசித்திரமாகத் தெரிந்தும் பொருட்படுத்தினாளில்லை…

சுகமான அதன் தாலாட்டில், இதமான மனதுடன்... மெதுமெதுவாக கண்ணயர்ந்தாள் அனிகா.

அங்கு ஷௌர்யா… பளிங்கு கண்ணாடிக் குடுவைக்குள் பாதி அருந்திய நிலையில் டோடில்டவுன் டோடி, (Tuthilltown Toddy) கண்ணாடி டீபாயில் பரிதாபமாக கோலோச்சி இருக்க… முழுதும் குடிக்க மனமற்று ஓய்வாக பஞ்சுபொதிகை மஞ்சத்தில் தலைசாய்த்து அமர்ந்திருந்தான்.

திண்ணிய புஜங்கள் வலுவாக எழுந்திருக்க.. பரந்துபட்ட மார்பு ரோமங்கள், உடலை இறுக்கித் தழுவிய ஆடையை மீறி வெளிப்படையாக தென்பட்டு முரட்டுக்காளைக்கு அழகு சேர்க்க… அழுந்த மூடிய இதழ்களுடன் கண்மூடி சயனித்தவனின் முரட்டுக் கரங்களில் படிந்து மார்போடு உறவாடிக் கொண்டிருந்தது… எபோனி வூடன் வகையை சேர்ந்த பளபளப்பான கறுப்புநிற வயலின்.

ஆங்கிலேயே மெல்லிசை பாடல் அறையெங்கும் கசிந்து கொண்டிருக்க… மெல்லிடையாளின் நினைவுகள் மனதோரம் மழைதூறல் வீச, ஓருயிர் ஈருடலாய் உறவாடிய கண்ணிமைகள் விழி மலரத்தும் நேரம்… ஆடவனின் செவியில் விழுந்து, இதயத்தை தட்டிய பாடல் வரிகளில், அவனின் முரட்டு இதழ்கள், ட்ரேட் மார்க் வளைவுப் புன்னகையை ஏந்தி நின்றது.


“But what it is, is something true,
Made up of these three words that I must say to you…
I just called to say I love you
I just called to say how much I care
I just called to say I love you
and I mean it from the bottom of my heart..."



காதலை கற்றறியாதவன் அவன். அதன் தாக்கம் அவளை காணும் முன்னர் வரை காளையின் இரும்பு நெஞ்சத்தை சற்றும் ஸ்பரிசித்திருக்கவில்லை. எப்போது அவளைக் கண்ணாரக் கண்டானோ அன்று முதல் ஏதாவதொரு வகையில் அவள் நினைவுகளோ அல்லது அவளையோ காண நேர்கையில் எல்லாம் ஆணின் மனதுக்குள் பெண்ணவள் ஆதிக்கம் செலுத்தி ஆட்டிப்படைக்கையில் அன்று அவள் பாடியது போலே ‘நேற்று இல்லாத மாற்றம் என்னது!’ என்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டான் அவன்.

மனது அதை விரும்பினாலும் மூளை அதன் பின்னே ஓட அவசரம் காட்டாததில் தன்னையே அடக்கி ஆண்டவனுக்கு ஒருநிலைக்கு மேல் அதுவும் முடிவதாயில்லை.

அந்தஸ்த்தை காரணம் காட்டி ஒதுக்க முற்பட்டால் அதுவும் அவள் முன்னே நிலநடுக்கம் கண்ட நிலப்பரப்பு போல ஆட்டம் காண்கிறதே!

பார்க்காமல் இருந்தாலும் கருத்தை விட்டு அகலுவாள் எனப்பார்த்தால் பாராது பொழுது போக மாட்டேன்கிறதே!

அழகுக்காவது ஈடுகட்டுவாளா அவள்? கால் தூசி அவன் முன்னே! இருந்தும் பட்டிக்காட்டு மைனாவே தான் வேண்டும் என்கிறது அவளால் வசியமான அவன் மனது!

என்னதான் செய்வான் இந்த அழகிய அசுரனும்! காதலின் முன் வீராதி வீரனும் கோழையாகிடுவானோ?

காதல் வயப்படலின் முதலாம் நிலையை எட்டிய கள்வனின் எண்ணங்களை அவனின் கள்ளி களவாடியதில் கனவுகளுடனே உறங்கிப்போனான் மங்கையின் மதி மயக்கிய மன்னவன்.

அங்கு அவளும் அதே நிலையிலே...

“வில்லன்!” செப்பிதழ்கள் செம்மொழி பேச.... காந்தவிழிகள் கவிதை மொழிய.... தன் முன்னே அரக்கனின் அவதாரமாய், கனல் கக்கும் விழிகளில் மாத்திரம் காதல் தெறிக்க... அரக்கன் பாதி தேவன் பாதியாக மொத்தத்தில் அரக்கதேவனாக நின்றவனை விழி சிமிட்ட மறந்து பார்த்தாள் பெண்.

அவனின் காதல் சிந்தும் விழிகளும் கூட, மது நிறைந்த மலரை மொய்க்கும் வண்டாக அவளிலே பதிந்திருந்தது.

அகற்றும் எண்ணம் அவனுக்கில்லை போலும் அவளைப்போன்றே!

பார்வைப் பரிமாற்றம் மட்டும் போதுமா காதல் வளர்த்திட....? சற்றே சலிப்படைந்த மன்மதன், தன் மன்மத பாணத்தை மானிடர்கள் நோக்கி குறிபார்த்து எய்திட காதல் அரங்கேற்றம் அடுத்த கட்டத்திற்கு ஆர்ப்பாட்டமின்றி இடம்பெயர்ந்தது.

ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவன் அசுரன். அவளுக்கு அவன் அழகிய அசுரன். அவனின் பாதங்கள் தரையில் அழுத்தம் கொடுத்து ஒவ்வொரு எட்டாக எடுத்து வைக்க.... கன்னிகையின் கதலாறு ஓடிய இதயம் கலவரமடைய, பின்னணி இசையானது அவளின் நெஞ்சத்தின் துடிப்பு!

எதிர்பார்ப்பும் எதிர்ப்புமாக அவள் அவனையே நோக்க.... அண்ணலும் நோக்கினான். கம்பரின் வரிக்கு காட்சிகள் விரிந்தன!

நடையின் முடிவு நெருங்கினான் பெண்மானை. விழிகள் ஆழ்கடலாக மாறி அரக்கனை வதம் செய்ததில், அரக்கனுருவம் காதல்தேவனாக மாற்றம் பெற... அவளும் தேவனின் தேவியாகிப் போனாள்.

மெத்தையில் மெத்தென்று கிடந்தவளை மெல்ல நெருங்கியவன், மெல்லிடையில் முரட்டுக்கரம் பதித்து.... மென்மை உணர்ந்து மெதுவே சரிந்து, மெல்லினத்துடன் மெல்லாட்சி புரிந்தான் மேன்மையானோன் அவன்!

வல்லினத்தின் இலக்கணம் அவன்.... வன்மை துறந்ததில் வன்மை வேண்டி பெண்மை தர்க்கம் புரிய, மெல்லிடையாளின் வேண்டலில் மென்மை பறிபோக... அங்கு வல்லாட்சி யுத்தம் ஆரம்பம் ஆனது!

ஆசைகளின் அளவு நீண்டுகொண்டே சென்றதில் களைப்பும் சேர விலகிச்சென்ற பெண்ணை விலக விடாமல் அள்ளியெடுத்து அணைத்தவன்... காதில் இதழுரச, “செர்ரி!” செப்பினான்.

மீண்டுமோர் காதல் யுத்தம் களைகட்ட ஆரம்பிக்க “க்கூகூஊஊ!!!” ஓசை. அது ரெயில் தன்னியக்கத்தை நிறுத்தக் கொடுத்த ஓசை.

படீரென விழிகளை மலர்த்தியதிலே வில்லனின் செர்ரியும் உணர்ந்தாள் கண்டது கனவென்று!

சொல்லாமல் கொள்ளாமல் வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அதிகாலையின் சிகப்பை வதனம் பூசிக்கொண்டு விட நாணத்தில் நாணச்சிரிப்பை சிதற விட்டவள்... தலையில் தட்டிக்கொண்டே பிளாட்பாரத்தில் நடைபயில, அவளுக்காக அங்கு வந்து காத்திருந்தார் அவளின் பாசமிகு தந்தை.


தொடரும்.....


 
Status
Not open for further replies.
Top